Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Justin

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    7138
    Posts
  2. island

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    1824
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    19669
    Posts
  4. satan

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    10275
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/29/23 in all areas

  1. ஓயாத நிழல் யுத்தங்கள் – 1 இது வரை இரு உலகப் போர்களை உலகம் கண்டிருக்கிறது. இவற்றுள் இரண்டாவது உலகப் போரின் பின்னர் இரு துருவங்களாக உருவான தேசங்கள் பனிப்போர் எனப்படும் நிழல் யுத்தங்களில் ஈடுபட்டதன் தாக்கம் இன்றும் உலகின் அரசியல், பூகோள நிலைமைகளில் எதிரொலிக்கிறது. அமெரிக்காவின், ஐரோப்பாவின் சில நகரங்களில் இன்றும் பனிப்போர் காலக் கட்டமைப்புகள் - அணுவாயுதத் தாக்குதலில் இருந்து காக்கும் காப்பரண் கட்டிடடங்கள்- நிலைத்திருக்கின்றன. 90 இற்குப் பிறந்த இளவல்களுக்கு இந்தக் கட்டிடங்கள் பற்றி எதுவும் தெரியாது. 90 களில் வயசுக்கு வந்த (சுவியர் சில சமயங்களில் குறிப்பிடும் 90’s kids) எங்கள் போன்றோருக்கு பனிப்போரின் முடிவு காலம் ஒரு “வாழ்ந்த அனுபவம்”. தனிப்பட்ட ரீதியில், என் வாசிப்பார்வத்தை வளர்த்ததில் பனிப்போருக்கு பெரிய பங்கிருக்கிறது. இதை ஒரு தட்டையான வரலாறாகச் சொல்லி விட முடியாது. ஆனால், அந்தக் காலங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் சார்ந்து முப்பரிமாணச் சித்திரமாக எங்கள் நினைவுகள் இருக்கின்றன. இவை சார்ந்து சில கட்டுரைகளை தனித்தனியாக எழுதும் முயற்சி இது. இதன் மூலம் உலக வரலாற்று வாசிப்பையும், பகிர்வையும் ஊக்குவிக்கும் ஒரு சிறு முயற்சி. இரு முன்னறிவித்தல்கள்: 1. இது மிகவும் மெதுவாக நகரப் போகும் ஒரு முயற்சி, எழுதுபவருக்கு வேறு வேலைகள் இல்லாமல் வெட்டியாக இருக்கக் கிடைக்கும் போது மட்டும் இது எழுதப் படும். 2. இந்தத் தொகுப்பில் இணைக்கும் படங்கள் அனேகமாக அமெரிக்க ஆவணக்காப்பகத்தில் (National Archives) இருந்து எடுக்கப் பட்டவையாக இருக்கும். இதன் அர்த்தம், அமெரிக்கா சொல்வதை மட்டும் விபரிக்கும் நோக்கமல்ல. இந்த ஆவணக்காப்பகத்தில் தான் பெரும்பாலான அரிய புகைப்படங்கள் பதிப்புரிமையில்லாமல் பயன்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன. கொரியா ஜூன் ஜூலை மாதங்கள் கொரிய தீபகற்பத்திற்கு முக்கியமான மாதங்கள். ஜூன் மாதம் 25, 1950 இல் கொரிய நேரப்படி அதிகாலையில் வடகொரியாவின் படைகள் சத்தமில்லாமல் எல்லையைத் தாண்டி தென் கொரிய தலை நகர் நோக்கி நகர்ந்தன. இது ஏன் முக்கியமெனில், இரண்டாம் உலகப் போரின் பின்னர், உலகில் முதன் முதலாக ஒரு நாட்டின் படைகள் எல்லை தாண்டி இன்னொரு அயல் நாட்டினுள் நுழைவது இது தான் முதல் தடவை. 3 ஆண்டுகள் கழித்து, பல இலட்சம் அமெரிக்க, கொரிய, மற்றும் சீனப் படைகள் உள்ளடங்கிய தரப்புகள் பலியான பின்னர் ஜூலை 27, 1953 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் கொரிய யுத்தம் முடிவுக்கு வந்தது. எப்படி இரு கொரியாக்கள் உருவாகின? ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த கொரியாவை, இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் தற்காலிகமாக சோவியத்தும், அமெரிக்காவும் பாதியாகப் பிரித்து அங்கேயிருந்து சரணடைந்த ஜப்பானியப் படைகளை அகற்றுவது எனத் தீர்மானிக்கப் பட்டிருந்தது. இதை எப்படிச் செய்வதென யோசித்துக் கொண்டிருக்கும் போதே, சோவியத் நாடு தன் படைகளை வட கொரியாவில் நிலை நிறுத்த ஆரம்பித்தது. அவசர அவசரமாக அமெரிக்கா தன் படைகளை தெற்கில் குவிக்க ஆரம்பித்தது. கொரிய தீபகற்பம், 38thparallel சமாந்தரக் கோடு எனப்படும் latitude இன் படி வட, தென் கொரியாக்களாக உருவானது. இதன் பின்னர், 1946 இல் தற்போதிருக்கும் (கோசானின் தெய்வமச்சான்) கிம்மின் தாத்தா கிம் இல் சங் வட கொரியாவில் கம்யூனிச ஆட்சியை நிறுவியதுடன் அந்த 38 சமாந்தர எல்லைக் கோடும் அப்படியே நிரந்தர எல்லையாக நிலைத்து விட்டது. இந்த எல்லையைத் தாண்டித் தான் 1950 இல் வட கொரிய படைகள் தெற்கை ஆக்கிரமிக்க முனைந்தன. இந்த வடகொரிய ஆக்கிரமிப்பிற்கு ஒரு பின்கதை இருக்கிறது - இது ஒரே இரவில் நிகழ்ந்த ஒரு திடீர் நடவடிக்கையல்ல. உலகப் போர் முடிந்த பின்னர் 1948 இல், பசுபிக் பிராந்தியத்திலிருந்து அமெரிக்கா தன் பெருமளவிலான படைகளை அகற்றி விட்டிருந்தது. ஜப்பான், பிலிப்பைன்ஸ் தளங்களில் மட்டும் அமெரிக்க படைகள் இருந்தன, ஆனால் பாரிய யுத்த தயாரிப்புகள் இருக்கவில்லை. இதைக் கவனித்த வட கொரியாவின் கிம் இல் சங், ஸ்ராலின் தெற்கை ஆக்கிரமிக்க தங்களுக்கு உதவ வேண்டுமெனத் தொடர்ந்து நச்சரித்து வந்தார். முதலில் மறுத்த ஸ்ராலின், ஒரு கட்டத்தில் அனுமதியும் கொடுத்து தனது இராணுவ ஜெனரல்களைத் தாக்குதல் திட்டம் தயாரிக்கவும் வழங்கினார். பின்னர் படிப்படியாக, சோவியத் ஆயுதங்கள், விமானத் தாக்குதல் பாதுகாப்பு என்பனவும் சோவியத் மூலம் கிடைத்தன வட கொரியாவிற்கு. இதையெல்லாம் இன்னொரு கம்யூனிசத் தலைவர் பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்: சீனாவின் மாவோ சே துங் தான் அவர். மாவோ, ஸ்ராலினை உலக கம்யூனிசப் பிதாமகராக ஏற்றுக் கொள்வதைத் தந்திரமாகத் தவிர்த்து வந்த ஒருவர். 1950 இல் தான் மாவோ தன் கம்யூனிச ஆட்சியை சீனாவில் ஓரளவுக்கு நிலை நாட்டி விட்டு, தப்பிப் போய் போர்மோசா (Formosa) தீவில் (இன்று தாய்வான் என்று அழைக்கப் படும் தீவு) தனிதேசம் அமைத்திருந்த போட்டிக் குழுவை நோக்கிப் பாய திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் கிம் இல் சங் ஸ்ராலினை நெருங்கி தெற்கைத் தாக்க அனுமதியும் உதவியும் பெற்று, மாவோவின் கனவுக்கு மறைமுக ஆப்பு வைத்திருக்கிறார். அமெரிக்க வடிவில் வந்த ஆப்பு கிம் இல் சங், மாவோவிற்கு வைத்த இந்த மறைமுக ஆப்பு அமெரிக்கக் கடற்படையின் வடிவில் வந்திறங்கியிருந்தது. "தாய்வானிற்கு இராணுவ ரீதியில் உதவப் போவதில்லை" என்ற முடிவை எடுத்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரூமன், வட கொரியாவின் ஆக்கிரமிப்பை முறியடிக்க ஒரு மட்டுப்படுத்தப் பட்ட "பொலிஸ் நடவடிக்கையை" அனுமதித்தார் (இந்தப் பதத்தில் இருந்து தான் பின்னாளில் அமெரிக்கா "உலக பொலிஸ்காரன்" என்ற சொற்பதம் உருவாகியிருக்கக் கூடுமென நினைக்கிறேன்). அதே நேரம், இந்த நடவடிக்கையில் அமெரிக்கா கவனம் செலுத்தும் போது, மாவோ தாய்வானை நோக்கிப் படையெடுக்கக் கூடும் என்ற ஊகத்தில், அமெரிக்க கடற்படையின் 7வது கப்பற் படையை (7th Fleet) தாய்வான் சீனா எல்லையில் தொடர் ரோந்து செய்யவும் ட்ரூமன் கட்டளை பிறப்பித்திருந்தார். இது தான் மாவோ, 1950 இல் தாய்வானை நோக்கி சீன மக்கள் இராணுவத்தை ஏவாமல் தவிர்த்தமையின் பிரதான காரணம். வடகொரியாவின் மீது நடவடிக்கை எடுத்த ஐ.நா பாதுகாப்புச் சபை இன்று ஐ.நா பாதுகாப்புச் சபை உலக வல்லரசுகளின் போட்டிக் களமாக திகழ்கிறது. ஆனால், 1950 இல் உருவாக்கப் பட்ட புதிதில், உண்மையாகவே உலக சமாதானம், பாதுகாப்பு என்பவற்றைப் பேணும் அதன் பணியை சீரியசாகச் செய்ய முயன்றது என்று தான் சொல்ல வேண்டும். இந்த அடிப்படையில், இதன் முதல் பணியாக, வட கொரியா மீது நடவடிக்கை எடுத்து தென்கொரியாவை விட்டு படைவிலகலைக் கோரும் தீர்மானத்தை ஏகமனதாக ஐ.நா பாதுகாப்புச் சபை எடுத்தது. ஆனால்,கொஞ்சம் நிதானித்து இந்த தீர்மானத்தை ஆராய்ந்தால், இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேறவும் சோவியத் நாடு தான் மறைமுகக் காரணமாக இருந்தது என்பதைக் காணலாம். 50 களில் இருந்த ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக (எனவே வீட்டோ அதிகாரமுடைய நாடுகள்) அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனக் குடியரசு, சோவியத் நாடு என்பன இருந்தன. இங்கே “சீனக் குடியரசு” என்பது தாய்வானில் இருந்த, மேற்கு ஏற்றுக் கொண்ட சீனா, தற்போதிருக்கும் “மக்கள் சீனக் குடியரசு” அல்ல என்பதைக் கவனிக்க வேண்டும். கம்யூனிச சீனாவான மக்கள் சீனக் குடியரசை, ஐ.நா அங்கீகரிக்காமல் இருந்ததை எதிர்த்து, சோவியத் நாடு ஐ.நா பாதுகாப்புச் சபையை பகிஷ்கரித்துக் கொண்டிருந்த காலப் பகுதியில் தான், வட கொரியா மீது படையெடுக்கும் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்புச் சபை எடுத்தது. எனவே, ஸ்ராலின் ஒரு பக்கம் கிம் இல் சங்கிற்கு தெற்கை ஆக்கிரமிக்க உதவி செய்தபடியே, ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் வட கொரியா மீதான எதிர் நடவடிக்கையை தடுக்காமலும் விட்டிருக்கிறார். இது முட்டாள் தனமென சில ஆய்வாளர்கள் சொல்கின்றனர். ஆனால், ஸ்ராலினின் நடவடிக்கைகளின் பின்னால் இன்னொரு உள் நோக்கம் இருந்திருக்கலாம். மேற்கு ஐரோப்பாவில் கண் வைத்திருந்த சோவியத் ஒன்றியம் இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடனேயே, சோவியத் ஒன்றியமும், மேற்கும் கொள்கையளவில் இரு துருவங்களாக உருவாகின. இந்த விரிசல்கள், ஐரோப்பாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காக நடத்தப் பட்ட பொற்ஸ்டாம் (Potsdam Conference) மாநாட்டிலேயே வெளிப்பட ஆரம்பித்து விட்டன. சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பாவை மட்டுமன்றி, மேற்கு ஐரோப்பாவையும் கம்யூனிச குடையின் கீழ் கொண்டு வரும் ஆர்வத்தில் காய் நகர்த்தியது. இதற்கு மிகச் சிறந்த சாட்சியமான சம்பவம் கொரிய யுத்தம் ஆரம்பிப்பதற்கு சரியாக இரு ஆண்டுகள் முன்னர், ஜூன் 1948 இல் சோவியத் ஒன்றியம் மேற்கு பேர்லினிக்கான வினியோகப் பாதைகளை ஒரு தலைப்பட்சமாக மூடிய நிகழ்வு. நேட்டோ அமைப்பு உருவாக வித்திட்ட இந்த நிகழ்வை, ஒரு தனிக் கட்டுரையில் பின்னர் பேசலாம். சுருக்கமாகச் சொன்னால், மேற்கின், அமெரிக்காவின் படைகளை ஐரோப்பாவில் இருந்து, தொலைவிலிருக்கும் கொரியா நோக்கிப் போக வைத்தால், தனது மேற்கு ஐரோப்பா நோக்கிய விரிவாக்கம் இலகுவாகலாம் என்ற ஸ்ராலினின் கணிப்பும் வட கொரியாவை அவர் யுத்தமொன்றை நோக்கித் தள்ளக் காரணமாக இருந்தது. சுதாரித்து, வென்று பின் தோற்ற மேற்கு இஞ்சொன் தரையிறக்கத்தின் போது அமெரிக்கப் படையினர். எழுபதாயிரம் அமெரிக்க மரைன்கள், 200 இற்கு மேற்பட்ட கடற்கலங்களில் தரையிறங்கிய இந்த தாக்குதல். பட உதவி நன்றியுடன்: அமெரிக்க தேசிய ஆவணக்காப்பகம். ஐ.நா வட கொரியா மீது பொலிஸ் நடவடிக்கையை எடுத்த போதும், ஐ.நா படைகளின் பிரதான அணியாக அமெரிக்காவின் படைகளே விளங்கின. அமெரிக்காவோடு, தென்கொரியாவின் இராணுவமும் சம எண்ணிக்கையில் நடவடிக்கையில் இணைந்தது. தெற்கின் உள்ளே நன்கு ஊடுருவி விட்ட வட கொரிய இராணுவத்தை நேரடியாக அவர்களுக்குப் பரிச்சயமான நிலப்பரப்பில் எதிர் கொள்வது தற்கொலைக்குச் சமன் என அமெரிக்க இராணுவ வல்லுனர்கள் கருதினர். இந்த சந்தர்ப்பத்தில் தான், பசுபிக் பிராந்தியத் தளபதியாக இருந்த ஜெனரல் மக் ஆர்தரின் இராணுவ அனுபவம் மீண்டும் பயன்பட்டது. நோர்மண்டி தரையிறக்கம் போல, ஆனால் எண்ணிக்கையில் சிறிதாக, வட கொரிய படைகளின் பக்க வாட்டில் அமெரிக்க மரைன் டிவிஷன் ஒன்றை 1950 செப்டெம்பரில் இன்ஞொன் (Inchon) என்ற பகுதியில் மக் ஆர்தர் தரையிறக்கினார். இஞ்சொன் தரையிறக்கம் நோர்மண்டி போல பெரிதாகப் பேசப்படா விட்டாலும், பல வழிகளில் அது நோர்மண்டியை விட வெற்றிகரமானதாகக் கருதப் படுகிறது. ஒரு நாளில் இஞ்சொன் அமெரிக்க மரைன்களிடம் வீழ்ந்து, அடுத்த 11 நாட்களில் வட கொரிய படைகள் சியோலில் இருந்து பின்வாங்கி வடக்கு நோக்கிப் பின்வாங்க ஆரம்பித்தமைக்கு இஞ்சொன் தரையிறக்கம் தான் மூலக் காரணி. 1950 ஒக்ரோபர் 1 ஆம் நாள், ஐ.நா வின் கட்டுப்பாட்டில் தென் கொரியா வந்தது. 38 வது அகலாங்கு எல்லை மீண்டும் வட, தென்கொரியாக்களின் எல்லையாக உருவானது. அடுத்து நடந்த நிகழ்வுகள், அபரிமித வெற்றியுணர்வு எப்படி தோல்விகளுக்கு வழி வகுக்கும் என்பதைப் பற்றிய ஒரு பாடம்! ஜெனரல் மக் ஆர்தர், வட கொரியப் படைகளை, வடக்கு நோக்கி மேலும் துரத்திச் செல்ல வாஷிங்ரனிடம் அனுமதி கேட்கிறார். இதன் மூலம், வட கொரிய இராணுவ பலத்தை நிரந்தரமாக அழித்து, வட - தென் கொரியாக்களை ஒரே தேசமாக இணைப்பதே நோக்கம். இது நிகழ்ந்தால், சோவியத் ஒன்றியத்திற்கும், சீனாவுக்கும் மிக நெருக்கமாக ஒரு மேற்கின் இராணுவப் பிரசன்னம் உருவாகும். இதை, சோவியத் ஒன்றியமும், சீனாவும் எப்படி எதிர் கொள்ளும் என்ற கேள்வியைக் கேட்டு பதிலைத் தேட அமெரிக்காவின் பாதுகாப்புக் கட்டமைப்பில் யாருக்கும் தோன்றவில்லை அப்போது. இதன் பிரதான காரணம், வட கொரியாவை நிரந்தரமாக ஆக்கிரமிக்க அமெரிக்க அரசியல் தலைமைகள், மற்றும் பொதுமக்கள் அமைப்புகளின் ஆதரவு இருந்திருக்கிறது. அமெரிக்கா இந்த தொடர் இராணுவ நடவடிக்கைக்கு பச்சைக் கொடி காட்டியதோடு, ஐ.நாவும் வட தென் கொரியா என்ற பதங்களைத் தவிர்த்து "முழுக் கொரியாவிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்" என மறைமுகமாக கொரியாக்களை இணைப்பதற்கு ஆதரவு தெரிவித்தது. எனவே, குறுகிய காலத்தில், 38 வது அகலாங்கு எல்லையைக் கடந்து , வட கொரியாவின் பியொங் யாங்கை அமெரிக்கப் படைகள் கைப்பற்றின. தொடர்ந்து, வட கொரிய - சீன எல்லையில் இருக்கும் யாலு நதி நோக்கியும் அமெரிக்க இராணுவம் நகர ஆரம்பித்த போது சீனா தன் பங்களிப்பைத் தீவிரமாக்கியது. சீனாவின் "கம்யூனிசத் தொண்டர்கள்" “கம்யூனிசத் தொண்டர் படை” என்பது தான், சீனா வட கொரியாவினுள் அனுப்பிய தன் சீன மக்கள் இராணுவத்திற்கு இட்ட பெயர். சீனாவிடம் ஆட்பலம் - மூன்று இலட்சம் படையினர் வரை- இருந்த அளவுக்கு தொழில் நுட்பம் இருக்கவில்லை. ஆனால், வடக்கு நோக்கி நகர்ந்த ஐ.நா படைகளை (பெருமளவுக்கு அமெரிக்க படைகள்) தங்கள் அலை அலையான ஆட்பலம் மூலம் சீன இராணுவம் துவம்சம் செய்ய ஆரம்பித்தது. அமெரிக்கர்களுக்கு இருந்த பிரதான பலம் விமானப் படை. இந்த அமெரிக்க வான்படை மேலாண்மையை ஈடு கட்ட, சோவியத் ஒன்றியம் தன் “மிக்” ஜெற் விமானங்களைப் பயன்படுத்தி யாலு நதிப் பகுதியில் மட்டும் தனது சொந்த விமானிகளை வைத்து நடவடிக்கைகளில் ஈடு பட்டது. எனவே நடைமுறையில், இது அமெரிக்க, சோவியத், சீனப் படைகளிடையேயான போர் என்றாலும், மூன்றாம் உலகப் போர் உருவாகும் ஆபத்தைத் தவிர்க்க மூன்று நாடுகளும் இதனை வெளிப்படையாக அறிக்கையிடவில்லை. இறுதியில், 3 வருடங்கள் முன்னகர முடியாத பதுங்கு குழி யுத்தத்தை எதிர் கொண்ட ஐ.நா படைகள், பின்வாங்கி 38 வது அகலாங்குக் கோட்டு எல்லையில் மீண்டும் பிரிக்கப் பட்ட கொரியாவை ஏற்றுக் கொண்டதோடு, கொரியப் போர் ஜூலை 27, 1953 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. ஜூலை 27, 1953 இல், ஐ.நா படைகளின் தளபதியான அமெரிக்க ஜெனரலும், வட கொரிய இராணுவ ஜெனரலும் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டதோடு கொரிய யுத்தம் ஓய்வுக்கு வந்தது. பட உதவி நன்றியுடன்: அமெரிக்க தேசிய ஆவணக்காப்பகம். போரில் இருந்து உதித்த நாயகர்களும் வில்லன்களும் கொரிய யுத்தம் அமெரிக்காவிற்கு பாதகமாகத் திரும்பிய போது, ஜப்பான் மீது அணுவாயுதத் தாக்குதலை எதிர்த்த மக் ஆர்தர், சீனாவின் மீது அணுவாயுதம் பயன்படுத்த வேண்டுமென்று வாதிட ஆரம்பித்தார். ஆனால், 1945 இல் ஜப்பான் நிலையும், 1950 களில் கொரிய நிலையும் ஒன்றல்ல என்ற தெளிவான பார்வையோடிருந்த அமெரிக்க அதிபர் ட்ரூமன், மக் ஆர்தரின் கோரிக்கையை நிராகரித்து, போரை விரைவாக முடித்து வைக்க விரும்பினார். இதற்காக ஒரு கட்டத்தில், ட்ருமன் ஜெனரல் மக் ஆர்தரை அவரது பசுபிக் கட்டளைத் தளபதி பதவியிலிருந்து நீக்கவும் வேண்டியிருந்தது. இதன் பின்னரே, கொரிய தீபகற்பத்தின் போர் வெப்பம் ஓரளவு தணிந்து, போர் ஓய்வுக்கு வந்தது. மறுபக்கம், ஸ்ராலின் மார்ச் 1953 இல் இறந்து போக, ஸ்ராலினை விட சிறிது வித்தியாசமான பார்வை கொண்ட குருசேவ் சோவியத் தலைவரானார் - இதுவும் கொரியாவில் சோவியத்தின் பங்களிப்பை மாற்றியது என்கிறார்கள். சீனாவின் மாவோவும், வட கொரியாவின் கிம் இல் சங்கும் தங்கள் கம்யூனிச ஆட்சியை உள்நாட்டில் பலப்படுத்திக் கொண்டனர். இரு கொரியாக்களுக்குமிடையேயான 38 வது அகலாங்கு எல்லை, பனிப்போரில் ஒரு முக்கிய எல்லைக் கோடாக நிலைத்து, இன்றும் தொடர்கிறது. - முற்றும்
  2. பாடசாலையில் படித்த உலகச் சரித்திரத்தில் இந்த கொரிய சண்டைகள் பற்றி சொல்லித் தரவில்லை......அதுதான் தெய்வமச்சான் அமெரிக்காவுடன் ஆக்ரோஷமாய் இருக்கிறார் போல .....! 😂 நன்றி justin ......!
  3. இரண்டாவது வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகள் - தொடரும் இனக்கொலை, ஜூலை 1983 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி திங்கட்கிழமை வெலிக்கடைச் சிறைச்சாலையில் 35 தமிழ் அரசியல்க் கைதிகள் சிங்கள சிறைக்கைதிகளாலும் சிறைக்காவலர்களாலும் மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தமையானது அச்சிறைச்சலையின் ஏனைய பகுதிகளில் அடைத்துவைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகள் மத்தியில் கடுமையான அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. சி 3 பிரிவில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 28 தமிழ்க் கைதிகள் தமக்கும் தமது சகாக்களுக்கு நேர்ந்த அநர்த்தமே நடக்கப்போகிறதென்று எண்ணத் தொடங்கினர். ஜூலை 25 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகரான லியோ டி சில்வாவைச் சந்தித்த பனாகொடை மகேஸ்வரன், டக்கிளஸ் தேவானந்தா மற்றும் பரந்தன் ராஜன் ஆகியோர் தமது பாதுகாப்புக் குறித்த அச்சத்தினை அவருக்குத் தெரிவித்தனர். மேலும், தமது அறைகளைத் திறந்துவிடுமாறும், தம்மை ஒரு குழுவாக இருக்க விடுமாறும் அவ்வாறு இருக்கும் பட்சத்தில் தம்மால் தம்மை தற்காத்துக்கொள்ள முடியும் என்றும் கோரினர். முதல்நாள் இரவு கொல்லப்பட்ட 35 தமிழ்க் கைதிகளினதும் படுகொலைகளை செவ்வாயன்று இரவு விசாரித்துக்கொண்டிருந்த கொழும்பு பிரதம நீதவான் விஜயவர்த்தன, மீதமிருக்கும் தமிழ்க் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிசெய்யுமாறு சிறைச்சாலை அதிகாரிகளைப் பணித்திருந்தார். சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட விடயம் சர்வதேசத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. ஆகவே மீதமிருக்கும் தமிழ்க் கைதிகளைப் பாதுகாக்குமாறு நீதிபதி பணித்தபோது அதனை நிறைவேற்றுவதைத்தவிர அமைச்சுக்கு வேறு வழிகள் இருக்கவில்லை. பிரதான சிறைக்காவலரான கருணாரத்ன உதவி ஆணையாளரிடம் பேசும்போது, மீதமிருக்கும் தமிழ்க் கைதிகளையும் கொன்றுவிட சிங்களக் கைதிகள் தயாராகி வருவதாக தனக்கு சிறைச்சாலையின் புலநாய்வுத்துறையினரூடாகத் தகவல்கள் கிடைத்திருப்பதாகக் கூறினார். உடனடியாக இத்தகவல் நீதியமைச்சின் செயலாளரான விஜேசிங்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆகவே, ஜூலை 27 ஆம் திகதி, புதன்கிழமை, சி 3 இல் அடைத்துவைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகள் அனைவரையும் இளவயதுக் கைதிகளுக்கென்று தனியாகக் கட்டப்பட்டிருந்த கட்டடத்திற்கு மாற்றினார்கள். அக்கட்டத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 9 தொழில்சார் நிபுணத்துவம் கொண்ட கைதிகளை கட்டடத்தின் மேற்பகுதிக்கு மாற்றிவிட்டு, அவர்கள் இருந்த பகுதியில் சி 3 பிரிவின் கைதிகளைத் தடுத்து வைத்தார்கள். செயவ்வாய்க்கிழமை தமிழ்க் கைதிகளைப் பொறுத்தவரையில் அமைதியாகக் கழிந்தது. சிறைச்சாலையில் எந்தவித அசம்பாவிதங்களும் அன்று நடக்கவில்லை. ஆனால், சிறைச்சாலைக்கு வெளியே, கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தமிழருக்கெதிரான வன்முறைகளை சிங்களவர்கள் நடத்திக்கொண்டிருந்தார்கள். திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்குச் சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தபோதும், தமிழருக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்தும் பரவலாக நடந்துகொண்டேயிருந்தன. அரச அமைச்சர்களின் தலைமையின் கீழ் ஒருங்கமைக்கப்பட்டு நடாத்தாப்பாட்ட தாக்குதல்கள் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வந்தவுடன் முற்றுப்பெற, சாதாரண சிங்களவர்கள் குழுக்களாக தமிழர்கள் மீது தாக்குதலை தொடர்ந்தும் நடத்திவந்தார்கள். சமூகத்தில் குற்றவாளிகளாக, தெருச்சண்டியர்களாக இழிவாழ்க்கை வாழ்ந்த சிங்களவர்கள் ஒரே இரவில் சிங்கள இனத்தின் காவலர்களாக தம்மை வரிந்துகொண்டு, தமிழ்மக்கள் மீதான தாக்குதல்களை வன்மத்துடனும், மூர்க்கத்தனத்துடனும் தலைமைதாங்கி நடத்தி வந்தார்கள். பாரவூர்திகளில் ஒலிபெருக்கிகளைப் பொருத்தியபடி தமிழர்கள் வாழும் பகுதிகளூடாக வலம்வந்த பொலீஸார், அயலவர்கள் வீடுகளிலும், பாடசாலைகள், கோயில்கள் போன்ற இடங்களில் தஞ்சமடைந்திருந்த தமிழர்களை வெளியே வரச்சொல்லி அழைத்து, அவர்களை அகதிமுகாம்களுக்கு ஏற்றிச்சென்றனர். இது கொழும்பின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக பொலீஸாரினால் நடத்தப்பட்டு வந்தது. செவ்வாய்க்கிழமை காலை, முதல்நாள் நடந்த தாக்குதல்களில் ஏற்பட்ட சேதத்தினை ஆராய இராணுவத் தளபதி திஸ்ஸ வீரதுங்க இராணுவத் தலைமையகத்திலிருந்து காலிவீதியூடாகபயணம் செய்தார். கொல்லுப்பிட்டிய சந்தியை அண்மித்தபோது சிங்களக் காடையர் குழுவொன்று ஞானத்திற்குச் சொந்தமான கட்டடம் ஒன்றினை எரிப்பதற்குத் தயாராகி வருவதை அவர் கண்டார். கொழும்பில் பல தொழிற்சாலைகளை ஞானம் நடத்திவந்தார். இராணுவத் தளபதியின் வாகனத்திற்குப் பாதுகாப்பாக வந்த மற்றைய வாகனத்தில் மேஜர் சுனில் பீரிஸும் சில ராணுவ வீரர்களும் இருந்தனர். அந்தக் கும்பலின் அருகில் தமது வாகனத்தை நிறுத்திய அவர்கள், அக்கும்பலில் வயதானவர் போன்று தோற்றமளித்தவைக் கைதுசெய்தனர். கும்பலில் இருந்த சிலர் அந்த வயதானவரை "மரியாதைக்குரிய அமைச்சர்" என்று அழைத்தனர். ஆகவே, அவரை ஏதும் செய்யாது அங்கேயே விட்டுவிட்டு தனது இராணுவ வாகனத்தில் ஏறிக்கொண்டார் மேஜர் சுனில். அந்தக் கும்பலின் அருகில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பிரத்தியேகக் காரும், அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர்களும் நின்றிருந்ததை சுனில் கண்டுகொண்டார். இனவாத சிங்கள மிருகம் - ‍ சிறில் மத்தியூ அந்த மரியாதைக்குரிய அமைச்சர் வேறு யாருமல்ல, அவர் சிறில் மத்தியூ. இலங்கையின் கைத்தொழில் அமைச்சர். தன்னை சாதாரண இராணுவ மேஜர் ஒருவர் கைதுசெய்ய எத்தனித்ததனால் மிகுந்த சீற்றம் அடைந்த அமைச்சர் சிறில் மத்தியூ, உடனடியாக ஜனாதிபதிச் செயலகத்திற்குச் சென்று இதுகுறித்து ஜெயாரிடம் முறைப்பாடு செய்தார். தன்னைக் கைது செய்ய எத்தனித்த மேஜர் சுனில் தன்னிடம் உடனடியாக மன்னிப்புக் கோரவேண்டும் என்று சிறில் மத்தியூ பிடிவாதமாக இருந்தார். தன்னை அன்று மாலை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்த மேஜர் சுனிலிடம் பேசிய ஜெயார், அவரை உடனடியாக அமைச்சர் சிறில் மத்தியூவிடம் மன்னிப்புக் கோரும்படி பணித்தார். ஆனால், பீரிஸ் மறுத்துவிட்டார். தனது கடமையினையே தான் செய்ததாகவும், கும்பலில் இருந்தது அமைச்சர் மத்தியூ என்பது தனக்குத் தெரியாது என்றும் மேஜர் சுனில் ஜெயாரிடம் கூறினார். அதன்பிறகு அதுகுறித்துப் பேசுவதை ஜெயார் கைவிட்டு விட்டார். ஜெயாரின் நண்பராக இருந்த ஞானம், தனது கட்டடத்தை சிறில் மத்தியூ எரித்த விடயம் குறித்து பின்னாட்களில் ஜெயாரிடம் பேசியிருந்தார்.
  4. படுகொலையில் ஈடுபட்ட சிறைக்காவலர்களையும், அதிகாரிகளையும் காப்பாற்றிய நீதிபதி - ‍ தொடரும் இனக்கொலை, ஜூலை 1983 ஜனாதிபதி விசாரணைக் கமிஷனின் முன்னால் சிறைக்காவலர்களும் அதிகாரிகளும் தம் பக்கக் கதையினைச் சொல்லியிருந்தார்கள். வெலிக்கடைச் சிறைச்சாலையின் அத்தியட்சகர் லியோ டி சில்வா பேசுகையில், அதிகாலை 2:15 மணிக்கு சிறைச்சாலையின் அபாய அலாரம் ஒலிக்கத்தொடங்கியதாகவும், இதனையடுத்து தேவாலயப் பகுதிநோக்கி தான் ஒடிச்சென்றதாகவும் கூறினான். சுமார் 300 முதல் 400 வரையான சிங்களக் கைதிகள் தமிழர்கள் அடைத்துவைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் எவரும் நுழைய விடாதவாறு மறித்து நிற்க, அவர்களின் பின்னால் இருந்த ஆயுதம் தாங்கிய சிறிய குழுவொன்று தமிழ்க் கைதிகள் மீது தாக்குதலை நடத்திக்கொண்டிருந்ததை தான் கண்டதாகவும் அவன் கூறினான். தன்னை உள்ளே செல்லவிடாது சிங்களக் கைதிகள் தடுத்துவிட்டதாகவும், ஆனால் பின்புலத்தில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் ஒலியும், அவர்கள் எழுப்பிய அவல ஓலங்களும் தனக்குத் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருந்ததாகவும் அவன் கூறினான். இதனையடுத்து, சிறைச்சாலைக்கு வெளியே முகாமிட்டிருந்த இராணுவத்தினரினரை உதவிக்கு அவன் அழைத்திருக்கிறான். உதவி ஆணையாளரான ஜான்ஸ் பேசும்போது, தானும் தேவாலயப் பகுதிக்கு உடனே ஓடிச்சென்றதாகவும், ஆனால் சிங்களக் கைதிகள் தன்னை தடுத்து நிறுத்திவிட்டதாகவும் கூறினான். இராணுவத்தினர் உள்ளே வந்தபோதும், அவர்களாலும் எதுவுமே செய்ய இயலாது போய்விட்டதாகவும் அவன் கூறினான். இராணுவத்தினராலும், சிறைக் காவலர்களாலும் நிலைமையினை அடக்கமுடியாமற் போகவே தான் பொரள்ளை பொலீஸ் நிலையத்துடன் தொடர்புகொண்டதாகக் கூறிய ஜான்ஸ், தனது வேண்டுகோளினை மறுதலித்த பொரள்ளைப் பொலீஸார், தம்மிடம் போதுமானளவு ஆட்கள் இல்லை என்று கூறியதாக அவன் கூறினான். பின்னர் உதவிப் பொலீஸ் அதிபரான சுந்தரலிங்கத்துடன் தான் தொடர்புகொண்டதாகவும், அவர் கூட தான் முக்கிய பாதுகாப்புச் சபைக் கூட்டம் ஒன்றிற்குச் செல்லவிருப்பதால், தன்னால் எதுவும் செய்யமுடியாது என்று கைவிரித்துவிட்டதாக ஜான்ஸ் மேலும் கூறினான். தன்னிடம் பேசிய சுந்தரலிங்கம், பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இதுகுறித்து தான் பேசுவதாகக் கூறினார் என்றும் அவன் சொன்னான். அதன்பின்னர், கொழும்பு வைத்தியசாலையுடன் தொடர்புகொண்ட ஜான்ஸ், காயப்பட்ட தமிழ்க் கைதிகளை எடுத்துச் செல்வதற்கான ஒழுங்குகளைச் செய்ததாகக் கூறினான். படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு ஜான்ஸ் வரமுன்னரே உதவி அத்தியட்சகரான் லியோ சென்றிருக்கிறான். தான் அப்பகுதிக்குச் செல்லும்போது, சிங்களக் கைதிகளின் கூட்டம் கலையத் தொடங்கியிருந்ததாக அவன் கூறுகிறான். மண்டபம் பகுதியில் இருந்து தான் பார்த்தபோது பி 3 மற்றும் டி 3 அறைகளில் பல தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டுக் கிடப்பதைத் தான் கண்ணுற்றதாகக் கூறினான். அங்கிருந்த சில கைதிகளின் உதவியுடனும், சிறைக் காவலர்கள் சிலரின் உடவியுடனும் காயப்பட்டுக்கிடந்தவர்களை மண்டபப் பகுதிக்குள் தான் கொண்டுவந்து சேர்த்ததாக லியோ கூறினான். தமிழ்க் கைதியான ரொபேர்ட் கூறும்போது, சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தமிழ்க் கைதிகள், காவலாளிகளிடம் தம்மைக் காக்குமாறு மன்றாடியபோது, அக்காவலாளிகள் கைதிகளின் கழுத்துக்கள் மீது சப்பாத்துக் கால்களால் அழுத்திக் கொல்லமுயன்றதை தான் கண்டதாகக் கூறுகிறார். பின்னர் குற்றுயிராகக் கிடந்த‌ தமிழர்களை இழுத்துவந்து புன்முறுவலுடன் வீற்றிருந்த புத்தனின் பாதங்களில் குவித்திருக்கிறது அவனை வணங்கும் காடைக்குழு. ரொபேர்ட்டைப் போன்றே சாட்சியமளித்த மாணிக்கதாசனும் காயப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தமிழர்கள் மீது ஏறி மிதித்த காவலர்கள் அவர்களைக் கொல்ல முயன்றுகொண்டிருந்ததை தான் பார்த்ததாகக் கூறுகிறார். ஜான்ஸ் சிறைச்சாலைக்கு திரும்பியிருந்தபோது, வாசலில் பொலீஸ் குழுவொன்று நிற்பதைக் கண்டான். அவர்களை உள்ளே செல்லவிடாமல் அங்கிருந்த இராணுவம் மறித்து வைத்திருந்தது. பொலீஸாரை உள்ளே வருமாறு ஜான்ஸ் வற்புறுத்தியபோதும், இராணுவத்தினரின் கட்டளைகளை மீறி தம்மால் உள்ளே வரமுடியாது என்று பொலீஸார் மறுத்துவிட்டனர். அன்று பிற்பகல் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு திரும்பியிருந்த இராணுவத் தளபதி திஸ்ஸ வீரதுங்கவுடன் இதுகுறித்துப் பேசுவதற்காக தனது அலுவலகத்திற்குச் சென்றான் ஜான்ஸ். ஆனால், இறுதிவரை தளபதியுடனோ அல்லது ஏனைய ராணுவ அதிகாரிகளுடனோ அவன் இதுகுறித்துப் பேசவில்லை. அனைத்து இராணுவத் தளபதிகளும் ஜெயாருடன் உயர் பாதுகாப்பு கூட்டத்தில் பங்கேற்றிருப்பதால் அவர்களைத் தான் தொடர்புகொள்ள முயலவில்லை என்று அவன் விளக்கமளித்தான். பின்னர் இன்னொரு உதவி பொலீஸ் அதிபரான ஏர்னெஸ்ட் பெரேராவுடன் ஜான்ஸ் தொடர்புகொண்டபோது, அவர் அவனை பொலீஸ் தலைமைக் காரியாலயத்திற்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு கூறியிருக்கிறார். தமது உதவியாளர்களின் பொறுப்பில் சிறைச்சாலை நிர்வாகத்தைத் தற்காலிகமாகக் கொடுத்துவிட்டு ஜான்ஸும், லியோவும் பொலீஸ் தலைமைச் செயலகத்திற்குச் சென்றிருக்கிறார்கள். அங்கிருந்து தளபதி வீரதுங்கவை அவர்கள் தொடர்புகொண்டபோது, சிறைச்சாலையினுள் பொலீஸார் உட்புகுவதற்கான அனுமதியினை வீரதுங்க வழங்கியிருக்கிறார். ஜான்ஸ், பொலீஸ் தலைமைச் செயலகத்தில் நின்றவேளையில், உயர் பாதுகாப்பு கூட்டத்தை முடித்துக்கொண்டு பொலீஸ் மா அதிபர் ருத்ரா ராஜசிங்கமும், உதவி அதிபர் சுந்தரலிங்கமும் அங்கு வந்திருக்கிறார்கள். ஜான்ஸிடம் பேசிய சுந்தரலிங்கம், சிறைச்சாலைப் படுகொலை குறித்து கூட்டத்தில் பிரஸ்த்தாபிக்கப்பட்டதாகக் கூறினார். ஜான்ஸ் பொலீஸ் தலைமைச் செயலகத்திலிருந்து சிறைச்சாலைக்குத் திரும்பிவந்தபோது மாலை 5 மணியாகியிருந்தது. காயப்பட்டும் கொல்லப்பட்டும் புத்தனின் பாதங்களில் குவிக்கப்பட்டிருந்த தமிழர்களின் உடல்களை ட்ரக் வண்டிகளில் ஏற்றி கொழும்பு வைத்தியசாலையின் விபத்துப் பிரிவிற்கு அனுப்பியிருந்தார்கள். ட்ரக்குகளில் ஏற்றப்பட்ட நிலையில் உயிருடன் இருந்த கைதிகளை சிறைக்காவலர்கள் உள்ளேயே வைத்துத் தாக்குவதைத் தான் கண்டதாக மாணிக்கதாசன் சாட்சிய‌மளிக்கும்போது கூறினார். விசாரணைகளின்போது, ட்ரக்குகளில் ஏற்றப்படும்போது குற்றுயிராகக் கிடந்த ஒரு சில கைதிகளும் வைத்தியசாலையினை அடையும்போது கொல்லப்பட்டுவிட்டதாகவும், இவர்கள் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டதனாலோ அல்லது மூச்சுக்குழல்கள் நசுக்கப்பட்டதனாலோ கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறைச்சாலை வைத்தியராகக் கடமையாற்றிய பேரின்பநாயகம், ஜான்ஸ் மாலை 5 மணிக்கு சிறைச்சாலைக்கு வந்தபின்னரே அங்கு வரவழைக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சைக்காகப் பயன்படுத்தும் அறையினுள் காயப்பட்ட தமிழ்க் கைதிகள் ஒவ்வொருவராக நோயாளர் காவுப் படுக்கைகளில் மருத்துவ பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டார்கள். இரவு 10 மணிவரை பரிசோதனைகளை பேரின்பநாயகம் நடத்திக்கொண்டிருந்தார். தன்னிடம் கொண்டுவரப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருந்தார்கள் என்று அவர் கூறினார். தாக்குதலில் காயப்பட்டவர்கள் என்று ஜான்ஸ் கருதிய தமிழர்களை வைத்தியசாலையின் விபத்துப் பிரிவிற்கு அனுப்பிவைக்க ஜான்ஸ் முயன்றுகொண்டிருக்க, தன்னிடம் கொண்டுவரப்பட்ட 35 தமிழ்க் கைதிகளும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று பேரின்பநாயகம் அவனிடம் கூறினார். ஆகவே, 35 தமிழர்களின் உடல்களையும் வைத்தியசாலையின் சவ அறைக்கு அனுப்புவதென்று அவன் முடிவெடுத்தான். அப்போது, கொல்லப்பட்டவர்களின் உடல்களை எப்படி அப்புறப்படுத்துவது எனும் சிக்கல் உருவானது. சிறைச்சாலைகள் நீதித்துறையின் கட்டுப்பாட்டினுள் வருவதால், இதுகுறித்து தனக்கு ஆலோசனை வழங்குமாறு ஜான்ஸ் நீதியமைச்சின் செயலாளரான மேர்வின் விஜேசிங்கவிடம் கோரினான். பின்னர், நீதிபதியின் அணுசரணையுடன் உடல்கள் மீது பரிசோதனை நடத்தப்படுவதற்கான நடவடிக்கைகளை விஜேசிங்க ஆரம்பித்தார். அதன்படி, கொழும்பு பிரதம நீதிபதி கீர்த்தி சிறிலால் விஜேவர்த்தனவை இக்கொலைகள் தொடர்பாக விசாரிக்குமாறு அமைச்சின் செயலாளர் பணிக்கவே, நீதிபதியும் சட்ட வைத்திய அதிகாரி சல்காடொவை கொல்லப்பட்ட தமிழர்கள் மீது பிரேதப் பரிசோதனையினை ஆரம்பிக்குமாறு பணித்தார். அதற்கமைய, பிரேதப் பரிசோதனையும், சட்ட வைத்திய விசாரணையும் செவ்வாய் இரவு நடைபெற்றன. மறுநாள், புதன் காலையில் இவை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டன. கொழும்பு நீதிபதிம் இந்த ஆட்கொலைகளை, "பொதுமக்களின் கலவர மனநிலையினால் உந்தப்பட்ட கொலைகள்" என்று தீர்ப்பளித்தார். தமது கடமைகளில் இருந்து நழுவினார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அனைத்து சிறைக் காவலர்களையும், அதிகாரிகளையும் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்திலுமிருந்து விடுவித்து, குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்தார். சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்டதனால், சிறைக் காவலர்களால் எதுவுமே செய்ய முடியாது போய்விட்டது என்று அவர் வாதிட்டார். பின்னர், பொரள்ளைப் பொலீஸாரைப் பார்த்து, "விசாரணைகளை மேற்கொண்டு குற்றமிழைத்தவர்கள் யாரென்பதைக் கண்டுபிடியுங்கள்" என்று கூறினார். இப்படுகொலைகள் குறித்து முக்கியமான சில கேள்விகள் எழுகின்றன, இப்படுகொலைகளுக்கு ஆரம்பித்து வைத்தவர்கள் யார்? இதற்குத் தலைமை தாங்கியவர்கள் யார்? சிறைக்காவலர்களும் படுகொலைகளில் ஈடுபட்டிருந்தனரா? ஆகிய இக்கேள்விகள் எவையுமே சட்ட வைத்திய விசாரணையில் தவிர்க்கப்பட்டிருந்தன. தாக்குதலில் முன்னின்று செயற்பட்டவர்கள் குறித்த கேள்விகளோ அல்லது அவர்களின் பெயர் விபரங்களோ இந்த விசாரணைகளில் முற்றாகத் தவிர்க்கப்பட்டன. இப்படுகொலைகளைக் கண்ணால் கண்ட சாட்சியங்களான சி 3 பகுதி தமிழ்க் கைதிகளின் வாக்குமூலங்கள் வேண்டுமென்றே விசாரணைகளை நடத்திய நீதிபதியினால் தவிர்க்கப்பட்டிருந்தன. இப்படுகொலைகளின் முன்னின்று செயற்பட்டவர்களின் பெயர்களை சி 3 பகுதியில் அடைத்துவைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகள் நன்கு அறிந்தே இருந்தனர். மேலும், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தம்முடன் நடந்துகொள்ளும் பல சிறைக்காவலர்களே இப்படுகொலைகளை ஆரம்பித்து வைத்தனர் என்பதையும் தமிழ்க் கைதிகள் நன்கு அறிந்தே இருந்தனர். நாடுமுழுதும் தமிழர்கள் மீது நடத்தப்பட்டுக்கொண்டிருந்த படுகொலைகளின் தொடர்ச்சியே சிறைச்சாலைப் படுகொலைகளும் என்பதும் அவர்களுக்கு நன்கு தெரிந்தே இருந்தது. படுகொலைகளை நடத்தியவர்களுடன் இராணுவம் நின்றிருந்தது. அக்கூட்டத்தைக் கலைக்க ஒரு வேட்டினைத்தன்னும் இராணுவம் தீர்க்கவில்லை. தமிழர்களின் சாட்சியங்களை உறுதிசெய்வதுபோலவே சிறைச்சாலை உதவி ஆணையாளர் ஜான்ஸின் வாக்குமூலம் அமைந்திருந்தது. சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் அமுலாக்கப்பட்டிருந்த அவசரகாலச் சட்டத்திற்கு அமைவாக, அச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்களை புலநாய்வுத்துறையின் இயக்குநரிடம் வழக்கினை விசாரித்த நீதிபதி கையளித்து, அவற்றினை சட்டத்திற்கு அமைய எரித்துவிடும்படி கோரினார். ஜூலை 27 ஆம் திகதி, புதன் பிற்பகல் வேளையில்,வெள்ளைத் துணிகளில் சுற்றப்பட்ட35 தமிழர்களின் உடல்கள் பொரள்ளை கனத்தை மயானத்திற்கு சிறைச்சாலை ட்ரக் வண்டிகளில் கொண்டுசெல்லப்பட்டன. அங்கு வெட்டப்பட்டிருந்த பாரிய குழி ஒன்றில் ட்ரக்குகளில் இருந்த சிறைக்காவலர்களினால் அவை தூக்கி வீசப்பட்டன. உடல்களின் மீது மரக்கட்டைகள் எறியப்பட்டு, அவற்றின்மீது பெற்றொல் ஊற்றப்பட்டு தீவைக்கப்பட்டபோது அது பாரிய தீப்பிழம்பாக உருமாறியது. தமிழர்களின் சிதையிலிருந்து வெளிக்கிளம்பிய பாரிய தீப்பிழம்பு வான் நோக்கி எழுந்து சென்றது. அன்றிலிருந்து இலங்கை இரத்தம் சிந்திக்கொண்டே இருக்கிறது. அந்த மொழியில் மொழிபெயர்க்கும் அளவிற்கு அம்மொழியினை நான் கற்கவில்லை அண்ணா, பேசமட்டுமே என்னால் முடியும்.
  5. இப்படியான பதிவுகள் சிங்களத்திலும் மொழிபெயர்ப்பு செய்து சாதாரண சிங்கள மக்களையும் சென்றடைய வேண்டும்.
  6. 13´ஐ வைத்து..சிங்களவரையும், தமிழரையும் திருப்திப் படுத்தும் முயற்சியில்... ரணில்.
  7. கண்ணன் என்ற ஒரு கலைஞர்,,நடிகர், அசல் சிவாஜி போல வேடமணிந்து திருமண விழாவில் பாடி நடித்த காட்சி ஒன்று வெகு சிறப்பாக அபிநயிக்கப்பட்ட காட்ச்சி ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார் நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார் மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள் வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார் ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக வாழும் நாடும் வளரும் வீடும் மணம் பெறவே வருக ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது 👍🔔

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.