யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Leaderboard

 1. நிலாமதி

  நிலாமதி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   9,049


 2. Nathamuni

  Nathamuni

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   4

  • Content Count

   6,988


 3. Kavi arunasalam

  Kavi arunasalam

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   4

  • Content Count

   406


 4. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   3

  • Content Count

   27,068Popular Content

Showing content with the highest reputation on 10/20/2018 in all areas

 1. 3 points
  சட்டியும் முட்டியும் எப்போதும் உங்களுக்கு பிடித்தவைதானே
 2. 2 points
  சவூதி தூதுவரலாயத்தினுள் நுழைந்த சில நிமிடங்களிலேயே கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் ஜமால் கடந்த 2 ஆம் திகதி, துருக்கியின் தலைநகர் இஸ்த்தான்புல்லில் அமைந்துள்ள சவூதி தூதுவராலயத்திற்கு தனது திருமணத்திற்கான ஆவணங்களைப் பெறும் பொருட்டு, அமெரிக்காவில் வதிபவரும், வோஷிங்க்டன் போஸ்ட்டில் பத்தி எழுத்தாளரும், சவூதியின் இளவரசர் சல்மானின் கடும்போக்கிற்கெதிராக குரல் கொடுத்துவருபவருமான ஜமால் கஷோகி அவர்கள் சென்றுள்ளார். கடந்த சில வருடங்களாக, சவூதியின் முடிக்குரிய இளவரசர் சல்மான், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் செய்துவரும் கடும்போக்கு நடவடிக்கைகள் பற்றியும், மனிதவுரிமை மீறல்கள் பற்றியும் ஜமால் கஷோகி அவர்கள் பகிரங்கமாகக் கருத்துக் கூறி வந்த நிலையில், அவரைக் கொல்வதற்கு இளவரசரும் அவரது கொலைக்குழுவும் தயாராகி வந்ததாக தற்போது கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. இந்தவகையில், கடந்த 2 ஆம் திகதி ஜமால் அவர்கள் இஸ்த்தான்புல்லில் அமைந்துள்ள சவூதித் தூதரகத்திற்கு வரப்போகிறார் என்கிற செய்தி கிடைத்தவுடன், இவரைக் கொன்று, தடயங்களை அழிக்கும் நோக்குடன் ஒரு கொலைக்குழுவை சவூதி இளவரசர் அங்கு அனுப்பி வைத்திருக்கிறார். இக்கொலைக்குழுவில், தடய நிபுணர்கள், வைத்தியர்கள், இளவரசரின் நெருங்கிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என்று பலர் அடங்கியிருக்கின்றனர். சம்பவம் நடந்த அன்று காலையே துருக்கியில் தங்களது பிரத்தியே விமானத்தில் வந்திறங்கிய இக்குழு, சுமார் 2 மணித்தியாலங்களில் தமது பணியை முடித்துவிட்டு, அவசர அவசரமாக மீண்டும் விமானம் ஏறியுள்ளனர். ஜமால் அவர்கள் தூதரகத்திற்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே கடுமையாகத் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார். அவரை சித்திரவதை செய்தவர்கள், அவரது விரல்களை ஒவ்வொன்றாக வெட்டியெடுத்துத்துள்ளனர். அவர் வலி தாங்காமல் அலறத் தொடங்கவே, அங்கு வைத்தியராக இருந்தவர், தனது சகாக்களுக்கு பாடல்களை சத்தமாக ஒலிக்கச் சொல்ல்விட்டு, ஜமால் உடலில் இரசாயணம் ஒன்றைச் செலுத்தியிருக்கிறார். ரசாயனம் செலுத்தப்பட்ட ஜமால் அவர்களின் ஓலம் அடங்கிக்கொண்டிருக்க, அவர் உயிருடன் இருக்கும்பொழுதே அவரது தலை துண்டிக்கப்பட்டிருக்கிறது. அதன்பின்னர், அவரது அவயங்கள் ஒவ்வொன்றாக அறுத்தெடுக்கப்பட்டு, தடயங்கள் இல்லாதவாறு அப்புறப்படுத்தப்பட்டு, சுமார் இரு மணித்தியாலங்களுக்குள் கொலைக்குழு தனது பணியை முடித்துக்கொண்டு விமானம் ஏறியிருக்கிறது. இது எதுவுமே தெரியாமல், தூதரகத்திற்கு வெளியே காத்திருந்த அவரது காதலி, ஜமால் அவர்களை நெடுநேரம் காணாததால், துருக்கி பொலிஸாருக்கு முறையிட்டிருக்கிறார். ஆரம்பத்தில் அசட்டையாக இருந்த பொலிஸார், மெதுவாக விடயத்தை பத்திரிகைக்காரருக்கு கசிய விட்டிருக்கின்றனர். பத்திரிக்கையாளர்கள் விடயத்தை ஊதிப் பெருப்பிக்கும்பொழுது, ஒரு வாரம் ஓடிவிட்டது. ஆரம்பத்தில் கஷோகி அவர்கள் தூதரகத்திலிருந்து திரும்பிச் சென்றுவிட்டார் என்று சப்பைக் கட்டு கட்டிய சவூதி அரசு, வெளிநாட்டு அழுத்தங்களுக்குப் பணிந்து, தாம் விசாரிப்பதாகக் கூறியது. அதேவேளை, தூதரகத்திற்குள் துருக்கிய பொலிஸாரும், தடயவியல் நிபுணர்களும் செல்லவும் அனுமதித்தது. துருக்கிய ஊடகங்களுக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, ஜமால் கஷோகி அவர்களின் சித்திரவதையும், கொலையும் ஒலி, ஒளி வடிவில் கிடைத்திருக்கின்றன. ஆரம்பத்தில் சுவூதியை மிரட்டிய ட்ரம்ப், பின்னர் சவூதியின் அதட்டலுக்கு அடிபணிந்து போய்விட்டார். இப்போது ஆதாரங்கள் இருப்பது வெளித்தெரிய ஆரம்பித்திருப்பது, கொடுங்கோல் இளவரசரின் முகத்திரையைக் கிழித்திருக்கிறது.
 3. 2 points
  அர்ஜுன் தனது முதுகைத் தடவினார் என்று சுருதி என்னும் நடிகை இன்று சொல்ல, அவரோ வழக்கு போடுவதாக சொல்லி உள்ளார். வைரமுத்து அநேகமாக நீதிமன்றம் போக தயாராகின்றார் என்றே தோன்றுகின்றது. ஆதாரத்துக்கு பாஸ்ப்போர்ட்டினை தேடும் சின்மயி மிகவும் வருந்த நேரிடும். பாண்டே: இன்னும் கோட்டுக்கு போகலையே ... சின்மயி: கோர்ட் லீவு... அதுதான் ...
 4. 2 points
  என்னதான் சொன்னாலும் வைரமுத்து வைரமுத்துத்தான் - சிங்களத்து சின்னக் குயிலே அதுசரி, இந்தப் பெண்ணை குமாரசாமியார் ஏன் தெரிவு செய்தார்....? கித்துளைப் பார்த்தா...?? தொப்புளைப் பார்த்தா...???
 5. 2 points
 6. 2 points
 7. 1 point
  அது ஒரு பின்னிரவு. எங்கள் அறையில் என் மனைவியின் செல்போன் மணி அடித்துக் கொண்டே இருந்தது. போனை எடுத்துப் பேசாமல் அவர் தவிர்த்துக்கொண்டே இருந்தார். எங்கள் மகள் தூங்கிக்கொண்டிருந்தாள். போனை எடுத்துப் பேசும்படி பலமுறை கூறியும் மனைவி அதைத் தவிர்த்துவிட்டார். மீண்டும் போன் மணியடித்தது. எனவே நானே கையில் எடுத்துப்பேசப் போனேன். திடுக்கிட்ட என் மனைவி, திடு திடுவென குளியலறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டார். நான் கதவைத் தட்டினேன். அவர் திறக்கவில்லை. பயந்துபோன நான் கதவை மோதித் திறந்தேன். அங்கே அவர் வேறொரு போனில் மெசேஜ் டைப் செய்து அனுப்பிக் கொண்டிருந்தார். அதைப் பிடுங்கிப் பார்த்தபோது, "எனக்கு போன் செய்யவேண்டாம். என் போன் என் அண்ணனிடம் இருக்கிறது" என்ற குறுந்தகவல் திரும்பத் திரும்ப அழைத்துக்கொண்டிருந்த அந்த நபருக்கு சென்றிருந்தது. நான் அதிர்ந்துபோனேன். ஆனால், நான் வாய் திறக்கவில்லை. நான் ஏதாவது பேசப் போய் அவள் மீண்டும் தாழிட்டுக்கொண்டாலோ, வேறு ஏதாவது செய்துகொண்டாலோ என்ன செய்வது என்று சும்மா இருந்துவிட்டேன். மறுநாள் காலை என்னுடைய இரண்டு நண்பர்கள் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களில் ஒருவர் என்னுடைய அண்ணன் போன்றவர். முன்பே எங்களுக்குள் சண்டை வந்து பிரிந்திருந்தபோது பேசி எங்களை மீண்டும் சேர்த்து வைத்தவர். என்னோடு நல்லவிதமாக சேர்ந்து வாழும்படியும், சிறிது நாள் சென்றால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் என் மனைவியிடம் இருவரும் பேசினர். ஆனால், இந்த முறை என் மனைவி பிடிவாதமாக இருந்தார். "இந்த" வாழ்க்கையை இனி வாழ முடியாது என்று சொல்லிவிட்டார். ஆனால் முன்பு போல அல்லாமல், இந்த முறை எங்கள் மூன்று வயது மகளை என்னிடமே விட்டுவிட்டுச் சென்றார். பிறகு விவாகரத்து விண்ணப்பித்து விவாகரத்தும் பெற்றார். நீதிமன்றத்தில்கூட "குழந்தையை அவரது தந்தை நன்கு கவனித்துக் கொள்வார். எனவே அவரிடமே அவள் இருக்கட்டும்," என்று நீதிபதி முன்பு கூறினார். என் மனம் உடைந்துபோனது. ஆனால், ஒரே மகிழ்ச்சி எங்கள் மகள் என்னோடு. எங்களுடையது காதல் திருமணம். கல்லூரியில் ஒன்றாகப் படித்துக் கொண்டிருந்தபோது காதலித்தோம். அலை பாயுதே படத்தில் வருவதைப் போல, யாருக்கும் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்துகொண்டு அமைதியாக இருந்தோம். கடைசியாக இருவரின் வீட்டிலும் சொன்னபோது பூகம்பம் வெடித்தது. ஏராளமான பிரச்சனைகள். கடைசியாக இரு வீட்டிலும் ஒப்புக்கொண்டு அவர்கள் முறைப்படி கோயிலில் திருமணம் செய்துவைத்தனர். சிறிது காலம் என் பெற்றோருடன் சொந்த வீட்டில் வாழ்ந்தோம். எனக்கும் அப்பாவுக்கும் சிறிது கருத்து வேறுபாடு ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியே வந்து தனியாக வாடகை வீட்டில் நானும் மனைவியும் மட்டும் வாழ்ந்தோம். சொந்தமாக வீடுகட்டிய பிறகே குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றார் என் மனைவி. திருமணத்துக்குப் பின் மனைவி ஐ.டி. துறையில் பட்டமேற்படிப்பு படித்திருந்தார். எனவே நாங்கள் இருவரும் சென்னையில் குடியேறவேண்டும் என்று வற்புறுத்தினார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. வேண்டாம் என்றேன். இதனால் கோபித்துக்கொண்டு அம்மாவீட்டுக்குச் சென்று சிறிதுகாலம் இருந்தார். பிறகு பிரச்சனையை பேசித் தீர்த்தோம். அவர் மீண்டும் வீட்டுக்கு வந்தார். குழந்தை இல்லாததால் எங்களுக்குள் பிரச்சனை வருவதாக நினைத்தோம். எனவே குழந்தை பெற்றுக்கொண்டோம். குழந்தை பிறந்து மூன்று மாதமானபோது, என் மனைவிக்கு சென்னைக்கு குடி பெயரவேண்டும் என்ற ஆசை மீண்டும் வந்தது. அதையே வலியுறுத்தினார். நான் மறுத்தேன். இந்த முறை அவர் தனியாக குழந்தையை தூக்கிக்கொண்டு சென்னை சென்றுவிட்டார். நான் பார்க்கச் சென்றதையும் அவர் விரும்பவில்லை. தம் விருப்பதை மீறி பார்க்க வருவதாக போலீசில் புகார் கொடுத்தார். நானும் அவரோடு சென்னைக்கு வரவில்லை என்று கோபம் என நினைத்தேன். பார்க்கப் போவதையும் தவிர்த்தேன். மனைவிக்கு சென்னையில் அவர் நினைத்ததைப் போல வேலை கிடைக்கவில்லை. திரும்பி ஊருக்கு வந்தும் தனியாகவே இருந்தார். ஒரு கம்ப்யூட்டர் சென்டர் வைத்திருந்தார். குழந்தை ஊரிலேயே ஒரு பள்ளியில் படித்தாள். ஆனால், குழந்தையை பார்க்கப் போவது, மனைவியை கோப்படுத்தி மீண்டும் ஒன்று சேரும் வாய்ப்பை கெடுத்துவிடும் என்று பயந்து நான் குழந்தையைக்கூட போய் பார்க்கவில்லை. இப்படி ஒன்றரை ஆண்டுகள் பிரிந்திருந்தோம். இந்நிலையில், அண்ணனைப் போன்ற என் நண்பர் மனைவியிடம் தூது சென்று எங்களை சேர்த்துவைத்தார். மீண்டும் வாழ்க்கை நன்றாகப் போவதாகவே தெரிந்தது. அப்போது என் மனைவிக்கு வேறொரு ஆணிடம் இருந்து அழைப்பு வந்தது. என்ன என்று விசாரித்தேன். பிரிந்திருந்த காலத்தில் அவரது அறிமுகம் ஏற்பட்டது என்றும். சட்டென துண்டித்தால் பிரச்சனை ஆகும் எனவே, மெதுவாக துண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஒரு மாலைப் பொழுதில் கடற்கரை மணலில் அமர்ந்தபடி பேசினோம். "கடந்த காலத்தில் எது நடந்திருந்தாலும் பரவாயில்லை. பிரிந்திருந்த காலத்தில் ஏற்பட்ட சம்பவங்களால் எந்த பிரச்சனை என்றாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். நீ அதைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். அத்தொடர்பை துண்டி" என்று சொன்னேன். அவர் ஏற்றுக் கொண்டார். ஆனால், அதன் பிறகும் ஒரு நாள் அதே நபரிடம் இருந்து அழைப்பு வந்தது. ஆத்திரத்தில் நான் மனைவியின் போனை பறித்து வீசி உடைத்துவிட்டேன். அதன் பிறகும், இரவில் போன் வந்துகொண்டே இருந்தது. அவரையே பல முறை பேசச் சொன்னேன். பேசாததால் நான் எடுத்து பேசப்போனேன். பிறகு என்னென்னவோ நடந்துவிட்டது. இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. அவர் பிரிந்து சென்று விவாகரத்து பெற்று வேறொருவரை திருமணமும் செய்துகொண்டார். நாங்கள் பிரிந்திருந்த காலத்தில் மீண்டும் மனைவியுடனும், குழந்தையுடனும் சேர்ந்து வாழவேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போது அதில் ஒன்று மட்டும் நடந்துவிட்டது. குழந்தையோடு மட்டும் வாழ்கிறேன். மற்றொன்று நடக்கவில்லை. மனைவி திரும்ப வந்து சேரவில்லை. எங்கள் வீட்டில் நான், அப்பா, அம்மா, தங்கை, தங்கையின் கணவர் என்று அனைவரும் மகளைப் பார்த்துக் கொள்கிறோம். விவாகரத்து பெற்ற காலத்தில் நான் மிகவும் உடைந்து போயிருந்தேன். அதில் இருந்து மீண்டு வர அதிக காலம் பிடித்தது. அந்தக் காலத்தில் என் மகள்தான் எனக்கு ஆறுதல் தந்து தேற்றினாள். பிறகு எனக்கு ஒரு பெரிய விபத்து ஏற்பட்டு, உயிர் தப்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். அப்போதும் அருகில் இருந்து பார்த்துக்கொண்டது என் மகள்தான். அம்மாவுக்கு சர்க்கரை நோய். எப்போதும் அவருக்கு மாத்திரை எடுத்துத் தருவதும், இன்சுலின் ஊசி போடுவதும் 13 வயதான என் மகள்தான். அவளுக்கு நான் ஆறுதலாக இருப்பதை விட எங்களுக்கு அவள் ஆறுதலாக இருப்பதுதான் அதிகம். யாராவது என்னை விமர்சித்தாலும் எனக்காக பரிந்து பேசுவது மகள்தான். என்னை மனைவி விட்டுப் பிரிந்த நாளில் இருந்து ஒரு முறைகூட அம்மாவை அவள் கேட்டதும் இல்லை. அது பற்றிப் பேசியதும் இல்லை. சிறு வயதில் இருந்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு செல்வது பாப்பாவுக்கு பிடிக்கும். எனவே அது போன்ற இடங்களுக்கு நிறைய அழைத்துச் சென்று விளக்குவேன். அது போன்ற பயணங்களின்போது யாராவது அவளிடம் அவள் தாயைப் பற்றி கேட்டால், அமைதியாக இருப்பாள். ஒன்று கேட்டவர் அந்தக் கேள்வியைக் கடந்து செல்லவேண்டும். அல்லது நான் தலையிட்டு சமாளிக்கவேண்டும். அம்மாவைப் பற்றி அவள் ஏதும் சொல்லாவிட்டாலும், அந்த மௌனம் புரிந்துகொள்ள முடியாததுதான். என் மனைவி உடன் இருந்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். என்னை மீண்டும் திருமணம் செய்துகொள்ளும்படி சொல்கிறார்கள். எங்களுடையது காதல் திருமணம் என்பதால், பிரிவு, விவாகரத்து இதையெல்லாம் கடந்துவர எனக்கு நீண்டகாலம் பிடித்தது. இப்போது என் மகளுக்கு 13 வயது. அவள் என்னோடு தனியாக அடிக்கடி பயணிப்பது எங்கள் பெற்றோருக்கு சங்கடமாக இருக்கிறது. அப்படி பயணிக்கும்போது அவள் பூப்பெய்திவிட்டால், என்னால் சமாளிக்க முடியாது என்று நினைக்கிறார்கள். அவளுக்கு கல்பனா சாவ்லா போல ஒரு விண்வெளி வீரராக வேண்டும் என்று ஆசை. நன்றாகவும் படிக்கறாள். நான் மீண்டும் திருமணம் செய்துகொண்டால் இப்போதுபோல என் மகளோடு அதிக நேரம் செலவிட முடியாது என்று அச்சம் எனக்கு. மீண்டும் திருமணம் செய்வது என்று நான் முடிவெடுத்தால் அதற்கு பாப்பா தடை சொல்லப்போவதில்லை. அது தவிர, இரண்டாவது திருமணம் செய்வதில் பொதுவாக முதல் திருமணத்தின் ஆண் குழந்தைகள்தான் பெரிய பிரச்சனையாக இருப்பார்கள். பெண் குழந்தைகளால் பெரிய பிரச்சனைகள் இருக்காது. ஆனால், வேறொரு பெண் என் வாழ்க்கையில் வந்தால் பிரச்சனை வரலாம். தவறான புரிதல் வரலாம். வருகிற பெண் சரியாகவே மகளைக் கண்டித்தாலும், எனக்கு அது வேறுவிதமாக தோன்றலாம். அதனால், மீண்டும் கணவன் மனைவி பிரச்சனை வரலாம். அது போன்று இன்னுமொரு பிரச்சனையை சந்திக்க நான் தயாரில்லை. அதனால்தான் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருக்க முடிவெடுத்தேன். இப்போது என் வாழ்க்கையின் மையப்புள்ளி என் செல்ல மகள் மட்டுமே. (வட தமிழ்நாட்டில் வசிக்கும் ஒரு நடுத்தர வயது ஆணுடன் நிகழ்த்திய உரையாடலின் அடிப்படையில் இதை எழுதியவர் பிபிசி தமிழ் செய்தியாளர் அ.தா.பாலசுப்ரமணியன். ஆண்கள் சந்திக்கும் பிரத்தியேக சிக்கல்கள் தொடர்பான இந்த #HisChoice சிறப்புத் தொடரைத் தயாரிப்பவர் பிபிசி செய்தியாளர் சுசீலா சிங்.) https://www.bbc.com/tamil/india-45849592
 8. 1 point
  அறுபதின் ஆரம்பம் சினிமாவையும், நாடகத்தையும் தங்களது பிரதான அரசியல் ஆயுதமாக திமுக பயன்படுத்திக் கொண்டிருந்த காலம். அப்பொழுது அறிஞர் அண்ணாவின் மேடை நாடகங்களில் நடிகை பானுமதி நடித்துக் கொண்டிருந்தார் . “உங்கள் நாடகங்களில் அதிகமாக பானுமதியே நடித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா?” என்று ஒரு நிருபர் கேள்வி கேட்க, அண்ணாவின் பதில் இப்படி இருந்தது. “பானுமதியும் படிதாண்டா பத்தினி இல்லை. நானும் முற்றும் துறந்த முனிவன் இல்லை " அண்ணாவின் இந்தப் பதிலால் அன்று பானுமதி என்னென்ன சிக்கல்களையும் வேதனைகளையும் அனுபவித்தார் என்பது பற்றிய சிந்தனை அன்றைய ஆணுலகத்துக்கு தேவையில்லாதது. கண்ணதாசன் தனது அனுபவங்களை மட்டுமல்ல, தனது தேவைகள், அரசியல் எல்லாவற்றையும் சாமர்த்தியமாக சினிமாப் பாடல்களில் எழுதி விடுவார். அவரிடம் ஒளிவு மறைவு இருக்கவில்லை. இரத்தத்திலகம் திரைப்படத்தில் தனது தன்மையை பாடலாக எழுதியிருந்தார். கே. வி. மகாதேவன் இசையில் ரி. எம். சௌந்தரராஜன் பாட, படத்தில் அந்தப் பாடற்காட்சியில் அவரே நடித்தும் இருந்தார். ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு இசை பாடலிலே என் உயிர் துடிப்பு நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு காவியத் தாயின் இளைய மகன் காதல் பெண்களின் பெருந்தலைவன் கவியரசக்கு இருந்த துணிவு கவிப்பேரரசுக்கு இல்லை
 9. 1 point
 10. 1 point
  சின்னச் சின்ன தீவுகள் போல் திட்டுத் திட்டாக அவனது கைகளில் அங்கங்கே வீக்கங்கள் தெரிந்தன. எனது பார்வையின் கேள்வியை கணேசன் புரிந்து கொண்டான் “கிட்னி பெயிலியர் மச்சசான். மூன்று நாளுக்கு ஒருக்கால் டயாலிசிஸ் செய்ய வேண்டி இருக்குது. அதனாலை வந்த வீர வடுக்கள்” நீண்ட நாட்களுக்கும் பிறகு.... இல்லை நீண்ட வருடங்களுக்குப் பிறகு என்பதுதான் சரியாக இருக்கும் அவனை அப்படிப் பார்த்ததில் மனது சிரமப்பட்டது. எனது சங்கடம் அவனுக்கு விளங்கி இருக்கும். “கிட்னி மாத்திறதுக்கு ஏற்கனவே கனக்க யேர்மன்காரங்கள் காதிருக்கிறாங்கள். எங்கள் தரவளிக்கு இஞ்சை கிடைக்க வாய்ப்பேயில்லை. ஊரிலை பாக்கலாமெண்டால் காசு தந்திட்டு பெட்டியைக் கட்டிக் கொண்டு போ கிட்னி சட்னி எல்லாம் கிடைக்காது எண்ட மாதிரித்தான் பேச்சு இருந்தது” கதைத்துக் கொண்டு இருக்கும் போதே அவசரப்பட்டான். “நேரம் போகுது மச்சான். டயாலிசிஸ்க்கு நாலு மணித்தியாலங்கள் தேவை. அதை முடிச்சிட்டுத்தான் வேலைக்குப் போக வேணும். முடிஞ்சால் பிறகு சந்திப்பம்” பதினைந்து வருடங்களுக்கு முன்பு அவனுக்கு குழந்தை பிறந்திருந்த போது பரிசுகள் வாங்கிக் கொண்டு எனது குடும்பத்தோடு பார்க்கப் போயிருந்தேன். நாங்கள் வருவதை அவனுக்கு அறிவித்திருந்தாலும் ஏனோதானோ என்றுதான் வரவேற்றான். பொதுவாக கணேசன் தன்னுடைய வீட்டுக்கு யாரையும் அழைப்பதில்லை. “வாற போற ஆக்களுக்கு தேவையில்லாமல் சமைச்சுப் போட்டு காசை ஏன் கரியாக்க வேணும்” என்ற பரந்த உள்ளம் அவனுக்கு இருந்தது. மதியம் சாப்பாடு தந்தான்.. சாப்பிட்டுவிட்டு கை கழுவும் போதுதான் பார்த்தேன் குழாயில் இருந்து தண்ணீர் சிந்திக் கொண்டிருந்தது. ஒவ்வொரு துளியாக சிந்தும் நீரெல்லாம் ஒரு பிளாஸ்ரிக் பாத்திரத்தில் ஒன்றாகி ஐக்கியமாகிக் கொண்டிருந்தன “கணேசா பாத்ரூமுக்குள்ளை தண்ணி சிந்துது. கவனிக்கேல்லையோ?” “அது நானாத்தான் சிந்த விட்டனான். இப்பிடி துளித் துளியா சிந்தினால் மீற்றர் ஓடாது. இதை வைச்சுத்தான் எங்கடை தண்ணித் தேவைகளை முடிக்கிறனாங்கள்” சூரிய வெளிச்சமே வராத நிலத்தடி வீடு. குறைந்த வாடகை . துளித் துளியாக தண்ணீர் சேகரிப்பு. இப்படி இன்னும் எத்தனை வழிகள் இருந்தனவோ அத்தனை வழிகளிலும் கணேசன் காசை மிச்சம் பிடித்தான் “என்ன பாக்கிறாய்? ஊரிலை தென்னந்தோப்போடை காணி வாங்கி இங்கத்தைய ஸ்ரைலிலை வீடு ஒண்டு கட்டுறன். காசு வேணுமெல்லே” “வீடு கட்டுறதுக்கு யாரை பொறுப்பா விட்டிருக்கிறாய்? “மனுசியின்ரை தமையன் அங்கை இருக்கிறார். ஆள் பார்த்துக் கொள்ளும்_” இன்று கணேசனை பார்த்த பிறகு, நாள் முழுதும் அவன் நினைவுதான். கூடவே அந்தக் காணியும், தென்னந்தோப்பும், வீடும் இனி என்னவாகும் என்ற கேள்வியும் ஏனோ வந்தது. கவி அருணாசலம்
 11. 1 point
 12. 1 point
 13. 1 point
  போராட்ட காலத்தில் சில நிகழ்வுகள் போராட்டத்தின் போக்கை மாற்றியிருக்கும் என்ற கருத்துண்டு அவற்றில் சில பூநகரி முகாம் கைப்பற்றப்பட்டிருந்தால் , ஆனையிறவு கைப்பற்றப் பட்டிருந்தால், ஆனையிறவுக்கு உதவிக்கு வந்த படைகளை கப்பலில் இருந்து இறங்க முன்ன தாக்கியிருந்தால் என்று பல நிகழ்வுகள் இருக்கின்றது. அவற்றுக்கு ஒத்ததே அன்ரனியும், இவரே கருணா இடத்தில் இருக்கவேண்டியவர் மட்டுமல்லாமல் இவரே கிழக்கு முழுவதுக்குமான தளபதியாக இருக்க வேண்டியவர். இருந்திருந்தால் போரட்ட காலத்தில் போராட்டத்தின் போக்கு மாறியிருக்கும். வடக்கில் பால்ராஜ் கிழக்கில் அன்ரனி இருவரும் போராளிகளின் அதிக உயிரிழப்பால் ஏற்படும் தாக்குதல் வெற்றி எதிர்காலத் தோல்வி என்று கருதியவர்கள். உயிரழப்பை தவிர்ப்பதற்காய் பல தாக்குதல்களை தவிர்த்தவர்கள் . இதனால் பல பின்னடைவுகளையும் வெற்றிகளையும் சந்தித்தார்கள். போராளிகளின் அதிக அன்பையும் மதிப்பையும் சம்பாதித்தவர்கள். வீரவணக்கம்..
 14. 1 point
 15. 1 point
  செல்லம் அடைக்கலநாதன் அவர்களின் வீட்டின் படத்தையும் பக்கத்தில் போட்டிருந்தால் வீட்டைப்பற்றி அறியமுடிந்திருக்கும்
 16. 1 point
  பெண்களை இழிவுபடுத்துவது தான் 'புனித' நூலா??? சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று 'உச்ச நீதிமன்றம்' தீர்ப்பு சொன்ன பிறகு பல பெண்கள் சபரிமலைக்கு சென்றுக் கொண்டருக்கின்றனர். ஆனால், பார்ப்பனிய பயங்கரவாதிகளான ஆர்.எஸ்.எஸ் - பாஜகவினர் பத்தர்கள் போர்வையில் போராட்டம் என்ற பெயரில் திட்டமிட்டு கலவரத்தை நடத்திவருகிறார்கள். கடந்த காலங்களில் பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு சென்றதற்கான ஆதாரங்கள் இருந்தும் 'ஹிந்து மரபை' மீறக்கூடாது என அதற்கு பல 'விஞ்ஞான' விளக்கங்களை அளித்து வருகிறார்கள் 'படித்த பார்ப்பன அறிவாளிகள்' அவர்கள் ஏன் பெண்களை அனுமதிக்க மறுக்கிறார்கள்? அந்த உண்மையை நாம் தான் சொல்ல வேண்டும்... 'ஹிந்துக்களின் புனித நூல் என போற்றப்படும்' மனுசாஸ்திரம் பெண்களை பற்றி என்ன சொல்கிறது... இந்நூலில் 9வது அத்தியாத்தில் உள்ள சில சுலோகங்கள் மூலம் அதை தெரிந்து கொள்வோம்... 1. பெண்கள் இளமைப் பருவத்தில் தந்தையாலும் பின்பு கணவனாலும், மூப்பில் மைந்தனால் காக்கப்படுபவர்கள். அவர்கள் சுயமாக இயங்கும் தன்மை உடையவர்கள் அல்லர். (சுலோகம் 3) 2. பெண்கள் கற்புநிலையற்றவர்களாகவும், நிலையாத மனம் உள்ளவர்களாகவும், நட்பின்மை உள்ளவர்களாகவும் இயற்கையாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். (சுலோகம் 15) 3. இந்தச் சுபாவம் பெண்களைப் படைக்கின்ற போதே பிரம்மனால் கொடுக்கப்பட்டிருக்கிறது (சுலோகம் 16) 4. படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகசிந்தனை போன்றவைகள் பெண்களுக்காகவே படைக்கப்பட்டிருக்கிறது (சுலோகம் 17) 5. பெண்களுக்கு என்று மந்திரங்கள் இல்லை. பெண்களுக்கு மனச்சுத்தி கிடையாது. பெண்களின் பாவத்தை போக்குவதற்கான மந்திர உபதேசமும் கிடையாது. பெண்கள் பொய்யைப் போன்று பரிசுத்தம் அற்றவர்கள் (சுலோகம் 18) ஹிந்துக்களின் மற்றுமொரு புனித நூலாக கருதப்படும் பகவத் கீதை பெண்கள் பற்றி என்ன சொல்கிறது? "மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யே அபி ஸ்யு பாப யோனய ஸ்திரியோ வைச்யாஸ்ததா சூத்ராஸ்தே அபி யாந்திபராம் கதிம்" (9ஆவது அத்தியாயம் சுலோகம் 32) அதாவது பெண்களும் சூத்திரர்களும் வைசிகர்களும் பாவ யோனியில் இருந்து பிறந்தவர்கள். தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள பகவத் கீதைகளில் "பாவ யோனி" என்பதை "கீழான பிறப்பு", "இழி பிறப்பு" என்று மொழி பெயர்த்துள்ளார்கள். (ஆங்கிலத்தில் நேரடியாகவே "born out of the womb of sin" என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள்.) "பகவத் பலன தானக்ருதாம் விஸ்தீரணாம் ப்ரம்ம சூத்ர வ்ருத்திம் பூர்வாச்சாரியாஹா சஞ்சிக்ஷபூஹி தன்மதானு சாரேந சூத்ரா அக்ஹதாரீ வ்யாக்யாஸ்யந்தே..." அதாவது மோட்சம் என்பது பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் உண்டு. சூத்திரர்களுக்கோ பெண்களுக்கோ இல்லை. சூத்திரர்களும் பெண்களும் முற்பிறப்பில் செய்த பாவத்தின் பலனாகத்தான் அவர்கள் அவ்வாறு பிறந்திருக்கிறார்கள். அவர்கள் இப்பிறப்பில் புண்ணியம் செய்து அடுத்த பிறப்பில் பார்ப்பனராக பிறந்து பின்பு மோட்சம் அடையலாம். (சுலோகம் 81) பெண்களை இவ்வளவு மோசமாக இழிவுபடுத்தி எழுதி வைத்துள்ள இந்த பார்ப்பனிய பயங்கரவாதிகள் தான் தாங்களும் 'இந்து' என நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவி பெண் பத்தர்களையும் இணைத்து கொண்டு தற்போது கலவரத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
 17. 1 point
  “சிந்தனையள் பிழைச்சால் பிறகு சிக்கல் வரும்” October 20, 2018 சனி முழுக்கு 13 – பொஸிற்றிவ் பொன்னம்பலம்… காலங்கடந்த சிந்தனை எண்டு கனக்கக் கதையாதையுங்கோ.ஒரு மனுசனுக்குச் சிந்தனை எப்பவும் வரலாம். ஆனால் அது ஆரோக்கியமா இருக்க வேணும். உதைத்தான் நான் அடிக்கடி பிறருக்கு சொல்லுறது. நல்ல சிந்தனையை மனசுக்கை வளருங்கோ உடம்பு ஆரோக்கியமா இருக்கும். சிந்தனையள் பிழைச்சால் பிறகு சிக்கல் வரும். கன பேருக்கு அது விளங்குதில்லை. சொல்லப்போனால் வில்லங்கம். பிழையா விளங்கிக்கொண்டு சண்டைக்கு வந்திடுதுகள். என்ன செய்யிறது? எங்களைப்போல ஆக்கள் அவைக்கு யாரியா நிக்கேலுமோ? ஒரு கையைாலை வாயைப் பொத்திக் கொண்டு மற்றக் கையாலை பின்பக்கத்தைப் பொத்திக் கொண்டு இருக்கிறம். என்ன? புசத்திறன் எண்டு பாக்கிறியளே! நேற்றைக்கு என்ரை சகலன் வல்லிபுரத்தின்ரை பேத்தி பெடியோடை வந்தவள். கன்னி கழியாமல் பொன்சரிலை சுவிஸுக்குப் போனவள்.இப்ப கையிலை ஒண்டை பிடிச்சுக் கொண்டு வந்திருக்கிறாள். கதைக்குக் கதை மாமா ! மாமா! எண்டு கூப்பிட்டுக் கதைச்சவள். அவள் இன்னும் என்னை மறக்கேல்லை. பெடி கொஞ்சம் குழப்படி. ஆனால் எங்கடையள் மாதிரி இல்லை. “றொனி. றொனி” எண்டு பெடியை அடிக்கடி அவள் கூப்பிட்டாள். “இஞ்சை எத்தினை நல்ல பேர் இருக்க ஏனடி பிள்ளை பெடிக்கு இப்பிடி ஒரு பேரை வைச்சிருக்கிறாய் ? உனக்குத் தெரியுந்தானே இஞ்சை உந்தப் பேரை எதுக்கு வைக்கிறவை எண்டு” – எண்டு கேட்டன். சிரிச்சாள்.சிரிச்சுப்போட்டுச் சொன்னாள் “அங்கிள் இஞ்சை மாதிரி உப்பிடிப் பேரை வைச்சால் அங்கை உள்ள வெள்ளையள் – சிலபேர் தோசை சுடுகிறன் எண்டு றொட்டி சுடுவினம். அது மாதிரி – மாத்தி மாத்தி எழுதுவங்கள். அதாலை சிக்கல் கனக்க. இது றொனி எண்டு பிள்ளையின்ரை பேரை வடிவாப் பிசகாமல் எழுதுவங்கள். கூப்பிடுவங்கள் ஒரு பிரச்சினையும் இல்லை. எங்கடை பேருகள் அங்கை படுகிற பாட்டைப் பாத்தால் சிரிப்பு வரும். எங்கடை அப்பான்ரை பேரை வல்லிபுரம் எண்டு எழுதிறத்துக்கிடையிலை அங்கை உள்ள வெள்ளையள் படுகிறபாட்டைப் பாக்க வேணும். ஒரு நாள் “வாலிபும்” எண்டு ஒருத்தி எழுதிப்போட்டாள். பிறகு அவளுக்கு நான் தமிழ் வகுப்பெடுத்துத் திருத்தப்பட்ட பாடு. என்ன செய்யிறது?பிழைதான். அங்கை உந்தத் தமிழ் பண்பாடு கலாச்சாரம் எல்லாம் பாத்துச் சீவிக்கேலாது. – எண்டு ஒரு பிரசங்கத்தைச் செய்துபோட்டுப் போட்டாள். அது ஒரு வகையிலை உண்மைதான். ஏன் சுவிஸுக்கப் போவான். பண்டு எங்கடை சேனாதிராசாவின்ரை பேர் பட்ட பாடு தெரியுமே? தாய் தேப்பன் உந்தப் பெரிய பேரை வைச்சிட்டு வீட்டிலை அதைச் சுருக்கி அவனை “ராசா” எண்டு கூப்பிட்டினம். ஊரிலை படிக்கேக்கை இடாப்பிலை எல்லாம் ஒழுங்காத்தான் இருந்தது.ஊரிலை வெளிமேலை விளையாடக் கிளையாடப் போனால் பெடியள் அவனைச் “சேனாதி” எண்டினம். பிறகு பேராதெனியாவுக்குப் படிக்கப் போனவன். அங்கை உள்ள சிங்களவங்கள் அவனை “சேன” எண்டு கூப்பிட்டவை. பிறகு கொஞ்ச நாள் போய் இந்தியாவிலை படிச்சவன். அங்கை சேனாதி எண்டதைச் சுருக்கி ”ஆதி” ஆக்கினாங்கள். பிறகு திரிப்பி இஞ்சை வந்து மட்டக்களப்பிலை கொஞ்ச நாள் வேலை செய்யேக்கை “ராஜா” எண்டாங்கள். பிறகு அவன்ரை செத்தவீட்டு நோட்டீசிலைதான் முழுசாப் பேரை அடிச்சதைப் பாத்தனான். ஆனால் அந்த நோட்டீசிலை அடைப்புக்கையும், பேப்பரிலை போட்ட அறிவித்தலிலையும் அவன்ரை எல்லாப் பேரையும் போட வேண்டியதாப் போச்சுது.அப்ப தானே அந்தந்த ஆக்களுக்கு விளங்கும். பேர் வைக்கிறதும் ஒரு கலை. அதுக்கும் எங்கடை பஞ்சாங்கத்திலை எத்தினை சாத்திரம் இருக்கு. ஆனால் பெடிச்சி சொன்ன மாதிரி நீளமான பேரை வைக்கிறதாலை பல சிக்கல் வாறது வழமைதான். ஒருதரும் ஒருநாளும் முழுப்பேரை வைக்கிறேல்லை. என்ன நல்ல பேரை வைச்சாலும் அமத்தி, அடிச்சு நெழிச்சு அந்தப் பேருக்கு ஒரு ரிங்கர் வேலை செய்து சுருக்கித்தான் கூப்பிடுவினம்.இதுக்கை ஒரு வழமை பேரைச் சொல்லாமல் அவை செய்யிற தொழிலை வைச்சு அவையளைக் கூப்பிடுறது. வைத்தியர், பரியாரி, கட்டாடி, வாத்தியார், டாக்குத்தர் … எண்டு அப்பிடிக் கனக்க இருக்கு. எண் சாத்திரத்திலை என்ன சொல்லுறான் எண்டால் வைச்ச பேரை அப்பிடியே கூப்பிட வேணுமாம். அங்கை ஒலிக்குத்தான் முதலிடம். வைச்ச பேரை உடைச்சுக் கூப்பிட்டால் எத்தினை உடைவு வருகுதோ அத்தினை உடைவு அவையின்ரை வாழ்க்கையிலை இருக்குமெண்டு ஒரு எண்சாத்திரத்தைப் பற்றி எழுதேக்கை ஒருதர் எழுதினதை வாசிச்சனான். அப்ப பாருங்கோ எல்லாத்திலையும் ஒரு நுணுக்கம், நுட்பம் இருக்கு எண்டதை விளங்கிக் கொள்ள வேணும். ஒருதருக்குப் பேர் அமையிறதும் ஒரு சிறப்பு. சிலரைப் பாருங்கோ பேருக்கேத்தமாதிரியே அவையின்ரை சீவியம் இருக்கும். இப்பிடிச் சொல்லுறன் எண்டு சிரியாதையுங்கோ ஏறுக்கு மாறா இருக்கிறதும் உண்டு. உவன் எங்கடை சத்தியன் வாய் திறந்தால் உண்மை சொல்லான். தருமன் படு கஞ்சன். தருமம் எண்டால் என்ன எண்டு கேப்பன். லட்சுமி தோஞ்சு குளிக்கிறது குறைவு. வீட்டை போய்ப் பாருங்கோ படு குப்பை. சரஸ்வதிக்கு எழுத வாசிக்கத் தெரியாது. வீரசிங்கம் செத்த சாவட்டை மாதிரி. ஆரேன் வெருட்டினா “ஐயோ. என்ரை ஆச்சி” எண்டு கத்திக் கொண்டு ஓடி ஒழிக்கிறதுதான் அவன்ரை முதல் வேலை. அப்ப எது சரி? எது பிழை? எண்டு எனக்குத் தெரியேல்லை. இதை உங்களிட்டையே விட்டிடுறன். நீங்களே யோசிச்சு ஒரு முடிவெடுங்கோவன். பொஸிற்றிவ் பொன்னம்பலம் http://globaltamilnews.net/2018/99975/
 18. 1 point
  ஆறு பிள்ளை பெத்து அதுகளுக்கு விடியல்காலமை சாப்பாட்டுக்கு பாண் வேண்டவே சொத்தை எழுதி குடுக்கணும் அப்படி சொறிலங்கா விலைவாசி ஒரு பிள்ளை இரண்டு பிள்ளை யோடு நிப்பாட்டுகிரார்கள் இப்போதைய சிங்களவர்கள் அதை பார்த்து பயபுள்ளை அழுவுது. தமிழனை அழிப்பது ஒன்றே உயிர்மூச்சு என்பவர்களுக்கு கிடைத்த பரிசு தமிழர்க்கு எதிரான இனவாதம் தன் பிடரிக்கு சேதம் என்பதை இன்னும் சிங்களம் உணரவில்லை .
 19. 1 point
  எமது இனம் எப்படிப்போனாலும் பிரச்சினை இல்லை என்ற கோணத்தில், அபிவிருத்திகள் மட்டும் நடைபெற வேண்டுமென நினைத்திருந்தால் அதனை எப்போதே செய்திருக்க முடியும்” என சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆளமான கருத்து
 20. 1 point
  நல்ல மனிதர்கள் வரலாற்றில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்வர்!
 21. 1 point
  ஏன் பிராமணீயத்தை வலுவாக எதிர்க்கின்றோம்? ஆரியர்களை விட ஆங்கிலேயர்கள் குறைந்த அயோக்கியர்களே...! 800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள், ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த பிரிட்டிஸாரை எதிர்த்தார்கள்..? 800 ஆண்டுகள் ஆண்ட முகலாய பேரரசுகள், இந்து மனு தர்ம கோட் பாட்டினை எதிர்க்கவே இல்லை. ஆனால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்ம சட்டத்தை படிப்படியாக ஒழித்து கட்டினார்கள். அதுதான் காரணம். இவை நமது வரலாற்றில் நடந்தவை. அவை என்னவென்று பார்ப்போம். பார்ப்பான் எவ்வளவு ஆபத்தானவன் என்பதை உணர்ந்துகொள்வோம். பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும், வைசியன் வியாபார செய்ய உரிமை உண்டு எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த இந்து மனுதர்ம சட்டத்தை பிரிடிஷ்சார்கள் ஏற்றுக் கொள்ளாமல், சட்டம் என்றால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 1773 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு சட்டத்தை எழுத தொடங்கியது. சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்து கொள்ள உரிமை இருந்ததை, 1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்தை வாங்கி கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது. 1804யில் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது. 1813 கொத்தடிமைகள் ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும் (இந்து மனு சட்டம் VII 374, 375), ஒரு பிராமணன் காம இச்சை தீர சூத்திரப் பெண்னைணோடு உறவு கொள்ளலாம். ஆனால் அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்து விட்டால் பிணம் போன்றதேயாகும். (இந்து மனு சட்டம் IX 178) பிராமணன் தப்பு செய்தால் தண்டனையில்லாமல் இருந்த நிலையில் - - -பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை 1817 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது. சூத்தர பெண் திருமணம் முடிந்த அன்றே, பிராமணருக்கு பணிகள் பல செய்ய 7 நாள்கள் கோவிலில் இருக்க வேண்டும். அதை பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் 1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது. பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த இந்து சட்டத்தை 1835 ஆண்டு Lord மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக, சூத்தரனும் கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது. சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டு கொல்ல வேண்டும் என்ற கங்கா தானத்தை 1835-ல் பிரிட்டிஷ் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது. 1835 ஆண்டு சூத்திரர்களும் நாற்காலியில் உட்காருவதற்காண அரசாணை கொண்டுவரப்பட்டது. 1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்து மனு தர்மச் சட்டத்தை முழுமையாக தடை செய்ய உத்திரவு பிறப்பித்தது. மேலே இருப்பது சில பகுதிகள்தான். பார்ப்பான் எவ்வளவு விசமானவன் என்பதை அறிய அவன் கடவுள் பெயரால் வகுத்த மனுதர்ம சாஸ்திர நீதி சட்டத்தை ஒருமுறை படித்துவிடுங்கள். இந்தியாவை மட்டும் பிரிடிஷார்கள் ஆளவில்லை என்றால், சூத்திரர்களுக்கு கல்வி இல்லாமல் போயிருந்தால் "ஜோதிராவ் புலே"வுக்கு கல்வி கிடைத்திருக்காது, இந்தியாவில் கல்வி இயக்கம் நடந்திருக்காது, அண்ணலின் தந்தை இராம்ஜி அவர்களுக்கு கல்வியும் இராணுவ பணியும் கிடைத்திருக்காது, இவையெல்லாம் இல்லாமல் போயிருந்தால் பல அறிவாளிகள் இல்லை. நாமும் பார்ப்பான் வப்பாட்டி மகன்களாக அவனுக்கு சேவகம் செய்துகொண்டிருப்போம்.
 22. 1 point
  ம்ம்ம். அப்பிடியும் இருக்க வாய்ப்புண்டு! இவர் சின்ன வயசுல செய்த கூத்துக்கள் அதுதானே!
 23. 1 point
  தேர்தல் வருது சிங்கம் கர்ஜிக்கும் மற்ற நேரம்களில் சாராயன தவறணை கேட்டு அழுவார் . ஆனால் அவர் சொல்வதிலும் பல உண்மைகள் உள்ளது இலங்கையில் இனவாதத்தை தூண்டியதில் இந்தியாவின் பங்கு பெரியது எப்படி ஜப்பானும் சிங்கபூரும் தொழில் வளர்ச்சியில் எம்மை தாண்டி சென்றார்கள் ? தமிழினை அழிப்பது ஒன்றே சிங்களவனின் இனவதமாகியதில் நாட்டை முன்நேற்றுவது எப்படி என்பதை மறக்க பண்ணியது இவ்வளவு பட்டும் திருந்தாத சிங்களவன்களுக்கு ராஜபக்ச குடும்பம் வரனும் ஆட்சிக்கு .
 24. 1 point
  வெய்யில் வெக்கை காலங்களில் ஒரு பெரிய சட்டிக்குள் குளிர்தண்ணியை ஊற்றி அதற்குள் காலை வைத்துப்பாருங்கள். பிரசர் முதல் பல உபாதைகள் குறையும் இதை நான் அனுபவபூர்வமாக அனுபவித்திருக்கின்றேன். எனது வீட்டிற்கு விருந்தினராக வந்தவர்கள் உண்ட கோப்பைகளை நான் அவர்களை கழுவவிடுவதில்லை. இது ஒரு மரியாதை நிமிர்த்தம். அதற்காக குமாரசாமி இன்னாரின் கோப்பையை கழுவுகின்றான் என்று மற்றவர்கள் நரம்பில்லா நாக்கால் சொன்னால் என்ன செய்ய முடியும்?
 25. 1 point
  மனிசன் நல்லாய்த்தான் பேசுறார்....ஆனால் சிங்களம் கெக்கட்டம் விட்டு சிரிக்கிறதும் அந்தமாதிரி கேக்குது.
 26. 1 point
  பாவம் பரிமளம் இந்தாளை எங்கே மீரூ வில் போடப்போகுது ஒருவேளை கு.சா வின் கருத்துக்கள ரோச்சர் தாங்காம ரதி மீரூ வில் போட வாய்ப்பிருக்கு.. ஆனா அங்கையும் பாருங்கோவன் உந்தாள் எடி தங்கச்சி , தங்கச்சி என்று கூப்பிட்டே மீரூ வில நிக்கவிடாம பண்ணிடுவார்
 27. 1 point
  சாமிகளே, நாங்கள் என்ன வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்றோம்..? யாழ்களமே பக்கங்களை திறக்க மாட்டேன் என்கிறது.. இதில் எப்படி எப்போதவது வருவது..? ஒருவாரமாக தொடர்ந்து இந்தப் பிரச்சினை இருந்ததால், இந்தப் பக்கமே வரவில்லை..! யாழை திறக்க முற்பட்டால் கீழேயுள்ள பிழை செய்திதான் எனக்கு வருகிறது..!
 28. 1 point
  அழைத்து வைரமுதவானால், ஏன் மூன்றாம் நபரை சின்மயி இதற்குள் இழுக்கவேண்டும்? சின்மயி சொல்வதில் இருந்து, சின்மயியைக் வைதமுத்திவிற்காக அழைத்த ஏற்றபட்டாளர், ஓர் மறைமுக அழுத்தத்தை சங்கேத மொழியில் சின்மயியிடம் ஏற்றப்படுத்தி இருக்கிறார். சின்மயின் முறைப்பாட்டின் தொனி முற்றுமுழுதாக வைரமுத்துவை நோக்கியே இருந்தது. ஏற்றபட்டாளரிற்கு, வைரமுத்து தரப்பால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பதையும் ஏற்றுக்கொண்டு இருக்கிறார். ஆனால், சின்மயி சூழ்நிலையை சரியாக சொல்லாததால் (சில அப்பாடகமாகவே பாரிய முரண்பாடு , விசா ஆகியவை), ஏற்றபட்டாளர்சின்மயியிடம் நடந்து கொண்ட விதம் குறித்து, உண்மை அல்லது பொய்களுக்கப்பால், சின்மயி ஏற்றபாடலாரை கூட பிரச்சனையின் மையத்தில் நிறுத்தி விடும் போக்கு காணப்படுகிறது. முக்கியமாக, வைரமுத்து, ஏற்பட்டாளர்கள் ஆகியோருக்கு சின்மயி ஓர் வித நற்சான்று கொடுத்துள்ளார். அதாவது, எல்லோரும் சின்மயின் அனுமதியைப் பெற முயன்று இருக்கிறர்கள். அது கிடைக்கதவிடாது, அவர்கள் சின்மயியை தொடவில்லை. ஆனால், சிமயி சொல்வது முழுவதும் அல்லது ஓர் பகுதியெனும் நடந்ததா என்பதே இப்போதைய பிரச்னை. அதனால், குற்றவியல் நீதி மன்றம் வைரமுத்துவை தண்டிப்பதத்திற்கான வாய்ப்புகள் மிகவும் அரிது. வைரமுத்து அப்பாவி என்று நீதி மன்றம் சொன்னாலும் வியப்பில்லை. எந்த வெளிநாட்டு ஏற்றபட்டாளராவது, இப்படிப்பட்ட பிரச்சனையை ஏட்படுத்தியவரை, அதுவும் சிமயி சொல்லும் பிரச்சனையை மிகவும் சீரியஸ் ஆக எடுக்கும் போலீஸ், மற்றும் நீதி துறை உள்ள நாடுகளில், ஏற்றபாட்டாளர்கள் அழைப்பார்களா? இந்திய மாநில ஏற்றபட்டாளர்கள் கூட தயங்குவார்கள். சின்மயிக்கு, இன்னுமோர் பின்புற தொக்கும் தென்படுகிறது என்பது, சின்மயி சொல்லிய, அன்று அவர் career இல் பிரபலம் ஆகவில்லை, இன்று பிரபலம் ஆகிவிட்டேன் என்பதும், ஆகவே பிரச்னை career ஐ பாதித்தாலும் ஆகக்குறைந்தது சமாளிப்பேன் என்ற தொக்கும் தென்படுகிறது. இவை எல்லாம் சின்மயி சொன்னதில் இருந்து. மற்றப்படி குழுமிய (சாதியம், திராவிடம், ஆரியம்) மற்றும் தனிப்பட்ட நடத்தை வாதங்கலாய் தவிர்த்து.
 29. 1 point
  உலகில்....பலரது ...அடாத செயல்களை நியாயப் படுத்த..ஒரு கடவுள் எப்போதும் தேவைப்படுவார்! சில வேளைகளில் சண்டைகளை நியாயப் படுத்தப் பல கடவுள்களும் தேவைப்படுவதுண்டு! கடவுள்களை...உபயோகித்தே...ஆரியம்....தமிழகத்தை அழித்தது...இன்றும் அழிவு தொடர்கதையாகவே உள்ளது! ராஜ ராஜன் என்ற ஒரு மாபெரும்....ஆழுமையை...அறிவு ஜீவியை....இந்தக் கடவுள்களைக் கொண்டே வசியப்படுத்தினார்கள்! அல்லா...என்ற கடவுளின் பெயரால்....உலகம் முழுவதுமே....அழிவை நோக்கிப் பயணிக்கின்றது! கிறிஸ்துவ மதத்தின் பெயரால் ...காவு கொள்ளப் பட்ட...உயிர்களின் எண்ணளவு....கணக்கிலடங்காதது என்று கூறப் படுகின்றது! அழிக்கப் பட்ட கலாச்சாரங்களுக்கும் ...அளவு கிடையாது! ஒரு மனிதனின்......பழி பாவங்களைச் சுமப்பதற்கும்....ஒரு கடவுள் இருந்தே ஆக வேண்டும்! திருப்பதி உண்டியலில்....எவ்வளவுக்குப் பணம் சேருகின்றதோ...அவ்வளவுக்குப் பாவங்களை அவர் சுமக்கிறார்! இலங்கையில்...நம்ம நல்லூர் முருகனும்....இந்த விசயத்தில் அவ்வளவு குறைந்தவரல்ல! பாலாழி மீனாளும்...பான்மைத்து...அருளுயிர்கள்..., மாலாழி ஆழும் அறிந்து....! தாயுமானவ சுவாமிகள்.
 30. 1 point
  கனம்.....கோட்டார் அவர்களே.....பிளீஸ் ...நோட் திஸ் போயின்ட்...! எனது கட்சிக் காரர் கூறுவதற்குள்....நிறைய உண்மைகள் பொதிந்திருக்கின்றன!
 31. 1 point
  ஓமோம்......உந்த சினிமாக்காரங்கள் வரக்குமுதல் சிலோனிலை ஒரு பூச்சி புளுக்கூட சாகேல்லை கண்டியளோ..... ஏன் ஒரு இனப்படுகொலைகளே நடக்கேல்லை எண்டால் பாருங்கோவன் எதை கதைச்சாலும் பொருந்த கதைக்கோணும் தங்கச்சி
 32. 1 point
  வாறவை வந்து ஒழுங்கா நிண்டு திண்டு குடிச்சிட்டுப் போனால் எல்லாருக்கும் நல்லது October 14, 2018 சனி முழுக்கு 12 – பொஸிற்றிவ் பொன்னம்பலம் நாங்கள் வடிவா ஆலோசிச்சுத்தான் சிலதுகளைச் செய்ய வேணும் எண்டு சொல்லுறது உண்மைதான். மத்தியானம்போலை உவள் பவளம் வடை வாழப்பழம், சர்க்கரைச் சாதம் எண்டு ஒரு சரையிலை கொண்டுவந்தவள்.“ என்ன விசேஷம்?” எண்டு கேட்டன். “நேத்திக் கடன் அண்ணை” எண்டாள். “என்னத்துக்கு ?” எண்டு கேட்டன். “உவன் தம்பிக்குத்தான் நேத்தி வைச்சனான்” எண்டாள். “என்ன வேலை வெட்டிக்காகவோ? இல்லை சோதினை கீதினையோ?” எண்டு கேட்டதுதான் தாமதம் வெம்பி வெம்பி அவள் அழுதாள். பாக்கப் பாவமாக் கிடந்திது. “அழாமல் விபரத்தைச் சொல்லடி” எண்டன். அவள் சொன்னதைக் கேக்க எனக்கும் விசராக்கிப் போவிட்டுது. வாறவை வந்து ஒழுங்கா நிண்டு திண்டு குடிச்சிட்டுப் போனால் எல்லாருக்கும் நல்லது. அது எல்லாருக்கும் சந்தோஷம். அதைவிட்டிட்டு விசர் வேலை பாத்தால்? பவளம் சொன்னதை அப்பிடியே சொல்லுறன். கேளுங்கோ. போன நல்லூர் திருவிழாவுக்குள்ளை என்ரை தம்பி வந்திட்டுப் போனவன் எல்லே? அவனைத் தம்பி எண்டு சொல்ல இப்ப அருவெருக்கிது. அந்தத் தறுதலைதான் எல்லாத்துக்கும் கால். அது வெளியிலை போனதுக்கு எங்களை “ஏன் நாயே?” எண்டு கூடக் கேக்கேல்லை. இஞ்சை வாறதுக்கு முன்னந்தான் ஒரு நாள் ரெலிபோன் எடுத்து “ அக்கா! உன்னைப் பாக்க ஆசையாக் கிடக்கு. அடுத்த மாசம் வாறன். வந்து கதைக்கிறன்” எண்டு உறவு கொண்டாடிப் போட்டு இரண்டு மூண்டு கிழமைக்குள்ளை வந்திறங்கிச்சிது. வந்தவன்ரை கோலத்தைக் கண்கொண்டு பாக்கேலாமைக் கிடந்திது. அப்பிடிக் கேவலம். ஒரே குடியும் கும்மாளமுமாத்தான் ஜேர்மனியிலை இருந்தது எங்களுக்குத் தெரியாமைப் போச்சுது. தெரிஞ்சிருந்தால் வந்தண்டே கலைச்சிருப்பன். வந்தாப்பிறகு பாத்தால் பெட்டி பெட்டியாச் சிகரெட்டும், பெரிய விஷ்கிப் போத்தல் நாலைஞ்சும் அவற்றை சூட்கேசுக்கை கிடந்ததை என்ரை சின்னவள் அறையைக் கூட்டப் போகேக்கை கண்டிட்டு வந்து சொல்லிப்போட்டாள். கன நாளைக்குப் பிறகு வந்தவனை இடையிலை கலைக்கேலுமோ? காலமை நேரத்துக்கு எழும்பான். பிறகு எழும்பி தேத்தண்ணியைக் குடிச்சிட்டு ரெலிபோன் அடிக்க ஒட்டோ வரும். அதிலை ஏறிக் குந்தினா எங்கை போறானோ, எங்கை வாறானோ தெரியாது. கையிலை மரக்கறி, மீன் , முட்டை அல்லது இறைச்சியோடை வந்திறங்கி “அக்கா இந்தா. இதைச் சமை” எண்டு போடுவன். குறை சொல்லப்பிடாது ஏராளமாத்தான் சாமான் சக்கட்டை வேண்டிக் கொண்டு வருவன். உண்மையைச் சொல்லப்போனால் அப்பிடித் திண்டு குடிக்க எங்களுக்கு ஏலாது. பிள்ளையளும் ஆசைப்படும். அப்ப கொஞ்ச நாள் விரதம் எண்டும் பாராமல் வீட்டுக்கு வெளியிலை வைச்சுச் சமைச்சுப் போட்டன். என்ரை மனுசன் புறுபுறுத்தபடி. பின்னை அரியண்டம் வேண்டாம் எண்டிட்டு விரதம் இல்லாத நாளாப் பாத்து வேண்டிக்கொண்டு வா. இல்லாட்டிப் போய் எங்கையன் கடைவழியை உன்ரை அலுவலைப்பார் எண்டு கத்தினன். அதுக்குப் பிறகு உவன் யாழ்ப்பாணம் காணப் போய் வருவன். போயேக்கை சண்டாளன் என்ரை பெடியையும் எனக்குத் தெரியாமல் கூட்டிக் கொண்டு போகத் துவங்கிவிட்டான். அவனும் சோதினை எடுத்துப் போட்டு வேலை வெட்டி இல்லாமல் இருந்தவனெல்லே. அவனோடை போய் வாய்க்கு ருசியாத் திண்டு பழகிவிட்டான். அவன் போனப் பிறகுதான் பிள்ளையள் சொல்லிச்சிதுகள் அவற்றை வாயிலையும் இடை சுகம் மணத்ததாம்.“ஏனெடி அவன் நிக்கேக்கை சொல்லேல்லை?” எண்டு கேட்டதுக்கு , “மாமாவைப் பேசிப்போடுவியள் எண்டு பயத்திலை சொல்லேல்லை” எண்டுதுகள். எல்லாரையும் காசாலை மடக்கிப் போட்டான். முதல் புறு புறுத்த மனுசனும் பிறகு அவனை “கொஞ்ச நாளைக்கு நிண்டிட்டுப் போவன்” எண்டு சொல்லுற அளவுக்கு காசு விளையாடின கதை பிறகுதான் எனக்குத் தெரியும். அவருக்கு ஒரு புது சைக்கிள். தங்கச்சிக்கும் ஒரு லேடிஸ். பெடிக்கு ஒரு நுளம்பு.என்ன நடந்திதோ தெரியாது. இப்ப பெடி வீட்டிலை நிக்கிறேல்லை. எங்கை போறானோ. ஆரோடை சேத்தியோ? ஒண்டும் தெரியிதில்லை . இரண்டொண்டு படலைக்குள்ளை வந்து நிண்டு “கோபு..கோபு…” எண்டு கத்திறதுதான் கேக்கும். உடனை இவர் நுளம்பை எடுத்து உளக்குவர். ஆளைக் காணக்கிடையாது. வாறதும் இரவிலை செண்டுதான். இப்ப வாள் வெட்டு,சண்டை சச்சரவு எண்டு கனக்க யாழ்ப்பாணத்திலை கூடிப் போச்சுதெல்லே? அதுதான் பயமாக் கிடக்கு. பெடியையும் பேச ஏலாமைக் கிடக்கு. “பேசினால் கயிற்றுத் துண்டோடை ஏறினால்…!” எண்ட பயம். அதாலை தின்னவும் முடியாமல் கக்கவும் முடியாமல் மனசு கிடந்து வேகுது அண்ணை. அதாலைதான் நேத்தி வைச்சுப் பிள்ளையாரிட்டைச் சொல்லி அழுது போட்டு வாறன்.இவ்வளவும் பவளம் எனக்குச் சொல்லிக் கதறினது. நீங்கள் நினைக்கிறியளே. பவளம் மட்டும் எண்டு. எத்தினை பவளங்கள் இப்ப யாழ்பாணத்திலை ஏங்கினபடி சீவிக்கினம் தெரியுமே? நிண்ட வெள்ளத்தை வந்த வெள்ளம் அள்ளிக் கொண்டு போன கதையாக் கன கதையள். மகாபாரதம், இராமாயணக் கதையள் மாதிரியும் சொல்லலாம். கன குடும்பம் மனத்தளவிலை உடைஞ்சு போச்சினம். வெளியிலை சொன்னால் மானக் கேடு எண்டது அவையின்ரை விளக்கம். ஆனால் உப்பிடிப் போய் ஏதேலுமொண்டிலை சிக்கி பொலிஸ் ஜீப்பு வந்து படலேக்கை நிண்டால்… கதை என்ன? அப்ப மானம் என்ன வீட்டுக்கை மரியாதையா நிக்குமோ? அப்ப காலா காலத்திலை பெடி பெட்டையளைக் கண்டிச்சு வளக்காட்டில் குற்றம் கடைசியிலை தாய் தேப்பனிலைதானே வந்து விழும். பிறகு வீட்டிலை உள்ளதுகளைக் கட்ட அந்த வாள் வெட்டுக் கொம்பனியிலை உள்ள ஒராள்தான் வருவன்.நல்லவன் பெரியவன் வரான். என்ன மனம் கடுக்கிதோ? கவனம். பொஸிற்றிவ் பொன்னம்பலம் http://globaltamilnews.net/2018/99333/
 33. 1 point
  இந்து மத குருக்கள் இவ்வாறு முன்னடப்பது மிகவும் பாராட்டுக்கு உரியது.
 34. 0 points
  வன்னியன்... நீங்கள், "டுபாய்" காரர். உங்களுக்கு... நினைத்தவுடன் ஊருக்கு, போகலாம்... வரலாம்... அதுக்கு, உங்கள், வேலை இடத்தின் நிர்வாகமும் ஒத்து உழைத்தே வந்துள்ளதால்.... இந்த முறையும்... நீங்கள், மதுரைக்கோ... மட்ராசுக்குகோ.... சென்று இருப்பீர்கள் என்று தான்... நினைத்தேன். அதனால்... பேரப் பிள்ளைகளுடன், விளையாடச் சென்ற தாத்தாவை... குழப்பக் கூடாது என்று உங்களை நான் தேடவில்லை ஐயா. முகில் முட்ட வளர்ந்த உங்கள் ஊரில்... யாழ். களம் தெரியவில்லை என்றால்... உலகத் தமிழ் இனத்திற்கே அவமானம். (மோகன் அண்ணா... நோட் திஸ்.... பொயின்ற்)

May 18 Banner