Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    88827
    Posts
  2. தனிக்காட்டு ராஜா

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    9977
    Posts
  3. nochchi

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    5920
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    7138
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/21/23 in all areas

  1. றஞ்சித் அவர்களின் தொடர் முயற்சிக்குப் பாராட்டுகள் உரித்தாகுக. நான் நினைக்கின்றேன் அவர்களிடம் அதற்கானதொரு வழிவரைபடமோ திட்டமோ ஆவணமாக இல்லாதிருந்திருக்கலாம். இரு பக்கத்திலும் உயிரப்பாதுகாப்பற்ற அச்ச உணர்வு மற்றும் 6ஆம் திருத்தச்சட்டத்தால் ஏற்பட இருந்த அழுத்தம் போன்றவும் அவர்களைத் தம்மைப்பாதுகாக்கும் நிலையை நோக்கித்தள்ள அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.
  2. நிச்சயமாக நொச்சி, சேமித்து வைத்திருக்கிறேன். உங்களின் ஆதரவிற்கு நன்றி
  3. இந்த இனக்கொலைகளினதும் சொத்தழிப்புகளினதும் முக்கிய பங்காளி. அவர்தான் தற்போதைய அரசுத்தலைவர் இனப்பிரச்சினையைத் தீர்க்க முனைபவராம். சரியாக யே.ஆரைப்(மாமனாரை)போலவே சாதுரியமாகக் காய்நகர்த்தித்தமிழினத்தை இனிமேல் எழாதவாறு முழுமையாகச் சிறிலங்காவுக்குள் அமிழ்த்தி அழிக்கும் நோக்கிலே செயற்படுகின்றார். எங்கே இந்த சிங்களக்கொடியாட்டிய சம் அவர்கள். அவர் இவற்றை அறியாதவரா அல்லது அப்போதென்ன கோமாவில் இருந்தாரா? பிறகேன் குட்டிக் குள்ள நரிக்குக் கடிதம்?
  4. இந்த வரலாற்றுப் பதிவைப் படித்தபோது மனதிலே எழுகின்ற சோகமும் வலியும் இன்றைய அரசியல்வாதிகள்மீது வெறுப்பையே வரவைக்கிறது. இனவழிப்பில் கைதேர்ந்த ஐ.தே.கட்சியையும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியையும் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழர்கள் எவளவுதூரம் சூடு சுறணையற்றவர்களாக இருக்கிறார்கள். தமிழினம் முதலில் எந்வொரு சிங்களக் கட்சியையும் ஆதரிக்கவோ அல்லது வாக்களிக்கவோ முன்வரலாமா? இவர்கள் செய்வித்த, செய்கின்ற கொடுமைகளை மறந்துவிடலாமா? ஏனிந்தச் சூனிய நிலையில் மீண்டும் மீண்டும் தமிழினம் பேரினவாதக் கட்சிகளுக்கு வாக்களிக்கின்றார்கள் என்று புரியாமல் உள்ளது. யே.ஆரின் அதே தந்திரத்தோடு நகரும் ரணிலையும் நம்புவதற்கும் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் இருக்கின்றனர் என்பது எவளவு மதியீனமானது. ஏதிர்காலத்திலாவது தமிழ்க் கட்சிகள், கல்விமான்கள் மற்றும் புலமையாளர்கள் ஒன்றினைந்து தமிழ்த் தேசியத்திற்கான பொது முன்னணியொன்று கட்டமைக்கப்பட்டு கட்சிகளுக்கான முதன்மை நிலை களையப்பட்டு, தமிழரது தேசியப் பிரச்சினையை முதன்மைப்படுத்தி நகரும் நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும். இதிலே புலமாக இருந்தாலும் தாய்நிலமாக இருந்தாலும் ஒரு நிலைப்பாட்டுடன் ஒரு அணியாகத் தாயகத்திலும் புலத்திலும் நகர்வதே தமிழருக்கு விடிவைத்தரும். சிங்களக் கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் எவரையும் தமிழினம் ஆதரிப்பதைக் கைவிடுவதோடு, அவர்களின் சலுகைகளுக்கு ஏமாறாது இருக்கும் வகையில் பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும். தமிழர் தாயகத்திலே தமது கட்சிக்கு மட்டும் முதன்மை தேடும் கட்சியோ அல்லது தனிநபரோ இனங்காணப்பட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தேர்தல் பரப்புரைகளின்போது பேரிவாதக் கட்சிகள் செய்த நிலப்பறிப்பிலிருந்து இன அழிப்புவரையான தொகுப்பினைத் தமிழரிடையே காட்சிப்படுத்தும் செயற் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கடந்தகாலத்தில் தமிழர் பட்ட அவலங்கள் இளைய தலைமுறையினரிடம் பரவச்செய்யப்படுதல் வேண்டும். அதிலே டொன் ஸ்ரெபான் செனனாயக்க முதல் இன்றைய ஆட்சியாளர்வரை செய்த, செய்துவரும் தமிழின அழிப்புவிடயங்கள் முழுமையாக நிரலாக்கம் செய்யப்படுவது அவசியமாகும். இலங்கைத்தீவு முழுவதும் தமிழினத்தின் குருதிச்சுவடுகள் பரவியுள்ளதை அறியாத தமிழ்ப் பரம்பரைக்கு இவற்றை நாம் கடத்தாதுவிடுவதும் ஒருவகை வரலாற்றுத் துரோகமே. றஞ்சித் அவர்களே, நாம் செவிவழியாகக் கேட்டபோதும், இடம்பெயர்ந்து வந்தோரை வரவேற்றபோதும் கிடைக்காத பல அரிய வரலாற்றுண்மைகளும், எமது இனம் எதிர்காலத்தில் உறுதியாக எடுக்க வேண்டிய நிலைப்பாடுகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளெனும்; தீரம்மிகு அமைப்பின் பின்னைய நடவடிக்கைகளின் நியாயப்பாடுகளுக்கும் மேலேயுள்ள இன அழிப்பினதும் சிங்களப் பெருந்தேசியவாதத்தின் ஊறிப்போன பேரினவாதமுகத்தினையும் ஒவ்வொரு துகள்களாகப் பதியமிட்டுவருகிறது.களத்தினதினது நோக்கத்தை நகர்த்தும் உங்களின் அயராத முயற்சிக்கு நட்பார்ந்த நன்றியுடன் பாராட்டுகின்றோம். யாழ் களம் ஏதாவது சிக்கலுக்குட்பட்டாலும் தாங்களவாது பதிவுகளைச் சேமித்து வைப்பீர்கள் என்றே நம்புகின்றோம்.
  5. அது தானே ஏலுமென்றா தூக்கிப்பார். அதுக்கேனய்யா இந்த பொண்ணை தூக்கியாந்து வைத்திருக்கிறீங்க.
  6. அடடாகாசமான நடிப்பு கண்கள் மட்டும் நடனம் புரியுது 👌👌👌
  7. Variety of images · Rejoindre Velocity S · sSootnerdp080la41l8u10f7330co6,7583018hc3 91ûltf87:0208 f8ca · போர்டிங் கேட் வரை வந்தும், விமானத்தின் கதவு மூடப்பட்டு விட்டதால் விமானத்தில் பயணிக்க முடியாமல் வீடு திரும்பிய அனுபவம் பலருக்கும் இருந்திருக்கும். "ஒரு கதவை திறக்க எவ்வளவு நேரம் ஆகிவிடும். அதனை திறந்து என்னை அனுமதித்திருக்கலாமே" என்ற கேள்வி நிச்சயமாக பலருக்கும் இருக்கலாம். ஆனால் உண்மையில் இது வெறும் கதவை திறந்து மூடுவதற்கான ஒரு விஷயம் அல்ல. இதில் ஏராளமான தொழில்நுட்ப காரணங்கள் அடங்கியுள்ளது. இது பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்களுக்கு இந்த பதிவில் பதில் காணலாம். விமானத்தில் ஏறுவது என்பது ரயில் அல்லது பேருந்தில் ஏறுவது போல அல்ல. விமான விதிகளின்படி, புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னரே விமானத்தின் கதவுகள் மூடப்பட்டு விடும். இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. எடை : விமானத்தின் எடையானது சமமாக பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்க வேண்டும். விமானத்தின் கேப்டன் மற்றும் கோ-பைலட் விமானத்திற்குள் நுழையும் பொழுது, அன்று ஆன் போர்டு செய்ய போகும் எதிர்பார்க்கப்படும் எடை அவர்களிடம் தெரிவிக்கப்படும். எரிபொருள் எடை+ கார்கோ எடை+பயணிகளின் எடை என்று கணக்கிடப்படும். பயணிக்க போகும் மொத்த பயணிகளின் எண்ணிக்கை குறித்த விபரம் இந்த சமயத்தில் வழங்கப்படாது. எடை குறித்த இந்த விபரங்களை பைலட் ஃபிலைட் மேனேஜ்மென்ட் கம்ப்யூட்டரில் பதிவு செய்வார். பிற கணக்கீடுகளுக்கு மத்தியில், இந்த குறிப்பிட்ட எடையுடன் கூடிய விமானம் எந்த வேகத்தில் புறப்பட வேண்டும் மற்றும் தரையிறங்க வேண்டும் போன்ற விவரங்களை கம்ப்யூட்டர் வழங்கும். இதன் பிறகு எத்தனை டன் எரிபொருள் உள்ளது மற்றும் எத்தனை லிட்டர் இன்ஜின் ஆயில் உள்ளது போன்ற மிக துல்லியமான கணக்குகள் டெக்னிக்கல் லாகில் இருந்து கொடுக்கப்படும். அடுத்த சோதனை: விமானத்தில் ஏற்ற வேண்டிய கடைசி கார்கோவை லோடு செய்த பிறகு மற்றும் கடைசி பயணி விமானத்திற்குள் நுழைந்த பிறகு கமாண்டரிடம் லோடு மற்றும் ட்ரிம் ஷீட் எனப்படும் ஒரு கொத்து தாள்கள் வழங்கப்படும். அவற்றில் பின்வரும் விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில், விமானத்தில் பயணிக்க உள்ள பயணிகள் மற்றும் பணியாளர்களின் இறுதி எண்ணிக்கை ஆண், பெண் மற்றும் குழந்தைகளின் தனித்தனியான எண்ணிக்கை மற்றும் விமானத்தின் ஒவ்வொரு சோனிலும் சேர்க்கப்பட்டுள்ள எடை ஆகியவை கணக்கிடப்படும். விமானத்தின் எல்லா நிலையிலும் புவி ஈர்ப்பு மையமானது பரிந்துரைக்கப்பட்ட பகுதியில் அமையும் படி எடையானது லோடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்த விபரம். விமானத்தின் கதவு மூடப்படும் : பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் அணிந்து, தங்கள் இருக்கையில் அமர்ந்துள்ளனரா என்பதை விமான பணியாளர்கள் உறுதி செய்வார்கள். விமானத்தின் கதவுகள் அனைத்தும் சரியான முறையில் மூடப்பட்டுள்ளதா என்பதை விமான பணியாளர்கள் சரி பார்ப்பார்கள் (கதவு ஆட்டோமேட்டிக் மோடில் அமைக்கப்பட்டிருக்கும்) இப்பொழுது விமானம் புஷ்பேக் செய்ய தயாராக இருக்கும். இறுதி சோதனை: விமானத்தில் உள்ள பயணிகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டு, அனைவரும் தங்களது இருக்கையில் புஷ்பேக் செய்துள்ளனரா என்பதை ATC -யிடம் பைலட் உறுதி செய்வார். அனைத்தும் சரியாக இருப்பதை ATC பைலட்டிடம் கூறுவார். இப்பொழுது யாரேனும் ஒரு பயணியை உள்ளே அனுமதிப்பதற்கு கூட இந்த ஒட்டுமொத்த செயல் முறையையும் மீண்டும் செய்ய வேண்டும். விமானத்தின் பார்க்கிங் பிரேக்குகள் ரிலீஸ் செய்யப்பட்டவுடன் சேருமிடத்தை சென்றடையும் நேரம் எலெக்ட்ரானிக் முறையில் பதிவு செய்யப்படும்.....!
  8. பெண்ணை... கட்டிப் போட்ட திருடன். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.