Leaderboard
-
nedukkalapoovan
கருத்துக்கள உறவுகள்7Points33035Posts -
ரஞ்சித்
கருத்துக்கள உறவுகள்5Points8910Posts -
Justin
கருத்துக்கள உறவுகள்4Points7054Posts -
மெசொபொத்தேமியா சுமேரியர்
கருத்துக்கள உறவுகள்3Points8557Posts
Popular Content
Showing content with the highest reputation on 10/07/23 in Posts
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
3 தினங்களுக்கு முன் சிரியாவில்.. ஒரு கடேட் அக்காடமி பரிசளிப்பு வைபவத்தின் மீது குண்டுகள் தாங்கிய ரோன்களை பயன்படுத்தி இஸ்ரேல்.. அமெரிக்க ஆதரவு முஸ்லிம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100 க்கும் அதிக மக்கள்.. பெண்கள்.. குழந்தைகள் என்று கொல்லப்பட்டும்.. 1000 வரை காயமடைந்தும் இருந்தனர். பல மேற்குலக ஊடகங்கள் இதனை செய்தியாகக் கூடப் போடவில்லை. மேற்குலக மனித உரிமை ஜாம்பவான் நாடுகள் வாயே திறக்கவில்லை. இன்று இஸ்ரேலை மையப்படுத்தி கட்டி வைக்கப்பட்டிருந்த அனைத்து மாயைகளும் நொருங்கிவிட்டது. மேற்குலக ஜாம்பவான்கள் கண்ணீரும் கம்பலையுமாக அறிக்கை விடுகிறார்கள். 1. உலகிலேயே சிறந்த இராணுவ பாதுகாப்பு எல்லை என்று சொன்ன எல்லையை பலஸ்தீன விடுதலைப் போராளிகள் கடந்து சென்றுள்ளமை. 2. இஸ்ரேலின் மிகச் சிறந்த உளவு அமைப்பு என்று சொல்லப்பட்ட மொசாட் படுதோல்வி கண்டுள்ளமை. 3. கமாஸின் ராக்கட்டுக்களை அழிக்க முடியாமல் திணறிய இஸ்ரேலின் அயன் சீல்ட்... ஏவுகணை பாதுகாப்பு பொறிமுறை. 4. உலகில் சிறந்த டாங்கிகளை கொண்ட இஸ்ரேலின் தாங்கிகள் மீது கமாஸ் சவாரி. செயல்திறனற்றுப் போனமை. 5. உலகில் சிறந்த இராணுவம் என்று சொல்லப்பட்ட இஸ்ரேல் இராணுவம்.. சண்டையிடாமலே.. சரணடைந்த கேவலம். 6. இத்துணை பெரிய இராணுவ நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட இஸ்ரேலின் இராணுவ கண்காணிப்பை சிதறிடித்து இஸ்ரேலுக்குள் பல முனைகளில் நுழைந்துள்ள கமாஸ் போராளிகள். எல்லாமே.. இஸ்ரேல் பற்றிய மாயையை தகர்த்துவிட்டுள்ளது. இதே இஸ்ரேல்.. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான ஆரம்பம் முதல் கடைசி வரை.. சிங்கள பெளத்த பேரினவாத அரசிற்கும் இராணுவ இயந்திரத்திரத்திற்கும் பலவேறு வழிகளில் உதவி வந்ததோடு.. முக்கிய டோரா... பீரங்கிப் படகுகள்.. கிபீர் விமானங்களை சொறீலங்கா.. தமிழ் மக்கள் மீதான இன அழிப்புக்கு பயன்படுத்த தொடர்ந்து வழங்கி வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஆளில்லா உளவு விமானங்களையும் (வண்டு).. இஸ்ரேலே சொறீலங்காவுக்கு வழங்கி இருந்தது. கமாஸின் பயங்கரவாதத்தை விட இஸ்ரேலின் பயங்கரவாதம்.. எம்மினத்தை அதிகம் அழித்திருக்கிறது. எம்மினம் இன்று அடிமைப்பட்டுக்கிடக்க அதுவும் ஒரு காரணம். இஸ்ரேலின் பயங்கரவாதம் கமாஸினதை விட மிக மிக மிக மிக மோசமானது. அடக்குமுறையாளர்களுக்கு ஆதரவானது.2 points
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
2 pointsடெலோ அமைப்பில் இணையவென்று வந்து பின்னர் புலிகளுடன் இணைந்துவிட்ட பெண்போராளிகள் பிரபாகரன் மதிவதனி திருமணம் நடைபெறுவதற்கு சிறிது நாட்களுக்கு முன்னர் திருவாண்மியூர் பகுதியில் சற்றுப் பெரிய வீடொன்றிற்கு பாலசிங்கம் தம்பதிகள் மாறியிருந்தனர். அவர்களுடன் மேலும் பல பெண்கள் வந்து தங்கிக்கொண்டதால் பெரிய வீடொன்றிற்கு மாறவேண்டியது அவசியமாகியிருந்தது. அதுகூட எதிர்பாராத விதமாக நடந்ததுதான். சிங்கள இராணுவத்தை எதிர்த்துப் போராட போராளி இயக்கங்களில் இணைந்துகொண்ட ஆயிரக்கணக்கான ஆண்களோடு சில பெண்களும் பயிற்சிகளுக்காக இணைந்துகொண்டனர். ஆனால், புலிகள் இயக்கமும், புளொட் மற்றும் ஈரோஸ் அமைப்புக்களும் பெண்களை அதுவரை சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை. தமது அமைப்புக்களில் பெண்கள் பிரிவுகள் இதுவரை அமைக்கப்படாமையினால் பெண்களை இணைத்துக்கொள்வதில்லை என்று அவை முடிவெடுத்திருந்தன. ஆனால், தன்னர்வத்தோடு இணைய விரும்பிய பெண்களை டெலோ அமைப்பின் தலைவர் சிறி சபாரட்ணம் ஏற்றுக்கொள்ளத் தொடங்கினார். அவர், அவர்களை தமிழ்நாட்டில் இயங்கிவந்த தமது முகாமிற்கு அழைத்து வந்தார். ஆனால், அங்கு பெண்கள் தங்குவதற்கான எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யப்படவில்ல என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். டெலோ இயக்கத்தில் பெண்கள் பிரிவென்று ஒன்றே இல்லையென்பதும் அவர்களுக்குப் புரிந்தது. மேலும், பெண் போராளிகளைப் பராமரித்து அவர்களை வழிநடத்தவென எவரும் இருக்கவில்லையென்பதும் அவர்களுக்குப் புரிந்தது. ஆகவே, டெலோவில் இணைய வந்த பெண்கள் நிர்க்கதி நிலைக்குள்ளாகினர். எனவே, அவர்கள் அப்பகுதியில் இருந்த கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவரை இதுதொடர்பாக அணுகினர். அப்பாதிரியானவரோ பிரபாகரனிடம் சென்று அப்பெண்களுக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார். பாதிரியானவரிடம் பேசிய பிரபாகரன் தமது இயக்கத்தில் பெண்கள் பிரிவென்று இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லையென்றும், ஆனால் அதிகளவு பெண்கள் இணையும் பட்சத்தில் பெண்கள் பிரிவொன்றை ஆரம்பிக்க உத்தேசித்திருப்பதாகவும் கூறினார். அப்படியிருந்தபோதும், டெலோ இயக்கத்தில் இணைந்துகொள்ள வந்து நிர்க்கதிக்குள்ளான பெண்களை, பெண்கள் பிரிவு அமைக்கப்படும்வரை வைத்துப் பராமரிக்க ஒப்புக்கொண்டார். பின்னர் அவர்களை அடேல் பாலசிங்கத்திடம் அனுப்பி வைத்தார். டெலோ அமைப்பில் இணைய வந்திருந்த பெண்களின் பெயர்கள் சோதியா, சுகி, தீபா, இமெல்டா, வசந்தி, ஜெயா, லலிதா மற்றும் சாந்தி என்பனவாகும். இவர்கள் அனைவரும் தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் பெண் போராளிகளுக்கு முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள். புலிகளின் முதலாவது பெண்கள் இராணுவப் பிரிவின் தளபதியாக இருந்தவர் சோதியா. சுகி, இராணுவக் காவலரண் ஒன்றின்மீது முதன்முதலாக வெற்றிகரமாக ஆர்.பி.ஜி தாக்குதலை நடத்திய பெண் புலிப் போராளியாவார். புலிகளின் பெண் போராளிகளுக்கென்று யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பயிற்சி முகாமின் பயிற்றுவிப்பாளராக இருந்தவர் தீபா. அநாதைப் பெண்பிள்ளைகளுக்கான பராமரிப்பு அமைப்பான செஞ்சோலையின் இயக்குநராகத் திகழ்ந்தவர் லலிதா. பெண்கள் இராணுவப் பிரிவின் புலநாய்வுத்துறைக்குப் பொறுப்பாக இருந்தவர் சாந்தி. டெலோ அமைப்பில் இணைந்துகொள்ள வந்து பின்னர் புலிகளிடம் அடைக்கலமாகிய பெண்களும் சேர்ந்துவிட பெரிய வீடொன்றினை திருவாண்மியூர் பகுதியில் பாலசிங்கம் தம்பதிகள் வாடகைக்கு எடுத்துக்கொண்டு அங்கு மாறிச் சென்றார்கள். பலகணியைக் கொண்ட மாடியறைகளை பாலசிங்கம் தம்பதிகள் தமது தேவைக்காகப் பாவித்துக்கொண்டனர். பெண்கள் கீழ்ப்பகுதியில் தங்கிக்கொண்டனர். திருமணத்தின் பின்னர் மதி பிரபாகரனுடன் சென்றுவிடவே மீதமாயிருந்த பெண்கள் பயிற்சிக்கென்று ஐப்பசி மாதம் 1984 ஆம் ஆண்டு மதுரைக்குக் கிளம்பிச் சென்றனர். அங்குதான் புலிகளின் பெண்போராளிக்கென்று முதலாவது பயிற்சி முகாம் அமைக்கப்பட்டது. தம்முடன் தங்கியிருந்த பெண்கள் பயிற்சிக்குச் சென்றதையடுத்து பாலசிங்கம் தம்பதிகள் பெசண்ட் நகரில் கடற்கரையோரம் அமைந்திருந்த இரு அறைகளைக் கொண்ட தொடர்மாடிக் குடியிருப்பு ஒன்றிற்கு மாறிக்கொண்டனர். பிரபாகரனின் மனைவியாக மதிவதனி சந்தித்த சவால்கள் சார்ள்ஸ் அன்ரனி, மதிவதனி, பிரபாகரன், துவாரகா மதிவதனியின் முதல் மூன்று வருடங்களும் மிகவும் மகிழ்வாகக் கழிந்தது. அக்காலப்பகுதியில் அவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தன. முதலாவதாக ஆண் குழந்தையும் இரண்டாவதாக ஒரு பெண்ணும் பிறந்தார்கள். இலங்கையின் சரித்திரத்தை மாற்றிப்போட்ட திருநெல்வேலித் தாக்குதலுக்குப் பழிவாங்கும் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்ட பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய தோழனாகத் திகழ்ந்த சார்ள்ஸ் அன்ரனி நினைவாக 1985 ஆம் ஆண்டு பிறந்த தனது மகனுக்கு சார்ள்ஸ் அன்ரனி என்றே பிரபாகரன் பெயர் வைத்தார். மேலும் 1986 ஆம் ஆண்டு பிறந்த தமது மகளுக்கு புலிகளின் மாவீரர் ஒருவரின் பெயரான துவாரகா என்ற பெயரினை அவர்கள் இட்டார்கள். முதலிரு குழந்தைகள் பிறந்து 10 வருடங்களுக்குப் பின்னர் பிறந்த பிரபாகரனின் இளைய மகனுக்கு இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட மதிவதனியின் சகோதரனான பாலச்சந்திரனின் பெயரினை இட்டார்கள். மதிவதனி பெரும்பாலும் திரைமறைவு வாழ்க்கையினையே வாழ்ந்துவந்தார். வெகு அரிதாகவே பிரபாகரனுடன் வெளிப்படையாக அவர் வெளியே வந்திருப்பார். முதன்முதலாக பிரபாகரன் மதிவதனியை வெளியுலகிற்குக் கொண்டுவந்தது 1985 ஆம் ஆண்டு இந்தியச் செய்தியாளர் அனித்தா பிரதாப்புடனான நேரகாணலிற்காகத்தான். தான் எழுதிய இரத்தத் தீவு எனும் புத்தகத்தில் இந்த சம்பவத்தினை அனித்தா பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார், 1980 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் ஒருமுறை பிரபாகரன் தனது மனைவியையும் மூன்று மாதங்களே ஆகியிருந்த தனது மகனையும் நேர்காணல் ஒன்றிற்காக கூட்டிவந்திருந்தார். பிரபாகரனுக்கு நெருக்கமாக அமர்ந்திருந்த அவரது மனைவி ஒருமுறை தன்னும் தேவையற்ற விதமாக எதையும் பேசவில்லை. அவர் சித்திரம் பதிக்கப்பட்ட சேலையினையும் மிகவும் எளிமையான மேற்சட்டையினையும் அணிந்திருந்தார். மிகவும் பண்பானவராகவும், எளிமையானவராகவும், குடும்பப்பாங்கு கொண்டவராகவும் தெரிந்தார். அவர் கேட்டுக்கொண்டபோது தனது கைகளில் அதுவரை அமர்ந்திருந்த தனது மகனை அவரிடம் தந்தார். தனது பாலகனைப் பார்த்தபடியே "இவனது பெயர் சார்ள்ஸ் அன்ரனி" என்று பிரபாகரன் பெருமிதத்துடன் கூறினார். பிரபாகரன் தனது மகனுக்கு பெயரிட்ட விடயம் குறித்தும் அனித்தா கூறுகிறார், நீங்கள் ஒருவர் மீது வைக்கும் விசுவாசமே அவர்கள் உங்கள் மீது வைக்கும் விசுவாசத்திற்கு காரணியாகிவிடுகிறது என்பதை பிரபாகரனையும் அவரது போராளிகளையும் பார்க்கும்போது நான் உணர்ந்துகொண்டேன். அவர் தனது போராளிகள் மீது வைத்திருக்கும் தன்னிகரற்ற விசுவாசமே அவர்களை தமது தலைவன் மீதான தீவிர விசுவாசிகளாக மாற்றியிருக்கின்றது. சீலன் பிரபாகரன் மீது வைத்திருந்த விசுவாசம் அளவிடமுடியாதது. சிங்கள இராணுவ அதிகாரியான சரத் முனசிங்க தனது "ஒரு ராணுவ வீரனின் பார்வையில்" எனும் புத்தகத்தில் இப்படி எழுதுகிறார், "நிர்மலா நித்தியானந்தத்துடன் பேசும்போது பிரபாகரன் ஒரு தலைசிறந்த தலைவன் என்று சீலன் கூறியிருக்கிறார். ஒருமுறை நோயுற்ற போராளியொருவர் தான் படுத்திருந்த படுக்கையிலேயே வாந்தியெடுக்கும் தறுவாயில் அருகிலிருந்து அப்போராளியின் வாந்தியைக் கைகளில் ஏந்திக்கொண்டார் பிரபாகரன். நான் நகைச்சுவையாக நிர்மலாவிடம், "நான் ஒருநாள் உங்களின் சீலனைப் பிடிப்பேன்" என்று கூறினேன். அதற்கு சற்று நிதானமாகப் பதிலளித்த நிர்மலா, அதனை மட்டும் செய்யாதீர்கள், ஏனென்றால் அவரை உங்களால் ஒருபோதுமே உயிருடன் பிடிக்க முடியாது என்று கூறினார்". நான் இத்தொடரின் ஆரம்ப அத்தியாயங்களில் குறிப்பிட்டதுபோல, சீலனின் உயிரற்ற உடலைத்தான் சரத் முனசிங்கவினால் கைப்பற்ற முடிந்திருந்தது. சீலனின் தியாகத்திற்கும் விசுவாசத்திற்கும் பிரதியுபகாரமாக தனது மகனுக்கு சீலனின் பெயரான சார்ள்ஸ் அன்ரனியை இட்டார் பிரபாகரன். சைவ மத நம்பிக்கை கொண்டவராக இருந்தபோதும் மதிவதனி தனது மூத்த மகனுக்கு கிறீஸ்த்தவப் பெயரினை இடுவதை தடுக்கவில்லை. பிரபாகரனின் உணர்வுகளை வெகுவாக மதித்த மதி, அவருக்கு மிகவும் ஆதரவுடைய மனைவியாக வாழ்ந்தார். அவரது உறுதிப்பாடும், தன்னலமற்ற தியாகமும் அவரைத் தெரிந்தவர்களிடையே அவர்பற்றிய நன்மதிப்பினை ஏற்படுத்தியிருந்தது. அடேல் பாலசிங்கம் தான் எழுதிய சுதந்திர வேட்கை எனும் புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார், மதிவதனியை மனைவியாகத் தெரிவுசெய்ததன் ஊடாக பிரபாகரன் ஆசீர்பெற்றிருந்தார் என்றே சொல்லவேண்டும். அவருக்கு அசையாத அன்பினையும், குடும்ப வாழ்வின் பாதுகாப்பினையும், நெருக்கத்தையும், பிரபாகரன் சந்தித்த எண்ணற்ற இடர்மிகுந்த சந்தர்ப்பங்களின்போதும் மதிவதனி வழங்கினார். மதிவதனியைப் பொறுத்தவரை அவரது வாழ்க்கை ஒரு மலர்ப்படுக்கை போன்றதல்ல. மிகவும் எளிமையானவராகவும், மென்மையான இதயம் கொண்டவராகவும் இருந்தபோதிலும் மதிவதனி பல சந்தர்ப்பங்களில் இழப்புக்களையும், துயர் மிகு சந்தர்ப்பங்களையும் எதிர்கொண்ட வேளைகளில் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டார். திருமணமாகி முதல் மூன்று வருடங்களை மதிவதனி சென்னையிலேயே கழித்தார். இக்காலத்தில் பிரபாகரன் தனது போராளிகளுக்கான பயிற்சிமுகாம்களை நடத்துவதிலும், மேற்பார்வை செய்வதிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டதனால் மதிவதனி தனது இரு குழந்தைகளுடன் பொழுதினைப் பெரும்பாலும் தனிமையிலேயே கழித்து வந்தார். ஆனால், அந்த அமைதியான வாழ்வும் அவருக்குப் பிடித்திருந்தது. 1986 ஆம் ஆண்டு சிங்கள அரசை தமிழர் தாயகத்திலிருந்தே எதிர்த்துப் போராடுவது என்று பிரபாகரன் முடிவெடுத்தபோது மதிவதனியும் அவருடன் இலங்கையின் வட மாகாணத்திற்குச் சென்றார். நல்லூருக்கருகில் மறைவிடமொன்றில் அவரது வாழ்க்கை ஆரம்பமாகியது. பின்னாட்களில் அவரது பெற்றோரும் அவருடன் இணைந்துகொண்டனர். தனது கணவரை சிங்கள விமானப்படையின் உலங்குவானூர்திகளும், விமானங்களும் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியவேளைகளில் அவர் மிகுந்த வேதனையடைந்தார். 1987 ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் இந்திய ராணுவம் யாழ்நகரைக் கைப்பற்றிய நாட்களில் மதிவதனி நல்லூரில் அமைந்திருந்த மறைவு வீட்டிலேயே தங்கியிருந்தார். அப்பகுதியில் இருந்த மக்கள் இராணுவத் தாக்குதல்களிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள நல்லூர் முருகன் ஆலயத்தில் தஞ்சமடைந்தவேளை மதிவதனியும் தனது குழந்தைகளுடன் அங்கு தஞ்சமடைந்தார். அவரது வாழ்க்கையில் மனவேதனை மிகுந்த காலங்கள் அவை. அவரது கணவரைக் கைதுசெய்ய இந்திய ராணுவம் தாயகம் முழுவது தேடிவருகையில் மதிவதனியோ இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் மக்களோடு மக்களாக தஞ்சமடைந்திருந்தார். சூழ்நிலை சற்று தணிந்திருந்த வேளையில் தனது குழந்தைகள் இருவரையும் தனது பெற்றோரின் பராமரிப்பில் விட்டு விட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு பகுதியில் அமைந்திருந்த அடர்ந்த காட்டுப்பகுதியான அலம்பிலுக்குச் சென்று தனது கணவருடன் இணைந்துகொண்டார். அலம்பில் காட்டில் அவர் வாழ்ந்த வாழ்க்கை மிகுந்த மனவேதனையினை அவருக்குக் கொடுத்தது. அவர்கள் இருந்த அடர்ந்த காட்டுப்பகுதி நோக்கி இடையறாது செல்மழை பொழிந்தது இந்திய இராணுவம். இந்திய இராணுவத்தின் ரெஜிமெண்ட்டுகள் அங்குலம் அங்குலமாக புலிகளின் காட்டுப்பகுதி முகாம்கள் நோக்கி முன்னேறி வந்துகொண்டிருந்தன. இக்காலப்பகுதியிலேயே இந்திய இராணுவத்துடனான மோதல் ஒன்றில் தனது இளைய சகோதரனான பாலச்சந்திரன் கொல்லப்பட்டார் என்கிற செய்தியும் மதிவதனிக்கு வந்து சேர்ந்திருந்தது. இவை எல்லாவற்றைக் காட்டிலும் தனது இரு குழந்தைகளையும் விட்டுப் பிரிந்து வந்தது அவரை மிகவும் வேதனைப்பட வைத்திருந்தது. மதிவதனி அடைந்த வேதனைகளைப் பிரபாகரனினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆகவே அவரை வெளிநாடு ஒன்றிற்கு அனுப்ப பிரபாகரன் முடிவெடுத்தார். ஆனால், மதிக்கு அது பிடிக்கவில்லை. பிரபாகரனோ தனது முடிவில் பிடிவாதமாக நின்றார். ஆனால், இறுதியில் மதிவதனி மீண்டும் யாழ்ப்பாணத்திற்குத் தப்பிச் சென்று தனது குழந்தைகளுடன் இணைந்துகொண்டார். அங்கிருந்தே அவர்கள் சுவீடன் நாட்டுக்குத் தப்பிச் செல்லும் ஏற்பட்டுகள் செய்யப்பட்டன. இந்தப் பயணம் குறித்து பெரிதாக எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. பலர் மதிவதனியும் குழந்தைகளும் ஒஸ்ட்ரேலியாவுக்கே தப்பிச் சென்றதாக அக்காலத்தில் நினைத்திருந்தார்கள். சுவீடனில் இரண்டு வருடங்கள் தனது பிள்ளைகளுடன் மிகவும் இரகசியமான வாழ்க்கையினை மதிவதனி வாழ்ந்து வந்தார். 1989 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் தனது கணவருடன் அவர் மீளவும் இணைந்துகொண்டார். 1989 ஆம் ஆண்டு சித்திரை மாதத்தில் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த பிரேமதாசா, மதிவதனி மீண்டும் நாட்டிற்குவரும் ஒழுங்குகளைச் செய்துகொடுத்தார். சுவீடனில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த மதிவதனியையும் பிள்ளைகளையும் அங்கிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமா நிலையத்திற்கு அன்டன் பாலசிங்கமும் அடேல் பாலசிங்கமும் அழைத்துவந்தார்கள். அங்கிருந்து பிரேமதாசவினால் ஒழுங்குசெய்யப்பட்ட விசேட உலங்குவானூர்தி ஒன்றின்மூலம் அலம்பில் காட்டிப்பகுதியில் இருந்த பெயர் குறிப்பிடப்படாத புலிகளின் முகாம் ஒன்றிற்கு மதிவதனி, குழந்தைகள், அன்டன் பாலசிங்கம் மற்றும் அடேல் பாலசிங்கம் ஆகியோர் அழைத்துச் செல்லப்பட்டனர். அடேல் தனது புத்தகத்தில் மேலும் எழுதுகையில், "அவரது திருமண வாழ்க்கை நெடுகிலும் மதிவதனிக்கு பாதுகாப்பான, நிரந்தரமான இல்லம் என்று ஒன்று இருக்கவில்லை. ஆனாலும், ஒரு கெரில்லா தலைவனின் மனைவியாக மிகவும் துணிச்சலான, கண்ணியமான வாழ்வினை அவர் மேற்கொண்டார். இதனாலேயே தனது குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக நிலையான, பாதுகாப்பான வாழ்க்கையினை அமைத்துக்கொடுக்க அவரால் முடியாமல் இருந்தது" என்று எழுதுகிறார்.2 points -
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
2 pointsரஞ்சித், 1. தலைவரோ, புலிகளோ ஒரு போதும் சோசலிசவாதிகள் இல்லை. பொருளாதார சார்ப்பை புலிகள் வெளிக்காட்டா விடினும், அவர்கள் முதலாளிதுவ கட்டமைப்பிலேயே நம்பிக்கை கொண்டார்கள் என்பதை அவர்களின் நடைமுறை அரசு கால நடவடிக்கைகள் எடுத்து சொல்கிறன. 2. இறை நம்பிக்கை, மத நம்பிக்கை இல்லாத எல்லாரும் சோசலிஸ்டுக்கள் இல்லை. 3. தலைவர் ஒரு சைவர், திருமதி மதிவதனியும் சைவர், இருந்தது தமிழ்நாடு. அவர்கள் மிக இலகுவாக திருமணம் செய்ய கூடிய வழி ஒரு இந்து கோவிலில் மாலை மாற்றுவதுதான் - இதனை வைத்து மட்டும் - தலைவர் முருக பக்தர் என சொல்ல முடியாது. 5. தகப்பன் பக்தர் என்பதால் தனயனும் பக்தர் ஆக இருக்க தேவையில்லை. 4. மேலே சபாரட்ணம் ஆங்கிலத்தில் தந்த Pirapaharan is a devotee of the Hindu deity Murugan, a God of Action and Destroyer of Evil என்ற கூற்றுக்கு அவரின் வாழ்வில் எங்கும் ஒரு குண்டு மணியளவு கூட ஆதாரம் இல்லை என்பதே நான் அறிந்தது. அவரின் அருகில் எங்கும், உடலில், பேச்சில் எதிலுமே முருக சின்னங்கள் இருந்ததும் இல்லை. 5. சபாரட்ணம் கூறியதை நீங்கள் கொஞ்சம் ஓவராகவே மொழி பெயர்த்து விட்டீர்கள். சபாரட்ணம் சொன்னதை “பிரபாகரன் ஒரு முருக பக்தர்” என்று அல்லாவா மொழி பெயர்திருக்க வேண்டும்? முருகன் மீது “அளவு கடந்த பக்தி” உடையவர் என கூறுவது, சபாரட்ணம் கூட கூறாத ஒன்றல்லவா? 6. எல்லாவற்றுக்கும் மேலாக ஜெகத் காஸ்பர் ர்ஒவ்வொரு முறை நீங்கள் சாவின் விளிம்பில் இருந்தும் மீண்டது, கடவுள் அருளாலா? என கேட்க, ஒரு அர்தபுஸ்டியான சிரிப்போடு “இயற்கை அருளால் என வைத்துகொள்ளுங்கள்” என பதில் கொடுத்துள்ளார். ஒரு முருக பக்தர் என்ன சொல்லி இருப்பார்? ஆமாம் கந்தன் அருளாலேதான் நான் இப்படி தப்பிதேன் என்று அல்லவா. ஜகத் கஸ்பருக்கு கொடுத்த பதிலை விட ஒரு மனிதன் தெளிவாக கடவுள் பற்றிய தன் நிலைப்பாட்டை சொல்லி இருக்க முடியாது. நான் அவரை அருகில் இருந்து பார்த்தவன் அல்ல. ஆனால் அவர் மிக தெளிவாக பொது வெளியில் புலிகள் இயக்கமும், நடைமுறை அரசும் மதச்சார்பற்றன என்பதை செயலிலும் சொல்லிலும் காட்டி உள்ளார். தன் தனிப்பட்ட நம்பிக்கை, நம்பிக்கையீனங்கள் பற்றி அதிகம் கதைக்கவில்லை. ஆனால் அரிதாக மேலே சொன்ன பேட்டி போன்றவற்றில் தன் தனிப்பட்ட நிலைப்பாட்டை கோடிகாட்டியே சென்றுள்ளார். அத்துடன் இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி என்றுதான் சொன்னாரே ஒழிய, முருகன் என் வழிகாட்டி என எங்கும் சொன்னதில்லை. 🙏.2 points -
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதோ யாழ் கள முஸ்லிம் உறுப்பினர் வந்துவிட்டார். போன வருசம் பாலஸ்தீன பயங்கரவாதம் வான வேடிக்கை காட்டிய போதும் தலீபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த போதும் அன்னவர் குரான் என்ற பயங்கரவாத நூலை தூக்கிக்கொண்டு யாழுக்குள் ஓடித்திரிந்தவர் என்பது நினைவு கூறத்தக்கது...🤡🤣👆1 point
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஏற்கனவே தனது விமானங்களை ஏவி இஸ்ரேல் தன் பயங்கரவாதத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டது வழமை போலவே. மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள உயர்ந்த கட்டடங்களை எல்லாம் மக்களோடு சேர்த்து அழிக்கிறது. இதனால்.. இதுவரை 200 க்கும் மேல் அப்பாவி பலஸ்தீன மக்கள் உயிரிழந்தும்... 1000 க்கும் மேல் காயப்பட்டும் உள்ளனர். இப்படியான கோழைத்தனமான இஸ்ரேலின் பதிலடிப் பயங்கரவாதத்தால் தான்.. இந்தப் பலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சனை நீறுபூத்த நெருப்பாகவே இருக்கிறது. இதில் எண்ணெய் வார்க்கும் வேலையில் அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளோடு சேர்ந்து.. இப்ப கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சிலவும்.. உக்ரைனும் சேர்ந்திருப்பது கேவலமாகவும்.. இவர்களின் உண்மை முகத்தை தோலுரிப்பதாகவும் உள்ளது.1 point
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஉமா தனது சவக்குழியை தனது சகாக்களால் தோண்டிக்கொண்டார் என்பதில் அவரது திறமை தெரிந்தது.1 point -
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
தலைமுறை தலைமுறையாக பலஸ்தீனர்களை திறந்தவெளிச் சிறை போல மேற்குக்கரையிலும், ஹாஸாவிலும் ஆயுத பலத்தைக் காட்டி அடக்கிவைத்திருக்கும் இஸ்ரேலும், அதற்கு முட்டுக்கொடுக்கும் அமெரிக்காவும், ஒற்றுமையில்லாத மத்தியகிழக்கு நாடுகளும், பாலஸ்தீனம்- இஸ்ரேல் இரண்டும் இருநாடுகள் என்ற தீர்வை கொடுக்கமுடிடியாத வலுவற்ற ஐ.நா. அமைப்பும் இன்றைய தாக்குதலுக்கும், பொதுமக்களின் உயிரழப்புக்களுக்கும் பதில் சொல்லவேண்டியவர்கள். எதிர்வரும் நாட்களில் இஸ்ரேல் கொடூரமான முறையில் இன்னும் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்களைக் கொன்றழிக்கும்போது இந்த சர்வதேச சமூகம் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கும்.1 point
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointபாலசிங்கம் அவர்களுக்கு உமா சவாலாக இருந்தது என்பது நகைச்சுவையானது. உமா பிரிவில் பாலசிங்கம் அவர்கள் ஒற்றுமையாக்க இன்னும் கொஞ்சம் பாடு பட்டிருக்கலாம்.ஆனால் மத்திய குழுவின் முடிவு என நினைக்கிறேன். பிரபாகரன் அவர்கள் தனக்காக களவிதிகளை மாற்றினார் என மக்கள் பேசுவதுண்டு. இயக்கம் தொடங்கி வளரும் வரை அவ்விதி செல்லுபடியாகும். அதுவே வாழ் நாள் விதியாக இருக்க வேண்டும் என்பது விதியல்லவே??1 point -
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஉமா - ஊர்மிளா குற்றம் சுமத்தப்பட்ட பிரச்னையில், (பாலசிங்கம் முயன்று இருக்கலாம்), அனால் காதல் / கல்யாணம் என்பதை பிரபா ஏற்றுக்கொள்ளவில்லை ; இயக்கத்தினுள் அப்படி ஒன்றும் நடக்க கூடாது என்பது பிரபாவின் பிடிவாதம். இதுவே பிரிவின் அடிப்படை. உமா -ஊர்மிலா ஒத்து கொண்டு இருந்தாலும், பிளவு நடந்தே இருக்கும். அனால், இதில் தவறு என்னவென்றால், ஒரு ஆதாரமும் இல்லாத குற்றசாட்டு உமா - ஊர்மிளா மீது சுமத்தப்பட்டது. அதே பிரபா தனக்காக விதியை மாற்றியதே வரலாறு. பூசி மெழுக வேண்டிய அவசியம் இல்லை. பாலசிங்கத்துக்கும், உமாவுக்கும் போட்டி, சவால் தன்மையானா எதிர்ப்பு இருந்தது. உமா விலத்துவது பாலசிங்கத்துக்கு கேள்வியற்ற, சவால் அற்ற இடத்தை உருவாக்கும் நிலையும் தோன்றி இருந்தது. பாலசிங்கம் இதில் எந்த அளவு தூரம் நடந்த எல்லாவற்றையும் வெளியில் சொன்னாரென்பதும் கேள்வி. பாலசிங்கம் உளப்பூர்வமாக உமா பிரச்சனையை ட்றது வைக்க முயன்றாரா என்பதும் கேள்வி.1 point -
கருத்து படங்கள்
1 point1 point
- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointமேற்படி சிறையுடைப்புக்கு புளட்டும், ஈபியும் தாம் தான் தனியே சிறை உடைப்பில் ஈடுபட்டதாக உரிமை கோரியதாக அறிகிறேன். இங்கு இரு குழுக்களுக்கும் இடையில் மக்கள் மத்தியில் (ஆதரவாளர்களும்) வாய்த் தர்க்கங்கள் ஆங்காங்கே நடை பெற்றதாம்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 pointமணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக் காடடைஉழுது போடு செல்லக் கண்ணு ............1 point- ஓயாத நிழல் யுத்தங்கள் – 1
1 pointஓயாத நிழல் யுத்தங்கள்-4 ஒக்ரோபர் மாதம் ஆரம்பித்திருக்கிறது. பனிப்போர் காலத்தில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களுள் ஒன்றான கியூப ஏவுகணைப் பிணக்கு நிகழ்ந்து இந்த மாதம் 61 ஆண்டுகள் நிறைவாகிறது. இந்த முக்கிய நிகழ்வின் பின்னணியைப் பார்க்கலாம். வெளியே தெரியாத பேராபத்து பனிப்போரின் சுவாரசியமான கதைகள் சம்பவங்களுக்குப் பின்னணியில், ஒரு இருண்ட ஆபத்து எப்போதும் மறைந்திருந்தது. அணுவாயுதப் போர் தான் அந்த ஆபத்து. பனிப்போர் காலத்தில், அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் அணுவாயுதங்களை உற்பத்தி செய்து, பரிசோதித்து வந்தன. இதனோடு இணைந்து, இந்த அணுவாயுதங்களைக் காவிச் செல்லும் தொழில் நுட்பங்களையும் இரு நாடுகளும் தொடர்ந்து நவீன மயப்படுத்தி வந்தன. உலகின் முதல் அணுவாயுதம், அமெரிக்காவில் இருந்து கப்பல் மூலம் பசுபிக்கிற்கு எடுத்துச் செல்லப் பட்டு, அங்கே மீள ஒன்றிணைக்கப் பட்டு, பி 29 என்ற விசேட விமானத்தில் எடுத்துச் செல்லப் பட்டு வீசப்பட்டது. இது நடந்து 10 ஆண்டுகளில், ஏவுகணைகள் மூலம் அணுவாயுதங்களை இலக்குகள் நோக்கி அனுப்பி வைக்கும் தொழில் நுட்பத்தை இரு நாடுகளும் உருவாக்கி விட்டன. கையிருப்பில் இருக்கும் அணுவாயுதங்களின் எண்ணிக்கையை விட, இந்த ஏவுகணைத் தொழில் நுட்பம் அணுவாயுதப் போரின் வெற்றியைத் தீர்மானிக்கும் ஒரு காரணியாக உருவாகி விட்டது. சோவியத் ஒன்றியம் கியூபாவில் நிறுத்தி வைத்த SS-4 வகை ஏவுகணை, மொஸ்கோ இராணுவ அணிவகுப்பின் போது. Medium-Range Ballistic Missile (MRBM) ஆன இதன் வீச்சு குறைந்தது 600 மைல்கள். அமெரிக்காவின் பல நகரங்கள் இந்த வீச்சினுள் அடங்கியிருந்தன. பட உதவி நன்றியுடன் ஜோன் கெனடி நினைவு நூலகம். சோவியத் ஒன்றியம் அணுவாயுதங்களை அமெரிக்கா நோக்கி ஏவுவதற்கு R-16 ரக ஏவுகணைகளை வைத்திருந்தது. திரவ எரிபொருள் மூலம் இயங்கிய இந்த ஏவுகணைகளை உடனே ஏவி விட முடியாதபடி பல மணி நேரத் தயாரிப்பு தேவையாக இருந்தது. இதற்கு எதிராக, அமெரிக்கா வைத்திருந்த அணுவாயுத தாங்கி ஏவுகணைகளில் Minuteman என்ற வகை திட எரிபொருள் மூலம் இயங்கிய உயர் தொழில் நுட்பத்தைக் கொண்டிருந்தது. இதன் பெயர் சுட்டிக் காட்டுவது போலவே, சில நிமிடங்களில் இந்த ஏவுகணையை தயாராக்கி ஏவி விடக் கூடியதாக இருந்தது. இது ஒரு பாரிய பலச்சம நிலைப் பிரச்சினையாக சோவியத் ஒன்றியத்திற்குத் தெரிந்தது. ஏனெனில், அணுவாயுதப் போரில் யார் முதலில் தாக்கி, எதிர் தரப்பின் துலங்கலைப் பூச்சியமாக்குகிறார் என்பதிலேயே வெற்றி தங்கியிருக்கிறது. 1960 களில், இந்த விடயத்தில் அமெரிக்காவின் கைகள் ஓங்கியிருந்தமையை சோவியத் ஒன்றியம் அறிந்தே இருந்தது - ஆனால், வெளிப்படையாக தங்களிடம் அதிக ஏவுகணைகள் இருப்பதாக ஒரு பிரச்சாரத்தை செய்து “Missile gap” என்றொன்று இருப்பதை அமெரிக்க நேட்டோ தரப்பை ரஷ்யர்கள் நம்ப வைத்திருந்தனர். இத்தகைய அனுகூலங்களோடு, நேட்டோ தரப்பிற்கு தங்கள் உறுப்பு நாடுகளில் அணுவாயுதம் தரித்த ஏவுகணைகளை நிறுத்தி வைத்திருக்கக் கூடியதாகவும் இருந்தது. மிக முக்கியமாக, சோவியத் அச்சுறுத்தலில் இருந்து தப்ப நேட்டோவில் இணைந்த துருக்கி, நேட்டோவின் ஏவுகணைகளை தன் நாட்டில் நிறுத்தி வைக்கவும் அனுமதித்திருந்தது. டசின் கணக்கான ஜுபிரர் (Jupiter) ஏவுகணைகள் அமெரிக்க விமானப் படையின் கட்டுப் பாட்டில் துருக்கியினுள் வைக்கப் பட்டிருந்தன. இதற்கு நிகராக, அமெரிக்காவிற்கு அருகில் மிக நெருங்கி தனது படைகளை நிறுத்தவோ, ஏவுகணைகளை வைத்திருக்கவோ சோவியத் ஒன்றியத்திற்கு வசதிகள் இருக்கவில்லை - ஆனால் 1959 இல் இந்த நிலை மாறியது! அமெரிக்கா உருவாக்கிய கியூபா கியூபா, அமெரிக்காவின் தென்கிழக்குக் கரையிலிருந்து 90 மைல்கள் தொலைவிலிருக்கும் ஒரு தீவுக் கூட்டம். இன்று 11 மில்லியனுக்கும் அதிக மக்கள் கொண்ட, கரீபியன் தீவுகளில் இரண்டாவது பெரிய சனத்தொகை கொண்ட நாடு கியூபா. 1902 இல் கியூபா உருவான போது, அங்கே சோசலிசம், கம்யூனிசம் இருக்கவில்லை. உண்மையில், ஸ்பெயினின் காலனி ஆட்சியிலிருந்து கியூபா விடுதலை பெற, காலனி எதிர்ப்பாளராக அன்று திகழ்ந்த அமெரிக்கா உதவி புரிந்தது. இதனால், அமெரிக்காவின் இராணுவத் தளங்களை அமைக்கவும், அமெரிக்க தொழிலதிபர்கள் தொழில் முயற்சிகளை மேற்கொள்ளவும் கியூபாவில் முன்னுரிமை கிடைத்தது. கரும்புச் செய்கையும், அதிலிருந்து கிடைக்கும் சீனியும் தான் கியூபாவின் பிரதான உற்பத்திப் பொருட்கள். 1950 களில் fபுல்ஜென்சியோ பரிஸ்ராவின் தலைமையில், கியூபா ஊழலும், அடக்கு முறைகளும் மலிந்த தேசமாக அமெரிக்காவின் ஆதரவுடன் திகழ்ந்த காலத்தில் தான் fபிடல் காஸ்ட்ரோ, சே குவேரா ஆகியோரின் தலைமையில் ஆட்சி மாற்ற முயற்சி புரட்சியாக துளிர் விட்டது. ஒரு கட்டத்தில், பரிஸ்ராவின் ஊழலை அமெரிக்காவினால் கூட பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில், அமெரிக்க ஆதரவு நீங்கி விட, பரிஸ்ராவின் ஆட்சி வீழ்ந்து காஸ்ட்ரோவின் புரட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்தனர் - இது நிகழ்ந்தது 1959 இல். கம்யூனிச கியூபா ஆட்சிக்கு வந்த காஸ்ட்ரோ உடனடியாக கம்யூனிச நாடாக கியூபாவை மாற்றவில்லை. அமெரிக்கா வழமை போல தன் நலன்களைப் பேண இடம் இருந்தது. ஒரு கட்டத்தில், நியூ யோர்க் நகருக்கு காஸ்ட்றோ விஜயம் செய்து பலமான மக்கள் வரவேற்பைப் பெற்ற நிலை கூட இருந்தது. ஆனால், அமெரிக்காவின் சி.ஐ.ஏ மத்திய அமெரிக்காவில் செயல்படுத்தியது போல, கியூபாவின் ஆட்சியை முற்றிலும் தம் சார்பாக மாற்றும் முயற்சிகளை எடுத்து, 1961 இல் ஒரு இரகசிய இராணுவ நடவடிக்கையைக் கூட எடுத்திருந்தது. இதனை அவதானித்த சோவியத் ஒன்றியம், காஸ்ட்ரோவை தன் பக்கம் அணைத்துக் கொண்டது. 1962 இல், காஸ்ட்ரோ தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாக (அதுவும் சோவியத் சார்பு கம்யூனிஸ்ட்டாக) பகிரங்கமாக அறிவித்தார். ஒரு படி மேலே சென்று, கியூபாவில் இருந்த அமெரிக்க கம்பனிகளை அரசுடமையாக்கிய அறிவிப்பும் வெளிவந்தது. அமெரிக்கா பதிலுக்கு, கியூபாவின் சீனி உட்பட்ட ஏற்றுமதிகளைத் தடை செய்து, கியூப பொருளாதாரம் வீழ்ச்சியடைய வைத்தது. ஜோன் கெனடியும் நிகிரா குருசேவும் இந்த வேளையில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இளையவர் கெனடி இருந்தார். சோவியத் தலைவராக இருந்த நிகிரா குருசேவ் அனுபவசாலி, படிப்படியாக கம்யூனிஸ்ட் கட்சியில் முன்னேறி மேலே வந்த பழுத்த அரசியல் வாதி. இந்த அனுபவ அசம நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தான் குருசேவ் கியூபாவில் சோவியத் ஏவுகணைகளை நிறுத்தி வைக்கும் திட்டத்தை முடுக்கி விட்டார். வெளிப்படையாக கெனடியுடன் பேச்சு வார்த்தைகள் நடத்திய குருசேவ், ஜேர்மனியின் பெர்லின் நகர் முழுவதையும் சோவியத் தரப்பிடம் விட்டு விடும் படி அழுத்தம் கொடுத்தார். அமெரிக்காவின் இராணுவ தலைமையோ, பெர்லினில் இருந்து ஒரு அங்குலம் கூட நேட்டோ அணி பின்வாங்கக் கூடாது என்று கெனடிக்கு ஆலோசனை கொடுத்திருந்தது. கெனடியும் இதை விட்டுக் கொடுக்காமல் இருந்த நிலையில், ஒரு அழுத்தமாகத் தான், கியூபாவிற்கு சோவியத் ஏவுகணைகள் நகர்த்தப் பட்டன. கடத்தி வரப்பட்ட சோவியத் ஏவுகணைகள் கியூபாவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்குமிடையே இருந்த கப்பல் போக்குவரத்தைப் பயன்படுத்தியே சோவியத் ஏவுகணைகள் பாகங்களாக கியூபாவினுள் கொண்டு வரப்பட்டிருந்தன. இந்த இரகசிய நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் 1962 செப்ரெம்பர் வரை அமெரிக்க உளவுத் துறைக்குத் தெரியவரவில்லை. ஆனால், சோவியத் சாதாரண ஆயுதங்களை கியூபாவிற்கு வழங்கி வருகிறது என்பதை அமெரிக்கா அறிந்தே இருந்தது. கியூபாவின் மீது கண்காணிப்புப் பறப்புகளை மேற்கொண்ட U-2 உளவு விமானத்தின் படங்கள் தான், ஏவுகணைகளுக்கான ஏவு தளங்கள் கியூபாவில் கட்டப் படுவதை முதலில் வெளிக்கொண்டு வந்தன. கியூபாவில் சோவியத் ஏவுகணைகளை ஏவக்கூடிய ஏவு தளமும், வாகனங்களும். விமானத்திலிருந்து எடுக்கப் பட்ட உளவுப் படம். பட உதவி நன்றியுடன் ஜோன் கெனடி நினைவு நூலகம். இதே வேளை, அமெரிக்கா இரகசியமாக அல்லாது, நேரடியாகவே கியூபா மீது ஒரு ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கையைத் திட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஆரம்பக் கட்டத்தில் இருந்த இந்த திட்டத்திற்கு நாள் குறிக்கப் பட்டிருக்கவில்லை. கியூபாவில் சோவியத் ஏவுகணைகள் இருப்பதை அறிந்து கொண்ட ஒக்ரோபர் 14 முதல், அடுத்த இரு வாரங்கள் வாஷிங்ரனும், கிரெம்ளினும் இந்தப் பிணக்கைச் சமாளித்த விதம் பல பாடங்களுக்கு வழி வகுத்தது எனலாம்! அமெரிக்காவின் பதில் என்ன? கடுமையான ஆட்சேபனையை தெரிவிக்க வேண்டுமென்று ஒரு தரப்பும், உடனடியாக கியூபா மீது இராணுவத் தாக்குதல் தொடுக்க வேண்டுமென்று ஒரு தீவிரமான தரப்பும் கெனடிக்கு ஆலோசனை வழங்கின. கெனடியோ, மூன்றாவது ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தார்: கியூபாவைச் சுற்றி கடல்வழிப் போக்குவரத்திற்கு ஒரு தடையை (quarantine) உருவாக்கி, மேலதிக ஏவுகணைப் பாகங்கள் வராமல் தடுப்பதே அந்த மூன்றாவது வழி. இந்தத் தடை மூலம், கியூபாவை நோக்கி வரும் சகல சோவியத் கப்பல்களையும் அமெரிக்க கடற்படை பரிசோதிக்க வேண்டும். சோவியத் ஒன்றியம், தான் அனுப்பிய சில கப்பல்களை பரிசோதிக்க அனுமதிக்காமலே பயணத்தை இடை நடுவில் கைவிட்டு திரும்புப் படி செய்தது. ஆனால், ஏற்கனவே கியூபா வந்து விட்ட ஏவுகணைகளை அகற்ற ரஷ்யர்கள் மறுத்தனர். ஒரு கட்டத்தில், அமெரிக்காவின் U-2 உளவு விமானம் கியூபாவின் வான்பரப்பில் வைத்து சுட்டு வீழ்த்தப் பட்டது. இறுதியில், கியூபா மீதான அமெரிக்கத் தாக்குதல் தான் ஒரே தெரிவு என்ற நிலைக்கு அமெரிக்க தரப்பு வந்து விட்ட போது, குருசேவ் நிபந்தனையோடு கியூபாவிலிருந்து சோவியத் ஏவுகணைகளை அகற்ற ஒப்புக் கொண்டார். கியூபா மீது தாக்குதல் தொடுக்கக் கூடாது, துருக்கியில் இருந்து நேட்டோவின் ஜுபிரர் ஏவுகணைகளை அகற்ற வேண்டும், ஆகியவையே குருசேவின் நிபந்தனைகளாக இருந்தன. முதல் நிபந்தனை உடனடியாக ஏற்றுக் கொள்ளப் பட்டு தாக்குதல் நடத்தப் படாதென்ற உறுதி மொழி வழங்கப் பட்டது. இரண்டாவது நிபந்தனையை அமெரிக்கா இலகுவாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதைச் செய்வதானால், கியூபாவிற்கு சோவியத் வழங்கிய குண்டு வீச்சு விமானங்களையும் திரும்பப் பெற வேண்டுமென்ற அமெரிக்காவின் பதில் நிபந்தனையை சோவியத் ஒன்றியம் ஏற்றுக் கொண்டது. ஒக்ரோபர் 27, 1962 இல் கியூப ஏவுகணைப் பிணக்கு முடிவுக்கு வந்தது. அமெரிக்காவின் கடல் போக்கு வரத்துத் தடை நவம்பரில் விலக்கப் பட்டது. சோவியத் ஏவுகணைகளையும், குண்டு வீச்சு விமானங்களையும் கியூபாவிலிருந்து அகற்றிய பின்னர், 1963 மத்தியில் நேட்டோ துருக்கியில் இருந்து தனது ஏவுகணைகளை விலக்கிக் கொண்டது. உலகம், தனது வழமையான பதற்றமற்ற பார்வையாளர் பணியைச் செய்ய ஆரம்பித்தது. பாடங்களும் விளைவுகளும் அணுவாயுதப் போர் விளிம்பு நிலைக்குக் கொண்டு சென்ற கியூப பிரச்சினையில், இரு தலைவர்களும் நடந்து கொண்ட முறை, வெளிக்காட்டிய பொறுப்புணர்வு என்பன அவதானிகளால் பாராட்டப் படுகின்றன. சில ஆண்டுகளின் பின்னர் தனது பின்வாங்கும் முடிவைப் பற்றிக் கருத்துரைத்த குருசேவ் இப்படிச் சொல்கிறார்: "உலக அழிவு பற்றிய அச்சம் எங்கள் பின்வாங்கும் முடிவிற்கு முக்கியமான காரணம். இன்றைய உலகின் ஒரு குறைபாடு, யாரும் அழிவைப் பற்றி அச்சம் கொள்வதில்லை!". கியூபப் பிணக்கின் விளைவாக பல நல்ல மாற்றங்கள், அமெரிக்க சோவியத் தலைமைகளின் தொடர்பாடலில் ஏற்பட்டன. புதிதாக வெள்ளை மாளிகைக்கும் கிரெம்ளினுக்குமிடையேயான நேரடி தொலைபேசி இணைப்பொன்றும் (hot line) இதன் பின்னர் உருவாக்கப் பட்டது. மட்டுப் படுத்தப் பட்ட அளவில், ஒருவரது அணுவாயுதப் பரிசோதனையை எதிரணி கண்காணிக்கும் ஏற்பாடுகளும் உருவாக்கப் பட்டன. கியூபாவிற்கு என்ன நிகழ்ந்தது? கியூபா தொடர்ந்து அமெரிக்காவின் பொருளாதாரத் தடையினால் பொருளாதாரம் சிதைந்த, கறுப்புச் சந்தை மூலம் மக்கள் வாழ்க்கையை நகர்த்தும் ஒரு கம்யூனிச தேசமாகத் தொடர்கிறது. அமெரிக்க பொருளாதாரத் தடையினால் கியூபா இழந்த வருமானத்தை, சோவியத் ஒன்றியத்தின் உதவிகளால் முழுமையாக ஈடு கட்ட இயலவில்லை. 1990 வரை, கியூபாவிற்கு சோவியத் ஒன்றியம் பொருளாதார உதவிகளை வழங்கி வந்தது. 1991 இல், கொர்பச்சேவின் ஆட்சியில் சோவியத் ஒன்றியம் பாரிய பொருளாதாரச் சரிவைச் சந்தித்தது. மேற்கிடம் கடனும், உதவிகளும் பெற்று ரஷ்யர்களுக்கு உணவளிக்க வேண்டிய நிலைக்கு சோவியத் ஒன்றியம் இறங்கியது. இந்த உதவிகளுக்கு மேற்கு அணி விதித்த பல நிபந்தனைகளுக்கு சோவியத் குழு கட்டுப் பட வேண்டியிருந்தது. அவற்றுள் ஒரு நிபந்தனை, சோவியத்தின் ஆதரவில் இருக்கும் ஆப்கானிஸ்தான் நஜிபுல்லா அரசு, கியூபாவின் காஸ்ட்ரோ அரசு ஆகியவற்றிற்கான நிதியுதவிகளை நிறுத்த வேண்டும் என்பதாகும். மேற்கு எதிர்பார்த்ததை விட இலகுவாக இந்த நிபந்தனைகளை கொர்பச்சேவ் குழு ஏற்றுக் கொண்டது. இரு நாடுகளுக்குமான சில பில்லியன் ரூபிள்கள் உதவியை சோவியத் ஒன்றியம் நிறுத்திக் கொண்டது. அடுத்த 6 மாதங்களில் காபூலின் நஜிபுல்லா அரசு வீழ்ந்தது. கியூபா, இன்னும் தப்பியிருக்கிறது. - தொடரும்1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointமட்டக்களப்புச் சிறையுடைப்பு தமிழ்ப் போராளிகள் இந்தியாவுக்கு இராணுவப் பயிற்சிக்குச் செல்கிறார்கள் என்கிற செய்தி இலங்கை இராணுவத்தின் காதுகளுக்கும் எட்டியது. கார்த்திகை மாதம் வரை தமிழ்ப் போராளிகளுக்கு இந்தியா பயிற்சியளித்துவரும் விடயம் இலங்கைக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அது தெரியவருமுன்பே ஜெயவர்த்தனவுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அதுதான் 1983 ஆம் ஆண்டு புரட்டாதி 23 ஆம் திகதி இடம்பெற்ற மட்டக்களப்புச் சிறைச்சாலையுடைப்பு. ஆடி 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளின்போது தப்பிய 19 தமிழ் அரசியல்க் கைதிகளை அரசு ஆடி 28 ஆம் திகதி மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றியிருந்தது. விமானப்படை விமானமொன்றில் மட்டக்களப்பிற்கு இழுத்துச் செல்லப்பட்ட தமிழ்க் கைதிகளை வான் ஒன்றில் ஏற்றி மட்டக்களப்பு விமானப்பட முகாமிலிருந்து மட்டக்களப்பு நகரில் அமைந்திருந்த ஆனைப்பந்தி எனும் இடத்திற்கு பொலீஸார் இழுத்துச் சென்றார்கள். மட்டக்களப்பு வாவியால் சூழப்பட்ட சிறைச்சாலை இப்பகுதியிலேயே அமைந்திருக்கிறது. மட்டக்களப்புச் சிறைச்சாலையில் மேலும் 22 அரசியற்கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களுள் பெரும்பாலானோர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு விரிவுரையாளர்களான வரதராஜப் பெருமாள் மற்றும் மகேந்திரராஜா ஆகியோரும் அடக்கம். மட்டக்களப்பு ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினரால் சத்துருக்கொண்டானில் ஏற்பாடு செய்யப்பட்ட கார்ல் மார்க்ஸ் நூற்றாண்டு நினைவுதினத்தில் உரையாற்றுவதற்காக இந்த விரிவுரையாளர்கள் இருவரையும் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைமை யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்பியிருந்தது. இந்த விடயம் பொலீஸாருக்குத் தெரியவந்ததையடுத்து நிகழ்வினை ஒழுங்குசெய்தவர்களையும் யாழ்ப்பாணத்திலிருந்து வருகைதந்திருந்த இரு விரிவுரையாளர்களையும் அது கைதுசெய்து வைத்திருந்தது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் சிவா, மணி, குமார், வடிவேலு, சிறீஸ்கந்தராஜா ஆகிய ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர்களும் அடக்கம். அவ்வமைப்பின் தலைவர் பத்மநாபாவும் இந்த நிகழ்விற்கு வந்திருந்தார். அவர் வந்திருப்பது பொலீஸாருக்கு தெரிந்திருக்காமையினால் அவர் கைதுசெய்யப்படவில்லை. மட்டக்களப்புச் சிறைச்சாலை உடைக்கப்பட்டபோது அங்கு 41 தமிழ் அரசியற்கைதிகளும் இன்னும் குற்றச்செயல்களுக்காக தடுத்துவைக்கப்பட்டிருந்த 150 கைதிகளும் இருந்தனர். மூவினத்தைச் சேர்ந்த கைதிகளும் அடைத்துவைக்கப்பட்டிருந்த இச்சிறைச்சாலையில் மிகக் கொடூரமான குற்றவாளிகள் சிலரும் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். மட்டக்களப்பைச் சேர்ந்த பரமதேவா என்பவரும் அப்போது சிறைச்சாலயில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலுக்கு வந்த ஆரம்ப நாட்களில் கைதுசெய்யப்பட்டிருந்தவர் அவர். அவரது தண்டனைக் காலம் விரைவில் முடிவுறும் தறுவாயில் இருந்தபோதும்கூட சிறையுடைப்புக் குழுவினருடன் அவரும் இணைந்துகொண்டார். வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகளில் இருந்து உயிர்தப்பி மட்டக்களப்புச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்த 19 தமிழ் அரசியற்கைதிகளிடமிருந்தும் வெலிக்கடையில் நடைபெற்ற படுகொலைகள் தொடர்பான விபரங்களை கேட்டறிந்துகொள்ள உயர் அதிகாரிகள் அடங்கிய பொலீஸ் குழுவொன்று ஆவணி மாதத்தில் அங்கு விஜயம் செய்திருந்தது. ஆனால், இந்த விசாரணைகளை முற்றாகப் புறக்கணிப்பதென்று 19 கைதிகளும் முடிவெடுத்திருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்த அதிகாரிகள் வெலிக்கடையில் நடந்த விடயங்கள் குறித்து அறிய முயன்றனர். ஆனால், பொலீஸ் அதிகாரிகள் மீது தமக்கு நம்பிக்கை சிறிதும் இல்லையென்று கூறிய அவர்கள் விபரங்கள எதனையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இதனால் மிகவும் ஆத்திரமடைந்த பொலீஸ் அதிகாரிகள் தமது கோபத்தை கைதிகள் மீது காட்ட முயன்றனர். பொலீஸ் அதிகாரிகள் சென்றபின்னர் கைதிகளுடன் பேசிய சிறையதிகாரிகள் சிங்களப் பகுதியொன்றில் அதியுயர் பாதுகாப்புக்கொண்ட சிறையொன்று கட்டப்பட்டு வருவதாகவும் வெகுவிரைவில் தமிழ்க் கைதிகளை புதிய சிறைச்சாலைக்கு மாற்றவிருப்பதாகவும் தெரிவித்தனர். "எங்களை மீண்டும் சிங்களப் பகுதிக்கு இழுத்துச் சென்று கொல்லவே அவர்கள் திட்டமிடுகிறார்கள் என்று நாம் நினைக்கத் தொடங்கினோம்" என்று சிறையுடைப்பின்போது தப்பிய கைதியொருவர் என்னிடம் கூறினார். சிறையுடைப்பு திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தல் ஆகிய செயற்பாடுகள் அங்கிருந்த அனைவராலும் ஒருமித்தே எடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார். புளொட் அமைப்பின் ராணுவப் பிரிவிற்குப் பொறுப்பாக இருந்தவரும் பின்னர் இலங்கை ராணுவத்தின் கூலிப்படையாகச் செயற்பட்டவருமான மாணிக்கதாசனுடன் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் போராளித் தலைவர்களாகக் காணப்பட்ட டக்ளஸ் தேவாநந்தா, மாணிக்கதாசன், பரந்தன் ராஜன், பனாகொடை மகேஸ்வரன், பரமதேவா ஆகியோர் சிறையுடைப்பு முயற்சிக்குத் தலைமை தாங்கினர். சிறையினை உடைத்து அனைவரும் வெளியேறும்வரை ஒன்றிணைந்து செயற்படுவதென்றும் அதன்பின்னர் ஒவ்வொரு குழுவினரும் தத்தமது இடங்களுக்குத் தப்பிச் செல்லமுடியும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. "சிறையுடைப்பினை மிகக் கவனமாகத் திட்டமிட்டோம்" என்று அவர் கூறினார். திட்டத்தின் சாராம்சம் என்னவெனில் சிறையதிகாரியையும் ஏழு காவலர்களையும் மடக்கிப் பிடித்து அவர்களை கதிரைகளுடன் கட்டி, வாய்களுக்குள் துணிபொதிந்து விட்ட பின்னர் சிறையின் முன்வாயிலாலேயே வெளியேறுவது என்பதுதான். சிறைவாயிலின் சாவிகளின் பிரதிகள் சவர்க்காரக் கட்டிகளில் பிரதிசெய்யப்பட்டு தயாரித்துவைக்கப்பட்டிருந்தன. திடமான தேகக் கட்டமைப்பைக் கொண்டிருந்த டக்ளஸ் தேவாநந்தா, மாணிக்கதாசன், மகேஸ்வரன் மற்றும் பரந்தன் ராஜன் ஆகியோர் சிறைக் காவலாளிகளை மடக்கிப் பிடிப்பதென்று முடிவுசெய்யப்பட்டது. அப்போது எந்த இயக்கத்தையும் சேர்ந்திராத வரதராஜப் பெருமாள் மற்றும் ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த அழகிரி ஆகியோருக்கு முன்வாயில் திறக்கப்பட முடியாது போகுமிடத்து பின்பகுதியில் உள்ளை சிறைச்சாலைச் சுவரை உடைத்து தயாராக நிற்கும் பணி கொடுக்கப்பட்டது. சிறையதிகாரியினதும், சிறைக் காவலாளிகளினதும் வாய்களைக் கட்டிப்போடும் பணி வைத்தியர் ஜயதிலகராஜாவுக்கும் காந்தியத்தின் டேவிட் அவர்களுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. தப்பிச் செல்வதற்கான நேரத்தை மிகக் கவனமாக அவர்கள் குறித்துக்கொண்டார்கள். சிறைச்சாலையின் முன்வாயிலில் எப்போதுமே ஒரு காவலாளி கடமையில் இருப்பார். ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை இராணுவ ரோந்து வாகனம் ஒன்று சிறைச்சாலைப் பகுதியைச் சுற்றி வலம்வந்துகொண்டிருக்கும். இதற்கு மேலதிகமாக பொலீஸ் ரோந்து வாகனம் ஒன்றும் இப்பகுதிக்கு வந்துசென்றுகொண்டிருக்கும். ஆகவே வெறும் 7 நிமிட இடைவெளிக்குள் சிறையுடைப்பை நிகழ்த்தித் தப்பிச் செல்லவேண்டும். தப்பிச்செல்வதற்கு இரவு வேளையைத் தேர்ந்தெடுத்தார்கள். வீதிகளில் அதிக ஆள் நடமாட்டம் இல்லாமலும் ஆனால் முற்றாக வெறிச்சோடிக் கிடவாமலும் இருப்பதே தப்பிச் செல்வதற்கு ஏதுவானது என்று முடிவெடுத்தார்கள். அதன்படி இரவு 7:25 இலிருந்து 7:32 இற்கிடையில் தப்பிச் செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது. அதாவது இராணுவ ரோந்தணி கிளம்பிச் சென்று பொலீஸ் ரோந்தணி வருவதற்கிடையில் அவர்கள் தப்பிச் செல்ல வேண்டும். ஆயுதங்களைக் கடத்தும் பணி இராணுவப் பயிற்சி பெற்ற போராளிகளிடமே விடப்பட்டது. டக்ளசும் அவரது ஏனைய தோழர்களும் வெளியிலிருந்து தமது சகாக்களுடன் தொடர்புகொண்டு அவர்கள் தப்பிச் செல்வதற்கான வாகன ஒழுங்குகளைச் செய்திருந்தனர். அதன்படி மத்திய குழு உறிப்பினரான குணசேகரம் என்பவர் சிறைச்சாலையின் வாயிலுக்கு வெளியே டக்ளஸ் குழுவினரை பொறுப்பெடுக்கும் பொருட்டு நிற்கவைக்கப்பட்டார். மாணிக்கதாசன், பரந்தன் ராஜன், வாமதேவன், பரூக் மற்றும் டேவிட் ஆகியோருக்கு புளொட் அமைப்பு ஆயுதங்களை வழங்கியதுடன் அவர்கள் தப்பிச் செல்லும் ஒழுங்குகளையும் செய்திருந்தது. தமிழ் ஈழ ராணுவம் எனும் அமைப்பின் தலைவரான பனாகொடை மகேஸ்வரன் தானும் தனது இரு தோழர்களான காளி மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரும் மட்டக்களப்பு வாவியூடாக படகில் தப்பிச் செல்வதாகக் கூறினார்கள். நித்தியானந்தன், அவரது மனைவி நிர்மலா, குருக்களான சின்னராசா, ஜயதிலகராஜா, சிங்கராயர் மற்றும் வைத்தியர் ஜயகுலராஜா ஆகியோர் புலிகளின் அனுதாபிகளாக இருந்தனர். மற்றையவர்களுடன் பேசிய குரு சிங்கராயர் அவர்கள், தான் தப்பிச் செல்ல விரும்பவில்லை என்று கூறினார். அவரது வயதும், உடல்நிலையும் தப்பிச்செல்வதற்கு ஏற்றதாக இருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், தப்பிச் சென்றால் தம்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டதாகிவிடும், ஆகவே தப்பிச்செல்வதில்லை என்கிற முடிவிற்கு அவர் வந்திருந்தார். நித்தியானந்தன் பேசும்போது தானும் தனது மனைவியும் தம்பாட்டில் தப்பிச் செல்வதாகக் கூறினார். கோவை மகேசன் அப்போது நோய்வாய்ப்பட்டிருந்ததோடு வைத்தியர் தர்மலிங்கத்தின் வயது அவரைத் தப்பிச் செல்ல அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் ஏனையவர்களைப் போல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினால் அவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கவில்லை. மாறாக அவசரகால நிலைமைச் சட்டத்தினூடாகவே கைதுசெய்யப்பட்டிருந்ததுடன் மிக விரைவில் விடுதலை செய்யப்படும் நிலையிலும் இருந்தார்கள். ஆகவே அவர்களும் தப்பிச் செல்வதில்லை என்ற முடிவிற்கு வந்திருந்தனர். குரு சிங்கராயர், கோவை மகேசன், வைத்தியர் தர்மலிங்கம் ஆகியோர் 1983 ஆம் ஆண்டு கார்த்திகை மாத முற்பகுதியில் விடுவிக்கப்பட்டிருந்தனர். மிகச் சிறியளவிலான ஆயுதங்களையே சிறைச்சாலைக்குள் அவர்களால் கடத்திவர முடிந்திருந்தது. ஆகவே ரப்பரால் உருவாக்கப்பட்ட காலணிகளில் கைத்துப்பாக்கிகள் போல வெட்டி அவற்றினைக்கொண்டே சிறைக் காவலர்களையும் ஏனைய கைதிகளையும் அச்சுருத்துவது என்று முடிவாகியது. பனாகொடை மகேஸ்வரன் இந்தப் பணியைப் பொறுப்பெடுத்தார். "தப்பிச் செல்ல நாம் குறித்துக்கொண்ட நிமிடம் வரையும் நாம் கடவுளை வேண்டிக்கொண்டோம். தப்பிச் செல்வதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முதல் எங்கள் அனைவரையும் சந்தித்த குரு சிங்கராயர் எம்மை ஆசீர்வதித்ததுடன் எமது முயற்சி வெற்றியளிக்கவும் வாழ்த்தினார் " என்று என்னுடன் பேசியவர் கூறினார். இரவு 7 மணியளவில் சிறைக்காவலாளி அந்தோணிப்பிள்ளை கைதிகளுக்கு தேநீர் எடுத்துக்கொண்டு வந்தார். வழமையாக மாலை வேளைகளில் மது அருந்தும் பழக்கம் கொண்ட அவர் அப்போதுதான் சிறிது மதுவை அருந்திவிட்டு உற்சாகமான மனநிலையில் பழைய சினிமாப் பாடல் ஒன்றினைப் பாடிக்கொண்டு வந்தார். "எப்பிடி இருக்கிறியள் தம்பிகள்?" என்று கேட்டுக்கொண்டே அவர் வந்தார். அவரைத் திடீரென்று பிடித்துக்கொண்ட பரந்தன் ராஜன் உடனேயே அவரைக் கட்டினார். டேவிட் அவரது வாயைத் துணிகளால் கட்டிப்போட்டார். ஆறடி உயரமும், சிறந்த உடல்வாகுவும் கொண்ட பனாகொடை மகேஸ்வரன் சிறையதிகாரியையும் காவலர்களையும் தாக்கி அவர்களைப் பிடித்துக்கொண்டார். இதனையடுத்து சிறைக்கதிகள் வரிசையாக சிறைவாயிலுக்குச் சென்று அங்கிருந்து தப்பிச் சென்றார்கள். பின்புற சுவரை இடித்துக்கொண்டிருந்த வரதராஜப் பெருமாளும் அழகிரியும் திடீரென்று சிறை நிசப்தமானதையடுத்து சிறையின் முன்வாயிலிக்குச் சென்று பார்த்தபோது அது திறந்துகிடந்தது. வாயிலூடாக வெளியே ஓடிய அவர்கள் சிறையின் பின்புறம் நோக்கி வெளிவீதியால் ஓடினார்கள். வாவியின் கரைக்கு அவர்கள் சென்றபோது மகேஸ்வரனையும் அவரது தோழர்களையும் ஏற்றிக்கொண்டு படகொன்று வாவியூடாக வெளியேறுவதை கண்ணுற்றார்கள். இவர்கள் கூக்குரலிட ஆரம்பிக்க, சென்றுகொண்டிருந்த படகு திரும்பிவந்து இவர்களையும் ஏற்றிக்கொண்டு சென்றது. தந்தை செல்வாவின் முன்னாள் வாகனச் சாரதியும் பின்னர் ஆயுத அமைப்பொன்றில் இணைந்துகொண்டவருமான வாமதேவவாவைக் கைதுசெய்ய பொதுமக்களின் உதவியை நாடிய பொலீஸார் 100,000 ரூபாய்களை பரிசுத் தொகையாக அறிவித்திருந்தனர். கைதுசெய்யப்பட்டபின் மட்டக்களப்புச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு நிர்மலா நித்தியானந்தன் தடுத்துவைக்கப்பட்டிருந்த அறையினை உடைக்கும் பணி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தப்பிச் செல்லும் அவசரத்தில் அவர் அதனை மறந்துவிட்டார். ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் புளொட் போராளிகள் காட்டுப்பகுதியொன்றின் ஒற்றையடிப் பாதைக்கு வாகனம் ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டனர். சிறிது தூரம் அப்பாதை வழியே ஒன்றாகச் சென்ற அவர்கள் பின்னர் தத்தமது அமைப்புக்கள் ஒழுங்குசெய்திருந்த படகுகள் தரித்துநின்ற கரைகளை நோக்கிச் சென்று அங்கிருந்து தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றனர். புலிகளின் அனுதாபிகளான நித்தியானந்தன், குருவானவர்களான சின்னராசா, ஜயதிலகராஜா மற்றும் ஜயகுலராஜா ஆகியோர் சிறைச்சாலையின் பிற்பகுதிக்குச் சென்றனர். பரமதேவாவும் அவர்களுடன் இணைந்துகொண்டார். சுமார் 600 மீட்டர்கள் தூரத்தில் அமைந்திருந்த மாந்தீவை படகொன்றில் ஏறிச் சென்றடைந்தனர். அவர்கள் சென்ற திசைநோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவது அவர்களுக்குத் தெரிந்தது. அந்த இருட்டில் அவர்கள் முதலைக்குடா நோக்கி வேகமாக ஓடினர். அங்கிருந்து உழவு இயந்திரம் ஒன்றினை எடுத்துக்கொண்ட அவர்கள் திருக்கோவில் நோக்கி அதனை ஓட்டிச் சென்றனர். மறைவிடம் ஒன்றில் அங்கு தங்கிய பின்னர் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றனர். பனாகொடை மகேஸ்வரனுக்கு வேறு திட்டம் இருந்தது. அவர் மட்டக்களப்பிலேயே இருக்க விரும்பினார். போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க விரும்பிய அவர் ஏதாவது புதுமையாகச் செய்யவேண்டும் என்று எண்ணினார். மட்டக்களப்புப் பகுதி அவருக்குப் பரீட்சயமில்லாதபோதும் மறைவிடம் ஒன்றைத் தேடி ஒளிந்துகொண்டார். யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த அவர் மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றிருந்தார். சில மாதங்களின் பின்னர் அவர் அதிரடி நடவடிக்கை ஒன்றைச் செய்திருந்தார். காத்தான்குடியில் இருந்த வங்கியொன்றைக் கொள்ளையிட்டு அங்கிருந்த 35 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தினை எடுத்துச் சென்றார். அக்காலத்தில் அதுவே அதிகளவு பணம் களவாடப்பட்ட நிகழ்வாக இருந்தது. "தமிழர்களின் வரலாற்றில் திகிலான அத்தியாயம்" என்று டேவிட் அவர்களால் குறிப்பிடப்பட்ட இந்தச் சிறையுடைப்பு அங்கிருந்த ஏனைய கைதிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது. தமிழ் அரசியற்கைதிகள் தப்பிச் சென்றதையும், வாயிலின் இரும்புக் கதவுகள் அகலத் திறந்து கிடந்ததையும் கண்ணுற்ற அவர்களும் தப்பிச் சென்றார்கள். பொலீஸாரின் ரோந்தணி வழமைபோல 7:32 மணிக்கு சிறைச்சாலைக்கு வந்தபோது அது வெறிச்சோடிப்போய்க் கிடந்தது. உடனடியாக பொலீஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தரை, நீர், ஆகாய வழியாக பாரிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு நகரிலிருந்து தப்பிச் செல்ல முடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்த சில கைதிகளை, குறிப்பாக சிங்களக் கைதிகளை பொலீஸார் பின்னர் மீளப் பிடித்து கொண்டனர்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointபயிற்சியின் நிறைவில் கண்கலங்கிய கிட்டுவும், யதார்த்தை உணர்த்திய பிரபாகரனும் மூன்று இடங்களில் பயிற்சி வழங்கப்பட்டது. தில்லியின் இதயப்பகுதியில் அமைந்திருந்த ராமகிருஷ்ணபுரம், தில்லி விமான நிலையத்திற்கு அருகில் இருந்த டெஹெரா டன் மற்றும் சக்கிரட்ட ஆகிய பகுதிகளிலேயே பல பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு அமைப்பிலிருந்தும் சாதாரண பயிற்சிக்கு கொண்டுவரப்பட்ட போராளிகள் தனித்தனியாகத் தங்கவைக்கப்பட்டனர். விசேட பயிற்சிகளுக்கென்று அழைத்துவரப்பட்ட போராளிகளை, அவர்கள் வேறு வேறான இயக்கங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும் ஒரு முகாமிலேயே தங்கவைக்கப்பட்டனர். ஆனால், புலிகளின் போராளிகளை ஏனைய அமைப்புக்களின் விசேட பயிற்சிப் போராளிகளுடன் தங்கவைப்பதை அதிகாரிகள் தவிர்த்துக்கொண்டனர். புலிகளின் போராளிகளை தொடர்ந்தும் தனியாக வைத்தே பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தது. புலிகளை இரகசிய ராணுவப் பயிற்சி நிலையமான சக்கிரட்ட பகுதியில் தங்கவைத்து பயிற்சியளித்தனர். இப்பகுதி இந்திய ராணுவப் புலநாய்வு அதிகாரிகளினால் "கட்டமைப்பு 22 " என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த முகாமிலேயே சீன ஆக்கிரமிப்பிற்குட்பட்டிருந்த திபெத்தில் சீன அரசின் நிர்வாகத்திற்கெதிராகப் போராடிவந்த திபெத்தியப் போராளிகளுக்கு ரோவும், அமெரிக்காவின் சி.ஐ.ஏ அமைப்பும் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்திருந்தன. புலிகளின் போராளிகளுக்கு இந்த முகாமினை ஒதுக்குமாறு ரோ வினால் புலிகளைப் பயிற்றுவிக்கென அமர்த்தப்பட்ட அதிகாரியான காவோ தனது உதவியாளர்களுக்குப் பணித்திருந்தார். இந்தியப் பயிற்சிக்காக தனது போராளிகளை அனுப்புவது தொடர்பில் தலைவர் தனது சந்தேகங்களைக் கொண்டிருந்தார். சிங்களப் பேரினவாதத்திற்கெதிராக தான் முன்னெடுத்திருக்கும் போராட்டத்திற்கும், இந்தியா போராளிகளுக்கு பயிற்சியளிக்கும் நோக்கத்திற்கும் இடையிலான பாரிய வேற்றுமையினை அவர் தெளிவாக உணர்ந்தே இருந்தார். ஆனாலும், இந்திய பயிற்சியினைப் பாவித்து மாற்றியக்கங்களைக்கொண்டு இந்தியா புலிகளை பிற்காலத்தில் அழித்துவிடும் நிலைமை உருவாகலாம் என்று தலைவரிடம் கூறிய அரசியல் தத்துவாசிரியர் அன்டன் பாலசிங்கம், புலிகளும் இந்தியப் பயிற்சியினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசி தலைவரைச் சம்மதிக்க வைத்தார். பாலசிங்கம் கூறியதன்படி நிகழுமானால் தமிழரின் தாயக விடுதலைப் போராட்டம் முற்றாகவே அழிக்கப்பட்டுவிடும் என்பதை உணர்ந்துகொண்ட பிரபாகரன் இந்தியப் பயிற்சியை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்தார். ஈரோஸின் பாலக்குமார் "இந்தியாவும் ஈழத்தமிழர்களும்" எனும் தலையங்கத்துடன் 1988 - 1989 ஆம் ஆண்டுகளில் புலிகளால் வெளியிடப்பட்ட பதிவில் இதுகுறித்த விபரங்கள் பகிரப்பட்டிருந்தன. இப்பதிவில் தமிழ்ப்போராளிகளுக்கு பயிற்சியளிப்பதில் இந்தியா கொண்டிருந்த உறுதியை பிரபாகரன் உணர்ந்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்தியப் பயிற்சியை புலிகள் ஏற்றுக்கொள்ள மறுக்குமிடத்து இந்தியாவினால் பயிற்சியளிக்கப்படும் ஏனைய இயக்கங்கள் தாம் புதிதாகப் பெற்றுக்கொண்ட பயிற்சியினைப் புலிகளை அழிக்கப் பயன்படுத்தலாம் என்பதை உணர்ந்துகொண்டார். புலிகளின் அழிப்பென்பது தமிழரின் தாயக விடுதலைப் போராட்டத்தினை முடிவிற்குக் கொண்டுவந்துவிடும் என்று அவர் அஞ்சினார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. "மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சியே எமக்கு வழங்கப்பட்டது. ஆனாலும், எமது சக்தியைப் பாவித்து நாம் பல பயிற்சி முகாம்களை அமைத்துக்கொண்டு எமது இராணுவ பலத்தினை வளர்த்துக்கொண்டோம். இந்தியாவிடம் தங்கியிருக்காமல் எமது வளங்களைப் பாவித்து எமக்குத் தேவையான ஆயுதங்களையும் நாம் பெற்றுக்கொண்டோம்" என்று புலிகளின் அப்பதிவு மேலும் கூறுகிறது. பிரபாகரன் பற்றிய இந்தப் பதிவு மேலும் தொடரும்போது அவர் கொண்டிருந்த சிந்தனையும், மதிநுட்பமான முடிவுகளும் போராட்டத்தினை முன்கொண்டு சென்றது குறித்து நாம் மேலும் மேலும் அறிந்துகொள்ள முடியும். தனது போராளிகளைத் தனியான முகாம் ஒன்றில் வைத்து பயிற்சியளிக்குமாறு பிரபாகரன் ரோ அதிகாரிகளிடம் கேட்டிருந்தார். ரோவும் அதற்குச் சம்மதித்திருந்தது. பயிற்சிகளின் ஆரம்பத்திலிருந்தே போராளி அமைப்புக்களில் புலிகளே திறமையானவர்கள் என்பதை ரோ அதிகாரிகள் அறிந்திருந்தனர். ரோ வின் கைக்கூலிகளாக தனது போராளிகள் மாற்றப்படுவதைத் தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் பிரபாகரன் எடுத்திருந்தார். அக்காலத்தில் போராளி அமைப்புக்களில் இணைந்துகொண்ட இளைஞர்களுக்கு இயக்கப் பெயர் வழங்கப்படுவது வழமையாக இருந்தது. இதற்கு இரு காரணங்கள் இருந்தன. முதலாவது போராளியின் குடும்பம் இலங்கை இராணுவத்தினரிடமிருந்தோ அல்லது பொலீஸாரிடமிருந்தோ துன்புருத்தல்களை எதிர்கொள்வதைத் தடுப்பது. இரண்டாவது போராளிகளுக்கு புதியதொரு அடையாளத்தைக் கொடுப்பது. புதிய அடையாளத்தைப் பெற்றுக்கொள்ளும் ஒருபோராளி அவ்வியக்கத்திற்கும், இலட்சியத்திற்கும் எப்போதும் விசுவாசமாக செயற்படுவார் என்கிற எதிர்ப்பார்ப்பு இருந்தது. மேலும், தமது முன்னைய வாழ்விலிருந்து முற்றான விலகலையும் இயக்கப் பெயர்கள் போராளிகளுக்கு வழங்கின. புலிகள் இயக்கத்தில் இந்த நடைமுறை ஒரு மதத்தைப் போல பின்பற்றப்பட வேண்டும் என்று பிரபாகரன் விரும்பினார். போராளிகள் தமது இயக்கப் பெயர்களையே பாவிக்கவேண்டும் என்றும் ஏனைய போராளிகளின் இயற்பெயரை எக்காரணத்தைக் கொண்டும் அறிந்துகொள்ள முயலக் கூடாது என்கிற கடுமையான கட்டளையும் இருந்தது. போராளிகளின் குடும்பங்களின் விபரங்கள் எதிரிகளுக்குக் கிடைக்கப்பெறுவதைத் தடுக்கவே இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது. இந்தியாவுக்குப் பயிற்சிக்கு அனுப்பிவைக்கப்பட்ட தனது போராளிகளிடம் பேசிய பிரபாகரன் எக்காரணத்தைக் கொண்டும் தமது இயற்பெயர்களை இந்திய அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டாம் என்று பணித்திருந்தார். இயக்கத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட பெயர்களையே போராளிகள் இந்திய அதிகாரிளிடம் கூறி வந்தமையினால் அவர்களது குடும்ப விபரங்கள் குறித்து ரோ அதிகாரிகளால் அறியமுடியாது போய்விட்டது.பொன்னமானின் உண்மையான பெயர் அவரது வீரமரணத்தின் பின்னரே வெளியே தெரியவந்தது. 1987 ஆம் ஆண்டு நாவற்குழியில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தொன்றில் அவர் வீரமரணம் அடைந்திருந்தார். இந்தியப் பயிற்சி அட்டவணை மிகவும் கடுமையாகக் காணப்பட்டது. காலை 8 மணிக்கு உடற்பயிற்சிகளுடன் நாள் ஆரம்பிக்கும். காலையுணவு ஒன்பது மணிக்கு பரிமாறப்பட்டது. பயிற்சிகளுக்கான தேற்றம் மற்றும் தேற்றத்தினை நடைமுறைப்படுத்திப் பார்க்கும் செயற்பாடுகள் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 1 மணிவரை நடத்தப்பட்டன. மரபுவழிப் போர்முறை மற்றும் கரந்தடிப்படைப் போர்முறை ஆகியனவற்றிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. வகுப்புக்களில் நடத்தப்பட்ட பயிற்சிகள் ஆயுதங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தே வழங்கப்பட்டு வந்தன. மதிய உணவு பிற்பகல் 1 மணியிலிருந்து 2 மணிவரை பரிமாறப்பட்டது. பிற்பகல் முழுவதும் துப்பாக்கிச் சூடு நடக்கும் மைதானத்திலேயே கழிக்கப்பட்டது. அனைத்துப் போராளிகளுக்கும் எஸ்.எல்.ஆர், ஏ.கே. 47, எம் 16, ஜி 3, எஸ்.எம்.ஜி, .303, ரிவோல்வர்கள், பிஸ்ட்டல்கள், ரொக்கெட் லோஞ்சர்கள் மற்றும் கிரணேட்டுக்கள் ஆகியவற்றில் பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சிகளின்போது திறமையாகச் செயற்பட்டதன் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட சில போராளிகளுக்கு விசேட பயிற்சிகளும் வழங்கப்பட்டன. விசேட பயிற்சிகளின்போது வெடிகுண்டுகளைத் தயாரிப்பது, கண்ணிவெடிகளைப் புதைப்பது, தாங்கியெதிர்ப்பு ஆயுதங்களைக் கையாள்வது, தொலைத்தொடபு மற்றும் புலநாய்வு ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டது. டெலோ அமைப்பிலிருந்து ரோ அதிகாரிகளினால் தெரிவுசெய்யப்பட்ட குழு ஒன்றிற்கு திருகோணமலைத் துறைமுகத்திற்கு வந்துசெல்லும் கப்பல்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்காக பிரத்தியேகப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. டெலோ அமைப்பின் இந்தப் பிரிவில் பயிற்றப்பட்ட முன்னாள் உறுப்பினர் ஒருவர் என்னுடன் பேசுகையில் ரோ அதிகாரிகளால் தாம் தெரிவுசெய்யப்பட்டதாகவும், கப்பல்களை அடையாளம் காண்பது, அது எந்த நாட்டிற்குரியது என்பதைக் கண்டறிவது, அக்கப்பல் எவ்வகையைச் சார்ந்தது போன்ற விடயங்களை அறிந்துகொள்வதற்கான பயிற்சிகள் தமக்கு வழங்கப்பட்டதாகக் கூறினார். மும்பாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டு இந்தியக் கடற்படையினரால் பயிற்றுவிக்கப்பட்ட இந்தக் குழுவினர் கப்பல்களைப் புகைப்படம் எடுப்பது, கப்பலுக்கான தொலைபேசி அழைப்புக்களை இடைமறித்து ஒட்டுக் கேட்பது போன்ற புலநாய்வுச் செயற்பாடுகளில் தேர்ச்சி பெற்றனர். இந்த நடவடிக்கைகளுக்குத் தேவையான கருவிகள் இவர்களுக்கு வழங்கப்பட்டதோடு நீருக்கடியில் சென்று உளவுத்தகவல்களை சேகரிப்பது போன்ற விடயங்களிலும் இக்குழுவினர் இந்திய கடற்படையினரால் பயிற்றப்பட்டனர். டெலோ அமைப்பைச் சேர்ந்த அந்த முன்னாள்ப் போராளி என்னிடம் பேசும்போது திருகோணமலை துறைமுகத்தினைக் கண்காணிப்பதே இந்தியாவின் முக்கிய குறிக்கோளாகத் தெரிந்ததாக கூறினார். திருகோணமலை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள்ச் செல்வதைத் தடுப்பதே இந்திய அதிகாரிகளின் ஒரே நோக்கமாக இருந்ததாகவும், இதற்கான பயிற்சியில் தாம் காட்டிய ஈடுபாட்டினையடுத்து ரோ அதிகாரிகள் மகிழ்ச்சியடைந்திருந்ததாகவும் கூறினார். ரோ அதிகாரிகளினால் தெரிவுசெய்யப்பட்ட டெலோ அமைப்பின் ஒரு குழுவினர் ஐந்து முக்கியமான புலநாய்வுச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு பயிற்றப்பட்டனர். அவையாவன, 1. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்குக் கிடைக்கும் இராணுவ உதவிகளை அவதானிப்பது 2. இலங்கையின் உள்நாட்டுப் போரில் பிரித்தானியாவின் முன்னாள் போர்வீரர்களைக் கொண்டியங்கும் கூலிப்படையான கீனி மீனி சேர்விஸஸின் செயற்பாடுகளை அவதானிப்பது 3. பாக்கிஸ்த்தான் மற்றும் சீனாவுடனான இலங்கையின் தொடர்புகளை அவதானிப்பது 4. வொயிஸ் ஒப் அமெரிக்கா எனப்படும் அமெரிக்காவின் வானொலி நிலையத்தின் செயற்பாடுகளை அவதானிப்பது 5. திருகோணமலை துறைமுகத்தினை அவதானிப்பது. இங்கிலாந்துக் கூலிப்படையான கீனி மீனியின் பயிற்றுவிப்பாளன் ஒருவனுடன் சிங்கள விசேட அதிரடிப்படையினர் பயிற்சிகளை ஒருங்கிணைத்திருந்தவர்கள் இராணுவ அதிகாரிகள். இவர்கள் ரோவுக்காக வங்கதேசம், சிக்கிம், பாக்கிஸ்த்தான் ஆகிய பகுதிகளில் பணிபுரிந்தவர்கள். ஏனையவர்கள் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள். விசேட பயிற்சிகளுக்கென்றும் தனியான இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்ததுடன், போராளிகள் தில்லியில் இருந்து தமிழ்நாட்டிற்குத் திரும்பிய பின்னரும் இந்த விசேட பயிற்சிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தன. சங்கர் ராஜியும் டக்கிளஸ் தேவானந்தாவும் என்னுடன் பேசும்போது சில அதிகாரிகள் இலங்கை குறித்த தகவல்களைத் திரட்டுவதிலேயே அதிக ஆர்வம் காட்டியதாகக் கூறினர். இலங்கையில் இருக்கும் வீதிகள், புகையிரத பாதைகள், பாலங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் அமைந்திருக்கும் கட்டுமானங்கள் குறித்த வரைபடங்களைத் தயாரிக்குமாறு அதிகாரிகள் தம்மிடம் பணித்ததாகக் கூறினர். பயிற்சியில் ஈடுபடும் போராளிகள் இந்த விபரங்களை இந்திய அதிகாரிகளிடம் கையளிப்பது அவர்களின் கடமை என்று அவர்களுக்குக் கூறப்பட்டது. கிட்டு எனப்படும் சதாசிவம் கிருஸ்ணகுமார் தம்மிடம் பயிற்சி பெறுபவர்களை அவ்வப்போது ரோ அதிகாரிகள் பரீட்சித்துப் பார்ப்பார்கள். அவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில் அவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டன. உண்மையாகவிருத்தல், நன்னடத்தை மற்றும் குறிபார்த்துச் சுடுதல் போன்றவற்றிற்கு புள்ளிகள் வழங்கப்பட்டன. புலிகளின் போராளிகளே பயிற்சியாளர்களின்போது இந்திய அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்றனர். பயிற்சி முடிந்தபொழுது நடத்தப்பட்ட விடைபெறுதல் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது. புலிகளைப் பயிற்றுவித்த இராணுவ அதிகாரிகளில் ஒருவர் இறுதி விடைபெறும் உரையினை ஆற்றிக்கொண்டிருக்கும்போதே அழத்தொடங்கினார். புலிகளின் தரப்பில் பேசிய கிட்டுவும் மிகவும் நெகிழ்ந்து காணப்பட்டார். சொற்கள் தொண்டையில் சிக்கிக்கொள்ள கண்கள் கண்ணீரால் நிரம்பியதாக கூடவிருந்த போராளிகள் கூறியிருந்தனர். சென்னைக்குத் திரும்பியபோது இந்த நிகழ்வினை பிரபாகரனிடம் பொன்னம்மான் தெரிவித்தார். சிறிது நேரம் மெளனமாகச் சிந்தித்துவிட்டு பிரபாகரன் பேசத் தொடங்கினார், "ஒரு குறிக்கோளுக்காகவே நாம் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டோம். ஆனால், அவர்களோ (இந்தியர்கள்) வேறொரு நோக்கத்திற்காக எமக்குப் பயிற்சியளித்தார்கள். எமது குறிக்கோளுக்கு எதிராக அவர்கள் தமது இராணுவத்தை இறக்கினால் அவர்களுடன் சண்டையிடுமாறு நான் கிட்டுவைக் கோருவோன். கிட்டுவும் இந்திய இராணுவத்துடன் சண்டையிட்டே ஆகவேண்டும்" என்று கூறினார். சுமார் நான்கு வருடங்களுக்குப் பின்னர் இந்திய இராணுவத்தை எதிர்த்துச் சண்டையிடுவது என்று பிரபாகரன் முடிவெடுத்தபோது இந்த நிகழ்வினை கிட்டு நினைவுகூர்ந்தார்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஇந்தியப் பயிற்சி 1983 ஆம் ஆண்டு புரட்டாதி மாதமளவில் சென்னையி முழுதும் ஈழத் தமிழ் இளைஞர்களால் நிரம்பி வழியத் தொடங்கியது. அவர்களைத் தொகுதி தொகுதியாக பஸ்வண்டிகளில் ஏற்றி தில்லிக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள் ரோ அதிகாரிகள். "அது ஒரு களைப்பு மிகுந்த நீண்ட தூரப் பயணம்" என்று அரியாலையைச் சேர்ந்த நிருபன் எனும் இளைஞர் என்னுடன் சில வருடங்களுக்கு முன்னர் பேசும்போது குறிப்பிட்டிருந்தார். டெலோ அமைப்பின் முதலாவது தொகுதிப் பயிற்சிப் பாசறையின் உறுப்பினரான அவர் தற்போது ஐரோப்பாவில் வசித்து வருகிறார். டெலோ அமைப்பே இந்தியாவினால் பயிற்சியளிக்கப்பட்ட முதலாவது அமைப்பென்பதும் குறிப்பிடத் தக்கது. சுமார் 2,000 கிலோமீட்டர்கள் தூரத்தினைக் கடக்க தமது பஸ்வண்டிக்கு மூன்று நாட்கள் எடுத்ததாக அவர் கூறினார். தில்லியைச் சுற்றிப்பார்த்தபடியே தமது பயணத்தைத் தொடர அவர்கள் கேட்டுக்கொண்டபோது அதற்கும் அனுமதி வழங்கப்பட்டதாம். "இடங்களைச் சுற்றிக் காட்ட எம்மை அழைத்துச் சென்றார்கள். ஆனால் எம்மை எவருடனும் பேச அவர்கள் அனுமதிக்கவில்லை" என்று நிருபன் கூறினார். தில்லியிலிருந்து பயிற்சி முகாமுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தப் பயிற்சித் திட்டம் என்பது ஒரு இரகசியாமான நடவடிக்கை என்று அவர்களுக்குக் கூறப்பட்டிருந்தது. "எமது மூன்றரை மாத கால பயிற்சியை முடித்துக்கொண்டு நாம் மீன்டும் சென்னைக் கொண்டுவரப்பட்டபோதுதான் நாம் பயிற்றப்பட்ட இடம் டெஹெரா டன் எனும் பகுதி என்பது எமக்குத் தெரியவந்தது. பயிற்சி முழுதுவதும் எம்மை முகாமிற்கு வெளியே செல்ல அவர்கள் அனுமதியளிக்கவில்லை". அடர்ந்த காட்டுப்பகுதி ஒன்றின் மலைப்பாங்கான நிலப்பகுதியில் நடத்தப்பட்டு வந்த அந்தப் பயிற்சி முகாம் வெளியுலகிலிருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்தது. "அது ஒரு அழகான இடம். நாம் அங்கு தங்கியிருந்த நாட்களை மகிழ்வுடன் களித்தோம். ஆனால் அங்கு நிலவிய காலநிலை மட்டுமே எமக்குப் பிரச்சினையாக இருந்தது" என்று அவர் கூறினார். முகாமிற்குக் கொண்டுசெல்லப்பட்ட முதலாவது நாள் கடுங்குளிராகக் காணப்பட்டதாகக் கூறும் நிருபன் தனக்கு வழங்கப்பட்ட தடிப்பான கம்பளத்தினால்க் கூட அக்குளிரைச் சமாளிக்க முடியவில்லை என்று கூறுகிறார். பயிற்சிமுகாமிற்கு அழைத்துவரப்பட்டு, பதியப்பட்ட பின்னர் ஒவ்வொரு போராளிக்கும் இரு போர்வைகளும், படுக்கை விருப்பித் துணியும், மடித்துவைக்கக்கூடிய கட்டிலும் வழங்கப்பட்டது. "மிகக்கடுமையான குளிரைக் கொண்ட பிரதேசம்" என்று நிருபன் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். ஆனால், ஒருவார காலத்தின் பின்னர் குளிருக்குத் தம்மைப் பழக்கப்படுத்திக்கொண்டார்கள். "பின்னர் குளிருக்கு எம்மைப் பழக்கப்படுத்திக்கொண்டோம்" என்று அவர் கூறினார். ஆனால், வட இந்திய உணவை உட்கொள்வது கடிணமாகவே தென்பட்டது. சப்பத்தி, நாண், பூரி என்பவற்றுடன் உருளைக்கிழங்கு, முட்டை அல்லது ஆட்டுக்கறி அவர்களுக்குப் பரிமாறப்பட்டது. இடையிடையே கோழிக்கறியும் வழங்கப்பட்டிருந்ததது. எப்போதாவது ஒருமுறைதான் சோறும் மீன்கறியும் முகாமில் கிடைத்தது. "அவர்களின் உணவில் சுவையே இருக்கவில்லை. அவர்கள் மிளகாய்த்தூள் பாவிப்பதேயில்லை" என்று நிருபன் தொடர்ந்தார். "சூடான, சுவையான உணவையே நாம் எதிர்ப்பார்த்தோம்" என்று அவர் மேலும் கூறினார். ஈழப் போராளி அமைப்புக்களில் டெலோவே அதிகளவு போராளிகளை அன்று கொண்டிருந்ததது. சுமார் 350 போராளிகளை பயிற்சிக்காக இந்தியாவுக்கு அது அனுப்பியது. அடுத்துவந்த சிலவாரங்களில் ஏனைய அமைப்புக்கள் அனுப்பிய போராளிகளின் எண்ணிக்கைகள் டெலோ அமைப்பினரோடு ஒப்பிடும்போது குறைவானவையாகவே காணப்பட்டன. ஈரோஸ் அமைப்பு 200 போராளிகளையும், ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு 100 போராளிகளையும், புளொட் அமைப்பு 70 போராளிகளையும், புலிகள் 50 போராளிகளையும் பயிற்சிக்காக அனுப்பிவைத்திருந்தனர். பின்னர் வந்த மாதங்களில் மேலும் சில தொகுதிப் போராளிகளை அமைப்புக்கள் அனுப்பி வைத்திருந்தன. இந்தியாவின் பயிற்சித் திட்டத்திலிருந்து உச்ச பயனைப் பெற்றுக்கொள்ள இயக்கங்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவியது. டெலோவினால் அனுப்பப்பட்ட தொகுதிப் போராளிகளுக்கு சிறீ சபாரட்ணமும், ஈரோஸ் போராளிகளுக்கு பாலக்குமாரும், ஈ.பி.ஆர்.எல்.எப் தொகுதிக்கு டக்ளஸ் தேவானந்தாவும், புளொட் போராளிகளுக்கு உமா மகேஸ்வரனும், புலிகளின் போராளிகளுக்கு பொன்னமான் என்று அழைக்கப்பட்ட குகனும் தலைமை தாங்கியிருந்தார்கள். உமா மகேஸ்வரனுக்கும் டக்ளஸ் தேவாநந்தாவிற்கும் லெபனானில் அவர்கள் பெற்றுக்கொண்ட பயிற்சியினைப் புதுப்பிக்கும் நிகழ்வாக இந்தியப் பயிற்சி அமைந்திருந்தது.1 point- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
வழக்கம் போல முஸ்லிம்கள் இஸ்ரேலிடம் வாங்கிக்கட்டப் போயினம்... அவ்வளவுதான்.😂0 points- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
0 points - பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.