Everything posted by ஈழப்பிரியன்
-
ஒன்றரை வருடமாக நீதித்துறையை ஏமாற்றிய போலி சட்டத்தரணி கைது!
இந்தியாவில் ஐந்து வருடமாக ஒருவன் நீதிமன்றமே நடத்தியிருக்கிறான் என்று கேள்விப்பட்ட பின் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்ற மாதிரி உள்ளது.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இந்த மரம் எப்போது விழும்?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நான்கு சுவர்களுக்குள்த் தான் சுதந்திரம் அப்பவும் இப்பவும் இருக்கிறது. அது அப்போ இப்போ பண மூட்டையே காணாமல் போயிருக்கும்.
-
வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் சடலமாக மீட்பு
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
அணு ஆயுதப் பரிசோதனை! ட்ரம்ப் - புட்டின், இரு துருவங்கள்.
அணு ஆயுதப் பரிசோதனை! ட்ரம்ப் - புட்டின், இரு துருவங்கள் --- ------ ------- *ஜேர்மனிய நாஜி ஆட்சியை போன்று அமெரிக்காவை மாற்ற முற்படுகிறாரா ட்ரம்ப்? *ஆயுதப் பரிசோதனை என்ற ட்ரம்பின் அச்சுறுத்தல் சில மாதங்களில் அல்லது சில வாரங்களில் முடிவுக்கு வரலாம். *அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் உடன்படுவதாக இல்லை. -------- ------------- மூன்றாம் உலகப் போருக்கான ஏற்பாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டு வருகிறாரா என்ற கேள்விகள் தற்போது சர்வதேச அரங்கில் பேசப்படுகின்றன. அமெரிக்க உலக அதிகாரம் என்பதைவிடவும் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய சர்வாதிகாரம் என்ற தொனியில் சில சர்வதேச ஊடகங்கள் சில வமர்சனங்களை முன்வைத்துள்ளன. சீனா - ரசியா என்ற போட்டியில் ட்ரம்ப் புவிசார் அரசியல் செயற்பாட்டில் தேவையற்ற கருத்துக்களை விதைப்பதன் ஊடாக, ரசியா போன்ற நாடுகளை சீண்டி விடுகிறார் என்று சர்வதேச ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. சீன, ரசிய நாடுகள் மீது அவசியமற்ற முறையில், அதிகளவு கோபம் ட்ரம்பிடம் இருப்பதையே மிகச் சமீபகாலமாக அவதானிக்க முடிகிறது. ஏனைய நாடுகளுடன் "சமமான அடிப்படையில்" (on an equal basis) அணு ஆயுத சோதனைகளை மீண்டும் ஆரம்பித்தால், உரிய திட்டங்களை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க பென்டகனுக்கு அறிவுறுத்தியமை பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இதனையடுத்து, அணு ஆயுத பரிசோதனைக்கு தயாராக இருக்குமாறு ரசிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மொனால்ட் ட்ரம் - புட்டின் ஆகியோரின் இத் தகவலை சிபிஎஸ் (cbsnews) செய்தித் தளம் வெளியிட்டுள்ளது. அதேநேரம், அமெரிக்கா செய்தி நிறுவனமான சிபிசியின் 60 மினிட்ஸ் (60 Minutes) இதழுக்கு டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய நேர்காணலில், அணு ஆயுதங்களை பரிசோதனை செய்யும் ஒரு சில நாடுகளில் ரசியாவும் ஒன்று என ட்ம்ப் குற்றம் சுமத்தியுள்ளார். அதேநேரம், சென்ற புதன்கிழமை ரசிய பாதுகாப்பு சபையுடன் ஒரு கூட்டத்தில், அணு ஆயுத சோதனைகளைத் தடைசெய்யும் சர்வதேச விரிவான அணுசக்தி-சோதனை-தடை ஒப்பந்தத்தை (Comprehensive Nuclear-Test-Ban Treaty - CTBT) கடைப்பிடித்து வருவதாக ரசிய ஜனாதிபதி விளாடிமின் புடின் கூறியுள்ளார். ஆனால், அமெரிக்கா அல்லது ஒப்பந்தத்தில் உள்ள வேறு எந்த ஒரு நாடும் அத்தகைய சோதனைகளை நடத்தினால், ரசியா பரஸ்பர நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் என்றும் புட்டின் கூறியதாக சிபிஎஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. அதேவேளை, ரசியாவின் அணு ஆயுத பரிசோதனை, சீனாவின் சோதனை, ஆனால் சீனா அதைப் பற்றிப் பேசுவதில்லை என்று. ட்ரம்ப் சிபிஎஸ் செய்தி நிருபர் நோரா ஓ டோனலிடம் (Norah O'Donnell) குற்றம் சுமத்தியுள்ளார். ரசியா அணு ஆயுத பரிசோனை செய்யவுள்ளது. வட கொரியா சோதனை செய்து வருகிறது. பாகிஸ்தான் சோதனை செய்து வருகிறது. ஆகவே, அமெரிக்கா அணு ஆயுத பரிசோதனை செய்யும் என்று டொனால்ட் ட்ரம் எச்சரித்துமுள்ளார். ஆனால் ட்ரம்ப் கூறுவது போன்று ரசியாவோ, வடகொரியாவோ அணு ஆயுத பரிசோதனைகளை செய்யவில்லை. நிறுத்தியுள்ளன. ஆனால் ட்ரம்ப் எச்சரிக்கை விடுவதால், இந்த நாடுகள் அணு ஆயுத பரிசோதனைக்கு முயற்சிக்கக் கூடும் என்று ரசியமற்றேர்ஸ் (russiamatters) என்ற ஆங்கில செய்தி ஆய்வுத் தளம் எதிர்வு கூறியுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மன் இராணுவத் தலைமையால் ஆரம்பிக்கப்பட்டு, நாஜி ஆட்சியின் கீழ் முழு சமூகத்தையும் போருக்குத் தயார்படுத்தியது. “ஒட்டுமொத்தப் போர்” என்ற கோட்பாட்டின் கீழ், அன்று நாஜி ஜேர்மனியின் தலைவர்கள் கிழக்கு ஐரோப்பாவில் ஒரு அழித்தொழிப்பு போரை நடத்தியது போலவே, ஜேர்மன் மக்கள் மீதும் பேரழிவை ஏற்படுத்தினர் இன்று, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சார்பாகப் பேசும் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கு மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் இராணுவ வன்முறைக்கும் நாஜி ஆட்சியை ஒரு முன்மாதிரியாகக் கருதுகிறார் என்ற முடிவுக்கு வர முடிகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப், உடனடியாக ஒரு அதிநவீன இரும்புத் திரை போன்ற ஏவுகணை பாதுகாப்பு கேடயத்தை அமெரிக்கா நிர்மாணிக்கத் தொடங்கும் என்று அறிவித்தார். சவாலும் விடுத்திருந்தார். இதன் காரண - காரியமாக அமெரிக்காவின் அணு ஆயுதப் படைகளின் தொடர்ச்சியான கட்டமைப்பின் ஒரு பகுதியாக, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்க ட்ரம்ப் கடுமையாக முயற்சிக்கிறார். 2019 ஆம் ஆண்டும் தனது முதலாவது பதவிக் காலத்தில் இவ்வாறான அணு ஆயுதப் பிரிசோதனை ஒன்றுக்கு ட்ரம்ப் முயற்சித்திருந்தார் என்பதை மறுப்பதற்கில்லை. 2018 ஆம் ஆண்டு ஒக்ரோபரில், அமெரிக்கா அணு ஆயுத பரிசோதனை ஒப்பந்தத்தில் இருந்து விலகும் என்று எச்சரித்தும் இருந்தார். அணு ஆயுதப் பரிசோதனை என்பது, வளிமண்டலத்தில் கொடிய கதிர்வீச்சைப் பரப்பும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்தும்.இதன் காரணமாகவே அணு ஆயுதப் பரிசோதனை தடுப்பு ஒப்பந்தம் கூட அன்று தயாரிக்கப்பட்டது. குறிப்பாக 1963 இல், அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் கியூபா ஏவுகணை நெருக்கடியில், அணு ஆயுதப் போரின் விளிம்பிற்கு வந்த ஒரு வருடம் கழித்து, கென்னடி நிர்வாகம் அணு ஆயுத சோதனைகளை தடை செய்யும் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தியது. இது நில கீழ் சோதனைகளைத் தவிர அனைத்து அணு ஆயுத சோதனைகளையும் தடை செய்தது. 1992 ஆம் ஆண்டில், சோவியத் யூனியன் பிரிந்து ஒவ்வொரு மாநிலங்களும் தனிநாடாகியதைத் தொடர்ந்து, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ், அணு ஆயுத சோதனைக்கு ஒருதலைப்பட்சமான தடையை அறிவித்தார். இந்த சோதனை தடை செய்யப்படுவதற்கு முந்தைய தசாப்தங்களில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அணுக்குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனைகள் அமெரிக்காவின் மேற்கு மற்றும் தெற்கு பசுபிக் முழுவதிலும் உள்ள சமூகங்களை நோய்வாய்ப்படுத்தி, முழுப் பகுதிகளையும் வாழத் தகுதியற்ற இடமாக மாற்றியதை இலகுவாக மறந்துவிட முடியாது. ஆகவே, இந்த அழிவுகளின் பின்னணி தெரிந்த ஒரு நிலையில் தானா டொனால்ட் ட்ரம், மீண்டும் அணு ஆயுத பரிசோதனை என்ற ஆபத்தான கதையை மீண்டும் கிளறுகிறார் என்ற கேள்வி எழுகிறது. அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் குறித்து தென் கொரியாவில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை கடந்த ஒக்ரோபர் மாதம் சந்தித்த போது, ட்ரம்ப் தனது அணு ஆயுத சோதனை பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதனை சீன ஊடகங்கள் கண்டித்திருந்தன. உலக அரங்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்ளையடிக்கும் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு வழிமுறையாக, அமெரிக்க அணு ஆயுதக் களஞ்சியத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ட்ரம்ப், அணு ஆயுதப் போர் மூலம் அழித்தொழிக்கும் அச்சுறுத்தலை உலகில் உருவாக்கி வருகிறார். ரசியா மற்றும் சீனா இணைந்து செலவிடுவதை விட, உலகின் மிகப்பெரிய அணு ஆயுத திட்டத்தைக் கொண்டுள்ள அமெரிக்கா, இரண்டு மடங்குக்கு அதிகமாக அணு ஆயுதங்களுக்காக செலவிடுகிறது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் சோவியத் ஒன்றியத்தை அச்சுறுத்துவதற்காக, ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் உள்ள பாதுகாப்பற்ற மக்களை அழித்த ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே ஆகும். ட்ரம்பின் அறிவிப்பைப் பற்றி செய்தி வெளியிடும் போது, அமெரிக்க பிரதான ஊடகங்கள் (Mainstream Media) எந்தவொரு வரலாற்று சூழலையும் அல்லது அதற்கு முந்தைய நிகழ்வுகளையும் முன்வைக்கத் தவறுகின்றன.. ஆனால், திடீரென நிகழ்ந்த ஒரு செயலாக இருக்காமல், அமெரிக்க இராணுவ நடவடிக்கையை திட்டமிடுபவர்கள், குறைந்தது 2020 முதல் அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்குவது குறித்து தீவிரமாக விவாதித்து வருகின்றனர். வேறு எந்த ஒரு நாட்டையும் விட அமெரிக்காவில் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன. இதனை எவரும் மறுக்க முடியாது. ஒரு நிலையற்ற புதிய அணு ஆயுத யுகத்திற்கான நவீன ஆயுதக் களஞ்சியத்தை உருவாக்குவதன் மூலம், அமெரிக்காவை அணு ஆயுத சக்தியாக மாற்றுவதற்கான ரகசியத் திட்டம் குறித்து நியூ யோர்க் ட்ரைம்ஸ் ஒரு சிறப்புக் கட்டுரையை கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் வெளியிட்டது. நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கும் இடத்திலோ அல்லது ஏவுகணை குழிகள் தோண்டப்படும் இடத்திலோ நீங்கள் வசிக்கவில்லை என்றால், அது நடக்கிறது என்பதை நீங்கள் அறியாமல் இருக்க வாய்ப்புள்ளதாக நியூயோர்க் ட்ரைம்ஸ் (New York Times) சுட்டிக்காட்டியிருந்தது. அமெரிக்க மத்திய அரசு, இத் திட்டத்தைப் பற்றி பகிரங்கமாக, அமெரிக்க காங்கிரசின் விசாரணைகள் மற்றும் மூலோபாய ஆவணங்களுக்கு வெளியே, அல்லது பெருமளவிலான தொகை இதற்கு செலவழிக்கப்படுவதைப் பற்றி அதிகம் கூறவில்லை. கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க காங்கிரஸ் 895 பில்லியன் டொலர் தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்திற்கு (NDAA) ஒப்புதல் அளித்தது, இது மனிதகுல வரலாற்றில் எந்தவொரு நாட்டையும் விட மிகப்பெரிய இராணுவ வரவு-செலவுத் திட்டமாகும். இதில் அணு ஆயுத நவீனமயமாக்கல் முயற்சிகளுக்கான சாதனை நிதியும் அடங்குகின்றது. அதேவேளை, அணுசக்தி சொற்பொழிவுப் போரில் மற்றொரு சுற்றுக்கு வழிவகுத்த ரசிய ஜனாதிபதி புடின், ஒக்டோபர் 29 ஆம் திகதி போஸிடான் அணுசக்தியால் இயங்கும் நீருக்கடியில் ட்ரோனின் வெற்றிகரமான சோதனையை அறிவித்துள்ளார். அதை “வேகத்திலும் ஆழத்திலும் ஒப்பிடமுடியாது" மற்றும் "தடுக்க இயலாது" என்று அழைத்தார். இது ட்ரம்ப் நிர்வாகத்துக்கு ரசியா கொடுத்த பெரும் சவால். ஆனாலும், அமெரிக்க அரசியல் - இராணுவ நிர்வாகம், ட்ரம்ப் கட்டளையிடும் அனைத்துக்கும் செவிசாய்த்து செயற்படும் என்று கூற முடியாது. இக் கருத்தை ரொய்டர்ஸ் செய்தி சேவை வெளியிட்டிருந்தது. அதேநேரம் அமெரிக்காவில் உள்ள சில பொறுப்புள்ள அச்சு ஊடகங்கள் ட்ரம்பின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிடவும், அமெரிக்க தேசிய நலன் என்பதில், செய்திகளை வெளியிடும் முறைமைகளில் மிகக் கவனமாக கையாண்டு வருவதை அவதானிக்க முடிகிறது. ஆகவே, இந்த அணு ஆயுதப் பரிசோதனை என்ற ட்ரம்பின் அச்சுறுத்தல் சில மாதங்களில் அல்லது சில வாரங்களில் முடிவுக்கு வரலாம். ஆனால், அது உறுதியான மனித குலத்துக்கு ஆபத்தில்லாத புரிந்துணர்வாக இருக்க வேண்டும் என்பதே வல்லரசு அல்லாத நாடுகளின் வேண்டுதலாகும். அத்துடன் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் ட்ரம்ப்புடன் பல விடயங்களில் உடன்படுவதாக இல்லை என்பதும் ஆரோக்கியமான செய்திதான். அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/share/p/1BUWbCk2Fs/
-
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர்கள் யாழில் கைது!
என்னது இந்த நாய் லட்ச ரூபாயா?
-
கருத்து படங்கள்
இந்தப்படம் பிரமாதமாக உள்ளது. வரைந்தவருக்கும் இணைத்தவருக்கும் பாராட்டுக்கள்.
-
உயரிய இராணுவ விருதை இலங்கைத் தமிழர் வாகீசன் மதியாபரணம் கனடாவின் பெற்றார்.!
வாகீசனுக்கு பாராட்டுக்கள்.
-
யாழ்பாணத்தை சேர்ந்த இருவர் கைத்துப்பாக்கியுடன் கொழும்பில் கைது.!
யாரோ போட்டுக் கொடுத்த மாதிரி உள்ளதே? நல்லது.
-
மாணவர்களிடம் தலைமைத்துவ பண்புகளை வளர்த்தல் மிகத் தேவையானது - வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
புத்தக பூச்சியாக இருக்கும் மாணவ மாணவிகளிடம் இப்படி ஒரு சிந்தனை ரொம்ப ரொம்ப குறைவு. ஊரில் எவ்வளவோ விளையாட்டுப் போட்டிகள் இருந்தன. பாடசாலைகளில் வருடந்தோறும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்ள பழக்கப்பட்டார்கள். இப்போதுள்ள மாணவ மாணவிகளிடம் வெற்றி தோல்விகளை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இப்போதுள்ள அரசியல் தலைவர்களும் இதேமாதிரியே இருந்து வரும்கால சந்ததிக்கும் இதையே பழக்குகிறார்கள்.
-
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜ.க. இணைந்து தேர்தலில் “மிகப்பெரிய கிரிமினல் மோசடி” ”போலி வாக்காளர்கள், முகவரிகள், புகைப்படங்கள்: வாக்குத் திருட்டு புகார் குறித்து ஆதாரங்களுடன் ராகுல் விளக்கம்
தேர்தலின் போது பகிரங்கமாக பணம் பொருட்கள் கொடுப்பது உலகத்துக்கே தெரிந்த விடயம். ஆனால் தேர்தல் கண்காணிப்பு குழுவுக்கு மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது.
-
கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுமா?
இல்லை சுவி எனக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. பாம்பு கடித்தநேரம் அனேகமாக 8-8:30 இரவு. இரவில் கார்காரரை தேடியலைந்து வைத்தியரிடம் போக 10 மணியாகியிருக்கும். கால் விரலில் தான் கடித்தது.மெதுவாக இரத்தம் வந்தது. இது நடந்தது 60களின் கடைசியில் என்ன வைத்தியம் செய்தார் என்று ஞாபகம் இல்லை. மரங்களில் காண்பது கோடாலி பாம்பு என்பார்கள். வேறு பாம்பாகவும் இருக்கலாம்.
-
மகரந்தம் படத்தில் ஒரு பாட்டு
யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்கள் சிறந்த கலைஞர்களாகவும் இருக்கிறார்கள். பாராட்டுக்கள். நேரமிருக்கும் போது பார்த்து உற்சாகப்படுத்துங்கள்.
-
மகரந்தம் படத்தில் ஒரு பாட்டு
https://www.facebook.com/reel/1367383485000236/?fs=e&fs=e
-
கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுமா?
தகவலுக்கு மிகவும் நன்றி.
-
மாகாண சபைத் ”தேர்தல் பந்து” எதிர்க்கட்சிகளிடம் வீசிய அநுர.
மாகாண சபைத் ”தேர்தல் பந்து” எதிர்க்கட்சிகளிடம் வீசிய அநுர ------------- - * 10 பில்லியன் ஒதுக்கி இந்தியாவுக்கு கணக்குக் காட்டியுள்ளார். * ஜேஆர் காலத்தில் இருந்து மாறி மாறி வீசப்படும் பந்து * அனைத்துக் கட்சிகளின் கருத்தை பெறுதல் என்று கூறி மேலும் சிக்கலாக்கும் உத்தி ------ - அரசியல் தீர்வுக்கான 13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் நிராகரித்தமை என்பது வேறு... ஆனால் அதனை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உரியது. ஏனெனில், அது இலங்கை நாடாளுமன்றத்தில் 1988 இல் அறுதிப் பொரும்பான்மை வாக்குகளினால் அங்கீகரிப்பட்ட ஒரு சட்டம். அதனை நடைமுறைப்படுத்த யாருடைய ஒத்துழைப்பும் தேவையில்லை. மாகாண சபைத் தேர்தல்களை நடத்தத் தேவையான பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து நிறைவேற்ற அநுர அரசாங்கத்திடம் 159 என்ற அறுதிப் பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் உண்டு. தேர்தல் முறைமையைக் கூட மாற்றலாம். ஆனால் -- வரவு செலவுத் திட்ட உரை நிகழ்த்தியபோது, எதிர்க்கட்சிகளிடம் அப் பொறுப்பை கையளித்தன் பின்னணி என்ன? தேர்தல்களில், குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில், தமிழர்களின் ஆதரவை பெறவரும்போது, இனப் பிரச்சினைக்கான தீர்வுகள் பற்றி, சிங்கள அரசியல் தலைவர்கள், தமிழர்களிடம் வாக்குறுதிகளை அள்ளி வழங்குவர். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் ---- A) நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்பர்... B) தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை என்பர்... C) சர்வகட்சி மாநாடு என்பர்... D) மகாநாயக்கத் தேரர்களுடன் பேச வேண்டும் என்பர். இவ்வாறு ஏதேதோ சாக்குப் போக்குச் சொல்லி ”எல்லோருடைய கருத்துக்களையும் பெறுதல்” என்ற சந்தர்ப்பவாத ஜனநாயக முகத்தைக் காண்பித்து ”அரசியல் தீர்வுப் பந்து” பிரதான எதிர்க் கட்சிகளிடம் எறியப்பட்டு விடும். இப்படி பந்து எறியும் அரசியல் விளையாட்டு, ஜேஆர் 1980 இல் ஆரம்பித்த ”மாவட்ட அபிவிருத்தி சபை” என்ற அரைகுறை தீர்வு முறையில் இருந்து, 13 என்ற குறைப் பிரவசம் வரையும் நீட்சியடைந்துள்ளது. இப் பின்புலத்தில், ஜேஆருக்கு சளைத்தவன் அல்ல என்பதை, அநுர இன்று நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தினார்... குறிப்பாக --- 2017 ஆம் ஆண்டில் இருந்து நடத்தப்படாமல் உள்ள மாகாண சபைத் தேர்தல் செலவுக்கு 10 பில்லியன் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளார் அநுர. ஆனால், தேர்தல் எப்போது என்பது பற்றி தன்னால் தீர்மானிக்க முடியாது என்று கூறி கைவிரித்து விட்டார். அத்தோடு பொருத்தமான தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்குமாறு எதிர்க்கட்சிகளின் தலையில் பந்தை எறிந்து விட்டுத் தப்பிவிட்டார் அநுர. அதாவது --- நாட்டைப் பிரிக்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் என்று 2009 இற்குப் பின்னர் குறிப்பாக 2017 ஆண்டில் இருந்து கூற ஆரம்பித்த சிங்கள அரசியல் பிரதிநிதிகள் சிலர், முடிந்தவரை 13 ஐ இரத்துச் செய்யவே விரும்புகின்றனர். ஆகவே -- அத்தகையை சிங்கள அரசியல் பிரதிநிதிகள் - பௌத்தகுருமார் ஆகியோரிடம் இருந்து தப்பிவிட்டார் அநுர. ஆனால், எதிர்க்கட்சிகள் என்ன செய்யும்...? அநுர வீசிய அப் பந்தை எடுப்பார்களா? எடுக்க முடியுமா? பொருத்தமான தேர்தல் முறையை உருவாக்க அறுதிப் பெரும்பான்மை அநுர அரசாங்கத்திடம் உண்டு என்று கூறி எதிர்க்கட்சிகள் தட்டிக் கழிக்கும். உண்மையும் அதுதானே! ஆனாலும், அதற்கு அநுர என்ன சொல்வார்...? 1) தமிழ்தேசியக் கட்சிகள் ஒத்துழைக்கவில்லை என்பார். 2) புதிய அரசியல் யாப்பு தாயாரிக்கப்படும்போது அரசியல் தீர்வுக்கு முன்னுரிமை என்பார். 3) 2015 இல் ரணில் - மைத்திரி அரசாங்கம் தயாரித்த 'ஏக்கிய இராஜ்ய ' என்ற யாப்பு வரைபை கையில் எடுப்பார். 4) நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்பார்... இவ்வாறு விரிவுபடுத்தி சிங்கள பௌத்த பேரினவாதிகளிடம் இருந்து அநுர தப்பித்துக் கொள்வார்... இப்படியே கைமாறி, கைமாறி பந்து எறிந்து விளையாடுவது தானே சிங்கள அரசியல் தலைவர்களின் வரலாறு. 1948 இல் இலங்கை சுதந்திரமடைந்த நாள் முதல் இந்த அணுமுறை தானே இங்கு விஞ்சிக் கிடக்கிறது? ஆனால் --- ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்களின் வாக்குகளை பெற பிரச்சாரம் செய்ய வரும்போது மாத்திரம் ---- ------தீர்வு விவகாரத்தில் ”நாங்கள் அரசியல் பந்து எறிந்து விளையாடமாட்டோம்” என்று வாக்குறுதி வழங்குவார்களா? 1994 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா வழங்கிய வாக்குறுதி என்ன? பின்னர் நடந்தது என்ன? அன்று சமாதானத்துக்கான போர் என முழங்கினார் சந்திரிகா. அது இன்று செம்மணியில் வந்து நிற்கிறது... 2024 இல் நடைபெற்ற தேர்தலில் அநுர வழங்கிய வாக்குறுதி என்ன? A) ”தமிழர்களின் பிரச்சினை எங்களின் பிரச்சினை” B) ”தமிழர்களின் பிரச்சினையை நாங்கள் கையில் எடுத்துள்ளோம்” C) ”தென்பகுதியில் பாரிய மாற்றம் வரவுள்ளது. அந்த மாற்றத்துக்குள் தமிழர்களும் வர வேண்டும்” இல்லையேல் தனிமைப்படுவீர்கள்” என்ற எச்சரிக்கை வேறு. இப்படி வாக்குறுதிகள், அதேநேரம் மிரட்டல் தொனியிலும் உரையாற்றி, அநுர அளித்த உறுதிமொழிகள் இப்போது எங்கே? மாகாண சபைத் தேர்தலை நடத்த பொருத்தமான தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்குங்கள் என்று எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுக்க வேண்டிய அவசியம் ஏன்? 159 ஆசனங்கள் உள்ள அரசாங்கம் மிக இலகுவாக பொருத்தமான தேர்தல் முறை ஒன்றை உருவாக்கலாமே? பதவியேற்று இன்று ஒரு வருடம் சென்று விட்டதே? அதென்ன?--- தமிழர்களின் விவகாரங்கள் என்று மாத்திரம் வரும்போது, ஜனநாயக வழியில் எதிர்க்கட்சிகள் - பொது அமைப்புகள் - பௌத்த குருமார் ஆகியோரின் ஒத்துழைப்புகளை கோருவது? சுனாமி பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் சந்திரிகா இப்படித்தானே செயற்பட்டார்! ஆகவே இவ்வாறு சுட்டிக்காட்டி எழுதுவதற்கு நிறைய உண்டு... ஆனால்--- சில போலியான முற்போக்குத் தமிழர்கள் - போலியான இடதுசாரி தமிழர்கள் சிலருக்கு இவை புரியும். ஆனால் எழுதமாட்டார்கள். கம்யூனிஸ்ட் என்று மார் தட்டுகின்ற சில தமிழ்ப் பத்திரிகையாளர்களும் இப்படித்தான்...இப்படி எழுதாமல் தவிர்ப்பதுதான் இவர்கள் கூறுகின்ற “மாற்றுக் கருத்து” அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்-
-
கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுமா?
@Justin பாம்பு கடித்தால் இரத்தம் ஓடாமல் கட்டுப் போடுவார்கள். சிறிய வயதில் எனக்கும் ஏதோவொரு பாம்பு கடித்து காலில் கட்டுப் போட்டு கொட்டடியில் இருந்த விசகடி டாக்ரரிடம் கொண்டு போனார்கள். சிலர் அந்த இடத்தில் இருந்து இரத்தத்தை வெளியே எடுக்க வேண்டும் என்கிறார்கள். இப்போது இந்த முறையெல்லாம் செய்யவே கூடாது என்கிறார்கள். ஆனால் என்னென்ன செய்ய வேண்டும் என்று இதுவரை தெளிவாக எழுதுகிறார்கள் இல்லை. உங்களுக்கு தெரிந்ததை கொஞ்சம் எழுதலாமே.
-
தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும். !
என்பிபிக்கு விருப்பம் இருக்கலாம். தோட்ட உரிமையாளர்களும் எப்படி கொடுப்பது? தேயிலை விலை உயர்த்தவா? இது கொஞ்சம் சிக்கலே. ஏறத்தாள இலங்கை விமானசேவை போலவே.
-
எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே
கங்காணியே மேலே ஏற்றியபடியால் அவலத்தில் நேய் நேய் என்றும் கத்த முடியாது. வீடுகள் மாறும் போதும் இதைவிட கூடுதலான புதிய புதிய பிரச்சனைகள் வரும்.
-
தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும். !
இது நீண்ட காலமாக ஒவ்வொரு அரசாலும் அப்பப்ப சொல்கிறார்கள். சகல தோட்டங்களும் தனியார் வசம் இருப்பதால் இது சாத்தியப்படுமா தெரியவில்லை?
-
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் - சுருக்கம்
யாழ்ப்பாணத்திற்கு எப்பதான் நெடுஞ்சாலை அமைக்கப் போகிறார்கள்?
-
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை சமர்ப்பிப்பு!
*பாதுகாப்பு அமைச்சுக்கு 64800 கோடி ரூபா நிதி! 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டம் நாளை *கல்வி அமைச்சுக்கு கடந்த ஆண்டைவிட 3000 ஆயிரம் கோடி மாத்திரமே மேலதிக ஒதுக்கீடு - ----- ----- ------ அநுர அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக் கான வரவு செலவுத் திட்டத்தில், மொத்த செலவீனமாக 4 இலட்சத்து 43,435கோடியே 64,68000 ரூபா காண்பிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் செலவீனமாக 4இலட்சத்து 21824 கோடியே 80,18000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான செலவீனம் 21610கோடியே 84,50000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 61,744 கோடியே 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 64800 கோடி ரூபா ஒதுக்கப்பட் டுள்ளது. இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 3055 கோடியே 50 இலட்சம் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்காக அநுரகுமார வசமுள்ள பாது காப்பு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் ,டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகிய 3 அமைச்சுக்களுக்கும் மொத்தமாக 11,6980 கோடியே 5 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்காக அநுரகுமார வசமுள்ள பாதுகாப்பு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளா தார அபிவிருத்தி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவற்றுக்கு 1.105.782.000000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்காக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சுக்கு 271,000,000,000ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில், 2026 ஆம் ஆண்டுக்காக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சுக்கு 301,000,000,000ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 3000 கோடி ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. (கடந்த செப்ரெம்பர் 26 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட முதலாம் வாசிப்பு மதிப்பீட்டு அறிக்கையில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் இவை) அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்-
-
இலகுகாத்த கிளிகளாக புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள்
கக்கீம் மெளனத்தைக் கலைத்து கிடைத்த சந்தர்ப்பத்தில் தொடர்ந்தும் குளிர் காயாமல் தேசியத் தலைவருக்கும் இவருக்கும் இது பற்றி நடந்த கலந்துரையாடலும் தேசியத் தலைவருடன் செய்து கொண்ட ஒப்பந்தம் பற்றியும் வெளிப்படையாக பேச வேண்டும்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அப்படி என்னதான்யா தெரிந்தது? சொன்னா நாங்களும் பார்ப்பமில்ல. - யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.