Everything posted by ஈழப்பிரியன்
-
13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா?
சில கேள்விகள் - சில புரிதல்கள் ----- -------- ------ *13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா? * 2009 இற்குப் பின்னர் 13 ஐ கோருமாறு தமிழர்களை மாத்திரம் வற்புறுத்துவது ஏன்? *ஜெனிவாவின் மடைமாற்றல்! -------- --- ------ இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் 1988 இல் அறுதிப் பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு உரியது. 13 ஐ தமிழர்கள் நிராகரிக்கின்றனர் என்பது வேறு. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி, தனது மனட்சாட்சியுடன் நேர்மையாக இயங்கினால், இனப் பிரச்சினை விவகாரத்தை 24 மணி நேரத்துக்குள் தீர்க்க முடியும் என்ற ஒரு பொதுக் கருத்து உண்டு. ஆனால் --- ஜேஆர் முதல் மகிந்த ரணில் வரையும் அதனை செய்யவில்லை. சமாதான தேவதை என்று மார்தட்டிக் கொண்டு வந்த சந்திரிகாவும் போரை நாடினார். இடதுசாரி - சோசலிசம் என்றெல்லாம் புனை கதை சொல்லி வந்த அநுர, இலங்கை அரசாங்கத்துக்குச் சாதகமான 60/1 ஜெனிவா தீர்மானத்தைக் கூட நிராகரித்துவிட்டார்... ஆகவே ------ A) 13 ஐ நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும். அல்லது அவர்கள் ஒத்துழைக்கிறார்கள் இல்லை என்று ஏன் இலங்கை அரசாங்கம் உலகம் எங்கும் சொல்லித்திரிய வேண்டும்? B) அதனை இந்திய ஏன் நியாயப்படுத்த வேண்டும்? அப்படியானால் ---- 13 இல் இருந்து மிக முக்கியமான அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டபோது, தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒத்துழைப்பு அல்லது அவர்களுடன் பேசப்பட்டதா? இல்லையே? 1) ஒரு இரவில் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் மூலம், 15 இற்கும் மேற்பட்ட அதிகாரங்கள் தன்னிச்சையாக (Arbitrarily) மீளப் பெறப்பட்டிருக்கிறதே? 2) அதைவிடவும் இருக்கின்ற அதிகாரங்களை இயங்க விடாமல் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் தடுக்கிறதே? இப் பின்னணியில் யதார்த்த அரசியல் பற்றிப் பேசும் சில போலியான முற்போக்குத் தமிழர்கள், 13 பற்றி தரும் விளக்கம் வேடிக்கையானது. நூறு வருடங்களுக்கும் மேற்பட்ட இன முரண்பாட்டை முப்பது வருட ஆயுதப் போராட்டத்துடன் சமப்படுத்தி போர்க் குற்றங்கள் - மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்று மாத்திரம் ஜெனீவா வரையறை செய்திருக்கிறது... அது மாத்திரமல்ல --- ஒரு நாளில் அதுவும் ஒரு மணி நேர இடைவெளியில் நடைபெற்று முடிந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும், முப்பது வருட ஆயுதப் போராட்டத்தையும் ஒரே தராசில் போட்டு, ஒட்டுமொத்தமாக தனி நபர் பொறுப்புக் கூறல் என்றும் ஜெனீவா வரையறை செய்வது தான் மாபெரும் அரசியல் வேடிக்கை... உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பற்றிய விவகாரத்தை மற்றொரு நிகழ்ச்சி நிரலில் உட்புகுத்தி ஆராய முடியும். பொருத்தமான நிகழ்ச்சி நிரல் ஜெனிவாவில் உண்டு. ஆனால் அவ்வாறு செய்யாதது ஏன்? அத்துடன் ---- ஒட்டுமொத்த இலங்கைத்தீவு மக்களின் மனித உரிமை மீறல் விவகாரம் எனவும், 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பொருளாதார குற்றங்கள் எனவும், அதிகாரத் துஷ்பிரயோகம் - ஊழல் மோசடி எனவும், இனப் பிரச்சினை விவகாரம் சுருக்கப்பட்டுள்ளது. இந்த மடைமாற்றங்கள் --- ஈழத்தமிழர்களின் ”சுயநிர்ணய உரிமை” ”இன அழிப்புக்கான சர்வதேச நீதி” ஆகியவற்றுக்கு எதிரான சதி அரசியல் என்று தானே பொருள் கொள்ள முடியும்? புவிசார் அரசியல், குறிப்பாக இந்தோ - பசுபிக் பிராந்திய நலன் நோக்கில், அமெரிக்க - இந்திய அரசுகளை மையப்படுத்தியதாக ஐக்கிய நாடுகள் சபையின், இலங்கை குறித்த அணுகுமுறை உள்ளது. ஆகவே ----- ஜெனிவாவுக்கும் அமெரிக்க - இந்திய அரசுகளுக்கும் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என விருப்பினால்----- -------குறைந்த பட்சம் 13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களுக்கு கட்டளையிட முடியுமா?------ அரசியல் தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாக 13 ஐ கோருமாறு, 2009 இற்குப் பின்னரான சூழலில் பலவீனமாகவுள்ள தமிழர்களை மாத்திரம் ஏன் வலிந்து இழுக்கிறார்கள்? அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid02zEDUjWq26S1UhUSbMU4QE1kQoQ8MFHDVaZo9eVZ5zciM76pRk1dK8mK8FJQZ5M8wl/?
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
1) அகஸ்தியன் - 33 புள்ளிகள் முதலமைச்சர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
நிழலி இன்னும் பார்க்கவில்லைப் போல.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இங்கிலாந்து பாரிய தோல்வியில் இருந்து தப்பிவிட்டது.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
- யாழிற்கு பெருமை சேர்த்த மாணவி!
செல்வி.கதிர்காமநாதன் அருட்செல்விக்கு பாராட்டுக்கள்.- இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு கட்டாயமாகும் நடைமுறை!
இப்போது இலங்கை போவதற்கு விசா தேவை இல்லை. ஆனபடியால் ETA விசா.- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
1) அகஸ்தியன் - 31 புள்ளிகள் முதலமைச்சர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.- இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
நானும் இதைத் தான் நினைத்தேன். நிச்சயம் அனுரா அரசை பாராட்டியே ஆகணும்.- இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என கூறப்படும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஐவரும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளதாக தெரிவித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சஞ்சீவ படுகொலை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இஷாரா செவ்வந்தி பிரதான சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டார். இந்நிலையில், இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என கூறப்படும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Tamilwinஇஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது - தமிழ்வின்கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என கூறப்படும் 4 சந்தே...- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
முதலமைச்சர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தென்னாபிரிகா பற்றி கணிப்பு இன்னுமா மாறவில்லை?- நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
ஏதாவது பிரயோசனம் இருந்தா கழுவி ஊத்திக் கொண்டே இருங்க.- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
புகுந்த வீடு படத்தில் எல்லாமே அருமையான பாட்டுக்கள். இதில் மிகவும் பிரபலமாக இருந்த பாட்டு செந்தாமரையே செந்தேன் இதளே. கண்ணன் பிறந்த வேளையிலே மாடிவீட்டுப் பொண்ணு மீனா- Bond Master(பொண்ட் மாஸ்ரர்.
தகவல்களுக்கு நன்றி . அவரைப்பற்றி சரியாக நேர்த்தியாக எழுதியுள்ளீர்கள். எனக்கும் அவருடைய உண்மையான பெயர் இதைப் பார்த்துத் தான் அறிந்து கொண்டேன்.- நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
என்னடா இது மழை விட்டும் தூவானம் போகுதில்லையே?- ஹமாஸ் வசமிருந்த 20 பணயக்கைதிகள் விடுதலை, டிரம்ப் வருகை - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?
இரண்டு வருடங:களாக சிறை வைக்கப்பட்டிருந்த கைதிகள் மெலிந்து நலிந்து காணப்படுவார்கள் என எண்ணினேன். கமாஸ் பரவாயில்லையே. நன்றாக கவனித்துள்ளார்கள்.- Bond Master(பொண்ட் மாஸ்ரர்.
1970 களில் தனியார் பாடசாலைகளில் இரசாயனவியல் ஆசிரியராக மிகவும் பிரபலமாக இருந்தார்.அந்தக் காலங்களில் படித்தவர்களுக்கு இவரிடம் படிக்காவிட்டாலும் இவரைத் தெரியாமலிருக்க முடியாது. இரசாயனவியல் ஆசிரியராக சிறிபதி மாஸ்ரர் என்பவரும் இருந்தார்.இருவரும் மிகவும் பிரபலமாக இருந்தார்கள்.பொண்ட் மாஸ்ரர் பாடசாலைக்கு வெளியிலும் எல்லோருடனும் நண்பர்கள் போல பழகுவார். நானும் சிறிதுகாலம் இவரிடம் படித்தேன்.வகுப்புகளுக்கு ஒழுங்காக போவதில்லை. இவரிடம் இருந்த திறமை என்னவென்றால் சோதனை வருவதற்கு முதல் கடந்தகால வினாத்தாள்களை எடுத்து அக்குவேறு ஆணிவேறாக விழங்கப்படுத்தி தானே ஒரு வினாத்தாள் தயாரித்து மாதிரிச் சோதனையும் எழுத வைப்பார். இதனால் சோதனைக்கு வரும் கேள்விகள் இவருக்கு முதலே தெரியவருகிறது என்ற குற்றச் சாட்டுகளும் உண்டு. வீதிகளில் எப்ப கண்டாலும் 5 வினாடிகள் என்றாலும் கதைக்காமல் போக மாட்டார்.அவ்வளவு ஒன்றிப் போயிருந்தோம். 1977 களில் வெளிநாடு வெளிக்கிட்ட பின்பு என்ன ஆனார் என்றே இதுவரை தெரியாமல் இருந்தேன்.அனேகமாக வெளிநாடு சென்றிருப்பார் என எண்ணியிருந்தேன். இரு தினங்களுக்கு முன் முகப்புத்தகம் ஊடாக இந்த செய்தியைப் பார்த்த போது மிகவும் கவலையாக இருந்தது. இளம் வயதிலேயே காலமாகியுள்ளார்.காலமாகி 5 வருடங்களின் முன் காலமாகியுள்ளார். எப்படி காலமானார்?சுகயீனமாக இருந்தாரா?குடும்பம் பிள்ளைகள் என்று இருந்தாரா? எதுவுமே தெரியவில்லை. என்னைப் போல இதை வாசிக்கும் நீங்களும் இவரைப் பற்றி முன்னரே அறிந்திருக்கலாம்..இவரிடம் படித்திருக்கலாம்.ஏன் இவர் இறந்த செய்தி கூட தெரியாமல் இருக்கலாம். யாருக்காவது விபரங்கள் தெரிந்திருந்தால் அறியத் தரவும். நன்றி. ஆசிரியருக்கு கண்ணீர் அஞ்சலிகள்.- கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!
எழும்பி தமது வீட்டில் என்ன நடக்குது என்று பார்ப்பதில்லை அடுத்தவன் வீட்டில் என்ன நடக்குது என்று ஆராய்வதே வேலை.- மாவீரர் தளபதி விதுசா + விதுசன் இருவரின் தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையா இறைப்பாதம் அடைந்தார்
ஐயாவுக்கு புகழ் வணக்கம். தகவலுக்கு நன்றி சசி.- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அகஸ்தியன் - 27 புள்ளிகள் @Ahasthiyan முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள்.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
முன்னர் பதிவுகளை பார்த்துவிட்டு திரும்ப போனால் பார்த்த பதிவுக்கு போகும் இப்போது கொஞ்சநாளா பின்னுக்கு போனால் முகப்புக்கு போகிறது. இது ஒரு சினத்தை உண்டு பண்ணுகிறது.- கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!
நியூயோர்க்கில் கறுப்பினத்தவரை மணந்து சந்தோசமாக வாழ்கிறார்கள்.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நான் ஒருதடவை ஒள்நுழைந்தால் தானாக வெளியேற்றினாலே வெளியேறுவேன். - இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
Important Information
By using this site, you agree to our Terms of Use.