Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87993
    Posts
  2. யாழிணையம்

    கருத்துக்கள நிர்வாகம்
    8
    Points
    40
    Posts
  3. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    2960
    Posts
  4. வீரப் பையன்26

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    16477
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/30/23 in Posts

  1. நியூயார்க் சிற்பியால் உருவாக்கப்பட்ட புகைபோக்கி தெற்கு வேல்ஸ் பள்ளத்தாக்கில் பொது கலைப்படைப்பாக வெளியிடப்பட்டது. 16 மீட்டர் நீளம்
  2. சொர்க்கத்துக்கு வருவோரின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது . கடவுள் உடனே ஒரு தேவதையை அழைத்து , "நீ என்ன பண்ணுவியோ தெரியாது . ஆனா இனிமே சொர்க்கத்துக்கு வரவங்க கூட்டம் பாதியாகணும்." என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். தேவதையும் உட்கார்ந்து யோசித்தது. அதற்கு ஒரு அருமையான யோசனை வந்தது . அதாவது, சொர்க்கத்துக்குள் நுழைய நினைப்போரிடம் அவர்கள் எப்படி இறந்து போனார்கள் என்று கேட்க வேண்டும் . யாருடைய இறந்த விதம் வித்தியாசமாக இருக்கின்றதோ, அவர்களை மட்டும் சொர்க்கத்திற்குள் அனுமதிக்க வேண்டும் . தேவதைக்கு இந்த யோசனை மிகவும் பிடித்துப் போக , உடனேயே அதை செயல்படுத்த முடிவெடுத்தது. அப்போது இறந்து போன ஒருத்தன் உள்ளே நுழையும் போது , அவனிடம் சொர்க்கத்தின் புதிய விதியை தேவதை கூற , அவனும் அவன் இறந்த கதையை கூற ஆரம்பித்தான். "எனக்கு கல்யாணம் ஆகி 5 வருசம் ஆகுவது. குழந்தைங்க இல்ல. என் பொண்டாட்டி எனக்கு துரோகம் பண்றானு எனக்கு ஒரு நாள் தோணிச்சு. நான் ஒரு அபார்ட்மெண்ட்ல குடியிருக்கேன். என்னோட வீடு 5 ஆவது மாடில இருக்கு.ஒரு நாள் வேலைக்கு போறதா பொய் சொல்லிட்டு , பாதியிலேயே வீட்டுக்கு வந்துட்டேன். என் பொண்டாட்டி என்னைய எதிர்பாக்கல . என்னைப் பாத்ததும் , 'ஏதாச்சும் மறந்து விட்டிட்டு போய்ட்டிங்களா? ' ன்னு கேட்டா. நான் அவளுக்கு பதில் சொல்லாம வீடு பூரா தேடிப் பாத்தேன். ஆனா ஒருத்தனையும் காணோம். கடைசியா பால்கனிய (BALCONY) போய் பாத்தேன் . நான் தேடி வந்த பன்னாடை அங்க பால்கனி க்ரில்ல புடிச்சி தொங்கிகிட்டு இருந்தான் .எனக்கு ரொம்பக் கோபம் வந்துச்சி . அவன் வெரல்ல ஓங்கி ஓங்கி மிதிச்சேன். வலி தாங்காம அவன் பிடிய விட்டுட்டு கீழ விழுந்துட்டான். நான் கீழ எட்டி பாத்தேன் . அந்த நாய் சாவாம ஒரு புதர் மேல விழுந்து கெடந்தான் . நான் உடனே கிச்சனுக்குள்ள போய் , பிரிட்ஜை இழுத்துகிட்டு வந்து , பால்கனி மேல கஷ்டப்பட்டு தூக்கி வச்சு , அந்த பிரிட்ஜை கீழ விழுந்து கெடந்த அவன் மேல போட்டு , அவன நசுக்கி கொன்னுட்டேன். இதெல்லாம் செஞ்ச பின்னாடி எனக்கு சந்தோஷத்துல நெஞ்சு வலி வந்து, அங்கேயே விழுந்து செத்துட்டேன்." அவன் கதையை கூறி முடித்ததும், தேவதை புன் சிரிப்புடன், "நீ உள்ளே போகலாம் ." என்றது . அவன் போன சற்று நேரம் கழித்து , இன்னொருவன் வந்தான். அவனிடமும் தேவதை புது விதியை பற்றி கூற , அவன் அவனுடைய கதையை கூற ஆரம்பித்தான். "நான் ஒரு அபார்ட்மெண்ட்ல 6 ஆவது மாடில குடியிருக்கேன். நான் எப்பவும் ப்ரீயா இருந்தா பால்கனில யோகா பண்றது வழக்கம் . அன்னைக்கு அப்படித்தான் தலைகீழ நின்னுக்கிட்டிருந்தேன். திடீர்னு பேலன்ஸ் மிஸ் ஆகி கீழ விழுந்துட்டேன். நல்ல வேளையா 5 ஆவது வீட்டு பால்கனி கிரில் கம்பிய பிடிச்சுக்கிட்டேன். அந்த வீட்டுல ஒரு புருஷனும் அவனோட பொண்டாட்டியும் மட்டும் இருக்காங்க . திடீர்ன்னு வெளிய வந்த அந்தம்மாவோட புருஷன் , பால்கனில தொங்கிகிட்டு இருந்த என் கைய மிதிக்க ஆரம்பிச்சான். நான் வலி தாங்காம கீழ விழுந்துட்டேன் . நல்ல வேளையா நான் விழுந்த எடத்துல ஒரு புதர் இருந்ததால நான் சாகல. ஆனா என்னோட முதுகு ஒடஞ்சி போச்சி. அந்தம்மாவோட புருஷனுக்கு என் மேல அப்படி என்னதான் கோபம்னு எனக்குத் தெரியல. கொஞ்ச நேரத்துல மேல இருந்து ஒரு பிரிட்ஜ் அ என் மேல தள்ளி வுட்டு என்ன கொன்னுட்டான்." அவன் பேசி முடித்ததும் , தேவதைக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. கஷ்டபட்டு அடக்கிக் கொண்டு அவனை உள்ளே போக அனுமதியளித்தது. மூன்றாவதாக ஒருத்தன் வந்தான் . அவனிடமும் தேவதை புது விதியை பற்றி கூறியது . அவனும் அவன் இறந்த கதையை கூற ஆரம்பித்தான். "எனக்கும் பக்கத்து தெருவுல ஒரு அபார்ட்மெண்ட்ல குடியிருக்குற ஒருத்தனோட பொண்டாட்டிக்கும் இடையில 2 வருஷமா கள்ள தொடர்பு இருந்துச்சி. அவ புருஷன் வேலைக்கு போனதும், அவ எனக்கு போன் பண்ணுவா. ஒடனே நானும் அவ வீட்டுக்கு போய்டுவேன். அன்னைக்கும் அப்படித்தான் அவ எனக்கு போன் பண்ணுனா . நானும் உடனே கெளம்பி அவ வீட்டுக்கு போனேன். ஆனா கொஞ்ச நேரத்திலேயே அவ புருஷன் வந்து கதவ தட்ட ஆரம்பிச்சான் . அவ உடனே என்ன பிரிட்ஜ்க்குள்ள வச்சு பூட்டிட்டு கதவ தெறக்க போனா . நான் பிரிட்ஜ்க்குள்ளேயே பயந்து போய் உக்காந்திருந்தேன். அப்புறம் என்னாச்சுன்னா...?
  3. நான் ஆரம்பத்தில், வாஸ்கொட காமா குறித்து கேட்டேன். அவர் இந்தியாவை வந்தடைந்த நாள் எல்லாம் சொல்லியது. ஆனால் இந்தியா என்ற நாடு அப்போது இருக்கவில்லையே என்று சொன்னால், நீ சொல்வது சரியானது, பிரிட்டிஷ்காரர் உருவாக்கும் வரை இந்தியா இல்லை. அநேகமாக இந்திய துணைக்கண்டம் என்பதே சரி என்கிறது. ஆகவே, உரையாடலுக்கு, சரியான பதிலை தருகிறது என்பது வியப்புக்குரியது. உங்கள் அடுத்த கதைக்கான கருவினையும், அது குறித்த உரையாடல்களையும் நீங்கள் செய்து கொள்ள முடியும் என்பதால் அதன் உபயோகம் நீங்கள் முயலும் போதே தெரியும்.
  4. லண்டனில் கதை வேறு ஒரு sa எழுத இரண்டுமணி நேர மனித நேரத்தை chatgpt யை வைத்து 2௦ நிமிட நேரத்தில் முடித்து கொள்கிறார்கள் வாத்திமரே அரண்டு போய் உள்ளார்கள் . ஒரு சிறிய சாம்பிள் write one argumentative essay sa Certainly! Here's an example argumentative essay on the topic of social media and its effects on mental health: Social Media: A Double-Edged Sword for Mental Health Social media has become an integral part of our daily lives. It is a powerful tool that allows us to connect with people from all over the world, share our thoughts and experiences, and stay up-to-date with the latest news and trends. However, there is a growing concern that social media may have negative effects on our mental health. While social media has its benefits, it is a double-edged sword that can harm our mental health in several ways. One of the primary concerns about social media is that it can be addictive. Studies have shown that people who spend more time on social media are more likely to experience symptoms of anxiety and depression. This is because social media creates a false sense of connection and validation that can be difficult to replicate in real life. When we rely too heavily on social media for our social needs, we may become isolated and lonely, which can have a negative impact on our mental health. Another issue with social media is that it can create a distorted view of reality. Social media platforms are designed to showcase the best aspects of people's lives, such as their achievements, relationships, and experiences. This can lead to feelings of inadequacy and low self-esteem, as we compare ourselves to others and feel like we are not measuring up. This can be especially harmful to young people who are still developing their sense of self and may be more vulnerable to social pressure. Finally, social media can also expose us to cyberbullying and harassment, which can have a significant impact on our mental health. Online harassment can take many forms, such as trolling, doxxing, and threats of violence. This can create a hostile and unsafe online environment, which can spill over into our offline lives and cause stress and anxiety. Despite these concerns, social media is not all bad. It can be a valuable tool for staying connected with friends and family, sharing information and resources, and building supportive communities. However, we need to be aware of the potential negative effects of social media and take steps to mitigate them. This includes setting limits on our social media use, being mindful of our online interactions, and seeking help if we are experiencing mental health problems. In conclusion, social media is a double-edged sword that can both help and harm our mental health. While social media has many benefits, we need to be aware of the potential negative effects and take steps to protect ourselves. By using social media responsibly and mindfully, we can harness its power to build connections, share knowledge, and support each other. Regenerate response
  5. பிள்ளைகள் புதிது புதிதாக அறிமுகப்படுத்துவதை மொக்கை மாதிரி பார்த்துக் கொண்டிருப்பதே வேலையாகிவிட்டது. ஒரு சொல்லைத் தேட வெளிக்கிட்டால் ஏகப்பட்டவை கொட்டுப்படுகின்றன. கணனி ஒரு உளவாளி. 😒
  6. பெண் குரலில் பேசினால்த் தான் அலுவல் நடக்கும் போல.
  7. துப்பாக்கியை விட பேனாவுக்கு அதிக அதிகாரம் இருக்கென்பதை விழித்தே எழுதினேன் ரஞ்சித்.
  8. காஸ்கர் குகை (Cosquer cave) என்பது பிரான்ஸில் அமைந்துள்ள ஒரு பழங்காலக் கற்கால அலங்கரிக்கப்பட்ட குகை ஆகும், இதில் 27,000 ஆண்டுகள் வரையிலான பல குகை வரைபடங்கள் உள்ளன. குகை 200 க்கும் மேற்பட்ட உருவங்களைக் கொண்டுள்ளது மற்றும் கடலுக்கு அடியில் அலங்கரிக்கப்பட்ட ஒரே குகை இதுவாகும். படம் வரையப் பட்ட இடத்தின் அமைப்பையும்... நீள, அகல, உயர, ஆழத்தின் அமைவு நீரில் இருப்பதையும் பார்க்க, ஓட்சிசன் குடுவைகள் கண்டு பிடிக்கப் படாத காலத்தில் மனிதன் நீரின் கீழ் சென்று இந்த ஓவியங்களை வரைந்தமை அதிசயம்.
  9. தேர்தல் முறைகேடுகளில் இறங்கிய அரசாங்கம் யாழ்மாவட்டத்தின் அபிவிருத்திச் சபைத் தேர்தலில் எப்படியாவது சில ஆசனங்களைப் பெற்றுவிடவேண்டும் என்று ஜெயார் உறுதிபூண்டிருந்தார். அதற்காக பலம்வாய்ந்த அமைச்சர்களான காமிணி திஸாநாயக்க, சிறில் மத்தியூ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கேணல் தர்மபால, மேலதிக பாதுகாப்புச் செயலாளர் சேபால ஆட்டிகல, அமைச்சரவை செயலாளர் சமரசிங்க மற்றும் ராணுவ அதிகாரிகளின் பிரதானி திஸ்ஸ வீரதுங்க ஆகியோரை யாழ்ப்பாணத்திற்கு ஜெயார் அனுப்பி வைத்தார். இந்தக் குழுவிற்கு ஜெயாரினால் வழங்கப்பட்ட பணிகள் இவைதான், 1. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் வெற்றிவாய்ப்பை எப்படியாவது சிதைப்பது, 2. தமிழ்ப் போராளி அமைப்புக்களைக் கட்டுப்படுத்துவது. 3. சந்தர்ப்பத்திற்கேற்றவாறு உடனடியான முடிவுகளை எடுத்து மேற்சொன்ன இரண்டையும் செய்துமுடிப்பது. ஜெயாரின் விருப்பத்தின்படி யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட இந்த அதிகாரம் மிக்க அணி, தமிழர்களை அச்சுருத்தி வந்ததுடன், அரச பயங்கரவாதத்திலும் ஈடுபட்டு வந்தது. தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்கென்று 500 பொலீஸார் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டனர். இன்னொரு 200 சிறப்புப் பொலீஸார், உதவிப் பொலீஸ் மா அதிபர் எட்வேர்ட் குணவர்த்தனவின் நேரடிக் கட்டுப்பாட்டில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விசேட பொலீஸ் பிரிவே யாழ் நூலகத்திற்கு அருகில் அமைந்திருந்த துரையப்பா விளையாட்டரங்கில் தங்க வைக்கப்பட்டது. மீதிப் பொலீஸார் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் அமைந்திருந்த பொலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். யாழ்க்குடாநாட்டிலிருந்து போராளிகளின் பிரசன்னத்தை ஒழிப்பதே பொலீஸாருக்கு வழங்கப்பட்ட பிரதான பணி. ஆகவே, யாழ்ப்பாணத்தில் பாரிய தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலீஸார் சுமார் 30 இளைஞர்களைக் கைதுசெய்திருந்தனர். இந்த இளைஞர்கள் பற்றிய எந்தவிபரமும் வெளியில் தெரிந்திருக்கவில்லை. சர்வதேச மன்னிப்புச்சபை இந்த இளைஞர்களின் பாதுகாப்புக் குறித்து அரசிடம் முறைப்பாடு செய்ததுடன், அவர்களைச் சந்திக்க அவர்களின் உறவினர்களுக்கும், சட்டத்தரணிகளுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தது. மேலும், கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் பொலீஸாரினால் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டுவருவதாகவும் அது குற்றஞ்சாட்டியிருந்தது. கைதுசெய்யப்பட்ட இளைஞர்களில் நால்வர் தாம் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டதாக வழக்குகளைப் பதிவுசெய்திருந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் குறைந்தது இரு இளைஞர்களாவது சித்திரவதைக்கும், முறைகேடாக நடத்தல்களுக்கும் ஆளாக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தியது. யாழ்ப்பாணம் சுபாஸ் விடுதி இராணுவத்தின் நடவடிக்கைகளைப் பொறுப்பெடுப்பதற்கு பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்க யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டார். 1979 ஆம் ஆண்டில் தன்னுடன் சேர்ந்து தமிழ் இளைஞர்களுக்கெதிரான அரச பயங்கரவாதத்தில் ஈடுபட்ட அதிகாரிகளையும் இணைத்துக்கொண்டு திஸ்ஸ வீரதுங்க யாழ்ப்பாணம் சென்றார். யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த சுபாஸ் விடுதி இராணுவ தலைமைக் காரியாலயமாக ஆக்கப்பட்டது. வைகாசி 31 ஆம் திகதி நடைபெற்ற நாச்சிமார் கோயிலடி வன்முறைகள், அன்றிரவு பொலீஸார் மேற்கொண்ட பழிவாங்கல்த் தாக்குதல்கள், ஆனி 1 ஆம் திகதி யாழ் நூலகம் தீக்கிரையான சம்பவம், ஆனி 2 இல் இடம்பெற்ற சுன்னாகம் மற்றும் காங்கேசந்துறைச் சந்தைப்பகுதிகளின் அழிப்பு ஆகியவை யாழ்க்குடாநாட்டில் மிகவும் பதற்றமான சூழ்நிலையினை உருவாக்கியிருந்தது. ஆகவே, ஆனி 3 ஆம் திகதியிலிருந்து மாலை 6 மணிமுதல் காலை 5 மணிவரை தொடர்ச்சியான ஊரடங்குச் சட்டம் யாழ்க்குடாநாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டது. ஆனி 3 ஆம் திகதி பிற்பகல் மேலதிகமாக 250 சிங்கள அதிகாரிகள் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகளில் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டனர். அவர்களை அரசு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் தங்கவைத்தது. ஆனி 3 ஆம் திகதி இரவு இரு மர்மமான விடயங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன. முதலாவது, யாழ்ப்பாணம் செயலகத்தில் தேர்தல் ஆணையாளர் எம்.ஏ.பியசேகரவும், தேர்தல் கண்காணிப்பாளர் யோகேந்திரா துரைசாமியும் சுமார் 150 வாக்குச் சாவடிப் பொறுப்பாளர்களுக்கு அறிவுருத்தல்களை வழங்கிக்கொண்டிருந்தவேளை காமிணி திஸாநாயக்கவும், சிறில் மத்தியூவும் அங்கே திடீரென்று சென்றிருந்தனர். அங்கு கடமையிலிருந்த துரைசாமியைப் பார்த்து சிறில் மத்தியூ பின்வருமாறு கூறினார், "எங்களுக்கு தமிழ் வாக்குச் சாவடி அதிகாரிகள் மீது நம்பிக்கயில்லை. அவர்களை அனுப்பிவிட்டு சிங்கள அதிகாரிகளை நாம் நிறுத்தப்போகிறோம்" . துரைசாமி இதற்கு மறுப்புத் தெரிவிக்கவே, அங்கு வந்த பாதுகாப்புச் செயலாளர் தர்மபால எழுத்துமூல கட்டளை ஒன்றை துரைசாமிக்கு வழங்கி, ஏற்கனவே பணிக்கு அமர்த்தப்பட்ட தமிழ் அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்பிவிட்டு கொழும்பிலிருந்து கூட்டிவரப்பட்ட சிங்கள அதிகாரிகளை பணிக்கு அமர்த்தினார். ஜனாதிபதியிடமிருந்து வந்த நேரடிப் பணிப்பின் பேரிலேயே தமிழ் அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்பி, சிங்களவர்களை நியமித்ததாக தர்மபால துரைசாமியிடம் கூறினார். எஸ் நடேசன் மாவட்ட அபிவிருத்திச் சபை அமைச்சராகத் தெரிவுசெய்யப்பட்ட எஸ் நடேசன், தேர்தல்கள் நடைபெற்று ஒருவருடத்திற்குப் பின்னர் கொழும்பில் இடம்பெற்ற நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்கள் எனும் தலைப்பில் பேசும்போது ,"தேர்தலுக்கு முதல் நாள் இரவு, ஜனாதிபதியின் உத்தரவின் பெயரில், பாதுகாப்புச் செயலாளர் தேர்தல் அதிகாரியான துரைசாமிக்கு சில கட்டளைகளை வழங்கினார். நூற்றைம்பது தமிழ் தேர்தல் அதிகாரிகள் அவர்களது பணிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, சிங்கள அதிகாரிகள் அப்பதவிகளை நிரப்பினர். இந்தச் சிங்கள அதிகாரிகளில் பலர் அரசாங்கக் கூட்டுத்தாபனங்களில் பியோனாக வேலை பார்த்து வந்தவர்கள், அவர்களுக்கு தேர்தல் நடைமுறைகள் பற்றிய அடிப்படை அறிவே இருந்திருக்கவில்லை. தேர்தல் முடிந்த வேளை 6 வாக்குப் பெட்டிகள் காணாமற் போயிருந்தன" என்று கூறினார். அக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த தேர்தல் அதிகாரிகள் நடேசனின் கூற்றை ஆமோதித்தனர். இரண்டாவது சம்பவமான அமிர்தலிங்கத்தின் கைது ஆனி 4 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்றது. ஆனி 4 ஆம் திகதி அதிகாலை 2:45 மணிக்கு பண்ணாகத்திலிருந்த அமிர்தலிங்கத்தின் வீட்டைச் சுற்றிவளைத்த சுமார் 100 பேர் அடங்கிய பொலீஸ் குழு அவரைக் கைதுசெய்தது. பொலீஸ் குழுவின் தலைவராக வந்திருந்த பொலீஸ் பரிசோதகர், யாழ் மாவட்ட ராணுவத் தளபதி திஸ்ஸ வீரதுங்கவினால் உருவாக்கப்பட்ட கைதுசெய்யும் அதிகாரப் பத்திரத்தை அமிர்தலிங்கத்திடம் கையளித்தார். அந்த பத்திரத்தின்படி, ஜனநாயகச் செயற்பாடான தேர்தலினை குழப்புவதற்கு அமிர்தலிங்கம் எத்தனிப்பதால் அவர் கைதுசெய்யப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது. இதற்கு தனது எதிர்ப்பை வெளிக்காட்டிய அமிர்தலிங்கம், தான் ஜனநாயகச் செயற்பாடான தேர்தலைப் பாதுகாக்கவே முயல்வதாக பொலீஸ் அதிகாரியிடம் கூறினார். தன்னை மன்னித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்ட பொலீஸ் அதிகாரி, தனக்கு இடப்பட்ட கட்டளையினையே தான் நிறைவேற்றுவதாக அமிர்தலிங்கத்திடம் கூறினார். தனது வீட்டின் வரவேற்பறையில் கதிரையொன்றில் அமிர்தலிங்கத்தை இருத்திவைத்துவிட்டு, அவரது வீட்டைச் சல்லடை போட்டுத் தேடினர் பொலீஸார். ஆனி 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய அமிர்தலிங்கம் அவரது வீட்டுக் குப்பைக் கூடையினைக் கூட பொலீஸார் விட்டுவைக்கவில்லையென்றும், ஒவ்வொரு துண்டுக் குப்பைக் கடதாசியும் அவர்களால் சோதனை செய்யப்பட்டதாகவும் கூறினார். தனது வீட்டில் பொலீஸார் நடந்துகொண்ட முறையினைப் பார்த்தபோது பெரிய கெரில்லாத் தலைவனையோ அல்லது போராளிகளின் பாரிய முகாமையோ கண்டுபிடித்தது போன்றே பொலீஸார் அன்று காலை செயற்பட்டதாகக் கூறினார். குருநகர் இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட அமிர்தலிங்கம், வெளித்தொடர்புகள் ஏதுமின்றி அடைத்துவைக்கப்பட்டார். அன்றிரவு அமிர்தலிங்கத்துடன் தொலைபேசியில் உரையாடிய ஜெயார், அவரது கைது ஆள்மாறாட்டம் ஒன்றினால் ஏற்பட்ட தவறு என்றும், அவர் வீடு திரும்பலாம் என்றும் கூறினார். தனது கைது தனக்கு மர்மமாக இருந்ததாக அமிர்தலிங்கம் என்னிடம் கூறினார். "சிலவேளை ஜெயார் என்னைக் காப்பாற்ற நினைத்தே கைதுசெய்திருக்கலாம்" என்று நகைச்சுவையாகக் கூறிச் சிரித்தார். ஆனால், அவரது கைது தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. இதன் காரணமாகவே தமிழர்கள் பெருவாரியாக அன்று காலைமுதல் வாக்களிப்பில் கலந்துகொண்டனர். அமிரின் கைதிற்கான காரணம் இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. ஆனால், அரச தரப்பு அமைச்சர்கள் மத்தியில் உலாவிய செய்திகளின்படி, திஸ்ஸ வீரதுங்கவை சிறில் மத்தியுவே வற்புறுத்தி கைதுசெய்யும் ஆணையினைப் பிறப்பித்ததாகக் கூறப்பட்டது. சிங்கள இனவாதி - சிறில் மத்தியூ இராணுவ திகாரிகளிடம் நான் அமிரின் கைது குறித்து வினவியபோது, அது காமிணி மற்றும் சிறில் மத்தியூ இணைந்து எடுத்த முடிவு என்று கூறினார்கள்.
  10. மலர்.......(8). பிறிதொருநாள் ஆச்சி மகன் கதிரவனிடம் தம்பி நீ இந்தப் பிள்ளை நிர்மலாவைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்று கேட்கின்றாள். அவனும் ஏன் அவவைப் பற்றி நினைக்கிறதுக்கு என்ன இருக்கு. அவ தானும் தன் பாட்டில் வேலை செய்கிறா. வாடைக்காசும் ஒழுங்காய் தருகிறா. எங்கட மகன் முகிலனும் வகுப்பில் கெட்டிக்காரனாய் இருக்கிறான் என்று அவன்ர வகுப்பு ஆசிரியை சொன்னவர். வேறு எண்ணத்தை சொல்ல. --- இல்லை தம்பி, எங்களுக்கும் வயசாயிட்டுது. உனக்கு விருப்பமெண்டால் அந்தப் பிள்ளையை கேட்டுப் பார்க்கலாம் என்று நினைக்கிறன். கொப்பருக்கும் நல்ல விருப்பம். --- ஓ.....நீங்கள் இரண்டு பேரும் ஏற்கனவே கதைத்து வைத்து விட்டுத்தான் இப்ப என்னிடம் கேட்கிறீங்கள் போல. அவ ஏதோ தன் பாட்டுக்கு இருக்கிறா, அவவை அத இத கதைத்து குழப்பிப் போடாதேங்கோ. மேலும் அவர்கள் யார் என்றே எங்களுக்கு தெரியாது. அவ தனியா வீட்டை விட்டு வர என்ன என்ன பிரச்சினையென்றும் தெரியாது. அதால கதைக்கிறதை நல்லா யோசித்து கதையுங்கோ. --- அதடா மோனை அப்பப்ப கதையல் வரேக்க நான் கொஞ்சம் கொஞ்சம் ஜாடை மாடையா விசாரிக்கிறானான்.அதுகளை கோர்த்து வைத்துப் பார்த்தால், அவ யாழ்ப்பாணத்தில் கலியாணம் கட்டிய இடம் பெரிய இடமாம். கலியாணம் செய்து பல வருடங்களாக அவையளுக்கு பிள்ளை இல்லையாம். அதனால புருசன்காரன் இரண்டாவது கலியாணம் செய்து கொண்டு வீட்டுக்கு வர இந்த பிள்ளையும் அங்கிருக்கப் பிடிக்காமல் ஏதோ ஒரு தைரியத்தில வெளிக்கிட்டு வந்திட்டுது. தாய் தேப்பன் எல்லாம் தெல்லிப்பளையில் இருக்கினமாம். ஆனால் ஒருத்தரோடும் இதுவரை எதுவித தொடர்பும் இல்லையாம் என்று சொன்னவ. --- ஓ.....நீங்கள் எல்லாம் விசாரிச்சுதான் வைத்திருக்கிறியள். --- அதுதான் சொன்னேனே, அப்பப்ப பேச்சு வரேக்க கதைக்கிறது, பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாய் சேர்த்து புரிந்து கொள்ளுறதுதானே. அது கிடக்கட்டும் இப்ப நீ என்ன சொல்லுறாய் அத முதல்ல சொல்லு. --- சரி, என்னவோ செய்யுங்கோ ஆனால் அவவுக்கு அதிகம் மனக்கஷ்டம் உண்டாக்க வேண்டாம். அது முக்கியம். --- சரியடா தம்பி, நான் நேரம் பார்த்து நைசாய் கதைக்கிறேன். அநேகமான மாலை நேரங்களில் அவர்கள் அருகில் இருக்கும் குளத்தின் கரையையொட்டி நடந்து போய் வருவதை வழக்கமாய் கொண்டிருந்தார்கள். முன்பு ஆச்சி அப்புவுக்கு அந்தப் பழக்கமில்லை. ஆனால் நிர்மலா வந்து கொஞ்ச நாளில், அவள் முதலில் தான் தனியா நடந்து போட்டு வருவாள். பின் அவர்களுடன் நன்றாகப் பழகியபின் அவர்களையும் கூட்டிக் கொண்டு வெளியே நடந்து போய்வரப் பழக்கி விட்டாள். ஆரம்பத்தில் சும்மா சாக்கு போக்கு சொன்ன ஆச்சி நாளடைவில் அப்புவும் பிள்ளைகளும் ஆவலுடன் சேர்ந்து நடக்க பின் தானும் சேர்ந்து கொண்டாள். அதில் அவர்களுக்கு ஒரு சௌகரியம் இருந்தது. பிள்ளைகளின் இரவு உணவையும் கொண்டு சென்று அங்கேயே சாப்பிட வைத்து விடுவார்கள். அவர்களுக்கு முன் சிவாங்கியும் முகிலனும் நொறுக்குத் தீனிகளுடன் தயாராய் இருப்பார்கள். அப்படி குளக்கரையிலும் வயல்களுக்கு நடுவேயும் நடக்கும்போது சுத்தமான காற்றையும் சுவாசிப்பதால் ஆச்சி அப்புவுக்கும் உடம்பு இலேசாகவும் சில சில வருத்தங்கள் இல்லாமல் போவதையும் கண்கூடாக அவர்கள் உணர்ந்திருக்கின்றனர். இரவில் நல்ல பசியுடன் வந்து வடிவா சாப்பிட முடிகிறது. அடிச்சுப் போட்டால் போல் நல்ல உறக்கமும் வருகிறது. பலப்பல விடயங்களையும் கதைத்துக் கொண்டு வருவதால் மனசிலும் எந்தப் பாரமும் இல்லாமல் இலேசாக இருக்கின்றது. பிள்ளைகள் முன்னால் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டு திரிய இவர்கள் பின்னால் நடந்து போவார்கள். அன்றும் அப்படித்தான் அப்புவும் பிள்ளைகளும் முன்னால் போய்க்கொண்டிருக்க ஆச்சியும் நிர்மலாவுக்கு மிக அருகில் வந்து மெதுவாக பேச்சைத் துவங்குகிறாள். --- எடி பிள்ளை நிர்மலா நான் உன்னட்டை ஒரு விஷயம் கேக்கட்டே என்று பீடிகையுடன் ஆரம்பிக்கிறாள். --- என்ன அம்மா இது எதுவென்றாலும் கேளுங்கோ. --- பிறகு நீ குறை நினைக்கக் கூடாது சரியோ. --- சொல்லுங்கோ அம்மா இந்தமாதிரி தயக்கம் எல்லாம் வேண்டாம். நான் ஒன்றும் குறை நினைக்க மாட்டன். --- பிள்ளை நீ ஏன் இன்னொரு கல்யாணம் செய்யக் கூடாது. --- அது வந்து அம்மா நான் அங்கிருந்து வந்தபின் எப்படியாவது உழைத்து நல்ல நிலைமைக்கு வரவேண்டும். கடைசி காலத்தில அம்மா அப்பாவுக்கும் மற்றும் எனது மூத்த அக்காவுக்கும் உதவி செய்து அவர்களை நல்லா வைத்திருக்க வேண்டும். அதிலேயே என் சிந்தனை முழுதும் இருந்ததால் நான் மறுமணம் பற்றி நினைக்கவே இல்லை. --- சரி..... நீ இப்ப நல்லா சம்பாதிக்கிறாய்தானே. நீ கெட்டிகாரி அதெல்லாம் செய்து போடுவாய். அதவிடு, இப்ப நான் விசயத்துக்கு வாறன். இந்த சில வருடங்களில் உன்னை எங்களுக்கு மிகவும் பிடித்துப் போட்டுது. என்ர மகன் கதிரவனை கலியாணம் செய்ய உனக்கு சம்மதமே. அல்லது உனது பெற்றோருடன் கதைக்க வேண்டும் என்றாலும் தயங்காமல் சொல்லு நாங்கள் சென்று உன்னைப் பெண் கேட்கிறம். --- சிறிது தயங்கிய நிர்மலாவும் அது வந்து அம்மா நீங்கள் திடுதிப்பென்று என்னிடம் கேட்கிறீங்கள் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. --- பொறு பிள்ளை, நீ ஒன்றும் அவசரப்பட வேண்டாம்.நன்றாக யோசித்து ஒரு பதிலை சொல்லு. நீயும் இப்படியே இன்னும் எவ்வளவு காலம்தான் இருக்க முடியும். --- உங்களுக்கு தெரியும்தானே அம்மா எனக்கு பிள்ளை பிறக்காததால்தான் அவர் மறுமணம் செய்தவர். அதனால்தான் நானும் அங்கிருந்து கிளம்பி வந்தனான்.நாளைக்கு அதுவே உங்களுக்கும் ஒரு பிரச்சனையாய் இருக்கக் கூடாதல்லவா. --- அதையேண்டி அம்மா நீ நினைக்கிறாய். அது ஆண்டவன் போடுற பிச்சை. யார்யாருக்கு எதையெதை எப்ப குடுக்கணும் என்று அவனுக்குத்தான் தெரியும். எனக்கு ஆறு பிள்ளைகள். ஐந்து பிள்ளைகளும் ஒவ்வொன்றும் கருவிலே அழிந்தும், குறைப்பிரசவத்திலும் என்று போய் கடைசியில மிஞ்சினது இவன் கதிரவன் மட்டும்தான். இப்ப உனக்குத்தான் இரண்டு பிள்ளைகள் இருக்குதே. நீ இங்க வந்ததில் இருந்து அந்த தாயில்லாப் பிள்ளைகளை குளிக்கவாக்கிறதில் இருந்து அவையளுக்கு ஏற்ற சாப்பாடுகள் உடுப்புகள் எல்லாம் நீதானே பார்த்துப் பார்த்து செய்கிறாய். கண்ணன் தேவகியிடம் பிறந்தாலும் தாய் என்று யசோதாவிடம்தானே வளர்ந்தவன். அதுபோல் அதுகளும் உன்னிடம்தானே அம்மா அம்மா என்று ஒட்டிக் கொண்டு கிடக்குதுகள். பெற்றவளுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கேல்லையே. "கல்லைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டால்தான் கடவுள் வழிபாடா, இந்த பிள்ளைகளை தாய்க்கு தாயாய் இருந்து கண்ணுங் கருத்துமாய் வளர்க்கிறதும் கூட அந்த பரம்பொருளுக்கான வழிபாடுதான்" அன்று கிணத்துக் காட்டில் இருந்து நீ சிவாங்கியை காப்பாத்தினது இப்பவும் என் கண்ணுக்குள்ள நிக்குது. அண்டைக்கு மட்டும் ஒரு தப்பு நடந்திருந்தால் நான் என்ர பிள்ளைக்கு என்ன பதில் சொல்லுவன். அன்றிலிருந்துதான் எனக்கும் அப்புவுக்கும் உன்மீது இப்படி ஒரு எண்ணம் வந்தது. யார் கண்டது உனக்கும் ஆண்டவன் ஒரு மடிப்பிச்சை இட நினைத்தால் அதை யார் தடுப்பார். இப்படி இவர்கள் கதைத்துக் கொண்டிருக்க அப்புவும் பிள்ளைகளும் விளையாடி விட்டு வருகினம். பின் எல்லோருமாக வீட்டிற்கு வருகிறார்கள். மலரும்...........! 🌾
  11. நீண்டநாட்களின் பின் இன்றுதான் இத் திரி கண்ணில் பட்டது. தமிழ்சிறி குணமாகி மீண்டும் வேலைக்கு போவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி. உறவுகள் அனைவரும் உங்கள் நலனுக்காகப் பிராத்தித்தார்கள். உங்கள் உடல் நலனில் கவனமுடன் தொடர்ந்து வேலை செய்யுங்கள்.
  12. அரிய தகவல். நன்றி அன்பு.
  13. வவுனியா பிரப்பமடுப் பரப்பில் கைப்பற்றி அழிக்கப்பட்ட இயுனிகோன் கவசவூர்தி 1992 1992 ஆண்டில், பிரப்பமடுப் பரப்பில் கவசவூர்திகள் கூட முன்னகர்ந்த சிறிலங்காப் படையினர் லெப். கேணல் தேவன் தலைமையிலான புலிகளால வழிமறிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர். அச்சமரில் சிறிலங்காப் படையினர் கைவிட்டு ஓடிய இயுனிகோன் கவசவூர்தியில் பொருத்தப்பட்டிருந்த எல்3 சுடுகலன் புலிகளால் கைப்பற்றப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட கவசவூர்தியைக் கொண்டுவரும் முயற்சி தோல்வியில் முடிய அவ்விடத்திலேயே அக்கவசவூர்தி அழிக்கப்பட்டது.
  14. யாழ்ப்பாணத்தில் தேர்தலில் பங்கேற்பதென்று தீர்மானித்த ஐ.தே.க ரணசிங்க பிரேமதாசா தனது செயற்பாடுகளை நுணுக்கமாகவும், சூட்சுமத்துடனும், சமயோசிதத்துடனும் ஜெயவர்த்தன எப்போதும் திட்டமிட்டு வந்தார். மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அவரது திட்டமும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. அமிர்தலிங்கத்தையும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியையும், தமிழர்களையும் அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்துவதன் மூலம் சிங்களவர்கள் மத்தியிலும், சர்வதேசத்திலும் தனது அதிகாரத்தினை நிலைப்படுத்திக்கொள்ளலாம் என்று அவர் நினைத்தார். ஆகவே, அமிர்தலிங்கத்தையும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினையும், தமிழர்களையும் பலவீனப்படுத்தும் தனது நோக்கத்தை அவர் இரு முனைகளில் செயற்படுத்தினார். முதலாவது, மாவட்ட அபிவிருத்திச் சபைகள் எனும் தனது சதி வலைக்குள் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியை விழ வைப்பதன் மூலம், ஏற்கனவே அவர்களுக்கும் அரசுக்கெதிரான இராணுவப் புரட்சியில் இறங்கியிருந்த இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்டு வந்த பிளவினை இன்னும் பெரிதாக்குவது. அவர் எதிர்பார்த்ததுபோலவே அதுவும் நடந்தது. இரண்டாவது, வடகிழக்கு மாகாணங்களில் ஐக்கிய தேசியக் கட்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களை வென்றுவிட்டால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பேரம் பேசும் பலத்தைச் சிதைப்பதுடன், தமிழ் மக்கள் மத்தியில் அவர்களுக்கிருக்கும் ஆதரவினையும் குலைப்பது. இதன்மூலம், தமிழர்கள் உட்பட இலங்கை நாடெங்கிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று காட்டுவது. ஆகவே, இதனை சாத்தியப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை கூடிக் கலந்தாலோசித்து, சில நடவடிக்கைகளை எடுப்பதற்கு உறுதிபூண்டார்கள். அதன்படி வடக்கிற்கு அமைச்சர்களை அனுப்பி வைத்து தமக்குச் சாதகமான சூழ்நிலையினை அங்கு உருவாக்குவதே அவர்கள்து திட்டம். இதன் பிரகாரம் பிரதமரான ரணசிங்க பிரேமதாசா முதலாவதாக யாழ்ப்பாணத்திற்குப் பயணமானார். யாழ்ப்பாணத்தில் அவர் தங்கியிருந்த 4 நாட்களிலும் செய்தியாளன் என்கிற வகையில் நானும் அவருடன் கூடப் பயணித்தேன். அவருக்குக் கூட்டப்பட்ட கூட்டங்கள் எல்லாவற்றிலும் மக்கள் அதிகளவில் கலந்துகொண்டதுடன், யாழ்ப்பாணத்திலும், பருத்தித்துறையிலும் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. பிரேமதாசவிற்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் அளித்த வரவேற்பினைப்பார்த்து உற்சாகமடைந்த ஜெயார் லலித் அத்துலத் முதலி, காமிணி திஸாநாயக்க, சிறில் மத்தியூ ஆகிய அமைச்சர்களையும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த அமைச்சர்களின் பயணங்களையும் நான் பதிவுசெய்திருந்தேன். இதே காலப்பகுதியில் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே தேர்தல்களினூடாக உறவுப்பாலமொன்றினை அமைப்பதுபற்றி ஜெயார் பேச ஆரம்பித்திருந்தார். வேட்பாளர்களைப் பதிவுசெய்யும் நாளுக்கு அண்மையாக யாழ்ப்பாணத்தில் நிலவும் சூநிலையினை அறிந்துவர சில அதிகாரிகளை ஜெயார் அனுப்பிவைத்தார். இந்த அதிகாரிகள் குழு யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களை நிறுத்துவதில் பயணில்லை என்று அவரிடம் கூறினர். யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருந்த அனேகமானோர் சுயநலவாதிகளாக இருந்ததுடன், அவர்களுக்கு மக்கள் மத்தியில் கடுகளவும் செல்வாக்கில்லை என்பதை அவர்கள் ஜெயாரிடன் கூறியிருந்தார். இதேவகையான கருத்தையே தொண்டைமானும் ஜெயரட்ணம் வில்சனும் ஜெயாரிடம் தெரிவித்தனர். ஆனால், இவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு அவசரகாலச் சட்ட விதிகளைப் பாவித்து யாழ்ப்பாணத்தில் தேர்தலை ஜெயார் நடத்தியதுடன் தனது கட்சியையும் அதில் போட்டியிட வைத்தார். இது மிகத் தவறான கணிப்பீடு என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆரம்பத்திலிருந்தே ஐக்கிய தேசியக் கட்சி யாழ்ப்பாணத்தில் பல சவால்களை எதிர்கொண்டது. பல சிரமங்களுக்கு மத்தியிலேயே தனது வேட்பாளர் பட்டியலை அதனால் பூர்த்தி செய்ய முடிந்தது. 1970 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது வட்டுக்கோட்டைத் தொகுதியில் அமிர்தலிங்கத்தைத் தோற்கடித்திருந்த ஏ.தியாகராஜாவே ஐ.தே.க வின் வேட்பாளர் பட்டியலில் தலைமை வேட்பாளராக பெயரிடப்பட்டிருந்தார். அக்காலத்தில், காரைநகர் இந்துக் கல்லூரியின் புகழ்மிக்க அதிபராகத் திகழ்ந்தவர் தியாகராஜா. காரைநகர் வணிகர் சமூகத்திலும் அவருக்குச் செல்வாக்கு இருந்தது. ஆனால், 1970 ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அவர் பாராளுமன்றத்தில் செயற்பட்ட விதம் பலரையும் ஏமாற்றியிருந்தது. அத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியினூடாகப் பாராளுமன்றம் சென்ற தியாகராஜா, பாராளுமன்றத்தில் கட்சி மாறி, சிறிமாவின் கட்சியில் இணைந்துகொண்டதுடன், தமிழ் மக்களால் "அடிமைச் சாசனம்" என்று வெறுத்து ஒதுக்கப்பட்ட சிறிமாவின் 1972 ஆம் ஆண்டு குடியரசு யாப்பிற்கும் தனது ஆதரவினை வழங்கினார். ஏ.தியாகராஜா பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு புதிதாக புளொட் எனும் அமைப்பை உருவாக்கியிருந்த உமா மகேஸ்வரன், ஐ.தே. க சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் அனைத்துத் தமிழர்களையும் உடனடியாக தேர்தலிலிருந்து விலகுமாறு கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையினை தியாகராஜா முற்றாகப் புறக்கணித்திருந்தார். வைகாசி 24 ஆம் திகதி, தனது ஜீப் வண்டியில் தியாகராஜா ஏற முற்படும்போது அவர் அருகில் சைக்கிளில் வந்த இரு புளொட் உறுப்பினர்கள் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தியாகராஜ உயிரிழந்தார். பின்னர், ஐ.தே.க வின் யாழ் ஒருங்கிணைப்பாளரான நடராஜாவும் புளொட் அமைப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  15. சில இனங்கள்… தமது நாட்டை பாதுகாக்க எத்தனை ஆபத்தான இடங்களில் இருந்தும் காவல் காத்திருக்கின்றார்கள். நமது இனத்திலும்… எல்லாம் செய்தும், காட்டிக் கொடுப்புகளால்… சொந்த நாடு இல்லாமல் போய் விட்டது.
  16. மிதவாதிகளுக்கும் தமது ஆதரவை வெளிக்காட்டிய தமிழர்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்கள் 1981 ஆண்டு ஆனி 4 ஆம் திகதி நடைபெறவிருந்த மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்களில் பெரும்பான்மையான தமிழர்கள் வக்களிப்பதன் மூலம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரால் முன்வைக்கப்பட்டு வரும் தனிநாட்டிற்கான கோரிக்கையினை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சர்வதேசத்திற்குக் காட்டமுடியும் என்று ஜெயார் நம்பியிருந்தார். ஆனால், அவர் நினைத்ததற்கு எதிர்மாறாகவே அது நடந்து முடிந்தது. நாடு தழுவிய ரீதியில் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்கள் நடந்தபோதிலும், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல்களிலேயே அனைவரினதும் கவனம் குவிந்திருந்தது. ஏனென்றால், அங்குதான் இத்தேர்தல் தொடர்பாக பெருவாரியான முறைகேடுகளை அரசும், அதன் படைகளும் செய்திருந்தன. ஆனால், தெற்கிலோ இத்தேர்தல் மிகவும் மந்தமாகவே நடைபெற்றது. பிரதான எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சி இத்தேர்தலைப் புறக்கணித்திருந்த நிலையில், சிங்கள மக்கள் இத்தேர்தலில் அதிகம் அக்கறை காட்டவில்லை. விளைவு, ஐக்கிய தேசியக் கட்சி போட்டியின்றி சிங்களப் பெரும்பான்மை மாவட்டங்கள் அனைத்திலும் வெற்றிபெற்றது. ஆனால், வட கிழக்கு மாகாணங்களில் கதை வேறாக இருந்தது. இந்த மாகாணங்களில் இருந்த 7 மாவட்டங்களில் ஒரேயொரு மாவட்டமான அம்பாறையை மட்டுமே ஐக்கிய தேசியக் கட்சியினால் கைப்பற்ற முடிந்தது. சுமார் 41 வீதம் முஸ்லீம்களையும், 37 வீதம் சிங்களவர்களையும், வெறும் 20 வீதம் மட்டுமே தமிழர்களையும் கொண்ட அம்பாறை மாவட்டத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினால் வெற்றிபெற முடியவில்லை. ஆனால், ஏனைய 6 மாவட்டங்களிலும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியே வெற்றிபெற்றிருந்தது. திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் 33.9 வீதமாகவும், சிங்களவர்கள் 33 வீதமாகவும், முஸ்லீம்கள் 29 வீதமாகவும் காணப்பட்டபோதும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 44,692 வாக்குகளைப் பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி 42,388 வாக்குகளைப் பெற்றுக்கொண்டது. கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பில் 70 வீதமானவர்கள் தமிழர்களாகவும், 24 வீதம் முஸ்லீம்களாகவும், 3 வீதம் சிங்களவர்களாகவும் காணப்பட்டமையினால், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி இலகுவாக வெற்றிபெற்று மாவட்ட சபையினைக் கைப்பற்றியிருந்தது. மேலும், வடக்கின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பெருவெற்றி பெற்றிருந்தது. 1977 ஆம் ஆண்டுத் தேர்தல்களின்போது தனிநாட்டிற்காகத் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையினை மீளவும் உறுதிப்படுத்துவதாகவே இந்தத் தேர்தல்களில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பெற்ற வெற்றி அமைந்திருந்தது. இத்தேர்தலைக் கொண்டு தமிழர்கள் தனிநாட்டிற்கு ஆதரவளிக்கவில்லை என்று ஜெயார் சர்வதேசத்திற்குக் காட்ட முனைந்தபோதும், தமிழ் மக்கள் தனிநாட்டையே விரும்புகிறார்கள் என்பதை சர்வதேசம் உணரும்படி தேர்தல் முடிவுகள் அமைந்துவிட்டன. ஆகவே, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்த விரும்பிய ஜெயார், தன்னால் ஆட்டுவிக்கக்கூடிய மாற்றுத் தமிழ்க் கட்சிகளை பலப்படுத்த விரும்பினார். இந்த மாற்றுத்தலைமைகளூடாக தான் விரும்பும் தீர்வைத் தமிழ் மக்கள் மேல் திணித்துவிடலாம் என்று ஜெயார் நம்பினார். சர்வதேச சமூகத்தை, குறிப்பாக உதவி வழங்கும் நாடுகளை மகிழ்வாக வைத்திருக்க வேண்டும் எப்தற்காகவாவது தமிழ் மக்களுக்கு சில அதிகாரங்களைக் கொடுக்கவேண்டிய தேவை ஜெயாருக்கு ஏற்பட்டிருந்தது. ஏனென்றால், தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் தீர்த்துவைய்யுங்கள் என்கிற குரல்கள் சர்வதேச மட்டத்தில் ஒலிக்க ஆரம்பித்திருந்தன. மாவட்ட அபிவிருத்திச் சபை எனும் போலித் தீர்வை ஜெயார் அவித்துக் கொட்டியதன் நோக்கமே, சர்வதேசத்திற்கு தான் தமிழரின் அபிலாஷைகளை தீர்த்துவைக்கப்போகிறேன் என்று காட்டுவதற்காகவே என்றால் அது மிகையில்லை. 1977 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில், தமிழரின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி இரு வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. தமிழ் மக்களின் அவலங்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்போவதாக உறுதியளித்த ஐக்கிய தேசியக் கட்சி, கல்வி, குடியேற்றம், தமிழ் மொழிப் பயன்பாடு, அரச கூட்டுத்தாபனங்களில் வேலைவாய்ப்பு, சர்வகட்சி மாநாட்டினைக் கூட்டி நிரந்தரமான தீர்வுபற்றி கலந்துரையாடுவது ஆகிய வாக்குறுதிகளை ஐக்கிய தேசியக் கட்சி தமிழர்களை நோக்கி முன்வைத்திருந்தது. இவற்றுள் சில நடவடிக்கைகளை ஜெயார் எடுத்துக்கொண்டாலும்கூட, சர்வகட்சி மாநாட்டினைக் கூட்ட விரும்பவில்லை. தனது பரம வைரியான சிறிமாவை அரசியலில் இருந்து முற்றாகவே ஒதுக்கிவிடக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த ஜெயாருக்கு, சர்வகட்சி மாநாட்டில் சிறிமா கலந்துகொள்வது அவருக்கு ஒரு அரசியல் மீள்வருகையினைப் பெற்றுக்கொடுத்துவிடும் என்கிற அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆகவேதான், சர்வகட்சி மாநாட்டினக் கூட்டுவதை ஜெயார் தவிர்த்து வந்தார். பேராசிரியர் ஜெயரட்ணம் வில்சன் ஆகவே, சிறிமாவுக்கு அரசியல் மீள்வருகையினை ஏற்படுத்திக் கொடுப்பதைக் காட்டிலும், 1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது தமிழர்களின் ஒட்டுமொத்தக் குரலாக ஒலித்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுடன் நேரடியாகப் பேசலாம் என்று ஜெயார் விரும்பினார். இதற்கு ஏதுவாக இரு தமிழர்களை ஜெயார் தன் சார்பாக நியமித்தார். ஒருவர், நியூ பிரண்ஸ்விக் பல்கலைக் கழகப் பேராசிரியரும், தந்தை செல்வாவின் மருமகனுமான ஜெயரட்ணம் வில்சன். இரண்டாமவர், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் சமஷ்ட்டிக் கட்சியைப் பிரதிநித்துவப்படுத்திய அமைச்சர் ஒருவரின் மகனான நீலன் திருச்செல்வம். நீலன் திருச்செல்வம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பது குறித்து தன்னுடன் பேசும்போது ஜெயவர்த்தனா பெரிதும் கவலையடைந்து காணப்பட்டதாக ஜெயரட்ணம் வில்சன் என்னிடம் தெரிவித்தார். "நாம் இனப்பிரச்சினை மேலும் மோசமாவதை அனுமதிக்க முடியாது. அது இந்த நாட்டின் இருப்பையே ஆபத்திற்குள் தள்ளிவிடும். தற்போது அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகவும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் பாராளுமன்ற அரசியலையும் ஏற்றுகொண்டுள்ளதனாலும், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அடித்தளத்தினை இட்டுக்கொள்ளலாம்" என்று ஜெயார் ஜெயரட்ணம் வில்சனிடம் கூறியிருக்கிறார். ஆகவே, தான் எண்ணிவைத்திருந்த அடிப்படைத் திட்டத்தை ஜெயார் வில்சனிடம் தெரிவித்தார். "அவர்கள் தமது மாவட்டங்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் இதனை ஆரம்பிக்கட்டும். நாம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சபைகளை தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்து அம்மாவட்டங்களை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை அவர்களிடம் கொடுக்கலாம். இந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அதிகாரத்தையும், நிதியையும் நாம் கொடுக்கலாம். யாழ்ப்பாணத்து மனிதர்கள் வேண்டுவது இதைத்தான். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மூலம் தமிழ் பேசும் பகுதிகளில் பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும்" என்று ஜெயவர்த்தனா வில்சனிடம் கூறினார். ஜெயரட்ணம் வில்சனும், நீலன் திருச்செல்வமும் ஜெயாரின் எண்ணக்கருவை அமிர்தலிங்கம் மீதும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மீதும் திணித்து, அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு அழுத்தம் கொடுத்திருந்தனர். இதனையடுத்து காரியத்தில் இறங்கிய ஜெயார், 1979 ஆம் ஆண்டு, மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான 10 உறுப்பினர்களைக் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை உருவாக்கி அக்குழுவிற்கு விக்டர் தென்னக்கோனை தலைவராக நியமித்தார். மாவட்ட அபிவிருத்திச் சபைத் திட்டத்தை பிராந்திய சுயாட்சி தீர்வுக்கான அடிப்படை என்று எண்ணிய வில்சனும், நீலனும், அதனை நடைமுறைப்படுத்துவதில் அதீத அக்கறை காட்டியிருந்தனர். ஆனால், மாவட்ட அபிவிருத்திச் சபைகள் அரசத் தலைமையினாலும், அமைச்சர்களாலும், அதிகாரிகளாலும் கட்டுப்படுத்தப்படும் ஒரு அமைப்பு என்று விக்டர் தென்னக்கோனும் ஏனைய ஆணைக்குழு உறுப்பினர்களும் செயற்பட்டு வந்தமை வில்சனுக்கும் நீலனுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு ஏற்றார்போல், மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான சட்டம் உருவாக்கப்பட்டபோது, இச்சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டே பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இறுதி நகலைப் பார்த்த வில்சன் பெரிதும் விரக்தியடைந்ததுடன், மிகத் தாமதாமதமாகக் கொண்டுவரப்பட்டுள்ள மிகச்சொற்ப அதிகாரங்கள் என்று மாவட்ட அபிவிருத்திச் சபைத் திட்டத்தை விமர்சித்திருந்தார். பாராளுமன்றத்தில் இச்சட்டம் முன்வைக்கப்படு முன்னமே, வழமைபோல சிங்கள இனவாதிகளால் மாற்றப்பட்டு, உப்புச் சப்பற்ற திட்டமே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பிரதான எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சி இத்திட்டத்தினை எதிர்த்திருந்தது. எதிர்க்கட்சித் தலைவர்களும், பெளத்த பிக்குகளும் மாவட்ட அபிவிருத்திச் சபை நகல்களை கிழித்து எரித்ததுடன், ஜெயாரின் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நாட்டை விற்க முனைவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாவட்ட அபிவிருத்திச் சபைத் திட்டத்தின் மூலம் தமிழர்களின் தனிநாட்டிற்கான அடித்தளம் இடப்பட்டு விட்டது என்று பெளத்த பிக்குகள் இத்திட்டத்திற்கெதிராகக் கடுமையாகக் குரல் எழுப்பி வந்தனர். ஆகவே பெளத்த பிக்குகளை சமாதானப்படுத்த நினைத்த ஜெயார், மாவட்ட அபிவிருத்திச் சபைகள் என்பது முழு நாட்டிற்குமான பொதுவான ஒரு திட்டமேயன்றி, தமிழர்களுக்கு இதனால் தனியான அதிகாரம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது என்று உறுதியளித்தார். பின்னர், இத்திட்டத்தை தான் கொண்டுவந்ததன் உண்மையான நோக்கத்தையும் அவர் வெளிப்படுத்தினார். "அமிர்தலிங்கமும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டதும், அவர்களும் எமது அரசியல் விளையாட்டினுள் அகப்பட்டு விடுவார்கள். மாவட்ட அபிவிருத்திச் சபைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அவர்களின் கவனம் குவிந்திருக்கும்போது, தனிநாட்டிற்கான அவர்களின் கோரிக்கை சிறிது சிறிதாக மறைந்துவிடும். இதன் மூலம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணையினரையும், தமிழ் மக்களையும் நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றிற்குள் உள்வாங்கி விடமுடியும். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தமது மாவட்டங்கள் சிலவற்றில் பெரும் அபிவிருத்திகளைச் செய்வதாகக் காட்டிக்கொண்டு காலத்தைக் கழிக்கும் நிலை உருவாக, தமது தனிநாட்டிற்கான கோரிக்கையினை அவர்கள் சிறிது சிறிதாக மறந்துவிடுவார்கள்" என்று பிக்குகளிடம் ஜெயவர்த்தனா கூறினார்.
  17. நூலக எரிப்பின் பின்னாலிருக்கும் மர்மமும் யாழ் நூலகத்தை எரித்த பொலீஸ் காடையர்களைக் காப்பாற்ற ஜெயார் ஆடிய நாடகமும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்ட இராணுவப் பிரிவின் உண்மையான நோக்கம் யாழ் நூலத்தை எரிப்பதும், ஏற்கனவே தம்மால் அடையாளம் காணப்பட்ட யாழ்நகரின் முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களை எரிப்பதும் தான் என்று எதிர்க்கட்சிகள் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியிருந்தன. இதேவகையான விமர்சனங்களையே அமிர்தலிங்கமும் தான் ஜனாதிபதிக்கு ஆனி 2 இல் எழுதிய கடிதத்திலும், ஆனி 9 அன்று பாராளுமன்றத்தில் தனது பேச்சிலும் குறிப்பிட்டிருந்தார். இக்குற்றச்சாட்டுக்களை மறுக்க அரசு ஒருபோதுமே முயன்றிருக்கவில்லை என்பதன் மூலம், இக்குற்றச்சாட்டுக்களை அரசு ஆமோதித்திருந்தது என்பது தெளிவாகிறது. இக்குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளித்துப் பேசிய ஜெயாரும், ஏனைய ஆளும்கட்சி உறுப்பினர்களும் அரச படைகள் இத்தாக்குதல்களில் ஈடுபடவில்லையென்றும், தமது சகாக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதைக் கண்ணுற்ற பொலீஸாரே வன்செயல்களில் ஈடுபட்டனர் என்றும் கூறி இத்திட்டமிட்ட தாக்குதல்களை நியாயப்படுத்தியிருந்தனர். மேலும், எதிர்க்கட்சிகள் முன்வைத்த விமர்சனத்தில் இந்த அக்கிரமங்கள் நடந்தவேளை முக்கிய அமைச்சர்களும், பாதுகாப்புத் தலைமை அதிகாரிகளும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து இந்த வன்செயல்களை ஊக்குவித்திருந்தது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்றும் கூறியிருந்தன. இந்த வன்முறைகளின் பொழுது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இரு முக்கிய அமைச்சர்களும் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமிணி திசாநாயக்காவும், கைத்தொழில் அமைச்சர் சிறில் மத்தியூவும் தான் என்பது குறிப்பிடத் தக்கது. அதேவேளை பொலீஸ் மற்றும் இராணுவத்தின் அதிகாரிகளாக வன்முறைகளின்போது அரச காடையர்களுக்குத் தலைமை தாங்கியோர் பாதுகாப்புச் செயலாளர் கேணல் சி.ஏ. தர்மபால, அமைச்சரவைச் செயலாளர் ஜி.வி.பி. சமரசிங்க, பொலிஸ் மா அதிபர் ஆனா செனிவிரட்ண, இராணுவத்தின் அதிகாரிகளின் பிரதானி பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்க மற்றும் உதவிப் பொலீஸ் மா அதிபர் எட்வேர்ட் குணவர்த்தன ஆகியோராகும். வன்முறைகளின்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இரு அமைச்சர்களும் ஜெயாரின் அரசாங்கத்தில் மிகவும் பலம்வாய்ந்தவர்களாகக் கருதப்பட்டதுடன், ஜெயாருக்கு மிகவும் நெருக்கமானவர்களாகவும் அறியப்பட்டவர்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கங்களை தலைமையேற்று வழிநடத்தவென்று ஜெயாரினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். தொழிற்சங்கக் காடையர்கள் என்று பெயர்பெற்ற ஜாதிக சேவக சங்கமய எனும் குண்டர் பிரிவை சிறில் மத்தியூ வழிநடத்த, லங்கா ஜாதிக எஸ்டேட் சேவக சங்கமய எனப்படும் சிங்கள மலையகத் தொழிற்சங்கக் காடையர்களை காமிணி திஸாநாயக்கா வழிநடத்தி வந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் விரோதிகளுக்கெதிரான திட்டமிட்ட வன்முறைகளில் ஈடுபடுத்துவதற்கென்று இவ்விரு காடையர் கூட்டங்களும் அரசால் தொடர்ச்சியாகப் பாவிக்கப்பட்டு வந்தன. இந்த அமைச்சர்கள் இருவரும் தம்முடன் இக்காடையர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர். இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகளில் இவர்கள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தனர். ஜெயாரின் ஆலோசகராக கடமையாற்றிய தமிழரான பேராசிரியர் ஏ.ஜே. வில்சன் எழுதிய ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் இலங்கைத் தமிழர்களும்" எனும் புத்தகத்திலிருந்து ஒரு கூற்று , "யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சுவாரசியமான தகவல்கள் கிடைக்கப்பட்டிருக்கின்றன. ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க அமைச்சர் காமிணி திஸாநாயக்கா அங்கு நடந்த விடயங்கள் குறித்து சில தகவல்களை தொலைபேசியூடாக என்னுடன் பகிர்ந்துகொண்டார். காமிணி, எனது சகலையான செல்வநாயகம் சந்திரகாசனின் நெருங்கிய நண்பர் என்கிற முறையில்க் கூட இத்தகவல்களை என்னுடன் பகிர்ந்துகொண்டிருக்கலாம். எனக்குத் தெரிந்ததெல்லாம், காமிணி என்னுடன் தொலைபேசியில் பேசும்பொழுது, அவருக்கருகில் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவும் இருந்திருக்கிறார் என்பதுதான். அருகிலிருந்து ஜெயார் காமிணிக்குச் சொன்ன இரகசியங்களை காமிணி இன்று மறந்திருக்கலாம்". சிங்களக் காடையர்களான ஜெயவர்த்தனவும் காமிணி திஸாநாயக்கவும் காமிணி திஸாநாயக்க என்னுடன் பேசுகையில், "பொலீஸார் தமது சகாக்கள் கொல்லப்பட்டதால் மிகுந்த கோபம் கொண்டிருந்தார்கள்" என்று கூறினார். நூலகம் எரிக்கப்பட்ட இரவில் கோபம் தலைக்கேறிய நிலையில் பொலீஸார் வன்முறையில் ஈடுபட்டனர். தமது சகாக்கள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கியே தீருவோம் என்று அவர்கள் சபதம் எடுத்திருந்தனர். ஆனால், யாழ்ப்பாணத்தின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் சிறில் மத்தியூ எதற்காகத் தலையிட்டார் என்பதுபற்றி காமிணி வாயே திறக்கவில்லை. அவர் என்னிடம் சிறில் மத்தியூ தொடர்பாகக் கூறிய ஒரே விடயம், "நான் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்ல ஆயத்தமாகும்போது என்னையழைத்த ஜனாதிபதி ஜெயவர்த்தனா, சிறில் மத்தியூ பல பஸ்களில் ஆட்களை கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் போகிறார், அவர் மீது ஒரு கண் இருக்கட்டும்" என்று கூறினார் என்பது மட்டும்தான். ஆனால், இதில் எனக்குப் புரியாத விடயம் என்னவென்றால், தனது அடியாட்களை பஸ்களில் கூட்டிக்கொண்டு சிறில் மத்தியூ யாழ்ப்பாணம் போகிறார் என்று தெரிந்தும் அவரை ஜெயவர்த்தனா ஏன் தடுத்து நிறுத்தவில்லை என்பதுதான். காமிணி என்னுடன் மேலும் பேசும்போது, யாழ்ப்பாணத்தில் இயங்கிய மதுபான விற்பனை நிலையங்களை உடைத்துச் சூறையாடிய பொலீஸாரும், இராணுவத்தினரும் போதை ஏற்றிக்கொண்டே வன்முறைகளில் ஈடுபட்டார்கள் என்று கூறினார். பொலீஸாரும், இராணுவத்தினரும் வன்முறைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது காமிணியும் முன்னணியில் நின்று இவற்றினை ஏனைய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சேர்ந்து மேற்பார்வை செய்துகொண்டிருந்திருக்கிறார். இவற்றைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் அவருக்கு இருந்தது. ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை. "அவர்கள் போதை தலைக்கேறி, ஆவேசத்துடன் வன்முறையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். நான் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றேன், ஆனால் அவர்கள் கேட்கவில்லை. எனது வாழ்நாளில் மரணத்திற்கு மிக அருகில் நான் அதுவரை சென்றிருக்கவில்லை. வன்முறைகளில் ஆவேசத்துடன் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவர்களைப் பார்த்து ஒருவார்த்தைதன்னும் நான் பேசியிருந்தால், அவர்கள் தங்கள் கோபம் அனைத்தையும் என்மீது திருப்பி, எந்தத் தயக்கமும் இன்றி என்னையும் கொன்றிருப்பார்கள். அவர்களின் வன்முறைகளை மெளனமாக ஆமோதித்து அவர்களுடன் சேர்ந்து பயணிப்பதைத் தவிர எனக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. ஆனால், அவர்கள் யாழ்ப்பாண நூலகத்தை எரிக்கும் நாசச்செயலில் ஈடுபடுவார்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை" என்று காமிணி என்னிடம் கூறினார். தான் கூறியதெல்லாம் உண்மையே என்று கூறி தனது தொலைபேசித் தொடர்பை அவர் முடித்துக்கொண்டார். மறுநாள் என்னைச் சந்தித்த ஜனாதிபதி ஜெயார், நடந்தவற்றை அப்படியே காமிணி என்னிடம் கூறியிருப்பதாகக் கூறினார். கீழுள்ள காமிணியின் அறிக்கை சில விடயங்களை ஏற்றுக்கொள்கிறது, பொலீஸாரே யாழ் நூலகத்தை எரித்தனர். "எனக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை, ஆகவே அவர்கள் செய்வதை நான் அனுமதித்தேன்" - இந்தக் கூற்றைக் கவனியுங்கள். காமிணி வன்முறைகளின்பொழுது முன்னால் இருந்திருக்கிறார். பொலீஸாரின் அளவிற்கு மீறிய ஆவேசமும், கோபமும், பழிவாங்கும் உணர்வுமே நூலகம் எரிக்கப்படக் காரணமாகியிருந்தன என்று காமிணி கூறுகிறார். இலங்கையின் இந்தியத் தலையீடு எனும் புத்தகத்தினை எழுதிய சிங்கள இனவாதியான ரொகான் குணவர்த்தன ஒரு அத்தியாயத்தில் பின்வருமாறு கூறுகிறார், " பொலீஸ் மா அதிபரான ஆனா செனிவிரட்ன என்னுடன் பேசும்போது யாழ்ப்பாணத்திற்கு அப்போது வந்திருந்த உதவிப் பொலீஸ் மா அதிபரும், ஒரு முக்கிய அமைச்சரும் பொலீஸாரின் கோபத்தை விஸ்வரூபமாக்கி, அவர்களை உணர்ச்சியூட்டி ஆவேசப்படுத்தினர். பின்னர் அவர்களுடன் சேர்ந்து யாழ் நூலகத்தை எரித்தனர் என்று கூறினார்" - பக்கம் 72 இல் இது பதியப்பட்டிருக்கிறது. நூலகம் எரிக்கப்பட்ட கொடுஞ்செயலில் தனது பெயரும் தொடர்ச்சியாக பிணைக்கப்பட்டு செய்திகள் வெளிவந்துகொண்டிருந்த நிலையில் காமிணி திசாநாயக்கா, தான் பொலீஸாரைத் தூண்டிவிட்டு நூலகத்தை அவர்களுடன் சேர்ந்து எரிக்கவில்லையென்றும், அவர்களைச் சமாதானப்படுத்தி வன்முறைகளைக் கட்டுப்படுத்தவே முயன்றதாகவும் பிடிவாதமாகக் கூறிவந்தார். ஜெயவர்த்தனாவும் தனது பங்கிற்கு நூலக எரிப்பு விடயத்திலிருந்து எப்படியாவது தனது அடிவருடியான காமிணியின் பெயரைத் துடைத்துவிட பகீரதப் பிரயத்தனம் செய்துவந்தார். ஆனால், காமிணியே ஒரு கட்டத்தில் இச்செயலுக்கான அவமானத்துடன் வாழ்நாளைக் கழிக்கவேண்டியிருக்கிறது என்று பேராசிரியர் சிவத்தம்பி உட்பட பல தமிழர்களிடம் வாய்விட்டுக் கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. 1991 ஆம் ஆண்டு, இன்னொரு சிங்கள இனவாதியான லலித் அதுலத் முதலியுடன் சேர்ந்து அன்றைய ஜனாதிபதி பிரேமதாசவுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை காமிணி திஸாநாயக்கா கொண்டுவந்தபோது, பிரேமதாசா யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்தை மீளவும் பேசுபொருளாகக் கொண்டுவந்தார். 1991 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 16 ஆம் திகதி புத்தளம் சகிராக் கல்லூரியின் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரேமதாச பின்வருமாறு கூறினார், "1981 ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான தேர்தலின்போது, எமது கட்சியின் சில முக்கிய அமைச்சர்கள் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பல பஸ்களில், நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து திரட்டிய தமது அடியாட்களையும் கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தனர். யாழ்ப்பாணத்தில் வன்முறைகளில் இவர்கள் ஈடுபட்டதோடு தேர்தல்களையும் குழப்பியிருந்தனர். அன்று யாழ்ப்பாணத்தில் கலகம் விளைவித்த அதே ஆட்கள்தான் இன்றும் கலகம் ஒன்றை உருவாக்க முயல்கின்றனர். அன்று விலைமதிப்பற்ற வரலாற்றுப் புத்தகங்களை நூலகத்துடன் எரித்தவர்கள் யாரென்று நீங்கள் தேடினால் இன்று எனக்கெதிராக கலகம் செய்யக் காத்திருப்பவர்களின் முகங்களே அவை என்பதைத் தெரிந்துகொள்வீர்கள்" என்று வெளிப்படையாகவே யாழ் நூலக எரிப்பிற்கும் காமிணி திசாநாயவுக்கும் இடையிலிருக்கும் நெருங்கிய தொடர்பை வெளிப்படுத்தியிருந்தார். . மூன்று நாட்களுக்குப் பின்னர், 1991 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 19 ஆம் திகதி கண்டியில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஜனாதிபதி பிரேமதாச யாழ் நூலகத்தை முன்னால் நின்று எரித்தது காமிணி திஸாநாயக்கதான் என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். கொல்லப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் அமிர்தலிங்கத்தின் கருத்துப்படி ஆசியாவின் புகழ்பெற்ற நூலகங்களில் ஒன்றான யாழ் நூலகத்தை எரித்தது மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமிணி திஸாநாயக்கதான் என்று உறுதியாக நம்பியிருந்தார். 1981 ஆம் ஆண்டு ஆனியில் நான்குநாள் பயணமாக அன்றைய பிரதமர் ரணசிங்க பிரேமதாசா யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவருடன் பயணிக்கும் ஊடகவியலாளர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். யாழ் நூலகத்திற்கு அருகாமையிலிருந்த திறந்த வெளி அரங்கில் பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரேமதாசவின் செயலாளரான பிரட்மன் வீரக்கோனுடன் அரங்கின் முன்வரிசயில் நானும் அமர்ந்திருந்தேன். அங்கு பேசிய பிரேமதாச, யாழ் நூலகத்தின் பக்கம் தனது கையைக் காட்டி, " "அந்த கம்பீரமான கட்டடத்தைப் பாருங்கள். அது யாழ்ப்பாணத்தின் விலைமதிப்பற்ற பொக்கிஷம் என்று என்னிடம் கூறினார்கள். யாழ்ப்பாணத்து மக்கள் இந்தப் பொக்கிஷம் குறித்து மிகவும் பெருமைப்படுகிறார்களாம். அது இலங்கையின் நூலகம் என்பதால் நாமும் இதுகுறித்துப் பெருமைப்பட வேண்டும். இது உங்களின் பொக்கிஷம் மட்டும் அல்ல, எங்களதும் தான். ஏனென்றால் நாம் எல்லோரும் இலங்கையர்கள்" என்று அவர் பேசினார். 1991 இல் கண்டியில் தன்மீது பிரேமதாச முன்வைத்த குற்றச்சாட்டிற்கு காமிணி திஸாநாயக்க பதிலளித்திருந்தார். சுமார் 5 பக்கங்கள் கொண்ட நீண்ட கடிதமொன்றினை ஜனாதிபதி பிரேமதாசவுக்கு எழுதிய காமிணி, அதன் பிரதிகளை ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்திருந்தார். அந்த வகையில் டெயிலி நியூஸ் பத்திரிகைக்கும் காமிணியின் கடிதத்தின் பிரதியொன்று கிடைத்திருந்தது. அதனை ஆசிரியர் என்னிடம் கொடுத்திருந்தார். பிரேமதாசா மீதான காமிணி மற்றும் லலித் அத்துலத் முதலியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாகச் செய்திகளைத் தயாரித்து வந்ததினால், இந்தக் கடிதமும் எனக்கே வழங்கப்பட்டிருந்தது. ஆகவே, நான் இக்கடிதம்பற்றிய செய்தியை பத்திரிக்கையில் பதிந்துவிட்டு, கடிதத்தின் மூலப்பிரதியை என்னுடனேயே வைத்திருக்கிறேன். தனது கடிதத்தில் காமிணி மூன்று விவாதங்களை முன்வைத்து, யாழ் நூலகம் எரிக்கப்பட்டதற்கும் தனக்கும் தொடர்பில்லை என்று நிறுவுவதற்கு முயன்றிருந்தார். அவையாவன, 1. தான் நூலகம் எரிக்கப்பட்ட நாளில் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லையென்றும், தான் பண்டாரவளையின் வெலிமடைப்பகுதியில் இருந்ததற்கான பயண ஒழுங்குப் பத்திரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் காமிணி கூறினார். 2. பாராளுமன்றத்தில் நூலக எரிப்புப் பற்றிப் பேசிய அமிர்தலிங்கம், காமிணி நூலக எரிப்பில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதை ஒருபோதும் சொல்லவில்லையென்று அவர் வாதாடினார். 3. 1981 ஆம் ஆண்டு, எதிர்க்கட்சிகள் தன்மீது நூலக எரிப்பிற்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தபோது, அப்போது பிரதமராக இருந்த பிரேமதாசவே தனக்குச் சார்பாக வாதாடியிருந்தார் என்றும் காமிணி கூறியிருந்தார். ஆனால், காமிணியின் காரணங்களை முற்றாக ஒதுக்கித் தள்ளிய பிரேமதாச, யாழ் நூலகத்தை எரித்தது காமிணி திஸாநாயக்கவே என்றும் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினார். அத்துடன், அவர் இன்னொரு ரகசியத்தையும் கூறினார். அதாவது, மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான தீர்மானம் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டபோது காமிணி திஸாநாயக்க அதனை முழுதாக எதிர்த்தார் என்றும் பிரேமதாச கூறினார். மாவட்ட அபிவிருத்திச் சபைகளை காமிணியோடு சேர்ந்து இன்னும் இரு அமைச்சர்கள் எதிர்த்திருந்தனர். அவர்கள் யாரெனில், அமைச்சர் சிறில் மத்தியூவும், அமைச்சர் காமிணி ஜயசூரியவுமாகும். "தமிழர்களுக்கென்று எந்த அதிகாரமும் கொடுக்கப்படலாகாது" என்பதே காமிணி திஸாநாயாக்க உட்பட்ட மூன்று அமைச்சர்களினதும் நிலைப்பாடாக இருந்தது. இனங்களுக்கிடையிலான நீதிக்கும், சமத்துவத்திற்குமான இயக்கம் எனும் அமைப்பு யாழ் நூலக எரிப்புப் பற்றி விசாரிப்பதற்கு தூதுக்குழு ஒன்றினை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பியிருந்தது. அதன் அறிக்கையின் படி, "மிகவும் அவதானமாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்படி, யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட வன்முறைகளும், நூலக எரிப்பும் மிகவும் திட்டமிட்ட வகையில் நூறிலிருந்து 175 பொலீஸாரைக் கொண்ட குழுவொன்றினால் நடத்தப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிய வருகிறது". அந்த அமைப்பு பின்வரும் சம்பவத்தையும் பதிவுசெய்திருந்தது, கண்டியிலிருந்து காங்கேசந்துறை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த சிங்களப் பாதிரியார் ஒருவரை சுமார் யாழ்ப்பாணத்திலிருந்து இரண்டு மைல்கள் தொலைவில் காக்கிக் காற்சட்டையும், வெண்ணிற பெனியன்களும் அணிந்திருந்த மூன்று நபர்கள் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். தாக்குதலாளிகளுடன் முற்றான சீருடையில் ஒரு பொலீஸ் அதிகாரியும் சம்பவ இடத்தில் நின்றிருக்கிறார். வாகனத்தின் முன் கண்ணாடியை இரும்புக் கம்பிகளால் அடித்து நொறுக்கிய பொலீஸார், வாகனத்தின் சாரதியையும் கடுமையாகத் தாக்கியபோது அவர் நினைவிழந்து வீழ்ந்திருக்கிறார். வாகனத்தின் நடத்துனரான சிங்களவரும் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். ஆனால், தம்மால் தாக்கப்பட்ட மூவரும் சிங்களவர்கள்தான் என்பதை உணர்ந்தபின்னர், தாக்குதலில் ஈடுபட்ட பொலீஸார், அவர்களை அப்படியே விட்டு விட்டு அங்கிருந்து ஜீப் வண்டியில் ஏறிச் சென்றிருக்கிறார்கள். யாழ் பொலீஸ் நிலையத்திற்கு தம்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றி சிங்களப் பாதிரியார் முறையிடச் சென்றவேளை, அங்கிருந்த பொலீஸார் அதனை ஏற்க மறுத்து விட்டார்கள். யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்த மூன்று சிங்களவர்களையும் அங்கு பணிபுரிந்த தமிழ் வைத்தியர்களும், தாதிமாரும் மிகவும் அன்புடனும், கனிவுடனும் பராமரித்திருக்கிறார்கள். யாழ் வைத்தியசாலையின் கட்டிலில் படுத்திருந்தபடியே பற்றியெரியும் யாழ்நகரை அந்தச் சிங்களப் பாதிரியார் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார். லயனல் பெர்ணான்டோ பொலீஸாரின் திட்டமிட்ட தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட தமிழருக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும், இந்த வன்முறைகளிலும், நாசகாரச் செயல்களிலும் ஈடுபட்ட பொலீஸாரையும் அதிகாரிகளையும் விசாரித்துத் தண்டனை வழங்கவேண்டும் என்றும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இருந்து அரசு மீது கடுமையான அழுத்தங்கள் எழுந்து வந்தன. இந்த அழுத்தங்களை நீர்த்துப் போகச் செய்ய ஜெயார் ஒரு சூழ்ச்சியைச் செய்தார். அதுதான், பொலீசாரின் வன்முறைகளை விசாரிக்க பொலீஸ் திணைக்களத்தில் உள்ளக விசாரணை ஒன்றினை மேற்கொள்ளப்போவதாக அவர் அறிவித்தார். விசாரணைகளின் அதிகாரியாக கிங்ஸ்லி விக்கிரமிசிங்க நியமிக்கப்பட்டதுடன், அவர் சாட்சிகளைப் பதிவுசெய்ததோடு, அடையாள அணிவகுப்புக்களினூடாக 187 பொலீஸார் அடையாளம் காணப்பட்டதுடன், அவர்கள் தடுத்தும் வைக்கப்பட்டனர். அதன்பிறகு இதுகுறித்து அரசோ, பொலீஸாரோ எதனையும் செய்ய முற்படவில்லை. விசாரணையும் அத்துடன் முற்றுப்பெற்று விட்டது. ஜெயாரின் அடக்குமுறை அரசின் இலக்கணமான "தமிழரைத் தாக்குவோரைக் கெளரவிப்பது" என்பதற்கமைய அத்தனை பொலீஸாரும் பதவியுயர்வு வழங்கப்பட்டு யாழ்ப்பாணத்திலிருந்து சிங்களப் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்து அனுப்பிவைக்கப்பட்டனர். நிவாரணத்திற்கான வேண்டுகோள்களை அடக்குவதற்கு முன்னாள் யாழ்ப்பாண அரசாங்க அதிபரான லயனல் பெர்ணான்டோவை நிவாரணங்களை மதிப்பீடு செய்யும் அதிகாரியாக ஜெயவர்த்தன நியமித்தார். லயனல் பெர்ணான்டோவும் ஜெயாரின் விருப்பத்தின்பேரில் யாழ் நூலக எரிப்பிற்கு நிவாரணமாக பத்து லட்சம் ரூபாய்களைக் கொடுக்கலாம் என்று மதிப்பிட்டார். நிவாரணக் கொடுப்பனவை ஒருவருடம் வரை தாமதித்து மெளனம் காத்த ஜெயார், 1982 ஆம் ஆண்டு ஆனி 10 ஆம் திகதி யாழ் நூலகத்தை மிளக் கட்டுவதற்கான தேசிய நிதி எனும் திட்டத்தை ஆரம்பித்தார். ஆனால், லயனல் பெர்ணான்டோ மதிப்பிட்ட பத்து லட்சம் ரூபாய்களைக் காட்டிலும் மிகக் குறைந்தளவு பணத்தையே ஜெயவர்த்தனா நூலகப் புணரமைப்பிற்குக் கொடுத்திருந்தார்.
  18. பிரபாகரனைச் சந்தித்த பாலசிங்கம் பாலசிங்கம் தமிழ்நாட்டிற்கு வந்திறங்கிய இரவு இரு சந்திப்புக்களில் கலந்துகொண்டார். முதலாவது உமா மகேஸ்வரனுடனும் அவரது குழுவுடனும் இடம்பெற்றது. புலிகள் இயக்கத்திற்காக பாலசிங்கம் உருவாக்கியிருந்த துண்டுப்பிரசுரங்கள் பற்றியே அந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. புலிகள் பற்றிய பாலசிங்கத்தின் ஆவண்ங்கள் உமா மகேஸ்வரனின் வேண்டுகோளுக்கு அமையவே எழுதப்பட்டன. ஒவ்வொரு அத்தியாயத்தையும் எழுதியவுடன் உமாவுக்கு அதனை அனுப்பிவைத்த பாலசிங்கம், உமா அவற்றைத் திருத்திச் சரி பிழை பார்த்தபின்னர் மீண்டும் பாலசிங்கத்திற்கு இறுதிவடிவமாக்க அனுப்பி வைப்பது வழமை. ஆகவே, அன்றைய சந்திப்பு ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பாகவே இருந்தது. அடேல் பாலசிங்கம் ஆனால், பிரபாகரனுடனான பாலசிங்கத்தின் சந்திப்பு வித்தியாசமானதாக இருந்தது. மிகவும் தோழமையாக, நட்புறவுடன் அச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது. சரித்திரத்தின் இரு முக்கிய கதாப்பாத்திரங்களின் முதலாவது சந்திப்பாக அது அமைந்தது. நள்ளிரவளவில் அச்சந்திப்பு நிகழ்ந்தது. பெரிய ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி பிரபாகரனும், பேபி சுப்பிரமணியமும் சந்திப்பிற்கு வந்திருந்தார்கள். பிரபாகரன் நீளக் காற்சட்டையும், மென்மையான நிறத்தில் அச்சிடப்பட்ட மேற்சட்டையினையும் அணிந்திருந்தார். பேபி சுப்பிரமணியம் வழமை போல வெண்ணிற வேட்டியும், நஷணல் மேலாடையும் அணிந்திருந்தார். கூடவே தன்னுடன் ஒரு பை நிறைய ஆவணங்களையும், அரசியல் கட்டுரைகளையும் எடுத்து வந்திருந்தார். அடேல் பாலசிங்கம் தான் எழுதிய விடுதலைக்கான வேட்கை எனும் புத்தகத்தில் இந்தச் சந்திப்புக் குறித்து எழுதும்பொழுது, அன்று தான் பிரபாகரனிடம் அவதானித்த ஆளுமையின் பண்புகள் எப்படி அவரை உலகத்தின் தலைசிறந்த்ச கெரில்லாத் தலைவராக உருவாக்கியிருந்தது என்பதுபற்றி எழுதுகிறார். "பயங்கவராதிகள் என்றழைக்கப்பட்ட, இளமையான, அப்பாவிகளாகத் தோற்றமளித்த அந்த இரு இளைஞர்களையும் பார்த்தபோது ஒருகணம் எனது கண்களை என்னால் நம்பமுடியாது போய்விட்டது. அவர்கள் பற்றி நான் அறிந்துகொண்டவைக்கும் அவர்களின் உருவ அமைப்புக்களுக்கும் இடையே எந்த ஒற்றுமையினையும் நான் காணவில்லை. சற்றுக் குட்டையான, நேர்த்தியாக உடையணிந்து காணப்பட்ட அந்த இரு இளைஞர்களைப் பார்த்தபோது, மிகவும் அப்பாவிகளாகத் தெரிந்தார்கள்" என்று அவர் எழுதுகிறார். பிரபாகரன் நேர்த்தியாக உடை அணிந்திருந்தார். பின்னர் வல வருடங்களாக பிரபாகரனின் விடுதலைப் பயணத்தில் பயணித்த அடேல் பின்வருமாறு கூறுகிறார், "தலைமுடியினை சீராக வாருவது அவருக்கே உரித்தான ஒரு பண்பு. உடையணிதல் என்பது வழக்கமான சம்பிரதாயங்கள் போன்று உடுத்தோமா, கிளம்பினோமா என்பது போல அல்ல பிரபாகரனுக்கு. அவரைப்பொறுத்தவரையில் அது ஒரு நிகழ்வு. அன்றிரவு எம்மைச் சந்திக்க வந்தபோது அவர் முழுமையாக ஆயுதம் தரித்திருந்தார். மிகவும் தளர்வான மேற்சட்டைக்குள் இடுப்பில் பத்திரமாக செருகப்பட்டிருந்த அவரது பிரத்தியேக ஆயுதத்தை கூர்ந்து கவனித்தாலன்றி, சாதாரணமாகத் தெரிந்துவிடாது. தனது மேலாடையினை இலகுவாக கழற்றி தனது ஆயுதத்தை துரிதமாக வெளியே எடுக்கும்வகையில் அழுத்தப் பொத்தான்களை அவர் தனச்து மேலாடைக்குப் பாவித்திருந்தார்". பிரபாகரனின் இளமையான முகம் நேர்த்தியாகச் சவரம் செய்யப்பட்டு, பிரகாசமாகவும் தெளிவாகவும் இருந்தது. அவரின் ஊடுருவிப் பார்க்கும், அகன்ற கறுத்த விழிகள் பற்றி அடேல் பின்வருமாறு எழுதுகிறார், " அவர் உங்களைக் கூர்ந்து பார்க்கும்போது அவரது பார்வை உங்களின் உள்ளத்தை ஊடுருவிப் போவது உங்களுக்குப் புலப்படும். அவரது பார்வையின் ஆளம் அவரின் மனதையும், எண்ணங்களையும் வெளிக்காட்டும். பிரபாகரனுடனான எனது வாழ்க்கையில் அவரது ஆள ஊடறுத்து நோக்கும் பார்வை பல விடயங்களை எனக்குச் சொல்லித் தந்திருக்கிறது". தலைவருடன் எங்கள் தேசத்தின் குரல் அந்தச் சந்திப்பு நள்ளிரவில் இருந்து அதிகாலைவரை தொடர்ந்தது. அடேலைப் பொறுத்தவரை பிரபாகரனும் பாலசிங்கமும் ஒருவரை ஒருவர் அனுமானிக்கவும், கணிப்பிடவும், புரிந்துகொள்ளவும் அந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்துக்கொண்டார்கள் என்று எழுதுகிறார். ஒவ்வொருவரும் ஈழம் எனும் தனிநாட்டிற்காக எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறார் என்பதை நாடிபிடித்தறிவதே அவர்கள் இருவரினது நோக்கமாக இருந்தது. பாலசிங்கத்தின் முகபாவனைகள் ஊடாகவும், அவரை அரசியல் ரீதியிலான கேள்விகளைக் கேட்பதன் மூலமாகவும் அளவிடத் தொடங்கினார் பிரபாகரன். தன்னுடன் பேசும்போது, பாலசிங்கத்தின் முகபாவனையின்போது அசைந்த ஒவ்வொரு தசையினையும் பிரபாகரன் கூர்ந்து கவனித்தார். பாலசிங்கத்தின் பின்புலம், அவரது நம்பிக்கைகள் குறித்து பிரபாகரன் அறிந்துகொள்ள விரும்பினார். சேகுவேரா மற்றும் மாஒ சேதுங் ஆகியோர் பற்றிய கட்டுரைகளை பாலசிங்கம் மொழிபெயர்த்தது பற்றியும், தானாக எழுதிய அரசியற் கட்டுரைகள் பற்றியும் பிரபாகரன் கேட்டுத் தெரிந்துகொண்டார். சரித்திரப் பெருமைமிக்க உறவொன்றினை அன்று ஆரம்பித்துக்கொண்ட அவர்கள் இருவரும் அதனை இறுதிவரை தொடர்ச்சியாகப் பேணிவந்தனர். அந்தச் சந்திப்பு நிறைவுபெறும் நேரம் வந்ததும், பாலசிங்கம் இரு விடயங்கள் குறித்து பேசலாம் என்று எண்ணினார். முதலாவது பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையிலான முறுகல் நிலையினைச் சரிசெய்வது. இரண்டாவது புலிகளின் உறுப்பினர்களுக்கு அரசியல்ப் பாடங்களை நடத்துவது. அரசியல்ப் பாடங்களை எடுப்பதற்கு உடனேயே சம்மதித்த பிரபாகரன், தானும் அதில் கலந்துகொள்ள விரும்புவதாகக் கூறினார். ஆனால், முறுகல் நிலையினைத் தளர்த்துவது குறித்துப் பிடிவாதமாக இருந்தார். "தனது கொள்கைகளை காற்றில்ப் பறக்கவிட்ட ஒருவருடன் என்ன சமரசம் வேண்டிக் கிடக்கிறது?" என்று அவர் பாலசிங்கத்திடம் கேட்டார். "இது எமது போராட்டத்தையே அழித்துவிடும்" என்ற அவரே தொடர்ந்தார். தமிழர்கள் மிகவும் பலவீனமான நிக்லையில் இருப்பதாகப் பிரபாகரன் கூறினார். அடிமை வாழ்வை நோக்கி தமிழர்கள் தள்ளப்பட்டுவருவதாக அவர் கூறினார். அரச படைகளைக் கொண்டும், தமது சனத்தொகைப் பலத்தைக் கொண்டும் ஆளும் சிங்கள வர்க்கம் தமிழர்களை அடிமைகளாக நடத்த எத்தனிக்கிறது என்று அவர் கூறினார். தமிழர்களின் சமாதான வழியிலான போராட்டங்கள் முற்றாகத் தோற்றுவிட்டன என்று அவர் கூறினார். பெரும்பான்மையினரின் விருப்பங்களை சிறுபான்மையினர் மேல் திணிக்கும் அளவிற்கு சனநாயகம் விபச்சாரப் பொருளாக மாறியிருப்பதாக அவர் கூறினார். ஆகவே, தமிழர்களுக்கு முன்னாலிருக்கும் ஒரே வழி ஆயுத ரீதியிலான போராட்டம் மட்டுமே என்று பாலசிங்கத்திடம் அவர் எடுத்துக் கூறினார். பாலசிங்கம் உடனடியாகப் பிரபாகரனின் பேச்சில் கவரப்பட்டுப் போனார். தனது பின்வரும் கூற்றின்மூலம் பிரபாகரன் பாலசிங்கத்தை தன்பக்கம் இழுப்பதில் பூரண வெற்றி கண்டார். "இலங்கை அரசாங்கம் ஒரு அடக்குமுறை அரசாகும். இந்த அரசு சிங்கள இனவாதிகளின் கைகளில் சிக்கியிருக்கிறது. தமிழர்களை அடக்குமுறைக்கு உட்படுத்த தனது ஆயுதங்களான இராணுவத்தையும், பொலீஸாரையும் அது பாவிக்கிறது. ஆகவே, தமிழர்களின் முன்னால் உள்ள முதலாவது எதிரிகளாக இருப்பது சிங்கள இராணுவமும், பொலீஸும்தான். தமிழர்களின் சமாதான ரீதியிலான போராட்டங்களையும், வன்முறை ரீதியிலான போராட்டங்களையும் இவை கொடுமையாக நசுக்கி வருவதோடு, சிங்களவரின் கீழ் முற்றான அடிபணிதலுக்கும் தள்ளி வருகின்றனர்". "இராணுவமும், பொலீஸாரும் தமது எதிரிகள் என்பதை தமிழர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கெதிராக அவர்கள் போராட வேண்டும்". "ஆயுதப் போராட்டம் ஒன்றினை ஆரம்பிக்கும் முகமாக தமிழர்கள் ஒன்றுதிரளவேண்டும். கற்பித்தல் வழிகள் மூலமும், பிரச்சாரம் மூலமும் இதனைச் செய்வதென்பது சாத்தியமில்லாததுடன், நேர விரயமும் ஆகும். இராணுவம் மீதும் பொலீஸார் மீதும் மிகவும் கடுமையாகத் தாக்க வேண்டும். அவர்கள் பதிலுக்கு தமிழர்கள் மீது தாக்குதலை மேற்கொள்வார்கள். இது மக்களை தமது தேசம் மீது, விடுதலை மீது அக்கறை கொள்ளவைக்கும். மக்கள் போராளிகளிடம் அடைக்கலம் தேடி வருவார்கள்". "இராணுவத்தையும், பொலீஸாரையும் தமிழர்களின் எதிரிகளாகக் காட்டுவதன் மூலம், போராளிகளை அவர்களின் பாதுகாவலர்களாக காட்ட முடியும். இதன்மூலம் ஆயுதப்போராட்டத்தை வளர்த்தெடுக்க முடியும்". "மக்களின் நம்பிக்கையினை வளர்த்தெடுப்பதும், அதனைத் தக்கவைப்பதும் மிகவும் கடிணமான ஒரு காரியம். ஒழுக்கமே இவை எல்லாவற்றிற்கு மிக அவசியமானது. மக்களின் காவலர்கள் ஒழுக்கமின்றிச் செயற்பட முடியாது. ஒழுக்கமின்றிப் போனால், எமது ஆயுதப் போராட்டம் முற்றாக உருக்குலைந்துபோகும்". என்று பிரபாகரன் பாலசிங்கத்திடம் கூறினார்.
  19. புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவு உமா மகேஸ்வரனிற்கும் ஊர்மிளாவுக்கும் இடையிலான பாலியல் உறவு உமா மகேஸ்வரனும் ஊர்மிளாவும் பாலியல் ரீதியில் தொடர்பில் உள்ளார்கள் என்று தோழர்கள் தன்னிடம் கூறியபோது பிரபாகரனால் அதனை நம்பமுடியவில்லை. ஆனால், அச்செய்தி உண்மைதான் என்று அறிந்தபோது அவர் மிகவும் கோபமடைந்தார். இயக்கத்தின் தலைவரான ஒருவரே தான் கடைப்பிடிக்கவேண்டிய ஒரு கொள்கையினை மீறுவதென்பது பிரபாகரனினால் நினைத்துப்பார்க்க முடியாத ஒரு குற்றமாகக் கருதப்பட்டது. உமாவை இயக்கத்திற்குள் கொண்டுவந்து, அவரையே அரசியல்த் தலைவராக உருவாக்குவதில் பிரபாகரன் ஆற்றிய பங்கு அளப்பரியது. பிரபாகரனுக்கெதிரான பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட இந்த நகர்வு காரணமாக அமைந்திருந்தது. வெளியார் ஒருவரை இயக்கத்திற்குள் கொண்டுவந்தது மட்டுமல்லாமல், அவரையே தலைவராகவும் அமர்த்தியது இயக்கத்திற்குள் இருந்த பல மூத்த உறுப்பினர்களுக்கு உவப்பானதாக இருக்கவில்லை. அது பிரபாகரனின் இரண்டாவது பிழை என்று அவர்கள் முணுமுணுத்து வந்திருந்தார்கள். முதலாவது தவறு எதுவென்றால், செட்டி தனபாலசிங்கத்தை புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பின் தலைவராக பிரபாகரன் நியமித்திருந்தது அவர்களால் சுட்டிக் காட்டப்பட்டது. செட்டி வங்கிக்கொள்ளைப் பணத்தைச் சுருட்டிக்கொண்டதுடன், இறுதியில் புலிகள் பற்றிய தகவல்களை பொலீஸாருக்கு வழங்கும் உளவாளியாகவும் மாறிப்போனார். செயலில் இறங்கும் போராளிகளை எப்போதுமே மதித்து வந்த பிரபாகரன், செட்டியின் செயல்த்திறனிற்காக அவர்மீது நம்பிக்கை வைத்திருந்தார். உமா மகேஸ்வரன் விடுதலைப் போராட்டம் குறித்து முற்றான முற்றான அர்ப்பணிப்புடன் செயற்பட்டமையினாலும், அமிர்தலிங்கம் உமாவையும் இயக்கத்திற்குள் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று பிரபாகரனிடம் கேட்டிருந்தமையினாலும் பிராபாகரன் உமாவை இயக்கத்தினுள் சேர்த்திருந்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இளைஞர் பிரிவான தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக் கிளையின் காரியாதரிசியாக இயங்கிவந்த உமா, அமைப்பு வேலைகளில் மிகவும் ஈடுபாட்டுடன் உழைத்து வந்தார். உமா சர்வதேச விடுதலைப் போராட்டங்கள் பற்றி அதிகளவு விடயங்களைத் தெரிந்து வைத்திருந்ததாலும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மிகவும் தேர்ச்சி பெற்று விளங்கியதாலும், தன்னை விடவும் 10 வயது அதிகமாக இருந்ததனாலும் பிரபாகரன் அவரை தலைவராக பதவியில் அமர்த்தினார். தன்னைக் காட்டிலும் சிறந்த பேச்சாற்றல் கொண்டவராக உமா காணப்பட்டதும், அவரே தலைவராக இருக்கத் தகுதியானவர் என்று பிரபாகரன் முடிவெடுத்தமைக்கு இன்னுமொரு காரணம். . 1978 ஆம் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டம் ஒன்றிற்கு உமாவையும் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்த பிரபாகரன், அங்கிருந்தவர்களுக்கு அவரை அறிமுகம் செய்து வைத்த பின்னர், அவரைத் தலைவராக பரிந்துரை செய்வதாகக் கூறினார். உமா கொண்டிருந்த சர்வதேசத் தொடர்புகள் மற்றும் அவரது தொடர்பாடல் ஆற்றல் ஆகியவற்றை இயக்கம் உபயோகித்துக்கொள்ள முடியும் என்று பிரபாகரன் அங்கிருந்தவர்களிடம் கூறினார். புலிகள் இயக்கத்தின் கொள்கைகளை தான் முற்றாகக் கடைப்பிடிக்கப்போவதாக உறுதியளித்த உமா, குடும்ப வாழ்க்கை, பாலியலுறவு, மாற்றியக்கங்களுடன் சேர்தல் அல்லது புதிதாக இன்னொரு இயக்கத்தை ஆரம்பித்தல், மதுபானம் புகைப்பிடித்தல் ஆகியவை உட்பட இன்னும் பல விடயங்களை முற்றாகத் தவிர்த்து இலட்சியத்திற்காக உழைப்பேன் என்று அவர் உறுதியளித்தார். உமாவிற்கும் ஊர்மிளாவுக்கும் இடையிலான பாலியல் உறவு உறுதிப்படுத்தப்பட்டபோது, இயக்கத்தில் தலைமைப் பொறுப்பிலிருந்து உடனடியாக விலகுமாறு உமாவிடம் கூறினார் பிரபாகரன். "நீங்கள் இயக்கத்தின் தலைவராக இருக்கிறீர்கள். நீங்களே இயக்கத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு விடயத்தைச் செய்தீர்களென்றால், மற்றையவர்கள் என்னதான் செய்யமாட்டார்கள். நான் கட்டி வளர்க்கும் இயக்கத்தை நீங்கள் அழிக்க நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். ஆகவே உடனடியாக விலகிச் செல்லுங்கள்" என்று உமாவைப் பார்த்து கர்ஜித்தார் பிரபாகரன். ஆனால், உமா மாறவில்லை. தனது எதிரிகள் தனக்கெதிராக சதித்திட்டம் ஒன்றை நடத்திவருவதாகவும், தான் எந்தத் தவறும் இழைக்காததால் , தலைமைப் பொறுப்பிலிருந்து விலகப்போவதில்லை என்றும் பிடிவாதம் பிடித்தார். உமாவின் காரணங்களை பிரபாகரன் ஏற்கும் நிலையில் இல்லை. யாழ்க்குடா நாட்டில் வீரதுங்கவின் அட்டூழியங்கள் பெருகிவந்த நிலையில், இயக்கத்தின் மத்திய குழு 1979 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கூடியது. அங்கு கூடிய மத்தியகுழு உமாவிடம் இரண்டு தெரிவுகளை முன்வைத்தது, 1. திருமணம் முடியுங்கள் அல்லது 2. தலைமைப் பொறுப்பிலிருந்து இராஜினாமாச் செய்யுங்கள். என்பவையே அவையிரண்டும். ஆனால், உமா இதில் எதனையும் ஏற்கத் தயாராக இருக்கவில்லை. இதனால், உமாவை இயக்கத்திலிருந்து விலக்கும் முடிவினை மத்திய குழு எடுத்தது. மத்திய குழுவின் ஏனைய மூன்று உறுப்பினர்களான பரா, நாகராஜா மற்றும் ஐய்யர் ஆகியோர் உமாவை விலக்கும் முடிவிற்கு ஆதரவாக நின்றார்கள். இயக்கத்தின் தலைவர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இயங்கவேண்டும் எனும் பிரபாகரனின் கொள்கையினை அவர்கள் முற்றாக ஆமோதித்தார்கள். "தலைமைப்பொறுப்பில் இருக்கும் ஒருவர் மீது எள்ளளவு சந்தேகம் வரினும், அவர் உடனடியாக விலக வேண்டும்" என்று நாகராஜா வாதாடினார். 1984 ஆம் ஆண்டு, பிரபாகரன் முதன்முதலாக வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்குப் பேட்டியளித்திருந்தார். அந்தச் செய்தியாளரான அனித்தா பிரதாப்பிடம் பேசும்போது "ஒரு புரட்சிகர அமைப்பின் தலைவராக இருப்பவர் தனது அமைப்பின் ஒழுக்கத்திற்கு தன்னை முற்றாக அர்ப்பணித்தவராக இருக்கவேண்டும். தலைவரே அடிப்படை விதிகளையும், கொள்கைகளையும் மீறிச் செயற்படும்போது , இயக்கத்திற்குள் குழப்பகரமான சூழ்நிலை தோன்றுவதோடு, ஈற்றில் அதுவே இயக்கத்தை முற்றாக அழித்து விடும்" என்று கூறினார். மேலும், இயக்கத்திற்குள் உருவான பிரச்சினையினை, தான் புலிகள் இயக்கத்திற்கும், உமா மகேஸ்வரன் எனும் தனிநபருக்கும் இடையிலான வேறுப்பாடக் கருதுவதாகக் கூறினார். "இந்தப் பிரச்சினைக்கு நான் எந்தவிதத்திலும் பொறுப்பேற்க முடியாது. உமா மகேஸ்வரனே இந்த பிரச்சினையை உருவாக்கினார். இயக்கத்தின் ஒழுக்கக் கோட்ப்பாட்டினை மீறியவர் உமா மகேஸ்வரனே. ஆகவே, ஒழுக்காற்று நடவடிக்கையாக அவரை மத்தியகுழுவினூடாக இயக்கத்திலிருந்து வெளியேற்றினோம். இந்த இயக்கத்தை ஆரம்பித்தவன் என்கிற வகையிலும், உமா மகேஸ்வரனை இயக்கத்திற்குள் கொண்டுவந்தவன் என்கிற வகையிலும், மத்திய குழு எடுத்த முடிவை நடைமுறைப்படுத்துவதைத்தவிர எனக்கு வேறு எந்த வழிகளும் இருக்கவில்லை" என்றும் கூறினார் பிரபாகரன். அனித்தா பிரதாப் மேலும், புலிகளின் லண்டன் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு, உமா பற்றிய குற்றச்சாட்டுக்கள பற்றி விளக்கமளித்தார் பிரபாகரன். லண்டனில் வசித்துவந்த புலிகளின் உறுப்பினரான கிருஷ்ணனிடம் பேசும்போது, உமா ஈழம் எனும் இலட்சியத்திற்கு தகுதியற்றவர் என்று கூறினார். "ஒழுக்கமற்ற ஒரு தலைவனால், மக்களை விடுதலை நோக்கி அழைத்துச் செல்ல முடியாது" என்று அவர் கூறினார். இதனைக் கேட்டுவிட்டு பின்னர் பேசிய கிருஷ்ணன், "பிரச்சினையினைப்பேசித் தீர்க்கலாம், நான் அன்டன் ராஜாவை உவ்விடம் அனுப்புகிறேன்" என்று பிரபாகரனிடம் கூறியிருக்கிறார். உமா பதவி விலகுவதற்குப் பிடிவாதமாக மறுத்துக்கொண்டே இருந்தார். இது நீண்ட உள் விவாதங்களுக்கு வித்திட்டது. சில மூத்த உறுப்பினர்கள் பிரபாகரன் தொடர்ந்தும் உமாவை வற்புறுத்தத் தேவையில்லை என்று எண்ணம் கொண்டிருந்தனர். சூழ்நிலைகளின் தாக்கத்தால் உமா தவறு செய்திருப்பதால், அவரை மன்னித்து ஏற்றுக்கொள்ளலாம் என்று அவர்கள் எண்ணத் தலைப்பட்டனர். ஆனால், பிரபாகரன் அசரவில்லை. "ஒழுக்கம் என்று வரும்போது விட்டுக்கொடுப்புகளுக்கு இடமில்லை. எல்லோரும் இயக்க விதிகளை முழுமையாகப் பின்பற்றியே ஆகவேண்டும்" என்று தனது முடிவில் உறுதியாக நின்றார் பிரபாகரன். கிருஷ்ணன் இந்தப் பிரச்சினைக்குச் சுமூகமான தீர்வொன்றை எட்டவே விரும்பினார். கிருஷ்ணனும், அன்டன் ராஜாவும் அப்போதுதான் மூன்றாம் உலக விடுதலைப் போராட்ட அமைப்புக்களிடம் தொடர்பினை ஏற்படுத்தி புலிகள் பற்றியும் அவர்களது போராட்டம் பற்றியும் விழிப்புணர்வினை உருவாக்கும் நடவடிக்கைகளில் லண்டனில் ஈடுபடத் தொடங்கியிருந்தனர். உமா மகேஸ்வரனையே புலிகளின் தலைவராகவும் அவர்கள் அறிமுகப்படுத்தியிருந்தனர். "நாங்கள் மீண்டும் ஒருமுறை அவர்களிடம் போய், எமது தலைவர் இயக்க விதிகளுக்கு முரணாக பாலியல் உறவில் ஈடுபட்டதனால் அவரை விலக்கிவிட்டோம் என்று எம்மால் சொல்ல முடியாது" என்று கிருஷ்ணன் பிரபாகரனிடம் கெஞ்சினார். தாம் எதிர்நோக்கும் இந்தச் சிக்கல் குறித்து சென்னையில் பிரபாகரனைச் சந்தித்தபோது அன்டன் ராஜா விளங்கப்படுத்தினார். "இது ஒரு பெரிய பிரச்சினையா?" என்று பிரபாகரனைப் பார்த்துக் கேட்டார் அன்டன் ராஜா. இதைக் கேட்டதும் கோபமடைந்த பிரபாகரன், "லண்டனில் வாழும் உங்கள் போன்ற ஆட்களுக்கு இது ஒரு பிரச்சினையாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இங்கு, எமது சமூகத்தில் இது ஒரு பெரிய பிரச்சினைதான். இயக்கத்தில் சேரும் தமது பெண்பிள்ளைகளை தலைவர்கள் பாலியல் வன்புணர்ந்து வருகிறார்கள் என்று தெரிந்தால், எந்தப் பெற்றோராவது தமது பெண்பிள்ளைகளை இயக்கத்திற்கு அனுப்புவார்களா?" என்று ஆவேசத்துடன் அன்டன் ராஜாவைப் பார்த்துக் கேட்டார். ஊர்மிளா என்று அறியப்பட்ட கந்தையா ஊர்மிளாதேவியே புலிகள் இயக்கத்தின் முதலாவது பெண்போராளியாகும். தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக் கிளையில் ஈடுபாட்டுடன் பணிபுரிந்து வந்த ஊர்மிளா, உமாவுடன் நெருங்கிப் பழகிவந்தார். உமாவின் பரிந்துரையின் பேரிலேயே ஊர்மிளா புலிகள் இயக்கத்திற்குள் இணைத்துக்கொள்ளப்பட்டார். அன்டன் ராஜாவை பல வருடங்களுக்குப் பின்னர் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. என்னிடம் பேசிய அவர், "பிரபாகரன் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் இருக்கவில்லை, நான் லண்டனுக்கே திரும்பிச் சென்றுவிட்டேன்" என்று கூறியிருந்தார். பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையே ஏற்பட்டிருந்த பிரச்சினையினை தீர்க்கும் தனது முயற்சியை லண்டன் அலுவலகம் கைவிட விரும்பவில்லை. ஆகவே, இன்னொருமுறை முயன்று பார்க்கலாம் என்று கிருஷ்ணன் எண்ணினார். இம்முறை, தன்னுடன் மத்தியஸ்த்தத்திற்கு இன்னுமொருவரையும் அழைத்துச் சென்றார் கிருஷ்ணன். அவர்தான் அன்டன் பாலசிங்கம். தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுத ரீதியிலான போராட்ட முன்னெடுப்பினை நியாயப்படுத்தி பிரசுரங்களையும், புத்தகங்களையும் பாலசிங்கம் வெளியிட்டு வந்ததனால் பிரபாகரனால் மிகவும் மதிக்கப்பட்டவராக இருந்தார். ஆனால், அந்தக் கட்டத்தில் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருந்தது. மத்தியகுழுவினரால தன்னை விலக்குவதாக எடுக்கப்பட்ட முடிவினை முற்றாக நிராகரித்திருந்த உமா, பின்னர் தானே புலிகள் இயக்கத்தின் தலைவர் என்றும், தனது இயக்கமே உண்மையான புலிகள் இயக்கம் என்றும் உரிமை கோரத் தொடங்கினார். உமாவின் விசுவாசிகளில் ஒருவரான சுந்தரம் என்று அழைக்கப்பட்ட எஸ் சிவசண்முகமூர்த்தி, புலிகளால் சேமித்துவைக்கப்பட்ட ஆயுதங்களைத் திருடி வேறிடங்களுக்கு மாற்றத் தொடங்கியபோது, உமாவின் உரிமைகோரலுக்கான காரணம் வெளித்தெரியவந்தது. இது பிரபாகரனை மிகவும் சினங்கொள்ள வைத்திருந்தது. உடனே செயலில் இறங்கிய பிரபாகரன் ஏனைய மறைவிடங்களிலிருந்து ஆயுதங்களை அப்புறப்படுத்தியதுடன், அவை உமாவின் கைகளுக்குக் கிடைப்பதையும் தவிர்த்துவிட்டார். 1979 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில், புலிகள் இயக்கத்தினுள் ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்க்கும் நோக்குடன், பாலசிங்கத்தையும், அவரது இரண்டாவது மனைவியான அவுஸ்த்திரேலியப் பெண்மணி அடேலையும் அழைத்துக்கொண்டு மும்பாயூடாக சென்னைக்குப் பயணமானார் கிருஷ்ணன். அக்காலத்தில் தமிழ்நாட்டில் புலிகள் இயக்கம் மிகவும் இரகசியமாகவே இயங்கிவந்தது. பாலசிங்கம் உள்ளே நுழைவதை மீனாம்பாக்கம் விமான நிலைய அதிகாரிகள் அதிகம் விரும்பியிருக்கவில்லை. அவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்த பேபி சுப்பிரமணியம் தூரத்தில், மக்களுடன் மக்களாக நின்று நடப்பதை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு நின்றார். பின்னர் ஒருவாறு சுங்க அலுவல்களை முடித்துக்கொண்டு கிருஷ்ணனுன், பாலசிங்கம் தம்பதிகளும் வாடகை வண்டியொன்றில் ஏறி அவர்களுக்கென்று முன்பதிவு செய்யப்பட்டிருந்த விடுதி ஒன்றிற்குச் சென்றனர். மிகவும் அழுக்காக, துப்பரவின்றி, ஒழுகும் மலசலகூடத்தைக் கொண்டிருந்த அந்தச் சிறிய அறையில் பாலசிங்கம் தம்பதிகளைத் தங்கவைத்துவிட்டு கிருஷ்ணன் அவசர அவசரமாகப் பிரபாகரனைச் சந்திக்கச் சென்றார்.
  20. மக்கள் வாழிடங்களிடையே அமைக்கப்பட்ட சித்திரவதைகளின் தலைமைக் காரியாலயம் வீரதுங்கவின் பயங்கரவாதத்தின் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டு முற்றுகைக்குள் கொண்டுவரப்பட்டது. தனக்கு மிகவும் நெருக்கமான, தமிழர் எதிர்ப்பு மனோபாவம் கொண்ட சில அதிகாரிகளையும் சேர்த்துக்கொண்டு, யாழ்நகரின் இதயப்பகுதிகளில் ஒன்றான சுண்டுக்குளி பழைய பூங்காவில் தனது பாதுகாப்புப் படைகளின் தலைமைப் பீடத்தை அமைத்தார் "காளைமாடு" வீரதுங்க. 1979 ஆம் ஆண்டின் ஆடி மாதம் , மூன்றாம் வாரத்தில் இந்தச் சித்திரவதைக் கூடம் வீரதுங்கவினால் அமைக்கப்பட்டது. இப்பகுதியின் பாதுகாப்புக் கெடுபிடிகள் கடுமையாக்கப்பட்டதுடன், இப்பகுதியில் வசிப்பவர்களுக்கென்று அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, இப்பகுதிக்குள் வந்துசெல்வோர் அவதானிக்கப்பட்டு வந்ததுடன் அனுமதியும் கடுப்படுத்தப்பட்டது. ஒருகாலத்தில் அரசாங்கத்தின் இராணுவப் பேச்சாளராகக் கடமையாற்றிய முனசிங்கவுடன் செய்தியாளன் என்கிற வகையில் நான் அவ்வப்போது சில விடயங்கள் குறித்துப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. பலாலியில் இயங்கிவந்த இராணுவப் புலநாய்வுத்துறையின் பொறுப்பாளராக பணிபுரிந்த முனசிங்க இந்த விசேட அடையாள அட்டை குறித்துக் கூறுகையில், "மூன்று விதமான அடையாள அட்டைகள் அப்பகுதியில் வசித்துவந்த மக்களுக்கு இராணுவத்தால் வழங்கப்பட்டன. சிவப்பு, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று நிறங்களில் இவை விநியோகிக்கப்பட்டன. சிவப்பு நிற அடையாள அட்டைகளை வைத்திருப்போர் சுதந்திரமாக இப்பகுதிக்குள் வந்து செல்ல முடியும். இவர்கள் ராணுவ தலைமைப் பீடத்திற்குள்ளும், பழைய பூங்கா சித்திரவதைக் கூடத்திற்குள்ளும் சுதந்திரமாகச் சென்றுவர முடியும். வெள்ளை அடையாள அட்டை வைத்திருப்போர், தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் இருக்கும் இரண்டாம் நிலை காவலரண் வரையே செல்ல முடியும். இந்தத் தலைமைக் காரியாலயம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பிரித்தானிய அரச பிரதிநிதிகளின் உத்தியோகபூர்வ வாசஸ்த்தலமாக விளங்கியிருந்தது" என்று கூறினார்.. பழைய பூங்காவின் அருகில் அமைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்து மன்னன் சங்கிலியனின் சிலை முனசிங்க வடமாகாணத்திற்கான இராணுவ அதிகாரிகளின் உதவித் தலைவராகவும், இராணுவத்தின் பொறுப்பதிகாரியாகவும் பணியாற்றிய மூத்த தளபதி. உளவுப்பிரிவிற்கு பச்சை அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. இதுபற்றி முனசிங்க தனது புத்தகம் ஒன்றில் இவ்வாறு கூறுகிறார், ஒரு ராணுவ வீரனின் பார்வையிலிருந்து : "எனக்கு பச்சை அடையாள அட்டையொன்று வழங்கப்பட்டிருந்தது. அதனைப் பாவித்து, பிரதான வாயிலின் உட்பக்கமாக அமைந்திருந்த ராணுவக் காவலரண் வரையே செல்லமுடியும். இதற்கப்பால் செல்லவேண்டுமென்றால் நியமனம் ஒன்றை முன்பதிவு செய்தபின்னரே செல்ல முடியும்". "1979 இல், இராணுவத் தலைமையகம் இப்பகுதியில் அமைக்கப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்களை கைதுசெய்து விசாரணைக்கு இழுத்துவந்தோம். அவர்கள் அனைவருமே விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், ஒரு விடயம் மட்டும் எனக்கு மிகத் தெளிவாகப் புரிந்திருந்தது, யாழ்ப்பாணத்து மக்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்துவந்தார்கள். பழைய பூங்காவில் நடக்கும் கொடூரமான சித்திரவதைகள் பற்றி அவர்கள் தமக்குள் பேசிவந்தார்கள். இரவானதும் இப்பகுதியின் தெருக்கள் வெறிச்சோடி விட்டிருக்கும்". ஆனால், முனசிங்கவிற்கு அங்கு நடந்தவைபற்றி நிச்சயம் தெரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடிய அந்தக் கொடூரமான மாதங்களான ஆடி முதல் மார்கழி வரையான காலப்பகுதியில் அவர் யாழ்ப்பாணத்திலேயே இருந்தார். வட மாகாண ஒட்டுமொத்தத் தளபதி வீரதுங்க மற்றும் வடமாகாண ராணுவத் தளபதி ரணதுங்க ஆகியோரின் கீழ் முனசிங்க அக்காலப்பகுதியில் செயற்பட்டு வந்தார். மேலும், இந்த நடவடிக்கைகளுக்காக இராணுவத்தின் விசேட பிரிவொன்றும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது. தனக்கு வழங்கப்பட்ட விசேட ராணுவப் பிரிவை தனது திட்டத்திற்கு முழுமையாக வீரதுங்க பயன்படுத்திக்கொண்டார். கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்டதுடன், இராணுவத்தினர் மிகக்கொடூரமாக போராளிகளைத் தேடி அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் இந்தத் தேடியழிக்கும் நடவடிக்கைகளில் கைதுசெய்யப்பட்டு, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் கொல்லப்பட்டு, யாழ்ப்பாணத்து வீதிகள் வீசியெறியப்பட்டனர். இந்த சித்திரவதை முன்னெடுப்புக்கள் போராளிகள் மீது கடுமையான அழுத்தத்தைப் பிரயோகித்திருந்தன. 1979 ஆம் ஆண்டி முதல் அரைப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைகளுக்குக் காரணமானவர்கள் குட்டிமணியும், தங்கத்துரையுமே என்று அரசு நம்பியதால், அவர்களே வீரதுங்கவின் பிரதான இலக்காக இருந்தார்கள் என்று முனசிங்க கூறுகிறார். மார்கழி 5 ஆம் திகதி இடம்பெற்ற தின்னைவேலி வங்கிக் கொள்ளையின் பின்னர் பிரபாகரன் சற்று அமைதியாகிவிட்டிருந்தார். தனது கெரில்லா அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை கட்டியெழுப்பும் பணியில் அவர் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். வவுனியா பூந்த்தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த தனது பயிற்சி முகாமில் தங்கியிருந்த பிரபாகரன் ஆயுதங்களைச் சேகரிப்பதிலும் தனது போராளிகளுக்கு பயிற்சியளிப்பதிலும் தனது நேரத்தைச் செலவிட்டு வந்தார். அதைவிடவும் அவருக்கு மேலும் சில பிரச்சினைகள் இருந்தன. முதலாவது ஈரோஸ் அமைப்புடனான பிணக்கு. சங்கர் ராஜீ நான் முன்னர் இத்தொடரில் குறிப்பிட்டது போல, ஈரோஸ் அமைப்பு லெபனானில் பலஸ்த்தீன விடுதலை இயக்கத்துடன் பயிற்சி தொடர்பாக இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தது. ஆகவே, ஆக்காலப் பகுதியில் ,செயற்பட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ஆகியவையும் இந்தப் பயிற்சிகள் மூலம் பலன் பெறவேண்டும் என்று ஈரோஸ் அமைப்பு விரும்பியிருந்தது. வன்னியில் தங்கியிருந்த அருளர் மற்று சங்கர் ராஜீ ஆகிய ஈரோஸ் முக்கியஸ்த்தர்கள் பிரபாகரனிடமும் உமா மகேஸ்வரனிடமும் லெபனான் பயிற்சிகள் குறித்துப் பேசி அவர்களின் விருப்பத்தினையும் பெற்றிருந்தனர். புலிகளின் மத்திய குழு இதுபற்றிக் கலந்தாலோசித்து, முதலாவதாக லெபனான் பயிற்சிக்குச் செல்வதற்கு உமா மகேஸ்வரனையும், விஜேந்திராவையும் தெரிவு செய்தது. இவர்களுக்கான பயிற்சிகள் தரமானதாக இருக்கும் பட்சத்தில் மேலும் சில போராளிகளை அனுப்பி வைக்கலாம் என்று பிரபாகரன் கூறினார். மேலும், இந்தப் பயிற்சிகள் மூலம் ஆயுதங்களைத் தருவிப்பதற்கான வழியொன்றும் தமக்குக் கிடைக்கும் என்று பிரபாகரன் எண்ணினார். ஆகவே, லெபனான் பயிற்சிக்காக ஈரோஸ் அமைப்பிற்கு ஒரு லட்சம் ரூபாய்களைப் பிரபாகரன் வழங்கியிருந்தார். சுமார் மூன்று மாதகால லெபனான் பயிற்சியை முடித்துக்கொண்டு உமா மகேஸ்வரனும், விஜேந்திராவும் நாடு திரும்பியிருந்தார்கள். அங்கு வழங்கப்பட்ட பயிற்சி அவர்களுக்குத் திருப்தியைத் தந்திருக்கவில்லை. லெபனானில் நடைபெற்ற சண்டைகளில் அவர்கள் பங்கேற்க விடப்படவில்லை என்பதுடன், புதிய ரக ஆயுதங்களைக் கையாளவும் அனுமதிக்கப்படவில்லை. "பெரும்பாலான நேரங்களில் நாம் முகாமில் தூங்கினோம், பெரிதாக எதனையும் கற்றுக்கொள்ளவில்லை" என்று அவர்கள் கூறினார்கள். இதனை மத்தியகுழுவில் உமாமகேஸ்வரன் முறைப்பாடாக முன்வைத்தார். அவர்கள் எந்த ஆயுதங்களையும் தம்முடன் கொண்டுவந்திருக்கவுமில்லை. பணவிடயத்தில் மிகவும் கண்டிப்பானவராக விளங்கிய பிரபாகரன், ஈறோஸ் அமைப்பினரை அழைத்து, பயிற்சி ஒப்பந்தத்தினை முடிவிற்குக் கொண்டுவந்ததுடன் மீதிப்பணத்தைத் திருப்பிச் செலுத்துமாறும் கேட்டார். ஈரோஸ் அமைப்பு அப்பணத்தை முற்றாகச் செலவழித்திருந்ததுடன், அதனை மீளச் செலுத்தும் முகாந்திரங்களும் அதற்கு இருக்கவில்லை. அனால், பிரபாகரன் விடாப்பிடியாக மீதிப்பணத்தினைச் செலுத்துமாறு அழுத்தம் கொடுக்கவே, அவருக்கும் ஈரோஸ் அமைப்பின் சங்கர் ராஜீக்கும் இடையே பிணக்கொன்று உருவாகியது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சங்கர் ராஜீ ஏமாற்றிவிட்டதாக பிரபாகரன் கருதியதால், புலிகளின் மத்திய குழுவின் முன்னால் வந்து ஈரோஸ் பக்க நியாயத்தைக் கூறவேண்டும் என்று சங்கர் ராஜீயை அவர் கேட்டார். ஆனால், சங்கர் ராஜி இதனை முற்றாக நிராகரித்து விட்டார். ராஜி இதுதொடர்பாக என்னிடம் பின்னர் பேசும்போது, "பிரபாகரன் இந்தப் பிரச்சினையை அமிர்தலிங்கத்திடம் கொண்டுபோனார். அமிர்தலிங்கம் ஒரு இணக்கப்பட்டை ஏற்படுத்தினார். நான் 285 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் பணத்தை சிவசிதம்பரத்திற்கு அனுப்பி வைத்தேன்" என்று கூறினார்.
  21. மகளீர் இளநிலை அதிகாரிகள் பயிற்சி நெறி நிறைவுவிழா 01-03-2006 கூடுதல் தகவல்களுக்கு: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=17364

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.