Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    87990
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    8910
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    13
    Points
    46797
    Posts
  4. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    8
    Points
    15791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/15/23 in all areas

  1. சிங்கராயரின் கைது மினிபஸ்ஸினைக் கைவிடுமுன்னர் அச்செழுப் பகுதியில் இயங்கிவந்த மெதடிஸ்த்த தேவாலயத்திற்கு ஓட்டிச் சென்ற மாத்தையா அங்கிருந்த கிறிஸ்த்தவ மதகுரு ஜயதிலகராஜாவைச் சந்தித்தார். தேவாலயத்தின் பின்னால் இருந்த மதகுருவின் வாசஸ்த்தலத்திற்குக் காயப்பட்ட போராளிகள் கொண்டுசெல்லப்பட்டனர். ஏனையவர்கள் அந்த மினிபஸ்ஸில் தமது முகாம் நோக்கிச் சென்றார்கள். முகாமின் அருகில் அவர்கள் இறங்கியபின்னர், போராளிகளில் ஒருவர் அதனை நவாலி வரை ஓட்டிச் சென்று விட்டுவிட்டு முகாம் திரும்பினார். காயப்பட்ட போராளிகளின் நிலையினை அவதானித்த மதகுரு ஜயதிலக்கராஜா, காயப்பட்ட போராளிகளையும், மாத்தையாவையும் தனது காரில் ஏற்றிக்கொண்டுபுத்தூர் மெதடிஸ்த்த வைத்தியசாலையில் பணிபுரிந்த தனது சகோதரரான வைத்தியர் ஜயகுலராஜாவிடம் அழைத்துச் சென்றார். காயப்பட்ட போராளிகளுக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யப்படவேண்டும் என்று மாத்தையாவிடம் கூறிய ஜயகுலராஜா, கடுமையாகக் காயப்பட்டிருந்த சீலனின் உடலில் இருந்து பெருமளவு குருதி வெளியேறியுள்ளதால், அவர் தொடர்ச்சியாக வைத்தியர்களால் கண்காணிக்கப்பட்டுப் பராமரிக்கப்படவேண்டும் என்று கூறினார். மேலும், சீலனைப் பரிசோதித்த ஜயகுலராஜா, சீலனின் முழங்காலில் ஐந்து குண்டுச்சிதறல்கள் பாய்ந்திருப்பதாக கூறினார். அவரது முழங்காலின் ஒரு பகுதியூடாக மூன்று சன்னங்கள் வெளியேறியிருக்கும் காயங்களைக் காட்டிப் பேசிய ஜயகுலராஜா, இன்னும் இரு சன்னங்கள் முழங்காலுக்குள் சிக்கியிருப்பதாகவும் கூறினார். அக்குண்டுகளை அறுவைச் சிகிச்சை ஒன்றின் மூலமே வெளியே எடுக்கமுடியும் என்கிற நிலையிருந்தது. ரகுவையும், புலேந்திரனையும் முகாமிற்கு அழைத்துச் செல்லலாம் என்று மாத்தையாவிடம் கூறிய ஜயகுலராஜா, சீலனை தனக்குத் தெரிந்த இன்னொரு வீட்டில் வைத்து பராமரிக்க முடியும் என்றும் கூறினார். ஆரம்பச் சிகிச்சைகளின் பின்னர் வைத்தியர் ஜயகுலராஜாவின் விடுதியில் தங்கவைக்கப்பட்ட சீலன், இரவானதும் வைத்தியருக்குப் பரீட்சயமான குடும்பம் ஒன்றுடன் தங்கவைக்கப்பட்டார். ரஜினி திரணகம சீலனைப் பாதுகாப்பாக பராமரிக்க அனுப்பப்பட்ட வீடு, இலக்கம் 330, நாவலர் வீதி , யாழ்ப்பாணம் எனும் முகவரியை உடைய நிர்மலா நித்தியானந்தனின் வீடாகும். அக்காணியில் இரு வீடுகள் கட்டப்பட்டிருந்தன. காணியின் மத்தியில் பெரிய வீடொன்றும், ஓரத்தில் இன்னொரு சிறிய வீடும் கட்டப்பட்டிருந்தது. நிர்மலா நித்தியானந்தன் மற்றும் அவரது கணவர் முத்துப்பிள்ளை நித்தியானந்தன் ஆகிய இருவரும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளர்களாகக் கடமையாற்றி வந்தவர்கள். அக்காணியிலிருந்த சிறிய வீட்டிலேயே அவர்கள் தங்கியிருந்தார்கள். நிர்மலா நித்தியானந்தனின் பெற்றோரான ராஜசிங்கம் தம்பதிகள் பெரிய வீட்டில் தங்கியிருந்தனர். நிர்மலா நித்தியானந்தன் நிர்மலாவின் வீட்டிற்கு அன்றிரவு சீலனை அழைத்துச் சென்ற வைத்தியர் ஜயகுலராஜா, நிர்மலாவையும், அவரது தங்கையும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வைத்தியராகக் கல்வி கற்றுவந்தவருமான ரஜனியையும் அழைத்து சீலனின் காயங்கள் பற்றியும், அவரது மருத்துவ தேவைபற்றியும் விளங்கப்படுத்தினார். நித்தியானந்தன் தம்பதிகள் பயன்படுத்திய இரட்டைக் கட்டிலில் சீலன் கிடத்தப்பட்டார். அவரது முழங்காலில் இருந்து இன்னமும் இரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது. அவர்களுக்கு இன்னொரு கண்டிப்பான கட்டளையினையும் ஜயகுலராஜா இட்டார். தானோ அல்லது ராஜனோ அன்றி வேறு எவரும் இவ்வீட்டினுள் அனுமதிக்கப்படக் கூட்டது என்பதே அது. இங்கே ராஜன் என்று அவர் கூறியது மாத்தையாவைத்தான். மாத்தையாவின் இளம்பராயப் பெயர் ராஜன் என்பது குறிப்பிடத் தக்கது. மாத்தையா வைத்தியர் ஜயகுலராஜாவிடமிருந்து மருந்துகளையும், அறிவுருத்தல்களையும் எடுத்துக்கொண்டு நிர்மலாவின் வீட்டிற்குச் சைக்கிளில் சென்றுவந்தார். ராஜசிங்கம் தம்பதிகள் தமது குடும்பத்தில் ஒருவரைப்போல சீலனைக் கவனித்து வந்தார்கள் நிர்மலாவும் அவரது கணவர் நித்தியானந்தனும். சீலனின் சிறுபராய வாழ்க்கையின் கஷ்ட்டங்களையும், போராட்டத்தின் மீது அவர் வைத்திருந்த அர்ப்பணிப்பையும் கண்டபோது அவர்மீது அவர்களுக்கு இரக்கமும், இனம்புரியாத பாசம் ஏற்பட்டு விட்டது. தனது குடிகாரத் தந்தையாலும், வேலைவாய்ப்பின்றி சுற்றித் திரிந்த அண்ணனாலும் தனது சிறுபராயத்தில் ஏற்பட்ட கஷ்ட்டங்கள் குறித்து சீலன் அவர்களிடம் கூறியிருந்தார். தனது குடும்பத்தை தனது தாயாரே மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் கவனித்து வந்ததாகக் கூறிய சீலன், அவரைத் தனியே தவிக்கவிட்டு வந்ததற்காக மனம் வருந்துவதாகவும் கூறியிருந்தார். மேலும், புலிகள் இயக்கத்தில் சேர்வதற்காக மதகுரு சிங்கராயரே தனக்கு ஊக்கம் தந்ததாகவும் அவர் கூறினார். சீலனைப் பராமரித்து வந்த நிர்மலா, சீலனின் வலியைத் தடுக்கும் ஊசிகளைக் கேட்டபோது, சிங்கராயர் தனக்குத் தெரிந்த மருந்தகம் ஒன்றிலிருந்து அவற்றினைப் பெற்று மாத்தையாவிடம் வழங்கினார். நிர்மலாவிடமும், நித்தியானந்திடமும் பேசிய சீலன், தனது வீட்டின் ஏழ்மையினைப் போக்குவதைக் காட்டிலும், தமிழ் மக்களின் விடுவிற்காகப் போராடுவதே அவசியமானது என்று தான் நினைத்ததாலேயே தான் வீட்டை விட்டு வெளியேறி புலிகளுடன் இணைந்ததாகக் கூறினார். பிரபாகரன் போன்ற உன்னதமான தலைவர் ஒருவரின் கீழ் செயற்படுவது தான் அடைந்த பாக்கியம் என்று சீலன் கூறினார். "பிரபாகரன் ஒரு மேன்மையான தலைவர்" என்று சீலன் அவர்களிடம் அடிக்கடி கூறிக்கொள்வார். பிரபாகரனின் மேன்மை பற்றி விளக்குவதற்காக சீலன் ஒரு சம்பவத்தை அவர்களுக்குக் கூறினார். ஒருமுறை போராளி ஒருவர் வாந்தியெடுக்கும் நிலையில் இருந்தபோது, பிரபாகரன் தனது கைகள் இரண்டையும் சேர்த்து அவற்றிற்குள் வாந்தியெடுக்கும்படி அந்தப் போராளியிடம் கூறியிருக்கிறார். ஆனால், அதனைச் செய்ய அப்போராளி தயங்கியபோது, "நாம் தோழர்கள், நீ தயங்காது வாந்தியெடு" என்று பிரபாகரன் அப்போராளிக்குத் தைரியமூட்டியதாக சீலன் அவர்களிடம் கூறினார். வலதுபக்கத்தில் சரத் முனசிங்க பின்னாட்களில் பயங்கரவாதி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்கிற குற்றச்சாட்டில் நிர்மலாவும், அவரது கணவர் நித்தியானந்தனும் ராணுவத்தால் குருநகர் முகாமில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபோது இதுகுறித்து நிர்மலா சரத் முனசிங்கவிடம் கூறியிருக்கிறார். முனசிங்க தான் 2000 இல் எழுதிய "ஒரு ராணுவ வீரரின் பார்வையிலிருந்து" எனும் புத்தகத்தில் இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். தனது புத்தகத்தின் இறுதி நகலை என்னிடம் படித்துப் பார்த்துக் கூறுங்கள் என்று முனசிங்க என்னிடம் கேட்டிருந்தார். ஆகவே இந்தச் சந்தர்ப்பத்தினைப் பாவித்து அவரிடமிருந்து பல தகவல்களை நான் அறிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. சாவகச்சேரி பொலீஸ் நிலையம் மீதான தாக்குதல் தொடர்பாக அவர் மேற்கொண்ட விசாரணை, மீசாலை பகுதியில் அவர் நடத்திய தேடுதலின்போது ஏற்பட்ட சீலனின் மரணம், திருநெல்வேலித் தாக்குதல் ஆகியவை தொடர்பான பல விடயங்களை நான் அறிந்துகொள்ள முடிந்தது. சீலன் தன்னிடம் கூறிய போராளி ஒருவரின் வாந்திபற்றிய சம்பவத்தை நிர்மலா முனசிங்கவிடம் விபரிக்கும்போது குறுக்கிட்ட முனசிங்க, "உங்களின் சீலனை நான் விரைவில் பிடிப்பேன்" என்று கூறவும், "தயவுசெய்து அதைச் செய்யாதீர்கள், ஏனென்றால் அவரை உங்களால் உயிருடன் பிடிக்க முடியாது" என்று நிர்மலா கூறியிருக்கிறார். அன்டன் சின்னராசா பிலிப் சீலன் பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு இரு நாட்களுக்குப் பின், கார்த்திகை 20 ஆம் திகதி நிர்மலாவின் வீட்டைத் தாம் சோதனையிட்டதாக முனசிங்க என்னிடம் கூறினார். தாம் தற்செயலாகவே சீலனை நித்தியானந்தன் தம்பதிகள் பராமரித்து வருவதை தெரிந்துகொண்டதாகக் கூறினார். ராணுவ புலநாய்வுத்துறைக்குக் கிடைத்த தகவல்களின்படி இரு கத்தோலிக்கப் பாதிரியார்களான சிங்கராயரும், சின்னராசாவும் புலிகளின் பிரச்சார வேலைகளில் மும்முரமாக செயற்பட்டு வருவதையும் , அவர்களின் நிதிக் கொடுக்கல் வாங்கல்களை கவனித்துவருவதையும் தாம் அறிந்துகொண்டதாகக் கூறினார். ஆகவே இவர்கள் இருவரையும் ராணுவப் புலநாய்வுத்துறை தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்தது.
  2. கிராமத்து சந்தை.
  3. சங்கரின் மறைவு கார்த்திகை 20 ஆம் திகதி நிர்மலா நித்தியானந்தனின் வீட்டிற்குச் செல்லும் பொழுதுவரை சங்கர் "ஒரு உண்மையான மனிதனின் கதை" எனும் ரஸ்ஸிய நாவலைப் படித்துக்கொண்டிருந்தார். சரியாக 7 நாட்களின் பின்னர், கார்த்திகை 27 ஆம் திகதி தமிழ்த்தேசத்தின் விடுதலைக்காக தனதுயிரை அவர் ஆகுதியாக்கியிருந்தார். இந்த நாளே வீரத்திற்கும், தியாகத்திற்குமான நாளாக நினைவுகூரப்பட்டு வருகிறது. தான் படித்து வந்த நாவலான "ஒரு உண்மையான மனிதனின் கதை" இல் வரும் நாயகனைப் போன்றே சங்கரும் தனதுயிரைத் தமிழ்த்தேசத்திற்காகக் கொடுத்திருந்தார். ஒரு உண்மையான மனிதனின் கதை - ரஸ்ஸிய நாவல் மதுரையின் இடுகாடு ஒன்றில் சங்கரின் உடல் தீயுடன் சங்கமமானது. சங்கரின் இறுதிக் கிரியைக்குத் தானும் போகவேண்டும் என்று பிரபாகரன் விரும்பினார். ஆனால், அவரோடு இருந்தவர்கள் அவரைத் தடுத்து விட்டார்கள். பிரபாகரனின் பாதுகாப்பு அவர்களைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமாகக் கருதப்பட்டது. ஆனால், கிட்டு, பேபி சுப்பிரமணியம், பொன்னம்மான் ஆகியோர் உட்பட சிலர் சங்கரின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டனர். நெடுமாறனும் இந்த இறுதிநிகழ்வில் கலந்துகொண்டார். அது ஒரு மிக முக்கியமான நாளாகக் கருதப்பட்டது. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் துடிப்பான இளைஞர் ஒருவரின் உயிரினை முதன்முதலாக இழந்திருந்தது. சங்கரின் மரணம் புலிகளால் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. இந்த இழப்பினை அறிவிப்பதனூடாக பொலீஸாரும், இராணுவத்தினரும் போராளிகள் மீதான தமது நடவடிக்கைகளை அதிகப்படுத்தலாம் என்று பிரபாகரன் எண்ணினார். மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்டிருந்த புலிகளின் எண்ணிக்கை அன்றைய காலத்தில் வெறும் 30 மட்டும் தான். மேலும், சங்கரின் மரணத்தை அறிவிப்பதனால் தமிழ் மக்களின் மனவுறுதி பாதிக்கப்படும் அதேவேளை புலிகளுடன் இணைந்துகொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கையினையும் பாதிக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால், சங்கரின் இழப்பு அவரது தந்தையாரான ஆசிரியர் செல்வச்சந்திரனுக்கு புலிகளால் அறிவிக்கப்பட்டது. ஒரு நாள் இரவு தனது வீட்டிற்கு வந்த இரு "புலிகளின் பொடியள்" சங்கரின் இறப்புப் பற்றி தன்னிடம் அறியத் தந்ததாக அவர் என்னிடம் பின்னர் கூறியிருந்தார். சங்கரின் முதலாம் ஆண்டு நிறைவின்போது புலிகள் அவரது மறைவினை யாழ்ப்பாணத்தில் வெளிப்படையாக அறிவித்திருந்தார்கள். யாழ்ப்பாணத்தின் சுவர்கள் சங்கரின் திரு உருவப்படத்துடன் அஞ்சலிச் செய்தியைக் காவிக்கொண்டிருந்தன. சங்கரின் வாழ்க்கை, அவரது திறமைகள், துணிவான செயற்பாடுகள் பற்றிய தகவல்களைக் காவிய துண்டுப்பிரசுரங்கள் யாழ்ப்பாணத்தில் மக்களிடையே விநியோகிக்கப்பட்டன. சரத் முனசிங்க என்னுடன் பேசும்போது சங்கரின் மரணம் தொடர்பான விடயங்களை தாம் சில மாதங்களின் பின்னர் அறிந்துகொண்டதாகக் கூறினார். இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு சங்கரின் இறப்பினை முதலாவது தமிழ்ப் போராளியின் மரணம் என்று பதிவுசெய்திருந்தது. சங்கர் மரணமடைந்து ஏழு வருடங்களின் பின்னர் அவரது நினைவுநாளினை மாவீரர் நாளாக அறிவித்தார் பிரபாகரன். வன்னிக் காட்டிற்குள் ஒதுக்கப்பட்டு, இந்திய அமைதிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த தனது போராளிகளுக்கு முற்றுகையினை உடைக்கும் மனோதைரியத்தையும், உத்வேகத்தையும் கொடுக்கவும், தனது இயக்கத்திற்கு மேலும் இளைஞர்களை இணைத்துக்கொள்ளவும் ஊக்கப்படுத்த தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்த போராளிகளை நினைவுகூருவது அவசியம் என்று அவர் கருதினார். தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பது போன்று, தமிழரின் கலாசாராத்தில் ஊறிப்போயிருந்த, பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வந்த தியாகங்களுக்கெல்லாம் சிகரமான தேசத்திற்காக உயிர்கொடுக்கும் நினைவேந்தலிற்கு மீண்டும் உயிர்கொடுத்தார். தமிழுக்காகவும், தமிழ்த் தேசத்திற்காகவும் உயிர்கொடுத்த வீர மறவர்களைக் கெளரவிக்கும் நடைமுறையான நடுகல் நிறுவி வழிபடும் முறையினை பிரபாகரன் மீளவும் கொண்டுவந்தார். தமிழ்ச் சங்க கால இலக்கியங்களில் மக்களையும், போர்வீரர்களையும் உணர்வெழுச்சியுடன் வைத்திருக்க அக்காலத்தில் நடைமுறையில் இருந்த நடுகல் வழிபாட்டினை பிரபாகரனும் பின்பற்றினார். பிரபாகரனின் நடுகல் வழிபாட்டு முறையின் மீள் உருவாக்கம் எதிர்ப்பர்த்ததுபோலவே மக்களிடையே அதீத ஈடுபாட்டினை ஏற்படுத்தியது. மாவீரர்களாகிப்போன போராளிகளின் பெற்றோர், மனைவி, கணவன், பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் உணர்வுகளை மாற்றிப்போட்டது. இழந்த தமது உறவுகளுக்காக இரங்குவது மட்டுமே தம்மால் செய்யக்கூடியது எனும் நிலையிலிருந்து, அவ்வீர மறவர்களின் கெளரவத்திலும், பெருமைகளிலும் பங்குகொள்ளும் மனநிலையினை இது உருவாக்கியது. மாவீரராகிப்போன குடும்பங்கள் புலிகள் இயக்கத்திடம் இருந்து விலகிச் செல்வதற்குப் பதிலாக அவர்களை நோக்கி நெருங்கிவர இந்த மாவீரர் நாட்களும், கெளரவித்தல்களும் வழிசமைத்துக் கொடுத்தன. ஆதி தமிழ்க் கலாசாரத்தில் நடைமுறையில் இருந்த மாவீரருக்கான வணக்கத்தினை ஒட்டுமொத்த மக்களின் உணர்வெழுச்சியுடன் மீட்டுவந்து நிறுத்தியது. இந்த மாவீரர் வழிபாட்டின் உச்ச நிகழ்வாக 2000 ஆம் ஆண்டில் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வினைக் குறிப்பிட முடியும். மாவீரர் கெளரவம் தொடர்பான புலிகளின் பிரச்சாரத்தினைக் கேட்டுக்கொண்டிருந்த பல தாய்மார்கள் உணர்வுப் பெருக்கத்தால் ஆட்கொள்ளப்பட்டு, தமது பிள்ளைகளின் நெற்றியில் திலகமிட்டு, நாட்டிற்காகப் போராடும்படி கூறி புலிகளுடன் அனுப்பிவைத்திருந்தார்கள். ஆதித் தமிழ்க் கலாசாரத்தில் மாவீரராகிப் போன தமது கணவன்மாரின் நிகழ்வில் தமது ஆண்பிள்ளையின் நெற்றியில் சந்தனத்தால் வீரத் திலகமிட்டு போர்க்களத்திற்கு அனுப்பிவைக்கும் தாய்மாரின் செயலினை இது ஒத்திருந்தது. சிங்களவர்களும், தமிழ்க் கலாசாரத்துடன் சம்பந்தப்பட்டிருக்காத இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் மாவீரர்களைக் கெளரவிக்கும் கலாசாரத்தினை விளங்கிக்கொள்ளவோ அல்லது மதிக்கவோ தவறிவிட்டனர். தமிழ்ச் சமூகத்தில் பரவிவந்த ஆரிய இந்துக் கலாசாரம் இந்த மாவீரர் வழிபாட்டு முறையினை சிறுகச் சிறுக மழுங்கடித்து விட்டிருந்தது. ஆனால், தமிழ்க் காலாசாரத்தின் வேரிற்குள் சென்று மீண்டும் மாவீரர் கெளரவிப்பினை பிரபாகரன் மீட்டு வெளியே எடுத்து வந்தார். முதலாவது மாவீரர் நாளில் தலைவர் பிரபாகரன் - 1989 1989 ஆம் ஆண்டு, சங்கல் மரணித்த நாளான கார்த்திகை 27 ஆம் திகதியினை மாவீரர் நாளாக அறிவித்தார் பிரபாகரன். முல்லைத்தீவு மாவட்டத்தின் காட்டுப்பகுதியான நித்திகைக்குளத்தில் ராணுவச் சீருடை அணிந்த 600 ஆண் மற்றும் பெண் போராளிகள் அணிவகுத்து நிற்க அதுவரை தாய்நாட்டின் விடுதலைக்காகவும், தமிழ் இனத்திற்காகவும் தமதுயிரை ஈந்த 1307 மாவீரகளுக்கான வணக்கம் செலுத்தப்பட்டது. போரில் காவியமான மாவீரர்களின் திரு உருவப் படங்கள் நடுகற்களில் வீற்றிருக்க, அவர்களின் பாதங்களின் மீது மலர்கள் தூவப்பட்டு, பிரபாகரன் முதலாவது விளக்கினை ஏற்ற, தொடர்ச்சியாக அனைத்து மாவீரர்களுக்கும் விளக்கேற்றப்பட்டது. ஈகைச் சுடர் ஏற்றல் எனும் மிகவும் இயல்பான இந்த நிகழ்வு இன்று விரிவான, உணர்வுபூர்வமான, ஒட்டுமொத்த மக்களின் உணர்வெழுச்சியுடனான சடங்காக மாறிப்போனது. தான் ஆரம்பித்த மாவீரர் வணக்க நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக போராளிகளால் அனுஷ்ட்டிக்கப்பட்டது கண்டு நெகிழ்ந்த பிரபாகரன் தனது முதலாவது மாவீரர் நாள் உரையினை தனது உணர்வுகளின் குவியலாக எடுத்துரைத்தார். மிகவும் சிறிய பேச்சாக அமைந்த பிரபாகரனின் முதலாவது மாவீரர் நாள் உரை மாவீரர்களை வணங்கும் நிகழ்வு ஏன் அவசியம் என்கிற விளக்கத்தோடு ஆரம்பித்திருந்தது. "எமது போராட்டத்தில் இன்றைய நாள் மிகவும் முக்கியமான நாள். தமிழ் ஈழம் எனும் உயரிய இலட்சியத்தை அடைய தமது இன்னுயிரை அர்ப்பணித்த 1307 மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் நாளாக இந்த மாவீரர் தினத்தினை நாம் உருவாக்கினோம். இன்றே இதனை முதன்முறையாகச் செய்ய ஆரம்பித்திருக்கிறோம். பல நாடுகளில் மரணித்த தமது விடுதலைப் போராளிகளுக்கான கெளரவத்தினை அவர்கள் வழங்கிவருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நாமும் எமது மாவீரர்களை மனதில் நிறுத்தி வணகுவதென்று முடிவெடுத்திருக்கிறோம். எமது இயக்கத்தில் முதலாவது மாவீரரான சங்கரின் நினைவுநாளினை, தாயக விடுதலையில் வித்தாகிப்போன அனைத்து மாவீரகளுக்குமான வணக்க நாளாக இன்றுமுதல் நாம் அனுஷ்ட்டிப்போமாக" என்று கூறினார்.
  4. புலிகளின் முதலாவது மாவீரர் தமது பிரதான வீட்டின் விறாந்தையில் அமர்ந்திருந்த ரஜனி ராஜசிங்கம் , தமது வளவினுள் இராணுவத்தினரின் ஜீப் வண்டியொன்று நுழைவதைக் கண்ணுற்றார். உடனே வீட்டின் பின்புறம் நோக்கி ஓடிச்சென்று தனது மூத்த சகோதரியான நிர்மலாவைப் பார்த்து, "நிர்மலா அக்கா, ஆமி ஜீப்பொன்று வருகிறது" என்று கத்தினார். தனது சகோதரியைப் பற்றி நன்கு அறிந்துவைத்திருந்த ரஜனி, அக்கணத்தில் வீட்டினுள் புலிகளின் போராளியான சங்கரும் இருந்ததை அறிந்திருந்தார். நிர்மலாவின் பராமரிப்பில் இருந்துவந்த சீலனை தாம் பத்திரமாக தமிழ்நாட்டிற்கு அனுப்பிவைத்துவிட்டோம் எனும் தகவலைச் சொல்வதற்காக சங்கர் நிர்மலாவின் வீட்டிற்கு அப்போது வந்திருந்தார். மேலும், தன்னை பல நாட்களாக தமது வீட்டில் தங்க வைத்து, அக்கறையுடன் பார்த்துக்கொண்டதற்காக நிர்மலாவிற்கும், நித்தியானந்தனிற்கும், ரஜனிக்கும் தனது நன்றியைத் தெரிவித்து விடுமாறு சீலன் சங்கரைக் கேட்டிருந்தார், ஆகவேதான் சங்கர் அன்று நிர்மலாவின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். சங்கர் நிர்மலாவின் வீட்டிற்கு வந்த நேரம் மதியமாதலால், அவரை தம்முடன் மதிய உணவில் கலந்துகொள்ளுமாறு நிர்மலா கேட்டிருந்தார். "இன்று நான் கோழிக்கறி சமைத்திருக்கிறேன். அதைச் சாப்பிட்டு விட்டு உங்களின் தலைவரின் கோழிக்கறி போல் சுவையானதா என்று கூறுங்கள்" என்று நிர்மலா சங்கரிடம் வேடிக்கையாகக் கூறினார். ஏனென்றால், பிரபாகரனின் கோழிக்கறி பற்றி சீலன் பல தடவைகள் நிர்மலாவிடம் பேசியிருக்கிறார். நிர்மலா, சங்கரின் உணவுக் கோப்பையில் இரு கோழிக்கறித் துண்டுகளைப் பரிமாறியிருந்தார். முதலாவது துண்டினை சங்கர் சுவைக்க ஆரம்பிக்கும்போதே ராணுவத்தின் வருகை தொடர்பான ரஜனியின் கூக்குரல் அவர்களுக்குக் கேட்டது. உடனே சுதாரித்துக்கொண்ட சங்கர், பின்கதவூடாக வெளியேறி மதில் நோக்கி ஓடுகையிலேயே வீட்டின் பின்புறமாக ஓடிவந்த ராணுவக் கொமாண்டோ வீரனின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானார். அவரது வயிற்றுப் பகுதியில் சன்னம் பாய்ந்தது. வயிற்றில் ஏற்பட்ட காயத்திலிருந்து இரத்தம் ஓடிக்கொண்டிருக்க, அதனை ஒரு கையினால் அழுத்துப் பிடித்துக்கொண்ட சங்கர் ஓடத் தொடங்கினார். சுமார் மூன்று கிலோமிட்டர்கள் வரை ஓடி, தமது மறைவிடம் ஒன்றினுள் அடைக்கலமாகியபின்னர் தனது கைத்துப்பாக்கியை சகபோராளிகளிடம் கொடுத்துவிட்டு மயங்கிச் சரிந்தார் சங்கர். எதிரியிடம் உயிருடன் பிடிபட்டுவிடக்கூடாதெனும் உறுதியும், தனது ஆயுதத்தை உயிரைக் கொடுத்தாவது காத்துக்கொள்ள வேண்டும் என்கிற இயக்கத்தின் கொள்கையும் சங்கரை ஆட்கொள்ள கடுமையான இரத்த இழப்பிற்கூடாகவும் அவர் மிகுந்த சிரமங்களைத் தாங்கி தனது சகாக்களிடம் வந்து சேர்ந்திருந்தார். சங்கரின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. ஆகவே, அவரைப் பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்குக் கூட்டிச்சென்று மருத்துவ உதவியினைப் பெற்றுக்கொடுக்கும் சிரமமான பணி மூத்த போராளியான அன்டன் எனப்படும் சிவகுமாருக்குக் கொடுக்கப்பட்டது. அன்டன், சங்கரை தமிழ்நாட்டின் கோடியாக்கரை எனும் போராளிகளுக்கு மிகவும் பரீட்சயமான பகுதிக்கு படகுமூலம் பாதுகாப்பாகக் கொண்டுசென்றார். அங்கு, புலிகளின் மறைவிடம் ஒன்றில் தங்கவைக்கப்பட்ட சங்கருக்கு மருத்துவ உதவிகளை மருத்துவர் ஒருவரூடாகப் பெற்றுக்கொடுத்தார். பின்னர், மதுரைக்கு உடனடியாக சங்கரை அழைத்துச் சென்ற அன்டன், மதுரை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தார். மதுரையில் சங்கரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவித்தனர். புலிகளின் பயிற்சி முகாம்கள் ஒன்றில் அப்போது தங்கியிருந்த பிரபாகரனுக்கு சங்கரின் நிலைபற்றி அறிவிக்கப்பட்டது. உடனடியாக சங்கரைப் பார்க்க வந்தார் அவர். சங்கர் பராமரிக்கப்பட்டு வந்த மருத்துவமனை அறையினுள் பிரபாகரன் நுழையும்போது பேபி சுப்பிரமணியமும் அங்கிருந்தார். இந்தச் சம்பவம் குறித்து மிகவும் துல்லியமாக அவர் என்னுடன் பின்னர் பேசியிருக்கிறார். பிரபாகரன் மிகவும் மனவேதனையுடன் காணப்பட்டார். சங்கரின் கைகளை தனது கைகளில் ஏந்திக்கொண்ட பிரபாகரன், அவற்றினை தனது கன்னங்களில் வைத்து அழுத்தினார். பின்னர் சங்கரின் கைகளை மெதுவாக அவரருகில் வைத்துவிட்டு, அவரின் தலைமாட்டில் அமர்ந்துகொண்டு, சங்கரின் தலையினை தனது மடியில் தூக்கி வைத்துக்கொண்டார். சங்கரின் தலைமுடியினை மென்மையாக பிரபாகரன் வருடிக்கொண்டிருக்க, சங்கர் அண்ணாந்து பிரபாகரனைப் பார்த்தார். தனது தலைவர் தன்னைப் பார்க்க வந்திருப்பதை சங்கர் அப்போதுதான் உணர்ந்துகொண்டார். சங்கரின் உதடுகள் "தம்பி, தம்பி, தம்பி" என்று முணுணுக்கத் தொடங்கின. பிரபாகரனுக்கு இயக்கத்தினுள் இருந்த செல்லப்பெயர் "தம்பி". ஆனால், அவரிலும் வயதில் குறைந்தவர்கள் கூட அவரைச் செல்லமாகத் தம்பி என்றே அழைத்தனர். சங்கர் பிரபாகரனைக் காட்டிலும் 6 வருடங்கள் இளையவர். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை நேரில் பார்த்த இன்னொருவர் நெடுமாறன். இச்சம்பவம் தொடர்பான தத்ரூபமான விபரிப்பினை அவர் பல செவ்விகளிலூடாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். அப்படியான ஒரு செவ்வியில், "அவர்கள் ஒருவரையொருவர் பாசத்துடன் பார்த்துக்கொண்டார்கள். அந்தப்பொழுதில் அவர்களின் மனங்களில் எவ்வாறான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன என்பதை இலகுவில் கணித்துவிடமுடியாதிருந்தது. சங்கரை மிகவும் இரக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்த பிரபாகரனின் முகம் கூறிய ஒரே செய்தி, தயவுசெய்து எம்மை விட்டுப் பிரிந்துவிடாதே என்பதாக எனக்குத் தெரிந்தது" என்று அவர் கூறியிருக்கிறார். பிரபாகரனின் உடல்மொழி அவர் மிகவும் வருத்தத்துடன் இருந்தார் என்பதைச் சொல்லியது. தனது முதலாவது போராளியின் மரணத்தை காண்பது அவரை மிகவும் வருத்தியிருந்தது. வெறும் 22 வயதே நிரம்பியிருந்த இளைஞர், வாழ்வின் சுகபோகங்களை தேசத்தினதும், இனத்தினதும் மீட்சிக்காகவும் கெளரவத்திற்காகவும் தியாகம்செய்து இன்று உயிரையும் கொடுக்கும் நிலையில் இருப்பதைக் கண்டு பிற்பாகரன் மிகவும் மனமுடைந்து போயிருந்தார். பிரபாகரனின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து அவரது கன்னங்களின் மேல் ஓடியது. சங்கரின் உயிர்விளக்குச் சிறுகச் சிறுக அணைந்துகொண்டிருந்தது.
  5. நேரம் இப்ப இரவு ஒண்டரை......
  6. சீலன் பற்றிய தகவல்களை எமக்கு வழங்கியது கத்தோலிக்க மதகுரு ஆபரணம் சிங்கராயரே - கப்டன் முனசிங்க கத்தோலிக்க மதகுருக்களுக்கெதிரான உறுதியான ஆதாராங்களைப் பெற்றுக்கொண்ட பின்னர், அவர்கள் பணிபுரிந்த ஆலயங்களையும், தங்கியிருந்த விடுதிகளையும் சோதனையிடுவதற்கான அனுமதியினை பாதுகாப்பு அமைச்சிடமிருந்து இராணுவத்தினரும் பொலீஸாரும் பெற்றுக்கொண்டனர். பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியும், இராஜாங்க அமைச்சராக வீரப்பிட்டியவும் இத்தேடுதல் நடவடிக்கைகளினால் கத்தோலிக்க மக்களிடையே அதிருப்தி ஏற்படாது இருக்கத் தேவையானவற்றைச் செய்ய எத்தனித்தனர். ஆகவே, இத்தேடுதல் நடவடிக்கைகளுக்கு தகுந்த சூழ்நிலையினை மக்களின் மனங்களில் விதைக்கும் பொறுப்பு லேக் ஹவுஸ் பத்திரிக்கையான டெயிலி நியூஸிடம் கொடுக்கப்பட்டது. மேலும், அவர்களைக் கைதுசெய்வதற்கான சூழ்நிலையும் ஒரேவேளையில் உருவாக்கப்பட்டு வந்தது. இதன் முதற்படியாக, குறிப்பிட்ட சில கத்தோலிக்கக் குருக்கள் யாழ்க்குடாநாட்டில் புலிகளின் செயற்பாடுகளுக்கு உத்வேகமான பங்களிப்பினை வழங்கிவருவதாக செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டது. இச்செய்தியினைத் தொடர்ந்து இம்மதகுருக்களின் ஆலயங்களையும், விடுதிகளையும் சோதனையிடும் நடவடிக்கைகள் குறித்து பொலீஸாரும், இராணுவத்தினரும் சிந்தித்து வருகிறார்கள் என்றும் செய்தி பரப்பப்பட்டது. இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக பத்திரிக்கையில் வாசகர்கள் கருத்து எனும் பெயரில் அரசின் திட்டமிட்ட பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இவ்வாறான "வாசகர்" கருத்துக்களில் பெரும்பாலானவை அம்மதகுருக்களைக் கைதுசெய்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தன. இவ்வாறான ஒரு வாசகர் கடிதத்தில், "சட்டத்தின் முன்னால் அனைவரும் சமமே, மதகுருக்கள் உட்பட" என்று எழுதப்பட்டிருந்தது. தமிழ்க் கத்தோலிக்க மதகுருக்களுக்கெதிரான உணர்வுகளை மக்களிடையே தூண்டிவிட்டபின்னர் அவர்களைக் கைதுசெய்யும் அனுமதியினைப் பாதுகாப்பு அமைச்சு வழங்கியது. ஆனால், கைது நடவடிக்கைகளும், தேடுதல்களும் கத்தோலிக்க மக்களின் உணர்வுகளைப் பாதிக்காத வண்ணம் நிகழ்த்தப்படவேண்டும் என்று பொலீஸாரும் இராணுவத்தினருக்கும் அறிவுருத்தப்பட்டது. இதன்படி, கத்தோலிக்கப் பாதிரியாரான ஆபரணம் சிங்கராயர் அவர்களின் ஆலயமான கரையூரில் அமைந்திருந்த அமல உற்பவம் எனும் ஆலயத்தில் முதலாவதாகச் சோதனையினை நடத்துவதென்றும், இச்சோதனைக்கு கத்தோலிக்க ராணுவ அதிகாரி ஒருவரை பொறுப்பாக நியமிக்கலாம் என்றும் இராணுவத்தால் தீர்மானிக்கப்பட்டது. பொலீஸ் அதிகாரிகள் வட்டத்தில் ஒரே ஒருவர் மட்டுமே கத்தோலிக்கராக இருந்தார், அவர் ஒரு உப பொலீஸ் அத்தியட்சகர். ஆரம்பத்தில் அவ்வதிகாரியை சோதனையிடும் குழுவிற்கு தலைமைதாங்குவதைப் பலர் எதிர்த்தபோதும், அவர் தலைமையிலேயே சோதனை இடம்பெற்றது. பாதிரியார் சிங்கராயருக்கும் புலிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதற்கான ஆதாரங்கம் தம்மிடம் கிடைத்திருப்பதாக இராணுவத்தினர் கூறினர். கார்த்திகை 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட சிங்கராயர் குருநகர் இராணுவ முகாமிற்கு விசாரணைக்காக இழுத்துச் செல்லப்பட்டார். மறுநாள் நெடுந்தீவு புனித் யோவான் ஆலயம் சோதனையிடப்பட்டதுடன் அவ்வாலயத்தின் பங்குத் தந்தையான பாதிரியார் பிலிப் அன்டன் சின்னையா கைதுசெய்யப்பட்டார். விசாரணைக்காக அவரையும் இராணுவம் குருநகர் ராணுவ முகாமிற்கு இழுத்துச் சென்றது. மதகுருக்களைக் கைதுசெய்த விடயம் மக்களிடையே ஆத்திரத்தினை ஏற்படுத்தவே ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் ஏற்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான மாணவர்கள், மதகுருக்கள், கன்னியாஸ்த்திரிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன் உண்ணாவிரத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர். யாழ்ப்பாண ஆயராக இருந்த தியோகுப்பிள்ளை தனது கடுமையான கண்டனத்தை ஜனாதிபதிக்குத் தெரிவித்திருந்தார். தியோகுப்பிள்ளை 1982 ஆம் ஆண்டு கார்த்திகை 18 ஆம் திகதியளவில் பாதிரியார் சிங்கராயரிடமிருந்து வாக்குமூலத்தினைப் பொலீஸார் முழுதாகப் பெற்றுக்கொண்டனர். சிங்கராயருடன் நீண்டநேரம் முனசிங்க மறுநாள் உரையாடியிருந்தார். அவ்வுரையாடலின்போது தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் குறித்தும், கிராமப்புறங்களில் இளைஞர்கள் எதிர்நோக்கும் கஷ்ட்டங்கள் குறித்தும் முனசிங்கவிடம் பேசியிருந்தார் சிங்கராயர். நள்ளிரவு வரை இந்த சம்பாஷணைகள் இடம்பெற்றிருந்தன. முக்கியமான தகவல் "மறுநாள் காலை என்னுடம் பேசவேண்டும் என்று சிங்கராயர் கூறியிருந்தார். நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது, அவர் நடுங்கிக்கொண்டிருந்தார். நான் உங்களிடம் ஒரு விடயத்தைக் கூறவேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார். நான் அவரை ஆசுவாசப்படுத்தினேன். அவர் கதிரையில் அமர்ந்துகொண்டார். எனது கைகளை இறுகப் பற்றிக்கொண்ட அவர் பேசத் தொடங்கினார். அவரது உடலில் இன்னமும் நடுக்கம் தெரிந்தது". "மெதொடிஸ்த்த மதகுருவான ஜயதிலகராஜாவின் சகோதரரான மருத்துவர் ஜயகுலராஜாவே இன்றுவரை சீலனுக்கு மருத்துவ சிக்கிச்சையினை வழங்கிவருகிறார்" என்று அவர் என்னிடம் கூறினார். நான் அவரிடம் அந்த விலாசத்தினைக் கேட்க அவரும் அதனை என்னிடம் கூறினார்" என்று முனசிங்க என்னிடம் கூறினார். "அது எனக்குப் போதுமானதாக இருந்தது. இந்த விசாரணைகளில் ஒரு திருப்புமுனையாக சிங்கராயர் வழங்கிய தகவல் அமைந்திருந்தது" என்று முனசிங்க கூறினார். "நான் உடனடியாகவே அச்செழுவில் அமைந்திருந்த மெதொடிஸ்த்த ஆலயத்திற்கு இன்னும் ஒரு அதிகாரியையும், இரு ராணுவ வீரர்களையும் அழைத்துக்கொண்டு சென்றேன். நாங்கள் சிவில் உடையிலேயே இருந்தோம். மதகுரு ஜயதிலகராஜா அங்கிருக்கவில்லை. பின்னர் அங்கிருந்து புத்தூரில் அமைந்திருந்த புனித லூக்கு தேவாலயத்திற்கு நாம் சென்றபோது வைத்தியர் ஜயகுலராஜா அங்கிருந்தார். அவர் தனது காரினைக் கழுவிக்கொண்டிருந்தார். எம்மைக் கண்டதும் அவர் பதற்றமடைந்தார். "நீங்கள் பொலீஸிலிருந்து வருகிறீர்களா?" என்று எங்களைப் பார்த்துக் கேட்டார். நாங்கள் இராணுவத்தினர் என்று கூறவும், அவரது பயம் இரட்டிப்பானது". "நான் நேராகவே அவரிடம் கேட்டேன், "நீங்கள் சீலனுக்கு சிகிச்சையளித்து வருகிறீர்களா?" "ஆம் என்று ஒத்துக்கொண்ட வைத்தியர் ஜயகுலராஜா, தனது சகோதரனான பாதிரியார் ஜயதிலகராஜாவினாலேயே சீலனுக்கு சிகிச்சையளிக்க வேண்டி ஏற்பட்டதாக அவர் கூறினார்". "இப்போது சீலன் எங்கே?" என்று முனசிங்க அவரைப் பார்த்துக் கேட்டார். "அவர் சிகிச்சைக்காக தமிழ்நாட்டிற்குச் சென்றுவிட்டார்" என்று வைத்தியர் ஜயகுலராஜா பதிலளித்தார். "ஏனைய காயப்பட்டவர்கள்?" என்று முனசிங்க அவரிடம் மீண்டும் கேட்டார். "அவர்களையும் இந்தியாவிற்கு சிகிச்சைக்காக அனுப்பி விட்டார்கள், அவர்களின் பெயர்கள் புலேந்திரனும், ரகுவும் ஆகும்" என்று வைத்தியர் பதிலளித்தார். "சீலன் இந்தியாவுக்குச் செல்லுமுன் எங்கே தங்கியிருந்தார்" என்று முனசிங்க வைத்தியரிடம் கேட்டார். "புலிகளின் அனுதாபிகள் என்று அறியப்பட்ட ஒரு குடும்பத்துடன் அவர் தங்கியிருந்தார்" என்று வைத்தியர் பதிலளித்தார். மேலும் நேரத்தை விரயமாக்குவதைத் தவிர்க்க எண்ணிய முனசிங்க இரு சகோதரர்களையும் இழுத்துச் சென்று விசாரிக்க முடிவெடுத்தார். தன்னுடன் வந்திருந்த அதிகாரியையும், ஒரு ராணுவ வீரரையும் வைத்தியரின் காரினை ஓட்டிவருமாறு பணித்துவிட்டு, தனது ஜீப்பில் வைத்தியரை ஏற்றிக்கொண்டு அச்செழுவில் அமைந்திருக்கும் மெதொடிஸ்த்த ஆலயத்திற்குச் சென்றார் முனசிங்க. அச்செழுவில் ஆலயத்தின் பின்னால் அமைந்திருந்த மதகுருவின் விடுதிக்குச் சென்று தாம் ராணுவத்திலிருந்து வந்திருப்பதாக முனசிங்க கூறவும் மதகுரு ஜயதிலக ராஜா அதிர்ந்த்து போனார். "என்னை எதற்காகச் சந்திக்க வந்தீர்கள்?" என்று பாதிரியார் முனசிங்கவைப் பார்த்துக் கேட்டார். "புலிகளுடனான உங்களின் தொடர்புபற்றி விசாரிக்கவே வந்திருக்கிறேன்" என்று முனசிங்க பதிலளித்தார். புலிகளுடன் தனக்கு தொடர்புகள் எதுவும் இல்லையென்று பாதிரியார் ஜயதிலகராஜா மறுத்தார். மேலும், காயப்பட்ட மூன்று புலிகளுக்கும் தான் மருத்துவ சிகிச்சையளிக்க உதவியதாக ராணுவத்தினர் கூறிய குற்றச்சட்டையும் அவர் மறுத்தார். இது நடந்துகொண்டிருக்கும்போது மற்றைய ராணுவத்தினருடன் அங்கு வந்துசேர்ந்த அவரது சகோதரரான வைத்தியர் ஜயகுலராஜா, தனது சகோதரனைப் பார்த்து ராணுவத்திடம் உண்மையைக் கூறும்படி அறிவுருத்தினார். "நான் அவர்களிடம் எல்லா உண்மைகளையும் கூறிவிட்டேன், நீங்களும் அப்படியே செய்யுங்கள்" என்று தனது சகோதரனுக்கு அறிவுரை கூறினார் வைத்தியர். இதன்பின்னர் மதகுரு ஜயதிலகராஜா உண்மையைக் கூறினார். மாத்தையாவையும் இன்னும் சில புலிப்போராளிகளையும் தனக்கு சிலகாலமாகத் தெரிந்திருந்ததாகவும், ஆகவேதான் காயப்பட்ட போராளிகளை மாத்தையா தன்னிடம் அழைத்துவந்தபோது தான் அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் ஒழுங்குகளை தனது சகோதரரூடாக மேற்கொண்டதாக அவர் கூறினார். மேலும், ரகுவையும் புலேந்திரனையும் சிறிய சிக்கிச்சைகளுக்குப் பின்னர் புலிகளின் முகாமிற்கு தனது சகோதரரான வைத்தியர் அனுப்பிவிட்டதாகவும், சீலனைத் தொடர்ந்தும் சிகிச்சையளித்துப் பராமரிக்க தனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்றுடன் வைத்துக்கொண்டதாகவும் கூறினார். அதன்பின்னர், சீலனை வைத்துப் பராமரித்துவந்த குடும்பம் பற்றி சகோதரர்களிடம் விசாரித்தார் முனசிங்க. பாதிரியார் ஜயதிலகராஜா அக்குடும்பத்தின் பெயர்களையும் விலாசத்தினையும் முனசிங்கவிடம் கொடுத்தார். அக்குடும்பத்தின் பெயர் நிர்மலா நித்தியானந்தன் என்றும் அவர்கள் நல்லூரில் வசித்துவருவதாகவும் பாதிரியார் கூறினார். பின்னர் அக்குடும்பத்தின் விலாசமான 330, நாவலர் வீதி, நல்லூர் என்பதையும் பாதிரியார் முனசிங்கவிடம் கொடுத்தார். உடனடியாக குருநகர் முகாமிற்கு தொலைபேசியூடாக அழைப்புவிடுத்த முனசிங்க, மேலதிகப் படையினரை வருமாறு அழைத்தார். சுமார் 45 நிமிடங்களின் பின்னர் ராணுவ அதிகாரியும், ராணுவக் கொமாண்டோ வீரர்கள் சிலரும் ஜீப் வண்டியில் வந்திறங்கினர். முனசிங்க தன்னுடன் பாதிரியார் ஜயதிலகராஜாவை ஜீப்பில் அழைத்துக்கொண்டு நல்லூரில் அமைந்திருந்த நிர்மலா நித்தியானந்தனின் வீட்டிற்குச் சென்றார். முதலாவது ஜீப் வண்டியில் இரு ராணுவ வீரர்களுக்கு நடுவில் பாதிரியார் அமர்த்தப்பட்டிருந்தார். இரண்டாவது ஜீப் வண்டியில் மேலதிக ராணுவ வீரர்கள் அவர்களைப் பிந்தொடர்ந்து பயணித்தனர். "நான் முன்னால் சென்றேன். நாம் நாவலர் வீதியை அடைந்தவுடம் பாதிரியார் ஜெயதிலகராஜா நிர்மலாவின் வீட்டினைக் காட்டினார். நான் ஜீப்பிலிருந்து இறங்கி வீட்டின் கேட்டினைத் திறந்தேன். எனது கொமாண்டோ வீரர்கள் சிரமமின்றி வீட்டினுள் நுழையும்வகையில் இரு கேட்டுக்களையும் நான் அகலத் திறந்துவிட்டேன். வாயிலில் இருந்து தொலைவாகவும், சிறிய வீட்டின் அருகிலுமாக எனது ஜீப் வண்டியை நான் நிறுத்திக்கொண்டேன். பின்னால் வந்த கொமாண்டோ அணியின் வாகனம் வந்துசேர்வதற்கு சில நேரம் எடுத்தது. அவ்வீட்டினை கொமாண்டோக்கள் சுற்றிவளைத்துக்கொண்டனர். ஒரு வீரர் சிறிய வீட்டின் பின்கதவு நோக்கி ஓடிச்சென்றார். கையில் துப்பாக்கியை ஏந்தியபடி நான் அவரின் பின்னால் விரைந்தேன். சிறிய வீட்டின் பின்கதவினூடாக ஒருவர் தப்பியோடுவதற்கு எத்தனிப்பதை நான் கண்டேன். என்னுடன் நின்ற கொமாண்டோ வீரர் தான் வைத்திருந்த MP5A3 துப்பாக்கியால் தப்பிச்செல்ல முயன்ற நபர் மீது சுட்டார். ஓரிரு வேட்டுக்கள் அந்தநபர் மீது பட்டிருக்கவேண்டும், ஆனாலும் அவர் தப்பிவிட்டார்" என்று முனசிங்க என்னிடம் கூறினார். MP5A3 - தானியங்கித் துப்பாக்கி
  7. சாவகச்சேரி பொலீஸ் நிலையத் தாக்குதல் சீலன் இராணுவ புலநாய்வுத்துறையினரின் செயற்பாடுகளை ஜெயார் கடுமையாக விமர்சித்திருந்தபோதிலும், 1981 ஆம் ஆண்டிலிருந்து பிரிகேடியர் சிறில் ரணதுங்கவின் தலைமையின் கீழ் இயங்கிவந்த புலநாய்வுத்துறை திறமையாகவே செயற்பட்டு வந்தது. புலநாய்வுத்துறையினை சீரமைக்க கப்டன் முனசிங்கவை சிறில் ரணதுங்க யாழ்ப்பாணத்திற்கு வரவழைத்திருந்தார். கைதுசெய்யப்பட்டிருந்த மூத்த புளொட் உறுப்பினர்கள் மூலம் பெருமளவு தகவல்களை புலநாய்வுத்துறை பெற்றிருந்தது. தமக்குத் தகவல்களை வழங்கும் புளொட் உறுப்பினர்களுடன் மிகவும் சிநேகமாக சிறில் ரணதுங்க நடந்துகொண்டார். ஜெயவர்த்தன யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, மூன்று மூத்த புளொட் உறுப்பினர்களை யாழ் குருநகர் முகாமில் ராணுவம் தடுத்து வைத்திருந்தது. அவர்கள் மூவரும் அன்டன், அரங்கநாயகம், அரபாத் ஆகியோராகும். தாம் பங்கெடுத்த கொலைகள், கிளிநொச்சி மக்கள் வங்கி உட்பட வங்கிக்கொள்ளைகள் பற்றிய பல விபரங்களை இவர்கள் மூவரும் ராணுவத்திற்கு வழங்கியிருந்தனர். தனது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தின் பூஞ்செடிகளைப் பராமரிப்பதற்கு இவர்கள் மூவரையும் சிறில் ரணதுங்க பாவித்து வந்தார். ஐப்பசி 26 ஆம் திகதி, ரணதுங்கவின் பூந்தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த தருணம் இவர்கள் மதின்மேல் ஏறித் தப்பிச் சென்றிருந்தார்கள். ஆனால், அன்டனும் அரங்கநாயகமும் மூன்று மணிநேரத்தில் பொலீஸாரால் மீண்டும் கைதுசெய்யப்பட்டபோதும் அரபாத் தப்பிச் சென்றுவிட்டார். அன்றிரவு குருநகர் முகாமில் ராணுவ உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றினை நடத்திவிட்டுக் காலை 5:30 மணியளவில் கலைந்து செல்லும் தறுவாயில் அவர்களுக்குச் செய்தியொன்று வந்திருந்தது. சாவகச்சேரி பொலீஸ் நிலையம் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டிருப்பதாக அச்செய்தி கூறியது. ஆகவே, அரபாத்தைக் கைதுசெய்யும் தமது எண்ணத்தை அப்போதைக்குத் தள்ளிவைத்துவிட்டு அனைவரும் சாவகச்சேரி நோக்கி விரைந்தார்கள். அவர்கள் அங்கு வந்து சேர்வதற்கிடையில், சீலன் தலைமையில் சாவகச்சேரி பொலீஸ் நிலையம் மீது தாக்குதலை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தாம் வந்த மினிபஸ்ஸிலேயே தப்பிச் சென்றுவிட்டது புலிகளின் தாக்குதல் அணி. இத்தாக்குதலை விசாரித்த பொலீஸாரும் ராணுவத்தினரும் இத்தாக்குதல் மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டு, வெறும் 15 நிமிடங்களிலேயே திறமையாக நடத்தி முடிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார்கள். கார்த்திகை 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த உத்தரதேவி ரயிலில் மீசாலையில் ஏறிக்கொண்ட அரபாத்தை பணிமுடிந்து வீடு செல்லும் ராணுவத்தினர் கைதுசெய்தனர். அன்டனும், அரங்கநாயகமும் 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலையின்போது சிறை அதிகாரிகளால் கொல்லப்பட்டனர். சாவகச்சேரி பொலீஸ் நிலையம் இரு மாடிகளைக் கொண்டது. சாவகச்சேரியூடாகச் செல்லும் பிரதான வீதியான கண்டி வீதியில் இப்பொலீஸ் நிலையம் அமைந்திருந்தது. 1981 ஆம் ஆண்டு ஆடி 27 ஆம் திகதி ஆனைக்கோட்டை பொலீஸ் நிலையம் புளொட் அமைப்பினரால் தாக்கப்பட்டதையடுத்து யாழ்ப்பாணத்திலிருந்த அனைத்து பொலீஸ் நிலையங்களுக்கும் இரவு பகலாகக் காவல் போடப்பட்டிருந்தது. ஐப்பசி 27 ஆம் திகதி இரவு இரு கொன்ஸ்டபிள்களான கருனநாதனும், கந்தையாவும் காவலுக்கு நின்றார்கள். அவர்கள் இருவரிடமும் ரிப்பீட்டர் ரக துப்பாக்கிகளே இருந்தன. ரிப்பீட்டர் ரக துப்பாக்கி இத்தாக்குதலுக்கான திட்டத்தினை சீலன் மிகவும் திறமையாக வகுத்திருந்தார். இப்பொலீஸ் நிலையத்திற்கு இருமுறை சென்றிருந்த சீலன், பொலீஸ் நிலையத்தின் உள்ளமைப்பையும், கட்டிடங்களின் விபரங்களையும் அவதானித்திருந்தார். பொலீஸ் நிலையத்தில் பணிபுரிந்துவந்த சிவிலியன் ஒருவரின் ஊடாக ஆயுதங்களையும் தொலைத்தொடர்புக் கருவிகளையும் பாதுகாப்பாக வைக்கும் பகுதிபற்றிய விபரங்களையும் அவர் அறிந்துகொண்டார். சந்தோசமும் புலேந்திரனும் "தாக்குதலுக்கான எமது இலக்கு நோக்கி நாம் செல்லுமுன், பொலீஸ் நிலையம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் நன்கு தெரிந்து வைத்திருந்தோம். எமது தாக்குதல் அணியை இரு பிரிவுகளாகப் பிரித்துக்கொண்ட நாம், ஒவ்வொரு பிரிவுக்கும் கொடுக்கப்பட்ட வேலையைச் சரிவரச் செய்துமுடித்தோம். எனக்கும் சங்கருக்கும் வழங்கப்பட்ட பணி பொலீஸார் தங்கியிருக்கும் பொலீஸ் நிலையத்தின் பிற்பகுதிக்குச் சென்று அங்கிருக்கும் பொலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்துவது" என்று இத்தாக்குதலில் பங்குகொண்டவரும் எனது ஊரான அரியாலையினைச் சொந்த இடமாகவும் கொண்டவருமான சந்தோசம் என்னிடம் கூறினார். அவரது தந்தையாரான கணபதிப்பிள்ளை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தவர். சீலனும் ரகுவும் இணைந்து ஒரு அணியை உருவாக்கினார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி, காவலுக்கு நிற்கும் பொலீஸார் மீது தாக்குதல் நடத்துவது, முதலாவது மாடியில் இருக்கும் தொலைத் தொடர்புக் கருவிகளை அழிப்பது பின்னர் பொலீஸாரின் உறங்கும் விடுதியில் இருக்கும் பொலீஸ்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவது. சந்தோசமும் சங்கரும் பொலீஸ் நிலையத்தின் பிற்பகுதியில் பொலீஸாரின் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. பஷீர் காக்கவுக்கும், மாத்தையாவுக்கும் கொடுக்கப்பட்ட பணி, பொலீஸ் நிலையத்தின் ஆயுதக் களஞ்சியத்தை உடைத்து அங்கிருக்கும் ஆயுதங்களைக் கைப்பற்றுவது. புலேந்திரனுக்கும் அருணாவுக்கும் வழங்கப்பட்ட பணி, கைப்பற்றப்பட்ட ஆயுதங்களையும், காயப்பட்ட போராளிகளையும் வாகனத்திற்குக் கொண்டுவருவது. "நாங்கள் அனைவரும் நன்கு பராமரிக்கப்பட்ட இயந்திரம் ஒன்றைப்போல் ஒருங்கிணைந்து இயங்கினோம்" என்று சந்தோசம் கூறினார். 29 சிறி 7309 எனும் இலக்கத் தகடுடைய மிட்சுபிஷி ரோசா மினி பஸ்ஸை அருணாவும் புலேந்திரனும் ஒழுங்குசெய்திருந்தார்கள். ஐப்பசி 25 ஆம் திகதி கோப்பாயில் வசித்துவந்த பஸ் ஓட்டுநரான தவராஜாவைச் சந்தித்துப் பேசிய அவர்கள், ஐப்பசி 27 ஆம் திகதி தில்லையம்பலம் கோயிலிக்குச் செல்வதற்காக பஸ் ஒன்று தேவைப்படுவதாகக் கூறியதுடன், முற்பணமாக 100 ரூபாய்களைக் கொடுத்துவிட்டு இருபாலையில் இருக்கும் வீடொன்றிற்கு தம்மை வந்து ஏற்றும்படியும் கூறிவிட்டுச் சென்றார்கள். தாக்குதல் நடைபெற்ற மறுநாள் இராணுவ புலநாய்வுத்துறையினரால் கைதுசெய்யப்பட்ட தவராஜா பேசும்போது, தன்னிடம் வந்து பஸ்ஸை ஒழுங்குசெய்தவர்கள் கூறியபடி இருபாலையில் இருந்த வீடொன்றிற்கு தானும் தனது உதவியாளர்களும் சென்றபோது, அங்கிருந்த இளைஞர்கள் தம்மை இன்னொரு வீட்டிற்கு அழைத்துச் சென்று அடைத்துவைத்ததாகக் கூறினார். மேலும், அவர்களின் கண்களைக் கட்டிய புலிகள், அன்றிரவு கோப்பாய்ப் பகுதிக்கு அழைத்துச் சென்று வீதியில் இறக்கிவிட்டுச் சென்றதாகவும் அவர் கூறினார். சாவகச்சேரித் தாக்குதலுக்காக எட்டுப் புலிகள் பயணமானார்கள். சீலன், மாத்தையா, அருணா, சங்கர், புலேந்திரன், ரகு, சந்தோசம் மற்றும் பஷீர் காக்கா ஆகிய எண்மருமே அவர்களாவர். அவர்களிடம் ஒரு எஸ் எம் ஜி துப்பாக்கியும், ஒரு ஜி 3 துப்பாக்கியும், ஒரு ரிப்பீட்டர் துப்பாக்கியும், இரு சுழற்துப்பாக்கிகளும் சில கைய்யெறிகுண்டுகளும் மாத்திரமே இருந்தன. எஸ் எம் ஜி துப்பாக்கி ஜி 3 துப்பாக்கி காலை 5:30 மணியளவில் அவர்கள் பயணம் செய்த மின்பஸ் சாவகச்சேரி பொலீஸ் நிலையப் பகுதியை அடைந்தது. பொலீஸ் நிலையத்தின் முன்னால் பஸ் வந்ததும், தனது வேகத்தைக் குறைத்துக்கொண்டது. பஸ்ஸிலிருந்து குதித்த சீலனும் ரகுவும் காவலுக்கு நின்ற கொன்ஸ்டபிள்கள் மீது தாக்குதல் நடத்தினர். கருனநந்தன் அவ்விடத்திலேயே விழுந்து உயிர்விட்டார். ஆனால், சில மீட்டர்கள் பின்னால் ஓடிச்சென்ற கந்தையா, முழங்காலில் இருந்து தனது ரிப்பீட்டர் துப்பாக்கியால் புலிகள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினார். ஆனால், அவரை முந்தி ஓடிச்சென்ற புலிகளின் உறுப்பினர் ஒருவர் அவர்பக்கம் திரும்பி அவரைச் சுட்டுக் கொன்றார். சீலனும், ரகுவும் பொலீஸ் நிலையத்தின் முதலாவது மாடிக்கு ஓடிச் சென்றார்கள். அங்கிருந்த தொலைத் தொடர்புக் கருவிகளை அவர்கள் அழித்தார்கள். பின்னர், மாடியில் இருந்த பொலீஸாரின் தூங்கும் அறைக்குச் சென்றார்கள். அவ்வேளை அங்கு 6 பொலீஸார் இருந்திருக்கிறார்கள். கட்டிலின் கீழே ஒளித்திருந்த பொலீஸ் சாரதி திலகரத்னமீது சீலன் துப்பாக்கிச் சூடு நடத்தினார். தாக்குதல் ஆரம்பமானதையடுத்து மாடியிலிருந்து குதித்துத் தப்பிச்செல்ல கொன்ஸ்டபிள் ஜயதிலக்க முயன்றபோது, அவரது கால் முறிந்தது. இன்னொருவர் தனது கட்டிலின் கீழே ஒளிந்துகொண்டதால் புலிகளின் பார்வையிலிருந்து தப்பிவிட்டார். தன்னுடன் சுழற்துப்பாக்கியொன்றை வைத்திருந்த கொன்ஸ்டபிள் வீரக்கோன் கதவொன்றின் பின்னால் மறைந்து நிலையெடுத்துக்கொண்டு சீலனும் ரகுவும் மாடியில் இருந்து கீழிறங்கும்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார். அவர்கள் இருவர் மீதும் சூடு வீழ்ந்தது. சீலனின் முழங்காலினூடாக சன்னம் பாய அவர் கீழே விழுந்தார். ரகுவின் வலது கையில் சன்னம் பட்டு எலும்பு முறிந்தது. பொலீஸ் நிலையத்தின் பிற்பகுதியில் அமைக்கப்பட்ட பொலீஸாரின் விடுதி நோக்கி ஓடிச்சென்ற சந்தோசமும், சங்கரும், ஆயுத அறையைக் காப்பற்ற பொலீஸார் வராது தடுத்தனர். ஆனால், அவர்கள் பொலீஸார் மீது தாக்குதல் நடத்தை எத்தனிக்கவில்லை. அங்கிருந்த பொலீஸார் தாக்குதல் ஆரம்பமானதையடுத்து அங்கேயே ஒளிந்துவிட்டார்கள். ஆயுதவறையினை உடைத்த மாத்தையாவும் பஷீர் காக்காவும் அங்கிருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டனர். சீலன் மீதும் ரகு மீதும் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்படுவதையும், அவர்கள் இருவரும் அலறுவதையும் கேட்ட அருணாவும் புலேந்திரனும் அவர்களுக்கு உதவுவதற்காக அவர்கள் நோக்கி ஓடிச் சென்றனர். கீழே வீழ்ந்திருந்த சீலனை அருணா மினிபஸ்ஸிற்குக் கொண்டுவர, மறைந்திருந்து வீரக்கோன் மீண்டும் தாக்க, புலேந்திரனின் தோற்பட்டையில் சூடுபட்டது. காலைவேளையில் நடத்தப்பட்ட துணிகரமான இத்தாக்குதலில் மூன்று பொலீஸார் கொல்லப்பட்டனர். உடுவிலைச் சேர்ந்த கருனநாதன், மிருசுவில்லைச் சேர்ந்த கந்தையா, கேகாலையைச் சேர்ந்த திலகரத்ன ஆகியோரே அந்த மூவரும் ஆகும். மேலும் இத்தாக்குதலில் சார்ஜன்ட்கந்தையா, கொன்ஸ்டபிள் ஜயதிலக்க மற்றும் சிவில் பணியாளர் கந்தையா செல்வம் ஆகியோரும் காயப்பட்டனர். இவர்களுள் சிவில் பணியாளரான கந்தையா செல்வம் பின்னர் விசாரணைக்காகத் தடுத்துவைக்கப்பட்டார். .303 ரைபிள் 0.38 சுழற்துப்பாக்கி இத்தாக்குதலின்போது புலிகள் இரு உப இயந்திரத் துப்பாக்கிகளையும், ஒரு 0.38 சுழற்துப்பாக்கியையும், ஒன்பது 0.303 ரைபிள்களையும், 19 ரிப்பீட்டர் துப்பாக்கிகளையும் கைப்பற்றிச் சென்றனர். மொத்தத் தாக்குதலுமே 15 நிமிடத்தில் முடிக்கப்பட்டதோடு, புலிகள் தாம் வந்த மினி பஸ்ஸிலேயே மீசாலை நோக்கித் தப்பிச் சென்றனர். பின்னர், அந்த மினிபஸ் கைவிடப்பட்ட நிலையில் நவாலிப் பகுதியில் பொலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
  8. @தமிழ் சிறி உங்கள் ஞாபகம் தான் வந்தது அண்ணா😂
  9. ஓய்வெடுக்க அமைதியான இடம்.
  10. உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைத்தது, என்று...வாழை மரத்தை வளர்த்தவரின்... முகத்தில் தெரியும் மகிழ்ச்சியம், பெருமிதமும் அருமை. 👍
  11. ஆசை தான், ஆனால் வாய்ப்புகள் குறைவு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.