Everything posted by ஈழப்பிரியன்
-
சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை இரத்துச்செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை.
இலங்கையின் மத்திய அதிவேக வீதித்திட்டத்தின் மிகவும் தாமதமான பிரிவு 1க்கு பொறுப்பான சீன நிறுவனத்தின் ஒப்பந்தத்தை இரத்துச்செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது MCC என்ற மேட்ச்லலுர்ஜிக்கல் கோப்ரேஷன் ஒப் சீனா (Metallurgical Corporation of China (Ltd)) நிறுவனத்துடனேயே இந்த ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில் திறந்த, வெளிப்படையான ஏலச் செயல்முறையின் கீழ் புதிய கேள்விப்பத்திரங்களை கோருமாறு, இலங்கையின் மிகப்பெரிய ஐந்து கட்டுமான நிறுவனங்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளன. MCC உடனான ஒப்பந்தம் The Lanka Infrastructure Development Consortium (LIDC) PLC, Maga Engineering (Pvt) Ltd, International Construction Consortium (Pvt) Ltd (ICC), KDA Weerasinghe & Co. (KDAW), kw;Wk; NEM Construction மற்றும் NEM Construction என்பனவே அந்த நிறுவனங்களாகும். சீன நிறுவனமான MCC உடனான ஒப்பந்தம் மிகவும் விலை உயர்ந்தது என்றும் இந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்தநிலையில், பிரிவு 1 இன் மீதமுள்ள பணிகள் உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்டால் குறிப்பிடத்தக்க செலவுக் குறைப்பு இருக்கும் என்று இந்த நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. அமெரிக்க டொலர்கள் குறிப்பாக சீன நிறுவனத்துடன் செய்துக்கொள்ளப்பட்டுள்ள தற்போதைய ஒப்பந்தத்தின் கீழ், ஒரு கிலோமீட்டருக்கு சுமார் 33 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என விலை குறிக்கப்பட்டுள்ளது. எனினும் பகுதி 2 க்கு உள்ளூர் நிறுவனங்களால் ஒரு கிலோமீற்றர் ஒன்றுக்கு சுமார் 18 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே குறிக்கப்பட்டுள்ளதாக கட்டுமான நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. https://tamilwin.com/article/lanka-builders-urge-revoke-deal-with-china-1736653996?itm_source=article வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இரட்டிப்பு செலவு என்னும் போது ஏன் இதை வெளிநாடுகளுக்கு செய்ய கொடுக்கிறார்கள். செய்து முடிந்து பாவனைக்கு திறந்துவிட்டாலும் அதிலே வரும் வருமானம் குறிப்பிட்ட காலத்துக்கு அந்த வெளிநாட்டு நிறுவனமே எடுக்கப் போகுது. இலங்கையில் உள்ள நிறுவனங்களுக்கு ஏன் கொடுக்க முடியாது?
-
பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
சில கொன்ராக்கில் கையெழுத்திட்டால் அதிலிருந்து மீளமுடியாது.
-
எழுத்தாளர் அந்தனி ஜீவா காலமானர்
ஆழ்ந்த அஞ்சலிகள்.
-
பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
சிலவேளை பழக்க தோசமாகவும் இருக்கலாம். கொழும்பில் பேரூந்துகளில் பயணித்தவர்களைக் கேட்டால் கதைகதையாக சொல்லுவார்கள்.
-
புட்டினுடனான சந்திப்புக்கு ஏற்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு!
ரம்படனான சந்திப்பு புளோரிடாவில் உள்ள ரம்பின் மாளிகையிலேயே நடக்கப் போகிறது போல. உலக நாடுகளுக்கு போகப் பயப்பட்டு அடங்கியிருந்த பூட்டின் தடை செய்த அமெரிக்காவுக்கே வந்து இறங்கினால் எப்படி இருக்கும்? திருப்பதிக்கே லட்டு கொடுத்த மாதிரி இல்ல. ஒருவேளை கனடா பிரதமரை வெருட்டியது போல ரசியா அமெரிக்காவின் 52வது மாநிலம் என்று ரம் சொன்னாலும் சொல்லுவார்.
-
பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
ம், வரப்போவது பாலியல் குற்றவாளி. அதில முகவசீகரம் தேவைதானா? பயம் அவமானம் அவற்றை தாங்குமா, காக்குமா? அவரும் கதாநாயகன் போட்டியென்று, அலங்காரத்துடன் வந்து துலைக்கப்போகிறார் இதெல்லாம் கையை காலை போடுற நேரங்களில் சிந்திக்க வேண்டும். அற நனைந்த பின் குளிரென்ன கூதல் என்ன.
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
நியூயோர்க்கில் உள்ள Fire Hydrant எல்லாம் அடிக்கடி வேலை செய்யுதா என்று திறந்து பார்ப்பார்கள். லாஸ் அங்கிலஸ்சில் அப்படியான சோதனைகள் செய்து திருத்துவதில்லைப் போல தெரிகிறது. பல திறந்த போதும் தண்ணீரே வரவில்லையாம். அங்குள்ள மேயர்மாருக்கு இது ஒரு பிரச்சனையாக மாறலாம்.
-
இன்று ரம்புக்கு தீர்ப்பு.
செய்தது பிரச்சனை இல்லை. ஆனால் கடசிப் பணத்தைக் கொடுத்து அமுக்க நினைத்தது தான் பிழை.
-
இங்கிலாந்து,அமெரிக்காவில் பயண ஒழுங்குகளில் மாற்றம்.
இங்கிலாந்துக்கு பயணிப்பவர்கள் அல்லது இடைத்தங்கல் பயணம் செய்பவர்கள் இந்த மாதம் 8ம் திகதியில் இருந்து 13 டாலர்கள் கட்டி எலற்றோனிக் விசா(Electronic Travel Authorization) எடுக்க வேண்டும். இது அமெரிக்கா கனடா ஐரோப்பியர்களுக்கும் பொருந்தும். அமெரிக்காவில் இதுவரை சாதாரண வாகன அனுமதிப் பத்திரத்துடன் விமானபயணம் செய்யலாம் வைகாசி 7ம் திகதி 2025 இல் இருந்து றியல் ஐடி(REAL ID) என்ற சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது கடவுச்சீட்டு வைத்திருந்தாலே விமானப் பயணமோ அரச அலுவகங்களுக்குள்ளோ போக முடியும். இப்போதுள்ள சாரதி அனுமதிப் பத்திரம் பொய்யான தரவுகளைக் கொடுத்து பலரும் எடுத்திருந்தார்கள். குறிப்பிட்ட காலத்துக்கொரு தடவை புதுப்பிக்கும் போது அடுத்த காலத்துக்காக பணத்தைக் கட்டினால் சரி. பல லட்சம் பேருக்கு இது ஆப்பாகப் போகிறது. நீண்ட காலமாகவே சொல்லிக் கொண்டு வந்து பிற்போட்டுக் கொண்டு வந்து வரும் வைகாசி மாதம் 7ம் திகதி கட்டாயமாக்குகிறார்கள். https://abc7ny.com/post/new-travel-requirements-taking-effect-2025-domestic-international-destinations/15734635/?ex_cid=TA_WABC_FB&utm_campaign=trueAnthem%3A+Trending+Content&utm_medium=trueAnthem&utm_source=facebook
- கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் சங்கர் எ சூசை
-
கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
- கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
உண்மை தான் ஆனால் அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு நொண்டிச் சாட்டாகத் தெரியலையா? இது யாருடையதோ தூண்டுதலின் பேரில் சிஐடி இயங்கியதாகவே தெரிகிறது.- கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
விமானநிலைய சம்பவம் பொய்யா கப்பி?- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
இது அப்ப. நீங்க பார்த்தது இப்ப.- கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
இப்போ கக்கீம் ஒரு நேரடி சாட்சியாகிவிட்டார்.- பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
தொலைக்காட்சியில் வரப் போகிறீர்கள். அதற்கேற்ப வசீகரமாக இருக்க வேண்டும்.- கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
சிறிதரனுக்கு அழைப்பு கிடைத்து விருந்தாளியாக போகும்போது ஏன் கக்கீமின் உதவி தேவைப்படுகிறது? ஒருவேளை சேர்ந்தே போயிருக்கலாம். இந்தப் பிரச்சனையை பார் ஆளுமன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு விமானநிலைய அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும்.- யாழில் போக்குவரத்து பொலிசார் அட்டகாசம்; மக்கள் விசனம்
எல்லோரது கைகளிலும் செல்போன் உள்ளது .படம் எடுத்து முக்கியமாவர்களுக்கு அனுப்பலாமே?- கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
சிறி மேலே உள்ள பந்தியை வாசித்துப் பார்க்கவும். உள்வீட்டு சண்டை எவ்வளவு அநாகரீகமாக போகுது. சிஐடி யில் இப்போதும் தனிநபர் செல்வாக்கு செலுத்தக் கூடியளவு இருக்கிறது.- கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சிறீதரன் தொடர்பில் வெளியான தகவல் சென்னையில் இடம்பெறவுள்ள தமிழ்நாடு அரசின் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இன்றையதினம் சென்னைக்கு செல்வதற்காக சென்றிருந்த வேளை இவ்வாறு தடுத்து நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக சிறீதரன் தரப்பினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டின் முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள அயலக தமிழர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக சிறீதரன் அழைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சிறீதரன் மீது போலி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, சிறீதரனை தடுத்து நிறுத்துமாறு சிஐடியினர் மூலம் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், தங்களுடைய கடவுச்சீட்டில் பிழை இருக்கின்றது என்றும், அதனால் நீங்கள் பயணிக்க முடியாது என்றும் சிறீதரனிடம் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாக சிறீதரன் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன திடீர் நடவடிக்கை தனது புதிய கடவுச்சீட்டின் ஊடாக சிறீதரன் எம்.பி இதுவரை நான்கு முறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருந்ததாகவும், இதுவரையில் கடவுச்சீட்டில் பிழை இருப்பதாக அறிவிக்கப்பட்டதில்லை என்றும், தற்போது முதல்முறையாக இவ்வாறு அறிவிக்கப்படுவதால் இது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் சிறீதரன் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதேவேளை, தமிழ்நாட்டின் முதலமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வின் சிறீதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ள நிலையில், சிறீதரனின் இதுபோன்ற நகர்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சிலர் இவ்வாறு தடைகளை ஏற்படுத்தி, இக்கட்டான சூழ்நிலையை உருவாக்குவதாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. உள்ளக பிரச்சினைகள் இது போன்ற, முறையற்ற நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் உள்ளக பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை தடுத்து நிறுத்தும் போது சில கடப்பாடுகள் இருக்கின்றன எனவும், அவை எதுவும் இல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை தடுத்து நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://tamilwin.com/article/travel-ban-on-mp-sridharan-1736525782- கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
அம்மா திராவிட படையோடு வந்து இறங்கப் போகிறாவோ? ஏன் சிறிதரனின் படத்தைப் போடவில்லை? இந்த நிகழ்வில் சிறிதரனை போகவிடாமல் செய்ய விமானநிலையத்தில் குடைச்சல் கொடுத்ததாக அறிந்தேன். இதுவும் உள்வீட்டு வேலை என்றார்கள்.- இன்று ரம்புக்கு தீர்ப்பு.
ஒத்திவைக்கப்பட்ட தண்டனையாக இருந்திருக்குமோ? பதவிக்காலம் முடிந்த பின் சிறை. ஆனாலும் இங்கே மன்னிப்பும் வழங்கலாம். இது தனக்குத் தானே வழங்க முடியுமா என்று தெரியவில்லை. நான்கு ஆண்டுகள் முடிவுறும் தறுவாயில் பதவியை ராஜினாமா பண்ணிவிட்டு உபஜனாதிபதியை பதவி ஏற்கச் செய்து அவர் மூலம் மன்னிப்பு வழங்கலாம்.- பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
அவர்களின் ஆலோசனை ஆயிரத்தில் ஒன்று. நீங்களும் விரும்பினால்; இலவச ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன முதலில் @alvayan னை அனுப்பிப்ப பார்க்கலாமென்று எமது குழு முடிவு பண்ணியுள்ளது. @satan நீங்களும் சேர போக விரும்பினால் இப்பவே ஒருதொகை பணத்தை @தமிழ் சிறிக்கு அனுப்பிவைக்கவும்.- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
அடிக் கணக்காக பனி கொட்டிக்கிடக்க நீச்சல் தடாகத்தில் ஈழப்பிரியன் குடும்பம். இதுவும் கலிபோர்ணியா தான்.- பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
பில்லியன் டாலர் கேள்வி. - கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
Important Information
By using this site, you agree to our Terms of Use.