Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தனிக்காட்டு ராஜா

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    9977
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    88827
    Posts
  3. வைரவன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    345
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20355
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/15/23 in all areas

  1. பாம்பு முட்டையிலிருந்து வரும் குட்டிகளை, இவர் படமெடுக்க... இவரை தாய்ப் பாம்பு, பக்கத்தில் இருந்து படமெடுக்க... ஒரே ஜாலிதான். 😂 🤣
  2. சுவியர் இணைத்த கிளுவை மரம், சீமை கிளுவை (படத்தில் உள்ளது), முள் முருங்கை... இவற்றை முன்பு எல்லா வீடுகளிலும் காணலாம். இப்போ அந்த மரங்களுக்கு ஒரு வகை நோய் ஏற்பட்டும், மதில் கட்டும் வழக்கம் ஏற்பட்டதாலும்... அவற்றை இப்போ ஊரில் காண்பது மிக அரிது என்று அறிந்தேன்.
  3. இருவரையும் படமெடுத்தது யார்?
  4. உண்மை தான். பயணங்களின் போது சாரதிக்கு உற்சாகமாக இருக்க வேண்டுமே என்று முழுநேரமும் நானும் தூங்காமல் இருப்பேன்.
  5. தவறானவை சரியானது பசும் பால் .....> பசுப்பால் (பசுவின் பால்) தேனீர் ..........> தேநீர் ( தேயிலை நீர் ) எண்ணை .........> எண்ணெய் ( எள் = நெய் )
  6. இது தான் மெக்கானிக்கின் கெற்றப்புல்லோ?!
  7. ரசித்து ருசித்து இருக்கிறீர்களா இந்தப் பழத்தை ......! 👍
  8. சீனா, இந்தியாவின் நெருக்குவாரத்தில்.... அகப்பட்ட ரணில் விக்கிரமசிங்க. 😜 😂 🤣
  9. 1983 ஜூலை இனவழிப்பின் பின்னரும் தமிழரைத் தொடர்ச்சியாக வஞ்சித்துவந்த ஜெயவர்த்தன‌ தமிழர் மீதான தனது அரசாங்கத்தின் தாக்குதல்களை மூடிமறைக்க முயன்றுவந்த அதேவேளை, தமிழர்களை தொடர்ந்து ஒடுக்கும் கைங்கரியத்திலும் ஜெயார் இறங்கியிருந்தார். பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் அரசியல் ஆகிய துறைகளில் தமிழர்களை அவர் வஞ்சித்து வந்தார். பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறும் அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் பொருளாதார ரீதியில் மூன்று வழிகளில் தமிழர்களை அடக்க அவர் எண்ணினார். முதலாவது புறக்கோட்டை மொத்த வியாபாரத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த தமிழர்களை புறந்தள்ளி வியாபரங்களைச் சிங்களவர்களின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவது.இரண்டாவது, அழிக்கப்பட்ட தமிழர்களின் வியாபார நிறுவனங்களின் பங்குகளைச் சிங்களவர்களுக்குக் கையளிப்பது. மூன்றாவது தமிழர்களுக்குச் சொந்தமான வியாபார நிறுவனங்களை கையேற்று சிங்களவர்களுக்கு வழங்குவது. இலங்கையின் வர்த்த செயற்பாடுகளில் பெட்டா எனப்படும் புறக்கோட்டைப் பகுதியே முக்கிய இடமாக விளங்கியது. ஒடுங்கிய, சனநெரிசல் மிகுந்த 4 ஆம் 5 ஆம் குறுக்குத்தெருக்கள் மற்றும் கெய்ஸர் வீதி ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த மொத்த வியாபார நிலையங்களிலேயே இலங்கையின் பெரும்பாலான நுகர்வுத் தானியமான அரிசி உட்பட பல தானிய வகைகள் பெருமளவில் விற்கப்பட்டு வந்தன. இந்த வர்த்தகம் இலங்கை மற்றும் இந்தியத் தமிழர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. ஆகவே, இப்பகுதியைக் குறிவைத்துத்தான் ஜூலை 25 ஆம் திகதி காலை தாக்குதல்களை ஜெயவர்த்தனவின் குண்டர்கள் நடத்தினார்கள். அப்பகுதியெங்கும் நெருப்பாறு போலக் காட்சியளித்ததாக அங்கிருந்து உயிர்தப்பிய தமிழ் அரிசி வர்த்தகர் ஒருவர் அச்சத்துடன் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். இப்பகுதிக்கு அண்மையாக அமைந்திருந்த பிரதான வீதியும், ஏனைய குறுக்கு வீதிகளும் புடவை வியாபாரத்திற்குப் பெயர்பெற்றவை. இந்த வியாபாரமும் தமிழர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. ஆகவே, இப்பகுதி மீது இரண்டாவது தாக்குதலை ஜெயாரின் குண்டர்கள் நடத்தினார்கள். இப்பகுதியில் இருந்த 442 தமிழருக்குச் சொந்தமான கடைகள் முற்றாகச் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டதுடன், இப்பகுதியில் தங்கி பணிபுரிந்த பல தமிழர்களை சிங்களவர்கள் கொன்றார்கள். பிற்காலத்தில் டுப்லிகேஷன் வீதியில் அரிசி மொத்த விற்பனை நிலையம் ஒன்றினை லலித் அதுலத் முதலி திறந்துவைத்தார். சுமார் 50 மொத்த வியாபார நிலையங்களைக் கொண்டிருந்த இந்த புதிய கட்டடத் தொகுதியைத் திறந்துவைத்ததன் நோக்கமே தமிழர்களின் கைகளிலிருந்த அரிசி வர்த்தகத்தைக் கைப்பற்றி சிங்களவர்களின் கைகளில் ஒப்படைப்பதுதான். ஆவணி 3 ஆம் திகதி இத்தொகுதியைத் திறந்துவைத்த அதுலத் முதலி, தமிழர்கள் அரிசி வர்த்தகத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் விலை நிர்ணயம் செய்துவருகிறார்கள் என்றும் பெரும் லாபமீட்டலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டினார். ஆனால், பெரும்பாலான பெட்டா பகுதி தமிழ் வியாபாரிகள் தமது வர்த்தகத்தை மீள நிலைநிறுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறார்கள். 2004 ஆம் ஆண்டில் இப்பகுதியில் சுமார் 70 முதல் 80 வீதமான வர்த்தகம் மீண்டும் தமிழர்களின் கைகளுக்குள் வந்திருந்தது. மீதியில் பெரும்பகுதியை முஸ்லீம் வர்த்தகர்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். லலித்தின் அரிசி மொத்த விற்பனை நிலையத் திறப்பின் பின்னர், இன்னொரு அமைச்சரான அனந்த திஸ்ஸ் டி அல்விஸ் தமிழர்களுக்குச் சொந்தமான தொழிற்றுரைகளை சீரமைக்கும் யோசனைபற்றி அறிவித்தார். "வர்த்தக அமைச்சர் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் அரிசி வர்த்தகத்தை உடைப்பதற்கான மார்க்கங்களை மேற்கொண்டு வருகிறார். ஒரு குறிப்பிட்ட இனத்தவரிடம் அரிசி விற்பனை கட்டுப்பாட்டில் இருப்பது நாட்டிற்கு நல்லதல்ல" என்று அல்விஸ் கூறினார். அதன் பின்னர், தமிழர்களின் வியாபாரங்களை சீரமைப்பது குறித்த செய்தியை வெளியிட்ட அல்விஸ், வியாபார நிறுவனங்களில் தமிழர்கள் வாங்கும் பங்குகளின் அளவு மட்டுப்படுத்தப்படும் என்று அறிவித்தார். ஆனால், தமிழர்களின் வியாபாரங்களைக் கைப்பற்றவும், அவற்றைக் கட்டுப்படுத்தவும் அல்விஸ் எடுத்த முயற்சிகள் இந்தியாவின் தலையீட்டினால் முறியடிக்கப்பட்டன. 1983 ஆம் ஆண்டின் ஜூலை தமிழினக் கொலையின்போது அரசாங்கத்தின் ஆசியுடன் அழிக்கப்பட்ட தமிழர்களுக்குச் சொந்தமான வியாபாரங்களையும், வீடுகளையும் அபகரிக்கவென்று ஜெயாரின் அரசு "வியாபார நிலையங்களையும் வீடுகளையும் புணரமைக்கும் அதிகார சபை" எனும் அமைப்பை உருவாக்கியது. அரசின் எண்ணப்படி, இந்த நிறுவனம் அழிக்கப்பட்ட தமிழர்களின் வீடுகளையும், வியாபார நிலையங்களையும் தனது உரிமையாக்கிக்கொள்ளும் அதிகாரம் அதற்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அமிர்தலிங்கமும், இந்தியாவும் இந்த பொறுப்பேற்றல் முயற்சிக்கெதிராக கடுமையான எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தார்கள். தமிழர்களின் சொத்துக்களைக் களவாட ஜெயார் முனைவதாக அவர்கள் நம்புகிறார்கள் என்று அமிர்தலிங்கம் ஜெயாரிடம் கூறியிருந்தார். அமிர்தலிங்கம் தம்பதிகள் அமிர்தலிங்கம் ஜெயாருக்கு எழுதிய கடிதத்தில் சிங்களக் காடையர்கள் கொள்ளையிட்டுச் சென்ற மீதியை ஜெயார் கொள்ளையிடப் பார்க்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தியாவின் ஆட்சேபணையும் இலங்கை தனது நடவடிக்கையைக் கைவிடவேண்டிய நிலைக்குத் தள்ளியிருந்தது. ஜெயாரின் அரசு வெளியிட்ட அறிக்கையில், அழிக்கப்பட்ட தமிழர்களுக்குச் சொந்தமான வியாபாரங்களையும், வீடுகளையும் தமிழர்கள் சார்பாக அதிகார சபை பொறுப்பெடுத்துக்கொள்ளும் என்று கூறப்பட்டிருந்தது. இச்சொத்துக்கள் பிறரால் அபகரிக்கப்படுவதைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அது கூறியது. இந்தியாவின் இந்த‌ நிலைப்பாட்டினால் பலனடைந்தவர்களில் நானும் ஒருவன். இடிக்கப்பட்ட எனது வீட்டினை மீளக் கட்ட நான் விரும்பினேன். ஆகவே, சொத்துக்களைப் புணரமைக்கும் அதிகார சபையிடம் எனது வீட்டினை எனக்கே தருமாறு நான் விண்ணப்பித்தேன். நான் விண்ணப்பித்தவாறே எனது வீடும் எனக்குக் கிடைத்தது. அரச திணைக்களங்கள், நிறுவனங்கள் போன்றவற்றில் தமிழர்களைச் சேர்த்துக்கொள்வதை ஜெயார் முற்றாகத் தவிர்க்க விரும்பினார். இதனைச் செய்வதற்காக பொலீஸாரினால் குற்றமற்றவர் என்று சான்றிதழ் ஒன்றினைத் தமிழர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தை அறிமுகப்படுத்தினார். அரச திணைக்களம் ஒன்றில் வேலைக்கு விண்ணப்பிக்கும் தமிழர் ஒருவர் எந்தவொரு போராளி அமைப்புடனும் தொடர்பற்றவர் என்று அப்பகுதிப் பொலீஸாரிடமிருந்து நற்சான்றுப் பத்திரத்தைப் பெற்றிருக்கவேண்டும் என்று கோரப்பட்டது. தனியார்த்துறையும் தமிழர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று அரசு நிர்ப்பந்தங்களை விதித்தது. கல்வித்துறையில், தமிழ்ப் பாடசாலைகள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டன. தமிழ்ப் பாடசாலைகளுக்கு புதிதாக ஆசிரியர்களைப் பணிக்கு அமர்த்துவதை கல்வியமைச்சு நிறுத்திவைத்தது. தமிழ்ப் பாடசாலைகளில் ஏற்பட்ட வெற்றிடங்களை சிங்கள ஆசிரியர்களைக் கொண்டு அது நிரப்பியது. சில தமிழ்ப் பாடசாலைகளுக்கு சிங்கள அதிபர்கள் கல்வியமைச்சால் அமர்த்தப்பட்டனர். குருநாகலை தமிழ் வித்தியாலயம் இன்றுவரை சிங்கள அதிபர் ஒருவரின் கீழேயே இயங்கி வருகிறது (2004). அரசியலில் தமிழர்களை ஓரங்கட்டும் நடவடிக்கைகள் அரசியல் யாப்பின் ஆறாம் திருத்தச் சட்டம் மூலம் முடுக்கிவிடப்பட்டன. தமிழரின் தனிநாட்டுக் கோரிக்கைக்கான ஜெயாரின் பதிலடியாக இது இருந்தது. தமிழர்களின் உணர்வுகளை, எதிர்வினையினை ஜெயவர்த்தனவோ அல்லது வேறு எந்தச் சிங்களத் தலைவரோ ஏறெடுத்தும் பார்க்க விரும்பவில்லை. பெரும்பான்மையினரான‌ சிங்களவர்களின் விருப்பங்களை மட்டுமே முன்னிறுத்திச் செயற்பட்ட இவர்கள், இந்த விருப்புக்களைத் தொடர்ச்சியாக‌ தமிழர்கள் மீது பலவந்தமாகத் திணித்து வந்தனர். அமைச்சர் லலித் அதுலத் முதலி தலைமையிலான ஒரு குழு ஆறாம் திருத்தச் சட்டத்தை அவசர அவசரமாகத் தயாரித்து வந்தது. உத்தேச அரசியல் அமைப்பின் திருத்தச் சட்டம் உடனடியாகவே அரசியலமைப்பு நீதிமன்றுக்குப் பரிசீலிப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்டது. ஆவணி 2 ஆம் திகதி இந்த உத்தேசத் திருத்தத்தைப் பரிசீலித்த நீதிமன்றம், அதில் இரு பகுதிகள் அரசியலமைப்புடன் ஒத்துப் போகாமையினால் திருத்தப்பட வேண்டும் என்று திருப்பியனுப்பியது. அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பினை அமைச்சரவை ஆவணி 3 ஆம் திகதி ஆராய்ந்தது. இதன்போது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட தான் எண்ணியிருப்பதாக அமைச்சரவையில் அறிவித்தார் ஜெயார். ஆறாம் திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதற்கு முன்னர் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்க விரும்புவதாக அவர் அறிவித்தார். "ஆடி 20 ஆம் திகதி, அனைத்துக் கட்சி வட்டமேசை மாநாடு ஒன்றிற்கு நான் அழைப்பு விடுத்திருந்தேன். இக்கூட்டத்தில் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வொன்றினை எட்டுவதே எனது நோக்கம். வடக்கிலிருந்து இராணுவத்தை மீளப்பெறுதல், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்வது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது, மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது ஆகிய விடயங்களை உள்ளடக்கியதாக இந்தத் தீர்வு இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், துரதிஷ்ட்டவசமாக அனைத்து அரசியற்கட்சிகளும் இக்கூட்டத்தை புறக்கணித்ததோடு தமிழரின் பிரச்சினைக்கான தீர்வினை எட்டும் சந்தர்ப்பத்தினையும் நிராகரித்துவிட்டார்கள்" என்று கூறினார். லலித் அதுலத் முதலி அரசியலமைப்பு நீதிமன்றம் 6 ஆம் திருத்தச் சட்டத்தின் இரு பகுதிகளை மாற்றுமாறு பரிந்துரை செய்தபோதிலும் அதனை மாற்றாது அப்படியே ஏற்றுக்கொள்வது என அமைச்சரவை தீர்மானித்தது. பாராளுமன்றத்தில் தனக்கிருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பாவித்து இதனைச் சட்டமாக்க அது நினைத்தது. அதற்கேற்ப 6 ஆம் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆவணி 4 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுவதென்று முடிவுசெய்யப்பட்டது.
  10. தமிழர்களிடையே அடிபட்டுப் போன ஜெயாரின் இடதுசாரிகளின் சதி எனும் புனைவு ஜெயாரின் இடதுசாரிகளின் சதிப்புரட்சி எனும் புனைவை எவருமே நம்பத் தயாராக இருக்கவில்லை. தமிழர்கள், சிங்கள எதிர்க்கட்சிகள், வெளிநாட்டு நிருபர்கள், சர்வதேச சமூகம் மற்றும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் என்று அனைவருமே ஜெயாரின் சூழ்ச்சியை இலகுவாக அடையாளம் கண்டுகொண்டனர். பினான்சியல் டைம்ஸ் நிருபர் ஜோன் எலியட் இதுகுறித்துத் தெரிவிக்கையில், "மிகக் கொடூரமான சமாளிப்பு" என்று விவரித்திருந்தார். சென்னையில் பாதுகாப்பாகத் தங்கியிருந்த அமிர்தலிங்கம் ஜெயாருக்கு எழுதிய கடிதத்தில், "தம்மீதான தாக்குதல்களின் பின்னால் இருந்தது இடதுசாரிகள் என்பதை தமிழர்கள் சிறிதும் நம்பவில்லை. உங்கள் அரசு மீது மேற்குலகிலிருந்து வரும் அழுத்தத்தைச் சமாளித்து, அனுதாபம் தேடவே நீங்கள் இடதுசாரிப் புரட்சி குறித்து பேசுகிறீர்கள் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்" என்று எழுதினார். 1983 ஆவணி 12 ஆம் திகதி ஏசியா வீக் சஞ்சிகைக்குப் பேட்டியளித்த சிறிமா இடதுசாரிகளின் சதி எனும் ஜெயாரின் புனைவை முற்றாக நிராகரித்தார். "இது நிச்சயமாக இனரீதியிலான வன்முறைகள் தான். எவராவது இது இனவாதம் அல்ல, மாறாக வேறு ஒரு காரணத்தால் நடத்தப்பட்டது என்று கூறுவார்களாயின் அவர்கள் கனவுலகில் சஞ்சரிக்கிறார்கள் என்பதே பொருள் " என்று கூறினார். மேலும், இந்த வன்முறைகளின் பின்னால் இருந்தது ஜெயவர்த்தனவின் அரசே என்றும் அவர் கூறினார். சர்வதேச ஜூரிகளின் அமைப்பு ஜெயாரின் இடதுசாரிகளின் சதி குறித்து கருத்துத் தெரிவிக்கையில், ஜெயாரின் அரசாங்கம் கூறுவதை உறுதிப்படுத்த எதுவிதமான சாட்சியங்களும் காணப்படவில்லை என்று கூறியிருந்தது. மேலும் இத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பொறுத்தவரையில் அரசாங்கமே தம்மீதான தாக்குதலை நடத்தியதாக உறுதியாக நம்புகிறார்கள் என்றும் அந்த அமைப்பு தெரிவித்திருந்தது. அத்துடன், தம்மீது நடத்தப்பட்ட இனரீதியிலான தாக்குதல்களுக்காக மொத்த சிங்கள இனத்தையும் தமிழர்கள் பொறுப்பாளிகளாகக் கருதவில்லை என்றும் அது தெரிவித்திருந்தது. அரசியல் வன்முறைகளும் இலங்கையில் ஜனநாயகத்தின் எதிர்காலமும் என்கிற புத்தகத்தை எழுதிய பேராசிரியர் கனனாத் ஒபயசேகர கூறுகையில், "நான் சந்தித்த ஒவ்வொரு தமிழரும் தம்மீதான தாக்குதலை ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கமே நடத்தியதை உறுதியாக‌ நம்புகிறார்கள்" என்று கூறுகிறார். ஜெயாரின் இடதுசாரிகளின் சதிப் புனைவு விசாரணைகளின் முடிவு பூச்சியமாக இருந்தது. கம்மியூனிஸ்ட் கட்சி மற்றும் நவ சம சமாஜக் கட்சி தலைவர்களுக்கும் நக்சலைட் சதிக்கும் இடையே தொடர்புகள் எதனையும் கண்டுபிடிக்க முடியாமையினால் அவர்கள அனைவரையும் இரு மாதாகத்திற்குள் அரசு விடுதலை செய்திருந்தது. அக்கட்சிகள் மீதான தடையும் இருமாத காலத்தின் பின்னர் நீக்கப்பட்டது. ஜே வி பி யினருக்கெதிரான தடையினை ஜெயார் வேண்டுமென்றே நீட்டித்து வைத்திருந்ததாக லயனல் போபகே கூறுகிறார். தனது அரசாங்கத்தை மேலும் 6 வருடங்களுக்கு நீட்டிக்க ஜெயார் செய்த சர்வஜன வாக்கெடுப்பு முறைகேடுகளுக்கெதிராக ஜே வி பி யின் ரோகண‌ விஜேவீர கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தார். ஆகவே, அவரையும் அவரது கட்சியினையும் தடைசெய்வதன் மூலம் நீதிமன்ற நகர்வுகளில் ரோகண விஜேவீர கலந்துகொள்வதை ஜெயாரால் தடுக்க முடிந்தது. ஈற்றில் வழக்கைத் தாக்கல் செய்த ரோகண வழக்கிற்குச் சமூகமளிக்காததால் அது தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், ரோகண விஜேவீர வழக்கிற்குச் சமூகமளிக்க மறுப்பதால் அவரது அமைப்பு மீதான தடை நீட்டிக்கப்படுவதாகவும் அரசாங்கம் நியாயம் கற்பித்திருந்தது.
  11. அதுகும் இல்லாதவன், கொட்டாவி விடுகிறான்.
  12. தமிழர்கள் தமது இருப்பையும், மொழியையும், தாயகத்தையும், கலாசாரத்தையும் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்கிற தேவை இருக்கின்றதா என்பதே முதலாவது கேள்வியாக இருந்திருக்கவேண்டும். ஏனென்றால், அப்படியொரு தேவை இல்லையென்றால், தமிழர்கள் தமது அரசியல் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதுபற்றி அலசி தமது நேரத்தை அநியாயமக்கவேண்டிய தேவை இருப்பதாக நான் கருதவில்லை. சுமார் 35 வருடங்கள் நடைபெற்ற ஜனநாயக வழி, பாராளுமன்ற அரசியலின் தோல்வியும், அதன்பின்னரான 30 வருட ஆயுதப்போராட்டத்தின் கொடுமையான இழப்புக்களும், இன்று எவையுமே அற்று நிர்க்கதியாக்கப்பட்டிருக்கிற நிலையும், எமது தாயகம் முற்றான ராணுவ ஆக்கிரமிற்குள் உள்வாங்கப்பட்டிருக்கும் அவலமும் எம்மை எதுவித போராட்டங்களிலும் ஈடுபடுவதைத் தடுத்து வைத்திருக்கிறது என்பதே எனது நிலைப்பாடு. நாம் இன்னொரு போராட்டம்பற்றிச் சிந்திப்பதை முற்றாகவே அழித்துவிட்டிருக்கும் சிங்களப் பேரினவாதம் , தனக்கு எம்மீதிருக்கும் அதிகாரத்தைக் கேள்விகேட்கக் கூடாது என்பதில் மிகக் கவனமாகச் செயற்பட்டு வருகிறது. எனது கேள்விக்கு ஒரு சிலர் நகைப்புடன் பதிலளித்ததும், கேலிச் சித்திரம் வரைந்து கிண்டலடித்ததும் நடந்தது. ஆனால், இவர்கள் எவருக்குமே தமிழரின் அரசியல் இனிமேல் எத்திசையில் பயனிக்க வேண்டும் என்பதுபற்றிய தெளிவோ அல்லது ஆயுதப் போராட்டத்திற்கு மாற்றீடான வழிகள் என்று எதுவுமே இவர்களிடத்தில் இல்லை. குறைந்தது, எனது கருத்திற்கு நேரடியான பதிலையோ அல்லது விமர்சனத்தையோ முன்வைக்கும் பண்புகூடக் கிடையாது. அவர்களை விட்டு விடலாம், ஏனென்றால் இவர்கள் எக்காலத்திலும் தமிழர் போராட்டத்தில் தம்மை செயற்திறனுடன் ஈடுபடுத்திக் கொண்டது கிடையாது, இனிமேலும் அப்படித்தான் இருக்கும் என்பதிலும் ஐயமில்லை. ஆக, நாம் இன்று செய்யக்கூடியது இதுதான், இன்று ஒரு சிலர் தன்னெழுச்சியாக நடத்திவரும் போராட்டங்களின் மேல் எமது இருப்பைச் சுமத்திவிட்டு நாம் ஒரு இனமாக ஓய்வெடுக்கலாம். அல்லது, அவர்களையும் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓய்வெடுக்குமாறு நாம் கேட்கலாம். அப்படி எதுவுமே தேவையில்லை அல்லது சாத்தியமில்லையென்றால், நாம் எமது அடையாளங்களைத் திறக்கலாம். இனத்திலிருந்து ஆரம்பித்து, மொழி, மதம் என்று அனைத்திலும் சிங்களத்தின் இன்னொரு பகுதியாக விருப்புடன் உள்வாங்கப்படலாம். நேற்று நீர்கொழும்பு, புத்தளம், சிலாபம் போன்ற பகுதிகளில் தமிழர்களாக இருந்து அடையாளம் திறந்து சிங்களவர்களாக மாறியிருக்கும் அவர்களைப் போன்று இன்று மீதமாயிருக்கும் வடக்குக் கிழக்கின் தமிழர்களும் மாறிப்போகலாம். அதன்பின்னர், இனக்கொலை என்றோ, போர்க்குற்றம் என்றோ, தாயக விடுதலை என்றோ எவரும் பேசவேண்டிய தேவை இருக்காது. உண்மை. ஆனால், இது செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது. எமது இளைய சமுதாயம் விடுதலைக்கான பாதையில் சிந்திப்பதையோ அல்லது செயற்படுவதையோ முற்றாகத் தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இதன் பின்னாலிருப்பதே எம்மை எக்காலத்திற்கும் ஆக்கிரமித்து எமது இருப்பை சிறுகச் சிறுக அழிக்க கங்கணம் கட்டியிருக்கும் சிங்கள பெளத்த பேரினவாதம் தான். ஆகவே, எமது மாற்றம் என்பது இதனை அடையாளம் கண்டு அங்கிருந்து எமது செயற்பாட்டினை ஆரம்பிப்பதுதான். வெறுமனே மக்கள் சலித்துவிட்டர்கள் என்றோ, இளைய சமுதாயம் வேறு திசையில் பயணிக்கிறது என்றோ நாம் இருந்துவிட்டால் எதுவுமே மாறப்போவது கிடையாது.
  13. இந்தியாவுக்குப் பாடம்புகட்ட வெளிநாடுகளில் ஆயுதம் வாங்க முனைந்த ஜெயார் ஜூலை 31, ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த சண்டே ஐலண்ட் பத்திரிக்கையில், வெளிநாட்டுச் சக்தியொன்றிடமிருந்து தனக்கு வரவிருக்கும் இராணுவ அழுத்த‌த்தைச் சமாளிக்க இலங்கை அமெரிக்கா, இங்கிலாந்து, பாக்கிஸ்த்தான், வங்காளதேசம் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ள முயன்றுவருவதாகச் செய்தி வெளியிட்டிருந்தது. மிகார எனும் புனைபெயரில் எழுதிவந்த ரணதுங்க, இலங்கைக்குச் சவாலாக இருக்கும் அந்த வெளிநாட்டுச் சக்தி "இந்தியா" தான் என்று எழுதியிருந்தார். கொழும்பில் தங்கியிருந்த இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை, இந்தியாவுக்கெதிரான நாடுகளிலிருந்து ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ள முனையும் செய்தியை அடிப்படையாக வைத்து அறிக்கைகளை இந்தியாவுக்கு அனுப்பியிருந்தார்கள். மேலும், ஜெயவர்த்தனவின் அமைச்சரவையில் இருக்கும் முக்கிய அமைச்சர்கள் இந்திராவின் தொலைபேசி அழைப்பையும், ராவின் திடீர் விஜயத்தையும் தேவையற்ற தலையீடாகப் பார்ப்பதாகவும் அவர்கள் கூறியிருந்தார்கள். இந்தச் செய்தி இந்தியாவுக்குத் தலையிடியாய் மாறியது. இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் தாம் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக உணர்ந்தார்கள். இந்திரா காந்தி கடும் சினம்கொண்டார். சிலகாலமாகவே அமெரிக்கா நோக்கிச் சாயும் ஜெயவர்த்தனவின் நடவடிக்கைகள் அவருக்கு எரிச்சலைக் கொடுத்துக்கொண்டிருந்தன. ஆகவே, இந்தியாவின் நலன்களை மீறி ஜெயார் செயற்பட முடியாதென்பதை அவருக்கு உணர்த்தவேண்டும் என்று திடசங்கற்பம் பூண்டார். இதற்கான அடித்தளத்தை உருவாக்க இந்திரா எண்ணினார். அதன்படி இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையினைத் தீர்த்துவைக்க இந்தியாவுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்றும் இந்தியாவைத் தாண்டி எந்தவொரு வெளிச்சக்தியும் இவ்விவகாரத்தில் இலங்கையில் தலையீடு செய்ய முடியாது என்றும் அவர் கூறினார். இந்தியாவுக்கு பகைமையான நாடுகள் என்று இந்தியா கருதிய சில நாடுகளிலிருந்து இலங்கை ஆயுதங்களைத் தருவிப்பதைத் தடுப்பதற்கு இந்திராவின் அறிவுருத்தல்களின் பெயரில் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகம் இரு விடயங்களைச் செய்தது. முதலாவது, ராவின் வருகையின் இலங்கை உதாசீனம் செய்யும் பட்சத்தில் இலங்கைக்கெதிரான இராணுவ நடவடிக்கை ஒன்றினை இந்தியா ஆரம்பிக்கும் எனும் வதந்தியை வேண்டுமென்றே ஊடகங்கள் ஊடாகக் கசியவிடுவது. இரண்டாவது, ஜெயவர்த்தன ஆயுதங்கள் வாங்க எண்ணியிருக்கும் நாடுகள் அடங்கலாக அனைத்து சர்வதேச நாடுகளையும் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கவேண்டாம் என்று கோருவது. வெளிவிவகார அமைச்சர் ‍ ஹமீத் நான் முன்னர் குறிப்பிட்டது போல, ஜெயவர்த்தனவைக் கையாள இந்தியா இரு முனைகளைப் பாவிக்க எண்ணியிருந்தது. முதலாவது இராணுவ நடவடிக்கை. இரண்டாவது இராஜதந்திர ரீதியிலான நெருக்குவாரம். இராஜதந்திர ரீதியிலான இந்தியாவின் அணுகுமுறை, ராவை இலங்கைக்கு அனுப்பி, தமிழர்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவது. ராணுவ அணுகுமுறை என்பது பரா இராணுவத்தினரைத் தரையிறக்கி, விமான நிலையங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதன் மூலம் இலங்கையில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்ட ஜெயவர்த்தனவுக்கு அழுத்தம் கொடுப்பது. ஜெயவர்த்தனவும் அவரது அமைச்சரவை மற்றும் இராணுவத் தலைமைப்பீடத்தினர் போன்றோரும் இந்தியாவின் இராணுவத் திட்டம் குறித்து அறிந்தே இருந்தனர். இந்தியாவின் இராணுவக் கலூரியில் பயிற்சிகளை மேற்கொண்டிருந்த இலங்கை ராணுவத்தின் மேஜர் ஜெனரல் நளின் செனிவிரட்ன இவ்விடயம் தொடர்பாக இந்தியாவில் பேசப்பட்டதை அறிந்தவுடன் உடனடியாக அதனை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஹமீதிடம் அறியத் தந்தார். அக்காலத்தில் தென்னாசிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் சார்க் மாநாடு இந்தியாவின் தலைநகர் தில்லியில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. இந்த மாநாட்டிற்கு ஹமீதை அனுப்பிய ஜெயவர்த்தன, இலங்கையை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் உத்தேச இராணுவ நடவடிக்கை குறித்து தெளிவுபடுத்த இந்திராவுடன் பேசுமாறு கோரினார். ஆவணி 1 ஆம் திகதி இந்திராவைச் சந்தித்த ஹமீத் இதுகுறித்துக் கேட்டார். இதற்குப் பதிலளித்த இந்திரா இலங்கையில் நடக்கும் சம்பவங்கள் இந்தியாவைக் கவலை கொள்ள வைத்திருப்பதாகக் கூறியதுடன் , இலங்கையினை ஆக்கிரமிக்கும் நோக்கம் தனக்கு இல்லையென்றும் உறுதியளித்தார். இந்திராவின் இந்த உறுதியளித்தலை உடனடியாக ஜெயாருக்கு அறிவித்தார் ஹமீத். ராவ் தனக்கு பரிந்துரைத்ததன்படி தமிழ் அகதிகள் பிரச்சினையினைக் கையாள இலங்கைக்கு உதவ இந்திரா முடிவெடுத்தார். ஆவணி 2 ஆம் திகதி லோக்சபாவில் பேசிய இந்திரா இந்த உதவிகள் குறித்துப் பேசினார். அப்பேச்சின்போது இலங்கையின் பிரதேச ஒருமைப்பாட்டினை இந்தியா முழுமையாக மதித்து ஏற்றுக்கொள்கிறதென்று கூறியதுடன் இலங்கைக்கான மனிதாபிமான உடவிகளைச் செய்ய இந்தியா விரும்புகிறதென்றும் கூறினார். தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே தமிழ் அகதிகள் பிரச்சினையும் ஆரம்பித்துவிட்டது. கொழும்பில் மட்டும் 14 அகதி முகாம்கள் உருவாக்கப்பட்டன. திங்கட்கிழமை இரவிற்குள் சுமார் 20,000 அகதிகள் இந்த முகாம்களில் அடைக்கலம் தேடியிருந்தனர். நாடு முழுவதற்கும் வன்முறைகள் பரவியபோது மேலும் பல அகதி முகாம்கள் உருவாக்கப்பட்டன. ஆரம்பத்தில் இந்த அகதிமுகாம்களை யார் பொறுப்பெடுப்பது எனும் பிரச்சினை உருவாகியது. இதனையடுத்து வெள்ளியன்று அத்தியாவசிய சேவைகளுக்கான ஆணையாளரான பிரட்மன் வீரக்கோனை அகதிமுகாம்களுக்கான நிவாரண வழங்கலை கண்காணிக்குமாறு ஜெயவர்த்தன பணித்தார். அகதி முகாம்களில் அடைக்கலமாகியிருந்த தமிழ் அகதிகளை அவர்களின் தாயகமான இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளை பிரட்மன் வீரக்கோன் மேற்கொண்டார். ஆரம்பத்தில் கப்பல்கள் மூலமாகவும், பின்னர் புகையிரதங்கள் ஊடாகவும் தமிழ் மக்கள் தமது தாயகம் நோக்கி அனுப்பிவைக்கப்பட்டார்கள். தமிழர்களுக்கெதிரான சிங்களவர்களின் வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது வார இறுதியில் சுமார் 300,000 தமிழர்கள் இடம்பெயரச் செய்யப்பட்டனர். கொழும்பு துறைமுகத்தில் தாயகம் நோக்கிச் செல்ல கப்பலுக்காகக் காத்திருக்கும் தமிழ் அகதிகள், ஆவணி 1983 பெருந்தோட்டங்களில் வாழ்ந்துவந்த தமிழர்களும், கொழும்பில் நிரந்தரமாக வாழ்ந்துவந்த தமிழர்களும் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்தனர். இவர்களுள் சிலர் வடமாகாணத்திற்கு அவர்களின் உறவினர்களுடன் தங்குவதற்காக அனுப்பிவைக்கப்பட்டனர். ஏனையவர்கள் அகதிமுகாம்களிலேயே பல மாதங்கள் வாழவேண்டியதாயிற்று. தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் நாடுமுழுதிலும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை வெறும் 350 மட்டுமே என்று கூறிய அரசு, தமிழர்களுக்குச் சொந்தமான 18,000 வீடுகளும் வியாபார நிலையங்களும் அழிக்கப்பட்டதாகவும், சுமார் 100,000 தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டதாகவும் கூறியது. சுயாதீனமான தரவுகளின்படி கொல்லப்பட்ட தமிழர்களின் உண்மையான எண்ணிக்கை இதனைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் என்று கூறின. தற்போது குறைந்தது 2,500 தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் என்கிற ரீதியில் இலங்கைக்குத் ராவ் மேற்கொண்டிருந்த விஜயம் தொடர்பாக அவரையே பாராளுமன்றத்தில் உரையாற்றுமாறு பணித்த இந்திரா, இலங்கை இந்தியாவைத் தவிர்த்து வெளிநாடுகளில் ஆயுதங்களை கொள்வனவு செய்ய முயல்வது குறித்த விபரங்களையும் அச்சபையில் தெரிவிக்குமாறு கோரினார். பாராளுமன்றத்தில் ராவ் ஆற்றிய உரை இருபகுதிகளைக் கொண்டிருந்தது. முதலாவது பகுதி இலங்கையில் இருந்த இந்தியர்களின் சொத்துக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்புக் குறித்த கரிசணை பற்றி விளக்கியது. பின்னர் அவர் பேசும்போது, "இந்தியர்களின் சொத்துக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மற்றும் அவர்களின் பாதுகாப்புக் குறித்த கவலைகளுக்கப்பால், இந்தியாவைப் பூர்வீமகாகக் கொண்ட பலர் கொல்லப்பட்டிருப்பது குறித்த, குறிப்பாக நாடற்றவர்களாக்கப்பட்டுள்ள பல இந்திய உறவுகள் குறித்த ஒட்டுமொத்த இந்தியாவின் கவலையும் எமக்கிருக்கிறது. இது ஒரு மனிதாபிமான பிரச்சினை. குடியுரிமையினால், நாடுகளின் எல்லைகளால் பிரிக்கப்பட்டிருந்தாலும் எமக்கு மிக அருகில் இருக்கும் நெருங்கிய கலாசார பிணைப்புடைய அயலவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சொல்லொணாத் துயரங்கள் குறித்து இந்தியா பேசாமலிருக்க முடியாது" என்று கூறிய ராவ், . மேலும், கொழும்பில் இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில் வாழ்ந்துவந்த தமிழர்களை அவர்களின் தாயகமான வடக்குக் கிழக்கிற்கு அனுப்பிவைப்பதற்கான கப்பல்களை வழங்குமாறும், அகதி முகாம்களில் இருக்கும் தமிழ் மக்களுக்கான எரிபொருள், மருந்துவகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான உதவிகளையும் வழங்குமாறு இலங்கை அரசு இந்தியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறினார். இந்தியக் கப்பல் ஒன்றில் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்படும் தமிழ் அகதிகள் ‍ ஆவணி 1983 இலங்கை கேட்டுக்கொண்டதற்கமைய இந்தியா எரிபொருள், மருந்துவகை, உடைகள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் என்பவற்றை இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்தது. தமிழ் அகதிகளை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்ல கப்பல்களையும் வழங்கியது. தனது பேச்சின் இரண்டாவது பாகத்தில் இலங்கையரசாங்கம் அமெரிக்கா, இங்கிலாந்து, பாக்கிஸ்த்தான், சீனா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயன்றுவருகிறது என்கிற செய்தியை முன்வைத்தார். தனது விஜயத்தின் பின்னரே இந்த ஆயுதக் கொளவனவு முயற்சியில் இலங்கையரசு இறங்கியிருக்கிறது என்றும் கூறினார். இதுகுறித்த மேலதிகத் தகவல்களை தன்னால் வழங்கமுடியாது என்று கூறிய ராவ், பாராளுமன்றமும் நாட்டு மக்களும் இதுகுறித்து அறிந்திருப்பது அவசியம் என்றும் கூறினார். மேலும், வெளிநாட்டுச் சக்தியொன்று தமது நாட்டின் உள்விவகாரங்களில் தேவையற்ற விதத்தில் செல்வாக்குச் செலுத்த நினைப்பதாலேயே இலங்கை வெளிநாடுகளிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயல்கிறதென்றும், அந்த வெளிநாட்டுச் சக்தி இந்தியாவே என்று இலங்கை அரசு கூறியிருப்பதாகவும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் கீழ்ச்சபையில் பேசிய ராவ், இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி, இலங்கை ஆயுதக் கொள்வனவில் ஈடுபடப்போவதாகக் குறிப்பிடும் நாடுகளுடன் இந்தியா தொடர்புகொண்டு தனது கரிசணையினை வெளியிட்டிருப்பதுடன், இலங்கையில் நிலவும் சூழ்நிலை தொடர்பாகவும் அந்நாடுகளுக்கு விளக்கமளித்திருக்கிறது. நிலைமைகளின் ஏற்படப்போகும் மாற்றங்களையடுத்து வெளிநாட்டுத் தலையீடுகள் இப்பிராந்தியத்தில் ஏற்பட வாய்ப்பிருப்பதாக இந்தியா கருதுகிறது என்றும் கூறினார். அதன் பின்னர் பேசிய ராவ், எச்சக்தியாக இருந்தாலும் இலங்கை விவகாரத்தில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று எச்சரிக்கையினையும் விடுத்தார். இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடுவதாக சர்வதேசம் கருதக் கூடாது என்றும் கூறினார். இந்தியாவின் தவிர்க்கமுடியாத அயல்நாடாக இலங்கை இருப்பதால் இலங்கையில் நடைபெறும் விடயங்கள் இந்தியாவில் பல பின்விளைவுகளை ஏற்படுத்துவதைத் தவிர்க்கமுடியாது இருக்கிறது என்றும் கூறினார். இந்தியாவின் தேசிய பாதுகாப்பிலும், நலனிலும் இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் தாக்கம் செலுத்துவதால், அவைகுறித்து இந்தியா வாளாவிருக்க முடியாது என்றும் ராவ் கூறினார். "எம்முடன் பேசிய இலங்கை அதிகாரிகள் எமக்குச் சார்பாகவே பேசினார்கள். இலங்கை தனக்குத் தேவையான உதவிகளை இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். அது இரு அரசாங்கங்களுக்கும் இடையே பரஸ்பர ரீதியில் இலகுவாகச் செய்துகொள்ளக்கூடிய ஒரு விடயமாகும்" என்று கூறினார். இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சு நடத்திய விசாரணைகளின்போது இலங்கையரசாங்கம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயன்று வருவது உண்மையென்று உறுதிப்படுத்தப்பட்டது. ஆகவே, இலங்கையின் இந்த வெளிநாட்டு ஆயுதக் கொள்வனவு முயற்சியை இந்திய வெளிவிவகாரத்துறை தடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கியது. சர்வதேசமெங்கும் வியாப்பித்திருந்த இந்தியா இராஜதந்திர வலையமைப்பு இந்தப் பணிக்காக முடுக்கிவிடப்பட்டது. சர்வதேச நாடுகளில் இந்தியாவின் தூதர்களாக பணிபுரிந்தவர்களை வெளிநாட்டுவிவகார அமைச்சகத்திற்கு அழைத்துப் பேசிய அதிகாரிகள், ராவ் எழுதிய "இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டாம்" என்கிற சாராம்சத்துடனான கடிதங்களை தத்தமது நாடுகளுக்கு எடுத்துச் சென்று வழங்குமாறு கோரினார்கள்.
  14. கொழும்பிற்கு வந்த புலிகளும், பொலீஸ் நிலையங்களுக்குள் பதுங்கியிருந்த பொலீஸாரும் வெள்ளியன்று ராவ் உலங்குவானூர்தியொன்றில் கண்டிக்குச் சென்றார். இந்திய தூதரகத்திலிருந்து விமானப்படை முகாமிற்கு அவர் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது வீதியில் அச்சத்துடன் நடமாடிய மக்களை அவர் கண்டார். உலங்குவானூர்தியிலிருந்து கொழும்புப் பகுதியில் தமிழர்கள் வீதிகளில் கொல்லப்பட்டு எரிக்கப்படுவதையும், அவர்களது சொத்துக்கள் சூறையாடப்படுவதையும் அவரால் பார்க்க முடிந்தது. வெள்ளிக்கிழமை கொழும்பில் புலிகள் தாக்கப்போவதாக வந்த வதந்திகளையடுத்து காலை 9 மணியிலிருந்து மக்கள் அச்சத்துடன் ஓடிக்கொண்டிருந்தார்கள். வீதிகள் வாகன நெரிசலால் ஸ்த்தம்பித்துப் போயிருக்க, வாகனச் சாரதிகள் தமது வாகனங்களின் ஹோர்ன்களை அழுத்திக்கொண்டிருந்தார்கள். எல்லோரிடமும் அச்சமும், பதற்றமும் குடிகொண்டிருந்தது. புலிகள் கொழும்பிற்கு வந்துவிட்டார்கள் என்பதே அனைவரினதும் பேச்சாகவிருந்தது. கலவரம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது அமைதியாகக் கிடந்த பொலீஸாரின் வானொலி வலையமைப்பு மறுபடியும் சுறுறுப்பாக இயங்கத் தொடங்கியது. "புறக்கோட்டையிலிருந்து பொலீஸ் ரோந்து அணி கட்டுப்பாட்டு நிலையத்தினை அழைக்கிறது" "கூறுங்கள் புறக்கோட்டை ரோந்து அணி" என்று கட்டுப்பாட்டு நிலையம் (Police radio network) பதிலளித்தது. "புறக்கோட்டைப் பகுதியில் பதற்றம் அதிகரித்து வருகிறது. புலிகள் எல்லாப் பகுதிகளிலும் பதுங்கியிருந்து சிங்களவரைத் தாக்க ஆயத்தமாகி வருவதாக வதந்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. எம்மிடம் பேசிய பொதுமகன் ஒருவர் நீல நிறத்தில் சீருடை அணிந்த பல புலிகள் வீரா விடுதியில் நிற்பதைத் தான் கண்டதாகக் கூறினார். நாங்கள் அவ்விடம் நோக்கிச் செல்கிறோம்" என்று பொலீஸ் ரோந்து அணி கூறியது. அந்த நாள் நிலவிய குழப்பத்தினையும் பதற்றத்தினையும் உதவிப் பொலீஸ் மா அதிபர் எட்வேர்ட் குணவர்த்தன தனது புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார், "சிறிது சிறிதாக வதந்தி எல்லாவிடங்களிலும் பரவத் தொடங்கியது. மக்கள் எல்லாத் திசைகளிலும் ஓடத் தொடங்கினர். "புலிகள் ,கொழும்பிற்கு வந்துவிட்டார்கள், அவர்கள்இராணுவத்தினரைத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள், இங்கிருந்து தப்பியோடுவோம்" என்று பலரும் பேசிக்கொண்டிருந்தார்கள். கடை உரிமையாளர்கள் அவசர அவசரமாக தமது கடைகளை இழுத்துச் சாத்திக்கொண்டிருந்தார்கள். பஸ்கள் , லொறிகள், கார்கள் என்று அனைத்து வாகனங்களும் புறக்கோட்டைப் பகுதியிலிருந்து முண்டியடித்து வெளியேறிக்கொண்டிருந்தன. நகரப்பகுதிக்கு வந்த இராணுவக் கவச வாகனங்கள் ஆங்காங்கே நிலையெடுத்து நிற்கத் தொடங்கின. தமிழர்களுக்குச் சொந்தமான வியாபார நிலையங்கள் என்று தாம் கருதிய இடங்கள் மீது இராணுவத்தினர் தாம் கொண்டுவந்த ரவைகள் தீரும்வரை சுட்டுக்கொண்டிருந்தனர். தமிழர்களின் கடைகள் எல்லாமே புலிகளின் மறைவிடங்களாக ராணுவத்தால் கருதப்பட்டு அவற்றின்மீது கண்மூடித்தனமாக துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டது. நகரப்பகுதியில் கேட்ட தானியங்கித் துப்பாக்கிகளின் ஒலி அப்பகுதியெங்கும் மீண்டும் மீண்டும் எதிரொலித்துக்கொண்டிருந்தது. விமானப்படைக்குச் சொந்தமான இரு உலங்குவானூர்திகள் தமிழர்களின் வியாபார நிலையங்கள் மீது தொடர்ச்சியான துப்பாக்கித் தாக்குதல்களை மேற்கொண்டதுடன் குண்டுவீச்சிலும் ஈடுபட்டன. ஏற்கனவே எரிந்துகொண்டிருந்த கட்டடங்களுக்கு அண்மையாக தாழ்வாகப் பறந்து அவை தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியெங்கும் புகைமண்டலமாகக் காணப்பட்டது. இது மக்களிடையே மிகுந்த குழப்பத்தினையும் அச்சத்தினையும் ஒருங்கே ஏற்படுத்தியிருந்தது. ராணுவத்தினரால் ஏற்படுத்தப்பட்ட இந்தப் பதற்றமான சூழ்நிலை சிங்களக் காடையர்கள் மீள் ஒருங்கிணையவும், வன்முறைகளில் ஈடுபடவும் உகந்த சூழ்நிலையினை ஏற்படுத்திக் கொடுத்தது. செட்டியார்த்தெருவிலிருந்த தமிழரின் வியாபார நிலையங்கள் நோக்கி வந்த காடையர் குழுவை இராணுவம் அப்பகுதியிலிருந்து விரட்டியது. டாம் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல லொறிகளை அக்கும்பல் எரியூட்டியது. அப்பகுதியில் தமிழ் வியாபார நிலையங்களுக்கு முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்களை புரட்டிப் போட்ட அக்கும்பல் அவற்றிற்கு தீவைத்தது. தமிழர்களால் நடத்தப்பட்டு வந்த "சிட்டி மிஷன்" எனும் தங்கும் விடுதியும் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தது. அவ்விடுதியின் அருகில் சணல் நூற்ச் சாக்குகள் மற்றும் உரப்பைகளை சேமித்து வைக்கும் பாரிய சேமிப்பு நிலையத்திற்கு தீ பரவவே அது சுவாலை விட்டு எரியத் தொடங்கியது. அக்கட்டடத்திலிருந்து எழுந்த‌ கரும்புகை பல கிலோமீட்டர்கள் தூரத்திற்குத் தெரிந்தது. பீடிகளை மொத்த வியாபாரமாகச் செய்துவந்த தமிழரான சங்கரசிவம் கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டதுடன், அவரது காரினுள் வைத்தே எரிக்கப்பட்டார். அவரது சிங்கள வாகனச் சாரதியை அக்காடையர் குழு எதுவும் செய்யாமல் விட்டுவிட்டது. அப்பகுதியில் வியாபாரங்களில் ஈடுபட்ட பல தமிழர்கள் பொலீஸாரின் ட்ரக் வண்டிகளிலும், பஸ்வண்டிகளிலும் ஏற்றப்பட்டு அகதி முகாம்களுக்கு அனுப்பப்பட்டு வந்தனர். புறக்கோட்டைக்கு அண்மையாக அமைந்திருந்த கிராண்ட்பாஸ் பகுதியில் தமிழர்களை சிங்களவர்கள் வாட்களால் வெட்டிக் கொல்லத் தொடங்கியிருந்தார்கள். அப்பகுதியில் இயங்கிவந்த பிரபல பலசரக்குக் கடையின் உரிமையாளரான திருப்பதி முதலாளி சிங்களவர்களால் கூட்டாக வாட்களாலும் கோடரிகளாலும் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரின் மோதிரங்களைத் திருடுவதற்காக அவரது விரல்களை அக்கும்பல் வெட்டி எடுத்திருந்தது. பேலியகொடைப் பகுதியில் அமைந்திருந்த பாற்பண்ணைப் பொருட்களை விற்கும் தமிழரின் உணவு விடுதியான அம்பாள் விடுதி முற்றாக எரிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் பிற்பகுதியில் வளர்க்கப்பட்டு வந்த பால்மாடுகள் இழுத்துச் செல்லப்பட்டு இறைச்சிக்காகக் கொல்லப்பட்டன. அப்பகுதியில் இயங்கிவந்த தமிழருக்குச் சொந்தமான‌ சினிமாத் திரையரங்குகளை அப்பகுதி வாழ் சிங்களவர்களுடன் காடையர்கள் சேர்ந்து எரித்தனர். காலை 11 மணியளவில் கொழும்பு நகர் மட்டுமல்லாமல் அதனைச் சுற்றியிருந்த பகுதிகளிலும் பாரிய குழப்பம் நிலவியது. புலிகள் பெரும் எண்ணிக்கையில் நகரினுள் ஊடுருவி விட்டதாக எண்ணிய பொலீஸார் தமது வீதிக் கடமைகளைக் கைவிட்டு விட்டு நேரே தமது பொலீஸ் நிலையங்களுக்கு ஓடிவிட்டனர். நகரிலிருந்து தப்பியோட எத்தனித்த வாகனங்களையும், பாதசாரிகளையும் வீதி ஒழுங்குகளுக்கு அமைய வழிநடத்த பொலீஸார் இன்றி எங்கும் பாரிய சனநெரிசலும், வாகன‌ நெரிசலும் காணப்பட்டது. வீதிகள் எங்கும் சனநெரிசலாகக் காணப்பட்டதுடன், பதற்றமும் தெரிந்தது. பெண்களும், சிறுவர் சிறுமியரும் கைகளில் தலையணைகளையும்,பைகளையும், சூட்கேஸுகளையும் எடுத்துக்கொண்டு வீதிகள் வழியே ஓடிக்கொண்டிருந்தனர். உயிரைக் காப்பாற்ற ஓடிக்கொண்டிருந்த அப்பாவிகளுடன் சேர்ந்து திருடர்களும் கைகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள், டெக்குகள், வானொலிப் பெட்டிகள் போன்றவற்றைக் காவிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தனர். இக்குழப்பமான சூழ்நிலையும் சனநெரிசலும் தங்குதடையற்ற சூறையாடல்களையும், உடமை எரிப்புக்களையும் ஊக்குவித்திருந்தது. இதற்கு மேலதிகமாக, பொலீஸ் தலைமையகத்திலிருந்து அனைத்துப் பொலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்ட செய்தியான, "உங்களின் பொலீஸ் நிலையங்களைப் பாதுகாக்க எதிர்த்துச் சண்டையிடுங்கள்" என்கிற செய்தியும் பொலீஸாரிடையே குழப்பத்தையும், பீதியினையும் ஏற்படுத்தி விட்டிருந்தது. "பொலீஸ் நிலையங்கள் புலிகளால் தாக்கப்பட்டுக் கைப்பற்றப்படும் நிலை காணப்படுகிறது" என்கிற பொலீஸ் செய்தியை பதற்றமடைந்திருந்த பொலீஸ் அதிகாரியொருவர் பொலீஸாரின் பிரதான செய்தி வலையமைப்பில் பரவ விடவே பொலீஸாரிடயே கடுமையான அச்சம் நிலவத் தொடங்கியது. வீதிகளில் துணிவுடன் கடமையிலிருந்த ஒரு சில பொலீஸ்காரர்களும் இச்செய்தியைக் கேள்விப்பட்டபோது எல்லாவற்றையும் விட்டு விட்டு தமது நிலையங்களுக்குத் திரும்பியிருந்தனர். வீதி ரோந்து அணிகளும் பொலீஸ் நிலையங்களுக்குள் முடங்கிக்கொண்டன. கொள்ளுப்பிட்டி பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரியொருவர் நிலையத்தின் முன்னால் இருந்த அலங்காரக் கற்களினால் கட்டப்பட்ட சுவரில் தனது .303 துப்பாக்கியின் பின்புறத்தால் இடித்து ஓட்டைகளை உருவாக்கினார். அவற்றினூடாக முன்னேறி வரும் புலிகள் மீது இயந்திரத் துப்பாக்கிகளால் தாக்குவதே அவ‌ரது திட்டம். கொழும்பிலிருந்த அனைத்துப் பொலீஸ் நிலையங்களும் தமது பிரதான நுழைவாயிலை அடைத்தன. மேலும், பொலீஸ் நிலையங்களைச் சுற்றி பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு பொலீஸார் நிலையெடுத்துக் காத்திருந்தனர். தெகிவளைப் பொலீஸ் நிலையம் ஹில் வீதியின் இரு எல்லைகளையும் முற்றாகவே அடைத்துவிட்டிருந்தது. தெகிவளை சுற்றுவட்டத்திலிருந்து ஹில் வீதிக்கான நுழைவுவழி இரும்புக் கதவுகளால் அடைக்கப்பட்டதுடன், அப்பகுதியில் பொலீஸார் வீதியில் படுத்திருந்து முன்னேறி வரும் புலிகளுக்காகக் காத்திருந்தனர். விரல் விட்டு எண்ணக்கூடிய சில பொலீஸ் அதிகாரிகளே துணிவாக வீதிகளில் வலம் வந்தனர். அல்பா 2 மற்றும் கொழும்பு வடக்குப் பிரிவு 2 ஆகிய அணிகளின் பொலீஸ் அதிகாரிகள் வீதிகளில் வலம்வந்து கொண்டிருந்ததுடன் பொலீஸ் ரேடியோச் செய்தி வலையமைப்பில் உச்சஸ்த்தானியில் கட்டளைகளை வழங்கிக்கொண்டிருந்தனர். "அல்பா 2 பேசுகிறேன், அல்பா 2 பேசுகிறேன். நான் காஸ்வேர்க்ஸ் வீதியின் சுற்றுவட்டத்தினருகில் நிற்கிறேன். பயப்பட வேண்டும், வீதிக்கு வாருங்கள். நான் வெளியிலேயே நிற்கிறேன். இங்கே புலிகள் எவரும் இல்லை. துப்பாக்கிச் சண்டைகள் ஏதும் நடைபெறவில்லை". "கோழைகளே, பதுங்கியிருந்தது போதும், வெளியே வாருங்கள்" என்று ஆத்திரத்துடம் ரேடியோவில் பேசிக்கொண்டிருந்தார். அவரின் கட்டளையைக் கேட்டு சில பொலீஸார் வீதிகளில் எட்டிப் பார்க்கத் தொடங்கினர். சுற்றுப்புறங்களில் இருந்து கொழும்பு கோட்டைப் பகுதி மற்றும் பெட்டா நோக்கி ஓடிக்கொண்டிருந்த மக்களில் தமிழர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன் அவர்களின் உடமைகளும் சிங்களவர்களால் சூறையாடப்பட்டன. அவர்கள் பயணம் செய்துவந்த வாகனங்கள் வீதிகளில் நிறுத்தப்பட்டு எரிக்கப்பட்டன. ஆனால், வன்முறைகளில் ஈடுபட்ட சிங்களவர்களின் எண்ணிக்கை முன்னைய இரு நாட்களுடன் ஒப்பிடும்பொழுது சற்றுக் குறைவாகவே காணப்பட்டது. திங்கட்கிழமை நடைபெற்ற சில நிகழ்வுகளையடுத்து பெரும்பாலான வன்முறைக் கும்பல்கள் அடங்கிப்போயிருந்தன. சிங்களத்தைச் சரளமாகப் பேச முடியாத முஸ்லீம்களும், சில சிங்களவர்களும் வன்முறைக் கும்பல்களால் தாக்கப்பட்டனர். புலிகள் கொழும்பிற்கு வந்திறங்கிவிட்டார்கள் என்கிற செய்தியின் தாக்கம் எப்படியிருந்ததென்றால், கொழும்பின் புறநகர்ப்பகுதிகளிலும் சிங்களவர்கள் வாட்கள், கோடரிகள், இரும்புக் குழாய்கள், மண்வெட்டிகள் போன்ற ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வீடுகளின் முன்னால் புலிகளை எதிர்பார்த்துக் காவலிருக்கத் தொடங்கியிருந்தார்கள்.
  15. தலைப்பிலேயே எழுத்துப்பிழை இருக்கின்றது! 🤪 காணோளி - தவறு காணொளி, காணொலி - இன்னதில் எது சரியாகும்? `காணொளி` என்பதுதான் சரியானது. அச் சொல்லே நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டும் வந்துள்ளது. அண்மையில்தான் `காணொலி` என மிகைத் திருத்தம் செய்துள்ளார்கள். `Video` என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச் சொல்லாகவே `காணொளி` என்ற சொல்லாக்கம் செய்யப்பட்டது. `Video` என்ற சொல்லின் வேர்ச்சொல்லும் காண் (videre > see ) என்ற பொருளிலேயே வந்துள்ளது. பின்னர் இச் சொல்லிருந்தே பல ஆங்கிலச் சொற்கள் உருவாகின. அந்த வகையில் காணொளி எனச் சரியாகவே எழுதி வந்த எம்மைச் சிலர் Video இல் காண்பதுடன் கேட்கவும் செய்கின்றோமே என்று சொல்லி, `காணொலி`என மிகைத் திருத்தம் செய்துவிட்டார்கள். இதற்கு இவர்கள் `வானொலி` என்ற எடுத்துக்காட்டினைக் காட்டுவார்கள். வானிலிருந்து வந்த ஒலி என்ற வகையிலும், அதில் கேட்டலே முதன்மை என்பதாலும் அச் சொல் சரியானதே. இங்கு காணொளியில் காட்சியே முதன்மையானது. தமிழில் இரு சொற்கள் சேரும் போது இரண்டாவது சொல்லின் பொருளே முதன்மை பெறும் (எ.கா = பேருந்து ). இதற்கமைய `காணொலி` என்றால் அங்கு ஒலியே முதன்மையாகிவிடுமல்லவா! அது தவறு. காட்சியே முதன்மை. எனவே காணொளி தான் சரியானது. தமிழில் `எல்லாச் சொற்களும் பொருள் குறித்தனவே` என்கின்றது தொல்காப்பியம். அந்த விதிக்கமையச் சொல்லாக்கினால்; ஒளியினைத் தான் காண முடியும், காணும் ஒளி (காண் + ஒளி = காணொளி) என்ற பொருளில் காணொளி என்பதே சரியாகும். "காண் ஒளி என்பது கண்ட ஒளி, காண்கின்ற ஒளி, காணும் ஒளி என்று வினைத்தொகையாய் அமைந்து தெளிந்த பொருள் தருகிறது" என்பார் கவிஞர் மகுடேசுவரன். "காண்+ஒலி=காண்கின்ற ஒலியாகி, பொருளே மாறி விடும்" என்பார் முனைவர் இரவி சங்கர் கண்ணபிரான். எனவே முடிவாகக் கூறினால் `காணொளி` என்பதே சரியான தமிழ்ச்சொல்லாகும். ஆதாரம்: குவேரா https://qr.ae/prMaay
  16. வாட்சப்பில் வந்த பதிவு. படலை இணையதளத்தில் எழுதபட்டிருக்கிறது. அதன் நடத்துனர் ஜேகேயின் ஆக்கம் என நினைக்கிறேன். பிகு: நிர்வாகத்துக்கு எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் அதியுட்ச ஈகத்தை செய்தவர்களை பற்றிய ஆக்கம் என்பதால் இங்கே பதிகிறேன். வேறு பகுதி பொருத்தம் என்றால் அங்கு மாற்றி விடுங்கள். ———— மன்னிப்பாயா ------------ காலையில் ரயில் ஏறியதும் கேட்க ஆரம்பித்த பாடல் இது. இன்னமும் கேட்டுக்கொண்டே இருக்கும் பாடல். "இங்குவந்து பிறந்தபின்னே இருந்த இடம் தெரியும் நாளை சென்றுவீழும் தேதி சொல்ல இங்கெவரால் முடியும்? வாழ்க்கை என்னும் பயணம். இதை மாற்றிடவா முடியும்?" தொண்ணூறுகளில் இந்தப் பாடலை முணுமுணுக்காமல் எவரும் வல்வை வெளியையோ, ஆசைப்பிள்ளை ஏற்றத்தையோ சைக்கிள் மிதித்து கடந்திருக்கமாட்டார்கள். அப்போது எம்மோடு மிக நெருக்கமாக இருந்த பாடலை இப்போது திரும்பவும் கேட்கையில் அந்த எதிர்க் காற்றும், ஆசைப்பிள்ளை ஏற்றத்தின் பளுவும் நம்மை மீண்டும் தாக்குகிறது. தானாகவே விக்கிராமதித்தியனின் வேதாளம் வந்து தோளில் உட்கார்ந்து கொள்ளுகிறது. விலகாமல் கூடவே இருந்து கேள்விகளைக் கேட்டுத் துளைக்கிறது. குப்புசாமி ஞானமணி. தமிழ்நாடு வேலூரைச்செர்ந்தவர். யார்? எவர்? என்று எனக்கு தெரியாது. "குட்டி” பற்றிய பதிவைப்பார்த்துவிட்டு "அடுத்த தலைமுறைகளுக்காக தம்முயிரை துறந்தவர்களை நினைக்க நினைக்க கண்ணீர் தன்னாலே கலங்கி வழிகிறது" என்று எழுதியிருந்தார். முகம்தெரியாத ஒரு மனுஷிக்காக வடிக்கும் கண்ணீர். அந்தப்பதிவை நான் எழுதி இரண்டரை வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அதற்கு பிறகு எத்தனையோ முறை படலையில் சிரித்திருக்கிறேன், அழுதிருக்கிறேன். கதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். நூற்றுக்கணக்கில் எழுதியாயிற்று. இப்போது திடீரென்று இந்த முகம் காணாத மனிதர் நேற்று அதை வாசித்து அழுதிருக்கிறார். அவர் அப்படி அழுது கொண்டிருக்கையில், அதை எழுதிய நானோ இந்தவாரம் எதை எழுதலாம்? என்று யோசித்துக்கொண்டிருந்திருக்கிறேன். எழுதும்போது என்னோடு கூட இருந்த உணர்வு ஆழ்மனதுக்கு மீண்டும் திரும்பிப்போய்விட்டது. வாசித்தவருக்கு அதே ஆழ்மன உணர்வு நேற்றைக்கு வெளிப்பட்டிருக்கிறது. இந்த அபத்தம் புரிய கொஞ்சம் சலிப்பும் கூடவே வருகிறது. ஒருமுறை மாவீரர் தினத்துக்கு நண்பன் ஒருவனோடு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, எனக்குத் தெரிந்த, முகம் அறிந்த, போரில் மரணித்தவர்களைப்பற்றி சொல்லிக் கொண்டுவந்தேன். அவர்களுக்கும் எனக்குமிடையிலான உறவு பற்றியும் சொன்னேன். நான் சொல்லும்போது அதில் ஒரு சின்னத்தனமான பெருமையும் இருந்தது. "பார்த்தியா இவரை எல்லாம் எனக்கு தெரியும்" என்கின்ற பெருமை. பேசாமல் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு வந்தவன், விடைபெறும்போது சாதாரணமாக சொன்னான். "எண்ட தம்பியும் இப்பிடித்தான் அடிபாடு ஒண்டில செத்திட்டான். வெளிய தெரிஞ்சா பிரச்சனை எண்டு ஒருத்தருக்கும் சொல்லுறதில்லை " பளார். மாவீரர் தினமன்று திருவுருவப் படங்களுக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடப்பதுண்டு. ஊரில் அப்போதெல்லாம் பிரமாண்டமாக நடக்கும். எல்லோருடைய படங்களும் எங்கேயோ ஏதோ ஒரு சந்தியிலாவது இருந்திருக்கும். இப்போது வெளிநாடுகளில் சிறிய அளவுகளில். இருபது முப்பது பேரின் படங்களை வைத்து செய்யப்படும் அஞ்சலிகள். கூட்டத்துக்கு வருகின்ற எல்லோரும் ஒவ்வொரு படங்களையும் உற்றுப்பார்த்துக்கொண்டு போவார்கள். அவற்றில் எதையோ அவர்கள் தேடுவது போல இருக்கும். வேறொன்றுமில்லை. தம் பிள்ளையோ, அண்ணனோ, தம்பியோ, அக்காவோ, தங்கையோ அங்கே படங்களில் இருக்கிறார்களா? என்கின்ற தேடல். அனேகமாக அவர்கள் தேடும் படங்கள் இருக்காது. ஆனாலும் அழுவார்கள். அதற்கு அர்த்தங்கள் ஏராளம். எழுதி விளக்கக்கூடாது. முடியாதது. நான் அப்படியான சந்தர்ப்பங்களில் யாரைத் தேடுவேன்? அங்கிருந்த படங்களில் இருக்கும் எல்லோருமே எனக்காக இறந்தவர்களே. இல்லாதவர்களும் எனக்காக இறந்தவர்கள். என் நண்பனின் தம்பியும் எனக்காகத்தான் இறந்திருக்கிறான். பெயர் தெரியாது. அவசரத்தில் அவனிடம் கேட்கவும் இல்லை. அவன் வீரவேங்கையா? 2ம் லெப்டினன்டா? லெப்டினன்டா? கப்டனா? ஒன்றுமே தெரியாது. ஒருவேளை அதற்கு மேலே என்றால் தெரிந்திருக்கும். இப்படி ஒருவர் இல்லை. இருவர் இல்லை. ஆயிரக்கணக்கில், நமக்காக இறந்தவர்கள். என் அப்பாவோடு நான் நிறைய சண்டை பிடிப்பேன். அம்மாவை ஏசியிருக்கிறேன். ஆனால் அவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் பதட்டப்படுவதும் நான்தான். மனைவி மீதான பாசமும் அப்படித்தான். சகோதரங்கள், நண்பர்கள் என்று எந்த உறவை எடுத்துக்கொண்டாலும் அவர்கள் மீது அபரிமிதமான பாசம் இருக்கிறது. அவர்களுக்காக என்னவெல்லாமோ செய்யத் தலைப்படுகிறோம். நாம் இடம்பெயர்ந்து வன்னியில் தங்கியிருந்தபோது எம்மை பாதுகாத்த குடும்பம் எனக்கு இன்றைக்கும் கடவுள் போன்றது. ஊருக்குப்போனால் அவர்கள் வீட்டில் தலைகாட்டாமல் திரும்புவதில்லை. என் சொந்த அக்கா அண்ணன் எல்லோருமே பிறப்பாலே எனக்கு உறவானவர்கள். மாவீரர்கள் எல்லோருமே இறப்பாலே உறவானவர்கள். இறந்து நம்மோடு கூடப்பிறந்தவர்கள். அவர்கள் மட்டுமல்ல. போரிலே காயப்பட்டு, காணாமல் போய், குடும்பங்களை தொலைத்து, உருக்குலைந்து, சின்னாபின்னப்பட்டு .... இதெல்லாமே நமக்காக செய்தவர்கள். எல்லோருமே நமக்கு உறவுதான். ஒரு பாடல் வரி ஞாபகம் வருகிறது. "யார் என்று அறியாமல் பேர் கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உருவானதே" யோசித்துப்பார்க்கிறேன். ஒரு காதலன் காதலிக்கு சொல்லுகின்ற உச்சப்பட்ட வார்த்தை "நான் உனக்காக உயிரைக்கூட கொடுப்பேன்". எப்போவாவது கதைகளிலோ திரைப்படங்களிலோ இதைப்பார்க்கும்போது அபத்தமாக இருக்கும். எவன் இந்தக்காலத்தில் உயிரை எல்லாம் கொடுக்கப்போகிறான்? ஆனால் இவர்கள் எல்லோருமே எமக்காக உயிரைக்கொடுத்தவர்கள். இந்தச் சொந்தத்தை நாங்கள் இலகுவில் மறந்துவிடுகிறோம். பெற்றதாய்க்கு கூட தன் குழந்தைகளில் யாரோ ஒருவரிடம் அதிக பாசம் இருக்கும். அது இயல்பு. ஆனால் இவர்களிடம் அந்த சிந்தனையே இல்லை. எம்மை வைத்து அரசியல் செய்வார்களா? மறந்துவிடுவார்களா? தம் குடும்பம் என்னாகும்? எந்த யோசனையும் இல்லை. என் பெயர் கூட இவர்களுக்கு தெரியாது. ஆனால் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். கோபம் வருகிறது. சேர்ட்டு கொலரைப்பிடித்து உலுக்கிக்கேட்கவேண்டும் போன்றிருக்கிறது. எதற்கு? நான் யார் உங்களுக்கு? எனக்காக ஏன் இப்படிப்போய் இறந்தீர்கள். உங்களை நாங்கள் அவனா? இவனா? என்கின்ற அரசியலுக்குள் அடக்கிவிடுகிறோம். உங்கள் பெயரைச்சொன்னால் சிக்கல் வந்துவிடும் என்று சீண்டாமல் இருக்கிறோம். இந்தக் கையாகாதவனுக்காக ஏன் இறந்தீர்கள்? இதை எழுதும்போதும் "இவன் ஏன் இதை எழுதுகிறான், இன்றைக்கு மாவீரர் தினம் இல்லையே, இதற்குள் ஏதாவது அரசியல் இருக்குமோ?" என்று யோசிக்கிறோம். நானே யோசிக்கிறேன். சும்மா இருந்துவிட்டு இப்போது மட்டும் என்ன திடீரென்று? என்றால், அதுதான் மனிதமனம். எப்போதோ இறந்த அன்னைக்காக திடீரென்று அழுபவர்களை கண்டிருக்கிறோம். அவர்களிடம் எதுக்கு திடீரென்று அம்மா ஞாபகம்? என்று கேட்கமுடியாது. அது எப்போதும் வரும். சிலவேளைகளில் எதுக்கு வேண்டாத வேலை? என்கின்ற கோழைத்தனத்தை மீறியும் வரும். அதுபோலத்தான் இதுவும். இதற்கெல்லாம் மாவீரர்வாரம் வேண்டியதில்லை. நம் மனத்துக்கு தர்க்கங்கள் செய்யத்தெரியாது. சில கணங்களுக்காக உணர்ச்சிவசப்படவே முடியும். அது எக்கணத்திலும் நிகழும். நாம் அழும்போது உலகத்தில் இன்னொருவர் சிரித்துக்கொண்டே இருக்கிறார். சிரிக்கும்போது எங்கோ ஒருவீட்டில் ஒப்பாரி கேட்டுக்கொண்டே இருக்கும். இது நியதி. அவர்கள், இவர்கள், தவறு, சரி இதெல்லாமே அரசியல் சார்ந்தது. அது வேறு. அதெல்லாமே ஆராயப்படவேண்டியதுதான். ஆனால் எந்த அரசியல் பகடைக்குள்ளும் இவர்களை நாம் இட்டு துகிலுரிக்கக்கூடாது. அப்படி உரித்தாலும் உரிபடுவது நாமே ஒழிய அவர்கள் அல்ல. ஆனால் நாங்கள் இவர்களை கொஞ்சம் கொஞ்சமாக எம்மோடு சேர்த்து இவர்களையும் துகிலுரிக்கவே முயலுகிறோம். இருக்கிறோம். மற்றவனை விட நாமே அதிகமாய் அதை செய்கிறோம். இதை படம் பிடிக்க சனல் 4 தேவையில்லை. தினம் தினம் எங்கள் வீடுகளிலேயே நிகழ்கிறது. நண்பர் குடும்பம் ஒன்று சென்றவாரம் இலங்கை சுற்றுலா சென்று திரும்பியது. சந்திரமௌலீச்சரம் உட்பட அத்தனை ஈச்சரங்களுக்கும் சென்று வந்தோம் என்று பெருமைப்பட்டுக்கொண்டார். யாழ்ப்பாணத்தில் ஆர்மிக்காரங்கள் கூட நல்லா தமிழ் கதைக்கிறாங்கள் என்றார். ஆனால் அவர் மகனால் தமிழ் பேசமுடியாது. என்ன ஒரு முரண்நகை இது. ஒருபுறம் நமக்காக, தமிழுக்காக உயிரை மாய்த்தவர்கள். இன்னொருபுறம் அவர்கள் யாருக்காக உயிரை மாய்த்தார்களோ அவர்கள் பரம்பரை தமிழை பயிலவில்லை. கொன்றவன் தமிழ் பயில்கிறான். அதுதான் இந்த முரண்நகைகளின் உச்சம். எம் நிர்வாணங்களை நிலைக் கண்ணாடி காட்டும்போது நமக்கே அவமானமாக இருக்கிறது. அவமானம் உச்சமாகி குற்ற உணர்ச்சி மேலோங்கினால் சிலர் தம்மைத்தாமே குத்தி இரத்தம் வரவைப்பார்கள். தனிமையை நாடுவார்கள். கோபம் வரும். கழிவிரக்கம் வரும். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வழி உண்டு. நமக்கு தெரிந்தது இப்படி எழுதுவது. இதெல்லாமே இயலாமையே. "Tuesdays with Morrie" என்ற புத்தகம் வாசிக்கும்போது இந்த இயலாமைக்கான மூலம் ஓரளவுக்கு தெளிவானது. அதிலே மொரி ஒரு கருத்து சொல்லுவார். "முதலில் நீ உன்னை மனப்பூர்வமாக மன்னிக்கப் பழகவேண்டும்" எம்மை நாம் மன்னிக்காவிட்டால் வாழ்க்கை நரகமாகிவிடும். மறப்பது வேறு. மன்னிப்பது வேறு. காலம் பலதை மறக்கடிக்கச்செய்யும். மறந்துபோவதால்தான் நாலு வேளையும் நமக்கு வயிறு செரிக்கிறது. ஆனால் மறப்பதைப் போன்றதொரு துரோகம் வேறொன்றுமில்லை. மன்னிக்க வேண்டும். நம்மை. ஒருகணம் கண்ணைமூடி நாம் செய்த தவறுகளை மன்னிக்க முயன்றுபாருங்கள். இயலாது. நம்மை நாமே மன்னிப்பதென்பது சாதாரண விடயம் இல்லை. மன்னிப்பதற்கும் மன்னிக்கப்படுவதற்கும் தகுதிவேண்டும். அது மட்டும் முடியுமானால் நாமெல்லோருமே என்றைக்கோ நல்லவராகியிருப்போம். “மன்னிப்பவன் மனுஷன். மன்னிப்பு கேட்கத்தெரிந்தவன் பெரிய மனுஷன்” என்று விருமாண்டியில் ஒரு வசனம் வரும். இங்கே இருவருமே நாமாக இருக்கையில் நாம் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருக்கவேண்டும்? அது முடியாமலேயே வாழ்க்கை முழுக்க குற்ற உணர்ச்சிகளோடு சுற்றித்திருந்து தம் வாழ்வையும் சூழவிருப்பவர் வாழ்வையும் துன்புறுத்துபவர்களே இங்கே அதிகம். தன்னை மன்னிக்க முடியாதபோது அது ஏற்படுத்தும் கோபமும் கழிவிரக்கமும் மற்றவர்கள் மீது திரும்புகிறது. அடுத்த பாடல் வருகிறது. “எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது” மன்னிப்பாயா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.