Everything posted by ஈழப்பிரியன்
-
இரண்டாம் பயணம்
தாங்க முடிலைடா சாமி. ரொம்ப சிரிப்பூட்டுறீங்க.
-
கலைத்திறன் போட்டி 2024 -தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி.
தகவலுக்கு நன்றி நொச்சி.
-
இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டு!
இலங்கை அரசு இந்த அகதிகளின் காணிகளை விடுவித்து இவ்வளவு காலமும் பிடித்து வைத்திருந்ததுக்கு நஸ்டஈடு கொடுத்து மேலும் அவர்கள் முன்னேறுவதற்கு உதவித் தொகையும் வழங்க வேண்டும். அதைவிடுத்து இப்போதும் அந்த அகதிகளிடமிருந்து எரியிற நெருப்பில் பிடிங்கியது லாபம் என்பது போல இன்னமும் தங்களுக்கு என்ன லாபம் வரும் என்று தான் பார்க்கிறார்கள். உலகத்திலேயே அகதிகளை இவ்வளவு கடும் பிடிக்குள் திறந்தவெளி சிறைச்சாலையில் வைத்திருக்கும் நாடு இந்தியா .
-
கடைகளை எரிக்க 12 இலட்சம் ரூபா! - பெல்ஜியத்தில் இருந்து வந்த பணம்.
யாழ் நகர்ப் பகுதியிலுள்ள பிரபல்யமான ஆடை விற்பனை நிலையங்கள், கார், மற்றும் வீடுகளை எரித்த குற்றச்சாட்டில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு சூத்தியதாரியைப் பிடிப்பதற்கு இன்டர்போலின் உதவி நாடப்பட்டுள்ளது. யாழ் நகரப்பகுதியில் உள்ள இரண்டு கடைகள் அண்மையில் எரிக்கப்பட்டன. 2 கோடி ரூபா பெறுமதியான பொருள்கள் இதன்போது எரிந்தன . அத்துடன் கார் ஒன்றும் எரிக்கப்பட்டது.மேலும் மோட்டார்சைக்கிள் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசில் முறைப்பாடி பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் நேற்று மூன்று பிரதான சந்தேகநபர்களைக் கைதுசெய்தனர். சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு மோட்டார்சைக்கிள்கள், ஒரு வாள் என்பன மீட்கப்பட்டன. அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேகநபர் ஒருவரின் பெல்ஜியம் வாழ் பெரியம்மாவின் நட்பு வட்டாரத்திலிருந்து விடுக்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே இந்த விஷமச் செயலில் அவர்கள் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடைகளை எரிப்பதற்காக 12 லட்சம் ரூபா பணமும், வாகனங்களை எரிப்பதற்காக 7 லட்சம் ரூபா பணமும் பெல்ஜியத்தின் இருக்கும் நபரிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுவதற்கு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஒன்றரை லட்சம் ரூபா பணமும் அவர்களுடைய வங்கிக் கணக்குக்குச் செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து குற்றச்செயல்களின் சூத்திரதாரியான பெல்ஜியம் வாழ் நபரை இன்டர்போலின் உதவியுடன் கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். https://seithy.com/breifNews.php?newsID=312274&category=TamilNews&language=tamil
-
இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டு!
அடுத்த தேர்தலில் மறக்காமல் வந்து வாக்குப் போட்டுவிட்டு போங்கோ.
-
இரண்டாம் பயணம்
ஆசிய விமானநிலைய கழிவறைகளில் அங்கு துப்பரவாக்குபவர்கள் அதற்குள்ளே நின்று சுழன்று பேப்பரை கிழித்து தந்து ஏதாவது எதிர்பார்ப்பது போன்றவைகளும் நடக்கும். முன்னர் புகையிரதங்களில் எல்லாம் வாங்கி சாப்பிட்டோம். இப்போ கம்பிகளைப் பிடித்து பிடித்து வந்து அதே கையால் சாப்பாடுகளை அள்ளிக் கொடுப்பதைப் பார்க்க ஏனோ சாப்பாடே வெறுக்குது.
-
இரண்டாம் பயணம்
வீட்டுக்கு வீடு வாசல்படி. இதுக்குத் தான் ஒன்றுக்கு இரண்டுக்கு தவிர தனியே எங்கும் போவதில்லை. சிட்னியில் உங்களை சந்திக்க வந்தபோதும் மனைவியுடனே வந்ததை கண்டிருப்பீர்கள். பயணச் சீட்டுகள் எல்லாமே விலை கூட்டிவிட்டார்கள். அத்துடன் நாங்கள் விரும்பிய இருக்கைகளை முன்னர் மாதிரி இலவசமாக எடுக்க முடிவதில்லை. சாப்பாடுகளும் முன்னர் போல தரமானவையாக இல்லை. முதலே ஏன் கேட்டு மாறவில்லை என யோசித்தேன். பரவாயில்லை அவர்களாகவே கேட்டு அடி உதையில் இருந்து தப்பியுள்ளீர்கள்.
-
இரண்டாம் பயணம்
பிள்ளைகள் மட்டுமல்ல அந்த மண்ணில் பிறந்து வளர்ந்து புழுதியில் காலில் செருப்பு கூட இல்லாமல் நடந்து ஓடி விளையாடித் திரிந்த எம்மாலேயே தாங்க முடியாமல் இருக்கிறது. மாரி காலமென்றால் மழை வெள்ளம் நுழம்பு அட்டை அதையும் கடந்து செல்ல முடியுதில்லை.
-
தமிழ்த் தேசியமும் தமிழரசுக் கட்சியின் தலைமையும்
வேறு ஒருவர் எனது தெரிவு. திருமதி ரவிராஜ் அவர்களின் வெற்றியைப் பறித்ததில் இருந்து இந்த இருவர் மீதும் வெறுப்பாக உள்ளது. ஆனாலும் இப்போது சிறிதரனுக்கு ஆதரவு பெருகி வருவதால் கடைசி நேரத்தில் சுமந்திரன் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளலாம்.
-
மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அநாகரிகமாக நடக்கின்றனர் –கருணா அம்மான்
சாத்தான் வேதம் ஓதுதோ?
-
சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!
இது உலக ரீதியில் குறைவாகவே இருந்துள்ளதென எண்ணுகிறேன்.
-
“யுக்திய” செயற்பாட்டை யாராலும் நிறுத்த முடியாது : அமைச்சர் டிரான் அலஸ்!
நன்றி குரூசோ.
-
“யுக்திய” செயற்பாட்டை யாராலும் நிறுத்த முடியாது : அமைச்சர் டிரான் அலஸ்!
ரொம்ப…. பாதிக்கப்பட்டுளீர்கள் போல் தெரிகின்றது நானும் கொழும்புக்கு போனால் குரூசோவோடு நிற்கலாமென்று நினைத்தேன். நீங்க சொல்வதைப் பார்த்தா ஆப்பு தான்.
-
உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
கடந்த வருடம் பிள்ளைகளுடன் வந்து போனேன். கூடிய நாட்கள் சுகயீனமாக இருந்தேன்.
-
உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
முடிந்தவரை கஸ்டப்பட்டு வேலை செய்தேன். இப்போ ஓவ்வூதியம் எடுக்கிறேன். பிள்ளைகள் மூவர் வேறு வேறு மாநிலங்களில் குழந்தைகளுடன் இருக்கிறார்கள். மாறிமாறி அவர்களிடம் போய் வருகிறோம். நியூயோர்க் வீட்டை விற்றுவிட்டு தங்களுக்கருகில் வருமாறு அழைக்கிறார்கள். இன்னமும் முடிவில்லை.
-
டாடோ என்கின்ற டாலிபோ
கொடிதிலும் கொடிது.
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
ரதி கடைசி நேரத்தில் கடைசி ராஜதந்திரமாக ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்பு கொண்டு வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை கொல்லாது விட்டிருந்தால் உங்கள் கேள்விக்கு விடையாக இருந்திருக்கும். இதை அறிந்திருந்த இந்தியாவே அதை முறியடித்து அத்தனை பேரையும் கொன்றார்கள்.
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
உங்கள் எண்ணம் தவறு. எத்தனையோ நாடுகள் தமிழீழத்தை அங்கீகரிக்க காத்திருந்தன. நான் நினைக்கிறேன் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டவர்களை அல்லது இன்னமும் புலிகளின் பயணம் இருக்கு என்றபடியாலோ என்னவோ யாருமே வெளிப்படையாக ஆதரிக்கவில்லை.
-
சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!
தகவலுக்கு நன்றி. எமது வீட்டு பேஸ்மன்ரில் மெசின் உள்ளது.இருந்தாலும் வெளிளே நடப்பது போல வராது. ஒரு மைல் நடந்தவுடனே நிற்பாட்டி விடுவேன்.
-
எங்கள் தலைவர் போல் எவரும் இல்லை.
- உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
2015 வரை நாங்களும் ஓரளவுக்குத் தேவையான மரக்கறி வகைகள் தோட்டம் செய்தோம். பலருக்கும் கொடுத்து குளிர் காலத்திலும் பாவிப்பதற்காக இன்னொரு குளிர்சாதன பெட்டியும் வாங்கி மேலதினமாக வருவதை வெட்டிவெட்டி பொதி செய்து வைத்திருந்தோம். 2015 இன் பின் கோடை விடுமுறைகளுக்கு வீட்டில் நிற்பது இல்லை என்றே சொல்லலாம். தற்சமயம் கோடையிலும் நிற்பதில்லை குளிர் காலங்களிலும் நிற்பதில்லை.- உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
புலவர் ஒரு பகுதி இந்த எலிகளை பிடிப்பதற்கு மண்வெட்டி தடி பொல்லுகளுடன் நிற்பார்கள். அவர்களுடன் வந்த பெண்களை புத்துக்குள் உள்ள நெல்லை அள்ள ஆண்கள் எலிகளை அடித்து பிடித்து கொண்டு போய் சமைப்பார்கள். எலி என்றவுடன் வீடுகளில் ஓடித் திரியும் எலிகளைத் தான் இப்போதைய ஆட்களுக்கு தெரியும். புத்தெலிகளை கண்டறிந்திருக்க மாட்டார்கள். தைப்பொங்கலுக்கு அரிசி வாங்கிப் பொங்குவதில்லை. புதிர் எடுத்து குத்தி வந்த அரிசியில்த் தான் பொங்குவார்கள்.- சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!
காலநிலை நன்றாக இருந்தால் தினந்தோறும் ஏறத்தாள 3 மைல்கள் நடக்கிறேன்.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இந்த தாக்குதலை முன்னரே அறிந்திருந்த புலிகள் தாக்குதல் தோல்வியிலிருந்த ஈபிஆர் போராளிகளை பத்திரமாக மீட்டதாக கதை வந்தது. இதில் உண்மை பொய் தெரியவில்லை.- சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!
தகவலுக்கு நன்றி ஜஸ்ரின். கடந்த 10 வருடமாக வீட்டில் தேநீருடன் ஒன்று சில வேளை பாதி பேரிச்சம்பழத்துடன் குடிக்கிறேன். இதிலும் அதே சீனி இருக்கிறதா? அல்லது என்னை நானே ஏமாற்றுகிறேனா? - உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.