Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. அப்படித் தான் நாமும் கில்லாரி போட்டி போடும்போது எண்ணினோம். ஆனாலும் ரம்பைவிட எத்தனையோ லட்சக் கணக்கான கூடுதல் வாக்குகளைப் பெற்றார். இருந்தும் சில சிறிய மாநிலங்களில் தோற்றுப் போனார்.துவேசத்தை தூண்டிவிட்டதும் ரம்புக்கு ஒரு சாதகமாகிவிட்டது. நீங்கள் சொல்லும் எல்லா பயங்கரவாதிகளையும் தோற்றுவித்தது யார் என்று தெரியும் தானே. எனவே அவர்களைக் கையாள்வது பெரிய பிரச்சனை இருக்காது.
  2. கில்லாரி சில ஊழல் குற்றச்சாட்டுக்கும் மின்னஞ்சல்களை தவறாக கையாண்டதாகவும் சுமத்திய குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்ப முடியவில்லை.
  3. பைடன் இப்போது நின்றாலும் 47 வீதம் ரம்பும் 41 வீதம் பைடனும் தான். இது கமலா எடுக்கும் அடுத்த தனது 4 வருட தேர்தல் விஞ்ஞாபனத்திலும் உப ஜனாதிபதியை தெரிவு செய்வதிலும் இருந்து பெரிய மாற்றமே வரும். ரம் ஒரு பெண்ணை உப ஜனாதிபதியாக தெரிவு செய்திருந்தால் பெண்களின் வாக்குகளைக் கவர்ந்திருக்லாம். இப்போ குறைவான பெண்களின் வாக்குகளே ரம்புக்கு கிடைக்கலாம்.
  4. 7-8 வருடங்களாக எனது வாழ்வும் இந்த கரப்பந்தாட்டத்தில் பெரிய பங்காக இருந்தது.இதே மாதிரி ஆரம்பத்தில் கட்டுப்பந்து.பின்னர் கட்டில்லாத பந்து. ஊருக்குள்ளும் அயல் ஊர்களிலும் பெயர் சொல்லக் கூடியளவுக்கு விளையாடினோம். ஊரிலிருக்கும் போது இரவு மின்வெளிச்சத்தில் பல போட்டிகள் விளையாடினோம். அசைபோட வைத்ததற்கு நன்றி.
  5. அவரைத் தான் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளார். இருக்கும் குறுகிய காலத்தில் உப ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்ய வேண்டும். பைடனின் கோரிக்கையை கமலா கரீஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏன் தேர்தலில் நிற்கவில்லை என்பதை அறிவிக்கவே வேண்டும். அதை எப்படி அறிவிக்கப் போகிறார் என்று யோசிக்க நீங்கள் எழுதியதைத் தவிர வேறு என்ன தான் சொல்லப் போகிறார்.
  6. ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார். 81 வயதான ஜனாதிபதியின் சகிப்புத்தன்மை மற்றும் மன திறன்கள் குறித்து பல வாரங்களாக கவலைப்பட்ட பின்னர் ஜனாதிபதி ஜோ பிடனின் ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக திறம்பட பிரச்சாரம் செய்வதற்கும் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நாட்டை ஆளுவதற்கும் அவரது திறன் குறித்தும் பல சந்தேகங்கள் உள்ளன. பிடனின் முடிவு, அவரது எஞ்சிய காலத்திற்கான ஜனாதிபதியின் கடமைகளை நிறைவேற்றுவதற்கான அவரது திறனைப் பற்றிய கேள்விகளை எழுப்பக்கூடும். பல தசாப்தங்களில் ஒரு அமெரிக்க ஜனாதிபதி மறுதேர்தல் ஓட்டத்தில் இருந்து வெளியேறுவது இதுவே முதல் முறை, ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் 1968 இல் இரண்டாவது முழு பதவிக்காலத்தை நாடுவதற்கு எதிராக முடிவு செய்ததை நினைவு கூர்ந்தார் - இருப்பினும் பிடனின் முடிவு ஜான்சனின் அறிவிப்பை விட சில மாதங்களுக்குப் பிறகு பிரச்சாரத்தில் வந்தது. இது ட்ரம்பின் உயிருக்கு எதிரான முயற்சியை உள்ளடக்கிய ஒரு மிக அதிகமான அரசியல் பிரச்சாரத்தின் சமீபத்திய அதிர்ச்சியூட்டும் வளர்ச்சியாகும். ஆனால் படுகொலை முயற்சி மற்றும் பந்தயத்தில் அதன் கொந்தளிப்பான விளைவு கூட காங்கிரஸ் ஜனநாயகக் கட்சியினரிடையே பிடென் எதிர்கொள்ளும் ஆதரவின் இழப்பை இடைநிறுத்த முடியாது, அவர்கள் நவம்பரில் ஒரு துடைப்பம் தங்கள் வாக்குச் சீட்டுப் போட்டிகளையும் மூழ்கடிக்கும் என்று பெருகிய முறையில் உறுதியாக நம்பினர். https://www.cnn.com/politics/live-news/biden-trump-election-07-21-24/index.html
  7. பலகாரங்களை எப்படி ஆட்டையைப் போடுவது என்பதைப் பற்றியும் ஒரு காணொளி போடவும் ஐயா. எதிர்காலத்தில் முயற்சி பண்ணத் தான். இங்கே வரியைக் காணலையே? கப்பமாகவே தெரிகிறது. இது நம்ம இலங்கை அரசு போலவல்லவா இருக்கிறது.
  8. நேற்று ஐயா விக்கி அவர்கள் முதலாவது வாக்கை பொதுவேட்பாளருக்கும் இரண்டாவதை மக்கள் தாம் விரும்பியவர்களுக்கும் வாக்களிக்கலாம் என்றார். இந்ததடவை தேர்தலில் இரண்டாவது வாக்குத் தான் முக்கியமானது என்கிறார்கள். அப்ப இதனூடாக சொல்லப்படும் செய்தி தான் என்ன?
  9. ஜனாதிபதி தேர்தல் ஒரு வருடத்துக்கு ஒத்திவைப்பது தான் நல்லதென்று பழைய உயர்நீதிமன்ற நீதிபதி சொல்லியிருந்தாரே? ரணிலுக்கு வெற்றிவாய்ப்பு இல்லாமல் போனால் பிற்போடலாம்.
  10. ஏனய்யா இந்த வன்மம்? வைத்திய மாபியாக்களுடன் சேர்ந்துவிட்டீர்களா? டாக்ரர் அர்சுனா எழுதிய குற்றச்சாட்டுக்களை விட்டுவிட்டு அவரை அங்கொடைக்கு அனுப்பினால் பிரச்சனை முடிந்ததா? இதைத் தானே வைத்திய மாபியாக்களும் விரும்புகிறார்கள்.
  11. டாக்ரர் ஜெயகுமாரன் யாழிலிருந்து யாரால் ஏன் எப்படி துரத்தப்பட்டார்?
  12. கல்லோ கல்லோ கல்லோ யாழ்ப்பாண விமானநிலையமும் சர்வதேச விமானநிலைமென்றே சொல்லுகிறார்கள். எப்படி ஐயா யாழ்ப்பாணத்தை மறந்தீர்கள்?
  13. தேர்தலை எப்படி பிற்போடலாம் என்றதையும் சொல்லுகிறார். தமிழ்சிங்கள கலவரத்தை உண்டாக்கி அதைக்காட்டி தேர்தலை பிற்போடலாம் என்று ஐயாவே அவர்களுக்கு நல்ல காரணத்தை சொல்லுகிறார்.
  14. ஐயா அடுத்த ஒரு வருடத்துக்கு ஜனாதிபதி தேர்தலை பிற்போட பச்சைக்கொடி காட்டுகிறார்.
  15. இந்த 22வது அரசியலமைப்பு திருத்த விபரம் பற்றி யாருக்காவது தெரியுமா?
  16. இந்த மனித புதைகுழியைப் பற்றி எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் மெளனமாக இருப்பது வேதனை தருகிறது.
  17. பல வருடங்களாக பதவியில் இருந்து கொண்டு தமிழ் மக்களுக்கு நன்மை செய்யாத ஊழல் மலிந்த அரச துறைகளை தட்டிக் கேட்காத இந்த தலைவர்கள் எங்களுக்கு தேவையா ஒரு வைத்தியசாலைக்கு மாறுதலாகி போன ஒரு மருத்துவ அதிகாரி 14 நாட்களில் அங்கு அதாவது சாவகச்சேரி மருத்துவமனையில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற ஊழல்கள், போதைப் பொருள் விற்பனை, மருத்துவம் பார்க்க வரும் மக்களை தனியார் வைத்தியசாலைக்கு அனுப்பி விடுதல், போன்ற இன்னும் பல ஊழல்களை 14 நாட்களில் வெளிக்கொண்டு வர முடியுமானால், ஏன் அரசாங்கத்தால், மத்திய அமைச்சர்களால், முன்பிருந்த மாகாணசபை அமைச்சர்களால், அரசாங்க அதிபரால், வட மாகாண ஆளுநரால், மக்கள் அதிகாரம் பெற்று வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏன் ஏன் இந்த ஊழலை தடுத்து நிறுத்த முடியவில்லை. விடுதலைப் போராட்டம் தொடங்கிய ஆரம்ப காலங்களில் மக்களை ஊழல் செய்யவிடாமல் ஆயுதம் தூக்கிய இயக்கங்களே ஆயுத முனையில் விடுதலை என்ற பெயரில் எல்லா ஊழல்கள் போன்ற எல்லா நாச வேலைகளையும் மக்களுக்கு செய்தார்கள். 2009 க்கு பின் முன்பு தமிழ் மக்களுக்கு உரிமை பெற்றுக் கொடுக்க புறப்பட்ட மிஞ்சி இருந்த தமிழ் இயக்கங்களின் தலைவர்கள் இலங்கையின் மந்திரிகள் ஆனார்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள், பதவிப் பெற முடியாதவர்கள் கட்சித் தலைவர்கள் ஆனார்கள். அவர்கள் இன்றும் தமிழ் தேசியம் தமிழ் மண்ணுக்காக போராடுகிறோம் என்று தான் கூறி வருகிறார்கள். 2009 முதல் இன்று வரை அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் தமிழ் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு சேவை செய்யும் அரசாங்க துறைகளில் நடக்கும் மிக பாரதூரமான ஊழல்கள் குற்றங்களை தமது பதவிகளைக் கொண்டு தடுக்கவோ அம்பலப்படுத்தவோ இல்லை, ஏன் அவர்கள் அதை செய்யவில்லை. அந்த ஊழல் பணம் இவர்களுக்கும் பங்கு போகிறதா? மருத்துவத்துறையில் ஒரு மருத்துவர் அர்ச்சனா 14 நாளில் ஊழலுக்காக ஒரு போராட்டத்தை நடத்த முடியும் என்றால், பல வருடங்களாக அமைச்சராக இருப்பவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசாங்க துறைகளில் நடக்கும் ஊழல்கள் தெரியாதா. மருத்துவர் அர்ச்சனா ஊழல் பற்றி போராட தொடங்கியதும், ஊழல் பற்றி வாய்மூடி மௌனியாக இருந்த மக்கள் முதல் முறையாக வழியில் வந்து போராடத் தொடங்கினார்கள். . .. மக்கள் போராடத் தொடங்கியதும் அரசாங்கமும் மந்திரியும் ஓடோடி வருகிறார்கள். ஊழலை ஒழிப்பதற்காக அல்லது ஊழலை மறைப்பதற்காகவா. வரும் செய்திகளை பார்க்கும்போது எல்லா அரசாங்கத் துறைகளிலும் மிகப்பெரும் ஊழல்கள் நடப்பதாகவே தெரிகிறது. மருத்துவ துறையில் அர்ச்சனா செய்தது போல், மற்ற துறைகளிலும் யாரும் நல்லவர்கள் வல்லவர்கள் பொது வழியில் தெரியக்கூடியதாக போராட்டங்களை தொடங்கினால் தான் அரசாங்கமும் அமைச்சரும் வருவார்களா. அவர்கள் வந்தாலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வர மாட்டார்கள். அவர்களுக்கு பதவி வேண்டும் தங்களுக்கு மட்டும் அரசாங்கத்தின் உதவி வேண்டும் என்று தமிழ் மக்களை ஏமாற்றி திரிகிறார்கள். .... தமிழ் அமைச்சரும் அரசாங்க அதிபரும், வட மாகாண ஆளுநரும் தங்கள் பதவியையும் செல்வாக்கையும் பயன்படுத்தி எல்லா அரசுத் துறைகளிலும் உள்ள முறைகேடுகளை களைந்து மக்களுக்கான சேவைகளை செய்து தாங்களே உண்மையான மக்கள் சேவகர்கள் என்று நற்பெயர் எடுக்க வேண்டும். தமிழ் அமைச்சரும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சி வேறுபாடு இன்றி அழைத்து சிறு சிறு குழுக்களாக போட்டு எல்லா அரசு துறைகளிலும் ஆய்வு செய்து, பொதுமக்களின் கருத்துக்களையும் கேட்டு குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். மருத்துவர் அர்ஜுனா போல் மற்ற துறைகளிலும் யாரும் போராடினால் தான் மற்ற நிகழும் என்றால் தமிழ் மக்களுக்கு அமைச்சரும் வேண்டாம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் வேண்டாம். ஆளுநர் அரசாங்க அதிபர்களும் வேண்டாம் இனியாவது உண்மையான மக்கள் பிரதிநிதிகளாக செயல்பட முடிவு செய்யுங்கள். https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0341331Yx66fziabTEM4vuLTivjo6UXeMuRNJtQ4tygbL21bJ3GPa56hHQbyPoL1PEl&id=100000253836437&mibextid=cr9u03
  18. நேற்று வைத்தியர் நடராஜா. ஜெயகுமார், இன்று வைத்தியர் இராமநாதன். அர்ஜுனா, நாளை?,,,,,,,,,,,🤒🤒 “எனது வீட்டை அடித்து நொருக்கி எரித்து என்னை யாழில் இருந்து விரட்டியவர் டொக்கடர் சத்தியமூர்த்தி” டொக்டர் நடராஜா ஜெயகுமாரன் யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் புற்றுநோய் நிபுணராகக் கடமையாற்றிய தன்னை, ஊழல்கலை வெளிப்படுத்தியதற்காக, உயிர் அச்சுறுத்தல் கொடுத்த வீட்டை அடித்து நொருக்கி எரித்து யாழில் இருந்து விரட்டி அடித்தனர், யாழ் மருத்துவ அதிகாரிகள் எனக் குற்றம்சாட்டுகின்றார் புற்றுநோய் மருத்துவ நிபுணர் நடராஜா ஜெயக்குமாரன். 2004 முதல் 2012 யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாளையில் கடமையாற்றிய இவர், அங்கு நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டுவந்தால் தனக்கு எதிராக கடுமையாகவும் மோசமாகவும் நடந்து கொண்டதாக யாழ் போதனா வைத்தியசாலையின் அத்தியேட்சகர் டொக்கடர் சத்தியமூர்த்தி மீது மிகக் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். யூலை 19 அன்று இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து ஒளிபரப்பாகும் கபிடல் தொலைக்காட்சியின் ‘அதிகாரம்’ நேர்காணலில் ஊடகவியலாளர் சியா உல் ஹஸ்ஸன்க்கு பதிலளிக்கும் போதே அவர் இக்ககுற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். டொக்கடர் சத்தியமூர்த்தியின் பெயரைச் சொல்வதற்கே அருவருப்படைந்த டொக்டர் நடராஜா ஜெயகுமாரன், அவருடைய பதவியைக் குறிப்பிட்டே இந்த விமர்சனத்தை வைத்தார். நேர்கண்ட சியா உல் ஹஸ்ஸன் டொக்டர் சத்தியமுமூர்த்தியின் பெயரைக்குறிப்பிட்டு இக்குற்றச்சாட்டை வைத்த போது அதனை ஆமோதித்தார். தனது குடும்பத்தையும் இவர்கள் வன்முறையால் அச்சுறுத்தியதால், தன்னால் மேற்கொண்டு அங்கு பணிபுரிய முடியவில்லை என்றும் அதனைத் தொடர்ந்து மகரகம தேசிய புற்றுநோய் மருத்துவமனை – அபேஸ்கா வில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக புற்றுநோய் சிகிச்சை நிபுணராக அவர் கடமையாற்றி வருகின்றார். யாழ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் டொக்டர் அர்சுனாவால் அம்பலத்துக்கு வந்ததையடுத்து யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தனது சகோதரன் இராசரத்தினம் பிரகாஸ் இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும் முதலுதவிச் சிகிச்சை கூட வழங்கபடாமல், யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கும் உடனயாக சிகிச்சை அளிக்கப்படாமல் எட்டு மணி நேரத்துக்குப் பின், இரத்தப்போக்கால் உயிரிழந்த செய்தி யூலை 14 தேசம்நெற் இல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் உள்ள புற்றுநோய் மருத்துவ நிபுணர் டொக்டர் கிருசாந்தி தங்களது தந்தையர்களுடைய புற்றுநோய்யை குணமாக்குவதிலோ நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதிலோ எவ்வித அக்கறையும் காட்டவில்லை என கொடிகாமம், சுன்னாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு ஆண்மகன்கள் நேரடிச்சாட்சியமளித்தனர். இவர்கள் மகரகமையில் டொக்டர் நடராஜா ஜெயக்குமாரனின் சிகிச்சையால் தங்கள் தந்தையர் குணமமைந்ததாகவும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை நம்பியிருந்திருந்தால் தங்கள் தந்தையர்கள் உயிரோடு இருந்திருக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தனர். புற்றுநோய்க்குள்ளான நோயாளியின் கணவர் தன்னுடைய மனைவிக்கு நடந்த கொடுமையை விபரிக்கையில் “ஆறாவது தடவை மருந்து ஏற்றும் காலம் தவறிவிட்டது” என்று டொக்டர் கிரிசாந்தி தெரிவித்து இருக்கிறார். “அப்ப என்ன செய்யலாம் டொக்டர்?” என்று கணவர் கேட்க, “வீட்டை கூட்டிக்கொண்டு போய் நாளைக் எண்ணிக்கொண்டிருங்கோ” என்று அலட்சியமாக அதிகாரத் தோரணையில் தெரிவித்ததாக அக்கணவர் கண்கலங்கியவாறு தெரிவித்தார். அதன் பின் இந்தியா அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று மீண்டும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்குச் சென்ற போது “எங்கேயோ எல்லாம் போய் நீங்கள் ரீட்மன்ட் எடுத்திட்டு வாறத பார்க்கவோ நான் இங்க இருக்கிறன்” என்று டொக்டர் கிருசாந்தி தெரிவித்ததாக அக்கணவர் தெரிவித்தார். மேலும் சிகிச்சைக்கு வந்து உதவும்படி கேட்ட போதும் டொக்டர் கிருசாந்தி மறுத்துள்ளார். எல்லாம் கையறுந்த நிலையில் மகரகம புற்றுநோய் மருத்துவ நிலையத்துக்குச் சென்றபோது காலம் கடந்துவிட்டது. அங்கும் புற்றுநோயாளர்கள் எண்ணிக்கை கூடுதாலக இருந்ததால் தேவையான சிகிச்சைகள் உடன் கிட்டவில்லை. பாதிக்கப்பட்ட பெண் அங்கு மரணத்தை தழுவினார். டொக்டர் நடராஜா விஜயகுமாரனின் நன்மதிப்பை அறிந்து பலர் யாழில் இருந்து மகரகம சென்று சிகிச்சை எடுக்கின்றனர். முக்கிய சிகிச்சைகள் முடிவடைந்து குணமானவர்கள் ஊர் திரும்பியபின் வழமையான பரிசோதணைகளை யாழ் தெல்லிப்பளையில் செய்யும்படி மகரமக வைத்தியசாலை கடிதம் கொடுத்து விட்டால், யாழ் தெல்லிப்பளையில் இந்த நோயாளிகளை சிகிச்சை அளிக்காமல் அவர்களை அலைச்சலுக்கு உள்ளாக்குவதாக டொக்டர் நடராஜா ஜெயக்குமாரன் தெரிவிக்கின்றார். இது தொடர்பில் டொக்டர் சத்தியமூர்ந்தி உட்பட ஐவர் கையெழுத்திட்டு டொக்டர் நடராஜா ஜெயகுமாரனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் அவர் தேவையற்ற விதத்தில் தன்னுடைய நோயாளிகளை தங்களுக்கு அனுப்பி வைப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார். ஒவ்வொரு நோயாளிக்கும் தனக்கு பொருத்தமான வசதியான இடத்தில் சிகிச்சையைப் பெறுவதற்கு முழு உரிமையும் உண்டு. அரசாங்கம் இவர்களுக்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கே சம்பளம் வழங்குகிறது. ஆனால் டொக்டர் சத்தியமூர்த்தி தனிப்பட்ட முறையில் டொக்டர் நடராஜா ஜெயகுமாரனைப் பழிவாங்கவே இவ்விதமாக நடந்தகொள்வதாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர். இவர்கள் மருத்துவத்துறையை அபிவிருத்தி செய்வதற்குப் பதிலாக அங்குள்ள கண்ணியமான கறைபடியாத மருத்துவர்களை அதிகாரிகளை விரட்டுவதிலும் யாழ் நோக்கி வரும் சிறந்த மருத்துவர்களை அதிகாரிகளை விரட்டுவதிலுமே குறியாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் வலுவடைந்து வருகின்றது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் என்ன நடந்ததோ அதுவே தனக்கு 2012 இல் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நிகழ்ந்தது என்கிறார் டொக்டர் நடராஜா ஜெயக்குமாரன். https://m.facebook.com/story.php?story_fbid=pfbid029pAjCQiXQV2sUME3vjdswko1PW8b5ZEHtFNh5RvmMg58gaU8v6JCkpxf3s8Xmuf6l&id=100075274747190&mibextid=cr9u03
  19. மாட்டுவண்டிலின் இரு மாடுகளும் கட்டுமிடமான நுகம் பூவரசிலேயே செய்வதாக எண்ணுகிறேன். தவறாகவும் இருக்கலாம். நுகம் மஞ்சவுண்ணாவிலும் செய்வார்கள் என எண்ணுகிறேன்.
  20. எங்கள் வீட்டிலும் சுற்றிவர பூவரசு முருங்கை கிளுவை கிளிசறியா இப்படி பல மரங்கள் வீட்டு எல்லையாக இருந்தது. ஆடு மாடுகளுக்கு குழை.பாடசாலை போகும் போது சாப்பாடு கட்ட பெரிய மூன்று இலை காணும். அப்பாவுக்கு கோபம் வரும் போதெல்லாம் எம்மை பதம் பார்த்ததும் இதே பூவரசு தான். அத்தோடு இடியப்ப உரல் செய்யவென்று பெரிய கொழுத்த பூவரசுகளை விட்டி எடுப்பார்கள். இப்ப என்ன கொடுமை என்றால் வீட்டுக்கு வீடு மதில்களைக் கட்டி அழகு பார்க்கிறார்கள். இந்தப் பாட்டு வரமுதலே பூவரசு எம்முடன் வாழத் தொடங்கிவிட்டது. இல்லை இல்லை பூவரசுடன் நாம் வாழத் தொடங்கிவிட்டோம். இதில் இடியப்பம் அவித்தால் நன்றாக உலர வைக்க வேண்டும்.இல்லாவிட்டால் வெகுவிரைவிலேயே சக்குப் பிடித்துவிடும். எங்க வீட்டில் அவசரஅவசரமாக எங்கோ புறப்பட்ட போது இப்படி நடந்து அத்தனையும் எறிந்தது.
  21. விழுந்தாலும் மீசையில் மண்படக் கூடாது பாருங்கோ.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.