Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    20008
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    87986
    Posts
  3. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    11530
    Posts
  4. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    2948
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/14/25 in all areas

  1. நோய்வாய்ப்பட்டு ஒன்றுக்கும் இரண்டிற்கும் யாருடைய தயைவையோ எதிர்பார்க்கையில் தான் அஞ்ஞான மேகம் விலகி ஞானத்தின் ஒளி கண்களை கூசச்செய்யும் வாழ்வின் பிரம்மாண்டங்களை மட்டுமே துரத்தி ஓடியதில் அர்த்தம் பொதிந்த சின்னஞ்சிறு நொடிப்பொழுதுகளை நம்மையறியாமலேயே புறக்கணித்தது புலப்படும் பாவமன்னிப்பு கேட்பதற்கு வாய்ப்பொன்று வேண்டி மனம் பிரார்த்திக்கும் பாவம்.. பொம்மைக்காய் அழுத என் குழந்தையை அடித்திருக்க வேண்டாம் "கால் வலிக்குதுப்பா" கடைத்தெருவிற்கு கூட்டிச் செல்கையில் பிள்ளை சொன்னபோதெல்லாம் தூக்கிக்கொண்டிருக்கலாம் என் தேவைகளை கேட்டு கேட்டு செய்தவளுக்கு கேட்காமலேயே அன்போடு ஒரு வேளை சமைத்து பரிமாறியிருக்கலாம் ஏதோ ஒரு சண்டையில் வார்த்தைகள் முற்றிய தருணத்தில் கையிலிருந்த தண்ணீர் செம்பை தூக்கிவீசாமல் இருந்திருக்கலாம் காய்ச்சலில் அவள் கிடந்த நாட்களில் இன்னும் கொஞ்சம் அக்கறையோடிருந்திருக்கலாம் பல்லாயிரம் கருத்துமோதல்களில் ஏதாவதொன்றினையாவது அவள் பாதங்களை இதமாய் வருடி மனதார மன்னிப்பு கேட்டு முடித்திருக்கலாம் சர்க்கரை கொதிப்பு மாத்திரைகளை அம்மா நினைவுபடுத்தாமலேயே வாங்கிக்கொடுத்திருக்கலாம் அம்மாவை நினைத்து அப்பா மனதோடு அழுத போதினில் அருகில் அமர்ந்து ஆறுதல் தந்திருக்கலாம்.. அவள் ஊரிலில்லாத நாளில் கஞ்சித்தண்ணீருக்காய் வாசல் வரை வந்த மாட்டின் மீது கல்லெறியாமல் இருந்திருக்கலாம் ரயில்பயணத்தில் முன் பதிவு செய்த கீழ்இருக்கையை என்னோடு பயணித்த முதியவருக்கு விட்டுக்கொடுத்திருக்கலாம். கட்டங்கள் பாதகமென யாரோ சொன்னதை நம்பி உசுரான காதலியை நிராகரிக்காமலிருந்திருக்கலாம்.இதில் யாரோ ஒருவரின் சாபம் தான் இப்படி பாயோடும் நோயோடும் கிடத்திவிட்டதோ? புரண்டு படுக்கும் போதெல்லாம் உறுத்துகிற பாயென இப்படித்தான் ஏதேதோ எண்ணங்கள். ...அலைபாயும் மீண்டும் வாழ்ந்து கடக்க முடியா தருணங்கள் நோயைக் காட்டிலும் வேகமாய்க் கொல்லும் ரோகத்துடனான போராட்டத்தில் அழுத்தும் நினைவுகளோடு போராட தைரியமின்றித்தான் நம்மில் அநேகம் பேர் உறக்கத்திலேயே உயிர்பிரிய வேண்டுமாய் மானசீகமாய் பிரார்த்திக்கிறோமோ? நன்றி முக நூல் சியாமளாரமேஷ்பாபு
  2. அட உங்களுக்கும் தானா எனக்கு இப்ப சந்தோசம். எனக்கு மட்டுமல்ல ஊருக்கும் தான்.
  3. நல்லூர் பிரதேச சபை என்பது இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு உள்ளூராட்சி சபை ஆகும், இது நல்லூர் பிரதேச மக்களின் தேவைகளைக் கவனித்து, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறது. இது ஒரு வரலாற்று பின்னணியைக் கொண்டுள்ளதுடன், சமீபத்தில் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இணைந்து அதன் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளன.
  4. அண்ணை, எனக்கொரு டவுட் இருந்தது! இந்த செய்திகளை அறம்புறமா இணைக்கிறன் என்றதால எனக்கு மட்டும் கொஞ்சம் வேகத்தடை போட்டிருக்கினமோ என்று!! (நகைச்சுவைக்காக) தொழிநுட்பக் காரணங்கள் நிறைய இருக்கும், நாங்கள் இப்ப எல்லாம் வேகவேகமா வேணும் என்று விரும்புகிறோம். முதன்முதல் 2006 இல் கொழும்பில் இணையம் பாவிக்க தொடங்கையில் 512 kb/s என்ற வேகம் தான். இப்ப கொஞ்சம் வேகமாக இயங்குவதாக உணர்கிறேன் @மோகன் அண்ணை. மிக்க நன்றி. இணைய வழங்கி நெருக்கடி ஏற்பட்டதோ?!
  5. 14 Sep, 2025 | 11:27 AM சீனோர் நிறுவனத்தினுடைய (Cey-Nor foundation Ltd) யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையினது தொழிற்பாடுகள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. பைபர் (Fiber) மூலப்பொருளைக் கொண்டு அனைத்து வகையான பொருட்களையும் உற்பத்தி மற்றும் பரும்படியாக்கம் செய்து சந்தைப்படுத்தும் செயன்முறையை மேற்கொள்ளும் முகமாக இத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. அதற்கான ஆயத்த வேலைகள் ஆரம்பமாகி முன்னோட்டமாக படகு, மீன் விற்கும் தாங்கி, மீன் குஞ்சு வளர்ப்புத் தொட்டி என்பன உற்பத்தியாக்கப்பட்டுள்ளன. குறித்த நிறுவனம் கடல்தொழில் சார் பொருட்களை உற்பத்தி மற்றும் பரும்படியாக்கும் நோக்கத்துடனேயே இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தபோதும் தற்போது யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலை அதிக கேள்வியுள்ள ஏனைய பைபர் மூலப்பொருள்சார் பொருட்களையும் தயாரிக்கத் தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றமை விசேட அம்சமாகும். குறிப்பாக வடக்கு மாகாணத்தின் கடற்றொழில் சார் உபகரணத் தேவைகளைத் தன்நிறைவோடு வழங்கும் நிலையமாக இது அமையும். இதன்வழி சுமார் 100 - 150 திறன் வேலைவாய்ப்புகள் உருவாகச் சாத்தியமுள்ளது. தற்போதைய நிலையில், சாதாரண கட்டுமரம் அளவிலான தோணி முதல் 30 அடி நீளமான படகுகள் வரை, 1 - 2 மீற்றர் வரையான விட்டம் கொண்ட மீன் வளர்ப்புத் தொட்டிகள், மீன் விற்கும் வண்டிகளில் பொருத்துவதற்கான குளிரூட்டக்கூடிய பெட்டி என்பன இங்கு தயாரிக்க ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி மாலை குறித்த தொழிற்சாலையானது, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரால் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/225040
  6. வேறு அரசு மாறிவிட்டால் ஓய்வூதியம் போன்ற சலுகைகள் திரும்ப வரலாம். அரச ஊழியரின் சம்பளத்தில் ஓய்வூதியத்திற்கு என பணம் கழிக்கப்பட்டே 60 வயதின் பின் வழங்குகிறார்கள். எதிர்காலத்தில் தனியார் நிறுவனங்கள் போல மொத்தமாக வழங்கலாம்.
  7. சசி என்னுடைய தமிழ் வகுப்பை தவற விட்டுவிட்டார் என நினைக்கின்றேன். இடக்கரடக்கல் அடுத்த முறை கவனிக்கவும்
  8. ஓமோம்..... உலகத்திலையே முதல் முதலாய் ஒன்லைன்ல கட்சி நடத்தி முதலமைச்சராய் வந்த ஜாம்பவான் இவராய்த்தான் இருக்கும்.😂 எங்கடை ஈழத்து மருமோன்ர தில்ல பாத்தீங்களோ சார்? பணம் என்னடா பணம். நான் பாக்காத பணமா? எங்கட மருமோன்ர சிந்தனை எல்லாம் மக்கள் சேவை...மக்கள் சேவை....மக்கள் சேவை...மக்கள் சேவை அதை தவிர வேறொன்றுமில்லை.மற்ற காசுக்காரர் எல்லாம் என் கால் தூசுக்கு சமம் பீலிங்யா 😃 வருங்கால அம்மா ஜெயலலிதாவும் ரெடியாம்🤪 ஈழத்து பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டவர் எண்டபடியாலதான் கச்சதீவை சீதனமாய் கேக்கிறாரோ? 🤣 யாவும் கற்பனை.
  9. 😂😅 நான் ஒதுங்குவதால் களத்திற்கு எந்த நஷ்டமும் இல்லை . ஆனால் நீங்கள் இல்லாத களம் வற்றிப்போன நதியாக..... மாறி விடும் என்று....... யோசிக்கின்றேன்......🤣
  10. உண்மைதான் அவருக்கு தென்னகத்து ஜேமஸ்போண்ட் என்ற பட்டமும் இருக்கிறது. இவரது படங்களில் நல்ல பாடல்களும் இருக்கிறது. குறிப்பாக, அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி நீ எங்கே என் நினைவுகள் அங்கே அன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் கடிதம் நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் தோழ்வி நிலையென நினைத்தால் செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்… என்று பலவற்றைச் சொல்லிக் கொண்டு போகலாம்
  11. இந்த தொந்தரவு வேணாம் என்றுதான் அநேகர்லண்டனில் இருந்து சென்னை போய் காலையில் இறங்கி அப்படியே பலாலி 1 மணி நேரத்தில் யாழில் மதியம் சாப்பட்டுக்கு வீட்டில் நிக்கினம் என்ன 2௦ கிலோ நிறைக்கு மேல் கொண்டு போக முடியாது அவசர பிரியர்களுக்கு இந்த ரூட் மிகவும் வசதியானது . அல்லது சென்னையில் இறங்கி ஆசுவாசமாய் சொப்பிங் பண்ணி 9௦கிலோ வுக்கு நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு கப்பல் போய் வருகிறது நாலு மணி நேர பயணமே ஒரு வழி பாதை நேரத்துக்கு ஆகுது . a9 ல் இரவிரவாய் 8௦மைல் வேகத்தில் மாவா போதை பாக்கு போட்டு ஓடும் சாகச வாகன ஓட்டிகளின் தொல்லை வேண்டாம் .
  12. இவர் சாமி கும்பிடக்கூடிய ஆள் போல் தெரியவில்லையே சிறியர். நல்லூர் சுற்றாடல் பகுதியில் முளைத்துள்ள அசைவ உணவகத்திற்கு சென்றார் போலும்.
  13. இதென்னடா இப்படி முன்னுக்குப்பின் முரணான கதை. பாதுகாப்பு கேட்கிற சிங்கம். இது அசிங்கம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.