Everything posted by Paanch
-
சிரிக்க மட்டும் வாங்க
அண்ணை ஏராளன் அவர்களே! எதற்கும் உங்களின் இந்த நண்பர்களை முன்னுக்கு நின்று எண்ணாமல் பின்னுக்கு நின்று எண்ணிப்பாருங்கள். நாலை விடுங்கள், உங்கள் ஒன்றும் இருந்த இடம்தெரியாமல் பறந்துவிடும்.🧐🤪
-
யாழில். முதியோர் இல்லங்களால் புறக்கணிக்கப்பட்ட முதியவர் – கருணை கொலை செய்யுமாறு கோரிக்கை
யாயினி அவர்களே! நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இலங்கையில் கருணக் கொலைக்கான காப்புறுதி நிறுவனம் ஒன்று உருவாகும் என நம்பலாம், கவலை வேண்டாம்.😋
-
யாழில். முதியோர் இல்லங்களால் புறக்கணிக்கப்பட்ட முதியவர் – கருணை கொலை செய்யுமாறு கோரிக்கை
ஈழப்பிரியரே! கருணைக் கொலைக்கும் காசு தேவையா?
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
சுத்துமாத்து சுமந்திரன் என்றுதான் எண்ணியிருந்தோம், ஜனாதிபதியாக வெற்றிபெற அவர் போட்டியிடவில்லை என்று எல்லோரும் காட்டுக்கத்தல் கத்ததினாலும் அந்தாளுக்கு காதும் கேளாது என்று இப்போதுதான் தெரிகிறது.🤨
-
25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது.
சுவிஸ் நபருக்கு. சுதி வந்தால்! அதன் விலை 47இலட்சம். அப்போ லண்டன், கனடா, யேர்மனி நபர்களுக்கு சுதி வந்தால்???😳😩🥱
-
"அமைதியின் கதவு திறக்கட்டும்"
அத்தியடியில் பூத்து யாழ்களத்தில் நறுமணம் வீசும் கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அவர்களே! ஆரோக்கியத்திற்கு. ஓய்வும் அவசியம். எடுங்கள் வேண்டியமட்டும்.🙌
-
பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மேற்கு வங்க சட்டப்பேரவையில் சட்டமூலம் ஒருமனதாக நிறைவேற்றம்
மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஆண்களுக்கு தட்டுப்பாடு வந்தாலும் வரலாம்.🧐
-
மனைவியுடன் இணைத்து வைக்குமாறு கோரி கணவன் மரத்தில் ஏறி போராட்டம்!
காதலன் இருக்கட்டும்…. உங்கள் நிலைப்பாடு என்ன வாலி அவர்களே!?????🤪
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
முன்பு ஒரு கல்லைவைத்து இதுதான் தமிழரசுக் கட்சி என்றால் ஒருசிலரைத் தவிர மற்ற அனைவரும் தங்கள் வாக்குகளை அதற்குப் போடுவார்கள். இன்று பெரும் மலையைவைத்து இதுதான் தமிழரசுக் கட்சி என்றாலும் அதனை உரசிச் சுரண்டிப் பார்க்கும் அளவிற்குத் தமிழ்மக்கள் வளர்ந்துவிட்டதாக யாழ்களமும் தெரியத் தருகிறது.🧐
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
நிலத்தையும் புலத்தையும் சேர்த்துக் குழைத்து முறுக்குச் சுட தமிழரசுக் கட்சியின் சில தலைகள் முயல்வது தெரிகிறது. புலத்திற்கு பணத்தால் சுடும் தகுதி இருந்தாலும்… நிலம் மானத்தால் சுடும் என்று நம்பலாம். சிங்களத்துடன் பேரம்பேச ஒரு தன்மானத் தமிழனை உருவாக்குவது அவசியம்.🤔
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
kandiah57 அவர்களே! நித்திரையில் கிடப்பவனை எழுப்பலாம், நித்திரைபோல் கிடப்பவனை எழுப்பவே முடியாது.🤔
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
வேதாளத்தை மறுபடி, மறுபடி இறக்கித் தோளில் சுமப்பது போன்ற விக்கிரமாதித்தன் கதைபோல்… யாழ்களத்தில் வரும் நாய்வால்களை மறுபடி, மறுபடி நிமிர்த்த முயல்வதும் ஒரு சுவாரசியமான கதைதான்.🤪
-
யார் வெல்வார்?
சமைப்பது, சட்டிபானை கழுவுவது, உடுப்புத் தோய்ப்பது என்று வீட்டு வேலைகளை எல்லாம் உங்கள் மனைவியைக் கொண்டே எங்களைப்போல் செய்விக்கும் துணிவும், வீரமும் உங்களுக்கும் இருந்தால்… பகலில் என்ன? காலை, மதியம், மாலையிலும் கனவுகளைக் காணலாம்.🤪
-
யார் வெல்வார்?
நடப்பதற்கு சாத்தியம் இல்லாத ஒரு விஷயத்தை, ‘பகல் கனவு காண்பது’ என்று சொல்வார்கள். ஆனால், பகல் கனவு காண்பது ஒருவரின் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் படைப்பாற்றலை ஊக்குவிப்பதற்கும் மன அழுத்தத்தை குறைப்பதற்கும் உதவும் என்று நரம்பியல் நிபுணர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். பகல் கனவு காணும் விதம்: பகல் கனவின்போது மனித மூளை மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகிறது என்று விஞ்ஞானிகள் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து கண்டுபிடித்திருக்கிறார்கள். பகல் கனவு காண்பது மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கிறது. எப்போதும் பதற்றமாகவும் அவசரமாகவும் பரபரப்பாகவும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகியல் வாழ்வில் பகல் கனவு மிகவும் உதவியாக இருக்கிறது. கவலை அல்லது சோகம், ஏமாற்றம் போன்ற உணர்வுகளை சந்திக்கும்போதும் மன அழுத்தத்தில் இருக்கும்போதும் பகல் கனவு காணத் தொடங்கலாம்.😵🤩
-
யார் வெல்வார்?
எந்த வேட்பாளர் இந்த மொட்டைப் பிக்குகளிடம் ஆசிவாங்கச் செல்லாமல் அவர்களை மூட்டைகட்டி ஒதுக்கிவிட்டு வென்று வருகிறாரோ…! அப்படியானவர் வந்தபின்பு இலங்கைத் தீவு இந்துமா கடலில் மூழ்காமல், பூத்துக்குலுங்கும் காட்சியைக் காணும் சாத்தியம் ஏற்படலாம்.💐🙏
-
தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையினை இலங்கையில் அங்கீகரித்தவர்கள் நாம் : சிறிதுங்க தெரிவிப்பு
அறிஞர்கள் என்று போற்றப்படும் பலரும் சொல்லிவிட்டார்கள், அரசியல் என்பது இன்று ஒரு சாக்கடை. அதிலும் சிறிலங்காவின் அரசியல் என்பது மூக்கைப் பொத்தி ஓடவைக்கும் நாற்றம் பிடித்த பெரும் சாக்கடை. அதில் மல்லிகை, முல்லை பூத்து மணம்வீசும் என்று எதிர்பார்ப்பது மடமை.🤔
-
வட மாகாண வைத்தியா்கள் குறித்து அமைச்சர் சுரேன் ராகவன் வெளியிட்ட கருத்து!
அப்பன் குதிருக்குள் இருப்பது எனக்குச் சத்தியமாகத் தெரியாது.🤔
-
தமிழ் மக்களைப் பாதுகாத்த இராணுவத்தை காட்டிக் கொடுக்கின்றனா் – நாமல்!
நாய் நடுக்கடல் போனாலும் நக்கித்தான் குடிப்பதை மாற்ற முடியாது. அதுபோலவே மகிந்த குடும்பத்தினராலும் இனவாதம் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது. நாயைவிட மகிந்த குடும்பத்துக்குக் கிடைத்த பெறுபேறு, மகிந்தர் சேர்த்து வைத்திருக்கும் மில்லியன்கள். இது பணநாயக உலகம், அவர்கள் பின்னால் நாக்கைத் தொங்கப்போட்டுத்திரியவும் நாய்கள் பல உள்ளன.🐕🦮
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!!🎂🤝🙌
- தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
- தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
-
ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலை.
படத்தில் பொன்சேகாவை உற்றுப் பாருங்கள், சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர்போல் இருக்கிறார். ஏசுநாதர் இறந்து மூன்றுநாட்களின் பின்பு உயிர்த்து எழுந்தார். பொன்சேகா உயிரோடு இருந்து தேர்த்தலின் பின்பு இறந்து விழுவார்.😞
-
சுவிஸ் நாட்டில் இருந்து வந்தவர் வவுனியா வடக்கில் சடலமாக மீட்பு
எனக்கு அங்கு காணி, பூமி எதுவுமே இல்லை ஆகையால் பயப்படாமல் போய்வருவேன்.🤪
-
சுவிஸ் நாட்டில் இருந்து வந்தவர் வவுனியா வடக்கில் சடலமாக மீட்பு
இது நிச்சயம் காணி அல்லது எல்லைப் பிரச்சனைதான் கொலையில் முடிந்துள்ளது.😳 பணப் பிரச்சனைகூடப் பெரிதாக அங்கு உறவுகளைக் கொலைவரை கொண்டுசெல்வதில்லை.🧐
-
இசைந்து வரும் ஏனம் - சுப.சோமசுந்தரம்
மோதிரக் கையால் குட்டுவாங்கும் பாக்கியம் ஒருசிலருக்கே கிடைக்கிறது. அந்த ஒருசிலரில் நானும் ஒருவன்.😁🙏