Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    33600
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87988
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20010
    Posts
  4. Newbalance

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    43
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/19/25 in Posts

  1. ஒரு சோறு --------------- 'இந்தியாவா ...................' என்றனர் அவர்கள். வீதியின் அடுத்த பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஒரு வயதான தம்பதிகள் போன்றே தெரிந்தார்கள். 'இல்லை......... ஶ்ரீலங்கா..........' என்றேன். 'சிங்கப்பூரா ................' என்று திருப்பிக் கேட்டார்கள். இதுவரை எவரும் கேட்டிராத கேள்வி அது. நான் யாரோ இருவருக்கு ஒரு சிங்கப்பூர் குடிமகன் போல தோன்றுவேன் என்ற நினைப்பு இதுவரையில் எனக்கு ஒரு கணமேனும் வந்தது கிடையாது. அவர்கள் வீதியைக் கடந்து என் பக்கம் வர முயன்றார்கள். நீங்கள் அங்கேயே இருங்கள், நானே வருகின்றேன் என்று சொல்லி விட்டு, கையில் இருந்த தும்புக்கட்டையை சுழற்றி புல்லுக்குள் எறிந்து விட்டு வீதியைக் கடந்து அவர்களிடம் போனேன். ஶ்ரீலங்கா தெரியும் என்றார்கள். அழகிய தீவு என்றார்கள். அவருடைய பெயர் போல் என்றார் அந்த முதியவர். போல் என்னும் பெயர் எனக்கு மிகவும் பரிச்சயமானது, ஶ்ரீலங்காவில் இந்தப் பெயரில் பலர் இருக்கின்றார்கள் என்றேன். அவருடைய மனைவியின் பெயர் எஸ்தர் என்றார். சொல்லி விட்டு என்னையே பார்த்துக்கொண்டு நின்றார். எத்தனை எஸ்தர்கள் வந்து கொண்டேயிருக்கின்றார்கள். வண்ணநிலவன் அவர்கள் எழுதிய 'எஸ்தர்' என்னும் சிறுகதை தான் தமிழின் ஆகச் சிறந்த சிறுகதை என்று சில கவனிக்கத்தக்க பட்டியல்களில் உள்ளது. அந்தக் கதையில் வரும் எஸ்தர் என்னும் பாத்திரமும், அந்தக் கதையும் மனதை விட்டு அகல்வதேயில்லை. பின்னர் பல தமிழ் சினிமாக்களில் கதாநாயகிகளின் பெயர்கள் எஸ்தர் என்று ஆகியிருக்கின்றது. அவற்றில் சில படங்கள் பரவாயில்லை என்று சொல்லலாம். 'நீர்ப்பறவை' படத்தில் எஸ்தர் வருகின்றார். விஜய் ஆண்டனியின் ஒரு படத்திலும் எஸ்தர் வந்தார். அந்தப் படம் மறந்துவிட்டது, அதில் வந்த எஸ்தர் என்ற பெயர் மட்டும் நினைவில் நிற்கின்றது. பல படங்களில் உதவி இயக்குனர்களில் ஒருவர் தான் கதாநாயகிக்கு இந்தப் பெயரை சிபாரிசு செய்திருப்பார் போல. எஸ்தரையும் எனக்கு மிகவும் நல்லாகவே தெரியும் என்றேன். 'எஸ்தர் பைபிளில் வருகின்றாரே........... அதனால் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்.........' என்றார்கள் அவர்கள் இருவரும். இவர்கள் சொல்லும் எஸ்தரை எனக்குத் தெரியாது. முன்னால் நின்று கொண்டிருந்த வயதான எஸ்தர் அம்மாவின் முகத்தில் புன்னகை நீண்டு அழகாக தெரிய ஆரம்பித்தார். அந்தப் பக்கத்தில் இருக்கும் வீட்டில் குடியிருப்பவர் தங்களின் பெறாமகள் என்றனர். வேலையில் இருந்து அவர் வந்து கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள். 'அவர்களைத் தெரியுமா................' 'ஆ............... தெரியும். சமீபத்தில் தானே குடிவந்தார்கள். பேசியிருக்கின்றோம். அவர்கள் சாக்லேட் கூட கொடுத்தார்கள்..................' 'சாக்லேட்டா............... எதுக்கு சாக்லேட்........' 'எதற்கென்று தெரியவில்லை. அவர்கள் கொடுத்தார்கள், நான் வாங்கினேன்...............' '' இந்த தெரு மிகவும் அமைதியாக இருக்கின்றது என்றனர். வீட்டுக்கு முன் இருக்கும் தெருவே இவ்வளவு அகலமாகவும், சுத்தமாகவும் இருக்கின்றதே என்றனர். சுழற்றி எறிந்து விட்டு வந்த தும்புக்கட்டையின் ஞாபகம் வந்தது. திரும்பிப் பார்த்தேன். விழுந்த இடத்திலேயே அது அப்படியே மல்லாக்காகக் கிடந்தது. 'இங்கு எவ்வளவு வருடங்களாக குடியிருக்கின்றீர்கள்............' '25 வருடங்கள் ஆகிவிட்டது............' என்றேன். 'என்னது 25 வருடங்களாகவா............ பிறந்ததில் இருந்து இங்கேயே இருக்கின்றீர்களா.............' இரண்டு வாரங்களிற்கு முன்னால் ஒரு நிகழ்விற்காக தலைக்கு கறுப்பு நிறம் அடித்திருந்தேன். இப்பொழுது அமோனியா இரசாயனம் இல்லாமல் மூலிகைகள் மட்டுமே கொண்டு தயாரிக்கப்படும் ஒன்றை இங்கிருக்கும் இந்தியர்களின் கடைகளில் விற்கின்றார்கள். அந்தப் பொடியை நீரில் கலந்தவுடன் அதில் இருந்து வரும் வாசனை ஒரு கெட்ட வாசனை போன்றே எனக்கு இருக்கின்றது. சில பொழுதுகளில், இருமல் மருந்தைக் குடிப்பது போல, இந்தப் பொடியை தலையில் பூச வேண்டியிருக்கின்றது. 'முண்டாசுப்பட்டி' படத்தில் வருவது போல கமராவின் உபயோகம் தடைசெய்யப்பட்ட ஒரு ஊருக்கு குடிபெயர்ந்தால் நன்றாக இருக்கும். அது முடியா விட்டால், அதிபர் ட்ரம்பிடம் சொல்லி இந்தக் கலர் மாற்றும் பொருட்களுக்கு ஒரு 500 வீத வரி போடச் சொல்லவேண்டும். அவரே சிவப்புக் கலர் தலைமுடியுடன் இருப்பதால், சிவப்புக் கலருக்கு மட்டும் வரி விலக்கு கொடுத்துவிடலாம். மூலிகைப் பொடி போட்டு இரண்டு வாரங்களில் என்னுடைய தலைமுடி உடைந்த செங்கல் நிறத்தில் திட்டுத் திட்டுகளாக பல இடங்களில் ஆகியிருந்தது. எனக்கே கண்ணாடியில் சகிக்க முடியவில்லை. கமரா தடைசெய்யப்பட்ட முண்டாசுப்பட்டி கதை போல, கண்ணாடி தடைசெய்யப்பட்ட ஒரு ஊர் பற்றியும் ஒரு சினிமா எடுக்கலாம். நல்ல சிரிப்பு படங்கள் என்று எதுவும் வருவதாகத் தெரியவில்லை. கமல், ரஜனி படங்களே இப்பவும் வருவதை நம்ப முடியாமல் இருக்கின்றது. 'காளி' மற்றும் 'குரு' படங்கள் புதிதாக வந்த போது, என்னுடைய காற்சட்டையில் ஒரு பொத்தான் குறைவாக இருந்த காலங்கள் அவை. மூன்று தலைமுறைகள் ஆகிவிட்டது............... எப்பொழுது நாங்கள் வல்லரசாவது........... போலும், எஸ்தரும் என்னை 25 வயதுகள் என்று மதிப்பிட்டது ஒரு பகிடியாக இருக்குமோ என்று இருவரையும் உற்றுப் பார்த்தேன். அவர்கள் பகிடி விடுவதற்கு முயற்சி எதுவும் செய்ததற்கான அடையாளம் ஒன்றும் அவர்களின் முகங்களில் தெரியவில்லை. கண் பார்வை மங்கிப் போவதும் வயதுடனேயே வரும் ஒரு பொதுவான போக்குத்தான். இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. நாற்பது வருடங்கள் சிகாகோவில் இருந்ததாகச் சொன்னார்கள். இனிமேல் வீட்டின் முன் விழும் பனியை அள்ளிக் கொட்ட உடம்பில் பலமில்லை. அதனால் இந்தப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்து விட்டதாகச் சொன்னார்கள். சிகாகோவிற்கு முன்னர் சிங்கப்பூரில் இருந்தீர்களா என்று கேட்டேன். தாங்கள் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றார்கள். அமெரிக்காவின் மிகப் பெரிய இராணுவத்தளம் ஒன்று அந்த நாட்டில் இருந்தது. அமெரிக்காவிற்கு வெளியே இருந்த அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவத்தளம் என்று அதை ஒரு காலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு ஏராளமாக இருக்கின்றார்கள். வியட்நாமியர்களும் இருக்கின்றார்கள். கம்போடியர்கள் இருக்கின்றார்கள். அமெரிக்கா ஒரு காலத்தில் சண்டைக்கு போன இடங்களில் இருந்து பல நாட்டவர்களை கூட்டி வந்து இங்கு குடியேற்றி இருக்கின்றார்கள். இப்பொழுது எவரும் உள்ளே வராதே, வராதே என்கின்றார்கள். 'இந்த வீட்டின் விலை என்ன..............' என்று அவர்களின் பெறாமகளின் வீட்டைக் காட்டி என்னிடம் கேட்டார்கள். அவர்களை நன்றாகப் பார்த்தேன். 'தெரியாது................ அவர்கள் எனக்கு சாக்லேட் கொடுக்கும் போது நான் எதையுமே கேட்கவில்லை............. நல்வரவு என்று மட்டுமே சொன்னேன்.....' என்றேன். போலும், எஸ்தரும் தெரிந்து கொள்ள விரும்பிய ஒரேயொரு விடயத்தை நான் கடைசிவரை சொல்லவேயில்லை.
  2. https://youtu.be/CNqT7kR7JSs?si=pbVrMSkOSg7aHF8A உனக்கென்ன குறைச்சல்நீ ஒரு ராஜா
  3. 19 AUG, 2025 | 01:30 PM நல்லூர் முருகன் ஆலய திருவிழாவை முன்னிட்டு 'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' எனும் தொனிப் பொருளில் வடக்கின் நிலத்தடி நீர் சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த WASPAR & Young Water Professionals முயற்சியில் நீர்வள சபை, நீர்ப்பாசண திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, யாழ் மாநகர சபை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம், யாழ் இந்துக்கல்லூரி மற்றும் பல தன்னார்வலர் அமைப்புகளின் கூட்டு முயற்சியாக வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்திட்டத்தின் இரண்டாவது நீர்வளக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (15) மாலை நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் ஆரம்பமாகி தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (24) வரை இடம்பெறவுள்ளது. நீர்வளக் கண்காட்சியின் ஒரு கட்டமாக ஊருணி ஆற்றுகைக் களத்தில் பல்வேறு ஆற்றுகை நிகழ்வுகளும், கலந்துரையாடல்களும் தினமும் மாலை வேளையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திங்கட்கிழமை (18) மாலை செம்முகம் ஆற்றுகைக் குழுவின் "தண்ணீரின் கதை" நாடக ஆற்றுகை இடம்பெற்றது. நிலத்தடி நீரை மட்டும் நம்பியிருக்கும் யாழ்ப்பாணத்தில் எதிர்காலத்தில் தண்ணீர் இல்லாமல் போனால் என்னவாகும் என்பதனை சித்தரிக்கும் வகையில் நாடகம் உயிர்ப்புள்ளதாக இருந்தது. பார்வையாளர்களை கண்ணீரில் நனைய வைத்த நாடகத்தின் பின் பலரது அனுபவ பகிர்வுகளும் உருக்கமாக அமைந்திருந்தன. நீர்வளக் கண்காட்சியின் ஐந்தாம் நாளான செவ்வாய்க்கிழமை (19) ஆற்றுகை நிகழ்வாக பாடல் நிகழ்வுகளும், "கேணி: நீர் மரபுரிமைக் கட்டுமானங்களைக் காக்க வேண்டிச் சில முன்வைப்புகள்" என்கிற தலைப்பில் யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், ஆய்வாளருமான அகிலன் பாக்கியநாதன் அவர்களின் கருத்துரையும் உரையாடலும் இடம்பெறும். நிலத்தடி நீரும் எமது பிரதேச நிலக்கட்டமைப்பு மற்றும் வழுக்கையாறு திட்ட மாதிரிகளின் கண்காட்சிகள், விஞ்ஞான விளக்கங்கள், ஆய்வு முடிவுகள், விளையாட்டுகள், புதிர்ப்போட்டிகளில் பங்கேற்கும் சிறார்களுக்கான ஏராளமான பரிசுப் பொருட்களுடன் நிலத்தடி நீரை பக்குவமாக பாதுகாக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கை இக்கண்காட்சி ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. https://www.virakesari.lk/article/222859
  4. வணக்கம் வாத்தியார் . ......... ! ஆண் : { நினைத்தேன் வந்தாய் நூறு வயது கேட்டேன் தந்தாய் ஆசை மனது } (2) ஆண் : நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்று பெண் : ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்று ஆண் : கண் மீனாக மானாக நின்றாடவோ பெண் : சொல் தேனாக பாலாக பண்பாடவோ ஆண் : மாலை நேரம் வந்து உறவாடவோ ஆண் : நிலைக்கண்ணாடி கன்னம் கண்டு ஆஹா மலர்கள்ளூரும் கிண்ணம் என்று ஓஹோ ஆண் : { அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா அன்பு தேனோடை பாய்கின்ற சொர்கம் வா } (2) பெண் : மன்னன் தோளோடு அள்ளிக் கொஞ்சும் பிள்ளை அவன் தேரோடு பின்னிச் செல்லும் முல்லை பெண் : { உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன் உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன் } (2) பெண் : நினைத்தேன் வந்தாய் நூறு வயது கேட்டேன் தந்தாய் ஆசை மனது ஆண் : இடை நூலாடி செல்ல செல்ல ஆஹா பெண் : அதை மேலாடை மூடிக்கொள்ள ஓஹோ ஆண் : { சின்ன பூமேனி காணாத கண்ணென்ன பெண் : சொல்லித் தீராத இன்பங்கள் என்னென்ன .......... ! --- நினைத்தேன் வந்தாய் நூறு வயது ---
  5. இதுவரையில் நீரில் மூழ்கி பலியானவர் 250 ற்கு மேல என செய்தியில் படிச்சன் இதுல வெளிநாட்டு வெள்ளைகளும் அடக்கமாம். வடக்கிலே அதிக விபத்துக்கள் ஒரு பஸ் நடத்துனரிடம் கேட்டன் உண்மையில் வட மாகாணத்தில் உள்ள சாரதிகள் ( வாகனங்கள் ஓடுபவர்கள்) சரியான போக்குவரத்து விதிகள் தெரியவில்லையென்றார் அதாவது வாகனத்தில் இருந்து தனது விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி வீதியில் திரிவது வளைவுகளை நின்று பார்க்காமல் செல்வது என சொன்னார்
  6. உங்கள் வயதை மதிக்கும் போது உங்கள் மனைவி பக்கத்தில் இல்லாதது ஏமாற்றமாக இருந்திருக்குமே?
  7. https://youtu.be/l62mkvoVwEA?si=xEJnfCcjlq_lzb7P பாவியென்னை மறுபடியும் பிறக்கவைக்காதே
  8. இலங்கை இராணுவ தடகள வீரர் அருன்தவராசா புவிதரன் கோலூன்றி பாய்தல் போட்டியில் தேசிய சாதனை 19 AUG, 2025 | 06:16 PM தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் திங்கட்கிழமை 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறும் இராணுவ தடகள சம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஏ. புவிதரன் செவ்வாய்க்கிழமை (19) கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 5 மீட்டர் மற்றும் 18 சென்டிமீட்டர் உயரம் தாண்டி புதிய இலங்கை சாதனையைப் படைத்தார். இந்த வெற்றியின் மூலம் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் இலங்கை இராணுவ சாதனை மற்றும் இலங்கை இராணுவ தடகள சம்பியன்ஷிப் சாதனை இரண்டையும் புவிதரன் தக்கவைத்துக்கொண்டார். https://www.virakesari.lk/article/222900
  9. வழமைபோல் உங்களின் பாணியில் கதை நன்றாகவே இருக்கின்றது . ........ ! வீட்டின் விலையை சொன்னாலும் பரவாயில்லை , உங்களின் வயதை மட்டும் ....ம்கூம் ......... ! 😀
  10. ஆக, உங்களுக்கு அந்த வீட்டின் விலை தெரிந்திருக்கிறது. சிறீலங்கன் என்றால் சும்மாவா? புலம்பெயர் தமிழர்களிடம் இந்த விவகாரம் -அது அடுத்தவன் விவகாரத்தை அறிந்து கொள்ளும் சுபாவம் அதிகம் என நினைக்கிறேன். “எங்கை வேலை செய்யிறீங்கள்? என்ன சம்பளம்? கார் நல்ல விலை வரும் போலை. எவ்வளவுக்கு வாங்கினீங்கள்?……. “ ம்… வயது வந்தவர்கள், பார்வையில் குறைபாடு ஏதும் இருந்திருக்கலாம். அல்லது வீட்டின் விலையை அறிந்து கொள்ள சாயம் பூசிய தலையில் குளிராக இருக்கட்டும் என்றும் வைத்திருக்கலாம். எது எப்படியோ, “கூட்டச் சொல்லிவிட்டால் அங்கே என்ன கதை?” என்ற குரல் வருமுன் மல்லாக்காகப் படுத்திருக்கும் தும்புத்தடியை போய் நிமிர்த்தி எடுத்து வேலையை ஆரம்பியுங்கள்
  11. பார்வை ஒன்றே போதுமே ......... காதல் செய்யும் போழ்தினிலும் காவல் செய்யத் தவறுவதில்லை .........! 😍
  12. ஆக வடை போட்ட செய்தி தாள் யாழ் இணையத்திலயும் வந்திருக்கு என்ன அண்ண
  13. கடசி பந்திக்கு மேலே உள்ள பெரிய பந்தியை சற்று கவனித்தால் நன்று ..✍👋
  14. ஶ்ரீலங்கா தெரியும் என்றார்கள். அழகிய தீவு என்றார்கள். வரும்போதே சர்டிபிக்கட் கொடுத்தபடிதான் வருவியள்..... இப்பொழுது அமோனியா இரசாயனம் இல்லாமல் மூலிகைகள் மட்டுமே கொண்டு தயாரிக்கப்படும் ஒன்றை இங்கிருக்கும் இந்தியர்களின் கடைகளில் விற்கின்றார்கள். அந்த 25 வயதுப் பொடியின் இரகசியத்தை ..இதிலை படம் போட்டு விளக்கலாமே... ரசனியின் கூலி படம் மாதிரி..
  15. எஸ்தர் பற்றி எழுதியது சற்று அதிகமாகி விட்டது போன்ற உணர்வு . எஸ்தர் ஒருசரித்திர வரலாற்று பெயர்.
  16. உலகெங்கும் தமிழர்களால் உணர்வுபூர்வமாக இன்றைய "யூலை-5 கரும்புலிகள் நாள்" நினைவுகூரப்படுகின்றது. இந்த வேளை, இதுவரை வெளிவராத ஒரு கரும்புலி மாவீரரைப் பற்றிய சிறு குறிப்பை இங்கே பதிவுசெய்கிறேன். சமராய்வுப் பிரிவில் கடமையாற்றிக்கொண்டிருந்த போது 2009 ஆம் ஆண்டு தை மாதமளவில் கரும்புலியாகத் தன்னை இணைத்துக்கொண்டு, ஏறக்குறைய ஒரு மாதத்துக்குள்ளேயே ஒரு வெற்றிகரமான கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு "லெப்ரினன்ட் கேணல் தேனிசை" ஆகத் தன்னை வெடித்து, 23 எதிரிப் படைகளைக் கொன்றொழித்து, தரைக் கரும்புலி மாவீரராக எங்கள் இனத்துக்காகத் தன்னைக் கொடையாக்கிய ஒரு அற்புதமான போராளி தேனிசை. ஆண்டு 2002 அளவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டவர். விடுதலைப் புலிகளின் "#படைய_அறிவியற்_கல்லூரி" என்னும் பிரிவால் மேற்கொள்ளப்பட்ட பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று, அந்த அணியின் மகளிர் பிரிவில் கடமையாற்றினார். படைய அறிவியற் கல்லூரியால் தயாரிக்கப்பட்ட அனைத்து வகையான படைத்துறை சார் நூல்களையும் கட்டுவதற்கென்றே (binding) ஒரு பகுதி இருந்தது. அது ஆண்கள், பெண்கள் ஆகிய இரு பிரிவிலும் இருந்தது. இரகசிய ஆவணங்களை வெளியில் கொடுத்து கட்டுவிக்க முடியாது என்பதற்காகவே இந்தப் பகுதி உருவானது. குறித்த இந்த நூல்களைக் கட்டும் பகுதியில் ஆரம்பத்தில் பணியாற்றிவந்தார் தேனிசை. பின்னர், விடுதலைப் புலிகளின் சமராய்வுப் பிரிவு உருவாக்கப்பட்டு, அது விரிவாக்கம் பெற்றுக்கொண்டிருந்த போது அதற்கான துறைசார் ஆளணி தேவைப்பட்டது. அதனால், படைய அறிவியற் கல்லூரியில் இருந்து சமராய்வுப் பிரிவிற்கு போராளி தேனிசை பிரிவு மாற்றம் செய்யப்பட்டார். அந்த ஆண்டு 2007 இன் தொடக்கத்தில் என நினைக்கிறேன். சமராய்வுப் பிரிவின் நூலகத்திற்குப் பொறுப்பாக போராளி தேனிசை கடமையாற்றினார். அதேவேளை, அங்கே பல்வேறு பணிகளை அவர் ஏனைய போராளிகளோடு இணைந்து செய்தார். நூல்கள் தயாரித்தல், கட்டுதல், அறிக்கை தயாரித்தல், வடிவமைத்தல், தட்டச்சு செய்தல் போன்ற கடமைகளையும் அவர் ஆற்றிவந்தார். இவ்வாறு பணிகள் பல முனைகளில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தபோது, தமிழீழம் எங்கும் போர் மிகவும் தீவிரமாகிக்கொண்டு இருந்தது. படிப்படியாக நிலங்கள் விடுபட்டுக்கொண்டிருந்தன. இறுதியாக புதுக்குடியிருப்பு வரை எதிரி முன்னேறியதால், அந்தப் பகுதியில் பாரிய மறிப்பு வரிசை அமைத்து, எதிரியின் முன்னகர்வுகள் முறியடிக்கப் பட்டுக்கொண்டு இருந்தது. அந்த வேளை, பரவலாக கரும்புலியாக இணைய விரும்புவோர்களது பெயர் விபரங்கள் எடுக்கப்பட்டு வந்தது. அப்போது, சமராய்வுப் பிரிவிலும் எடுக்கப்பட்டது. இதன்போது, போராளி தேனிசையிடம், "கரும்புலியாக இணைந்துகொள்ள விருப்பமா?" என்று அறிக்கை எடுத்த போராளி கேட்டார். அதற்கு தேனிசை தனது வழக்கமான புன்னகையுடன் மிகச் சாதாரணமாக, "ஆம்" என்று கூறித் தலையசைத்தார். அறிக்கை எடுத்தவரும் அதனைப் பார்த்தவர்களும் தேனிசை ஏதோ பகிடியாகக் கதைக்கிறார் என்று நினைத்து, மறுபடியும் கேட்டு, "என்ன உண்மையாகவா ஆம் என்கிறீர்கள்," என்று கேட்டு உறுதிப்படுத்தினார்கள். கறுத்த உருவம். என்றும் இழையோடும் அழகிய புன்முறுவல். கடமைகளை நேர்த்தியாக முடிக்கும் பக்குவம். சக போராளிகளோடு அன்பாய் பழகும் மனம். அதேவேளை, அதிகம் பேசாத தனித்துவம். இதுதான் போராளி தேனிசை. அவ்வாறு அவர் சம்மதம் தெரிவித்து சிலநாட்கள் கழிய, விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் திரு.பொட்டு அம்மான் அவர்கள் சமராய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் திரு.யோகி அவர்களுடன் பேசிவிட்டு போராளி தேனிசையை கரும்புலிகள் அணியில் இணைத்தார். அவ்வாறு அவர் இணைக்கப்பட்டு, அடுத்த சில நாட்களிலேயே அவர் கரும்புலிக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் பயிற்சிகளை மிகக் குறுகிய நாட்களுக்குள் பெற்றார். அத்துடன் தனது இலக்கையும் பார்வையிட்டார். தான் இலக்கில் சென்று வெடிப்பதற்கு ஒரிரு நாளிற்கு முன்னர் தான் பணியாற்றிய சமராய்வுப் பிரிவுக்கு வந்து, தனது சகோதரர்களாகவும் ஒரு கூட்டுக் குடும்பமாகவும் இருந்த சக போராளிகளிடம் இறுதி விடைபெற்றுச் சென்றார். மற்ற எல்லோருக்கும் அது மிக உணர்வுபூர்வமான விடயமாக இருக்க, தேனிசைக்கு மட்டும் அது ஒரு விடுமுறைக்கான விடுப்பு எடுத்துச் செல்வதுபோன்ற உணர்வு. அப்போதும் தேனிசை புன்னகையும் கலகலப்பான முகபாவனையுடன் தான் விடைபெற்றுச் சென்றார். விடைகொடுத்த போராளிகளுக்கு தேனிசையைக் கடைசி முறையாகப் பார்க்கின்ற தருணம் அது. அந்தக் கணத்தை எழுத்தில் உணர்த்திவிட முடியாது. "சாகும்போதும் தமிழ்படித்து சாகவேண்டும், என் சாம்பலும் தமிழ் மணந்து வேகணே்டும்," என்ற கூற்றைப் போன்று, அன்று தேனிசை தனது இறப்புக்கான இறுதி விடைபெறும்போதும் புன்னகையோடுதான் இருந்தாள். அவள் வெடித்த கணத்தில் சாம்பலாகும் போதும் புன்னகையுடன் தான் இருந்திருப்பாள்! தனது இறப்பால் தமிழினம் விடிவுபெறட்டும் என்பதற்காக. தேனிசை விடைபெற்றுச் சென்று ஓரிரு நாட்கள் கழித்து, பொட்டு அம்மான் அவர்கள் யோகி அண்ணையைச் சந்தித்து தேனிசை புதுக்குடியிருப்புப் பகுதியில் கரும்புலியாக வெடித்து 23 எதிரிப் படைகளைக் கொன்றொழித்தார் என்ற செய்தியைத் தெரிவித்தார். "கரும்புலி தேனிசை மிகவும் சிறந்த போராளி. மிகக் குறுகிய நாட்களுக்குள் தனது கடமையைச் சரியாகச் செய்துமுடித்தார்," என்று யோகி அண்ணையிடம் பாராட்டினார் பொட்டு அம்மான் அவர்கள். தேனிசைக்கு லெப்ரினன்ட் கேணல் என்ற நிலை வழங்கப்பட்டது. இன்று, கரும்புலி மாவீரர் லெப்.கேணல் தேனிசை அவர்களின் படம் எங்களிடம் இல்லை! அவர் குறித்த முழுமையான தரவு எங்களிடம் இல்லை! ஆனால், அவரோடு பணியாற்றிய எஞ்சிய ஓரிரு போராளிகளிடம் மட்டுமே அவரது இந்த நினைவுக் குறிப்பு உள்ளது. இப்படி எத்தனையோ ஆயிரம் மாவீரர்களின் வரலாறுகள் பதியப்படாமல் எமது இனம் வாழத் தங்களது உயிர்களைக் கொடையாக்கினார்கள். வாழ்ந்துகொண்டிருக்கின்ற எங்கள் இனம் அவர்களின் தியாகத்தையும் வரலாற்றையும் கற்றுணர்ந்து அவர்களின் நினைவுகளுடன் வாழவேண்டும்; அவர்கள் எந்த உயரிய நோக்கத்துக்காகத் தங்களைக் கொடையாக்கினார்களோ, அந்த உயரிய நோக்கம் நிறைவேற ஒவ்வொரு தமிழரும் தங்களது பங்களிப்பை சரியான கட்டங்களில் செய்யவேண்டும். இதுதான் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குச் செய்யும் உயரிய மாரியாதையாக இருக்கும். --- த.ஞா.கதிர்ச்செல்வன். **** https://www.samaraivu.com/2025/07/blog-post_5.html
  17. Trump says he is working to arrange meeting between Putin and Zelensky. Next steps on Ukraine: US President Donald Trump said he’s begun arranging a meeting between Ukrainian President Volodymyr Zelensky and Russian President Vladimir Putin after a summit today with Zelensky and European leaders. Trump said he discussed the plan with Putin in a call during his negotiations with the European leaders. https://www.cnn.com/politics/live-news/trump-ukraine-zelensky-russia-putin-08-18-25 Ukrainian President Volodymyr Zelensky said that the discussion with US President Donald Trump and European leaders at the White House on Monday included plans for Ukraine to purchase $90 billion in American weapons through European funding, as part of the country’s security guarantees. He said that another part of the guarantees would involve Ukraine manufacturing drones, some of which would be purchased by the US. Zelensky, who made his comments at a news conference following the White House meeting, noted that this remains under discussion and that no formal agreement has been reached. The agreement will be formalized over the next week or 10 days, he said. The Financial Times first reported the details of the proposal. https://www.cnn.com/politics/live-news/trump-ukraine-zelensky-russia-putin-08-18-25 திங்களன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடனான கலந்துரையாடலில், நாட்டின் பாதுகாப்பு உத்தரவாதங்களின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய நிதியுதவி மூலம் உக்ரைன் 90 பில்லியன் டாலர் அமெரிக்க ஆயுதங்களை வாங்குவதற்கான திட்டங்கள் உள்ளடக்கியதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். உத்தரவாதங்களின் மற்றொரு பகுதி, உக்ரைன் ட்ரோன்களை உற்பத்தி செய்வதையும், அவற்றில் சில அமெரிக்காவால் வாங்கப்படும் என்பதையும் உள்ளடக்கும் என்று அவர் கூறினார். வெள்ளை மாளிகை கூட்டத்தைத் தொடர்ந்து ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தனது கருத்துக்களை தெரிவித்த ஜெலென்ஸ்கி, இது இன்னும் விவாதத்தில் உள்ளது என்றும், முறையான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். அடுத்த வாரம் அல்லது 10 நாட்களில் இந்த ஒப்பந்தம் முறைப்படுத்தப்படும் என்று அவர் கூறினார். பைனான்சியல் டைம்ஸ் முதலில் திட்டத்தின் விவரங்களை வெளியிட்டது. பூட்டினுக்கு மகாவெற்றி. ரம்புக்கு நோபல் பரிசு நிச்சயம்.
  18. இதே போல் நேற்று ஒன்று பார்த்தேன் . பில்லிங் கவுண்டரில் ஒருத்தி தோலை உரித்துவிட்டு எடைபோட சொன்னாள் அவள் . அவள் வைத்திருந்த முடடைகளை ஒருபையில் உடைத்து ஊற்றி எடைபோடவா என்றாரே பார்க்கலாம். 😁
  19. ஒவ்வொரு நாடும் எப்படியெல்லாம் யோசித்து மக்களின் நலனையும் தேசத்தின் நலனையும் முன்னேறுகின்றார்கள் என்பதை நினைக்க கண்ணெல்லாம் வேர்க்குது . ......... ! 😇
  20. வணக்கம் வாத்தியார் . .......... ! பெண் : முத்தமழை இங்கு கொட்டி தீராதோ முல்லை இரவுகள் பத்தி எரியாதோ பெண் : சங்கம் மருதங்கம் இங்கு உந்தன் கையில் சொர்க்கம் பொல்லா இரவோ சொல்லா உறவோ இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசுரோ பெண் : கண்ணாளா என்னாளா பெண்ணாளா இன்னும் வரும் எந்தன் கதை பெண் : காலை கனவினில் காதல் கொண்டேன் கண் விழித்தேன் அவன் காணவில்லை பெண் : என்னோடு உன்னை ஒன்றாக்கும் வரை என்ன செய்தும் வழி தீரவில்லை பெண் மற்றும் குழு : கண்ணான கண்ணே என் கண்ணாளா என் உள் மன காதலை கண்டாயா பெண் : கரு மை கண்ட கண்ணோக்கி பொய் சொல்லி நின்றாயா பெண் மற்றும் குழு : போதும் போதும் என சென்றாயா ஆண் : காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ ஆண் : ஓ….. பாலை நிலத்தினில் சோலை நிழலென காதல் சொல்வேன் நான் காதல் சொல்வேன் ஆண் : மோக பனி போர்வையில் கரம் கோர்கையில் காதல் சொல்வேன் காதில் காதல் சொல்வேன் பெண் : நான் காதலி காதலன் நீ வேறு எல்லாம் வெறும் வேஷம் என்பேன் ஆண் மற்றும் பெண் : வேஷம் என்பேன் வெறும் வேஷம் என்பேன் பெண் : காலம் யாவும் நீதானே இந்தக் காலன் வந்தால் வெல்வேனே ஆண் : மறுமொரு சூரியன் பல தாரகை மண்ணில் மின்னல் வீழாதே மண்ணில் மின்னல் வீழாதே பெண் : காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ பெண் : இன்னும் ஒரு முறை எந்தன் கதை சொல்லவா பெண் குழு : சொல் சொல் சொல் சொல் சொல் சொல் பெண் : காதில் விழும் வரும் வரை காதல் பாடவா பாடவா…ஆ…..ஆ…. பெண் : சங்கம் மருதங்கம் இங்கு உந்தன் கையில் சொர்க்கம் பொல்லா இரவோ சொல்லா உறவோ இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசுரோ…… ! --- முத்தமழை இங்கு கொட்டித்தீராதோ ---
  21. கண்ணாடி ஒளி மூலம் நோர்வே கிராமம் ஒளியை பெறுகிறது..
  22. வடை போட்ட செய்தித்தாளில் "தமிழக அரசியலில் அநாதையான பன்னீர்செல்வம்" என்று உள்ளது. 😂 @தனிக்காட்டு ராஜா , @புரட்சிகர தமிழ்தேசியன்
  23. மூலம்:- சுரேன் கார்த்திகேசு. இதுதான் 'க்ளஸ்டர்' குண்டு எண்டாங்கள். நான் செய்தி சேகரிக்கச் செல்லும்போதெல்லாம் பயந்து பயந்து தான் போவன். சாவது என்பது எனக்குச் சாதாரணம். ஆனால், காயமடையக்கூடாது, வலி தெரியாமல் குண்டுபட்ட உடனேயே செத்திடனும். காயப்பட்டா உயிரோட இருக்கக்கூடாது. அந்த வலியைத் தாங்கமுடியாது. ஏற்கெனவே காயமடைந்தவர்களோடு கதைக்கும் போது ஏற்பட்ட இந்த மனநிலையோடுதான் ஒவ்வொரு இடங்களுக்கும் செல்வது உண்டு. கிளிநொச்சியை அண்டிய பகுதிகளில் இலங்கை விமானப்படையினர் நடத்திய அனைத்துத் தாக்குதல் செய்திகளையும் நான் சேகரித்திருந்தேன். விமானங்கள், முதல் குண்டு போட்ட பின்னரே அவ்விடத்தினை நோக்கி உடனடியாகச் செல்வோம். தாக்குதல் இடம்பெறும் இடத்திற்குச் சுமார் மிகக் கிட்டிய தூரத்தில் இருந்துவிட்டே விமானங்கள் சென்ற மறுகணமே அந்த இடத்திற்குள் செல்வது வழமை. இந்தப் பதிவும் அப்படித்தான். நானும், சக ஊடகவியலாளர்களும் நேரில் பார்த்த கொத்துக்குண்டு தாக்குதல் பற்றிய பதிவு. இறுதி யுத்தக் காலப்பகுதியில் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தவில்லை எனத் தொடர்ச்சியாக நிராகரித்து வரும் அரசாங்கத்தின் பார்வைக்கு இவ் ஆதாரங்களை மீண்டும் கொண்டுவருவதோடு, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் கவனத்திற்கும் கொண்டு வருகின்றேன். சுண்டிக்குளம் – கல்லாறு கிராமத்தை அண்டிய பிரதேசம். சுமார் 30 குடியிருப்புக்களை தொண்டு நிறுவனம் ஒன்று இடம்பெயர்ந்தோருக்காக அமைத்துக் கொடுத்திருந்தது. பெரு மழையினை சந்தித்திருந்த அன்றைய நாட்களில் அந்த முகாமைச் சுற்றி வெள்ளக்காடாகி காட்சியளித்தது. “அன்றைக்கு 29 ஆம் திகதி நவம்பர் மாதம் 2008 ஆம் ஆண்டு. விடியவெள்ளன 1.35 மணியிருக்கும். சனங்கள் அந்த நேரத்திலயும் இடம்பெயர்ந்து வந்துகொண்டிருக்குதுகள். எங்கட வீடு விசுவமடுவில இருந்தது. நான் வீட்ட படுத்திருந்தனான். அந்த நேரம் திடீர் எண்டு வந்த மிக் விமானங்கள் எனக்கு நேர முன்னுக்கு சில மைல்கள் தூரத்தில் குண்டு போட்ட சத்தம் கேட்டது. திடீரெண்டு பெரிய குண்டுச்சத்தங்கள் கேட்க வீட்டில் எல்லாரும் எழும்பிற்றினம். மிக் விமானங்களின் சத்தம் அப்பிடி. வெளிச்சக்குண்டுகளை வீசினதால தருமபுரம், விசுமவடு எல்லாம் பகல் போல இருந்தது. அவ்வளவு வெளிச்சம். விமானங்கள் மிக கிட்டத்தில எங்கயோதான் குண்டுகள் போடுது எண்டத என்னால் ஊகிக்க முடிஞ்சது. அந்தளவுக்கு விமானங்களின் இரைச்சல் ஒருவித பயத்தை எனக்குள் ஏற்படுத்தியிருந்தது. பயம் இருந்தாலும் என்ர வேலையச் செய்யவேணும் எண்டு நினைச்சுக்கொண்டு, மோட்டர் சயிக்கிளில விசுவமடுவில் இருந்து சுண்டுக்குளம் சந்தி நோக்கிப் போனன். நான் போற திசையிலயே விமானங்கள் தாக்குதல்கள் நடத்துவது எனக்குத் தெரிஞ்சது. அதுமட்டுமல்லாம, தாக்குதல் நடக்கிற இடம், இடம்பெயர்ந்த மக்கள் அதிகமாக வாழ்ந்துவாற முகாம். இந்தத் தாக்குதலில சனங்களுக்குத்தான் அதிக பாதிப்புக்கள் வந்திருக்கும் என்றே என்ர மனம் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால், அந்த இருட்டு நேரத்தில எவ்வளவு தூரத்தில் தாக்குதல் நடக்குது எண்டு எனக்குத் தெரியேல்ல. இரெண்டாவது முறை குண்டுத் தாக்குதல் நடக்கேக்க நான் சுண்டிக்குளம் சந்திக்குப் போயிற்றன். 'றோட்டில' ஒரு சனம் கூட இல்லை. இந்தத் தாக்குதலில யாரும் காயப்பட்டிருந்தால் கிளிநொச்சி – தருமபுரம் ஆஸ்பத்திரிக்குத்தான் கொண்டு வரவேணும். எனவே நான் தருமபுரம் ஆஸ்பத்திரிக்குப் போனன். ஆனால் அங்க காயப்பட்டவங்கள் யாரும் வரேல்ல எண்டு ஆஸ்பத்திரில வேலை செய்த ஆக்கள் எனக்கு சொல்லிச்சினம். அவையளும் ஆஸ்பத்திரி வாசலிலதான் நிற்கினம். நான் திரும்பி சுண்டிக்குளம் சந்தியால் கல்லாறு பக்கமா என்ர மோட்டர் சயிக்கிள்ல போய்க்கொண்டிருந்தன். அந்த நேரம் பார்த்து மோட்டர் சயிக்கிளுக்கு மண்ணெண்ணெய் முடிஞ்சுது. அப்பிடியே நிண்டிட்டுது. அந்த நேரத்தில யாரிட்ட உதவி கேட்கிறது..? உதவி செய்யிற மனமிருந்தாலும், மருந்துக்கு கூட மண்ணெண்ணெய் யாரிட்டயும் இருக்கேல்ல. மோட்டார் சயிக்கிள சரிச்சா கொஞ்சத்தூரம் ஓடலாம். நான் யோசிச்சிக்கொண்டு நிற்க, இன்னொரு மோட்டர் சயிக்கிள் தாக்குதல் நடந்த பக்கமிருந்து வேகமாக வந்தது. அந்த மோட்டார் சயிக்கிளில பின்னுக்கு இருந்தவர் கத்தி அழுதுகொண்டு போனார். நான் உடன அவயள பின்தொடர்ந்து போய், ”அண்ணை எங்க கிபிர் அடிச்சது? காயப்பட்ட ஆக்கள் இருக்கினமோ” என்று கேட்டன். ” எனக்கு தெரியேல்லை. ஆனா நிறைய சனம் கத்துற சத்தம் மட்டும் கேட்குது”. அதுக்குப் பிறகுதான் தெரிஞ்சது காயப்பட்டு, 'றோட்டால' ஓடிவந்த ஒராளைத்தான் அந்த மோட்டர் சயிக்கிளில ஏத்திக்கொண்டு வாறார் எண்டு. உடன ஆஸ்பத்திரிக்குப் போனால் காயமடைஞ்ச ஆக்களின்ர முழுவிபரத்தையும் எடுக்கலாம் எண்டு யோசிச்சு, அங்க போனன். “எனக்குப் பெரிய காயம் இல்லை. ஆனால் முகாமுக்குள்ள தான் குண்டுகள் விழுந்தது. அதில் நிறைய பேர் எங்க ஓடினாங்கள் எண்டும் தெரியாது. முகாமை சுற்றி வாய்க்கால் இருக்கு. கழுத்தளவு தண்ணிக்குள்ளால வரமுடியாமல் காயமடைஞ்ச ஆக்கள் அங்க இருக்கினம். நான் ஒருமாதிரி தப்பியோடி 'றோட்டுக்கு' வந்தே இந்த மோட்டார் சயிக்கிளில ஆஸ்பத்திரிக்கு வந்தன்,” என்றார் கத்திக்கொண்டு வந்தவர். நான் நினைக்கிறன், இந்தளவு நிகழ்வும் விமானங்கள் சென்று 15 நிமிடங்களுக்குள் நடந்திருக்கும். அதுக்குப் பிறகுதான் ரெண்டு அம்புலன்ஸ் அனுப்பி காயப்பட்ட ஆக்கள ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவந்தது. இரவு எங்களால மிக் அடிச்ச இடத்துக்குப் போக முடியேல்ல. நானும் லோகீசனும் ( இறுதிப் போர் வேளையில் பணியாற்றிய இன்னொரு பத்திரிகையாளர்) காலமதான் கல்லாறு பகுதிக்கு போனம். அது உழவனூர் எண்டுற கிராமத்தின்ர பின்பகுதி. அதுக்கு அடுத்த கல்லாறு கிராமம். இடம்பெயர்ந்த ஆக்களுக்கு அப்பத்தான் வீடுகள் கட்டிக் குடுத்திருக்கினம். சில ஆக்கள் கட்டிக்கொண்டிருக்கினம். அதுக்குள்ள தான் மிக் குண்டு போட்டது. சில குண்டுகள் வெடிச்சாலும் அதின்ர பகுதிகள் சிதறிப் போய் கிடந்தது. அதில ஒரு குண்டு கொட்டிலுக்கு முன்னால நிலத்துக்குள்ள அரைவாசி இறங்கியிருந்தது. மற்றது சிதறியிருந்தது. அதை நாங்கள் போட்டோ எடுக்கேக்கத்தான். அந்த இடத்தில் நிண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகங்களைச் சேர்ந்த போராளிகள், “இதுதான் 'க்ளஸ்டர்' குண்டு (cluster bomb) எண்டாங்கள். இது சண்டைகளில பயன்படுத்த தடை” எண்டும் சொல்லிக் கொண்டிருந்தாங்கள். கிளிநொச்சி ஜெயந்திநகர் அருகாமையில் அமைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் முக்கிய முகாம் மீதான தாக்குதலின்போது விமானப்படையினரின் தளபதியாக இருந்த றொசான் குணதிலகவே, சுண்டிக்குளம் – கல்லாறு பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கும் பொறுப்பு வகிந்திருந்தார் என்று பின்னர் அறிந்துகொண்டேன். இவர் ஏற்கனவே பிரித்தானிய விமானி ஒருவருடன் சேர்ந்து பிரமந்தனாறு கிராமப் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்றும் அறியக்கிடைத்தது. கொத்துக்குண்டுகள் பல நாடுகளிலும் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. 2008 ஆம் ஆண்டு மே மாதம் 30 திகதி டப்ளின் தீர்ப்பாயத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி (Convention on Cluster Munitions ) இரசாயன ஆயுதங்களைத் தயாரிக்கவோ, விற்பனைசெய்யவோ, களஞ்சியப்படுத்தவோ, பயன்படுத்தவோ தடையுத்தரவு அறிவிக்கப்பட்டது. அதனையும் மீறி இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினால், விநியோகம் செய்தால் மனித குலத்துக்கு எதிரான குற்றமாக அது கருதப்படும். இவ்வுடன்படிக்கையை ஏற்று உலகின் 108 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்த சர்வதேச சட்டங்களையெல்லாம் மீறித்தான் இலங்கை இராணுவம் இறுதிப் போரின்போது பொதுமக்கள் மீது கொத்துக் குண்டுகளைப் பொழிந்தது. மிதிவெடி அகற்றும் பிரிவினர் மீட்ட கொத்துக்குண்டின் பாகங்களை 'கார்டியன்' வெளியிட்ட ஆதாரம் இதுதான்: ( https://www.theguardian.com/…/cluster-bombs-used-sri-lanka-… ). இவ்வாதாரங்களை கடந்த காலங்களில் பல சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டிருந்தபோதும், “யுத்தத்தின் போது அரச படையினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை. கொத்துக்குண்டுகளை பாவித்தமைக்கான சர்வதேச குற்றச்சாட்டுக்களை நாம் நிராகரித்திருந்தோம். கொத்துக்குண்டுகளை பயன்படுத்தியமைக்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை. கொத்துக்குண்டுகளை நாம் இனிவரும் காலங்களிலும் பயன்படுத்தப் போவதில்லை என்பதே எமது நிலைப்பாடாகும்," என அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன ஊடகங்களிற்கு முன்னர் தெரிவித்திருந்தார். இவ்வளவு ஆதாரங்களை நாம் முன்வைத்தும், உலகிற்கு ஈழத்தில் இடம்பெற்றது சாட்சியமற்ற போர். இதுவே சிரியாவாக இருந்திருந்தால்…! சிரியா போல எங்கள் மீதான தாக்குதல்கள் சர்வதேசமயப்படவில்லை என்ற கவலையோடு அடுத்த பகுதியை எழுதத் தொடங்குகின்றேன். *** மூலம்:- சுரேன் கார்த்திகேசு. https://www.samaraivu.com/2018/05/blog-post_68.html
  24. வல்லாதிக்கம் கொண்ட கேடு கெட்ட உலகே ! அதன் அருவருடிகளே,அது தந்த சுக போகங்களை நன்றிக் கடனாக சுமப்பவர்களே. வாருங்கள் வந்து பாருங்கள் இதுவும் நீங்கள் வாழும் உலகில் தான் காட்சியாக இருக்கின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.