Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    20019
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87990
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    31993
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/27/23 in all areas

  1. மலர்............(5). வவுனியாவில் நிர்மலா நடந்து செல்லும் அந்த வீதியில் அநேகமானோர் பலதரப்பட்ட வாகனங்கள், வண்டிகளில் சென்று கொண்டிருக்கிறார்கள்.அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலர் நடந்தும் போய் வந்து கொண்டிருக்கின்றனர். பாடசாலைப் பிள்ளைகளும் முதுகில் புத்தகப் பையை சுமந்தபடி நடக்கிறார்கள். அப்போது தனியாக பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த இரு பொம்பிளைப் பிள்ளைகளை நிர்மலா வழிமறித்து, பிள்ளைகள் இங்கு பக்கத்தில் ஏதாவது வீடுகள் வாடகைக்கு இருக்கிறதா என்று வினவுகிறாள். அவர்களும் அப்படி எதுவும் தமக்குத் தெரியவில்லை என்று உதட்டைப் பிதுக்க அவளும் பரவாயில்லை என்று சொல்லி விட்டு அவர்களைக் கடந்து போகிறாள். அப்போது அங்கு சைக்கிளில் வந்த ஒரு பையனை மறித்த அந்தப் பிள்ளைகளுள் ஒருத்தி அவனிடம் ஏன்டா ரமேஷ் இங்கு பக்கத்தில் எங்காவது வீடு வாடகைக்கு இருக்குதா என்று கேட்க அவனும் கொஞ்சம் யோசித்து அந்த பைக் கடைக்காரர் வீட்டு கேட்டில "டூ லெட்" பலகையைப் பார்த்தனான் தேவையென்றால் கேட்டுப் பார்க்கலாம் என்று சொல்கிறான். உடனே மற்றப்பெண் சற்று தூரத்தில் செல்லும் நிர்மலாவை சத்தமாய் அழைத்து அக்கா சற்று நில்லுங்கள் என்று சொல்ல அதைக் கேட்டுத் திரும்பிய நிர்மலாவும் அவர்களுக்கு அருகில் வருகிறாள். அந்தப் பெண்ணும் அக்கா இவன் இங்கு அருகில் ஒரு வீட்டில் "டூ லெட்" பலகையைப் பார்த்ததாக சொல்கிறான்.விரும்பினால் சென்று பாருங்கள் என்று சொல்கிறாள். அந்தப் பையனும் அக்கா அது பக்கத்தில்தான் இருக்கு நானும் போற வழிதான் வாங்கோ காட்டிட்டுப் போறேன் என்று சொல்லி சயிக்கிளை விட்டிறங்கி உருட்டிக் கொண்டு நடந்து வருகிறான். அந்த வீதியில் சிறிது தூரம் சென்று ஒரு ஒழுங்கையில் இறங்கி இரு வளவு தாண்டி நடந்து வர ஒரு பெரிய கேட்டில் "டூ லெட்" பலகை தொங்குகிறது. பையனும் இடத்தைக் காட்டி விட்டு சயிக்கிளில் ஏறி சிட்டாய் பறக்கிறான். அந்த வீடு வெளிக்கேட்டில் இருந்து சிறிது தூரம் உள்வாங்கி இருக்கிறது. கொஞ்சம் பழைய காலத்து வீடானபோதும் அதை மிகவும் அழகாக நவீனமயப் படுத்தி இருந்தார்கள். ஆங்காங்கே செம்பருத்தி, ரோஜா மற்றும் சில பூ மரங்கள் செடி கொடிகளும் சரியான நீரின்றி காய்ந்துபோய் இருக்கின்றன. வீட்டின் முன்னால் முற்றத்தில் ஒரு மல்லிகை பந்தல் ஆர்ச் வடிவுக் கம்பிப் பந்தலில் படர்ந்திருக்கிறது. அங்கிருக்கும் தென்னை மரங்களின் ஓலைகள் எல்லாம் மாலையில் கிளிகள் கூட்டமாக வந்து தங்குவதால் நார் நாராக கிழிந்து தொங்குகின்றன.எல்லாவற்றையும் ஒரு கண்ணோட்டத்தில் நிர்மலா கவனித்து விடுகிறாள். அங்கு மல்லிகை பந்தலின் நிழலில் ஒரு ஐயா சரத்தோடும் வெற்றுடம்பில் ஒரு சிவப்புத் துவாயும் தோளில் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்கிறார். அவர் மடியில் ஒரு சின்னப்பிள்ளை விரல் சூப்பியபடி உறங்கிக் கொண்டிருக்கு. கையில் இருந்த பனை ஓலை விசிறியால் அவர் குழந்தைக்கும் விசிறி அப்பப்ப தனக்கும் விசிறிக் கொள்கிறார். நிர்மலாவும் படலையைத் திறந்து கொஞ்சம் உள்ளே வந்து ஐயா நாய் நிக்குதோ என்று கேட்டபடி சுற்று முற்றும் பார்க்கிறாள். அப்போது வீட்டுக்குள் இருந்து ஒரு ஆச்சி வருகிறா. அவவின் சீலைத் தலைப்பப் பிடித்துக் கொண்டு அரைக் காற்சட்டையுடன் ஒரு சிறுவன் மூக்கு ஒழுக வருகிறான். இஞ்சையப்பா யாரோ படலையடியில் நிக்கினம் ஒருக்கால் என்னெண்டு விசாரியுங்கோ என்று சொல்ல அப்புவும் அங்க பார்த்து பிள்ளை இங்க வாங்கோ உங்களுக்கு என்ன வேணுமென்று கேட்கிறார். --- நாய் நிக்குதோ ஐயா. --- ஒரு நாய் நிக்குதுதான் அது ஒன்றும் செய்யாது நீங்கள் பயப்பிடாமல் வாங்கோ என்று ஆச்சி சொல்லுறா. அவர்களுக்கு அருகே வந்த நிர்மலாவும் ஆச்சி இங்கு வீடு வாடகைக்கு என்று பலைகையில எழுதி இருக்கு அதுதான் விசாரிக்க வந்தனான். --- யாருக்கு பிள்ளை வீடு. பெரிய குடும்பமோ என்று ஐயா கேட்கிறார். --- இல்லை ஐயா, எனக்குத்தான். அவரின் மடியில் இருக்கும் பிள்ளையைப் பார்த்து பிள்ளைக்கு என்ன பெயர் என்று கேட்கிறாள். --- இவளுக்கோ ....ஓ இவள் பெயர் சிவாங்கி. எப்பவும் சிணுங்கிக் கொண்டிருப்பாள். அப்படியா நல்ல பெயர். அவர் தொடர்ந்து பேரன் பெயர் முகிலன் என்கிறார். ம்....இதுவும் நல்ல பெயர். என்று சொல்கிறாள். ஆச்சி பேரனின் மூக்கை வழித்து எறிந்து விட்டு தனது முந்தானையால் அவன் மூக்கை அழுத்தித் துடைத்து விடுகிறா. இவர்கள் இப்படி கதைத்துக் கொண்டிருக்க முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் மோட்டார் சைக்கிளில் உள்ளே வந்து நிறுத்தி விட்டு இறங்கி வருகிறார். ஆச்சி அவளிடம் இவர்தான் எங்கட மகன் கதிரவன். வவுனியா டவுனில் மோட்டார் சைக்கிள் கடை வைத்திருக்கிறார். நீங்கள் இவரோடு கதையுங்கோ என்று சொல்லிவிட்டு தம்பி கதிரவன் இவ வீடு வாடகைக்கு கேட்டு வந்திருக்கிறா, என்னண்டு நீ விசாரி என்று சொல்கிறாள். நிர்மலா அவரைப் பார்த்து வணக்கம் சொல்ல, அவனும் வணக்கம் சொல்லிவிட்டு விசாரிக்கிறான். நீங்கள் எங்கிருந்து வாறீங்கள். குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கினம். --- நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகிறேன்.தனியாக எனக்கு மட்டும்தான். ஒரு சிறு அறை இருந்தால் கூடப் போதும். --- இங்கு எங்கே வேலை செய்கிறீங்கள். --- நான் இனித்தான் வேலை தேட வேண்டும். --- அப்போ உங்களின் வருமானம் என்று கேட்கிறான். ---எனக்கு நல்ல வேலையொன்று கிடைக்கும்வரை பிள்ளைகளுக்கு ட்யூசன் குடுக்கலாம் என்றிருக்கிறேன்.மேலும் ஒன்லைன் மூலமாகவும் A /L வரை என்னால் படிப்பு சொல்லிக் குடுக்க முடியும் என்கிறாள். --- ஆச்சி குறுக்கிட்டு என்னபிள்ளை சொல்லுறாய், டியூசன் குடுத்து அதில என்ன வருமானம் வர போகுது. அதில வீட்டு வாடகை எங்க, உன்ர சாப்பாட்டு செலவுகள் எங்க என்று சொல்கிறாள். தாயை இடைமறித்த கதிரவன் தாயிடம் அம்மா நீ இந்தக் காலத்தில் இருக்கிறாய் இப்பவெல்லாம் டியூஷனில் நிறைய சம்பாதிக்கலாம் தெரியுமா, வீட்டுக்குள் இருந்து கொண்டே நாடுமுழுக்க பாடம் சொல்லிக் குடுக்கலாம் தெரியுமே, பின் நிர்மலாவின் பக்கம் திரும்பி அம்மா அப்படித்தான் நீங்கள் தப்பா நினைக்க வேண்டாம் சரி நீங்கள் சொல்லுங்கோ. --- இனி நீங்கள்தான் சொல்ல வேண்டும். எனக்கு ஒரு அறை போதும்.சிறிதாய் இருந்தாலும் பரவாயில்லை.வாடகை எவ்வளவு என்று சொன்னால் நல்லது. --- நாங்கள் ஒரு குடும்பத்துக்கு, மேல் வீட்டை முழுதாய் குடுக்கிறதாய்த்தான் இருக்கிறம். அங்கு குசினி, டாய்லெட் எல்லாம் சேர்ந்தே இருக்கிறது. நீங்கள் தனியாக இருப்பதால், உங்களுக்கு விருப்பம் என்றால் வீட்டின் பின்பக்கம் ஒரு அறை இருக்கு அதைத் தருகிறேன். பின் விறாந்தையில் வைத்து நீங்கள் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் குடுக்கலாம். பக்கத்தில கிணத்தடியோடு குளியலறை மற்றும் டாய்லெட் எல்லாம் சேர்ந்தே இருக்கு அதை நீங்கள் பாவிக்கலாம். நீங்கள் சமைக்க ஒரு பத்தி இறக்கித் தாறன். ஒரு எண்ணாயிரம் ரூபாய் தந்தால் போதும். இரண்டு மாத வாடகை முன்பணமாகத் தரவேண்டும். --- அவள் கொஞ்சம் யோசிக்கிறாள்...... என்ன யோசிக்கிறீங்கள் எதுவென்றாலும் சொல்லுங்கோ. --- இல்ல, உடனடியாக அவ்வளவு பணம் தர எனக்கு கொஞ்சம் சிரமம். அதுதான் யோசிக்கிறேன். அப்போது ஆச்சி மகனைத் தனியாக அழைத்துப் போய் ....எட தம்பி அந்தப் பிள்ளையைப் பார்த்தால் நல்ல பிள்ளை போலத் தெரியுது. எங்களுக்கும் உதவியாய் இருக்கும். அத்துடன் உன்ர பிள்ளையளுக்கும் பிராக்காய் இருக்கும். இந்தப் பெரிய வீட்டில நானும் கொப்பரும் ஆளை யாள் பார்த்து முழுசிக் கொண்டு இருக்கிறம். நீ வாடைக்காசை கொஞ்சம் குறைத்து விடு. இப்ப பத்தி ஒன்றும் போடவேண்டாம், அவவும் எங்கட குசினியையே பாவிக்கட்டும் என்று சொல்ல அவனுக்கும் அது சரியென்று படுகிறது. பின் அவன் அவளிடம் வந்து நிர்மலா நீங்கள் ஒரு நல்ல வேலை எடுக்கும்வரை ஐயாயிரம் ரூபாய் தந்தால் போதும். முன்பணமும் இப்ப அவசரமில்லை என்று சொல்கிறான். --- சரிங்க....இந்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டன். --- எப்ப இங்கு குடி வாறீங்கள். --- உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நான் இன்றைக்கே வந்து விடுகிறேன்.காலையில் இங்கு வரும்போது முருகனைக் கும்பிட்டுவிட்டு வந்தேன் அவர் கை விடேல்லை என்று சொல்கிறாள். --- உங்கட உடைமைகள் எங்கே இருக்கு. --- என்ன பெரிய உடைமைகள் ஒரு சூட்கேஸ் அது டவுனில் ஒரு விடுதியில் இருக்கு....! --- சரி நீங்கள் போய் அதை எடுத்துக் கொண்டு வாங்கோ அதற்குள் நான் அறையை தயார்படுத்தி வைக்கிறேன். நிர்மலாவும் வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்து விடுதிக்கு சென்று தனது பெட்டியை எடுத்துக் கொண்டு இரவுச் சாப்பாட்டுக்கு வாழைப்பழமும் பாணும் வாங்கிக் கொண்டு வருகிறாள்.....! மலரும்.......! 🌷
  2. உ மலருக்கு தென்றல் பகையானால் .......! மலர்ந்திட கதிரவன் துணையுண்டு. (1). நிர்மலா சங்கரைத் திருமணம் செய்து கொண்டு இந்த வீட்டுக்கு வந்து பத்து வருடமாகின்றது. முன்பெல்லாம் மிக அன்பாயிருந்த அவளது மாமியார் இராசம்மா இப்போதெல்லாம் அவள்மீது கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருக்கிறாள். அது நிர்மலா அவளைக் கடந்து போகும் போதெல்லாம் ஜாடைமாடையாக கதைப்பதும், ஏதாவது சிறு தவறு செய்தாலும் அதைப் பெரிதாக்கி சண்டை போடுவதுடன், மாலையில் மகன் சங்கர் வேலையால் வந்ததும் போட்டுக் குடுப்பதிலும் தெரிகிறது. அவனும் வேலையால் அலுத்துக் களைத்து வரும்போது தாயின் புறணியைக் கேட்டு சில நேரங்களில் நிர்மலாவை கை நீட்டி அடித்தும் விடுகிறான். நிர்மலாவின் குடும்பம் அவ்வளவு வசதியில்லா விட்டாலும்கூட சராசரியான நடுத்தரக் குடும்பம்தான். சண்முகம் கோமளம் தம்பதிகளுக்கு நிர்மலா ஐந்தாவது பெண்பிள்ளை. ஆனாலும் அவர்கள் அவளை நன்றாகப் படிக்க வைத்திருந்தார்கள். அவளும் படிப்பில் நல்ல கெட்டிக்காரி. விசேஷமாக கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களில் அந்தப் பாடசாலையிலேயே சிறப்பான சித்தி பெற்றிருந்தாள். அத்துடன் சங்கீதத்திலும் நல்ல தேர்ச்சி உண்டு. யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது அவசரம் அவசரமாக இந்தத் திருமணம் வந்தது. அவர்கள் சீர்வரிசை எதுவும் கேட்கவில்லை. ஆயினும் நிர்மலா எவ்வளவோ மறுத்தும்கூட, இனி இப்படி ஒரு சம்பந்தம் அமைவது கஷ்டம் என்று சொல்லு அவளை சம்மதிக்க வைத்துவிட்டார்கள். ஆனாலும் சண்முகம் அவளுக்கு கழுத்துக்கு காதுக்கு கைகளுக்கு என்று சில பல நகைகள் எல்லாம் போட்டுத்தான் புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவளும் வரும்போது மறக்காமல் தனது மடிக்கணனியையும் கைபேசியையும் கையேடு கொண்டு வந்திருந்தாள். இராசம்மாவும் கொடுமையானவள் அல்ல. அவளுக்கு வயசும் நாற்பத்தைந்தில் இருந்து நாற்பத்தெட்டில்தான் இருக்கும். அவளுக்கு குட்டையான தலைமுடி. முன்பெல்லாம் முடி நீளமாக வளரவில்லையே என்பதுதான் அவளது குறையாக இருந்தது. அதற்காக "கேசவர்த்தினி" உட்பட பல எண்ணெய்கள் தைலங்கள் எல்லாம் பாவித்தும் வந்திருக்கிறாள். இப்பொழுது அந்தக் குறைகூட இல்லை அவளுக்கு. முடிவாக இருக்கிற முடியை காப்பாற்றினாலே போதும் என்னும் மனநிலைக்கு வந்திருக்கிறாள்.அவ்வளவுக்கு முடி கொட்டத் தொடங்கி விட்டது. அத்துடன் இத்தனை வருடங்களாகியும் மகனுக்கு பிள்ளை இல்லையே என்னும் கவலையும் சேர்ந்துகொண்டது. அதற்கேற்றாற்போல் கோயில் குளங்கள், கடைகளில் சந்திக்கும் அவளது சிநேகிதிகளும் சங்கருக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகி விடும் என்று தூபம் போட்டுக் கொண்டிருந்தார்கள். "கரைப்பார் கரைத்தால் கல்லும் கரைவதுபோல்" இப்போதெல்லாம் அந்த எண்ணங்கள்தான் அவளை ஆட்டிப் படைக்கிறது. முன்பு இராசம்மாதான் மகனிடம் சொல்லி நிர்மலா விட்ட அவள் படிப்பைத் தொடர வழி செய்து பட்டப் படிப்பை முடிக்கவும் உதவியவள். சமைக்கவே தெரியாமல் இருந்த அவளை தனக்குப் பக்கத்தில் வைத்து தான் சமைக்கும் போதெல்லாம் அவளுக்கும் சொல்லிக் குடுத்து சாம்பார்,ரசம்,கறி குழம்புகளுக்கு ஏற்றாற்போல் காய்கறி வெட்டுவதில் இருந்து மீன்கள், இறைச்சிகள் எப்படி வெட்டுவது என்பதுவரை கற்றுக் குடுத்திருந்தாள். கூடவே வேலைக்காரி தாயம்மாவும் இருப்பதால் சமைக்கிற நேரம் போக மிச்சம் நிறைய நேரம் இருக்கும். அந்நேரங்களில் இருவரும் சங்கீதம்,இராகங்கள் பற்றி விலாவாரியாக விவாதிப்பதும் தேவாரம் கீர்த்தனைகள் சாதகம் செய்வதுமாய் பொழுதுகள் போகும். அதனால் மாமியாரை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவவை தனது தாய்க்கும் மேலாக மதித்து கவனித்து வருவாள். ஆனாலும் என்ன செய்வது தன் குலம் விளங்க ஒரு பேரனோ பேத்தியோ அவள் பெற்றுத் தரவில்லை என்னும் ஆதங்கம் அவளை கொஞ்சம் மாற்றி விட்டது. மலரும்...........! 🌹
  3. பைத்தியம் U mad bro பாகம் I நதியே…நதியே காதல் நதியே நீயும் பெண்தானே…. அடி நீயும் பெண்தானே …. நிசப்தமான இரவை குலைத்தபடி சங்கர் மகாதேவன் போனில் பாடத்தொடங்கி இருந்தார். சை…இந்த அலாம் டோனை மாத்த வேணும். பழைய நொக்கியா மாரி இல்லை, இந்த போனில் புதிதா ஒரு டோன் போடுறதுகுள்ளா போதும் போதும் எண்டாயீடும். நினைத்து கொண்டே கட்டிலில் இருந்து பிரண்டு, போனின் அலார்மை அணைத்தான் அவன். அலாம் அடிக்கிறது என்றால் அது ஒரு கிழமை நாள், காலை ஆறரை மணியாக இருக்க வேண்டும். அவன்……. அப்படி ஒன்றும் கதாநாயகன் களை எல்லாம் இல்லாவிடிலும் இந்த கதையின் நாயகர்களில் ஒருவன். ஒரு பெண்ணின் கணவன். ஒரு மகனின் தந்தை. கட்டிலில் திரும்பி பிரண்டபோதுதான் அருகில் மனைவி இல்லை என்பது உறைத்தது. நேற்றே சொல்லி இருந்தாள் “நாளைக்கு காலமை அப்பாவுக்கு ஹொஸ்பிட்டல் அப்பொயிண்ட்மெண்ட், ஸ்கூல் ரன் உங்கள் பாடு”. கட்டிலால் எழுந்து பல்லை விளக்கி விட்டு வந்து மகனை எழுப்பி, மகனுடன் பள்ளிக்கு வெளிக்கிடசொல்லி தேவாரம் பாடி, இடையில் உணவும் தயார் செய்து, அதை உண்ணவும் வைத்து, வெளியே ரத்தம் உறையும் குளிரில் நிண்டபடி காரில் படிந்திருக்கும் பனியை சுரண்டி……. நினைக்கவே அலுப்பாக இருந்தது அவனுக்கு. ஆனாலும் செய்யதான் வேண்டும். சோம்பலாய் எழுந்து போனை பார்த்தால் - இவன் மிஸ்டுகால் என காட்டியது. இவன்…….. இந்த கதையின் இன்னுமொரு நாயகன். கொழும்பில் நல்ல வசதியாக வாழும் ஒருவன். மூன்று மாடியில் ஏழு அறை வீடு, டிரரைவர், சமமையல்காரன், தோட்டகாரன் என சகல செளபாக்கியமுமான வாழ்க்கை வாழ்பவன். சரி ஏதோ ஸ்கூல் விசயமாக்கும். பிறகு அடிப்பம். என நினைத்தபடி வேலையில் மூழ்கிப்போனான் அவன். காரில் இருந்து மகன் இறங்கி போகும் போது, urgent. Plz call…..plz அவனின் போனில் இவன் அனுப்பிய குறுஞ்செய்தி மின்னியது. (தொடரும்) (யாவும் கற்பனை அல்ல) ——————————————-
  4. இது புதுவகை நாய். நாயன்மார்கட்டில் கண்டு பிடிக்கப்பட்டது. 🤣
  5. சுவியர், இன்று தான் இந்தப் பக்கம் வந்தேன்..! கதை நல்ல படியாக நகர்கின்றது..! கதா நாயகன் ஒரு பச்சை சுய நலம் பிடித்தவன் போல உள்ளது..! எனது கவலையெல்லாம் நிர்மலா தாலியை மட்டும் வைத்துவிட்டுத் தாலிக்கொடியையும் கொண்டு போயிருக்கலாம் என்பது தான்..! தொடருங்கள்…!
  6. இப்படி நிறைய விதமான மனிதர்கள் இருக்கிறார்கள்..கதையை படிக்கும் போது மனதுக்கு கடினமாக இருக்கிறது..அந்தப் பிள்ளையின் கணவரும், தாயும் யாரிடமாவது நன்றாக படிக்கும் நிலை வர வேணும்.தொடருங்கள் சுவியண்ண.
  7. இந்த நாய்க்கு, எவ்வளவு நீளமான கழுத்து என்று பாருங்களேன். 🤣
  8. ஆபிரிக்க ஜகானா (ஆக்டோபிலோர்னிஸ் ஆஃப்ரிகானஸ்) African Jacana (Actophilornis africanus) -ஆண் பறவை- நான்கு குஞ்சுகளையும் தனது இறக்கைக்குக் கீழே சுமந்துகொண்டு, அவற்றின் நீண்ட கால்கள் மற்றும் கால் விரல்களை மட்டும் வெளியில் வைத்துக் கொண்டு நிற்கிறது.
  9. மலர்..........(3). நிர்மலாவும் தான் இனி என்ன செய்யவேண்டும் என்று மனதுக்குள் நினைத்து கொள்கிறாள். தொடர்ந்து இங்கே இருப்பதா அம்மா வீட்ட சென்று அவர்களுக்கு சுமையாக இருப்பதா. ஏற்கனவே பெரியத்தான் குடி வெறி என்று ஒழுங்காக இல்லாததால பெரியக்கா குடும்பமும் பிள்ளைகளுடன் அம்மாவோடுதான் இருக்கிறார்கள். இதில் நானும் அங்கு சென்று இருப்பது சரியாய் இராது. என்று பலவாறு நினைக்கிறாள். தான் முன்பு விளையாட்டாக "யூ டியூபில்" சமையல் மற்றும் தோட்டக் கலை என்று தொடங்கிய நிகழ்ச்சிகள் மூலம் ஏதோ கொஞ்ச காசு வருகுதுதான் ஆனால் அது மட்டும் போதாது வேறு ஏதாவதும் செய்ய வேண்டும். அவளால் சரியாக ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. அன்று இராசம்மாவும் சங்கரும் வீட்டில் பரபரப்பாக வேலைகள் செய்து கொண்டிருக்கிறார்கள். சங்கர் கடைக்கும் போகவில்லை. அவன் தனது பெட்டியில் வேட்டி, சட்டை மற்றும் புது ஆடைகள் எல்லாம் எடுத்து வைத்து பூட்டுகிறான்.வளமையாய் அவன் எங்காவது வெளியூர் போவதென்றால் நிர்மலாதான் எல்லா ஆயத்த வேலைகளும் செய்து வைப்பாள். அவனுக்கு ஒரு வேலையும் இருக்காது. ஐயா ஹாயாக பெட்டியை உருட்டிக் கொண்டு கிளம்பிப் போவார்.இப்போது எதற்கும் அவளை கூப்பிடவில்லை.அவர்களுக்கு உள்ளுக்குள் குற்ற உணர்வு இருப்பதையும் அவள் கவனிக்கிறாள். வெளியே அவர்களது கார் வந்து நிக்கும் சத்தம் கேட்கிறது. அதை சாரதி மிகவும் அழகாக கழுவி பொலிஸ் போட்டு துடைத்துக் கொண்டு வந்திருந்தார். வெளியே தயாராய் இருந்த இவர்களது சாமான்கள் எல்லாவற்றையும் அவரே எடுத்துக் கொண்டு போய் கார் டிக்கியில் வைக்கிறார். நிர்மலா எல்லோருக்கும் தேநீர் கொண்டுவந்து குடுக்கும் போது இராசம்மாவும் நிர்மலாவிடம் பிள்ளை நாங்கள் ஒரு அலுவலாய் ஒரு இடத்துக்கு போயிட்டு இரண்டுநாள் கழித்துத்தான் வருவம். அதுவரை தாயம்மாவும் நீயும் வீட்டைப் பார்த்துக்கொண்டு கவனமாய் இருங்கோ. நான் போய் வந்து எல்லாம் சொல்லுறன். வீட்டையும் கொஞ்சம் கழுவித் துடைத்து வளைவுகளையும் கூட்டிப் பெருக்கி சுத்தமாய் வைத்திருங்கோ என்று சொல்லி கொஞ்சநேரம் அவளது கையை வாஞ்சையாய் பிடித்திருந்தது விட்டு கலங்கிய கண்களுடன் காருக்குப் போக சங்கரும் அவளைத் தீர்க்கமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு தலை குனிந்து கொண்டு போய் காருக்குள் ஏறுகிறான். காரும் புறப்பட்டு செல்கிறது. நிர்மலாவுக்கும் வேலைக்காரம்மாவுக்கும் வீட்டில் நிறைய வேலைகள் இருந்தன. அவர்கள் கூடுதலாக இரண்டு ஆட்களையும் கூலிக்கு கூப்பிட்டு வீடு மட்டுமன்றி தோட்டம், முற்றம் என்று எல்லாவற்றையும் நன்றாக செப்பனிட்டு மரம் செடி கொடிகள் எல்லாவற்றையும் அழகாக கத்தரித்து செழிப்பாக வைத்திருந்தார்கள். நான்காம் நாள் அதிகாலை நிர்மலா முதல்நாளே ஒழுங்கு செய்து வைத்திருந்த தனது சூட்கேஸ், கணனி கைபேசி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாள். மறக்காமல் போன் சிம்மை கழட்டி பையில் வைத்துவிட்டு மிக்க வேதனையுடன் தாலிக்கொடியை கழட்டி தனது கூறைச் சேலையின் மேல் வைத்து அவற்றை சங்கரின் மேசைமேல் வைத்து விட்டு வெளியே வருகிறாள். பின் குசினி அருகே இருக்கும் அறையை சென்று பார்க்க அங்கு தாயம்மா பகல்முழுதும் வேலை செய்த களைப்பில் நன்றாக அயர்ந்து உறங்குகிறாள். அப்படியே வீதிக்கு வந்தவள் சிறிது தூரம் நடக்கும்போது அவ்வழியால் வந்த ஒரு ஆட்டோவைப் பிடித்து புகையிரத நிலையத்துக்கு வருகிறாள். எதற்கும் இருக்கட்டும் என்று கொழும்புவரை பயணச்சீட்டு எடுத்துக் கொண்டு அடுத்து வந்த புகையிரதத்தில் ஏறி அமர்ந்து கொள்கிறாள். அந்த வண்டியும் சாவகச்சேரி, கொடிகாமம் என்று ஒவ்வொரு நிலையமாய் நின்று நின்று போகிறது. நிர்மலாவுக்கு எங்கு போவது, எங்கு இறங்குவது என்ற எண்ணம் இல்லை. அவர்கள் வரமுதல் இங்கிருந்து போக வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி இருக்கின்றது. வவுனியாவில் வண்டி நிக்கும்போதுதான் தன் நினைவுக்கு வந்தவள் இனி அங்கால எல்லாம் சிங்கள ஊர்கள்தான் வரும், அதனால் இங்கேயே இறங்கி அடுத்த அலுவலைப் பார்க்கலாம் என்று நினைத்து வண்டி புறப்பட முன் பெட்டியுடன் இறங்கி விடுகிறாள். காலைப் பொழுது பலபலவென்று விடிந்து விட்டிருந்தது. நேராக வவுனியா மையத்துக்கு நடந்து வருகிறாள். இது எனக்குப் பழக்கமில்லாத ஊர் அதனால் எதற்கும் பயந்தவளாக தன்னைக் காட்டிக் கொள்ளக் கூடாது என்று தனக்குள் சொல்லிக்கொண்டே வருகிறாள். அதனால் மிகவும் பழகியமாதிரி அங்கிருந்த ஒரு கைபேசி விற்கும் கடைக்கு சென்று புதிதாக ஒரு சிம் வாங்கிப் போனுக்குள் பொருத்திவிட்டு ஒரு புதிய இலக்கத்தையும் பெற்றுக் கொண்டு வெளியே வரும்போது எங்கிருந்தோ ஒரு கோவில் மணி ஒலிக்கின்றது. அந்த ஓசையைப் பிடித்துக் கொண்டு அங்கு சென்றால் அது ஒரு முருகன் கோவில். அங்கு நன்கு வணங்கி முருகனுக்கு ஒரு அர்ச்சனையும் செய்துவிட்டு தனது கைபேசி மூலம் அருகில் இருக்கும் பல விடுதிகளில் ஒன்றைத் தெரிவுசெய்து அங்கு சென்று தனியறை ஒன்றை எடுத்து அங்கே தனது பெட்டியை வைத்துவிட்டு சிறிது ஒய்வு எடுக்கிறாள். பின்பு நிர்மலா அறையைப் பூட்டிவிட்டு கைப்பையுடன் வெளியே வருகிறாள். அவளது நோக்கமெல்லாம் நகரத்தைத் தாண்டி கொஞ்சம் உள்ளூருக்குள் சென்று ஒரு பாடசாலையை அண்மித்த இடமாக வதிவிடம் பிடிக்க வேண்டும் என்பதுதான். தற்போது நிர்மலாவிடம் போதிய அளவு பணமும் தனக்குப் பெற்றோர் போட்டுவிட்ட நகைகளும் கொஞ்சம் இருக்கின்றன. கைபேசியிலேயே அங்குள்ள பாடசாலைகளைத் தெரிவு செய்து பின் ஒரு வீதியைப் பிடித்து நடந்து செல்கிறாள்.......! மலரும்..........!🍁
  10. முன்பெல்லாம்... அரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும் என்பார்கள். ஆனால்... சில விடயங்களை பார்க்கும் போது, நம் கண்முன்னாலேயே உடனுக்குடன் சில விடயங்கள் நடப்பதை பார்க்கும் போது உங்களுக்கு ஏற்பட்ட சந்தோசம் எனக்கும் ஏற்படுகின்றது. அறத்துடன் போராடி மடிந்தவன், குடும்பத்து பிள்ளையின் இறப்பில் மகிழ்ச்சி கண்டவரை... அவரின் பிள்ளையை, அவர் கண் முன்னே பறித்து... தேர்தலில் வென்ற சந்தோஷத்தையும் அனுபவிக்க விடாமல்.. ஏதோ ஒரு சாபம், அவரை விடாது திரத்திக் கொண்டுள்ளது.
  11. கியூபாவிற்குச் சென்ற புலிகள் போராளி அமைப்புக்களின் முக்கியஸ்த்தர்கள் அமிர்தலிங்கத்தின் பேச்சிற்கு மதிப்புக் கொடுத்து வந்த நிகழ்வுகள் 1977 ஆம் ஆண்டுத் தேர்தலின் பின்னரும் நடந்தது. இந்தப் போராளி அமைப்புக்களின் தலைவர்களுள் பிரபாகரனே அனைவராலும் அதிகம் நேசிக்கப்பட்டார். மங்கயற்கரசி என்னிடம் ஒருமுறை பேசும்போது "பிரபாகரன் எங்களின் மகன்களில் ஒருவராக எங்களுக்குத் தெரிந்தார்" என்று கூறினார். " அவர் எமது வீட்டிற்கு வரும்போதெல்லாம் நான் அவர் விரும்பி உண்ணும் கோழிக்கறியைச் சமைப்பேன். அவர் எம்மிடமிருந்து விடைபெற்றுச் செல்லும்போது எனது மகன்களை முத்தமிடுவது போல அவரையும் முத்தமிட்டே அனுப்பிவைப்பேன்" என்று அவர் கூறினார். அமிர்தலிங்கத்தின் பிரத்தியேக காரியாதிரிசியான ஆர். பேரின்பநாயகம் பேசும்போது, பிரபாகரன் தமிழ்நாட்டில் தங்கியிருந்த நாட்களில் அவரைச் சந்திக்கச் செல்லும்போது அவருக்குப் பிடித்தமான கோழி இறைச்சிப் பொறியலை மங்கையற்கரசி எடுத்துச் செல்வது வழமை என்று கூறினார். அமிர்தலிங்கத்தின் வெள்ளிவிழா கொழும்பில் 2003 ஆம் ஆண்டு ஆவணி 24 ஆம் திகதி நடைபெற்றபோது பேசிய மங்கையற்கரசி பிரபாகரன் மீது தான் வைத்திருந்த பாசம் குறித்துப் பேசத் தவறவில்லை. அமிர்தலிங்கமும் பிரபாகரனை மிகவும் அன்புடனேயே நடத்தி வந்தார். பதிலுக்கு பிரபாகரன் அமிர்தலிங்கத்தைப் பெரிதும் மதித்து நடந்துவந்தார். 1981 ஆம் ஆண்டு ஜெயவர்த்தனவின் மாவட்ட சபை மந்திரிப்பொறுப்புக்கள் எனும் பொறிக்குள் அமிர்தலிங்கமும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் விழும்வரை இந்த உறவு மாறாமலேயே இருந்து வந்தது. அமிர்தலிங்கத்தைப் பலப்படுத்துவதன்மூலம் பிரபாகரனைப் பலவீனமாக்குவதற்குப் பதிலாக, ஜெயவர்த்தனா அமிர்தலிங்கத்தைப் பலவீனப்படுத்தி பிரபாகரனைப் பலப்படுத்தியிருந்தார். இதுவே இலங்கையின் சரித்திரத்தில் திருப்புமுனையாக அமைந்தது. இதுபற்றிய தகவல்கள் இனிவரும் அத்தியாயங்களில் பேசப்படும். கியூபா நான் முன்னர் குறிப்பிட்டதுபோல, கியூபாவிற்குச் சென்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் தூதுக்குழுவில் புலிகளின் உறுப்பினர்களும் இடம்பெற்றிருந்தனர். 1979 ஆம் ஆண்டு கியூபாவின் ஹவானாவில் உலக மாணவர் மற்றும் இளைஞர்களுக்கான விழா நடந்திருந்தது. இந்த விழாவிற்கு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனைக் கேள்விப்பட்ட உமா மகேஸ்வரன் அமிர்தலிங்கத்தை அணுகி இக்குழுவில் புலிகள் அமைப்பின் மூன்று உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்ள முடியுமா என்று கேட்டார். 1977 ஆம் ஆண்டு புலிகளுக்கும் முன்னணிக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் ஒப்பந்தம் ஒன்றிற்கு அமைவாக முன்னணியின் அரசியல்த் தலைமையின் கீழ் இரகசிய ஆயுத அமைப்பாக புலிகள் இயங்குவார்கள் என்றும், அதற்குப் பதிலாக சர்வதேசத்து விடுதலை அமைப்புக்களிடமிருந்து பணம் முதலான உதவிகளைப் புலிகள் பெற்றுக்கொள்ள அமிர்தலிங்கம் உதவ ஒத்துக்கொண்டதாகவும் தெரியவருகிறது. ஆகவே, இவ்வாறான் இளைஞர் நிகழ்வொன்றிற்குச் செல்வதன் மூலம் ஏனைய கெரில்லா அமைப்புக்களின் பரிட்சயமும் தமக்கு ஏற்படும் என்று உமா அமிர்தலிங்கத்திடம் கூறியிருக்கிறார். இதுபற்றி பின்னர் நடந்த விசாரணைகளில் அரசை ஏமாற்றி புலிகளையும் தமது தூதுக்குழுவில் முன்னணியினர் அனுப்பியிருந்தனர் என்று பொலீஸார் குற்றஞ்சாட்டியுமிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. புலிகளின் இந்த வேண்டுகோளினை அமிர்தலிங்கம் ஏற்றுக்கொண்டார். மாவை சேனாதிராஜாவை தமது தூதுக்குழுவின் இளைஞர் அமைப்பின் தலைவராகவும் காசி ஆனந்தனை தமிழர் ஐக்கிய முன்னணியின் பிரதிநிதிகளின் தலைவராகவும் அமிர்தலிங்கம் நியமித்தார். தூதுக்குழுவின் ஏனைய மூன்று இடங்களையும் சிங்கநாயகம், சாந்தன் மற்றும் யோகேஸ்வரன் ஆகிய புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நிரப்பினர். இது முன்னணிக்குள் சில கசப்புணர்வுகளை ஏற்படுத்தி விட்டிருந்தது. முன்னனியின் பிரதிநிதியாக இந்த நிகழ்விற்குச் செல்ல விரும்பிய வண்ணை ஆனந்தனுக்கு புலிகள் தமது குழுவில் இடம்பெற்றது மகிழ்வைக் கொடுக்கவில்லை. ஹவானாவில் இடம்பெற்ற விழா நிகழ்வின் போது காசி ஆனந்தன் தமிழில் கவிதை ஒன்றைப் படித்தார், பலமான சொண்டுகள் கொண்ட பறவைகள் நாங்கள் நாம் பாடுவதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கிறோம் அழகான சிறகுகள் கொண்ட பறவைகள் நாங்கள் ஆனால் பறப்பதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கிறோம் கூண்டில் அடைக்கப்பட்ட அடிமைகள் நாங்கள்
  12. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் தூதுக்குழுவில் இடம்பெற்ற புலிகளின் உறுப்பினர்கள் தமிழ் ஆயுத அமைப்புகளோடு அமிர்தலிங்கத்திற்குத் தொடர்பிருக்கிறது என்கிற சன்சொனியின் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமலும் இல்லை. பாதுகாப்பு அமைச்சிற்கு பொலீஸார் வழங்கிய தகவல்களில் அமிர்தலிங்கத்தைச் சந்திக்க யாழ்ப்பாணத்திலிருந்த அவரது வீட்டிற்கு பிரபாகரன், உமா மகேஸ்வரன் மற்றும் தங்கத்துரை ஆகியோர் வந்து சென்றிருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 1974 முதல் 1980 வரையான காலப்பகுதியில் வழக்கப்பட்ட இவ்வாறான தகவல்கள் ஜெயவர்த்தன நிலையத்தில் இன்றுவரை இருக்கிறது. ஜெயவர்த்தனவின் குடும்பத்துடன் நெருக்கமான ஒருவரின் உதவியோடு இந்தத் தகவல்களைப் படிக்கும் வாய்ப்பு சில வருடங்களுக்கு முன்னர் எனக்குக் கிடைத்திருந்தது. புரட்சிசெய்யத் துடிக்கும் இளைஞர்களுடன் எப்போதுமே தொடர்பைப் பேணவேண்டும் என்பது தந்தை செல்வாவினால் அமிர்தலிங்கத்திற்குக் கொடுக்கப்பட்ட பணியாகும். தமிழர்களின் அரசியலின் தந்தை என்று அறியப்பட்ட தந்தை செல்வா ஆயுத அமைப்புக்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும் என்று விரும்பியிருந்தார். ஆயுத அமைப்புக்களின் விமர்சனங்கள், விருப்பு வெறுப்புக்களை உள்வாங்கி தமது கொள்கைகளிலும், செயற்பாட்டு முறைகளிலும் மாற்றங்களைச் செய்யவேண்டும் என்று தந்தை செல்வா விரும்பியிருந்தார். இளைஞர்களை வழிநடத்த அமிர்தலிங்கம், ராஜதுரை மற்றும் நவரட்ணம் ஆகியோரை செல்வா அமர்த்தினார். திருக்கோணேஸ்வரம் ஆலயம் புலிப்படை எனும் அமைப்பு 1961 ஆம் ஆண்டு, தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பிக்கும் முன்னரே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஒரு அரச ஊழியர் உட்பட 20 பேர்வரையான இளைஞர்கள் புலிப்படையினை உருவாக்கியிருந்தார்கள். 1961 ஆம் ஆண்டு ஆவணி 12 ஆம் திகதி புலிப்படையின் உறுப்பினர்கள் சரித்திரைப் பழமை வாய்ந்த திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் கூடினர். காலை வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் அக்குழுவினர் மலைக்குச் சென்று, தனியான தமிழ் தாய்நாடொன்றிற்காகப் போராடுவது என்று சபதம் எடுத்துக்கொண்டனர். 1961 ஆம் ஆண்டு தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட சத்தியாக்கிரக நிகழ்வை சிறிமாவோ தனது இராணுவத்தைக் கொண்டு கலைத்தமையே இந்தக்குழுவினர் தனிநாடு நோக்கிப் பயணிக்கும் தேவையினை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் புலிப்படை மீன்பிடிக்காகவும், ஆயுதங்களைக் கொண்டுவருவதற்காகவும் ஒரு கப்பற் கம்பெனியொன்றை உருவாக்கியிருந்தது. சில துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததுடன், மாணவர் மன்றங்கள் சிலவற்றையும் ஏற்படுத்திவிட்டு செயலற்றுப்போனது. இந்தக் குழுவின் செயற்பாடுகளை அமிர்தலிங்கமும், நவரட்ணமும் அவதானித்து வந்தபோதும், அவர்களின் செயற்பாடுகளில் தலையிட்டிருக்கவில்லை. பொலீஸாரும் இக்குழுவினரின் இருப்புக் குறித்து அதிக ஆர்வம் காட்டியிருக்கவில்லை. தமிழ் இளைஞர்கள் தம்மை மீளவும் ஒழுங்குபடுத்திய நிகழ்வு 1970 இல் இடம்பெற்றது. தமிழ் மாணவர் பேரவை எனும் அமைப்பு உருவாக்கப்பட்டு 1972 இல் தமிழ் இளைஞர் பேரவையாக மாற்றங்கண்டது. இந்த அமைப்பினை அமிர்தலிங்கமும், நவரட்ணமும் நெருங்கி அவதானித்து வந்ததுடன், இந்த அமைப்பினரும் அமிர்தலிங்கத்தை தமது "தளபதி" என்று கருதி வந்தனர். இளைஞர்கள் தமது விமர்சனங்களைப் பகிரங்கமாக முன்வைக்க வேண்டும் என்றும், தமது உணர்வுகளுக்கு அது வடிகாலாக அமையும் என்று அமிர்தலிங்கம் அவர்களிடம் கூறிவந்தார். ஒரு சில வன்முறைச் சம்பவங்கள் அவ்வப்போது இடம்பெற்று வந்தாலும், நிலமை கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. ஆனால், இந்த செயற்பாடுகளை அரசு இனவாதப் புரட்சி என்று கருதியதாலும், அதனை அடக்க பொலீஸாரையும், இராணுவத்தினரையும் முடுக்கி விட்டதாலும் நிலைமை மாறத் தொடங்கியது. தமிழ் இளைஞர் பேரவையினரைத் தேடி வேட்டையாடிய பொலீஸார் அவர்களில் 42 பேரைக் கைது செய்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட அனைவருமே பிற்காலத்தில் ஆயுதப் போராளிகளாக மாற்றம்பெற்றனர். தங்கத்துரை, குட்டிமணி, பிரபாகரன், பாலக்குமார். பத்மநாபா, வரதராஜப் பெருமாள், சிறி சபாரட்ணம் ஆகியோர் அமிர்தலிங்கத்தை மதித்து வந்ததுடன், அவர் சொல்வதையும் கேட்டு வந்தனர்.
  13. அமிர்தலிங்கத்தையும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும் குறிவைத்த ஜே ஆர் கைதேர்ந்த அரசியல் மூலோபாயவாதியாக விளங்கிய ஜெயவர்த்தன, சிங்களக் கடும்போக்குத் தேசியவாதிகளின் வாக்குகளை சிறில் மத்தியூவைக் கொண்டு பெற்றுவிட திட்டமிட்டுச் செயற்பட்டுவந்தார். ஒரு சிங்களத் தேசியத் தலைவராக வளரும்வரையில் மத்தியூ, ஜெயவர்த்தனவினால் ஊக்குவிக்கப்பட்டார். தமிழர்களை உசுப்பேற்றும் வெறித்தனம் கொண்டவராக மத்தியூ செயற்படவைக்கப்பட்டார். இந்தச் சதிகுறித்து அறிந்திராத அமிர்தலிங்கம், இயல்பாகவே வருத்தமடைந்து காணப்பட்டார். ஆகவே, மத்தியூ தன்மீது முன்வைத்துவந்த விஷமத்தனமான பிரச்சாரங்கள் குறித்தும் கேலிகள் குறித்தும் ஜெயவர்த்தனவிடம் முறையிடலானார் அமிர்தலிங்கம். மத்தியூவின் பேச்சுக்களால் தமிழ் மக்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் தமிழ் மக்கள் மத்தியில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செல்வாக்குச் சரிந்துவருவதாகவும் கூறிக் கவலைப்பட்டார். "மத்தியூ எம்மை காலையும் மாலையும் வசைபாடி பேசி வரும் நிலையில், நாம் உங்கள் அரசாங்கத்தை எவ்வாறு ஆதரிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?" என்று அவர் ஜே ஆரை வினவினார். அதற்கு ஜே ஆர் தந்த பதில் இப்படியிருந்தது, "மத்தியூ கூறுவதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். நான் தமிழ் மக்களுக்குச் சார்பாகச் செயற்படுகிறேன் என்று பிக்குகளும் சிங்களத் தேசியவாதிகளும் எனது அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதற்குப் பதிலளிக்கும் முகமாகவே மத்தியூ தமிழர்களுக்கெதிரான பிரச்சாரத்தைச் செய்யவேண்டியிருக்கிறது" என்று கூறினார். அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் இதனைக் கேட்டதும் அமிர்தலிங்கம் கவலையடைந்தார். இதுகுறித்து அவர் என்னிடம் பேசுகையில், "ஜெயவர்த்தன அரசியல் விளையாட்டில் ஈடுபட்டு தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையே பகையுணர்வை வளர்க்கிறார். சிங்களவர்களுக்கு முன்னால் தன்னை ஒரு மீட்பராகக் காட்ட அவர் எத்தனிக்கிறார். தமிழர்களை நசுக்கக்கூடிய ஒரே தலைவர் தானே என்று சிங்களவர்களுக்குக் காட்ட நினைக்கிறார்" என்று கூறினார். ஜே ஆரின் பதிலின் பின்னர் அமிர்தலிங்கம் ஜே அர் மீது வெறுப்புக் கொண்டிருந்தார். ஆகவே, எதிர்க்கட்சியுடன் நெருங்கிவரும் இரகசிய நடவடிக்கையொன்றினை அமிர் மேற்கொண்டார். 1978 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் அவருக்கு இதற்கான சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது. இலங்கை சம சமாஜக் கட்சியின் தலைவர்கள் அமிரையும், சிவசிதம்பரத்தையும் அவரது வீட்டில் சந்தித்து ஜெயவர்த்தனவுக்கெதிரான பரந்துபட்ட தேர்தல் கூட்டணியொன்றினை உருவாக்குவதுபற்றிக் கலந்துரையாடினர். ஆரம்பத்தில் இந்தக் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையளிப்பவனவாகத் தெரிந்தன. தான் விட்ட பழைய தவறுகளைத் திருத்திக்கொள்ள சிறிமாவோ தயாராக இருப்பதாக சம சமாஜக் கட்சியின் தலைவர்கள் அமிரிடம் கூறினர். இந்த இரகசிய பேச்சுவார்த்தையினை அறிந்துகொண்ட ஜெயவர்த்தனா, கொழும்பிலிருந்த தமிழ் வர்த்தகப் புள்ளியொருவரூடாக அமிர்தலிங்கத்திற்குச் செய்தியொன்றினை அனுப்பினார். "நீங்கள் எதிர்க்கட்சியுடன் தொடர்ந்து இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் கொழும்பில் தமிழருக்கெதிரான இன்னொரு கலவரம் வெடிக்கும்" எனும் எச்சரிக்கை தான் அது. இதனால் அச்சமடைந்த அமிர்தலிங்கம் எதிர்க்கட்சியினருடனான இரகசியப் பேச்சுவார்த்தைகளை இடைநடுவில் முறித்துக்கொண்டார். அமிர் கவலையடைய. சிவசிதம்பரமோ கலங்கிப் போனார். தனது நண்பர்களுடன் பின்னர் பேசிய அமிர்தலிங்கம், "தமிழர்களால் இன்னொரு இனக்கலவரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது" என்று கூறியிருந்தார். எதிர்க்கட்சிக்கும், முன்னணிக்கும் இடையிலான இரகசியப் பேச்சுவார்த்தையினைக் குழப்புவது ஜெயவர்த்தனவின் திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே. தமிழர்களுக்கெதிரான சிங்களவர்களின் கோபத்தினை ஊதிப் பெருப்பித்து ஈற்றில் தமிழ் ஆயுதக் குழுக்களை முற்றாக அழிப்பதே அவரது திட்டத்தின் மீதிப்பகுதியாக இருந்தது. 1977 ஆம் ஆண்டு ஆவணியில் இடம்பெற்ற தமிழருக்கெதிரான வன்முறையினை விசாரித்த சன்சொனி ஆணைக்குழ் வழங்கிய இறுதி அறிக்கையினைப் பாவித்து அமிர்தலிங்கம் மீது கடுமையான விமர்சனங்களை ஜெயவர்த்தன மேற்கொண்டார். பொலீஸாரினால் சோடிக்கப்பட்ட பொய்யான ஆதாரங்களை ஆணைக்குழுவின் முன்னால் வைத்து, அமிர்தலிங்கம் ஒரு இரத்த வெறிபிடித்த, சிங்களவருக்கெதிரான இனவாதியென்றும், அவரது கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியே தமிழ் ஆயுதக் குழுக்களின் வன்முறைகளின் பின்னால் இருந்ததென்றும் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் ஜெயவர்த்தன பிரச்சாரம் செய்துவந்தார். பொன் சிவகுமாரனின் இறுதிச் சடங்கின்போதும், 1977 ஆம் ஆண்டின் தேர்தல்ப் பிரச்சாரங்களின்போதும் அமிர்தலிங்கமும் அவரது துணைவியார் மங்கையற்கரசி பேசிய பேச்சுக்களை அடிப்படையாக வைத்து அவர்களுக்கெதிரான பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டது. தமிழ் இளைஞர்களை வன்முறையினை நோக்கித் தூண்டும் மனிதரே அமிர்தலிங்கம் என்று பிரச்சாரப்படுத்தப்பட்டது. தமிழ் ஆயுத அமைப்புக்களுக்குப் பின்னால் நின்று ஊக்குவிக்கும் சக்தியாக அமிர்தலிங்கத்தைக் காட்ட சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டன. அரசாங்கத்திற்கெதிரான நம்பிக்கையீனத்தை இளைஞர்களிடையே அமிர்தலிங்கம் ஏற்படுத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதற்கு ஆதாரமாக யோகேஸ்வரனின் பேச்சில் கூறப்பட்ட, "தமிழ் மக்களைப் பொறுத்தவரை இலங்கை அரசாங்கம் ஒரு அந்நிய அரசாங்கமாகும். தமிழ் மக்களை ஆள்வதற்கான எந்தவித அதிகாரமும் இந்த அரசாங்கத்திற்குக் கிடையாது" எனும் பகுதி இதற்கு சாட்சியமாக அரசால் பாவிக்கப்பட்டது. "சிங்களவருக்கெதிரான வன்மத்தை தமிழர்களிடையே முன்னணி வளர்த்து வருகிறது" எனும் குற்றச்சாட்டும் அரசால் முன்வைக்கப்பட்டு வந்தது. யாழ்ப்பாணத்தில் பெளத்த மதகுருவாக இருந்த வீரமுவே விமலபாரதி எனும் பிக்கு தன்னைத் தமிழ் இளைஞர்கள் தாக்கியதாகவும், "இனிமேல் நீ யாழ்ப்பாணத்தில் இருக்கத் தேவையில்லை" என்று கூறியதாகவும் பொய்வாக்குமூலம் கூறும்படி அரசால் கட்டாயப்படுத்தப்பட்டார். தனது பெளத்த நிலையத்தை தமிழர்கள் எரித்ததாகவும் அவர் ஆணைக்குழுவின் முன்னிலையில் கூறினார். இவ்வாறே யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துவந்த பல சிங்களவர்களும் தமது உடமைகள் எரிக்கப்பட்டு, தாம் அங்கிருந்து விரட்டப்பட்டதாக ஆணைக்குழுவின் முன்னால் கூறவைக்கப்பட்டார்கள். சிங்கள பஸ் சாரதியான தர்மசேன கூறுகையில், தனது பஸ்வண்டி பாதையிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு, தான் சுடப்பட்டதாகக் கூறினார். யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த சிங்களப் பெண்மணியான கருணாவதி கூறுகையில் தனது குடும்பம் உழவு இயந்திரம் ஒன்றில் ஏற்றப்பட்டு அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாகக் கூறினார். இந்த வன்முறைகள் எல்லாம் முன்னணியினரின் தூண்டுதலினாலேயே தமிழ் இளைஞர்களால் நடத்தப்பட்டதாக ஆணைக்குழுவின் முன்னால் கூறப்பட்டது. அமிர்தலிங்கம் மீண்டு கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளானார். ஆணைக்குழுவின் முன்னால் 1979, சித்திரை 30 அன்று சாட்சியமளித்த அமிர்தலிங்கம், ஜனநாயக வழிகள் மூலம் தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவே தனது கட்சி முயன்றுவருவதாகக் கூறினார். தனது கட்சி வன்முறைகளைத் தூண்டிவிட்டதாக பொலீஸார் கூறிய குற்றச்சாட்டினை அவர் முற்றாக மறுத்தார். ஆனால், அமிர்தலிங்கத்தின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்ட நீதிபதி சன்சொனி, அரசு மீதான தமிழர்களின் அவநம்பிக்கைக்கும், வன்முறைகளைத் தூண்டிவிட்டமைக்கும் அமிர்தலிங்கமே பொறுப்பு என்று தீர்ப்பளித்தார். மேலும், அமிர்தலிங்கம் தமிழ் ஆயுத அமைப்புக்களோடு ஒத்துழைத்துவருவதாகவும் குற்றஞ்சாட்டினார். அமிர்தலிங்கத்தைக் கொல்லுமளவிற்கு, அவர்மீதும், அவரது கட்சிமீதும் அரசால் திட்டமிட்டு முன்வைக்கப்பட்ட வந்த விஷமத்தனமான பிரச்சாரங்கள் சிங்களவர்களைத் தூண்டியிருந்தது. ஜெயவர்த்தனவின் செல்லப்பிள்ளைகளான பிரேமச்சந்திரவும், ஜெயக்கொடியும் 1979 ஆம் ஆண்டு ஆடி 3 ஆம் திகதி பாராளுமன்ற குழுக்கள் கூட்டத்தில் ஆற்றிய உரைகளில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கெதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று வெளிப்படையாகக் கோரிக்கை முன்வைத்தனர். இதற்குப் பதிலளித்த ஜெயவர்த்தன, இதனைச் செய்வதற்கான சட்டவாக்கல் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், அந்த மாதத்திலேயே அச்சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
  14. போராட்டத்துடன் தன்னை இணைத்துக்கொண்ட அன்டன் பாலசிங்கம் *************************************************************************************************** செய்திக்குறிப்பு : திரு சபாரட்ணம் அவர்களுக்கு அவரது வாசகர் ஒருவர் அனுப்பிய தகவல் ஒன்றினை சபாரட்ணம் இணைத்திருந்தார். அதன் விபரங்கள் கீழே. 1978 முதல் 1979 வரையான காலப்பகுதியில் புலிகளும் டெலோ அமைப்பும் இளைஞர்களுக்கான மென்பந்து கிரிக்கெட் ஆட்டங்களையும், உதைபந்தாட்டங்களையும் வட மாகாணத்தில் ஒழுங்கு செய்திருந்தனர். கல்வி உயர்தரப் பரீட்சை நடந்துவந்த காலப்பகுதியில் வடமராட்சியின் வதிரி, துன்னாலை மற்றும் கரணவாய் ஆகிய பகுதிகளில் இந்த ஆட்டங்கள் நடந்தன. யாழ்ப்பாணம் மற்றும் அதனோடு அண்டிய பகுதிகளிருந்து வந்த அணிகளுடன் வடமாராட்சி அணிகள் போட்டிகளில் கலந்துகொண்டனர். இந்தப் போட்டிகளில் கலந்துகொண்ட முக்கியமானவர்களில் பொன்னமான் (குகன் - யோகியின் சகோதரர்) யாழ் இந்துக்கல்லூரியில் பயின்றுவந்த திறமையான கிரிக்கெட் வீரர். அப்படியான போட்டியொன்றில் நான் பிரபாகரனைக் கண்டேன். போட்டியின் பின்னர் வீரர்களும், பார்வையாளர்களும் கலந்துரையாடுவதுடன் உணவுவகைகளையும் பகிர்ந்துகொள்வது வழக்கம். இப்படியான கலந்துரையாடல்களில் அரசியலும் வழமையாக இடம்பெறுவதுடன் ஒரேவகையான கருத்தினைக் கொண்டவர்கள் ஒன்றிணைந்து பயணிப்பதும் வழமையானது. கடல்ப்புறா எனும் சரித்திர நாவல் சோழர்களின் பெருமையினைப் பற்றியும், அவர்களின் கடலறிவு பற்றியும் பேசுகிறது. இந்த நாவலின்ன் பெரும்பகுதி கடாரம் எனப்படும் பகுதியினை மையப்படுத்தியே கூறப்படுகிறது. மேலும், அகூதா எனும் பிரபலமான பெயர் ஒன்றும் இக்கதையில் கூறப்பட்டிருக்கிறது. திரு பிரபாகரன் இந்த நாவலை வாசித்திருந்தார். சோழர்களின் கடல்வலிமை பிரபாகரனை மிகவும் கவர்ந்திருந்தது. இதனாலேயே கேர்ணல் சங்கர் முதலாவது கப்பலை புலிகளுக்காக அமைத்தபோது அதற்கு பிரபாகரன் கடல்ப்புறா என்று பெயரிட்டார். பின்னாட்களில், 1987 ஆம் ஆண்டு புலிகளின் மூத்த தளபதிகளான லெப்டினன்ட் கேணல்கள் குமரப்பாவும் புலேந்திரனும் கடல்ப்புறாவில் பயணித்துக்கொண்டிருந்தவேளை இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். நான் இந்தச் சம்பவம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் நன்கு அறிந்திருந்தேன். அதுலத் முதலியுடன் இக்காலப்பகுதியில் அடிக்கடி தொடர்புகொண்டு வந்திருந்தேன். அதுபற்றிய தகவல்களை இங்கே தருகிறேன், குமரப்பாவின் தற்கொலையோடு தொடர்புபட்ட விடயம் ஒன்றைப்பற்றியும், அது என்னை எவ்வளவு தூரத்திற்குப் பாதித்திருந்தது என்பது பற்றியும் கூறுகிறேன். காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையில் பொறியியலாளராகப் பணியாற்றிவந்த ஒருவரின் மனைவி தனது கணவருக்கு என்ன நடந்தது என்பற்றி அறிந்துகொள்ள டெயிலி நியூஸ் காரியாலயத்திற்கு வந்திருந்தார். மூத்த ஆசிரியர் மணிக் டி சில்வா அவரை என்னிடம் அழைத்து வந்திருந்தார். அந்தப்பெண் எனக்கு முன்னால் அமர்ந்துகொண்டார். நான் யாழ்ப்பாண அரசாங்க அதிபரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, அந்த இளம் பொறியியலாளர் கொல்லப்பட்டு விட்டதாகக் கூறினார். அந்த பொறியியலாளரை நான் கண்டிருக்கிறேன், கைத்தொழில் அமைச்சரான சிறில் மத்தியூ காங்கேசந்துறைக்கு விஜயம் செய்தவேளை நானும் அவருடன் சென்றபொழுது அந்தப் பொறியியலாலறைச் சந்தித்திருந்தேன். அவர் இறந்த செய்தி எனக்குக் கண்ணீரை வரவழைத்தது. ********************************************************************************************* இனப் பூசலின் அரசியல் 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தன்னைப் பலப்படுத்திக்கொண்ட ஜெயவர்த்தனவின் பலம் சிறிமாவை மேலும் பலவீனப்படுத்தி மக்கள் முன் அவரது நம்பகத்தன்மையை வலுவிழக்கப்பண்ணியதன் மூலம் இன்னும் பலமடைந்து வந்தது. அவரது அடுத்த இலக்காக இருந்தது இரண்டாவது தடவையும் ஜனாதிபதியாகுவதுதான். புதிய அரசியலமைப்பின் மூலம் அவர் நாட்டின் தலைவராகவும், அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவராகவும், முப்படைகளின் பிரதான கட்டளையிடும் தளபதியாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும் தன்னை நிலைப்படுத்திக்கொண்டார். 1978 ஆம் ஆண்டு பங்குனி 20 ஆம் திகதி விசேட விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்து சிறிமாவின் அரசியல் நம்பகத்தன்மையினை வெகுவாக அழித்திருந்தார். 1970 இலிருந்து 1977 வரையான காலப்பகுதியில் பிரதமராக இருந்த சிறிமா அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்று ஜெயவர்த்தன குற்றஞ்சாட்டியிருந்தார். அவரது முதலாவது பதவிக்காலம் 1960 இலிருந்து 1965 வரை நடைபெற்றிருந்தது. அவருக்கெதிராக முன்வைக்கப்பட்டிருந்த முக்கியமான குற்றச்சாட்டு என்னவென்றால், அளவுக்கதிகமான விவசாயக் காணிகளை வைத்திருக்கும் நிலச் சுவாந்தர்களிடமிருந்து அவற்றினை கையகப்படுத்தி மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் சட்டத்தினை சிறிமா கொண்டுவரவிருந்த சமயத்தில் தனக்குச் சொந்தமான தென்னங்காணிகளின் ஒருபகுதியினை அவர் தனியாருக்கு விற்றிருந்தார் என்பது. இதனால் அவரை ஒரு எமாற்றுப்பேர்வழி என்று மக்கள் அக்காலத்தில் தூற்றி வந்திருந்தனர். ஜே ஆர் இனால் நியமிக்கப்பட்ட மூன்று நீதிபதிகளான வீரரட்ண, சர்வானந்தா, அல்விஸ் ஆகியோர் அடங்கிய ஆணைக்குழுவினருக்கு, ஆணைக்குழு அமைக்கப்பட்ட ஆண்டிற்கு முன்னதாக நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்றினை விசாரிக்கும் அதிகாரம் இல்லையென்று சிறிமா தாக்கல் செய்த வழக்கினை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆனால், சிறிமா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க தன்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொண்ட ஜெயவர்த்தன, நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்தார். 1978 ஆம் ஆண்டு கார்த்திகை 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஜே ஆர் முன்வைத்த திருத்தத்தினை அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. இதன்மூலம் நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியினால் அமைக்கப்படும் விசேட விசாரணைக் குழுக்களின் தீர்ப்புக்களுக்கெதிராக மேல்முறையீடு செய்யமுடியாது என்ற திருத்தம் அரசியல் யாப்பில் இணைக்கப்பட்டது. 1982 இல் ஜெயவர்த்தனவினால் அரசியல் யாப்பில் சேர்க்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக்குழு பற்றிய சட்டத் திருத்தம் தன்னை அடுத்துவரவிருந்த ஜனாதிபதித் தேர்தலில் பங்கெடுக்காது தடுக்கவே என்று கடுமையாகக் குற்றஞ்சாட்டிய சிறிமா, இந்த விசாரணைகளில் பங்குகொள்வதை நிராகரித்திருந்தார். தனது காரணத்தை விவரித்து சிறிமா எழுதிய கடிதத்தினை உதாசீனம் செய்த விசாரணை ஆணைக்குழு அவரது பிரசன்னம் இன்றியே விசாரணைகளை நடத்தினர். மூன்று நீதிபதிகளடங்கிய குழு, சிறிமா தனது அதிகாரத்தினைத் துஷ்பிரயோகம் செய்திருந்தார் என்று தீர்ப்பளித்திருந்தனர். 1980 ஆம் ஆண்டு புரட்டாதி 24 ஆம் திகதி பாராளுமன்றம் இந்த ஆணைக்குழுவின் தீர்ப்பினை முழுமையாக ஏற்றுக்கொண்டது. ஜோன் கொத்தலாவலை முன்னாள் பிரதமர் ஜோன் கொத்தலாவலை உட்பட பல பிரமுகர்களின் எதிர்ப்பிற்கு மத்தியிலும் சிறிமாவுக்கெதிரான சிவில்த் தடைகளை பாராளுமன்றத்தின் ஆதரவுடன் ஜெயவர்த்தன நடைமுறைப்படுத்தினார். சாதாரண பொதுமகன் ஒருவருக்கிருக்கும் உரிமைகள் பறிக்கப்பட்ட சிறிமா 7 வருடங்கள் அவதிப்பட்டிருந்தார். சிறிமாவுக்கெதிரான உரிமை மறுப்பு நடவடிக்கைகளை அமிர்தலிங்கம் கடுமையாகக் கண்டித்திருந்தார். ஆனால், சிறிமாவின் உரிமைகளுக்கெதிரான தீர்மானம் 139 இற்கு 19 வாக்குகள் என்கிற அடிப்படையில் பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும், சுதந்திரக் கட்சியும் எதிர்த்து வாக்களித்தன. சிறிமாவின் மீதான உரிமை மறுப்பு நடவடிக்கை இரு கட்சி ஜனநாயக அரசியலினை ஒரு பக்கமாகச் சரிக்கவே எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றால் அது மிகையில்லை. சிறிமாவின் நெருங்கிய நண்பராக இருந்த இதிரா காந்தி, சிறிமா மீதான தடையினை ஜனநாயகத்திற்கெதிரான நடவடிக்கை என்று விமர்சித்திருந்தார். ஜெயவர்த்தனா அமெரிக்கா நோக்கிச் சாய்ந்துவருவதை உணர்ந்துகொண்ட இந்திரா, அதனை மாற்றுவதற்கு அடுத்த தேர்தலில் சிறிமா மீண்டும் பதவிக்கு வரவேண்டும் என்று விரும்பினார். ஆனால், அது நடைபெறாமல்ப் போய்விட்டது. சிறிமாவை அரசியலிலிருந்து முற்றாக அகற்றியதன் பின்னணியில், அமெரிக்காவின் பக்கம் நோக்கிச் சாய்ந்துவரும் இலங்கையை எப்படியாவது வழிக்குக் கொண்டு வந்திடலாம் என்று இந்திரா எதிர்பார்த்ததும் நிகழாது போய்விட்டது. புது தில்லியிலும், கொழும்பிலும் என்னுடன் பேசிய சில இந்திய அதிகாரிகள், சிறிமாவின் அரசியல் மீள்வருகை முற்றாக அழிந்துவிட்டதன் மூலம் இந்தியாவின் நலன்களுக்கு எவ்வகையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதைப்பற்றி தனக்கு விரிவான அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு இந்திரா தம்மைக் கேட்டிருந்ததாகவும், அந்த அறிக்கையில் அலசப்பட்ட விடயங்களிலிருந்து இலங்கையினை மீளவும் அணிசேரா நாடுகளின் அமைப்பிற்குள் எப்படிக் கொண்டுவரலாம் என்பதுபற்றிய திட்டங்களையும் வகுத்துக்கொண்டதாகவும் கூறியிருந்தனர். இந்த தேடுதல்களின் விளைவாகவே தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கு உதவுவதன் மூலம், அவர்களைக் கருவியாகப் பாவித்து, ஜெயவர்த்தனவின் அரசுமீது அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம் என்று இந்திரா முடிவெடுத்ததாகவும் கூறியிருந்தனர். சிறிமாவை 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலி பங்குபற்றுவதிலிருந்து அகற்றுவது மட்டுமே ஜனநாயத்திற்கெதிரான செயலாக ஜெயவர்த்தனவினால் செயற்படுத்தப்படவில்லை. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை தனக்கு அடிபணிய வைக்கவும் ஜெயவர்த்தன அதனைச் செய்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி பிரதான எதிர்க்கட்சியாகவும், அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகவும் பாராளுமன்றத்தில் அமர்ந்தபோது ஜெயவர்த்தனா அவர்களிடமிருந்து எதிர்பார்த்ததெல்லாம் தனக்கு அடிபணிந்து தான் செய்வதை ஆமோதிக்கக் கூடிய ஒரு பொம்மை எதிர்க்கட்சியைத்தான். ஆனால், தான் எதிர்பார்த்தது நடக்காது போகவே தமிழர்களுக்கு ஒரு பாடத்தைப் புகட்டவும், அமிர்தலிங்கத்தை அச்சுருத்தி தனக்கு அடிபணிய வைக்கவும் 1977 ஆம் ஆண்டு ஆவணிக் கலவரத்தை ஜெயவர்த்தனா திட்டமிட்டு நடத்தினார். தான் இரண்டாவது முறையும் ஜனாதிபதியாவதற்கு சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை முற்றாகப் பலவீனப்படுத்துவதும் தமிழர்களின் வாக்குகள் அனைத்தையும் தனக்கே விழும்படி பார்த்துக்கொள்வதும் அவசியம் என்பதை ஜெயவர்த்தனா உணர்ந்திருந்தார். இதனை விடவும், காலம் காலமாக சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களாக இருந்துவரும் சிங்கள கடும்போக்குத் தேசியவாதிகளின் வாக்குகளையும் கவர்வதன் மூலம் 50 வீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற்று தனது வெற்றியை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிந்துவைத்திருந்தார். புதிய அரசியலமைப்பின்படி தேர்தலில் முதலாவது சுற்றில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளரே ஜனாதிபதியாகமுடியும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.
  15. ரேடியோத் தகவலின் மர்மம் சன்சொனி பார்க்கத் தவறியிருந்த இரண்டாவது விடயம் தான் யாழ்ப்பாணத்தில் பொலீஸாரால் தமிழ் மக்கள் மேல் ஆரம்பிக்கப்பட்ட வன்முறைகள் எவ்வாறு நாடுமுழுதுவதற்கும் பரவியது என்பது. தமிழ் மக்கள் மீது நாடு தழுவிய ரீதியில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதற்குக் காரணமாக இருந்தது யாழ்ப்பாணம் ஆரிய குளத்தருகில் அமைக்கப்பட்டிருந்த நாக விகாரை தமிழர்களால் எரியூட்டப்பட்டு விட்டதாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு பொலீஸார் அனுப்பிய ரேடியோத் தகவலே. இந்த ரேடியோச் செய்தி யாழ்ப்பாண பொலீஸ் அத்தியட்சகரிடமிருந்து பொலீஸ் மாதிபருக்கு ஆவணி 17 அன்று காலை 11 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. "இன்று இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்கள் நான்கு எரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலுள்ள நாகவிகாரை தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்திற்கு வரும் சிங்களவர்களைத் தாக்குவதற்காக ரயில்நிலையத்தில் பாரிய கூட்டம் ஒன்று காத்துக்கொண்டிருக்கிறது, நிலைமை மிக மோசமாக இருக்கிறது" என்று அந்த ரேடியோச் செய்தி அனுப்பப்பட்டிருந்தது. இந்த ரேடியோச் செய்தியில் அனுப்பப்பட்ட அத்தனை தகவல்களும் தவறானவை, பொய்யானவை. ஒரு போக்குவரத்துச் சபை பஸ்தன்னும் எரியூட்டப்படவில்லை. ஆணைக்குழுவின் முன்னால் பலர் அளித்த சாட்சியங்களில் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான சில பஸ்களை கடத்திக்கொண்டு யாழ்நகரின் நகைக்கடைகளுக்குச் சென்றது யாழ்ப்பாணப் பொலீஸாரே என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. நகைக்கடைகளை உடைத்த பொலீஸார் அவற்றைக் கொள்ளையடித்தனர். நாக விகாரை ஒருபோதுமே தாக்குதலுக்குள்ளாக்கப்படவில்லை. ரயிலில் வரும் பயணிகளைத் தாக்கவென ஒரு தமிழர் கூட புகையிரத நிலையத்தில் காத்துக் கிடக்கவில்லை. விசாரணைக் குழுவின் முன்னால் சாட்சியமளித்த போலீஸார் சிலர்கூட அனுப்பப்பட்ட ரேடியோத் தகவல் பொய்யானது என்று கூறியபோது சன்சொனி அதனை ஏற்றுக்கொண்டிருந்தார். அப்படியானால், இந்த பொய்யான செய்தி எங்கிருந்து உருவானது? இதன் பின்னால் இருந்தது யார்? ஆணைக்குழுவின் சாட்சியமளித்த பொலீஸ் கொன்ஸ்டபிள் குமாரசாமி, பொலீஸ் தலைமைக் காரியாலயத்தின் தலைமை அதிகாரி குணசேகர தன்னைப் பணித்தன்படியே தான் அந்தத் தகவலைத் தயார் செய்ததாகக் கூறியதுடன் அத்தகவலை ரேடியோ அறையில் பணிபுரியும் ரேடியோ இயக்குநரான ஜேக்கப்பிடம் கொடுத்துவிட்டதாகவும் கூறினார். மேலும் , குணசேகர தனக்குக் கூறியதன்படி தகவலை தான் எழுதிக்கொண்டிருக்கும்போது, குணசேகரவுடன் பொலீஸ் பரிசோதகர் குருசாமியும் அருகில் இருந்ததாக அவர் கூறியிருந்தார். பின்னர் ரேடியோ இயக்குநர் அத்தகவலை கொழும்பு பொலீஸ் தலைமைக் காரியாலயத்திற்கு அனுப்ப, அத்தகவல் நாட்டிலுள்ள அனைத்துப் பொலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. குணசேகர பொய்யான தகவலை குமாரசாமியைக் கொண்டு எழுதும்போது தான் அருகில் நிற்கவில்லை என்று முதலில் குருசாமி மறுத்திருந்தார். ஆனால், பாதிக்கப்பட்ட தமிழர் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் லெஸ்லி பார்லெட்ட் குருசாமியைக் குறுக்கு விசாரணை செய்தபோது, அத்தகவல் குணசேகரவால் தயார் செய்யப்படும்போது தானும் அருகில் இருந்ததை குருசாமி ஒப்புக்கொண்டதுடன், மேலிடத்திலிருந்து வந்த கட்டளையின்பேரிலேயே அத்தகவலைத் தாங்கள் தயார் செய்து அனுப்பியதாகவும் கூறினார். பொலீஸாரைத் தொடர்ச்சியாகக் குறுக்கு விசாரனை செய்த லெஸ்லி பார்லெட்ட் பின்வரும் விடயங்களைக் கண்டறிந்திருந்தார். "ஆவணி 17 ஆம் திகதி காலை, பொலீஸ் செயற்பாட்டு அறையில் குருசாமியும், குமாரசாமியும் கடமையில் இருந்தார்கள். காலை 11 மணியளவில் செயற்பாட்டு அறைக்குள் நுளைந்த குணசேகர, குமாரசாமியைப் பார்த்து நான் கூறுவதை அப்படியே எழுதுங்கள் என்று கட்டளையிட்டுவிட்டு பேசத் தொடங்கினார், "4 இ.போ.ச பஸ்வண்டிகள் எரியூட்டப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தின் நாக விகாரை தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. ரயில்களில் வரும் பயணிகளைத் தாக்குவதற்கு பாரிய குழு ஒன்று புகையிரதநிலையத்தில் காத்துக்கிடக்கிறது. நிலைமை மோசம்" என்று கூறிவிட்டு, இந்தத் தகவலை உடனடியாக பொலீஸ் மா அதிபருக்கு ரேடியோ மூலம் அறிவிக்குமாறு குணசேகர குமாரசாமியைப் பணிக்கிறார். அருகில் இருந்த குருசாமியும், குமாரசாமியிடம் அத்தகவலை உடனடியாக அனுப்புமாறு அழுத்தம் கொடுக்கிறார். அதன்பிறகு அத்தகவலை எடுத்துச் சென்று ரேடியோ அறையில் கடமையிலிருந்த ரேடியோ இயக்குநர் ஜேக்கப்பிடம், குமாரசாமி கொடுத்துவிடுகிறார். இறுதியாக ஜேக்கப்பினால் அத்தகவல் 11 மணிக்கு பொலீஸ் மாதி அபருக்கு அனுப்பப்படுகிறது". "இத்தகவலைப் பெற்றுக்கொண்ட கொழும்புப் பொலீஸ் தலைமையகத்தின் ரேடியோப் பிரிவு இத்தகவல் உண்மைதானா என்பதை உறுதிப்படுத்துங்கள் என்று யாழ்ப்பாண பொலீஸ் ரேடியோப் பிரிவிற்கு தகவல் அனுப்புகிறது. பொலீஸ் பரிசோதகர் குருசாமி உடனடியாக ரேடியோ அறைக்கு அழைக்கப்படுகிறார். குருசாமி 11:05 இற்கு அளித்த ரேடியோப் பதில் இப்படிக் கூறியது, " எனது தற்போதைய தகவலுக்கு மேலதிகமாக வேறு தகவல்கள் இல்லை, இத்தகவலை புறக்கணியுங்கள், வேறு தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் - இப்படிக்கு யாழ்ப்பாண பொலீஸ் அத்தியட்சகர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. "காலை 11:20 இற்கு, யாழ்ப்பாண ரேடியோ அறைக்கு பொலீஸ் மா அதிபரிடமிருந்து பின்வரும் கட்டளை கிடைத்தது, "கடற்படையினர் நாக விகாரைக்குப் பாதுகாப்பு அளிப்பார்கள். நாக விகாரையின் பாதுகாப்பிற்கு காவலர்களை ஒழுங்கு செய்யுங்கள்" . இத்தகவலின் பின்னர் பொலீஸ் மா அதிபரிடமிருந்து வேறெந்த தகவல்களும் வரவில்லை. அதன்பிறகு யாழ்ப்பாணத்திலிருந்து வேறெந்த தகவலும் அனுப்பப்படவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்பப்பட்ட தகவல் தவறானது என்பதையும் போலீஸ் மா அதிபர் ஸ்டான்லி சேனநாயக்கவும் எவருக்கும் அறிவிக்கவில்லை. கடைசியாக ரேடியோவில் பகிரப்பட்ட தகவல் 11:20 இற்கு பொலீஸ் மா அதிபர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிய தகவல் மட்டும்தான். அத்தகவலில் யாழ்ப்பாணத்திலிருந்த இரு பிரதான பெளத்த விகாரைகளுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டிருந்தது. அத்தகவல் எச்சரிக்கையுடன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்பிறகு பொலீஸ் ரேடியோ அலைவரிசயில் நிசப்தமே நிலவியது. இந்தச் செய்திகள் அனைத்தும் பொலீஸாரை ஆத்திரப்படவைக்க அவர்கள் எவ்வாறு தமிழ்மக்களுடன் நடந்துகொண்டார்கள் என்பதை விசாரணைக் குழுவிற்குக் கிடைத்த ஆதாரங்கள் விளக்கியிருந்தன. விசாரணைகளின்போது, பொய்யான பொலீஸ் செய்தியத் தயாரித்தது யாரென்பதை மறைக்க பொலீஸார் பகீரதப் பிரயத்தனத்தனத்தில் ஈடுபட்டிருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. இந்தப் பொய்களை மறைக்கும் கைங்கரியம் குருசாமியிலிருந்து ஆரம்பமாகியிருந்தது. முதலில், அத்தகவல் தயாரிக்கப்படும்போது குணசேகரவுடன் தானும் குமாரசாமியின் அருகில் இருந்ததை அவர் மறுத்திருந்தார். பின்னர், குணசேகர அத்தகவலை தயாரிக்குமாறு குமாரசாமிக்குக் கட்டளையிடவில்லை என்று அவர் கூறினார். ஒருகட்டத்தில் அத்தகவலை யார் தயாரித்தார்கள் என்பதே தனக்குத் தெரியாது என்று அவர் கூறினார். ஆனால், குமாரசாமியுடன் சேர்ந்து தான் அத்தகவலை கொழும்பிற்கு அனுப்பி சரியாக 5 நிமிடங்களில் கொழும்பிலிருந்து தாம் அனுப்பிய தகவலை உறுதிப்படுத்துமாறு தகவலொன்று வந்ததாக அவர் ஒப்புக்கொண்டார். குமாரசாமி கைப்பட எழுதிய முதலாவது தகவலை தான் கண்ணுற்றதாகவும், பின்னர் அத்தகவல் தவறானது, மேலதிக தகவல்களுக்காகக் காத்திருங்கள் என்று கொழும்பிற்குத் தகவல் அனுப்பியதாகவும் குருசாமி கூறினார். குணசேகரவும் முதலில் அத்தகவலைத் தான் தயாரிக்கவில்லை என்று மறுத்தார். அத்தகவல் குறித்து முதன்முதலாக தான் கேள்விப்பட்டது புரட்டாதியில் விசாரணைக் குழுவினரூடாகத்தான் என்று கூறினார். வழக்கறிஞர் லெஸ்லி பாட்லெட், குருசாமியைக் குறுக்கு விசாரணை செய்தபோது, தனது மேலதிகாரிகளிடமிருந்து வந்த கட்டளையின்படி செயலாற்றியிருக்கும் குருசாமி, முதலில் அனுப்பப்பட்ட பொய்யான தகவலை திருத்திக்கொள்ளும் சந்தர்ப்பம் இருந்தபோதும் வேண்டுமென்றே தாமதித்து 10 நிமிடங்களின் பின்னரே அத்தகவல் தவறானது, வேறு தகவலுக்காகக் காத்திருங்கள் என்று கொழும்பிற்குத் தகவல் அனுப்பியிருக்கிறார். மேலும், மேலிடத்து அழுத்தத்தினால், குருசாமி தவறான தகவல்பற்றிய மேலதிக விபரங்களை கொழும்பிற்கு தெரிவிக்காதும் விட்டிருக்கிறார் என்று கூறினார். விசாரணைகளின் முடிவில் மனமுடைந்து அழுத குருசாமி, அத்தகவல் பொய்யானதென்று தனக்குத் தெரியும் என்றும், பொய்யொன்றையே தாம் செய்தியாக ரேடியோவூடாக அனுப்பியதாகவும் ஒப்புக்கொண்டார். இறுதியாக வாக்குமூலமளித்த குருசாமி, தனது மேலதிகாரிகளின் சதியே இவற்றிற்கான காரணம் என்று கூறியதுடன், தனக்கும் இச்சதிக்கும் தொடர்பில்லை என்றும் கூறினார். லெஸ்லி பார்லெட் முன்வைத்த தனது அறிக்கையில், பொலீஸ் ரேடியோச் சேவையூடாக வேண்டுமென்றே பொய்யான தகவலை அனுப்பிய பொலீஸ் அத்தியட்சகர் செனிவிரட்ணவும் ஏனைய உயர் அதிகாரிகளும் தண்டனையிலிருந்து எந்தவிதத்திலும் தப்பிக்க முடியாது என்று எழுதியிருந்தார். "பொய்யான தகவல் பரப்பப்பட்டபோது பொலீஸ் மா அதிபர் அனா செனிவிரட்ண, பொலீஸ் அத்தியட்சகர் ஏ. எஸ். செனிவிரட்ண, பொலீஸ் தலைமையக பரிசோதகர் குணசேகர ஆகியோர் தத்தமது செயற்பாட்டு அறைகளில் இருந்திருக்கின்றனர், ஆகவே இவர்களே இந்தப் பொய்யான தகவல் நாடு முழுவதற்கும் பரப்பப்படக் காரணமானவர்கள் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை" என்று லெஸ்லி பார்ட்லெட் முன்வைத்த அறிக்கையினை ஏற்றுக்கொள்ள மறுத்த சன்சொனி, இதனை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லையென்று கூறினார். ஆகவே, இப்பொய்யான தகவலை யார் தயாரித்திருப்பார்கள் என்பதை தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறி கையை விரித்துவிட்டார். மேலே குறிப்பிடப்பட்ட இரு முக்கியமான கேள்விகளுக்குமான பதிலை சன்சொனி தேடியிருந்தால், 1977 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீதான வன்முறைக்கு யார் காரணம் என்பதை மிக இலகுவாக அவரால் கண்டுபிடித்திருக்க முடியும். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பரம வைரியும், ஆய்வாளருமான ராஜன் ஹூலின் கருத்துப்படி தமது புதிய அரசியல் எஜமானர்களான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களின் கட்டளையின்பேரிலேயே பொலீஸார் இந்த வன்முறைகளைத் திட்டமிட்டு நடத்தினர் என்று கூறுகிறார். ஜெயவர்த்தனவின் ஆட்சியில், தமிழரின் விடுதலை வேட்கையினை அடக்குவதற்கு அவர்கள் மீதான இனவன்முறையே கட்டாயமான ஆயுதமாகப் பாவிக்கப்பட்டது. இதன்மூலம் தமிழ் மிதவாதிகளுடன் தொடர்பாடலைப் பேணுவதற்கான கதவினை அவர் இறுக மூடிக்கொண்டார். இரு வருடங்கள் கழித்து, 1979 ஆம் ஆண்டு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான சட்டம் எனும் புதிய சட்டத்தினை உருவாக்கியதன் மூலம் ஜனநாயக வழியிலான தீர்விற்கான முழுக்கதவினையும் அடைத்துக்கொண்டதோடு, பொலீஸாருக்கும், இராணுவத்திற்கும் மிதமிஞ்சிய அதிகாரங்களை அள்ளி வழங்கி மிதவாதத் தமிழர்கள் மீது ஆயுத வன்முறையினையும் கட்டவிழ்த்து விட்டார்.
  16. பாகம் IV ஐ தவிர்த்து பாகம் III இருந்து நேரடியாக பாகம் V ஐ வாசிக்கவும். பாகம் V ஹைபோகிளைசீமியா ஒரு பொல்லாத விசயம். சாதாரணமாக இருப்பது போல் இருக்கும், ஆனால் உணவையும் மருந்தையும் கிரமமாக எடுக்காது போனால் குருதியில் குளுகோசின் அளவு திடீரென்று, ஹிடின்பேர்க்கின் அறிக்கைக்கு பின்னான அதானியின் நிகர மதிப்பு போல கிடுகிடு என இறங்க தொடங்கி விடும். உடல் வியர்க்கும், நடுங்கும், கடும் கோபம் வரும், ஏன் ஆக ரத்த குளுகோசின் அளவு குறைந்தால் கொலை வெறி கூட வரும். இன்னும் குறைந்தால் கோமாக்கு கொண்டுபோய் ஆளின் கதையையே முடித்து விடும். இதை எல்லாம் தவிர்க்கவேண்டும் என்றுதான் அவன் கோப்பி கடைக்குள் நுழைகிறான். ஆனால் அவனின் லக் அப்படி, கோப்பி கடையில் ஒரு கூட்டம் சனமாக இருந்தது. அந்த நெரிசலில் நிற்க தலையை சுத்தி கொண்டு வந்தது அவனுக்கு. பிரித்தானியரில் என்ன கெட்ட பழக்கம் இருந்தாலும் வரிசையில் நிற்கும் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. ஆனால் இப்போ அந்த நல்ல பழக்கமே அவனுக்கு எமனாக வந்து விடும் போல் இருந்தது. ஒரு வழியாக வரிசையில் முன்னுக்கு நின்றவனிடம் தன் நிலையை சொல்லி, அனுமதி பெற்று இரெண்டு சீனி தூவிய டோநட்களையும் ஒரு கோக் கானையும் வாங்கி கொண்டு மேசையில் போய் அமர்ந்தான் அவன். கோக் குடியாதேங்கோ எண்டு சொல்லுறது இதுக்குத்தான். குளுகோஸ் தண்ணிக்கு அடுத்து ரத்தத்தில் சீனியின் அளவை உடனடியாக கூட்ட கோக்கை விட்டால் வேறு பானம் இல்லை. ….இதைதான் வருத்தம் ஏதும் இல்லாத பிள்ளையள் கூட வாங்கி குடிக்குதுகள். பின்ன ஏன் டயபிடிஸ் வராது….. நினைத்தபடியே…கோக் கானை “டொப்” என மூடி உடைத்து பருக தொடங்கினான் அவன். கோப்பி கடையில் கல்லாவில் நின்றவனை நினைக்க நினைக்க அவனுக்கு கோவம் பற்றி கொண்டு வந்தது. என்ன அசிரத்தை இது? ஏதோ இலவசமாக தருவது போல் இருந்தது அவனின் பாவனையும் நடந்து கொண்ட முறையும். முந்தி எல்லாம் இந்த நாட்டில் இப்படி இல்லை. முன்பு யூகேயில் கஸ்டமர் சேர்விஸ் நன்றாக இருக்கும். இப்போ?…பச்…. அவனை பார்த்தால் உக்ரேன் காரன் போல இருந்ததது. உக்ரேன்காரர் உக்கல் சனம், நிறவெறி பிடித்தவர் என யாழ்களத்தில் முருகர்சாமி அண்ணை எழுதியது ஏனோ அவனுக்கு நியாபகம் வந்தது. கிட்டதட்ட ஒரு இருபது நிமிடம் ஆகி இருக்கும். கோக் கான் முக்கால்வாசி தீர்ந்து விட்டிருந்தது. ஆனாலும் ஓடர் பண்ணிய டோநட்டை இன்னும் காணவில்லை. “ஹலோ ஆம் ஐ கெட்டிங் மை டோ நட் டுடே, ஓர் டுமோரோ”? கொஞ்சம் சத்தமாகவே உக்ரேன்காரனை டோநட் இன்றா அல்லது நாளையா கிடைக்கும்? கேட்டான் அவன். ஆனால் அந்த உக்ரேனியனோ (முடிவே கட்டிவிட்டான்) கோப்பி மெசின் அருகில் எதையும் கேளாதவன் போல் நின்று எதையோ கழுவிக்கொண்டிருந்தான். திடீரென திரும்பி பார்த்தால் அந்த உக்ரேனியன் அவனை நோக்கி ஒரு பெரிய கத்தியோடு ஓடி வந்து கொண்டிருந்தான்…….. கண்களில் நிறவெறி ஜொலி ஜொலித்தது…….. ”என்ர பிள்ளையாரே, முருகர்சாமி அண்ணை உவங்களை உக்கல் எண்டு சொன்னது சரிதான்” என ஒரு கணம் அவன் திகைத்து நின்றாலும்……. மறுகணமே அவனின் உடலில் அதிரீனலீனின் “தப்பியோடு அல்லது சண்டையிடு” பொறிமுறை வேலை செய்ய தொடங்கி இருந்தது. உக்ரேனியன் கொண்டு வரும் கத்தியோ பெரிது…வேறு வழியில்லை, ஒரு நல்ல கனமான மரக்கதிரையை தூக்கி கொண்டு அந்த உக்ரேனியனை நோக்கி பாய்ந்தான் அவன். —————————————— அப்போதுதான் டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ், அவனின் பிரான்சில் இருந்து வருவிக்கபட்டிருந்த தம்பிக்கும், டாக்டர் பிரணவணுக்கும் சீசீடிவி படங்களை போட்டு காட்டி முடித்திருந்தார். தம்பிக்கு ஏதோ விளங்கியது போலவும் இருந்தது ஆனால் விளங்காதது போலவும் இருந்தது. கேள்வி குறியோடு டாக்டரின் முகத்தை பார்த்தான் தம்பி. மொழி பிரச்சனையை விளங்கி கொண்ட டாக்டர், ”ஐ வில் எக்ஸ்பிளைன் டு ஹிம் இன் ஹிஸ் ஓன் லாங்குவேஜ்”…….. என பிலிப்சுக்கு சொல்லியபடி தம்பியிடம் தனது புலம்பெயர் கொச்சை தமிழில் பேச தொடங்கினார். சீசீடிவி பார்தனிங்கள்தானே…சும்மா டோநட் எடுத்து கொண்டிருந்த அவர போட்டு நல்லா அடிச்சு வச்சிருக்கிறார். இதுக்கு ஒரு ரீசனும் இல்லை. பொலிஸ் அன் புரொவோக்ட் அட்டாக் எண்டு சொல்லினம்….. அதுக்கு முதல் மூண்டு அவர்ஸ் காரில இருந்து…போனில கதைச்சிருக்கிறார்…. ஆனால் போனை செக் பண்ணி பார்த்தா அந்த மூண்டு அவர்ஸ்சும் எந்த ஒரு கோலும் கூட வரலேல்ல உங்கட அண்ணாக்கு…. அதுமாரி….சில மாசமா…. ஒவ்வொரு நாள் காலமையிலும், பின்னேரமும் ஒப்பசிட்டா இருக்கிறா ஸ்கூல் வாசலில் வந்து நிண்டிருக்கிறார்….. ஆனா நாங்கள் செக் பண்ணி பார்த்தா உங்கட அண்ணாக்கு பிள்ளையோ, வைவ்வோ கூட இல்லை. எல்லாம் சேர்த்து பார்த்தா எனக்கு இது ஒரு மனசு சரியில்லாத வருத்தம் எண்டுதான் விளங்குது…. இத நான், தொடர்ந்து வெளிநாட்டில தனியாவே இருந்ததால வந்த ஒரு மெண்டல் ஹெல்த் பிரச்சனை என சஸ்பெட்க் பண்ணுறன்…. அதால… உங்கட அண்ணையை செக்சன் பண்ணுற முடிவை எடுக்கப்போறம்…. செக்சன் எண்டால்…? புரியாதவனாக கேட்டான் தம்பி. செக்சன் எண்டால்…. வந்த வருத்தம் மாறும் வரைக்கும் அவரை ஒரு சைகியாடிரிக் கொஸ்பிடலை தடுத்து வச்சிருப்பம். உங்களுக்கு விருப்பம் இல்லாட்டி நீங்கள் அப்பீல் பண்ணலாம். நாளைக்கு ஒரு இண்டர்பிரிட்டரை வச்சு எல்லாத்தையும் வடிவா சொல்லுறன். அவன் இப்போதைக்கு வெளியில் வர வாய்ப்பில்லை என்பதை முடிந்தளவு தன்மையாக சொன்னார் டாக்டர் பிரணவன். என்ன செய்தாலும்….. அண்ணையை பழையபடி மாத்தி தாங்கோ டொக்டர்…. எங்களை எல்லாம் வெளிநாட்டுக்கு எடுத்து ஆளாக்கினது அவர்தான்…. கண்ணீர் புரண்டோட…கை கூப்பினான் அவனின் தம்பி. அப்ப கூட்டத்தை முடிக்கலாம்…… என்ற தோரணையில்……. கையை திருப்பி….. மணிக்கூட்டை வெறித்துப்பார்த்தார் இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ். (யாவும் கற்பனை) முற்றும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபா. ஐந்தாம் பாகம் பற்றிய பார்வையையும் எழுதுங்கள்.🙏🏾 நன்றி சுவை அண்ணா. இப்ப எழுதியதை வாசிதால் சேது விக்ரம் நியாபகம் வருவாரோ?😀
  17. முன் குறிப்பு பாகம் IV ம் V ம் இக்கதையின் இரு வேறுபட்ட முடிவுகள் (கிளைமாக்ஸ்). ———————————————— பாகம் IV இன்று ஒரு மிக முக்கியமான நாள். அவனுக்கும் இவனுக்குமான அந்த சம்பாசணை நிகழ்ந்து கிட்டத்தட்ட பதின்மூன்று மாதங்கள் உருண்டோடி விட்டிருந்தன. அதன் பின் வைத்திய நண்பனின் ஆலோசனையின் பெயரில் அவன் இவனுடன் தொடர்பு ஏற்படுத்துவதை அறவே தவிர்த்து விட்டிருந்தான். பதின்மூன்று மாதங்கள் முன்னதாக நடந்த அன்றைய சம்பாசணையின் போது இவனுக்கு… நீ கட்டாயம் ஒரு சைக்கியாடிரிஸ்டை பார்க்க வேண்டும் மச்சான்…. உடல் காயம் போலத்தான், மனக்காயமும். இரெண்டுக்கும் ஒரு அளவுக்கு மேல் மருந்து அவசியம்….. என தயங்கி, தயங்கி அவன் சொல்லி இருந்தான். இவனும் கூட சற்றே மனம் நிதானப்பட்ட ஒரு நிமிடத்தில்… நீ சொல்றது சரிதான் மச்சான்…. எனக்கு ஏதோ பிசகீட்டுது எண்டு விளங்குது…கெதியா காட்டோணும்…மருந்து எடுக்கோணும்…. இல்லாட்டில் முழு விசராக்கிப்போடும்… என சொல்லியும் இருந்தான். ஆனால் அடுத்த நொடியே, போரிஸ், ஏலியன், மனைவி என வேதாளம் மீண்டும் மரத்தில் ஏறிவிட்டது. இதை எல்லாம் கருத்தில் எடுத்த வைத்திய நண்பன் அவனுக்கும், இவனுக்கும் மட்டுமான உறவை மட்டும் அல்ல, இத்தனை மாதகாலமும் இவனுக்கும் அவனின் வட்டத்தில் மனைவியை தவிர மிகுதி அனைவருக்குமான தொடர்புகள் அனைத்தையும் துண்டித்தே சிகிச்சையை தொடர்ந்தான். இந்த ஏற்பாட்டின் பலனாக, தன்னையும், மனைவியையும், வைத்தியரையும் தவிர வேறு எவருக்கும் இந்த பிரச்சனையின் ஆழம் தெரியாது என்ற நம்பிக்கையோடு இத்தனை மாதகாலமாக இவனும் தொடர்ந்து சிகிச்சையை எடுத்து வந்தான். இவனோடு தொடர்பில் இல்லாதபோதும் வைத்திய நண்பனோடும், திருமதி இவனோடும் அவன் தொடர்பில் இருந்து, இவனுக்கு வழங்கப்படும் மருந்துகள், சிகிச்சைகள் பற்றி முழுவதுமாக அறிந்தே இருந்தான். நேற்று வைத்திய நண்பன் பேசும் போது இவன் கிட்டதட்ட முழுவதுமாக தேறி விட்டான் எனவும். அன்றைய சம்பாசணையை பற்றி இவனுக்கு அதிகம் நியாபகம் இல்லை எனவும். அதை பற்றி கதைப்பதை தவிர்த்து, வழமை போல் உரையாடலை தொடரும் படியும் அவனுக்கு கூறி இருந்தான். இதோ…நெஞ்சம் நிறைந்த படபடப்போடு அவன் மொபலை எடுத்து இவனின் வாட்சப் நம்பரை அழுத்த தயாராகி விட்டான்……. அழைப்பை எடுக்க முதல், வைத்திய நண்பன் கடைசியாக சொன்னதை மீண்டும் ஒரு முறை அவன் நினைவு படுத்தி கொண்டான். மச்சான்…மறந்தும் வாயை விட்டுடாதயடா…இவனுக்கு தனக்கு வந்த பிரச்சனை எவ்வளவு பெரிசு…தான் என்ன குழிசையள் எடுத்தது…இனியும் என்ன குழிசையள் எடுக்க வேணும்…எல்லாம் வடிவா தெரியுமடா. ஆனால் இவனை பொறுத்தவரை…இது எதுவும் உனக்கு தெரியாது…அதை நீ மறந்துடாத… ——————————— இவனுடனான தொலைபேசி அழைப்பு நினைத்தததை விட சகஜமாகவே போய் கொண்டிருந்தது. ஆனால் உறவு முன்னர் போல் அந்நியோனியமாக இல்லை என்பதாக அவனுக்கு தோன்றியது. தொடர்பு விட்டு போனமைக்கு பரஸ்பரம் மன்னிப்புகள், குடும்பத்தினர் நலம் விசாரிப்புகள் என வழமையான விடயங்கள் பேசித்தீர்ந்த பின் உருவான அந்த அசெளகரியமான நிசப்தத்தை கலைத்து கொண்டு…இவன் தானாகவே பேசினான். மச்சான்…அண்டைக்கு நான் கதைக்கேக்க கொஞ்சம் அப்செட்டா இருந்தனாண்டா… ஒரு சின்ன ஸ்டிரெஸ்…நித்திரை கொண்டு எழும்பினதும் அது சரியாப் போச்சு…. என்ன சொல்வது என தெரியாத அவன்…ம்ம்…என்று சொல்லி விட்டு இதை எப்படி கையாள்வது என யோசித்து கொண்டிருக்கும் போதே…இவன் தொடர்ந்தான்…. நல்ல காலம் மச்சான்…. உண்ட பேய் கதையை கேட்டு நான் டொக்டரிட்ட போய் இருந்தா என்னை பைத்தியம் எண்டே முடிவு கட்டி இருப்பாங்கள்…. இனிமேலாவது கண்டதையிம் வாசிச்சு போட்டு…அட்வைஸ் பண்ணுறன் பேர்வழி எண்டு மற்றவனுக்கு விசர்பட்டம் கட்டாத மச்சான்……. அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளாத அவன்…கதையை மேலும் வளர்க்க விரும்பாதவனாக…… ம்……ம்…ம் கொட்டினான். #stigma #கேடிசூழ் #கறை #வடு (யாவும் கற்பனை) பாகம் IV முற்றும்.
  18. பாகம் III அவனின் காருக்குள் மூச்சுக்காற்று புகாராகி, கண்ணாடியிலும் பதிந்து ஒரு திரைச்சீலை போல் ஆகி இருந்தது. அநேகமாக மூன்று அல்லது மூன்றரை மணி நேரம் அவன் இப்படி காரில் இருந்தபடியே பேசி கொண்டிருந்திருக்க வேண்டும். எஞ்சினை ஆன்பண்ணி புகார் நீக்கியை தட்டி விடவோ, அல்லது கண்ணாடியை இறக்கி விடவோ கூட அவனுக்குத் தோணவில்லை. பேச்சின் பொருள் அத்தகையது. காரினை ஸ்டார் செய்தபோது வெளியே வெப்பநிலை -2 எனக்காட்டியது டாஷ்போர்ட். ஆனால் அவனின் உடலோ தெப்பமாக வியர்வையில் நனைந்திருந்தது. இவனுடன் போனில் கதைத்து கொண்டே வேலைக்கு இன்று அவசர லீவு என ஒரு இமெயிலை தட்டிவிட்டிருந்தான் அவன். இனி இந்த நாள் முழுவதும் அவனுக்கு ஓய்வுதான். வேலையில் இருந்து போனிலும், இமெயிலிலும் நொய் நொய் என்று யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். இவன் போனில் சொன்னதை முதல் ஐந்து நிமிடம் வரை கூட அவன் பகிடி என்றே நினைத்தான். தன்னை ஏலியன்கள் பிந்தொடர்வதாயும். பெப்ரவரி 2023 இல் தன்னை கடத்திப் போக அவர்கள் திட்டமிட்டிருப்பதாயும். தனது மனைவியை பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் காதலிப்பதாயும். அவளை கவர திட்டமிடுவதாயும். பொரிசும் ஒரு ஏலியன் என்றும் இவன் சொல்ல, சொல்லத்தான், அவனுக்கு கொஞ்சம், கொஞ்சமாக இது வழமையான பிராங்க் இல்லை என்பது புரிய தொடங்கி இருந்தது. படி… பொரிஸ் வாண்ட்ஸ் டு டேக் ஹேர் ப்ரொம் மீ படி… பிளீஸ் ஹெல்ப் மீ… ஐ ஒன்லி ஹாவ் யூ… என தன் ஆருயிர் நண்பன் உடைந்து அழுத போது…..அவனுக்கு முள்ளம் தண்டில் உள்ளிருக்கும் முன்ணானின் அடியில் இருந்து, மூளை வரை, சில்லிட்டது போல ஒரு உணர்வு பரவியது. ஒரு வழியாக இவனை சமாதானப்படுத்தி போனை வைத்து விட்டு, கொழும்பில் பெயர் போன இன்னொரு மன நல வைத்தியர் நண்பனுக்கு போன் பண்ணி, விபரம் சொல்லி, அவனை உடனடியாக இவன் வீட்டுக்கே போய் வைத்தியம் பார்க்கும் ஏற்பாட்டை செய்து விட்டு அதை இவனின் மனைவிக்கும் எடுத்து சொல்லி ஒருவழியாக இந்த பிரச்சனையின் தீர்வை நோக்கி ஒரு அடியை எடுத்து வைத்தபோதுதான்…. சுகர் வருத்தகாரனான அவன் நேற்று முன்னிரவில் இருந்து எதையும் சாப்பிடவில்லை என்பதும்….ஹைபோ கிளைசீமியா எனும் ரத்தத்தில் குளுகோசின் அளவு குறையும் நிலைக்கான அறிகுறிகள் அவனில் தோன்ற ஆரம்பித்துள்ளமையையும் அவன் அவதானித்தான். ஆன் செய்த வாகனத்தை அப்படியே ஆப் செய்து விட்டு…டெஸ்கோவில் இருக்கும் கோஸ்டா கோப்பிக்கடை நோக்கி நடக்கத்தொடங்கினான் அவன். தொடரும்…. (யாவும் கற்பனை)
  19. பாகம் II அவனுக்கும் இவனுக்குமான நட்பு அலாதியானது. வாழ்க்கைமுறை, சமயம், பிரதேசம், தெரிவுப்பாடங்கள் என பலதிலும் வேறுபட்டிருந்தாலும் தமிழும், கவிதையும், நாடகமும், புத்தகங்களும் அந்த இடைவெளியை இட்டு நிரப்பி, மேலதிகமாகவும் ஒரு பிணைப்பை ஏற்படுத்த போதுமாயிருந்தன. இருவரும் கிண்டல் அடிப்பதில் ஆளை ஆள் சளைத்தவர்கள் இல்லை என்பது மேலும் அவர்கள் நட்பை எப்போதும் கலகலப்பான உறவாக வைத்திருந்தது. இவனின் மெசேஜை பார்த்ததில் இருந்து, அவனுக்கு கொஞ்சம் கலக்கலாமகவே இருந்தது. அவர்களுக்கு இடையில் இப்படியான pranks செய்வதும் வழமைதான். அதுபோல் இதுவும் இவனின் குழப்படிகளில் ஒன்றாக இருக்கலாம். போன கிழமை கூட வாட்சப்பில் மாவீரர் நாளுக்கு இவன் எழுதியதை வாசித்து விட்டு, அவன் ஒரு தெரியாத நம்பரில் இருந்து கோல் எடுத்து சிங்களத்தில் “மாத்தையா டக்சி ஓடர் பண்ணீர்கள், வீட்டுக்கு வெள்ளை வான் ஒன்று அனுப்பவா” என கேட்டு கலாய்திருந்தான். இதுவும் அதுக்கான இவனின் பதிலடியாக இருக்கலாம். ஆனால் அவனின் உள்ளுணர்வு இது ஏதோ வேறு பிசகு என கூறியது. பரவாயில்லை இன்றைக்கு வேர்க் புரொம் ஹோம்தான், நல்ல வேளையாக வேலை போனையும் கையோடு எடுத்து வந்தது வசதியாக போய்விட்டது. வேர்க் புரொம் ஹோம் என்றாலே வேலையை தவிர மிச்சம் எல்லாம் செய்யும் நாள் என்பது எழுதப்படாத சட்டம் ஆகி விட்ட நாட்டில் அவன் மட்டும் என்ன விதி விலக்கா? கார் கழுவுவது, உடுப்பு தோய்ப்பது, ஆருக்கும் சம்பளம் வாங்காமல் அட்வைஸ் கொடுப்பது, யாழிலும் வட்சாப்பிலும் உழட்டுவது, இடைக்கிடையே, முதலாளி பாவம் எண்டு கொஞ்சம் வேலையும் செய்வது. இதுதான் அவனின் இந்த வேர்க் புரொம் ஹோம் நாட்களின் ரூட்டின். ஆகவே அருகில் இருக்கும் டெஸ்கோவில் காரை விட்டு விட்டு என்ன எண்டு கேட்போம் என நினைத்தவாறே காரை டெஸ்கோ கார்பார்க்குக்குள் விரட்டினான் அவன். என்ன மச்சான் ஓகேயா? அவனின் கேள்விக்கு பதில் வர தாமதித்தது…. மச்சான்…டேய்…என்னடா மெசேஜ் போட்டிருந்தாய்…என்ன ஏர்ஜெண்ட் மட்டர்? தொண்டையை கனத்தபடி இவன் பேசத்தொடங்கினான்….. ஐ’ ம் குட் படி. ஐ டு ஹாவ் எ குவஸ்யன் போர் யூ…. டேய் லூஸ் விளையாட்டு விளாடாத…வேலை கடுப்பில நிக்கிறன் பிறகு அடிக்கிறன்…. நோ..நோ…லிசின் மேட்… ஐயம் சீரியஸ் எபவுட் திஸ்… அட்சரம் பிசகாத லண்டன் உழைக்கும் வர்க்க ஆங்கில உச்சரிப்பில்…. தன் பிரச்சனையை எடுத்து சொல்ல ஆரம்பித்து இருந்தான்…. வாழ்வில் என்றுமே இங்கிலாந்துக்கு வந்தே இராத, பிரித்தானியாவுடன் எந்தவித பரிச்சயமும் இல்லாத இவன். (தொடரும்) (யாவும் கற்பனை அல்ல) ——————————————-

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.