Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    89120
    Posts
  2. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    1610
    Posts
  3. நன்னிச் சோழன்

    கருத்துக்கள உறவுகள்+
    7
    Points
    36205
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    8995
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/01/26 in Posts

  1. மேலேயும் கீழேயும் ஒரு மாற்றமும் இல்லை. நடுவில் சில மாற்றங்களுடன், இன்றைய நிலை.
  2. இதில பகிடி என்னவென்றால் ஈரானிய மக்கள் கமெனி கொல்லப்பட்டதை கொலுவிருத்துறாங்கள் (celebrate)..ஆனால் எங்கட நாட்டு முஸ்லீம்கள் அத நினைச்சு வருந்துறாங்கள் .. போதாக்குறைக்கு புலிகளையும் இழுக்கிறாங்கள்... மதமென்டால் தலைகீழா படுத்துக்கிடந்து முட்டுக்குடுப்பாங்கள் எது எப்பிடியோ ... இஸ்லாமிய பயங்கரவாதம் இன்னும் கொஞ்ச நாளில் நல்லாத் தணியும் ... யூத மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள் 😮‍💨😌
  3. நீங்கள் கேட்பது சரிதான். இன்று சர்வதேச வல்லரசுகளோ, பிராந்ர்திய வல்லரசுகளோ எந்த சட்டத்திற்கும் கட்டுப்படுவதில்லை என்பது உண்மையே. அமெரிக்கா நடத்திய வியட்னாம், ஈராக் மற்றும் அப்கானிஸ்த்தான் மீதான தாக்குதல்கள், ரஸ்ஸியா நடத்திய அப்கானிஸ்த்தான், மோல்ட்டோவா, ஜோர்ஜியா மற்றும் உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பு வல்வளைப்புக்கள், சீனா நடத்திய தீபெத், தென்சீனக் கடற்பகுதி மற்றும் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மீதான ஆக்கிரமிப்புக்கள் என்று எல்லா வல்லரசுகளும் தம் பங்கிற்கு தமது நலன்களை மட்டுமே முன்னிறுத்தி சர்வதேசச் சட்டங்களை மீறி வருகின்றன. ஆனால், இவை எதுவுமே தம்மிடம் இருக்கும் அணுவாயுதத்தினை சட்டங்களை மீறும் செயற்பாடுகளில் பாவித்ததில்லை, இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் மீதான தாக்குதலைத் தவிர. புலிகளையும் ஈரானின் முல்லாக்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பதன் மூலம் போரட்டத்தையல்லவா கொச்சைப்படுத்துகிறீர்கள். இஸ்ரேலினை உலக வரைபடத்திலிருந்து அழிப்பதுவே தலையாய கடமையென்று அணுவாயுத உருவாக்கத்தில் ஈடுபட்டிருக்கும் ஈரானைப்போல, புலிகள் ஏதாவதொரு இனத்தை அழிப்பதே தமது தலையாய கடமை என்று செயற்பட்டார்களா? அப்படிச் செயற்பட்டார்கள் என்றால் அதனை இங்கே குறிப்பிடுங்கள் பார்க்கலாம். அடுத்ததாக, புலிகளிடம் கடற்படையும், வான்படையும் இருப்பதனால்த்தான் அழிக்கப்பட்டார்கள் என்று எப்படி முடிவு செய்தீர்கள்? இதனை நிரூபிக்க உங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் இங்கே பகிரலாமே? இந்தியா தனது பழிவாங்கலுக்காகவே புலிகளை அழிக்கக் கங்கணம் கட்டிச் செயற்பட்டது என்று நன்கு தெரிந்தபின்னரும் ஏன் மீண்டும் மீண்டும் புதிதாக காரணங்களைக் கொண்டுவந்து இணைக்கிறீர்கள்?
  4. அவர்கள் பக்கம் இழப்பு என்றால் அவனிடமிருந்து வந்தோம் அவனிடமே போகிறோம் என்று சொல்லி தாளிப்பார்கள், அவர்கள் பக்கம் வெற்றி என்றால் அல்லாஹு அக்பர் என்று குமுறுவார்கள் காசா போரின்போது சின்வார் தளபதியாக நியமிக்கப்பட்டபோது அவர் சிங்கம் இஸ்ரேலால் அவரை நெருங்ககூட முடியாது என்று கதறினார்கள், எண்ணி மூன்றேநாளில் இஸ்ரேல் அவர் கதையை முடித்தபோது என்ன இழவை சொல்லி சமாளிக்குறது எண்டு தெரியாமல் இது ஒன்றும் இழப்பில்லை அவனிடமிருந்து வந்தோம் அவனிடமே போகிறோம் என்று சடைஞ்சார்கள், அப்போ காசாவில் மக்கள் சாகிறார்கள் ஐநா காப்பாத்து அல்லாஹ் காப்பாத்து என்று ஏன் கதறுகிறீர்கள் அவனிடம்தானே போகிறார்கள் என்று கேட்டேன், அதுக்கு செத்துபோன எங்கவீட்டு கிழவியிலிருந்து சித்தி பெரியம்மா வரை தோண்டி எடுத்து சிறப்பான தமிழில் திட்டினார்கள். சரி அவங்க மார்க்க கடமையைதானே செய்கிறார்கள் என்று பேசாமலே வந்துட்டேன். மக்கள் உயிர் இழப்பை கேலி செய்யும் எந்த நோக்கமும் இல்லை, ஆனால் மக்கள் இழப்பைபற்றி அவர்கள் கவலைபடுவது அவர்கள் பக்கம் அதிக இழப்பு என்றால் மட்டுமே மக்களை இழுத்து திசை திருப்புவார்கள். மற்றும்படி மற்றவர்களை கொன்றுவிட்டு இறைவன் பெரியவன் என்பதே கோஷமாக இருக்கும். எந்த ஒரு விஷயமும் தமக்கு சாதகமாக இல்லையென்றால் அப்படியே எந்த திசைக்கு வேணுமென்றாலும் மாற்றி உருட்டுவார்கள், உருட்டுவதில் இவர்களிடம் பிதாமகன் சூர்யா தோற்றுபோனார் என்றே சொல்லவேண்டும் .
  5. இது இறைவனால் தீர்மனிக்கப்பட்டதாம். இஸ்லாமிய இணையத்தளம் ஒன்று இவ்வாறு எழுதியுள்ளது : "மிகவும் கீழ்த்தரமான பயங்கரவாதிகள் மற்றும் மனிதகுலத்தின் கொலையாளிகளின் கைகளால் அவர் வீரமரணம் அடைந்தது, இந்த மாபெரும் தலைவரின் நேர்மைக்கும் அவரது உளமார்ந்த சேவைகள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கும் ஒரு அடையாளமாகும்." வென்றாலும் கடவுளருள் தோற்றாலும் கடவுளருள்.
  6. அதுக்கு காரணம் பிரான்சில் உள்ளவரின் அதிமேதாவித்தனம்! ஏதோ தன்னால்தான் யாழ் களம் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற மிதப்பு!
  7. வெற்றி வெற்றி .... இஸ்லாமிய உச்ச பயங்கரவாதி கமேனி .... கொல்லப்பட்டான் ... 🤣🤣🤣 ஒரே மகிழ்ச்சியாக உள்ளது ... உலகை பயங்கரவாதத்திடமிருந்து காத்த அமெரிக்க இஸ்ரேலிய வான்படையினருக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉 இந்த காத்தான்குடி புத்தளத்தானுகளை இப்ப Facebook இல பாக்கோனும்.... சுடுதண்ணி குடிச்ச %@#% மாதிரி ஓடுப்பட்டு திரிகிறானுகள்... மதமென்டால் எல்லாத்தையும் போட்டுட்டு முன்னுக்கு வாறவனுகள், இண்டைக்கு ஒழிச்சிட்டாங்கள்...🤣🤣
  8. ஈரானின் சுப்ரீம் லீடரும், இன்னும் பல முக்கியஸ்தர்களும் கொல்லப்பட்டு விட்டதாகவே இங்கு அமெரிக்காவில் செய்திகளில் வர ஆரம்பித்திருக்கின்றது. ஈரானில் பாடசாலைப் பிள்ளைகளும், பொதுமக்களுமாக நூற்றுக்கு மேற்பட்டோர் அமெரிக்க இஸ்ரேல் குண்டு வீச்சில் இறந்துள்ளதாகவும் செய்திகளில் சொல்லுகின்றார்கள். சுப்ரீம் லீடருக்கும், அமைச்சர்களுக்கும், தளபதிகளுக்கும், பாடசாலை பிள்ளைகளுக்கும் இவர்களுக்கு வித்தியாசம் தெரியவில்லையா.................. இந்தக் கொடுமைகளை கேட்பதற்கோ அல்லது தடுப்பதற்கோ உலகில் ஒரு நல்ல நாடும் இல்லை, ஒரு தலைவரும் இல்லை................... ஈராக், ஈரான், வெனிசுவேலா போன்ற நாடுகள் எல்லாமே வெற்றுக் கோதுகள் போன்றன. வெறும் வாய் வீச்சு மட்டுமே என்றே தோன்றுகின்றது. ரஷ்யாவையும், சீனாவையும் தங்கள் பாதுகாப்புக்கு நம்பும் எந்த தலைவர்களினதும், நாடுகளினதும் நிலைமை கடைசியில் அந்தோ பரிதாபம் என்றே முடிந்து கொண்டிருக்கின்றது. இவர்கள் ரஷ்யாவிடமும், சீனாவிடமும் என்ன வாங்கிக் குவித்து வைத்திருக்கின்றார்கள்? அடிப்பதற்கு குண்டுகளும் இல்லை, குடிப்பதற்கு தண்ணியும் இல்லை என்று வந்து நிற்கின்றது ஈரான்.............................. ரஷ்யாவும், சீனாவும் நாங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றோம் என்று சொல்வதை தவிர, ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடமாட்டார்கள். அதிபர் ட்ரம்பிற்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு இந்த தாக்குதல்கள் நல்ல ஒரு மடை மாற்றும் வாய்ப்புகள். முன்னர் ஓபாமா ஈரான் மேல் தாக்குதல்கள் செய்யப் போகின்றார், அது அநீதி என்று சொன்ன அதிபர் ட்ரம்ப் இன்று ஈரான் மேல் ஒரு தலைப்பட்சமாக தாக்குதல்கள் மேற்கொள்ளுகின்றார். அதிகாரமும், ஆணவமும் உள்ள சில மனிதர்களால் அப்பாவி மக்கள் அழிந்து கொண்டிருக்கின்றார்கள்.
  9. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்! ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் இன்று காலை ஒரு தடுப்பு ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் சனிக்கிழமை (28) தெரிவித்தார். இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்படுவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு பொதுமக்களை தயார்படுத்துவதற்காக நாடு முழுவதும் உள்ள பகுதிகளில் பாதுகாப்புக்காக வான்வழித் தாக்குதல் சைரன்களை ஒலித்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே, இஸ்ரேல் முழுவதும் அரசு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் குறிப்பிட்டுள்ளார். தாக்குதலுக்குப் பின்னர் ஈரானின் தலைநகரான தெஹ்ரான் நகர மையத்தில் ஏற்பட்ட வெடிப்பிலிருந்து அடர்ந்த புகை எழுந்தது. ஈரானிய அரசு தொலைக்காட்சி குண்டுவெடிப்பை ஒப்புக்கொண்டது, எனினும் மேலதிக விவரங்களை வழங்கவில்லை. ஏற்கனவே அதிகமாக இருந்த ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதட்டங்கள், கடந்த ஆண்டு இறுதியில் நாடு தழுவிய போராட்டங்களை ஈரான் ஒடுக்கத் தொடங்கியதிலிருந்து அதிகரித்து வருகின்றன. ஈரான் தனது அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ட்ரம்ப் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார், ஆனால் அந்த நாடு அதை மறுத்துள்ளது. மாறாக அமைதியான நோக்கங்களுக்காக யுரேனியத்தை செறிவூட்டுவதாக வலியுறுத்துகிறது. அமெரிக்கா பல வாரங்களாக இப்பகுதியில் ஏராளமான விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை நிலைநிறுத்தி வருகிறது. வெள்ளிக்கிழமை தாக்குதல்கள் அச்சுறுத்தல் அதிகரித்ததால், இஸ்ரேலை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா தனது குடிமக்களை வலியுறுத்தியது. ஈரானும் அமெரிக்காவும் இந்த வாரம் ஜெனீவாவில் தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் குறித்து பல மணி நேரம் மறைமுக பேச்சுவார்த்தைகளை நடத்தின, ஆனால் ஒரு ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறியமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1466607
  10. King of conspiracy என்டு சொல்லுவாங்கள். இப்பிடி போட்டுத் தள்ளுறியலே. முடியல. 😉
  11. உங்களுக்காக இன்று 154 மாடிக்குப் போய் வெண்டிங் மெஷினைத் தேடினேன்.. காணவில்லை. வெளியே பல்கனியில் நின்று கீழே உள்ள கட்டடங்களைப் பார்த்தபோது ஒரு பாரிய வெடிச்சத்தம் கேட்டது. துறைமுகத்தில் தாக்குதல் நடந்தது என்று நினைக்கின்றேன்! கீழே 148 மாடியில் வெண்டிங் மெஷினைக் கண்டுபிடித்தேன்.. ரவுண்டான பிஸ்கட்! தங்கம் என்று உரசிப் பார்க்கவா முடியும்!
  12. சஞ்சு கிறீஸ்தவ மாடுதின்னி என்பதால் அவரை முடிந்தவரை ஒதுக்கி வைத்தார் சங்கி கம்பீர். தொடர் சொதப்பலால் பிரெஷர் அதிகமாகி சாம்சனை வேண்டா வெறுப்பாக அணியில் சேர்த்தார். இண்டைக்கு சாம்சன் இல்லாவிட்டால் இந்தியா வீட்டை. அதுவும் ஆட்ட முடிவில் முட்டுகாலிட்டு சஞ்சு செலிபிரேட் பண்ணியது, மைதானத்தில் வந்து “ஜெய் ஶ்ரீராம்” கோசம் போடும் காவாலிகளுக்கு செம்ம கடுப்பை கொடுத்திருக்கும்😂. என்னதான் சப்பாத்திகள் உருட்டினாலும் உலக கோப்பையை வெல்ல மாட்டுகறி தேவை (பதான்ஸ், சஞ்சு, சிக்கா, ஷமி). இந்திய வெண்டது சோகம் எண்டாலும் இப்படி சில சின்ன சந்தோசங்கள், எனக்கும் புள்ளி வேற எனவே அதிக சோகம் இல்லை.
  13. இன்றைய முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி, அணித்தலைவர் சிகண்டர் ராசாவின் அதிரடியான 73 (43 பந்துகள்) ஓட்டங்களின் உதவியுடன் 7 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தபோதும் டெவால்ட் பிறெவிஸின் விளாசலான 42 (18 பந்துகள்) ஓட்டங்களுடன், றயான் றிக்கெல்டனின் வேகமான 31 (22 பந்துகள்) ஓட்டங்களுடனும் , ஜோர்ஜ் லிண்டியின் ஆட்டமிழக்காமல் விரைவாக எடுத்த 30 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும் 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த ஐந்து பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சுப்பர் 8 சுற்றில் விளையாடாத அவுஸ்திரேலியா மற்றும் இன்றைய போட்டியில் விளையாடாத நியூஸிலாந்து அணிகள் வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, றொஸ்டன் சேஸின் வேகமான 40 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜேஸன் ஹோல்டரின் ஆட்டமிழக்காமல் விரைவாக எடுத்த 37 (22 பந்துகள்) ஓட்டங்களுடனும், றொவ்மன் பவலின் ஆட்டமிழக்காமல் அதிரடியாக எடுத்த 34 (19 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் ஷாய் ஹோப்பின் நிதானமான 32 (33 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷிம்ரோன் ஹெட்மயரின் மின்னல்வேக 27 (12 பந்துகள்) ஓட்டங்களோடும் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் சஞ்சு சாம்சனின் ஆட்டமிழக்காமல் மின்னல்வேகத்தில் எடுத்த 97 (50 பந்துகள்) ஓட்டங்களுடனும், திலக் வர்மாவின் வேகமான 27 (15 பந்துகள்) ஓட்டங்களோடும் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: இந்திய அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அத்தோடு அரையிறுதிப் போட்டிக்கும் தெரிவானது. அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.
  14. மிக்க நன்றிங்க....உங்க மந்திரம்...எனக்காகிவிட்டது ...சஞ்சு ..மலையாளியல்லே...லேசாக அசைக்க முடியாது
  15. அய்யய்யோ..... பையா ...பையா பையப்பைய நடந்துவா இந்தியா கஸ்டப்படுகுது கண்டிப்பா வரவேணும் கையிலை தேசிக்காய் வேப்பிலையுடன்.. கையோடை ஜக்கம்மவையும் கூட்டிவா காம்பீரு முகம் தொங்கிட்டிடுது... சூரியாவும் சுவிங்கத்தை துப்பிட்டான் ..தாமதம் வேண்டாம் பையா ஜக்கம்மா வந்து கட்டறுத்து.. வெற்றி தர வேணும் வெல்லும் புள்ளி நான் இரண்டெடுக்க வேணும்.. பையா பையா ஓடிவா..
  16. ஜக்கம்மா இந்தியாவை தோற்கவை தாயே😂 அத்தோட ஒரு பிளேன் டீயிம் கோல்ட் லீபும் 😂
  17. லிபியாவை ஆண்ட கடாபி சதாமைப் போன்றதொரு முன்னாள் இராணுவ அதிகாரி, பின்னர் 42 வருடங்களாக நாட்டினை கொடுங்கோலாட்சி செய்த சர்வாதிகாரி, குடும்ப உறுப்பினர்களுக்கும் தனது நெருக்கமானவர்களுக்கும் மட்டுமே நாட்டின் வளங்களைச் சூறையாடி சொத்துக் குவித்த ஊழல்வாதி, இவற்றுக்கெல்லாம் மேலாக கடுமையான மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்ட ஒரு மனிதர். இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மத அடிப்படைவாதி. ஆனால் நீங்கள் கூறும் மேற்குலகு அவரை அகற்றவில்லை. மாறாக அவரது குற்றங்களை எதிர்த்து சாதாரண லிபிய மக்கள், மனிதவுரிமைவாதிகள், செயற்ப்பாட்டாளர்கள் ஆகியோரே போராட்டங்களில் குதித்தனர். இப்போராட்டங்களை கடாபி இராணுவத்தினைக் கொண்டு கொடூரமாக அடக்க முனைகையிலேயே அது மக்களின் ஆயுதப் போராட்டமாக மாறியது. போட்ராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை மீளக் கைப்பற்ற கடாபியின் படைகள் முயலும்போதே நேட்டொ தலைமையில் வாந்தாக்குதல்கள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்டது. இறுதியில் தப்பிச்செல்ல எத்தனித்த கடாபியின் வாகனத்தின்மீது நேட்டோவின் வான் தாக்குதலில் அகப்பட்ட கடாபி பதுங்கியிருந்தபொழுது அவரை லிபிய புரட்சிகரப் படையே கண்டுபிடித்துக் கொன்றது. அவரின் பின்னரான லிபியாவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தமக்கிடையே சண்டையிட்டு நாட்டினை அழித்தார்கள். சிரியாவின் சர்வாதிகாரி பற்றி நீங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடாபியைப் போலவே அவரும் ஒரு கொடுமையான சர்வாதிகாரி. புட்டினின் நெருங்கிய நண்பர். சுமார் இரண்டு இலட்சம் சிரிய மக்களின் படுகொலைகளுக்கு நேரடியாகக் காரணமானவர். ரஸ்ஸிய ஆயுதங்கள், ரஸ்ஸிய இராணுவப் பிரிவுகள், ரஸ்ஸியாவின் தனியார் இராணுவக் கூலிகள், ரஸ்ஸிய விமானங்கள், ஈரானின் ஆயுத வளங்கள், ஹிஸ்புள்ளாக்களின் படையணிகள் என்று பல முனை உதவிகளைக்கொண்டு போர் நடத்தியவர். தனது அதிகார ஆசையினால் இஸ்லாமிய அடிப்படைவாதிகளான ஐஸிஸ் அமைப்பு உருவாக வழிசமைத்துக் கொடுத்தவர். நீங்கள் கூறும் மேற்கினைக் காட்டிலும் நீங்கள் பூஜிக்கும் புட்டினும், இன்று நீங்கள் உருகும் அயொதுள்ளா கமெய்னியுமே சிரியாவின் அழிவுகளுக்குப் பெருங்காரணமானவர்கள். அப்கானிஸ்த்தானை முதலில் ஆக்கிரமித்தது நீங்கள் பூஜிக்கும் புட்டினின் நாடான ரஸ்ஸியாதான் என்றால் நம்புவீர்களா? 1979 முதல் 1989 வரையான 10 வருட காலத்தில் குறைந்தது பத்து இலட்சம் அப்கானியர்கள் கொல்லப்படுவதற்கு ரஸ்ஸியா முதன்மைக் காரணமாக இருந்தது. நீங்கள் கூறும் மேற்கின் ஆக்கிரமிப்பில் கொல்லப்பட்ட அப்கான் மக்களின் எண்ணிக்கை இரண்டரை இலட்சம் மக்கள். ஆக அப்கானின் மக்கள் அழிவில் மேற்கைக் காட்டிலும் ரஸ்ஸியாவின் பங்களிப்பு நான்கு மடங்கிலும் அதிகமானது. நீங்கள் இன்று கூறும் ஈராக், சிரியா,லிபியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட உள்நாட்டு மோதல்களைப் போல அப்கானிஸ்த்தானிலும் உள்நாட்டு மோதல்களை ரஸ்ஸியாவின் வெளியேற்றம் ஏற்படுத்தியது. அதுவரை ஒன்றாகப் போராடிய முஜஹிதீன்கள் ரஸ்ஸியாவின் வெளியேற்றத்தின் பின்னர் அதிகாரத்திற்காகப் தம்க்குள்ப் போராடி நாட்டினை மேலும் அழித்தார்கள். 1994 இல் பாக்கிஸ்த்தானின் இராணுவப் புலநாய்வுப் பிரிவினால் உருவாக்கப்பட்ட தலிபான்களும் அப்கானிஸ்த்தானிற்குள் வரை மோதல்கள் பன்முகப்படுத்த‌ப்பட்டன. ஆக, மேற்கைக் காட்டிலும் நீங்கள் குறிப்பிடும் நாடுகளில் அதிக‌ அழிவினை ஏற்படுத்தியது ரஸ்ஸியாதான் என்பதில் உங்களுக்குச் சந்தேகம் வேண்டாம்.
  18. இந்த பதிவுக்கான பதிலை எனது முகப்புத்தக மேய்ச்சலில் கிடைத்தது ...இதனைப் பார்த்ததும் எனக்கு நாலுபுறத்தில் இருந்துதாக்குதல் ...அடியும்விழும் ...கவுரவ பட்டமளிப்பையும் தருவார்கள் ..ஆனால் நான் எந்தவித கருத்தும் எழுதமாட்டேன் ...இது இன்னொருத்தரின் கருத்து ..மேற்குறிப்பிட்ட கருத்துக்கு ஒத்து வந்ததுபோல் இருந்தது ...பிரதி பண்ணி விட்டேன் . நிர்வாகம் நீக்கினால்கூட ..மகிழ்ச்சி அடைவேன் பால்சோறும்.. பட்டாசு கொளுத்தியும் தன்னுடைய சொந்த இனம் அழியும்போது றபான் அடித்து டான்ஸ் ஆடி கொண்டாடிய மனிதாபிமான அற்ற கூட்டம் .. இன்று எங்களைப் பாத்து நீ யெல்லாம் மனிதனா மனிதாபிமானம் இல்லையா என்று கேக்கிறார்கள் 🤷" அடேய் நீங்கள் எல்லாம் இன்றும் ஒற்றுமை ஒற்றுமை என்று சொல்லிக்கொண்டு இலங்கைல இருக்கிற தமிழர்களை எப்படியாவது விரட்டனும், அவர்களுடைய வரலாறுகளை அழிக்கனும் என்று துடிக்கிறிங்கள்.. நீங்கள் புனித ரமலான் மாதத்தில் பேசுகின்ற வார்த்தைகளை பாக்கும்போது உங்களுக்கு, இஸ்லாத்தைவிட துவேசம் தான் முக்கியம் என்று புரிகிறது.. ஈரானிய பிரச்சனைகளை பற்றி பேசும்போது எதற்கடா இலங்கைக்குள்ள போறிங்கள், ஏனென்றால் உங்களுடைய எண்ணம் சிந்தனையெல்லாம் இலங்கைலுள்ள தமிழினம் அழியவேண்டும் என்ற வெறி ஊறிப்போனதால்தான்... அதனால்தான் ஈரானிய பிரச்சனைக்குரிய பதில்களை வழங்காது அங்கு ஓடுறிங்க.. உங்களுக்கு ஒன்று தெரியமா அடுத்துவரும் சட்டத்திருத்தங்களிலோ அல்லது யாப்புகளிலோ இலங்கையில் இரண்டு இனம் மட்டும்தான் என முன்மொழியப்பட்டுள்ளது.. தமிழர்கள் தமிழர்கள் என்று நாங்கள் சொல்லும்போது கேக்காத நீங்கள் இனி இலங்கை அரசே சொல்லுது நீங்க தமிழர்களென்று 🤣" ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் பெட்டி படுக்கையை கட்டிட்டு ராஜஸ்தான் போக வேண்டியதுதான்.. இல்லாட்டி கண்ணாடியைப்பார்த்து பீ தமிழன் என்று சொல்லி காறித்துப்புங்கள் உங்க முகறையில். எங்களுக்கு என்றைக்கும் ஒரே ஒரு தலைவன்தான் அவருக்காக நிறைய கடமைப்பாடு உள்ளது.. அதுவரை என்னை உணர்ந்தவன் என்னுடன் நில்லு மற்றவன் எல்லாம் நடையை கட்டுங்கள்... கொள்கை கோட்பாடு அற்ற இஸ்லாமியர்களுக்கு இந்த உலகில் எங்கெல்லாம் இஸ்லாத்தை தழுவி வாழுகின்றார்களோ அங்கெல்லாம் அவர்களுக்கென்று ஒரு தலைவன் இருப்பான்.... நன்றி..... iroshan Sivakumar .
  19. சர்வதேச விதிகளுக்கும் ஒப்பந்தங்களுக்கும் கட்டுப்படாத எந்த நாட்டிடமும் அணு ஆயுதம் இருப்பது இஸ்ரேல் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல உலகின் எந்த நாட்டுக்குமே ஆபத்தானது. ஆன்மீகம் என்ற பெயரில் பழமைவாத மத அரசியல் செய்யும் அவர்கள் தம்முடன் முரண்படும் எவருக்கெதிராகவும் அவர்களின் ஏக இறைவன் இத்தாலி இறைவன் பெயரால் இறைவன் நாடிவிட்டான் என்று சொல்லிவிட்டு அணு ஆயுதங்களை ஏவ துளிகூட தயங்கமாட்டார்கள். ஈரானின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதன் ஒருநாட்டின்மீது மேற்கொள்ளப்படும் அத்துமீறல் என்று ஒருபோதும் கொள்ள முடியாது , அவர்களை வழிக்கு கொண்டுவர பலநூறு சந்தர்ப்பங்களும் பல ஆண்டுகள் கால அவகாசமும் வழங்கப்பட்டும் எந்த பணிதலுக்கும் உடன்படாமல் பாலிஸ்டிக் ஏவுகணை நம்பியே வீம்பு செய்தார்கள், அதனால் இப்போது அவர்கள் எதிர்கொள்ளும் அழிவு பரிதாபத்திற்குரியதல்ல. ஈரானின் இழப்புக்களை பரிதாப கண்ணோடு நோக்குகிறவர்கள் ஒரு நிமிடம் கண்ணைமூடி இஸ்ரேலும் அமெரிக்காவும் இல்லையென்றால் இந்த மதவெறிக்கூட்டம் உலகம் முழுவதும் என்ன ரத்தவெறி ஆட்டம் ஆடும் என்பதை சிந்தையில் எடுத்து பார்க்காவிட்டால் எதிர்கொள்ளபோகும் காலத்தில் அவர்களின் சிரசும் இந்த மதவாத கால்பந்தாட்ட வீரர்களின் காலில் பந்தாய் உருள நிறையவே வாய்ப்பிருக்கு.
  20. வெளிப்படையான கமெய்னியின் அசையாச் சொத்துக்கள் மற்றும் இவரின் உள்நாட்டு முதலீட்டுச் சொத்துக்களின் மதிப்பு மட்டும் 95 பில்லியன் டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  21. ஈரானின் கொடுங்கோலாட்சி அழிக்கப்படுதல் மனித குலத்திற்கு அவசியமானது. மதத்தின் பெயரால் மத்தியகிழக்கு முழுவதையும் அச்சநிலையில் வைத்துக்கொண்டு, உலக இஸ்லாமியப் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களும், பண உதவியும் செய்துவந்த கமெய்னியும் அவனுடன் இன்னும் 40 இலிருந்து 50 வரையான இரானியக் கொடுங்கோலாட்சியின் தலைவர்களும், தளபதிகளும் ஒரே நாள் தாக்குதல்களில் கொல்லப்பட்டது மனிதகுலத்திற்குக் கிடைத்திருக்கும் மகத்தான் வெற்றியென்பதில் சந்தேகமில்லை. கமெய்னி கொல்லப்பட்டாலும் கூட அவனது புத்திரனின் தலைமையில் ஈரானிய இஸ்லாமியப் பயங்கரவாதிகள் மீதமிருக்கும் ஏவுகணைகளை இஸ்ரேல் உட்பட மத்திய கிழக்கின் பல நாடுகள் மீது ஏவிவருகிறார்கள். ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுச் சரணடையுங்கள், உங்களின் உயிர்களைக் காத்துக்கொள்ளுங்கள் எனும் அமெரிக்கத் தலைவரின் கோரிக்கையினை மதவெறி பீடித்த ஈரானிப் பயங்கரவாதிகள் கேட்பதாகத் தெரியவில்லை. ஆகவே முற்றான அழித்தொழிப்பொன்றினை இவர்கள் எதிகொள்ளப்போகிறார்கள் என்பது உறுதி. இஸ்ரேலினாலும், அமெரிக்காவினாலும் நடத்தப்பட்டு வரும் ஈரானியப் பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்கள் முற்றான இலக்கினை அடையும் வரை தொடரப்பட வேண்டும். தற்போது பாம்பின் தலையில் அடிவீழ்ந்திருக்கிறது, ஆனாலும் இன்னும் கொல்லப்படவில்லை. ஆகவே மீதமிருக்கும் பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டு, நாடு முழுவதுமாக அவர்களின் தழைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும் வரை அமெரிக்கா - இஸ்ரேல் தலைமையிலான தாக்குதல்கள் நிறுத்தப்படக் கூடாது. இப்போது நடத்தப்படும் தாக்குதல்களை திட்டமிட்டுவந்த வேளை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு அமெரிக்காவிடம் ஒரு வேண்டுகோளினை முன்வைத்திருந்தார். ஈரான் மீது அமெரிக்கா நடத்தவிருக்கும் தாக்குதளினால் இஸ்ரேல், ஈரானிடமிருந்து வரும் கடுமையான எதிர்வினையினை முகம்கொடுக்க நேரிடும், ஆனாலும், மேற்கொள்ளப்படவிருக்கும் தாக்குதல் ஈரானியப் பயங்கரவாதிகளை முற்றாக அழித்து, ஆட்சிமாற்றம் ஒன்றினை ஏற்படுத்தும்வரை தொடர்ந்து நடக்குமாக இருந்தால், இஸ்ரேலியர்கள் இழப்புக்களைச் சந்திக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதே அது. ஆக, இப்போது நடப்பது இரானிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளைக் களையெடுக்கும் நடவடிக்கை. ஆகவே அது முற்றுப்பெறும் வரை இப்போர் ஓயப்போவதில்லை. இப்போரிற்காகவே அமெரிக்காவும், இஸ்ரேலும் நீண்டகாலமாக ஆயத்தங்களை செய்துவந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
  22. மனதை தளர விடாதீர்கள்… ஈரானை அமெரிக்க பிடித்தவுடன் நிச்சயம் பெற்றோல் விலை குறையும். பிற்குறிப்பு: தீபாவளிக்கு தீர்வு வரும் என்ற…. சம்பந்தன் ஐயாவின் கோட்பாட்டின் படி வாசித்து ஆறுதல் அடையவும். 😂
  23. விஜயின் ரசிகர்கள் பலரின் பேச்சுக்களில் இன்னும் முதிர்ச்சி தெரியவில்லை. ஒருவர், இருவர் என்றால் கடந்து போய் விடலாம். ஆனால் 90 வீதமானவர்களுக்கு எங்கு என்ன பேச வேண்டும் என்ற விவஸ்தையே கிடையாது. இது தமிழ் சமூகத்திற்கு ஆபத்தான அறிகுறி. அதில் பலருக்கு தமிழ் நாட்டில் எத்தனை தொகுதிகள் உள்ளன என்று கூட இன்னும்தெரியவில்லை. பகிடி என்னவென்றால்… அவர்களுக்கு சட்டமன்ற தேர்தலுக்கும், பாராளுமன்ற தேர்தலுக்கும் கூட வித்தியாசம் தெரியாமல் உள்ளது.
  24. இந்தியாவின் பந்து வீச்சுதான் மே.இய விட சிறந்தது. துடுப்பாட்டத்தில் இரு அணிகளும் அடிகாரர்கள். இதுவரை மே.இ 66 ஆறுகளும் இந்தியா 63 ஆறுகளும் அடித்திருக்கிறார்கள். பந்து வீச்சு தான் இந்தியாவை வெல்ல வைக்க வேண்டும்.
  25. அதுவும் முஸிலீம்களின் ரமழான் மாதத்தில் விழுந்திருக்கு ...😍🤩🤪
  26. நாளை தென்னாபிரிக்கா வெல்லும் என கணித்த 5 பேரும் கிரிகெட் மேதைகள் என்பதை நாளைய போட்டி முடிவு உறுதி செய்யுமா 😂. நாளை இந்தியா வென்றால் எனக்கு இங்கும், பின் அரையிறுதி கணிப்பிலும் புள்ளிகள் வரும். ஆனால் இந்தியா தோற்க வேண்டும் என விரும்புகிறேன். இந்தியா தோற்பதற்கான தியாகமா என் புள்ளிகள் போகட்டும் 😂.
  27. பெற்றோல் தட்டுப்பாட்டால்... மிகவும் சிரமப் பட்ட மக்கள், யாழ்ப்பாணத்தில் தான் உள்ளார்கள். 🙂
  28. இளைய தளபதி விஜய் தனது குடும்ப பிரச்சனைகளை சுமுகமாக தீர்த்துவைப்பார் என எதிர்பார்ப்போம். தனுஷ், ஏ ஆர் ரஹ்மான், ஜெயம் ரவி, இமாம் என ஒரு படையே ஒரே விதமான சிக்கலுக்குள் மாட்டியுள்ளது போல் தெரிகின்றதே. இவர்களின் வயதும் கிட்டத்தட்ட ஒரே அளவுதான்.
  29. முன்னாள் புலனாய்வு பணிப்பாளர் பயங்கரவாதி எனும் அளவில் இலங்கை நிலமை போகிது. இப்பத்தைய போலிஸ் மா அதிபரை நம்பி தகவல்களை அனுப்பலாமோ?
  30. கண் தப்பு கனநாளாய் கதிரையை ஆக்கிரமித்து உள்ளார். சுத்தி நிக்கிற ஆட்கள் ஆட்டுறது காணாது.
  31. சர்வதேச தாய்மொழி தினம்! Feb 21, 2026 - 05:11 PM சர்வதேச தாய்மொழி தினத்தினத்தினை முன்னிட்டு அனைத்து இன மக்களும் கலந்துகொண்ட உணவு கண்காட்சியொன்று இன்று (21) மட்டக்களப்பில் நடாத்தப்பட்டது. உணவின் மொழி வழியாக உள்ளூர் உணவுகளின் மடைபரவல் என்னும் தொனிப்பொருளில் இந்த உணவு திருவிழா மட்டக்களப்பு அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் நடைபெற்றது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் கைத்தொழில் மற்றும் சமூக இணைப்பு மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் மட்டக்களப்பில் வாழும் அனைத்து இன மக்களின் பாரம்பரிய உணவுகளைக்கொண்டதாக இந்த கண்காட்சி அமைந்திருந்தது. பேராசிரியர் சி.ஜெய்சங்கரின் ஒழுங்கமைப்பிலும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் வைத்தியர் அருளானந்தம் தலைமையிலும் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ப.பிரதீபன் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர். மூத்தோர்களின் நினைவுகளிலிருந்தும் அவர்களின் அனுபவங்களிலிருந்தும் கைவிட்டுப்போன, அருந்தலாகிப்போன, மறைக்கப்பட்ட எமது முன்னோர்களின் உருவாக்கங்களான ஊட்டமான உணவுகளின் சுவையினை எமதாக்கிக்கொள்ளும் சுகநலவாழ்விற்கான பயணம் என்னும் வகையில் இந்த கண்காட்சி ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இதன்போது வேடுவசமூகத்தின் உணவுகள், இஸ்லாமிய மக்களின் உணவுகள், இந்து சமூகத்தின் உணவுகள், பறங்கிய சமூகத்தின் உணவுகள், சிங்கள சமூகத்தின் உணவுகள் என மட்டக்களப்பில் வசிக்கும் அனைத்து இனமக்களினதும் பண்டைய உணவுகள் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பெருமளவான பொதுமக்களும் மாணவர்களும் இந்த கண்காட்சிகளை பார்வையிட்டதுடன் உணவினையும் சுவைத்துச்சென்றதை காணமுடிந்தது. https://adaderanatamil.lk/top-picture/cmlw8zn730002356pkkkzkz52
  32. மணப்பெண் ஓரிடம் மாப்பிள்ளை ஓரிடம் என இப்பொழுது கலியாணமே இப்படி நடக்கும்போது கருமாதி மட்டும் விதிவிலக்கா என்ன, அதுவும் தன் பாட்டுக்கு நடந்துட்டு போகுது . .......போகட்டும் ........!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.