Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paanch

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Paanch

  1. ஆனாலும் பக்கத்து இலைக்குப் பாயாசம் வேண்டும் என்று கேட்பதுபோல் உள்ளது சிறித்தம்பியரின் பின்னூட்டம்.😆
  2. எங்களுக்கு பலகாரப் பொதி கிடத்தது சுவைப்பிரியனையும் பாதித்துள்ளதே…..!அப்பனே முருகா!!🤔🙏
  3. சிங்களம் பலுக்கல் பொருள் தமிழ் பொருள் வகை ආදායම් ஆதாயம வருமானம் ஆதாயம் நயம் வணிகம் අක්කා அக்கா தமக்கை அக்கா தமக்கை உறவுமுறை අම්බලම அம்பலம தெருவோரத் தங்குமிடம் அம்பலம் பொதுவிடம் நாடோறும் ඇම්බැට්ටය எம்பெட்டய நாவிதன் அம்பட்டன் நாவிதன் வணிகம் ආණ්ඩුව ஆண்டுவ அரசாங்கம் ஆண்டான் தலைவர் நடப்பிக்கை ආප්ප ஆப்ப அப்பம் அப்பம் அப்பம் உணவு අරලිය அரலிய அரளி அரளி அரளி நிலைத்திணையியல் අවරිය அவரிய கருநீல நிலைத்திணை அவுரி கருநீல நிலைத்திணை நிலைத்திணையியல் චීත්තය (ச்)சீத்தய சீத்தை சீத்தை சீத்தை வணிகம் එදිරිය எதிரிய எதிர்ப்பு, பகைமை எதிரி போட்டியாளர், பகைவன் படை ඉඩම இடம தளம், நிலம் இடம் இடம், தளம் அமைப்பு ඊළ ஈழ ஈழை ஈழை ஈழை நாடோறும் ඉලක්කය இலக்கய குறி இலக்கு குறி படை ඉළන්දාරියා இழன்தாரியா இளைய மனிதன் இளந்தாரி இளைய மனிதன் நாடோறும் ඉළවුව இழவுவ இறப்பு, இறுதிச் சடங்கு இழவு இறப்பு நாடோறும் ඉරට්ට இரட்ட இரட்டை, இரட்டையெண் இரட்டை இரட்டை, இரட்டையெண் வணிகம் කඩල (க்)கடல கடலை கடலை கடலை உணவு කඩය (க்)கடய கடை கடை கடை வணிகம் කඩියාලම (க்)கடியாலம கடிவாளம் கடிவாளம் கடிவாளம் படை කංකාණියා (க்)கங்(க்)காணியா மேற்பார்வையாளர் கங்காணி கண்காணிப்பவர் நடப்பிக்கை කලඳ (க்)கல(ந்)த எடைக்கான சிறு அலகு கழஞ்சு 1.77 கிராம் எடை வணிகம் කලවම (க்)கலவம கலவை, கலப்பு கலவை கலவை நாடோறும் කාල (க்)கால காற்பங்கு கால் காற்பங்கு வணிகம் කළුදෑවා (க்)கழுதேவா கழுதை கழுதை கழுதை நாடோறும் කම්බිය (க்)கம்பிய கம்பி கம்பி கம்பி வணிகம் කාන්දම (க்)கான்தம காந்தம் காந்தம் காந்தம் வணிகம் කණ්ණාඩිය (க்)கண்ணாடிய கண்ணாடி, மூக்குக் கண்ணாடி கண்ணாடி கண்ணாடி, மூக்குக் கண்ணாடி நாடோறும் කප්පම (க்)கப்பம வரி கப்பம் வரி படை කප්පර (க்)கப்பர சிறு கப்பல் கப்பல் கப்பல் வணிகம் කැරපොත්තා (க்)கெர(ப்)பொத்தா கரப்பான் கரப்பான் கரப்பான் நாடோறும் කරවල (க்)கரவல உலர்ந்த மீன் கருவாடு உலர்ந்த மீன் உணவு කාසිය (க்)காசிய நாணயம் காசு சிறிதளவிலான மாற்றிய பணம், நாணயம் வணிகம் කට්ටුමරම් (க்)கட்டுமரம கட்டுமரம் கட்டுமரம் கட்டுமரம் வணிகம் කිට්ටු (க்)கிட்டு நெருக்கம், அருகே கிட்டு நெருக்கம், அருகே நாடோறும் කොඩිය (க்)கொடிய கொடி கொடி கொடி நடப்பிக்கை කොල්ලය (க்)கொல்லய கொள்ளை கொள்ளை கொள்ளை படை කොම්බුව (க்)கொம்புவ ෙஇன் பெயர் கொம்பு ளகரத்தின் பெயர் நாடோறும் කොණ්ඩය (க்)கொண்டய கொண்டை கொண்டை கொண்டை நாடோறும் කොත්තමල්ලි (க்)கொத்தமல்லி கொத்தமல்லி கொத்தமல்லி கொத்தமல்லி நிலைத்திணையியல் කෝවිල (க்)கோவில இந்துக் கோயில் கோயில் கோயில் நாடோறும் කුඩය (க்)குடய குடை குடை குடை நாடோறும் කූඩය (க்)கூடய கூடை கூடை கூடை நாடோறும் කූඩුව (க்)கூடுவ கூடு, கூண்டு கூடு கூடு, சிறு பெட்டி நாடோறும் කුරුම්බා (க்)குரும்பா இளந்தேங்காய் குரும்பை இளந்தேங்காய் உணவு කුලිය (க்)குலிய வாடகை கூலி வாடகை நடப்பிக்கை මලය மலய மலைநாடு மலை வரை இடப்பெயர் මරක්කලය மரக்கலய படகு மரக்கலம் படகு மீன்பிடி මස්සිනා மஸ்சினா மச்சான் மச்சினன் மச்சான் உறவுமுறை මුදල முதல பணம் முதல் முதல் வணிகம் මුදලාලි முதலாலி வணிகர், கடையொன்றின் உரிமையாளர் முதலாளி வணிகர் வணிகம் මුදලි முதலி பெயரின் பகுதியொன்று முதலியார் குலப் பெயர் ஒன்று பெயர் මුරුංගා முருங்கா முருங்கை முருங்கை முருங்கை உணவு[1] නාඩගම நாடகம மேடை நாடகம் நாடகம் நாடகம், மேடை நாடகம் பண்பாடு නංගී நங்கீ தங்கை நங்கை இளம்பெண் உறவுமுறை ඕනෑ ஓனே வேண்டும் வேண்டும் வேண்டும் நாடோறும் ඔත්තේ ஒத்தே ஒற்றை எண் ஒற்றை ஒற்றை எண் வணிகம் පදක්කම (ப்)பதக்கம பதக்கம் பதக்கம் பதக்கம் நடப்பிக்கை පළිය (ப்)பழிய பழி பழி குற்ற உணர்வு, பழி படை පරිප්පු (ப்)பரிப்பு பருப்பு பருப்பு பருப்பு உணவு පත්තු කරනවා (ப்)பத்து (க்)கரனவா ஒளியூட்டு, தீ வை பற்று தீப்பிடி நாடோறும் පොරය (ப்)பொரய போர் போர் போர் படை පොරොන්දුව (ப்)பொரொன்துவ உடன்படிக்கை, உறுதிமொழி பொருந்து பொருந்து, உடன்படு நாடோறும் පොරොත්තුව (ப்)பொரொத்துவ தாழ்த்தல், காத்திருத்தல் பொறுத்து காத்திருத்தல் நாடோறும் සල්ලි சல்லி பணம் சல்லி நாணயம் வணிகம் සෙරෙප්පුව செரெப்புவ செருப்பு செருப்பு செருப்பு நாடோறும் සුරුට්ටුව சுருட்டுவ சுருட்டு சுருட்டு சுருட்டு நாடோறும் තක්කාලි (த்)தக்காலி தக்காளி தக்காளி தக்காளி உணவு තල්ලු කරනවා (த்)தல்லு (க்)கரனவா தள்ளு தள்ளு தள்ளு நாடோறும் තනි (த்)தனி தனி தனி தனி நாடோறும் තරම (த்)தரம அளவு, நிலை, எண்ணிக்கை தரம் தரம் வணிகம் තාත්තා (த்)தாத்தா தந்தை தாத்தா தாத்தா உறவுமுறை තට්ටු කරනවා (த்)தட்டு (க்)கரனவா தட்டு தட்டு தட்டு நாடோறும் උඩැක්කිය உடெக்கிய குறுகிய மேளமொன்று உடுக்கை குறுகிய மேளமொன்று நாடோறும் උදව්ව உதவ்வ உதவி உதவி உதவி நாடோறும் උලුක්කුව உலுக்குவ சுளுக்கு சுளுக்கு சுளுக்கு நாடோறும் උරුමය உருமய வழிவழி உரிமை, உரித்துடைமை உரிமை உரித்துடைமை, உரிமை நடப்பிக்கை වෙඩි තියනවා வெடி (த்)தியனவா சுடு வெடி சூடு, வெடி படை වෙරි வெரி குடித்த நிலை வெறி பித்து நாடோறும்ண
  4. இந்தத் திரியை குத்துவிளக்கில் போட்டு நெய்யூற்றி விளக்கேற்றி அந்த மங்கல ஒளியின் பிரகாசத்தில் எங்கள் உடல் உபாதைகளின் அவலங்கள், துன்பங்களைத் துடைத்ததெறிந்து அமைதிபெறுவதற்கு, ஆறுதல் அளித்த, அளித்துவரும் அனைத்து யாழ்கள உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.!!🙏😍
  5. கந்தையா57 ஐயா! உங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா!! இது என்கணிப்பு அல்ல, கூக்கிள் ஆண்டவர் மேற்கொண்டு தந்த கணிப்பு என்பதைக் குறிப்பிட்டும் உள்ளேன். ஆண்டவர்மேல் குற்றம் கண்டு, மறுபடியும் முதுகில் பிரம்படி வாங்கிக் கொடுத்து உலக மானிடர் அனைவர் முதுகிலும் இரண்டாவது தழும்பையும் ஏற்படுத்த என்மனம் ஒப்பவில்லை ஐயா!!🤔😟
  6. தமிழ்நாடு தனிநாடல்ல அது இந்தியாவில் இருக்கிறது, இந்தியாவில் இருக்கின்ற பல மொழிகள் சங்கத் தமிழோடு சேர்ந்து இனிமை பெற்று உருவான தமிழ் சொற்கள் தமிழ்நாட்டுத் தமிழில் ஒலிப்பது வரவேற்கக்கூடியதே. இலங்கையில் அப்படியல்ல, இருமொழிகள் மட்டும் பேசும் இரு இனங்களைக் கொண்டநாடு. அதில் ஒரு மொழிசார்ந்த இனமான சிங்களத்தை தமிழ்மொழி பேசுபவன் பேசினாலே, பேசியவன் பிடரிக்குச் சேதம் என்று பழமொழியே இருக்கும்போது…சங்கத் தமிழோடு சேர்ந்து சிங்களமும் உருவாக்கிய சொற்களைப் பாவித்தால் அது தமிழன் உயிருக்கே உலைவைக்கும்.😳 பழைய சங்கத் தமிழ் சொற்கள் இலங்கையில் நிலைத்து நிற்பதும் நன்மைக்கானதே.🤔
  7. பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள்* நாம் – முதல் தலைமுறை, தந்தை + தாய் – இரண்டாம் தலைமுறை, பாட்டன் + பாட்டி – மூன்றாம் தலைமுறை, பூட்டன் + பூட்டி – நான்காம் தலைமுறை, ஓட்டன் + ஓட்டி – ஐந்தாம் தலைமுறை, சேயோன் + சேயோள் – ஆறாம் தலைமுறை, பரன் + பரை – ஏழாம் தலைமுறை, ஆக, பரன் + பரை = பரம்பரை ஒரு தலைமுறை – சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால், ஏழு தலைமுறை – 480 வருடங்கள்.. ஈரேழு தலைமுறை – 960 வருடங்கள்.. (கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)ஆக, பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்குதலை முறையாக என்று பொருள் வரும். வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை.. ஆதாரம் கூக்கிள் ஆண்டவர்.
  8. நாங்கள் இலங்கையின் முதல் 10 கோடீசுவர அரசியல்வாதிகளையும் மறக்கமாட்டோம். சனாதிபதி அவர்களே! 1 மகிந்த 18 பில்லியன் டொலர் 2 அர்யுன ரணதுங்க 6 கோடி 80 லட்சம் டொலர் 3 மைத்திரி 1 கோடி 40 லட்சம் டொலர் 4 தொண்டமான் 19 லட்சம் டொலர் 5 கருணா 17 லட்சம் டொலர் 6 பௌசி 14 லட்சம் டொலர் 7 சந்திரிகா 14 லட்சம் டொலர் 8 அனுரகுமார 13 லட்சம் டொலர் 9 அதாவுல்லா 9 லட்சம் டொலர் 10 ரணில் என்ற நீங்கதான் 8 லட்சத்து 60 ஆயிரம் டொலர்.
  9. வணக்கம் நில்மினி. எதிர்பாராத யாழ்கள உறவுகளின் சந்திப்பு தரும் மகிழ்ச்சி என்றும் நினைவில் நிலைத்திருக்கும். அதனை ஏற்படுத்தித் தந்த தமிழ்சிறிக்கு நன்றிகள். உங்கள் எழுத்துக்கள் எல்லை தாண்டி நீண்டாலும் வாசிக்கத் தயாராகி உள்ளோம். சமீபத்தில் சந்தித்த மூன்று கள உறுப்பினர்களான எங்கள் தலைகள் இற்றைவரை யாழ்களத்தில் எப்படி உருட்டப்படுகிறது என்பதை அறிவீர்கள், நீங்களும் எங்களுடன் சேர்ந்தால் அது எங்களுக்கு ஒரு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அள்ளித் தரும் என நம்பலாம். நிச்சயம் உங்களுக்கு ஒரு பலகாரப்பொதியைச் சிறித்தம்பி கட்டியிருப்பார் எனவும் நம்பலாம். ஏனென்றால் உங்களையும் என்னையும் அவர் சந்திக்கவைத்த பகுதி பலகாரம், உணவு உண்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதி. 🤪🤤
  10. வேலி அடைக்கும்போது கதியால் தள்ளிப்போட்டுக் காணிசேர்க்கும் கலையை நான் அறிந்த காலத்திலிருந்தே யாழ்ப்பாணத்தில் கற்பிக்கிறார்கள். அதனைக் கற்பதற்கு எனக்கும் ஆர்வம் ஏற்பட்டபோது…. அம்மா கண்டித்ததால் அந்தக் கற்கை நெறியைக் கற்காமல் கைவிட்டது உண்மை.🤔
  11. உண்மைதான். சிறுவயதில் தவறான தகவல் ஒன்றை உண்மை என நம்புவதற்குரிய காரணிகளும் அமைந்ததால் அது உண்மை என்றே என் மனதில் இன்றுவரை பதிந்துவிட்டது. இன மத வேறுபாடின்றி சேர் பொன் இராமநாதன் அவர்களை அன்று சிங்களரும் தமிழரும் பல்லக்கில் ஏற்றிச் சுமந்து சென்றமை, பாராளுமன்றத்தில் அவருக்குச் சிலை நிறுவியமை போன்ற உண்மைகள். தவறைச் சுட்டியமைக்கு நன்றி!
  12. இதற்கு ஏன் பரிசோதனை? சுதந்திரமடைந்த இலங்கையின் முதல் சனாதிபதியே ஒரு தமிழர்தான். தற்போதும் சனாதிபதி தேர்வுக்கு ஒரு தமிழர் போட்டியிட்டால்…. இங்கு பல கருத்துக்கள உறவுகளின் கருத்துப்படி அவர் தோல்வியுற்றாலும், சிங்கள மக்களிடமிருந்து அவருக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தன என்பதை அறிவதற்குக் கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகவும் அது அமையும். சிங்களவர் அனைவரும் கெட்டவர்கள் அல்ல, தமிழர்கள் அனைவரும் நல்வர்களும் அல்ல. அனுராதபுரத்தில் 1977ல் நடந்த கலவரத்தில் சிங்களக் காடையர்களிடமிருந்து எங்கள் குடும்பம் ட்படப் பல தமிழர்களைக் காப்பாற்றிது சிங்களவர்கள்தான். இதற்கு ஏன் பரிசோதனை? சுதந்திரமடைந்த இலங்கையின் முதல் சனாதிபதியே ஒரு தமிழர்தான். தற்போதும் சனாதிபதி தேர்வுக்கு ஒரு தமிழர் போட்டியிட்டால்…. இங்கு பல கருத்துக்கள உறவுகளின் கருத்துப்படி அவர் தோல்வியுற்றாலும், சிங்கள மக்களிடமிருந்து அவருக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தன என்பதை அறிவதற்குக் கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகவும் அது அமையும். சிங்களவர் அனைவரும் கெட்டவர்கள் அல்ல, தமிழர்கள் அனைவரும் நல்வர்களும் அல்ல. அனுராதபுரத்தில் 1977ல் நடந்த கலவரத்தில் சிங்களக் காடையர்களிடமிருந்து எங்கள் குடும்பம் உட்படப் பல தமிழர்களைக் காப்பாற்றிது சிங்களவர்கள்தான்.
  13. பூந்திலட்டிலை எம்மாம் பெரிய புழுகள் நுழைந்து துள்ளுதுகள் இதைப்பார்த்த பின்னரும் பார்சல் கட்ட மனம் வருமா? இதைச் செஞ்சவரை கொஞ்சத்தான் மனம்வருமா?? மூஞ்சைகழுவி எவ்வளவு நாளாச்சோ??? 😟 பெரிசு! நீங்கள் சாமியாரைத் தவறாக எண்ணவேண்டாம்!! சைனாவிலோ, கொரியாவிலோ நீங்கள் புலம்பெயர்ந்து இருப்பதாக அவர் பிழையாக எண்ணிவிட்டார்போல!!!.😳
  14. இலங்கை ஒரு இனம் வாழும் நாடல்ல. பிறப்பு விகிதம் எந்த இனத்தில் குறைவடைந்துள்ளது?? எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.😳
  15. எங்கள் மூன்றுபேரின் சந்திப்புக்கும் வந்த வாழ்த்துக்ககளயும் வரவேற்புகளையும் காணும்போது….. யாழ்கள உறவுகள் அனைவரையும் அழைத்து ஒரு கொண்டாட்ட விழா வைக்கலாமோ என்று தோன்றுகிறது. 🤪 சாமியார் மோதிரம் மாத்தி முடிந்ததும், சிறியர் முறுக்குச் சாப்பிட்டு முடிந்ததும் வைக்கச் சொல்லி ஒரு பட்சி சொல்லுது.😆
  16. இந்திய இலங்கை நாடுகளுக்கு கடல் எல்லைகள் உண்டா? அதனைக் கண்டுபிடிப்பது எவ்வாறு?? மதில் கட்டப்பட்டுள்ளதா? அல்லது சிலைகள் நிறுவப்பட்டுள்ளனவா?? சிலைகள் தட்டுப்பாடென்றால் இலங்கை அகழ்வாராச்சி நிறுவனத்திடம் ஏராளமான சிலைகள் இருப்பதாகச் செய்திகள் வருகின்றனவே!!😆
  17. சும்மா சொல்லக்கூடாது... பூந்தி லட்டு ஒவ்வொரு கடிக்கும் சொர்க்க உலகம் தெரிஞ்சிருக்குமே? 😀அந்த மாதிரி ரேஸ்ற் என்ன....😂 பூந்தி லட்டு உருட்டின கைக்கு மோதிரமே போடலாம் 😎 போற போக்கைப் பார்த்தால் சாமியார் மோதிரம் போடமாட்டார்… மோதிரம் மாத்திப்போடுவர் போலத் தெரிகிறது.😋
  18. நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன? தமிழன் பிரபாகரனையும் நக்கும், சிங்கள நாயக்கர்களையும் நக்கும்.🤪
  19. ஊடகத்துறை சார்ந்தவர்கள் அனேகமாக உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்கும் பணிகளைச் செய்யும்போது, அந்த உண்மைகளின் சூட்டினால் அவர்களே தாக்கப்பட்டு அவதிப்படுவதைக் காண்கின்றோம். இதில் சாதாரண மக்களை விடவும் அதிகாரம் உள்ளவர்களால் தாக்கப்படும் போது உயிருக்கே ஆபத்து நேர்ந்துவிடுவதையும் கண்டுள்ளோம். இங்கே துமிலன் அவர்களின் அறிக்கையால் உண்மைஅறிந்த காவல்துறை மன்னிப்புக் கேட்டாலும், இது தனக்கு நேர்ந்த ஒரு அவமானமாக, இழிவாக அந்தத் துறையின் அதிகாரவர்க்கம் அதனை எண்ணவைத்து, துமிலன் தொடரப்போகும் செய்திகளில் சிறு தவறு கண்டாலும் அதனை ஊதிப் பெருப்பித்து தனது சூட்டைத் தணிக்க முற்படலாம். ஆகவே துமிலன் தனது தொடரப்போகும் பணியை, மிகவும் அவதானமாகவும், கவனமாகவும் மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகிறேன்.🙌
  20. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா….? அதுவும் தந்தை ஆண்புலி, தாய் பெண்புலி, இருவருமே எழுத்துலகிலும் கால்பதித்துப் பாராட்டுப் பெற்றவர்கள். குட்டி 16அடி பாய்ந்து அதுவும் Stern Award பெற்றதில் வியப்பேதும் இல்லை. குட்டி துமிலனை மனசார வாழ்த்துகிறோம்.🙌 ‘நெஞ்சில் நின்றவை’ என்ற தொகுப்பில் தாயகத்தின் நினைவுகளை மூனா என்ற புனைப்பெயரில் பதிந்திருந்த துமிலனின் தந்தை செல்வகுமாரன் அவர்கள், ‘மறக்க மறுக்கும் மனசு’ தொகுப்பில் புலத்தின் வாழ்வையும் பதிந்துள்ளார். அவரது சித்திரங்கள், கேலிச்சித்திரங்களை யாழ்களமே வியந்து பாராட்டியுள்ளது சொல்லித் தெரியவேண்டியதில்லை. தாய் சந்திரவதனா செல்வகுமாரன் அவர்களின் எழுத்துக்களை ஐபிசி தமிழ் வானொலி உற்சாகமாக வரவேற்றுக் கொண்டுள்ளது. அவரது கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், ஆய்வுகள், விமர்சனங்கள் எனப் பலதரப்பட்டவைகள் வானொலிகள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள் எனப் பலவற்றிலும் பரவி நிற்கின்றன. தன் குடும்பத்திற்கு மேலும் பெருமை சேர்த்த துமிலனுக்கு மீண்டும் ஒருமுறை பாராட்டுகளைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறோம்.😀

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.