Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    33600
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    2954
    Posts
  3. மோகன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    11
    Points
    9997
    Posts
  4. putthan

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    14676
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/14/24 in all areas

  1. “ கப்பு முக்கியம் “ “வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருக்கும் தாழமுக்கம் ரெண்டு நாளில் வலுப்பெற்று கொட்டும் மழையோடு இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்” எண்டு வானிலை அறிக்கையை radio வில சொல்லிக் கொண்டிருந்திச்சினம். இதைக் கேட்ட மனிசி “சூறாவளி வந்தாலும் வரும் கொஞ்ச நாளைக்கு வள்ளம் போகாது இண்டைக்காவது மீன் வாங்கித்தரலாம் தானே“ எண்டு கேக்க, சரியெண்டு வெளிக்கிட்டன். எங்க மீன் வாங்கினாலும் பாசையூர் மீன் மாதிரி ருசி இருக்காது. அதோட சந்தைக்குப் போய் விடுப்புப் பாத்த படி, வள்ளம் வாறதை, மீன் இறக்கிறதை , அதைக் கூறிறதை எல்லாம் ரசிச்ச படி, wholesale விலை வாசியை தெரிஞ்சு கொண்டு அப்பிடியே சந்தையில சில்லறை வியாபாரத்தில மீனை வாங்கி வெட்டிக்கொண்டும் வரலாம். மாரிகாலத்தில பிடிக்கிற மீன் ருசி கூட , அதிலேம் மழைவெள்ளம் கடலில கலக்கிற நேரம் வாற குதிப்பு மீன் தனி taste. கைபிடீல மூண்டு shopping bag உள்ள வைச்சு கொழுவின படி இருந்த plastic கூடையோட சைக்கிளை உழக்கினன். மெல்லப் போய் அந்தோனியாரைத் தாண்டி கடற்கரைப் பக்கம் திரும்பின உடனேயே ஒரு காலநிலை மாற்றம் வந்த மாதிரி இருந்திச்சுது. கடற்கரை ரோட்டில திரும்பக் கடல் எங்க முடியுது மேகம் எங்க தொடங்குது எண்டு விளிம்பு தெரியாம இருந்த கடலுக்குள்ள மழை பெய்யிறது மட்டும் தெரிஞ்சுது. மழை பெய்யிறதை ரசிக்கிற மாதிரி மழை இந்தா பெய்யப் போறன் எண்டு மேகம் மூடிக்கொண்டு வரேக்கேம் ர(ரு)சிக்கலாம் . காலமை கருமையாகி காகம் பறக்கிறது தெரியாமல் கொக்கு மட்டும் வெள்ளை வெளேர் எண்டு தெரியிற மேகம். இன்னும் கொஞ்சம் உழக்க அடிக்கிற குளிரில காது மட்டும் சூடாக, முகத்தில படுற குளிர் காத்து காதில படேக்க சுள்ளெண்டு குத்திற இன்பமான வேதனை, முயற்சி செய்தும் நிறுத்தேலாமல் கிடுகிடுக்கிற பல்லு , இழுத்த மூச்சு சுவாசப்பையோட நிக்க அடிவயித்தால காலுக்குள்ள இறங்கி காலை மட்டும் நடுங்கப் பண்ணிற குளிர், ஒடிற எங்களை விட்டிக் கலைச்சுக்கொண்டு சடசடவெண்டு சத்தத்தோட கலைச்சுக்கொண்டு வாற மழை எண்டு ரசிச்சுக்கொண்டு போக , அதை ரசிக்கவிடாம ஒண்டுரெண்டு மழைத்துளி தலையில விழ இன்னும் கொஞ்சம் இறுக்கி உழக்கினன். திரும்பிப் பாக்க கடலுக்க மட்டும் பெஞ்ச கன மழை அலையோட கரைப்பக்கம் வாறது தெரிஞ்சுது. காத்தோட மழை பெய்யிறதையும் அந்த இருட்டுக்குள்ள இருந்து வாற அலையில வள்ளங்கள் எழும்பி விழுந்து வாறதைப்பாக்க, “மெழுகுவர்த்தி ஏத்தி , மண்டியிட்டு “ மாதாவே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மகனை நீ தான் இந்தப் புயலில இருந்து காப்பாற்ற வேண்டும் என்று தாய் மன்றாடினாள் “ எண்டு ஐஞ்சாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில வாசிச்ச ஞாபகம் வந்திச்சுது. கடற்கரை ரோட்டால அப்பிடியே போக , MGR சிலைக்கு போன கிழமை நடந்த விழாவுக்குப் போட்ட மாலை காத்துக்குப் பறந்து கொண்டிருந்திச்சுது. முன்னால இருக்கிற தேத்தண்ணிக்கடையில “ தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான் “ எண்டு situationக்கு ஏத்ததாய் TMS பாடினார். சந்தையடியில மழைக்குளிர் எண்டால் என்ன எண்டு கேக்கிற சமூகம் , மற்றச் சனத்தின்டை சாப்பாட்டுக்காய் ஓடிஓடி வேலை செய்து கொண்டிருந்தது. இந்த மழைக்கேம் நாலு பேர் காத்துப் போன பந்தைப் போட்டு அடிச்சுக்கொண்டு இருந்தாங்கள். பேருக்கு மட்டும் அது கடற்கரை ஆனாலும் முள்ளோ கல்லோ குத்தாம மண்ணில நடக்கவும் ஏலாது , முக்கிக் கடல்ல குளிக்கவும் ஏலாது . ஆனாலும் அலைக்கு கூட அரிக்காத கடற்கரை கல்லெல்லாம் கால் மிதிப்பில கரையிற அளவுக்கு அங்க விளயாட்டு நடக்கும் . இருட்டுக்க கடல்ல இருக்கிற மீனே தெரியிறவன் கண்ணுக்கு பந்து எப்பவும் தெரியும் எண்டதால விளையாட்டுக்கு நேரம் காலம் கிடையாது. என்னதான் கிரிக்கட் நல்ல விளையாட்டா இருந்தாலும் அது நெச்ச உடன எல்லா இடத்திலேம் விளயாடேலாது. அதோட Cricketஐப் பற்றி அதை விளயாடினவங்கள் மட்டும் தான் கதைப்பாங்கள். ஆனால் football அப்பிடியில்லை விளையாடின ஆக்களிலும் பாக்க விளையாட்டைப் பாக்கிற ஆக்கள் கதைக்கிறது கூட . யாழ்ப்பாணத்தில கூடுதலா விளையாடிறதும் விரும்பிப் பாக்கிறதும் football தான். விளையாட்டுத் தொடங்க முதல் இருந்து முடிஞ்சு வீட்டை போனாப்பிறகு கூட பரபரப்பா பாக்கிறதும் கதைக்கிறதும் football தான். இந்த ஊரில வீட்டில என்ன தான் வசதி் இல்லாட்டியும் ஒவ்வொரு வீட்டிலேம் ஒரு Maradona, Baggio, Ronaldo கனவோட ஒருத்தனாவது இருப்பாங்கள் . சாப்பாடே அவங்களுக்கு பந்தடிக்கிறது தான். நாவாந்துறையில இருந்து பருத்தித்துறை வரை இது தான் நிலமை . அவை இல்லாமல் யாழ்ப்பாணத்தில football இல்லை. செல்லடி, துவக்குச்சூடு, மழை எண்டும் பாக்காம ஒவ்வொரு நாளும் தொழிலுக்குப் போறவங்கள் ஆனாலும் தங்கடை ஊர் club விளையாடிற match எண்டா தொழிலுக்கும் போகாம வந்திடுவாங்கள். வந்தவனும் சும்மா நிக்கமாட்டாங்கள். உள்ள போட்டிருக்கிற shorts தெரிய சாரத்தை மடிச்சுக்கட்டீட்டு பந்து போற இடமெல்லாம் தானும் ஓடித்திரிவாங்கள் . coach க்கும் மேலால “ நல்ல தமிழில”சத்தம் போடுவாங்கள். ஆனாலும் தப்பித்தவறி தோத்திட்டால் referee, எதிரணி , தங்கடை அணி எண்டு எல்லாருக்கும் விழும் , பேச்சு மட்டுமில்லை சிலநேரம் அடியும் தான். இப்பிடியான match முடிஞ்ச உடனயே பாஞ்சு வீட்டை ஓடிப் போறது referee மாரும் tournament வைச்சவையும் தான். சிலவேளை பரிசளிப்பு விழா கூட நடக்குறேல்லை, பேப்பரில பாத்துத்தான் முடிவு தெரிய வரும். இயக்கம் இருக்கேக்க சண்டைபிடிச்சா விளையாடத் தடை எண்டு தொடங்கினாப்பிறகு தான் கொஞ்சம் குறைஞ்சுது. இப்பிடி இருக்கேக்க தான் ஊரில போன கிழமை சமாசத்தின்டை வருசக் கூட்டம் வாசிகசாலையிலை நடந்தது. வரவு செலவுக் கணக்கு முடிய, இந்த முறை சேத்த காசில என்ன செயவம் எண்டு கதை்தொடங்கிச்சுது. “ ஒரு வருசம் தடைக்குப் பிறகு போனகிழமை தான் விளையாட விட்டவங்கள் இவங்களை , பெரிய ரோயும் சின்ன ரோயும் என்ன விளயாட்டு , உவன் கெவின் அடிச்ச அடி விண் கூவிச்சுது எண்டாலும் கடைசீல ஒரு goal அடிச்சு அவங்கள் வெண்டிட்டாங்கள், இவங்ககளுக்கு நல்ல சப்பாத்தும் சாப்பாடும் தேவை ,நாங்கள் தான் இந்த முறை சமசத்தால வாங்கிக் குடுக்கோணும்” எண்டு மதி சொன்னதுக்கு கொஞ்சப் பேர் ஒமெண்ட, கனக்கப் பேர் புறுபுறுக்க சமாசத்தின்டை தலைவர் கையைத்தூக்கினார் . அந்தச் சலசலப்பு அடங்க முதல், “ ரெண்டு வருசமா ஊரில நிறையப் பிரச்சினை நான் எத்தினை தரம் சொன்னான் உந்தக் கோயிலை திருத்துங்கோ எண்டு” ஒரு ஆச்சி சொல்ல இளசுகள் கூக்காட்டத் தொடங்கிச்சுதுகள். “ கருவாடு காய வைக்க , வலை தைக்க இடம் வேணும்” எண்டு மகளிர் வேண்டுகோளும் வர முடிவெடுக்கேலாமல் கடைசியாய் ஓரமா இருந்த மாஸ்டரைக் கேட்டச்சினம். மாஸ்டர் ஊரில மரியாதைக்கு உரியவர் பழைய football விளையாட்டுக்காரன். “ பிள்ளைகளுக்குப் பிராக்கில்லை, விட்டால் கெட்டுப் போடுவங்கள் இப்பத்தை நிலமையில விளையாட்டுக்குச் செலவு செய்யிறது நல்லம்” எண்டார் மாஸ்டர் . விளையாடிறதில்லை விளையாடி வெண்டாத்தான் ஊருக்கு மரியாதை எண்டு முடிவோட, இந்த மூண்டு மாதத்துக்கு சமாகத்துக்கும் , ஐக்கிய விளையாட்டுக் கழகத்துக்கு ஒண்டு காணாது ரெண்டு மீனாத் தாங்கோ , கழகத்துக்கு காசைக்குடுப்பம் ஆனா “ கப்பு “ முக்கியம் எண்ட condition ஓட meeting முடிஞ்சுது. வலையை பாறையில காய வைக்க , ரோட்டோரமா மீனைக் காயப்போட , மாதா கோயில் கூரைக்கு ஆரோ பழைய தகரம் ரெண்டைக் கொண்டந்து போட சம்மதிக்க, சமரசம் வந்திச்சுது கூட்டத்தில. வள்ளம் கிட்டவர முதலே இஞ்சின் சத்தத்திலையே உசாரான மதி ,“இந்தா வருது “ எண்டு சொல்லி கூற ஆய்த்தமானான். பாத்துக்கொண்டிருந்த வியாபாரிமார் கிட்ட வந்திச்சினம். வள்ளத்தை கரைக்கு கொண்டு வந்து நிப்பாட்டீட்டு வாயை மட்டும் வெட்டின பிளாஸ்டிக் bucket க்கு கட்டி இருந்த நைலோன் நூலைப் பிடிச்சு இறக்கிக் கொண்டு வந்திச்சினம் வள்ளக்காரர். கொண்டு வந்த பெட்டியோட கவிட்டுக் கொட்டின கும்பலில ரெண்டு மீன் சமாசத்துக்கும் ஒண்டு கூறிற ஆளுக்கும் எண்டு எடுத்து வைச்சிட்டு கூறத்தொடங்கினான் மதி. குவிச்ச மீன் கும்பலை பரவி விட , கண்ணால நிறை பாத்து , கலந்திருக்கிற மீன் பாத்து , அடிப்படை விலை பாத்து கையில இருக்கிற காசைப்பாத்து வியாபாரிமார் விலை கேட்டு காசைக் குடுத்துக் கணக்கை முடிச்சிட்டு சைக்கிளில இருந்த பெட்டீல கொட்டீட்டு விக்கிறதுக்கு வெளிக்கிட அடுத்த கூறல் தொடங்கிச்சுது. இதைப் பாத்த படி, தாண்டிப் போய் சில்லறை வியாபாரீட்டை என்ன மீன் வாங்கிறது எண்டு குழம்பி கடைசீல “சீலையை வித்தாவது சீலா வாங்கோணும்” எண்டு முந்தி ஆச்சி சொன்ன ஞாபகத்தில, சீலாவும், விளையும் வாங்கி, அதோட கூனிறால் கூறும் , நூறு ரூவாய்க்கு காரலும் பொரிக்க எண்டு வாங்கிக் கொண்டு வீட்டை போக மனிசி மண் சட்டியை கழுவி அடுப்பை மூட்டீட்டு பாத்துக் கொண்டிருந்திச்சுது. அம்மீல கூட்டரைச்சு சீலாத் துண்டைப் போட்டு வைச்ச மீன் குழம்பும், றால் வறையும், விளைமீன் பொரியலும் சோத்தோட மழைக் குளிருக்க சாப்பிட, அடுத்த நாளும் பாசையூருக்கு சைக்கிள் தன்டபாட்டை போகும். Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்.
  2. எழில் மிகுந்த இலங்கை மாதாவின் வடபகுதியின் பிரதான நகரம் யாழ்ப்பாணம். இம் மாவட்டத்தின் தெற்குப் பகுதியாக அமைந்துள்ள சாவகச்சேரி தொகுதியைக் கொண்ட பகுதி தென்மராட்சியாகும். தென்மராட்சியின் தென் மேற்குப் பகுதியில் சுமார் 6 கி.மீற்றர் தொலைவில் அமைந்துள்ள அழகிய கிராமம் கைதடி நாவற்குழி தெற்குப் பகுதியாகும். இதன் எல்லைகளாக கிழக்குப் பகுதி தென்னஞ்சோலைகளாலும் மறவன்புலோ மேற்கும், தெற்கு கடலாலும், மேற்கு தென்னஞ் சோலையும் பனைவளமும் கொண்டதாகவும் இயற்கை எழில் கொண்ட பசுமை நிறைந்த பகுதிகளாகவும் அமைந்துள்ளன. இக்கிராமம் கைதடி நாவற்குழி தெற்காக இருந்தாலும் கோவிலாக்கண்டி என்றால் தான் அநேகருக்கு தெரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. கைதடி நாவற்குழி தெற்கு மக்கள் அநேக காலமும் தாமும் தன்பாடும் என்ற நிலையில் சந்தோசமாகவும் அமைதியாகவும் எந்தவிதமான கோபதாபம் பிணக்குகளின்றி வாழ்ந்து வந்தனர். இவர்கள் ஆதிமுதல் “பெரும்படை” என்னும் தெய்வத்தையே தமது குலதெய்வமாக வழிபட்டு வந்தனர். வழமையாக வருடாந்தம் பங்குனி மாதம் கொண்டாடப்படும் பெரும் பொங்கல் தினத்தையே பெருவிழாவாகக் கொண்டாடி வந்தனர். ஒரே சமூகமாக இருந்து சிறப்பாக வாழ்ந்த இவர்களைப் பிரிக்க வேண்டுமென்ற சிலரின் தீய எண்ணத்தாலோ ஏதோ ஒரு காரணத்தாலோ ஒரு பொங்கல் தினத்தன்று இவர்களுக்கிடையே பிரச்சனைகளும், மனஸ்தாபங்களும், குரோதங்களும் ஏற்பட்டு இரண்டாகப் பிரிந்து ஒரு பகுதியினர் தமக்கொன அதே பெயரில் இன்னொரு “பெரும்படை” என்னும் கோயில் அமைத்து வழிபடத் தொடங்கினர். அன்று தொடங்கிய பகை நீண்ட காலம் வேண்டத்தகாத சண்டை சச்சரவுகளையும் போட்டி பொறமைகளையும் இவர்களுக்கிடையே வளர்த்தது. இது இவர்களுக்கு ஒரு சாபக்கேடாக அமைந்து இவர்களின் சீரான வாழ்வைச் சீரழித்தது. இம் மக்கள் கடற்கரையையண்டி வாழ்ந்தபடியால் கடல்படு திரவியம் தேடும் தொழிலே பிரதான தொழிலாக அமைந்துள்ளது. குறிப்பிட்ட சிலர் விவசாயத்தையும் தம் தொழிலாகக் கொண்டனர். அக்காலம் போதிய போக்குவரத்து வசதி இன்மையால் தாம் பெற்ற சரக்கைத் தனங்கிளப்பிற்கு நேரேயுள்ள கடற்கரையிலிருந்து காவுதடி கொண்டு சாவகச்சேரிச் சந்தையில் விற்றுப் பணமாக்கினர். இந்த நிலை வீண் சிரமத்தையும் கஷ்டத்தையும் கொடுத்ததைக் கண்டு ஒரு சில பெரியவர்களினதும் நல்ல உள்ள கொண்டவர்களது மன எண்ணத்தின்படியும் தம் கடற்கரையிலே தாம் பிடித்த சரக்கை விற்பனை செய்து சம்பாதிப்பதற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டது. கூட்டுறவுச் சங்கம் உதயம் இம்மக்களை ஒன்றுபடுத்தி இவர்களது வாழ்வைச் சிறப்புறச் செய்யவும் வீணான குரோதங்களை இல்லாமற் செய்யும் நோக்கத்திற்கும் ஒரு ஸ்தாபனம் தேவைப்பட்டது. அதன் நிமித்தம் கூட்டுறவுச் சங்கம் உதயமானது. அதன் தலைவராக தச்சன்தோப்பைச் சேர்ந்த அறிவு மிக்க திருவாளர் முருகேசு காசிப்பிள்ளையும், செயலாளராக திரு கனகர் சதாசிவம், பொருளாளராக திரு வேலுப்பிள்ளை பொன்னம்பலம் ஏனைய சிலர் நிர்வாக உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப் பெற்றுள்ளனர். இந்நிகழ்வு 1951ஆம் ஆண்டு நிகழ்ந்துள்ளது. சந்தை ஆரம்பம் கைதடி நாவற்குழி தெற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் சந்தையைச் செயற்படுத்தும் நோக்கத்தோடு கடற்கரையோரம் சிறு கொட்டிலை அமைத்தது. நல்ல நாளாக சித்திரைப் பரணி தினத்தன்று வியாபாரம் தொடங்கத் தீர்மானித்தனர். இதனை விளம்பரப்படுத்தும் வகையில் பல ஊர்களுக்கும், மக்களுக்கும் தெரியப்படுத்தினர். அன்றைய தினம் தொடக்கத்தில் குறைவான எண்ணிக்கையுள்ளோர் சமூகம் கொடுத்து மீன் வகைகளைக் கொள்வனவு செய்தாலும் நாளடைவில் – காலப்போக்கில் மக்கள் அநேகம் பேர் கூடவும் வியாபரம் பெருகவும் வழி உண்டாயிற்று. வியாபாரத்தைக் கண்காணிக்க மகேசனும், சிப்பந்தியாக திரு.வி.சின்னத்துரையும் நியமிக்கப் பெற்றனர். சிப்பந்தி நகைச்சுவையாக “காத்தடி கொண்டு காவினதெல்லாம் அந்தக்காலம், இப்போ கையிலே தூக்கி கரையிலை வைப்பது இந்தக் காலம்” எனக் கவிதையும் யாத்துப்பாடியது இப்போதும் காதில் கேட்கின்றது. கூட்டுறவுச் சங்கத்தின் சேவை கூட்டுறவுச் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டதும் ஆரம்பத்திற் குறிப்பிட்ட ஒரு தொகையினர் அங்கத்துவராகச் சேரப் பின்னடித்தாலும், ஏனையவர்களோடு சங்கம் வளர்ச்சியடையத் தொடங்கியது. சங்கத்திற்கு ஒரு பெயர் வைப்பதற்காக பூசாரி க.சதாசிவம் பூசை செய்யும் வைரவர் கோயில் முன்றலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கடற்றொழில் இலாகாவைச் சேர்ந்த திரு சோமசுந்தரம் என்னும் உயர் அதிகாரியால் “ஸ்ரீ மகாவிஷ்ணு கடற் தொழில் கூட்டுறவுச் சங்கம்” என்னும் பெயர் மொழியப்பட்டு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. சங்கம் வளர்ச்சியடைந்து அங்கத்துவர்களுக்கு கடன் வசதி, வலை, கம்பு, வள்ளம் போன்ற உபகரணங்களையும் பெற்றுக் கொடுத்தது. இதனைக் கண்ட ஏனையோரும் அங்கத்துவர்களாகச் சேரத் தொடங்கினர். கடற்கரை வீதி வரலாறு கூட்டுறவுச் சங்கத்தின் முதலாவது வருடாந்தப் பொதுக்கூட்டம் கடற்கரை மைதானத்தில் 1952ஆம் ஆண்டு நடைபெற்றது. அக் கூட்டத்திற்கு அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு வே.குமாரசாமி அவர்கள் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். கோவிலாக்கண்டி சந்தியில் இருந்து கடற்கரை வரையான பாதை மோட்டார் வாகனமன்றி துவிச்சக்கர வண்டி கூட செல்ல முடியாதளவு பெரும் மண் தரையாக இருந்தபடியால் பாராளுமன்ற உறுப்பினர் தமது மோட்டார் வாகனத்தை திரு.வே.சிவசுப்பிரமணியம் ஆசிரியரது வீட்டில் நிறுத்தி விட்டு கூட்டம் கூடும் இடத்திற்கு நடந்தே வந்தார். மக்களும் மேளதாளத்தோடு மாலை அணிவித்து மிகவும் மரியாதையாக அழைத்து வந்தனர். அன்றைய தினம் தனது பேச்சின் போது, தான் இவ்விடத்திற்கு மோட்டார் வாகனத்தில் வரமுடியாது நடந்தே வரவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. அடுத்த முறை இவ்விடத்திற்கு வருவதாயிருந்தால் தனது மோட்டார் வாகனத்திலேயே இவ்விடம் வந்து இறங்குவேன் எனக் கூறினார். அவர் அப்பொழுது பாராளுமன்றத்தில் செல்வாக்குள்ளவராகவும் இருந்தபடியால் குறுகிய காலத்தில் வீதிக்கு ரூபா 10000/= ஒதுக்கப்பட்டது. அப்போது சதத்தில் பணப் புழக்கம். இப்போது இத் தொகை பத்துக் கோடிக்குச் சமனாகும். இவ் வீதியை புனரமைக்க காரைநகைரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் ஒப்பந்தம் செய்து கொண்டார். அவரும் விரைவில் வீதியைச் சீரமைத்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினரும் தாம் கூறியவாறு மோட்டார் வாகனத்தில் வந்திறங்கினார். இவ் வீதி சீரமைக்கப்பட்டதால் கிராமமும் மக்களும் பெரிதும் அபிவிருத்தியடைந்ததோடு பெற்றவராயினர். பல நன்மைகளும் கிடைக்கப் பெற்றவராயினர். இவ்வேளை இக் கிராமத்து மக்களை ஒன்று படுத்துவதில் திரு.க.சதாசிவமும் திரு.வே.பொன்னம்பலமும் பெரிதும் முயற்சியெடுத்தனர். ஓரளவு வெற்றியும் நிறைவும் பெற்றனர். பாடசாலை ஆரம்பம் இக்கிராமத்துப் பிள்ளைகள் ஆரம்பக் கல்வியை யா/கோவிலாக்கண்டி மகாலக்குமி வித்தியாசாலையில் கற்று வந்தனர். ஐந்தாம் வகுப்பு வரையுள்ள அப்பாடசாலையிற் கற்றவர்கள் அதனோடு தமது கற்றலையும்,சிலர்நாலாந்தரத்தோடும் நிறுத்தியுள்ளனர். இதற்கு அவர்களது போக்குவரத்து வசதியீனமும் வறுமையும் காரணமாக அமைந்துள்ளது. இக்காலத்தில் நான் க.பொ.சா/தரப்(SLC) பரீட்சையில் சித்தியடைந்து க.பொ.உ/ தரம்(HSC) சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கற்று வந்த வேளையில் திரு.ந.இளையப்பா ஆசிரியர் அவர்களைச் சந்தித்த வேளையில், இக் கிராமத்துப் பிள்ளைகள் தொடர்ந்து கல்வி கற்காமல் நிறுத்தியதைச் சுட்டிக்காட்டி, அவர்களுக்கு என ஒரு பாடசாலையை எமது கிராமத்திலே ஆரம்பித்தால் அவர்கள் தொடர்ந்து கற்கச் சந்தர்ப்பம் உண்டாகுமென, ஆண்டவன் அருளால் உதித்த எனது எண்ணக் கருத்தினை வெளிப்படுத்தினேன். அதற்கு அந்த நல்ல உள்ளம் கொண்ட பெரியவரும் தானும் வேண்டிய உதவி செய்வதாகவும் பாடசாலையை ஆரம்பிக்கும்படியும் கூறினார். அப்போதுள்ள சமூக, சமுதாய சூழ்நிலை இக் கைக்காரியத்துக்கு கடும் எதிர்ப்பும், பகையும் கிடைக்கும் என்றுணர்ந்தும் நல்லதொரு காரியத்துக்கு ஆண்டவன் பக்க பலமாக துணைநிற்பான் என்ற அசையாத துணிச்சலோடும், நம்பிக்கையோடும் பாடசாலை ஆரம்பிக்கத் தொடங்கினேன். பாடசாலை நடாத்துவதற்கு ஒரு இடம், கட்டிடம் தேவைப்பட்டது. அப்பொழுது கடற்றொழிளாருக்கென கட்டிடம் ஒன்று புதிதாகக் கட்டப் பெற்ற நிலையில் இருந்தது. அதனை சங்க நிர்வாகிகளுடன் கதைத்துப் பெற்றுள்ளேன். 1960 ஆம் ஆண்டு புரட்டாதித் திங்கள் 30.09.60 நவராத்திரி காலத்தின் விஜயதசமியன்று பாராளுமன்ற உறுப்பினர் திரு.வ.ந.நவரத்தினம் அவர்களைக் கொண்டு திறப்பதற்கு தீர்மானித்த வேளை அவர் அவசியம் பாராளுமன்றம் செல்ல வேண்டியிருந்ததால் துணைவியார் திருமதி இரகுபதி நவரத்தினம் அவர்களை அனுப்பியிருந்தார். அந்த அம்மையாரும் சமூகம் கொடுத்து அன்றைய தினம் பாடசாலையை அங்குரார்ப்பணம் செய்து ஆரம்பித்து வைத்தார். இப்பாடசாலை இக் கிராமத்தில் தொடக்கி வைக்கப் பெற்றதால் பிரிந்து நின்றவர்கள் ஒன்றுபட்டு ஒற்றுமையாகவும் பழைய பகைமைகளை மறந்து சந்தோஷமாகவும் வாழக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. பாடசாலையை அரசு பொறுப்பேற்பதாக இருந்தால் நிரந்தரக் காணி, நிரந்தரக் கட்டிடம் தேவைப்பட்டது. இதற்காக இப்போது பாடசாலை அமைந்துள்ள காணியை உரியவர்களான திரு.மு.கனகர், திரு.ம.ஆறுமுகம், திருமதி ம.சின்னாச்சி என்போரிடம் இருந்து பெருமுயற்சி எடுத்து சம்மதம் பெறப்பட்டது. உடனே நொத்தரிசுக்கு கிளாக்கராக இருந்த திரு.வ.செல்லத்துரை என்பவரைக் கொண்டு உறுதி எழுதப்பட்டது. இனி நிரந்தரக் கட்டடம் கட்ட வேண்டும். அதற்குரிய கல், சீமெந்து பாடசாலைக் காணிக்கு கொண்டு வர முடியாத நிலை. அந்தளவுக்கு புழுதி மணல் நிரம்பிய பாதை. திரு.சு.கந்தையா என்பவர் தனது மெசினில் கொண்டு வரும் கல், சீமெந்தை தற்போது ஆலடி அம்மன் கோயிலாகவிருக்கும் இடத்தில் பறித்துவிட்டுப் போய் விடுவார். அப்போது எம்மிடம் வண்டில் மாடு இருந்தமையால் மாடுகள் இழுக்கக்கூடிய அளவு கல், சீமெந்தை ஏற்றி பாடசாலைக் காணிக்கு கொண்டு வந்து சேர்த்தேன். ஏனைய உதவிகள் பெற்றோராலும் கிடைக்கப் பெற்று கட்டிடம் கட்டி முடிக்கப் பெற்றது. கிணற்றினைத் திரு.வியாழரத்தினமும் அவரது மகன் தியாகராசா உடன் நானும் சேர்ந்து வெட்டினோம். மேசன் திரு.வ.சிதம்பரநாதனுக்கு நான் உதவியாளராக இருந்து கிணறு கட்டி முடிக்கப்பட்டது. அப்பொழுது இப் பாடசாலைக்கு பயிற்றப்பட்ட ஆசிரியரான திருமதி அ.இளையப்பா அவர்கள் தலைமை ஆசிரியராகவும், திரு.வே.இராமர், செல்வி.வி.சிவபாக்கியம், செல்வி.சி.இராசேஸ்வரி பின்பு செல்வி.சி.சின்னக்குட்டி ஆகியோர் உதவி ஆசிரியர்களாகவும் கடமையாற்றினர். வகுப்புகள் தரம் | தொடக்கம் தரம் V வரையுமே நடைபெற்றன. அரசு பொறுப்பேற்றல் அப்போதுள்ள கல்விச் சட்டத்தின்படி பாடசாலை ஆரம்பித்து சில மாதங்களில் பொறுப்பேற்க வேண்டிய நிலையிருந்தும் எதிர்ப்புகள் காரணமாக காலதாமதமாகியது. அப்போது மத்துகம் தொகுதி பா.உறுப்பினராக இருந்த திரு. பங்குவில என்பவரை இங்குள்ள அவரது நண்பர் பாடசாலை விடயமாகக் கதைத்ததனால் அவர் பாராளுமன்றத்தில் எமது பாடசாலையின் விபரம், நிலைமையை எடுத்துக் கூறியதால் அப்போதைய கல்வி அமைச்சர் திரு.வை.துடாவையின் உத்தரவின் பேரில் யாழ் கல்வித் திணைக்களத்தில் கடமையாற்றிய கல்வியதிகாரி திரு.எஸ். முத்துலிங்கம் அவர்கள் 1963 ஆம் ஆண்டு தை மாதம் 30ந் திகதி பாடசாலைக்கு சமூகம் கொடுத்து அரசாங்க பாடசாலையாகப் பதிவு செய்து பொறுப்பேற்றதை சம்பவத் திரட்டுப் புத்தகத்திலும் பதிவு செய்துள்ளார். இவ் வைபவம் இக்கிராமத்தின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய விடயமாகும். இதனைத் தொடர்ந்து பாடசாலை வளர்ச்சி அடையத் தொடங்கியது. 1964ஆம் ஆண்டு திரு. V.S.கந்தையா அவர்கள் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றதிலிருந்து அந்த வருடமே கிராமசபை அங்கத்தவர் திரு.வே.பொன்னம்பலம் அவர்கள் தலைமையில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றதும், பரீட்சைகளில் மாணவர் திறமை காட்டி கல்வியில் முன்னேற்றமடைந்ததும், பெற்றார் தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றதும் மறக்க முடியாதவையாகும். 1965, 1966 ஆகிய இரு வருடங்கள் ஆசிரிய பயிற்சி பெற்று 1967 ஆம் ஆண்டு தொடக்கம் க/புசல்லாவை சரஸ்வதி ம.வியில் 6 வருடங்கள் கடைமையாற்றி விட்டு இப் பாடசாலைக்கு மாற்றம் பெற்று வந்த பொழுது ஆண்டு 9 வரையும் உள்ள பாடசாலையில் ஆண்டு 5 வரையும் இருப்பதைக் கண்டு அதிபர் திரு.வே.நாகராசாவுடன் முரண்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. 1975ஆம் ஆண்டு அதிபர் தரம் கிடைத்து மன்னார் மாவட்டத்திலுள்ள ம/கள்ளியடி அ.த.க பாடசாலைக்கு அதிபராக நியமனம் பெற்றேன். ஒன்பது வருடங்கள் அம்மாவட்டத்தின் பாடசாலைகளில் கடமையாற்றி விட்டு 1984ஆம் ஆண்டு யா/ கைதடி முத்துக்குமாரசாமி ம.வி.க்கு பிரதி அதிபராக நியமனம் பெற்றேன். அப்பொழுது யா/கல்வித் திணைக்களத்தில் பிரதம கல்வி அதிகாரியாக கடமையாற்றிய திரு.கு.சோமசுந்தரம் அவர்களின் வேண்டுகோளின் பேரில் இப்பாடசாலைக்கு அதிபராக நியமனம் பெற்றேன். அப்பொழுது பதில் அதிபராக கடமையாற்றிய செல்வி இ.வசந்தாதேவி பாடசாலைப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். 1984ம் ஆம் ஆண்டு பாடசாலைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நான் 5ம் வகுப்புக்கு மேல் வகுப்புகள் வைப்பதற்கு முயற்சி எடுத்தேன். கொத்தணி முறையில் நிர்வாகம் இயங்கிய காலம் கைதடிக் கொத்தணி அதிபர் திரு.சோ.கணேசலிங்கம் தலைமையில் நடந்த அதிபர்கள் கூட்டத்துக்கு கல்விப் பணிப்பாளர் திரு. மன்சூர் அவர்களும் சமூகம் கொடுத்திருந்தார். அவரிடம் இப்பாடசாலையில் 6ம் வகுப்பு வைக்க வேண்டிய தேவைகளை எடுத்துக் கூறியதோடு அது பற்றிய கடிதமும் கொடுத்துள்ளேன். கொத்தணி அதிபர், ஏனைய அதிபர்கள் யாவரும் ஒத்துழைப்பு நல்கியதால் கல்விப் பணிப்பாளர் உடனடியாக 6ம் வகுப்பு வைப்பதற்கு அனுமதி தந்துள்ளார். அடுத்த வருடத்தில் இருந்து 6ம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி கற்க சந்தர்ப்பம் உண்டானது. 9ம் வகுப்பு வைப்பதற்குக் கல்வி அமைச்சிலிருந்து அனுமதி கிடைக்க வேண்டும். அதற்கு இங்குள்ள கல்வித் திணைக்கள அதிகாரிகள் சிபார்சு செய்ய வேண்டும். நானும் பலமுறை வேண்டுதல் செய்தும் அவர்களும் ஏதோ காரணங்களைக் கூறி சிபார்சு செய்வதைப் பின் போட்டுக் கொண்டு வந்தார்கள். இந்தநிலையில் திருமதிபுஸ்பாகணேசலிங்கம் அவர்கள் சாவகச்சேரி கோட்டக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய காலத்தில் மாணவர்கள் மேல் வகுப்பு படிப்பதற்குப் படும் கஷ்டங்களையும், போக்குவரத்து வசதியின்மையையும், வறுமை நிலையையும் எடுத்துக் கூறியதன் பேரில் இதனை நன்குணர்ந்து 9ஆம் வகுப்பு வைப்பதற்கு சிபார்சு செய்தமையை இந்நேரம் நன்றியுடன் நினைவு கூருகின்றேன். தொடர்ந்து ஏனைய வகுப்புகளும் வைக்கப் பெற்று 1996ஆம் ஆண்டு க.பொ.சா/தரப் பரீட்சை எழுத வேண்டியிருந்த பொழுது பொல்லாத காலமாக நாட்டில் யுத்தம் மூண்டது. இக் கால இடைவெளிக்குள் மாணவர்கள் கல்வியில் அதீத முன்னேற்றம் கண்டனர். கல்வி அதிகாரிகளின் பாராட்டுதலையும் நன்மதிப்பையும் பெற்றனர். இப்பாடசாலையில் பன்னிரண்டு வருடங்கள் அதிபராகக் கடமையாற்றிய காலத்தில் என்னோடு ஒத்துழைத்துக் கடமையாற்றிய ஆசிரியர்களின் கடமையுணர்ச்சி, அர்ப்பணிப்பான சேவை, ஆக்கபூர்வமாக கல்விப்பணி, மாணவர்களைக் கல்வியில் முன்னேற்றம் காணச் செய்தமையோடு பாடசாலைக்குப் பெரும் புகழையும் பெருமதிப்பையும் தேடித் தந்தன. இதனால் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற நல்ல அதிபர் தெரிவில் மாவட்ட மட்டத்தில் நல்ல அதிபராகத் தெரிவுத் தெரிவு செய்யப் பெற்று கல்விப்பணிப்பாளர் திரு.இ.சுந்தரலிங்கம் அவர்களால் பாராட்டப்பெற்றுச் சான்றிதழும் பெற்றுள்ளேன். இந்தப் பெருமை எனக்கு கிடைக்கச் செய்தமை இக்காலத்தில் கடமையாற்றிய ஆசிரியர்களையே சாரும் என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இக்கால இடைவெளி எல்லைக்குள் பாடசாலை அபிவிருத்தியோடு கிராமத்தின் அபிவிருத்தியிலும் பங்கு பெறும் வாய்ப்பு உண்டானது. தலைமையாசிரியர் திரு.V.S.கந்தையா அவர்களது பெரும் பங்களிப்புடன் கைதடி நாவற்குழி தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இச் சங்கத்தின் மூலம் பாடசாலை வீதி, பாடசாலை கடற்கரை வீதி, புதிய கிணறு கட்டியது, ஒழுங்கைகள் திருத்தம் போன்ற பணிகள் செய்யப் பெற்றன. உணவு இக் கிராமத்து மக்கள் சங்கக் கடையிலேயே அத்தியாவசியமான அரிசி,மா,சீனிபருப்பு போன்றவற்றைகூப்பன் முறையில் பெற்றனர். இச் சங்கக்கடை கைதடி நாவற்குழி வடக்கிலுள்ள முருக மூர்த்தி கோயிலுக்கருகில் அமைந்துள்ளது. இம் மக்கள் பெரும் வயல் வெளியைத் தாண்டியே நடந்து சென்று பொருள்களைப் பெற்று வந்தனர். மாரி, மழை காலங்களில் பெரும் இடர்ப்பாடுகளைச் சந்தித்தனர். இதனால் ஒரு பகுதியினர் கைதடி நாவற்குழி (வடக்கு) பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திலும், ஒரு பகுதி மக்கள் கோவிலாக்கண்டி மத்தி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திலும் கூப்பன் பொருட்களைப் பெற்று வந்தனர். நாளடையில் இவ்விரு சங்கத்தினரும் இக் கிராமத்திலேயே இரு கிளைகளை நிறுவி திரு.சி.சங்கரப்பிள்ளை ஒரு கிளைக்கு மனேஜராகவும், திரு.க.கனகரத்தினம் என்பவரை ஒரு கிளையின் மனேஜராகவும் நியமித்து பொருட்களை விநியோகித்து வந்தனர். இந்த இழிநிலையைப் போக்கும் முகமாக நாம் எமது கிராமத்துக்கென பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஒன்றை நிறுவ முயற்சி எடுத்தோம். அப்போது உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த திரு.க.சிவப்பிரகாசம் என்பவரும் அரியாலையைச் சேர்ந்த கூட்டுறவுப் பரிசோதகர் திரு.க.பொன்னுத்துரை என்பவரும் பெரும் உதவி செய்தனர். கூட்டுறவுப் பரிசோதகருக்கு அவர் வேண்டுதலின் பேரில் இம் மக்களின் தொகை விபரங்களை வேலையாள், சாதாரணம், பிள்ளை, குழந்தை என்ற வகையில் வகைப்படுத்தியும் மேலும் வேண்டிய விபரங்களையும் வழங்கி உதவினேன். அப் பெரியவர்களது முயற்சியினால் இப் பகுதிக்கு கைதடி நாவற்குழி தெற்கு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் என தனியாக சங்கம் உருவானது. இதற்கும் கடைசி நேரத்திற் பல இடைஞ்சல்கள் ஏற்பட்டன. அவற்றை எழுத நான் விரும்பவில்லை. தென்மராட்சி மேற்கு பல நோக்குக் கூட்டுறவுச் சங்க சமாசத்திலிருந்து பொருட்கள் கொண்டு வரப்பட்டு திரு.க.ஐயாத்துரை என்பவரது வீட்டின் ஓர் அறையில் வைக்கப்பட்டு வியாபாரம் தொடங்கப் பெற்றது. திரு.க.கனகரத்தினம் மனேஜராகக் கடமையாற்றினார். திரு.வே.பொன்னம்பலம் அடிக்கடி கண்காணித்து சங்க வருவாயைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறியதால் ஓரிரு வருடங்களில் சங்கம் பெரும் இலாபத்தை ஈட்டியது. அந்த இலாபப் பணத்தைக் கொண்டே புதிதாகக் கட்டிடம் கட்டப் பெற்றுள்ளது. அதுவே இப்போதுள்ள சங்கக் கட்டிடமாகும். உடை கைதடி நாவற்குழி தெற்கு கி.அ.சங்கத்தின் தலைவராக இருந்த நானும் செயலாளரான திரு.ஆ.கந்தையாவும் கிராம அபிவிருத்திச் சிறு கைத்தொழிற் திணைக்களத்தினருடனும் தொடர்பு கொண்டபடியால் மீசாலையிலிருந்து ஒரு தையற் பயிற்சி ஆசிரியர் இங்கு வந்து தையல் பயிற்சி வகுப்புகளை பயிற்றுவித்தார். புதிய வடிவில் சட்டைகளை அமைக்கவும், விதம் விதமாக றேந்தைகள் பின்னவும், அழகான வகை வகையான தையற் பயற்சிகளையும் நடாத்தினார். இப் பயிற்சியால் பெண்களும் குறிப்பாக இளம் யுவதிகளும் நன்மையடைந்தனர். கண்காட்சியும் நடாத்தப்பட்டது. வைத்தியம் கைதடி நாவற்குழி ஸ்ரீ மகா விஷ்ணு க.தொ.கூ. சங்கம் அதன் நிர்வாகத் திறமையால் இலங்கையில் முதற் தரமான சங்கமாகக் கணிக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது கடற்றொழிற் திணைக்களப் பணிப்பாளர் திரு.பீற்றர் அவர்கள் இங்கு சமூகம் கொடுத்து விருந்துபசாரத்தில் பங்கு பற்றிய பொழுது இங்கு வைத்தியத் தேவையை எடுத்துக் கூறிய பொழுது தான் கொழும்பு சென்று சுகாதாரப் பகுதியினருடன் கதைத்து ஒழுங்குபடுத்துவதாகக் கூறினார். சில மாதங்களின் பின் கைதடி வைத்தியசாலையிருந்து வைத்தியரும், உதவியாளரும் வார நாட்களில் இரண்டு நாட்கள் சமூகம் கொடுத்து வைத்திய சேவை ஆற்றினர். சிலரது வேண்டுகோளினால் ஏனைய கிராம மக்களும் பயன் பெறும் பொருட்டு ஆசிரியை திருமதி இராசம்மா வீட்டுக்கு மாற்றினர். பின்னர் மறவன்புலோவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இப்போது எந்த இடத்திலும் வைத்திய வசதி இல்லை. மின்சாரம் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள், பாடசாலை, கோயில்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றுக்கு மின்சாரத்தின் அவசிய தேவை பற்றி கைதடி நாவற்குழி தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராக இருந்த பொழுது, அப்போதைய யாழ் மாவட்ட அமைச்சருக்கு மின்சாரத்தின் அவசிய தேவை பற்றிக் கடிதம் எழுதினேன். அவரிடமிருந்து எனது விடயம் கவனத்தில் எடுக்கப்படும் எனப் பதிற் கடிதம் கிடைத்தது. சாவகச்சேரிப் பிரதேச உதவி அரசாங்க அதிபராக இருந்த திரு.சுந்தரம்பிள்ளை அவர்களுடன் மின்சாரத்தின் தேவை பற்றிக் கதைத்த பொழுது அப்பிரதேசம் நீண்ட வயல் வெளிப்பிரதேசம், அதிக பணம் தேவைப்படும், ஆசிய பவுண்டேசனுக்கு தெரியப்படுத்துகின்றேன், கிடைத்தால் உங்கள் அதிஷ்டம் எனக் கூறினார். சில மாதங்களின் பின் எமது பகுதிக்கு மின்சாரம் வழங்க அனுமதி கிடைத்ததாகவும், அது கோவிலாக்கண்டி பகுதிக்குப் போக இருப்பதாகவும் தகவல் அறிந்தோம். உடனடியாக மாவட்ட அமைச்சரது கடிதத்துடன் நான் தனஞ்செயன் என்பவருடன் அரசாங்க அதிபரைச் சந்தித்து கடிதத்தையும் காட்டி இது எமது பகுதிக்கே வரவேண்டியது என்றும், உதவி அரசாங்க அதிபருடன் கதைத்த விடயத்தையும் கூறினேன். அவர் உடனடியாக சுன்னாகத்தில் உள்ள மின்சாரசபை அதிகாரிகளைச் சந்திக்கச் சொன்னார். உடனே சுன்னாகம் சென்று மின்சாரசபை உயர் அதிகாரிகளைச் சந்தித்து விடயத்தை எடுத்துக் கூறினேன். அவர்களும் நாளை மின்சாரக் கம்பங்களை ஏற்றிக் கொண்டு வாகனம் வரும். கைதடிச் சந்தியிலிருந்து வாகனத்தை மறித்து அவர்களுக்கு இடத்தைக் காட்டும்படியும் கூறினார்கள். அடுத்த நாட் காலை கைதடிச் சந்தியிற் காத்திருந்த வேளை மின்சாரம் பொருத்துவதற்கான வாகனம் தூண்களை ஏற்றிக் கொண்டு வந்தது. அதனை மறித்து வாகனத்தில் ஏறி இடத்தைக் காட்டினேன். கடற்கரையிலிருந்து தூண்கள் பறிக்கப்பட்டு விரைவில் வேலைகளைத் தொடங்கினார்கள். முதலாவது தூண் தற்போது வயலோரம் அம்மன் கோயில் செல்லும் வீதியில் தேங்காய் உடைத்து கற்பூரம் கொழுத்தி நாட்டப்பட்டது. திரு.க.ஆறுமுகம் இந்த இறைபணியைச் செய்தார். விரைவாக மின்சார வேலைகள் செய்து முடிக்கப் பெற்றது. மக்களும் ஒளி வெள்ளத்தில் மூழ்கி மகிழ்ச்சி கொண்டாடினர். இதுவே மின்சாரம் கிடைத்த வரலாறு. இதனைத் தொடர்ந்து கிராம அபிவிருத்திக்குப் பல வேலைத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. இவ்வாறன பணிகள் தொடங்கவும் நிறைவேறவும் ஏதே ஒரு மாபெரும் சக்தி துணை நின்றதை உணர்கின்றேன். வாழ்க்கை முறைகளும் வழிபாடுகளும் ஆரம்ப காலம் இம் மக்கள் கூட்டுறவு வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து வந்தனர். ஒரே காணிக்குள் பல வீடுகளைக் கட்டியும் ஒரே வீட்டில் சில குடும்பங்களுடனும் வாழ்ந்து ஒருவருக்கொருவர் ஒத்தாசையும் உதவியும் புரிந்தும் உணவு வகைகளைப் பங்கிட்டுக் கொடுத்தும் சந்தோசமாக வாழ்ந்து வரலாயினர். பனை ஓலையாலும், கிடுகுகளாலும் வேயப் பெற்றதும், கிடுகுகளால் மறைப்புத் தட்டிகள் அமைத்தும், மண் தரையுமாக வீடுகள் அமைந்துள்ளன. வேலிகளை கிடுகளாலும், அலம்பல் எனும் தடிகளாலும், மட்டை வரிந்தும் மறைப்புச் செய்தனர். தற்போது மாற்றமடைந்து கல்வீடுகளாகவும் மதில் சுவர்களாகவும் மாறியுள்ளன. கிராமத்தில் நடக்கும் இன்ப துன்ப நிகழ்வுகளில் சகலரும் பங்கு பற்றியும் சில நாட்கள் அவ் வீட்டிலேயே தங்கி நின்று உதவி செய்தும் தமதன்பை வெளிப்படுத்தினர். ஆதிகாலம் தொட்டு இவர்களது வழிபாட்டுத் தலங்களாக பெரும்படை அம்மன் கோயில், மகாவிஷ்ணு ஆலயம், வைரவர், வீதிகளில் சிறு கட்டிடங்களில் அமைந்த அம்மன் ஆலயங்கள் என அமைந்துள்ளன. இரண்டாகப் பிரிந்து நின்றவர்கள் தற்போது சகல ஆலயங்களுக்கும் சென்று வழிபட்டு வருவது மகிழ்ச்சியைத் தருவதோடு ஒற்றுமையையும் வளர்ப்பது ஆண்டவன் அருளாகும். இத்தோடு முன்பள்ளி பாடசாலை, அறநெறிப் பாடசாலையும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. கிராமத்தின் வளர்ச்சியில் கைதடி நாவற்குழி ஸ்ரீ மகாவிஷ்ணுக.தொ.கூசங்கம், ஸ்ரீ மகாவிஷ்ணு சனசமூக நிலையம், ஸ்ரீ மகாவிஷ்ணு விளையாட்டுக்கழகம் போன்றவை அரும் சேவையாற்றி வருகின்றன. இன்னும் மறைந்து கிடக்கும் உண்மைகள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும். இக்கிராமம் மேன்மேலும் சிறப்புறவும் அபிவிருத்தியடையவும் இக்கிராம மக்கள் உறுதுணையாக இருப்பதோடு குறிப்பாக அறிவுசால் பெரியவர்கள் இளைஞர்கள் யுவதிகள் அனைவரும் ஒத்துழைத்தும் நல்சேவையும் ஆற்றி கிராமத்தைச் செழிப்புறச் செய்வார்களாகுக. வே.இராமர் ஓய்வு நிலை அதிபர் https://raamu.vaathiyaar.blog/ Download PDF file
  3. திருவள்ளுவர் மிகவும் அழகாக சொன்ன குரளை நான் எனது கிறுக்கல் மூலம் சொல்ல முயற்சிக்கிரேன் ..தப்பாக இருந்தால் தம்ஸ் டவுன் (அதுதான் கட்டை விரலை கீழே காட்டுங்கோ) பண்ணுங்கோ .. வள்ளுவர் இந்த குரளை எப்படி எழுதியிருப்பார்?...எப்படி ஐடியா வந்திருக்கும்? என்ற சந்தேகம் எனக்கு வர எனது கற்பனை ....வாழ்க்கையின் தத்துவத்தை அனுபவ ரீதியாக இரு வரிகளில் எழு சொற்களில் சிறப்பாக சொல்லி சென்றுள்ளார்... ஐயன் திரு... இற்றைக்கு ஏரத்தாள இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காதலர் தினத்திற்காக வாசுகி மல்லிகை பூ ,மற்றும் ஏனைய வாசனை திரவியங்கள் யாவும் பூசி கொண்டு வள்ளுவரை எதிர் பார்த்து காத்திருந்தாள்.அன்று காலை திரு வெளியே செல்லும் பொழுது "நாதா இன்று மாலை சீக்கிரம் வீடு வந்து சேருங்கள் வழமை போல லெட்டாக வரவேண்டாம்" என சிணுங்கலுடன் சொன்னாள். திரு வேலை பளுகாரணமாக "ஒம் " என சொல்லி தனது குரளை எப்படி எழுதி முடிப்பது என ஆராச்சியில் மண்டையை போட்டு குழப்பி கொண்டிருந்தார் .இரு வரிகளில் ஏழு சொற்களில் எல்லாவற்றையும் அழகிய இலக்கிய இலக்கண தமிழில் எழுதுவது இலகுவான காரியமல்ல என்பது நீங்கள் அறிந்ததே.....தனது நிழலை பார்த்தார், மறைந்து விட்டது வீடு செல்லும் நேரம் என நினைத்து எழுதி கொண்டிருந்த ஒலைச்சுவடிகளையும் எழுத்தாணியையும் தூக்கி கொண்டு வீடு சென்றார். வழமையாக வாசலில் வந்து வரவேற்கும் வாசுகியோ வந்து வரவேற்கவில்லை அதை திரு பெரிதாக கண்டு கொள்ளவில்லை ,வாசுகியோ அவரது கையில் இருப்பது திருநெல்வேலி அல்வா ஆகா இருக்குமோ என ஆசையுடன் எட்டி பார்த்தாள் ,புரிந்து கொண்டாள் கிழவன் வழமை போல ஒலைகளை சுருட்டி கொண்டு வந்திருக்கிறது ..இந்த ஒலைகளினால் என்ன பயன் என மனதில நினைத்தவாறு கையில் இருந்த அகப்பையை தரையில் வீசினாள்.. அன்று ஐயன் திரு 1108 ஆவது குரளை எழுதி கொண்டிருந்தார் . அதுதான் "வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படா அ....." வீடு போகும் வரை இதை எப்படி முடிப்பது என தெரியாமல் திண்டாடிக்கொண்டிருந்து வீடு சென்றும் எழுத முடியாமல் தவித்த வண்ணமிருக்கையில் திரு ,வாசுகியின் அகப்பை சத்ததை கேட்டு ஒடிச் சென்று முயக்கினான் (கட்டி தழுவினார்) ஏற்கனவே திரு மீது மிகவும் கடுப்புடன் இருந்த வாசுகி தள்ளி போங்கள் என கூறி விலகிச்சென்றாள். உடனே வள்ளுவனுக்கு தனது 1108 ஆவது குரலின் இறுதிச் சொல் உதிக்கவே ஒடிச்சென்று "முயக்கு" என அந்த குரளை எழுதி முடித்து விட்டு மீண்டும் வாசுகியிடம் வந்தார். வாசுகியோ அவரை பார்க்காமல் வேறு திசையை பார்த்தவாறு இருந்தாள்.திருவுக்கு புரிந்து விட்டது மிகவும் ஆத்திரத்தில் இருக்கின்றாள் ,இருந்தாலும் என் வரவுக்காகவும் என்னை மகிழ்ச்சி படுத்தவும் மல்லிகை பூ அழங்காரத்துடன் இன்னும் இருக்கின்றாள் ....திரு ஏற்கனவே எழுதிய 1108 குரளினால் உணர்ச்சி பிழம்பாக இருந்தார் ...வாசுகியின் அருகே சென்று கண்ணே ஏன் இந்த ஊடல் என மிகவும் தாழ்மையாக கெஞ்சி குலாவி கேட்க , "உங்களுக்கு காலையில் என்ன கூறி வழி அனுப்பினேன் " சிறுது நேரம் யோசித்த திரு "மாலையில் சற்று விரைவாக வருமாறு" "ஏன் வரவில்லை" "வேலைப்பளு கண்ணே" "இன்று என்ன நாள் என தெரியுமா" "தெரியவில்லையே தேனே" "காதலர் தினம் ,பக்கத்துவீட்டில் அவர்கள் இருவரும் காலையில் இருந்து கொண்டாடுகிறார்கள்,அவளது கணவன் அல்வா வாங்கி கொடுத்ததாக எனக்கு கொண்டு வந்து தந்தாள் .." "அவன் அல்வா தான் கொடுத்தான் நான் உனக்காக குரளே எழுதியுள்ளேன் அந்த குரளின் இறுதி சொல்லும் உன்னை கண்டதும் உதித்தது மலரே" "எங்கே வாசியுங்கள்" திரு உணர்ந்து கொண்டார் தப்பு செய்து விட்டேன் ..உடனே அவளின் அருகில் சென்று அவரது 1108 குரளை வாசித்தார் . வாசுகி தன்னிலை மறந்தாள் ,திருவும் தன்னிலை மறந்தார் .இருவரும் உச்சத்துக்கு சென்று பிரிந்தனர். கண்ணே நீ இன்று என் மீது கோபம் கொண்டாய்,அதன் காரணத்தை உணர்ந்தேன் நீயும் உணர்ந்தாய் முடிவில் கூடினோம், காதல் தினம் அல்வா கொடுப்பதோ பூக்கள் கொடுப்பதோ அல்ல என சிரித்தபடி தனது மீசையும் ,தாடியையும் தடவினார். "மலரே,எனக்கு இன்று இன்னோரு குரளும் எழுத கை துடிக்கின்றது" "எழுதுங்கள் நாதா" "ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியோர் பெற்ற பயன்" "அருமை நாதா" வாசுகியை தன் வசம் மயக்கிய மகிழ்ச்சியில் "பூவே ,எனது இந்த அதிகாரத்தை எழுதி முடிக்க இன்னுமொரு குரள் தேவை படுகிறது" "எழுதுங்கோ பிரபு" " அதற்கும் உன் ஒத்துழைப்பு வேண்டும் இளவ்ரசியே" " இன்று இவை போதும் நாதா ,நாளை மிகுதி குரளை எழுதுவோம் " என கூறி திருவின் வயிற்றில் செல்லமாக குத்திவிட்டு சென்றாள் ..
  4. (எழிலன்): - முதலாளி இன்றைக்கு லீவு தாங்கோ? எனக்கு காய்ச்சலா இருக்கு உடம்பும் நடுங்குகிறது (எழிலன்) முதலாளி:- இன்றைக்கு லீவு கொடுக்க இயலாது இன்று ஞாயிற்றுக்கிழமை கன சனம் கடைக்கு வரும் நீயும் லீவு எடுத்தால் நான் யாரைக்கொண்டு க‌டையை நடத்துற‌ வேலை செய்யுற என்று சொன்னார் முதலாளி முதலாளி:- இல்லை ஐயா எனக்கு நிற்க கூட முடியல அதுதான் லீவு கேட்கிறன் முதலாளி:- சரி லீவு இல்ல கணக்கை பார்த்து காசை மொத்தமா வாங்கிட்டு போ இனி வேலைக்கும் வராத‌ என்றார் முதலாளி. (எழிலன்): உடலைப்பார்த்தால் தான் நாளைக்கு வேலை செய்யலாம் என காசை தாங்கோ என கேட்க முதலாளி:- எத்தனை நாள்? (எழிலன்): 15 நாள் ஐயா 15000 ரூபா முதலாளி:- இந்தா 10000 பிறகு வந்து 5000 ரூபாவை வாங்கித்துப்போ என்றார் முதலாளி நம்ம தமிழ் முதலாளிகளின் நல்ல பழக்கங்களில் இதுவும் ஒன்று காசை வாங்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு நான் செல்ல அங்கே காவாலாளி இன்றைக்கு ஓ பி ரி (O.P.T) இல்லை நாளைக்கு வாங்க என்றார். எனக்கு நிற்க முடியல மருந்து எடுக்கணூம் தம்பி உள்ள விடுங்க யாரையாவது பார்த்து மருந்து எடுத்து செல்கிறேன் என நானும் சொல்ல அவங்க விடுவதாக இல்லை லேசாக மயக்கம் வருவது போல அமர உள்ளே கிளினிக் செய்யும் வைத்திரியரிட்ட அனுப்புங்க என சொல்லி உள்ள விட அங்கே ஒரு பெண் தரையை துடைத்துக்கொண்டிருந்தாள். நான் சென்றால் அந்த பகுதி மீண்டும் அழுக்காகிவிடும் என்ற காரணத்தால் காயும் வரைக்கும் நிற்க அவளோ போங்க பறவாயில்லை என்றாள் ஆளை அடையாளம் காண முடியவில்லை முகத்தை மறைத்து முகக்கவசம் அணிந்திருந்தாள். சரி நான் போய் வைத்தியரைப்பார்க்க வரிசையில் நிற்க அந்த குரல் எங்கேயோ கேட்ட குரலாக இருக்கிறது என மனம் சொல்ல அந்த‌ குரலையும் அவளையும் தேடியது கண்கள் அவவாக இருக்குமோ என்ற‌ ?? கேள்விதான் எழுகிறது பதில் இல்லாமல் வைத்தியர் :- அடுத்த ஆள் வாங்கோ உள்ளே அழைக்க என்ன பிரச்சினை! ஐயா நேற்றில இருந்து நடுங்கி காய்ச்சல் காயுது சரி இந்த குழுசைகளை விழுங்குங்க பனிக்காலம் என்ற படியால் பனிவெளியில திரியாதிங்கோ சரி ஐயா நன்றி என்று வெளியில் வர நீலன் நீலன் என அழைக்க திரும்பி பார்த்தேன் அந்த பெயரோ போராட்ட காலத்தில் எனக்கு வைத்த பெயர் அது அந்த பெயரை தெரிந்தவர் யார் என திரும்பி பார்த்த போது அந்த பெண்தான் நீங்க?? நான் ரோசி (சுடர்) அக்கா நீங்களா? நீங்கள் எப்படி இங்க இந்த வேலைக்கு அது பெரிய கதை வா என கூட்டிக்கொண்டு போனா இங்க இரு......... சாப்பிட்ட நீயா? ஓம் சாப்பிட்ட நான் சரி பிளேன் டி குடி இல்ல அக்கா வேணாம் தம்பி ஒரு பிளேன் டீ போடு அக்கா காசை எடுத்துவர போனா வேலைக்கு கொண்டு வரும் பையை எடுக்க‌ அதிலதான் காசு வைத்திருந்தா அப்போது சிற்றுண்டி சாலைக்கு முன்னால் உள்ள சிறிய கோவிலில் பதறி விழுந்து ஒருவன் ஓடி வந்து நீயெல்லாம் கடவுளே இல்லை உன்னை நான் கும்பிட்டிருக்கவே கூடாது என்றான் உறவினர் யாரோ இறந்திருப்பார்கள் போல இன்னொருவன் வந்து விழுந்து வணங்கினான் ஆண்டவரே உனக்கு நன்றியப்பா என் வாழ் நாள் உனக்காகவே என்றான் பாவம் கடவுள் எவ்வளவு பிரச்சினைகளை தீர்க்க வேண்டியுள்ளது. கல்லாகவே இருப்பது கடவுளுக்கு நல்லது என என் மனதுக்குள் தோன்ற அக்கா ஓடி வந்தா என்ன குடிச்ச நீயோ ஓம் குடிச்சன் இங்க நல்ல புதுனம் பார்க்கலாமே அக்கா இங்க நேரம் போறதே தெரியுறல்ல கடைக்கார தம்பி இந்தா 20 ரூபா அக்கா கடை பக்கமே வாரல்ல போல இப்ப பிளேண்டீ 25 ரூபா ஓ அப்படியா சரி அஞ்சு ரூபா பிறகு தாரன் கடைக்கு வார ஆட்கள் இதயே சொல்லுங்க‌ இப்ப எல்லாம் விலை கூடிப்போச்சு அக்காவுக்கு தெரியாதே என்று கேட்டான் அந்த சிற்றுண்டிச்சாலை தம்பி அக்கா இத கொடுங்க நான் கூட வேலையில் இருந்து விலகித்தான் ஆஸ்பத்திரிக்கு வந்த நான் காய்ச்சலுக்கு லீவு கேட்ட நான் கணக்க முடிச்சு துரட்டிட்டாரு அக்கா இந்தா கையில இருக்கு 10000 ரூபா பார்த்தியா நம்ம சனத்தா ஓம் அக்கா உலகமே அப்படித்தானே இயங்குது ஓம் ஓம் பறவாயில்ல நீ வச்சுக்க ................. சரி குழுசையை காட்டு இந்தா பாருங்க உங்களுக்கு தெரியாத குழுசையா என்ன‌ ?? இந்த பவர் கூடுன குழுசைகளை விழுங்காமல் நல்ல ஊறல் பைய வாங்கு ஊறல் போட்டு குடி அது உடம்புக்கும் நல்லது பச்சை தண்ணியில அளையாமலும் இரு ம் சரி அக்கா என்ன நடந்த? அந்த கதைகளை விடு அதைப்பேசி பலன் இல்லை என மறுத்துவிட்டார் இஞ்ச பாரு என முகத்தை காட்டுனா முகம் ஒரு பக்கமாக தீ காயம் ஏற்பட்டு கழுத்து வரை நீண்டு இருந்தது. நீங்க மருத்துவ பிரிவிலிருக்கும் போது பார்த்தது அக்கா ம் நம்மட பிள்ளைகள் எல்லாம் போயிட்டுது நான் மட்டும் தான் அந்த ஷெல் தாக்குதல்ல காயப்பட்டு வந்த நான் ஊருக்கு எங்கயும் போக முடியல. போனாலும் பிரச்சினை இப்ப இங்கதான் ஒரு பிள்ளை படிக்குது அவரும் இறந்து போனார் ஓ அப்படியா? அதுதான் இந்த வேலையில சேர்ந்த நான் சாப்பாடு இங்க கிடைக்கும் அந்த செலவு மிச்சம் பிள்ளைக்கு படிப்புக்கு மட்டும் காசு............... ம் அக்கா இப்ப முன்னாள் போராளிகளுக்கு கனபேர் உதவி செய்யுறாங்க தானே அக்கா ம் செய்யுறாங்க ஆனால்???? அவங்க போண் நம்பற எடுத்து நமக்கு நீங்க போராளிதானா என பரீட்சை வைத்து பார்த்து உதவி செய்யுறதுல பல மாதம் போய் விடுகிறது தம்பி.............. ஓம் அக்கா நானும் கூட யாரிட்டயும் சொல்கிறதில்லை கடந்த காலத்தை . சரி சாப்பாடு ஒன்று கட்டித்தருகிறேன் கொண்டு போய் சாப்பிடு இங்க ஆஸ்பத்திரி சாப்பாடு என்று யாரும் பெரிதாக சாப்பிடமாட்டார்கள் சாப்பாடு இருக்கு கோழிகறி இன்றைக்கு என அக்கா சாப்பாடு எடுக்க போனா கையில் இருந்த அந்த 10000 ரூபாவை அவ பையில் அவக்கு தெரியாமல் வைத்துவிட்டு இருந்தேன் .அக்கா பொலித்தீன் பையையினுள் சாப்பாடு இட்டு தந்தா நானும் வாங்கிக்கொண்டு கோவிலுக்கு வெளியில் இருக்கும் ஒரு மர நிழலில் சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் தூங்கி விட்டேன் திடிரெனா யாரோ அதட்டி எழுப்புவது தெரிந்தது கோழி சாப்பிட்டு கோவிலுக்கு முன்ன உறங்க கடவுள் கோபித்து விட்டாரோ அவர்தான் அதட்டி எழுப்புகிறாரோ???? என எழும்ப கோவில் நிர்வாகியாம் இங்க படுக்க கூடாது போங்க என்றார். நானோ அந்த பஸ் நிற்கும் நிறுத்துமிடத்தில் இருக்கையில் அன்றிரவு தூங்க ஆயத்தமாகிறேன் அப்போது அந்த‌ சுவற்றில்............. இதோ கடவுள் வருகிறார் என போஸ்டர் ,இன்னும் பல கோவில்களின் போஸ்டர்கள் ஒட்டி இருந்தது அந்த நிலையத்தில் நான் கூட பயமில்லாமல் தூங்கினேன் நாளை என்னை எழுப்பி விடுவார் என்ற நினைப்பில்... மலிந்து போன கடவுள்களை நோக்கி..................................
  5. ‘சித்தப்பா’ என்றுதான் அவனை அழைப்போம். கடற்தொழிலாளி. எனது நண்பன். மீன்கள் பிடிக்கும்போது அரிதாக இந்த ‘காளை’ மீன் அகப்படும். அதை சந்தைக்கு அனுப்பாமல், தாங்களே சமைத்துச் சாப்பிடுவதாகவும் மிகவும் ருசியாக இருப்பதாகவும் அவன் என்னிடம் சொல்லி இருக்கிறான். நானும் அதை சாப்பிட ஆசைப்பட, எப்பொழுது அந்த மீன் அவன் விரித்த வலையில் விழுந்தாலும் அது என் வீட்டுச் சட்டிக்குள் வந்து விடும். மேற்கொண்டு அந்த காளை மீன் பற்றிய விபரங்கள் எனக்குத் தெரியாது. காளை மீன் சாப்பிட்டு நாலு தசாப்தங்களுக்கு மேலாயிற்று. சும்மா இருந்த சங்கை எடுத்து டொக்டர் ஊதிப் போட்டு போட்டார்.
  6. நன்றி. இது எனது தந்தையாரால் தான் ஏனையவர்களுடன் இணைந்து கிராமத்தின் வளர்ச்சிக்கு என்ன செய்திருந்தோம் என்று தான் வாழுங்காலத்தில் வெளியிட வேண்டும் என்று எழுதப்பட்டது. அவரது எதிர்பாராத இழப்பின் பின் நாம் (பிள்ளைகள்) ஒரு வருட நினைவாக அதை ஒரு நூலாகக் கொண்டு வந்திருந்தோம்.
  7. சென்ற வருடம் அங்கு போயிருந்தபோது நானும் மைத்துனனும் பாசயூர் மீன் சந்தைக்குப் போயிருந்தோம். ஆவலில் துடிக்கத் துடிக்க குவித்து வைத்திருந்த மீன் நண்டு இறால் என்று ஏரளமாக வாங்கிவிட்டோம். பெரிய உரப் பை ஒன்றை வங்கி அதற்குள் எல்லாவற்றையும் போட்டு ஸ்கூட்டரில் ஒருவாறு வீட்டுக்குக் கொண்டு வந்தோம். கிணற்றடியில் தென்னை நிழலில் இருந்து எல்லாவற்றையும் வெட்டி முடிக்க இரண்டு மணித்தியாலங்கள் பிடித்தன. கூழுக்குத் தேவையானவற்றை முதலில் வெட்டிக் கழுவிக் கொடுத்திருந்தோம். மதியம் ஏற்பட்ட அகோரப் பசியில் அன்று குடித்த அளவு கூழ் வாழ்க்கையில் குடித்ததில்லை. மீண்டும் இப்படியானதொரு தருணத்தை எதிர்பார்த்தபடி... 🙂
  8. சாளை மீன்? குதிப்பு எண்டிறது ஒட்டி மீன் மாதிரி இருக்கும். ஓராவை விடவும் கொஞ்சம் வெளிறிய நிறமாக இருக்கும்! டாக்குத்தர் பழைய நினைவுகளைக் கிளறிப்போட்டார்..!
  9. இந்தக் கதையில் நல்ல நல்ல பழைய ஞாபகங்கள் எல்லாம் வருது.......! கடலில் மீன் பிடித்துக் கொண்டு அந்த முகத்துவாரத்துக்கு வாற வள்ளங்கள் பின் பிரிந்து கொழும்புத்துறை ஜெற்றி, பாஷையூர்,காரையூர் என்று போய் தரித்து நிக்கும்......அப்போது வள்ளங்களில் மறித்து நேரடியாக மீன்கள் வாங்குவது சிறப்பானது......ஒன்று ரெண்டு கூடைக்குறைய போடுவார்கள்.....! இது ஓரா மீனாகத்தான் இருக்கும்.....இடி முழக்கத்துடன் மேகம் கருத்து மழை பெய்யும்போது ஓராக்கள்தான் அடிப் பாறைகளில் இருந்து கூட்டம் கூட்டமாய் கிளம்பி நீருக்கு மேலால் குதித்து வருபவை. அந்நேரம் பண்ணைப்பாலத்தில் வெட்டுத் துண்டில் (இரை இல்லாமல்) போட்டுப் பிடிப்பார்கள்.....மீன் கூட்டங்களைப் பார்த்து வெடி எறிந்து விட்டு அதோடேயே குதித்து செத்து மிதக்கும் மீன்களை பைகளில் கட்டிக்கொண்டு வருவார்கள்.....இதில் சில ஆபத்துக்கள் உண்டு......வெடி பிந்தி வெடிச்சால் குதிப்பவர் மீனுக்கு முதல் போயிடுவார்......அடுத்தது கோட்டைக்குள் இருந்து சூடுகளும் நடக்கும்......மற்றது அந்நேரம் கடல் கொந்தளிப்பாய் இருக்கும். பாய்ந்து வரும் இந்த மீன்கள் வந்து கரையோரம் கல்லுகளில் அடிபட்டு கற்குவியலுக்குள்ளும் வீதியிலும் கூட வந்து விழும்......! நான் அப்போது அருகில் உள்ள கராஜில் வேலை செய்த காலங்களில் இவையெல்லாம் காணக்கிடைக்காத அனுபவங்கள்......! 😁
  10. உண்மையில் எனக்கு இன்னும் புரியாத விடயம், சாதாரண ஒரு களியாட்ட இசை நிகழ்ச்சியில் நடந்த ஒழுங்குபடுத்தல் குறைபாட்டு விடயத்தை இவ்வளவு சிரத்தையாகக் களமாடுவது எதற்கு? தமண்ணா ஆடுவதை TV யில் பார்த்து ரசிக்கலாமென்றால் Live show ஒன்றில் பார்ப்பது தவறானதா? ஒவ்வொரு கோடைகாலத்திலும் புலத்தில் நடாத்தப்படும் தென்னிந்திய இசை நிகழ்வுகளை ஆவலுடன் இரசிக்கும் புலம் பெயர்ஸ், இலங்கையில் அத்தி பூத்தாற்போல நடைபெறும் ஒரு விடயத்திற்கு குத்தி முறிவது அவர்களின் இரட்டை வேடத்தை வெளிக்காட்டுவதாக நான் கருதுகிறேன். 😏
  11. தோழர் பாலன் · அசானிக்கு இலங்கை குடியுரிமை உண்டு. குடியுரிமை உள்ளபடியால்தான் அவரால் இலங்கை கடவுச்சீட்டு பெற முடிந்தது. இலங்கை கடவுச்சீட்டு இருந்தபடியால்தான் அவரால் இந்திய விசா பெற்று விமானம் மூலம் இந்தியா சென்று சரிகமப நிகழ்வில் கலந்துகொள்ள முடிந்தது. இதை உணர்ந்துகொள்ள முடியாத நடிகர் சத்யராஜ் அவர்கள் அசானிக்கு மட்டுமல்ல இலங்கையில் மலையக தமிழர் எவருக்கும் இன்னும் குடியுரிமை வழங்கப்படவில்லை என்று பேசியிருக்கிறார். உண்மை என்னவெனில் இலங்கையில் மலையக தமிழர் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்தியா திரும்பிய மலையக தமிழர் முப்பதாயிரம் பேருக்கு இந்தியாவில் இன்னும் குடியுரிமை வழங்கப்பட வில்லை. அந்த முப்பதாயிரம் மலையக தமிழர் உட்பட ஒரு லட்சம் ஈழத் தமிழர் நாற்பது வருடமாக அகதிகளாகவே தமிழ்நாட்டில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கையில் மலையக தமிழர் விரும்பிய கல்வி கற்க முடியும். அரச வேலை பெற முடியும். அவர்கள் அமைச்சராகவும் கவர்னராகவும் இருக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் உரிய புள்ளி எடுத்தாலும் மருத்துவ கல்வி கற்க முடியாது. அரச வேலை பெற முடியாது. அமைச்சராகவோ கவர்னராகவோ வர முடியாது. இலங்கை அரசுக்கு மனசாட்சி இருந்தால் மலையக தமிழருக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். உண்மை என்னவென்றால் அவர் இதை இந்திய அரசைப் பார்த்துதான் கூற வேண்டும். ஆச்சரியம் என்னவெனில் மலையக தமிழருக்கு குடியுரிமை உண்டு என்பது சத்யராஜ்க்கு தெரியவில்லை என்பதைவிட அந்த நிகழ்வில் பங்குபற்றிய யாருக்குமே தெரியவில்லையா என்பதுதான். இதுகூடப் பரவாயில்லை. 1984ல் மதுரை மருத்துவமனையில் ஒரு மருத்துவர் என்னிடம் இலங்கையில் இருந்து பஸ்சில் வந்தீர்களா அல்லது ரயிலில் வந்தீர்களா என கேட்டார். அவருக்கு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடல் இருக்கிறது என்பதுகூட தெரியவில்லை. இது உண்மையில் அவர்கள் தவுறு இல்லை. இத்தனை நாளாக நாம் இன்னும் எமது பிரச்சனைகளை அவர்களுக்கு தெளிவாக புரிய வைக்கவில்லை என்பது எமது தவறே.....!
  12. நல்ல தகவல் அடங்கிய கருத்து Island. யாழ்பாணத்தில் நடைபெற்றது தமிழ்நாட்டு தொப்பிள்கொடி உறவுகளின் இசை, நடனங்கள் தானே. சினிமா இசை நடன நிகழ்ச்சிகள் பார்ப்பதால் படிப்பு பாதிப்படைய போவதில்லை. பாடகராக வருகின்ற ஒருவரின் கல்வி பாதிப்படையலாம் அது அவரது விருப்பம்.
  13. அதிபர் இராமர் (ராமு வாத்தியார்) கடந்த வருடம் பெப்ரவரி 8ந்திகதி காலமாகி இருந்தார். அவரின் ஒரு வருட நிகழ்வில், யாழில் இந்தப் பதிவு அவரது சேவையை எங்களுக்குச் சொல்கிறது. கிராமத்தை முன்னேற்ற அங்கு வாழ்ந்தவர்கள் (எதிர்ப்புகள் வந்த போதும்) ஒற்றுமையாகச் செயற்பட்டார்கள் என்பதோடு வெற்றியும் கண்டார்கள் என்பதை காணமுடிகிறது. இந்த ஒற்றுமை எங்கள் எல்லோரிடத்திலும் இருந்தால்… ராமு வாத்தியாரை மட்டும் அல்ல அவரது மகனையும் பாராட்டுகிறேன் 👍
  14. கேள்வியை வடிவா கவனித்தால்...உள் நோக்கம் புரியும்... சிலர் நக்கலாக கேட்கும் கேள்வி ..."முழங்கினர்" என்று தான் கேட்டுள்ளனர் ..."முழங்கி கொண்டிருக்கிறார்கள்" என கேட் கவில்லை நாடு வேணும் என் கேட்டியள் இப்ப ஒரு கோதாரியும் இல்லை என்ற மாதிரி ....
  15. துளித்துளியாக மண்ணில் விழும் நீர் வெள்ளமாகி அழகாக ஓடிச்செல்வதுபோல் "கோவிலாக்கண்டி" கிராமத்தின் வளர்ச்சி அடுக்கடுக்காக சொல்லப்பட்டிருக்கு......அதன் வளர்ச்சியில் திரு. வேலுப்பிள்ளை இராமர் ஐயாவின் சேவை அளப்பரியது.....அது இக் கிராமத்தின் வரலாற்றில் என்றும் கல்வெட்டாய்ப் பதிந்திருக்கும்......இங்கு அவர்களது இணையப் பக்கத்தை இணைத்ததன் மூலம் மென்மேலும் பல தகவல்களை அறிந்து தெளியக்கூடியதாய் இருக்கின்றது.......! 🙏 இணைப்புக்கு நன்றி மோகன் ..........!
  16. கருணா குழுவால் சுட்டுக் கொல்லப் பட்ட யோசப் எம்.பி போல வாழ வேண்டுமென்று ஒருவர் சொல்கிறார் பெருமாளாவது வைச்சுக் கொண்டு வஞ்சகம் செய்யும் ஆளல்ல, அவரது ஆழம், யோசிப்பு எல்லோரும் அறிந்தது தான்! நீங்களோ அதற்கு சிரிப்புக் குறியும் போட்டு, கீழே இருக்கும் கருத்தை மிகவும் சாதாரணமாக எழுதியிருக்கிறீர்கள். எப்படி முடிகிறது ஒரு அரசியல் படுகொலையை நகைச்சுவையாக்க? பெரியோர், மூத்தோர் என்ற அடையாளத்தைத் தாங்கியிருக்கிறீர்கள், அதற்கேற்ப நிதானித்துக் கருத்தெழுதாமல் இப்படி இருக்கிறீர்கள்??
  17. உண்மையான நிலவரம் இதுதான் . முதலில் மக்களின் பொருளாதாரம் நிலைத்தால் தான் அங்கு மக்கள் நீடிப்பார்கள் . இப்ப பாருங்கோ கனடா என்று எத்தனை பேர் அதுவும் அரசாங்க தொழில் உள்ளவர்கள் கூட செல்கின்றார்கள் . கடைசியில் இந்த கோமாளிகள் கதைக்கின்ற தேசியத்தில் சிங்களவனும் முஸ்லிமும் தான் மிஞ்ச போறார்கள் . அப்போது தேசியம் என்ற தேவையே இருக்காது . முதலில் மக்களின் நிலையை உயர்த்தக்கூடிய அதிகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதைக்க வேண்டும் .
  18. இங்கு தினாவெட்டாக கேள்வி கேட்கவில்லை ...போராளிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்...அந்நிய படையெடுப்பு நடை பெறும் காலங்களில் மக்கள் கிளர்த்தெழுவது இயற்கை ..ஒரு சிலர் சகித்து கொண்டு செல்வார்கள்,பந்தம் பிடித்து தப்பி பிழைப்பார்கள் ..வேறு சிலர் போராடுவார்கள்....முள்ளிவாய்காலில் நடந்த துயர சமபவம் போல் ஒன்று நடைபெற வேணும் என மகிழ்ச்சியடைந்த உத்தமர்களும் உண்டு... முள்ளிவாய்க்கால் நடந்த சம்பவத்தை தினாவெட்டாக கூறி அரசியல் கருத்து எழுத வேண்டிய வங்குரோத்து நிலையில் நான் இல்லை....தொடர்ந்து ஆக்க பூர்வமான கருத்துக்களை வைத்து அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய உத்தமர்கள் எல்லாம் இன்னும் நூறு வருடங்கள் சென்றாலும் இதே பல்லவி தான்... தமிழன் ஒற்றுமை இல்லை துரோகி பட்டம் சொல்லுவான் முள்ளிவாய்க்கால் அவலம் பிரதேசவாதம் பேசுகிறான் தமிழன் காவாலி சிங்களவன் தமிழனை விட நூறு மடங்கு நல்லவன் நீங்கள் சிங்கள் காவாலிகள் செய்த இன அழிப்பை மறைக்க குத்தி முறியும் பொழுது நான் தமிழ் காவலிகள் செய்த செயலை மறைக்க கருத்து எழுதினால் என்ன தப்பு....
  19. வெண்முரசு நாவல் 16: “குருதிச்சாரல்” ஆசான் ஜெயமோகனின் மகாபாரத காப்பிய மறு ஆக்கமான வெண்முரசு நாவல் வரிசையில் உள்ள 26 நாவல்களில் 16 ஆவது நாவல் “குருதிச்சாரல்” வரை வாசித்துவிட்டேன். குருஷேத்திரப் போருக்கு முன்னரான களநிலையில், போரினை தவிர்ப்பதற்காக கிருஷ்ணன் துரியோதனனிடம் மூன்று முறை செல்லும் தூதுகளையும், தம் மைந்தரையும், கொடிவழியினரையும் போரின் மூலமாக இழக்காமல் பாதுகாக்க முயலும் பாண்டவ, கெளரவ தரப்பு அரசியர்களின் முயற்சிகளையும் “குருதிச்சாரல்” நாவல் விரித்துச் செல்கின்றது. முன்னர் வெறும் பெயர்களாக அறியப்பட்ட அரசியர்களின் - தேவிகை (தருமர்), விஜயை (சகாதேவன்), பிந்துமதி (பீமன்), கரேணுமதி (நகுலன்), பலந்தரை (பீமன்), துச்சளை (கெளரவர்களின் சகோதரி - சிந்து நாட்டரசன் ஜயதத்ரனின் அரசி) , பானுமதி (துரியோதனன்), அசலை (துச்சாதனன்), தாரை (விகர்ணன்), விருஷாலி (கர்ணனின் சூத அரசி), சுப்ரியை (கர்ணனின் ஷத்திரிய அரசி) - ஆளுமைகளும், உளநிலைகளும், அகத்தளத்தில் இருந்து வெளியே வந்து அரசசூழ்தலில் (ராஜதந்திரங்களில்) அவர்கள் பங்குகொள்ளுவதும் நாவலை நகர்த்துகின்றது. துரியோதனனின் அஸ்தினபுரியைத் தலைநகராகக் கொண்ட குருநிலம் முழுவதையும் ஆளவேண்டும் என்ற மண்ணாசையை தடுக்கமுடியாத புத்திர பாசத்தில் திருதராஷ்டிரர் இருக்கின்றார். அவர் அசலை, மற்றைய அரசியர்களின் வேண்டுதலாலும், தூண்டுதலாலும் மைந்தர்களையும், கொடிவழியினரையும் காக்க அணுக்கன் சஞ்சயன் மூலமாக பாண்டவர்களிடம் ‘போர் நிகழலாகாதென்று. எந்நிலையிலும் பாண்டவர்கள் படைக்கலம் எடுக்கலாகாது. அனைத்தையும் இழக்க நேரிட்டாலும்கூட’ என்ற ஆணையை மன்றாட்டாக வைக்கின்றார். சஞ்சயன் தூதுச்செய்தியை தெரிவித்தபோது திரெளபதி தான் துகிலுரியப்பட்டவேளை உரைத்த வஞ்சினத்தை துறந்துவிட்டதாகச் சொன்னாள். சகாதேவன் பாண்டவர் கொண்டுள்ள வஞ்சம் இப்புவியில் எழுந்த அத்தனை பெண்டிருக்காக எனவும் தனியே திரெளபதிக்கு மாத்திரமல்ல எனவும், போரைத் தவிர்த்தல் என்பது அவ்வஞ்சத்தை துறந்து மீளவும் கானேகுவதை ஏற்பதில் முடியும் என்றான். எனினும் மூத்த தந்தையான திருதராஷ்டிரரின் ஆணையை பாண்டவர்கள் தட்டாமல் ஏற்கின்றனர். கிருஷ்ணர் முதலாவது தூதில் கெளரவரின் அரசவைக்குச் சென்று, நால்வேதத்தின் காவலனாக நிற்பதாகச் சொல்லும் துரியோதனனிடம் அவன் முன்னர் கொடுத்த சொல்லுறுதியாகிய அஸ்தினபுரி அரசின் மேற்குநிலம், பாதிக் கருவூலம், இந்திரப்பிரஸ்தம் ஆகியவற்றை பாண்டவர்கள் சார்பில் கேட்கின்றார். பாண்டவர்கள் நாடாளும் தகுதியற்றவர்கள் என துரியோதனன் அக்கோரிக்கையை மறுதலித்தும், தந்தை திருதராஷ்டிரரை விலக்கியும், தன்னை கலிதேவனுக்கு முழுதளிக்கின்றான். போருக்கு ஒருங்கும் ஷத்திரிய அவைக்கு இரண்டாம் முறையாகத் தூது வந்த கிருஷ்ணர் அஸ்தினபுரி நாட்டின் வடகிழக்கெல்லைக் காட்டின் அருகே ஐந்து ஊர்களை பாண்டவர்களுக்காகக் கோருகின்றார். பாண்டவர்கள் ஷத்திரியர் அல்ல, அவர்கள் நாலாம் வர்ணமாகிய சூதர்களே என்று பாண்டவர்களின் பிறப்பை இழிவுசெய்து, குந்தி அவைக்கு வந்து பாண்டவரின் தந்தையர் எவர் எனக் கூறவேண்டும் எனவும் துரியோதனன் சிறுமை செய்கின்றான். அஸ்தினபுரியின் ஒரு பருமணலையும் கொடுக்கமுடியாது என கிருஷ்ணரை வெறுங்கையுடன் திருப்புகின்றான். போரின் வெற்றிக்காக துரியோதனன் ஏற்பாடு செய்த புருஷமேத யாகத்தின் (யாகங்களில் உச்சமாக தூய அந்தணனை எரிகுளத்தில் அனலுக்கு பலிகொடுப்பது!) வேத அவைக்கு மூன்றாவது தூதுடன் சாந்தீபினி குரு நிலையின் ஆசிரியராக வந்த கிருஷ்ணர், ஷத்திரியர் வேலிகட்டிப் பாதுகாக்கும் நால்வேதங்களை மட்டுமல்ல, அசுரவேதம், நிஷாதவேதம் என இன்னும் பலவேதங்களின் நற்கூறுகளை எடுக்கும் வேதமுடிபே தூயது என்று வேத அவையில் வேதியரோடும், முனிவர்களோடும் தத்துவவிசாரணைகளில் ஈடுபடுகின்றார். எனினும் எவரும் வேதமுடிபை ஏற்காததால் தோல்வியே வருகின்றது. இந்த தத்துவ விசாரணைகளின்போது கிருஷ்ணர், துரியோதனனால் வேள்வியின் துணைக்காவலனாக இருத்தப்பட்ட கர்ணனை அவன் சூதன் என்பதால் ஷத்த்ரியர்களையும், அந்தணர்களையும் கொண்டே அகற்றச் சூழ்கை செய்கின்றார். வரவிருக்கும் போரில் கர்ணன் போர்த்தளபதியாக ஆகமுடியாத நிலையை இது உருவாக்குகின்றது. கிருஷ்ணர் வேள்வியை ஏற்காமல் அவையிலிருந்து வெளியேறும்போது துரியோதனனிடம் கொடையாக பாண்டவர்களை அஸ்தினபுரியின் குடிகள் என ஏற்று அவர்களுக்கு ஐந்து வீடுகளைக் கோருகின்றார். அதனையும் துரியோதனன் தொல்வேதங்களின் நெறிகளைக் காரணம்காட்டி மறுக்கின்றான். இவ்வாறாக, கிருஷ்ணர் மூன்று தூதுகளிலும், வேதமுடிபை ஏற்கச் செய்வதிலும் தோல்விகளைத் தழுவி அஸ்தினபுரிக்கும், அரசகுடிக்கும் தான் இனி பொறுப்பல்ல என்று கூறித் திரும்பும்போது, திருதராஷ்டிரர் அவர் முன்னர் பாண்டவர்கள் தன்மைந்தரை களத்தில் எதிர்கொள்ளலாகாது எனக் கொடுத்த ஆணையைத் திரும்பப் பெறுவதாகக் கிருஷ்ணருக்குச் செய்தி அனுப்புகின்றார். போருக்கான தடைகள் இல்லாமல் போவதோடு, கிருஷ்ணரின் மூன்று தூதுகளினூடாக பாண்டவர்கள் ஒருபோதும் போரை விரும்பவில்லை என்பதும், துரியோதனனின் மண்மீதான பேராசையும் உறுதிப்படுத்தப்படுகின்றன. நாவலில் போரைப் பற்றிய பீஷ்ம பிதாமகரின் கூற்று. “ போர் என ஒன்று எழுமென்றால் நாம் ஆடைகளை என நாம் பெற்றும் கற்றும் உற்ற அனைத்தையும் கிழித்துவீசிவிட்டுத்தான் முன்செல்வோம். தந்தையர் நெஞ்சில் உதைப்போம். ஆசிரியர்களின் முகத்தில் உமிழ்வோம். உடன்பிறந்தார் தலைகளைக் கொய்வோம். இளமைந்தர் குருதியில் குளித்துக் களியாடுவோம்.” மனித உரிமைகளும், மனித நேயமும் நிலவுவதாகச் சொல்லப்படும் இந்நவீன உலகில் நடக்கும் போர்களில் இழைக்கப்படும் அநீதிகளும், போர்க்குற்றங்களும் அன்றைய குருஷேத்திரப் போருக்குச் சற்றும் குறைவானதல்ல!
  20. சுமந்திரனின் சுயபரிசோதனை February 12, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — மூன்று வாரங்களுக்கு முன்னர் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலில் தனது தோல்விக்கு முக்கியமான காரணத்தை யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கடந்த வாரம் யூரியூப் தமிழ் அலைவரிசை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் விளக்கிக் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது. தலைவர் தேர்தலுக்கு பின்னரான தனது நிலைப்பாடுகள் குறித்து விரிவாகக் கூறிய அவர், நேர்காணலின் இறுதிப்பகுதியில் தேர்தல் முடிவு தொடர்பில் செய்த சுயபரிசோதனை அல்லது உள்முகச் சிந்தனை பற்றி மனந்திறந்து பேசினார். கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக தமிழரசு கட்சியின் செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபாட்டுன் உழைத்த உங்களுக்கு எதிராக கட்சிக்குள் ஏன் இந்தளவு எதிர்ப்பு என்று நேர்காணலைக் கண்ட பத்திரிகை ஆசிரியர் சுமந்திரனிடம் கேட்டபோது அவர் அளித்த பதில் வருமாறு ; ” நீங்கள் கேட்கின்ற விடயம் குறித்து நான் நிறையவே யோசித்தேன். ஒரு கருத்து எனது மனதில் இப்போது பதிகிறது. நான் கட்சிக்கு என்ன செய்தேன், எவ்வாறு செயற்பட்டேன் என்பதைப் பற்றிச் சொன்னால் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆனால், நான் எவ்வளவுதான் செய்தாலும் கூட, எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அவை தீர்க்கப்படாமல் இருக்கும் வரை என்னுடைய அணுகுமுறை எமது மக்களின் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வருகின்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இருக்கவில்லை. ” இது ஏனென்று சொன்னால், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதுடன் சர்வதேச மட்டத்தில் சந்திப்புக்களையும் நடத்துகின்ற நான் சில விடயங்களை, சில உணர்ச்சிகளை வெளிப்படுத்தமுடியாது. அதற்கேற்ற வண்ணமாக நான் சில நகர்வுகளைச் செய்யவேண்டும். நானும் தமிழ்த் தேசியத்தைப் பகிரங்கமாகப் பேசுகிறேன். ஆனால், நான் பேச்சுவார்த்தைகளை நடத்தும் தரப்புகளுக்கு ஒரு முகத்தையும் கட்சிக்கும் எமது மக்களுக்கும் வேறு ஒரு முகத்தையும் காட்டுவதில்லை. அவ்வாறு காட்டவும் முடியாது. ” பிரச்சினைத் தீர்வுக்கான ஒரு வழி வந்திருந்தால், மக்களுடைய நிலைப்பாடு வித்தியாசமானதாக இருந்திருக்கும். ஆனால் பிரச்சினை தீராமல் இருக்கும்போது, நம்பிக்கை இல்லாமல் இருக்கும்போது குறைந்தது தங்களது உணர்ச்சிகளையாவது வெளியில் சொல்லவேண்டும் என்று மக்கள் நினைத்திருக்கலாம். ஆனால், நான் அவ்வாறு சொல்கிறவன் அல்ல என்கிற ஒரு ஆதங்கம் அவர்களுக்கு இருந்திருக்கலாம். அது ஒரு காரணமாக இருக்கலாம். “இந்த நேரத்தில் எங்களுடைய உணர்வை தென்னிலங்கைக்கு வெளிப்படுத்தவேண்டிய தேவை இருப்பதாக எமது மக்கள் உணருகின்றார்கள் என்று நான் நினைக்கிறேன். “திருகோணமலையில் தலைவர் தேர்தல் முடிந்து கொழும்பு திரும்பியபோது பல கட்சிகளின் தலைவர்கள் தாங்கள் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை. வியப்பாக இருக்கிறதே என்று என்னிடம் கூறினார்கள். எங்களுடைய பிரச்சினை கள் தீர்க்கப்படாமல் இருப்பதே இதற்கு காரணம். தோல்வியடைந்த ஒருவனாகவே என்னை எமது மக்கள் நோக்குகிறார்கள். உங்களுடன் பேசி எந்தப் பிரயோசனமும் இல்லை. அதுவே உண்மையான நிலைமை. நீங்கள் பிரச்சினையை தீர்க்காமல் இருக்கும் வரை எமது மக்கள், பிரச்சினைதான் தீராமல் விட்டாலும் சரி, தங்களுடைய உணர்ச்சிகளையாவது வெளிப்படுத்துகின்ற ஒருவர் தேவை என்று இந்த தேர்தல் மூலம் சொல்லியிருக்கிறார்கள். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். “நான் அந்த உணர்ச்சிகளை முழுமையாக வெளிப்படுத்திப் பேசியவனல்ல. அவ்வாறு இனிமேலும் செய்யப்போகிறவனும் இல்லை. அது என்னுடைய சுபாவமும் இல்லை. அரசியலுக்காக, கட்சித் தலைமையைப் பெறவேண்டும் என்பதற்காக அவ்வாறு செயற்படப்போகிறவனும் அல்ல. ஆனால், சிறிதரன் அடைய நினைக்கின்ற அதே இலக்கை அடைவதற்காகவே நானும் இவ்வளவு காலமும் பாடுபட்டிருக்கிறேன். அதை அவரும் இணங்கிக்கொள்வார். அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம். “ஆனால், எமது மக்களுக்கு இப்போது முக்கியமாக தேவைப்படுவது தங்களுடைய உணர்வுகளை வெளியுலகத்துக்கு குறிப்பாக தென்னிலங்கைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே. அதனால் அவர்கள் சிறிதரனை தெரிவு செய்திருக்கிறார்கள். நல்லது. அதற்குப் பின்னால் நான் முழு மூச்சையும் கொடுத்து ஒத்துழைப்பேன்.” இறுதியாக கட்சியின் பொதுச்செயலாளர் உட்பட நிருவாகிகள் தெரிவு குறித்து கிளம்பிய சர்ச்சை தொடர்பாக பேசியபோது பதவி விலகும் தலைவர் மாவை சேனாதிராஜா கட்சியின் யாப்பின் பிரகாரம் சகல விடயங்களையும் கையாளமுடியாது என்று கூறியதை நேர்காணலில் ஒரு கட்டத்தில் சுட்டிக்காட்டிய சுமந்திரன் அந்த யாப்பை தானே நீதிமன்றத்தில் காப்பாற்றிக் கொடுத்தாகவும் இப்போது அவர்கள் அதற்கு அப்பால் செயற்பட முனைவதாகவும் குறிப்பிட்டார். தமிழரசு கட்சி சமஷ்டி முறையிலான அரசாங்கம் ஒன்றுக்காக குரல் கொடுப்பதன் மூலமாக நாட்டுப் பிரிவினையை குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது என்று கூறி களனிப்பகுதியைச் பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் 2014 மார்ச்சில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு 2017 ஆகஸட் 4 வழங்கப்பட்டது. அதில் தமிழரசு கட்சிக்காக சுமந்திரனே வாதாடினார். அன்றைய பிரதம நீதியரசர் பிரியசத் டெப் தலைமையில் நீதியரசர்கள் உபாலி அபேரத்ன, அனில் குணரத்ன ஆகியோரைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு சமஷ்டி முறை அரசாங்கம் ஒன்றுக்காக குரல் கொடுப்பது இலங்கையின் அரசியலமைப்பை மீறுவதாகவோ நாட்டுப் பிரிவினையைக் கோருவதாகவோ அமையாது என்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. அந்த வழக்கில் தமிழரசு கட்சியின் யாப்பை நியாயப்படுத்தி சுமந்திரன் செய்த வாதம் தமிழ்த் தேசிய அரசியலுக்கு அவர் வழங்கிய முக்கியமான பங்களிப்பாக பரவலாக நோக்கப்படுகிறது. அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி அரசியலமைப்பு வழிமுறையின் ஊடாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்காண முயற்சிகளை முன்னெடுத்த சகல தமிழ்த் தலைவர்களுக்கும் இறுதியில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தையே தனது குறுகிய கால அரசியல் வாழ்வில் சுமந்திரனும் சந்திக்கவேண்டியேற்பட்டது. அரசாங்கம் உட்பட தென்னிலங்கை அரசியல் சமுதாயம் காலங்காலமாக கடைப்பிடித்த ஏமாற்றுத்தனமான அணுகுமுறைகள் தமிழ் மிதவாத தலைவர்களை தமிழ் மக்களிடம் இருந்து தனிமைப்படுத்திய வரலாறு ஒன்று இருக்கிறது. அரசாங்கங்களுடன் தாங்கள் நடத்துகின்ற பேச்சுவார்த்தைகளை நியாயப்படுத்தி தங்களது மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியதாக இடைக்காலத்தில் குறைந்தபட்ச பயன்களையாவது காண்பிப்பதற்கு தமிழ் தலைவர்களினால் முடியுமாக இருந்ததில்லை. அந்த நிலைவரத்துக்கு காரணமான அரசாங்கங்களின் அணுகுமுறைகளும் செயற்பாடுகளுமே தமிழ் மக்கள் மத்தியில் தீவிரவாத சிந்தனை கொண்ட சக்திகள் செல்வாக்கு பெறுவதற்கு வழிவகுத்து வந்திருக்கிறது. இந்த பின்புலத்திலேயே தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலில் சிறிதரனின் வெற்றியையும் சுமந்திரனின் தோல்வியையும் நோக்கவேண்டும். தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்ற ஒருவரே தேவை என்பதால் சிறிதரனை கட்சியின் தலைவராக தமிழர்கள் தெரிவு செய்தார்கள் என்பதையும் தன்னால் அவ்வாறான அரசியலைச் செய்யமுடியாது என்பதையும் வெளிப்படையாக ஒத்துக்கொண்டிருக்கும் சுமந்திரன் புதிய தலைவருடன் முழுமையாக ஒத்துழைப்பதாக கடந்த மூன்று வாரங்களிலும் பல தடவைகள் உறுதியளித்தார். ஆனால், தலைவராக தெரிவுசெய்யப்பட்ட தினம் முதலாக சிறிதரன் வெளிப்படுத்திவரும் கருத்துக்களும் அணுகுமுறைகளும் சுமந்திரனைப் போன்றவர்களைப் பொறுத்தவரை அவருடன் ஒத்துழைத்து அரசியல் பயணத்தை தொடர்ந்து முன்னெடுப்பில் உள்ள பிரச்சினைகளை தெளிவாக உணர்த்துகின்றன. கட்சியின் நிருவாகப் பதவிகளுக்கு தெரிவுகளைச் செய்வதில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை தொடர்பில் மூண்ட சர்ச்சையை அடுத்து ஒத்திவைக்கப்பட்ட மகாநாட்டை விரைவில் கூட்டி தலைவர் பதவியை முறைப்படி பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு சுமந்திரன் சில தினங்களுக்கு முன்னர் சிறிதரனுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதினார். அதற்கு இன்னமும் அவர் பதில் அனுப்பியதாகத் தெரியவில்லை. இது இவ்வாறிருக்க, தலைவர் தெரிவுக்கு பிறகு சிறிதரன் வெளிப்படுத்திருக்கும் கொள்கை நிலைப்பாடுகளை சுருக்கமாகப் பார்ப்போம். திருகோணமலையில் ஜனவரி 28 நடைபெறவிருந்த கட்சியின் மகாநாட்டில் முறைப்படி பதவியை ஏற்றுக்கொண்டு சிறிதரன் தனது கொள்கை நிலைப்பாடுகளையும் எதிர்கால அணுகுமுறைகளையும் விளக்கிக்கூறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது சாத்தியமாகாமல் போய்விட்டது. அண்மையில் தமிழ் கார்டியன் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் சிறிதரன் கூறிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் தீர்வாக அமையப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருக்கிறார் என்பது தெளிவாகிறது. ஒற்றையாட்சி வரையறைக்குள் காணப்படக்கூடிய எந்தவொரு தீர்வும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்யப்போவதில்லை என்று கூறிய அவர் தமிழ் மக்களின் பயணம் சமஷ்டி முறையொன்றை அடிப்படையாகக் கொண்ட தீர்வை நோக்கியதே என்று குறிப்பிட்டார். தமிழர்களின் நிலம், மொழி மற்றும் கலாசார அடையாளங்களை அங்கீகரிக்கக்கூடிய வகையில் வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் இணைந்த தீர்வொன்றைக் காண்பதுவும் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான ஒரு அரசியல் பாதையை வகுப்பதற்கு உதவுவதுமே தங்களது இலட்சியம் என்றும் அவர் கூறினார். மேலும், தாயகத்தில் உள்ள தமிழர்களையும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தையும் ஐக்கியப்படுத்தி அரசியல் பாதையொன்றை வகுப்பதில் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுடன் இணைவது முக்கியமானது என்று தமிழ் கார்டியனுக்கு கூறிய அவர், தமிழ் கட்சிகளின் ஐக்கியத்துக்கு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் தேசியவாத சக்திகளை ஐக்கியப்படுத்துவதிலும் சகல தமிழர்களுக்குமான ஒரு பாதையை வகுப்பதிலும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்துக்கு முக்கியமான வகிபாகம் இருக்கிறது என்றும் தெரிவித்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, தங்களது பயணம் ஈழத்தேசிய விடுதலை போராளிகளின் கல்லறைகளில் இருந்து தொடங்கவேண்டும் என்று அவர் கூறியது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தை குறிப்பாக அவர்கள் மத்தியில் இருக்கும் தீவிரவாத நிலைப்பாடுகளைக் கொண்ட சக்திகள் உட்பட கடுமையான தேசியவாத உணர்வுடைய தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தும் நோக்கிலேயே அவர் அந்த கருத்துக்களை வெளியிட்டார் என்பதில் சந்தேகமில்லை. தலைவராக தெரிவு செய்யப்பட்ட உடனடியாகவே கூட அவர் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தனது வெற்றிக்கு செய்த பங்களி்ப்புக்காக நன்றி தெரிவித்தார். நடந்துமுடிந்திருப்பது ஒரு உட்கட்சித் தேர்தல் மாத்திரமே. தற்போதைய சூழ்நிலையில் சிறிதரனின் நிலைப்பாடுகள் குறித்து பரந்துபட்ட வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எவருக்கும் தெரியாது. உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து சுமார் 15 வருடங்கள் கடந்த நிலையில் இன்றைய உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிலைவரங்களுக்கு மத்தியில் இலங்கை தமிழர்களின் பிரதான அரசியல் கட்சியின் தலைவராக வந்திருக்கும் சிறிதரனுக்கு தமிழ் மக்களுக்கு முன்னால் உள்ள சவால்களை முறையாக விளங்கிக்கொண்டு செயற்படவேண்டிய தலையாய பொறுப்பு இருக்கிறது. தமிழர்களின் மூன்று தசாப்தகால ஆயுதப்போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த தலைவர்களையும் போராளிகளையும் நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்துவது என்பது வேறு. கடந்த காலப் போராட்டங்களின் நினைவுகளுடனேயே தமிழ் மக்களைக் கட்டி வைத்திருக்கக்கூடிய அரசியல் அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது என்பது வேறு. இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு விளங்கிக்கொள்ளப்பட வேண்டும். கடந்த காலப் போராட்டங்களின் நினைவுகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சிந்தனை அந்தப் போராட்டங்களில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு மாறிவரும் சூழ்நிலைக்கு பொருத்தமான முறையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை (அடிப்படைக் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல்) அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கான தந்திரோபாயங்களை வகுப்பதற்கு வழிகாட்டுவதாக அமையவேண்டும். வெறுமனே உணர்ச்சிவசமான கற்பிதங்களுடன் கடந்த காலத்தைக் காவியம் போன்று நினைவுபடுத்திக் கொண்டிருப்பதில் உள்ள பொருந்தாத்தன்மையில் இருந்து தமிழரசு கட்சியின் தலைவர் தன்னை விடுவித்துக் கொள்ளவேண்டும். ஆயுதப்போராட்டத்தில் மாத்திரம் நம்பிக்கை வைத்துச் செயற்பட்ட ஒரு இயக்கத்தின் அரசியல் கோட்பாடுகளையும் சுலோகங்களையும் பாராளுமன்ற அரசியலுக்கு பிரயோகிப்பதில் உள்ள நடைமுறைச் சாத்தியமற்ற தன்மை புரிந்து கொள்ளப்படவேண்டும். மண்ணில் நிலவும் உண்மையைப் பற்றிய பிரக்ஞை இன்றி நடைமுறைக்கு ஒவ்வாத தீவிரவாதச் சிந்தனையுடன் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் இயங்கும் குழுக்களின் (இத்தகைய குழுக்களில் ஒன்றுதான் துவாரகா வீடியோ நாடகத்தையும் தயாரித்து ஒளிபரப்பியது) நிகழ்ச்சி நிரலுக்கு வசதியாக அமையக்கூடிய சூழ்நிலைகளை வடக்கு, கிழக்கில் தோற்றுவிக்கும் வகையிலான அணுகுமுறைகளும் செயற்பாடுகளும் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். ஏற்கெனவே கட்டுப்படியாகாத போர் ஒன்றைக் கடந்து வந்து இன்னமும் கூட வழமை வாழ்வுக்கு திரும்புவதற்கு போராடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை மீண்டும் இடர்பாடுகளுக்குள் தள்ளிவிடக்கூடாது. https://arangamnews.com/?p=10465
  21. அழகு நிறைந்த ஃபிளமிங்கோ பறவைகள்! Published By: DIGITAL DESK 3 14 FEB, 2024 | 10:32 AM “ஃபிளமிங்கோ” வலசை பறவைகள் மன்னார் பகுதியில் காணப்படுகிறது. இங்கு உணவு கிடைப்பது, வானிலை மற்றும் இனப்பெருக்க ஜோடிகளைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட பல காரணங்களால் தங்கள் நாட்டிலிருந்து இலங்கைக்கு இடம்பெயர்வதாக அறியப்படுகிறது. இவ்வாறு இடம்பெயரும் பறவைகளுள், மிகவும் அரிதான மற்றும் மிகவும் உணர்திறன் கொண்ட பறவை ஃபிளமிங்கோ ஆகும். தற்போது அவை அனைத்தும் மன்னாரில் குவிந்துள்ளன. இடம்பெயர்ந்த காலம் எப்போதுமே பார்வையாளர்களுக்கு ஒரு உற்சாகமான நேரமாக உள்ளது, அவர்கள் மன்னாரின் ஈரநிலங்களில் ஐந்து மாதங்களுக்கும் மேலாக செலவழிக்கும் அழகான மற்றும் கம்பீரமான ஃபிளமிங்கோ பறவைகளை ஓய்வு நேரத்தில் பார்க்கவும், ஆச்சரியப்படுத்தவும், படிக்கவும் மற்றும் புகைப்படம் எடுக்கவும் இணையற்ற வாய்ப்பைப் பெறுகிறார்கள். இந்த வகை பறவைகள் நவம்பரில் மாதம் முதல் ஏப்ரல் வரை தங்கியிருக்கும். அவைகள் இலங்கைக்கு மட்டுமன்றி, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கும் இடம்பெயர்கின்றன. ஃபிளமிங்கோ பறைவைகளை புகைப்படம் பிடித்த வனவிலங்கு புகைப்பட கலைஞர் ஏ.எல் முஹமட் ரசீம் தெரிவிக்கையில், மன்னாரில் தற்போது சுமார் 3,000 க்கும் அதிகமான ஃபிளமிங்கோ பறைவைகளை என்னால் அவதானிக்க கிடைத்தது. ஆனால் பல ஆண்டுகளாக எண்ணிக்கையில் தெளிவான ஏற்ற இறக்கத்தை காணக்கூடியதாக உள்ளது. "2012 இல், 12,000 ஃபிளமிங்கோ பறவைகள் இருந்தன, ஆனால் அது 1,500 ஆகவும் குறைந்து பின்னர் 7,000 ஆக உயர்ந்தது. பின்னர் சென்ற வருடம் 3,000 தெடக்கம் 5,000 வரை இருந்தது. தற்போது அது 3,000 ஃபிளமிங்கோ பறவையாக உள்ளது." அந்த வகையில் இந்த ஃபிளமிங்கோ பறவைகளை காண அதிமான வெளிநாட்வர்கள் வந்துள்ளனர். இந்த வருடம் பல நாட்கள் நான் மன்னார் சென்று இந்த புகைப்படங்களை எடுத்து வருகின்றேன். https://www.virakesari.lk/article/176329
  22. கட்டுரையாளர் சுமத்திரனின் சொம்பு என்பதை பார்த்து பல்லுப்படாமல் எழுதியதில் இருந்து தெரிகிறது.
  23. பாரதிய ஜனதாவில் இருந்து பிரிந்த ஒருவர பெயர் sri வீர ரெட்டி முதன் முதலா தேர்தலில் போட்டி போடுகிறார்கள் அவர்கள் விவசாயி சின்னத்தை கேட்டு இருக்கிறார்கள் கொடுத்தார் களா இல்லியா என்பது இன்னும் உறுதியாகவில்லை நாளை தெரியும் என்கிறார்கள் . இதில் பகிடி என்னவென்றால் இவர்கள் முதலில் கேட்டது புலி சின்னம் தேர்தல் ஆணையம் உயிருடன் உள்ள சின்னம் கொடுக்க முடியாது விவசாயி சின்னத்தை ஒதுக்கியது அந்த சின்னத்தில் இரண்டு முறை போட்டியிட்டு வருமான கணக்கு வழக்கு விபரங்கள் தேர்தல் ஆணையகத்துக்கு சரியாக காட்டபட்டு இருந்தால் அந்த கட்சியின் சின்னத்தை மற்றைய லெட்டர் பேடு கட்சிக்கு எழுந்தமானமாய் கொடுக்க முடியாது . கதை இங்கு வேறு நான் நினைக்கிறன் அந்த சின்னத்தில் ஐந்து முறைக்கு மேல் போட்டியிட்டுள்ளார்கள் கடைசியாக 3௦ லட்சம் வாக்களார்கள் அந்த சின்னத்துக்கு வாக்கு அளித்துள்ளார்கள் . அது சரி சமிபத்தில் சீமானின் தம்பிகளின் வீடுகளில் nia ஏன் ரெய்டு அடித்தது அதுவும் இப்படியான தேர்தல் நேரம் ? இப்ப உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறன் . அதுசரி சீமானின் தம்பி பையன் இந்த பக்கம் வருவதில் லையா ? கொசிப்பு அந்த sri வீர ரெட்டி தமிழக முக்கிய அரசியல்வாதியின் உறவினர் என்கிறார்கள் செய்தி உறுதிபடுதப்டவில்லை நாளை லண்டன் அதிகாலை நேரம் செய்தி உண்மைத்தன்மை வெளிவரும் என்கிறார்கள் உண்மையானால் தமிழ்நாடு சுனமியாகும் .
  24. வாத்திய பாத்து நீ வாத்தியா எண்டு கேட்டால் வாத்திக்கு கோபம் வரத்தான் செய்யும்.. டாக்டர பாத்து நீ டாக்டரா எண்டு கேட்டால் டாக்டருக்கு கோபம் வரத்தான் செய்யும்.. காவாலிய பாத்து தமன்னா “ நீ காவாலியா” எண்டு கேட்டால் காவாலிக்கு கோபம் வரும்தான.. வாத்திக்கும் டாகடருக்கும் வந்தா ரத்தம் காவாலிக்கு வந்தா தக்காளி சட்னியா..? 😡😡
  25. கச்சேரி முடிஞ்சு கனநாள் ஆகிறது என்று கூறி அவங்க சென்னைக்கு போயிட்டாங்க தமன்னா பெங்களுருக்கு போயிருக்கும்
  26. சின்ன திருத்தம் செய்து கொள்ளுங்கள். (சென்ற)
  27. ஆசையை துறக்கச் சொன்ன புத்தனும் காதலின் தேசிய சின்னமாகிய டெய்ரி மில்க் மிட்டாயும்
  28. பட மூலாதாரம்,VIJAY TELEVISION/YOUTUBE கட்டுரை தகவல் எழுதியவர், அஷ்ஃபாக் பதவி, பிபிசி தமிழ் 4 பிப்ரவரி 2024 “அப்பா டீக்கடைல வேலை பாக்குறாங்க... அம்மா பீடி சுத்துவாங்க. எனக்கு பீடி சுத்த அந்தளவுக்கு தெரியாது. டாக்டர் ஆகணும்னு ஆசை. கட் ஆஃப் 196.25 இருக்கு. இப்போ 198 கிட்ட கேக்குறாங்க.” கடந்த 2016ஆம் ஆண்டு நீயா நானா நிகழ்ச்சியில் சங்கவி இதைச் சொல்லி முடிப்பதற்குள்ளேயே அவரது கண்கள் குளமாகிவிடும். சங்கவியை 2022இல் மீண்டும் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தது நீயா நானா குழு. அப்போது அவர் பயிற்சி மருத்துவர். “இவ்வளவு சிரமத்திலும் ஏன் கட்டாயம் படிச்சிடணும்னு நினைச்சீங்க?” என வினவினார் நெறியாளர் கோபிநாத். “படிப்பு ஒன்னுதான் சார் எல்லாருக்கும் கிடைக்குது... ஏழையா இருந்தாலும் பணக்காரரா இருந்தாலும் கல்வி கிடைக்கும். படிச்சா மட்டும்தான் குடும்பம் நல்ல நிலைமைக்கு வரும். நான் படிச்சதால மட்டும்தான் இப்போ என் குடும்பமே நல்லா இருக்கு,” என யோசிக்காமல் பதிலளித்து முடித்தார் மருத்துவர் சங்கவி. நீயா நானா கடந்த 17 ஆண்டுகளாக தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டாக் ஷோ. பல முகங்களை இந்த நிகழ்ச்சி வெளிக்கொணர்ந்துள்ளது. சமூக ரீதியான பிரச்னைகளைப் பேசியிருக்கிறது. மிக நுணுக்கமான கருத்துகளும் சிந்தனைகளும் உணர்வுப்பூர்வமான கலந்துரையாடல்களும் பல நேரம் அதிர்வுகளைக் கிளப்பியுள்ளன. அதேநேரம், நீயா நானாவுக்கு எதிர்ப்புக் குரலும் எழாமல் இல்லை. நீயா நானா இத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாக இயங்குவது எப்படி? இந்த நிகழ்ச்சி எப்போதும் பேசு பொருளாவதன் பின்னணி என்ன? விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை. நீயா நானா உருவான கதை பட மூலாதாரம்,VIJAY TELEVISION/TWITTER கவனிக்க வைக்கும் இசையுடன் ஒரு ஓபனிங். இன்று எதைப் பற்றி நிகழ்ச்சி விவாதிக்கப் போகிறது என்பதை நறுக்கென எடுத்துச் சொல்லும் நெறியாளர். அதன் பிறகு சூடுபிடிக்கும் விவாதம். இதுதான் நீயா நானா. நீயா நானா என்கிற நிகழ்ச்சியை உருவாக்கியவரும், இன்று வரை அதைத் தயாரித்து வரும் மெர்குரி ப்ரொடக்சன்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான ஆண்டனியிடம் பிபிசி தமிழ் பேசியது. “தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் நீயா நானா போன்றதொரு நிகழ்ச்சி அப்போது இல்லை. டாக் ஷோ என்பது வெறும் அரட்டை எனச் சொல்வதே எனக்கு அசிங்கமாக இருந்தது. தமிழ் மக்கள் அறிவுக்கூர்மை உடையவர்கள். நீண்ட திட்டமிடலுக்குப் பிறகு ஒரு டாக் ஷோவை அறிமுகப்படுத்த நினைத்தோம். 2006 மே மாதம் நீயா நானா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி இத்தனை ஆண்டுகள் கடந்தும் தொடர்ந்து பேசப்படுவதற்குக் காரணம் இங்குள்ள மக்கள்தான். மிகச் சிறந்த கருத்துகளை, நுட்பமான சிந்தனைகளை தமிழர்களால் எளிதாகச் சொல்லிவிட முடியும். ஆங்கிலத்தில் வரும் டாக் ஷோவில் பங்கேற்பவர்கள் சாமானியர்கள் அல்ல. மொழிப்புலமை, குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் தமிழகத்தில் அறிவார்ந்த கூட்டம் நிரம்பியுள்ளது. சாமானிய மக்களிடமும் கூர்மையான பார்வை உள்ளது. அதனால்தான் எங்கோ ஒரு கிராமத்தில் இருந்து வந்தவரால்கூட நீயா நானாவில் கருத்துகளை எடுத்து வைக்க முடிகிறது,” என்றார் ஆண்டனி. மேலும், சமூகத்தைத் தொடர்ந்து கவனிப்பதாகவும் அதைப் பேசவேண்டும், கேள்வி கேட்க வேண்டும் என நினைப்பதாகவும் கூறும் ஆண்டனி, "உதாரணமாக, இங்கு நவீன ஏழைகள் அதிகமாகிவிட்டனர். இங்கு பல இளைஞர்களின் வருமானம் 15,000 ரூபாயைத் தாண்டுவதாக இல்லை. அவன் பிரச்னைகளைக் கவனிக்கிறோம். அது பேசப்பட வேண்டும் என நினைக்கிறோம். அதுதான் நீயா நானா நிகழ்ச்சியாக மாறுகிறது. சமநிலையுடன் பேசுகிறது,” எனக் குறிப்பிட்டார். பிற மொழிகளில் நீயா நானா? பட மூலாதாரம்,VIJAY TELEVISION/TWITTER “நீயா நானா நிகழ்ச்சியை வெளி மாநிலங்களுக்குக் கொண்டு சென்று, இதர மொழிகளில் ஒளிபரப்ப திட்டமிட்டு அது தோல்வியில் முடிந்தது. அதற்குக் காரணம் அங்குள்ள சாமானிய மக்களால் பெரியளவில் தங்கள் கருத்துகளை, சிந்தனைகளை வெளிக்கொணர முடியவில்லை. அப்படி இருந்தால் ஷோவை நகர்த்த முடியாது,” என ஆண்டனி கூறுகிறார். இதேபோல நீயா நானாவை ‘காப்பி கேட்’ செய்ய முடியாது எனவும் நம்புகிறார் ஆண்டனி. “ஒரு நிகழ்ச்சியை ‘காப்பி கேட்’ செய்பவர்களால் ஜெயிக்க முடியாது. இதற்குப் பின்னால் பலரது உழைப்பும், அறிவுப்பூர்வமான தேடலும் அடங்கியிருக்கிறது. உதாரணமாக, எங்கள் நிகழ்ச்சி அரங்கைக் குறிப்பிடலாம். நீயா நானா தொடங்கிய காலத்திலேயே அது தனித்துவமாக வடிவமைக்கப்பட்டது. சாதாரண பட்டிமன்ற, விவாத நிகழ்ச்சிகளைப் போல மண்டபத்தை தேர்வு செய்யாமல், மக்களுக்காகவே பிரத்யேகமான அரங்கை அமைத்தோம். இந்த யோசனையை தலைமை தயாரிப்பாளர் பிரதீப் முன்வைத்தார். மக்களுக்கான நிகழ்ச்சியைத் தொடங்க வேண்டும் என்ற சிந்தனையில் இருந்தபோதுதான் கோபியும் கிடைத்தார். அவரும் நாம் எதை யோசிக்கிறோம், என்ன செய்ய நினைக்கிறோம் என்பதை விரைவாகவே புரிந்துகொண்டார். ஒரே நேர்கோட்டில் நீயா நானா குழு பயணிக்கத் தொடங்கியது,” என்றார் ஆண்டனி. படக்குறிப்பு, ஆண்டனி 'இது மக்களுக்கான மேடை' கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியை 17 ஆண்டுகளாக நெறியாள்கை செய்து வருகிறார் கோபிநாத். முன்பு பத்திரிகையாளராகப் பணியாற்றிய கோபிநாத், இன்று வரை நீயா நானாவுடன் பயணித்து வருவதோடு பிரபல தொகுப்பாளராகவும் அறியப்படுகிறார். பட மூலாதாரம்,GOBINATH CHANDRAN/FB படக்குறிப்பு, கோபிநாத் "அடிப்படையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பதையும் கடந்து நீயா நானா பார்க்கப்படுகிறது. இது வெறும் டாக் ஷோ என்பதையும் தாண்டி மக்கள் வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்டது" என்கிறார் இந்த நிகழ்ச்சியின் முகமாகத் திகழும் கோபிநாத். “நீயா நானா பார்க்கவில்லை எனில் அந்த நாளே முழுமையடையாது என்ற அளவுக்கெல்லாம் சிலர் என்னிடம் சொல்வதுண்டு. இதைத் தங்கள் வாழ்வியலோடு மக்கள் ஒப்பிடுகின்றனர். பெரிய நிபுணர்கள் யாரும் வந்து தங்களுக்குள் பேசி கலைந்து செல்லும் நிகழ்ச்சி அல்ல இது. முழுக்க முழுக்க இது சாமானியர்களுக்கான நிகழ்ச்சி என்பதால் எப்போதும் பேசப்படுகிறது,” என்கிறார் கோபிநாத். சமூக ஊடகங்களில் இந்த நிகழ்ச்சி குறித்த காணொளிகள் அதிகம் பகிரப்படுவதுண்டு. சில நேரம், இந்த வைரல் காணொளிகள் அதிகார மட்டத்திலும் எதிரொலித்திருக்கிறது. வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 2023ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கிடைத்த மருத்துவ சேவை குறித்து இந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தார். அதே ஆண்டு மார்ச் மாதம் வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி பரவியபோது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் இந்த நிகழ்ச்சியையும் வடமாநில பெண் பேசியதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். “எதையும் நாங்கள் வைரலாக்குவதில்லை. சமூக ஊடகங்களில் ஒரு சிலர் தாமாக முன்வந்து நிகழ்ச்சியின் ஒரு சிறிய பகுதி குறித்துப் பேசுகின்றனர், காணொளிகளைப் பரப்புகின்றனர். அப்படியெனில், அவர்கள் இந்த நிகழ்ச்சியை விரும்பிப் பார்க்கிறார்கள் என்றுதானே அர்த்தம்,” என்கிறார் கோபிநாத். நீயா நானா எப்படி தயாராகிறது? படக்குறிப்பு, திலீபன் "இதர நிகழ்ச்சிகளைக் காட்டிலும் நீயா நானா தனித்து தெரிவதற்கு, நாங்கள் எப்போதும் முன்னோக்கியே யோசிப்பதும் ஒரு காரணம்" என்கிறார் இணை இயக்குநர் முத்து. “நீயா நானா இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்கிற விவாதத்தை உருவாக்கியது. திருநங்கைகளுக்கான உரிமைகள் குறித்துப் பேசியது. இப்படி யாரும் பேசாத, பேச முன்வராத விஷயங்களை விவாதிப்போம்,” என முத்து கூறினார். நிகழ்ச்சியின் தயாரிப்புப் பணிகள் குறித்து தற்போதைய இயக்குநர் திலீபனிடம் பேசினோம். நீயா நானாவுடனான திலீபனின் பயணம் மிக நீண்டது. 2006இல் உதவி இயக்குநராகப் பணியாற்றத் துவங்கிய அவர், 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது வரை நீயா நானா நிகழ்ச்சிக்காகப் பணியாற்றி வருகிறார். 2017 முதல் நீயா நானாவின் இயக்குநராகச் செயல்படுகிறார். "ஒரு மாதத்திற்கு முன்பே தலைப்பை முடிவு செய்துவிடுவோம். தலைப்பையொட்டி ஆய்வுகளை மேற்கொள்வோம். அதற்கேற்ப பேசுவோரை அழைக்கிறோம். பெரும்பாலும் நிகழ்ச்சியில் பேச ஆர்வம் உள்ளவர்கள் எங்களைத் தொடர்பு கொள்வார்கள். சில நேரங்களில் எங்கள் செய்தியாளர் குழு பொருத்தமானவர்களை நிகழ்ச்சிக்கு அழைத்து வருவார்கள். ஒரேநாளில் 2 எபிசோட்கள் வீதம் வாரத்தில் 6 எபிசோட்களை ஷூட் செய்துவிடுவோம். நிகழ்ச்சி 3 முதல் 4 மணிநேரம் வரை செல்லும். படத் தொகுப்பில் ஒரு மணிநேரமாக சுருக்கிக்கொள்வோம்," என திலீபன் கூறினார். நீயா நானாவும் சர்ச்சைகளும்... பட மூலாதாரம்,VIJAY TELEVISION/TWITTER ஜூலை 2022இல் சமூக ஊடகங்களில் பிரபலமாக விரும்புவோருக்கும் பொதுமக்களுக்கும் இடையே விவாதம் நடந்தது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் சில விமர்சனங்களும் எழுந்தன. நீயா நானா நிகழ்ச்சி நடந்த விதம் குறித்து அதிருப்தி தெரிவித்து யூடியூபர்கள் சிலர் காணொளிகளை வெளியிட்டனர். "தலைப்பைக் குறிப்பிடாமலேயே நிகழ்ச்சியில் பேச அழைத்தனர். நிகழ்ச்சி தாமதமாகத் தொடங்கியது. நாங்கள் பேசியது நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகவில்லை," என்பது அவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது. நிகழ்ச்சிக்கு எதிராகப் பேசியவர்களைத் தற்போது தொடர்பு கொண்டோம். ஆனால் பதிலளிக்கவில்லை. Twitter பதிவை கடந்து செல்ல காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு "யாருக்கும் நாம் சார்புடையவர்கள் அல்ல. இது மக்களுக்கான மேடை என்பதால் எதிரெதிர் திசையில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் கருத்துகளைப் பறிமாறிக்கொள்ள வாய்ப்பளிக்கிறோம். தலைப்புக்கு ஏற்றவாறும் நெறியாளரின் கேள்விக்குத் தகுந்த பதிலை அளிப்பவர்களுக்கும் முன்னுரிமை வழங்குகிறோம். சிலர் சம்பந்தம் இல்லாமல் பேசிக்கொண்டே செல்வார்கள். அதை படத்தொகுப்பில் சரி செய்துவிடுவோம்," என்றார் இயக்குநர் திலீபன். கடந்த 2017ஆம் ஆண்டில் தமிழ் – கேரளா பெண்கள் இருவருக்கு இடையிலான விவாத நிகழ்ச்சியும் கடுமையான சர்ச்சைக்கு வித்திட்டது. நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியானதும், மகளிர் அமைப்புகள் இந்த நிகழ்ச்சி, பெண்களை அழகுப் பொருளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. எதிர்ப்பு வலுத்ததால் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகாமலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. 'நீயா நானாவே தெரியாது; ஆனால் வாழ்க்கை மாறுச்சு' பட மூலாதாரம்,VIJAYTV கடந்த 2016ஆம் ஆண்டின் ஒரு நீயா நானா நிகழ்ச்சியில், மருத்துவராக வேண்டும் என கண்ணீரோடு நா தழுதழுக்கப் பேசி, தற்போது மருத்துவராகவே ஆகிவிட்ட சங்கவியிடம் பேசினோம். “நீயா நானா என்கிற நிகழ்ச்சி பற்றி எனக்கு அப்போது எதுவுமே தெரியாது. வீட்டில் தொலைக்காட்சி இல்லாததும் ஒரு காரணம். பக்கத்து வீட்டு அண்ணன் மூலமாகத்தான் நிகழ்ச்சிக்குச் சென்றேன். நான் பேசியது இந்தளவுக்கு ’ரீச்’ ஆகும் என நினைக்கவில்லை. நாங்கள் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. என் வாழ்க்கையை மாற்றிய தருணம் அது,” என்றார் சங்கவி. “பேசுவதற்கு நேரம் இல்லை என்கிற குறையும் அவ்வப்போது எழுவதுண்டுதான். ஆனால் எல்லோரும் கலந்துகொள்ளும் இடமாக நீயா நானா இருந்திருக்கிறது,” என பெண்கள் செயற்பாட்டாளரும் பத்திரிகையாளருமான கவின் மலர் கூறுகிறார். “நீயா நானா தேர்வு செய்யும் தலைப்புகள் சில நேரங்களில் மேலோட்டமாகவும் இருந்திருக்கிறது. சமூகத்தில் பேச வேண்டியது நிறைய இருக்கும்போது இதை ஏன் விவாதிக்கிறார்கள் என்றுகூட விமர்சனங்கள் எழும். தமிழ் பெண்கள் vs கேரள பெண்கள் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகவிருந்த சமயத்தில் அதைக் கடுமையாக விமர்சித்தவர்களில் நானும் ஒருவர். அதேநேரம், விமர்சித்தவர்களாக இருந்தாலும் பின்னாட்களில் நிகழ்ச்சியில் பங்கேற்க நீயா நானா குழு அழைத்திருக்கிறது,” என கவின் மலர் கூறுகிறார். 'கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்' பட மூலாதாரம்,KAVIN MALAR/FB படக்குறிப்பு, கவின் மலர் “வடமாநில தொழிலாளர்கள், திருநங்கைகள் எனப் பலருக்கும் மேடை அமைத்துக் கொடுத்திருக்கிறது. திருநங்கை சார்ந்த உரையாடல்கள் மட்டுமின்றி இதர தலைப்புகளில் விவாதிக்கும்போதுகூட அனைவரையும் உள்ளடக்கிய நிகழ்ச்சியாக, திருநங்கைகள் பேச இடமளித்திருக்கிறது. ரியாலிட்டி ஷோக்கள் பெரும்பாலும் செயற்கைத்தனமாக ஒருவரை அழ வைத்து, பின்னணி இசையில் ஒளிபரப்பும். ஆனால் நீயா நானா இதில் விதிவிலக்கு. சாதித் திமிருடன், மத துவேசத்துடன், பெண்களைப் பற்றி இழிவாக, பிற்போக்குத்தனமான அல்லது ஆட்சேபகரமான கருத்துகளை பங்கேற்பாளர்கள் கூறினால், கோபிநாத் மெளனம் காக்காமல் உடனடியாக பதில் பேசி தெளிவுபடுத்துவது நல்ல விஷயம் என நினைக்கிறேன். நீயா நானா நிகழ்ச்சியை மக்கள் குடும்பமாக அமர்ந்து பார்க்கின்றனர். கூடுதல் பொறுப்புணர்வுடன் குழுவினர் செயல்பட வேண்டியது அவசியம்,” என்கிறார் கவின் மலர். https://www.bbc.com/tamil/articles/cd1le9qwgjlo
  29. நான் இந்நாவலை வாசிக்க வெளிக்கிட்டு ஒரு வருடமாக இப்பதான் நீலம் - 24 பகுதி எட்டு**: 2.** பொருள் ஒன்று யமுனைக்கரையில் அந்தணர்சேரியில் மதியவெயிலெழுந்த நேரம் திண்ணைகளிலும் அப்பால் ஆலமரத்து நிழல்மேடைகளிலும் ஆண்களெல்லாம் துயில பின்கொல்லைப் படிகளிலும் பசுக்கொட்டில்களிலும் பெண்கள் அமர்ந்து சொக்கட்டான் ஆடியும் சிறுசொல்பேசியும் சிரித்துக் கொண்டிருந்தனர். நெய்க்குடமேந்திய ஆய்ச்சியர் நால்வர் நடமிடும் இடையுடன் தெருவில் வரக்கண்டு “ஆய்ச்சியரே, இங்கு வருக!” என்று ஒருத்தி கூவினாள். “வெயிலெழுந்த பின்னர் நெய்கொண்டு வருகின்றாள். விடிந்தபின்னும் துயிலும் வீண்வழக்கம் கொண்டிருப்பாள்” என்றாள் ஓர் அந்தண முதுமகள். இதில் நிக்கிறேன்......வாசிக்கத்தொடங்கினால் நிறுத்த மனம் வராது.....அப்படி ஒரு எழுத்தின் ஆளுமை.....ஆனால் நேரம் இருக்காது.....கடந்த சில மாதங்களாக வாசிக்கவில்லை.....இனி வாசிக்க ஆரம்பிக்க வேண்டும்.......அதற்கு முன் யாழுக்கு 26 அகவைக்கு ஒரு கதை எழுதவேண்டும் இன்னும் ஐடியா வரவில்லை .....பார்க்கலாம்......கிருபன்......ம்......சொல்லி வேல இல்ல .......ஜெயமோகனின் சிறந்த சிஷ்யன் ......வாழ்த்துக்கள் ......! 🙏
  30. பெரிய பெரிய கட்டுரைகளையே ஒரே மூச்சில் வாசிக்கும் உங்களுக்கே, இதை வாசிப்பதற்கு இன்னும் சில வருடங்கள் வேணும் என்றால் எனக்கு இன்னும் ஒரு ஆயுள் வேண்டும்.
  31. 'முயற்சி தன் மெய் வருந்தக் கூலி தரும்' என்னும் பழமொழிக்கிணங்க உங்கள் தந்தையார் வாழ்ந்திருக்கிறார் போல உள்ளது! இப்போதெல்லாம் இவ்வாறான பெரியோர்களைக் காண்பதென்பது மிகவும் அரிதானது!
  32. காதலர்தின கருத்தோவியங்கள். 😂 🤣
  33. முன்னாள் போராளிகள் ஊருக்குப் பயந்து வாழ்வது என்பது எமது சமூகத்தின் சாபக் கேடுகளில் ஒன்று…! மனதை நெருடிய கதை..!
  34. விசுவாசம் என்றாலும் தன் வாழ்கையே அர்பணிக்கும் கட்சி விசுவாசம். ஒரு நாடு இரு தேசம் என்று தமிழர்கள் முழங்கினார்களா 😂 இந்த பொய் கூட்டு வாக்கியம் தானே 🙄 அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது என்ற பழமொழி உணர்த்துவது சென்ற காலம் திரும்பி வராது எனது விடை சரியா? க - வேறுபட்டு ஒலிக்கும் சொல் மேகம் ?
  35. இதனை ஆமோதித்து....வரவேற்கின்றேன்...எழுத்துநடை..தெளிந்த நீரோட்டம்....அதில் சொல்லப்பட்டவிடயங்கள்.. எம்மக்களுக்கான இன்றைய தேவையையும் கோடிட்டுக் காட்டுகிறது
  36. https://noolaham.net/project/229/22815/22815.pdf - Page 2 https://noolaham.net/project/229/22814/22814.pdf https://noolaham.net/project/234/23355/23355.pdf இந்தச் செய்திகளை வாசித்துப் பாருங்கள்... அப்பா புலிகளின் காலத்து இசைநிகழ்ச்சி.... நெருப்புடா
  37. தீ சுடுகிறது
  38. இலங்கை தமிழ் என்டர்டெயின்மெண்ட் · அடேய் இது ரொம்ப ஓவர் டா! ......!
  39. தமிழ்வானண் கதைகளை நான் வாசித்தது குறைவு. என் காலத்தில் (கபொத சாதாரணம் படித்த நேரம்) அதிகம் வாசித்தது பி.டி.சாமி என்பவர் எழுதிய மர்ம நாவல்கள்தான். அவர் எழுதும் பாணி எனக்குப் பிடித்திருந்தது. பிற்பாடு “அனிதா - இளம் மனைவி’ என்று பத்து வாரங்களில் குமுதம் சஞ்சிகையில் சுஜாதா வேகமாக எழுதிய கதை பிடித்துப் போய் அவர் பக்கம் விழுந்து விட்டேன்.
  40. இந்த ஜதார்தத நிலையை உணர்து செயற்படுவதே இன்றையஅவசரத் தேவை. அதை விடுத்து தம்மை தமிழ் தேசியம் பேசுவதாக கூறிக்கொண்டு எதிர்கால தலைமுறைக்கு உலை வைக்கும் கைங்கரங்களில் தான் இந்த புலம் பெயர் தேசிய அரசியல் வீணர்கள் ஈடுபடுகிறார்கள் என்ற கோபம் ஏற்படுவது இயற்கையே.
  41. இன்றைய தமிழரின் அரசியல் நிலையில் அனைவரும் வேற்றுமையில் ஒற்றுமையாக செயற்பட்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முறையாக அமுல்ப்படுத்த செய்து காணி, காவல்துறை அதிகாரங்களை வாங்கினாலே பெரிய விடயம். மக்கள் சற்றே மூச்சு விடவும் தமது கல்வி. பொருளாதார நிலையை உயர்த்தி எம்மை இலங்கைத் தீவில் தக்க வைத்துகொள்ளும் அரசியல் நிலையாவது ஏற்படும் என்பதை தேசியர் என்று கம்பு சுற்றி வெட்டி வீரம், வெற்றுக் கோசங்களை மட்டும் எழுதி உசுப்பேத்தி அடுத்த சந்திதிக்கும் உலை வைக்கும் வீணர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். வெளி நாடுகளில் இருந்து இப்படி உசுபேற்றும் வீணர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் கூட அங்கு இவர்களால் உசுப்பி விடப்பட்டு அவலப்படும் சந்திதியை எட்டி கூட பார்க்காது. அது தான் ஜதார்த்தம்.
  42. இதட்கு சேவை வழங்கும் நிறுவனங்கள் சில நிபந்தனை போட்டிருப்பதால் பிரச்சினை உருவாக்கி இருக்கிறது. எனவே கடந்த வாரம் நிறைவேற்றிய இணைய வழி பாதுகாப்பு சடடத்தை அவசர அவசரமாக திருத்துகின்றது. இல்லாவிடடாள் இவர்களது இந்த UPI கடடண முறை அம்போதான்.
  43. 6 17.12.2023இல் இல்ஸ்ஹொபன் கிராமத்தில் தோல்வியில் முடிந்த கொள்ளைக்குப் பின்னர், பொலிஸார் தேடிய காரைப் பற்றிய தகவல்களையும் அவர்களால் திரட்ட முடியாமல் இருந்தது. போக்குவரத்துப் பொலிஸாரின் கண்களில் கூட அந்தக் கார் படாமல் எங்கேயோ ஒழித்திருந்தது. வழக்கம் போல் அன்றும், போக்குவரத்துப் பணியில் இருந்தாள் லூயிஸா(21). காரின் வலது பக்கத்தில் அவள் அமர்ந்திருந்தாள். அவளது வேலைத் தோழன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். அவர்களது கார் ஹாகன்பாகர் றிங் என்ற இடத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. இங்குதான் எல்பிரிடே கூகெர் 2020இலும் ஹைடமேரி, எடித்லாங் ஆகிய இருவரும் 2022இலும் கொல்லப்பட்டிருந்தார்கள். “ஒருவேளை அன்று இல்ஸ்கொபனில், முதியவரின் மனைவி இல்லாமல் இருந்திருந்தால், அந்த முதியவரையும் அவன் கொன்றிருக்கலாம்” “இருக்கலாம். ஆனால் கொலையாளி தனியாக இருக்கும் முதுமை அடைந்த பெண்களைத்தானே குறி வைக்கிறான். ஒருவேளை இவன் கொள்ளையடிக்க மட்டும் வந்தவனாக இருக்கும் கொலையாளி வேறு ஒருத்தனாகவும் இருக்கலாம்” திடீரென லூயிஸா, “ நிறுத்து நிறுத்து. காரை நிறுத்து” என்று சென்னாள். “ஏன்? என்ன பிரச்சினை?” “அதிலே ஒரு சில்வர் கலரிலே VW கார் பார்க் பண்ணியிருந்தது. ஒருவேளை நாங்கள் தேடுற காராகக் கூட இருக்கலாம். வா பாத்திட்டு வருவம்” அந்த சில்வர் கலர் காருக்கு முன்னால் லூயிஸாவும் அவளது சக தோழனும் நின்றார்கள். இலக்கத் தகட்டில் பொதிகளை ஒட்டும் நாடாவால் ஒட்டிய தடயங்கள், VW station wagon, Silver நிறம் என அவர்கள் தேடும் காரின் அடையாளங்கள் அத்தனையும் பொருந்தி இருந்தன. ஆனால் காரின் இலக்கத் தகடு மட்டும் இல்லை. பொதுவாக இலக்கத் தகடு இல்லாத கார்களை வீதிகளின் ஓரத்தில் நிறுத்தி வைக்க முடியாது. அத்துடன் இலக்கத் தகடு இல்லாவிட்டால் அது பதிவில் இல்லை என்பது மட்டுமல்ல பயணிக்கவும் முடியாது. கார் பூட்டி இருந்தது. கார் கண்ணாடியூடாக உள்ளை பார்த்தார்கள். ‘ரெட் புள்’ குடிபான ரின்கள், பொதிகளை ஒட்டும் நாடாக்கள் என்பன காருக்குள் இருந்தன. ஆக, கார் பாவனையில் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று இருவரும் தீர்மானித்துக் கொண்டார்கள். அவர்களால் காரின் போனற்றைத் திறக்க முடிந்தது. இயந்திரத்தின் இலக்கத்தை எழுதிக் கொண்டு தங்கள் காருக்குத் திரும்பினார்கள். காரில் அமர்ந்து கொண்டே, தங்கள் வேலைத் தோழனைத் தொடர்பு கொண்டார்கள். “கார் எஞ்சின் ஒன்றின்ரை நம்பர் அனுப்பிறன். அதைப் பற்றி தகவல் வேணும்” தகவல் உடனேயே வந்தது, “அந்தக் கார் இப்ப பதிவிலை இல்லை” “கடைசிப் பதிவு ஆரின்ரை பேரிலை இருந்தது?” “அது… ஹூஸைன் என்றவரின்ரை பேரிலைதான் கடைசியா இருந்திருக்கு. ஆளின்ரை இடம் ஒப்பன் வைலர்” “இந்த விபரத்தை மேலதிகாரிக்குச் சொல்லிவிடு” ஒப்பன் வைலர் ஸ்வேபிஸ் ஹால் நகரில் இருந்து பதினைந்து கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கிறது. திடீரென பொலிஸாரைக் கண்டதும் ஹூஸைனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சம்பிராதய கேள்விகளுக்குப் பிறகு, “VW station wagon, கார் எங்கே?” அந்தக் காரைப் பற்றிக் கேட்ட போது, ஹூஸைனின் முகம் இன்னும் வெளிறியது. “வித்துப் போட்டன்” “யாருக்கு வித்தனீ?” ஹூஸைனின் தலை மெதுவாக நிலத்தை நோக்கி குனிய ஆரம்பித்தது. “ சரி கார் விற்ற ஒப்பந்தத்தைக் காட்டு” “கார் விக்குற போது ஒப்பந்தம் ஒண்டும் போட இல்லை” “அதெப்படி ஒப்பந்தம் இல்லாமல் கார் கை மாறிச்சு?” “வாங்கினவர் அதை, தான் பதிவு செய்யிறன் எண்டு சொன்னவர்” “ஓ, அப்பிடியோ? சரி என்ன விலைக்கு வித்தனீ?” “350 யூரோக்களுக்கு” பொலிஸாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஹூஸைன் தடுமாறிக் கொண்டிருந்தான். பொலிஸார் அங்கிருந்தே “நாங்கள் குற்றவாளியை அடையாளம் கண்டு விட்டோம்” என்று தங்கள் தலைமை அதிகாரிக்கு அறிவித்தார்கள், 01.02.2023 புதன்கிழமை. அதற்கு முதல் நாள் செவ்வாய்க் கிழமை காலையில் டானியலின் மனைவி, குழந்தைகளின் அறையை விட்டு வெளியே வந்த போது அதிர்ந்து விட்டாள். அவள் முன்னால் ஆயுதத்துடன் ஒருவன் நின்று கொண்டிருந்தான்
  44. ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடத்துவதென்றால், முற்றுமுழுதாக இலவசமாக நடத்தவேண்டும். இல்லையேல் முற்றுமுழுதாக கட்டணம் வசூலித்து நடத்தப்பட்டிருக்கவேண்டும். வெறும் திரைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பிரபலங்களை பார்த்து வந்த கூட்டம் தூரத்தே நின்று பார்க்கும்போது புள்ளி புள்ளியாய் தெரிந்தால் அவர்களை நெருங்கி பார்க்க கண்டிப்பாக ஆர்வகோளாறில் முயலும், அவர்கள் வயசு அப்படி. உலக பணக்கார நாடு ஒன்றில் வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கும் இந்திரனுக்கு இசை நிகழ்ச்சி வியாபாரத்தில் இப்படி ஒரு சம்பவம் இடம்பெற வாய்ப்பிருக்கு என்று கண்டிப்பாக தெரிந்திருக்கும், அதனால்தான் பலாலி விமான நிலையத்திலேயே குழப்பம் விளைவித்துவிடாதீர்கள் பிரபலங்கள் வரமாட்டோம் என்று கூறியும் வற்புறுத்தி கூட்டி வந்தோம் என்று அபாயமணியை அட்வான்சா அடிச்சிருந்தார். பணம் புரளும் ஒரு நிகழ்வை ஒழுங்குபடுத்தாமல் பாதி இலவசம் பாதி கட்டணம் என்று கோமாளிதனமாக நடத்தி அதை கலவரமாக்கி ஒட்டுமொத்த யாழ்மக்களுக்கும் அவபெயரை சம்பாதித்துகொடுத்த பெருமை இந்திரனையே சாரும் வேறு எவர்மீதும் விரல் நீட்டி குற்றம் சாட்ட முடியாது. உலகம் முழுவதுமே ஒழுங்கு படுத்தப்படாத கேளிக்கை நிகழ்வுகளில் குழப்பமும் , தடங்கலும் . கலவரமும் சகஜம் அதை ஒட்டுமொத்த இனத்தின் பழக்கங்களில் ஒன்றாகவோ, ஒரு பிரதேசத்தின் பண்புகளில் ஒன்றாகவோ சமூக ஊடகங்களிலும், இன்ன பிற வழிகளும் விமர்சிப்பது சிறுபிள்ளைதனமானது, இதுக்கு டக்ளஸ் வேற வக்காலத்து முதலீடு பாதிக்கப்படுமாம் சொல்றார். அப்படி பார்த்தால் இவரை ஒரு மக்கள் பிரதிநிதியாக ஒட்டுண்ணி அரசியல்வாதியாக பெற்றதற்கு இந்த இனம் எத்தனை தடவை பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.