Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    33600
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20018
    Posts
  3. பாலபத்ர ஓணாண்டி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    1836
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    7051
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/15/23 in Posts

  1. அவை எல்லாமே பாசப் படங்கள்தான் எவ்வளவு அன்பாக அன்னியோன்னியமாக அரவணைத்து பழகுகிறார்கள்.......பின் எதற்காக அவற்றை ஆ பாசப் படங்கள் (பாசமில்லாத படங்கள் ) என்று விளிக்கிறார்கள், ஏன் என்று தெரியவில்லை......! 😴 வெள்ளிக்கிழமையும் அதுவுமா ....சே......என்ன வாழ்க்கையடா சாமி.......! 😁
  2. என்னதான் நளபாகம் செய்ய தெரிந்தாலும்…பகலாபாத் எப்படி கிண்டுவது எண்டு யூடியூப்பில் சமையல் குறிப்பு பார்த்து அறிந்து கொள்வதில் தப்பொன்றும் இல்லையே?
  3. அந்தப் படங்களை நான் எடுப்பதில்லை ஓணாண்டியார்...... ஒருவேளை ஏராளன் எடுக்கிறாரோ என்னமோ தெரியவில்லை......! 😂
  4. முதல்ல ஆண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பெண்களை ஓவர் அக்டிங் பண்ணாமல் எடுக்க சொல்லுங்கள்..😡😡😡
  5. அமெரிக்க பொருளாதாரம் தற்போது பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுக்கிறது, தனது செலவுகளுக்கான பணத்தினை திரட்டுவதில் கூட பெரும் நெருக்கடியினை சந்திக்கின்றது. அமெரிக்கா இந்த போரின் ஆரம்பத்தில் கூறியது போல அமெரிக்க பொருளாதாரத்திற்கு உக்கிரேன் மற்றும் இஸ்ரேலிய யுத்ததினை நடத்துவதற்கான பலம் உள்ளது என கூறியிருந்தது. ஆனால் தற்போது அதன் சுருதி மாறுகிறது அதற்கு காரணம், அமெரிக்கா, இந்த இரு போர்களையும் தவறாக எடை போட்டுள்ளதே காரணம்.
  6. ஜேர்மனியில் இந்த ஆண்டுக்கான 11 வயதின் கீழ் பூப்பந்தாட்டத்தில் சிறந்த வீரர்கள தெரிவுசெய்யப்பட்ட தமிழ் வீரர்கள். ஜேர்மனியில் ஆண்டு முழுவதும் மாகாணங்கள், மாவட்டங்களுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றன. பல நூற்றுக்கணக்கானவர்கள் போட்டியில் பங்கு பெற்றபோதும், இந்த ஆண்டின் இறுதிப் போட்டிக்குபுள்ளிகளின் அடிப்படையில் ஆண், பெண் உட்பட 36 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். பங்கு பற்றிய ஆட்டத்தில் 5 சிறந்த புள்ளிகள் எடுத்த போட்டியாளர்கள் ஜேர்மன் ரீதியில் தெரிவு செய்யப்பட்டனர். பெண்கள் பிரிவில் இரண்டு தமிழ் சிறுமிகள் தெரிவு செய்யப்பட்டனர். 👉தமிழி.மார்க்கண்டு ஜெர்மன் தழுவிய போட்டிகளில் இரண்டு போட்டிகளில் முதலிடம் பெற்றார். ஜெர்மன் ரீதியிலான தரவரிசையில் இவர் மூன்றாம் இடத்தில் உள்ளார். 👉அனிகா .ஆனந் இவர் பல போட்டிகளில் முன்னிலை வகித்து ஜெர்மன் ரீதியிலான தரவரிசையில் 17 வது இடத்தை பெற்றுள்ளார். 👉ஹர்சத்குமார் கர்த்திக் இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தி யேர்மன் தழுவிய போட்டிகளில் ஐந்து போட்டிகளில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். ஜேர்மன் ரீதியிலான தரவரிசை பட்டியலில் இவர் இரண்டாம் இடத்தை பெற்று தகுதி நிலையை அடைந்ததுள்ளார். இறுதிப் போட்டிகளின் போது மிகவும் சிறப்பான ஆட்டத்தை இறுதிச் சுற்று வரை அனிகா வெளிப்படுத்தினார். தமிழி மிகவும் சிறப்பாக விளையாடி கால் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் ஜேர்மன் தழுவிய தரவரிசையில் 5 ஆம் நிலையை எட்டியிருந்தார். இதில் அதிநுட்பமாகவும் தனது திறமையையும் துடுப்பாட்டத்தில் வெளிப்படுத்தி மிக சிறப்பாக விளையாடி அனைவரினதும் பாராட்டையும் பெற்ற ஹர்சத்குமார் முதலிடத்தை பெற்று இந்த ஆண்டுக்கான ஒற்றையர் பிரிவில் முதலிடத்தை பெற்றார். இரட்டையர் ஆட்டத்தில் அனிகா கால் இறுதி வரை முன்னேறி வெளியேறினார். ஹர்சவத் குமார் அரையிறுதி வரை முன்னேறி மிகக் கடுமையான போட்டியின் மத்தியில் மூன்றாம் இடத்தைத் தனது ஆக்கினார். தமிழி மிகவும் திறமையாக விளையாடி இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தை வெற்றிகொண்டார். இந்த ஆண்டின் பூப்பந்தாட்டு போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி ஜேர்மன் ரீதியில் இவர்கள் தங்களின் தடங்களை பதித்துள்ளனர். ஜேர்மன் தரவரிசையில் ஹர்சத் குமார் 2ம் இடத்தையும், தமிழி 3ம் இடத்தையும்.அனிக்கா 17ம் இடத்தையும் எட்டியுள்ளனர். இவர்களினது கடினமான பயிற்சியும் பெற்றோர்களின் விடாமுயற்சியும் தமிழர்களாகிய எம்மை இன்று பெருமை கொள்ள வைக்கிறது. வரும் காலத்தில் இன்னும் பல தமிழ்ச் சிறார்கள் பல சாதனைகளைப் படைக்க இவர்கள் முன்னுதாரணமாக இருக்கட்டும். ஸ்ரீ ஸ்ரீ
  7. சுமந்திரன் "தொடர்பில்லை" என்று சொன்னதில் என்ன தவறு இருக்கிறதென்று விளக்குங்கள் யாராவது? சுமந்திரனோ, வெளிப்படையாக ரணிலோ அதில் கையொப்பமும் வைக்கவில்லை, அதில் இருப்பவற்றை எழுதவும் இல்லை.அப்படியானால் தொடர்பில்லை என்பது சரியான விபரிப்புத் தானே? இங்கே புலவர் உட்பட சிலருக்கு இருக்கும் பிரச்சினை விளக்கக் குறைவு: இது முன்னர் வந்த ஏனைய பிரகடனங்கள் போல சிங்கள ஆட்சியாளருக்கும், தமிழரின் ஏக பிரதிநிதிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வுப் பிரகடனம் அல்ல! இரு தரப்பிலும் இருந்து சில அமைப்புகளின் பிரதிநிதிகள் aspirational document ஆக உருவாக்கி இப்போது இரு தரப்பிலும் இருக்கும் அரசியல் தலைமைகளுக்கு இதனைச் சமர்ப்பிக்கிறார்கள் அவ்வளவு தான். இப்பிரகடனம் வேலைக்காகுமா, ஆகாதா என்பது வேறு விடயம். ஆனால், அது பற்றிய உங்கள் விளக்கக் குறைபாட்டை, தேடியறியும் வசதியோ அல்லது விருப்போ இல்லாத மக்களுக்குக் கடத்துவது ஏன்? "செத்த வீட்டிலும் கூட நான் தான் பொடியாக இருக்க வேண்டும்!" என்று துடிக்கும் "தமிழ் தேசிய" உந்துதலா😂?
  8. யார் குற்றி அரிசியானால் சரி. வந்தா மலை போனால் உரோமம்.... இது தான் என் நிலை
  9. நிழலியானந்தாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உஸ் இண்டைக்கு வெள்ளிக்கிழமை.
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி .....! 💐
  11. ஓ இண்டைக்கு தலயின்ர பிறந்தநாளா.. அப்ப வீட்டுல வெறிக்கூத்தாதான் இருக்கும்.. ஜக்டானியல் நண்டுப்பிரட்டல் கணவாய்ப்பொரியல் குடல்கறி புட்டு எண்டு பெரிய லிஸ்ட்டா இருக்கும்.. குடியும் குடித்தனமுமாய் குடிச்சு வெறிச்சு குதூகலமா நூறாண்டு வாழ்க..👍
  12. நிழலி அண்ணைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், வாழ்க வளத்துடன்.
  13. சிறியண்ணைக்கு சொந்தமா இருக்குமோ கணவர் மூலமாக @putthan சொந்தக்காரர் ஆகிறார்.
  14. பாம்புக்கு கை கால் கால் முழைத்து ஓடிறானிலும் பார்க்க பறவாயில்லை.😂
  15. சிறியண்ணைக்கு சொந்தமா இருக்குமோ?!🤪
  16. ரம்பா திறந்து வைத்த தனியார் பல்கலைக்கழகம்! யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் பல்கலைக்கழகமான நொதேர்ன் யுனி (Nothern uni) கட்டடத்துக்கான கிரக பிரவேச பூஜை நேற்று (14) இடம்பெற்றது. நொதேர்ன் யுனியின் நிறுவுனரான இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட கனடா முதலீட்டாளராவார். இவரின் முயற்சியாக யாழ்ப்பாணம் – கந்தர்மடம் பகுதியில் நொதேர்ன் யுனி தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில் விசேட வழிபாடுகளை தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட நொதேர்ன் யுனியில் கிரக பிரவேச பூஜை இடம்பெற்றது. இதில், நொதேர்ன் யுனியின் நிறுவுனர் இந்திரகுமார், அவரது மனைவியான தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் நொதேர்ன் யுனி பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். https://thinakkural.lk/article/284767
  17. கொஞ்சநாள் சீனாவுக்கும் வெருட்டல்கள் விட்டுக்கொண்டு திரிஞ்சவை......இப்ப என்னமாதிரியெண்டு தெரியேல்லை? 😄
  18. தேன் உண்ணும் வண்டு ......! 😍
  19. அளவான குடும்பம் அழகான குடும்பம்........! 😂
  20. ஹூத்தி தீவிரவாதிகளினால் எமனின் ஒரு பகுதி ஆட்சியில் உள்ளது. இவர்கள் ஈரானின் உதவியுடன்தான் எல்லாவற்றையும் செய்கிறார்கள். எனவே அவர்களால் எந்த கப்பல் , எந்த நாட்டுக்கு உரியது, எங்கே போகிறது என்றெல்லாம் தெரியாது. ஏதாவது தவறான தகவல் வந்தால் அவ்வளவுதான். அந்த கப்பலுக்கு ஏவுகணை தாக்குதல்தான். இப்படி நடந்தால் அது இஸ்ரேலுக்குத்தான் நனமை பயக்கும். எல்லா நாடுகளும் தங்கள் கப்பல்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டி வரும்.
  21. அமெரிக்காவில நம்பாளு ஒருத்தன் பல்வலி தாங்காமல் பல்லை புடுங்கலாம்ன்னு டென்டிஸ்ட் கிட்ட போனான். "டாக்டர் என் பல்லைப் புடுங்கனும்னுன்னா எவ்ளோ ஆகும்" னு கேட்டான். அதுக்கு அந்த டென்டிஸ்ட் "1200 டாலர் ஆகும்" என்றார். அந்த ரேட் அவனுக்கு அதிகமாக தோணிச்சு. கொஞ்ச நேரம் யோசனை செஞ்ச பிறகு அவன் அவர்கிட்ட "டாக்டர் என் பல்லை பிடுங்க இதைவிட குறைந்த செலவில் வேறு ஏதாவது வழிகள் இருக்கா?"ன்னு கேட்டான். "ஒரே ஒரு வழி இருக்கு. அனஸ்தீஷியா இல்லாம வேணும்னா செய்யலாம். 300$ டாலர் குடுத்தா போதும். ஆனா ரொம்ப வலிக்கும்" என்றார். நம்மாளு, "பரவாயில்ல டாக்டர். அனஸ்தீஷியா இல்லாமலேயே பல்லை பிடுங்குங்க நான் எப்படியாவது வலியை சமாளிச்சுக்கிறேன்" என்றான். டென்டிஸ்ட் அவனோட பல்லை பிடுங்கிய போது அவன் வலி ஏதும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பல்லைப் பிடுங்கி முடிச்சதும் அவருக்கு பணம் கொடுக்க முயன்ற அவனிடம் டென்டிஸ்ட் சொன்னார்: "இந்த அளவு தைரியமும் சகிப்புத் தன்மையுடனும் ஒரு பேஷண்டைக் கூட இதுவரை நான் பார்த்ததே இல்லை. எனக்கு நீ ஒரு கேஸ் ஸ்டடி மாதிரி.. எனவே நீ எனக்கு பீஸ் தர வேண்டாம். இந்த 500 டாலரை எனது அன்பளிப்பாக நீயே வைத்துக் கொள்" என்று தனது பணத்தை எடுத்து அவனிடம் கொடுத்தார். மாலை நேரத்தில் தனது வழக்கப்படி தனது சக பல் மருத்துவர்களிடையே பேசிக் கொண்டிருந்த போது காலையில் தனது கிளினிக்கில் வந்த பேஷன்ட்டுடன் தனக்கு ஏற்பட்ட ஸ்வாரஸ்யமான அனுபவத்தை மிகுந்த ஆச்சரியத்துடன் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். எல்லோரும் அவர் சொன்னதை வியந்து போய்க் கேட்டுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரே ஒரு டாக்டர் மட்டும் எகிறினார். "நீங்கள் சொன்ன பேஷன்ட் காலையில் முதலில் என்னிடம் தான் வந்தான். அவனுக்கு அனஸ்தீஷியா கொடுத்து வெளியில் அமர்ந்து காத்திருக்க சொன்னேன். அரை மணி நேரம் கழித்துப் பார்த்தால் அவன் சீட்டில் இல்லை. ஒரேயடியாகக் காணாமல் போயிருந்தான். அந்த ராஸ்கல் தான் உங்களிடம் வந்திருக்கிறான் போலிருக்கு !" என்று நாக்கை துருத்தினார் !...... .
  22. 👇 கீழே இருக்கிற வரியைப் பார்க்காமல் எனக்குப் பதில் எழுதியிருக்கிறீர்கள்! பெரியோர் பார்த்துப் புரிந்து கொள்வர் என நினைக்கிறேன்!
  23. ரம்பா "நமக்கு" வேண்டப்பட்ட பிரபலங்கள் யார் மீதும் பாலியல் இம்சைக் குற்றச் சாட்டு வைக்கவில்லையென்பதால், "நடிகை, திரைக்கலைஞர்" போன்ற பெயர்களால் அழைக்கலாம்! குற்றச்சாட்டு வைத்தால் "கூத்தாடி, முன்னாள் கூத்தாடி" போன்ற செல்லப் பெயர்களால் அழைக்கலாம்! நான் வைத்த விதியல்ல, இங்க இருக்கிற பெருமக்கள் வைத்த விதி இது😎!
  24. தீபாவளிக்கு முன் தீர்வு வரும் போல தெரிகிறது பாவம் தலைவர் அவர் அடிக்கடி சொன்னது அவரது வாழ்வில் உண்மையாக நடக்கும் போல் உள்ளது இமயமலை பிரகடனத்தை சம்பந்தன் கடைசியா பெற்ற பரம் கூடிய ஆவணம் ஆகும் 🤣
  25. என் மனதில் உதித்தது... இந்த அண்ணாக்கள் தங்களால் இயன்றளவு வரலாறுகளை எழுதி ஆவணப்படுத்தலாம். அவை எதிர்கால தலைமுறைகளுக்குப் பயனுள்ளதாக அமையும். அன்னவர்கள் எழுதும் கட்டுரைகளை வெளியிடுவதற்குப் பல ஊடகங்கள் உண்டு; பிற ஊடகங்களுக்கு/வலைத்தளங்களுக்கு அனுப்பத் தயக்கம் இருந்தால் யாழிலையே எழுதி விடலாம். கட்டுரையாகத் தான் வேண்டுமென்றில்லை. சிறு சிறு பத்திகளாகக் கூட எழுதட்டும், ஒரே திரி திறந்து. நாசகாரிகள் வரலாறுகள் வெளியில் வரக்கூடாதென்று முக்காலத்திலும் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டிக் கொண்டேதான் இருப்பாங்கள். இருந்தாலும் இந்த அண்ணாக்களுக்கு எப்பவும் மக்களின் ஆதரவு இருந்துகொண்டே இருக்கும், அந்தக் காலத்தில் இருந்த மாதிரி. இயக்கத்தில் மெய்யாக இருந்து போராடியவர்கள் எழுதும் வரலாறுகளுக்கு எப்போதும் மக்கள் வரவேற்பு உண்டு🤩. ஆனால் இரண்டு நாட்கள் இருந்துபோட்டு, தண்டனை பெற்று வெளியேறிப் போய், வயிற்றுப் பிழைப்பிற்கு இயக்கத்தையும் விடுதலைப் போராட்டத்தையும் நக்கல் செய்து நாசமாக்கும் வண்ணமோ அல்லது இறந்தோரின் பெயராலோ புத்தகம்☢️ எழுதுகிறவங்களுக்கு🤬 எப்பையும் செருப்படி🫨 தான். அதில் மாற்றமில்லை🤪.
  26. எப்படியோ இங்கு வர முடியாமல் இருந்த சில தமிழர்களுக்கு இங்கு வந்து நாட்டிடை சுற்றி பார்ப்பதட்கு ஒரு சந்தர்ப்பத்தை ரணில் ஐயா வழங்கி உள்ளார். நல்ல ஒரு உல்லாச பயணம் நிறைவேறி உள்ளது. மற்றப்படி பெரிதாக பேசுவதட்கு ஒன்றுமில்லை.
  27. பேச்சு வார்த்தை விற்பனைக்கான பொருளல்லவே....அதில் இதய சுத்தியும் ...ஆக்கபூர்வமன செயல்பாடும் வேண்டும்...இதனை விட பேசப்போகிற்வர்...தமிழரால் விடும்பப் படுபவராக இருக்கவேண்டும்...லண்டனில் இருக்கும் தழரின் எழுச்சியை இவரால் கட்டுப் படுத்தமுடியுமா...பெயர் மட்டும் இருந்தால் போதாது...
  28. "தங்கை துவாரகா இந்தியாவின் உறுதுணையுடன் களத்தில் நிற்பாள்" -காசியானத்தன் “இந்தியாவின் உறுதுணையுடன்”’ இந்த ஒற்றை சொல்லிலேயே காசி உண்மையை கக்கிவிட்டார்.. இந்தியாவும் புலம் பெயர் தீய சக்திகளும் சேர்ந்து தமிழர்களையும் மாவீரத்தையும் களங்கப்படுத்த உதயமானதுதான் இந்த துவாராக ஒப்பிறேசன… ஆனால் அது தமிழ்நாடு ஈழம் புலம்பெயர் தேசம் என்று ஒட்டு மொத்த தமிழ் மக்களாலும் யாரும் எதிர்பாராத அளவுக்கு எதிர்ப்புடனும் கேலி கிண்டலாகவும் கடந்து செல்கிறது.. அதேவேளை மறுவளத்தில் மாவீரர்களையும் போராட்டத்தையும் மனதில் சுமக்கும் லட்சோப லட்சம் சாதாரண பொதுமக்கள் இம்முறை வழமைக்கு மாறாக தாமாக தமிழர் தேசமெங்கும் அதிகளவாக கூடி மாவீரத்தை போற்றி உள்ளனர்… இது தமிழர்களின் தணியாத வேட்கையினை உலகுக்கு பறை சாற்றுவதாக உள்ளது.. இவளவு உயிர் போயும் விடுதலை இல்லையே என சில வேடீக்கை மனிதருள்ள பூமியின் நூறு வருடங்களைக் கடந்து விடுதலை அடைந்த அடையப் போராடும் மனித குலம் பற்றிய சரிதத்தை எடுத்துக் காட்ட வேண்டிய தேவை உள்ளது… அந்தத் தேவையின் ஆணிவேரில் தழைத்த பூஞ்செடிகளே இன்று துயிலுமில்லம் தோறும் ஏற்றப்பட்ட பல்லாயிரம் அக்னிச் சுடர்கள் என்பதை உலகறியும்.. இத்தகு தருணத்தில் எம்மைக் கொன்றொழித்த இந்திய மத்திய அரசும் அதன் ஒத்தோடிகள் செய்யும் துரோகமும் இனியும் எடுபடாது என்பதை இம் மாவீரர்தினம் உணர்த்தியுள்ளது இன்னும் உணர்த்தும்…
  29. காணொளியிலுள்ள பேச்சினை நிதானமாகக் கேட்கப் பொறுமை இல்லை. சுருக்கமாக விளங்கியது என்னவென்றால் மக்களே மறுபடி போராடித் தமிழீழம் எடுக்க வாருங்கள் என்கிறார் (தவறு என்றால் யாராவது விளக்குங்கள்). 14 வருட அஞ்ஞாதவாசச் சிந்தனை இவ்வளவுதானா ? ஏதாவது ஒரு சிறு துரும்பு கூட இல்லாமல் இந்த அறிக்கை தேவையா ? ஆளுமை அறிவியல் ராஜதந்திரம் எதுவுமே இல்லாத பிரயோசனமில்லாத இந்த அறிக்கையை வாசிப்பதை விட பேசாமல் இருந்திருக்கலாம்.
  30. துவாரகா வின் பேச்சு என்ற கபட நாடக உரையை வெளியிட்டவர்கள் ஆகக் குறைந்தது செய்யும் களவிலாவது கொஞ்சம் மினக்கெட்டு இருக்கலாம். 'அவர்களின்' வளத்தையும் காசையும் கொள்ளை அடித்த இந்தக் கூட்டம், Deep fake போன்ற நவீன தொழில் நுட்ப விடயங்களுக்காகவது கொஞ்சம் காசை செலவழித்து இதனை வெளியிட்டு இருக்கலாம். இனை கூட பயன்படுத்தவில்லை இந்த மூடர்கள். இனி இதைச் சொல்லி உண்டியல் குலுக்கிக் கொண்டு இவர்கள் உங்கள் வீட்டிற்கு வரும் போது, கக்கூஸ் கழுவ பயன்படுத்தும் துடைப்பத்தை எடுக்க மறந்து விடாதீர்கள்
  31. அந்த‌ சிறுமி வேறு யாரும் இல்லை என்ற‌ ம‌ச்சாளின்ட‌ ம‌க‌ள்..............இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்து இர‌ண்டு மாத‌த்துக்கு மேல்............நஷ்ட ஈடு கொடுத்து என்ன‌ ப‌ல‌ன்.............ம‌ல்லாக‌த்தில் வ‌சிக்கும் என‌து உற‌வின‌ர்க‌ள் இந்த‌ சோக‌த்தில் இருந்து மீண்டு வ‌ந்த‌ மாதிரி தெரிய‌ல‌...............இன்னொரு முறை வேறு யாருக்கும் இப்ப‌டி ஒரு நில‌மை வ‌ர‌க் கூடாது...............

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.