Everything posted by ஈழப்பிரியன்
-
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் சாந்தன் உடல்நலக்குறைவால் இன்று இந்தியாவால் காலமானார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். சாந்தன் இலங்கை தமிழர் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டார். தொடர்ந்தும் இலங்கைக்கு தன்னை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில், பல போராட்டங்களின் பின் சாந்தனை இலங்கை அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால், சாந்தனுக்கு கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரச பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்த போதும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. கோமாநிலைக்கு சென்ற சாந்தனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சாந்தன் காலமானார். பல போராட்டங்களின் பின் சாந்தன் இன்று இலங்கை திரும்ப இருந்த நிலையில் அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. https://samugammedia.com/rajiv-gandhi-assassination-case-convict-santhan-passes-away-1709085738
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
உண்மை என்றும் அழியாது.
- தமிழரசுக்கட்சியை விமர்சிக்கலாமா?
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
புலிகள் தோற்றது சிங்களத்தின் வீரத்தினால் அல்ல தமிழரின் துரோகத்தால்.
-
துவாரகா உரையாற்றியதாக...
அது வேற ஆள். இது வேற ஆள்.
-
யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
இது சமூகமாக தெரியவில்லை. தனியாள் போல தெரிகிறது. மாவோவின் சிந்தனைகள் இப்படியானதா?
-
யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
யாழ்ப்பாணத்தில் போலி கெளரவ கலாநிதி பட்டங்களை காசுக்கு விற்கும் திருபணியை ஒட்டுக்குழு மனிதர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்து இருந்தார் இந்த மூன்றாம் தர கோமாளி மனிதர் யாழ்ப்பாண மத்திய கல்லூரி அதிபராக கல்வி அமைச்சினால் நேர்முக தேர்வு மூலம் நியமிக்கப்பட்டுள்ள அதிபரை பதவி ஏற்க விடாமல் ஒரு வாரமாக தடுத்து வருகின்றார் கல்வி அமைச்சின் விதிகளின் படி யாழ் மத்திய கல்லூரிக்கு அதிபர் தரம் 1 ஐ சேர்ந்தவர் மட்டுமே நியமிக்க முடியும் என்கிற விதிகளை மீறி தன் விசுவாசி ஒருவரை பதவிக்கு கொண்டு வர குழப்பங்களை செய்கின்றார் பெண் அதிபராக முடியாது என்று குழப்பங்களை தொடங்கியவர் இப்போது சாதி ரீதியாகவும் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றார் மறுபுறம் மகாஜனா கல்லூரி இடமாற்றங்களை தடுத்து யாழ்ப்பாண மாவட்ட இடமாற்ற முறைமைகளை முழுமையாக சீரழித்து வருகின்றார் அரச விதிமுறைகளுக்கு மாறாக பள்ளிக்கூடங்களுக்கு போகாத நபர்களை தொண்டராசிரியர்களாக நியமிக்க முயற்சித்து வருகின்றார் பாடசாலைகளுக்கான வள பங்கீட்டில் தலையிடுகின்றார்.இதன் மூலம் கல்வி அதிகாரிகளுக்கு நெருக்கடி தருகின்றார். மேற்படி கோமாளித்தனங்களால் முன்னணி பாடசாலையான வேம்படி பெண்கள் பாடசாலை முதல் கிராமிய பாடசாலைகள் வரை சீரழிந்து வருகின்றது இது போதாதென்று யாழ்ப்பாண பல்கலை கழக பேரவைக்கு தனது அல்லக்கைகளை நியமித்து குழப்பங்களை ஏற்படுத்துகின்றார் அரசியல் அதிகாரமும் இராணுவ புலனாய்வு பிரிவும் தன்னோடு இருப்பதால் படிப்பறிவில்லாத இந்த மனிதர் தான் நினைத்தையெல்லாம் செய்ய முயற்ச்க்கின்றார் போலி பட்டங்களை வழங்கும் முகவரான ஒட்டுக்குழு இந்த மனிதருக்கு தான் செய்வது குற்றம் என்பது கூட தெரியவில்லை https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0AvrFzon9eJtDLV6PJAKCvdtwYPDZejaNoCu1bkr9Dt4tRXBc47BpNEgBrMQCBfDpl&id=100057588638936
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- தேசியத்தலைவரின் மகள் துவாரகா,சந்தேகங்களைத் தீர்க்கும் சந்திப்பு.
எனது மக்களை நம்பியே அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன்.- தேசியத்தலைவரின் மகள் துவாரகா,சந்தேகங்களைத் தீர்க்கும் சந்திப்பு.
- தமிழர் பாரம்பரிய மாதத்தை கொண்டாடிய IBMS
பெருமையாக உள்ளது. எங்கே உங்கள் விபரங்களைக் காணவில்லை?- பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.
பவுண்ஸ்சுக்கு என்னானது தம்பி? கவிதை அருமை.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் நண்பர் தமிழ் சிறியை நோய்நொடி இல்லாமல் நுhறாண்டு காலம் வாழ வேண்டுகிறேன்.- இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024.
நடைமுறையில் அப்படித் தானே இருக்கிறது.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Marlyn Monroe வின் காலடியில் மனைவியும் நானும். Plam Springs California வில்- இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024.
இலங்கைத் தமிழரை அழித்ததோடு இந்திரா காங்கிரசும் வீழ்ந்தது. அதிலிருந்து இன்னமும் எழும்புவதற்கான அறிகுறியே தெரியவில்லை. அடுத்த தேர்தலிலும் பெரும்பான்மையான வெற்றியுடன் மோடி வருவார்.- யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
ஏற்கனவே இருந்த அதிபரை ஏன் மாற்றினார்கள் என்றும் யோசிக்க வேண்டி இருக்கிறது.- யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
முன்னர் ஒரு காலத்தில் ஆண்கள் பாடசாலையில் ஆசிரியர்களாக ஆண்களும் பெண்கள் பாடசாலையில் ஆசிரியர்களாக பெண்களுமே இருந்தார்கள். கலவன் பாடசாலைகளில் ஆசிரியர்களாக ஆண்களும் பெண்களும் இருந்தார்கள். அடுத்ததாக அதிபர்களை தெரிவு செய்யும் போது உபஅதிபராக இருப்பவரே கூடுதலாக அதிபராக வருவார். இப்போது அரசியல் தான் எல்லாவற்றையுமே தீர்மானிக்கிறது. விபரங்கள் தெரியாமல் கருத்தெழுதவே யோசனையாக உள்ளது.- களியாட்டத்தில் கலாட்டாவா
இந்த தொழிலதிபர் செய்த தவறு இலவசமாக நிகழ்ச்சியை நடாத்தியதே. அடுத்து மாநகரசபை பொலிசார் மக்கள் கூட்டம் அதிகமாக அதிகமாக எதற்கேற்ப முன்னேற்பாடுகள் ஏதும் செய்ததாக தெரியவில்லை. வெறும் 100 பேர் செய்யும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட பொலிசார் வந்து படம் காட்டும் போது இந்த நிகழ்ச்சியை மட்டும் ஏன் கவனத்தில் எடுக்கவில்லை. உலகத்தில் இசைநிகழ்ச்சிகள் குழப்பப்பட்டிருக்கின்றன. ஐரோப்பாவில் எத்தனை விளையாட்டுப் போட்டிகள் குழப்பத்தில் முடிந்து பார்வையாளர்கள் எத்தனையோ பேர் மரணித்தும் இருக்கிறார்கள். அப்படி பார்க்கும் போது இதைக் கடந்து போக வேண்டியது தான்.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024.
தனக்கு எதிரானவர்கள் கம்யூனிச போக்குடையவர்கள் என்று தெரிந்தும் இவர்களை கூப்பிட்டிருக்கிறது. அடுத்த தேர்தலில் வென்றாலும் என்று இப்பவே தொடர்பை ஏற்படுத்துகிறார்களோ?- இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024.
https://www.facebook.com/share/v/a4Evbickzo9CDcZ2/?mibextid=xfxF2i- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
யாயினி இதைப் பார்த்தா Flush பண்ண சொல்லுற மாதிரி தெரியலை. துடைக்க மறந்திடாதீங்க என்ற மாதிரி அல்லவா இருக்கு.- இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024.
நான் இதுவரை இலங்கை தேர்தல்களில் வாக்களிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு வாக்கைச் செலுத்தினால் போதும் என்று தான் எண்ணியிருந்தேன். ஆனாலும் ஏமாற்றுவதற்கு வசதியாக இரண்டாவதாகவும் ஒருவருக்கு வாக்களிக்கும் முறை இருக்குதென்பதை இப்ப தான் தெரிந்து கொண்டேன். ஆரம்பத்தில் ஐயா விக்கினேஸ்வரன் தான் பொது வேட்பாளராக நிற்கிறேன் என்றதும் ஆமால்ல யாரோ ஒருவர் நின்று எல்லோரும் அவருக்கு வாக்கு போடலாம் தானே என்று தான் எண்ணினேன். ஆனால் இவர்கள் ஏமாற்றுகிறார்கள் 50 வீத வாக்கு கிடைக்கவில்லை என்றால் இரண்டாவதாக ரணிலுக்கு போடுவார்கள். இது முறைமுகமாக ரணிலுக்கான ஆதரவு என்று கஜேந்திரன் சொன்னபோதே இப்படி ஒரு சங்கதி இருக்கிறதா என்று விசாரித்து பார்த்ததில் அதிலும் உண்மை இல்லாமல் இல்லை. அடுத்து இப்பவிருந்தே மக்களை தேர்தலுக்கு தயார்படுத்த வேண்டுமே ஆனால் தமிழர்கள் தரப்பில் எவருமே அதற்கான ஆயத்தங்கள் செய்யவில்லையே என்ற ஆதங்கங்தினாலேயே இதை எழுதினேன். நன்றி சுவி, கிருபன்.- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
சித்தார்த்தனை விட்டுட்டுயளோ? அவருக்கு வேறுவழிகள் இருந்ததால் இதில் ஈடுபடலையோ? - தேசியத்தலைவரின் மகள் துவாரகா,சந்தேகங்களைத் தீர்க்கும் சந்திப்பு.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.