Jump to content

Leaderboard

  1. பகிடி

    பகிடி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      16

    • Posts

      481


  2. ரஞ்சித்

    ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      8749


  3. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      80918


  4. தனிக்காட்டு ராஜா

    தனிக்காட்டு ராஜா

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      9927


Popular Content

Showing content with the highest reputation on 07/13/23 in all areas

  1. 2014 இல் யாழ்ப்பாணதில் இருந்து கொழும்பு நோக்கிப் போய்க்கொண்டு இருந்த பொழுது மாங்குளம் அருகில் எனக்கு முன்னுக்கு இருந்த இருக்கையில் இருந்த இராணுவ சிப்பாய் அருகில் இருந்து 11 வயது சிறுமியோடு சில்மிஷம் செய்து இருக்கிறான். ( என் கண் முன்னாலே அந்தச் சின்னப்பிள்ளையின் பிறப்புறுப்பில் கை வைத்தான். ) அந்த சிறுமி முன்னால் இருந்து தகப்பனிடம் முறையிட அவர் அந்தப் பிள்ளையை இருக்கையை மாற்றி அமர செய்தார். ஆனால் அந்தப் பெண் பிள்ளையோ அழுது கொண்டே இருந்தது. எனக்குப் பொறுக்கவில்லை. நான் உடனே சிறுவர் துஸ்பிராயோகம் நடந்தால் phone செய்ய வேண்டிய இடத்துக்கு அழைத்து விஷத்தை ஆங்கிலத்தில் சொல்ல அவர்கள் மாங்குளம் போலீஸ் ஸ்டேஷன்க்கு அறிவித்து போய்கொண்டு இருந்த பேரூந்தை இடையில் மறித்த போலீஸ் வந்து அந்த சிப்பாயை கைது செய்து என்னுடன் வாக்கு முலமும் வாங்கி அழைத்துச் சென்றனர். பஸ்ஸில் இருந்த அநேகமானவர்கள் தமிழர்கள்.போலீஸ் வரும் முன் அந்த சிப்பாய் மற்றும் சிங்கள பஸ் ஓட்டுநர், சிங்கள டிரைவர், ஏனைய இராணுவ வீரர்கள் ஆகியோர் என்னுடன் கொழுவலுக்கு வர ஒரே ஒரு கொழும்பு அக்காவைத் தவிர மீதி அனைவரும் இவன் ஏன் வம்பை விலை கொடுத்து வாங்கிறான் என்ற மாதிரிதான் பார்த்தார்கள்.
    9 points
  2. 35 இலட்சம் ரூபாய் செலவில் வீதியைப் புனரமைத்துக் கொடுத்த நபர் பெயர் குறிப்பிட விரும்பாத நபரொருவர் யாழில் சுமார் 35 இலட்சம் ரூபாய் செலவில் 2 கிலோமீற்றர் வரையிலான வீதியைப் புனரமைத்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கிலிருந்து கடற்கரையில் உள்ள நாலாம் பனை பிள்ளையார் ஆலயத்திற்க்கு செல்கின்ற வீதியும், அங்கிருந்து கடற்கரைக்கு செல்கின்ற வீதியுமே இவ்வாறு புனரமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் முந்நூறு மீற்றர் வரை, 5 அடி வரை உயரமாக மண் அரண் அமைக்கப்பட்டு அதற்கு மேலாகக் கிரவல் இடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது குறித்த நபர் அக் கடற்கரை வீதியில் 100 க்கும் மேற்பட்ட சவுக்கு, இலுப்பை மரங்களை நாட்டி அதனைப் பராமரித்தும் வருகின்றார் எனவும் செயலிழந்து போன வீதி விளக்குகளை அவர் சீர் செய்து கொடுத்துள்ளதுடன் 17 வீதி விளக்குகளைப் புதிதாகப் பொருத்தியும் கொடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீண்ட தூரம் நடந்து பாடசாலைக்குச் செல்லும் பல மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள், உதிரி பாகங்கள், என்பனவும் வழங்கி கல்வி ஊக்கிவிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருவதுடன் பல்வேறு ஆண்மீகப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது சேவையை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். எனினும் தனது பெயரையோ தன்னைப்பற்றியோ ஊடகங்களுக்கு தெரிவிப்பதை அந்நபர் தவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1339281
    3 points
  3. மாமன்னன் எனும் மாமனிதன் -சுப. சோமசுந்தரம் இது திரை விமர்சனம் இல்லை; விமர்சனம் இல்லாமலும் இல்லை. 'மாமன்னன்' திரைப்படம் எழுப்பிய சிந்தனைச் சிதறல்கள் எனக் கொள்ளலாம். சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்படுவது சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள திரைப்படமான 'மாமன்னன்'. இயக்குனர் திரு. மாரி செல்வராஜ் அவர்கள் திரைக்கடலில் மூழ்கி எடுத்த மூன்றாவது முத்து இப்படம் - பரியேறும் பெருமாள், கர்ணன், வரிசையில் மாமன்னன். மூன்றுமே சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாய் நம் செவிப்பறையைத் தாக்குவன; அவர்களது வலியை நமக்குக் கடத்தி சமூகத்தின் மீது சம்மட்டி அடியாய் விழுவன. முதல் இரண்டு படங்களும் அவ்வலியின் சித்திரங்கள். 'மாமன்னன்' வலியின் நிவாரணியைக் கோடிட்டுக் காட்டுவதாகவே உணர்கிறேன். நாம் நினைக்கிற சமூக சீர்திருத்தங்களையெல்லாம் கொண்டு வர வேண்டுமென்றால் ஒரு ஜனநாயக அரசியலில் தேர்தல் களத்தை எதிர்கொண்டு ஆட்சிப் பொறுப்பிற்கு நாம் வரவேண்டும் என்று எண்ணிச் செயல்பட்ட அறிஞர் அண்ணாவை நினைவுறுத்துகிறது 'மாமன்னன்' திரைப்படத்தில் இறுதியில் சுட்டப் பெறும் வலி நிவாரணி. "நீங்க நீங்களாகவே இருக்கிற வரைக்கும், நான் நாயாகத்தான் இருக்கணும்னு நீங்க நினைக்கிற வரைக்கும் எதுவும் மாறாதுங்க !" என்று விரக்தி அடைந்த யதார்த்தவாதியான பரியேறும் பெருமாளிலிருந்து "உன்னால ஒருத்தனைத் திருப்பி அடிக்க முடிந்தும் நீ அவன்கிட்ட திரும்பத் திரும்ப அடி வாங்கினால் அது கோழைத்தனம்" என்று போதிக்கும் மாமன்னனாய் மாரி செல்வராஜ் காட்டும் பரிணாம வளர்ச்சி தமிழ்ச் சமூகத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சி. மூன்று படங்களையும் பற்றிய ஒரு சுருக்கமான பார்வை: 'பரியேறும் பெருமாள்' ஆணவக் கொலைகளை நேரடியாகப் பேசாவிட்டாலும் அவற்றைத் தொட்டுக் காட்டியது; 'கர்ணன்' கொடியங்குளம் கொடுமையை கண்முன் நிறுத்தியது; 'மாமன்னன்' இமானுவல் சேகரனைப் படம் பிடித்து, "சரி, இனி என்ன செய்யலாம் ?" என்ற நம்பிக்கை தரும் யதார்த்தத்திற்கு வருகிறது. முதற் படம் வருவதற்கு முன்பே தமது 'மறக்கவே நினைக்கிறேன்' மூலம் எழுத்துலகில் தடம் பதித்தவர் மாரி செல்வராஜ். எடுத்த எடுப்பிலேயே அவரது சான்றாண்மையை உலகிற்குப் பறைசாற்றியது அவர் எழுத்து. சாதியத்தின் வலிகளுக்குப் பெரும்பாலும் அப்பாற்பட்டது அந்த எழுத்து. சாதியக் கொடுமைகளை எழுத்தில் வடிப்பதை விட உயிரோவியமாய்த் திரையில் காட்டவே காத்திருந்தாரோ என்னவோ ! சாதித்தார். மூன்று படங்களிலும் சாதித்து விட்டார். எழுத்தாற்றலும் சொல்லாற்றலும் சிந்தனைத் தெளிவும் உள்ள ஒரு மனிதன் சாதித்துதானே ஆக வேண்டும் ! "நீ உட்காருப்பா, எந்திரிக்காதே ! என்று நாயகன் தன் தந்தைக்குக் கட்டளையிடுவதும், "அவர் உட்கார மாட்டார். அப்படித்தான் வழக்கம். யார் சொன்னாலும் கேட்க மாட்டார்" எனும் வில்லனின் சாதித் திமிரிடம், "நீங்க சொன்னீங்களா ?" என்று நாயகன் கேட்பதும் மாரி செல்வராஜின் சொல்லாற்றலுக்கும் சிந்தனைத் தெளிவிற்கும் சான்று பகர்வன. 'மாமன்னனி'ன் மேற்கூறிய இக்காட்சியிலும், முதல்வர் அறையில் அப்பா உட்கார்ந்து பேசுகிறாரா என்று பார்க்க அறையிலுள் வலுக்கட்டாயமாக நாயகன் நுழையும் காட்சியிலும், பின்னர் ஏதோ ஒரு விசேஷ வீட்டில் மேட்டிமைச் சாதியினர் முன் உட்கார்ந்து இருப்பதைத் தெளிவாகக் குறிக்கும் போதும் இமானுவேல் சேகரனும் முதுகுளத்தூரும் நம் மனக்கண்முன் வரவில்லையென்றால் நமக்கு சமூக, அரசியல், வரலாறு தெரியவில்லை என்று பொருள். நாற்காலியில் உட்காருவதெல்லாம் சமூகத்தில் ஒரு தலையாய பிரச்சனையா என்று சமூக வலைத்தளங்களில் கேட்கும் சில தற்குறிகளுக்கு மாரி செல்வராஜ் விடுக்கும் செய்தி - "நாற்காலியில் உட்காருவது, உட்காரச் சொல்வதெல்லாம் ஒரு குறியீடு". அறிவு, மானம் இவை உள்ளோர்க்கு அது புரியும். அது தலையாய பிரச்சினை இல்லையென்றால், இமானுவேல் சேகரன் ஏன் தன் உயிரைக் கொடுக்க வேண்டும் ? அது சுமார் எழுபது வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒன்று என்றால், இப்போது கூட ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் வகுப்பைச் சேர்ந்த ஒருவரைத் தரையில் உட்கார வைத்ததும், பள்ளித் தலைமையாசிரியரான தலித் ஒருவரைத் தேசியக்கொடி ஏற்ற விடாமல் செய்ததும் ஏன் செய்திகளாயின ? "இத்தனைக் காலம் கழித்து ஏன் ?" என்று தலித் தலைவர்களாய்த் தங்களை அடையாளப்படுத்துகிற சிலரே கேட்பது வேடிக்கை. நாற்காலியில் உட்கார்வது என்பது வீழ்த்தப்பட்ட சமூகம் எழுந்து நிற்பது என்பதை அனைவரும் உணர வேண்டும். மாரி செல்வராஜ் அவர்களின் மாமன்னன் படத்தைப் பெரும்பாலும் சமூகம் பாராட்டுவதும், வெகுசிலர் பகைமை கொண்டு வன்மத்தோடு தாக்குவதும், சிலர் நடுநிலையோடு விமர்சிப்பதும் வலைத்தளங்களில் காணக் கிடைப்பன. தோழமையுணர்வுடன் சிலர் யோசனைகள் சொல்வதும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிகழவே செய்கின்றது. அந்த அளவில் நாமும் சில யோசனைகள் சொல்லலாமோ எனத் தோன்றுகிறது. அவ்வாறு சொல்லுகையில் மாரி செல்வராஜை முன்னிலையில் வைத்துப் பேசுவது பொருந்தியமைவது. அந்த மாமன்னனை அரியணையில் அமர வைத்து நாம் அமைச்சனாய் அவர் முன்னின்று பேசுவது அவரது சான்றாண்மைக்கு நாம் பெருமை தருவது. "திரு. மாரி செல்வராஜ் அவர்களே ! நீங்கள் வரலாறாய்ப் படைத்த மூன்று படங்களிலும் தலித் சமூகத்தினரைக் கொடுமைக்கு உள்ளாக்கியோர் இன்ன சாதியர் என்று சொல்லாதது பெருஞ்சிறப்பு. தானே விளங்கி நிற்பதைச் சொல்லாமல் செல்வதே தனிச்சிறப்பு. சில இடங்களில் சொன்ன சொல்லை விட சொல்லாத சொல்லுக்கே வலிமை அதிகம் என்பதை உங்கள் படங்கள் சொல்லாமல் சொல்கின்றன. 'மாமன்னன்' இசை வெளியீட்டு விழாவில் 'தேவர் மகனை'க் குறித்தது மட்டும் ஏதோ பெருவிருந்தில் பல்லில் இடறிய சிறுகல்லாய்க் 'கடக்'கென்று ஒலித்தது என்ன மாயமோ ! பல தலைமுறைகளாய் அடிபட்டவன் ஒரு கணம் தன்னை மறந்து குமுறியதைத் தாங்கவொண்ணாத சமூகங்களைக் குறித்த வேதனையும் நமக்குத் தோன்றாமலில்லை. தேவர்மகனைக் குறித்துப் பேசியது கூட ஒரு குறியீடுதான்; ஏனைய ஆதிக்க சாதிகளுக்கும் அது பொருந்தும் என எடுத்துக் கொள்ளும் பக்குவம் எல்லோரிடமும் அமைய வாய்ப்பில்லை. முந்தைய இரு படங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்காத தேவர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் இப்போது சமூக வலைத்தளங்களில் உங்களை அநாகரிகமாகப் பேசுவது எங்களுக்கும் வலிக்கிறது. எல்லாவற்றையும் மீறி ஏனைய சில ஆதிக்க சக்திகளிடமும் மாமன்னன் செய்தி சென்று சேராமலில்லை. திரு. அன்புமணி ராமதாஸ் அவர்களிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், "மாமன்னன் படம் பார்த்து விட்டீர்களா ?" என்று கேட்க, "எனக்கு நேரம் இல்லீங்க !" என்று சொல்லும் தொனி இருக்கிறதே, அதில் பொதிந்துள்ள பொருள் நமக்குப் புரிய வேண்டும் என்றால் மட்டுமே புரியும். எது எப்படியாயினும் உங்கள் படத்தைப் பார்த்த உயர் சாதியினர் தாங்கள் இழைத்த, இழைக்கும் அடக்குமுறைகளுக்காகக் குற்றவுணர்வுடன் தம்மைச் சுயசாதி விமர்சனம் செய்திருந்தால், அது பண்பட்ட தமிழச் சாதியின் அடையாளமாய் அமைந்திருக்கும். சுயசாதி விமர்சனத்தை அக்காலத்திலேயே ஆதிக்க சாதியொன்றில் தோன்றிய புதுமைப்பித்தன் செய்தார். அவர் சாதிப் பெருமை பேசவில்லை. தம் சாதியைக் குறித்தே 'நாசகாரக் கும்பல்' என்று தலைப்பிட்டு சிறுகதை எழுதும் அளவு அவரிடம் நேர்மைத் திறம் இருந்தது. அந்த நேர்மையைப் போற்றும் விவேகம் அவர் பிறந்த சாதியில் அன்று சிலரிடமே இருந்தது; இன்றும் சிலரிடமே இருக்கிறது. எனவே தலித் மக்களுக்கு எதிரான ஆதிக்க சாதியினர் என்று எந்த ஒருவரை மட்டும் குறிப்பதற்கில்லை. ஆண்ட பரம்பரை என்று ஆணவக் கொலை வரை செல்வோர் தெற்கே ஒருவர் என்றால், வடக்கே வேறொருவர். 'உயர்' சாதியினர் என்று தங்களை வரித்துக் கொண்டோர் எண்ணத்தில் உயர்ந்தோர் இல்லை. சமூக சீர்திருத்தம் என்பது அவர்களைத் திருத்துவதும் உள்ளடக்கியது; வெறும் தலித் முன்னேற்றம் மட்டுமல்ல. யாரைத் திருத்த நினைக்கிறோமோ, அவர்களை நேரடியாகக் குறிப்பிடாமல் அவர்கள் அனைவரும் உணருமாறு அமைப்பதே சிறப்பாக அமையும். அப்படித்தான் உங்களது மூன்று படங்களும் அமைந்துள்ளன. பொதுவெளியிலும் பொறுமை காப்பது உங்களுக்கும், உங்களோடு கருத்தொருமித்த எங்களுக்கும் மிக அவசியமாகிறது. பக்குவம் பெறாத சிலரோடு வாதிட்டு நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை. நமக்கு சமூகத்தில் நிறைய வேலை இருக்கிறது, தோழர் ! நீங்கள் குறிப்பிட்ட 'தேவர் மகன்' உள்ளிட்ட சில படங்களில் சாதிப் பெருமை பேசப்படுவது உண்மையெனினும், அதனை நேர்மறையாய்ப் பார்ப்பது பெரிதும் பயனளிக்கும். அப்படங்களில் பெரும்பாலும் அறம் போதிக்கப்படுகிறது. சாதி பேதமின்றி எல்லோரையும் சமமாக நடத்துவதும், பெண்ணின் மானத்தைக் காத்து நிற்பதும் தம் சாதிக்கான பெருமை என்று கூறப்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாகத் தம் சாதிக்குள் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும் முயற்சியாகவே இதனைக் கொள்ளலாம். அப்படங்கள் வந்த இருபது-முப்பது வருடங்களுக்கு முன்னால் அதுவே சாதியப் புரட்சியாக உணரப்பட்டு, தற்போது சாதிப் பெருமை பேசுவதும் தவறு எனும் நிலைக்கு அறிவார்ந்த சமூகம் வளர்ந்துள்ளது. இது மேலும் வளர்ச்சிப் பாதையில் செல்வது உங்களைப் போன்று இளமையிலேயே சான்றோர் நிலையெய்திய சாதனையாளர் கைகளிலேயே உள்ளது. நிறைவாக, சாதிய விடுதலைக்கு அப்பாற்பட்டும் ஒன்றிரண்டு வார்த்தைகள் : திரு. கமலஹாசன் அவர்கள் ஆக்சன் திரில்லர் (தமிழ் ? மன்னிக்கவும்) படங்களிலும், நகைச்சுவைப் படங்களிலும் மாறி மாறி நடிப்பதைப் போல் நீங்கள் அவ்வப்போது பலவகை சமூக விழிப்புணர்வுப் படங்களும் தரவேண்டும். உதாரணமாக ஊழல், நேர்மை அரசியல் போன்ற தலைப்புகளை எத்துணைப் பேர் முன்னரே கையாண்டிருந்தாலும், உங்களது ஆளுமை தனித்துவமானது; சமூகத்தைப் பரந்த அளவில் சென்றடைந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. முதற் சங்ககாலம் என்பது போல் திரைப்படத்துறையின் முதற் சமூகநீதிக்காலம் அறிஞர் அண்ணா ஆகியோர் படைத்த காலம். இரண்டாம் சமூகநீதிக்காலம் மாரி செல்வராஜ் முதலியோர் படைக்கும் காலம் எனக் காற்றினில் கலந்து வரும் மெல்லிசை, எல்லோர் காதிலும் தேனாய்ப் பாயும் காலம் விரைவில்.
    3 points
  4. இரண்டு காரணங்களும் தான் இலங்கையின் பொருளாதார நிலையை சொல்ல முடியாது மீண்டும் டொலர் கூடுகிறது அரசியலால் தமிழர்களுக்கு ஒன்றுமே கிடைக்கப்போவதில்லை வரும் கால சந்ததியாவது எங்கோ ஓர் நாட்டில் பிரச்சினைகள் இல்லாமல் அமைதியாக வாழ வேண்டும் என்ற நினைப்புத்தான் சாமியார் யுத்தம் நிறைவடைந்த காலம் தொடக்கம் தமிழர்கள் வாழ்வில் என்ன நடந்திருக்கிறது அதே பிரச்சினை இன்னும் அதிகமாகவே வந்து வாசல் வரைக்கும் ஏறுகிறது
    3 points
  5. நீங்கள் கேட்டது இலங்கையில் இருக்கும் தனியிடம் என்றாலும், இதுக்கு நானும் பதில் கொடுக்க விரும்புகின்றேன். என் பதில், ஒரு சிங்கள நண்பரிடம் இருந்தும், சிங்களப் பெண்ணைக் கட்டிய தமிழ் நண்பரிடம் இருந்தும் பெற்றதன் சாரம்சம். ரணில் அரசு, உலக நாடுகளிடம் வாங்கிய கடனையும், வட்டியையும் திருப்பி செலுத்துவதை நிறுத்தி வைத்திருக்கின்றது. இதனால், டொலர் கையிருப்பு தற்போது ஓரளவுக்கு சமாளிக்க கூடிய அளவில் உள்ளது. ஆனால் இதனை தொடர்ந்து செய்ய முடியாது. இவ் வருட முடிவிலோ, அல்லது அடுத்த ஆண்டோ, கடனுக்காக வட்டியையாவது திருப்பிச் செலுத்த வேண்டிய நிலை வரும். இவ்வாறு வந்தவுடன், பொருளாதாரம் கடந்த ஆண்டைவிட மோசமாக போகும் சாத்தியம் உள்ளது. இதனால் தான் எவரும் புதிய தொழில்களில் முதலீடு செய்வதை நிறுத்தி உள்ளனர். பலர் தாம் செய்யும் வணிகத்தை நிறுத்தி, வெளி நாடு செல்ல எத்தனிக்கின்றனர். இந்த நிலை ஏற்படும் முன். சிங்களவர்கள் உட்பட, முடிந்தோர் தப்பிச் செல்ல முனைகின்றனர். கனடாவுக்கு பெருவாரியான சிங்களவர்களும் வந்து கொண்டு இருக்கின்றனர். தமிழர்களை விட சிங்கள மாணவர்கள் அதிகமாக இந்த 6 மாதங்களில் வந்துள்ளனர். நாட்டில் அரசியல் பிரச்சனை, தமிழர்களுக்கும் உட்பட "ஓடித் தப்பிக்கும் " நிலையில் இல்லை. ஆனால், பொருளாதாரம், "எடுடா வண்டியை" என்ற நிலையில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றது.
    3 points
  6. பகிடி நாங்கள் மக்களுக்காகவே சிந்திக்கிறபடியால் இதில் காயப்பட எதுவுமே இல்லை. எனக்கு கல்வி காணி பொலிஸ் அதிகாரம் கொண்ட ஏதாவது ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே விருப்பம். ஆனாலும் கட்சிகள் மக்களை சிந்திக்காமல் தேர்தல்களை எண்ணியே நடப்பதால் இதன் சாத்தியக் கூறுகள் கண்ணுக்கெட்டிய தூரம்வரை எதுவும் தெரியவில்லை. தனி இதை சீனாக்காரன் தான் முடிவு பண்ணணும்.
    2 points
  7. நீங்கள் சொல்வது விளங்குது ஈழப்பிரியன். நான் தருவதை வாங்கச் சொல்லவில்லை. 13 ஐ பலப்படுத்தி வாங்க வேண்டும் என்கிறேன். காணி அதிகாரம் உள்ள, வடகிழக்கு இணைந்த( முஸ்லீம் மக்களுக்கு தனி அலகு )ஒரு கட்டமைப்பு கிடைத்தாலே போதும் இப்போதைக்கு.இது கிடைப்பதே பெரிய விடயம். ஆனால் இதாவது கிடைத்தால் நன்மை என்று நினைக்கிறன். மனித இனங்களுக்கான சண்டைகள் ஒரு போதும் ஓயப் போவதில்லை. ஆகவே எமக்கான சமயம் வரும் வரைக்கும் பொறுத்துத் தான் ஆக வேண்டும்.இப்போது கொஞ்சம் எம்மைப் பலப்படுத்த வேண்டும். இப்பிடியே கிடைக்க இயலாததை நினைத்து இருக்கிறத்தையும் ஏன் இழப்பான்? மற்றபடி உங்களின் தமிழர் உரிமைகளுக்கான தாகம் விளங்குகிறது. அதை நான் காயப்படுத்தி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் ஈழப்பிரியன்
    2 points
  8. நானும் இதை பற்றி பல இடங்களில் சொல்லி இருந்தேன். ஒரு தமிழ் அரசியல் கட்சி இந்திய தூதுவரை சந்திக்க அனுமதி கேட்டால் அதற்க்கு மாதக் கணக்கில் தவம் கிடக்க வேண்டிக் கிடைக்கிறது. அது தான் இந்தியா எமக்கு கொடுக்கும் மரியாதை. இந்தியாவின் எதிரியோடு ஒரு உறவை வளர்த்தால்தான் இந்தியாவை ஒரு வழிக்குக் கொண்டு வர முடியும். முன்னர் சீன கம்யூனிஸ்ட் கட்சி சார் சண்முகதாசன் ஆரம்பித்த கட்சி போல் மீண்டும் ஒரு கட்சி தொடங்கப்பட்டாலே தமிழரின் விடுதலைப் போராட்டம் அடுத்த கட்டம் நோக்கி நகரும்.
    2 points
  9. செல்லக்கிளியின் வீரமரணம் முனசிங்கவும் அவரது ராணுவமும் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை அண்மித்தபோது புலிகள் அங்கிருந்து வெளியேறி விட்டிருந்தார்கள். கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் ஆயுதங்களும் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. புலிகளைப்பொறுத்தவரை அது ஒரு வெற்றி அணிவகுப்பு. பிரபாகரன் முன்னே செல்ல, மற்றையவர்கள் ஒற்றை நிரலில் அவரைப் பிந்தொடர்ந்து சென்றார்கள். திருநெல்வேலிச் சந்தி நோக்கிச் சென்று பின்னர் வலதுபுறம் திரும்பி தமது மினிபஸ்ஸில் ஏறிக்கொண்டார்கள். பிரபாகரனும் அவரது போராளிகளும் இத்தாக்குதலை தாம் பரீட்சித்துப் பார்த்ததைப் போன்றே மிகவும் நேர்த்தியாக நடத்தி முடித்திருந்தார்கள். ஓவொருவரும் தமக்கு வழங்கப்பட்ட பணியினை திறம்படச் செயற்படுத்தியிருந்தார்கள். தாக்குதல் முடிந்தவுடன் தமது நேரத்தை விரயமாக்க அவர்கள் விரும்பவில்லை. அப்பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறிவிடுவதே அவர்களின் எண்ணம். தாக்கப்பட்ட தமது ராணுவ அணியைத் தேடி மேலதிக ராணுவத்தினரும் பொலீஸாரும் அப்பகுதிக்கு வருவார்கள் என்பதும், புலிகள் தப்பிச் செல்லக்கூடிய வழிகள் அனைத்தையும் அவர்கள் தடுக்க முனைவார்கள் என்பதும் புலிகள் அறியாதது அல்ல. மினிபஸ்ஸில் ஏறுவதற்கு முன்னர் தாக்குதலில் பங்குகொண்ட அனைத்துப் போராளிகளுக்கும் பிரபாகரன் நன்றி கூறினார். தாக்குதலின் வெற்றி பிரபாகரனுக்கு மிகுந்த மனநிறைவினைத் தந்திருந்தது. அவர் உற்சாகமாகவும், உணர்வு மேலீட்டும் காணப்பட்டார். செல்லக்கிளியின் துணிகரச் செயலுக்காகவும், கண்ணிவெடிகளை இலக்குத் தவறாது இயக்கியமைக்காகவும் அவரின் பெயரை உச்சரித்து பிரபாகரன் பாராட்டிக்கொண்டிருந்தபோது , செல்லக்கிளி அங்கே இல்லையென்பதை கிட்டு உணர்ந்துகொண்டார். "செல்லக்கிளி அண்ணா எங்கே?" என்று கிட்டு ஆதங்கத்துடன் கத்தினார். மற்றைய எல்லோரைக் காட்டிலும் செல்லக்கிளி வயதில் மூத்தவர். அவரை போராளிகள் எல்லோரும் மிகுந்த மரியாதையுடனேயே நடத்தி வந்தனர். அவர் அண்ணை என்றே எல்லாராலும் அழைக்கப்பட்டு வந்தார். ஆனால், அவர் அங்கே இருக்கவில்லை. தாக்குதல் நடத்தப்பட்ட மளிகைக் கடை நோக்கி விக்டர் ஓடினார். கூரையின் மீது அவர் ஏறிப் பார்த்தபோது செல்லக்கிளியின் உடலை அவர் கண்டார். அவரது நெஞ்சுப்பகுதியைக் குண்டொன்று துளைத்துச் சென்றிருந்தது. செல்லக்கிளி இரத்த வெள்ளத்தில் உயிர்பிரிந்து கிடந்தார். இது எப்படி நடந்தது? எவருக்கும் தெரிந்திருக்கவில்லை, சில அனுமானங்களைத் தவிர. இராணுவ ட்ரக் வண்டி சடுதியாக நிறுத்தப்பட்டு, அதிலிருந்த ராணுவ வீரர்கள் வெளியே குதித்தபோது பெரும்பாலானோர் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். பெரும்பாலான இராணுவ வீரர்களின் தலையிலேயே புலிகளின் சன்னங்கள் பாய்ந்திருந்தன.ஆனால், ஒரு ராணுவ வீரர் மட்டும் ட்ரக்கின் பின்னால் ஒளிந்துகொண்டு நாலாபுறம் நோக்கியும் துப்பாக்கியினால் சரமாரியாகச் சுட்டிருக்கிறார். தமது தாக்குதல் முடிந்துவிட்டது, இராணுவத்தினர் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர் என்று எண்ணிய செல்லக்கிளி அதுவரை தான் ஒளிந்திருந்த சீமேந்துச் சுவரின் பின்னாலிருந்து எழுந்திருந்த வேளை, ட்ரக்கின் பின்னால் பதுங்கியிருந்த இராணுவ வீரனின் சூடு பட்டு அவ்விடத்திலேயே இறந்திருக்கிறார். செல்லக்கிளியின் உடலைத் தூக்கித் தனது தோளில் போட்டுக்கொண்ட விக்டர், அவரைச் சுமந்துகொண்டு மினிபஸ் நோக்கி ஓடினார். இந்தச் சம்பவம் குறித்து சந்தோசம் என்னிடம் பின்வருமாறு விபரித்தார். "செல்லக்கிளியின் உடலைச் சுமந்துகொண்டு விக்டர் மினிபஸ்ஸை வந்தடைந்த போது நாம் அனைவரும் அதிர்ச்சியடைந்தோம். செல்லக்கிளியின் மார்பிலிருந்து இரத்தம் பீறிட்டுப் பாய்ந்துகொண்டிருந்தது. விக்டரின் சீருடை முழுவதும் இரத்தத்தில் தோய்ந்திருந்தது". "அந்தச் சூழ்நிலை மிகவும் வேதனை மிகுந்திருந்தது. அதுவரை அங்கு நிலவிய வெற்றிக்களிப்பையும், உற்சாகத்தையும் செல்லக்கிளியின் மறைவு முற்றாக மாற்றிப் போட்டது. அனைவரினதும் முகங்களில் இருந்த மகிழ்ச்சி முற்றாகப் போயிருந்தது. பிரபாகரன் மெளனமானார். அவரைப்போலவே எல்லோர் முகத்திலும் சோகமும் மெளனமும் குடிகொண்டன‌. விக்டர் செல்லக்கிளியின் உடலை மினிபஸ்ஸின் பின் இருக்கைக்குக் கொண்டு சென்றார். பின்னிருக்கையில் அவரை மெதுவாகக் கிடத்திய விக்டர், செல்லக்கிளியின் கண்களை மூடிவிட்டார். தாம் கைப்பற்றிய ஆயுதங்களை எல்லோரும் செல்லக்கிளியின் பாதங்களுக்கு அருகில், மினிபஸ்ஸின் தரையில் அடுக்கினர். வீரச்சவடைந்த வீரனுக்கு அவர்கள் கொடுக்கும் இறுதி வணக்கமாக அது அமைந்தது. அந்த நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமானது" என்று சந்தோசம் கூறினார். செல்லக்கிளி நினைவாலயம் திருநெல்வேலி - 2003. மெதுவாக மழை தூறத் தொடங்கவே, மினிபஸ் அச்சுவேலியில் அமைந்திருந்த புலிகளின் மறைவிடம் நோக்கி வேகமாகப் பயணிக்கத் தொடங்கியது. பிரபாகரனே முதலாவதாக மினிபஸ்ஸிலிருந்து இறங்கினார். அவரது பாதம் தரையைத் தொட்டதும் அவர் அழத் தொடங்கினார். ஏனையவர்களும் அவரோடு இணைந்துகொண்டனர். அதுவரை தாம் அடக்கிவைத்திருந்த சோகமெல்லாம் பீறிட்டுவர அவர்கள் அழுதார்கள். தமிழ் பத்திரிக்கைகள் சிலவற்றில் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து கிட்டு பின்னாட்களில் பேசியிருந்தார். பிரபாகரன் மனமுடைந்து அழுததை அப்போதுதான் தான் முதன்முதலில் பார்த்ததாக அவர் கூறியிருந்தார். செல்லக்கிளியின் இழப்பென்பது புலிகளைப் பொறுத்தவரையில் வெறும் 9 நாட்களுக்குள் நடந்த இரண்டாவது மிகப்பெரிய இழப்பாகக் கருதப்பட்டது. சீலன் ஆடி 15 இலேயே உயிர்துறந்திருக்க இப்போது செல்லக்கிளி ஆடி 23 இல் வீரச்சாவடைந்திருந்தார். சீலன் பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் இருந்தவர். செல்லக்கிளியோ சீலனுக்கு அடுத்த நிலையில் இயக்கத்தில் இருந்தவர். செல்லக்கிளியின் இயற்பெயர் சதாசிவம் செல்வநாயகம். யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்த பழம்பெரும் கிராமமான கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முனசிங்கவையும் ஏனைய ராணுவ அதிகாரிகளையும் பொறுத்தவரை தாம் திருநெல்வேலியில் கண்ட கோரமான காட்சி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. உருக்குலைந்திருந்த இராணுவ வாகனங்களைச் சுற்றி பன்னிரண்டு இராணுவ வீரர்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன. மூன்று உடல்கள் ஜீப்பின் அருகில் கிடந்தன. நான்காவது உடல் வீதியிலிருந்து சற்றுத் தொலைவில் தூக்கி வீசப்பட்டிருந்தது. அந்த உடல் தளபதி வாஸ் குணவர்த்தனவினதாக இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டு அவ்வுடலின் முகத்தைத் திருப்பினார் முனசிங்க, அது வாஸினதுதான். வாஸின் வலது காதின் அருகில் குண்டு வெடிப்பால் ஏற்பட்ட ஓட்டையொன்று தெரிந்தது. அவர் தன்னுடன் எப்போதும் வைத்திருக்கும் பிறிஸ்ட்டல் சிகரெட் பக்கெட்டும் லயிட்டரும் ஜீப்பினுள் கிடந்தன. ஜீப்பிலிருந்து சுமார் 25 மீட்டர்கள் தூரத்தில் ட்ரக் நின்றிருந்தது. எட்டு உடல்கள் ட்ரக்கைச் சுற்றி வீழ்ந்துகிடந்தன. ட்ரக்கின் அடியிலிருந்து ராணுவ வீரர் ஒருவர் முனகுவதை அவர்கள் கேட்டனர். அங்கு வந்திருந்த இராணுவ வீரர்கள் அவரை வெளியே இழுத்து எடுத்தபோது அவரது கை ஒன்றும் காலும் முறிந்த நிலையில் கிடந்ததை அவதானித்தனர். அவர் சார்ஜன்ட் திகலரட்ண. யாழ் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் அவரும் இறந்துபோனார். சிறிது நேரத்தின் பின்னர் அருகிலிருந்த வீடொன்றின் தோட்டத்தில் பதுங்கியிருந்த இன்னொரு ராணுவ வீரர் கால்கள் காயப்பட்ட நிலையில் மிகுந்த சிரமத்துடன் ராணுவ வீரர்களை நோக்கி நடந்துவந்தார். ட்ரக்கிலிருந்து ஏனைய ராணுவத்தினருடன் தானும் குதித்ததாகவும், ஆனால் அருகிலிருந்த வீட்டின் கூரையில் உடனடியாக ஏறிக்கொண்டு, புலிகள் மேல் தான் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் ராணுவ அதிகாரிகளிடம் கூறினார், ஆனால் அவரின் விபரிப்பினை எவரும் நம்பவில்லை. புலிகளின் கடுமையான தாக்குதலில் இருந்து கோப்ரல் பெரேராவும் உயிர்தப்பியிருந்தார். கால்களில் காயம்பட்ட நிலையிலும் கோண்டாவிலில் அமைந்திருந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் பிராந்திய தலைமையகத்திற்குச் சென்று அங்கிருந்து பலாலி இராணுவ முகாமுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி தமது இராணுவ அணிக்கு நடந்த விபரீதத்தை கூறினார். ஆனால், பெரேரா கோண்டாவிலில் இருந்து தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்த முன்னரே முனசிங்கவும் பல்த்தசாரும் தாக்குதல் நடந்த இடத்திற்கு வந்துவிட்டிருந்தனர். கொல்லப்பட்ட ஒரு அதிகாரி உட்பட பன்னிரு ராணுவத்தினரின் உடல்களை முனசிங்கவும் பல்த்தசாரும் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதலில் சேதமடைந்திருந்த இராணுவத்தினரின் ஜீப் வண்டியையும் ட்ரக்கையும் குருநகர் முகாமுக்கு இழுத்துச் சென்றனர். தாக்குதல் நடந்த இடத்தை மறித்து, சுற்றிவரத் தடைகளை ஏற்படுத்திவிட்டு முகாம் நோக்கிச் சென்றனர். திருநெல்வேலித் தாக்குதல் இலங்கையின் சரித்திரத்தை மாற்றிவிட்டது. இலங்கைத் தமிழர்களின் சரித்திரத்தின் பாதையினை அது மாற்றிவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கைத் தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தின் குணவியல்பையும் அது மாற்றிப்போட்டது. அது தமிழீழ விடுதலைப் புலிகளை போராட்டத்தின் முகப்பு நோக்கி முன்னோக்கித் தள்ளியிருந்தது.
    2 points
  10. நேர்மையாக ஒழுங்கு முறைப்படி கணணித் தேடுதல் , மூலம் கனேடிய வெப் சைடு மூலம் பத்திரம் நிரப்பி விண்ணப்பித்து அணுக வேண்டியதுக்கு ஏன் ஏஜெண்சி ? கனடா ஏஜெண்சியையா? நியமித்து இருக்கிறது. ஏஜென்சியை நம்ப வேண்டாம் , கனடாவில் வாழும் படித்த அனுபவமுள்ள குடிவரவு பற்றி அறிந்த கற்ற்வர்கள் மூலம் அணுகவும் என்பது என் நேர்மையான வேண்டுகோள்.
    2 points
  11. யேர்மனியில், சமீபகாலமாகக் காலநிலை ஆர்வலர்களால் ‘கடைசித் தலைமுறை’ என்ற அமைப்பினூடாக வீதிகளில் நடத்தப்படும் போராட்டங்களால், மக்கள் விசனம் அடைந்திருப்பது என்னவோ உண்மைதான். 12.07.2023 புதன்கிழமை Stralsund நகரின் பிரதான வீதியில் கடைசித் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் வீதியை மறித்துப் போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் நடந்த வீதியில் வாகனம் செலுத்தி வந்த 41 வயதான பார ஊர்தி ஓட்டுனர் ஒருவர் அங்கே அமைதியை இழந்து, கோபம் கொண்டு செய்த செயல் இப்பொழுது பேசு பொருளாக மாறி இருக்கிறது. பார ஊர்தி ஓட்டுனர் தனது வாகனத்தில் இருந்து இறங்கி,போராட்டம் நடத்தியவர்களில் ஒருவரை வீதியில் இருந்து இழுத்து நடைபாதையில் போட்டுவிட்டு மற்றொருவரை தாக்க முயன்றிருக்கிறார். அவர் தனது கோபத்தின் உச்சமாக தனது வாகனத்தில் ஏறி அதை ஓட்டவும் செய்திருக்கிறார். இதனால் இளைஞன் ஒருவன் ஒரு மீற்றர் தூரத்துக்கு வாகனத்தால் முன் நோக்கித் தள்ளப்பட்டிருந்தான். உடல்ரீதியான தாக்குதல் முயற்சிக்காக ஒரு வழக்கும்,வாகனத்தை தவறாக ஓட்டினார் என்று இன்னுமொரு வழக்கும் ஓட்டுனர் மேல் பதியப்பட்டிருக்கிறது. கடைசித் தலைமுறை உறுப்பினர்கள்,பொதுச் சட்டத்தை மீறியதாகவும், வீதிப் போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்ததாகவும் அவர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. இன்று இந்த பிரச்சினையை பொலிஸார் Stralsund மாவட்ட நீதிமன்றத்தில் பதிவு செய்கிறார்கள். ஓட்டுனர் தனது சாரதிப் பத்திரத்தை இழக்கப் போகிறாரா? இல்லை தக்கவைப்பாரா? என்பது கேள்வி. https://www.ndr.de/nachrichten/mecklenburg-vorpommern/Klimaaktivist-in-Stralsund-angefahren-Gericht-prueft-Fuehrerscheinentzug,letztegeneration374.html
    1 point
  12. இரை தேடி வந்த பாம்பொன்று தச்சனொருவனின் பட்டறைக்குள் நுழைந்தது. பட்டறைக்குள் நுழைந்து, அங்கும் இங்கும் ஊர்ந்து திரிந்த பாம்பின் உடல் அருகிலிருந்த கூரிய வாளில் பட்டு விட்டதால் சிறியதொரு காயம் ஏற்பட்டுவிட்டது. கோபமடைந்த பாம்பு வாளை கடிக்க முற்பட்டது. வாள் தன்னை எதிர்த்துத் தாக்குவதாக தவறாக நினைத்துக் கொண்ட பாம்பின் தாக்குதலும் அதிகரித்தது. வாளின் கூரான பற்கள் பாம்பின் வாயை அறுத்ததால் பெரிதாகக் காயமேற்பட்டு இரத்தமும் வடியத் தொடங்கிற்று. இப்போது பாம்பின் கோபம் தலைக்கேறி கண்களை மறைக்க... தாம் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல்... தன் பலம் முழுவதையும் சேர்த்து வாளை சுற்றி வளைத்து இறுக்க ஆரம்பித்தது. என்ன நடந்திருக்கும்? பாம்பின் உடல் வாளின் பற்களுக்கு இரையாகிப் போனது. எங்கும் பலத்த காயங்கள்; எங்கும் ரத்தம். என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பது தெரியாமலேயே பாம்பு இறந்து போனது. காலையில் பட்டறைக்குள் நுழைந்த தச்சன் ரத்தம் தோய்ந்த வாளையும் துண்டாகி செத்துக் கிடக்கும் பாம்பையும் கண்டான். பாம்பின் கோபமும் தீய எண்ணமும் நிதானமற்ற தன்மையுமே அதனது சாவுக்குக் காரணமாகின... இதுபோன்றுதான்... சில சமயங்களில் கோபத்தின் காரணமாக நாம் பிறரை காயப்படுத்த முயல்கிறோம். ஆனால் நாம் பிறரை காயப்படுத்தவில்லை... நம்மை நாமே காயப்படுத்துகிறோம் என்பதை தாமதமாகவே உணர்ந்து கொள்கிறோம். சில நேரங்களில் தீய எண்ணம் கொண்டு பிறரை வீழ்த்த முற்படுகிறோம். ஆனால் நாம்தான் பலியாகி விட்டோம் என்பதை காலம் கடந்தே உணர்ந்து கொள்கிறோம். வாழ்க்கையில் சில நேரங்களில்... சில நிகழ்வுகளை, சில மனிதர்களை, சில வார்த்தைகளை, சில செயல்களை கண்டும் காணாதது போல் இருந்துவிட வேண்டும். அப்போதுதான் நிம்மதியாக வாழ முடியும். அறிந்து கொள்ளுங்கள்! நாம் எல்லா விடயங்களுக்கும் பதில் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. எல்லா விடயங்களிலும் தலையிட வேண்டிய தேவையுமில்லை. தேவையற்ற செயல், கோபம், எண்ணம் அனைத்தும் எம்மை அழித்து விடும்.
    1 point
  13. இது நல்லதொரு யோசனை அப்படி அனுமதிக்கபடும் தனியார் வைத்தியசாலைகள் கடுமையான கண்காணிப்பில் வைத்திருக்கபட வேண்டும்.மக்களும் தனியார் வைத்தியசாலைகளுக்கு சென்று அவர்களை ஊக்குவிக்க கூடாது.
    1 point
  14. போலீஸ் வந்து அந்த சிப்பாயை கைது செய்து என்னுடன் வாக்கு முலமும் வாங்கி அழைத்துச் சென்றனர். பஸ்ஸில் இருந்த அநேகமானவர்கள் தமிழர்கள்.போலீஸ் வரும் முன் அந்த சிப்பாய் மற்றும் சிங்கள பஸ் ஓட்டுநர், சிங்கள டிரைவர், ஏனைய இராணுவ வீரர்கள் ஆகியோர் என்னுடன் கொழுவலுக்கு வர ஒரே ஒரு கொழும்பு அக்காவைத் தவிர மீதி அனைவரும் இவன் ஏன் வம்பை விலை கொடுத்து வாங்கிறான் என்ற மாதிரிதான் பார்த்தார்கள். நமக்கேன் என்ற போக்குத்தான் எம்மை இந்தநிலைக்குக் கொண்டுவந்துவிட்டுடிருக்கிறது. அரசியல் முதல் அனைத்துமே இதில் அடக்கம்(தானே) சிங்களம் எப்படித் தமிழின அழிப்பிற்கெதிரான நடவடிக்கையில் பாலியல் வண்புணர்வை ஆயுதமாக்கிப் பழக்கப்பட்டதன்விளைவாக வேற்றுப் பெண்களைப் பார்த்தவுடன் காரியமாற்றக் கிளம்பிவிடுகிறார்கள் போலும். எல்லாப் புகழும் கோத்தா ஒருவனுக்கே.
    1 point
  15. கனடாவுக்கு குடும்பத்தோடு வர 2 கோடி போகுதாம்.. எப்படி செய்கிறார்கள் எந்த வழியில் என்று எதுவும் தெரியவில்லை. சிங்களவர்கள் நேர்மையான வழியில் வருகிறார்கள், தமிழர்களோ கப்பல் ஏறி வந்து இங்குள்ள வெள்ளை இன மக்களின் எதிர்ப்பை சாம்பாதிக்கப் போகிறார்கள்.அது கடைசியில் இங்கு எமக்கு உள்ள தார்மீக ஆதரவையும் இல்லாமல் செய்து விடும். இப்படிப்பட்ட களவாக ஆட்களை இங்கே கடத்தும் ஆட்களை நாம் பிடித்துக்கொடுக்கா விட்டால் அது நீண்ட கால நோக்கில் தமிழ் சமூகத்துக்கு சாபத்தையே வரவழைக்கும். 50 லட்ஷம் இருந்தால், ஆங்கிலம் கற்று தேற திறமை இருந்தால் எந்த வேலையும் செய்யம் மனப்பாங்கு இருந்தால் இங்கே நேர்மையாக வந்து குடும்பத்தையும் பின்னர் பெற்றோரையும் கூப்பிட முடியும். ஆனால் இப்படி படிப்படியாக நேர்மையாக போக விருப்பம் இல்லாதவர்களுக்கு சொல்லிப் பிரயோசனம் இல்லை.
    1 point
  16. நன்றாக ஞாபகம் வைத்திருக்கின்ரீர்கள் தனி...........!
    1 point
  17. பல கடைகளில் விசாரிக்கலாம் ...பெரிய புடவை கடைகளிலும். மாற்ற முடியும் அவர்கள் கல்குலேட்டரில். போட்டு காட்டுவார்கள் உதாரணமாக 100 யூரோ மாற்றுவது ஆயின். 100 *370=37000. எனப் போட்டு காட்டுவார்கள் பெரிய வித்தியாசம் இருக்காது 100 யூரோ மாற்றும்போது. கடைக்கு கடை. 100. ....150. ரூபாய் வித்தியாசம் உண்டு” பஸ் தரிப்பு இடத்துக்கு அருகில் மூன்று பக்கத்திலேயேயும். நான் மாற்றி உள்ளேன் ..மலேயன். கபே பக்கம் மாற்றவில்லை எங்க மாற்றினாலும் ஒன்று தான் 500....1000. ருபாய் பெரிய காசா ????அதுவும ஒரு ஜேர்மன்காரனுக்கு 🤣🤣
    1 point
  18. வணக்கம் வாத்தியார்......! ஆண் : தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு பூவுடன் மெல்ல நீ பேசு தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு பூவுடன் மெல்ல நீ பேசு ஆண் : கரையின் மடியில் நதியும் தூங்கும் கவலை மறந்து தூங்கு இரவின் மடியில் உலகம் தூங்கும் இனிய கனவில் தூங்கு ஆண் : காதல் என்றால் கவலையா கண்ணில் நீரின் திவலையா நோயானேன் உயிரும் நீ யானேன் இரவில் காயும் முழு நிலா எனக்கு மட்டும் சுடும் நிலா வாராயோ எனை நீ சேராயோ ஆண் : தூங்க வைக்கும் நிலவே தூக்கமின்றி…… நீயே வாடினாயோ.........! --- தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு---
    1 point
  19. நிச்சயம் அவுஸ்திரேலிய போல் வந்து விடும் ...அவர்கள் பாராளுமன்றத்திலும். பத்து பதினைந்து பேர் வந்து விடுவார்கள் தமிழர்கள் வாக்கு போட்டும். அனுப்பினாலும். ஆச்சர்யமில்லை 🤣😂
    1 point
  20. உங்கள் துணிச்சலான நடவடிக்கைக்கு பாராட்டுகள். எங்கட மக்கள் சம்பவத்தை மூடி மறைக்கப் பார்ப்பார்கள். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியோ/பெண்ணோ தன்னை குற்றவாளியாக கருதி மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்.
    1 point
  21. சிறியண்ணை நாணயமாற்று விகிதம் குறையும் போது வங்கியில்(பாஸ்போட் கேட்பார்கள்) அன்றைய தினத்திற்குரிய மத்திய வங்கியின் நாணயமாற்று விகிதத்தின்படி தருவார்கள், ஆனால் அங்கீகரிக்கப்பட்ட நாணயமாற்று நிறுவனங்கள் குறைத்துத் தர முயல்வார்கள். ஆகையால் இரண்டிலும் விசாரித்து எங்கு அதிமோ அங்கு மாற்றலாம். இன்னொன்று நம்பிக்கையான உறவினர்/நண்பர்களின் முறைப்படியாக வங்கிக் கணக்கிற்கு(குறித்த விகிதத்திலும் கூடுதலாக இலங்கை ரூபா கிடைக்கலாம்) அனுப்பிவிட்டு அவர்களின் மூலம் வாங்குதல்.
    1 point
  22. அந்தப் பெண் 6 பாம்பை மறைத்துக் கொண்டு வந்தவராம். அதில் ஒன்றை காணவில்லையாம்... ராஜா.
    1 point
  23. நிலவில் கொடி 'பறந்தது' ஏன்? ஆம்ஸ்ட்ராங் தரையிறங்கும் காட்சி ஹாலிவுட்டில் படமாக்கப்பட்டதா? பட மூலாதாரம்,GETTY IMAGES 13 ஜூலை 2023, 05:06 GMT புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்கா 1969-ம் ஆண்டு முதன்முதலில் அப்போலோ 11 எனும் விண்வெளி விமானத்தின் மூலம் நிலவில் மனிதர்களை தரையிறங்கியது. அப்போதிருந்தே இது நிகழவே இல்லையென்றும், நிலவில் தரையிறங்குவது போன்ற காட்சிகள் போலியாகச் சித்தரிக்கப்பட்டவை என்றும் பலரும் சொல்லி வந்தனர். ஆனால் அது உண்மையா இல்லையா என்று எவ்வாறு அறிந்துகொள்வது? அமெரிக்கா நிலவில் தரையிறங்கிய 1969-ம் ஆண்டு அதனைச் சித்தரிப்பதற்கான தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படவில்லை, என்கிறார் அறிவியல் எழுத்தாளரான டலாஸ் கேம்ப்பெல். “ஆனால் நிலவுக்குச் செல்லும் தொழில்நுட்பம் நம்மிடம் இருந்தது,” என்கிறார். நட்சத்திரங்கள் ஏன் தெரியவில்லை? அப்போலோ 11 நிலவில் தரையிறங்கியது போலி என்று சொல்பவர்கள், அதற்காக முதலில் சொல்லும் காரணம், ‘அக்காட்சிகளில், பின்னணியில் நட்சத்திரங்கள் தெரியவில்லை,’ என்பதுதான். இதற்குக் காரணம், ‘High Contrast’ எனப்படும் ஒளியில் இருக்கும் உச்சபட்ச மாறுபாடு என்கிறார் திரைப்படம் மற்றும் புகைப்பட தொழில்நுட்பங்களின் நிபுணரான மார்க் ஷூபின். “மிகவும் வெளிச்சமாக இருக்கும் பட்டப்பகலில், ஒரு வீட்டின் கதவைத்திறந்து உள்ளே பார்த்தால், அங்கு இருப்பவற்றை நம்மால் சரியாகப் பார்க்க முடியாது. இது ஏனெனில் நாம் நிற்கும் இடத்தில் வெளிச்சம் அதிகமாக இருப்பதனால்,” என்கிறார் ஷூபின். இதே விளைவினால்தான் நிலாவில் தரையிறங்கும் காட்சிகளிலும் நம்மால் நட்சத்திரங்களைப் பார்க்க முடியவில்லை என்கிறார் அவர். இது ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டதா? பட மூலாதாரம்,GETTY IMAGES நிலவில் தரையிறங்கியதை பொய் என்று சொல்வபர்கள், முக்கியமாக முன்வைக்கும் இன்னொரு விளக்கம், அக்காட்சிகள் ஹாலிவுட்டில் இருக்கும் ஒரு ஸ்டூடியோவில் ‘செட்’ அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு எடுக்கப்பட்டன என்பது. ஆனால், நிபுணர்கள் இக்கருத்தில் மாறுபடுகிறார்கள். நிலவில் இருக்கும் குறைந்த புவியீர்ப்பினைப் போன்று ஒரு படப்பிடிப்பு ஸ்டூடியோவுக்குள் உருவாக்குவது சாத்தியமற்ற ஒன்று என்கிறார்கள். “காற்று இருக்குமிடத்தில் தூசியும் மண்ணும் ஒரு வகையில் நடந்துகொள்ளும். அதுவே நிலவைப்போல சுத்தமாக காற்றே இல்லாத இடத்தில் அவை முற்றிலும் வேறு மாதிரி நடந்துகொள்ளும். அதனால், அக்காட்சிகளை ஒரு ஸ்டூடியோவில் ‘செட்’ அமைத்து காட்சிப்படுத்தியிருக்க வேண்டுமென்றால், அங்கு இருக்கும் காற்றை முழுதுமாக வெளியேற்றி, அங்கு ஒரு வெற்றிடத்தை (vacuum) உருவாக்க வேண்டும்,” என்கிறார் ஷூபின். சோவியத் ஒன்றியம் என்ன செய்துகொண்டிருந்தது? அமெரிக்கா நிலவில் தரையிறங்கிய 1969-ம் ஆண்டு அமெரிக்க-சோவியத் பனிப்போர் உச்சத்திலிருந்த காலகட்டம். அக்கால கட்டத்திலேயே சோவியத் யூனியனிடம் மேம்பட்ட கண்காணிப்புத் தொழில்நுட்பம் இருந்தது என்கிறார் லண்டன் பல்கலைகழகத்தில், சர்வதேச ராஜீய உறவுகள் துறையின் மூத்த பேராசிரியர் அந்த்வான் பூஸ்கே. “அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சோவியத் யூனியனால் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும், செயற்கைக் கோள்களையும் கண்காணித்திருக்க முடியும். எனவே, அமெரிக்கா நிலவில் தரையிறங்கியது போலியானதாக இருந்தால், சோவியத் யூனியனால் அதனை கண்டறிந்திருக்க முடியும். மேலும், அவர்கள் அப்படியொரு விஷயத்தைக் கண்டறிந்தால், அதனை வெளிப்படுத்தி அமெரிக்காவுக்கு எதிரான ஒரு பிரசாரத்தைச் செய்திருப்பார்கள்,” என்கிறார் பூஸ்கே. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்கிறார் பூஸ்கே. நிலவிலிருந்து என்ன கொண்டு வரப்பட்டது? பட மூலாதாரம்,GETTY IMAGES நிலவில் இருந்து கற்கள் கொண்டுவரப்பட்டன. இவை முக்கியமான சான்றுகள் என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்தக் கற்கள் இன்றளவும் ஆராய்ச்சி செய்யப்படுகின்றன என்கிறார், இங்கிலாந்து விண்வெளி அமைப்பின் இயற்பியலாளரான லிப்பி ஜாக்சன். “அவற்றில் சில கற்கள் இன்றளவும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. யாரும் அவற்றைத் தொட்டதுகூட இல்லை,” என்கிறார். 1960கள், 1970களிலேயே எதிர்காலத்தில் தொழில்நுட்பம் மேம்படும் என்றும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழும் என்றும் விஞ்ஞானிகள் அறிந்திருந்தனர், என்கிறார் ஜாக்சன். நிலவில் மனிதர்கள் விட்டு வந்த அடையாளம் நிலவில் தரையிறங்கிய விண்வெளி வீரர்கள் அங்கு சில ரிஃப்ளெக்டர்களைப் பொருத்தியிருக்கின்றனர். பூமியில் இருந்து லேசர் ஒளிக்கற்றைகளை நிலவின்மீது பாய்ச்சினால், அந்த ரிஃப்ளெக்டரிகளில் பட்டுப் பிரதிபலிக்கும், என்கின்றனர் விஞ்ஞானிகள். இதன் மூலம்தான் நிலவின் சுழற்சியில் நிகழும் மாற்றங்கள் ஆராயப்படுவதாகச் சொல்கிறார். கொடி எப்படி அசைந்தது? கால் தடம் எப்படிப் பதிந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES இவற்றுக்குமேல், காற்றில்லாத நிலவில், கொடி எப்படி அசைந்தது, நீரில்லாத போது கால்தடம் எப்படிப் பதிந்தது போன்ற கேள்விகளும் அடிக்கடி எழுப்பப்படுகின்றன. இவற்றுக்கான விடையை அறிந்துகொள்ள பிபிசி தமிழ் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரனுடன் பேசியது. அதற்கு அவர், இவற்றுக்கு எளிய அறிவியல் விளக்கங்கள் உள்ளன என்று கூறினார். கொடி அசைந்ததை, inertia எனும் விளைவின் மூலம் விளக்கலாம் என்றார். “அதாவது, ஓடும் பேருந்தில் திடீரென ப்ரேக் செலுத்தப்பட்டால், நின்றுகொண்டிருப்பவரகள் முன்னால் தள்ளப்படுவார்கள் அல்லவா, அதேபோல்தான் உராய்வு இல்லாத இடத்தில் சுருட்டிவைத்திருந்த கொடியைப் பிரித்த போது அந்த உந்துவிசையால் கொடி படபடத்தது,” என்றார். அதேபோல் நிலவில் பதிந்த கால்தடம் பற்றிச் சொல்லும்போது, பூமிக்கு இருப்பதுபோல் வளிமண்டலம் இல்லாததால், நிலவில் விண்கற்கள் மோதியவண்ணம் இருக்கும் என்றார். “இப்படி மோதிக்கொண்டே இருப்பதால், அவை பொடியாகி, நிலவின் பரப்பு முழுவதும் ஒரு அடிக்கு குவிந்திருக்கிறது. இது regolith எனப்படுகிறது. இதில் கால் வைத்ததால்தான் கால்தடம் பதிந்தது,” என்றார். மேலும், 1969-ம் ஆண்டு அமெரிக்கா முதன்முதலில் நிலவில் மனிதர்களை தரையிறக்கியபோது குறிப்பிட்ட ஒரு சிறிய குழு மட்டுமே அதனைச் சந்தேகித்தது, அதனால் அமெரிக்கா அதைப்பற்றிப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்றார். “மேலும் இதுபோன்ற எளிய அறிவியல் விளக்கங்களின் மூலம் அவற்றை எதிர்கொண்டனர்,” என்றார். https://www.bbc.com/tamil/articles/cv21xrje091o
    1 point
  24. https://www.thieme-connect.de/products/ejournals/abstract/10.1055/s-0038-1637742 உண்மையில் இது சம்பந்தமான ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து வந்து கொண்டு உள்ளது. பத்து வருடத்துக்கு முதல் வந்த ஆய்வுக்கும் போன வருஷம் வந்த ஆய்வு முடிவுக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதில் வியய்ப்பில்லை.எனினும் மேல் தந்த சுட்டியில் தரப்பட்ட தகவல் அடிப்படையிலும் இன்னும் பல ஆராட்சி கட்டுரைக்களின் அடிப்படையிலும் கருத்தடை மாத்திரைகளுக்கும் புற்றுநோய்க்கும் காத்திரமான தொடர்பு உண்டு. உடலின் எந்த இயற்கையான செயல்ப்பாட்டையும் alter செய்யும் பொழுது இதுபோன்ற பிரச்னை வர நிகழ்தகவு அதிகம். ஆனாலும் மேலே ஜஸ்டின் சொன்னது போல் குறிப்பிட்ட வகை புற்றுநோய்களை வர விடாமலும் செய்கிறது இந்த கற்பத்தடை மாத்திரைகள் என்பதும் நிறுவப்பட்ட உண்மை தான். இங்கே கிழே Canadian Cancer society தந்த தகவல் சுட்டியை இணைக்கின்றேன். அதில் தரப்பட்ட தகவல்கள் நான் மேலே சொன்னதோடு ஒத்திசைகின்றது. அதே சமயம் justin குறிப்பிட்ட சில வகை புற்றுநோய்களை குறைகிறது என்பதையும் வழிமொழிகிறது. கற்பத் தடை மாத்திரைகள் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்( இது மிக அதிகமாக நடக்கிறது) ஈரல் புற்றுநோய் ஆகியவை வரும் தகவை அதிகரிக்கும் அதே நேரம் கருப்பை மற்றும் சூலகப் புற்றுநோய் ஆகியவை வரும் வாய்ப்பையும் குறைகின்றது. ஆகவே கற்பத் தடை குழிசை எடுத்தால் சில வகை புற்றுநோய்கள் வரும் வாய்ப்பு குறைவு என்பதால் அதை என்னால் பரிந்துரை செய்ய முடியுமா? இல்லை என்பது தானே பதில்!!!என்னேன்றால் அதனால் வேறு வகையான புற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகரிக்கிறது அல்லவா!! எப்பொழுதும் கர்ப்பம் தவிர்ப்பதற்கு எடுக்கப்படும் கடைசி வாய்ப்புத் தான் இந்த கற்பத் தடை மாத்திரைகள் என்பது தான் சரி. https://cancer.ca/en/cancer-information/reduce-your-risk/understand-hormones/all-about-the-birth-control-pill மேலே ஜஸ்டின் இணைத்த அண்டர்சன் புற்றுநோய் ஆய்வு நிறுவனத்தின் தகவலை உண்மையில் இப்போது தான் கேள்விப்படுகின்றேன். எனினும் அதை உயரிய மருத்துவ சபைகள் இன்னும் ஆங்கீகரித்து தமது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளை இன்னும் மாற்ற வில்லை.
    1 point
  25. பிக்குகளே பிளே பாய்யாக இருக்கும் போது அந்த காஞ்ச ராணுவ வீரரும் என்ன செய்வார்
    1 point
  26. நீங்கள் சொல்வது சரி.. ஏனெனில் தாளையடி வழியாகத்தான் போனேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி..
    1 point
  27. இந்த அதிகாரிகள் எல்லாம் பெரும்பாண்மை இனத்தை சேர்ந்தவர்கள். வனத்தை பாதுகாக்கவேண்டுமென்ற எண்ணத்தை விட மக்களை அடிமைகளாக வைத்திருக்க வேண்டும் என்பதே அவர்களது எண்ணம். மக்கள் கூறுவதை பாருங்கள், பணம் கொடுத்தால் எந்த பெரிய வீடடையும் கட்டிக்கொள்ளலாம். பணம் இருந்தால் சடடம் எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. இதுதான் உண்மை. இந்த பெரும்பாண்மை அதிகாரிகளின் ஊர்களுக்கு சென்று பார்த்தல் பெரிய வீடுகளில் வசதியாக வசிப்பார்கள். ஆனால் அவர்கள் எடுக்கும் சம்பளத்துடன் பார்க்கும்போது அப்படி இருக்க முடியாது. பாவம், அப்பாவி மக்கள்.
    1 point
  28. கருணாநிதி காலத்தில் இந்திய பிரதமருக்கு அவர் கடிதம் எழுதுவதாக அடிக்கடி வாசிப்பதுண்டு. அது தமிழ் நாட்டு பிரசினையாக இருக்கும், சிலவேளைகளில் ஈழ தமிழர் பிரச்சினையாக இருக்கும். ஏதும் பதிலோ, நடவடிக்கையோ என்றால் பூச்சியம்தான். இப்போது இலங்கை அரசியல்வாதிகளும் எழுதுகிறார்கள், எழுத்தாளர்களும் எழுதுகிறார்கள். நிச்சயமாக பதில் பூச்சியம்தான். இந்தியா என்ன எதிர்பார்க்குதோ, எதை நிறைவேற்ற வேண்டுமென்று நினைக்கிறார்களோ அது நடக்கும்போது தமிழர் பிரச்சினை பற்றி அலடட வேண்டிய அவசியமில்லை. இந்தியாவுக்கு எதிராக எதாவது வரும்போதுதான் தமிழர்களை பற்றி இந்தியா யோசிக்கும். எனவே ஈழ தமிழர்கள் சீனாவைப்பற்றி கருத்தில் கொணடால்தான் எதாவது நடக்குமோ தெரியவில்லை. இங்கு 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த இந்தியாவே தடமடித்துக்கொண்டு திரியிது. அதுக்குள்ளே யோதிலிங்கம் இப்படி எழுதுவதில், அல்லது அரசியல் வாதிகள் சமஷடி பற்றி எழுதுவதில் ஏதாவது பிரயோசனம் இப்போது இருக்குமா என்பது கேள்விக்குறியே?
    1 point
  29. என்னிடம் இல்லை. ஆனால் எமது சமூகத்தின் முன்னால் இருக்கிறது. அதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். பாராளுமன்ற ஜனநாயக அரசியலை விட்டு வெளியேறி வெகுஜன போராட்டங்களை ஆரம்பிக்கவேண்டும். அவையும் நசுக்கப்பட்டால் ஆயுதப் போராட்டம் ஒன்று மீளவும் உருவாவதை எவராலும் தவிர்க்க முடியாதிருக்கும்.
    1 point
  30. லூத்தவேனியாவில் ............................
    1 point
  31. இலங்கையை பொறுத்தவரை தமிழர்களுக்கு பேர் போன கனடா சிங்கள ஆதிக்கம் கூடி விடும் என்கிறீர்கள்? சிங்களத்தின் திட்டமிடல் பலே.
    1 point
  32. கனடாவுக்கு பெருவாரியான சிங்களவர்களும் வந்து கொண்டு இருக்கின்றனர். தமிழர்களை விட சிங்கள மாணவர்கள் அதிகமாக இந்த 6 மாதங்களில் வந்துள்ளனர். போதாக்குறைக்கு சிங்கள அன்பர் ஒருவருக்கு 30 மில்லியனும் கொட்டியிரிக்குது...இனி முழுச்சிங்களச் சனமும் வந்தாலும் வந்துவிடும்....இசுலாமிய சைட்டிலையும் அவையிட ஏரியாக் காணியெல்லாம் தாறூ மாறா விலைப்படுகுது..அவையும் லைனிலை நிக்கினம்... விரைவில் இலங்கனடாதான் போலைகிடக்கு🙃
    1 point
  33. நாணயம் சில வருடங்களுக்கு முன் நண்பரொருவர் மூலம் அறிமுகமான சுந்தரம் பத்தர் அயல் ஊரில் வசிப்பவர் . அந்த குடும்பத்தில் இருந்த மாப்பிள்ளைக்கு பெண் பார்க்க ஆரம்பித்த பொது ..அயல் ஊரில் பெண் கிடைக்கவே ...திருமணம் நிச்சயமாகி கலியாணத்துக்கு நாள் குறித்தார்கள். மாப்பிள்ளை வீடடார் நகைகள் செய்வது சுந்தரம் பத்தரிடம். பெண் வீட்ட்ருக்கும் அறிமுகமாகி அவர்களும் அங்கு ஓடர் கொடுத்தனர். திருமணம் இனிதே நடந்தது . வாழ்க்கையும் ஆரம்பமாகியது . காலம் உருண்டோடியது . நாட்டில் ஏற்படட இன அழிப்பின் போது பல் கஷ்டங்களை தாண்டி .வெளிநாட்டுக்கு அகதியானார்கள் இந்த மாப்பிள்ளையும் பெண்ணும். அங்கம் காலங்கள் உருண்டோடின ஆணும்பெண்ணுமாய் இரு குழந்தைகளும் அவர்களுக்கு கிடைத்தனர். மிகுந்த கஷ்ட பட்டு வாழ்கை ஓடியது .பெண் குழந்தை வயதுக்கு வந்தாள் .அதைக் குடும்பத்துடன் கொண்டாட நாள் பார்த்து ஆயத்தங்களை செய்தார்கள். சிறுமிக்கு நகை செய்ய எண்ணி வங்கியில் வைத்திருந்த நகைகளில் தந்தையின் ஏழு பவுன் சங்கிலியை எடுத்து அழித்து சங்கிலி காப்பு செய்ய கனடாவில் உள்ள நகை கடை ஒன்றை அணுகினர். அவரும் நிறுத்து பார்த்து எடை சரிபார்த்தார். அவர்களுமொடர் கொடுத்து வாயிலை விட்டு நீங்கி சில செக்கன்களில் அந்த நகை கடை முதலாளி சங்கிலியை உரைத்துப்பார்த்து. இவர்களை மீண்டும் கடை பையனை விட்டு அழைத்து. சொன்னர் இது நிறைய ( கலப்பு )கலப்படம் இருக்கிறது .பெறுமதி இல்லை என. அவர்களுக்கு இடி விழுந்தது போல ஆனது . ஓடரை கான்சல் செய்து மீண்டும் வருகிறோம் என சென்று விட்ட்னர். வீட்டில் அந்த நகை செய்த்த்வரைப்பற்றி ஒரே அதிர்ச்சி . கிட்ட தடட பதினைந்து மேற்பட்ட் வருடங்கள் இருக்கும். தங்கள் ஏமாந்து விடடோமே என எண்ணி கவலைப்பட்ட்னர். செய்தவரை எங்கே தேடுவது நியாயம் தான் கிடைக்குமா ? சில ர் பேச்சு வழக்கில் சொல்வார்கள். அவர் ஓர் நல்ல மனிதர் , நாணயமானவர் , என்று .அந்த நாணயம் என்பது ..நா நயம், சொல் பிறழாமை. அனுபவப்படடவர் சொன்ன கதை. பெயர்கள் யாவும் கற்பனை.
    1 point
  34. ஏராளன், பகிடியின் "புற்று நோய் ஆபத்துமிக அதிகம்" என்ற பதிலுக்கு அவர் தான் ஆதாரங்கள் தர வேண்டும். என்னுடைய பதில், எம்.டி அண்டர்சன் புற்று நோய் ஆய்வு நிலையத்தின் தகவலின் படி: https://www.mdanderson.org/publications/focused-on-health/birth-control-pill-and-cancer-risk.h28Z1590624.htm 1. கருப்பை மேலணிப் (endometrial) புற்று நோய், சூலகப் (ovarian) புற்று நோய் - இவையிரண்டினதும் ஆபத்து கருத்தடை மருந்துகளால் குறைகின்றது. 2. மார்பகப் (Breast) புற்று நோய், கருப்பைக் கழுத்துப் (Cervical) புற்று நோய் - இவையிரண்டினதும் வாய்ப்புகள் தற்காலிகமாக சிறிதளவு அதிகரிக்கின்றன. "தற்காலிகம்" என்பது, கருத்தடை மருந்தை நிறுத்தினால் இருக்கும் சிறதளவு ஆபத்தும் நீங்கி விடுகிறது. மேலும், இந்த சிறிதளவு ஆபத்தும் ஏற்கனவே உடலில் இருக்கும் BRCA போன்ற விகாரங்களை விட மேலதிகமாக இருக்காது.
    1 point
  35. இராணுவ ரோந்து அணி ‍ - நான்கு நான்கு பிராவோ நான்கு நான்கு பிராவோ என்று அழைக்கப்பட்ட ராணுவ ரோந்து அணி மாதகல் முகாமிலிருந்து வழமைபோல கிளம்பியது. இரவு 8 மணியளவில் குருநகர் இராணுவ முகாமை ரோந்து அணி வந்த‌டைந்தது. இலங்கை இலகு காலாட்படையின் முதலாவது பட்டாலியன் படைப்பிரிவைச் சேர்ந்த அந்த அணிக்கு இரண்டாம் லெப்டினன்ட் வாஸ் குணவர்த்தன தலைமைதாங்கினார். சுமார் ஒரு வார காலத்திற்கு முன்னர்தான் அவரது அணி மாதகல் முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இந்த இராணுவ அணி குருநகர் முகாமை வந்தடைந்ததும் வாஸ் குணவர்த்தனவைச் சந்திப்பதற்காக யாழ்ப்பாணத்தின் ராணுவ புலநாய்வுத்துறையின் தளபதி மேஜர் சரத் முனசிங்க காத்துநின்றார். வாஸ் அங்கு வந்து சேர்ந்ததும், செல்லக்கிளி தலைமையில் ராணுவ ரோந்து அணிமீது யாழ்ப்பாணத்தில், நள்ளிரவிற்குச் சற்றுப்பின் தாக்குதல் ஒன்றை நடத்த புலிகள் தயாராகி வருவதாக தனக்குச் செய்தி கிடைத்திருப்பதாக அவர் கூறினார். புலிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் ஒன்றினைக் கொடுக்க முனசிங்க முடிவெடுத்தார். அதன்படி தன்னுடன் கொமாண்டோ அணியொன்றினை அழைத்துக்கொண்டு யாழ்நகரை ரோந்து சுற்றிவர அவர் தீர்மானித்தார். ஆகவே, வாஸ் குணவர்த்தனவின் ரோந்து அணி வழமைக்கு மாறாகா நள்ளிரவுக்கு முன்னரே யாழ்நகர எல்லையைத் தாண்டிச் சென்றுவிட வேண்டும் என்று அவர் பணித்தார். 1983 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியிலேயே ராணுவத்தினரும் பொலீஸாரும் இணைந்து பலமான புலநாய்வுக் கட்டமைப்பொன்றினை யாழ்ப்பாணத்தில் உருவாக்கியிருந்தனர். யாழ் குருநகர் இராணுவ முகாமிலிருந்து இயங்கிவந்த இந்த கூட்டுப் புலநாய்வு அணியினர், போராளி இயக்கங்களிலிருந்து கழன்று வீழ்ந்தவர்களை பணத்தாசை காட்டி தம்முடன் இணைத்துக்கொண்டனர். 1982 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திக்கம் பகுதியில் நிறைபோதையில் தடுமாறிக்கொண்டு நின்ற இளைஞர் ஒருவரை முனசிங்க பிடித்துவந்து குருநகர் முகாமில் அடைத்து வைத்திருந்தார். விசாரணைகளின்போது அந்த இளைஞர் முன்னர் புலிகள் அமைப்பில் இணைந்து இயங்கிவந்தவர் என்றும் பின்னர் இயக்கத்திலிருந்து கழன்று வந்திருந்தார் என்பதும் தெரியவந்த‌து.புலிகளின் மூத்த உறுப்பினர்கள், அவர்களின் குடும்பங்கள், அவர்கள் வசித்துவந்த வீடுகள் பற்றிய பல விடயங்களை அவர் அறிந்துவைத்திருந்தார். பிரபாகரன், ராகவன், ராஜன், பேபி சுப்பிரமணியம், ரகு, சங்கர் , பண்டிதர் ஆகியவர்களை அந்த இளைஞர் நன்றாக அறிந்துவைத்திருந்தார். அந்த‌ இளைஞரின் பலவீனங்களான மதுபானம் மற்றும் பணம் ஆகியவற்றினைக் கொடுத்து தமது நலன்களுக்காக அவரை இராணுவப் புலநாய்வுத்துறையினர் பாவிக்கத் தொடங்கினர். புலநாய்வுத்துறையால் அவருக்கு "சேவியர்" என்கிற பெயரும் வழங்கப்பட்டது. சீலனின் உடலை யாழ் வைத்தியசாலையில் அடையாளம் காட்டியவரும் அவரே. ஆடி 23 ஆம் திகதி இராணுவ ரோந்து அணிமீது செல்லக்கிளி தலைமையில் புலிகள் தாக்குதல் ஒன்றினை நடத்தப்போகிறார்கள் என்கிற தகவலை இராணுவத்தினருக்கு வழங்கியவரும் இதே சேவியர்தான். முனசிங்கவின் தேடுதல் வேட்டைகளின்போது அவருக்கு உதவியாக இருந்த சேவியர், புலிகளின் முக்கியஸ்த்தர்களின் வீடுகளையும் ராணுவத்தினருக்குத் தொடர்ச்சியாகக் காட்டிக் கொடுத்து வந்தார். புலிகளால் நடத்தப்படவிருப்பதாக தான் அறிந்துகொண்ட தாக்குதல் குறித்து வாஸிடம் கூறிவிட்டு, அவரைத் தன்னுடன் மதுபானம் ஒன்றினை அருந்த வருமாறு முனசிங்க அழைத்தார். "மதுபானம் அருந்துவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்கிற கேள்வியுடன் வாஸ் குணவர்த்தனவை அழைத்தார் முனசிங்க. "இல்லை, வேண்டாம். நான் இரவு உணவை உட்கொண்டுவிட்டு உடனடியாக மாதகல் முகாம் நோக்கிப் புறப்பட வேண்டும்" என்று வாஸ் பதிலளித்தார். பின்னர் வாஸும் அவரது ராணுவ அணியினரும் அவசர அவசரமாக தமது இரவுணவினை குருநகர் முகாமில் முடித்துக்கொண்டனர். பின்னர் முனசிங்கவைப் பார்ப்பதற்காக அவரது அறைக்குச் சென்றார் வாஸ் குணவர்த்தன. தன்னுடன் வைத்திருந்த பிறிஸ்ட்டல் சிகரெட் ஒன்றினை முனசிங்கவிடம் கொடுத்து, அதனைப் பற்றவைத்துவிட்டார் வாஸ். தானும் ஒரு சிகரெட்டினை புகைத்துக்கொண்டே முனசிங்கவுக்கு, "இரவு வணக்கங்கள்" என்று கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றார். தான் பயணிக்கும் ஜீப் வண்டியில் வாஸ் ஏறிக்கொள்ள மேலும் இரண்டு இராணுவ வீரர்கள் ஜீப்பின் பின் இருக்கைகளில் ஏறி அமர்ந்துகொண்டனர். ஜீப்பை இராணுவச் சாரதி மானதுங்க ஓட்டிச் சென்றார். பின்னால் வந்த இராணுவ ட்ரக்கில் பத்து இராணுவ வீரர்கள் ஏறிக்கொண்டனர். ட்ரக்கினை இராணுவக் கோப்ரல் பெரேரா ஓட்டிவந்தார். குருநகர் முகாமிலிருந்து கிளம்பிய இந்த ரோந்து அணி யாழ்நகர சந்தைப்பகுதியூடாக மெதுவாக ஊர்ந்து சென்று நாகவிகாரையினை அடைந்ததும் சில நிமிடங்கள் அங்கு தரித்து நின்றுவிட்டு பின்னர் நல்லூர், கோப்பாயூடாக உரும்பிராய் நோக்கித் தனது ரோந்தினை ஆரம்பித்தது. உரும்பிராயை அடைந்ததும், வாஸ் குணவர்த்தன குருநகர் முகாமுடன் தொடர்புகொண்டு தனது அறிக்கையினைத் தாக்கல் செய்தார். "நான்கு நான்கு பிராவோ" என்று ஆரம்பித்த அவரது அறிக்கை, "எல்லாம் சாதாரணமாகவே இருக்கிறது. அமைதியாகக் காணப்படுகிறது. நாங்கள் எமது முகாம் நோக்கிச் செல்கிறோம்" என்று கூறியது. அதன்பின்னர் தனது வழமையான முகாம் திரும்பும் பாதையான கோண்டாவில், கொக்குவில், திருநெல்வேலி பின்னர் மாதகல் எனும் ஒழுங்கில் தனது முகாம் நோக்கிய பயணத்தை ஆரம்பித்தது. மளிகைக்கடையின் கூரையின் மேல் பதுங்கியிருந்த செல்லக்கிளியும் விக்டரும் வீதியை மிகுந்த அவதானத்துடன் பார்த்துக்கொண்டு நின்றனர். தூரத்தில் வந்துகொண்டிருக்கும் ராணுவ வாகனங்களின் இரைச்சலினை அவர்களால் கேட்க‌ முடிந்தது. சிறிது நேரத்தின் ராணுவ வாகனங்களின் மின்விளக்குகளை அவர்களால் பார்க்க முடிந்தது. செல்லக்கிளி கண்ணிவெடியை இயக்குகம் கருவியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையில் இருந்து சீலன் எடுத்துவந்த நான்கு கண்ணிவெடி இயக்கிகளில் ஒன்றையே செல்லக்கிளி அன்று தன்னுடன் வைத்திருந்தார். சீலன் இறுதியாகப் பங்குபற்றிய தீரமான சம்பவமும் காங்கேசந்துறைச் சீமேந்துத் தொழிற்சாலையிலிருந்து கண்ணிவெடிகளைக் கைப்பற்றிச் சென்றதுதான். சீலன் அன்று எடுத்துவந்திருந்த கண்ணிவெடிகளைப் பாவித்தே சீலனின் மரணத்திற்கான பழிவாங்கலை புலிகள் செய்ய முடிவெடுத்திருந்தனர். தமது தாக்குதலை ஆரம்பிப்பதற்கு அழைப்பு விடுக்கும் மெல்லிய விசில் சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். கண்ணிவெடியின் இயக்கியை செல்லக்கிளி அழுத்தினார். இரண்டு கண்ணிவெடிகளும் ஒரேநேரத்தில் வெடித்தன. மிகப் பலத்த சத்ததுடன் அவை முளங்கின‌. சுமார் மூன்று நான்கு கிலோமீட்டர்கள் தொலைவிலிருந்தவர்களும் அந்த வெடியோசையை அன்றிரவு கேட்டார்கள். குருநகர் முகாமிலிருந்த ராணுவத்தினரும் அந்த வெடியோசையினை மிகத் தெளிவாகக் கேட்டனர். முதலாவது கண்ணிவெடி, ஜீப் வண்டி அதன் மேலாகச் செல்லும்போது வெடித்தது. மேலே தூக்கியெறியப்பட்ட ஜீப் வண்டி வீதியின் ஓரத்தில் நொறுங்கி வீழ்ந்தது. இத்தாக்குதல் குறித்து பின்னாட்களில் தமிழ் இதழான தேவியில் பேட்டியளித்த கிட்டு, வெடிப்பின்போது ஜீப் வண்டி ஒரு தென்னைமரத்தின் உயரத்திற்கு மேலே தூக்கி வீசப்பட்டதாகக் கூறியிருந்தார். இரண்டாவது கண்ணிவெடி, ட்ரக் வண்டியிலிருந்து ஒரு சில மீட்டர் தூரத்தில், வண்டியின் முன்னால் வெடித்தது. உடனடியாக ட்ரக் வண்டியை நிறுத்திய சாரதி, கண்ணிவெடியால் உருவாக்கப்பட்ட பள்ளத்தில் அது வீழ்வதிலிருந்து தவிர்த்துக்கொண்டார். இரண்டு வெடிப்புக்களும் வீதியில் பாரிய பள்ளங்களை ஏற்படுத்தியிருந்தன. ஜீப்பில் பயணம் செய்து வந்த அனைவருமே அதிலிருந்து தூக்கி வீசப்பட்டிருந்தனர். சாரதி மானதுங்கவின் சடலம் வண்டியின் சாரதி இருக்கைக்கு அருகில் வீழ்ந்து கிடந்தது. அதிகாரி வாஸ் குணவர்த்தனவின் உடல் வீதியிலிருந்து சில மீட்டர்கள் தூரத்தில் தூக்கி வீசப்பட்டுக் கிடந்தது. பின்னால் இருந்துவந்த இரு ராணுவ வீரர்களினதும் உடல்களும் வாகனத்தின் பிற்பகுதியில் சிதைந்த நிலையில் காணப்பட்டன. அவர்களது மரணங்கள் வெடிக்கும்போதே நிகழ்ந்துவிட்டன. பின்னர் பிரபாகரனும் ஏனைய போராளிகளும் ட்ரக்கில் இருந்த ராணுவத்தினர் மீது வீதியின் இரண்டு பக்கத்திலிருந்தும் சரமாரியாகச் சுடத் தொடங்கினர். ட்ரக்கிலிருந்து வெளியே குதித்துத் தப்பிக்க முயன்ற பல ராணுவத்தினர் சூடுபட்டு இறந்து வீழ்ந்தனர். யாழ் மாவட்டத் தளபதி பிரிகேடியர் லைல் பல்த்தசாரும், மேஜர் முனசிங்கவும் வெடியோசையினைக் கேட்டனர். இதுகுறித்து பின்னாட்களில் என்னுடன் பேசிய முனசிங்க பின்வருமாறு கூறினார், "நான் எனது இரவுணவை முடித்துக்கொண்டு எனது அறைக்குச் சென்றேன். உணவு உட்கொள்ளும் மண்டபத்திலிருந்து மிக அருகிலேயே எனது அறை இருந்தது. நான் தூங்குவதற்காக கட்டிலில் அமரும்போது அந்த பாரிய வெடியோசையினைக் கேட்டேன். நல்லூர் கோயில் இருக்கும் திசையிலிருந்தே அந்த வெடியோசை கேட்டது. அப்போது இரவு 11:20 ஆகியிருக்கும். நான் அவசர அவசரமாகக் கட்டிலில் இருந்து எழுந்துகொண்டேன். எனது அறையின் யன்னலில் தட்டி உடனடியாக என்னை வெளியில் வருமாறு தளபதி பல்த்தசார் அழைத்தார். நாங்கள் இருவரும் ரேடியோ அறைக்கு ஓடிச் சென்றோம். ரோந்தில் ஈடுபட்டிருந்த ராணுவ அணியுடன் தொடர்பினை ஏற்படுத்த நாம் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. அப்பக்கத்திலிருந்து எவருமே எமது அழைப்புக்களுக்குப் பதிலளிக்கவில்லை". "புலிகளுக்கெதிரான நள்ளிரவு நடவடிக்கை ஒன்றிற்காக‌ நாம் தயார்ப்படுத்தி வைத்திருந்த ஜீப் வண்டியொன்றில் நாம் ஏறிக்கொண்டோம். நான் அதனை ஓட்டிச் செல்ல, பல்த்தசார் எனக்கருகில் தாவி ஏறிக்கொண்டார். சில கொமாண்டொ வீரர்களும் எமது ஜீப்பின் பின்புறத்தில் ஏறிக்கொண்டார்கள். எம்மைப் பின்தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று இராணுவ வாகனங்களும் அவற்றின் பின்னால் உயர் பொலீஸ் அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு ஜீப் ரக வாகனமும் விரைந்து வந்துகொண்டிருந்தன. யாழ்ப்பாணம் பலாலி வீதியில் நான் அசுர கதியில் எனது ஜீப்பைச் செலுத்திக்கொண்டு போனேன். திருநெல்வேலிச் சந்தியை அண்மிக்கும்போது ராணுவ ஜீப்வண்டியொன்று ஒரு பக்கமாக வீழ்ந்த நிலையில் நொறுங்கிப் போயிருந்ததை நான் கண்டேன்" என்று கூறினார்.
    1 point
  36. அந்த செய்தி உள்ளூர் செய்தி ஊடகத்தில் வந்ததையே இங்கு பதிந்தேன் ஆனால் அந்த தனியார் வைத்திய சாலைகளின் மறைமுக கைகள் இங்கு யாழில் கூட இருக்கின்றது . எப்படிஎன்றால் எதிர் கருத்து வைக்க முடியாதவர்களின் கடைசி தஞ்சம் சதி கோட்பாடுகளை உருவாக்கும் செய்திகளை காவுபவர்கள் .😀 அரச வைத்திய சாலைகளில் இருந்து 5மைல் சுற்றளவுக்குள் தனியார் வைத்திய சாலைகள் இல்லாது தடை செய்யபடுதல் வேன்றும் அப்படி இல்லாவிட்டால் இங்கிருந்து எவ்வளவு சிலவழித்து தானமாய் உபகரனம்கள் கொடுத்தாலும் பிரியோசனம் இல்லை . ஆற்றில் பணத்தை போடுவதுக்கு சமம் .
    1 point
  37. திருநெல்வேலித் தாக்குதல் பலாலி வீதியையும் பருத்தித்துறை வீதியையும் இணைக்கும் குறுக்கு வீதியொன்றில் தான் ஒட்டிவந்த மினிபஸ்ஸை செல்லக்கிளி ஓரமாக நிறுத்தவும் உள்ளிருந்த பிரபாகரனும் ஏனைய தோழர்களும் இறங்கிக் கொண்டார்கள். திருநெல்வேலிச் சந்தி நோக்கி இருவர் கொண்ட சிறிய குழுக்களாகப் பிரிந்துகொண்ட அவர்கள் யாழ்ப்பாணத்திசையில் திரும்பி சுமார் 200 மீட்டர்கள் நடந்தார்கள். அவ்விடத்திலிருந்த மளிகைக்கடை ஒன்றின் முன்னால் அவர்கள் மீண்டும் கூடினர். சீமேந்தினால் அமைக்கப்பட்ட கூரையும், அதன் முன்னால் அரைப்பங்கிற்குக் கட்டப்பட்ட சீமேந்துச் சுவரும் கொண்டு காணப்பட்டது அந்த மளிகைக்கடை. சுமார் இரவு 9 மணியிருக்கும் அப்போது. அநேகமான வீடுகளில் மின்விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க ஒரு சில வீடுகளில் மட்டும் விளக்குகள் இன்னமும் எரிந்துகொண்டிருந்தன. வீதியில் சப்பாத்துக் காலடி ஓசை கேட்க, அருகிலிருந்த வீடுகள் சிலவற்றிலிருந்து குடியானவர்கள் வீட்டு யன்னல்களூடாக‌ வீதி நோக்கிப் பார்ப்பத் தெரிந்தது. தான் கொண்டுவந்திருந்த ஆயுதப் பையை வீதியில் போட்டுவிட்டு திறக்கப்பட்ட யன்னல்கள் அருகில் சென்ற விக்டர், "யன்னல்களைச் சாத்துங்கள்" என்று சிங்களத்தில் கத்தினார். பின்னர் மின்விளக்குகளையும் அணைக்குமாறு அவர் சிங்களத்திலேயே உத்தரவிட்டார். யன்னல்கள் சாத்தப்பட்டதுடன் மின்விளக்குகளும் உடனேயே அணைக்கப்பட்டுவிட்டன. சிங்கள ராணுவத்தின் கட்டளைகளுக்கு பணிந்துபோவதென்பது அப்போது தமிழருக்கு நன்கு பரீட்சயமாகியிருந்தது குறிப்பிடத் தக்கது. ராணுவத் தொடரணிகளின் பாதுகாப்பிற்காக கால்நடையாக வீதியில் ரோந்துவரும் சிங்கள ராணுவத்தினர் தமிழ் மக்கள் மீது இவ்வகையான கட்டளைகளை இட்டுக்கொண்டே செல்வது அக்காலத்தில் வழமையாக இருந்த ஒன்று. அன்றிரவு பிரபாகரனும் அவரது தோழர்களும் ராணுவச் சீருடையிலேயே காணப்பட்டதனால், அவர்களைச் சிங்கள ராணுவத்தினர் என்றே மக்களும் எண்ணிக்கொண்டார்கள். கடையின் அருகில், வீதியின் ஓரமாக தொலைத்தொடர்புச் சேவையின் ஊழியர்கள் கம்பிகளை புதைப்பதற்காக அகழிகளை வெட்டி வைதிருந்தார்கள். அந்த அகழிகளில் ஒன்றில் விக்டரும் செல்லக்கிளியும் தாம் கொண்டுவந்திருந்த கண்ணிவெடியினை புதைத்துக்கொண்டிருப்பதை பிரபாகரன் திருப்தியுடன் பார்த்துக்கொண்டு நின்றார். அவர்களுடன் அவர் பேசவில்லை. பின்னர் அருகில் நின்றை ஏனைய தோழ‌ர்களிடம் சென்ற பிரபாகரன் அவர்களுடன் சேர்ந்து, தாம் கொண்டுவந்திருந்த ஆயுதங்களை ஒவ்வொன்றாக சாக்குப் பைகளிலிருந்து வெளியில் எடுக்க ஆரம்பித்தார். எச் கே ஜி 3 தான் கொண்டுவந்த ஜி 3 ரைபிளை வாஞ்சையுடன் வெளியே எடுத்த பிரபாகரன் அதன் மீது படிந்திருந்த தூசியினை மெதுவாகத் துடைத்தார். ஏனையவர்களிடம் எஸ் எம் ஜி இயந்திரத் துப்பாக்கிகள் காணப்பட்டன. புலிகளின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் அங்கே இருந்தனர். பிரபாகரன், செல்லக்கிளி, கிட்டு, விக்டர், புலேந்திரன், ஐயர், சந்தோசம், அப்பையா உட்பட வேறு சிலரும் அந்த இராப்பொழுதில் அங்கே ராணுவத்தின் வருகையினை எதிர்ப்பார்த்துக் காத்து நின்றனர். புலிகளின் தாக்குதல்க் குழுவில் மொத்தமாக 14 பேர் இருந்தார்கள். பிரபாகரன் திட்டமிட்டதைப் போலவே இரு குழுக்களாக அவர்கள் பிரிந்துகொண்டார்கள். ஒரு குழுவிற்குப் பிரபாகரன் தலைமை தாங்க, மற்றைய குழுவிற்கு கிட்டு தலைமை தாங்கினார். இத்தாக்குதலை நடத்துவதற்கான திட்டம் பிரபாகரனாலேயே வகுக்கப்பட்டது. சீலனைக் கொன்றதற்காக இராணுவம் மிகப்பெரிய விலையினைச் செலுத்தவேண்டும் என்று தனது போராளிகளிடம் பிரபாகரன் கூறியிருந்தார். "சீலனின் இழப்பென்பது ஈடுசெய்யப்பட முடியாதது. ஆனாலும், சீலனின் இழப்பிற்கு நாம் பெரிதாக ஒரு நடவடிக்கையினைச் செய்யவேண்டும். அவனுக்குத் திருப்தியைக் கொடுக்கும் வகையில் அது அமையவேண்டும்" என்று சீலன் கொல்லப்பட்ட நாளிலிருந்து தனது போராளிகளிடம் பிரபாகரன் இதனைச் சொல்லி வந்திருந்தார். திருநெல்வேலித் தாக்குதல் நடந்து சுமார் 8 மாதங்களின் பின்னர், 1984 ஆம் ஆண்டு பங்குனியில் அனித்தா பிரதாப்பிற்கு செவ்வியளித்த பிரபாகரன், திருநெல்வேலித் தாக்குதல் சீலனின் மரணத்திற்கான பழிவாங்கலாகவும், இராணுவத்தினருக்கான தண்டனையாகவுமே தன்னால் திட்டமிடப்பட்டதாகக் கூறியிருந்தார். கல்கத்தாவில் இருந்து வெளிவரும் அரசியல் வார இதழ் ஒன்றிற்காக அனித்தா பிரதாப் பிரபாகரனை சென்னையில் செவ்வி கண்டிருந்தார். அனித்தாவினால் பிரபாகரனிடம் முன்வைக்கப்பட்ட கேள்வியினை நான் இங்கே இணைத்திருக்கிறேன், கேள்வி : ஆடித் தாக்குதலை நீங்கள் ஏன் நடத்தினீர்கள்? இத்தாக்குதல் நடத்தப்பட்ட விதம் குறித்துப் பல்வேறு விதமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றனவே? சிலரைப் பொறுத்தவரை, ராணுவத்தால் வன்புணர்வுசெய்யப்பட்ட தமிழ்ப்பெண்களுக்கான பழிவாங்கலாகவே இதனை நீங்கள் நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், நான் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, உங்களின் நண்பனும், ராணுவப் பிரிவின் தளபதியாகவும் இருந்த சார்ள்ஸ் அன்டனியை ஆடி 15 இல் கொன்றுவிட்டோம் என்று கூதூகலித்திருந்த சிங்கள ராணுவத்திற்கு ஒரு செய்தியைச் சொல்லவே நீங்கள் இத்தாக்குதலை நடத்தியதாக நான் உணர்கிறேன். உண்மையென்னவென்றால், உங்கள் இயக்கத்தின் மிக முக்கிய தளபதி ஒருவரைச் சிங்கள ராணுவம் கொன்றுவிட்ட போதிலும், அவர்கள் மீது தீவிரமான தாக்குதல் ஒன்றினை நடத்தக்கூடிய இயலுமையும் பலமும் இன்னமும் உங்கள் இயக்கத்திடம் இருக்கின்றது என்பதைக் காட்டவே நீங்கள் இதனைச் செய்தீர்கள் என்று நான் நம்புகிறேன், இது சரிதானே? பிரபாகரன் : "சார்ள்ஸ் அன்டனி பற்றியும், திருநெல்வேலித் தாக்குதல் பற்றியும் நீங்கள் தேடி அறிந்துவைத்திருக்கும் விடயங்களில் சில உண்மைகள் இருக்கின்றன. இத்தாக்குதல் ஒரு வழியில் பழிவாங்கலாகவும், இன்னொரு வழியில் சிங்கள ராணுவத்திற்கான தண்டனையாகவுமே எம்மால் நடத்தப்பட்டது. ஆனாலும், 13 சாதாரணச் சிங்களச் சிப்பாய்களின் மரணம் ஒரு மாபெரும் புரட்சிகர விடுதலைப் போராளியான சார்ள்ஸ் அன்டனியின் மரணத்திற்கு ஒப்பாகி விடாது. எமது எதிரி மீதான எமது அமைப்பின் கெரில்லா ரீதியிலான தாக்குதலாகவுமே இதனை நாம் முன்னெடுத்தோம்". மேலும், அனித்தா குறிப்பிட்ட நான்கு தமிழ்ப் பெண்கள் மீதான சிங்கள ராணுவத்தின் பாலியல் வன்புணர்வும் தமிழ்ச் சமூகத்தை வெகுவாகப் பாதித்திருந்தது. குறிப்பாக பிரபாகரன் இதுகுறித்து மிகுந்த ஆத்திரம் கொண்டிருந்தார். அக்காலத்தில் வந்திருந்த செய்திகளின்படி ஆடி 22 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மூன்று இளம் தமிழ்ப் பெண்களைக் கடத்திச் சென்ற சிங்கள ராணுவத்தினர் அப்பெண்களை தமது முகாமிற்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினர். இப்பெண்களில் ஒருவர் பிந்நாட்களில் தற்கொலை செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது. சதாசிவம் கிருஸ்ண‌குமார் ‍ கிட்டு திருநெல்வேலித் தாக்குதலைத் திட்டமிடும் பொறுப்பினை கிட்டுவிடமும் செல்லக்கிளியிடமுமே பிரபாகரன் ஒப்படைத்திருந்தார். போராட்டத்தினை முன்னோக்கி நகர்த்துவதற்கு ராணுவம் மீது தாக்குதல் ஒன்றினை மேற்கொள்வதே சரியானது என்று பிரபாகரன் உள்ளகக் கலந்துரையாடல்களில் போராளிகளிடம் பேசியிருந்தார். ஆகவே, ராணுவத்தின் இரவு ரோந்து அணி மீது தாக்குதல் நடத்துவதே சீலனின் மரணத்திற்கு தாம் கொடுக்கும் சரியான பதிலாக இருக்கும் என்று கிட்டுவும் செல்லக்கிளியும் முடிவெடுத்தனர்.இத்தாக்குதல் மூலம் ஆயுத ரீதியிலான பலமான அமைப்பொன்று உருவாகிவிட்டதை சிங்கள அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் உணர்த்த முடியும் என்றும் அவர்கள் நம்பினர். வழமையான ராணுவ ரோந்தணி மாலை மங்கும் வேளையில் மாதகல் ராணுவ முகாமிலிருந்து கிளம்பி யாழ்ப்பாணம் குருநகர் ராணுவ முகாமை வந்தடையும். இந்த ரோந்து அணியில் ஜீப் வண்டி ஒன்றும் ட்ரக் வண்டியொன்றும் இடம்பெற்றிருந்தன‌. குருநகர் முகாமில் தமது இரவு உணவை முடித்துக்கொண்ட அதிகாரியும் ராணுவ வீரர்களும் மீண்டும் மாதகல் முகாம் நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்தனர். திருநெல்வேலிச் சந்தி ‍ அண்மைய நாட்களில் ராணுவ ரோந்து அணி திரும்பிச் செல்லும் பாதையில் அமைந்திருந்த திருநெல்வேலிக் கிராமத்தை கிட்டுவும் செல்லக்கிளியும் தமது தாக்குதலுக்கான இடமாகத் தெரிவுசெய்வதற்கு மூன்று காரணங்கள் இருந்தன. முதலாவது அதன் அமைவிடம். யாழ்ப்பாண நகரில் இருந்து வெறும் இரண்டு கிலோமீட்டர்கள் தொலைவிலேயே அப்பகுதி அமைந்திருந்ததுடன், சனத்தொகை அடர்த்தி குறைந்த பகுதியாகவும் அது காணப்பட்டது. கட்டடங்களைக் கொண்டிருந்த பகுதியாதலால், மறைந்திருந்து தாக்குவதற்கு உகந்த பகுதியாகவும் அது காணப்பட்டது. இதற்கு மேலதிகமாக தாக்குதலை முடித்துக்கொண்டு தப்பிச் செல்வதற்கான பல வழிகளையும் அப்பகுதி தன்னகத்தே கொண்டிருந்தது. இரண்டாவது நேரம். ராணுவ ரோந்து அணி திருநெல்வேலியை அடையும் நேரம் நள்ளிரவு வேளையை அடைந்திருக்கும். அவ்வேளையில் வீதியில் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடியே வீதி கணப்படும். மூன்றாவதும், முக்கியமானதுமான காரணம் வீதியின் அருகில் தோண்டப்பட்டிருந்த அகழிகள் தமது கண்ணிவெடிகளைப் புதைத்துவைப்பதற்கு புலிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருந்தன. அப்பகுதியில் அகழிகள் தோண்டப்பட்டிருப்பதை இராணுவத்தினர் அறிந்திருந்தமையினால், அவற்றினைச் சந்தேகம் கொண்டு சோதிக்கும் எண்ணம் அவர்களுக்கு ஒருபோதும் ஏற்படப்போவதில்லை. அப்பகுதியைப் பார்வையிட்ட பிரபாகரன் மிகுந்த திருப்தியடைந்திருந்தார். இப்பகுதியைத் தெரிவுசெய்தமைக்காக கிட்டுவையும் செல்லக்கிளியையும் அவர் வெகுவாகப் பாராட்டினார். தமது தாக்குதலுக்கு மிகச் சரியான இடம் அதுவே என்று அவர்களிடம் பிரபாகரன் கூறினார். செல்லக்கிளி பதுங்கியிருந்து கண்ணிவெடியினை இயக்குவதற்கு உகந்த பாதுகாப்பினை சீமேந்துக் கூரையும், அரைப்பகுதி கட்டி முடிக்கப்பட்டிருந்த சீமேந்துச் சுவரும் அவருக்குக் கொடுத்தன. அவருக்குத் துணையாக அருகே பதுங்கியிருந்த விக்டருக்கும் அப்பகுதி பாதுகாப்பு அளித்தது. கூரையிலிருந்த கீழ்நோக்கித் தொங்கிக்கொண்டிருந்த மல்லிகைக் கொடியினுள் கண்ணிவெடிக்கான வயர்களை அவர்களால் முழுமையாக மறைக்கக் கூடியதாக இருந்தது. மேலும், அயல் வீடுகளில் கட்டப்பட்டிருந்த சீமேந்து மதில்களுக்குப் பின்னால் தாக்குதல் அணி மறைந்துகொள்வதற்கான வசதியும் அங்கு காணப்பட்டது. எனது ஊரான அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சந்தோசம் என்னுடன் சில வருடங்களுக்குப் பின்னர் பேசும்போது, "தாக்குதல் நடத்தப்பட்ட‌ நாளன்று, அதிகாலையிலிருந்தே நாம் அனைவரும் பதட்டத்துடன் இருந்தோம்" என்று கூறினார். 1983 ஆம் ஆண்டு ஆடி 23 ஆம் திகதியே தாக்குதலை நடத்துவதென்று பிரபாகரன் முடிவெடுத்திருந்தார். "அதற்கு முதல்நாள் இரவு என்னால் தூங்க முடியவில்லை. எமது தாக்குதல் வெற்றியடைய வேண்டும் என்று நான் வேண்டிக்கொண்டோம்" என்றும் அவர் மேலும் கூறினார். புலிகள் நடத்திய மூன்றாவது கண்ணிவெடித் தாக்குதலே திருநெல்வேலித் தாக்குதல் என்பதோடு, கண்ணிவெடித்தாக்குதலின் பின்னர் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதலும் இதுவாகும். புலிகளின் முதலாவது கண்ணிவெடித் தாக்குதலை செல்லக்கிளியினால் வெற்றிகரமாக நடத்த முடிந்திருக்கவில்லை. பொன்னாலைக் கரையோரச் சாலையில் புதைத்துவைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் கடற்படையினர் அப்பகுதிக்கு வரமுன்னரே வெடித்திருந்தன. கண்ணிவெடிகள் வெடித்தபோது கடற்படையினர் ரோந்து அணி சுமார் 100 மீட்டர்கள் தொலைவில் வந்துகொண்டிருந்தது. இரண்டாவது தாக்குதலான உமையாள்புரப் பகுதித் தாக்குதலில் கண்ணிவெடித் தாக்குதலுடன், துப்பாக்கித் தாக்குதலும் முதன்முறையாக நடத்தப்பட்டபோது, அதுவும் நேரம் தவறியிருந்தது. ராணுவத்தினரின் ட்ரக் வண்டி சுமார் 50 மீட்டர்கள் தொலைவில் வரும்போதே கண்ணிவெடிகள் வெடித்துவிட்டன. கண்ணிவெடி வெடிக்கவைக்கப்பட்டதையடுத்து ட்ரக் வண்டியைச் சாரதி நிறுத்திக்கொள்ள, வெளியே பாய்ந்த ராணுவத்தினர் புலிகள் நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தவாறே ஓடத் தொடங்க, புலிகளும் அப்பகுதியை விட்டுத் தப்பியோட வேண்டியதாயிற்று. புலிகள் எதிர்பாராத விதமாக ராணுவத் தொடரணியொன்று அப்பகுதிக்கு வந்ததனால் ஏற்பட்ட குழப்பத்தில் புலிகளின் அணியிலிருந்த சிலர் தமது காலணிகளையும் விட்டுவிட்டே ஓடியிருந்தனர். ஆகவே, திருநெல்வேலித் தாக்குதல் எப்படியாவது வெற்றியளிக்க வேண்டும் என்று தனது போராளிகளிடம் பிரபாகரன் சொல்லிக்கொண்டிருந்தார். கிளேமோர்க் குண்டு அதிகாலையிலேயே துயில்விட்டெழும் பழக்கம் கொண்ட பிரபாகரன் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நாளான ஆடி 23 ஆம் திகதி வழமைபோலவே அதிகாலையில் எழுந்துவிட்டார். தனக்குத் திருப்தியாகும் வரை செல்லக்கிளியுடனும் விக்டருடனும் தாக்குதல் திட்டத்தை மீண்டும் மீண்டும் பரீட்சித்துச் சரிபார்த்துக்கொண்டார். சுமார் இரண்டு மீட்டர்கள் இடைவெளியில் அகழியினுள் கண்ணிவெடிகள் இரண்டினைப் புதைத்த செல்லக்கிளியும், விக்டரும் அவற்றிற்கான மிந்தொடுப்பினை இயக்கியுடன் இணைக்கும் வேலையில் இறங்கினர். கண்ணிவெடிகளையும் , வெளியே தெரிந்த வயர்களளையும் மண்கொண்டு மூடி மறைத்தனர். வயரின் மீதிப்பகுதியை கூரையிலிருந்து நிலம்வரை தொங்கிக்கொண்டிருந்த மல்லிகைப் பந்தலினுள் லாவகமாக மறைத்துக்கொண்டு கூரையிலிருந்த இயக்கிவரை இழுத்துச் சென்றனர்.பின்னர் கூரையின் மீது ஏறி, மறைப்பாகக் கட்டப்பட்டிருந்த அரைச்சுவரின் பின்னால் பதுங்கிக் கொண்டு ராணுவ ரோந்து அணியின் வருகைக்காகக் காத்திருக்கத் தொடங்கினர். பிரபாகரனும் ஏனைய போராளிகளும் வீதியின் இரு மருங்கிலும் இருந்த மதில்களின் பின்னர் நிலையெடுத்து நின்றனர்.
    1 point
  38. பிக்குகளால்... வெள்ளையடிக்கப் பட்ட ராஜபக்சவினர்.
    1 point
  39. காலிமுகத்திடல் போராட்டத்தின் மூலமாக... கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விரட்டியடிக்கப் பட்டு (09.07.2022) ஓராண்டு நிறைவு. கோத்தா போனபின், அந்தப்... போராட்டத்தை நசுக்கி, அரசியல் செய்யும்... மாஃபியா அரசியல்வாதிகள்.
    1 point
  40. தூய அடிபணிவின் மகிழ்ச்சியற்ற தருணங்கள்: மாஜிதாவின் ‘பர்தா’ ஜிஃப்ரி ஹாசன் July 1, 2023 முஸ்லிம் பெண்களின் ஆடை (குறிப்பாக பர்தா, அபாயா போன்ற ஆடைகள்) குறித்த பார்வைகள் முஸ்லிம் சூழலில் தூய அடிபணிவிற்கான மதப் புனித ஆடையாகவே கருதப்பட்டு வருகிறது. அதன் மீது எந்தவொரு மாற்றுப் பார்வையும் ஏற்புடையதல்ல எனும் கருத்துநிலை தீவிரமாக உறைந்துள்ள ஈழத் தமிழ் முஸ்லிம் சமூக அமைப்பிலிருந்து எழுந்த மாஜிதாவின் பர்தா ஒரு புதிய உடைப்பாகக் கவனத்தை ஈர்க்கும் படைப்பு முயற்சியாகத் தோன்றுகிறது. சென்ற வருடம் வெளியான தமிழ் நாவல்களில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அதிகப் பிரதிகள் விற்பனையான நாவல்களின் பட்டியலில் பர்தாவுக்கும் ஓர் இடம் உருவாகி இருக்கிறது. இது தமிழ்ச் சூழலில் இந்நாவலின் பேசுபொருள் மீதான கவனக்குவிப்பின் விரிந்த தன்மையை எடுத்துக்காட்டுகிறது. தமிழ் முஸ்லிம் சூழலிலிருந்து பொதுவாகச் சில இலக்கியக் குரல்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் முஸ்லிம் பண்பாட்டுச் சூழல் குறித்த திறந்த உரையாடல் நிகழச் சாத்தியமற்ற வகையில் அந்த வெளி மூடுண்டு கிடப்பதையே காண்கிறோம். குறிப்பாக, பண்பாட்டு அடையாளங்கள் குறித்த சுய விசாரணையுடன் கூடிய பார்வைகள் இந்தச் சூழலிலிருந்து வெளிவருவது மிக அரிதானதாகவே இருக்கிறது. பர்தா குறித்து முஸ்லிம் பெண்கள் என்ன கருதுகிறார்கள் என்று நமக்குள் எழும் கேள்விக்கான பதிலை நோக்கி நாவல் நம்மை அழைத்துச் செல்கிறது. உண்மையில் இதற்கான பதில் நாவலில் நேரடியானதாகவோ அல்லது ஒருமையிலோ இல்லை. பதில்களாக அவை கிளைத்துச் செல்கின்றன. பொதுவாக முஸ்லிம் சூழலில் முஸ்லிம் பெண்களின் ஆடை குறித்த கலாசார உரையாடல்கள் புனிதப்படுத்தப்பட்டவையாக, மாற்றுச் சிந்தனைகளுக்கான எந்த வாய்ப்புகளுமற்றதாகச் சுருங்கிவிட்டது. எல்லாப் பெண்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, விரும்பி உடுக்கப்பட்டுவிட்ட ஒரு ஆடையாகப் பர்தாவை நாம் எண்ணிக்கொண்டாலும் அதற்குள்ளே சில கசப்பான உண்மைகளும் திரையிடப்பட்டிருக்கின்றன என்ற அழுத்தமான கருத்தை இந்நாவல் திறந்த வெளிக்குக் கொண்டுவருகிறது. மாஜிதாவின் முதல் நாவல் இது. முஸ்லிம் பெண்களின் பர்தா விசயத்தில் மாஜிதா எந்தத் தரப்பு என்பதைக் கவனத்திற்கொண்டே தமிழ் முஸ்லிம் இலக்கியச் சூழலில் பெரும்பாலானவர்களால் இந்நாவல் எதிர்கொள்ளப்படுகிறது. முஸ்லிம் இலக்கிய, பண்பாட்டுச் சூழலுக்கு வெளியிலும் இந்நாவல் மீதும் அதன் பேசுபொருள் மீதும் கவனயீர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் அந்தப் பார்வைகள்கூட இந்நாவலின் இலக்கிய அந்தஸ்தையும், புனைவுத் தரத்தையும் தூக்கி மதிப்பீடு செய்யும் தளத்திலேயே நிற்கின்றன. அதைத் தாண்டி அந்தப் பார்வைகள் நாவலின் கலாசார, அரசியல், பெண்ணியத் தளங்களை நோக்கி விரிவுகொள்ளவில்லை. மாஜிதா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவரது சொந்த இடம் கிழக்கிலங்கையின் ஓட்டமாவடி. அவரது ஊருக்கு முதன்முதலில் எப்படி பர்தா அறிமுகமானது என்பதைப் பற்றிய சமூக வரலாற்றுச் சித்திரமாகவே முதலில் இந்த நாவலை அணுக விரும்புகிறேன். அதற்கான சாத்தியப்பாட்டை நாவலின் கதை நமக்கு அளிக்கிறது. நாவலின் மையக் கதாபாத்திரமான சுரையா, தான் வாழும் சமூகச் சூழலில் எப்படி பர்தா அறிமுகமாகிறது என்பதை உன்னிப்பாக அவதானிக்கிறாள். அதன் அங்கமாகத் தானும், பிற பெண்களும் எப்படி மாற்றப்பட்டோம் என்பதை அவளது அனுபவங்களினூடே கதைக்குள் திடமாக முன்வைக்கிறாள். அப்போதைய முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பான புறச்சூழல் இவ்வளவு சர்ச்சைக்குள்ளானதாக இருக்கவில்லை. இங்கு மட்டுமல்ல, இஸ்லாமியர் சிறுபான்மையாக வாழும் எந்த நாட்டிலும் அப்படியொரு சூழல் இருக்கவில்லை என்றே நினைக்கிறேன். இன்று உலகளவில் அது பெரும் சர்ச்சையான ஒன்றாக மாறி இருக்கிறது. முஸ்லிம் பெண்களின் அபாயா, பர்தா போன்ற கலாசார ஆடைகள் மட்டும் ஏன் சர்ச்சைக்குள்ளாகின்றன என்ற கேள்வி முஸ்லிம் சமூகச் சூழலில் நிலவிக்கொண்டே இருக்கிறது. பெண்களின் பர்தா, அபாயா போன்ற கலாசார ஆடைகளில் முஸ்லிம்களிடையே மிக இறுக்கமான பிடிவாதம் தொடர்வதே இந்தச் சர்ச்சைக்குக் காரணம் என்றொரு சுய விமர்சனத்தை நாவல் முன்வைக்கிறது. குடும்பம், பள்ளிக்கூடம், அலுவலகம், சமூக இயக்கங்கள் என எல்லா மட்டங்களிலும் பர்தாவுக்கான பிரச்சாரத்தையும், பர்தா அணிவதை நடைமுறைப்படுத்தும் திட்டங்களையும் ஆண்கள்முன்னெடுக்கின்றனர். இதில் குறிப்பாக நாவலின் மையக் கதாபாத்திரமான சுரையாவின் தந்தை ஹயாத்து லெப்பை முன்னணியில் நிற்கிறார். பொதுவாக ஊரில் தலையெடுக்கிற எந்த விடயத்திலும் தலைமைப் பொறுப்பு தன்னிடம் வரவேண்டும் என எதிர்பார்க்கும் ஒருவராக நாவலில் அவர் அறிமுகம் செய்யப்படுகிறார். இத்தகைய தன்முனைப்பு கொண்டவர்கள் எதையும் புரிந்து செயற்படும் திறனற்றவர்கள் என்பதை இவர்களைப் பயன்படுத்துகிறவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். பர்தாவை இலங்கை முஸ்லிம் பண்பாட்டிலும் ஒட்டிவிடும் சிலரது நிகழ்ச்சி நிரலுக்குள் ஹயாத்து லெப்பையும் உள்வாங்கப்படுகிறார். அவருக்கு ஊரில் ஒரு தலைமைத்துவம் கிடைத்தால் போதும். எதையும் ஆழ்ந்து சிந்தித்துப் புரிந்து முடிவெடுக்கும் ஒருவர் அல்ல அவர். பர்தா நாவலில் சுரையாவின் ஊருக்கு முதன்முதலாக இந்த ஆடையைப் பாடசாலை, அரச அலுவலகங்கள் ஊடாகவே கொண்டுவரும் திட்டத்தை ஊர் மத்திச்சத் தலைமைகளான ஆண்கள் வகுத்துச் செயற்படும்போது, மீராசாஹிப் போன்ற அதிபர்கள் அதற்குப் பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றனர். இந்தப் பண்பாட்டை இங்கு கொண்டுசேர்ப்பதில் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் பங்கையும், முஸ்லிம் இயக்கங்களின் பங்கையும் மாஜிதா நாவலில் கவனப்படுத்துகிறார். ஜலால்தீன் போன்ற அரசியல்வாதிகள் அதன் குறியீடாக வருகின்றனர். முஸ்லிம் பாடசாலை ஒன்றுக்குத் திக்விஜயம் செய்யும் ஜலால்தீன் பர்தாவைக் கட்டாயப்படுத்திச் சொற்பொழிவாற்றுகிறார். “இப்போது ஈரான் அரசாங்கம் நம்மட நாட்டுல இருக்கிற முஸ்லிம் பெண்களுக்கு நல்லதொரு விடயத்த அறிமுகம் செய்திருக்கிறது. அதுதான் பர்தா. பெண்கள் கட்டாயம் பர்தா போடணும். இஸ்லாத்தில் அது கட்டாயக் கடமை. இதைப் பிள்ளைகள் மட்டும் போட்டால் போதாது. எல்லா டீச்சர்மாரும் போடணும்” என்று வலுத்த குரலில் ஆணையிடும் போதும், “போன வருஷம் ஈரானுக்குப் போன நம்மட ஊர் சபீக் மௌலவி இண்டைக்கு ஸ்கூலுக்கு வந்தாரு. இனிமேல் பொம்புளப் புள்ளயல் இந்த உடுப்பத்தான் உடுக்கணுமாம். இல்லாட்டி அல்லாஹ்விடம் தண்டனை கிடைக்குமாம்” என அனீஸா பர்தாவை அணிந்துகொண்டு வந்து உம்மாவிடம் சொல்லும்போதும் அந்த ஆடை இலங்கை முஸ்லிம் பண்பாட்டில் எப்படிப் புதிதாக வந்து ஒட்டிக்கொள்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ளும் தருணமாக இருக்கிறது. பாடசாலையிலிருந்து பர்தா அணிந்து வரும் தனது சகோதரி அனீஸாவைப் பார்த்து, “இதுக்குப் பெயர் என்ன?” என்று சுரைய்யா கேட்கும்போது பாரம்பரிய முஸ்லிம் பண்பாட்டுக்கு அதன் அந்நியத்தை உணர்கிறோம். விவசாயக் கந்தோரில் ஹயாத்து லெப்பையின் நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் ஆயிஷா அவரது வற்புறுத்தலின் பேரில் பர்தா அணிந்துகொள்கிறாள். புதிதாகப் பர்தாவை அணிந்துகொண்ட அவள் அதனை அசூசையாக உணரும்போது தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொள்கிறாள். அதை அவள் விரும்பி அணிந்தாளா என்று அவளது சக பெண் ஊழியரான வேணி கேட்கும்போது, “இதைப் போடாட்டி இங்க எப்புடி வேல செய்றது?” என ஆதங்கமாகச் சொல்கிறாள். ஊரில் பெண்களுக்குப் பர்தா அறிமுகமாகும் காலப்பகுதியில் ஆண்களுக்கான கலாசார ஆடைகள் குறித்து எந்த முன்னெடுப்புகளும் எடுக்கப்படவில்லை என்பது மிகவும் துயரமானது. இது பால்நிலை சார்ந்து முஸ்லிம் பண்பாட்டுச் சூழலில் நிலவும் பாரபட்சமின்றி வேறென்ன? அநேகமாக எல்லாப் பண்பாடுகளிலும் பெண்கள் இப்படி கலாசாரத் தளத்தில் வஞ்சிக்கப்பட்டிருப்பதை நாம் அறிவோம். பர்தா இலங்கை முஸ்லிம் பண்பாட்டில் ஈரானிலிருந்து வந்துதான் ஒட்டிக்கொண்டதா என்றால் முழுமையாக அப்படிச் சொல்ல முடியாது. இலங்கையின் பல்வேறு முஸ்லிம் ஊர்களுக்கும் அது வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு நாடுகளிலிருந்து இங்கு வந்து ஒரு Exotic பண்பாட்டு அடையாளமாகக் கலந்துவிட்டிருக்கிறது. மாஜிதாவின் ஊருக்கு அது ஈரானிலிருந்து இறக்குமதியாகி இருக்கிறது. இதனை இங்கு இறக்குமதி செய்தவர்களுக்குப் பொருளாதார நன்மைகள் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. பொதுவாக, இலங்கை முஸ்லிம் பண்பாட்டுச் சூழலில் சில இஸ்லாமிய இயக்கங்களைத் தொடக்கியவர்கள் உண்மையில் காண விரும்பியது கலாசார மாற்றம் அல்ல. தங்களது தனிப்பட்ட பொருளாதார மாற்றத்தையே அவர்கள் முதலில் விரும்பி இருந்தனர். இங்கு இஸ்லாமிய இயக்கம் நடத்தியவர்கள் யாரும் நஷ்டமடைந்ததில்லை. மறுதலையாக, ஒருசில இயக்கங்களால் முஸ்லிம் சமூகம் பண்பாட்டுரீதியாக நஷ்டமடைந்தது என்பதே கசப்பான உண்மையாக இருக்கிறது. பாரம்பரிய முஸ்லிம்களின் பண்பாட்டு மரபுகள், வழக்காறுகள் அரபுத்தூய்மைவாத பண்பாட்டுத் திணிப்புகளின் மூலம் பலாத்காரமாக ஆண்களால் அழிக்கப்பட்டதையும் மாஜிதா நாவலில் நினைவுகூர்கிறார். திருமண வைபவத்துக்காகக் குலவை இடும் பெண்களை ஈஸா மிக மோசமாகத் திட்டுகிறான். ஈஸா மதரசாவில் ஓதிவிட்டு வந்த பிறகுதான் பாரம்பரிய முஸ்லிம் பண்பாட்டை மறுத்து தூய்மைவாத அரபுப் பண்பாட்டுப் போராளியாக மாறுகிறான். “ஈஸாவின் மூளையை அந்த மதரசா மௌலவிமார்கள் குழப்பிப் போட்டாணுவள்“ என அவனைக் குறித்து நாவலில் ஒரு கதாபாத்திரம் சொல்கிறது. இத்தகைய மூளை குழப்பப்பட்டவர்கள் எந்த சுயவிசாரணையுமற்றவர்கள். மூர்க்கமான பிடிவாதக்காரர்களாக, தூரநோக்குகளற்று உஸ்தாதுகளின் (மௌலவிமார்) உள்ளரசியல் புரியாமல் அவர்களின் பொருளாதார, கலாசார நலன்களுக்கான கருவிகளாக மாறுகின்றனர். பராஅத் போன்ற பண்பாட்டு நிகழ்வுகளை அழித்ததன் மூலம் இவர்கள் எதனைச் சாதித்தார்கள் என்ற கேள்வி நாவலின் ஒரு கட்டத்தில் நமக்குள் எழுகிறது. சுரையா சிறுமியாக இருக்கும்போதே அவளது விருப்பத்துக்கு எதிராக அவளது தாய் பீவியால் பர்தா அவள் மீது திணிக்கப்படுகிறது. அதை எதிர்த்து சுரையா குரல் எழுப்பும்போது தந்தை ஹயாத்து லெப்பை காரமான காய்ந்த கொச்சிக்காய்களை அவளது வாய்க்குள் போட்டு சப்ப வைக்கிறார். பின் அந்தச் சாற்றை எடுத்து அவள் வாயில் தேய்க்கிறார். இந்தப் பாசிச மனநிலைகொண்ட மனிதர்களால் இந்தப் பர்தா சில சந்தர்ப்பங்களில் வன்முறை மூலமே சாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாவல் உரத்துச் சொல்கிறது. இந்த விசயத்தில் பெண்களிடம் ஒரு தூய பணிவைஆண்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள் என்பது நன்கு தெரிய வருகிறது. மதம், பண்பாடு என வரும்போது பெண்கள் கீழ்நிலைப்படுத்தப்பட்டு, ஆண்களின் கலாசாரக் கண்டுபிடிப்புகளின் பரிசோதனைக் களம் எனும் பாத்திரத்தையே அவர்கள் வரலாற்று நெடுகிலும் வகித்து வந்திருக்கிறார்கள். அவர்களது சுயம் கணக்கெடுக்கப்படாமல் அவர்களின் எதிர்பார்ப்புகள் புறக்கணிக்கப்பட்டு ஒருவித சோக நாடகீயத்தன்மையாக (tragedy) பெண்களது வாழ்வு மாற்றப்படுகிறது. இந்த வரலாற்றுத் துரோகத்துக்கு எதிரான ஒரு பெண்ணின் சலித்த குரலை இந்நாவல் நெடுகிலும் என்னால் கேட்க முடிந்தது. நாவலின் பத்தாவது அத்தியாயம் மறைத்தலின் அழகு கல்குடா முஸ்லிம்கள் மத்தியில் புதிதாக முளைத்த இஸ்லாமிய இயக்கங்கள் குறித்துக் கதையாடுகிறது. அந்த இயக்கங்களுக்கு பெரிதும் புனைபெயர்களே வழங்கப்பட்டிருக்கின்றன. மாஜிதாவின் சமூகச் சூழலலோடு அணுக்கமானவர்களுக்கு மட்டுமே அதைப் பிசிறுகளின்றிப் புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன். மற்ற வாசகர்களுக்கு இந்த இடம் புரிதலுக்குச் சற்று சவாலான இடம்தான். சமூகத்தில், குறிப்பாகப் பெண்கள் மத்தியில் அவர்கள் காண விழைந்த மாற்றம் என்ன என்பதில் எந்தத் தெளிவுமற்ற இயக்கங்கள் அவை. குறிப்பாக, முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் இயங்கிய இஸ்லாமிய இயக்கங்களின் கொள்கையை அப்படியே கண்மூடித்தனமாக அந்தச் சூழலிலிருந்து மிகவும் வேறுபட்ட இந்தச் சூழலுக்குக் கொண்டுவர முயன்றனர். இது எப்படி இங்கு வெற்றிபெறும் என்ற எந்த அடிப்படையான கேள்விகளைக்கூட அவர்கள் தங்களுக்குள் எழுப்பிக்கொள்ளவில்லை. அதனால்தான் அந்த இயக்கங்களால் இன்றுவரை முஸ்லிம் சமூகவெளியில் எந்தப் புரட்சிகரமான மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இலங்கை முஸ்லிம் சமூகவெளியில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அரச கல்வி நிறுவனங்கள், ஏனைய திட்டங்களினூடே நிகழ்ந்து வந்தவைதான். இதில் எந்த இஸ்லாமிய இயக்கத்துக்கும் பங்கில்லை. வெறும் சமூக மரபு சார்ந்த சில்லறைப் பிரச்சினைகளில் மக்களை மோதவிட்டதைத் தவிர வேறு எந்த உருப்படியான காரியத்தையும் அவர்களால் செய்யவும் முடியவில்லை, சாதிக்கவும் முடியவில்லை. இஸ்லாமிய இயக்கம் ஒன்று பெண்களுக்கான மதப் பிரச்சாரத்தை ஓர் ஆணைக் கொண்டு பெண்களுக்கும் அவருக்குமிடையில் ஒரு திரையைப் போட்டுக்கொண்டு மேற்கொள்வதை நாவலில் ஓரிடத்தில் மாஜிதா சித்தரிக்கிறார். இதுவே அவர்களிடம் எந்த முற்போக்கான திட்டங்களும் இல்லை என்பதைக் காட்டிவிடுகிறது. அவர்களின் முற்போக்குச் சிந்தனை என்பது பர்தாவைக் கருப்பு, வெள்ளை ஆகிய நிறங்களில் மட்டும் அணியாமல் நீலம், பச்சை, பின்ங் போன்ற நிறங்களிலும் அணியலாம் என்று கண்டுபிடித்துச் சொன்னதுதான். அதுதான் அவர்களால் இங்கு நிகழ்த்தப்பட்ட பெரும் சமூகப் புரட்சியாக இருக்கிறது என்பதை நினைக்கும்போது சிரிப்பை அடக்க முடியவில்லை. பாடசாலைகளில் புஹாரி போன்ற அதிபர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று பெண்கள் முகமும் மூட வேண்டும் என்கிற திட்டத்தைக் கொண்டுவருகின்றனர். சுரையாவின் வாழ்க்கையில் அவளால் எப்போதும் விரும்பப்படாத துயரமாகப் பர்தா பின்தொடர்கிறது. கொழும்புப் பல்கலைக்கழகம் சென்றும் அங்கும் பர்தா விடயத்தில் அவளது தெரிவுச் சுதந்திரம் முஸ்லிம் மஜ்லிஸினால் மூர்க்கமாக மறுக்கப்படுகிறது. பர்தா தொடர்பில் அங்கு முஸ்லிம் மஜ்லிஸ் கடைபிடிக்கும் இறுக்கமான சட்டங்களால் அயர்ச்சியடைகிறாள். ஆனால் சுரையா தன் தெரிவுச் சுதந்திரத்தையே முன்னிறுத்தி முடிவெடுக்கிறாள். ரெகிங் காலப்பகுதியில் முஸ்லிம் மஜ்லிஸ் தலைவர் ஹாஸிமிடம் அவள் தைரியமாகப் பர்தாவிலிருந்து தனது விலகலைச் சொல்கிறாள். அவன் சீறுகிறான். “பெண்கள் இஸ்லாத்தில் கட்டாயம் தலையை மறைக்க வேண்டும் என்று உனக்குத் தெரியாதா? ரெகிங் முடிஞ்சாலும் நீ கட்டாயம் பர்தா போடத்தான் வேணும்”. “நாங்க மட்டுந்தான் பர்தா போடனுமா? நீங்களும் ஜூப்பாவும் தொப்பியும் போட்டு வாங்களம்.”சுரையாவின் எதிர்வினை அதிகாரத்தை மிகக் கடுமையாகத் தொந்தரவு செய்கிறது. ஆனால் சுரையாவின் இந்தக் குரலைக் கலாசாரத்துக்கு எதிரான குரலாகப் பார்க்க முடியாது என்றே நினைக்கிறேன். சுரையா ஹாஸிமை நோக்கிச் சொல்லும் வார்த்தைகள் பண்பாட்டுக்கு எதிரானதல்ல. கலாசார அடையாளம் பெண்ணுக்கு மட்டுமே ஆனதல்ல என்பதைத்தான் அது சொல்கிறது. சுரையா சிறுமியாக இருக்கும் போதிருந்தே பர்தா மீது அவளுக்கு ஏன் இந்த வெறுப்பு? அதன் கலாசார அடையாளத்தால் ஏற்பட்ட வெறுப்பாக நான் சொல்ல மாட்டேன். அது பெண்களிடம் எந்த உரையாடலுமின்றி அவர்களின் விருப்பு வெறுப்புகள் எதுவும் கவனத்திற்கொள்ளப்படாமல் ஆண்களால் ஒருதலைப்பட்சமாகத் திணிக்கப்பட்டதனால் உருவான எதிர்ப்பாகவே தெரிகிறது. பெண்ணியச் சிந்தனையாளர் லாரா மல்வே சொல்வதைப் போல பெண் அர்த்தத்தை உருவாக்குகிறவளாக இல்லாமல் அர்த்தம் சுமப்பவளாக அவளுடைய இடத்தில் கட்டிப்போடப்பட்டிருக்கிறாள். மாஜிதாவின் பர்தா நாவலின் மையத் தொனியையே லாரா மல்வேயின் இந்த வரிகளுக்குள் நான் கண்டடைந்தேன். மாஜிதா இங்கு கேள்விக்குள்ளாக்குவது பெண் தனது கலாசார அடையாளம் சார்ந்து ஆணின் சுட்டுவிரல் முடிவையே எதிர்பார்த்திருக்க வேண்டியிருப்பதன் அவலத்தை, பெண் கலாசார அர்த்தத்தை உருவாக்குகிறவளாக இல்லாமல் அர்த்தத்தை சுமப்பவளாக இருப்பதன் அவலத்தை. அப்படிப் பார்க்கையில் அவர் நிராகரிப்பது பர்தாவை அல்ல என்று நான் நம்புகிறேன். எனது இந்த நிலைப்பாட்டுக்கு வலுசேர்க்கும் பொருட்டு நாவலின் கடைசி அத்தியாயத்தை ஆதாரமாக எடுத்துக் காட்டுவேன். சுரையாவின் தாய் பீவி சுரையாவின் மகளான லண்டனில் வளர்ந்த தனது பேத்தி றாபியாவுக்குப் பர்தாவை நீட்டுகிறாள். றாபியா அதை வாங்கிக்கொள்ளும்போது அவள் சுரைய்யாவைப் பார்க்கிறாள். சுரைய்யா, “உனக்கு விருப்பமானதை உடு” என்பதைப் போல அவளைப் பார்க்கிறாள். இந்த இடத்தில் றாபியாவுக்குக் கைமாறப்படும் பர்தா ஓர் ஆண் பெண் மீது நிகழ்த்தும் கலாசாரப் போராகவோ அடக்குமுறையாகவோ உருப்பெறவில்லை. அது மூத்தத் தலைமுறையிலிருந்து இளைய தலைமுறைக்குக் கைமாறப்படும் கலாசாரப் பரிவர்த்தனையாவே உருப்பெறுகிறது. அன்பின் நிமித்தம் அதை அங்கீகரிக்கவோ, அல்லது நிராகரிக்கவோ முடியுமான ஒரு சமநிலை அதிகாரத்தில் றாபியாவை நிறுத்தி இருக்கிறது. சுரையா அதைத் தனிமனித சுதந்திரமாகவே பார்த்து வந்திருக்கிறாள். ஒரு பண்பாட்டு அடையாளம் ஒரு சமூகத்தில் ஆழமாக வேறூன்றிவிட்டால் அதைத் தகர்ப்பமைப்பு செய்வது மிகவும் கடினமானது என்ற புரிதலும் இன்னொரு பக்கம் சுரையாவுக்குள் முகிழ்த்திருக்கிறது. ஆனால் எந்தப் பண்பாட்டு அடையாளமும் ஒரு பெண்ணின் இயலாமையின் மீது கட்டியெழுப்பப்படும் கலாசாரச் சின்னமாக இருக்கக்கூடாது என்கிற உறுதியான நிலைப்பாடும் அவளிடம் இருக்கிறது. பெண்ணியப் பார்வைகளுக்குள்ளிருக்கும் மிகைநிலைக் கதையாடல்களை இந்நாவலில் மாஜிதா கட்டமைக்கவில்லை. ஏனெனில் பெண்ணின் சுயம் துறந்த பண்பை அவரது படைப்புலக மனிதர்கள் நமக்கு வலியுறுத்துவதில்லை. அவர்கள் பெரும்பாலும் இயல்பாக இருக்க விரும்புகிறவர்கள். சுரையாவோ, அமீனா டீச்சரோ, பல்கலைக்கழகத்தில் ஹீராவோ பர்தாவை அங்கீகரிக்க மறுப்பதன் பின்னால் எந்தச் செயற்கையான மிகைக் கட்டமைப்புகளோ, போலியான சூழ்நிலைகளோ, கருத்தியல் பின்னணிகளோ இல்லை. அது அவர்களது வாழ்வின் இயல்பான சூழலிலிருந்து உருவாகும் ஒருவித ஒவ்வாமையின் விளைவுதான். மாஜிதாவின் இந்த நாவலை ஒரு கலைப்படைப்பாக அணுகி அதன் வெற்றி, தோல்வி குறித்தும் உரையாட விரும்புகிறேன். முஸ்லிம் பெண்கள் மீது ஒரு கலாசார ஆடையாகப் பர்தா எப்படி அவர்களின் மீது போடப்பட்டுவிடுகிறது என்கிற வரலாற்றுச் சித்திரிப்பு அனுபவத்தை இந்நாவல் நமக்குத் தருகிறது என்ற வகையில் அது ஒரு கலைப்படைப்பின் பணியாகத் திருப்தியுறக்கூடியதுதான். ஆனால், ஒரு கலைப்படைப்பின், அதுவும் இலக்கியப் படைப்பின் அவசியமான மற்ற அம்சங்களின் அடிப்படையில் இந்தப் படைப்பு அடைந்திருக்கும் உயரம் என்ன என்பதிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன். நல்ல கலைத்துவமான படைப்பைத் தருவதற்கான ஆற்றலையும் மொழியையும் மாஜிதா கொண்டிருப்பது இந்த முதல் நாவலிலேயே நமக்குப் புலனாகிறது. எத்தனையோ ‘முதல்’ நாவல்கள் நமக்கு எந்த நம்பிக்கையையும் தராத தமிழ்ச்சூழலில் மாஜிதா இந்த நம்பிக்கையைத் தருகிறார். அவருக்குள் ஒரு நீண்ட இலக்கியப் பின்புலம் இருப்பது அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், அவருக்குள்ளிருக்கும் கலைத்துவமான படைப்பாளி தனிமனிதச் சுதந்திரத்திலும் (குறிப்பாகப் பெண்களின்), அது நிலவுவதற்குத் தேவையான சமூகச் சூழல் மீதும் எடுத்துக்கொள்ளும் கவனம் போன்று அந்தச் சமூகச் சித்திரத்தை எல்லாத் தகைமைகளும் கொண்ட ஒரு கலைப்படைப்பாகச் சமூகத்தின் முன்னால் நிறுத்துவதற்காக அவர் எடுத்துக்கொண்ட கலைசார்ந்த உழைப்பில் போதாமை வெளிப்படுகிறது என்றே நினைக்கிறேன். இலக்கியப் படைப்பு என்பது மொழி சார்ந்தது. மொழியாலேயே உருவாக்கப்படுவது. எனவே அதன் வெற்றியில் மிகப்பெரிய இடம் படைப்பாளி கையாளும் மொழிக்கு இருக்கிறது. படைப்பின் அடித்தளமே மொழியின் அழகியலையே சார்ந்திருக்கிறது. படைப்பின் மொழி எனப் பேசும்போது விவரண மொழி, பேச்சு மொழி, பிராந்திய தனித்துவ மொழிக் கூறுகள், குறியீடுகள், உருவகங்கள், சொலவடைகள், படிமங்கள் என அதன் கூறுகள் விரிவுபட்டவை. அற்புதமான கலைப்படைப்பாக ஒரு நாவல் மேம்படுவதற்கு இந்த மொழிக்கூறுகளின் செழுமையான பிரயோகம் முக்கியமானது. பர்தாவுக்குள் இந்தக் கூறுகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படவில்லை. புனைவின் விவரண மொழி அழகியல் தன்மையோடு மாஜிதாவால் பயன்படுத்தப்பட்ட அளவுக்கு வட்டார மொழியை அவர் சரியாகக் கையாளவில்லை. ஓட்டமாவடி மண்ணுக்கே உரித்தான வட்டார மொழிக்கூறுகள் அதன் அசல் தன்மையோடு உரையாடல்களில் வெளிப்படாமை இந்நாவலின் கலைசார்ந்த தோல்வியாகும். மண்சார்ந்த மொழிப் பிரயோகங்கள் போன்றே குறியீடுகள், உருவகங்கள், சொலவடைகள் ஓர் இலக்கியப் பிரதியைக் கலைப்படைப்பாக மாற்றுவதில் பங்காற்றுகின்றன. பர்தாவுக்குள் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டு வாழ்வியலை, மரபுகளைப் பேசும் இடங்கள் சில வருகின்றன. அந்த இடங்களை இந்த மொழிக்கூறுகளைக் கொண்டு இன்னும் கூடுதல் அழகியல் உணர்ச்சியோடு முன்வைத்திருக்க முடியும். விவரண மொழிக்கும் பேச்சுமொழிக்கும் இடையிலான துல்லியமான வேறுபாடுகள் பெரும்பாலான இடங்களில் பிசகி நிற்கிறது. பேச்சுமொழி பல இடங்களில் அசலாக வெளிவரவில்லை என்ற குறை எனக்குண்டு. மண்ணும் மக்களும் கதைக்குள் கொண்டுவரப்பட்டால் அவர்களின் மொழியும் அதே தீவிரத்தோடு பாத்திரங்களின் வாயில் சொட்ட வேண்டும். அதுதான் அந்தக் கதைக்கு இயல்பானது. இல்லாவிட்டால் கதையின் அசல்தன்மையைப் பேச்சுமொழி கெடுத்துவிடும். கதாபாத்திரங்கள் கதைச் சம்பவங்களோடு இயல்பாகப் பொருந்தி வராதவர்களாக வாசக மனம் உணரத் தலைப்பட்டுவிடும். அது நாவலின் கலைரீதியான தோல்வியாகும். பெரிய சுத்திவளைப்புகள், மர்மச் சம்பவங்கள், ஆழ்ந்த உருவகங்கள் என எதுவுமற்ற நேரடியான, மிக எளிமையான கதைக்கூறலைத்தான் இந்நாவலில் மாஜிதா பின்பற்றி இருக்கிறார். முஸ்லிம் பண்பாட்டுக்குள் உள்ளுறைந்திருக்கும் பால்நிலை அடிப்படையிலான அசமநிலையையும், அதன் மீது பூசப்பட்டிருக்கும் புனிதச் சாயத்தையும் எந்தத் தயக்கமுமற்று கேள்விக்குள்ளாக்குவது, இலங்கை இஸ்லாமியச் சமூக அமைப்பில் செயற்படும் இஸ்லாமிய இயக்கங்களின் அழிச்சாட்டியமான கொள்கைகளையும், இலங்கைச் சூழலுக்குக் கொஞ்சமும் பொருந்திவராத அவர்களின் தினவெடுத்த செயல்களையும் துணிச்சலாக மறுக்கும் இடங்கள் போன்றவற்றை நாவலின் முக்கியமான பக்கங்களாகப் பார்க்கிறேன். பர்தாவை ஒரு தனிமனித அனுபவமாகத் தொடங்கி அதனை ஒரு சமூக அனுபவமாக மாற்றிக்காட்டுவதிலும் மாஜிதா வெற்றி பெற்றிருக்கிறார். அது நல்ல நாவலாசிரியருக்கான தொடக்கமும்கூட. * பர்தா (நாவல்), மாஜிதா, எதிர் வெளியீடு, விலை ரூ. 200 https://tamizhini.in/2023/07/01/தூய-அடிபணிவின்-மகிழ்ச்சி/
    1 point
  41. கந்தையா ஊரில் இருப்பவர்களுக்கு சொன்னாலும் விளங்காது அங்கேயுள்ள அனுபவம் படிப்பு இங்கு செல்லாது என்று எப்படி எடுத்துரைப்பது? எதோ எரிச்சலில் (தாங்களும்) வந்து விடுவோம் என்று எங்களை நினைக்கிறார்கள். ஆரம்பகாலத்தில் அங்கு குளிர் வெக்கை என்று நிராகரித்தவர் எல்லாம் இப்பொது வர நினைக்கிறார்கள். இங்கு பட்டுத் தெளிந்த அனுபவத்தை ,அறிவை எப்படி அவர்களுக்கு புரியவைப்பது. வெளிநாட்டு வாழ்க்கை சொர்க்கம் என்று அல்லவா நினைக்கிறர்கள். வீணாக ஏஜெண்ட்க்கு காசு கட்டி ஏமாற்று படப் போகிறார்களே என் கவலையாக இருக்கு. கனடாவில் வேலைக்கு என் முக புத்தக விளம்பரம். ஏன் ஏஜென்ட்?ஒன்லைன் மூலம் தேடி விண்ணப்பியுங்களேன் .ஊரிலகடன்படடு முதல்போட்டு கஷ்டப்பட்டு , தொழில்பழகி வியாபாரம் செய்ய வழி தெரியவில்லை . கடன்பட்டு ஏஜென்ட் க்கு கடட விரும்புகிறார்கள்.இங்கு உள்ளவர்கள் தாண்டி வந்த கஷ்டம் புரிவதில்லை. இவர்களும் எல்லாம் சொல்வதில்லை.இதனால் ஏதும் சொல்லப்போனால் வீண் வம்பு வழக்குவரும் என்று "தெரியாது " இப்போது கடினம் .என்று ஒற்றை சொல்லில் சம்பாஷணையை முடிக்கிறார்கள்.
    1 point
  42. திருநெல்வேலித் தாக்குதலைத் தீர்மானித்த பிரபாகரன் ராணுவத்தினர் அன்றிரவே தமது விசாரணைகளை ஆரம்பித்தனர். சூட்டுச் சத்தம் கேட்டவுடன் வீதிக்கு வந்து நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொதுமகன் ஒருவரை முனசிங்க தலைமையிலான ராணுவத்தினர் பிடித்துக்கொண்டனர். அவரே புலிகளின் மறைவிடத்தை இராணுவத்தினருக்குக் காட்டிக் கொடுத்தார். வெள்ளம்பொக்கடிக்கும் கச்சாய்க்கும் இடையிலான பகுதியொன்றில் அந்த வீடு அமைந்திருந்தது. மீசாலையினைச் சேர்ந்த சின்னையா சந்திர மெளலீசன் என்பவரே அந்த வீட்டினை ஒழுங்கு செய்து கொடுத்திருந்தார். அவ்வீட்டில் பிரபகாரன் பல தடவைகள தங்கிச் சென்றிருக்கிறார். அவ்வீட்டைச் சோதனையிட்டபோது சில ஆவணங்களும், ஒரு கண்ண்டிக் குப்பியும் காணப்பட்டன. ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட முதலாவது சயனைட் குப்பி இதுவே. சீலனினதும், ஆனந்தனினதும் வித்துடல்கள் கடுமையான பொலீஸ் பாதுகாப்புடன் தெல்லிப்பழையில் எரியூட்டப்பட்டன. ஒரு ராணுவ வீரனின் பார்வையில் என்று தான் எழுதிய புத்தகத்தில் சீலனினதும் ஆனந்தனினதும் வித்துடல்களின் ஒளிப்படங்களை முனசிங்க இணைத்திருந்தார். 1983 ஆம் ஆண்டு ஆடி 16 ஆம் திகதி தான் எடுத்த மாவீரர்கள் இருவரினதும் ஒளிப்படங்களின் மூலப்பிரதியை அவர் என்னிடம் காண்பித்தார். சீலனின் தலைப்பகுதியிலும், கண்ணுக்கு அருகிலும் காணப்பட்ட சூட்டுக் காயங்களைப் பார்க்கும்போது மிக அருகில் இருந்து சுடப்பட்டிருப்பது புரியும் என்று அவர் கூறினார். சீலனின் புகைப்படத்தைக் காட்டிக்கொண்டே என்னுடன் பேசிய முனசிங்க, "சீலனின் உடலினைக் காட்டும் ஒரே புகைப்படம் இதுதான், ஆகவே பிரபாகரன் நிச்சயம் எனது புத்தகத்தை வாங்குவார்" என்று கூறினார். பிரபாகரனின் நீண்ட மெளனமும், சிந்தனையும் கிட்டுவால் கலைக்கப்பட்டது. சீலனின் மரணத்திற்காகப் பழிவாங்கவே பிரபாகரன் மெளனமாகச் சிந்தித்துக்கொண்டிருந்தார் என்பதை கிட்டு பின்னர் உணர்ந்துகொண்டார். அனிதா பிரதாப், சொர்ணம் மற்றும் தமிழ்ச்செல்வனுடன் தேசியத் தலைவர் பிரபாகரனை முதன் முதலாகச் சந்தித்த சர்வதேசப் பத்திரிக்கையாளரும், அவரைத் தொடர்ச்சியாகப் பிந்தொடர்ந்து ஆய்வுகளை வெளியிட்டு வந்தவருமான அனிட்டா பிரதாப் தான் எழுதிய இரத்தத் தீவு எனும் புத்தகத்தில் "பிரபாகரன் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே மிகவும் மூர்க்கத்தனமாகச் செயற்படுவார், ஒரு அடிபட்ட புலியைப் போல" என்று எழுதுகிறார். சீலனைக் கொன்றுவிட்டோம் ஏன்று ராணுவம் குகதூகலித்துக் கொண்டாடிய விதமே பிரபாகரனைத் திருநெல்வேலித் தாக்குதலைச் செய்யத் தூண்டியது என்று அனிட்டா கூறுகிறார். திருநெல்வேலியில் ராணுவம் மீது பிரபாகரன் நடத்திய தாக்குதலினைப் பார்க்கும்போது தனிப்பட்ட ரீதியில் பழிவாங்குவதற்காகவே அதனைச் செய்தார் என்பது தெளிவாகிறது என்றும் அவர் கூறினார். தனது போராளிகளின் மரணத்தினை பிரபாகாரன் இலேசாக எடுத்துக்கொள்வதில்லை. அது அவரது இயல்பு. பிரபாகரனின் இந்தக் குணாதிசயத்தைக் காட்ட இரு நிகழ்வுகளை அனிட்டா விளக்குகிறார். http://www.eelamview.com/wp-content/uploads/2015/10/kumarappa-pulenthiran.jpg இந்தியச் சிங்களச் சதியால் பலியான தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் ‍ முதலாவது நிகழவு 1987 ஆம் ஆண்டு பலாலி ராணுவத் தளத்தில் தனது மிக முக்கிய தளபதிகள் சயனைட் வில்லைகளை உட்கொண்டு மரணித்தபோது இடம்பெற்றது. "1987 ஆம் ஆண்டு புலிகளின் முக்கிய தளபதிகள் பலர் இலங்கை ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு கொழும்பிற்குக் கொண்டுசெல்ல ஏற்பாடாகி இருந்தது. இந்தியா அவர்களை விடுவிக்க எவ்வளவோ முயன்றபோதும், இலங்கையின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி அவர்களைக் கொழும்பிற்குக் கொண்டுவந்து விசாரிப்பதில் பிடிவாதமாக நின்றார். கொழும்பிற்கு இழுத்துச் செல்லும் கணத்திற்குச் சற்று முன் புலிகளின் தளபதிகள் அனைவரும் சயனைட் வில்லைகளை உட்கொண்டு மரணத்தைத் தழுவிக்கொண்டனர். பிரபாகரனின் சினத்தின் மூடியை இச்சம்பவம் முற்றாகத் திறந்துவிட்டது" என்று குறிப்பிட்டிருந்தார். சீலனின் நினைவாலயம் ‍ மீசாலை - 2003 ‍ அனிட்டா குறிப்பிடும் இரண்டாவது சம்பவம் 1994 இல் இடம்பெற்றிருந்தது. வன்னிக்கு முக்கிய செய்தியொன்றுடன் வந்துகொண்டிருந்த புலிகளின் தளபதியான லெப்டினன்ட் கேணல் அமுதனை ராணுவத்தினர் பதுங்கியிருந்து சுட்டுக் கொன்றனர். அமுதனின் தலையினை தனியே வெட்டி எடுத்துக்கொண்டு, அவரது உடலினை அவ்விடத்திலேயே விட்டுச் சென்றிருந்தனர் ராணுவத்தினர். "பிரபாகரன் கடுஞ்சினம் கொண்டிருந்தார்" என்று அனீட்டா எழுதுகிறார். அக்காலத்தில் சந்திரிக்காவுடன் நடந்துகொண்டிருந்த பேச்சுவார்த்தைகளை விடவும் அமுதனின் படுகொலைக்கு பிரபாகரன் முக்கியத்துவம் கொடுத்திருந்தார். அமுதனுக்கான தமது இறுதி மரியாதையினைச் செலுத்த அவரது தலையினை உடனடியாக இலங்கை ராணுவம் தம்மிடம் கையளிக்கவேண்டும் என்று பிரபாகரன் தீர்க்கமாகக் கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளித்த அப்போதைய உதவிப் பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்தை, அமுதனின் தலை நன்கு பழுதடைந்த நிலையில் இருந்தமையினால் நாமே அதனை எரித்துவிட்டோம், தேவையென்றால் அத்தலையின் சாம்பலைத் தருகிறோம் என்று பிரபாகரனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதன் பின்னரே பேச்சுவார்த்தையில் தொடர்ந்தும் ஈடுபட பிரபாகரன் சம்மதம் தெரிவித்தார். சீலனின் மரணத்திற்கு பழிவாங்கலாக பாரிய தாக்குதல் ஒன்றினைச் செய்யட பிரபாகரன் தீர்மானித்தார். ஒவ்வொரு நாள் இரவு வேளையிலும் யாழ் நகரையும் சுற்றுப்புறங்களையும் ரோந்து புரியும் ராணுவத் தொடரணி மீது பதுங்கித் தாக்குவதென்று அவர் முடிவெடுத்தார். செல்லக்கிளி இத்தாக்குதலை திட்டமிடும் பொறுப்பு செல்லக்கிளியிடமும் கிட்டுவிடமும் கொடுக்கப்பட்டது. ஆகவே, ராணுவ ரோந்து அணியின் பலம், அதன் பாதைகள், ரோந்து அணி வழமையாக ஈடுபடும் நடவடிக்கைகள் பற்றி அவர்கள் இருவரும் விபரங்களைச் சேகரிக்கத் தொடங்கினார்கள். அவர்களால் தயாரிக்கப்பட்ட பூரண விபரங்களுடனான தாக்குதல் திட்டம் பிரபாகரனிடம் கையளிக்கப்பட்டது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்ட இடத்தினை தானே நேரில் சென்று பார்வையிட்ட பிரபாகரன் தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்தார். தேசியத் தலைவருடன் கிட்டண்ணா ஆடி 23 ஆம் திகதியை தமது தாக்குதலுக்கான நாளாக பிரபாகரன் தீர்மானித்தார். இத்தாக்குதல் நடக்கப்போவது குறித்து எதுவித தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில், செல்லக்கிளியைத் தேடி ராணுவம் வலைவிரித்தது. இந்த நடவடிக்கைக்கு யாழ்த் தளபதி பல்த்தசார் உத்தரவிட்டார். தனது புலநாய்வு வலையமைப்பை இந்த நடவடிக்கைக்காக அவர் முடுக்கிவிட்டார். அவரக்குச் சில வெற்றிகளு கிடைத்திருந்தன. செல்லக்கிளியின் நடமாட்டம் குறித்து அவ்வப்போது ராணுவத்திற்கு தகவல்கள் வரத் தொடங்கின. ஆடி 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் செல்லக்கிளி தாக்குதல் ஒன்றினை நடத்தப்போகிறார் என்கிற தகவலும் ராணுவத்தினருக்குக் கிடைத்திருந்தது. இதனையடுத்து ராணுவ ரோந்து அணியொன்றினை ஒழுங்கமைத்துக்கொண்டு யாழ்நகரை நள்ளிரவு வேளையில் சுற்றிவரும்படி முனசிங்கவைப் பணித்தார் பல்த்தசார். அதன்படி கொமாண்டோ படைப்பிரிவு ஒன்றினை நள்ளிரவு ரோந்திற்காக முனசிங்க ஒருங்கமைத்தார். வழமையாக நள்ளிரவு ரோந்தில் ஈடுபடும் சாதாரண ராணுவ அணியை அன்று நள்ளிரவுக்கு முன்னமே யாழ்நகரை விட்டு வந்துவிடுமாறு அவர் உத்தரவிட்டார்.
    1 point
  43. பிரபாகரனை வெகுவாகப் பாதித்த சீலனின் மரணம் "அவர்கள் எவராலும் கொல்லப்பட்ட இளைஞர்களை அடையாளம் காட்ட முடியவில்லை. இறந்தவர்களில் ஒருவர் வெள்ளை நிற டீ ஷேர்ட்டின் மேல் ஒலிவ நிற ராணுவச் சீருடையினை அணிந்திருந்தார். இறந்த இருவரினதும் உடல்களை யாழ் மருத்துவமனையின் பிரேத அறைக்குப் பொலீஸார் அனுப்பிவைத்தனர். ராணுவத்திற்கு தகவல வழங்கியவர்களில் ஒருவரான "சேவியர்" என்பவர் கொல்லப்பட்டது சீலன் தான் என்று அடையாளம் காட்டினார். என்னால் அதை நம்ப முடியவில்லை" என்று முனசிங்க கூறினார். திருகோணமலையிலிருந்து அழைத்துவரப்பட்ட சீலனின் தாயார் இறந்ததது தனது மகன் தான் என்று அடையாளம் காட்டும்வரை யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதி பல்த்தசார் கூட அதனை நம்பவில்லை. கொழும்பு ஊடகங்கள், குறிப்பாக சிங்கள ஊடகங்கள் மிகுந்த வெற்றிக்களிப்போடு சீலனின் மரணச் செய்தியை வெளியிட்டிருந்தன. புலிகளின் இரண்டாம் நிலைத் தளபதியின் மரணம் என்பது அவர்களைப் பொறுத்தவரையில் கொண்டாட‌ப்படவேண்டிய நிகழ்வாகவே கருதப்பட்டது. "புலிகள் முடிந்துவிட்டார்கள்" என்கிற செய்திகளும் வெளியிடப்பட்டன. சீலனின் மரணத்தினால் உற்சாகமடைந்த ராணுவ பொலீஸ் புலநாய்வுத்துறையினர், பிரபாகரனையும் செல்லக்கிளியையும் தேடும் நடவடிக்கைகளில் இறங்கினர். ஆனால், சீலனின் மரணத்திற்குப் பழிவாங்க பிரபாகரனும், செல்லக்கிளியும் திட்டமிட்டு வருவது அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. மேலும், தனது உயிரைத் தியாகம் செய்து, தனது ஆயுதத்தைத் தன்னுடன் வந்த தோழனிடம் கொடுத்தனுப்பிய சீலனின் வீரச்செயல் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அளித்திருந்த உத்வேகத்தையும் அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. சீலனைத் தமது கொமாண்டோக்களே சுட்டுக் கொன்றதாக ராணுவம் நம்பியது. ஆனால், அப்படி நடக்கவில்லை. தனது மரணத்திற்கு சீலனே உத்தரவிட்டார். முனசிங்க மூன்று இளைஞர்களுக்கருகில் தனது மினிபஸ்ஸினை நிறுத்தியபோது, தமது சைக்கிள்களை எறிந்துவிட்டு ஓடியவர்கள் சீலன், ஆனந்தன் மற்றும் அருணா ஆகிய மூன்று புலிகளின் போராளிகள்தான்.ஆனந்தனும் அருணாவும் சைக்கிள்களை மிதித்துச் செல்ல, சீலன் அருணாவின் சைக்கிளில் அமர்ந்து சென்றார். சீலனின் மடியில் உப இயந்திரத் துப்பாக்கியொன்று இருந்தது. ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு முதலில் இலக்கானவர் ஆனந்தன். ராணுவம் மறைந்திருந்த பற்றைக் காட்டிலிருந்து சுமார் 100 மீட்டர்கள் தூரத்தில் வீழ்ந்தவர் ஆனந்தனே. அருணாவும், சீலனும் மேலும் 100 மீட்டர்கள் ஓடியபின்னர் சீலன் கீழே வீழ்ந்தார். ஆனால், முனசிங்க நினைத்தது போல சீலன் சூடுபட்டு விழவில்லை. சில காலத்திற்கு முன்னர் சாவகச்சேரி பொலீஸ் நிலையம் மீதான தாக்குதலின்போது சீலனுக்கு முழங்காலில் சூடுபட்டிருந்தது. அக்காயம் முற்றாக ஆறாமல் இருந்ததோடு, அதனால் கடுமையான வலியும் சீலனுக்கு ஏற்பட்டு வந்தது. வீழ்ந்ததும் மறுபடியும் அவர் எழ முயற்சித்தபோதும் அவரால் அது முடியாது போய்விட்டது. சீலனின் சிறுவயது நண்பனும், திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவருமான அருணா, சீலனை எப்படியாவது காப்பற்றி இழுத்துச் செல்ல முயன்றுகொண்டிருந்தார். எஸ் எம் ஜி யுடன் சீலன் "ஓடு, ஓடு, இன்னும் கொஞ்சத்தூரம் ஓடினால்ப் போதும்" என்று அருணா சீலனைப் பார்த்துக் கெஞ்சிக்கொண்டிருந்தார். "என்னால் முடியாது" என்று வலியில் முனகியபடியே சீலன் பதிலளித்தார். ராணுவத்தினர் அவர்களை நோக்கித் தரையால் ஊர்ந்துவரத் தொடங்கியிருந்தார்கள். "எழுந்திரு, கிராமத்திற்கு அருகில்ச் செல்ல வேண்டும். சென்றுவிட்டால் நாம் தப்பிவிடலாம்" என்று அருணா கூறவும், சீலன் மறுபடியும் எழுந்திருக்க முயன்றார், ஆனால் அவரால் முடியவில்லை. "என்னையோ எனது எஸ்.எம்.ஜி ஐயோ அவர்கள் கைப்பற்றிவிடக்கூடாது" என்று உறுதியுடன் கூறிக்கொண்டிருந்தார் சீலன். "நான் அவர்களிடம் உயிருடன் பிடிபடவே மாட்டேன்" என்று அக்கணத்தில் சபதம் பூண்டார். இதனைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேயிருந்தார். நிர்மலா நித்தியானந்தனின் வீட்டில் மறைந்திருந்தபோதும் இதனையே சீலன் மந்திரம்போல சொல்லிக்கொண்டிருந்தார். அதனாலேயே சீலனை நான் எப்படியாவது பிடித்துவிடுவேன் என்று முனசிங்க கர்வத்துடன் பேசியபோது, "அவரைக் கைதுசெய்ய எத்தனிக்க வேண்டாம், ஏனென்றால் சீலனை நீங்கள் உயிருடன் பிடிக்க முடியாது" என்று முனசிங்கவிடம் நிர்மலா ஒருமுறை கூறியிருந்தார். சீலன் பயமறியாதவர், துடிதுடிப்பானவர், சமயோசிதமானவர். இலட்சியத்திற்காக உயிரையும் கொடுக்க முன்வந்திருந்தவர். பிரபாகரனுக்கு முழுமையான விசுவாசமாகச் செயற்பட்டவர். சீலனைப் பொறுத்தவரை "தம்பி" தலைவர் மட்டுமல்ல, அவரின் குருவும் அவரே. அருணாவின் கண்களை நேராகப் பார்த்து சீலன் பின்வருமாறு கூறினார், "அவர்கள் என்னை உயிருடன் பிடிக்கக் கூடாது. என்னைச் சுட்டு விட்டு எனது எஸ் எம் ஜி யை எடுத்துக்கொண்டு ஓடிவிடு" . அருணாவுக்கு தலையில் இடி ஒன்று இறங்கியதான அதிர்ச்சி. என்ன செய்வதென்று தெரியாது ஸ்த்தம்பித்துப் போனார். சீலனின் பொறுமை எல்லை கடந்து சென்றுகொண்டிருந்தது. அவர்களை நோக்கி ஊர்ந்துவந்த ராணுவத்தினர் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே முன்னேறி வந்துகொண்டிருந்தனர். "என்னடா பார்த்துக்கொண்டிருக்கிறாய்?" என்று சீலன் அருணாவைப் பார்த்துக் கத்தினார். "என்னைச் சுட்டு விட்டு ஓடு, நான் சொல்றதைக் கேள்" என்று மீண்டும் அருணாவைப் பார்த்துக் கத்தினார் சீலன். அருணாவினால் எதையுமே யோசிக்க முடியவில்லை. பிரமை பிடித்தவரைப்போன்று அசைவின்றிக் கிடந்தார் அருணா. புலிகளின் இரண்டாம் நிலைத் தளபதியைக் கொல்ல அவருக்கு மனம் இடங்கொடுக்கவில்லை. "அவர்கள் என்னை உயிருடன் பிடிக்க நான் அனுமதிக்கப்போவதில்லை, எனது எஸ் எம் ஜி யையும் அவர்கள் எடுத்துவிடக் கூடாது" என்று மீண்டும் கத்தினார் சீலன். "இது எனது கட்டளை, சுடடா" என்று இறுதியாகக் கத்தினார் சீலன். தனது நிலைகுலைந்து அருணா அழத் தொடங்கினார். "சுடடா .... சுடடா....சுடடா....." என்று சீலன் முனகிக்கொண்டிருக்க, அருணா துப்பாக்கியின் குழலை சீலன் நெற்றிக்கும் மூக்கிற்கும் இடையே வைத்து அழுத்தினார். தனது முகத்தினை வேறுபக்கம் திருப்பிக்கொண்டே துப்பாக்கியை இயக்கினார் அருணா. சீலன் இறந்து கீழே விழ, சீலனின் எஸ் எம் ஜி யை எடுத்துக்கொண்டு, தனது பலம் எல்லாம் திரட்டி ஓடத் தொடங்கினார் அருணா. ராணுவத்தினரின் சன்னங்களில் ஒன்று அவரின் மேல் பட்டதும் கீழே வீழ்ந்தார், ஆனால் தப்பிவிடவேண்டும் என்கிற துடிப்புடன் மீண்டும் எழுந்து ஓடத் தொடங்கினார். இரத்தம் ஓடிக்கொண்டிருக்கும் காயத்தை ஒரு கையால் அழுத்திப் பிடித்துக்கொண்டு, மறு கையில் சீலன் இயந்திரத் துப்பாக்கியைப் பத்திரமாகப் பற்றிக்கொண்டு வயல்வெளிகள் தாண்டி கிராமத்தினுள் நுழைந்து சாவகச்சேரிப் பகுதியை அடைந்தார். வீதியால் வந்துகொண்டிருந்த கார் ஒன்றினைத் துப்பாக்கியைக் காட்டி மறித்த அருணா, சாரதியை இறங்கச் சொல்லிவிட்டு அதில் ஏறி ஓட்டிச் சென்றார். மறுநாள் காலை திருநெல்வேலிப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காரினை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். காரின் ஸ்டியரிங் வீல் இரத்தத்தால் தோய்ந்திருந்தது. காரைக் கைவிட்ட அருணா, மோட்டார் சைக்கிள் ஒன்றை எடுத்துக்கொண்டு நீர்வேலிப் பகுதியில் இருக்கும் புலிகளின் மறைவிடத்திற்கு வந்து சேர்ந்தார். நீர்வேலியில் அமைந்திருந்த புலிகளின் மறைவிடத்தில் இயக்கத்தில் நிதி நிலைமைகள் குறித்து பண்டிதர் மற்றும் கிட்டுவுடன் பிரபாகரன் பேசிக்கொண்டிருந்தார். பிரபாகரனுக்கு அருகில் ஓடிச்சென்ற அருணா, சீலனின் மரணத்தைப் பற்றி அறிவித்துவிட்டு அவர் அருகில் மயங்கிச் சரிந்தார். சீலனின் மறைவுகுறித்து அருணா கூறியபோது பிரபாகரன் கடும் அதிர்ச்சிக்குள்ளானார். நெடுநேரம் எவருடனும் அவர் பேசவில்லை. அந்தப் பொழுதினை பின்னாட்களின் என்னுடன் பகிர்ந்துகொண்ட கிட்டு, "அவரின் உணர்வுகள் அக்கணத்தில் எப்படியிருந்தன என்று எவராலும் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. ஆனால், அவர் ஆழமாகச் சிந்தித்துக்கொண்டிருப்பது எமக்குப் புரிந்தது" என்று கூறினார். சீலனை அவர் அதிகமாக நேசித்தார். அவரின் மேல் பெருமதிப்பு வைத்திருந்தார். சீலன் தீரமானவர், புத்திசாதுரியம் மிக்கவர், அஞ்சாத நெஞ்சுரமும், தலைமை மீது அளவுகடந்த விசுவாசமும் கொண்டவர். ஆகவே, சீலனும் ஆனந்தனும் செய்த உயிர்த்தியாகங்கள் போற்றப்படவேண்டும் என்று பிரபாகரன் உத்தரவிட்டார். சீலனையும் ஆனந்தனையும் போற்றி, வணக்கம் செலுத்தும் சுவரொட்டிகள் வடக்குக் கிழக்கில் பரவலாக‌ ஒட்டப்பட்டன. அவர்களின் இயற்பெயர்களைத் தாங்கி அவை வெளிவந்திருந்தன. சீலனின் இயற்பெயரான சார்ள்ஸ் அன்டனி மற்றும் அவரது பிறந்த ஊரான திருகோணமலை உட்பட அவரின் விபரங்கள சுவரொட்டிகளில் காணப்பட்டன. அவரது வீர மரணத்தின் பின்னர் "லெப்டினன்ட்" எனும் பதவி புலிகளால் அவருக்கு வழங்கப்பட்டது. அவ்வாறே ஆனந்தனின் இயற்பெயரான ராமநாதன் அருளானந்தன் மற்றும் அவரது பிறந்த ஊரான நீர்கொழும்பு போன்ற விடயங்கள் அவரது வீரவணக்க சுவரொட்டிகளில் காணப்பட்டன. ஆனந்தன் அந்த வருடமே புலிகளுடன் இணைந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. அருணாவின் இயற்பெயர் செல்லச்சாமி கோணேசன். இவர் திருகோணமலையினைப் பிறப்பிடமாக கொண்டவர் என்பதுடன் சீலனின் பால்ய வயது நண்பர் என்பதும் குறிப்பிடத் தக்கது. சீலனின் பெயரால் உருவாக்கப்பட்ட புலிகளின் முதலாவது மரபு வழிப் படைப்பிரிவு ‍- சார்ள்ஸ் அன்டனி சிறப்புப் படையணி
    1 point
  44. இப்படி நக்கல் நையாண்டி செய்வதை விட்டு உங்களால் தமிழ் மக்களுக்கு என்று பெற்றுக்கொடுக்கக் கூடிய தீர்வு என்ன என்று சொல்லுங்களேன் பார்க்கலாம்! இன்று தமிழர்களிடத்தில் என்ன பலம் இருக்கிறது என்று சொல்லுங்கள். நல்ல ஆளுமை உள்ள அரசியல் வாதிகள் இல்லை. வடக்கிழக்கில் தற்சார்பு பொருளாதாரமும் இல்லை வெளிநாடுகளில் அடுத்த தலைமுறை தமிழை மெல்ல மெல்லமாக மறக்கின்றது வடக்கிழக்கில் படிப்பின் தரம் அதள பாதாளத்தில் குடும்ப உறவுகள் சிதையும் நிலை சமூக ஒழுக்கம் இல்லாத இளம் தலைமுறை தமிழ்நாட்டில் திமுக வை எதிர்த்து அங்குள்ள பலம் மிக்க அரசின் எதிர்ப்பை சாம்பாதித்து இருந்த நண்பர்களையும் இழந்த நிலைமை இப்படி நம் நிலை இருக்கும் பொழுது உங்களால் எப்படி சமஷ்டியை பெற முடியும்? வாய்ச்சொல்லில் வீரராக இருந்து சாவதை விட இப்போது மூச்சு விட அவகாசம் முக்கியம். அதற்க்குத் தான் 13 ஐ ஏற்போம் என்கிறேன். முதலில் எழுந்து நிற்போம். அதன் பிறகு மிச்சத்தைப் பாப்போம். இப்போதைய தேவை தமிழ் சமூகம் முற்றிலும் அழியாமல் காப்பாற்றப் படவேண்டும். முழு உரிமைகளையும் பெறுவது என்பது பிறகு. இப்போதே எல்லாம் வேணும் என்று கேட்டால் இருக்கிறதும் போயிரும் பிரபாகரனாலேயே வாங்க முடியாத சமஷ்டியை நீங்கள் எப்படி பெறுவீர்கள் என்று சொல்லி விட்டு நக்கல் நையாண்டி செய்யுங்கள்
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.