Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 01/06/24 in all areas
-
ஈழத்தமிழா, என்னதான் தீர்வு? OPINION ஈழத்தமிழா, என்னதான் தீர்வு? வின் மகாலிங்கம் இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் சிங்கள ஆட்சியாளர்களுக்கும், வடக்கு கிழக்கு வாழ் தமிழ் இனத்திற்கும் இடையில் பகையும் போட்டியும் போராட்டமும் தொடர்கின்றன. சிங்கள ஆட்சியாளர் இலங்கையை தனிச் சிங்களப் பவுத்த நாடாக மாற்றுவதைக் குறியாகக் கொண்டுள்ளனர். தமிழர் இனப்பாகுபாடின்றி தமது ஆட்சி தம்மிடம் இருக்க வேண்டும் என்று போராடுகிறார்கள். இதில் இதுவரை இந்த இரு பகுதியாரின் முன்னேற்றம் என்ன என்று பார்ப்போம். சிங்கள ஆட்சியாளர் சாதனை: 1. அண்ணளவாக கிழக்கு மாகாணத்தின் அரைப்பங்கைப் பிடித்திருக்கும் அம்பாறை சிங்கள மாவட்டத்தை உருவாக்கியுள்ளனர். அதனால் இனிமேல் கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஆட்சி அமைய முடியாது. 2. வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல இலட்சம் ஏக்கர் காணிகளை தமிழர்களிடமிருந்து பறித்து விட்டனர். ஒரு உதாரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 14 வீதமான நிலம் மட்டுமே இப்போது தமிழர் கையில் உள்ளது. 3. நூற்றுக்கணக்கான தமிழர்களின் வரலாற்று வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டு விட்டன. 4. பல நூற்றுக்கணக்கான புத்த விகாரைகள் தமிழர் பகுதிகளில் அமைக்கப்பட்டு அவற்றைச் சூழவுள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளைப் பிடித்து சிங்கள மக்களை அக்காணிகளில் குடியேற்றியுள்ளார்கள். 5. போரினால் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை நிர்மூலமாக்கிவிட்டனர். தொடர்ந்தும் சில இலட்சம் படையினரை தமிழர் பகுதிகளில் நிறுத்தி தமிழரை அடக்கி அவர்களின் சுதந்திர வாழ்வையும் உரிமைகளையும் பிடுங்கியுள்ளனர். நினைவாஞ்சலிக்கும் தடை விதித்துள்ளனர்.. 6. போரினால் மக்களை அழித்தும் பிற நாடுகளுக்குப் புலம்பெயரச் செய்தும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை வெட்டிக் குறைத்துள்ளனர். உதாரணமாக யாழ்மாவட்டம் 11ல் இருந்து 7 ஆகிவிட்டது 7. தனிச் சிங்களப் பவுத்த நாட்டை உருவாக்குவதில் 65 வீதம் வெற்றி பெற்றுள்ளதோடு இன்னும் சிலவருடங்களில் அதை பூர்த்தி செய்யக் காத்திருக்கின்றனர். தமிழர் தரப்பின் சாதனை: 1. ஆறுதற் பரிசான மாகாண சபைகளும்கூட முழுமையாக நடைமுறைப் படுத்தப்படாததோடு குற்றுயிராக இருந்த சபைககளுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தேர்தல் நடத்தப்படவில்லை. 2. கடந்த 14 வருடமாக எமது ஒரே சாதனையாக, பொறுப்புக் கூறலுக்கு மட்டும் குரல் கொடுத்தும் அதில்கூட ஒரு அங்குலமேனும் முன்னேறவில்லை. கொண்டு வந்த ஜெனீவாத் தீர்மானத்தை வீதியில் போட்டு தீயிட்டோம். மனித உரிமைப் பேரவை, தீர்மானங்களை நிறைவேற்றினாலும் அதை இலங்கையில் செயற்படுத்தும் சக்தி, அதிகாரம் அந்தப் பேரவையிடம் இல்லவேயில்லை. 3.தாயகத்தில் ஒற்றுமையாக இருந்த தமிழரின் அரசியற்கட்சியை மட்டும் துண்டு துண்டாக உடைப்பதில் வெற்றி கண்டுள்ளோம். 4. ஈழத்தமிழர் மேன்மையான சந்தோசமான சுதந்திர சுயாதீன வாழ்வை அடைவதற்கு எந்தவிதமான நடைமுறைச் சாத்தியமான முழுமையான திட்டமும் (road map) இல்லாமல் தாயகத் தமிழரைப் பணம் படைத்த புலம்பெயர் தமிழர் சிலர் ஆள நினைக்கிறார்கள். 5. தாயகத் தமிழர் பிரியாணி சாப்பிட உரிமை உள்ளவர்கள். அது கிடைக்கும்வரை வேறு எதையுமே சாப்பிடக்கூடாது. பிரியாணி இல்லையென்றால் பட்டினி இருந்து செத்து மடியுங்கள். அப்போதுதான் உங்களுக்குப் பிச்சைபோட்டு உங்களை நாம் ஆளலாம், என்று தாயகத்தமிழருக்குப் போதனை செய்துகொண்டு புலம்பெயர் தமிழர் சிலர் வெளிநாடுகளில் உல்லாசக் கொண்டாட்டங்களில் திழைத்துள்ளார்கள். 6. தாயகத் தமிழருக்கு குறிப்பிட்ட சில புலம்பெயர் தமிழரைத் தவிர வேறு யாருமே எந்த நன்மையையும் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் அவர்களைக் காட்டிக் கொடுப்போர் அல்லது புறமுதுகில் குத்தும் துரோகிகள் என்று தனிப்படக் கொத்திக் குதறுகிறார்கள். 7.தாயகத்தில் எதையுமே செய்யாது செய்ய வக்கில்லாமல் வெளி நாடுகளில் மட்டும் கொடி பிடிப்பதிலும் கூக்குரல் இடுவதிலும் எந்தத் தமிழனையும் சிந்திக்க விடாமல் ஊடக பலத்தால் உண்மைகளை மறைத்து கோப குரோத உணர்ச்சிகளை மட்டும் ஊட்டி உசுப்பேற்றி அவர்களின் நிம்மதியான வாழ்வைக் கெடுத்து ஒரு கொதி நிலையில் வைத்துக் கொண்டு இல்லாதவர்களை இருப்பதாகக் காட்டி சில புலம்பெயர் தமிழர் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டி பண வசூல் செய்வதில் வெற்றிபெற்றுள்ளனர். 75 வருடமாக வேறு எதையும் சாதிக்கவில்லை. ஈழத்தமிழா, என்னதான் தீர்வு?. இப்போது நமக்குள்ள ஒரே மாற்றுவழி இராஜதந்திர போராட்டமே. அதற்கு நம்மிடமுள்ள ஆயுதம் அந்தத்துறையில் நமக்கு இருக்கக்கூடிய மூளைபலம் மட்டுமே. அந்தந்தப் போரை அந்தந்த வல்லுனரிடம் விடுவதே விவேகமாகும். எல்லாப் போரையும் நாமே செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டால் விளைவு பேரழிவுதான். மருத்துவர் தொழிலை பொறியியலாளர் செய்ய முடியாது. உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகளை மிக மிக நுணுக்கமாக அறிந்து நமது பலம் பலவீனங்களை உணர்ந்து சந்தர்ப்பங்களைத் தவறவிடாது மிகச் சரியான காய் நகர்த்தலை மட்டுமே நம்மால் செய்ய முடியும். அதையே செய்யவேண்டும். அதுவே இராஜதந்திரமாகும். எப்படிச் செய்யலாம்? 1. நமது அரசியல் மற்றும் அனைத்து உரிமைகளையும் பறித்து வைத்திருப்பது தென்னிலங்கை அரசுதான். அது வேறு எவரிடமும் இல்லை. அதைப் பறித்து வைத்திருக்கும் சிங்கள அரசிடமிருந்துதான் அதைத் திரும்பப் பெற வேண்டும். பறிக்கப்பட்ட எமது உரிமைகள் சர்வதேசத்திடம் இல்லை என்பதால் இலங்கை அரசை விலக்கி வைத்துக்கொண்டு சர்வ தேசத்திடம் இருந்து அதை நாம் பெறமுடியாது. சர்வதேசம் மருத்துவிச்சிப் பணிதான் செய்ய முடியும். 2. இவ்வுலகில் எந்தவொரு நாடோ, மக்களோ தமக்கு லாபம் இல்லாமல் வெறும் நீதி அநீதி, தர்மம் அதர்மம் பார்த்து செயற்படுவதில்லை. தமிழர்களாகிய நாமோ குறிப்பாக எமது பலம் வாய்ந்த புலம்பெயர் தமிழர் அமைப்புகளோ கூட இதற்கு விதிவிலக்கல்ல. ரோஹிங்கிய முஸ்லிம்களை எந்த முஸ்லீம் நாடும் காப்பாற்றவில்லை. இப்போது பாலஸ்தீன மக்களைக்கூட எந்த நாடோ உலகமோ காப்பாற்றவில்லை. இந்த யதார்த்தத்தை நாம் உணரவேண்டும். சர்வதேசத்திடம் நாம் ஏமாந்துவிடாமல் எம்மால் அவர்களுக்கும் நன்மை உண்டு என்ற நிலையை உருவாக்கி அவர்களின் உதவியைப் பெறவேண்டும். இலங்கையின் பூகோள அமைவிடமே எமது துருப்புச் சீட்டாகும். தமது நன்மைக்காக, எமக்கு உதவியாக இலங்கை அரசுக்கு தமது அழுத்தங்களை பயன்படுத்துவதைத் தவிர சர்வதேசத்தால் வேறு எதையும் செய்ய முடியாது, செய்யப் போவதுமில்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். பிராந்திய வல்லரசு இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ஐக்கிய நாடுகள் சபையும் இப்படியான உலகநாடுகளின் சங்கம்தான்.அது தர்மதேவதையின் நீதிமன்றமல்ல. 3. அரசகட்சி, எதிர்க்கட்சி என்று ஆட்சியைப் பிடிக்கும் போட்டியில் இனவாதமே அவர்களின் மலிவான சந்தைப் பொருள். எமது கோரிக்கையைப் பரிசீலிக்க ஒரு கட்சி முன்வந்தாலும் மறுகட்சி இனவாதத்தால் தடுத்து விடும். ஆனால் இருகட்சிகளும் சேர்ந்து ரணில் மைத்திரி அரசு ஏற்பட்டபோது கிடைத்த சந்தற்பத்தைப் பயன்படுத்தி ஒரு தீர்வுக்கு முயற்சித்தோம். 75 வீதம் முன்நகர்ந்தாலும் பின்னர் ரணில் மைத்திரி பகைமையால் அதுவும் தடைப்பட்டது. 4. இப்போது நாடளாவிய பொருளாதாரப் பிரச்சனை பூதாகாரமாக எழுந்துள்ளது. அதுவும் நமக்கு சாதகமான சந்தர்ப்பமே. நாட்டின் இனப்பிரச்சனைதான் பொருளாதாரப் பிரச்சனையாக உருவெடுத்திருப்பதை சிங்கள மக்கள் குறிப்பாக இளம் சந்ததியினர் உணரத் தொடங்கி விட்டார்கள். ஜனாதிபதியைத் துரத்தும் அளவுக்கு; முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை காலிமுகத் திடலில் அனுட்டிக்கும் அளவுக்கு அந்த அறகளயப் போராட்டம் அமைந்தது. அதனால் ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனத்தோடு வந்த ரணில் இராசபக்சவின் மொட்டுக் கட்சியால் ஜனாதிபதியானார். சிங்கள இளையோர் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்ச்சியை மீண்டும் மழுங்கடித்து இனவாத அரசியலை முன்னெடுப் பதிலேயே ரணில் இராசபக்ச அரசு இப்போது ஈடுபட்டுள்ளது. அதைத் தடுத்து விழிப்புணர்வு கொண்ட சிங்கள மக்களையும் அறிவுபூர்வமான சிங்களச் சிந்தனையாளரையும் இணத்துக் கொண்டு இலங்கையை இனவாத அரசியலில் இருந்து மீட்டு; யாரும் இனஅடிப்படையில் பாதிக்கப்படாமல் அனைத்து இனமக்களும் சமமாக வாழக்கூடிய அரசை உருவாக்குவதே எமது இராசதந்திரமாக இருக்க வேண்டும். அந்த வழியைத் தவிர எமக்கு வேறு வழியே இல்லை. வெறும் பழிவாங்கும் எண்ணம் தற்கொலை முயற்சியே. எமது இலக்கை அடைய வேறு நடைமுறைச் சாத்தியமான முழுமையான வேலைத்திட்டம் இருந்தால் யாரவது முன்வைக்கலாமே. வெறும் வாய்வீரம் பேசி காலம் கடத்த வேண்டாம். 5. சிங்கள அரசியல்வாதிகள் தமது இனவாத அரசியலுக்கு படையினரை மட்டுமன்றி பவுத்த மதத் துறவிகளையும் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்தப் பொருளாதாரப் பிரச்சனை பவுத்தத் துறவிகளையும் சிந்திக்க வைத்துள்ளது. தாம் பவுத்த மததர்மத்தைக் கைவிட்டதால்த்தான் இப்படி வந்துள்ளதோ என்றும் அவர்களைச் சிந்திக்க வைத்துள்ளது. பலர் தமது தர்மபதப் புத்தகத்தைப் புரட்டத் தொடங்கியுள்ளார்கள். இந்த வாய்ப்பையும் நாம் பயன்படுத்த வேண்டும். அறகளைய போராட்டத்தில் கணிசமான பிக்குகளும் பங்குபற்றினர். பவுத்த துறவிகள் இலங்கை அரசியலிலும் சிங்கள மக்களிடமும் மிகுந்த செல்வாக்கு உள்ளவர்கள். அவர்கள் பலத்தை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதே எமது சாதுர்யமாகும். ஆனால் ஏமாறாமல் இருப்பதுதான் எமது வல்லமையாக, வீரமாக இருக்க வேண்டும். இந்த அடிப்படையிலான செயற்பாடுகள்: தமிழர் தரப்பில் எந்த அரசியற் கட்சியோ, அமைப்புகளோ இந்த அடிப்படையிலான இராசதந்திர நகர்வுகளை இதுவரை முன்னெடுக்க முடியவில்லை. அதனால் சிந்தனையுள்ள ஒருசில பவுத்ததுறவிகளும் ஒரு புலம்பெயர் தமிழ் அமைப்பும் சேர்ந்து இதில் இறங்கி உள்ளார்கள். அது அனைத்து அரசியற் கட்சிகளினதும், அனைத்துப் பவுத்த மதபீடங்களதும் அனைத்து மத அமைப்புகளதும் சிவில் அமைப்புகளதும் சர்வதேசத்தினதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அத்தனை தரப்பினரும் பச்சைக்கொடி காட்டியுள்ள இத்திட்டத்திற்கு தம்மைத்தாமே புலம்பெயர் தமிழரின் பிரதிநிதிகள் என்று கூறும் சிலரும் அவர்களின் பணத்திற்குத் தாளம் போடும் சில தாயக உதிரிக் கட்சிகளும் எதிர்ப்பைத் தெரிவிப்பதன் நோக்கம் என்ன?. தமது வியாபாரம் முடங்கிவிடும் என்ற பயத்தைத் தவிர வேறு காரணம் இல்லை. யார் குத்தினால் என்ன அரிசியானால் சரிதானே. இவர் குத்தக் கூடாதென்று நாம் ஏன் குத்தி முறிய வேண்டும். உங்களிடம் சாத்தியமான எந்த வேலைத்திட்ட வரைபடமும் கிடையாது. நீங்களும் செய்யாமல் செய்பவனையும் ஒழித்துவிட வேண்டுமா? உங்களிடம் வேலைத்திட்டம் இருந்தால் அதைச் செய்யலாம்தானே? செய்ய வேண்டாம் என்று யாரும் தடுத்தார்களா?. நாம் சுயநிர்ணயத்திற்காக, சமஷ்டிக்காக, தனியான தேசத்திற்காக மட்டும்தான் போராடவேண்டும், முதலில் பொறுப்புக் கூறல் மூலம் இராசபக்சாக்களை தூக்கில் இடவேண்டும் வேறு எதையும் ஏற்கக்கூடாது என்று உடனடிச் சாத்தியமற்றவற்றை 14 வருடங்களுக்கு மேலாக கூறிக்கொண்டு அங்குள்ள மக்களை ஏமாற்றிக் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்க, பிரியாணி வந்தாலும் அதைச் சாப்பிட அங்கு எவரும் இருக்க மாட்டார்கள். நிலம் எல்லாம் பறிபோய் பலரும் புலம்பெயர்ந்து தாயகத்தில் மக்களும் இல்லாவிட்டால்; அப்படித்தான் பொறுப்புக் கூறலில் முழுவெற்றிபெற்று இராசபக்சாக்களைத் தூக்கில் போட்டாலும் கூட யாருக்கு என்ன லாபம். இராசபக்சாக்களைத் தூக்கில் போட்டாலும் அப்போதும்கூட தமிழருக்கு வேண்டிய உரிமையைத் தென்னிலங்கை அரசிடம் இருந்துதானே பெறவேண்டும். எஞ்சியுள்ள தமிழ் மக்களையும் நிலத்தையும் ஆவது காப்பாற்ற உடனடியாக என்ன செய்யலாம் என்பது பற்றி யாராவது சிந்திக்கிறோமா?. அல்லது எமது சுயலாப வியாபாரங்களைக் கருதி வீறாப்புப் பேசிக்கொண்டு இனஅழிப்பு, போர்க்குற்றம், பொறுப்புக்கூறல் பற்றி தமிழ் மக்களுக்கு மட்டும் பாடம் எடுத்துக்கொண்டு ஒட்டுமொத்த இனத்தையும் பூண்டோடு அழிக்கப் போகின்றோமா?. இலங்கையில் இப்போது மூன்றாவது தடவையாக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பில் 20 தடவைக்குமேல் திருத்தம் செய்தாயிற்று. காலத்திற்கேற்ப சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்படும். இப்போது உள்ள நிலைமைக்கு ஏற்ப ஒரு அரசியல் அமைப்பை ஏற்படுத்தினால் நாட்டில் நிலைமை சீரடையும்போது அதைத் திருத்த முடியாதென்றோ அல்லது இன்னொரு புதிய அரசமைப்பை உருவாக்க முடியாதென்றோ சொல்வது மக்களை ஏமாற்றும் தந்திரமே. இருப்பதைச் சாப்பிட்டு அந்தப் பலத்தில் நின்றுகொண்டு பிரியாணிக்குப் போராடுவதே பகுத்தறிவான செயலாகும். முதலில் எஞ்சியுள்ள நிலத்தையும் மக்களையும் தக்கவைக்க உடனடியாகச் செய்யக் கூடியத்தைச் செய்ய வேண்டும். பொறுப்புக்கூறல் மூலம் இராஜபக்சாக்களைத் தூக்கிலிடும் உடனடிச் சாத்தியமற்ற விடயத்தைச்சொல்லிக் காலம்கடத்தினால் சிங்கள பவுத்த நாடு அமைந்துவிடும். அதை உடனடியாகத் தடுக்க வேண்டாமா?. இமாலய பிரகடனம்: புரிந்துணர்வு உரையாடல்களை அனைத்து மத; இன மக்களும் சேர்ந்து முன்னெடுப் பதற்கான ஒரு அடிப்படை ஆரம்ப இணக்கப்பாடுதான் இந்த பிரகடனம். ஆறு அம்சங்களைக் கொண்ட இந்த “இமாலய பிரகடனத்தில்” 5 வது பரிந்துரையில் பொறுப்புக்கூறலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதையும் நாங்கள் நிட்சயமாகத் தொடருவோம். தொடர வேண்டும். சிங்கள அரசுக்கு ஒரு அழுத்தம் கொடுக்க உதவும். பூரணமான மாகாண அதிகாரப்பகிர்வு, இனவேறுபாடின்றி சமஉரிமை, அனைவருக்கும் சமசந்தர்ப்பத்தை உறுதிப் படுத்தக்கூடிய புதிய அரசியல் அமைப்பு என்பன 3 வது பரிந்துரையில் வலியுறுத்தப் படுகின்றது. அதுவரை தற்போதுள்ள அதிகார பகிர்வினை இதயசுத்தியோடு முழுமையாக நடைமுறைப் படுத்த வேண்டும் எனறும் உள்ளது. இனம் அல்லது மதம் சார்ந்து எந்தப் பாகுபாடுமில்லாத மீளப்பெற முடியாத அரசியலமைப்பைத் தவிர வேறென்ன நமக்கு வேண்டும். சிங்கள மக்களையும் நாமே ஆளவேண்டுமா?. இது ஒரு சிவில் சமூகச் செயற்பாடு. அரசியற் செயற்பாடு அல்ல. இருதரப்பிலும் உள்ள பயங்களை சந்தேகங்களை அகற்றி மக்களை ஒற்றுமையாக்கி பிரச்சனையைத் தீர்ப்பதில் இருக்கும் தடைகளை நீக்குவதற்கான முயற்சியாகும். அவர்களின் வேலைத்திட்ட வரைபடத்தின் முதலாம் கட்டம் இது. இதனால் அதிகாரபீடம் பிரச்சனையைத் தீர்க்க நிர்ப்பந்திக்கப் படுவதோடு இனவாத சாக்கடை அரசியலிலிருந்து நாட்டை மீட்டெடுக்கவும் உதவும். இது பிரச்சனையின் ஆணிவேரைப் பிடுங்கி எறியும் பொதுமக்கள் முயற்சியே அல்லாமல் அரசு செய்யவேண்டிய அரசியற் செயற்பாடு அல்ல. இறுதியில் மக்கள் பிரதிநிதிகள்தான் அதை அறுவடை செய்யவேண்டும். இது ஒரு தூரநோக்கோடு தமிழரின் பிரச்சனையைத் தீர்க்க போடப்பட்டுள்ள (Road Map) வரைபடமாகும். தாயகமக்களின் நலனில் சுயநலமற்ற உண்மையான அக்கறை உள்ள தமிழ் மக்கள் இதை முற்றிலுமாக ஆதரித்து தாயகத்தில் அவதிப்படும் மக்களை மீட்டெடுக்க முன்வர வேண்டும். பிரகடன எதிர்ப்புகள்: பொறுப்புக்கூறல் மழுங்கடிக்கப் படுவதாகச் சொல்வது வெறும் ஏமாற்று யுக்தி. அரசதலைவர் என்ற வகையில் மகிந்தவோடு நாம் பேசிவிட்டோம் என்பதற்காக அவர் செய்த குற்றங்கள் குற்றமில்லை என்று ஆகிவிடாது. இதை விளங்காத சர்வதேசம் இருக்க முடியாது. பொறுப்புக் கூறல் தொடரும். ஒரு அளுத்தத்தைக் கொடுக்கவாவது அது தொடரப்பட வேண்டும். மற்றது மகிந்தவைச் சந்தித்து படமெடுத்த துரோகம்:- இலங்கை அரசு என்றால் அது நாடாளுமன்றமே . இன்றய நாடாளுமன்றத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மொட்டுக் கட்சிதான். மொட்டுக்கட்சியின் தலைவர் மகிந்ததான். சிங்கள ஆட்சியாளரோடுதான் பேச வேண்டும் என்றால் இன்றய நிலையில் மகிந்தவோடுதான் பேசவேண்டும். நாட்டு அரசோடு பேசாமல் நாட்டு மக்களோடு பேசமுடியாது. அதே மகிந்தவோடு நாடாளுமன்றத்தில் அத்தனை தமிழ்ப் பிரதிநிதிகளும் இருந்து பேசுகின்றார்கள்,பேசத்தான் வேண்டும். மகிந்த இருக்கிறார் என்பதற்காக நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்க முடியுமா?. மகிந்தவோடு சுரேன் பேசினால் மட்டும் தீட்டுப் பட்டு விட்டதா?. புலிகள்கூட மகிந்த அரசோடுதான் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சுயநல, பணபல, ஊடகபல, உணர்ச்சிவச செயற்பாடுகள் மூலம் பெரும்பாலான தமிழரை மூளைச்சலவை செய்து தமது இருப்பையும் பொருளீட்டலையும் பாதுகாத்துவந்த தரப்பினர் மண்ணெண்ணெய் பட்ட சாரைப்பாம்பு போல துடிக்கிறார்கள். தற்செயலாக இதன்மூலம் தமிழருக்கு ஏதாவது கிடைத்து விட்டால் தமது தொழில் படுத்து விடுமே என்ற பயத்தில் கன்னாபின்னா என்று அலறத் தொடங்கி விட்டார்கள். கருத்தை கருத்தால் எதிர் கொள்ளாமல் இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தனிப்பட்ட முறையில் தாறுமாறாகத் தாக்கத் தொடங்கியுள்ளார்கள். வெறும் கற்பனையில் சோடித்து இது ரணிலின் திட்டம், மகிந்தவின் திட்டம், அமெரிக்காவின் திட்டம் என்றெல்லாம் எந்தவிதமான அடிப்படை உண்மையும் அறவே இல்லாமல் காட்டிக் கொடுக்கும் துரோகி, முதுகில் குத்துகின்றான் என்று வெறும் கட்டுக்கதைகளைப் புனைந்து ஏகபோக ஊடகபலத்தால் தமது பக்கக் கருத்துக்களையே பரப்பிக் கொண்டிருப்பதால் உண்மை உணராத நல்ல தமிழரும் ஏதோ அநியாயம் நடந்து விட்டதோ, அபாயம் வருமோ என்று வருந்துகிறார்கள். அந்த நல்ல தமிழருக்காகவே இந்த விளக்கங்களைத் தருகின்றோம். இக்கட்டுரை ஆசிரியர் வின் மகாலிங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – கனடா கிளையின் காப்பாளராவார் https://marumoli.com/ஈழத்தமிழா-என்னதான்-தீர்/?fbclid=IwAR2lZfuCevVLNaCvUdNFaXhrGOVvPd684ymAOMLZDcHOrQA6YDDKRi44Z8s4 points
-
கொழும்பில் இருந்து கொண்டே அவ்வப்போது மணியனைக் கூட்டிக் கொண்டு வெளியிடங்களுக்குப் போய் வந்து கொண்டிருந்தேன். விடுமுறைக்கு வருபவர்கள் ‘எலா’விற்கு விரும்பிப் போவார்கள். நாங்களும் போனோம். எலாவின் இயற்கையான சூழல் என்னை மிகவும் கவர்ந்தது. தெறித்து விழும் அருவியின் சாரல் படும் போது உடல் குளிர்ந்தது. சாரல் பட்டு நனைந்து வீதி ஓரத்தில் ஆங்காங்கே இருந்த குரங்குகளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. இராவணனை பெரிதாக, பலமானவனாக வடிவமைத்திருந்தார்கள். ‘இராவணன்’ ‘இராவணா’வாக மாறி மஹா வம்சத்தில் ஏற்கனவே இணைக்கப் பட்டுவிட்டாரா அல்லது இனித்தானா என்பது தெரியவில்லை. Flying Ravana விலும் பறந்து பார்த்தேன். பறப்பதற்கு முன்னர் பாதுகாப்பிற்காக பட்டி இட்டு தலைக்கவசத்தையும் மாட்டி விட்டார்கள். பலரின் வியர்வைகள் சங்கமித்த அந்த தலைக்கவசம் கொஞ்சம் அசெளகரியமாக இருந்தது. சத்தி வந்து விடுமோ என்ற அச்சமும் கூடவே இருந்தது. “கவனம், அட்டைகள் இருக்கு. மழையும் பெய்கிறது. புல் தரைக்குள் போகாதீர்கள் ” என்று எச்சரித்தார்கள். எவ்வளவு கவனமாக இருந்த போதும் இரண்டு அட்டைகள் உடலில் ஏறி விட்டன. ஒன்றை உடனடியாகக் கண்டதால் அப்புறப் படுத்தி விட்டேன். மற்றொன்று துணிச்சலாக எனது கையில் ஏறி இரத்தம் குடித்து விட்டது. எலாவில் இருந்து வரும் வழியில் நுவரெலியாவுக்குப் போனோம். குட்டி இலண்டன் என்று அழைக்கப்படும் நுவரெலியா அந்தப் பெயருக்குப் பொருத்தமாக இருந்தது. குளிருக்கு ஏற்ப சுடச்சுட கிடைத்த சிற்றுண்டிகள் சுவை சேர்த்தன.4 points
-
கடந்த 75 வருடங்களாக எமது தமிழ் தரப்பு தலைமைகள் செய்தவை எல்லாம், போராட்டத்தை தொடர்சசியாக றிவேர்ஸ் கியரில் கொண்டு சென்றதே. 1948 ல் இருந்த நிலையை விட, இன்று அதல பாதாளத்தில் தமிழர் நிலை உள்ள நிலைக்கும் பாரிய உயிர் அழிவுகளுக்கும் தலைமை தாங்கிய எல்லா தலைமைகளும் பொறுப்பு கூற வேண்டும். தமது தலைமைகளின் தவறுகளுக்கு சொந்த மக்களுக்கு பொறுப்பு கூற முடியாதவர்கள் இலங்கை அரசை பொறுப்பு கூற வைக்கப்போவதாக கூறுவது வேடிக்கை. அதற்கான பொறுப்பு கூற தமிழர் அரசியலைக் நடத்துகிறோம் என்று கூறுவோருக்கு ஈகோ இடம் தரவில்லை என்றால் செய்த தவறுகளை தமக்குள்ளாவது உளப்பூர்வமாக உணர்ந்து ஏற்றுக்கொள்வதுடன் இனியாவது பொறுப்பை உணர்ந்து அறிவு பூர்வமாக செயற்பட வேண்டும். அனைத்து அமைப்புகளும் சிந்தித்து புரிந்துணர்வுடன் தற்போதைய நிலையில் சாத்தியமான ஒரு அரசியல் தீர்வு நடைமுறையை உருவாக்கி, அதைப் பெற இலங்கை அரசுடன் பேசுவதோடு நின்றுவிடாது, சிங்கள மக்கள் அமைப்புகளுடனும் புரிந்துணர்வுடன் உரையாடல்களை மேற்கொண்டு அதைச் சாத்தியமாக்க உழைக்க வேண்டும். அதன் மூலம் எமது தமிழ்மக்களின் பலத்தை உயர்த்த தேவையான அரசியலை செய்ய வேண்டும். அதுவே இன்றைய தமிழ் மக்களின் அபிலாசை. அதை விடுத்து இதுவரை செய்த உதவாக்கரை அரசியலை தொடர்வாரேயானால், தமிழர்களின் உண்மையான துரோகிகள் இந்த ஒட்டுமொத்தமான தலைமைகளே, என்பதை விளைவுகளை அனுபவிக்கப்போகும் எமது எதிர்கால சந்ததி கூறும்.4 points
-
T20 உலகக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை வெளியானது! மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. T20 உலகக்கிண்ணத்தின் போட்டி அட்டவணையின்படி அமெரிக்காவின் 3 மைதானங்களிலும், மேற்கிந்திய தீவுகளின் 6 மைதானங்களிலும் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி இலங்கை அணி D குழுவில் இடம்பெற்றுள்ள நிலையில் தங்களுடைய முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணியை ஜூன் 3ம் திகதி நியூ யோர்க்கில் எதிர்கொள்கின்றது. அதனைத்தொடர்ந்து ஜூன் 7ம் திகதி பங்களாதேஷ் அணியையும், ஜூன் 11ம் திகதி நேபாளம் அணியையும், ஜூன் 16ம் திகதி நெதர்லாந்து அணியையும் இலங்கை எதிர்கொள்ளவுள்ளது. மொத்தமாக விளையாடவுள்ள 20 அணிகளில் 10 அணிகள் முதல் 29 நாட்கள் அமெரிக்காவில் போட்டியிடுகின்றன. அதன் அடிப்படையில் 16 போட்டிகள் டளாஸ், லவுடர்ஹில் மற்றும் நியூ யோர்க் மைதானங்களில் நடைபெறவுள்ளன. இதில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நியூ யோர்க்கில் ஜூன் 9ம் திகதி நடைபெறவுள்ளது. அதேநேரம் மேற்கிந்திய தீவுகளின் ஆறு வெவ்வேறு மைதானங்களில் 41 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் அரையிறுதிப்போட்டிகள் ட்ரினிடட் மற்றும் டொபேகோ மற்றும் கயானாவில் நடைபெறவுள்ளதுடன், இறுதிப்போட்டி ஜூன் 29ம் திகதி பார்படோஸில் நடைபெறவுள்ளது. போட்டி அட்டவணை ஜூன் 1– அமெரிக்கா எதிர் கனடா (டளாஸ்) ஜூன் 2 – மே.தீவுகள் எதிர் பப்புவா நியூ கினியா (கயானா) ஜூன் 2 – நமீபியா எதிர் ஓமான் (பார்படோஸ்) ஜூன் 3 – இலங்கை எதிர் தென்னாபிரிக்கா (நியூ யோர்க்) ஜூன் 3– ஆப்கானிஸ்தான் எதிர் உகண்டா (கயானா) ஜூன் 4 – இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து (பார்படோஸ்) ஜூன் 4 – நெதர்லாந்து எதிர் நேபாளம் (டளாஸ்) ஜூன் 5 – இந்தியா எதிர் அயர்லாந்து (நியூ யோர்க்) ஜூன் 5 – பப்புவா நியூ கினியா எதிர் உகண்டா (கயானா) ஜூன் 5 – அவுஸ்திரேலியா எதிர் ஓமான் (பார்படோஸ்) ஜூன் 6 – அமெரிக்கா எதிர் பாகிஸ்தான் (டளாஸ்) ஜூன் 6 – நமீபியா எதிர் ஸ்கொட்லாந்து (டளாஸ்) ஜூன் 7 – கனடா எதிர் அயர்லாந்து (நியூ யோர்க்) ஜூன் 7– நியூசிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் (கயானா) ஜூன் 7 – இலங்கை எதிர் பங்களாதேஷ் (டளாஸ்) ஜூன் 8 – நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா (நியூ யோர்க்) ஜூன் 8 – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து (பார்படோஸ்) ஜூன் 8 – மே.தீவுகள் எதிர் உகண்டா (கயானா) ஜூன் 9 – இந்தியா எதிர் பாகிஸ்தான் (நியூ யோர்க்) ஜூன் 9 – ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து (ஆண்டிகா) ஜூன் 10 – தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் (நியூ யோர்க்) ஜூன் 11 – பாகிஸ்தான் எதிர் கனடா (நியூ யோர்க்) ஜூன் 11 – இலங்கை எதிர் நேபாளம் (ப்ளோரிடா) ஜூன் 11 – அவுஸ்திரேலியா எதிர் நமீபியா (ஆண்டிகா) ஜூன் 12 – அமெரிக்கா எதிர் இந்தியா (நியூ யோர்க்) ஜூன் 12 – மே.தீவுகள் எதிர் நியூசிலாந்து (ட்ரினிடட்) ஜூன் 13 – இங்கிலாந்து எதிர் ஓமான் (ஆண்டிகா) ஜூன் 13 – பங்களாதேஷ் எதிர் நெதர்லாந்து (சென். வின்செண்ட்) ஜூன் 13 – ஆப்கானிஸ்தான் எதிர் பப்புவா நியூ கினியா (ட்ரினிடட்) ஜூன் 14 – அமெரிக்கா எதிர் அயர்லாந்து (ப்ளோரிடா) ஜூன் 14 – தென்னாபிரிக்கா எதிர் நேபாளம் (சென். வின்செண்ட்) ஜூன் 14 – நியூசிலாந்து எதிர் உகண்டா (ட்ரினிடட்) ஜூன் 15 – இந்தியா எதிர் கனடா (ப்ளோரிடா) ஜூன் 15 – நமீபியா எதிர் இங்கிலாந்து (ஆண்டிகா) ஜூன் 15 – அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து (சென்.லூசியா) ஜூன் 16 – பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து (ப்ளோரிடா) ஜூன் 16 – பங்களாதேஷ் எதிர் நேபாளம் (சென்.வின்செண்ட்) ஜூன் 16 – இலங்கை எதிர் நெதர்லாந்து (சென்.லூசியா) ஜூன் 17 – நியூசிலாந்து எதிர் பப்புவா நியூ கினியா (ட்ரினிடட்) ஜூன் 17 – மே.தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் (சென்.லூசியா) ஜூன் 19 – A2 v D1, ஆண்டிகா ஜூன் 19– B1 v C2, சென். லூசியா ஜூன் 20 – C1 v A1, பார்படோஸ் ஜூன் 20 – B2 v D2, ஆண்டிகா ஜூன் 21 – B1 v D1, சென். லூசியா ஜூன் 21 – A2 v C2, பார்படோஸ் ஜூன் 22 – A1 v D2, ஆண்டிகா ஜூன் 22 – C1 v B2, சென்.வின்செண்ட் ஜூன் 23 – A2 v B1, பார்படோஸ் ஜூன் 23 – C2 v D1, ஆண்டிகா ஜூன் 24 – B2 v A1, சென். லூசியா ஜூன் 24– C1 v D2, சென். வின்செண்ட் ஜூன் 26 – Semi-Final 1, கயானா ஜூன் 27 – Semi-Final 2, ட்ரினிடட் ஜூன் 29 – Final, பார்படோஸ் https://www.thepapare.com/fixtures-revealed-for-icc-mens-t20-world-cup-2024-tamil/3 points
-
காலையில் பாண் வாங்குவதற்காக மணியனும் நானும் பேக்கரிக்குப் போயிருந்தோம். அங்கே ஒரு சிறிய கூட்டம் வரிசை கட்டி இருந்ததால் மணியன் பாண் வாங்கி வரும் வரை நான் ஓரமாக ஒதுங்கி நின்றேன். பிளாஸ்ரிக் பையில் பாணை வாங்கிக் கொண்டு ஒரு புன் சிரிப்போடு வந்த மணியன், “உனக்கு பல்லெல்லாம் ஓகேதானே?” என்று என்னைக் கேட்டான். அவன் அப்படி அதுவும் காலையிலேயே என்னைக் கேட்டது ஏன் என்று புரியாமல் விழித்து நின்ற எனக்கு, அவன் தொடர்ந்து சொல்லும் போதுதான் புரிந்தது. “எனக்குப் பின்னாலே மூண்டாவதா நின்றாரே, அவர் ஒரு டென்ரிஸ்ட். ஊர் வல்வெட்டித்துறை. வெள்ளவத்தையிலைதான் அவரின்ரை டிஸ்பென்சரி இருக்கு. நான் அவரிட்டைத்தான் பல்லைக் காட்டுறனான். எனக்கு முன் பல்லிலை ஒரு ‘ஈவு’ இருந்ததெல்லோ! அந்த இடைவெளியை மறைச்சவர் இவர்தான்” என்று தன்னுடைய பல்லைக் காட்டிச் சிரித்தான் மணியன். கதைத்துக் கொண்டிருக்கும் போதே பல் வைத்தியர் பாணுடன் எங்கள் பக்கத்தில் வந்து நின்றார். “எப்பிடி, சுகமா? கனகாலமா அந்தப் பக்கம் காணேல்லே?” “ ஓம்..ஓம். ஒருக்கால் வரத்தான் வேணும். இவர் என்னுடைய பழைய சினேகிதன். யேர்மனியிலை இருக்கிறார்” மணியன் என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தான். “அப்பிடியே! நல்லது. நாளைக்கு மகள் நியூசிலாந்திலை இருந்து வாறா. எயார் போர்ட்டுக்குப் போயிடுவன். வாறதெண்டால் செவ்வாய், புதனிலை வாங்கோ” சொல்லிவிட்டு, சிரித்து விடை பெற்றார். “டென்ரிஸ்ரட்டை போற எண்ணம் இருக்கோ? போறதெண்டால் சொல்லு” “ டென்ரிஸ்ற் சிரிக்கக்க பாத்தன். மேல் பல் வரிசையில் இடது, வலது பக்கங்களில் ஒன்றிரண்டு பல்லுகளைக் காணேல்லை. முதலிலே அவர் தன்ரை பல்லைக் கட்டட்டும். பிறகு பாப்பம்” என்று மணியனுக்குச்சொன்னேன். “சரி உன் இஷ்டம். இங்கை எண்டால் செலவு குறைவு” என்று மணியன் சொல்ல, “பல்லை விடு, பிறகு பாப்பம்.” என்று சொல்லிவிட்டு கதையை வேறு பக்கம் திருப்பினேன். “உன்னைக் கேக்கோணும் எண்டு நினைச்சனான். இப்ப சிறீலங்காவிலை முள் முருங்கை முற்றா அழிஞ்சு போச்சு எண்டு சொல்லுறாங்களே உண்மையோ?” மணியனிடம் இருந்து பதில் வரவில்லை. வீட்டில் காரை நிறுத்தி விட்டு “வா” என்ற ஒற்றை வார்த்தையுடன் தன் வீட்டு முற்றத்துக்கு அழைத்துப் போனான். “பார். இதுதான் முள் முருங்கை. பழைய மரம் பெருத்து உயர்ந்து நிக்கிறதாலை உன்ரை கண்ணுக்குப் படேல்லை. முள் முருங்கை மட்டுமில்லை. பனையும் வெள்ளவத்தையிலை இருக்கு. நீ மேலை இருக்கக்கை பல்கணியிலை இருந்து பார் தெரியும்” என்று சொல்லிவிட்டு, “வா சாப்பிடுவம்” என்று வீட்டுக்குள் போனான். அடுத்தநாள் மணியனின் பிறந்தநாள். கோல்பேஸ் ஹொட்டலில் மனைவி, உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடினான். அன்றுதான் நான் அந்த ஹொட்டலுக்கு முதன் முதலாகப் போனேன். வெளிநாட்டுத் தலைகள் ஹொட்டலில் அதிகமாகத் தெரிந்தன. "விரும்பியதைச் சாப்பிடு" என்று என்னிடம் சொல்லிவிட்டு நண்பர்களுடன் தன் விருந்தை அனுபவித்தான். கோல் பேஸ் ஹொட்டலில் பாரம்பரியமாக ஒவ்வொரு வருடமும் நடக்கும் கிறிஸ்மஸ் கேக் நிகழ்ச்சி நடந்தது. கிறிஸ்மஸுக்கு ஒருமாதம் முன்பே பழங்களை மது பானங்களில் ஊற வைத்து, பின்னர் கேக் தயாரிப்பார்கள். என்னிடமும் ஒரு போத்தல் விஸ்கி தந்தார்கள். பழங்களில் ஊற்றி விட்டு வந்தேன்.3 points
-
நியூசிலாந்து பாராளுமன்றத்தில் 21 வயதான இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஆற்றிய உரை தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. ஹக்கா (haka) எனப்படும் பாரம்பரிய வெற்றி முழக்கத்துடன் அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. Hana-Rawhiti Maipi-Clarke எனும் குறித்த பெண் கடந்த 170 வருடங்களில் நியூசிலாந்து வரலாற்றில் பதிவான முதல் இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். நியூசிலாந்தின் ஆக்லேண்ட் மற்றும் ஹெமில்டனுக்கு இடையில் உள்ள Huntly எனும் சிறிய நகரத்தை சேர்ந்த இவர், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். மாவோரி பழங்குடி இனத்தை சேர்ந்த இவர் நியூசிலாந்தின் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறார். இந்நிலையில், Maipi-Clarke கடந்த மாதத்தில் பாராளுமன்றத்தில் பாரம்பரிய முறையில், ‘ஹாக்கா’ அல்லது ‘போர் முழக்கம்’ (‘haka’ or ‘war cry’ ) செய்து தனது மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியில், “உங்களுக்காக இறப்பேன்… ஆனால், உங்களுக்காக வாழவும் செய்வேன்” என அவர் கூறியதாக New Zealand Herald செய்தியில் கூறப்பட்டுள்ளது. நியூசிலாந்தை பொறுத்தவரை ஹக்கா நடனம், நியூசிலாந்து மாவோரி பழங்குடியினரின் ஆதி பழக்கங்களில் ஒன்று. போர், வெற்றி, ஒற்றுமை, இன குழுவின் பெருமை என எல்லாவற்றையும் சொல்ல அவர்கள் இதனை பயன்படுத்துகின்றனர். https://thinakkural.lk/article/2872272 points
-
ஆளுனரின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்... வன்முறைகளை தூண்டும் எந்த விளையாட்டும் தமிழருக்கு தேவையில்லை..பிறகு பக்கத்து வீட்டுக்காரன் சணடிக்கு வந்தால் நீங்கள் அவனை காளையை அட்க்கிற மாதிரி அடக்க வெளிக்கிட பிறகு அவன் உலகத்தில இருக்கிற காவலிகளை எல்லாம் துணக்கு அழைத்து தமிழனை அடக்கி அழித்து விடுவான் ஆகவே இப்படியான விளையாட்டுக்களை தமிழருக்கு அறிமுக படுத்த வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். அத்துடன் மெய்வல்லுனர் போட்டியிலிருந்து ஈட்டியெறிதல் ,குண்டெறிதல் போன்றவற்றை தமிழர்கள் விளையாடுவதை தடை செய்ய வேண்டும்.. மென் பந்தாட்டம்.பூப்பந்தாட்டம்,கிரிக்கட்( சொவ்ட் போல்) மற்றும் சினிமா,நாடகம் பாடல்கள் , போன்றவற்றை ஊக்கப்படுத்துங்கள்2 points
-
ஆளுநர் தனக்கு வழங்கப்பட்ட பணியை செவ்வனே செய்துவருகின்றார்.2 points
-
1982 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை பகிஷகரிக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி மக்களிடம் கோரிக்கை விட, அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திரு குமார் பொன்னம்பலம் தமிழீழ கோரிக்கையை முன்வைத்து, அதை உறுதிப்படுத்த தனக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் உண்மையில் மக்கள் அந்த இரு கோரிக்கைகளையும் நிராகரித்ததே வரலாறு. வட கிழக்கில் தமிழர் பிரதேசங்களில் அம்பாறை மாவட்டத்தை தவிர்தது விட்டு பார்ததால் கூட முக்கிய இரண்டு தேசியக்கட்சிகளும் சேர்ந்து 325000 வாக்குகளை பெற, குமார் பொன்னம்பலம் வெறும் 155000 வாக்குகளை மட்டுமே பெற்றார். இந்த ஜதார்த்தத்தை, தமிழ்மக்களின் மனவோட்டத்தை எமது விடுதலைப்போராட்டத்தை நடத்திய எவரும் கவனத்தில் கொள்ளவில்லை. சுதந்திரத்திற்கு பின்னர் தேர்தல் பகிஷகரிப்பு என்றுமே தமிழர் பகுதிகளில் வெற்றி பெறவில்லை. புலிகளில் கட்டுப்பாட்டில் மக்கள் இருந்தபோது அல்லது ஆயுத முனையில் மட்டுமே அது சாத்தியமானது என்பதே உண்மை வரலாறு. அதை உலகம் கருத்தில் எடுக்காது. 1999 ல் சந்திரிக்கா மீது பாரிய குற்றச்சாட்டுகளை தமிழ் சமூகம் சார்பாக உலக அளவில் பரப்புரை செய்யப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் கூட யாழ்பபாண மாவட்டதில் மட்டும் அவர் 52000 திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றார். ஜனதிபதி தேர்தலில் மூலம் அரசியல் தீர்வு திட்டத்தை எப்படியும் பெற முடியாது. ஆகவே இதனை உபயோகித்து சமயோசத்துடன் தமிழ் மக்களின் கல்வி சமூக பொருளாதார பலப்படுத்தலை செய்ய முடிந்தால் அதை தமிழ்கட்சிகள் செய்வது நல்லது. அவர்களிடம் அதற்கான வலு மட்டுமே தற்போது உள்ளது என்பது எனது அபிப்பிராயம்.2 points
-
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியைக் குழிதோண்டிப் புதைத்தல் யாழ்ப்பாணத்தில் ஆடி 25 ஆம் திகதி தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினால் நடத்தப்பட்ட சத்தியாக்கிரக நிகழ்வு பற்றிய செய்தி லேக் ஹவுஸ் நிறுவனத்திற்குக் கிடைத்தபோது அங்கிருந்தோர் அனைவரும் மிகவும் அகமகிழ்ந்தனர். பின்னர் தொலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிக்கைகள் ஊடாக இச்செய்தி சிங்கள மக்களிடையே பரவியபோது அந்த மகிழ்ச்சி அவர்களையும் பற்றிக்கொண்டது. இச்செய்தி வெளிவந்தபோது வாராந்த பத்திரிக்கையாளர் கூட்டத்திற்காக தகவல்த் திணைக்களத்திற்குச் சென்றிருந்தேன். அமைச்சரவைப் பேச்சாளரும், அரசாங்க அமைச்சருமான ஆனந்த திஸ்ஸ தி அல்விஸ் மிகுந்த அக்களிப்புடன் இச்செய்தியைப் பகிர்ந்துகொண்டார். "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் காலம் முடிவடைந்துவிட்டது" என்று அவர் கூறினார். "இந்தச் சூழ்நிலையில் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் பேசுவதில் என்ன பயன் இருக்கப்போகிறது என்கிற கேள்வியும் எழுகிறது" என்று அவர் மேலும் கூறினார். டெயிலி நியூஸ் பத்திரிகைக்காக சத்தியாக்கிரகம் தொடர்பான செய்தியை நான் எழுதினேன். ஆனந்த திஸ்ஸ தி அல்விஸின் கேள்வியைத் தலைப்பாக இட்டு நான் எழுதிய கட்டுரையில் யாழ்ப்பாணத்திலிருந்து எமது நிருபர்கள் தொலைபேசியூடாக தொடர்ச்சியாக வழங்கிவந்த உடனடிச் செய்திகளையும் கோர்த்து எழுதினேன். "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பாதை முடிந்துவிட்டது" என்கிற தலைப்பில் அச்செய்தி வெளியாகியிருந்தது. லலித் அதுலத் முதலி உடனடியாக செயலில் இறங்கினார். டெயிலி நியுஸ் மற்றும் சண் பத்திரிக்கைகளில் அவர் ஒரு செய்தியை விதைத்தார். " தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் இனிமேல் சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றுவதன் மூலம் என்ன பலன் இருக்கப்போகிறது என்று தம்மை அடையாளம் காட்ட விரும்பாத அரச தரப்புத் தகவல்கள் கருத்துத் தெரிவிக்கின்றன" என்பதே அவர் விதைத்த செய்தி. அப்படியானால், அவர்கள் யாரைத்தான் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்? என்கிற கேள்வியையும் அச்செய்தி கேட்டிருந்தது. தலைப்புச் செய்தியாக தாம் இட்டதையே ஆசிரியர்த் தலையங்கமாகவும் சண், டெயிலிநியூஸ் உட்பட்ட ஆங்கில மற்றும் சிங்களப் பத்திரிக்கைகள் வெளியிட்டிருந்தன. இந்தச் செய்திகள், குறிப்புக்கள், தலையங்கங்கள் அனைத்தினதும் நோக்கம் ஒன்றுதான். அதுதான் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினை குழி தோண்டிப் புதைத்து விடுவது. தமிழர்களே அக்கட்சியை நிராகரித்துவிட்டார்கள். சிங்கள மக்கள் அதனைத் தூக்கிச் சுமக்கவேண்டிய தேவை என்ன? ஆகவே புதைத்துவிடலாம் என்பதே அவர்களின் செய்தி. முன்னணியினரின் நம்பகத்தன்மையினைக் கேள்விகேட்கும் முடிவு ஜெயவர்த்தனவினாலேயே எடுக்கப்பட்டது. இந்த முடிவினை அவர் எடுப்பதற்கான காரணம் இந்தியாவும் சர்வதேசமும் முன்னணியினருடன் பேசுவதனூடாக தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வொன்றினைக் காணுமாறு அவர் தலைமையிலான அரசாங்கத்தின் மீது கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்து வந்திருந்தன. மேலும், தில்லியில் செய்துகொள்ளப்பட்ட இணக்கப்பாடான இணைப்பு "சி" இற்கு அமைவாகவே தீர்வு அமையவேண்டும் என்று முன்னணியினரும் தொடர்ச்சியாக் கோரிவந்திருந்தனர். ஆனால், இணைப்பு "சி" இன் அடிப்படையில் ஓரளவிற்கேனும் அதிகாரங்களைத் தமிழர்களுக்கு வழங்குவதை அரசாங்கம் சிறிதும் விரும்பவில்லை. ஆகவேதான், இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அரசாங்கம், முன்னணியினரைத் தமிழர்களே நிராகரித்து விட்டதனால், அவர்களுடன் தொடர்ந்து பேசுவதில் என்ன பயன் இருக்கப்போகிறது எனும் கேள்வியை முன்வைக்கத் தொடங்கியது. ஆனாலும், தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு யாருடன் அரசாங்கம் இனிமேல் பேசப்போகிறது எனும் கேள்வி தொடர்ந்தது. இதற்கான ஜெயவர்த்தனவின் பதில், "அரசாங்கம் யாருடனும் பேச வேண்டிய தேவையில்லை, எதற்காகப் பேசவேண்டும்?" என்பதாக இருந்தது. யாழ்ப்பாணத்தில் முன்னணியினரால் நடத்தப்பட்ட சத்தியாக்கிரக நிகழ்வு தோல்வியில் முடிவடைந்தமை அக்கட்சியினைத் தமிழர்கள் நிராகரித்துவிட்டார்கள் என்பதனையே காட்டியது. மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யாமல், தம்மை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கட்சியோடு பேச்சுக்களில் ஈடுபடுவதில பயன் ஏதும் இருக்கப்போவதில்லை என்பது உண்மைதான். ஆனால், சர்வதேச சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாத இலட்சியமான ஈழம் எனும் தனிநாட்டிற்காகப் போராடிவரும் ஆயுதம் ஏந்திய போராளிகளுடன் பேசவேண்டிய தேவை இருக்கிறது. ஆனாலும், சுய கெளரவம் கொண்ட எந்த அரசும் பயங்கரவாதிகளுடன் பேசாது என்பதும் திண்ணம். அப்படியானால் நடக்கப்போவது என்ன? தமிழர்களுடன் சமரசப் பேச்சுக்களில் ஈடுபடுங்கள் என்று சர்வதேசம் கொடுத்துவரும் அழுத்தங்கள் இனிமேல் செயல் இழக்கப்போகின்றன. குறிப்பாக இந்தியாவினால் இராஜதந்திர ரீதியில் இதுவரை கொடுக்கப்பட்ட அழுத்தங்களுக்கான அடிப்படை இனிமேல் இருக்கப்போவதில்லை. அரசியல் ரீதியிலான இணக்கப்பாடு ஒன்றிற்கான அழுத்தங்கள் இனிமேல் இல்லாது போகுமிடத்து அரசாங்கம் செய்யவேண்டியதெல்லாம் தமிழர்களின் கவலைகளைப் போக்குவது மட்டும்தான் என்கிற ரீதியில் அரசதரப்பிலிருந்து நியாயங்கள் பேசப்பட்டு வந்தன. அதனையே ஜெயவர்த்தனவும் செய்ய முடிவெடுத்தார். மேலும், பயங்கரவாதத்தினை அழிக்கிறேன் என்கிற போர்வையில் தமிழரின் விடுதலைக்கான ஆயுத ரீதியிலான போராட்டத்தையும் முற்றாக தன்னால் அழித்துவிடமுடியும் என்றும் அவர் உறுதிபூண்டார். பேச்சுவார்த்தையிலிருந்து போர்க்களத்திற்கு களம் மாற்றப்பட்டிருப்பதற்கான நியாயப்படுத்தல்கள் இவ்வாறு அமைந்திருந்தன. பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவந்த அரசியல் அமைப்பொன்றினை முற்றாக நிராகரித்திருக்கும் ஒரு சமூகத்துடன் எப்படி தொடர்ந்தும் பேச்சுக்களில் ஈடுபட முடியும்? அச்சமூகம் ஜனநாயக அரசியலைக் கைவிட்டு போராளிகளுக்கு தமது விசுவாசத்தை தற்போது காட்ட ஆரம்பித்திருக்கிறது. ஆனால், போராளிகளோ ஆயுதத்தின் மூலமாக மட்டுமே பேசலாம் என்கிற முடிவில் இருக்கிறார்கள். ஆகவே, அவர்களுடன் ஆயுத மூலமாகப் பேசுவதைத் தவிர அரசாங்கமான எமக்கும் வேறு தெரிவுகள் இல்லை என்பதே அந்த நியாயப்படுத்தல்களின் சாராம்சம். ஜெயவர்த்தனவின் போருக்கான நியாயப்படுத்தலை அனைத்துச் சிங்கள ஊடகங்களும் பிரதிபலித்ததோடு அதற்கான முழு ஆதரவினையும் வழங்கத் தொடங்கின. ஆனால், ஒற்றைச் சிங்கள ஊடகவியலாளரான லங்கா கார்டியனின் மேர்வின் டி சில்வா மட்டும் இதனால் வரப்போகும் ஆபத்தினை உணர்ந்திருந்தார். தனது செய்தி ஆய்வில், "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைப் புதைத்தது யார்?" என்கிற தலைப்பில் 1984 ஆம் ஆண்டு ஆவணி 1 ஆம் திகதி கட்டுரை ஒன்றை அவர் வரைந்தார். "இது ஒரு தூரநோக்கற்ற, முட்டாள்த்தனமான நடவடிக்கை" என்று அதனைக் குறிப்பிட்டார். முன்னணியினரின் அரசியலைப் புதைப்பதன் ஊடாக ஜெயாரும் அவரது ஆலோசகர்களும் வெறுமனே அக்கட்சியை மட்டும் புதைக்கவில்லை, மாறாக வன்முறையற்ற - ஜனநாயக வழி இணக்கப்பட்டிற்கான வழியையும் முற்றாகவே புதைத்துவிட்டார்கள் என்று அவர் எச்சரித்தார். "முன்னணியினரைத் தனிமைப்படுத்தி ஒதுக்கிவிடும் கைங்கரியம் முற்றுப்பெற்றுவிட்டது. ஆனால் யாரின் இலாபத்திற்காக இது செய்யப்பட்டது? யாரின் திட்டமிடலின் கீழ் இது செய்யப்பட்டது? சரித்திரமே இதற்கான பதிலை வழங்கட்டும்" என்று தனது செய்தி ஆய்வினை அவர் முடித்திருந்தார். சரித்திரம் அதற்கான பதிலை வழங்கியது. மேர்வின் எதிர்வுகூறியது போன்றே தமிழ்ப் போராளிகள் இதனால் இலாபமடைந்தார்கள். மிகச் சிறந்த அரசியல் அவதானியாகவும், இராணுவ திட்டமிடலாளராகவும் வளர்ந்துவிட்டிருந்த பிரபாகரன் தனது அமைப்பிற்காக ஜெயார் உருவாக்கித் தந்திருந்த இந்த அரிய சந்தர்ப்பத்தினை தனக்குச் சாதகமான முறையில் பயன்படுத்திக்கொண்டார். மேர்வின் டி சில்வாவின் எச்சரிக்கையினைச் சற்றேனும் சட்டைசெய்திராத ஜெயவர்த்தன, தனது தூரநோக்கற்ற அரசியல் முன்னெடுப்பில் முற்றாகக் காலெடுத்துவைத்தார். அவரைச் சுற்றி துதிபாடும் குழு ஒன்றிருந்தது. அதுலத் முதலி, ஆனந்த திஸ்ஸ தி அல்விஸ் மற்றும் காமிணி திஸாநாயக்க என்று அக்குழு அவர் செய்யும் விடயங்களைத் தொடர்ச்சியாக ஆதரித்து, முண்டுகொடுத்து வந்தது. அன்றிலிருந்து சர்வகட்சி மாநாடு என்பது தமிழரின் கவலைகளுக்கு தீர்வு வழங்குவோம் என்கிற போர்வையில், நடைமுறையில் இருந்துவந்த அரசியல் பொறிமுறைக்கான மெருகூட்டலினை மட்டுமே செய்யத் தொடங்கியது. ஜெயாரினால் அமைக்கப்பட்ட இரு குழுக்களும் வெறுமனே இந்த நோக்கத்திற்காக அவரால் பாவிக்கப்பட்டன.2 points
-
மாதங்களில் நான் மார்கழி. வீதியெங்கும் மாவிலைத் தோரணங்கள் வாசலெல்லாம் வண்ணக் கோலங்கள் பூசணிப் பூக்கள் மத்தியிலே சாணியில் பிள்ளையார் பூவினிலே மெல்லிய பனியுடன் மழைக்காலம் வகை வகையாய் பறவைகள் இசைக்கோலம் நிரை நிரையாய் எறும்புகள் ஊர்வலம் அவசர கதியில் மாந்தர் நகர்வலம் கோடை முடிந்தால் வந்திடும் மார்கழி வாடைக்காற்றும் வந்து வாட்டிடும் பீடை மாதமென்பார் பேதையர் சாடையினால் தை பிறக்கட்டுமென்பர் சோதிடர் பெருவிழாக்கள் குறைந்தாலும் திருவிழாக்கள் களை கட்டும் ஓதுவார் இறைபுகழ் ஓதிச் செல்ல சாதுக்கள் பஜனையில் கூடிச்செல்வர் அடிகளின் திருவெம்பாவை திக்கெட்டும் ஒலிக்க கோதையின் திருப்பாவை காற்றினில் தவழுவதால் மாதங்களில் நான் மார்கழி என்றே பகல்கின்றான் மாதவனும் .......! ஆக்கம் : சுவி ......!1 point
-
கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 6 ஜனவரி 2024, 08:36 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு சோழர் ஆட்சிக்குப் பிறகு மீண்டும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் ஏறு தழுவுதல் என்ற பெயரில் நடத்தப்பட்டது. தமிழகத்தின் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன், இந்தப் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டிகளை நடத்துவதற்காக தமிழகத்தில் இருந்து ஜல்லிக்கட்டு வீரர்கள் இலங்கைக்கு வருகை தந்தனர். சம்பூர் பொது விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போட்டியில், சுமார் 200 காளை மாடுகள் பங்கு பெற்றன. இந்தப் போட்டிகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழு முன்னெடுத்தது. இலங்கையில் இதற்கு முன்னர் ஜல்லிக்கட்டு நடந்துள்ளதா? இலங்கையை சோழர்கள் ஆட்சி செய்த காலத்தில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டுள்ளதாக வரலாற்று சான்றுகளை மேற்கோள் காட்டி ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார். அதைத் தொடர்ந்து, திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் இந்தப் போட்டி சுமார் 30 ஆண்டுக் காலமாக நடத்தப்பட்டு வந்துள்ளது. சம்பூர் கிராம பகுதிக்குள் நடத்தப்பட்டு வந்த இந்தப் போட்டி தொடர்பில், வெளி பகுதிகளுக்குப் போதிய தெளிவில்லாது இருந்தது. தமது கிராமத்திற்குள் காணப்படும் காளை மாடுகளைக் கொண்டு, இந்தப் போட்டிகளை சம்பூர் இளைஞர்கள் நடத்தி வந்துள்ளனர். எனினும், இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் சம்பூர் மக்கள் இடம்பெயர்ந்து, முகாம்களில் வாழ்ந்த காலத்தில் மாத்திரம் இந்தப் போட்டிகளை நடத்த முடியவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அதைத் தொடர்ந்து, தாம் மீள்குடியமர்த்தப்பட்டதன் பின்னர் மீண்டும் இந்தப் போட்டிகளைத் தாம் நடாத்த ஆரம்பித்ததாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். ''தைப் பொங்கலை முன்னிட்டு ஏறு தழுவுதல் போட்டிகளை நடத்துகின்றோம். இந்த நிகழ்வைக் குறைந்தது 30 ஆண்டுகளுக்கு மேல் நடத்திக்கொண்டு வருகிறோம். கடந்த ஐந்து ஆண்டுக் காலமாக இந்தப் போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. யுத்த காலத்தின்போது இந்தப் போட்டிகள் நடைபெறவில்லை. இடம்பெயர்ந்து வாழ்ந்ததன் காரணமாக வெளி ஊர்களில் இந்த நிகழ்வுகளைச் செய்யவில்லை. எனினும், இப்போது ஏற்பாட்டுக் குழு மற்றும் மாட்டு உரிமையாளர்களின் ஒத்துழைப்புடனும், சம்பூர் மக்களின் ஆதரவுடனும் மிகவும் சிறப்பாக நடத்தி வருகின்றோம்," என ஜல்லிகட்டு போட்டி ஏற்பாட்டு குழுவின் உறுப்பினரான குணராசா ராஜரூபன் தெரிவிக்கின்றார். இதுவரை காலம் நடத்தப்பட்ட போட்டிகளில் 50 மாடுகள் வரை பங்கு பெற்றுள்ளன. திருகோணமலையை மாவட்டத்திலுள்ள ஈச்சிலம்பற்று, சம்பூர், 6ஆம் காலனி உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தமது மாடுகளை போட்டிகளுக்காக அழைத்து வருகின்றனர். இதுவரை காலம் எதிர்நோக்கிய சவால்கள் குறித்தும் குணராசா ராஜரூபன் பிபிசி தமிழுக்கு தெளிவூட்டினார். ''இதுவரை காலமும் வீதியோரங்களிலேயே இந்தப் போட்டிகளை நடத்தி வந்தோம். மைதானங்கள் இருக்கவில்லை. இப்போது மைதானங்கள் இருக்கின்றன. முன்பு மாடுகளைத் தேடி நாங்கள் சென்றோம். இப்போது மாடுகள் எங்களைத் தேடி வருகின்றன. இந்த நிகழ்வைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் மக்கள் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள்," என அவர் கூறுகின்றார். படக்குறிப்பு, செல்வநாயகம் யஜீதரன் ஜல்லிக்கட்டு விளையாடும் நோக்கிலேயே காளை மாடுகளை வாங்கி வளர்த்து வரும், மாட்டின் உரிமையாளர் செல்வநாயகம் யஜீதரன், பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார். ''நாங்கள் இரண்டு மாடுகளை வளர்க்கின்றோம். சுட்டியன், மறையன் என்ற இரண்டு மாடுகளை வளர்த்து வருகின்றேன். இந்த மாடுகள் மூன்று ஆண்டுகளாக விளையாடிக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு மாடுகளும் இன்று வரை ஜெயித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இந்த ஆண்டும் நாங்கள் ஜெயிப்போம் என்றுதான் நினைக்கின்றோம். இந்த விளையாட்டை ஆரம்பிக்கும்போது குறைந்ததாட்ச அளவிலான மாடுகளை வைத்தே ஆரம்பித்தோம். அப்போது பொருளாதார ரீதியான பிரச்னைகள், சட்ட பிரச்னைகள் இருந்தன. ஆகையால் தொன்று தொட்டு வீதி வழியாகச் செய்து வந்தோம். இப்போது பிரதேச சபை மைதானத்தில் நடத்துகின்றோம். மூன்று ஆண்டுகளாக பிரச்னை இல்லை. சிறப்பாகச் செய்து வருகின்றோம்," என மாட்டின் உரிமையாளர் செல்வநாயகம் யஜீதரன் குறிப்பிடுகின்றார். தேசிய ரீதியாக இந்த விளையாட்டு முதல் முறையாக நடத்தப்படுகின்ற காரணத்தால், இந்தப் பாரம்பரிய நிகழ்வு சம்பூரில் நடத்தப்படுகின்றமை வெளி உலகத்திற்குத் தெரிய வரும் என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறுகின்றார். படக்குறிப்பு, கணபதிபிள்ளை செல்வராஜா ஜல்லிக்கட்டு போட்டிகளில் விளையாடுவதற்காகவே, இரண்டு காளை மாடுகளை வளர்த்து வருகின்றார் சம்பூர் பகுதியைச் சேர்ந்த கணபதிபிள்ளை செல்வராஜா. ''முப்பது ஆண்டுகளாக சிறிய அளவில் நாங்கள் கிராமபுறத்தில் செய்து வந்தோம். 2024 பொங்கலுக்கு கொஞ்சம் நன்றாக, பிரபல்யமாகச் செய்ய நாங்கள் விரும்பினோம். அதனால், போன வருடத்தில் நான் திட்டமிட்டேன். இரண்டு மாடுகளை வாங்கி வளர்க்க வேண்டும் என்று நினைத்தேன். எனது காளைகளைப் பிடிக்க விட்டு, அதை வீரர்களால் பிடிக்க முடியாத அளவிற்கு வளர்த்து எடுக்க வேண்டும் என்ற திட்டத்தில் இரண்டு காளைகளை வேண்டி வளர்த்துக்கொண்டிருக்கின்றேன். இந்த ஆண்டும் எனது காளை பங்கேற்கிறது. கட்டாயமாகப் பிடிக்க மாட்டார்கள் என்பது எனது தீர்மானம். வெற்றி எனது மாட்டிற்குத்தான்," என மாட்டின் உரிமையாளர் கணபதிபிள்ளை செல்வராஜா தெரிவிக்கின்றார். சம்பூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக வெளி கிராமங்களில் இருந்தும் பெருமளவான காளை மாடுகள் அழைத்து வரப்பட்டுள்ளன. படக்குறிப்பு, கிருபராசா இந்தப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வெளி கிராமத்தில் இருந்து காளை மாடுகளை அழைத்து வந்த மாட்டின் உரிமையாளர் கிருபராசா, பிபிசி தமிழுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். ''ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக மாடுகளைக் கொண்டு வந்திருக்கிறேன். 30 கி.மீ தூரம் நடக்க வைத்தே அழைத்து வந்தோம். ஒவ்வொரு தடவையும் கொண்டு வருவோம்," என ஈச்சலம்பற்று பகுதியைச் சேர்ந்த கிருபராசா குறிப்பிடுகின்றார். ''நாங்கள் 2013இல் இருந்து இந்த நிகழ்வில் பங்கு பெற்று வருகிறோம். எங்கட மாட்டைத்தான் ஜல்லிக்கட்டுக்கு கொண்டு செல்வோம். இந்த முறையும் கொண்டு செல்வோம். எனது மாடு நன்கு விளையாடும்," என மாட்டின் உரிமையாளர் சுசிலாதேசி தெரிவிக்கின்றார். படக்குறிப்பு, சுசிலாதேசி சம்பூரில் காளைகளைப் பிடிக்கும் வீரராக செல்வராஜா விஜயகுமார், தனது அனுபவங்களை பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டார். ''நான் தான் மாடுகளை பிடிப்பேன். மாடு பிடிக்கிறதாக இருந்தால், அது நான்தான். இந்த முறையும் இந்த மாட்டைப் பிடிப்பதற்கு நான் ரெடியாக இருக்கின்றேன். எனக்கு இப்போது 57 வயது, குறைந்தது நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்திருப்பேன். ஒவ்வொரு வருஷமும் காளையைப் பிடித்து வருகின்றோம்," என செல்வராஜா விஜயகுமார் தெரிவிக்கின்றார். படக்குறிப்பு, செல்வராஜா விஜயகுமார் ஆளுநரின் கருத்து இலங்கையில் சோழர்களின் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியை, மீண்டும் ஆரம்பித்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார். ''பொதுவாக தமிழ் கலாசாரத்தை உலகளவில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அதைப் பாதுகாக்க வேண்டும். அது எல்லா தமிழர்களின் கடமை. அப்படி இருக்கும்போது ஏறு தழுவுதல் போட்டி மாட்டுப் பொங்கல் அன்று தமிழகத்திற்கானது மாத்திரம் அல்ல. உலகில் யாராக இருந்தாலும் உணவு உட்கொண்டுதான் வாழ வேண்டும். அதற்கு மாடுகள் மிக முக்கியம். அதற்காகத்தான் மாட்டுப் பொங்கல் அன்று பொங்கல் வைத்து மாடுகளை வணங்குகிறோம். சோழர் காலத்தில் இலங்கையில் இந்தப் போட்டிகள் தொடர்ந்து நடந்துள்ளது. அதன் பின்னரான காலப் பகுதியில் இல்லாமல் போனது," என்று தெரிவித்தார். மேற்கொண்டு பேசிய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், "அந்தப் போட்டிகளைத் திரும்ப ஆரம்பிக்க வேண்டும் என்று பகுதி மக்கள் ஆசைப்பட்டார்கள். அதனால், சோழர்களின் காலப் பகுதியில் நடாத்தப்பட்ட இந்த ஏறு தழுவுதல் போட்டியை மீண்டும் ஆரம்பித்துள்ளோம். தமிழகத்தின் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலன்புரி சங்கம் மற்றும் இலங்கையின் சுற்றுலா அதிகார சபையுடன் இணைந்து இந்த நிகழ்வை நடத்துகிறோம். முதல் தடவையாக ஆரம்பித்துள்ளோம்," எனத் தெரிவிக்கின்றார். இந்த நிகழ்விற்கான காளை மாடுகளை எவ்வாறு தெரிவு செய்தீர்கள் என ஆளுநரிடம், பிபிசி தமிழ் கேள்வி எழுப்பியது. ''தமிழகத்தில்தான் ஏறு தழுவுதலுக்கான சிறந்த காளைகள் இருக்கிறது. தமிழர்கள் வாழும் பல நாடுகளில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. அந்த ஊரில் உள்ள காளைகளை வைத்து நடத்துகிறார்கள். அதே மாதிரிதான் இங்குள்ள காளை வைத்து நாங்கள் நடத்துகின்றோம்," என அவர் கூறினார். ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலன்புரி சங்கத்தின் தொழில்நுட்ப ரீதியான பயிற்சிகள் இலங்கை வீரர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்கள் போட்டிகளில் பங்குபெற செய்வதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார். https://www.bbc.com/tamil/articles/c9e2jy37p3yo1 point
-
இங்கிலாந்தின் கிரிக்கெட் கிரேக்கத்தின் கால்பந்து வேண்டும் என்றால் இந்தியாவின் ஜல்லிக்கட்டில் தவறில்லை.1 point
-
1 point
-
Nope,.❌ பட்டது போதும். இந்தியனுடைய எந்த வாடையும் வேண்டாம்.1 point
-
முதலில் இப்படிக்கூக்குரல் போடுபவர்கள் செய்யவேண்டியது தாயகத்தில் உள்ள தமிழர் அரசியலைப் பேசுபவர்களைச் சந்தித்து நீங்கள் ஒரு கோரிக்கையின் பின்னால் ஒன்றுதிரளுங்கள் என்பதே. மற்றப்படி புலம்பெயர் தேசங்களில் உள்ள புலிகளின் முன்னாள்கள் மற்றும் புலிவால்களைக் குறைகூறுபவர்கள் இந்த இமாலயா அறிக்கையைத் தெளாஅரித்து சிங்களத்திடம் முன்மொழிய முன்னர் தாங்கள் யார் என்பதை மக்களுக்கு முன்னால் சொன்னார்களா? எந்த மக்களுக்காக ஒரு அறிக்கை கையளிப்பு அரசியலைச் செய்கிறார்களோ அந்த மக்களது கருத்துக்களை உள்வாங்கியுள்ளார்களா? இவர்களும், இவர்களால் விமர்சிக்கப்படும் ஏனையோரைப்போலவேதானே முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். இப்பதானெ இவர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள் சிங்களவன் சரியானபடி நல்ல ஆப்பாக இரக்குவான் அதோட துண்டைக்காணோம் துணியக்காணோம் எண்டு போய்விடுவினம். ஆனால் அவர்கள் போட்டிருக்கும் கோட்டுச்சூட்டுகளைப் பத்திரமா வைத்திருப்பினம் சனம் பழையதை மறந்ததும் "பூஜி மலைப் பிரகடனம் " எனச்சொல்லிக்கொண்டு மறுக்காலும் வருவினம். நல்லூருக்கு முன்னால வந்து நிண்டு சுரேன் ச்ரேந்திரன் முப்பது வருடத்துக்கு முன்னம் நான் நல்லூர் திருவிழாவில் கடைலையுடன் பெண்களுக்குக் கடலைபோட்டதை நினைச்சுச் சந்தோசப்பட்டதை மாதிரி இன்னுமொருவரும் ஒரு சீ ஆர் கொப்பியில பிரகடனம் என எழுதிக்கொண்டு நல்லூர் வாசலில் வந்து "நினைவிடை தோய்வார்" அ ப்பவும் யாராவது அவர்களுக்கு வக்காலத்து வாங்குவினம்.1 point
-
பிரித்தானிய கடவுச்சீட்டு வைத்துள்ளவர்களும் இரண்டு காலில் தானே நடக்கின்றார்கள்? உங்களுக்கு பிரித்தானிய கடவுச்சீட்டுடன் சென்றபோது நோர்வே விமான நிலையத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லையோ? இந்தப்பெண்ணின் தந்தை மாஸ்டர் என காணப்பட்டது, பெயர் வரதராஜன் (வரதர்) என உள்ளது. நான் யாழில் பிரபலமான பொருளியல் ஆசிரியர் பெண்ணோ என நினைத்தேன். இது வேறோர் வரதர் பொண்ணு. தமிழ் பல் மருத்துவர் மீது துப்பாக்கி சூடு அதுவும் நோர்வேயில் இது அரிதான சம்பவம். அதற்காக நோர்வேயை இழுத்து வைத்து கும்மக்கூடாது. கடந்த வருடம் என நினைக்கின்றேன் தனது மனைவியை இன்னோர் ஆள் மூலம் சுட்டுக்கொன்ற தமிழருக்கு கனடா நீதிமன்றத்தில் தண்டனை கொடுக்கப்பட்டது என ஒரு செய்தி வாசித்த ஞாபகம். இதுவும் ஒரு உறவுநிலை சம்மந்தப்பட்ட மரணம் போலுள்ளது. தனிப்பட்டவர்களின் மனநல பிரச்சனைகளுக்கு அடைக்கலம் கொடுத்த நாட்டை குறை சொல்லலாமா?1 point
-
மனைவி : என்னங்க, வரும்போது மறக்காம காய்கறி வாங்கிட்டு வாங்க, அப்படியே சுகன்யா உங்களுக்கு ஹாய் சொல்ல சொல்றா... ( இது மனைவியின் மெசேஜ்) கணவன் : யாரு சுகன்யா? எனக்கு ஹாய் சொல்ல சொல்றது.. மனைவி : அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல, நீங்க மெஸேஜ் படிச்சிட்டீங்களான்னு கன்பார்ம் பண்றதுக்காகத்தான் அப்படி நான் போட்டு அனுப்பிச்சேன்... கணவன் : இல்ல, நான் இங்க சுகன்யா கூடத்தான் இருக்கேன், நீ எந்த சுகன்யாவை சொல்றேன்னு தெரியல, அதான் கேட்டேன்... மனைவி : இப்போ நீங்க எங்க இருக்கீங்க??? கணவன் : காய் கறி கடையில... மனைவி : அங்கேயே இருங்க 10 நிமிஷத்துல வர்றேன்... கணவன் : சரி சீக்கிரம் வா... 10 நிமிஷத்துல வர்றேன்னு சொன்ன மனைவி 5 நிமிஷத்துல காய்கறி கடைகிட்ட வந்து திரும்பி கணவனுக்கு கால் பண்றாங்க... மனைவி : எங்க இருக்கீங்க?? கணவன் : நீ எங்க இருக்க?? மனைவி : காய்கறி கடையில... நீங்களும் அவளும் எங்க இருக்கீங்க அத சொல்லுங்க மொதல்ல... கணவன் : நான் இன்னமும் ஆபீஸ் ல தான் இருக்கேன் செல்லம்.. நீதான் காய்கறி கடைக்கு வந்துட்டல்ல, அப்டியே உனக்கு என்ன வேணுமோ வாங்கிட்டு போயிடு... நான் இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு வீட்டுக்கு வர்றேன்னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டாப்ல... யாரு கிட்ட?1 point
-
1 point
-
இன்னும் சில நிமிடங்களில் நேரடியாக இந்த நிகழ்ச்சியைப் பார்க்க முடியும்.1 point
-
மிக்க நன்றி நுணா.🙏 தங்களுக்கும் புதுவருட வாழ்த்துகள்..🙂 மிக்க நன்றி பெருமாள்.🙏 யாவரும் நலம். தாங்கள் மற்றும் குடும்பத்தார் நலமா?🙂 மிக்க நன்றி ஈழப்ப்ரியன்.🙏 நலமா.? குடும்பத்தார் நலமா?🙂 மிக்க நன்றி, கு.சா.🙏 நலமா.? பரிமளம் அம்மணி நலமா?🙂1 point
-
இந்திராவின் வேண்டுகோள் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கான தனது பயணத்தை முடித்துக்கொண்டு வரும் வழியில் ஜெயவர்த்தன இந்தியாவுக்கும் சென்றார். அங்கு இந்திரா காந்தியை அவர் சந்தித்தார். ஜெயாருடன் பேசுகையில், இலங்கையில் இராணுவ ரீதியில் தலையிடும் நோக்கமோ, இலங்கையை ஆக்கிரமிக்கும் நோக்கமோ இந்தியாவுக்குச் சற்றேனும் கிடையாது என்று இந்திரா கூறினார். தனது நிலைப்பாட்டினை முன்னணியினரிடம் தான் தெளிவாகக் கூறிவிட்டதாக அவர் தெரிவித்தார் அதன்பின்னர் பேசிய இந்திரா, சர்வக்ட்சி மாநாட்டின் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வாக சுயாட்சிகொண்ட பிராந்தியங்களே அமையும் என்று இந்தியா எண்ணுவதாகவும் கூறினார். இதற்குப் பதிலளித்த ஜெயார் சுயாட்சி கொண்ட பிராந்தியங்கள் எனும் தீர்வினை வழங்க எதிர்க்கட்சித் தலைவரான சிறிமாவோ பண்டாரநாயக்க தடைபோட்டுவருவதாகக் கூறினார். அதன் பின்னர் பேசிய இந்திரா, அப்படியானால் மாகாணசபை முறையினை அமுல்ப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதற்குப் பதிலளித்த ஜெயார், சிங்கள மக்கள் தற்போது இருக்கும் மனோநிலையில் மாகாணசபை முறையினையும் தன்னால் ஏற்படுத்த முடியாது என்று மறுத்தார். "எமக்கான ஆதரவுத் தளத்தினை நாம் இழந்துவிடுவோம், நாம் எல்லோரையும் இழந்துவிடுவோம்" என்று அவர் கூறினார். தமிழ்நாட்டில் இயங்கிவரும் தமிழ்ப் போராளிகளின் பயிற்சிமுகாம்கள் குறித்த விடயங்களை இந்திராவிடம் காண்பித்த ஜெயவர்த்தன தமிழரின் பிரச்சினைக்கான தீர்வு விரைவில் கிடைக்கப்பெறுவதை தனது அரசாங்கம் விரும்புகிறது என்று இந்திரா கூறினார். இச்சந்தர்ப்பத்தினை எதிர்பார்த்திருந்த ஜெயார், "நான்கூட விரைவான தீர்வினையே விரும்புகிறேன். ஆனால் இலங்கையில் வன்முறையில் ஈடுபட்டு வருவோர் தீர்விற்கான முயற்சிகளுக்குத் தடங்கலாக இருக்கின்றனர். பயங்கரவாதிகள் தமிழ்நாட்டில் தங்கியிருந்து,பயிற்சி முகாம்களை அமைத்து, இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறித்து சிங்கள மக்கள் கோபம் கொண்டிருக்கின்றனர்" என்று பதிலளித்தார். தமிழ்நாட்டில் போராளிகளுக்கான பயிற்சிமுகாம்கள் இருக்கின்றன எனும் ஜெயாரின் கூற்றினை இந்திரா நிராகரித்தார். ஆனால், சுமார் முப்பதினாயிரம் இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழ்நாட்டில் தங்கியிருப்பதாகவும், அவர்களைப் பராமரிக்கவே முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த ஜெயார், "உங்களுக்கு வேண்டுமென்றால் இது தெரியாமல் இருக்கலாம். ஆனால் எனக்கோ இம்முகாம்கள் குறித்து அனைத்து விடயங்களும் தெரியும்" என்று கூறியதுடன் தன்னுடன் கொண்டுவந்திருந்த, முகாம்கள் அமைந்திருந்த இடங்களின் வரைபடங்கள், அவற்றின் பெயர்கள், ஒவ்வொரு போராளி அமைப்பிற்கும் பயிற்சி வழங்கப்பட்ட முகாம்களின் விபரங்கள், ஒவ்வொரு முகாமிலும் பயிற்றப்பட்டு வந்த போராளிகளின் எண்ணிக்கை, பயிற்சி முகாம்களில் பயிற்றுவாளர்களாகச் செயற்பட்டு வந்த இந்திய இராணுவ அதிகாரிகளின் பெயர்கள், தரங்கள் என்று அனைத்து விடயங்களையும் ஆவண வடிவில் இந்திராவிடம் கையளித்தார். ஜெயார் தன்னிடம் காண்பித்த பயிற்சிமுகாம்கள் குறித்த விபரங்களைக் கண்ணுற்றபோது ஒருகணம் அதிர்ந்துபோன இந்திரா ஒருவாறு சமாளித்துக்கொண்டே அவ்விடயங்கள் குறித்து விசாரிப்பதாகப் பதிலளித்தார். ஜெயார் தன்னிடம் காண்பித்த விடயங்கள் சரியானவைதான் என்பது இந்திராவுக்குத் தெரியும். அவரது ஆச்சரியமெல்லாம் இவற்றினை ஜெயாருக்கு வழங்கியது யாரென்பதுதான். போராளி அமைப்புகளுக்குள் ஊடுருவிய லலித்தும், விலைபோன மலையாளி அதிகாரியும் தேசியப் பந்தோபஸ்த்து அமைச்சராகப் பதவியேற்றதும் லலித் அதுலத் முதலி செய்த முக்கியமான விடயங்களில் ஒன்று தமிழ்ப் போராளி அமைப்புகளுக்குள்ளும், இந்திய உளவுத்துறையான ரோவிற்குள்ளும் தனக்கான உளவாளிகளை உட்புகுத்திக்கொண்டதுதான். சென்னையில் செயற்பட்டுவந்த ரோவின் அலுவலகத்திற்கு மலையாளி அதிகாரியான உன்னிகிருஷ்ணன் பொறுப்பாகவிருந்தார். சி.ஐ.ஏ இன் உதவியுடன் லலித் அதுலத் முதலி உன்னிகிருஷ்ணனை விலைக்கு வாங்கியிருந்தார். இவரே தமிழ்நாட்டில் இயங்கிவந்த போராளிகளுக்கான பயிற்சிமுகாம்களின் அமைவிடங்கள் , வரைபடங்கள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் இலங்கையின் பொலீஸ் புலநாய்வுத்துறைக்கு வழங்கியிருந்தார். இவற்றினை அடிப்படையாக வைத்தே உதவிப் பொலீஸ் அத்தியட்சகரான சிறில் ஹேரத் ஜெயவர்த்தனவுக்கான ஆவணங்களை தொகுத்து வழங்கினார். இவரது அறிக்கையில் போராளிகள் பயிற்சிகளின்போது பாவித்த ஆயுதங்களின் வகைகள் முதல் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்தியாவிற்கு விஜயம் செய்த ஜெயாருடன் அதுலத் முதலியும் சென்றிருந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசும்போது இவர்கள் இருவரும் கடுமையான தொனியைப் பாவித்தனர். பத்திரிக்கையாளர் சந்திப்புக்களின் போது தமிழர்களின் பிரச்சினை என்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று உறுதியாகத் தெரிவித்தனர். அங்கிருப்பது பயங்கரவாதப் பிரச்சினை மட்டுமே என்று பிடிவாதமாக நின்றனர். மேலும், அரசியல் ரீதியிலான தீர்வொன்றிற்கு இராணுவ ரீதியிலான வெற்றி தவிர்க்கமுடியாத அங்கமாகும் என்றும் வாதாடினர். "பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை அதிகளவில் கட்டுப்படுத்தி அழித்துவிடுவதூடாக அரசியல்த் தீர்விற்கான சந்தர்ப்பத்தினை அதிகரித்துக்கொள்ள முடியும்" என்று லலித் அதுலத் முதலி பத்திரிக்கையாளர்களிடம் கூறினார். இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஆதரித்து வந்த இந்துப் பத்திரிக்கை, இலங்கையில் நடக்கும் பிரச்சினைகளால் 30,000 தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக தஞ்சம் கோரி வந்துள்ள நிலையில் இதனை இலங்கையின் உள்வீட்டு விவகாரம் என்று கருதமுடியாது என்று வாதாடியது. மேலும், இலங்கையில் இருப்பது பயங்கரவாதப் பிரச்சினையல்ல என்றும் அது கூறியது. "தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தீவிரம் அதிகரித்துவருவதனாலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்றே பார்க்கபடுதல் அவசியம்" என்று அது மேலும் கூறியது.1 point
-
அட ....tin tin ஐயும் இதுக்குள்ள கொண்டுவந்து விட்டது நல்லா இருக்கு.......நாய்க்குட்டிக்கு மாற்றாக யானைக்குட்டி ......சூப்பர்.......! 😂1 point
-
இளையராஜா திறமையானவர் மற்றும் உளவியலாக சில இடையூறினை சந்திப்பவராக இருப்பார் எனகருதுகிறேன், இளையராஜாவுக்கு கர்வம் இருப்பதாக உணரவில்லை, ஆனால் அவர் சிறுவயதில் பாதிக்கப்பட்ட ஒரு பிற்போக்கு சமூகத்தின் பாரபட்சத்தினால் ஏற்பட்ட கோபத்தினால் தன்னிலை மீறுகிறார், ஒரு சமூக போரளியின் நியாயமான கோபம் இலக்கின்றி காட்டாறு போல போவதாக உணர்கிறேன். மற்றது கர்வம் என்பது ஒருவித பெருமிதம் என கருதுகிறேன் சிலர் அதனை சில்லறைதனமாக நடப்பதனை கர்வம் என தவறாக கருதுகிறார்களோ என தோன்றுகிறது. எனக்கு கர்வம் இல்லை என்ற கர்வம் உண்டு😁.1 point
-
1 point
-
எந்தவொரு செயலுக்கும் ஆதரவு,.எதிர்ப்பு என இரண்டும் இருக்கும் ஆதரவை விட எதிர்ப்பு தான் எடுத்த செயலை செய்ய வலுவையும் விடமுயற்ச்சியையும். சரி பிழையை சீர்தூக்கிப் பார்க்கும் சந்தர்ப்பங்களையும். வழங்கி விரைவில் செய்து முடிக்க வைக்கிறது . ...ஆகவே எதிர்ப்பவர்களை பிழை கூற முடியாது அறிக்கை விடமால். செய்து காட்டுங்கள்1 point
-
இந்தக் கட்டுரையை வாசிக்கும் துரோகி பட்டம் வழங்குவோர் சங்க நிர்வாகிகளின் தூக்கம் தொலைந்தது. 😁 சங்கத் தலைவர் பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் காட்டித் தப்பிவிடுவார். 🤣 நிர்வாக உறுப்பினர்களின் நிலைதான் பரிதாபகரமானது. 🤣1 point
-
இந்த டிபெண்டெர் வாகனம் பிரித்தானிய தயாரிப்பாக இருக்க வேண்டும். எப்படியோ இலவசமாக கிடைத்தால் இலங்கை எல்லாவற்றையும் எடுத்து கொள்ளும்.1 point
-
வட் வரி தவிர்க்க முடியாதுதான். ஆனால் அரசு ஒரேயடியாக எல்லாவற்றையும் செய்ய நினைப்பதுதான் மக்களின் ஆத்திரத்துக்கு முக்கிய காரணம். இம்முறை தேர்தலில் அதன் வெளிபாடடை காணலாம். இனிமேல் எல்லோருமே TIN இலக்கம் எடுத்தே ஆக வேண்டிய நிலைமை. இல்லாவிட்ட்தால் எந்த ஒரு அரச செயட்பாடடையும் செய்யமுடியாது. உதாரணத்துக்கு வாகன லைசென்ஸை புதுப்பிக்க முடியாது. எனவே இனி ஒவ்வொருவரும் பதிவு செய்து வரி காட்டியே ஆக வேண்டும். வரி ஏய்ப்பாளர்கள் இனி தப்புவது கஷடம்தான்.1 point
-
1 point
-
இந்தியாவில் இப்போது எல்லாமே மின்சார ரயிலாக மாறி விட்ட்து. எனவே இந்த பக்கம் இலவசமாக கொடுப்பதாக கூறி தள்ளி விட்டுது. இனி என்ன நம்மட ஆட்கள் இடைவெளியில் நிண்டு ரயிலை தள்ள வேண்டியதுதான். இலவசம் எண்டால் இலங்கை எதையும் எடுக்கும் எண்டு அவர்களுக்கு நாளாகவே தெரியும். இந்தியாவில் கழிவுகளையும் சுத்தப்படுத்தின மாதிரிஇருக்கும் , இலங்கையை சந்தோசப்படுத்தின மாதிரியும் இருக்கும்.1 point
-
1 point
-
1 point
-
கொஞ்சம் குளிர் தொடங்கிட்டு ஆனாலும் பனி தான் இன்னும் சரியாக கொட்டவில்லை.அனேகமாக சித்திரைக்கு பின்னரும் வைத்து கொட்டித் தள்ளும் என்று எதிர் பார்க்கலாம்.1 point
-
1 point
-
ரணில் யாழுக்கு போகும் போது 5,6 பேர் ஆர்ப்பாட்டம் செய்தவை ...அவைக்கு தாங்கள் என்னத்திற்கு ஆர்ப்பாட்டம் செய்யிறம் என்டே தெரியவில்லை🙂 ...அதில் வேலன் சுவாமி என்பவர் மாட்டை கொல்வதை தடை செய் என்று கத்தினார்😍 ...அவருக்கு பக்கத்தில் இருந்து கத்தினவர்களே மாடு சாப்பிடுபவர்களாய்த் தான் இருப்பார்கள்🤣 ...ரணிலை பார்க்கிற ஆசையில் முன்னுக்கு நின்ட பேருந்தை எடுக்க சொல்லியும் கத்தினார்கள்🤩1 point
-
1 point
-
நீண்ட மாதங்களுக்குப் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி..🙏 இந்தக் காணொளியை காண நேரிட்டது..😌1 point
-
ஐயா இளையராஜா .. உங்கள் பாடல்களை கேட்கும் எனக்கே கொஞ்சம் கர்வம் வருகிறது. ஆகவே உங்கள் பன்முக திறமைக்கு நீங்கள் எவ்வளவு கர்வமாக இருந்தாலும் உங்கள் ரசிகர்களுக்கு கவலை இல்லை. ஏனெனில் நாங்கள் உங்களிடம் இருந்து ரசிப்பது உங்கள் மெட்டமைக்கும், இசை அமைக்கும் விந்தையை, அது காலங்கள் கடந்து எங்கள் மனதுக்குள் நீங்கா இடம் பெரும் விந்தையை!!!1 point
-
எண்ணை போத்தலில் தமிழும், ஆங்கிலமும் பெரிதாக இருக்க... சிங்களம் சிறிதாக இருப்பதை, பிக்குமார் கண்டால்... ஆயுர்வேத ஆஸ்பத்திரியை அத்திவாரத்துடன் கிண்டி எறிந்து விடுவார்களே. 😂1 point
-
இது வீட்டம்மாவுக்கு தெரியுமா ?😃1 point
-
பேச்சுக்கு வேணுமெனில் சொல்லலாம்👍1 point
-
சில காலமாக எனது வலது கை மணிக்கட்டில் ஒரு நோ இருக்கிறது. முதுமை ஒரு காரணமா? அல்லது வேறு ஏதாவதாக இருக்கலாமா? என்று எனது குடும்ப வைத்தியரை அணுகிய போது, என்னிடம் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “இளமை விடை பெறும் போது உடலில் அங்கங்கே ஏதாவது பிரச்சனைகள் வருவது இயற்கை. நீங்கள் இரத்த அழுத்தத்துக்கு உட்கொள்ளும் வில்லையின் எதிர்தாக்குதலாகவும் இருக்கலாம். கணினியைப் பாவிக்கும் போது நீங்கள் உங்கள் கையை வைத்திருக்கும் நிலையால் கூட மணிக்கட்டுப் பிரச்சனை வரலாம். கணினியில் படம் வரைவதை நிறுத்துங்கள். இல்லாவிட்டால் குறைத்துக் கொள்ளுங்கள். அதிகளவு பாரமான வேலைகளையும் தவிருங்கள்” என பல ஆலோசனைகளைத் தந்திருந்தார். இப்பொழுது சிறீலங்காப் பயணத்தின் போது 23 கிலோ சூட்கேசை ஏற்றி இறக்கியதில் மணிக்கட்டில் மறைந்திருந்த நோ மீண்டும் எட்டிப் பார்த்தது கூடவே சிறு வீக்கமும் வந்து விட்டது. அங்கே இருக்கும் போது கூடுதலான வரையில் வலது கையைப் பாவிப்பதைத் தவிர்க்கத் தொடங்கினேன். இதை அவதானித்த மணியன், “உன் வலது கைக்கு என்ன நடந்தது?” என்று கேட்டான். விடயத்தைச் சொன்னேன். “காரில் ஏறு” என்றான். ஏறிக் கொண்டேன். எங்கே போகிறோம் என்று மணியன் சொல்லவில்லை. இரவு நேரம். மழை பெய்து கொண்டிருந்தது. “ முந்தி இப்பிடி இல்லை. இப்பத்தான். இந்த நேரத்திலை வழக்கமா வடக்கு கிழக்கிலைதான் மழை இருக்கும். எல்லாம் இப்ப இஞ்சை மாறிப் போச்சு” என்று மணியன் சலித்துக் கொண்டான். “இங்கை மட்டுமில்லை. உலகம் முழுக்க இப்படித்தான் நிலமை” என்று அவனுக்குப் பதில் தந்தேன். கார், காலி வீதியில் ஒரு சிறிய தனியார் வைத்தியசாலைக்கு முன்னால் நின்றது. வைத்தியசாலையில் கார் நிறுத்த கட்டணம் வாங்கிக் கொண்டார்கள். “மச்சான். நல்ல ஒத்தப்பேடி. களுபோவில ஹொஸ்பிற்றலிலை வேலை செய்கிறார். அங்கை வேலை முடிஞ்சு இரவு எட்டு எட்டரைக்குத்தான் இஞ்சை வருவார். உன்ரை கையை ஒருக்கால் அவருக்கு காட்டு” மணியனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவன் பின்னால் போனேன். நம்பர் எடுத்துக் கொண்டு வந்து கையில் தந்தான். “காசு குடுக்க வேணுமெல்லோ?” என்று மணியனைக் கேட்டதற்கு, “அதை நான் கட்டிட்டேன்” என்றான். நேரம் போய்க் கொண்டிருந்தது. டொக்டர் வரவேயில்லை. நான் சலிப்படைவது மணியனுக்குப் புரிந்து விட்டது. “இன்னும் ஒரு பிரைவேட் ஹொஸ்பிற்றல் அதுவும் வெள்ளவத்தையிலை பக்கத்திலைதான் இருக்கு, டொக்டர் அங்கையும் ஆக்களைப் பாக்கிறவர். வருவார். பொறுமையாக இரு” என்று சொன்னான். பத்து மணியளவில் டொக்டர் வந்தார். கடைசி ஆளாக அவர் அறைக்கு நான் போனேன். மணியனும் கூட வந்தான். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “ப்ளட் ரெஸ்ற் செய்யோணும். பெயின் கில்லரும் கிறீமும் எழுதித் தாறன். மாறாட்டில் வாங்கோ” டொக்டரின் அறிவுரையை வேதவாக்கா மணியன் எடுத்துக் கொண்டு இரத்த பரிசோதனைக்கு என்னை அழைத்துச் சென்றான். அங்கும் கட்டணம் செலுத்த வேண்டும். அதையும் மணியனே கட்டினான். வீட்டுக்குத் திரும்பும் போது மணியனைக் கேட்டேன், “நான்தானே கடைசி ஆள் எதுக்குடா நம்பர் எடுத்தாய்?” என்று. “பழக்கதோசம் “ என்று பதில் வந்தது. அடுத்தநாள் முதல் வேலையாக வைத்தியசாலைக்குப் போய் எனது இரத்தப் பரிசோதனை முடிவையும் பார்மஸியில் டொக்டர் எழுதிய மருந்தையும் மணியன் எடுத்து வந்தான். “இரத்தத்தில் பிரச்சினை இல்லை” என்று சொன்னான். அன்று மாலை அவனது நண்பர் ஒருவர் மணியனைக் காண வந்தார். வந்தவரது இடது கையில் கட்டுப்போட்டிருந்தது. வெள்ளைக் கொடியை கையில் ஏந்திக் காட்டுவது போல கையை தூக்கி வைத்துக் கொண்டிருந்தார். “கையிலை என்ன பிரச்சனை?" என்று அவரை மணியன் கேட்க, “கன காலமா ஊருக்குப் போகேல்லை. புத்தூரிலை இருந்த காணியை கொஞ்சம் துப்பரவாக்கி நல்ல விலைக்குக் குடுக்கலாம் எண்டு போனால், காணிக்குள்ளை இருந்த பள்ளத்திலை விழுந்து கையிலை எலும்பு முறிஞ்சு போச்சு. அப்பிடியே எல்லாத்தையும் போட்டிட்டு வந்திட்டன்” என்று அவர் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தார். அவர் தன் கதையை விரிவாக்கு முன்னரே மணியன் என் கையின் கதையைச் சொல்லிவிட்டான். “நான் ஒத்தப்பேடியிட்டை எல்லாம் போகேல்லை. இஞ்சை வெள்ளவத்தை மாக்கெற்றுக்குப் பக்கத்திலே (Manning place) மனிங் பிளேஸிலே ஒரு ஆயுர்வேத கவர்ன்மென்ற் ஹொஸ்பிற்றல் இருக்கு. ஒண்டவிட்ட ஒருநாள் போகோணும். எண்ணை பூசி மசாஜ் செய்து பத்தும் போட்டு விடுவினம். இப்ப கையிலை நல்ல முன்னேற்றம்” அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மணியன் என்னைப் பார்த்தான். நாளை நான் ஆயுர்வேத ஹொஸ்பிற்றலுக்குப் போக வேண்டிய வேலை இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். “காலமை ஏழு மணிக்குப் போய் நம்பர் எடுத்திட்டால் வெள்ளெணவா வேலை முடிஞ்சிடும். எட்டரைக்கு டொக்டேர்ஸ் வந்திடுவினம். இரண்டு பேர்தான் டொக்டேர்ஸ். அதிலை லேடி டொக்டர் தமிழ். நானும் நாளைக்குப் பத்துப் போடணும். நீங்கள் நாளைக்கு ஏழு மணிக்கு வாங்கோ. நான் அங்கை நிப்பன். உங்களுக்கு எண்ணைதான் தருவினம் எண்டு நினைக்கிறன். எதுக்கும் வரக்கை ஒரு போத்தலையும் கொண்டு வாங்கோ. பத்துப் போடுறதெண்டால் பஞ்சும், பன்டேஜ்ஜும் பார்மஸியிலை வேண்டிக் குடுக்க வேணும். ஏழு மணிக்கு பார்மஸி திறக்க மாட்டாங்கள். எதுக்கும் நீங்கள் வாங்கோவன்” என்று சொல்லிவிட்டு அவர் போய்விட்டார். காலை 6:45க்கே ஆயுர்வேத வைத்தியசாலைக்குப் போய் விட்டேன். அங்கே இருந்த கதிரைகளில் எல்லாம் தமிழ், சிங்களம் கலந்த (என்னைப் போன்ற) முதியவர்கள் இருந்தார்கள். இருப்பதற்கு இடம் இல்லாததால் மணியனின் நண்பனுக்காக காத்திருந்தேன். 7:30க்கு வந்து சேர்ந்தார். “வெள்ளனவே வந்திட்டீங்கள் போல. ஏன், இருக்கிறதுக்கு இடம் கிடைக்கேல்லையே? கடைசி ஆள் இருக்கிற கதிரைக்குப் பக்கத்திலை நிண்டிருக்கலாமே?” என்று தன் ஆதங்கத்தைச் சொன்னார். 7:45க்கு ஊழியர்கள் வரத் தொடங்கினார்கள். கதவுகளைத் திறந்த பின்னர் இருக்கை இல்லாமல் இருந்தவர்களுக்கு, உள்ளே இருந்து கதிரைகளை எடுத்து வந்து போட்டு அமரச் சொன்னார்கள். கூட்டிப் பெருக்கி, புத்தரை வணங்கிய பின்னர் இலக்கங்களைத் தந்தார்கள். வரிசையில் நின்று அங்கிருந்த யன்னலூடாக இலக்கத்தைக் கொடுத்து மற்றவர்கள் போல் நானும் பதிவு செய்து கொண்டேன். தமிழ் ‘லேடி டொக்டர்’ முகக் கவசம் போட்டிருந்ததார். “உங்களுக்குப் பத்து போட்டால் நல்லது. அது நீங்கள் இங்கே இருக்கிறவரைதான் சாத்தியம். எண்ணை தரலாம். இலவசம் என்றபடியால் ஒரு அவுன்ஸுக்கு மேலே ஹொஸ்பிற்றலிலை தரமாட்டினம். வெள்ளவத்தை மாக்கெற்றில் இருந்து தெஹிவலப் பக்கமாகப் போறவழியிலே பஸ்ஸல் லேனுக்கு முன்னுக்கு உள்ள பில்டிங்கிலே முதலாவது மாடியிலே ஒரு ஆயுர்வேதக் கடை இருக்கு. யேர்மனிக்கு நீங்கள் எண்ணை கொண்டு போறதெண்டால் தேவையானதை அங்கை வாங்கலாம். இரண்டு வகையான எண்ணை எழுதித்தாறன். ஒண்டு வீக்கத்துக்கும் குணமாகிறதுக்கும். மற்றது நோ இருந்தால் பூசுறதுக்கு. நீங்கள் இரண்டையும் சேர்த்தும் பாவிக்கலாம்” என்று அன்போடு சொன்னார். வைத்தியாசாலையில் தந்த ஒரு அவுன்ஸ் எண்ணையுடன் வைத்தியர் சொன்ன ஆயுர்வேத மருந்துக்கடையிலும் இருக்கட்டுமே என்று சில அவுன்ஸ் எண்ணெய் வாங்கிக் கொண்டேன். விலை மலிவாக இருந்தது. ஒரு அவுன்ஸ் எண்ணெய்க்கு ரூபா 200/- தான் கொடுக்க வேண்டி இருந்தது. “இப்பிடி ஒரு கடை இருக்குது, எண்ணை வாங்கலாம் எண்டது எனக்குத் தெரியாமல் போட்டுது” என்று மணியனின் நண்பர் சொன்னார். அவர் சொன்னதிலும் உண்மை இருந்தது. அந்த ஆயுர்வேத மருந்துக் கடை ஒரு பழைய கட்டிடத்தின் மேல்மாடியில் மறைவாக இருந்தது. மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகள் கட்டிடத்தின் வெளிப் பக்கத்தில் இல்லாததும், கடை இருப்பதற்கான அறிவிப்புப் பலகை வெளியில் தெரியாமல் இருந்ததும் அப்படி ஒரு ஆயுர்வேத மருந்துக் கடை இருப்பது பலருக்குத் தெரிய வாய்ப்பில்லைத்தான். நான் மறந்தாலும், “கைக்கு எண்ணை பூசினியோ?” என்று மணியன் நினைவு படுத்திக் கொண்டே இருந்தான். கொழும்பில் இருக்கும் போது கைக்கு எண்ணை பூசிக் கொண்டேன். வீக்கம் குறைந்து மணிக்கட்டில் நோ போய்விட்டது. கைக்கு அதிக அழுத்தங்கள் கொடுக்காததாலா? பாரங்கள் அதிகம் தூக்காததாலா? அல்லது எண்ணை பூசிக் கொண்டதாலா? என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் எண்ணையை யேர்மனிக்கு கொண்டு போவதற்காக சூட்கேசில் பத்திரமாக எடுத்த வைத்துக் கொண்டேன்1 point
-
1 point