Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paanch

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Paanch

  1. இது மும்மூர்த்திகளால் படைக்கப்பட்டது, ஆதலால் மூர்த்திகள் யாழ்களம் உள்ளவரை களமாடி உறவுகளுக்கு ஆசி வழங்கி அருள்புரிவார்கள்.😌🙌
  2. அப்படி அல்ல சுவி அவர்களே! மகிழுந்தை நானே ஓட்டினேன். ஓட்டும்போது சோம்பல் வராதிருக்க வாய்க்குள் எதையாவது போடுவது எனது வழக்கம், அது சிறீத்தம்பிக்கு நன்றாகத் தெரியும். பலகாரப்பை என் பக்கத்தில் இருந்தால்?? அதுதான்….🤔😂
  3. “இலவு காத்த கிளி” நாங்கள் தமிழர்கள். பழமையை என்றும் பழுதடைய விட்டதில்லை. பழுதடைந்த சம்பந்தரையும் சுமந்திரனையுமே பாராட்டி வந்தவர்கள், இந்தப் பழமொழியையும் பழுதடைய விடமாட்டோம்.🤫
  4. நான் புலம்பெயர்ந்து எங்கள் ஈழத்தமிழர்கள் வாழும் சில நாடுகளுக்குச் சென்றுள்ளேன். அங்கு சில பெற்றோர்கள் பிள்ளைகளுக்குப் பேசிச் செய்யும் திருமணத்தின்போது மட்டும் சாதிபார்ப்பது அறிந்துள்ளேன், மற்றும்படி சாதி வேறுபாடு பார்ப்பது அருகி வந்துவிட்டது உண்மை. இவர்கள் தாய்நாடு திரும்பி வாழும் சாத்தியம் ஏற்பட்டால் அங்கு சாதி வேறுபாட்டின் வேர்கள் ஓரளவு அறுபடும் என நம்பலாம்.😌
  5. கடன்படுவோம் கடன்படுவோம் அபிவிருத்தி அடைந்தாலும் கடன்படுவோம்.😌 கடனே கடவுள்.🙏
  6. இது யார்சொன்னது?? அடுத்த தீபாவளி தைப்பொங்கல் என்று சொல்லக்கூடியவரும் இன்று இல்லையே!!🤔
  7. எனக்கு அம்மாள் வருத்தம் வந்தபோது அம்மா பனங்கள்ளு ஊற்றித் தந்தவ, அக்கா குழந்தைபெற்று இருந்தபோது சாராயம் ஊற்றிக் கொடுத்தவ. மதுவை அளவுக்கு மிஞ்சாமல் அளவோடு உடல் நலத்திற்கு ஏற்ப எடுக்கவேண்டும் என டாக்டர் சொல்லவந்ததுபோல் தெரிகிறது.😌
  8. இதுவரை மனிதப் பிறவிகள் மீட்டியதால் இனிய சுரம் தந்து நொந்த மனதுக்கு மருந்திட்டது யாழ். இப்போ அல்லாததுகளும் புகுந்து மீட்ட அபசுரம் பிறந்து மனதை அலைக்கழிக்கிறதே? யாழுக்கு நெய் ஊற்றும் மட்டுறுத்தினர்கள் நித்திரையா? கூடுபத்தி எரிகிறதே தெரியவில்லையா??😳
  9. விசுகு அவர்களே! இனி நீங்கள் மீள்வது கடினம். நிற்கவும் முடியாது, ஓடவும் முடியாது.🤧
  10. அவர்களில் சாதி ஏற்றத்தாழ்வு மட்டுமல்ல, ஒவ்வொரு சாதியினரின் வாழ்க்கை முறையிலும் வேறுபாடுகள் உண்டு. நான் வேலைபார்த்த ஆலையில் அப்புகாமி என்ற குள்ளமான கரையோரச் சிங்களவன், ஆலையின் பிரதான இயந்திரத்தை இயக்குபவர்களின் உதவியாளன் பதவி, பள்ளிக்கூடப் படியேறி அறியாதவன், ஆனாலும் எங்கள் இரண்டாவது பெரிய சிங்கள அதிகாரியின் செல்லப் பிள்ளை ஆதலால் அவன் குறைகள் தவறுகள் கணக்கில் வருவதில்லை. அவன் எடுக்கும் சம்பளத்தில் ஒரு பகுதி அந்த அதிகாரியின் பைக்குள் போய்விடுவது அரசல் புரசலாகத் தெரியும். ஒரு அடிமையைவிடக் கேவலமாக அவருக்குத் தொண்டுகள் செய்வான். நாங்கள் அவனைப் பரிகாசம் செய்தால் பற்கள் முழுவதும் காட்டிச் சிரிப்பான் அவ்வளவுதான். பாவம் அவன் குடும்பகாரன், மனைவி ஊரில். தன்செலவு போக மிகுதிச் சம்பளத்தை அவன் அண்ணனுக்குத்தான் அனுப்புவான். ஏனெனில் அவன் ஊரில், அவர்கள் குல வழக்கப்படி கணவன் வெளியூரில் வேலை பார்த்தால் மனைவியைக் கணவனின் அண்ணன் தன் மனைவியைப்போல் பராமரிப்பாராம் என்று அறிந்தேன்.
  11. எங்களுக்கு இதெல்லாம் சரிவராது ஈழப்பிரியன் தம்பி சொன்னதுபோல்👇
  12. உலகில் உள்ள ஆறு, குளம், கடல்கரை எங்கும் பனை மரங்களை நட்டு இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாதா????.🤔 ஊரில் பனைமரத்தின் பின்னால் குந்தியிருந்த அனுபவம்…. அதை நினைத்தாலே ஆனந்தம்.😆
  13. நான் மோட்டார் வண்டி ஓட்டப் பழகியபோது…. ஓட்டப்பழக்கிய ஆசான் சொன்ன முதல் வார்த்தை… நீ வண்டியை எங்குஓட்டி மோதினாலும் எனக்குக் கவலை இல்லை, ஆனால் மல வண்டியுடன் மட்டும் மோதிவிடாதே. நிற்கவும் முடியாது, ஓடவும் முடியாது. நன்றி🙏.
  14. “தானாடாவிட்டலும் தன் சதையாடும்” Anton Balasingam அவர்களை உங்கள் எழுத்துத் தூற்றினாலும் அதனை உங்கள் உள்ளம் ஏற்கவில்லை. அவர்களிடம் உள்ள உங்கள் மதிப்பு மரியாதைக்கு நன்றி!.🤪
  15. என்கிறீர்கள் நீங்கள் எங்கிருக்கிறீர்கள்???? இது உங்களுக்கே கேலிக்குரியதாகத் தெரியவில்லையா? 🤔 இரவின்றிப் பகல் இல்லை, பகலின்றி இரவில்லை இது இயற்கை, இதற்குள்தான் மனிதர்களும் வாழ்கிறார்கள். அவர்கள் அப்படித்தான் வாழ்வார்கள். சேற்றை மிதிக்காது நாற்றை நட்டு நெல் எடுக்க முடியாது.🙏
  16. கையில் கிடைக்காதவரை மலையளவு, கிடைத்துவிட்டால் கடுகளவு. எண்ணிப் பார்த்தால்.. இதயம் எரியாது தணிந்துவிடும். க தி வி அவர்களே!😌
  17. பயங்கரவாதத்தைத் தேடிச்சென்று அதற்கு உதவும் இந்தியாவிலேயே பயங்கரவாதமா????? உதைபந்தாட்டத்தில் தவறுதலாக சேம் சைட் கோல் அடிப்பார்கள். இந்தியா தெரிந்தே அடிக்கிறதே!!⚽️🏃
  18. ஈழம் என்பது தமிழின் மறுவடிவம். தமிழ் இனிமையான தேனாகும். இதை நான்மட்டும் சொல்லவில்லை, ஆன்றோரும் சான்றோரும் அறிந்தோரும் இன்றுவரை சொல்கிறார்கள். தேன் தேனாகவே இனிமையுடன் இருக்கும், அது சிலவேளை பழுதடைந்தால் அதற்குக் காரணமும் இதர உயிரினங்களே! தேன் தானாக உற்பத்தியாவதில்லை அதனைப் பூக்களே உற்பத்தி செய்கின்றன. உற்பத்திசெய்யும் பூக்கள் வாடும், அழுகும், சருகாகும் ஆனால் தேன் தேனாகவே இருக்கும். ஈழம் ஈழமாகவே இருக்கும். பூக்களைப்போல் வந்த, வரும் மனிதர்களை வைத்து ஈழத்தைக் குறைகாண்பது தவறு.🤔🙏
  19. தவறுகளை யாரும் விரும்பி அல்லது வேண்டுமென்று செய்வதில்லை, ஆனாலும் நடந்த ஒரு தவறை மறைப்பதற்குப் பல தவறுகளைச் செய்கிறார்கள்.😲
  20. கத்தரிக்காய் வெங்காயம் கூட இந்தக் கத்தி வெட்டுதில்லை என்று என் மனைவி ஆதங்கப்பட, இப்போதுதான் நன்றாகத் தீட்டிக் கூராக்கிக் கொடுத்தேன்.😳
  21. இரண்டு ஆண்டுகள் 24 மாதங்கள் எத்தனை அழகான சிறுக்கிகள் ஜீவனாம்சம் பெறும்பாக்கியத்தைப் பெற்றார்களோ??🤔
  22. சாமியாரே! நீங்கள் வீபூதிக்குறி நெற்றியில் வைத்துச் சந்தணப் பொட்டுடன் குங்குமமும் இட்டு வேலைக்குச் சென்றால் அவர்கள் நினைப்பு கைலாய நித்தியானந்தாவை நினைவூட்டி உங்களை யாரென்று அறியவைக்கும்.😆

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.