Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Justin

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    7051
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    19134
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    8907
    Posts
  4. Nathamuni

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    13720
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/14/23 in all areas

  1. ஜெயாரை பேச்சுவார்த்தை மேசைக்கு வரவழைக்கவே ஆயுதப் போராட்டம், தனிநாட்டிற்காக அல்ல ‍ - இந்திரா போராளிகளுக்கு இராணுவப் பயிற்சியினை வழங்கும் இந்திராவின் மறைமுகமான திட்டத்திற்கு உறுதியான நோக்கம் ஒன்று இருந்தது. தமிழ்ப் போராளி அமைப்புக்களிடமிருந்து இந்திரா எதிர்பார்த்த ஒரே விடயம் ஜெயவர்த்தனவை பேச்சுவார்த்தை மேசைக்குத் தள்ள வைப்பதே அன்றி அதற்கு மேல் வேறு எதுவும் இல்லை. இந்தத் திட்டத்தின் பிரதான திட்டமிடலாளர்களில் ஒருவர் சென்னையிலிருந்து வெளிவரும் புரொன்ட் லைன் சஞ்சிகைக்கு செவ்வியொன்றினை வழங்கியபோது, "ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஜெயவர்த்தனவை பேச்சுவார்த்தை முயற்சிக்குக் கொண்டுவர முடியும் என்று இந்திரா நம்பியதாலேயே தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு இராணுவப் பயிற்சியினை வழங்கும் முடிவினை எடுத்தார். தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கியதன் ஒரே நோக்கம் இலங்கை அரசாங்கத்தின் தலையினைக் கொய்வதல்ல, மாறாக தமிழர்களின் பின்னால் இந்தியா எனும் பெரிய சக்தி இருக்கிறது எனும் செய்தியினை இலங்கை அரசாஙத்திற்கு உணர்த்தவே" என்று கூறினார். பெரும்பாலான போராளி அமைப்புக்களின் தலைவர்கள் இந்தியாவின் இந்தக் கொள்கை பற்றி அறிந்தே இருந்தார்கள். பிரபாகரன் இதுகுறித்து மிகத் தெளிவான பார்வையினைக் கொண்டிருந்தார். புலிகளின் அரசியல் தத்துவாசிரியர் அன்டன் பாலசிங்கம் புரொண்ட் லைன் சஞ்சிகைக்குப் பேட்டியளித்தபோது, "இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் ஒரே நோக்கம் இலங்கையரசாங்கம் தனது அழுங்குப் பிடியில் இருந்து இறங்கி வந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்வரை போராளிகள் ஊடாக ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வது. அவ்வாறு இலங்கையரசு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டதும், போராளிகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புவது" என்று கூறினார். புலிகளின் தலைவர்கள், சிறுமலை பயிற்சி முகாம், திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு, 1985 ஆம் ஆண்டு ‍ வே.பிரபாகரன் (இடமிருந்து 3 ஆவது), பொட்டு அம்மான்(வலதுபுறமிருந்து முதலாவது) தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு இராணுவப் பயிற்சியினை வழங்கவும், ஆயுதங்களைக் கொடுக்கவும் திட்டத்தினை வரையுமாறு மூன்றாவது புலநாய்வு அமைப்பைப் பணித்த இந்திரா, உடனடியாக இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துமாரும் உத்தரவிட்டார். இந்தியாவில் ஏற்கனவே இருவேறு புலநாய்வு அமைப்புக்கள் இயங்கிவந்த நிலையில், இந்திராவினால் புதிதாக அமைக்கப்பட்ட நாத்தின் அமைப்பு "மூன்றாவது அமைப்பு" என்று அழைக்கப்படலாயிற்று. இந்தியாவின் முதலாவது புலநாய்வுச் சேவையான புலநாய்வுப் பிரிவு 1953 ஆம் ஆன்டிலிருந்து இலங்கையினுள், இந்திய தூதரகத்தின் அதிகாரிகள் எனும் போர்வையில் இயங்கி வருகிறது. 1968 ஆம் ஆண்டு சீக்கியப் பிரிவினைவாதப் போராளிகளுக்கு பாக்கிஸ்த்தான் உளவுப்பிரிவு பயிற்சியும் ஆயுதமும் வழங்க ஆரம்பித்ததை இந்திய புலநாய்வுத் துறை (முதலாவது அமைப்பு) கண்டுபிடிக்கத் தவறியதையடுத்து அதன்மீதான நம்பிக்கையினை இந்திரா இழந்திருந்தார். காஷ்மீர் தொடர்பாக இந்தியாவுடன் இரு போர்களில் ஈடுபட்டிருந்த பாக்கிஸ்த்தான், சீக்கியர்கள் தனிநாடு ஒன்றினை உருவாக்க உதவுவதன் மூலம் இந்தியாவைப் பலவீனப்படுத்த கங்கணம் கட்டியிருந்தது. இதனைத் தடுப்பதற்கு செயலில் இறங்கிய இந்திரா அமெரிக்க, இங்கிலாந்து புலநாய்வுப் பிரிவுகளுக்கு நிகரான புலநாய்வுக் கட்டமைப்பொன்றினை உருவாக்குமாறு தனது பாதுகாப்பு ஆலோசகராக அப்போது பணியாற்றி வந்த ரமேஷ்வர் நாத் காவோ வைப் பணித்தார். இந்தியாவின் இரண்டாவது புலநாய்வுப் பிரிவான ரோ 1968 ஆம் ஆண்டு இந்தியாவின் வெளியகப் புலநாய்வுப் பிரிவாக உருவாக்கப்பட்டது. அதன் ஆரம்பகால நோக்கமே பாக்கிஸ்த்தானிலிருந்து வரும் அச்சுருத்தலைச் சமாளிப்பதுதான். பிற்காலத்தில், ஜெயவர்த்தனவின் அரசாங்கம் அமெரிக்காவின் பக்கம் சாயத் தொடங்கியதையடுத்து ரோவின் பார்வை இலங்கை மீதும் திரும்பியது. பிரதம மந்திரியின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே ரோ அமைப்பு இயங்கியது. காவோ இதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். ரோவின் கட்டமைப்பும், செயற்பாடுகளும் பாராளுமன்றத்திடமிருந்தும் மறைக்கப்பட்டு இருந்தன. கட்டுப்பாடற்ற வளங்கள் அதற்கு வழங்கப்பட்டன. 1971 ஆம் ஆண்டு இடம்பெற்ற வங்கதேசப் பிரச்சினையில் ரோ மிக முக்கியமான பங்கொன்றினை ஆற்றியிருந்தது. வங்கதேசத்தின் பலமான முக்திபாகினி ஆயுத அமைப்பு உட்பட பல போராளி அமைப்புக்களுக்கு ரோ ஆயுதப் பயிற்சியினை வழங்கியது. தற்போது 8000 ஆண் , பெண் உளவாளிகளைக் கொண்ட பெரும் உளவுக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் ரோ, சுமார் 40 சர்வதேச நாடுகளில் இயங்கி வருகிறது. மிக அண்மைக்காலமாக ஆப்கானிஸ்த்தானில் இயங்கும் தலிபான்கள் மற்றும் அல்‍கொய்தா தீவிரவாதிகள் குறித்த புலநாய்வுத் தகவல்களை அமெரிக்கா தலைமையில் நடைபெறும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் நடவடிக்கைக்கு ரோ வழங்கிவருகிறது. ஆப்கானிஸ்த்தானில் இயங்கும் தீவிரவாதிகளின் முகாம்கள் தொடர்பான வரைபடங்கள், தீவிரவாதத் தலைவர்களின் புகைப்படங்கள், பாக்கிஸ்த்தானிற்குள் செயற்பாட்டுவரும் தீவிரவாதிகளின் முகாம்கள், அல்கொய்தா அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லாடனின் நடமாட்டங்கள் மற்றும் அவரது தாக்குதல்த் திட்டங்கள் குறித்த தகவல்களையும் ரோ அமைப்பு அமெரிக்க புலநாய்வு அதிகாரிகளுக்கு வழங்கிவருகிறது.
  2. இந்த விலையுயர்ந்த போன்களோடு கோபமில்லை! ஆனால், நாம் கூடக் கொண்டு திரியும் பொருள் "நம்மை" விட "பொருளாதாரப் பெறுமதி" கூடவாக இருந்தால் நமக்கு ஆபத்தல்லவா😂? அதனாலேயே பெறுமதியான அப்பிள் பொருட்கள் வாங்குவதில்லை! அண்மையில், விலை சுமாரான மோரொறோலா போன் ஒன்றை குடும்பத்தில் ஒருவருக்கு வாங்கினேன்! நல்லாத் தான் இருக்கிறது. ஐ போனின் 25% விலையில், தேவையான தரம் கிடைத்து விட்டது!
  3. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ தமிழீழ விடுதலைப்போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் ஈழப் புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ்) ஆகிய இயக்கங்களில் போராளிகளாகயிருந்து வீரச்சாவினைத் தழுவி மாவீரராகிய முஸ்லிம்கள் "செம்பாறை புத்தளத்தின் செழிப்பு மண்ணடா! சேர வேண்டும் இஸ்லாத்தோடு இன்பத்தமிழடா!" த.வி.பு.இன் நோர்வே கலை பண்பாட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்ட "வெற்றி நிச்சயம்- 1" இறுவட்டிலுள்ள 'யாழ் பாடும்' என்னும் பாடலிலிருந்து. பாடல் எழுதியவர் "கல்கிதாசன்" 1) லெப். ஜோன்சன் (ஜெயா ஜுனைதீன்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 22.08.1963 — 30.11.1985 --> படையினரைத் தாக்கிவிட்டு சிறையில் இருந்து தப்பிச் செல்கையில் சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. --> தமிழீழ விடுதலைப்போரில் களச்சாவான முதலாவது இசுலாமிய தமிழ் மாவீரர் இவராவார். 2) வீரவேங்கை லத்தீப் (முகமது அலியார் முகமது லத்தீப் ஒல்லிக்குளம்) காத்தான்குடி, மட்டக்களப்பு. 16.11.1962 — 24.12.1986 --> மட்டக்களப்பு தாழங்குடாவில் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் தேசவஞ்சகக் கும்பலின் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 3) வீரவேங்கை நசீர் (முகமது நசீர்) காங்கேயனோடை, மட்டக்களப்பு. 15.03.1963 — 30.12.1987 --> மட்டக்களப்பு காத்தான்குடியில் ஜிகாத் கும்பல் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 4) வீரவேங்கை சாபீர் (சரிபுதீன் முகமது சாபீர்) தியாவெட்டுவான், மட்டக்களப்பு. 13.05.1988 --> நாசிவன்தீவில் ரெலோ தேசவஞ்சகக் கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் வீரச்சாவு. 5) வீரவேங்கை ஜெமில் (ஜெயாத் முகமது உசைதீன்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 28.03.1968 — 05.08.1989 --> மட்டக்களப்பு ஓட்டமாவடியில் இந்தியப் படையினருடனான சமரில் வீரச்சாவு. 6) வீரவேங்கை ஆதம் (எஸ்.எம். ஆதம்பாவா) சாய்ந்தமருது, அம்பாறை. 21.12.1967 — 03.01.1990 --> மட்டக்களப்பு கல்முனைக்குடியில் முஸ்லிம் ஜிகாத் கும்பல் மேற்கொண்ட கோரத் தாக்குதலில் வீரச்சாவு. 7) வீரவேங்கை அலெக்ஸ் (அகமது றியாஸ்) மருதமுனை, நீலாவணை, மட்டக்களப்பு. 23.01.1970 — 04.05.1990 --> அம்பாறை கல்முனை இறக்காமத்தில் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 8 ) வீரவேங்கை கபூர் (முகமது அலியார் முகமது சலீம்) காங்கேயனோடை, மட்டக்களப்பு. 11.06.1990 --> மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு. 9) வீரவேங்கை தாகீர் (முகைதீன்பாவா அன்சார்) திருகோணமடு, பொலன்னறுவை. 29.04.1972 — 11.06.1990 --> மட்டக்களப்பு கல்குடா பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 10) வீரவேங்கை அன்வர் 15.06.1990 --> அம்பாறை பாணமையில் விடுதலைப் புலிகளின் தாவளத்தை சிறிலங்கா படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு. 11) வீரவேங்கை தௌவீக் (இஸ்மாயில்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 12.06.1990 --> திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தாவளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 12. வீரவேங்கை ஜிவ்றி (முகம்மது இலியாஸ்) 4ம் வட்டாரம், மீராவோடை, வாழைச்சேனை, மட்டக்களப்பு. 05.03.1974 — 13.06.1990 --> திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தாவளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 13) வீரவேங்கை அர்ச்சுன் ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 14.06.1990 --> திருகோணமலை திருமலை 3ம் கட்டை பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 14) வீரவேங்கை ஜலீம் (முகமது இஸ்மாயில் மன்சூர்) ஏறாவூர், மட்டக்களப்பு. 01.09.1990 --> முல்லைத்தீவில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற நேரடிச் சமரில் வீரச்சாவு. 15) வீரவேங்கை மஜீத் (முகமது இஸ்காக் கூப்சேக்அலி) மீராவோடை, மட்டக்களப்பு. 18.06.1990 --> வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 16) வீரவேங்கை ஜின்னா (லெப்பைதம்பி செய்னூர்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 20.10.1970 — 19.06.1990 --> அம்பாறை பொத்துவில் கொட்டுக்கலவில் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 17) வீரவேங்கை தர்சன் (அப்துல்காதர் சம்சி) 13.06.1990 18) வீரவேங்கை நகுலன் (ஜுனைதீன்) அட்டாளைச்சேனை, காரைதீவு, அம்பாறை. 26.06.1988 --> அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படையினர் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 19) வீரவேங்கை அகஸ்ரின் (சம்சுதீன் அபுல்கசன்) அக்கரைப்பற்று, அம்பாறை. 15.08.1971 — 27.10.1988 --> அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படை மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலின் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவு. 20) வீரவேங்கை நசீர் (சம்சுதீன் நசீர்) ஒலுவில், அம்பாறை. 19.02.1960 — 17.02.1989 --> மட்டக்களப்பு நிந்தவூரில் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் தேசவஞ்சகக் கும்பலினால் பிடிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கோரத்தாக்குதலில் வீரச்சாவு. 21) வீரவேங்கை பாறூக் (நாகூர்தம்பி பாயிஸ் ஆதாம்லெப்பை) அக்கரைப்பற்று, அம்பாறை. 08.01.1973 — 22.06.1989 --> அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படை ஈ.என்.டி.எல்.எவ்வினரின் முற்றுகையின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு. 22) வீரவேங்கை அஸ்வர் (ஜபார் ஜாபீர்) அட்டாளைச்சேனை, அம்பாறை. 06.12.1989 --> பழுகாமத்தில் ஈ.என்.டி.எல்.எவ் கும்பலின் முகாம்மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 23) வீரவேங்கை சியாத் (மீராசாகிபு காலிதீன்) சாய்ந்தமருது, அம்பாறை. 18.08.1972 — 06.12.1989. --> பழுகாமத்தில் ஈ.என்.டி.எல்.எஃவ் தேசவிரோத கும்பலின் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 24) வீரவேங்கை சந்தர் எ சுந்தர் (அகமது லெப்பை செப்லாதீன்) வேப்பானைச்சேனை, அம்பாறை. 25.02.1973 — 25.05.1990 --> அம்பாறை காரைதீவு பகுதியில் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 25) வீரவேங்கை ராவ் (முகமது ரவீக்) பொத்துவில், அம்பாறை. 15.06.1990 --> அம்பாறை இலகுகல்லில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 26) வீரவேங்கை இராமன் (மாப்பிள்ளை லெப்பை அல்வின்) இறக்காமம், அம்பாறை. 16.06.1990 --> மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 27) வீரவேங்கை கனியா (அபுசாலி புகாரி) அக்கரைப்பற்று, அம்பாறை. 15.07.1990 28) வீரவேங்கை கமால் மட்டக்களப்பு 07.06.1990 29) வீரவேங்கை கசன் (ஆதம்பாவா கசன்) மூதூர், திருகோணமலை. 05.11.1989 --> முல்லைத்தீவு மாங்குளத்தில் தவறுதலாக ஏற்பட்ட வெடிநேர்ச்சியின்போது வீரச்சாவு. 30) வீரவேங்கை சலீம் 03.07.1987 --> அம்பாறை மாவட்டம் தாண்டியடி பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 31) வீரவேங்கை ஜெகன் (ஆப்தீன் முகமது யூசுப்) குச்சவெளி, திருகோணமலை. 08.04.1972 — 15.06.1990 --> திருகோணமலை கட்டைபறிச்சான் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 32) வீரவேங்கை நியாஸ் மூதூர், திருகோணமலை. 17.06.1990 --> மட்டக்களப்பில் சிறிலங்கா வான்படையினர் மேற்கொண்ட உலங்குவானூர்தி தாக்குதலில் வீரச்சாவு. 33) வீரவேங்கை கலையன் (கச்சுமுகமது அபுல்கசன்) முதலாம் வட்டாரம், புல்மோட்டை, திருகோணமலை. 14.06.1990 --> (அறியில்லா இடத்தில்) சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 34) வீரவேங்கை டானியல் (கனீபா முகமது ராசீக்) திருகோணமலை. 23.06.1970 — 22.06.1990 --> திருகோணமலை திருமலை 2ம் கட்டை பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 35) வீரவேங்கை நிர்மல் (அப்துல் நசார்) புடவைக்கட்டு, திருகோணமலை. 19.01.1972 — 27.07.1990 --> திருகோணமலை திருமலை திரியாயில் ஏற்பட்ட வெடிநேர்ச்சியில் வீரச்சாவு. 36) வீரவேங்கை உஸ்மான் கிழங்கு (அப்துல்காதர் சாதிக்) யாழ்ப்பாணம். 10.05.1966 — 25.08.1986 --> யாழ். கோட்டையில் சிறிலங்கா படையினருடனான முற்றுகைச் சமரில் வீரச்சாவு. 37) வீரவேங்கை ரவீஸ் ராமநாதபுரம், கிளிநொச்சி. 08.08.2006 38)வீரவேங்கை குபீர் அக்கரைப்பற்று, அம்பாறை. 15.06.1990 --> அம்பாறை பாணாமையில் விடுதலைப் புலிகளின் முகாமை சிறிலங்கா படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு. 39) வீரவேங்கை பர்ஸாத் செட்டிக்குளம், வவுனியா 10.06.1990 40)வீரவேங்கை ரகுமான் 08.05.1986 --> வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் ஸ்ரீலங்கா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு. 41) வீரவேங்கை ரகீம் 08.05.1986 42) வீரவேங்கை கணேசன் (அப்துல்ஜபார் கணேசன்) யாழ்ப்பாணம் 19.03.2007 --> யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு. 43) வீரவேங்கை தமிழ்மாறன் (அப்துல் ரகுமான் நிமால்) ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு 01.01.1983 - 19.10.2000 --> யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் - 04” நடவடிக்கையின்போது வீரச்சாவு. 44) வீரவேங்கை வசந்தி (அப்துல்கரீம் கற்பகரூபவதி) முள்ளியான், கட்டைக்காடு, யாழ்ப்பாணம் 06.05.1978 - 26.06.1999 --> மன்னார் பள்ளமடு பகுதியில் ரணகோச நடவடிக்கைப் படையினரின் முற்றுகை முயற்சிக்கெதிரான முறிடிப்புச் சமரில் வீரச்சாவு. 45) வீரவேங்கை பர்சாண் (அப்துல்காதர் சம்சுதீன்) காக்கையன்குளம், வவுனியா 04.05.1969 - 15.06.1990 --> வவுனியா காமினி வித்தியாலயத்தில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 46) வீரவேங்கை நசீம் (கஜன்) (அப்துல்மானாப் முகமது நசீம்) மூதூர், திருகோணமலை 05.07.1964 - 25.07.1986 --> மூதூர் ஆலிம்சேனைப்பகுதியில் சிறிலங்கா படையினரின் சுடுகலச்சூட்டில் வீரச்சாவு. 47) வீரவேங்கை அருள் (மேலதிக விரிப்பு கிடைக்கப்பெறவில்லை) மன்னார் 48) வீரவேங்கை மருதீன் எ முகமது (சந்திரயோகு மருத்தீன்) உயிர்த்தராசன்குளம், மன்னார் 25.10.1965 - 15.10.1987 --> யாழ்ப்பாணம் கோட்டை பகுதியில் இந்தியப்படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 49) வீரவேங்கை பதூர்தீன் எ குஞ்சான் (காலித்தம்பி காதம்பவா) அக்கரைப்பற்று, அம்பாறை. 16.10.1963 - 07.06.1987 50) வீரவேங்கை கசாலி (சேகு முகமது சகாப்தீன்) ஆலிம்சேனை, மூதூர், திருகோணமலை 23.05.1989 --> மூதூர் 64ம் கட்டைப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டு வீரச்சாவு. 51) வீரவேங்கை குமார் (சேதுதாவீது காசிம்) இரத்தினபுரம், கிளிநொச்சி. 26.11.1988 --> யாழ்ப்பாணம் காரைநகரில் இந்தியப்படையின் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவு. 52) வீரவேங்கை கலீல் (கலீல் ரகுமான்) தோப்பூர், திருகோணமலை. 27.04.1988 --> யாழ்ப்பாணம் கப்பூது வெளியில் இந்தியப்படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு. 53) வீரவேங்கை அசீம் அஷாத் 54) 2ம் லெப். சாந்தன் (நைனா முகைதீன் நியாஸ்) நிலாவெளி, திருகோணமலை. 17.05.1972 — 06.02.1990 --> திருகோணமலை மாவட்டம் ஜமாலியா பகுதியில் அமைந்திருந்த ஈ.என்.டி.எல்எஃவ் கும்பலின் முகாமை தாக்கிவிட்டு தளம் திரும்பும்போது ஏற்பட்ட படகு நேர்ச்சியில் வீரச்சாவு. 55) லெப். ஜெமில் (கரீம் முஸ்தபா) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 12.06.1990 --> திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 56) லெப். ராஜிவ் எ ரகீம் எ நஜீம் (காசிம் துலானி) பட்டாணிச்சூர், புளியங்குளம், வவுனியா 15.09.1990 --> வவுனியாவில் நெஞ்சுவலி காரணமாக சாவு. 57) லெப் அருள் (யூசப் ஜாசிர்) உப்புக்குளம், வவுனியா 14.05.1975 - 05.11.1995 --> யாழ். வலிகாமத்தில் சூரியகதிர் எதிர்ச்சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது வீரச்சாவு. 58) லெப். ஈழநாதன் எ ஈழமாறன் (காதர்முகைதீன் சருதீன்) ஒட்டருத்தகுளம், வவுனிக்குளம், முல்லைத்தீவு 01.10.1978 - 07.04.1998 --> கடற்புலி லெப் கேணல் மாறன் எ குன்றத்தேவன் அவர்களது உடன்பிறப்பு --> ஜெயசிக்குறுய் காலத்தில் முல்லைத்தீவு ஒலுமடுவில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது காயச்சாவு. 59) கப்டன் பாறூக் (அகமதுலெப்பை முகமது கனீபா) அக்கரைப்பற்று, அம்பாறை. 12.06.1959 — 07.01.1987 --> யாழ்ப்பாணம் கோட்டையில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. 60) கப்டன் குட்டி எ தினேஸ் (முகமது அலிபா முகமது கசன்) பேராறு, கந்தளாய், திருகோணமலை. 28.04.1987 --> திருகோணமலை கந்தளாயில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 61) கப்டன் நசீர் சாளம்பைக்குளம், வவுனியா 00.11.1990 62) கடற்புலி லெப் கேணல் முல்லைமகள் (முகைதீன் ஜெரீனா) 50 வீட்டுத்திட்டம், கள்ளப்பாடு, முல்லைத்தீவு. 19.06.2007 --> யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு. 63) கடற்புலி லெப் கேணல் மாறன் எ குன்றத்தேவன் (காதர்முகைதீன் நஜீம்கான்) முல்லைத்தீவு 29.09.2008 --> அக்கராயன் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முன்னேற்ற நடவடிக்கைக்கெதிரான மறிப்புச் சமரின்போது வீரச்சாவு. --> இவருடைய உடன்பிறப்பு ஒருவரும் மாவீரர். அவருடைய பெயர் லெப். ஈழமாறன் என்பதாகும். 64) லெப். கேணல் அப்துல்லா (முகைதீன்) காத்தான்குடி, மட்டக்களப்பு 02.04.2009 --> ஆனந்தபுரம் முற்றுகைச் சமரின்போது வீரச்சாவு. --> இவர் லெப்.ஜுனைதீன் அவர்களின் அண்ணன் என்றும் அறிந்தேன். சரியாகத் தெரியவில்லை. 65) ஈரோஸ் மாவீரர் நியாஸ் மன்னார் 11.07.1986 --> தமிழீழக் கடற்பரப்பில் பயணம் செய்து கொண்டிருக்கையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட வான்குண்டு வீச்சில் வீரச்சாவு 66) ஈரோஸ் மாவீரர் கஜன் எ நசீம் (அப்துல் மானாஃப் முகம்மது நசீம்) மூதூர், திருகோணமலை 05.07.1964 - 25.07.1986 --> மூதூர் ஆலிம்சேனைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் சுடுகலச் சூட்டில் வீரச்சாவு 67) ஈரோஸ் மாவீரர் கசாலி (சேகு முகமது சகாப்தீன்) ஆலிம்சேனை, மூதூர், திருகோணமலை 23.05.1989 --> மூதூர் 64ம் கட்டைப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு நடாத்தப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு 68) ஈரோஸ் மாவீரர் ரசிட் இயற்பெயர் அறியில்லை திருகோணமலை 26.08.1989 --> திருகோணமலையில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலுடனான மோதலில் வீரச்சாவு 69) ஈரோஸ் மாவீரர் மிஸ்வின் இயற்பெயர் அறியில்லை அக்கரைப்பற்று, அம்பாறை 09.11.1989 ------------------------------------------------- தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் பேசும் இசுலாமியர்கள் மாவீரராகினர் என்றும் அவர்களின் பெயர்க்குறிப்புகள் புலிகளால் மறைக்கப்பட்டது என்ற சோனக அரசியல்வாதிகளின் பொய்ப் பரப்புரையினை முறியடிப்பதற்காகவே இதை நான் தொகுத்துள்ளேன். ஒரு 5-10 விடுபட்டிருக்கும். அவையள் எல்லோரும் நான்காம் ஈழப்போரில் வீரச்சாவடைந்த போராளிகள் ஆவர். இவர்களோடு ஓரிரு ஆதரவாளர்களும் பிடிபட்டு கொல்லப்பட்டதாக என்னால் அறியக்கூடியதாக உள்ளது. அதே நேரம் 1990ம் ஆண்டு பல ஆதரவாளர்கள் தென் தமிழீழத்தில் பிடித்துச் சாக்கொல்லப்பட்டனர். ஆனால் அன்னவர்களின் பெயர்களை என்னால் அறிய இயலாமல் உள்ளது. இதை தேடியெடுத்து என்பின் ஆவணப்படுத்துவோர் உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். ------------------------------------------------ உசாத்துணை: மேற்கண்ட தகவல்கள் யாவும் இணையத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டு என்னால் தொகுக்கப்பட்டவையாகும். http://eelamheroes.com/ http://veeravengaikal.com/ https://m.facebook.com/774278089313609/photos/a.774933562581395/1774614085946666/?type=3&source=57&__tn__=EH-R ஈழநாதம்: 17/09/1990 ஈழநாதம்: 17/06/1990 தொகுப்பு & வெளியீடு நன்னிச் சோழன்
  4. போராளிகளுக்கான இராணுவப் பயிற்சி ஜெயவர்த்தனவை இந்திரா காந்தி எப்போதுமே கிழட்டு நரியென்றே அழைத்து வந்தார். இந்திராவைப் பொறுத்தவரை ஜெயவர்த்தனா நம்பப்படமுடியாதவராகக் காணப்பட்டார். ஜெயவர்த்தன தொடர்பான இந்திராவின் கணிப்பீடுகள் அவரது நெருங்கிய தோழியான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் தகவல்கள் ஊடாக உருவாக்கப்பட்டது. ஏனென்றால், ஜெயவர்த்தனவின் அரசியல் சூழ்ச்சிகளால் பெருமளவில் பாதிக்கப்பட்டவர் சிறிமாவோ என்பது குறிப்பிடத் தக்கது. இதற்கு மேலாக, இந்திராவினால் புதிதாக அமைக்கப்பட்ட விசேட பாதுகாப்பு புலநாய்வுத்துறைப் பிரிவும் ஜெயார் குறித்த தகவல்களை இந்திராவுக்குத் தொடர்ச்சியாக வழங்கிவந்தது. அமைச்சரவையின் பாதுகாப்புச் செயலகம் என்று அறியப்பட்ட இந்த அமைப்பிற்கு "மூன்றாவது புலநாய்வு அமைப்பு" என்று இன்னொரு பெயரும் இருந்தது. ரமேஷ்வர் நாத் காவோ ஜெயவர்த்தனவை எப்போதும் நம்பமுடியாது என்பதை இந்திரா நன்கு உணர்ந்திருந்தார். ஆகவே, அவரை இரு வேறு வழிகளில் கையாள்வது என்று அவர் முடிவெடுத்தார். முதலாவது வெளிப்படையான இராஜதந்திர வழி. மற்றையது மறைமுகமான வழி. இராஜதந்திர வழி பற்றி முன்னைய அத்தியாயங்களில் நாம் பார்த்திருந்தோம். பேச்சுவார்த்தைகளுக்கு அணுசரணை வழங்குவதன் மூலம் தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதற்கு ஜெயவர்த்தனவை இராஜதந்திர ரீதியில் அழுத்துவதே அது. தமிழர்கள் மீதான தாக்குதல்களையடுத்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்மராவோ ஜெயவர்த்தனவோடும், ஹமீதோடும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார். பின்னர் இப்பேச்சுவார்த்தைகள் குறித்து இந்திராவிடம் பேசும்போது தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைக் காட்டிலும் அவர்களை இராணுவ ரீதியில் அடக்கி, அடிபணியவைப்பதிலேயே ஜெயாரின் அரசாங்கம் உறுதியாக நிற்பது தெரிகிறது என்று கூறியிருந்தார். இவ்வாறான மதிப்பீட்டையே இந்திராவின் புதிய புலநாய்வு அமைப்பின் அதிகாரியான கொழும்பில் தங்கியிருந்த ரமேஷ்வர் நாத் காவோவும் இந்திராவிடம் தெரிவித்திருந்தார். அமெரிக்கா, பாக்கிஸ்த்தான், இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளிலிருந்து ஜெயவர்த்தன ஆயுதங்களை கொள்வனவு செய்தமையானது இவர்களின் கணிப்பீடு சரியானதுதான் என்பதை உறுதிபடுத்தியிருந்தது. புதிய புலநாய்வு அமைப்பின் தலைவரான காவோவே இந்திராவின் தலைமைப் பாதுகாப்பு ஆலோசகராகவும் கடமையாற்றி வந்தார். ஜெயவர்த்தன எடுக்கும் எந்த ஒரு இராணுவத் தீர்வும் இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுருத்தலை ஏற்படுத்தும் என்றும், அது இந்திராவுக்கு அரசியல் ரீதியிலான பிரச்சினைகளை உருவாக்கும் என்றும் நாத் இந்திராவிடம் கூறினார். பாதுகாப்பு அச்சுருத்தல் என்று அவர் குறிப்பிட்டது இலங்கையில் தமது சகோதரர்கள் மேல் நடத்தப்படும் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் தமிழ்நாட்டு மக்கள் இறங்குவதால் ஏற்படக் கூடும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்தியா ராணுவ ரீதியாக இலங்கையில் தலையிட வேண்டும் என்கிற கோரிக்கை தமிழ்நாட்டில் வலுப்பெற்று வந்ததோடு, அவ்வாறு இந்தியா தலையிடாதவிடத்து தமிழ்நாட்டுத் தமிழர்களே நேரடியாக இவ்விடயத்தில் இறங்கும் அபாயம் இருப்பதாகவும் இந்திராவிடம் தெரிவிக்கப்பட்டது. அப்படியான தருணத்தில், தமிழ்நாட்டு மக்களின் உணர்வெழுச்சியை மத்திய அரசாங்கம் அடக்க முற்படும்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் தளம் பலவீனப்பட்டுப் போகும் என்றும் அவரிடம் கூறப்பட்டது. இவையனைத்தையும் விட முக்கியமாக இன்னொரு விடயம் நாத்தினால் இந்திராவிடம் முன்வைக்கப்பட்டது. அதுதான் இந்தியாவின் எதிரிகள் பெருமளவில் இலங்கையினுள் கால்பதிக்கும் சூழ்நிலை உருவாகிவருகிறது என்பது. அமெரிக்க, இங்கிலாந்து புலநாய்வு அமைப்புக்களுக்கு மேலதிகமாக பாக்கிஸ்த்தான் மற்றும் இஸ்ரேல் புலநாய்வு அமைப்புக்களும், இந்நாடுகளின் இராணுவ அதிகாரிகளின் பிரசன்னமும் இலங்கையினுள் உருவாகலாம் என்று இந்திராவின் ஆலோசகர்கள் அவரிடன் கூறினர். ஆகவே, இதனைத் தடுப்பதற்கான ஒரே வழி ஜெயவர்த்தன மீது இராஜதந்திர ரீதியிலான அழுத்தத்தினைப் பிரயோகித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வொன்றினை எட்டுவது. இது சாத்தியமற்றுப் போகும் பட்சத்தில் தமிழ் ஆயுதக் குழுக்களைப் பாவித்து ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவது. மூன்றாவது புலநாய்வு அமைப்பின் இருவழித் திட்டத்தினை இந்திரா முழுமையாக ஏற்றுக்கொண்டார். ஆவணி 17 ஆம் திகதி மூன்றாவது தடவை யாகவும் ஜெயவர்த்தனவுடன் தொலைபேசியில் பேசிய பின்னர், இந்த இருவழித் திட்டத்தினை உடனடியாக ஆரம்பிக்குமாறு தனது புலநாய்வு அதிகாரிகளை இந்திரா பணித்தார். தனது வெளிப்படையான இராஜதந்திர நகர்வுகளை செய்துவரும் அதேவேளை, மறைமுகமான நடவடிக்கைகளை முற்றாக மூடி மறைத்தது இந்திராவின் அரசாங்கம். இந்திரா காந்தியும், அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஓரிரு அதிகாரிகளும் மட்டுமே இந்த இரகசியத் திட்டம்பற்றிய தகவல்களை வைத்திருந்தனர்.
  5. தொண்டைமான் நடத்திய பத்திரிக்கையாளர் மாநாடு கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்த தனது அமைச்சகத்தில் பத்திரிக்கையாளர் மாநாடொன்றினை தொண்டைமான் கூட்டினார். அவரது ஊடக ஆலோசகர் என்கிற வகையில் அம்மாநாட்டினை ஒழுங்குசெய்வதற்கு என்னையும், அவரது சட்டச் செயலாளரான அமரசிங்கம் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் செல்லச்சாமியையும் அவர் அழைத்திருந்தார்.இந்த மாநாட்டினை ஒழுங்கு செய்ததன் நோக்கமே சிங்கள மக்களுக்கு இந்தியாவும் தமிழ்நாடும் அண்மையில் நடந்த தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் குறித்துக் கடுங்கோபத்தில் இருப்பதையும், பார்த்தசாரதியுடனனான பேச்சுக்களை மீண்டும் ஜெயவர்த்தன ஆரம்பிக்காத பட்சத்தில் இந்தியா இராணுவ ரீதியில் இலங்கையில் தலையிடும் எனும் செய்தியையும் சொல்வததுதான். தொண்டைமான் இதனைக் கச்சிதமாக நடைமுறைப்படுத்தினார். இந்த மாநாட்டில் பங்குகொண்ட பெரும்பாலான சிங்களப் பத்திரிக்கையாளர்கள் சினத்துடன் காணப்பட்டனர். இவர்களுள் பெரும்பாலானோர் தொண்டைமானின் மீது கடும் அதிருப்தி கொண்டிருந்தனர். தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான புளொட்டின் தலைவர் உமா மகேஸ்வரனைச் சந்தித்தது மற்றும் சிங்கள மக்களுக்கெதிராக தமிழர்களை ஒருங்கிணைப்பது ஆகிய குற்றச்சாட்டுக்களை அவர்மீது அவர்கள் சுமத்தினர். மேலும், இவற்றினைச் செய்ததன் மூலம் பாராளுமன்ற உறுப்பினரின் பொறுப்புணர்வைத் தட்டிக்கழித்து அவர் செயற்பட்டிருப்பதாகவும் அவர்கள் வசைபாடினர். இந்தியாவுக்கான தனது பயணம் குறித்த விளக்கத்தினை தொண்டைமான் வழங்கியபின்னர் அவரிடம் முன்வைக்கப்பட்ட முதலாவது கேள்வி இப்படி அமைந்திருந்தது. கேள்வி : தொண்டைமான் அவர்களே, நீங்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களையும், உமா மகேஸ்வரனையும் சந்தித்ததாகக் கூறியிருந்தீர்கள். ஆனால், தனிநாட்டுக் கோரிக்கையினை அவர்கள் கைவிடும்வரை முன்னணியினருடனோ அல்லது எந்தப் பயங்கரவாத அமைப்புடனோ பேச்சுக்களில் ஈடுபடுவதில்லை என்று அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அப்படியாயின், நீங்கள் அமைச்சரவைத் தீர்மானத்தை மீறிவிட்டீர்கள் என்று நாம் எடுத்துக்கொள்ளலாமா? தொண்டைமான் : நான் இந்தப் பயணத்தை அமைச்சரவை உறுப்பினராக மேற்கொள்ளவில்லை. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் என்கிற வகையிலேயே இப்பயணத்தை மேற்கொண்டேன். ஆகவே அமைச்சரவை உறுப்புரிமையினை மீறினேனா என்கிற கேள்விக்கு இங்கே இடமில்லை. கேள்வி : ஆனால், இந்தப் பிரச்சினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கோ அல்லது மலையகத் தமிழருக்கோ எந்த விதத்திலும் சம்பந்தப்படாத விடயமாயிற்றே? தொண்டைமான் : இது தமிழர்கள் சம்பந்த‌ப்பட்ட விடயம். நான் ஒரு தமிழன். கேள்வி : இந்தியப் பத்திரிக்கைச் செய்திகளின்படி நீங்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனும், பயங்கரவாத அமைப்புகளுடனும் அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கான பொது வேலைத்திட்டம் ஒன்றினை உருவாக்குவது குறித்துப் பேசியிருக்கிறீர்கள், இது உண்மைதானா? தொண்டைமான் : பொதுவான வேலைத்திட்டம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், நாம் பொதுவான இலக்குக் குறித்துப் பேசினோம். தீவிரவாத சிங்கள அமைப்புக்களும் அரசாங்கமுமே எம்மை இந்த நிலைக்கு இழுத்து வந்திருக்கின்றன. எமக்குப் பொதுவான ஒரு அடையாளத்தினைத் தந்தவர்களும் அவர்களே. 1948 ஆம் ஆண்டும் பெரும் எண்ணிக்கையான மலையகத் தமிழர்களை அரசு நாடற்றவர்களாக்கியது. 1956 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் மொழி உரிமையினை அப்போது இருந்த அரசு இரத்துச் செய்தது. தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் மூலம் தமிழர்களின் வாழ்தலுக்கான பாதுகாப்பு மறுதலிக்கப்பட்டிருக்கிறது. தமிழர்கள் பாதுகாப்பாகவும், உரிமைகளுடனும் வாழ்தல் என்பதே எமது பொது இலட்சியமாக மாறியிருக்கிறது. தமது பொது இலட்சியம் பற்றித் தமிழர்கள் கூடிப் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது ? மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் எம்மால் தீர்மானிக்கப்பட்டதற்கமைய இறக்கப்பட்ட தமிழ்ப் பத்திரிக்கையாளர் ஒருவர் இந்தியாவின் கோபம் குறித்த கேள்வியொன்றினைக் கேட்டார். கேள்வி : இங்கு நடந்த வன்முறைகள் குறித்த இந்தியாவின் பிரதிபலிப்பு எவ்வாறு அமைந்திருந்ததாக நீங்கள் உணர்கிறீர்கள்? தமிழர் மீதான வன்முறைகளை அவர்கள் எவ்வாறு நோக்குகிறார்கள்? தொண்டைமான் : கடந்த 40 வருடங்களில் இந்தியா இவ்வளவு தூரத்திற்கு உணர்வுரீதியாக எழுந்ததை நான் பார்க்கவில்லை. நான் சென்ற இடமெல்லாம் மக்கள் மிகுந்த கவலையுடனும், ஆத்திரத்துடனும் என்னுடன் பேசினார்கள். அரசாங்கத்தில் நான் தொடர்ந்தும் பங்காளியாக இருப்பது குறித்து அவர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டார்கள். தமிழர்களை முற்றாக அடக்கி ஒடுக்கி, ஈற்றில் நசுக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பாகமே இந்தத் தாக்குதல்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். இதன்போது குறுக்கிட்ட சிங்கள பத்திரிக்கையாளர் ஒருவர் சென்னைக்கும் புது தில்லிக்கும் இடையே பிளவு ஒன்றினை உருவாக்கும் நோக்கில் கேள்வியொன்றினைக் கேட்டார். கேள்வி : திரு தொண்டைமான் அவர்களே, இந்த உணர்வு ரீதியான வெளிப்பாடு சென்னையில் மட்டும்தான் காணப்பட்டதா அல்லது தில்லியிலும் இது தெரிந்ததா? தொண்டைமான் : தமிழ்நாட்டிலேயே இந்த உணர்வு அதிகமாகக் காணப்பட்டதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், தில்லியில் அவர்கள் தமிழ்மக்கள் மீதான தாக்குதல்கள் குறித்துக் கவலை கொண்டிருக்கவில்லை என்று நீங்கள் கருதினால், நீங்கள் தவறிழைக்கிறீர்கள் என்று பொருள். ஏனென்றால், தில்லியிலும் கடுமையான ஆத்திரமும் கரிசணையும் இது தொடர்பாகக் காணப்படுகிறது என்பதே உண்மை. நான் தில்லியில் கேள்விப்பட்டது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவின் உயர் அதிகாரியொருவர் என்னுடன் பேசும்போது, "தமிழர்கள் மீதான படுகொலைகள் நடந்துகொண்டிருக்கும்போது அரசாங்கம் தனது கண்களை இறுக மூடிக்கொண்டிருந்ததாக நாங்கள் நம்புகிறோம். ஆகவே, தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிங்களவர்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்களை நடத்தும்போது இந்திய மத்திய அரசும் கண்களை மூடிக்கொண்டிருப்பதே சரியான செயலாகும்" என்று என்னிடம் கூறினார். பின்னர் சில நொடிகள் மெளனமாக இருந்துவிட்டு தொண்டைமான் பின்வருமாறு கூறினார், "தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்ன சொல்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? சிங்களவர்கள் பூரணை நாட்களில் ஓய்வாக இருந்து மத வழிபாடுகளில் ஈடுபட்டுவிட்டு மறுநாளே படுகொலைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். ஏனென்றால், ஆடி 23 ஆம் திகதி பூரணை நாள், மறுநாள் ஆடி 24 ஆம் திகதியே தமிழர்கள் மீதான படுகொலைகள் ஆரம்பித்தன" என்று அவர் கூறினார்.
  6. எனக்கு ஒரு ஆசை.🤭.இந்தப் பக்கம் உலாவுற அப்புமாரின், ஆச்சிமாரையும் வர வைக்க வேணும்..😄
  7. சிங்கம்... மதிய உணவு உண்ண, ஆயத்தம். 😂
  8. நான் எல்லாம் முரட்டு அன்றோயிட் (Android) பக்தர்கள். ஒரு நாளும் இந்த அப்பிள் பொருட்களை எனக்கு வாங்கியது இல்லை. எப்பவும் எந்த நாளும் சம்சுங் தான்.
  9. இதை பற்றி திண்ணையில் சுமார் 2 வருடங்கள் முன் உரையாடி இருந்தோம் @விசுகு. நான் அவதானித்ததில் போன வருட மாடலோடு ஒப்பிடின் அதிக புதிய சிறப்பம்சம் ஏதும் இல்லாமல் வந்த முதல் ஐபோன் இது. #Time for Tesla phone
  10. முன் பனிக்காலம் தொடங்குதடி... கரு நிலத்தில் விளைந்த... கரும் திராட்சையயை... சுவைக்கும் போது... ஏனோ உன் முன் நினைவுகளும்.. வந்து தொலைக்குதடி... விடி வெள்ளி நட்சத்திரம் போல்... கனவுகள் ஒளிர... ஓடி ஒளிந்து விட்டதடி.. கேடு கெட்ட காமம்... ❣️
  11. படிவம் நிரப்பும் போது ஏற்பட்ட பிழை கனபேருக்கு தகுதி இருந்தும் கிடைக்கவில்லை தற்போது அந்த படிவங்கள் மீள் பதிவு செய்யப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகிறது நிரப்ப வந்த உத்தியோகத்தர்கள் ரூபாய் 3500 ரூபாய்க்கு 35 ஆயிரம் ரூபா போட்டதால் வந்த வினையை அதிகம். படிச்ச மேதைகள் படிவம் நிரம்பியவர்கள் மாத வருமான தொகைக்கு பெட்டிகள் இட்டிருப்பார்கள் போல சைபர்களை அதிகம் இட்டதால் பலர் உள்வாங்கப்படவில்லை
  12. கடற்புலி மாவீரர்கள் லெப். கேணல் மாறன் எ குன்றத்தேவன் லெப் கேணல் முல்லைமகள் படிமப்புரவு: https://veeravengaikal.com/
  13. புதைகுழியில் தோட்டாக்கள் கண்டுபிடிக்கவில்லை, ஆகவே இராணுவத்தை குற்றம் சாட்ட முடியாது என்று நழுவிய இராணுவ அதிகாரி ஒருவர், இது மனித எச்சங்கள்தானா என்பதை தெளிவு படுத்த வேண்டும் என்கிறார் இராணுவ ஊடகப்பேச்சாளர். இப்போ துப்பாக்கி தோட்டாக்கள் வெளிவந்திருக்கின்றன, இது விலங்கின் எச்சமல்ல விடுதலை கேட்டு போராடிய போராளிகளின் உடல்கள் என நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இராணுவத்தின் மனித உரிமை மீறல் என பொறுப்பெடுக்குமா இராணுவம்? இதிலிருந்து விளங்குவது என்ன? நீதிமன்றம், புத்திஜீவிகள், நீர்ப்பாசன திணைக்களம் என்பன சேர்ந்து அகழ்வுப்பணியை மேற்கொள்கின்றன, உறவுகள் இது தங்களது உறவுகளாக இருக்குமோ என அங்கலாய்க்கின்றன, இவர்களது பேச்சு இவர்களின் பொறுப்பற்ற தன்மையை விளக்குவதோடு கேள்விகளை எழுப்புகின்றன. மனித புதைகுழிக்கும் விலங்குகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா சம்பந்தப்பட்டவர்கள்? அல்லது அவை விலங்குகளின் புதைகுழிகள் என நிறுவப்பார்க்கிறார்களா இவர்கள்? எப்படி இத்தனை விலங்குகளின் எச்சங்கள் ஒரே புதை குழியில் வந்திருக்கும்? ஏன் அந்தபுதைகுழியில் விலங்குகளின் எச்சங்களை எதிர்பார்க்கிறார்கள் இவர்கள்? கிரிஷாந்தி புதைகுழியில் விலங்குகளின் எச்சங்களை புதைத்து சாதித்த அனுபவம் அவர்களை இப்படி எதிர்பார்க்கவும் சாதிக்கவும் வைக்கிறது. இவர்களின் வாயே இவர்களை காட்டிக்கொடுக்கவும் மேலும் விசாரணைகளை மேற்கொள்ளவும் செய்கிறது. "மூடர் தம்வாயாலேயே மாட்டுவர்."

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.