Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. நான் இதுவரை இலங்கை தேர்தல்களில் வாக்களிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு வாக்கைச் செலுத்தினால் போதும் என்று தான் எண்ணியிருந்தேன். ஆனாலும் ஏமாற்றுவதற்கு வசதியாக இரண்டாவதாகவும் ஒருவருக்கு வாக்களிக்கும் முறை இருக்குதென்பதை இப்ப தான் தெரிந்து கொண்டேன். ஆரம்பத்தில் ஐயா விக்கினேஸ்வரன் தான் பொது வேட்பாளராக நிற்கிறேன் என்றதும் ஆமால்ல யாரோ ஒருவர் நின்று எல்லோரும் அவருக்கு வாக்கு போடலாம் தானே என்று தான் எண்ணினேன். ஆனால் இவர்கள் ஏமாற்றுகிறார்கள் 50 வீத வாக்கு கிடைக்கவில்லை என்றால் இரண்டாவதாக ரணிலுக்கு போடுவார்கள். இது முறைமுகமாக ரணிலுக்கான ஆதரவு என்று கஜேந்திரன் சொன்னபோதே இப்படி ஒரு சங்கதி இருக்கிறதா என்று விசாரித்து பார்த்ததில் அதிலும் உண்மை இல்லாமல் இல்லை. அடுத்து இப்பவிருந்தே மக்களை தேர்தலுக்கு தயார்படுத்த வேண்டுமே ஆனால் தமிழர்கள் தரப்பில் எவருமே அதற்கான ஆயத்தங்கள் செய்யவில்லையே என்ற ஆதங்கங்தினாலேயே இதை எழுதினேன். நன்றி சுவி, கிருபன்.
  2. சித்தார்த்தனை விட்டுட்டுயளோ? அவருக்கு வேறுவழிகள் இருந்ததால் இதில் ஈடுபடலையோ?
  3. உண்மை தான் எவ்வளவு தான் நாங்கள் குத்திமுறிந்தாலும் தாயகத்தில் உள்ளவர்கள் இவற்றைக் கையாள வேண்டும்.
  4. போதைவஸ்து ஒரு சாட்டு. ஏன் பாட்டியை விட்டுட்டு பேத்தியைப் பிடித்துள்ளார்? குழந்தைக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
  5. அண்மையில் கட்டாக்காலி நாய்கள் மாடுகள் எருமைகள் வீதி விபத்துக்குள்ளாகி மக்கள் மிகவும் கஸ்டத்துக்குள்ளாகிறார்கள். தூரத்தே வரும்போதே முன்னால் என்ன இருக்கிறது?நடக்கிறது? சகலதும் தெரிந்தும் அதே வேகத்தில் போக முனைவதால்த் தான் இப்படியான விபத்துக்கள் நடைபெறுகின்றன. சாரதிகளுக்கு இதைப்பற்றிய விளிப்புணர்வு தேவை.
  6. நுணாவிலானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தகவலுக்கு நன்றி அக்கா.
  7. இப்படியான. ஒருவருடன் கூடவே பயணித்திருக்கிறீர்கள் என்று வாழ்நாளில் சந்தோசப்படுங்கள். ஒரு விளையாட்டு வீரன் மிகவும் பரந்த மனப்பான்கும் எல்லோருடனும் சேர்ந்து பழகும் தன்மையும் வெற்றி தோல்விகளை தாங்கக் கூடியவனாகவும் இருப்பார்கள் என்பதை உங்கள் நண்பன் நிரூபித்துள்ளான். அதேநேரம் விளையாட்டு வீரர்கள் பலர் சிறிய வயதில் ஆங்காங்கே அடிபட்ட பழைய காயங்களால் இளமையிலோ முதுமையிலோ இப்படியாக சுகவீனமடைகிறார்கள். உங்களுடன் எங்களையும் சேர்த்து வேலைத் தளத்திலிருந்து கடைசி ஊர்வலம்வரை அழைத்து சென்றுவிட்டீர்கள். HATS OFF.
  8. சுமந்திரன் சிறந்த சட்டத்தரணி. சிறந்த ஆளுமை மிக்கவர் . ஆனாலும் தமிழரசுக் கட்சிக்குள் சம்பந்தமே இல்லாமல் எப்படி உள்வாங்கப்பட்டார் என்ற மர்மம் நிறைந்த கேள்வி பலரிடமும் உள்ளது. இதனாலேயே இவ்வளவு திறமைகள் இருந்தும் பலரால் கேள்விக்குள்ளாக்கப்படுகிறார். இதே கேள்வி எனக்கும் இருக்கிறது. சுமந்திரன் மட்டுமல்ல சாணக்கியன் கூட இதே மாதிரி பின் கதவால் வந்தவர்கள் என்ற கருத்து பரவலாக எல்லோரிடமும் இன்னமும் இருக்கிறது. கடந்த தேர்தலில் சுமந்திரன் வென்றதும் கூட இன்னமும் பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சிங்கள இனவாதிகளின் வேண்டுதலின் பேரிலேயே சுமந்திரனும் சாணக்கியனும் தமிழரசுக் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டதாகவே பலரின் கருத்தாக உள்ளது.
  9. இவ்வளவு நாளும் காதலர் தினத்தை யார் தொடக்கியிருப்பார்கள் எ ன்று. இப்ப தான் தெரியுது திரு.திரு தான் தொடக்கியிருக்கிறார்.
  10. தமிழரசுக்கட்சி மற்றைய கட்சி உறுப்பினர்களுக்கு முதுகில் குத்திக் கொண்டிருந்தது. இப்போது அவர்களுக்கே ஆப்பு இறுகியுள்ளது. அமெரிக்காவும் இந்தியாவும் என்ன சொல்லுதோ அதை மட்டும் செய்வது. எமது மக்களுக்கு என்ன தேவை என்ற எண்ணமே என்றும் வந்ததில்லை.
  11. ரஞ்சித் உங்களது ஆங்கில மொழிபெயர்ப்பை எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டிருக்க இப்படி ஒரு குண்டைத் தூக்கி போடுகிறீர்கள்? இது சும்மா கதைக்காகத் தானே? எமக்கு ஓரளவு ஆங்கிலம் தெரிந்தாலும் கதைத்துப் பழகாததால் ரொம்பவும் கூச்சமாக இருக்கும்.
  12. கன்சாஸ் சிட்டி சீஃப்ஸின் சூப்பர் பவுல் வெற்றிப் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் புதன்கிழமை குறைந்தது ஒருவர் இறந்தார் மற்றும் குறைந்தது 21 பேர் காயமடைந்தனர், தலைமைகளின் சமீபத்திய NFL பட்டத்தைக் கொண்டாடும் பாரிய கூட்டத்திற்கு ஒரு மகிழ்ச்சியான மதியத்தை உடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 3 பேர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை கண்டறிய அதிகாரிகள் இன்னும் பணியாற்றி வருகின்றனர் என்று கன்சாஸ் நகர காவல்துறை தலைவர் ஸ்டேசி கிரேவ்ஸ் தெரிவித்தார். இறப்பைத் தவிர, மேலும் 21 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று கன்சாஸ் நகர தீயணைப்புத் தலைவர் ரோஸ் கிரண்டிசன் தெரிவித்தார். https://www.cnn.com/2024/02/14/sport/kansas-city-chiefs-parade-super-bowl-patrick-mahomes-spt-intl/index.html
  13. மறக்க முடியாத நாள். நாவற்குழி முகாம் விழ வேண்டியதற்கு பதிலாக எமது தளபதிகளும் வீரமறவர்களும் வீழ்ந்த நாள். பொன்னம்மான் என்னும் குகன் ஒரே வகுப்பில் வேறொரு பிரிவில் படித்தவர். வீர வணக்கங்கள்.
  14. இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024 இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இந்த வருடம் நடக்க இருப்பதாக கூறுகிறார்கள்.இந்த தேர்தலுக்காக சிங்கள கட்சிகள் இப்போதிருந்தே ஆயத்தமாகத் தொடங்கிவிட்டன. ஐக்கிய தேசிய கட்சி ராஜபக்ச கட்சி சார்பாக ரணிலும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் சயித் பிரேமதாசவும் மக்கள் விடுதலை முன்னணி சார்பாக அனுர குமாரவும் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.இனிவரும் காலங்களில் இன்னும் புதிதாக யார் வேண்டுமானாலும் களமிறங்கலாம். இதுவரை இலங்கையில் நடந்த எந்த ஒரு தேர்தல்களிலும் நான் வாக்குச் செலுத்தவில்லை.இலங்கை ஜனாதிபதி தேர்தல்கள் சட்டதிட்டங்களைப் பற்றி எதுவும் இதுவரை அறிய முற்படவில்லை. எனவே இந்த வருடம் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் எந்த சிங்கள கட்சிக்கும் வாக்கு போட்டு பிரயோசனமில்லை.வழமை போன்றே ஏதாவது உத்தரவாதம் தருவார்கள்.இல்லாவிட்டால் வெளியே சொன்னால் சிங்கள மக்கள் இதைச் சாட்டாக வைத்தே எமக்கு வாக்குப் போட மாட்டார்கள் என்று சொல்லி இரகசியம் பேணுவார்கள்.வென்ற பின்பு இப்படி கதைத்ததையே மறந்துவிடுவார்கள். ஆகையினால் அடுத்த தேர்தலில் யாராவது ஒரு தமிழர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால் தமிழர்கள் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணினேன். ஆனாலும் இப்போ தான் தெரிகிறது போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை என்றால் இரண்டாவது யாருக்கு புள்ளடி போட்டிருக்கிறார்கள் என்று பார்த்து அதையும் கணக்கிலெடுப்பார்கள் என்கிறார்கள். அப்படியானால் தமிழர் ஒருவர் பொது வேட்பாளராக களமிறங்கி பிரயோசனம் இல்லை.இந்த நிலையில் பொது வேட்பாளராக இரு தமிழர்கள் களமிறங்கி முதலாவதாகவும் இரண்டாவதாவும் இரு தமிழர்களுக்கும் வாக்குப் போட்டால் தமிழர்களின் வாக்குகள் சிங்கள கட்சிகளுக்கு போவதை தடுக்கலாமா? இப்படி செய்வார்களாக இருந்தால் முதலாவது அல்லது இரண்டாவது வேட்பாளரை மலையகத் தமிழர் ஒருவரை நிறுத்தலாம். இதுவரை ஜனாதிபதி தேர்தலுக்காக மக்களை ஒன்று சேர்த்து அவர்களை எந்த ஒரு தமிழ் அரசியல் கட்சியும் ஒழுங்குபடுத்தியதாக தெரியவில்லை. வெளிநாடுகளே இலங்கையில் யார் ஜனாதிபதியாக வரப் போகிறார் என்று கருத்துக் கணிப்புகளை நடாத்தி முன்னணியில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள தொடங்கிவிட்டார். ஐரோப்பா அமெரிக்கா போன்றவை ரணிலுக்கு ஆதரவாக மறைமுகமாக பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.எதிரும் புதிருமாக இருந்த இந்தியாவும் ஜேவிபியும் ஒன்றாகியுள்ளனர்.இது யாருமே எதிர் பார்க்க ஒன்று.அரசியலில் வெட்கம் மானம் சூடு சுறணை இருக்கக் கூடாது என்பார்கள்.அதையே தான் இந்தியா செய்துள்ளது. மாலைதீவை விட்ட மாதிரி இலங்கையையும் விட தயாரில்லை என்பதையே இந்தியாவின் நடவடிக்கைகள் காட்டுகின்றன. அனுர குமாரவைக் கூப்பிட்டு கதைத்த பின்பும் ஜேவிபி ஆதரவாளர்களிடமிருந்து இந்தியாவுக்கு எதிரான பழைய போக்கு மாறவில்லை என்கிறார்கள். வெளிநாடுகள் தங்களுக்கேற்ற அரசியல் தலைவர்களை கொண்டுவர முயற்சி பண்ணுகிறார்கள்.இதில் அவர்களை குறை கூறி பிரயோசமில்லை. இதே நிலையை அமெரிக்க இந்திய சங்கீதத்துக்கு ஆடாமல் மற்றவர்களை ஆட வைக்க வேண்டும்.
  15. புலனாய்வுப் பிரிவுகளின் கெடுபிடிகளால்த் தான் போராளிகள் தனித்து நிற்கிறார்கள் என எண்ணுகிறேன்.
  16. இன்னுமொரு மீன்பாரை. இது கருவாடும் நன்றாக இருக்கும்.
  17. எமது ஊரில் கூழுக்கு கலவாய் மீன்(கூடுதலாக தலை) கறிக்கு விளைமீன் ஓரா ஒட்டி பொரியலுக்கு சூடை,சூவாரை,கொய்மீன்.கொய்மீன் குழம்பும் சுவை.ஆனால் முள்ளு. இந்த அந்தோனியார் கோவில் பக்கத்திலேயே நல்ல ஒரு நண்பன் இருந்தான். பெயர் கனீசியஸ்.கென்றி என்று வீட்டுப் பெயர்.இப்போது ஜேர்மனியில் இருப்பதாக கேள்வி.தொடர்புகள் ஏதும் இல்லை. வாழ்க்கையில் ஒரேஒரு தடவை ஆமைக்கறி இவரது வீட்டிலேயே சாப்பிட்டேன்.
  18. ஈழத்தில் விரட்டப்பட்ட தென்னிந்திய கலைஞர்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.