Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. இன்று இந்த தொடரை பார்த்து முடித்தேன். நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்று எண்ணியிருந்த படம். தனிப்பட்ட ரீதியில் ஏனோ தெரியவில்லை வீரப்பன் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது. எல்லைக் கிராம மக்களை கர்நாடக தமிழ்நாட்டு காவல்துறையினர் மிகவும் கொடுமைப்படுத்தியுள்ளனர். பெண்கள் குழந்தைகளைக் கூட விட்டுவைக்கவில்லை. ராஜகுமார் கடத்தல் மிகவும் துணிகரமாக திட்டம் போட்டு செய்தது மட்டுமன்றி 90 நாட்கள் கைதியாகவும் இருந்திருக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் விடுதலையின் போது இருவருமே கண்ணீர் மல்ல கட்டித் தழுவினார்களாம். கடைசியில் இலங்கை போய் தலைவர் பிரபாகரனுடன் வாழ விரும்பியதை வைத்து தலைவர் பிரபாகரன் உன்னை அழைத்து வரச் சொன்னார் என்று அம்புலலன்ஸ் ஆக உருமறைப்பு செய்யப்பட்ட வாகனத்தில் ஏற்றிக் கொண்டுவந்து சுட்டுக் கொன்றதாக காட்டுகிறார்கள். ஆனாலும் நெத்தியில் உள்ள சூட்டைப் பார்த்து இது தானாகவே தனக்கு வெடி வைத்ததாக மற்றவர்கள் சொல்கிறார்கள். வழமை போல இதிலும் எமது தலைவரை பாவித்தே வீரப்பனின் முதுகில் குத்தியுள்ளார்கள். விரும்பியவர்கள் Nét Flex மூலம் பார்க்கலாம்.
  2. பிள்ளையையும் நுள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவிடுதும் இவர்கள் தான். சட்டம் கொண்டுவருமட்டும் சத்தமே இல்லாமல் இருந்துவிட்டு நிறைவேற்றிய பின் தாங்களும் குரல் கொடுத்தோம் என்பதற்காக அமெரிக்க அம்மையாரும் இதற்கு எதிராக நேற்று கருத்து வெளியிட்டிருந்தா.
  3. எப்படி முதுகில் குத்துவதென்பதையும் உலகுக்கு போதித்த நாடும் என்று சொல்லலாமே.
  4. நீங்கள் யாழ்.களத்தின் ராஜதந்திரி தானே நோ நோ ஐயா ஜேர்மனியின் ராஜதந்திரி. ஒரு பியர் அடித்துவிட்டு குப்புற படுக்கிறவை அங்து போய் என்ன செய்ய? போத்தலைப் பார்த்தாலே போதும்.
  5. பவதாரணியின் திடீர் மரணம்: கொழும்பில் நடத்தப்படவிருந்த இளையராஜாவின் நிகழ்ச்சி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம். இலங்கையில் நாளை(27) மற்றும் நாளை மறுதினம்(28) நடத்தப்படவிருந்த இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது. இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது விழா ஏற்பாட்டுக் குழுவினர் இதனை தெரிவித்தனர். மேலும், மீண்டும் நிகழ்ச்சி நடத்தப்படும் திகதிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படும் எனவும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர். இளையராஜாவின் மகள் பாடகி பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை திடீரென உயிரிழந்தார். இந்த நிலையிலேயே இலங்கையில் நடத்தப்படவிருந்த இசை நிகழ்ச்சி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/isaignani-ilaiyaraaja-live-in-concert-sri-lanka-1706264935
  6. அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியொருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து, எழுந்த கண்டனங்களினால் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகியுள்ளார். தகவலுக்கு நன்றி புங்கை. தவறான தகவலுக்கு வருந்துகிறேன். கூடுதலான இடங்களில் 100 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம். ஒரு மோட்டார் சைக்கிளை இவர்கள் ஏற்கனவே முந்தி போகும்போது வாகனம் தளம்பிக் கொண்டு சென்றதாகவும் அந்த நேரமே பொலிசுக்கு தகவல் சொல்ல வேண்டும் போல இருந்ததாகவும் இவர்கள் உருப்படியாக வீடு போய் சேரமாட்டார்கள் என்று தான் கருதியதாகவும் பின்னால் வந்து இவர்களது விபத்து பற்றி தகவல் கொடுத்த ஒருவர் சொல்லியிருக்கிறாராம்.
  7. இதே அமைச்சர் தான் மது போதையில் சிறையில் இருந்த தமிழ்க் கைதிகளை துப்பாக்கியைக் காட்டி பயமுறுத்தியதாக சொல்கிறார்கள். அறகல ஆர்ப்பாட்டத்தின் போதும் கொடூரமாக தாக்கியவர் என்றும் சொல்கிறார்கள்.
  8. பெண்கள் நிர்வாணமாக சில நாட்கள் இருக்கும் கிராமங்கள் பற்றி கேள்வி பட்டிருக்கின்றோம் எனினும், ஆண்களும் நிர்வாணமாக இருக்கும் விசித்திரமான நிகழ்வு பெப்ரவரி 22ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ஜப்பானில் 1675 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் ‛ஹட்கா மட்சூரி' எனும் ஆண்களின் நிர்வாண திருவிழாவில் பங்கேற்க பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் அந்த திருவிழா கொண்டாடப்படுவதன் பின்னணி குறித்த வினோத தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பாரம்பரியமாக சில திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த திருவிழாக்கள் வெறும் பொழுது போக்குகளுக்கு மட்டுமின்றி அந்த பகுதி மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் அடையாளமாக இருக்கிறது. அந்த வகையில் ஜப்பானில் ஆண்டுதோறும் வினோத திருவிழா ஒன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது அந்த திருவிழாவின் பெயர் ஆண்களுக்கான நிர்வாண திருவிழாவாம். ஜப்பானில் கொண்டாடப்படும் இந்த வினோத திருவிழாவின் உண்மையான பெயர் ‛ஹடகா மட்சூரி'. இதனை ஆண்களின் நிர்வாண திருவிழா எனவும் அழைக்கின்றனர். இந்த திருவிழாவில் ஆண்கள் சிறிய அளவிலான துணியை மட்டும் உடலில் அணிந்து இருப்பார்கள். ஜப்பானின் ஐச்சி மகாணத்தின் இனாசாவா நகரில் கொனோமியா வழிபாட்டு தலத்தில் நடந்து வருகிறது. 1675 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் தான் இந்த ஆண்டுக்கான ‛ஹடகா மட்சூரி' திருவிழா அடுத்த மாதம் (பெப்ரவரி) 22ம் திகதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் 10 ஆயிரம் ஆயிரம் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. இந்நிலையில் தான் தற்போதைய இந்த விழாவில் பெண்களும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு 40 பெண்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இந்த திருவிழாவில் பங்கேற்கும் பெண்கள் முழு உடை அணிந்து இருப்பார்கள். ஹேப்பி கோட் அணிந்து இருப்பார்கள். விழாவின் தொடக்கத்தில் நடக்கும் சடங்குகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். அதாவது ‛நோய்சாசா' என அழைக்கப்படும் சடங்கில் மட்டும் பங்கேற்பார்கள். அப்போது அவர்கள் மூங்கில் புல்லை துணியில் சுற்றி கோவிலுக்கு எடுத்து செல்லும் 'நஒயிசா' சடங்கில் மட்டுமே பங்கேற்பார்கள். https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ஆணகளன-நரவண-தரவழ-பணகள-பஙகறக-அனமத/50-332103
  9. ஆழ்ந்த இரங்கல்கள். இளையராஜாவுக்கு மிகவும் கஸ்டமான நேரமிது. ஒருபக்கம் இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்துள்ளார். மறுபக்கம் அதே இடத்தில் மகளின் மரணச் செய்தியும் வருகிறது. எப்படி கையாளப் போகிறார்?
  10. இந்த கவிதை இறுதிநேர யுத்தம் யுத்தம் முடிந்து முள்வேலிக்குள் சிறை இவைகளைத் தான் கண் முன் கொண்டருகின்றன. இணைப்புக்கு நன்றி யாயினி.
  11. அட நான் ஏதோ நடகைகளை தள்ளிக் கொண்டு போட்டார் என நினைத்தேன். இது பணப் பிரச்சனையாக இருக்கே. இந்தியாவின் கதை வசனம் தயாரிப்பு டைரக்சன். இதில எங்க வெறும் நடிகரை போட்டு கேள்விகள்?
  12. நில்மினியிடம் சுகம் விசாரித்த போது 100 வருடத்துக்கு பின் இப்படி ஒரு பனிப்புயல் வந்து பெரும் அழிவு என்று சொன்னா. குடிநீர் இல்லை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு பல்கலை பூட்டு. இப்படி நிறைய பிரச்சனைகள் என்று சொன்னா.
  13. நடக்கிறதை கதையுங்க நுணா. சிறிதரனின் வெற்றிக்கு மறுவன்புலவு சச்சியும் உழைத்தவர்.
  14. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவுடன் பனிப்புயல் வீசி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பனிப்புயல் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டென்னிசி, ஓரிகன் ஆகிய மாகாணங்களில் பனிப்புயல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப்பணிகள் முன்னெடுப்பு இந்நிலையில், அமெரிக்காவில் வீசி வரும் பனிப்புயலில் சிக்கி இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. https://tamilwin.com/article/death-toll-from-cold-storm-in-us-reaches-1705846071 இந்த ரென்னிசி மாநிலத்திலேயே சகோதரி @nilmini வசிக்கிறா.
  15. நான் பிறந்து தவழ்ந்து வளர்ந்த இடம். இதைப் பற்றி கேட்க வேண்டும் என எண்ணிக் கொண்டு கீழே வாசிக்க தம்பியைப் பற்றி எழுதியுள்ளீர்கள். அந்தநேரம் என்ன மனநிலையில் இருந்திருப்பீர்கள் என்பது புரிகிறது.
  16. என்ன ஒருத்தரும் புதிய தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை? தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் திரு.சிறிதரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சுமந்திரனும் கணிசமான வாக்குகள் எடுத்துள்ளார்.பாராட்டுக்கள்.
  17. இதுவரை தலைவராக இருந்த மாவை என்ன தான் சாதித்துள்ளார்? அவர் தான் தலைவர என்று சொன்னால்த் தான் தெரியும். அவரவர் தலைவர்களாகவே செயற்படுகிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.