Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. நன்னிச் சோழன்

    கருத்துக்கள உறவுகள்+
    6
    Points
    36133
    Posts
  2. nochchi

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    5920
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19669
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    8975
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/24/23 in all areas

  1. சாயங்காலம் சாயும் நேரம் மின் விளக்குகளின் மிதமான வெளிச்சத்தில் குளித்தபடி மௌனமாய் தவமிருக்கும் தவசிபோல அமைதியும் அழகும் மிகுந்த தூய்மையுடன் தூங்கிக்கொண்டிருந்தது அந்த முதியோர் இல்லம். ஆடி ஓடி ஓய்ந்து தம் இறுதிக்காலத்தை அமைதியுடனும் ஆரோக்கியத்துடனும் கழிக்கும் அம் முதியவர்களின் முகங்களில் மிளிரும் புன்னகையையும் தாண்டி அவர்கள் மனங்களில ;;புதைந்து கிடக்கும் ஏக்கம் ஏமாற்றம், தனிமை, கழிந்த காலங்களின் நினைவுத் தடங்கள், என பல்வேறுபட்ட பரிமாணங்களையும் தாங்கி அங்கு பல இன, மத, மொழி, சார்ந்த பல குண இயல்புகள், கலாச்சாரங்கள், உணவுப் பழக்கங்கள், உடை வேறுபாடுகள், என்று பலதரப்பட்ட முதியவர்களும் அங்கு தங்கி இருந்தனர். அடிவானம் வெளுக்கும் அந்த விடிகாலைப் பொழுதில் வாகனத் தரிப்பிடத்தில் தன் வாகனத்தை நிறுத்திவிட்டு வாசல் கதவுகள் இயல்பாய் வாய் திறக்கும் அந்த பெரிய கடடிடத்தினுள் நுழைந்தாள் பிரியா. வரவேற்பு மேசையிலுள்ள நீளமான புத்தகத்தில் தன் வருகையைப் பதிவு செய்தபின் தினமும் பார்த்து பழக்கப்பட்ட பலவேறு முகங்களுக்கும் காலை வணக்கம் சொல்லியபடி தன் குளிர்க்கோட்டை கழற்றி அதற்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் கொழுவினாள். அந்த அதிகாலையிலும் தூக்கம் கலைந்து எழுந்த பல முதியவர்கள் சிலர் பத்திரிகை படித்தபடி, வேறு சிலர் உடற்பயிற்சி மண்டபத்தை நோக்கி நடந்தபடி, வேறு சிலர் சக்கர நாற்காலிகளிலும், கைத்தடி, நடைவண்டி உதவியுடனும் நடமாடிக்கொண்டிருந்தனர். புpரியா எலிவேற்றரில் நுழைந்து நான்காவது மாடிக்குச்செல்லும் எண்ணை அழுத்தினாள். எலி;வேற்றர் நாலில் வாய்பிளக்க 410 இலக்க கதவில் இருமுறை தட்டிவிட்டு காத்திருந்தாள். சில நிமிடங்களின் பின் நடைவண்டியின் உதவியுடன் மெல்ல மெல்ல நடந்து வந்து கதவைத் திறந்தார் குளோடியா. அவரது வயது 85. இத்தாலிய பெண். இருவரும் காலை வணக்கம் பரிமாறிக் கொண்டனர். அவரோ தன் மனக்குறைகளை சொல்ல யாருமற்ற நிலையில் பிரியாவிடம் கூறுவார். ஆங்கிலம் முழுமையாக தெரியாவிட்டாலும் ஓரளவு பேசக்கூடியவர். அவரது மூன்று மகன்களது குடும்பப் படங்களும் பேரப்பிள்ளைகளினது போட்டோக்கள் அனைத்தும் அழகாக பிரேம் செய்யப்பட்டு மேசையில் இருந்தன. கணவனோ சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை அருகிலிருந்து கவனிக்கவோ சென்று பார்க்கவோகூட முடியாத நிலையில் தான் இருப்பதான ஆதங்கம் அவரது பேச்சில் தொனிக்கும். அவரது இருகால்களும் வீக்கமாக இருப்பதால் எழுந்து நடமாடுவதுகூட அவருக்கு சிரமமாக இருந்தது. ஆனாலும் அவரது அன்பான பேச்சும் அமைதியான குணமும் பிரியாவை கவர்ந்ததில் ஆச்சரியமில்லை. சில நாட்களில் தன் பிள்ளைகள் தன்னை வந்து பார்க்கக்கூட நேரமில்லையே என பிரியாவிடம் சொல்லுவார். சொல்லும் போது அவரது தாயுள்ளம் படும் வேதனையை பிரியா உணரத் தவறவில்லை. ஒருநாள் ‘எனக்கு குளியலறையில் விரிப்பதற்கு கால் வழுக்காத ஒரு விரிப்புத் தேவை உன்னால் வாங்கித் தர முடியுமா? ஏன்று பிரியாவிடம் கேட்கவும் பிரியாவும் ‘நிச்சயமாக அடுத்தமுறை வரும் போது வாங்கி வருகிறேன்” என்று சொன்னதோடு மறக்காமல் அடுத்ததடவை செல்லும்போது கால் வைத்தால் வழுக்காத நல்ல விரிப்பு ஒன்றை வாங்கிக் கொண்டு போனாள். ‘மிகவும் நன்றி என்று சொல்லி கலங்கிய விழிகளுடன் அதற்குரிய பணத்தையும் உடனடியாகவே கொடுத்தார். மார்கழிமாதம் எங்கும் வண்ண விளக்குகளும் அலங்கார கிறிஸ்மஸ் மரங்களுமாக சந்தோச ஆரவாரங்களாக காட்சியளித்தது. ஓவ்வொரு முதியவர்களின் அறைகளிலும் கிறிஸ்மஸ் பரிசுப் பொதிகளும் இனிப்புக்களும் ஒரு இனிமையான சூழலை உருவாக்கியிருந்தது. ஆனால் குளோடியாவின் அறையினுள் எந்தவிதமான மகிழ்வான சூழ்நிலையும் இல்லாதிருப்பதை பிரியா கவனித்தாள். மறுநாள் குளோடியாவின் அறைக்குச் செல்லும் போது தனது வீட்டிலிருந்து கேக் எடுத்துக் கொண்டு போனாள். கேக்கை மேசையில் வைத்துவிட்டு தன் வேலைகள் முடிந்ததும் குளோடியாவின் நன்றியுடனும் நத்தார் வாழ்த்துடனும் வீட்டிற்கு சென்றாள். இருதினங்களின் பின் மீண்டும் குளோடியாவின் அறைக்குச் செல்ல வேண்டிய தினம். பல முறை தட்டியும் அறை திறக்கப்படாததால் நர்சிடம் தகவல் சொல்லிய பொழுது நர்ஸ் வந்து தனது சாவியால் கதவைத் திறந்து அறைக்குள் குளோடியா கட்டிவில் படுத்திருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு சென்று விட்டார். அறையினுள் நுழைந்த பிரியா குளோடியா அருகில் சென்று பார்த்தாள். குளோடியாவால் கை கால்களை அசைக்க முடியவில்லை. வுpழிகளால் பிரியாவை வரவேற்றார். உதடுகள் காய்ந்து நா அசைக்க முடியாமல் கிடந்தாள். இன்றுகாலை கோப்பி குடித்தாயா? ஏன்று கேட்டதற்கு இல்லை என்று தலை அசைத்து பதில் சொன்னார். புpரியா குளோடியாவிற்கு கோப்பி கலந்து ஒரு சிறு கேக் துண்டும் எடுத்து ஊட்டி விட்டாள். குளோடியாவால் ஒரு சிறு துண்டு கேக்கிற்கு மேல் உண்ண முடியவில்லை. கோப்பியை பருக்கியபொழுது இரண்டு மூன்று கரண்டிகள் ஆவலுடன் பருகினார். நன்றி அவரது விழியோரம் கண்ணீராய் வழிந்தது. அவரால் அதிகம் பருக முடியவில்லை. புpரியாவால் அதிகநேரம் குளோடியாவுடன் நிற்க நேரம் போதாததால் மிகுதிக் கோப்பியை பக்கத்தில் வைத்து விட்டு நர்சிடம் அறிவித்துவிட்டு குளோடியாவிடம் விடை பெற்று விட்டாள். அது தான் கொடுக்கும் கடைசிப் பிரியாவிடை என்பது பிரியாவிற்கு அப்போது தெரியவில்லை. தனது கையினால் அன்போடு ஊட்டப்பட்ட கோப்பி அந்த அன்னைக்கு தான் ஊற்றிய கடைசிச் சொட்டு பானம் என்று மறுநாள் அறிந்தபோது பிரியா அதிர்ந்து போனாள். இருந்தும் ஓர் ஆதரவற்ற தாயின் அந்திம காலத்தில் அவரது தாகம் தீர்க்கும் வாய்ப்பு கிடைத்தது இறைவன் தந்த வரமாக எண்ணி பிரியா இறைவனுக்கு நன்றி கூறினாள்.
  2. வீரகேசரி கிரைமியாவில் உக்ரேன் நிரந்தர தரையிறக்கம் (invasion) செய்துள்ளது போல எழுதியுள்ளது. அப்படி அல்ல இது ஒரு விசேட நகர்வு (special operations) எனப்படும் கரந்தடி தாக்குதலாகவே தெரிகிறது.
  3. இருக்கலாம். அமெரிக்கா இதை செய்திருந்தால் மிக சாதுரியமான நகர்வு - ரஸ்யா/புட்டின்/வாக்னர்/பிரிகோசின் எல்லார் வாயிலும் அல்வா தீத்தியமைக்குச்சமன்🤣.
  4. ஈழத்தமிழரின் அவலங்களை தன‌து அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்த நினைத்த கருநாநிதி இந்திய சுதந்திரதின விழாவில் இந்திரா ஆற்றிய உரையும், அமிர்தலிங்கத்திற்கு அளிக்கப்பட்ட கெளரவமும் ஜெயாரைக் கோபத்தின் உச்சிக்கே இட்டுச் சென்றது. ஆகவே, தனது அரச ஊடகங்களை இந்திராவிற்கெதிராகவும், இந்தியாவுக்கெதிராகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்குமாறு பணித்தார். ஜெயாரின் ஆணைப்படி அரச ஊடகங்கள் இந்திராவின் நம்பகத்தன்மையினையும் அவரது பக்கச்சார்பின்மையினையும் வெகுவாகக் கேள்விகேட்டு விமர்சித்திருந்தன. இந்தியாவைச் சண்டியர் என்று விளித்த இந்த ஊடகங்கள் சிறிய நாடான இலங்கையின் கைகளை மடக்கி வைக்கப் பார்ப்பதாக குற்றம் சுமத்தின. அமிர்தலிங்கத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு மரியாதையினையும், இந்திரா காந்தியின் காட்டமான உரையினையும் அவை வெகுவாக விமர்சித்தன. ஆனால், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ தனது நிலைப்பாட்டில் சற்றுத் தளர்வுப் போக்கினைக் கடைப்பிடிக்க விரும்பியது. தில்லியில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அமிர்தலிங்கம், "இந்திரா காந்தியுடனான பேச்சுக்களின் பின்னர் நிலைமை மாறிவிட்டது" என்று தெரிவித்தார். இந்தியாவின் நல்லெண்ண உதவிகளின்மூலம் அடிப்படை மாற்றங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன என்று அவர் கருத்து வெளியிட்டார். மேலும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தமது நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அமிர்தலிங்கம் கூறினார். அரசாங்கமானது தனிநாட்டிற்கு நிகரான சாத்தியப்படக்கூடிய மாற்றுத்தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் தமது தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிட்டு விட்டு அதனைப் பரிசீலிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் கூறினார். காத்திரமான மாற்றுத்தீர்வொன்றினை அரசு முன்வைக்கும் பட்சத்தில், தாம் அதனை தமிழ் மக்களிடம் எடுத்துச் சென்று அவர்களை அதற்கு இணங்கவைக்கப்போவதாகவும் அவர் கூறினார். மாற்றுத்தீர்வு எப்படி இருக்குமென்று கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், அது சமஷ்ட்டி அடிப்படையிலான , தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய தீர்வாக அமையவேண்டும் என்று கருத்து வெளியிட்டார். அப்படியான மாற்றுத்தீர்வொன்று முன்வைக்கப்படும் பட்சத்தில் இந்தியா கட்டாயம் ஒரு தரப்பாக தீர்வுவிடயத்தில் பங்களிப்புச் செலுத்தவேண்டும் என்றும் கூறினார். நல்லிணக்க உதவிகளைச் செய்யும் நிலையிலிருந்து செயற்றிறன் கொண்ட மூன்றாவது தரப்பாக இந்தியா தன்னை முன்னகர்த்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு உதாரணமாக சர்வதேச பிணக்குகளளில் அமெரிக்காவின் மத்தியஸ்த்தத்துடன் இடம்பெற்ற காம்ப் டேவிட் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா அளிக்கும் பங்கிற்கு நிகராக தமிழரின் பிரச்சினையில் இந்தியாவின் பங்கு இருக்கவேண்டும் என்று அவர் கூறினார். மேலும், இலக்கு ஒன்று எட்டப்படுவதற்கு இந்தியா உத்தரவாதம் வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால், அமிர்தலிங்கம் முன்வைத்த அனைத்துப் பரிந்துரைகளையும் ஜெயார் முற்றாக நிராகரித்தார். ஊடகங்களுக்குப் பேசிய ஜெயார், இந்தியா அடக்கி வாசிப்பதே இப்போதைக்குத் தேவையானது என்று கூறினார். தேவைப்பட்டால் நாம் இந்தியாவின் மத்தியஸ்த்தத்தினை நாடுவோம், இப்போதைக்கு வேண்டாம் என்று அவர் கூறினார். தில்லியிலிருந்து திரும்பிய அமிர்தலிங்கத்தை உணவெழுச்சியினால் உந்தப்பட்ட தமிழ்நாடு வரவேற்றது. "ஈழத்திற்கான யாத்திரை" எனும் பெயரில் நெடுமாறனினால் ஆவணி 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட‌ பேரணி தோல்வியில் முடிவடைந்தது. ஆனாலும், 8 நாட்களாக, 1700 கிலோமீட்டர்கள் தூரம் நடைபவணியாக வந்த 5,000 ஈழ ஆதரவாளர்களின் முயற்சியினால் மொத்தத் தமிழ்நாடுமே உணர்வுகொண்டு எழுந்து நின்றது. ஈழத்தில் பாதிக்கப்பட்டுவரும் தமது உறவுகளுக்காக உணர்வுடன் திரண்ட ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் இந்தப் பேரணியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது உணர்வினை வெளிப்படுத்தினர். பிரபாகரனை நேசித்த மக்களைக் கொண்டவையும், அவர் சிறிதுகாலம் வாழ அடைக்கலம் கொடுத்தவையுமான‌ இரு பழமை மிக்க நகரங்களான மதுரைக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலேயே இந்தப்பேரணி நடைபெற்றிருந்தது. பிரபாகரனுடன் நெடுமாறன் ‍ 80 களின் இறுதிப்பகுதியில் ஒரு தொகை மீன்பிடிப் படகுகள் மூலம் பாக்கு நீரிணையைக் கடந்து யாழ்ப்பாணத்திற்குச் செல்வதே நெடுமாறனின் நோக்கமாக இருந்தது. கொழும்பும், தில்லியும் நெடுமாறனின் இந்த முயற்சியினால் கடுமையான நெருக்கடியச் சந்தித்தன. தனது சிறிய கடற்படையை உசார்ப்படுத்திய ஜெயார், பாக்கு நீரிணையைக் கடக்கும் படகுகள் அனைத்தையும் தடுத்துவிடும்படி ஆணையிட்டார். இது தேவையற்ற மோதலை உருவாக்கிவிடும் என்று அஞ்சிய தில்லி, நெடுமாறனின் முயற்சியைத் தடுத்து நிறுத்தியது. எம் ஜி ஆருடன் பேசிய இந்திரா காந்தி, நெடுமாறன் யாழ்ப்பாணத்திற்குச் செல்வதை நிறுத்தும்படி கோரினார். நெடுமாறனுக்கு மீன்பிடிப் படகுகளை வழங்குவதைத் தடுத்ததன் மூலம் அவரின் முயற்சியை முறியடித்தார் எம்.ஜி.ஆர். தனது காவல்த்துறையைக் கொண்டு தமிழ்நாட்டின் கரையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகளை அகற்றினார். இந்தியாவின் சுதந்திர தினமான ஆவணி 15 ஆம் திகதி இராமேஸ்வரத்தின் கரையை வந்தடைந்த நெடுமாறனின் பேரணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் யாழ்ப்பாண செல்வதற்கென்று இரு ஓட்டை விழுந்த‌ படகுகள் மட்டுமே அக்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அவற்றின் ஒன்றில் ஏறிக்கொண்ட நெடுமாறன், அதன் உரிமையாளரைப் பார்த்து படகினை யாழ்ப்பாணம் நோக்கிச் செலுத்துமாறு கோரினார். நெடுமாறனின் கோரிக்கயினை வேண்டாவெறுப்பாக ஏற்றுக்கொண்ட அந்த உரிமையாளரினால் கடலில் சிறிது தூரம் மட்டுமே செல்ல முடிந்தது. படகின் அரைப்பகுதிக்கு நீர் நிரம்பிவிட, வேறு வழியின்றி படகு மீண்டும் கரையை வந்தடைந்தது. தனது முயற்சியைத் தடுத்து நிறுத்தியது எம்.ஜி.ஆர் என்பதை நெடுமாறன் உடனடியாக உணர்ந்துகொண்டார். ஆத்திரம் மேலிட, "எம்.ஜி.ஆரே இதனைச் செய்ததது. என்னைக் கைது செய்யுங்கள், கைதுசெய்யுங்கள்" என்று வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற பொலீஸாரைப் பார்த்துக் கோபத்துடன் கத்தினார் நெடுமாறன். கருநாநிதியும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.அன்பழகனும் தமிழ்நாட்டில் பெருகிவந்த ஈழ ஆதரவு சூழ்நிலையினை தமக்குச் சார்பாகப் பாவிக்க எண்ணினர். ஆகவே, தமிழ்நாட்டுச் சட்டசபையில் தாம் வகித்த பதவிகளைத் திறந்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்கப்போவதாகக் கூறினர். ஆனால், தொழிநுட்பக் கோளாறுகள் இருப்பதாகக் கூறி அவர்கள் இருவரினதும் இராஜினாமாக் கடிதங்களை ஏற்றுக்கொள்ள சபாநாயகர் மறுத்துவிட்டார். ஆனால், சட்டசபை அமர்வுகளை புறக்கணித்து வந்த இவர்கள் இருவரும், இந்திய மத்திய அரசு வங்கதேசப் பிரச்சினையில் வங்காளிகளுக்குச் சார்பாக நடந்துகொண்ட போதும், ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழர்களுக்கு தனிநாடு காண உதவவில்லை என்று குற்றஞ்சாட்டினர். தமிழர் பிரச்சினை தொடர்பாக தில்லிக்குப் போதிய அழுத்தத்தினைக் கொடுக்கவில்ல என்று எம்.ஜி.ஆரையும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். தி.மு.க வுக்குச் சார்பான பத்திரிக்கைகள், எம்.ஜி. ஆர் ஒரு மலையாளி என்பதாலும், இலங்கையின் கண்டியில் பிறந்ததாலும் அவர் ஈழத்தமிழருக்கு அனுதாபம் காட்டவில்லை என்று எழுதியிருந்தன. தன்மீதான விமர்சனத்தினால் ஆத்திரப்பட்ட எம்.ஜி.ஆர் சர்வகட்சி மாநாடு ஒன்றினைக் கூட்டி தில்லிக்கு அழுத்தம் கொடுக்க எண்ணினார். தி.மு.க இக்கூட்டத்தைப் புறக்கணித்திருந்தது. ஆனால், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றதோடு, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தில்லி தலையிடவேண்டும் என்று கோரி தீர்மானம் ஒன்றினையும் நிறைவேற்றியது. அமிர்தலிங்கம் ஆவணி 16 ஆம் திகதி சென்னைக்குத் திரும்பினார். சென்னை திரும்பியதும் முதலமைச்சர் எம்.ஜி.ஆரைச் சென்று சந்தித்தார். பின்னர் கருநாநிதியைச் சந்திக்க விரும்பினார். ஆனால், தன்னைச் சந்திக்கும் முன்னர் எம்.ஜி.ஆரை அமிர்தலிங்கம் சென்று சந்தித்தமை கருநாநிதிக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. ஆகவே, தன்னைச் சந்திக்கவேண்டும் என்று அமிர்தலிங்கம் கேட்டபோது, தான் திருச்சியில் மூன்றுநாட்கள் தங்கியிருப்பதால், தன்னால் அமிர்தலிங்கத்தைச் சந்திக்க முடியாது என்று கூறி மறுத்துவிட்டார். ஆகவே, திருச்சிக்குச் சென்ற அமிர்தலிங்கம் கருநாநிதியைச் சந்தித்து அவரைச் சாந்தப்படுத்தினார்.
  5. இந்திய சுதந்திரதின விழாவில் விசேட அதிதியாக வரவேற்பளிக்கப்பட்ட அமிர்தலிங்கம் இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுக்களின்போது ஏற்பட்ட தோல்விகளையடுத்தே தமிழ் மக்கள் தனிநாட்டிற்கான கோரிக்கையினை முன்வைத்தார்கள் என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார் அமிர்தலிங்கம். 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத்தீர்மானத்தின் அடிப்படையில் பிரிந்துசெல்வதென்று முடிவெடுத்திருந்தபோதிலும், ஜெயாருடன் பேச்சுவார்த்தைகள் மூலமாகத் தீர்வுகாண்பதற்கு தமிழர்கள் தீவிரமாக முயன்று வந்ததாக அவர் கூறினார். ஆயுத அமைப்புக்களின் எதிர்ப்பிற்கு மத்தியிலும் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் எனும் தீர்வினை ஏற்றுக்கொள்ள தாம் முன்வந்திருந்ததாகவும் அவர் கூறினார். ஆனால், அதிகாரங்களோ, போதிய நிதிவளமோ அற்றநிலையில் மாவட்ட சபைகள் பிரியோசனமற்ற ஒரு தீர்வென்பதை தாம் உணர்ந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.மாவட்ட சபைகளுக்கான அதிகாரத்தையும், நடத்துவதற்கான நிதியையும் கேட்டபோது நாம் தாக்கப்பட்டோம் என்றும் அவர் மேலும் கூறினார். இந்தியாவும், சர்வதேச சமூகமுமே இன்று எம்மைக் காக்கமுடியும் என்று பத்திரிக்கையாளர்களைப் பார்த்துக் கூறினார் அமிர். ஜெயவர்த்தன மீதும் அவரது அரசாங்கத்தின் மீது நாம் வைத்திருந்த நம்பிக்கையினை முழுமையாக இழந்துவிட்டோம். அவர்களுடன் பேசுவதில் இனிப்பயனில்லை. தமிழர்களை அழிக்கவே அவர்கள் காத்திருக்கிறார்கள் என்று அவர் கூறினார். ஆவணி 14 ஆம் திகதி அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் சம்பந்தனும் இந்திராகாந்தியைச் சென்று சந்தித்தனர். இந்திராவின் ஆலோசகர் கோபாலசாமி பார்த்தசாரதி மற்றும், இந்திராவின் செயலாளர் பி. சி. அலெக்ஸாண்டர் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர். இலங்கையில் நிலவும் சூழ்நிலை குறித்து இரண்டுமணி நேரம் அவர்கள் பேசினார்கள். பின்னர், தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அத்தீர்வில் இந்தியா வகிக்கப்போகும் பாத்திரம் குறித்தும் பேசப்பட்டது. தமிழர்களின் பிரச்சினை தொடர்பான சுருக்கமான சரித்திரத்தை இந்திராவுக்கு விளக்கினார் அமிர். அகிம்சை வழியில் தந்தை செல்வாவினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களும் அதன் தோல்வியும் அவருக்கு உணர்த்தப்பட்டது. தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பாகவும், அச்சமின்றியும் வாழ்வதே இன்று அவர்கள் முன்னாலிருக்கும் உடனடித் தேவை என்று அவர் கூறினார். "சுய அதிகாரம் மிக்க சமஷ்ட்டிக் கட்டமைப்பு ஒன்றினையே நாம் கோரினோம். அது மறுக்கப்பட்டதனாலேயே தனிநாட்டிற்கான கோரிக்கையினை முன்வைத்தோம்" என்று அவர் கூறினார். தமிழரின் பிரச்சினை தொடர்பான இந்தியாவின் கொள்கைகளை இந்திரா முன்வைத்தார். இலங்கையைப் பிரிப்பதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று அவர்களிடம் திட்டவட்டமாகக் கூறினார் . ஒன்றுபட்ட இலங்கைக்குள், தனிநாட்டிற்குக் குறைவான சுய ஆட்சி உள்ள பிராந்தியங்கள் எனும் அடிப்படையில் தமிழர்கள் தீர்வொன்றினைக் கோரமுடியும் என்று அவர்களிடம் கூறினார் இந்திரா. "உங்களின் முதலாவது கோரிக்கையான சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வுக்கே செல்லுங்கள், இந்தியா உங்களுக்கு ஆதரவாக நிற்கும்" என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரிடம் தெரிவித்தார். என்னுடன் பின்னர் பேசிய சம்பந்தன், இலங்கையின் தமிழர் ‍- சிங்களவர் பிணக்கில் இந்தியா எத்தரப்பையும் ஆதரிக்காது என்று இந்திரா தம்மிடம் உறுதிபடக் கூறியதாகச் சொன்னார். சிங்களவர்களின் நலன்களைப் பாதிக்காதவகையில் தமிழர்களுக்கு நியாயமான தீர்வொன்றினை வழங்குவது மட்டுமே இந்தியாவால் செய்யக்கூடியதும், செய்யவிரும்புவதும் என்று இந்திரா அமிர்தலிங்கம் தலைமையிலான‌ குழுவினரிடம் கூறியிருக்கிறார். இலங்கையில் சுய கெளரவத்துடனும், பாதுகாப்புடனும் தமிழர்கள் வாழ்வதை உறுதிப்படுத்த தன்னால் முயற்சியெடுக்க முடியும் என்றும் இந்திரா கூறியிருக்கிறார். பெரும்பான்மையினரான சிங்களவர்களின் நலன்களைப் பாதிக்காத வகையிலேயே இதனைச் செய்யவேண்டியிருக்கும் என்று அவர் இப்பேச்சுக்களின்போது வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இந்தியாவின் இந்த பரிந்துரைகளை உடனடியாகவே ஏற்றுக்கொண்ட அமிர்தலிங்கம், வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்களின் அபிலாஷைகள் பூர்த்திசெய்யப்பட்டாலே போதும் என்று இந்திராவிடம் தெரிவித்தார். தமிழர்களின் அபிலாஷைகள் என்று தந்தை செல்வாவின் சமஷ்ட்டிக் கட்சியினால் அறியப்பட்ட விடயங்களை 1956 ஆம் ஆண்டு திருகோணமலையில் நடைபெற்ற சமஷ்ட்டிக் கட்சியின் மாநாட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறிய அமிர்தலிங்கம் அதுகுறித்து இந்திராவுக்கு விளங்கப்படுத்தினார், தமிழர்களுக்கான தேசம், தமிழர்களுக்கான தாயகம், சுயநிர்ணய உரிமை மற்றும் குடியுரிமை ஆகியவற்றின் அடிப்படையிலேயே தமிழர்களின் அபிலாஷைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் விளங்கப்படுத்தினார். பின்னர் ஜெயார் தூதனுப்பிய ஹெக்டர் ஜயவர்த்தனவுடனான தனது பேச்சுக்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரிடம் விளங்கப்படுத்தினார் இந்திரா. மாவட்ட அபிவிருத்திச் சபைகளைப் பலப்படுத்த ஜெயவர்த்தன இணங்கியிருப்பதாக அவர்களிடம் தெரிவித்தார் அவர். ஆனால், இத்திட்டம் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யப் போதுமானது அல்ல என்று ஹெக்டரிடம் ஏற்கனவே இந்திரா தெரிவித்திருந்தார். அதனையடுத்து ஏனைய தீர்வுகள் குறித்து ஆராய ஜெயார் இணங்குவதாக இந்திராவிற்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாகவே மீண்டும் அனைத்துக் கட்சி மாநாடொன்றினைக் கூட்டப்போவதாக ஜெயார் அறிவித்திருந்தார். இதன் பின்னணியில், ஜெயார் உத்தேசித்திருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க விரும்புகிறீர்களா என்று அமிர் தலைமையிலான தூதுக்குழுவினரைப் பார்த்துக் கேட்டார் இந்திரா. இதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், மன்னாரில் நடைபெற்ற த.ஐ.வி. மு யினரின் வருடாந்த மாநாட்டில் இலங்கையரசாங்கத்துடன் இனிமேல் பேசுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டதாகக் கூறினார். எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக அவர் ஒவ்வொரு முறையும் கூறுவார், ஆனால் அவற்றினை ஒருபோதுமே அவர் நடைமுறைப்படுத்த மாட்டார் என்று ஜெயார் குறித்து இந்திராவிடம் கூறினார் அமிர்தலிங்கம். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஜெயவர்த்தனவுடன் 11 மாதங்களாகத் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தைகளை ஜெயவர்த்தன எப்படி தனக்குச் சார்பாகக் கையாண்டார் எனும் விடயத்தை இந்திராவுக்குத் தெரியப்படுத்தினார் அமிர். "கடந்த காலத்தில் இலங்கையரசுடன் செய்துகொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் அனைத்தையும் அவர்கள் கைவிட்டு விட்டதால், அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையினை நாம் முற்றாக இழந்துவிட்டோம்" என்று அமிர் கூறினார். பதிலளித்த இந்திரா, தானும் ஜெயவர்த்தனவை நம்புவதில்லை என்று தெரிவித்தார். ஆனால், பேச்சுவார்த்தைகளுக்காக ஜெயார் விடுக்கும் அழைப்பினை தமிழர்கள் தவறவிடக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். "நான் முன்னர் கூறியதுபோல, இப்பிரச்சினைக்கான தீர்வு பேச்சுவார்த்தை மேசையினூடாகவே எட்டப்பட முடியும்" என்று மீண்டும் கூறினார் இந்திரா. இந்திராவின் நிலைப்பாட்டைப் பாராட்டிய அமிர்தலிங்கம், பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதற்கான இணக்கத்தினைத் தெரிவித்தார். அமிர்தலிங்கத்தின் திடீர் மனமாற்றத்தையும், பேச்சுக்களில் கலந்துகொள்ளும் இணக்கத்தையும் இந்திரா பாராட்டினார். மறுநாளான ஆவணி 15 இல் நடந்த இந்திய சுதந்திர தின விழாவில் சிறப்பு அதிதியாக அமிர்தலிங்கத்தை அழைத்தார் இந்திரா. இந்தியாவின் செங்கோட்டைக்கு கெளரவமாக அழைத்துச் செல்லப்பட்ட அமிர்தலிங்கம், வெளிநாட்டு அரச அதிபர்களுக்கு இணையான வவேற்பினையும், உபசரிப்பையும் பெற்றுக்கொண்டார். அங்கு கலந்துகொண்ட அரச அதிபர்களில் அமிர்தலிங்கம் மட்டுமே எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். செங்கோட்டையிலிருந்து இந்திய நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்திரா இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக சிங்களவர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளைக் கடுமையாகக் கண்டித்தார். அது ஒரு இனக்கொலை என்று அவர் வர்ணித்தார். தமிழர்கள் சுயகெளரவத்துடனும், பாதுகாப்பாகவும் வாழ இந்தியா உதவும் என்றும் கூறினார்.
  6. அப்படியில்லை அண்ணா, இந்திரா கூட சிங்களவர்களின் நலன்களைப் பாதிக்காத வகையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள்த்தான் தீர்வொன்றினைக் கோரமுடியும் என்று அமிர்தலிங்கத்திற்குக் கூறியிருக்கிறார்.
  7. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளைத் தீர்க்க விரும்பிய இந்திரா ஜெயார் தூதனுப்பிய ஹெக்டர் ஜெயவர்த்தனவின் விஜயத்தின் பின்னர் இரு நாட்டு அதிகாரிகளும் இணைந்து அறிக்கையொன்றினை வெளியிடுவதென்று முடிவாகியது. இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது குறுக்கிட்ட‌ இந்திய அதிகாரிகள், "ஒன்றுபட்ட இலங்கைக்குள்" தமிழருக்கான தீர்வொன்றையே பிரதமர் இந்திரா கோருவதாக குறிப்பிடச் சொன்னார்கள். சுதாரித்துக்கொண்ட இலங்கையதிகாரிகள், "ஒன்றுபட்ட" இலங்கை எனும் பதத்தினை நிராகரித்து "ஓற்றை நாடான" எனும் பதத்தினை பாவிக்கக் கோரினர். நிலைமை சிக்கலடைவதை அவதானித்த இலங்கைக் குழுவின் தலைவர் ஹெக்டர், தன்னுடன் வந்திருந்த அதிகாரிகளை அடக்கி வாசியுங்கள், இந்திராவின் வாயால் நாம் விரும்பாத சொற்களை வரப்பண்ணாதீர்கள் என்று கட்டுப்படுத்தினார். இந்திரா தனது எண்ணத்தை கூறும் அதிகாரத்தை நாம் கேள்விகேட்கக் கூடாது என்று கூறினார் அவர். இதனை ஜெயாரின் ஆலோசகரான பேர்ணாட் திலகரட்ணவும் ஆதரித்தார். அன்று மாலை இந்தியப் பாராளுமன்றத்தில் இந்திரா உரையாற்றினார். ஜெயாரின் விசேட பிரதிநிதி ஹெக்டர் இந்தியா வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். அவருடனான பேச்சுக்களில் இலங்கையில் நடந்துவரும் சம்பவங்கள் குறித்த இந்திய மக்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் கரிசணை குறித்து தான் தெரிவித்ததாக கூறினார். மேலும், தமிழரின் பிரச்சினைகளுக்கான தீர்வினை ஆராய ஜெயவர்த்தன ஆடி மாதத்தில் கூட்டவிருந்த சர்வகட்சி மாநாடு குறித்தும் பேசிய இந்திரா, அம்மாநாடு நடவாது போனமை குறித்தும் குறிப்பிட்டார். "அவர்கள் என்னிடம் முன்வைத்த தீர்வுக்கான யோசனைகளை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர்களிடம் தெரிவித்தேன். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து இந்தியா முன்வைக்கும் பரிந்துரைகளை ஆராய இலங்கை ஆயத்தமாக இருப்பதாக என்னிடம் கூறினார்" என்று தெரிவித்தார். இந்திரா காந்தி "பேச்சுவார்த்தைகள் ஊடாக தமிழ் மக்களும் அரசாங்கம் சுமூகமான தீர்வுகுறித்துக் கலந்துரையாட முன்வரவேண்டும் என்று நான் எனது விருப்பத்தை அவர்களிடம் தெரிவித்தேன். இப்பேச்சுவார்த்தைகள் வெற்றியளிப்பதற்கான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யக் காத்திருப்பதாகவும் அவர்களிடம் கூறினேன். இரு நாடுகளுக்கும் இருக்கும் பாரம்பரிய உறவு முறையினை அடிப்படையாகக் கொண்டு இந்தியா செய்ய விரும்பு உதவிகள் குறித்த நன்றியை இலங்கை ஜனாதிபதி என்னிடம் தெரிவித்திருக்கிறார். எமது உதவிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்" என்றும் தெரிவித்தார் ஆவணி 12 ஆம் திகதி லோக்சபாவில் இந்திரா வெளியிட்ட அறிக்கை இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டின் அடிப்படையினைத் தெளிவாகக் காட்டியிருந்தது. இந்திராவின் அறிக்கயில் குறிப்பிடப்பட்டிருந்த அடிப்படை இலக்கணங்கள் இவ்வாறு இருந்தன, 1. பிரிக்கப்படாத, ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே தமிழருக்கான தீர்வு வழங்கப்பட வேண்டும். 2. வழங்கப்படும் தீர்வு தமிழர்களின் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்துபவையாக இருக்க வேண்டும். மேலும், வெளி மத்தியஸ்த்தத்தின் உதவியினூடாகவே தீர்வு எட்டப்படல் வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்திரா காந்தியின் காலத்திலிருந்தே ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்தும் தீர்வு காணப்படல் வேண்டும் என்றே இந்தியா தொடர்ச்சியாகக் கூறி வருகிறது. ஜெயார் அனுப்பிய பிரதிநிதி இலங்கை மீண்டபோது பல அமைச்சர்கள் இந்திராவினால் பாவிக்கப்பட்ட "ஒன்றுபட்ட இலங்கை" எனும் பதத்திற்கெதிரான தமது கடுமையான ஆட்சேபணையினை வெளியிட்டார்கள். குறைந்தது "ஒன்றுபட்ட இலங்கை" எனும் பதத்தினைப் பாவிக்கும்போது இலங்கையின் கரிசணைகளையாவது அறிக்கையினுள் உள்வாங்கியிருக்க வேண்டும் என்று அவர்கள் விமர்சித்தார்கள். ஆனால், தனது முடிவில் தீர்க்கமாக நின்ற ஹெக்டர், இந்தியாவின் கொள்கைகளை அவர்கள்தான் முடிவெடுக்கமுடியும், இலங்கையர்கள் அல்ல என்று கூறிவிட்டார். தமிழர் மீதான அரச ஆதரவுடனான தாக்குதல் முடுக்கிவிடப்பட்ட நாளான ஆடி 25 ஆம் திகதி அமிர்தலிங்கமும் ஏனைய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் வவுனியாவில் நின்றிருந்தார்கள். மன்னாரில் நடைபெற்ற தமது வருடாந்த மாநாட்டில் இலங்கையரசுடன் பேரம்பேசலில் ஈடுபடுவது இல்லை என்று முடிவெடுத்தார்கள். வவுனியாவில் இருக்கும்போது ஆவணி 29 ஆம் திகதி இந்திராவிடமிருந்து அமிர்தலிங்கத்திற்குச் செய்தியொன்று வந்திருந்தது. "இந்தியாவுக்கு வாருங்கள், உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம்" என்பதே இந்திராவிடமிருந்து வந்த அந்தச் செய்தி. ஆனால், அமிர்தலிங்கத்தால் வவுனியாவை விட்டு வெளியேற முடியவில்லை. வழியில் சிங்களவர்கள் அவரை அடையாளம் கண்டுவிட்டால் அவர் கொல்லப்படுவது உறுதி எனும் நிலைமை காணப்பட்டது. ஆகவே, இந்தியத் தூதர் சத்வால் ஊடாக தான் இந்தியா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துதருமாறு அவர் கேட்டுக்கொண்டார். அமிர்தலிங்கம் மட்டுமல்லாமல் அவருடன் சிவசிதம்பரமும், சம்பந்தனும் கூடவே தில்லிக்குப் பயணமாவதற்கான ஏற்பாடுகளை சத்வால் செய்துகொடுத்தார். ஆவணி 6 ஆம் திகதி வவுனியாவில் கூடிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பில் புதிதாக சேர்க்கப்பட்ட ஆறாவது திருத்ததினூடான இலங்கைக்குள் தனியான நாடொன்றினை உருவாக்க முயலமாட்டோம் என்கிற சத்தியப்பிரமாணத்தை செய்யப்போவதில்லை என்று முடிவெடுத்தனர். ஆனால், அரச அதிகாரிகளான தமிழர்கள் இச்சத்தியப்பிரமாணம் குறித்து தமது விருப்பத்தின்படி முடிவெடுக்கலாம் என்று கூறிவிட்டனர். இந்த விடயம் புலிகளின் உயர்பீடத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. இது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை என்று பிரபாகரன் கருதினார். இச்சத்தியப்பிரமாணம் எந்த அர்த்தமும் கொண்டிருப்பதாக அவர் நினைக்கவில்லை. புதிய அரசியலமைப்பின் மேல் சத்தியப்பிரமாணம் செய்யும் தமிழ் அதிகாரிகள் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதை எதுவும் தடுக்கப்போவதில்லை என்று அவர் கூறினார். இச்சத்தியப்பிரமாணத்தை ஒரு பிரச்சினையாக்குவதன் மூலம் அரச அதிகாரிகளும் அவர்களது குடும்பங்களும் ஏற்கனவே முகம்கொடுத்துவரும் பிரச்சினைகளுக்கு மேலதிகமாக இன்னொரு பிரச்சினையாக இதனை உருவாக்க வேண்டாம் என்று அவர் கூறினார். தெற்கில் பணிபுரிந்துவந்திருந்த பல தமிழ் அதிகாரிகள் கலவரத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. "எமது முடிவுகள் மூலம் அவர்களை வீதியில் நாம் எறிந்துவிடக் கூடாது" என்று அவர் உறுதியாகக் கூறினார். கந்தசாமி பத்மநாபா ஆனால், பத்மாநாபாவின் அமைப்பான ஈ.பி.ஆர்.எல் எப் வித்தியாசமான நிலைப்பாட்டினை எடுத்தது. சிங்கள அதிகாரத்துக்கெதிரான தமிழரின் நிலைப்பாட்டை அடையாள வழியிலாவது தமிழர்கள் காட்டவேண்டும் என்று பத்மநாபா கூறினார். அரசின் ஆறாவது திருத்தச் சட்டத்தின்மேல் சத்தியப்பிரமாணம் செய்து பதவியை நீடிக்க வேண்டிய தேவை அதிகாரிகளுக்கு இல்லை என்று அவர் வாதிட்டார். ஈரோஸ் மற்றும் புளொட் அமைப்புக்கள் இதுகுறித்து எந்த முடிவினையும் எடுக்க மறுத்துவிட்டன. இவ்வமைப்புக்களின் தலைவர்கள் அப்போது தமிழ்நாட்டில் தங்கியிருந்தனர். பத்மநாபாவின் முடிவினை ரமேஷ் தலைமையில் சிறிய போராளிக் குழுவொன்று நடைமுறைப்படுத்தியது. இந்தக் குழுவில் இருந்த ஏனையவர்களின் பெயர்கள், சுபத்திரன், மோகன், சுதன், குமார், இந்திரன் மற்றும் இளங்கோ. அரச அலுவலகங்களுக்குள் நுழைந்த இவர்கள் அங்கிருந்த ஆவணங்களைக் கிழித்தெறிந்தார்கள். ஒரு பொலீஸ் ஜீப் உடபட சில அரச வாகனங்களை அவர்கள் எரியூட்டினார்கள். ஆனால், ஈ.பி.ஆர். எல். எப் இன் அரசுக்கெதிரான இந்தச் செயற்பாடுகள் எந்த விளைவினையும் ஏற்படுத்தவில்லை. தமிழ் அதிகாரிகளைப் பொறுத்தவரையில் தமது பணிகளைத் தக்கவைப்பதே முக்கிய கரிசணையாக இருந்தது. லேக் ஹவுஸ் நிறுவனமும் தமது ஊழியர்களை ஆறாவது திருத்தச் சட்டத்தின் மீது சத்தியப்பிரமாணம் எடுக்கும்படி கேட்டிருந்தது. எனது படிவத்தில் கையொப்பமிட்டு எனது ஆசிரியரிடம் கையளித்தேன். கையொப்பமிட்ட எவருமே அதன்பின்னர் இந்த சத்தியப்பிரமாணம் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. மிகக்கடுமையான சிரமங்களுக்கு மத்தியில் அமிர்தலிங்கம் கொழும்பை வந்தடைந்தார். மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்னிருக்கையில் அமர்ந்தே அவர் கொழும்பு வந்து சேர்ந்தார். கொழும்பில், இந்தியத் தூதரக அதிகாரிகளினால் அவர் பொறுப்பெடுக்கப்பட்டார். ஆவணி 11 ஆம் திகதி அவர் சென்னைக்குப் பயணமானார். அமிர்தலிங்கத்தை வரவேற்கவென தில்லியிலிருந்து வந்திருந்த இந்திய உள்நாட்டு விவகார அமைச்சர் பி.வெங்கடசுப்பையா மற்றும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் கே. எஸ். பாஜ்பாய் ஆகியோர் சென்னையில் அமிரைச் சந்தித்தனர். எதிர்க்கட்சியான ஜனதாக் கட்சியின் இரா செழியனும் அங்கு இருந்தார். சென்னையில் அன்றிரவு தங்கிய அமிர்தலிங்கம் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனையும் தி.மு.க வின் தலைவர் மு கருநாநிதியையும் சென்று சந்தித்தார். மறுநாளான ஆவணி 12 ஆம் திகதி சென்னையிலிருந்து தில்லிக்கு விமானத்தில் கிளம்பிச் சென்றார். ஹைதரபாத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்மராவும் அமிருடன் பயணத்தில் இணைந்துகொண்டார். விமானத்தில் பயணித்தவாறே அமிரும் நரசிம்மராவும் சம்பாஷணையில் ஈடுபட்டனர். தில்லியில் விமான நிலைய கேட்போர் கூடத்தில் பத்திரிக்கையாளர் மாநாடொன்றினை ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த நரசிம்மராவோ, அமிரை அங்கே அழைத்துச் சென்றார். கூடிநின்ற பத்திரிகையாளர் முன்னிலையில் அமிர் பேசினார்.
  8. இணையத்தில் வைரலாகும் காணொளிகளில் சிறிய ரக விமானம் ஒன்று நடுவானில் இருந்து விழுந்து தீப்பிடித்து எரியும் காட்சி பதிவாகியுள்ளது. விமானம் தரையை நோக்கி விழும் விதத்தை நோக்கும்போது ஆகாயத்தில் வைத்தே விமானம் தாக்கப்பட்டு செயல் இழக்க செய்யப்பட்டிருப்பதும் அதன் இறக்கைகள் இரண்டும் துண்டிக்கப்பட்டபின் விமானிகளின் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி வீழ்வதையும் காணக்கூடியதாயுள்ளது. அண்மையில் புட்டினுக்கு எதிராக இராணுவக்கிளர்ச்சி செய்த பிரிகொஜினுடன் வாக்னரின் நிறுவனர் உற்கின் என்பவரும் விமானத்தில் பயணம் செய்ததாக ரஷ்யாவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி உண்மையாகின் வாக்னர் கூலிப்படையின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டது ஊர்ஜிதமாகிறது. இருப்பினும் இந்த விமான விபத்தில் சிக்கி வாக்னர் தலைமைகள் இறந்துவிட்டதாக ஒரு செய்தியை வேண்டும் என்றே பரப்ப பொய் நாடகம் ஒன்று அரங்கேற்றப்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு என்று அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர். வாக்னரின் தலைமைகள் சேர்ந்து ஒரே விமானத்தில் பயணம் செய்வது சாத்தியமில்லை என்றும் அப்படி செய்திருந்தால் தாங்கள் புட்டினின் சதிவலையில் இலகுவாக விழுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திவிடும் என்பதை முன் கூட்டியே கணிக்கத் தெரியாத முட்டாள்கள் இல்லை என்றும் வேறொரு இணையசெய்தி சந்தேகத்தை விதைக்கிறது. புட்டினுக்கு எதிரான கிளர்ச்சி தோல்வியில் முடிந்ததையடுத்து திரைக்குப்பின்னால் சமாதான ஒப்பந்தம் உருவானபோது வாக்னர் தலைவர்களுக்கு முடிவுகட்டும் இரகசிய ஏற்பாடுகளும் சமகாலத்தில் செய்யப்பட்டதாக இன்னொருதகவல் கூறுகிறது.
  9. சமாதான காலத்தில் தூதுக்குழுவினரோடு வன்னி வந்திறங்கும் சிங்கள உலங்குவானூர்தி ஒன்று 2006.05.09
  10. மகளீர் ஆர்.பி.ஜி. கொமாண்டோக்கள் பயிற்சியின் போது
  11. கனகபுரம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற மாவீரர் மதிப்பளிப்பு நிகழ்வின் போது 21/11/2006
  12. முதுநிலை அதிகாரிகளுக்கான கணையெக்கி, சேணேவி ஒருங்கிணைப்பாளர் பயிற்சி நெறி நிறைவு நாள் அணி 01, அணி 02 16/07/2006
  13. கணையெக்கி (Mortar), சேணேவி (Artillery) ஒருங்கிணைப்பு பயிற்சி நிறைவு நாள் 23/02/2006 சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் மேஜர் றோய் பயிற்சிப் பாசறையில் நடைபெற்றது. கேணல் கோபித்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.