Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87990
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    3054
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    31968
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/18/24 in all areas

  1. இன்றைய ஐடி துறையில் இவர்கள் தான் பெரிய இராணுவம். ஆனாலும் அமெரிக்காவிற்கு கட்டுப்பட்ட இராணுவம். நாட்டின் பொருளாதாரமும் உலகில் முதல் ஐந்திற்குள் எப்போதும் வந்து கொண்டிருக்கின்றது. ஆனாலும் வளர்ச்சி எல்லா மக்களையும் போய்ச் சேரவில்லை என்பது ஒரு பெரிய குற்றச்சாட்டு. ஊழல், இலஞ்சம், அரச நிர்வாகத் திறமையின்மை என்பன ஒப்பீட்டளவில் மிக அதிகம். காமன்வெல்த் போட்டியை நடத்தினார்கள். இதில் அமைச்சரும் மற்றவர்களும் இலஞ்சம் வாங்கியதாக இன்னமும் ஒருவரை மாறி ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். பீகாரில் ஒன்பது வருடங்களாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பெரிய பாலம் ஒன்று நேற்று மூன்றாவது முறையாக உடைந்து விழுந்துவிட்டது. அங்கு பாலங்கள் இடிந்து விழுவது ஒரு தொடர்கதை. அயோத்தி ராமர் கோவிலில் இப்போது கூரை ஒழுகுகின்றது என்கின்றார்கள். இந்த இந்தியாவால் ஒலிம்பிக்ஸ் போட்டியை நடத்தவே முடியாது. இலாப நோக்கற்ற, அரசப் பணிகளில் ஊழலும், லஞ்சமும் அங்கு தலைவிரித்தாடுகின்றது. பெரும்பாலானோருக்கு பெருமை எல்லாம் வெறும் வாய்ப் பேச்சு மட்டுமே. செயலில் எதுவுமே இல்லை. தான் ஒருவன் இலஞ்சம் வாங்குவதால் அல்லது கொடுப்பதால் இங்கு எந்தக் குடியும் முழுகிவிடப் போவதில்லை என்பதே பெரும்பான்மை மக்களின் மனநிலை, அதுவே அவர்களின் முன்னேற்றத்திற்கான தடை. ஆனாலும் இந்தக் கூட்டத்தில் சிக்காத உண்மையான பல இடதுசாரிகளும், சமூகப் போரளிகளும் அங்கு இருக்கின்றார்கள்.
  2. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் மேட்டூர் அணை நிரம்புவது தமிழ்நாட்டில் மிகப்பெரிய செய்தியாகக் கவனிக்கப்படுகிறது. மாநிலத்தின் மிகப்பெரிய இந்த அணை எதற்காகக் கட்டப்பட்டது, இதன் வரலாறு என்ன? மேட்டூர் அணை கட்டப்பட்டதில் இருந்து 42வது முறையாக தற்போது நிரம்பியுள்ளது. ஒவ்வொரு முறை மேட்டூர் அணையில் நீர்மட்டம் 100 அடியைத் தாண்டும்போதும் முழு உயரமான 120 அடியை எட்டும்போதும் அந்தச் செய்தி மாநிலம் முழுவதும் பெரும் கவனத்தைப் பெறுகிறது. ஒரு அணை இந்த அளவு கவனத்தைப் பெறுவதற்குக் காரணம் இருக்கிறது. மேட்டூர் அணை தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணை மட்டுமல்ல; இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றும்கூட. மேட்டூர் அணையின் வரலாறு காவிரியில் இருந்து கிடைக்கும் நீரின் மூலம் டெல்டா பகுதிகளில் பல ஆயிரம் ஆண்டுகளாகவே விவசாயம் நடந்து வந்தது. ஆனால், 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காவிரியால் பாசனம் நடந்து வந்த பல இடங்களில் கால்வாய்கள் தூர்ந்து போயிருந்தன. இந்தக் கட்டத்தில்தான் அதாவது, 1801இல் தஞ்சாவூர் மாவட்டத்தின் நிர்வாகம் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் வந்தது. அந்தத் தருணத்தில் டெல்டா பகுதியில் பாசன வசதிகள் மிகவும் மோசமடைந்திருந்ததாக சேலம் மாவட்ட கெஸட்டியர் கூறுகிறது. கால்வாய்கள் தூர்ந்து போயிருந்ததால், பல இடங்களில் தண்ணீரின்றி விவசாயம் செய்வது நிறுத்தப்பட்டிருந்தது. கிழக்கிந்திய கம்பெனி விவசாயத்தை மேம்படுத்த எடுத்த முயற்சிகளுக்குப் பெரிய பலன் ஏதும் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான், சென்னை மாகாணத்தில் நீர்ப்பாசன பொறியாளராகப் பணியாற்றி வந்த சர் ஆர்தர் தாமஸ் காட்டன், காவிரியின் மீது தனது கவனத்தைத் திருப்பினார். இவரது முயற்சியில் 1834இல் திருச்சிக்கு அருகில் முக்கொம்பில் மேலணை கட்டப்பட்டது. இதற்குப் பிறகு அந்தப் பகுதியில் நீர்ப்பாசன வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டன. கல்லணையில் 1887-89இல் ரெகுலேட்டரும் பொருத்தப்பட்டது. இதையடுத்து இந்த அணைக்குக் கிழக்கே உள்ள பகுதிகளில் நிலத்தின் மதிப்பு, அந்தப் பகுதியில் இருந்த மக்களின் வாழ்க்கைத் தரம் போன்றவை உயர ஆரம்பித்தன. இதைக் கவனித்த பிரிட்டிஷ் அரசு, காவிரியின் குறுக்கே ஒரு மிகப்பெரிய அணையைக் கட்டி நீரைத் தேக்கினால், அது பாசனத்திற்குப் பயனுள்ளதாக இருக்கும் என உணர்ந்தது. படக்குறிப்பு,காவிரியின் குறுக்கே ஒரு அணையைக் கட்டலாம் என்ற யோசனை 1910 வாக்கில் ஏற்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக ஆங்கில அரசு உடனடியாக முடிவெடுக்கவில்லை. பல ஆண்டுகள் இது தொடர்பான வாத - பிரதிவாதங்கள் நடந்தன. முடிவில், ராயல் பொறியாளரான கர்னல் டபிள்யு.எம்.எல்லிஸ் மேட்டூரில் காவிரிக்குக் குறுக்கே ஒரு அணையைக் கட்டலாம் என முன்வைத்த யோசனை 1910வாக்கில் ஒரு வழியாக ஏற்கப்பட்டது. ஆனால், அணையைக் கட்டும் பணிகள் துவங்குவதற்கு முன்பாக முதல் உலகப் போர் வெடித்தது. இதற்குப் பிறகு மைசூர் அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியிருந்தது. மைசூருக்கும் சென்னை மாகாணத்திற்கும் இடையே 1924இல் ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில், 1925ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி சென்னை மாகாண ஆளுநர் 2வது விஸ்கவுன்ட் கோஸ்சென் முன்னிலையில் பணிகள் துவங்கின. மேட்டூர் அணை முதலில் திட்டமிடப்பட்டப்போது, தற்போது அணை இருக்கும் இடத்தில் கட்டுவதற்குத் திட்டமிடப்படவில்லை. மாறாக, தற்போதுள்ள இடத்திலிருந்து சுமார் ஒரு மைல் தூரம் தள்ளி இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டது. ஆனால், 1924ஆம் ஆண்டு காவிரியில் மிகப்பெரிய வெள்ளம் ஒன்று ஏற்பட்டது. அப்போதுதான், முன்பு திட்டமிட்டதைவிடக் கூடுதல் நீரைத் தேக்கும் வகையில் அணை கட்டப்பட வேண்டும் என்பதற்காகத் தற்போதுள்ள இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு ஏழு கோடியே 37 லட்ச ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இந்த அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு, வரி வருவாய் உயர்வதன் மூலம், செய்யப்பட்ட முதலீட்டிற்கு 6 சதவீதம் அளவுக்குப் பலன் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டது. ஆனால், இந்த அணையின் மூலமாக டெல்டா மாவட்டங்களில் உருவாகும் வேலைவாய்ப்பு, வாழ்க்கைத் தரம் உயர்ந்தது போன்றவற்றைக் கணக்கிடும்போது இந்த வருவாய் மிகக் குறைவுதான். இந்த அணைக்கான செலவைத் திட்டமிடும்போது, மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டது. கட்டுமானப் பணிக்கான செலவு, நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான செலவு, ஊழியர்களின் வீடுகளுக்கான செலவு, கால்வாய்கள், இயந்திரங்கள், ஓய்வூதியம், இவ்வளவு ஏன் வரைபடம் உள்ளிட்ட காகிதங்களுக்கு ஆகும் செலவுகள்கூட துல்லியமாகக் கணக்கிடப்பட்டன. இந்த அணையைக் கட்ட 2,16,000 டன் சிமென்ட் தேவைப்பட்டது. இந்த அளவுக்கு சிமென்ட் சப்ளை செய்ய ஷகாபாத் சிமென்ட் கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. சிமென்ட்டை எடுத்துவர, சேலத்தில் இருந்து மேட்டூர் வரை ஒரு ரயில் பாதை போடப்பட்டது. அந்த ரயில் பாதைக்கான செலவின் ஒரு பகுதி மேட்டூர் திட்டச் செலவிலிருந்தே அளிக்கப்பட்டது. குக்கிராமமாக இருந்து மாவட்டமாக உருவெடுத்த மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முன்பாக மேட்டூர் ஒரு குக்கிராமம். ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து 37 மைல் தூரத்தில் இருந்தது. அங்கிருந்து மேட்டூரை வந்தடைய மண் சாலைதான் இருந்தது. அணை குறித்த நேரத்தில் கட்டப்பட வேண்டுமென்றால், அணையின் கட்டுமானப் பணிகளுக்காக வரும் தொழிலாளர்கள், பொறியாளர்கள் தங்கும் அளவுக்கு ஒரு சிறிய நகரத்தையாவது மேட்டூரில் உருவாக்க வேண்டியிருந்தது. இதையடுத்துதான் பொருட்களை எடுத்துவர, சேலத்தில் இருந்து ஒரு ரயில் பாதையும் தார் சாலையும் போடப்பட்டது. இதற்குப் பிறகு, அணையின் பணியாளர்களுக்காக வீடுகளைக் கட்டத் திட்டமிடப்பட்டது. மொத்தமாக 10,000 பேர் தங்கும் அளவுக்கான வீடுகள் இதற்காகக் கட்டப்பட்டன. ஒரு குக்கிராமம், ஒரு சிறு நகரமாக உருவெடுக்க ஆரம்பித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மேட்டூர் அணை கட்டப்பட்டதில் இருந்து 42வது முறையாக தற்போது நிரம்பியுள்ளது (கோப்புப்படம்) மேட்டூர் டவுன் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. தூய்மையான குடிநீர், பாதாள சாக்கடை வசதிகளுடன் இந்தச் சிறுநகர் உருவாக்கப்பட்டது. மைசூர் அரசுக்கு உட்பட்டிருந்த சிவசமுத்திரத்தில் இருந்த மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டது. இங்கு வசித்த மக்களுக்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் மிகப்பெரிய வாரச் சந்தை கூடியது. நிலம் எடுக்கும் பணிகளுக்காக, மேட்டூர் ஒரு தனி மாவட்டம் என அறிவிக்கப்பட்டது. மேட்டூர் அணை அமையும் இடம், அணையின் நீர் தேங்கும் இடம், தொழிலாளர்களின் கேம்ப், மின் நிலையம், ஒர்க் ஷாப் பகுதிகள் போன்றவற்றை உள்ளடக்கி இந்த மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த அந்தஸ்து நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. நில எடுப்புப் பணிகள் முடிந்த பிறகு, 1929 ஜூலையில் மேட்டூர் மாவட்டம், சேலம் மாவட்டத்தின் ஒரு தாலுகாவாக கீழிறக்கப்பட்டது. நீரில் மூழ்கிய திருமலை நாயக்கர் கோட்டை அணை கட்டப்படும் இடத்தில் காவேரிபுரம் என்ற ஊர் ஒன்று இருந்தது. அணை கட்டப்பட்ட தருணத்தில் இங்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் கிறிஸ்தவர்கள் வசித்து வந்தனர். சிதிலமடைந்த நிலையில் ஒரு கோட்டையும் ஒரு சிவன் கோவிலும் இந்தக் கிராமத்தில் இருந்தன. மைசூருக்கு செல்லும் கணவாயின் துவக்கத்தில் இந்தக் கோட்டை அமைந்திருந்தது. மைசூரிலிருந்து வரும் படையெடுப்பைக் கண்காணிக்க, திருமலை நாயக்கரால் இந்தக் கோட்டை கட்டப்பட்டது. இந்தக் கோட்டை 1768இல் ஆங்கிலேயர் வசம் வந்தது. அதற்கு அடுத்த ஆண்டிலேயே ஹைதர் அலி அதைக் கைப்பற்றினார். மைசூர் போர் நடந்த காலம் நெடுகவே இந்தக் கோட்டை வியூகரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆனால், அணை கட்டப்பட்டுக் கொண்டிருந்த 20ஆம் நூற்றாண்டில் இந்தக் கோட்டைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. முடிவில், இந்தக் கோட்டை ஊரோடு சேர்ந்து மேட்டூர் அணையில் மூழ்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மேட்டூர் மாவட்டம், 1929 ஜூலையில் சேலம் மாவட்டத்தின் ஒரு தாலுகாவாக கீழிறக்கப்பட்டது (கோப்புப்படம்) சோழப்பாடி, நெருஞ்சிப்பேட்டை, சம்பள்ளி ஆகிய கிராமங்களும் அணையின் நீரில் மூழ்கின. பணிகள் இடைவிடாமல் நடந்ததில், 1934இல் அணையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. அந்த ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி கட்டுமானப் பணிகள் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. மேட்டூர் அணையால் உருவாகும் நீர்த்தேக்கத்திற்கு, அப்போதைய சென்னை மாகாண ஆளுநரான கர்னல் ஜார்ஜ் ஃப்ரெட்ரிக் ஸ்டான்லியின் பெயர் சூட்டப்பட்டு, அணை பயன்பாட்டிற்கு வந்தது. மேட்டூர் அணையின் உயரம் 120 அடி. நீளம் 1,700 மீட்டர். 59.25 சதுர மைல் பரப்பிற்கு இந்த அணையில் நீர் தேங்குகிறது. தற்போதும் மேட்டூர் அணை, இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்று. 93.5 டி.எம்.சி. நீரை இந்த அணையில் தேக்க முடியும். இது கிருஷ்ணராஜ சாகர் அணையின் கொள்ளளவைவிட இரு மடங்கு. https://www.bbc.com/tamil/articles/c0mnrxev4n7o
  3. 'சம தரப்பு அங்கீகாரத்துடன் பேச்சு மேசைக்கு வந்த தவிபு கள் மீது மேற்குலகம் விதித்த தடைதான் தமிழின அழிப்புக்கு வழி கோலியது. எனவே முதல் குற்றவாளிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் தான்' என்பதைத் தொடர்ந்து பதிவு செய்தவர் விராஜ் மென்டிஸ். அத்தோடு நிற்காமல் அதை ஒரு வழக்காகப் பதிவு செய்து தவிபு கள் மீதான தடையை நீக்குவதுதான் தமிழின அழிப்புக்கான நீதியின் முதற்படி என்பதில் எந்த சமரசமும் இல்லாமல் தொடர்ந்து போராடியவர் விராஜ். 2009 இற்குப் பிறகு எதிரிகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் பு லி நீக்க அரசியல் ஒரு பக்கம் முன்னெடுக்கப்பட பு லி களை ஆதரித்தவர்கள் கூட தோல்வி உளவியலின் பிரகாரம் பு லி க ள் இனி ஒரு முதன்மைச் சக்தி இல்லை என்ற நிலைப்பாட்டுடன் வேறு ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுக்க அதை மறுதலித்து என்றுமே தமிழீழ விடுதலையின் மைய அச்சு பு லி கள் தான் - குறிப்பாக தலைவர் தான் என்பதில் தெளிவாக இருந்தவர் விராஜ். நந்திக்கடல் கோட்பாடுகளை நாம் உருவாக்கும் போது விராஜ் எமது வட்டத்திற்குள் இருக்கவில்லை. ஆனால் பின் நாட்களில் அவரது பார்வையும், கருத்துக்களும் எமது தத்துவத்துடன் வந்து ஒரு புள்ளியில் சந்தித்தது. ஒரு கட்டத்தில் எமது கோட்பாடுகளை சரி செய்யவும், விரிவாக்கவும் செய்யவும், அதை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லவும் எமக்கு ஒரு ஆசானாகவும் - பாலமாகவும் இருந்தார் விராஜ். தலைவர் பிரபாகரன் இறுதிவரை சரணைடையாது, மண்டியிடாது நின்று போரிட்ட நந்திக்கடலும் அது சொல்லிய அந்தச் செய்தியும்தான் தமிழர்களின் ஒட்டுமொத்த இறையாண்மையின் அடையாளமென்ற நந்திக்கடல் கோட்பாடுகளின் மையச் சரடை அவர் வாய்ப்புக் கிடைக்கும் இடமெங்கும் ஓயாது பதிவு செய்தார் . அவர் குறித்துப் பேச எழுத நிறையவே உள்ளது. நிச்சயம் பேச வேண்டும் - எழுத வேண்டும். 2009 இற்குப் பிறகு தடம் புரண்டு போன தமிழர்கள் பலர் வெட்கித் தலை குனியும் வரலாறு அது. ஆனால் அவரது இழப்பிலிருந்து மீள முடியாதுள்ள எம்மால் தொடர்ந்து எழுதமுடியவில்லை. வரும் காலத்தில் அதை முழுமையாகப் பதிவு செய்து வரலாற்றில் ஆவணப்படுத்துவோம். புகழ் வணக்கம் ஆசான். 🙏 ❤️ நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்கச் சிந்தனைப் பள்ளி. ❤️ பிரபாகரன் சிந்தனைப்பள்ளி. -பரணி கிருஷ்ண ரஜனி
  4. பயிற்சியில் ஈடுபட்டுள்ள கரும்புலிகள் 'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது | ஈற்றில் வருபவர் மேஜர் ஆதித்தன், அவர் முன்னால் வருபவர் மேஜர் மலர்விழி ஆவார்.' 'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது | முதலாமவர் மேஜர் ஆதித்தன், இரண்டாமவர் மேஜர் மலர்விழி, மூன்றாமவர் மேஜர் செங்கதிர்வாணன், மேற்கொண்டு வருவோர் பெயர் அறியில்லை'' 'பயிற்சியில் ஈடுபட்டுள்ள கரும்புலிகள்'
  5. யாரோ நம்மடையாக்கள் தான் போல!
  6. ந‌ட‌க்க‌லாம் இங்லாந் நாடு தான் அதிக‌ ஜந்து நாள் விளையாட்டை அதிக‌ம் விளையாடுகின‌ம்......................ரிக்கி சொன்னால் ச‌ரியாக‌ தான் இருக்கும் ஜோ ரூட் இன்னும் நிறைய‌ ச‌ர்வ‌தேச‌ போட்டியில் விளையாடுவார் வ‌ய‌து அப்ப‌டி.............................
  7. தாயைப் பிரிந்த சேய்போல உது பாட்டுக்கு நகர்ந்து எங்க போகுதாம் . ....... ஒரு வேலை உந்தப் பாறை வருவது தெரிந்துதான் இந்தோனேசியா தலைநகரத்தை காட்டுப்பகுதிக்கு மாற்றுகிறார்கள் என்று நினைக்கின்றேன் . .......! 😂
  8. அன்டார்டிகா: பெருங்கடலின் சுழலில் சிக்கியுள்ள உலகின் பிரமாண்ட பனிப்பாறை பட மூலாதாரம்,CHRIS WALTON/BAS படக்குறிப்பு, உலகின் மிகப்பெரிய பனிப்பாறை ஏ23ஏ கட்டுரை தகவல் எழுதியவர், ஜோனதன் அமோஸ் & எர்வான் ரிவால்ட் பதவி, பிபிசி செய்திகள் 18 ஆகஸ்ட் 2024, 08:41 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஏ23ஏ (A23a) என்பது உலகின் மிகப்பெரிய பனிப்பாறை. அன்டார்டிக் பெருங்கடலில் நீண்டகாலமாக நகராமல் இருந்த இந்தப் பாறையில் தற்போது மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலகின் மிக வலிமையான கடல் நீரோட்டத்தோடு சேர்ந்து பயணிக்க வேண்டிய இந்தப் பனிப்பாறை, அன்டார்டிகாவின் வடக்குப் பகுதியில் கடந்த சில மாதங்களாகச் சுழலில் சிக்கிச் சுழன்ற வண்ணம் இருக்கிறது. பெரிய நீர் சுழற்சியின் மையப் பகுதியில் லண்டனை காட்டிலும் இரண்டு மடங்கு பெரிய அளவில் உள்ள இந்தப் பனிப்பாறை சிக்கிக் கொண்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். டெயல்ர் காலம் (Taylor Column) என்று கடல்சார் ஆராய்ச்சியாளர்களால் அழைக்கப்படும் இந்தச் சுழலில் இருந்து ஏ23ஏ பனிப்பாறை அவ்வளவு விரைவில் வெளியேறாது என்றும் தெரிவிக்கின்றனர். "பொதுவாக மக்கள், பனிப்பாறை உருமாறிக் கொண்டே இருக்கும் என்று நினைப்பார்கள். அவை சிறிது சிறிதாக உடைந்து உருகிவிடும். ஆனால் இந்தப் பனிப்பாறையின் நிலைமை அப்படியல்ல," என்று கூறுகிறார் துருவப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளும் பேராசிரியர் மார்க் பிராண்டன். பிபிசி செய்தியிடம் பேசிய, அவர், "A23a பனிப்பாறை அழிய மறுப்பதாக," கூறினார். இந்தப் பனிப்பாறையின் பயணம் நீண்ட காலமாக ஆவணப் படுத்தப்பட்டுள்ளது. அன்டார்டிக் கடற்கரையில் இருந்து 1986ஆம் ஆண்டு பிரிந்த இந்தப் பனிப்பாறை உடனடியாக வேடெல் கடல்தரை மணலில் சிக்கிக் கொண்டது. படக்குறிப்பு, கடந்த 30 ஆண்டுகளாக இதுவொரு நிலையான பனித் தீவாகச் செயல்பட்டது. துளியும்கூட அங்கிருந்து நகரவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக இதுவொரு நிலையான பனித் தீவாக இருந்தது. துளியும்கூட அங்கிருந்து நகரவில்லை. ஆனால் 2020ஆம் ஆண்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகரத் துவங்கியது இந்தப் பனிப்பாறை. வெப்பமான காற்று மற்றும் நீர் உள்ள வடக்குப் பகுதியை நோக்கி நகர்வதற்கு முன் அது மிகவும் மெதுவாகவே நகர்ந்தது. இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், A23a அன்டார்டிகாவின் துருவவட்ட நீரோட்டப் பகுதியில் நுழைந்தது. உலகிலுள்ள நதிகளில் இருக்கும் நீரைக் காட்டிலும் நூறு மடங்கு அதிக நீரைக் கொண்ட மிகவும் வலிமையான நீரோட்டம் இது. இது பொதுவாக டிரில்லியன் டன் எடை கொண்டுள்ள பனிப்பாறையை அட்லான்டிக் பகுதியில் சேர்ப்பதற்கான ஊக்கியாகச் செயல்பட வேண்டும். பட மூலாதாரம்,DERREN FOX/BAS படக்குறிப்பு, உலகின் மிக வலிமையான கடல் நீரோட்டத்தோடு போட்டியிட வேண்டிய இந்தப் பனிப்பாறை, அன்டார்டிகாவின் வடக்குப் பகுதியில் கடந்த சில மாதங்களாகச் சுழன்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்த A23a பனிப்பாறையோ இந்த நீரோட்டத்தின் உதவியோடு எங்கும் செல்லவில்லை. மாறாக தெற்கு ஓர்க்னே தீவுகளுக்கு வடக்குப் பகுதியில் இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 15 டிகிரி கோணத்தில் எதிர்கடிகார திசையில் சுற்றி வருகிறது. இவ்வாறாக இது சுற்றிக் கொண்டிருக்கும் காலம் வரை இந்தப் பனிப்பாறைக்கு அழிவே இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கடற்கரையில் இருந்து பிரிந்த பனிப்பாறை மீண்டும் கடலின் அடிப்பகுதியோடு இணையவில்லை. கடலின் தரைக்கும் பனிப்பாறையின் அடிப்பகுதிக்கும் இடையே குறைந்தது ஆயிரம் மீட்டர்கள் நீரால் நிறைந்துள்ளது. கடந்த 1920ஆம் ஆண்டில் முதன்முதலாக சர் ஜி.ஐ.சர் ஜி.ஐ.(ஜியோஃபெரி இன்கிராம்) டெய்லர் இந்தச் சுழல் குறித்து விவரித்துள்ளார். இப்போது அந்தச் சுழலில் இந்தப் பனிப்பாறை சிக்கியுள்ளது. படக்குறிப்பு, இந்தப் பனிப்பாறையைப் பொறுத்தவரை, தடையானது 100 கி.மீ. அகலம் கொண்ட, பிரீ கரை எனப்படும் கடல் முகடு. இந்த பிரீ கரையின் மேலே நீர்ச்சுழல் ஏற்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜில் படித்த இவர் திரவ இயக்கவியல் துறையில் ஒரு முன்னோடியாகச் செயல்பட்டார். மேலும் உலகின் முதல் அணுகுண்டு சோதனையின் மாதிரியைக் காட்ட மன்ஹாட்டன் திட்டத்தில்கூட இவர் இணைக்கப்பட்டார். பேராசிரியர் டெய்லர், சரியான சூழலில், நீரோட்டத்தில் ஏற்படும் தடை எவ்வாறு இரு வித்தியாசமான நீரோட்டங்களை உருவாக்கும் என்பதையும் அவற்றுக்கு மத்தியில் எவ்வாறு ஆழமான நீர் சுழற்சியை உருவாக்கும் என்பதையும் விவரித்தார். இந்தப் பனிப்பாறையைப் பொறுத்தவரை, 100 கி.மீ வரை விரிந்துள்ள, பிரீ கரை எனப்படும் கடல் முகடு தடையாக உள்ளது. இந்த பிரீ கரையின் மேலேதான் நீர்ச்சுழல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சுழலில் தற்போது A23a வசமாக சிக்கிக் கொண்டுள்ளது. படக்குறிப்பு, கடலின் தரைக்கும் பனிப்பாறையின் அடிப்பகுதிக்கும் இடையே குறைந்தது ஆயிரம் மீட்டர்கள் நீரால் நிறைந்துள்ளது. கடல் ஆச்சரியங்களால் நிறைந்தது. இதன் டைனமிக் அம்சம் அதில் சிறப்பான ஒன்று என்கிறார் பிரிட்டிஷ் அன்டார்டிக் சர்வேயில் இருந்து பேசிய பேராசிரியர் மைக் மெரெடித். "இத்தகைய டெய்லர் (Taylor Columns) நிகழ்வானது காற்றிலும் ஏற்படும். மலைகளுக்கு மேலே நகரும் மேகங்களில் இத்தகைய நிகழ்வுகளை நீங்கள் காண இயலும். ஆய்வகத் தொட்டியின் மேல் இது ஒரு சில சென்டிமீட்டர்கள் மட்டுமே நீளம் கொண்டதாகவும் அது இருக்கலாம் அல்லது இந்தப் பனிப்பாறை போன்ற மிகப்பெரிய அளவிலும்கூட இருக்கலாம்," என்கிறார் மைக். ஆனால் எவ்வளவு காலத்திற்கு A23a இப்படி சுழலில் சிக்கி சுற்றிக் கொண்டிருக்கும்? படக்குறிப்பு, இவ்வாறாக இது சுற்றிக் கொண்டிருக்கும் காலம் வரை இந்தப் பனிப்பாறைக்கு அழிவே இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். யாருக்குத் தெரியும். ஒரு மிதவை கருவியை பேராசிரியர் மெரெடித், பிரீ கரையின் மற்றொரு பகுதியில் ஆராய்ச்சிக்காக வைத்திருந்தார். நான்கு ஆண்டுகள் ஆன பிறகும்கூட அந்த இடத்தில் இந்த மிதக்கும் கருவியானது இன்றும் சுழன்று கொண்டிருக்கிறது. கடல் தரையின் அமைப்பு பற்றித் தெரிந்துகொள்வது ஏன் முக்கியம் என்பதற்கு இந்தப் பனிப்பாறை ஒரு நல்ல உதாரணம். கடலில் உள்ள மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் முகடுகள், நீரின் ஓட்டம், நீர் கலப்பது, கடலில் உள்ள ஊட்டச்சத்துகள் கடல் உயிரினங்களுக்கு சரியாகச் சென்று சேர்வது உள்ளிட்ட அனைத்திலும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. பட மூலாதாரம்,SEABED2030/NIPPON FOUNDATION படக்குறிப்பு, கறுப்பு நிறத்தில் அமைந்திருக்கும் கடலின் தரைப்பகுதிகளில் இன்னும் அதிக அளவிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. இது காலநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உலகம் முழுவதும் வெப்பத்தைப் பரப்புவதில் இந்த நீரின் போக்கானது உதவுகிறது. இந்த செயல்பாட்டிற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், தெற்கு ஓர்க்னேவின் வடக்குப் பகுதியானது நன்கு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதேநிலை உலகிலுள்ள மற்ற இடங்களுக்குப் பொருந்தாது. தற்போது வரை, உலகிலுள்ள கடல் தரைகளில் கால்பகுதி மட்டுமே நவீன தரத்திற்கு ஏற்ப வரைபடமாக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/c24pp857r79o
  9. படகுகளை பறித்து திருப்பி கொடுக்கா விட்டால் மேலும் வருபவர்களின் எண்ணிக்கை குறையும்.
  10. சம்பந்தரும்... நம்பிக் கெட்டோம், ஏமாற்றி விட்டார்கள் என்று கடைசி காலத்தில் சொல்லி விட்டு... செத்துப் போனார். இப்போ.. ஸ்ரீதரனும் அதையே சொல்கிறார். இதற்குள்... சுமந்திரனும், ரணில்... வாக்குறுதி தந்துள்ளதாக சொல்லிக் கொண்டு திரிகிறார். நடந்த சம்பவங்களில் இருந்து, பாடம் கற்க வேண்டாமா? உங்களது அணுகு முறையை மாற்றாமல்... வருகின்ற எல்லாரும் இதையே சொல்லிக் கொண்டு இருக்கவா உங்களை பாரளுமன்றம் அனுப்பினார்கள். மக்கள் உங்கள் மீது... பயங்கர வெறுப்பில் இருக்கின்றார்கள். இப்படியே... போனால், செல்லாக் காசு ஆகி விடுவீர்கள் என்பதை மறக்க வேண்டாம்.
  11. அச்சம் தவிர் ------------------- முன்னரே ஒரு தடவை தொலைபேசியில் கதைத்திருந்தாலும், அவனை நேரே பார்க்கும் போது, குறிப்பாக அவனின் நீண்ட தாடி அது நெஞ்சு வரை விழுந்திருந்தது, என்னவெல்லாமோ நினைக்க வைத்தது. அவனின் பெயரிலே அவன் யார், அவனின் மார்க்கம் என்னவென்று தெளிவாக இருக்கின்றது. ஆனாலும், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வேலைக்கு வரும் போதும் அப்படியே, அதே தோற்றதுடனேயே வருவார்கள் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. தனியாக வந்து வேலையில் சேர்ந்த அவன் சில மாதங்களின் பின்னர் அவனின் மனைவியை இங்கு வரவழைத்தான். இந்த நாட்டிற்கு உள்ளே வருவதற்கு மிக இலகுவான வழிகளில் ஒன்று இங்கு சட்டரீதியாக வேலை ஒன்றில் இருக்கும் கணவன்மார்களின் மனைவிகளுக்கு உண்டு. அந்த விசாவை கிட்டத்தட்ட எந்தக் கேள்வியும் இல்லாமல் இந்த நாடு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இங்கேயே உழைத்து, இங்கேயே செலவழிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு போல. இதற்காக இங்கு சில பல்கலைகளில் கிடைக்கும் தகவல்களை ஆராய்ந்து அறிக்கைகள் கூட தயார் செய்திருப்பார்கள். இவர்களின் சில ஆராய்ச்சிகளைப் பார்த்தால், அவை 'மயிர் பிளக்கும்' ஆராய்ச்சிகள் போன்றே தோன்றும். ஆனாலும் அவற்றின் பின்னாலும் சில திட்டங்கள் இருக்கும் போல. மிக நேர்மையானவனாக இருந்தான். அதுவரை நான் அப்படி நேர்மையான ஒரு மனிதனை எங்களின் வேலையில் பார்த்திருக்கவில்லை. மிகத் திறமையானவனும் கூட. அவன் பொய்யே சொல்வதில்லை என்றே தோன்றியது. ஒரு நாள் நேரடியாகவே அதைக் கேட்டேன். மெல்லிய சிரிப்பு ஒன்றே அவனின் பதிலாக இருந்தது. தினமும் ஒரு கத்தியுடனேயே வேலைக்கு வந்து கொண்டிருக்கின்றான் என்று சில நாட்களில் தெரிய வந்தது. கத்தியை அவனின் மேசையில் இருக்கும் ஒரு அலுமாரியில் வைத்துக் கொள்வான். பின்னர் வேலை முடிந்து வீடு போகும் போது அதை கொண்டு போய்க் கொண்டிருந்தான். அவர்களின் மார்க்கத்தில் இருக்கும் இரண்டு பெரிய பிரிவுகளும் இல்லாமல் இன்னொரு பிரிவே அவனுடையது. முதன் முதலாக அந்த மார்க்கத்தில் இருக்கும் அப்பிரிவைப் பற்றி அவனிடமிருந்து கேள்விப்பட்டேன். ஆண்கள் கத்தியுடன் வெளியே போய் வரவேண்டும் என்ற ஒரு கட்டளை அங்கிருந்தது. சீக்கியர்களுக்கும் இப்படியான ஒரு வழக்கம், கத்தி ஒன்றுடன் போய் வரும், இருந்தது. இன்றும் பஞ்சாப்பில் நகரம் அல்லாத பகுதிகளில் இந்த வழக்கம் இருக்கக்கூடும். 9/11 தாக்குதலின் பின், இங்கு சில இடங்களில் சீக்கியர்கள் தாக்கப்பட்டார்கள், இஸ்லாமியர்கள் என்று தவறாக அடையாளப்படுத்தப்பட்டு. இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிரிகள் என்று சொன்னால் எவரும் நம்பமாட்டார்கள். இரு பக்கங்களும் ஒரே மாதிரியான தோற்றங்கள் மற்றும் ஆடைகள், ஒப்பனைகள், கத்திகளுடன் இருக்கின்றனர். ஒரு நாள் ஏதோ ஒரு விசா சம்பந்தமான அலுவல் ஒன்றுக்காக அவன் நகரத்தின் மையப்பகுதியில் இருக்கும் குடிவரவு அலுவலகத்திற்கு போக வேண்டியிருந்தது. எங்களின் வேலை இடத்தில் இருந்து ஒரு 25 மைல்கள் தூரத்தில் நகரத்தின் மையப்பகுதி இருக்கின்றது. அங்கே வேறு பல மத்திய, மாநில அரச அலுவலகங்களும் சுற்றிவர இருக்கின்றன. காலையில் இருந்தே அந்தப் பகுதி கூட்டமாக இருக்கும். காரை தரிப்பிடங்களில் நிற்பாட்டுவதற்கே நேரம் எடுக்கும். ஆதலால் அதிகாலையிலேயே போய், அருகே இருக்கும் ஒரு இடத்தில் காரை நிற்பாட்டி விட்டு, அவன் போக வேண்டிய இடத்திற்கு போகச் சொல்லியிருந்தேன். கூகிளுக்கு முந்திய காலம் இது. காரை நான் சொல்லியிருந்த இடத்தில் விட்டு விட்டு, அருகிலேயே இருக்கும் கட்டிடம் நோக்கி நடக்க ஆரம்பித்தவனுக்கு வலப்பக்கமா அல்லது இடப்பக்கமா, எந்தப் பக்கம் போவது என்ற சந்தேகம் வந்தது. அங்கே நின்ற ஒருவரைக் கேட்போம் என்று, கையில் ஒரு கடதாசியை நீட்டிக் கொண்டே, இந்த இடம் எங்கே இருக்கின்றது என்று அவன் கேட்கப் போனான். இவன் கையை நீட்டிக் கொண்டு வருவதைக் கண்ட அங்கு நின்ற நபர் திரும்பிப் பார்க்காமால் ஓட்டம் பிடித்தார். இவனும் மற்ற பக்கமாக ஓடி, காரை எடுத்துக் கொண்டு அப்படியே வேலைக்கு வந்து, அங்கு நடந்ததைச் சொன்னான். அந்த நபர் ஏன் ஓடினார் என்று அவன் என்னைக் கேட்டான். நீ ஏன் ஓடி வந்தாய் என்று நான் கேட்டேன். அந்த நபர் ஓடிப் போய் துப்பாக்கி எடுத்து வந்து சுட்டாலும் என்ற பயத்தில் தான் தான் ஓடி வந்ததாகச் சொன்னான். உன்னுடைய கத்தி எங்கே இருந்தது என்று கேட்டேன். இடுப்பைக் காட்டினான். இப்பவும் அந்தக் கத்தி அங்கேயே இருந்தது. இனிமேல் தான் அது மேசை அலுமாரிக்குள் போகும். சில மாதங்கள் அவன் இங்கிருந்து விட்டு இந்தியாவுக்கு திரும்பிப் போய்விட்டான்.
  12. பெர்சு, இது மிகவும் இலகுவானது. நான் கொடுத்த பணத்தைத் திரும்பவும் என்னிடம் தந்தால் விடயம் முடிவுக்கு வருகிறது. இல்லையா? இதில் இரண்டு விடயங்கள் உறுதியாகிறது. 1) தமிழனின் தலைக்கு மேல் துப்பாக்கி தொங்கிக்கொண்டு இருந்தால் மாத்திரமே அவன் நேர்மயானவனாக, தேசப்பற்றாளனாகப் இருப்பான். 2) போராட்டத்திற்கு ஆதரவாக செயற்பட்ட புலம்பெயர்ஸ் களில் போலிகளும் சந்தர்ப்பவாதிகளும்தான் அதிகம். உ+ம் ; Toronto, Scarborough, Staines Road ல் நடைபெற்ற கூட்டத்தில் அவசர நிதி சேர்ப்பு என்று கூறி பெருமளவான உணர்வாளர்களை அழைத்திருந்தார்கள. கூட்ட முடிவில் அனேகரிடம் காசு சேர்ப்பிற்கான பற்றுச் சீட்டுக்களடங்கிய புத்தகங்கள் கட்டுக்கட்டாக கொடுக்கப்பட்டது. நிதி வசூலிப்பும் வீடு வீடாக ஆரம்பமாகியது. அடித்தடுத்த ஓரிரு வாரங்களில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. அடுத்தடுத்த கிழமைகளில் கொடுக்கப்பட்ட பற்றுச் சீட்டுக்களுக்கு பணத்தை திரும்பவும் தரப்போவதாகக் கூறி பற்றுச் சீட்டுக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்கள். இப்போது கொடுக்கப்பட்ட நிதிக்கான பற்றுச் சீட்டும் இல்லை, பணமும் இல்லை. இந்தத் துரோகங்களுக்கு யார் சப்பைக்கட்டு கட்டினாலும் அவர்களும் இந்த மோசடியின் பங்காளர்களே.
  13. 🤣......... நீங்கள் தொடர்பு கொண்ட அறிஞர்கள் மிகவும் இளையவர்கள் போலத் தெரிகின்றது............ அநியாயமாகப் இடையிலேயே போய்ச் சேர்ந்த ஒரு அற்புதமான கலைஞன். இன்றைய சினிமாவில் இவர் இருந்திருக்கவேண்டும். இன்றும் சினிமாவில் சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், தல, தளபதிகள் என்று ஒரு பக்கம் கொடி, ஆலவட்டம் இருந்தாலும், 'மாற்றுக் கலைஞர்களுக்கும்' இன்றைய சினிமாவில் நல்ல இடமும், வரவேற்பும் இருக்கின்றது. அன்று இதே வரவேற்பு அவர்களுக்கு இருக்கவில்லை. இங்கு ஒரு நாடகத்தில் 'நானொரு முட்டாளுங்க.........' பாடல் இருந்தது. அதில் நடிக்க இருந்தவர் அநதப் பாட்டிற்கு தான் மேடையில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்.........🫣. 'பிறக்கும் போதும் அழுகின்றான் இறக்கும் போதும் அழுகின்றான்.................', தமிழில் வந்த பாடல்களில் மிகச் சிறந்ததில் ஒன்று................
  14. கந்தையா, பணத்தை பாதுகாக்கும் கட்டமைப்பு தேவையல்லை. பொறிமுறையும் தேவையில்லை. பணத்தை இவர்கள் பாதுகாக்கவும தேவையில்லை. பணத்தை யாரிடம் இருந்து பெற்றார்கள், யாருடைய பெயரில் பெருந்தொகை பணத்தை எடுத்து அதை அபகரித்து அவர்களை வாழ்நாள் கடனாளியாக்கி னர்களோ அவர்களின் பெயர், முகவரி விபரம் எல்லாம் நீங்கள் கூறிய செயற்பாட்டாளர்களிடம் உண்டு. பணத்தை மனம் இருந்தால் திருடிய இடத்தில் காதும் காதும் வைத்த மாதிரி திருப்பி கொடுத்திருக்கலாம். அதற்கு எந்த தடையும் சட்ட சிக்கலும் இல்லை. பணத்தை இழந்தவர்கள் இப்போதும் உள்ளார்கள். அவர்கள் இவர்களை காட்டிக் கொடுக்கப்போவதில்லை. தமது பணம் திரும்பி வந்ததையிட்டு மகிழ்சசியடையவே செய்வர். பணத்தை பெறும் போதும் இல்லாத சட்ட சிக்கல் உரியவரிடம் திருப்பி ஒப்படைக்கும் போது வரப் போவதில்லை. பணத்தை தாம் அனுபவிப்பதற்தை நியாயப்படுத்த இவ்வறான ஆயிரம் காரணங்களை அவர்கள் கூறலாம். அவர்களுக்கு வேண்டியவர்கள் ஆயிரம் முட்டு கொடுப்புகளைச் செய்யலாம். அவை எதுவும் நியாயமானதல்ல.
  15. ஜ‌ந்து நாள் போட்டி மூன்று நாளில் முடிந்து விட்ட‌து தென் ஆபிரிக்கா வெற்றி.............................
  16. நீங்களோ சந்திரபாபுவின் பாட்டு தான் சிட்டிவேஷன் சாங்க் என்று விட்டீர்கள் நானும் இது தொடர்பான அறிஞர்களிடம் தொலைபேசி எடுத்து விசாரணை செய்தேன். வைரமுத்துவை சொல்கின்றாயா என்றார்கள் இறுதியில் விடை கிடைத்தது 😂 மிகவும் பொருத்தமான சிறப்பு பாடல் ஒண்ணுமே புரியல உலகத்துல கண்ணிலே கண்டதும் கனவாய் தோணுதே காதிலே கேட்டதும் கதை போல் ஆனதே என்னானு தெரியலே சொன்னாலும் விளங்கலே என்னை போலே (ஈழதமிழர்கள் போலே ) ஏமாளி எவனும் இல்லே
  17. சில வருடங்களுக்கு கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி வட இந்தியாவில் நடந்த போது... விளையாட்டு வீரர்கள் தங்கும் வீட்டில் பாம்பு, இருந்தது. தண்ணீர் ஒழுங்காக வரவில்லை. படுக்கையறையில் பழைய மெத்தைகளை போட்டு, அதற்கு மேல் புது சீலைகளை விரித்து இருந்தார்கள் என்று... பல்வேறு குற்றச் சாட்டுக்கள் சுமத்தப் பட்டது. வழக்கம் போல் ஊழல் செய்தவர்களை கண்டிக்க விசாரணை கமிஷன் அமைத்து, அதன் முடிவு தெரியாமலே.. மக்கள் மறந்து விட்டார்கள். சர்வதேச அளவில்... இந்தியா மீது பலத்த கேலியும், கிண்டலும் நடந்த சம்பவம் அது.
  18. சுளையாக டொலரை கண்டவுடன், இடையில் புகுந்த கலாச்சாரம். ஒரு சிலர் இதை செய்வதால்... முழு இனத்துக்கும் இது தலைகுனிவு. போரில்... உயிரை, சொத்துக்களை இழந்த இனம் இதை செய்வது வெட்கக் கேடானது. இறந்த ஆத்மாக்களின் சாபம், இவர்களை சும்மா விடாது.
  19. 🤣 ஓம் மார்க்கெட் என்றால் எங்களது ஜனாதிபதி தமிழ் பொது வேட்பானரைவிட இவாவுக்கு தான் மார்க்கெட் ஈழதமிழர்களிடம் மிக அதிகமாக உள்ளது.
  20. கபி, உங்கு மார்க்கம் & Steeles பகுதியில் பூரணி விலா எனும் கடை வைத்திருப்பவரை உங்களுத் தெரியுமா? அவர் இறுதி யுத்த காலத்தில் ஒவ்வொரு தமிழ் குடும்பமும் 2500 தாருங்கள், 2011 இல் தலைவர் தலைவர் தமிழீழக் கொடியை ஏற்றிய பின் வட்டியுடன் தருவேன் என்று கேட்டும் மிரட்டியும் வாங்கி இன்று கோடீஸ்வராக இருக்கின்றார் என்பது தெரிந்து இருக்கும் என நினைக்கின்றேன் (அவர் கடையில் நல்ல வடிவான மலையாள சேச்சிகள் வேலை செய்கின்றனர்)
  21. யார்யார் நேர்காணல் செய்வதென்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.
  22. ஆசான் ஜெயமோகனின் தளத்தில் இமைக்கணம் நாவல் பற்றிய எனது “வாசக நயப்பு” வெளிவந்துள்ளது😀 https://www.jeyamohan.in/203567/
  23. ஆண்டவனை [சமயத்தை] கொஞ்சம் மறவுங்கள், மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் சிந்தியுங்கள்! / FORGET GOD [RELIGION] FOR THE TIME BEING; AND THINK HUMAN [HUMANITY] FROM TODAY!” பகுதி / Part : 01 நாம் தவழ தொடங்கும் போதே, ஆண்டவனைப் பற்றிய கருத்து, அல்லது சமயம், அல்லது அதனுடன் சேர்ந்த சமய சம்பந்தமான சந்தேகமான நடைமுறைகள் எல்லாம் எமக்கு அல்லது எம்மில் பலருக்கு, எம்மை சூழ்ந்து இருப்பவர்களால் திணிக்கப் படுகின்றன. நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும், ஆண்டவனும் நாத்திகமும், சாதியும் சமத்துவமும், போன்ற அனைத்துமே ஒன்றாக பிறந்த இரட்டை எதிரிகள் ஆகும். இதில் எது ஒன்றாயினும் தலை காட்டும் போது, மற்றது அதை எதிர்க்க தலை காட்டும். எல்லோருக்கும் நன்றாகத் தெரியும், கேள்விகளுடன் தான், அறிவு வளர்ச்சி அடையும் என்று. "பறவையைக் கண்டான் விமானம் படைத்தான், பாயும் மீன்களில் படகினைக் கண்டான், எதிரொலி கேட்டான் வானொலி படை த்தான் .... மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்.... பொய் நீதியும் நேர்மையும் பேசுவான், தினம் ஜாதியும் பேதமும் கூறுவான், அது வேதன் விதி என்றோதுவான், மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்..." இப்படி இன்றைய நூற்றாண்டு கவிஞன் கூறினான். ஆமாம், என்னை அடிக்கடி தொந்தரவு செய்வது அல்லது அதிகமாக எனது ஆவலைக் கிளறுவது அவர்களின் நம்பிக்கையை கேள்வி கேட்கும் போது ஏன் இந்த மத பக்திமார்கள் அதை அவமதிப்பாக கருதுகிறார்கள் என்பதே! எமது தமிழ் சித்தர்கள் இதைத் தான் செய்தார்கள். உண்மை அல்லது நிஜ நிலை அடைய முயன்றவர்களே இந்த சித்தர்கள் ஆவார். சாதி, சமய சடங்குகளை கடந்து; சமுகத்தில் பயனுடையவை எவை, என்பதைப் பிரித்தறிந்து அவற்றுள் புதுமைகளைப் புகுத்துகின்ற அறிஞர்களாகவும், சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, சாதி சமய மன மாச்சரியங்களை [பகைமைகளை] மாற்றக் கருதிய சீர்த்திருத்த வாதிகளாகவும் இவர்கள் வாழ்ந்தார்கள். இவர்கள் இந்த மத பக்தியாளர்களை வெளிப்படையாக கேள்வி கேட்டு எதிர்த்தார்கள். கடவுளைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். 'உன்னுள்ளும் இருப்பான் என்னுள்ளும் இருப்பான், உருவம் இல்லா உண்மை அவன். இதை உணர்ந்தார் இங்கே உலவுவதில்லை' என்று உறுதியாகக் கூறினான். இன்னும் ஒரு சித்தர் 'சாஸ்திரங்களை எரித்தவனே' சித்தர் என்கிறார். இந்த எல்லா சாஸ்திரங்களும், வேதங்களும், புராணங்களும் மற்றும் பல்வேறு மத தரப்பினரும் மனித இனத்தை ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட மிருகம் போல் மாற்றுகிறார்கள். பொதுவாக, அதிகமான சமயம் மனிதனை சிந்திக்க விடாமல் கட்டுப் படுத்துகிறது. பல தெய்வ வழிபாடு நம்பிக்கைகள் இருந்த ஒரு காலத்தில், அதை எதிர்த்து அடுக்கடுக்காய் வினாக்கள் கொடுத்த சித்தர் சிவவாக்கியர் ஆகும். பிராமணர்களின் அர்த்தமற்ற சடங்குகளை எதிர்த்து குரல் கொடுத்தவர். 'வேதம் ஓதுபவர்கள் திருவடி ஞானம் அடைந்ததுண்டோ? பெறவில்லையெனின் பாலில் நெய் இருப்பது பொய்யாகிப் போகுமே. கோயில் ஏது? குளம் ஏது? கண்ட இடமெல்லாம் குழம்பி திரியும் மூடர்காள்!' என்று சிவவாக்கியர் உரத்துப் பேசும் போது நாத்திகத்தின் குரலாகவே அவரது பாடல்கள் ஒலிக்கிறது. எம்முள்ளேயே அவன் குடிகொள்ளும் பொழுது, ஏன் நாம் புனித நீராட வேண்டும்? ஆலயம் போகவேண்டும்? புனித மலை எற வேண்டும்? இப்படி பல முக்கிய கேள்விகளை வினவுகிறார். கடவுளின் பெயரால் சிலை உருவங்கள் செய்து வைத்து வணங்குவதும், அவைகளுக்குத் தினசரி பூசைகள், நைவேத்தியங்கள், திருவிழாக்கள் செய்வதும் என்று தொன்று தொட்டு நடந்து வரும் வழமைகளை மூடப் பழக்கங்கள் என்று இவர் சாடுகிறார். ஒரு பவுல் [Baul] பங்காள மொழி நாட்டுப் புற பாடல் 'எல்லாம் வல்லவனை எப்படி நீ அடைவாய்? போகும் வழி யெல்லாம் ஆலயம், போகும் வழியெல்லாம் மசூதி, போகும் வழியெல்லாம் குருக்கள், எல்லா பாதையும் மூடி விட் டனவே?? [the road to the Absolute is blocked by temples, mosques and the teachers '] என்கிறது. மற்றும் ஒரு பவுல் பாடல்: "இவ்வுலகில் உன் மதம் என்ன? ஒவ்வொருவனும் லாலனை கேட் டனர். லாலன் சொன்னான்: 'எப்படி மதம் இருக்கும்? நான் அதன் மேல் கண் வைக்கவில்லை. சிலர் கழுத்தை சுற்றி பூ மாலை அணிகிறார்கள், சிலர் தஸ்பீஹ் [tasbis] என்ற பிரார்த்தனை மணிகள் வைத்திருக்கிறார்கள் .எனவே மக்கள் சொல்கிறார்கள் இவர்கள் வேறு வேறு மதத்தினர் என, ஆனால் நான் கேட் கிறேன் , நீங்கள் பிறக்கும் போதும் உங்கள் மதத்தின் சின்னம் அணிந்த பிறந்தீர்களா? இல்லை சாகும் போது தானும் அதை அணிந்து போகிறீர்களா ? ' [Everyone asks: "Lalan, what's your religion in this world?"Lalan answers: "How does religion look?",I've never laid eyes on it.Some wear malas [Hindu rosaries] around their necks,some tasbis [Muslim rosaries], and so people say they've got different religions.But do you bear the sign of your religion when you come or when you go? "] என்று சித்தர்கள் மாதிரி வினாவுகிறது. சித்தர்கள் எந்த சமயத்துடனும் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை. மேலும் அவர்களின் சில சித்தாந்தங்கள் சங்க காலத்திலேயே ஆரம்பிக்கப் பட்டதாக கருதப்படுகிறது [கி மு 700 to கி பி 300], எனினும் அவை ஏழாம் நூற்றாண்டு முதல் பதினோராம் நூற்றாண்டுவரை வளர்ச்சி அடைந்து பண்ணிரெண்டாம் ஆண்டில் முழுமையடைந்ததாக கருதப் படுகிறது. “நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்” என்று சிவவாக்கியர் நேரடியாக கேட் கிறார். அந்த மந்திரத்தால் என்ன பயன் என்று யோசித்துப் பார்த்தீர்களா? அட மூடர்களே, கடவுள் என்பவர் தனியாக வெளியில் இல்லை, உள்ளத்திலே இருக்கிறான். அப்படி இருக்கையில் நட்ட கல்லைச் சுற்றி வந்தால் அது பேசுமோ? அடுப்பில் வைத்துச் சுடப்பட்ட சட்டியும் அதனுள்ளே இருக்கும் அகப்பையும் அதில் சமைக்கும் உணவின் ருசியை அறியாதது போலவே நீர் செய்யும் புற வழிபாட்டினால் இறைவன் வெளித்தோன்ற மாட்டார். இறைவனை உள்ளத்தால் மட்டுமே காண இயலும். அவனை கல்லில் காண முடியும் என்று சொல்லுவது வெறும் பிதற்றலே என்று அந்த காலத்தில் சாடுவதென்றால், அவர்களின் கண் மூடித் தனமான பழக்க வழக்கங்களைப் ஆட்டிப் பார்ப்பதென்றால், எவ்வளவு துணிவு இவர்களுக்கு இருந்து இருக்க வேண்டும்? அதே போல,"மாரி தான் சிலரை வரைந்து பெய்யுமோ? காற்றுஞ் சிலரை நீக்கி வீசுமோ? மானிலஞ் சுமக்க மாட்டேனென்னுமோ? கதிரோன் சிலரைக் காயே னென்னுமோ? ...... குலமு மொன்றே குடியுமொன்றே, இறப்புமொன்றே பிறப்பு மொன்றே" என பிற் கால கபிலர் [கபிலர் அகவல்] கேட்கிறார். ஆண்டவனோ அல்லது சமயமோ , எதற்க்காக இவ்வுலகில் ஏற்படுத்தப் பட்டதோ அதை இன்று அவை வழங்க வில்லை. ஒவ்வொரு சமயத்தினதும் முக்கிய கடமை எப்படி ஒருவரை ஒருவர் அன்பு செலுத்துவது என்பதை போதித்து, அதன் மூலம் எம்மை, எமக்கும் உண்மைக்கும் அருகில் கொண்டுவருவதே ஆகும். "உன்னை அறிந்தால் ... நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்... தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா "ஆனால் , இன்று இதற்கு எதிர் மாறே நடைபெறுகிறது. சமயம் எம்மை ஒன்று சேர்க்கவில்லை, எம்மை பிரிக்கிறது. சமயத்திற்கு சமயம் மட்டும் அல்ல, அவை தமக்குள்ளும் பிரிந்து நிற்கின்றன. சமயம் பழைமை நெறிவாதத்தையும் சகிப்பு தன்மையின்மையையும் எமக்கு கொண்டுவந்து இன்று மிகப் பெரிய பிரச்சனை கொடுக்கிறது. இதனால், மத வெறியர்களை உண்டாக்கி , எமது சுதந்திரத்தை ஆண்டவனின் பெயரால் நாசம் பண்ணுகிறது. ஆகவே, எமது நோக்கத்தை நாம் சரிப்படுத்த வேண்டும், வாழ்க்கை வழியை சரிப்படுத்த வேண்டும், சமயங்கள் தொடக்கத்தில் எதை விரும்பியனவோ அப்படி மீண்டும் வார்த் தெடுக்க வேண்டும். எல்லா சமயங்களும் மனிதாபிமானத்தையே அறிவுறுத்தின. ஆகவே அதை அப்படியே பின்பற்றலாமே? அமைதி எமக்குள்ளே தான் உண்டு. அதே போல அன்பும் எமக்குள்ளே தான் உண்டு. ஏன் ஆண்டவனும் எமக்குள்ளே தான் உண்டு. எனவே கடவுளே அன்பு, அன்பே கடவுள், இதை அறிந்தால், எமக்கு அது உள் அமைதி தரும். ஒரு குழந்தை பிறக்கும் போது அதற்கு அன்பு மட்டுமே தெரியும் , மிச்சதெல்லாம் நாம் கற்பித்ததே. வெறுப்பு, பொறாமை, பேராசை, ஏன் பயங்கரவாதம் கூட நாம் சொல்லிக் கொடுத்ததே. என்னத்தை விதைத்தாயோ அதையே நீ அறுவடை செய்கிறாய். அப்படியென்றால் நீ ஏன் அன்பை விதைக்கக் கூடாது? அன்பை விதைத்தால் அதை விட பெருவாரியான அன்பை அறுவடை செய்யலாமே. அன்பு பலத்தினால் திணிக்க முடியாதது. ஆனால் சமயம் அப்படி அல்ல. இதை நாம் அறிய வேண்டும். ஆகவே நாம் மனித நேயம் தழுவி புது வாழ்க்கை வழியை அமைப்போம்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி:02 தொடரும் Most, if not all of us are force fed the concept of god, religion, and the suspect practices that come with the package from the time we can walk.One must understand that Faith and disbelief, God and atheism, caste and equality are twin born foes[opponents]. When one is born, the other rises to challenge it. As every one knows,Knowledge progresses with questioning.What annoys and probably intrigues me is why all these so called believers take offence when their beliefs are questioned.Our so called Tamil siddhars too did the same thing,They challenged these so called believers with questions.A Siddha is a free thinker and a revolutionary who refuses to allow himself to be carried away by any religion or scripture or rituals. One Tamil Siddhas says: "A Siddha is one who has burnt the sastras". All the sastras, Vedas, Puranas, and the various religious sects turn humanity into conditioned animals.Karai Siddhar draws a distinction between a Siddha and a non-Siddha by saying that a Siddha points to the path of the experience whereas a non-Siddha points to the path of scriptures.While poly-theism was an unquestioned canon of their time siddhars dared to speak of “One Indivisible God”. Siddhars like Siva Vakkiyaar have directly attacked the empty and meaningless rituals practised by the brahmins of their time.He raises a pertinent question: why should we go out to the sacred rivers, temples, mountains, etc.,when the threshold is in us.According to Sivavakkiyar a Siddha does not worship any deity in the temple. As a Baul sings: "the road to the Absolute is blocked by temples, mosques and the teachers and another Baul songs says :"Everyone asks: "Lalan, what's your religion in this world?"Lalan answers: "How does religion look?",I've never laid eyes on it.Some wear malas [Hindu rosaries] around their necks,some tasbis [Muslim rosaries], and so people say they've got different religions.But do you bear the sign of your religion when you come or when you go? " .The Tamil Siddhas do not belong to any religion or samayam. "Samayam" in Tamil means "convention", "rule".Some of their ideologies are considered to have originated during the First Sangam period [700BC to 300AD],And formulating over a five hundred year period,between the 7th and the 11th centuries,but fully flowering only after the 12th century.siddhars[சித்தர்],Who lived outside the pale of society, asked blunt questions: ‘What is this mantra you mumble within your mouth going round and round a planted stone,offering it flowers? Can a planted stone talk when the Lord is within you? Can the pot and the spoon feel the taste of food cooked in them?”-Sivavakkiyar [“நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறி யுமோ! நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கை யில்..”--சிவவாக்கிய சித்தர்.].“Will the rains fall only for a few and exclude others? Will the winds discriminate against a few? Will the earth refuse to bear the weight of a few? And the sun refuse to shine on some?”["மாரி தான் சிலரை வரைந்துபெய்யுமோ?காற்றுஞ்சிலரை நீக்கிவீசுமோ?மானிலஞ்சுமக்க மாட்டே னென்னுமோ?கதிரோன்சிலரைக் காயே னென்னுமோ? ......குலமுமொன்றே குடியுமொன்றே,இறப்புமொன்றே பிறப்புமொன்றே"] asked a latter-day Kapilar in a famous " Akaval" poem [கபிலர் அகவல்] It is a fact,God or Religions today no longer serve the purpose for which they came into existence. The very basic theme of each religion was to teach, how to love each other and bring us closer to ourselves and to truth. Today the opposite is happening, Religions are not uniting but dividing us. Forget the differences from religion to religion, each now has so many divisions. The biggest problem Religions are bringing in is Fundamentalism and in-tolerance, giving birth to Fanatics, who are ready to destroy our freedom, just in the name of religion.It is about time, to rectify our vision, rectify our way of life, and mould them to what the various religions originally desired. Humanity is the religion which all religions preach, so why not follow it as such .Peace is within us, Love is within us, God is within us. That means, God is Love, Love is God, and the understanding of this truth gives us that internal Peace.When a child is born, the only thing he/she knows is love. The rest we teach, hatred, jealousy, greed, even terrorism.As we sow, so shall we reap, this is the age-old saying, So why not sow seeds of Love and reap tons of Love !Love is not something which can be given by force, but Religions as they stand today are given by force, by parents to children. Anything given by force can never have fruitful results and can turn us into completely different people, and take us miles away from truth and Humanity.So let’s embrace Humanity and begin a new way of life! [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] Part:02 Will follow

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.