Everything posted by ஈழப்பிரியன்
-
இந்திய உணவு விநியோக ஓட்டுநர் குதிரைக்கான வழக்கமான போக்குவரத்து முறையைத் தள்ளிவிட்டார்.
இந்தியாவின் ஹைதராபாத்தில் உணவு விநியோகம் செய்யும் ஓட்டுநர் ஒருவர், எரிபொருள் பற்றாக்குறையால், பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டதால் குதிரையில் டெலிவரி செய்ய முயன்றார்.
- ஊருலா
-
அமெரிக்க புளேரிடா மாநிலத்தில் சூறாவளி.
செவ்வாயன்று புளோரிடாவில் ஒரு பரந்த புயல், சூறாவளி எச்சரிக்கைகள் மற்றும் அதிக காற்று வீடுகளின் கூரைகளை வீசியது, முகாம்களில் புரட்டப்பட்டது மற்றும் தளபாடங்கள் மீது வீசியது. மற்றொரு புயல் மத்திய மேற்குப் பகுதியில் உள்ள நகரங்களை அரை அடிக்கும் அதிகமான பனியுடன் ஸ்தம்பிக்க வைத்தது, வடகிழக்கு நோக்கிச் செல்லும் போது நெடுஞ்சாலைகளில் மக்கள் சிக்கித் தவித்தனர்.
-
செங்கடலிற்கு ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக கப்பலை அனுப்புவதா ? ஆராய்கின்றது இலங்கை கடற்படை
இது அமெரிக்காவின் வேண்டுகோளாக இருக்கலாம். தான் தனியே இதற்குள் மாட்டிக் கொள்ளாமல் பல நாடுகளையும் இதற்குள் இழுத்து விடும் முயற்சியாக இருக்கலாம் ஏற்கனவே பல முனைகளை போருக்கு திறந்த விட்டாச்சு.
-
பருத்தித்துறை பொலிஸாரால் ஒரு தொகுதி கஞ்சா மீட்பு!
தகவலுக்கு நன்றி.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
நிசசயமாக இந்த பதிவு ஒரு முக்கியமான பதிவாக இருக்கும்.
-
இமாலய பிரகடனத்துக்கும் எனக்கும் என்ன தொடர்பு,ஆறு திருமுருகன்.
நியாயமான ஆதங்கம்.
-
ஊருலா
நானும் உப்பிடித் தான் நினைத்து பிலாப்பழம் இறக்குவம் என்று ஏறி………………… சோகக்கதையாகிப் போச்சு. மிகவும் ரசித்து வாசித்த உங்கள் பயணக்கதை நெஞ்சில் பதிந்துவிட்டது. பாராட்டுக்கள். கொண்டுவாற ஆளைப் பார்க்கிறதா? தட்டில் என்ன கொண்டுவாறா என பார்ப்பதா? ஒரே குழப்பமாக இருக்கு.
-
தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட இமயமலைப் பிரகடனத்திற்கு சுவிட்ஸர்லாந்து நிதியுதவி.
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட உலகத் தமிழர் பேரவை (GTF) மற்றும் அமரபுர நிகாயவின் பௌத்த தேரர்கள் குழுவால் தொகுக்கப்பட்ட “இமயமலை பிரகடனத்திற்கு”க்கு சுவிட்ஸ்ர்லாந்து அரசாங்கம் நிதியளித்தமை தெரியவந்துள்ளது. இலங்கையில் வெளியாகும் பிரதான ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு எழுதிய பத்தியில் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளரும், சட்டத்தரணி ஒருவர், இந்த முயற்சி ஏற்றுக்கொள்ளப்படுவதற்குப் பதிலாக விமர்சிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உலகத் தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்கம் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கத்தின் தலையீட்டுனான இந்த முயற்சிக்கு சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியானது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தமிழ் சமூகத்தை ஆத்திரப்படுத்தியுள்ளது." ஜெனீவாவை தளமாகக் கொண்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையும், தமிழர்களும் இலங்கை அரசின் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச் சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என வலியுறுத்தி வருகின்ற நிலையில், உலகத் தமிழர் பேரவை மற்றும் பௌத்தத் தேரர்களின் அறிக்கைக்கு சுவிட்ஸர்லாந்து நிதியுதவி அளித்திருப்பது உலகத் தமிழ் சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேரர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் இமயமலைப் பிரகடனத்தை ஜனாதிபதியிடம் கையளித்த பின்னர், உலகத் தமிழர் பேரவைத் தலைவர்கள் அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோதிலும், இலங்கையிலுள்ள பௌத்த தேரர்கள் மத்தியில் அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இவ்வாறான சூழலில் இந்த அறிக்கை அமரபுர நிகாயவின் கருத்து அல்ல என அந்த சங்கத்தின் உதவிப் பதிவாளர் தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரர்கள் மற்றும் பொதுமக்களின் தகவலுக்காக எனக் குறிப்பிட்டு, டிசம்பர் 30, 2023 அன்று, இலங்கை அமரபுர மகா சங்க சபையின் உதவிப் பதிவாளர் அம்பலன்கொட சுமேதானந்த தேரர் வெளியிட்ட அறிக்கையில், இமயமலைப் பிரகடனம் இலங்கை அமரபுர மகா சங்க சபையால் அங்கீகரிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். "இமயமலைப் பிரகடனம் தொடர்பாக இலங்கை அமரபுர மகா சங்கத்தில் எந்த உடன்பாடோ அல்லது விவாதமோ இடம்பெறவில்லை. அது ஒரு சில தேரர்களின் தனிப்பட்ட கருத்தின் வெளிப்பாடு மாத்திரமே என இதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது." 'அனைத்து சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் பன்மைத்துவ இலங்கையை உருவாக்க' என அழைக்கப்படும் 'இமயமலைப் பிரகடனத்திற்காக' உலகத் தமிழர் பேரவையுடன் இணைந்து. அமரபுர நிகாயவின் அம்பகஹபிட்டிய பிரிவின் அனுநாயக்க மாதம்பாகம அஸ்ஸஜிதிஸ்ஸ தேரர் தலைமையிலான தேரர்கள் குழுவே பிரதானமாக இப்பணியில் ஈடுபட்டது. பல புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரி வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச ரீதியில் கண்காணிக்கப்படும் பொறுப்புக்கூறல் பொறிமுறை மற்றும் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள கடுமையான போர்க்குற்றக் குற்றச்சாட்டுக்கள் குறித்து இந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை. தோல்வியடைந்த முயற்சிகள் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் கூட்டறிக்கை தொடர்பில் தம்மிடம் எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ளது. "மதங்களுக்கு இடையிலான முயற்சிகள் இலங்கைக்கு புதிதல்ல. மாறாக, இத்தகைய முன்முயற்சிகள் சர்வதேச நன்கொடையாளர்களால் நிதியளிக்கப்பட்டு பல தசாப்தங்களாக ஒரு சிறிய அமைதி கட்டியெழுப்பப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இந்த முயற்சிகள் தோல்வியடைந்தன. https://tamilwin.com/article/switzerland-sponsored-the-himalaya-declaration-1704820749
-
இமாலய பிரகடனத்துக்கும் எனக்கும் என்ன தொடர்பு,ஆறு திருமுருகன்.
ஐயாவின் கதையைக் கேட்டால் நிலத்தால் மட்டுமல்ல மொழியால் மட்டுமல்ல சமயத்தாலும் அழிந்து கொண்டிருக்கிறோம்.
-
விடுதலைப்புலிகள் செயற்பாட்டாளர்கள் கனடாவில் தஞ்சம் கோருவதில் சிக்கல்.
அவர்கள் இது துவாரகா இல்லை என்று தானே சொன்னார்கள். ஓரிருவர் எதிர்மறையாகவும் பேசினார்கள்.
-
இமாலய பிரகடனத்துக்கும் எனக்கும் என்ன தொடர்பு,ஆறு திருமுருகன்.
- புலம்பெயர் நாடுகளில் இருந்து லட்சங்களில் பணம் பரிமாறினால் காத்திருக்கும் நெருக்கடி.
உண்டியலூடாக பணம் அனுப்புபவர்களுக்கு ஆப்பு. இவ்வளவு காலமும் இங்கே பணத்தைக் கொடுத்தால் இலங்கையில் வங்கிக் கணக்கில் போட்டுவிடுவார்கள். இனிமேல்?நேரடியாக போய் பெற்றுக் கொள்ளலாமோ? வெளிநாடுகளில் உள்ள பலர் வட்டி கூடுதலாக வருகுது என்று இலங்கை வங்கிகளில் போட்டு வட்டியை எடுக்கிறார்கள். அவர்களுக்கும் சிக்கல் வருமோ?- விடுதலைப்புலிகள் செயற்பாட்டாளர்கள் கனடாவில் தஞ்சம் கோருவதில் சிக்கல்.
அண்மையில் போலி துவாராகா வரவின் போது நிறைய போராளிகள் தளபதிகள் வெளிநாடுகளில் இருந்து பேட்டிகள் கொடுத்திருந்தனர்.- பொங்கலை மண்பானையில் கொண்டாடுவோம் - பொ.ஐங்கரநேசன் அழைப்பு
எனக்கு தெரிந்து ஊரில் பொங்கல் சித்திரை புதுவருடம் என்பன புதிய மண்பானையில் த் தான் பொங்கினோம். இப்போது அலுமினிய பானையா பாவிக்கிறார்கள்.- ஊருலா
பார்த்தால் நித்யானந்தா போல இருக்கிறது ........மேலும் பிரியன். ஒருபோதும் தனியாக திரிவது இல்லை சோடியாகத் தான் திரிவது என்று எழுதியவர் நான் வாசித்த ஞாபகம் கிருபன் தான் போவதாக சொல்லியிருந்தார். நான் போவதானால் சோடியாக தான் போவேன்.- ஊருலா
ஒராள் இடம் பார்க்க ஒராள் இடை பார்க்க சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதில்லை.- மாலத்தீவு - லட்சத்தீவு ஒப்பீடு: இரண்டில் சுற்றுலா செல்ல சிறந்தது எது?
மாலைதீவக்கு போனால் சீனாவுக்கு போன மாதிரி லட்சதீவுக்கு போனால் இந்தியாவுக்கு போன மாதிரி. இந்தியா மாலைதீவுக்கு ஒரு முடிவு கட்டாமல் விடாது.- முல்லை. புதுக்குடியிருப்பு, உடையார்க்கட்டு வீட்டுக் கிணற்று நீரில் மண்ணெண்ணெய்!
இந்த கிணறை இந்தியாவுக்கா ,சீனாவுக்கா ,அமெரிக்காவுக்கா கொடுக்கலாம் என்று உயர்மட்ட ஆலோசனை நடக்குது. நீங்க வேற.- பருத்தித்துறை பொலிஸாரால் ஒரு தொகுதி கஞ்சா மீட்பு!
பெரும் முதலைகளை விட்டு சிறிய மீன்களை பிடித்பதாக சொல்கிறார்கள்.- அமெரிக்காவில் தீர்ப்பு வாசித்துக் கொண்டிருந்த நீதிபதியை பாய்ந்து தாக்கிய குற்றவாளி.
இப்போதும் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அப்பாவி மாதிரி நின்றவன் எப்படி தண்ணீருக்குள் பாய்வது போல மேசைக்கு மேலால் நீதிபதி மேல் பாய்கிறான்.- ஊருலா
அப்புறம் ஏன் அங்க போவான்? அக்கா இதில உள்குத்தொன்றும் இல்லையே?- ஊருலா
கந்தையர் நீங்களும் பக்கததில தானே அடுத்த முறை சேர்ந்தே போனால் மணியனை வெட்டிவிட்டு இரண்டு பேரும் ரம்பைகளை போய் பார்த்து வரலாம்.- ஊருலா
விலாசத்தையும் போட்டுவிட்டால் விரும்பியவர்கள் போய் ரம்பைகளை பார்க்கலாமே. கையோட கம்மாரிஸ்.- விடுதலைப்புலிகள் செயற்பாட்டாளர்கள் கனடாவில் தஞ்சம் கோருவதில் சிக்கல்.
- புலம்பெயர் நாடுகளில் இருந்து லட்சங்களில் பணம் பரிமாறினால் காத்திருக்கும் நெருக்கடி.
Important Information
By using this site, you agree to our Terms of Use.