Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Justin

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    7054
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8910
    Posts
  3. நன்னிச் சோழன்

    கருத்துக்கள உறவுகள்+
    7
    Points
    35613
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19139
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/24/23 in all areas

  1. கடற்புலிகளின் முதலாவது தரைத்தாக்குதல் படையணியின் பொறுப்பாளராக லெப் கேணல் அருச்சுனா அண்ணை நியமிக்கப்பட்டபோது அது அருச்சுனா படையணியாகவே 1995 யூலை முற்பகுதிவரை அழைக்கப்பட்டு வந்தது. லெப் கேணல் சூட்டியண்ணையின் வீரச்சாவிற்கு (மண்டைதீவுத் தரையிறக்கம் மற்றும் தாக்குதலில்) பின்னர் கடற்புலிகளின் தரைத்தாக்குதல் படையணி “சூட்டி படையணி”என 1995/யூலை 5 கரும்புலிகள் நாளன்று சிறப்புத்தளபதி சூசை அவர்களால் பெயர் சூட்டப்பட்டு தரைத்தாக்குதல்களில் பங்குபற்றியிருந்தது. யாழ்தேவி எதிர்ச்சமர், பூநகரி வெற்றிச்சமர், உடுத்துறை நாகர்கோவில் முன்னரங்க தடுப்பு. மண்டைதீவு முகாம் தாக்குதல், சூரியக்கதிர்-1 எதிர்ச்சமர், சூரியக்கதிர்-2 எதிர்ச்சமர், யாழ்/தொண்டமனாறு முன்னரங்க தடுப்பு, யாழ்/வடமராட்சித் தாக்குதல்கள், ஓயாத அலைகள்-1 நடவடிக்கை, சத்ஜெய எதிர்ச்சமர், ஓயாத அலைகள்-2 நடவடிக்கை, கிளிநொச்சி-பரந்தன் நிலமீட்பு நடவடிக்கை, ஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள்-3 நடவடிக்கை மற்றும் ஆனையிறவு வெற்றிச்சமர், யாழ் அரியாலை, தனங்கிளப்பு, நாவற்குழி, கைதடி, சாவகச்சேரி நோக்கிய முன்னேற்ற நடவடிக்கை, மன்னார் முன்னரங்கத் தடுப்பு, மணலாறு முன்னரங்கத் தடுப்பு, தண்ணிமுறிப்பு முன்னரங்கத் தடுப்பு, வட்டுவாகல் முன்னரங்கத் தடுப்பு, சாலை முன்னரங்கத் தடுப்பு, முள்ளிவாய்க்கால் சமர்கள் என இறுதிப்போர் வரை சூட்டி படையணி களமாடியிருந்தது. அதன் தளபதிகளில், லெப் கேணல் அருச்சுனா, லெப் கேணல் சூட்டி, லெப் கேணல் சுதர்சன், லெப் கேணல் விடுதலை, ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர். 1993 காலப்பகுதியில் கடற்புலிகளின் யாழ் மாவட்ட தளபதியாக செயற்பட்டு பின்னர் கடற்புலிகளின் தரைத்தாக்குதல் தளபதியாகச் செயற்பட்டு 1995 இல் இதே நாளில் யாழ்/மண்டைதீவில் அமைந்துள்ள சிங்களப் படைமுகாம் தகர்ப்பில் வீரமரணத்தை தழுவிக்கொண்ட லெப். கேணல் சூட்டி அவர்களுக்கு எமது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்வோம். நினைவுகளுடன்... புலவர் கடற்புலிகள்
  2. மீண்டும் நல்வரவு கோசன் ! சில குளறுபடிகள் நடந்தாலும் நீங்கள் நினைப்பது நடப்பதற்குச் சான்றுகள் குறைவு. ஏனென்றால் பிரிகோஜின் புதினுக்கு வேண்டப்பட்டவர். பிரிகோஜின் இல்லாமல் புதின் இயங்க முடியாது என்று கேள்விப்பட்டுள்ளேன். இல்லாவிட்டால் பக்மூத் சண்டையின்போதே புதின் இவருக்குத் தேனீர் விருந்து கொடுத்திருப்பார். 🤣
  3. தமிழரின் தலைநகரான திருகோணமலையினை சிங்கள பெளத்த மாவட்டமாக மாற்றிய சிங்கள பெளத்த இனவாதிகள் திருகோணமலை நகருக்கு அருகில் அமைக்கப்பட்ட மிட்சுவி சீமேந்துத் தொழிற்சாலையினைத் திறந்து வைக்கும் நிகழ்வினை செய்தியாக்கும் நோக்கத்தில் நானும், ஜனாதிபதிச் செய்தி நிருபர் நோர்ட்டன் வீரசிங்கவும், புகைப்பிடிப்பாளர் சேன விதானகமவும் 1982 ஆம் ஆண்டு, கார்த்திகை 27 ஆம் திகதி திருகோணமலைக்குச் சென்றிருந்தோம். மறுநாள் 28 ஆம் திகதி திருகோணமலை தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ராஜவரோதயம் சம்பந்தன் வீட்டிற்கு அவரது தொலைபேசி இணைப்பினைப் பயன்படுத்தி கொழும்பு அலுவலகத்திற்கு செய்தியனுப்புவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றோம். மிட்சுவி சீமேந்துத் தொழிற்சாலை - திருகோணமலை பிராந்திய நகரங்களிலிருந்து கொழும்பிற்கு தொலைபேசி இணைப்புக்களை ஏற்படுத்துவதென்பது அக்காலத்தில் மிகவும் கடிணமானதொன்றாக இருந்தது. உயர் அரச அதிகாரிகள், பொலீஸார், ராணுவத்தின் கட்டளையிடும் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு மட்டுமே அந்த வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருந்தன. ஏனையவர்கள் தொலைத்தொடர்பு நிலையங்கள் ஊடாகவே அழைப்புக்களை ஏற்படுத்திக்கொள்ள முடியும். அவைகூட பல மணிநேரக் காத்திருப்பின் பின்னர்தான் பலருக்குக் கிடைத்தன. தி ஐலண்ட பத்திரிக்கையின் செய்தியாளர் பீட்டர் பாலசூரிய திருகோணமலை அரசாங்க அதிபரான ஜயதிஸ்ஸ பண்டாரகொடவிற்கு நெருங்கிய நண்பர் ஆதலால் அவரது தொலைபேசியினை பீட்டர் பாவித்திருந்தார். எமக்கோ தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்த வேறு இடம் ஒன்றினைத் தேடவேண்டியதாயிற்று. சீமேந்துத் தொழிற்சாலையின் அடிக்கல் நாட்டும் வைபவத்திற்கு வந்திருந்த ஜெயாரைச் சந்தித்துவிட்டு அப்போதுதான் சம்பந்தன் தனது வீட்டிற்கு வந்திருந்தார். "மரமுந்திரிகைத் திட்டக் குடியேற்றத்தினை நிறுத்தியதற்காக நான் ஜெயாருக்கு நன்றி கூறினேன். மேலும், காந்தியம் அமைப்பினால் வவுனியா, திருகோணமலை , மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் குடியேற்றப்பட்டுள்ள ஏழை மலையக மக்களை அங்கிருந்து அகற்ற சிலர் முயல்வதுபற்றியும் அவரிடம் எடுத்துக் கூறினேன். நான் சொல்வதை ஜனாதிபதி கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்" என்று சம்பந்தன் என்னிடம் கூறினார். மேலும், சிரில் மத்தியூவும், காமிணி திசாநாயக்கவும் திருகோணமலை மாவட்டத்தை சிங்களப் பெரும்பான்மை மாவட்டமாக மாற்ற எத்தனித்து வருவது குறித்து தனது கவலையினை என்னிடம் தெரிவித்தார். சிரில் மத்தியூவுக்கு வழங்கப்பட்ட பணி திருகோணமலை மாவட்டத்தில் காணப்படுவதாக சிலர் கூறும் புராதன பெளத்த விகாரைகளைக் கண்டுபிடித்துப் புனருத்தாரனம் செய்து, அவற்றினைச் சுற்றிச் சிங்கள விவசாயக் குடியேற்றங்களை உருவாக்குவதுதான் என்று அவர் கூறினார். அவ்வாறே, திருகோணமலை மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமான பெருமளவு நிலங்களில் அரச கூட்டுத்தாபனங்களை உருவாக்கி அவற்றினைச் சுற்றி சிங்களவர்களைக் குடியேற்றுவதுதான் காமிணி திசாநாயகவுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணி என்றும் அவர் கூறினார். "இவர்கள் இருவரும் அரசாங்கத்தின் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி திருகோணமலையில் தமிழர்களைச் சிறுபான்மையினராக்கி வருகிறார்கள்" என்று சம்பந்தன் எம்மிடம் கூறினார். தேர்தல் பிரச்சார நடவடிக்கை ஒன்றில் சம்பந்தன் - 2004 தமிழ்ப் பெரும்பான்மை மாவட்டமாக இருந்த திருகோணமலை மாவட்டத்தினை சிங்கள பெளத்த மாவட்டமாக மாற்றும் சிங்களவர்களின் போராட்டம் சேனநாயக்கவின் காலத்திலேயே ஆரம்பித்து விட்டது. அவர் காலத்திலேயே திருகோணமலை நகரை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் வீதிகளின் இருமருங்கிலும் பெளத்த விகாரைகளும் குடியேற்றங்களும் உருவாக்கப்பட்டன. தமது தாயகத்தின் தலைநகராக திருகோணமலையை தமிழர்கள் உரிமை கோரியதற்கு சிங்கள பெளத்த அரசாங்கங்கள் கொடுத்த பதில் இந்த பெளத்த சிங்களக் குடியேற்றங்கள்தான் என்றால் அது மிகையில்லை. திருகோணமலை நகரில் பிரெட்ரிக் கோட்டை அமைந்துள்ள பகுதிக்கு அருகில் இருக்கும் கோணேஸ்வரம் ஆலயத்தை மீளக் கட்டவேண்டும் என்ற சமஷ்ட்டிக் கட்சியின் கோரிக்கையினை அடுத்தே திருகோணமலை மாவட்டத்தினை சிங்கள பெளத்த மயமாக்கும் நடவடிக்கைகளுக்கு அரசு உத்வேகம் கொடுக்க ஆரம்பித்தது. 1965 ஆம் ஆண்டு டட்லி சேனநாயக்கவின் தேசிய அரசிடம் தேவாலயத்தினைப் புனருத்தாரனம் செய்யப்படவேண்டியதன் அவசியம் பற்றி தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு திருச்செல்வம் கேட்டிருந்தார். இதன் பின்னரே தமது சிங்கள பெளத்த மயமாக்கலினை துரித கதியில் செயற்படுத்தவேண்டும் என்று சிங்கள அரசுகள் எண்ணிச் செயற்பட்டு வரலாயின. தமிழர் தாயகத்தினை சிங்கள மயமாக்கும் கைங்கரியத்திற்குத் துணைபோன சிங்களக் கல்விமான்களில் ஒருவர் - பேராசிரியர் பரணவிதாரண தமது இதிகாசப் புத்தகமான மகாவம்சத்தில் திருகோணமலையில் பிரெட்ரிக் கோட்டை அமைந்திருக்கும் பகுதியில் கோகண்ண என்கிற விகாரை இருந்ததாகவும், ஆகவே அவ்விடத்தில் சைவக் கோயில் ஒன்றினை மீள நிறுவுவதை தாம் அனுமதிக்கப்போவதில்லையென்றும் பெளத்த பிக்குகளும், சிங்கள மக்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். அவர்களினால் எழுதப்பட்ட கதையான மகாவம்சத்தின்படி கிறீஸ்த்துவுக்குப் பின் மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக அவர்கள் கூறும் மகாசேனன் எனும் மன்னன் வட - கிழக்குக் கடற்கரை ஓரம் ஒன்றில் கோகண்ண விகாரை என்று அழைக்கப்படும் பெளத்த கோயிலைக் கட்டினான் என்று கூறப்படுகிறது. ஆனால், இதற்கான வரலாற்றுச் சாட்சியங்கள் எவையும் எவராலும் இதுவரையில் முன்வைக்கப்படவில்லை. முன்னாள் தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் பேராசிரியர் பரணவித்தாரண, கோணேஸ்வரம் ஆலயத்தின் இடிபாடுகளில் கண்டெடுக்கப்பட்ட 12 ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டதாகக் கூறப்படும் ஓலைச்சுவடிகளில் விவரிக்கப்பட்ட விடயங்களை தனக்குத் தெரிந்த வகையில் மொழிபெயர்ப்புச் செய்து அப்பகுதியில் பெளத்த விகாரை ஒன்று இருந்திருக்கலாம் என்று தான் கருதுவதாகக் கூறியிருந்தார். அந்த ஓலைச் சுவடிகளில் இந்தியாவில் இருந்து இப்பகுதிக்கு விஜயம் செய்த இளவரசனான கொடகங்க தேவாவின் வருகையினை மட்டுமே குறிப்பிட்டிருந்தது. ஆனால் நுனிப்புல் மேய்ந்து முடிவுகளை எடுத்தும், சிங்கள பெளத்த அரசின் திட்டத்தினை நடைமுறைப்படுத்தவும் சேவகம் செய்துவரும் சிங்களக் கல்விமான்கள் இந்திய இளவரசன் ஒருவனின் விஜயத்தினை விகாரை ஒன்று இப்பகுதியில் இருந்ததாக நிறுவும் தமது சதிக்குத் துணையாகப் பாவித்திருந்தனர். திருகோணமலை மாவட்டத்தில் பெளத்த புராதனச் சின்னங்களைத் தேடுகிறோம் என்கிற பெயரில் செயற்பட்டு வந்த சிறில் மத்தியூவின் வலதுகரமான பியசேனவும் அவனது சகாக்களும் தாம் தேடுவது சிங்கள பெளத்த புராதனச் சின்னங்களையா அல்லது தமிழர்கள் பின்பற்றி வந்த மகாயான பெளத்தத்தினையா என்பதைச் சிந்திக்கத் தவறிவிட்டனர். மேலும், கோணேஸ்வர ஆலயப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் இந்து மொழியான சமஸ்கிருதத்தில் இருக்கின்றனவா இல்லையா என்பதுபற்றிக் கூட அவர்கள் அறிந்துகொள்ள விரும்பியிருக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை தாம் கண்டெடுக்கும் பெளத்த சின்னங்கள் எல்லாமே சிங்கள பெளத்தர்கள் பின்பற்றும் தேவராத பெளத்தத்திற்குச் சொந்தமானவைதான் என்கிற நிலைப்பாடே இருந்தது.
  4. கால்பந்தாட்டத்தில் வாயால் விளையாடிய 12 வது வீரர்......! 😂
  5. அன்னலிங்கம் பகவதி தம்பதியினரின் மூத்த புதல்வன் . ராஜ்கண்ணா என்ற இயற்பெயர் கொண்ட எங்கள் கஜேந்திரன். முல்லைதீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு சிவநகரில் சூரிய உதயத்தை முந்திக்கொண்டு அழகிய குழந்தையாய் பிறந்த பொழுது பெற்றோரும் அறிந்திருக்கவில்லை. இவன் இந்த மண்ணின் மைந்தன் என்று. ஒரே தங்கையும் அன்பு தம்பியுமாய் கலகலப்பான அழகிய குடும்பமாக மகிழ்ச்சியாக இருந்தாலும் தமிழர் நிலங்களில் நடைபெற்ற சிங்கள ஆக்கிரமிப்புக்களைக் கண்டு சிறுவதிலையே சீற்றம் கொண்டான். தானும் போராடவேண்டும் என்று நினைத்து போராட்டத்திற்கு இணைவதற்கு சென்றவனை மீண்டும் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். "உனக்கு போராட போற வயது இன்னும் வரவில்லை இப்போது படி" "என்ற தந்தையின் அறிவூட்டலில் சிறிது காலம் அமைதியாய் வாழ்ந்தான் . பாடசாலை கல்வி மட்டுமன்றி விளையாட்டிலும் சிறந்த ஈடுபாடுடையவனாக இருந்தவன். ஆரம்ப கல்வியை பொக்கனை மகா வித்தியாலத்திலும் பின்னர் புதுக்குடியிருப்பு மகா வித்தியாலத்திலும் கற்றுக்கொண்டிருந்தான் வலிகாம இடப்பெயர்வுகளின் போது மக்கள் பட்டவலிகளை எண்ணி கண்கலங்கி அவர்களிற்கு மாணவராக உள்ளபோதே பல உதவிகளை செய்தான். "அண்ணா ஏன் எங்களை விட்டிற்று போறாய் என்ற தங்கைக்கு வீட்ட இருந்தால் யார் உங்களுக்கு பாதுகாப்பு தாறது" என்று சொல்லி.சென்றவனின் ஒரே தங்கை குழந்தைகளையும் பரிதவிக்கவிட்டுவிட்டு மாத்தளனில் எறிகனை வீச்சில் பலியானாள் என்ற செய்தியை அவன் இருந்தால் இன்று தாங்கியிருக்கவே மாட்டான். 1997 ஆண்டு போராளியாக தன்னை இணைத்துக் கொள்ளுமாறு லெப் கேணல் தமிழ்வாணன் அண்ணா விடம் சென்று இணைந்து கொள்கிறான். பின்னர் அடிப்படைப்பயிற்சி முடிக்காமலே மருத்துவ பிரிவின் வன்னி மேற்கின் நிர்வாக முகாமின் நிர்வாக வேலைகளிலும் தொலைத் தொடர்பாளராகவும் கடமை செய்து கொண்டிருந்தவனின் திறமைகளை இனங்கண்ட மருத்துவ பொறுப்பாளர் மருத்துவ கற்கை நெறியை தொடங்க அனுப்படுகின்றான். .அதன் பின்னரான செயல்பாடுகளில் மருத்துவ போராளியாகிய பின்பே அடிப்படை இராணுவப்பயிற்சியையும் பெற்று கொண்டு படிப்படியாயக வளர்ச்சிகண்டான். மருத்துவ போராளி கஜேந்திரன் எங்களுக்கு எல்லாம் சிறியவனாய் எமது மருத்துவ குழுவில் இருந்தாலும் அவனிடம் சிறந்த அறிவும் ஆழுமையும் நிறைந்து கிடந்தன.. யாழ்வேள் மருத்துவமனையின் மருந்து களஞ்சிய பொறுப்பாளராக நீண்ட காலங்கள் இருந்திருக்கிறான் மருத்துவத்துறையில் . அவன் தன்னுடைய பொறுப்பில் எந்த நேரத்திலும் கடமை தவறாதவன் . தனக்கு கொடுக்கப்படும் பணியை காத்திரமாகவும் விருப்பத்துடனும் செய்து முடிப்பான். அது அவனுடைய தனிச் சிறப்பாகும். பெரியவர் சிறியவர் என்ற வேறுபாடின்றி தனக்கு தேவையானதையும் தெரியாதவற்றையும் கேட்டறிவதில் அவன் ஒருபோதும் பின்னின்றதில்லை. சரியான குறும்புக்காரன் ஒரு பொழுது குளவிக்கூட்டிற்கே கல் எறிந்து குளப்பிவிட்டு ஓடியவன் .இன்னொரு நாள் யாள்வேள் மருத்துவ மனையில் மதியநேரம் வெயில் உச்சத்தைதொட்டுக்கொண்டிருந்தது. பெண்கள் பகுதியின் வாசலில் கஜேந்திரன் குரல் "அவசரமாக திருமணமான அக்காக்கள் எல்லோரையும் டொக்டர் வரட்டாம் வேகமாக வரட்டாம் " அப்போது தான் வேலை முடித்து சாப்பிட்டு கொண்டிருந்த எல்லோரும் அரையும் குறையுமாக ஏன் என்ற வினாவுடன் அவசரமாக ஓடுகின்றார்கள். இரத்த வங்கியில் நின்ற என்னிடமும் சொல்கின்றான் "டொக்டர் வரட்டாம் அனுமதிக்கும் விடுதிக்கு உங்களை " நானும் செல்கிறேன் எதுவும் அறியாதவனைப் போல் நின்று விட்டு சரி எல்லோருக்கும் ஒரு விடயம் "நாளைக்கு வரும்போது கோல்மஸ்(colmans) பைக்கற் ஒன்று வேண்டிக்கொண்டுவாங்கோ எறிக்கும் வெயில் தாங்க முடியல்ல என்ன Brand என்று குயில் அக்கா விடம் கேளுங்கள் சரி நீங்கள் எல்லோரும் போய் வச்சீட்டுவந்த சாப்பாட்டை சாப்பிடுங்கோ நான் சொன்னதை மறக்க வேண்டாம் " என்று சொல்லி விட்டு ஓடி விட்டான் .இப்படி பல குறும்புகள் அவனை பேசிவிட்டு போனாலும் அடுத்த நிமிடம் வந்து நிற்பான். நோயாளர்களை அன்பால் தன் வசப்படுத்துவது மட்டுமன்றி அவர்களுக்கு குறுக்கெழுத்துப் போட்டியில் கட்டங்களை நிரப்புதல், நுண்ணறிவு போட்டிக்கான கணக்குகளை தயாரித்து கொடுத்தல் .சதுரங்கம் விளையாடல் என்று அவர்களுடன் தோழமையுடன் ஆற்றுப்படுத்தும் புதுவழியை கையாள்வதில் வல்லவன்..அவனின் பாரமரிப்பில் இருந்த எந்த போராளி நோயாளர்களும் அவனை இன்றும் மறந்து விடமாட்டார்கள் . சற்று சாய்வான துள்ளல் நடையும் கூரிய பார்வையும் விரல் நகங்களை கடிக்கும் குறும்புக்காற கஜேந்திரன் தான் இத்தனை திறமைகளின் சொந்தக்காறன். கணனி பாவணை பெரிதாக இல்லாத காலத்திலே அந்த துறைசாரந்த தேடலும் அறிவும் அவனிடம் இருந்தது "மென்பந்து,கால்பந்து போன்ற விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டுவான். . ஒரு முறை உலககோப்பை கால்பந்தாட்ட போட்டி நடைபெற்று கொண்டிருந்ததை வெளியில் சென்று பார்த்து விட்டு வந்து தானே தலைமை வைத்தியரிடமும் அதைப்பற்றி கலந்துரையாடி அதற்கு தண்டனையும் வாங்கினான் ."ஏன் பொல்லை கொடுத்து அடிவாங்கினாய் "தம்பி என்று கேட்டபோது சரி பாவம் தானே அவர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்றான் சாதாரணமாக .. மருத்துவ பிரிவில் மாதாந்தம் நடத்தப்படும் பொது அறிவு பரீட்சை யில் அனேகமாக அவனுக்கு தான் முதல் இடம் கிடைக்கும் .எப்போது எங்கே புத்தகம் படிப்பான் என்றே எங்களுக்கு தெரியாது. ஆனாலும் மருத்துவமனையின் நூல் நிலையத்திற்கும் வரும் புத்தகங்களை முதலாவதாக அவன் வாசித்துவிடுவான். அவன் வாசித்த பிறகுதான் எமக்கு அந்தப் புத்தகங்கள் கிடைக்கும் . போர்க்காலத்திற்கே உரிய மருந்து தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, மருத்துவ களஞ்சியத்திற்கு பொறுப்பாக இருந்த காலங்களில் கடும் சிக்கனமாக மருந்துகளைப் பிரித்து வழங்குவான். முக்கியமான மருத்துகளை இல்லை என்று சொல்லி கைவிரிக்காது சேகரிப்பில் வைத்திருந்து மிக அவசர நிலைலைகளில் தன் தொழிற் திறமையைக்காட்டி பொறுப்புவைத்தியர் அஜோ விடம் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறான். புதுக்குடியிருப்பிலிருந்து கிளிநொச்சிக்கு லான்மாஸ்ட்ரில் தான் மருந்துப்பொருட்களை எடுத்து வரவேண்டியிருந்த காலம் அது . தானே நேரடியாக சென்றுவிடுவான் . திரும்பி வரும் போது அடையாளம் காணமுடியாத அளவிற்கு அவனை செம்மண் புழுதி மூடியிருக்கும். அப்படி இருந்த போதிலும், மருந்துப் பொருட்களை பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்துவிடுவான். தமிழீழ சுகாதாரசேவையில் இருந்த நாட்களில் தன் திறமைகளை வெளிப்படுத்த அவன் தவறியதில்லை. மன்னார் மாவட்ட தமிழீழ சுகாதாரசேவைப் பொறுப்பாளராக இருந்தபோது அவனது ஆளுமையான பொறுப்புமிக்க செயற்பாட்டைக்கண்டு அப்போது சுகாதார சேவைக்கு பொறுப்பாக விருந்த விக்கி டொக்டரிடம் பல முறை பாராட்டை பெற்றதுடன் அவனுக்கான பணிகளும் கூடுதலாக வழங்கப்பட்டது. பின்னர் வைத்தியர் சுஐந்தன் தமிழீழ சுகாதாரசேவைக்கு பொறுப்பாக இருந்த போதும் கஜேந்திரனின் பணி சுகாதாரசேவையுடன் தொடர்ந்தது. மாவீரன் கஜேந்திரன் பற்றி மன்னார் மாவட்டத்தில் பணியாற்றிய போராளி வைத்தியர் இப்படிக் கூறுகிறார் " சுகாதார சேவையின் பணிகள் ஆரம்பமாகும் நேரம் காலை 9 மணியாக இருக்கும் போது கஜேந்திரன் அதிகாலை 4 மணிக்கே எழும்பி களநிலமைகளை ஆராய்ந்து சரியான தரவுகளுடன் பணியாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவதுடன் பணிசார்ந்த விடயங்களில் கண்டிப்பாகவும், மற்றவர்களையும் சரியாக வழிநடத்தி செல்லும் விரைவான செயற்பாட்டாளராகவும் மன்னார் மாவட்ட மக்கள் மத்தியில் பேசப்பட்டான். " இவ்வாறு பல தியாகங்கள் அர்பணிப்புகளுடன் செயற்பட்ட கஜேந்திரனின் களங்கள் மேலும் விரிந்தன. 2006 ஆண்டு சமாதான இடைவெளியின் பின் மீண்டும் போர் தென் தமிழீழத்தில் ஆரம்பித்தது. கடற்புலிகளின் ஆழ்கடல் வினியோக கப்பல் தொகுதிகளில் பணிபுரியும் போராளிகள் தரைக்கு வருவது சில நாளோ மாதங்களோ தடைப்படலாம் அதனால் போராளிகள் காயமடைந்தாலோ நோய் வந்தாலோ ஆழ்கடலில் தான் நின்று சிகிச்சை பெறவேண்டும் என்று கடற்புலிகளின் தளபதிகளின் முன்கூட்டியே கணிப்பின் பின் அதற்கான சிறப்பு மருத்துவ போராளி ஒருவரைக் கேட்டிருந்தார்கள் . அதற்கு தகுதியானவராக கஜேந்திரன் தெரிவு செய்யப்படுகின்றான். அந்த கப்பலை சென்றடைவதற்காக சரியான களம் கிழக்கு மாகாண மாக அறிவிக்கப்பட்டதால் 2006.6 .மாதம் பல தடைகளை தாண்டி நீண்ட நடைப்பயணத்தில் சென்ற அணியுடன் கஜேந்திரனும் கிழக்கு மாகாணத்தின் வெருகல் பகுதியை சென்றடைகின்றான். அங்கு நின்ற மருத்துவ போராளிகளை சந்தித்துவிட்டு அவர்களிற்கான சில பொருட்களை கொடுத்துவிட்டு தனக்கான பணிக்கு செல்ல காத்திருந்தவன் இரவோடு இரவாக வெருகல் முகத்தூவாரப்பகுயிருந்து தனக்கு வழங்கப்பட்ட பணிக்காக ஆழ்கடல் வினியோக தொகுதிக்கான சிறப்பு மருத்துவ போராளியாக பயணமாகிறான் பின் ஒரு நாளில் அவன் இல்லாத செய்தி எம் மருத்துவ மனை முழுவதும் நிறைந்தது அந்த வீரர்களின் ஈரவரலாறு ஈழ மண் எங்கும் விதையாகிபோனது. உலக வல்லரசுகள் இலங்கை அரசிற்கு வழங்கிய செய்மதித் தகவல்களின் அடிப்படையில். 10.09.2007 அன்று இலங்கையிலிருந்து ஆயிரத்து ஐநூறு கடல்(1500NM )மைல்களுக்கப்பால் அதாவது சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் "எம்.ரி. மன்யோசி" (M.T. Manyoshi) எண்ணெய்க் கப்பல் மற்றும் "எம்.வி. செய்ஸின்" (M.V. Seishin), "எம்.வி. கொசியா" (M.V. Koshia) ஆகிய வணிகக் கப்பல்களை சிறிலங்கா கடற்படையினர் வழிமறித்த வேளையில் 11.09.2007 அதிகாலை வரை தொடர்ந்து தம்மிடம் இருந்த ஆயுதங்கள் உயிர்ப்பு இழக்கும் வரை தொடர்ந்து போராடினார்கள். இத்தகவல்களை தமிழீழத்திலுள்ள கட்டளை மையத்திற்கும் கிடைத்தது. மூன்று கப்பல்களும் வெவ்வேறு திசைகளில் பயணித்துக் முற்பட்டபோது போது முறையே மதியம் ஒருமணியளவில் லெப்.கேணல் சோபிதன் தலைமையிலான வணிகக் கப்பலும் லெப் கேணல் செம்பகச்செல்வன் தலைமையிலான எண்ணெய்க்கப்பலும் தாக்குதலுக்குள்ளாகி மூழ்கிபோயின. அதிலிருந்த போராளிகளும் எதிரியிடம் பிடிபடாமல் சயனைற் கடித்து கடலிலே காவியமானார்கள் .முன்றாவது வணிகக்கப்பலான லெப் கேணல் எழில்வேந்தனது கப்பலில் தான் கஜேந்திரனும் இருந்தார் இவர்களை நோக்கி வந்த கடற்படையினர் மீது கப்பலிலிருந்த சிறிய மோட்டார்களை பயன்படுத்தி இறுதிவரை தாக்குதல் நாடாத்தினார்கள் மிகவும் மூர்க்கத்தோடும் உறுதியோடு களமாடி 11.09.2007 அன்று கடலிலே புதியதொரு வரலாற்றை படைத்துச் சென்றார்களில் லெப் கேணல் கஜேந்திரனும் (தமிழ்மாறன்).இணைந்து கொண்டான் உன்னத இலட்சியத்திற்காக ஆழ்கடலில் சங்கமித்த இந்த மாவீர்களின் வீரக்கதைகள் ஆர்பரித்து எழும் அலையாகி தினம் அடித்துக்கொண்டேயிருக்கும் .............. -மிதயா கானவி, மருத்துவப் போராளி
  6. 1990 களில் இடம்பெற்ற முப்படைகளின் மக்கள் மீதான கொடுரத் தாக்குதலின் விளைவாக போராடப் புறப்பட்டவர்களில் ஒருவனாக புறப்பட்ட சிறி பயிற்சி முடிவடைந்தவுடன் கடற்புறாவிற்க்கு சிலபோராளிகள் உள்வாங்கப்பட்டபோது சிறியும். ஒருவனாக வந்தான்.பின்னர் விநியோகநடவடிக்கைக்காக லெப். கேணல்.டேவிட் அண்ணாவுடன் சிலமாதங்கள் தீவகப்பகுதியில் கடமையாற்றினார். ஆர்.பி.ஐி பயிற்சி எடுத்து அதில் மிகவும் தேர்ச்சி பெற்று சிறந்த வீரனாகத் திகழ்ந்தார். பின்னர் ஆகாய கடல் வெளிச் சமரில் பங்கு பற்றி தனது முதலாவது சமரும் நீண்ட நாட்கள் தொடர்ந்த சமரில் சளைக்காமல் போரிட்டான்.தொடர்ந்து கடற்புறாவாக இருந்த அணி கடற்புலிகளாக மாற்றம் பெற்றபோது கடற்புலிகள் அணியில் தனது பணியைத் தொடர்ந்தவன் கிளாலி கடல் நீரேரியில் மக்கள் போக்குவரத்திற்கான பாதுகாப்புச் சமரின்போது கடற்புலிகளின் தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட இரு ஆர்.பி.ஐிக்களைப் படகில் ஒரே தளத்தில் பூட்டி ஒரே நேரத்தில் தாக்குதல் நடாத்தி புதிய ஒரு சாதனையை படைத்த பெருமை அண்ணாச்சியையே சாரும் .படகுச் சாரதியாகவும் சென்று கிளாலிக் கடல் நீரேரிச் சமரில் மிகத் திறமையாகச் செயற்பட்டு தனக்கான ஒரிடத்தைப் பதித்தான். தொடர்ந்து பூநகரிச் சமரில் பங்குபற்றி பாரிய விழுப்புண்ணடைந்தான்.தொடர்ந்து விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மண்டைதீவு முகாம் மீதான வெற்றிகரத் தாக்குதலிலும் முக்கிய பங்காற்றிய அண்ணாச்சி .அதன் பின் கடற்புலிகளின் பொறியியற் துறையிலும் சிலகாலம் கடமையாற்றியிருந்தான். இவனதுசெயற்பாடுகளை கவனித்த சிறப்புத் தளபதி அவர்கள் இவனை மாவீரரான மேஐர் காமினி /சுதாகர் அவர்களுக்கு உதவியாக கடற்புலிகளின் முதுகெலும்பான படகுகளை தரையில் காவிச் செல்லும் படகுக்காவிகள் (டொக் ) அணியுடன் நின்றான் .படகுகளைத் தேவைக்கேற்ப இடங்களுக்கு தரையால் நகர்த்துவதே இவ்வணியின் பணியாகும் . தொடர்ந்து காமினி அவர்களை சிறப்புத் தளபதி அவர்கள் தன்னுடன் அழைத்துச் செல்ல காமினி அவர்களின் இடத்திற்கு அண்ணாச்சி நியமிக்கப்படுகிறான். அந்த நேரத்தில் தான் யாழ் இடப்பெயர்வும் நடைபெற்றது .அதன் பின் போராட்டத்தை பலப்படுத்துமுகமாக சாலைப் பகுதியில் தொடர்ச்சியாக விநியோகம் நடைபெற அவ் விநியோக நடவடிக்கைக்கு படகுகளை வேகமாக நகர்த்துவது.அப்படகுகளை விநியோகம் முடிந்து அதிகாலை வரும்பொழுது வேகமாக அப்படகுகளை படகுக்காவியில் ஏற்றி உழவு இயந்திரங்கள் மூலம் பாதுகாப்பன இடங்களுக்கு நகர்த்தி விமானத்தாக்குதலுக்கு அப்படகுகள் உள்ளாகாமல் பாதுகாத்த பெருமை அண்ணாச்சியின் அணியையே சாரும். அவ்வளவிற்கு படகுகாவிகளை பராமரித்ததாகும். செம்மலைத் தொகுதி ,வட்டுவாகல் தொகுதி, சாலைத் தொகுதி ,கடற்சண்டை மற்றும் விநிேயோகப் படையணிகளின் படகுகள் நகர்த்துவது மற்றும் படகுக் காவிகள் படகுக்காவிகளை இழுக்கப் பயண்படுத்தப்படும் உழவு இயந்திரங்களுக்கான பொறுப்பாளனாகவும் செயற்பட்ட அண்ணாச்சி சாலை யிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஆழ்கடல் விநியோக நடவடிக்கைக்கும் சென்றுவந்தான் . இரவு விநியோக நடவடிக்கைக்குச் சென்று வந்தாலும் பகலில் படகுக்காவிகளின் வேலைகளை மிகவும் திறம்படச் செய்தான் . இக்காலப்பகுதியில் குறிப்பிட்டளவான இளையபோராளிகளைக் கொடுத்தார் சிறப்புத்தளபதி சூசை அவர்கள். அப்போராளிகளை திறம்பட பயிற்றுவித்த அண்ணாச்சி அப்போராளிகளை தனது சொந்தச் சகோதர்களைப் போல பார்த்துக் கொண்டான்.ஒரு தடவை தலைவர் அவர்களை சந்தித்த பொழுது படகு நகர்த்துவதற்குத் தேவையான பொருட்களை தலைவர் அவர்களிடமே கேட்டு வாங்கிக்கொண்டார்.கடலில் சண்டைபிடிப்பது இலகு ஆனால் படகுக்காவிகளை பராமரிப்பதென்பது மிகவும் கடினமான விடயமாகும்.அதுவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் செய்வதென்பது இலகுவானதல்ல அப்படியிருந்தும் அண்ணாச்சி செயலால் செய்து காட்டினான். நீண்டகடலனுபவம் கொண்ட அண்ணாச்சி விநியோக நடவடிக்கைக்கு படகின் எந்த நிலையாகிலும் சென்று வந்தார்.எந்த வேலையாகிலும் மிகவும் திறம்படச் செய்வதில் அண்ணாச்சிக்கு நிகர் அண்ணாச்சியே எத்தனையோ போராளிகளை தனது துறையில் வளர்த்துவிட்ட ஒரு வீரன் சகபோராளிகளை அண்ணாச்சி என்று அழைத்து பண்பாக கதைப்பதிலும் அதுமட்டுமல்லாமல் நகைச்சுவையாக கதைப்பதிலும் அண்ணாச்சிக்கு நிகர் அண்ணாச்சியே.01.10.1999.அன்று கப்பலிலிருந்து எரிபொருள் ஏற்றிக்கொண்டு வரும்பொழுது சிறிலங்காக் கடற்படையினருடனான மோதலில் இன்னும் ஒன்பது போராளிகளுடன் வீரச்சாவடைகின்றார். இவர் வீரச்சாவடைந்தாலும் இவரால் பயிற்றப்பட்ட போராளிகள் இறுதிவரை அப்பணிகளில் நினைத்துப் பார்க்கமுடியாதவாறு மிகத் திறமையாகச் செயற்பட்டனர்.அண்ணாச்சி நினைவாக கடற்புலிகளின் படகு கட்டுமானப் பிரிவினால் கட்டப்பட்டபடகு”அண்ணாச்சி”என்ற அவரின் பெயருடன் நீண்டகாலம் விநியோக நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கும் அவருடன் வீரச் சாவைத் தழுவிய மாவீரர்களுக்கும் இந்நாளில் எமது வீரவணக்கத்தினை செலுத்துவோம்.
  7. இது குட்டிக் கதையா பாஸ்.😆ஆனாலும் நல்ல கதை பகிர்வுக்கு நன்றி.😀
  8. காந்தியத்தை அழிக்கத் திட்டம் போட்ட ஜெயாரும், ஏமாற்றப்பட்ட சம்பந்தனும் திருக்கோணேஸ்வரர் ஆலயம் 60 களுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் திருகோணமலை மாவட்டத்தின் அரச அதிபர்களாக சிங்களவர்களையே நியமித்து வருகின்றன. தமிழ் மாவட்டமான திருகோணமலையினைச் சிங்களமயமாக்குவதற்கு சிங்கள அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்படுவது அவசியம் என்று அரசுகள் கருதிவந்தன. இவ்வாறான அரச அதிபர்களில் ஒரு சிலர் நேர்மையான, பாகுபாடற்ற மனிதர்களாக இருந்தனர். ஆனால், பெரும்பாலான அரச அதிபர்கள் அரசாங்கத்தின் கருவியாகச் செயற்பட்டு திருகோணமலையினைச் சிங்கள மயமாக்கும் அரசின் திட்டத்தினை தமது தலையாய கடமையாகக் கொண்டு நிறைவேற்றி வந்தனர். இந்த இரண்டாம் வகை அரசாங்க அதிபர்களே ஜெயாரின் காலத்தில் திருகோணமலையினை நிர்வகித்து வந்தனர். 1978 ஆம் ஆண்டிலிருந்து 1983 ஆம் ஆண்டுவரை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக ஜயதிஸ்ஸ பண்டாரகொட கடமையாற்றினார்.இவரது காலத்திலேயே திருகோணமலையில் சிங்களமயமாக்கல் துரித கதியில் இடம்பெற்று வந்தது. அரச திணைக்களங்களுக்கென்று மிகப்பெரியளவில் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டதோடு, இக்காணிகள் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு வந்தார்கள். சுமார் 5000 ஏக்கர்கள் கொண்ட கொழும்பு வீதியுடன் அமைந்திருந்த நீண்ட நிலப்பரப்பு துறைமுக அதிகாரசபையினால் கையகப்படுத்தப்பட்டது. இதைவிட மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் உல்லாசப் பயணத்துறைக்கென்றும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கென்றும் இன்னும் பிற அரச திணைக்கங்களுக்கென்றும் அரசால் கையகப்படுத்தப்பட்டு வந்தன. தமிழ் பெளத்தர்களின் புராதனச் சின்னம் ஒன்றின் பின்னணியில் தெரியும் நீலப்பனிக்கைக் குளம் திருகோணமலைக்கு வடக்காக இருந்த திரியாய் பகுதியில் அரசு திட்டமிட்டிருந்த மரமுந்திரிகைத் திட்டத்தினை ஜெயார் இரத்துச் செய்தமைக்காக தான் அவருக்கு நன்றிகூறியதாக சம்பந்தன் என்னிடம் தெரிவித்திருந்தார். திரியாய்க் கிராமம் மிகத் தொன்மையான தமிழ்க் கிராமம் ஆகும். நீலப்பனிக்கைக்குளம், 1940 ஆம் ஆண்டு புனருத்தாரனம் செய்யப்பட்டபின்னர் இக்குளத்திற்கு அண்மையாக உள்ள கிராமங்களில் நெற்பயிர்ச்செய்கை நடைபெற்று வந்தது. நிர்வாகக் கோளாறு ஒன்றின் காரணமாக இக்காணிகளில் விவசாயம் செய்துவந்த தமிழர்களுக்கான காணி உரிமைப் பத்திரத்தினை அன்றைய நிர்வாகம் வழங்கத் தவறியிருந்தது. 1980 ஆம் ஆண்டு, இப்பகுதிக்கு வந்த திருகோணமலை அரச அதிபர் ஜயதிஸ்ஸ பண்டாரகொட, தமிழ் விவசாயிகளுக்கு இக்காணிகளுக்கான உரிமையாளர் பத்திரம் இன்மையினால் அவர்கள் உடனடியாக இப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கட்டளையிட்டதுடன், இப்பகுதியில் 2000 ஏக்கரில் மரமுந்திரிகைத் திட்டம் ஒன்றினை தாம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறினார். திரியாயில் தமிழ் விவசாயிகளை விரட்டிவிட்டு மரமுந்திரிகைத் திட்டம் ஒன்றினை அரசாங்க அதிபர் நடைமுறைப்படுத்தவுள்ளதை அறிந்த சம்பந்தன் உடனடியாகக் கொழும்பிற்குச் சென்று தோட்டப் பயிர்ச்செய்கை கைத்தொழில் அமைச்சர் ஜயவர்தனவைச் சந்தித்து இதுகுறித்துப் பேசினார். நெற்பயிற்செய்கை நடக்கும் காணிகளில் மரமுந்திரிகை செய்ய அரச அதிபர் முயற்சிப்பது குறித்து அமைச்சர் அறிந்தபோது திகைப்படைந்தார். மரமுந்திரிகைப் பயிர்ச்செய்கைக்கு அதிக நீர் தேவைப்பாடதென்பதுடன் சாதாரண தரையமைப்பே அதற்கு உகந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. "இந்தத் திட்டத்திற்கான உத்தரவைனை வழங்கியது யார்?" என்று சம்பந்தர் அமைச்சரைக் கேட்டார். தன்னை மன்னித்துவிடும்படி கேட்டுக்கொண்ட அமைச்சர், மரமுந்திரிகைத் திட்டத்திற்கான உத்தரவு அதிமேலிடத்திலிருந்தே தனக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார். அதிமேலிடம் என்று அமைச்சர்களும், அதிகாரிகளும் குறிப்பிடுவது ஜனாதிபதி ஜெயாரைத்தான் என்பதை சம்பந்தன் அறிந்தே வைத்திருந்தார். "என்னால் எதுவும் செய்யமுடியாது, நீங்கள் பெரிய மனிதரிடம் தான் இதுகுறித்துப் பேச வேண்டும்" என்று அமைச்சர் கைவிரித்து விட்டார். ஆகவே, சம்பந்தன் ஜெயாரைச் சந்தித்துப் பேசினார். ஜெயாரின் சிந்தனையில் ஏறும்வகையில் சம்பந்தன் அவரிடம் இவ்விடயத்தைப் பற்றி வினவினார், "இப்பகுதியில் வாழ்ந்துவருவது தமிழர்களா சிங்களவர்களா என்பதை விட்டு விடலாம், ஆனால், நெற்பயிர்ச்செய்கைக்காக கிராமக் குளத்திலிருந்து நீர்ப்பாசணம் செய்யப்பட்ட காணிகளில் மரமுந்திரிகையினை பயிர்செய்த முதலாவது ஜனாதிபதி என்கிற பெயர் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?" என்று அவரைப் பார்த்துக் கேட்டார் சம்பந்தன். இதனையடுத்து மரமுந்திரிகைத் திட்டத்தை இரத்துச் செய்யும் உத்தரவினை ஜெயார் வழங்கினார். தனது ஆட்சிக்காலத்தின் ஆரம்பப்பகுதியில் தன்னை ஒரு நீதியான அதிபராகக் காட்ட முனைந்திருந்தார் ஜெயார். ஜெயாரிடமிருந்து டெயிலி நியூஸ் பத்திரிகைக்கு உத்தரவு ஒன்று வந்திருந்தது. தான் வழங்கும் ஒவ்வொரு பேச்சும் தான் பேசியதுபோல, அதே ஒழுங்கில் அச்சிடப்படவேண்டும் என்பதே அந்த உத்தரவு. இதற்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்த பத்திரிக்கை ஆசிரியர், "நாம் ஒரு பத்திரிக்கை தான் நடத்துகிறோம், பாராளுமன்றப் பதிவேடு அல்ல" என்று கூறினார். "நீங்கள் பேசிய ஒழுங்கிலேயே நாம் அதனைப் பிரசுரித்தால் உங்கள் பேச்சின் கருப்பொருள் பத்திரிக்கைச் செய்தியின் அடித்தளத்திற்கல்லவா போய்விடும்?" என்று அவர் ஜெயாரிடம் கேட்டார். அதற்குப் பதிலளித்த ஜெயார், "எனக்கு செய்தி முக்கியமில்லை, எனது பேச்சு சரித்திரத்தில் இடம்பெறவேண்டும், அவ்வளவுதான்" என்று தீர்க்கமாகக் கூறினார். இவ்வாறே எனது நண்பரும், பிரபல நீதிமன்ற செய்தியாளருமான நோர்ட்டன் வீரசிங்க ஜெயாரினால் ஒரு ஜனாதிபதியின் பேச்சினை சேகரிக்கும் நிருபராக ஆக்கப்பட்டார். அவரது வேலையெல்லாம் ஜெயாரின் பேச்சினை அப்படியே எழுதிக்கொள்வது. பின்னர் அதனை ஜெயாரிடம் காட்டி பிரசுரிப்பதற்கான அனுமதியினைப் பெற்றுக்கொள்வது என்பதாகவே இருந்தது. பெரும்பாலான நேரங்களில் ஜெயாரின் பேச்சு பத்திரிக்கையின் அதிகாலை நேர வெளியீட்டில் உள்ளடக்க முடியாது போய்விடும். சிலவேளைகளின் அவரின் பேச்சு மறுநாள் வெளியீட்டிலேயே வந்திருந்தது. மரமுந்திரிகைத் திட்டத்தை இரத்துச் செய்யும் ஜெயாரின் உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதாக சம்பந்தன் என்னிடம் கூறினார். காமிணி திசாநாயக்கவுடனான சம்பந்தனின் அனுபவம் வித்தியாசமானது. தமிழரின் பூர்வீக கிராமமான பெரியவிளாங்குளம் பகுதியில் ஐரோப்பிய நாடுகளின் பண உதவியோடு காமிணி திசாநாயக்க மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் "மகாடிவுளுவெவ" என்று சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சிங்களக் குடியேற்றம் ஒன்று நடைபெற ஆரம்பித்திருந்தது. இதனை அறிந்த சம்பந்தன் உடனடியாக இந்தக் குடியேற்றத்தை நிறுத்துமாறு காமிணியிடம் கோரியிருந்தார். சபந்தனின் முன்னால் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகக் கூறிய காமிணி அவர் முன்னாலேயே அத்திட்டத்தினை இரத்துச் செய்யும் உத்தரவினை மகாவலி அபிவிருத்திச் சபைக்கு வழங்கினார். ஆனால், சம்பந்தனை ஏமாற்றிய காமிணி, உடனடியாக திருகோணமலை அரச அதிபரான ஜயதிஸ்ஸ பண்டாரகொடவை தொலைபேசியில் தொடர்புகொண்டு , பெரியவிளாங்குளம் பகுதியை முற்றான சிங்களக் குடியேற்றமாக்கும் திட்டத்தினை துரிதப்படுத்தி, தான் அனுப்பிய இரத்துச் செய்யும் உத்தரவு அரச அதிபருக்குக் கிடைப்பதற்கு முன்னர், திட்டம் பூர்த்தியாக்கப்படவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார். பின்னாட்களில் தான் எமாற்றப்பட்டதை சம்பந்தன் அறிந்துகொண்டபோது மனமுடைந்துபோனார். எப்படியான சிங்கள இனவாதிகளுடன் தாம் அரசியல் நடத்தவேண்டி இருக்கிறது என்று என்னிடமும் சலித்துக்கொண்டார். ஜெயாருடன் இன்னொரு விடயம் குறித்தும் சம்பந்தன் பேசியிருந்தார். அதுதான் காந்தியம் செயற்பாடுகள் குறித்து சிங்கள, ஆங்கில ஊடகங்கள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டு. சம்பந்தன் ஜெயாரைச் சந்தித்த அதே காலையில் சண்டே ஐலண்ட் பத்திரிக்கையும், தி வீக்கெண்ட் பத்திரிக்கையும் காந்தியம் மீது கடுமையான பிரிவினைவாதக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து செய்திகளைக் காவிவந்திருந்தன. சண்டே ஐலண்ட் பத்திரிக்கையில் எழுதிய பீட்டர் பாலசூரிய காந்தியம் மற்றும் ரெட்பாணா அமைப்புக்கள் மீது விசாரணை என்கிற தலைப்பில் செய்திவெளியிட்டிருந்தார். "மட்டக்களப்பில் சமூக சேவைகளில் ஈடுபட்டுவரும் தொண்டு நிறுவனமான ரெட்பாணாவின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி ஜெயவர்த்தனா தனிப்பட்ட ரீதியில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக நம்பகமாகத் தெரியவந்திருக்கிறது. அமைச்சர் K. W. தேவநாயகத்தின் குற்றச்சாட்டொன்றினை அடிப்படையாக வைத்தே ஜனாதிபதி இந்த விசாரணையினை மேற்கொள்ளவுள்ளார். மட்டக்களப்பில் ரெட்பாணாவும், வடக்கில் காந்தியமும் செய்துவரும் பல நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சந்தேகம் கொண்டிருப்பதாகவும், இதனாலேயே அரசாங்கத்தை அவர் எச்சரித்தார் என்றும் தெரியவருகிறது. காந்தியத்தின் செயற்பாடுகளை அமைச்சர் தேவநாயகம் சந்தேகிப்பதால், அந்த அமைப்பின் செயற்பாடுகள் குறித்த விரிவான அறிக்கையொன்றினை அவரது சமூக நலன் அமைச்சு ஜனாதிபதிக்கு உடனடியாக வழங்கவேண்டும் என்றும் கோரப்பட்டிருக்கிறது" என்பதே ஐலண்ட் பத்திரிக்கையின் செய்தியாகும். இதேவகையான செய்தியையே தி வீக்கெண்ட் பத்திரிக்கையில் ரனில் வீரசிங்கவும் ஜெனிபர் ஹென்றிக்ஸும் எழுதியிருந்தார்கள். "காந்தியம் மற்றும் ரெட்பாணா அமைப்புக்களின் செயற்பாடுகள் குறித்து அமைச்சர் தேவநாயகம் உயர் மட்ட அமைச்சர் கூட்டத்தில் எழுப்பிய சந்தேகங்களையடுத்து இவ்விரு அமைப்புக்கள் மீதும் விசாரணைகள் ஆரம்பமாகவிருப்பதாக நம்பகமாகத் தெரியவருகிறது. ஸ்கண்டிநேவிய நாடுகளின் பண உதவியுடன் செயற்பட்டுவரும் இந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் குறித்து திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் அமைச்சும், சமூக சேவைகள் அமைச்சும் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளன" என்பதே அந்தச் செய்தியாகும். சிங்கள அரசில் அமைச்சராகவிருந்த தேவநாயகம் என்னிடம் மேலும் பேசிய சம்பந்தன், காந்தியம் மற்றும் ரெட்பாணா அமைப்புக்கள் மீதான விசாரணைபற்றி தான் அறிந்துகொண்டவுடன் அமைச்சர் தேவநாயகத்துடன் தான் உடனடியாகத் தொடர்புகொண்டு ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று வினவியதாகவும், அதற்குப் பதிலளித்த அமைச்சர் தேவநாயகம், இந்த அமைப்புக்கள் குறித்து தான் எந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் பேசியதில்லையென்றும், ஆனால் தனது பெயரைப் பாவிப்பதன்மூலம் இச்செய்திக்கும் உத்தியோகபூர்வ அந்தஸ்த்தினைக் கொடுக்க சிலர் முயல்வதாகவும் கூறியதோடு இச்செய்தி உண்மையாக இருக்கலாம், ஏனென்றால் ஜனாதிபதி ஜெயவர்த்தனவே இந்த விசாரணைகள் நடக்கவேண்டும் என்று விரும்புவதாகவும் கூறினாராம். "நான் ஜனாதிபதி ஜெயவர்த்தனவுடன் பேசும்போது காந்தியத்தை முற்றாக நசுக்கிவிடும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது தெரிகிறது என்று கூறினேன். பட்டிணியினாலும், ஏழ்மையினாலும் வாடும் மக்களுக்கு காந்தியம் சிறப்பான தொண்டினை ஆற்றி, அவர்களை கெளரவத்துடன் வாழ வழி வகுத்து வருகிறது. என்னுடன் வந்து காந்தியம் செய்துவரும் தொண்டினை ஜெயார் பார்க்கவேண்டும் என்று அவரிடம் கேட்டேன். அதற்குப் பதிலளித்த ஜெயார், நீங்கள் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் நான் வந்து பார்க்கவேண்டிய தேவையில்லை என்று கூறி எனது கோரிக்கையினை அவர் மறுத்துவிட்டார்" என்று சம்பந்தன் என்னிடம் கூறினார். காந்தியத்தின் செயற்பாடுகளைத் தன்னுடன் வந்து பார்வையிடுமாறு தான் கேட்டுக்கொண்ட கோரிக்கையினை ஜெயார் நிராகரித்தபோதே காந்தியத்தை அழிக்க அவர் உறுதிபூண்டுவிட்டார் என்பதை தான் அறிந்துகொண்டதாக சம்பந்தன் என்னிடம் கூறினார். பின்னாட்களில் நடந்த சம்பவங்கள் இதனை உறுதிப்படுத்தின என்றும் சம்பந்தன் கூறினார்.
  9. கச்சான் அல்வா, பாப் கான், மிக்சர், சோடா, எல்லாம் எடுத்து கொண்டு கூத்து பார்க்க நான் தயார். 🍿🥤🍭🥤
  10. ஓம்.....சுத்து முத்து பார்க்கும்போது கார்மேகத்தையும் காணவில்லை........உது சிறியற்ற சுத்து மாத்து வேலை போலை .......! 😂 (எப்படியும் ஒரு பக்கமாவது ஓடட்டும்).
  11. Suggestions Variety of images · Rejoindre Sriram Govind · · நாகர்கோவிலிலிருந்து மெளன்டன்வியூ வந்து இன்றைக்கு இரண்டு மாதமாகிறது. ஆனால், இருபது வருடங்கள் ஆனதுபோல் மன இறுக்கம். அறுபதே நாளில் எப்படித் தலைகீழாக என் வாழ்க்கை மாறிவிட்டது? பிறந்தது முதல் அறுபத்தைந்து வருடங்கள் நாகர்கோவில் ஒழுகினசேரி கிராமத்தில். காலை எழுந்திருப்பது, பழையாற்றில் குளியல், சேது லட்சுமிபாய் பள்ளிக்கூடத்தில் படிப்பு, லாலாக்கடை அல்வா, சங்கர அய்யர் ஹோட்டல் ரசவடை, லட்சுமி தியேட்டர் தரை டிக்கெட் சினிமா என்று சிறுவயது வாழ்க்கை. அப்புறம் மணிமேடை ஜங்ஷனில் இருக்கும் போஸ்ட் ஆஃபீசில் கிளார்க் வேலை. மாமா மகள் சரோஜாவோடு கல்யாணம். கறிவேப்பிலைக் கொழுந்தாக மகன் மணி. படிப்பில் படு சுட்டி. சென்னை ஐ.ஐ.டி.யில் எஞ்சினீயரிங் படித்தான். அமெரிக்காவில் மேற்படிப்பு. அங்கேயே தங்கிவிட்டான். தங்கமான பையன். நாங்கள் பார்த்துவைத்த தூரத்து சொந்தக்காரப் பெண் கலாவோடு திருமணம். இரண்டு பேரும் கூகிள் கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள். ஆதித் என்று நான்கு வயது மகன், இரண்டு வயது மகள் ஆத்யா. இருவரும் டே கேர் போகிறார்கள். மணி குடும்பத்தோடு வருடாவருடம் எங்களைப் பார்க்க வருவான். ஒவ்வொரு தடவையும், அவனும், கலாவும் அமெரிக்காவுக்கு வரும்படி சொல்லுவார்கள். சரோஜா அழகாகப் பதில் சொல்லுவாள், "நீங்க செடியாக இருக்கறப்ப அமெரிக்கா போய்ட்டீங்க. அங்கே வேரூன்ற முடிஞ்சுது. நாங்க மரம்டா, அறுபது வயசு மரம். எங்களைப் பிடுங்கி நடாதே. இந்த ஊரைவிட்டு எங்களால் வரவே முடியாது." மகராசி, சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற அவளால் முடிந்தது. இந்த வருஷம், அவளுக்கு அறுபது வயசுப் பிறந்த நாள். நாகராஜா கோவிலில் அர்ச்சனை செய்துவிட்டுத் திரும்பினோம். அசதியாக இருக்கிறது என்று படுத்தாள். நெஞ்சு வலித்தது. என் மடியில் படுத்துக்கொண்டே போய்விட்டாள். "நாம் யாருக்குமே கெடுதல் நெனைச்சது கிடையாது. அதனால், நமக்கு அநாயச மரணம்தான் வரும் உங்களுக்கு அப்புறம்தான் நான் போகணும். ஏன் தெரியுமா? காப்பிகூட உங்களுக்குப் போடத் தெரியாது, திண்டாடித் திணறிடுவீங்க" என்று அடிக்கடி சொல்லுவாள். அவள் பாதிப் பிரார்த்தனை பலித்துவிட்டது. அநாயசமாகப் போய்விட்டாள். நான் மாட்டிக்கொண்டேன். மணி வந்தான். காரியங்கள் முடிந்தன. "அப்பா, நீங்க எங்களோட அமெரிக்கா வர்றீங்க." "நான் பக்கத்துத் திருவனந்தபுரம் தவிர, தமிழ்நாட்டை விட்டு வேறு எங்கேயும் போனதே கிடையாதே? எப்படிடா வருவேன்? என்னை விட்டுடு." "உங்களைத் தனியா விட்டுப் போகமாட்டேன். நீங்க வந்தே ஆகணும்." "ரெண்டு நாள் தா. ஆலோசிச்சுச் சொல்றேன்." பால்ய சிநேகிதன் ஹரியோடு பேசினேன். அவன் சொன்னான், "நம்ம ஊர்ல என்னடா இருக்கு? நம்ம வயசுக்காரங்கள்லே நாமும், சாமிநாதனும்தான் மிச்சம். இந்தக் காலத்துல பசங்க அப்பா, அம்மாவை வெச்சுக் காப்பாத்தறதே ஆச்சரியம். உனக்கு, மகன், மருமகள் ரெண்டு பேருமே பிரியமாக் கூப்பிடறாங்க. தயங்காமப் போயிடு." மணிக்கும், கலாவுக்கும் ஒரே சந்தோஷம். "யூ ஆர் கமிங் வித் அஸ் தாத்தா" என்று ஆதித் கட்டிக்கொண்டான். என்னவென்றே புரியாமல் குழந்தை ஆத்யாவும் Huggy தந்தாள். ஆமாம், அறுபத்து ஐந்து வயது மரம், தன் வேர்களைப் பெயர்த்துக்கொண்டு அமெரிக்காவில் வேரூன்ற முடிவெடுத்துவிட்டது. ஹரி, பழையாறு, நாகராஜா கோவில், மணிமேடை ஜங்ஷன் எல்லாத்துக்கும் டாட்டா சொன்னேன். நாகர்கோவிலுக்குத் திரும்பிவருவேன் என்று எனக்கு நம்பிக்கையில்லை. அமெரிக்கா வந்துவிட்டேன். மணியும், கலாவும் எனக்காக லீவு எடுத்திருந்தார்கள். ஆதித், ஆத்யா டே கேர் போகவில்லை. நாள் முழுக்க அரட்டை, குழந்தைகளோடு விளையாட்டு. பெரிய வீடு. சுற்றிலும், சிகப்பு, வெள்ளை, மஞ்சள் எனப் பூத்துக் குலுங்கும் ரோஜாக்கள். ஒவ்வொரு பூவும் பெரிசு பெரிசாய்… நாகர்கோவில் கலைவாணர் பூங்காவில்கூட இத்தனை தினுசு இத்தனை பெரிசு கிடையாது. வீட்டின் பின்புறம், பிள்ளைத்தாய்ச்சி போல் ஆரஞ்சு, ஆப்பிள் மரங்கள். ரோஜாக்களைத் தொட்டுத் தடவுவேன். ஆப்பிளை மரத்திலிருந்து பறித்துச் சாப்பிடுவேன். அனுபவம் புதுமை. அமெரிக்கா சொர்க்கமாக இருந்தது. இரண்டு வாரங்கள் ஓடின. மணி சொன்னான், "அப்பா, நாளை முதல் நானும், கலாவும் ஆபீஸ் போகணும். ஆதித், ஆத்யாவுக்கும் கிரெஷ் ஸ்டார்ட்டிங்." மறுநாள் காலை. ஆறு மணிக்கே வீடு அல்லோல கல்லோலப்பட்டது. பச்சைக் குழந்தைகளை அரைத் தூக்கத்தில் எழுப்பினார்கள். ஏழரை மணிக்கு எல்லோரும் ரெடி. காலையில் மணி குழந்தைகளை டே கேரில் விடுவானாம், மாலை ஆறு மணிக்குக் கலா கூட்டிக்கொண்டு வருவாளாம். இப்படிப் பொறுப்பைப் பகிர்ந்துகொள்ளும் ஏற்பாடு. புறப்படும்போது மணி சொன்னான், "அப்பா, இந்த ஏரியா பத்திரமானதுதான். ஆனால், நாம் ஜாக்கிரதையா இருக்கணும்." "அப்படீன்னா…!" "யாராவது கதவைத் தட்டினா திறக்காதீங்க. நான் சன் டிவி, ஜெயா டிவி, ஹீரோ டாக்கீஸ் கனெக்‌ஷன் எல்லாம் வாங்கியிருக்கேன்." எப்படி டி.வி. போடுவது, சினிமா பார்ப்பது என்றெல்லாம் விளக்கினான். கொஞ்ச நேரத்தில் எல்லோரும் போய்விட்டார்கள். நான் மட்டும் தனியாய். ஒரே நிசப்தம். என்னை அறியாமலே மனம்முழுக்கப் பயம். வாழ்க்கையில் இத்தனை நிசப்தத்தை நான் அனுபவித்ததே கிடையாது. ஒழுகினசேரியில், குழந்தைகள் விளையாட்டு, அக்கம் பக்கப் பெண்களின் அரட்டை, ஆண்களின் அரசியல் விவாதங்கள், டிவி அலறல் என்று கிராமமே அதிரும். ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். ரோட்டில் கார்கள்கூட அதிகம் காணவில்லை. மனிதர்களே இல்லாத அத்துவானக் காட்டில் என்னை யாரோ விட்டுப்போனதுபோல் வெறுமை. வயிறு பசித்தது. டேபிள்மேல் காலைக்கு இட்டிலி, மதிய உணவு, ஃபிளாஸ்க் நிறையக் காப்பி. மருமகள் கலா அன்போடு சமைத்துவைத்துப் போயிருந்தாள். எனக்கு ஒரு குணம். தானாகவே எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிடுவது நான் வெறுக்கும் சமாச்சாரம். இதற்கு முக்கிய காரணம் என் தர்மபத்தினி சரோஜாதான். கல்யாணம் ஆகும்வரை அம்மா பரிமாறுவாள். அப்புறம் அத்தனை நாளும் சரோஜாதான். சில கல்யாணங்களில் பஃபே விருந்து இருக்கும். அங்கேயெல்லாம் சரோஜாவே தட்டில் போட்டு எனக்குத் தந்துவிடுவாள். இட்டிலி சாப்பிடத் தொடங்கினேன். நானே எடுத்துச் சாப்பிடும்போது, ஒவ்வொரு விள்ளலும் தொண்டைக்குக் கீழ் இறங்க மறுத்தது. டிவி போட்டேன். அதுவும் போரடித்தது. படுத்தேன். என்னை அறியாமலே தூங்கிவிட்டேன். மதியம். கடனே என்று சாப்பாடு. சாயந்தரம் வந்த கலா பதறிவிட்டாள். "மாமா, நீங்க சாப்பிடவேயில்லையே? உப்பு, காரம் ஏதாவது அதிகமாகப் போட்டுட்டேனா? உங்க உடம்பு சரியா இருக்கில்ல?" "இல்லம்மா. உன் சமையல் சூப்பர். என் உடம்பும் நல்லாத்தான் இருக்குது. ஏதோ ஊர் நினைப்பு." கலா அப்புறம் மணியோடு வந்து பேசினாள். "உங்களுக்கு போரடிக்குதுன்னு நினைக்கிறேன். ஸில்வன் பார்க் பக்கத்தில்தான் இருக்குது. நடக்கிற தூரம்தான். இந்தச் சனி, ஞாயிறு உங்களைக் கூட்டிட்டுப் போய்க் காட்டறேன். நீங்க தினமும் சாயந்தரம் போகலாம்." சனி, ஞாயிறு போனேன். நிறைய இந்தியக் குடும்பங்கள். ஆதித், ஆத்யாவோடு பந்தைத் தூக்கிப்போட்டு விளையாடினேன். ஜாலியான நேரங்கள். தினமும் ஸில்வன் பார்க் போகத் தொடங்கினேன். ஒரே ஒரு பிரச்சனை. வீட்டைப் பூட்டினோமா என்று சந்தேகம். இழுத்து, இழுத்துப் பார்ப்பேன். சாவியைப் பத்திரமாக வைத்துக்கொண்டிருக்கிறோமா என்று மனசு வேகமாக லப், டப் அடிக்கும். அடிக்கடி சட்டைப் பாக்கெட்டைச் செக் பண்ணிக்கொள்வேன். சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் டென்ஷன், டென்ஷன். அமெரிக்காவில் காலெடுத்து வைத்தாலே வாழ்க்கை எந்திரகதி ஆகிவிடும் போலிருக்கிறது. திங்கள் டு வெள்ளி டிவி, ஸில்வன் பார்க்: சனி, ஞாயிறு சன்னிவேல் கோவில், காஸ்ட்கோ போய் மளிகைச் சாமான்கள், நம்மூர் ஹோட்டலில் சாப்பாடு. இரண்டு மாதத்தில் அமெரிக்கா வெறுத்துவிட்டது. அதிலும், ஸில்வன் பார்க்கில் பெரும்பாலும் வருபவர்கள் இந்தி, தெலுங்குக்காரர்கள். ஆங்கிலம் தெரிந்தாலும், இந்தி, தெலுங்கு பேசினார்கள். எனக்கு இரண்டுமே சுட்டுப்போட்டாலும் புரியாது, வராது. ஒரு வயதான தமிழ்த் தம்பதியைப் பார்த்தேன். சிரித்தேன். பதிலுக்குச் சிரித்தார்கள். ஹலோ சொன்னேன். ஹலோ சொன்னார்கள். அப்புறம், நான் பக்கத்தில் நிற்பதையே மறந்துவிட்டு, அவர்களுக்குள் பேசத் தொடங்கினார்கள். நான் நகர்ந்தேன். பார்க் கிரவுண்டில் நான் போகும்போதெல்லாம் சின்னப் பையன்கள் ஸாக்கர் விளையாடுகிறார்கள். அதைப் பார்ப்பதுதான் என் பொழுதுபோக்கு. அதேநேரம், மனக்குரங்கு எங்கெங்கோ அலைபாயும். வேலை வெட்டி இல்லாத மூளை சாத்தானின் கூடாரமாகும். அமெரிக்கா வந்ததே தப்போ, நாகர்கோவிலிலேயே இருந்திருக்கலாமோ, மணியும், கலாவும் என்னைக் கூட்டிக்கொண்டு வந்தது உண்மையாகவே என்மீது இருக்கும் பாசத்தாலா, அல்லது ஆதித், ஆத்யாவுக்கு விளையாட்டுப் பொம்மையாகவா? இப்படி நினைத்த சில நிமிடங்களிலேயே, இப்படிக் கீழ்த்தரமாகச் சிந்திக்கிறோமே என்று என்னையே திட்டிக்கொள்வேன். ஒரு வாரமாக ஒரு புதுப்பையன் வருகிறான். ஒன்பது, பத்து வயசு இருக்கலாம். பளிச் முகம். சூம்பிப்போன கால்கள். போலியோ பாதிப்பு. ஊன்றுகோல்களோடு மெள்ள நடந்து வருவான். உடையைப் பார்த்தால், அதிகம் வசதி உள்ளவனாகத் தெரியவில்லை. ஸாக்கர் மைதானம் அருகே ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருப்பான். தன்னால் விளையாட முடியவில்லையே என்னும் சோகம் அவனுக்குள் நிச்சயம் இருக்கவேண்டும். அடிக்கடி என்னைத் திரும்பிப் பார்ப்பான். ஆனால், ஏதோ தயக்கம் தெரியும். என்னிடம் பண உதவி எதிர்பார்க்கிறானோ? எதற்கும், கவனமாக இருப்பது நல்லது. இன்று அந்தப் பையன் என்னருகே வந்தான். "தாத்தா, நீங்க தமிழா?" "ஆமாம். ஏன்? நீ தமிழா?" "ஆமாம். நான் உங்க பக்கத்திலே உட்காரலாமா? உங்ககூடக் கொஞ்சம் பேசணும்." என் மனக்குறளி சொன்னது, "இந்தப் பயல் டாலர்தான் கேட்கப் போறான்." "தாத்தா, என் பேரு கண்ணன். எங்க ஊரு தர்மபுரி." "சேலம் பக்கத்தில் இருக்கிற ஊர்தானே?" "ஆமாம். எங்க அப்பா ரொம்பக் குடிப்பாரு. என் மூணு வயசுலேயே இறந்து போயிட்டாரு. அம்மாதான் என்னை வளத்தாங்க. போன வருஷம், ஒரு கார் விபத்தில் அவங்க உயிர் போயிடிச்சு. ராமகிருஷ்ண மடம் சாமிகள் என்னைக் கூட்டிட்டுப் போய்ப் படிக்கவெச்சாங்க. அங்கே சாமிக்குத் தெரிஞ்ச ஒரு அம்மா வந்தாங்க. அரசாங்க அனுமதி வாங்கி என்னைக் கூட்டிட்டு வந்திருக்காங்க. நல்லாப் பாத்துக்கறாங்க. வீட்டிலே இங்கிலீஷ் சொல்லித் தர்றாங்க. சீக்கிரமே ஸ்கூல்லே சேப்பாங்க. நான் நல்லாப் படிச்சுப் பெரிய ஆளா வருவேன்." "ஆசீர்வாதம் தம்பி." "நன்றி தாத்தா. எனக்கு உங்ககிட்டே ஒண்ணு கேக்கணும். தப்பா நினைக்க மாட்டிங்களே?" ஒருவழியாப் பயல் பணந்தான் கேட்கப் போறான். "சொல்லுப்பா." "நீங்க எப்பவும் ஏன் சோகமா உட்கார்ந்திருக்கீங்க?" "ஏதோ நெனைப்புகள் தம்பி." "தாத்தா. நான் அநாதை. கால் நடக்கமுடியாது. ஆனால், ராமகிருஷ்ண மடம் சாமியார் என்னைக் கிராமத்திலிருந்து கூட்டிட்டுப் போனது என் அதிர்ஷ்டம். சாந்தி அம்மா அமெரிக்காவுக்கு அழைச்சு வந்தது என் அதிர்ஷ்டம். இதை நெனச்சு, நெனச்சு, நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?" "நெஜமாவா? எப்படிடா?" அந்தப் பொடியன் என் முன்னால் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறான். அவனை, என்னிடம் காசுக்குக் கையேந்தி வருகிறவனா நெனைச்ச நானெல்லாம் ஒரு மனுஷனா! "ராமகிருஷ்ண மடம் சுவாமிஜி எனக்கு ஒரு கதை சொன்னார். மனசுலே வருத்தம் வர்றப்போ எல்லாம், அந்தக் கதையை நினைவுபடுத்திக்கச் சொன்னார்." "என்னப்பா கதை அது?" "ரொம்ப நாள் முன்னாடி, ஒரு ராஜா இருந்தார். அவருக்குத் தீராத தலைவலி. வைத்தியர்கள் வகை வகையா மருந்து கொடுத்தும் குணமாகலே. ஒரு ஜோசியர் வந்தார். ராஜா பச்சை நிறத்தை மட்டும் பாத்துக்கிட்டேயிருந்தா தலைவலி போயிடும்ன்னு சொன்னார். நாடு முழுக்கப் பச்சைப் பெயிண்ட் அடிச்சாங்க. நாட்டில் எல்லோரும் பச்சை டிரெஸ் மட்டுமே போடலாம்னு கட்டளையிட்டாங்க. ஆனா, குதிரை யானை, வானம் நிறங்களை மாற்ற முடியுமா? இவற்றை ராஜா சிலசமயம் பார்த்துவிடுவார். தலைவலியால் துடிப்பார். ராஜாவுக்குத் தெனாலிராமன் மாதிரி ஒரு விகடகவி. ஒரு சுலபவழி சொன்னார், நீங்க பச்சைநிறக் கண்ணாடி அணியுங்க. அப்புறம் நீங்க எதைப் பாத்தாலும், தலைவலி வராது. ராஜா அதைப் பின்பற்றினார். அவர் தலைவலி போயே போச்." நான் பிரமிப்பில். சந்தோஷம் வெளியில் இருந்து வருவதில்லை. நமக்குள்தான் இருக்கிறது. நம் அணுகுமுறையை மாற்றிக்கொண்டால், இனியெல்லாம் சுகமே என்னும் தத்துவம் இந்தக் குட்டிக்கதைக்குள்ளா? "தாத்தா. லேட் ஆகுது. சாந்தி அம்மா தேடுவாங்க. வீட்டுக்குப் போறேன். நாளைக்குக் கட்டாயம் உங்க கதையைச் சொல்லுங்க." ஊன்றுகோல்களின் டொக் டொக் சப்தம். திரும்பிப் பார்த்துக்கொண்டே போகிறான். எனக்குள் பிரம்மாண்டக் கேள்வி - இவன், வெறும் தர்மபுரிக் கண்ணனா, அல்லது கீதோபதேசக்காரரின் மறுபிறவியா? வீட்டுக்கு வருகிறேன். என் நடையில் என்னை அறியாமலே, ஒரு துள்ளல். மணி வந்தவுடன், கலா அவனிடம் மெள்ளச் சொல்கிறாள், "ரொம்ப நாளைக்கு அப்புறம், மாமா இன்றைக்குச் சந்தோஷமா இருக்கார்." நான் மகனிடம் போகிறேன். "மணி, பொழுதை வீணாக் கழிக்க எனக்குப் பிடிக்கலே. எங்கேயாவது பார்ட் டைம் வாலன்டியரா ஒர்க் பண்ண முடியுமா?" "என் ஃபிரண்ட் முகுந்த் நிறைய சோஷியல் ஒர்க் பண்றான். அவன்கிட்டே சொன்னா, உடனே ஏற்பாடு பண்ணுவான். அது சரி, திடீர்னு ஏன் உங்களுக்கு இந்த யோசனை?" சத்தியமான பதில் என்னை அறியாமலே வரத் துடிக்கிறது, 'நான் கண்ணாடியை மாத்திட்டேன்!' இதைச் சொன்னால் மணிக்குப் புரியாது. வெளியே வரத்துடிக்கும் வார்த்தைகளை விழுங்குகிறேன். சிரிக்கிறேன். அப்பனுக்கும், மகனுக்குமிடையே புன்முறுவல்கள் ஆயிரமாயிரம் சேதிகள் சொல்லும்......!
  12. ஜிமிக்கி கம்மல்.........

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.