Everything posted by ஈழப்பிரியன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம். தேர்தல் நேரம் பொறுமை காத்ததற்கு நன்றி மோகன்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
கந்தப்பு இந்தக் கேள்வி பில்லியன் டாலர் கேள்வி. எனவே இதற்கு 5 புள்ளிகளாவது வழங்க வேண்டும்.
-
பாராளுமன்ற பொதுத் தேர்தல் செய்திகள் - 2024
இதென்ன பனையால விழுந்தவனை மாடு ஏறி மிதித்த மாதிரி இருக்கே.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தல் முடிவின் பின்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
வாக்குப் போட்ட மக்களை தேடிச் சென்று நன்றி சொல்லும் டாக்ரர்.
-
தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்?
நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் என்பிபியே எதிர்பார்க்காத விரும்பாத ஒன்று என்று தான் ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். 113 க்க மேல் ஏடக்க விரும்பினார்களே தவிர மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விரும்பவில்லை. காரணம். மற்றைய அரசுகளை வெளியே இருந்து விமர்சித்த பல விடயங்களை மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளதனால் சகலதையும் இவர்களின் விருப்படி நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம். முக்கியமாக சகல அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் ஒழிப்போம் என்றார்கள். இது வெளியே இருந்து எல்லோரும் சொன்னார்கள்.உள்ளே வந்ததும் மறந்துவிட்டார்கள். அதே பட்டியலில் இவர்களும் வருவார்களா? தமிழர் பிரச்சனைக்கு எல்லோரும் சேர்ந்து (தமிழர் தரப்பில் சமந்திரன்)ஒரு தீர்வு எழுதியுள்ளனர். இப்போது அதை தீர்வாக எடுத்தால் யாருமே வாய் திறக்க முடியாது. ஏனென்றால் எல்லோரும் சேர்ந்து எழுதியது. அதிலே தமிழருக்கு பல பாதகமான விடயங்கள் உள்ளன என சொல்கிறார்கள்.(சுமந்திரனின் வேலை) இனி அடுத்தடுத்து உள்ளூராட்சிசபை மாகாணசபை தேர்தல்கள் வருகிறபடியால் தமிழ் மக்களின் வாக்குகளைக் கவர பாதை திறப்பு காணிவிடுவிப்பு என்று பரிசீலிக்கலாம். சிறையில் உள்ளவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தை எடுத்தாலே போதும் வெளியே வந்துவிடுவார்கள். அடுத்தடுத்த தேர்தல்களில் அவர்கள் கட்சியில் சேர்ந்து போட்டியிடுவதற்கு நம்மவர்கள் போட்டாபோட்டியிடப் போகிறார்கள்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இந்தக் காணொளியைப் பார்க்காதவர்கள் ஒரு தடவை பாருங்கள். ஏற்கனவே சசியோ யாரோ இணைத்திருந்தனர். சுமந்திரன் எப்படியெல்லாம் சிங்களவருடன் சேர்ந்து எழுதி வைத்துள்ளார் எனபதை கேழுங்கள்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
எதுக்கெடுத்தாலும் Facebook Live இல் போகும் பைத்தியருக்கு புலம்பெயர் அபிமானிகள் பலர் உள்ளனர். அதிலும் பெண்கள் அதிகம்! சீரியல் பார்த்தும், கொசிப் கதைத்தும் சந்தோசத்தை அடைபவர்களுக்கு அருச்சுனா ஒரு தெரிவுதான்! இவர் தன்னை மாற்றாவிட்டால், காலம்பூராவும் வழக்குகளில் இழுபட்டுக்கொண்டிருப்பார். அவற்றை விடுப்புப் பார்க்கும் கூட்டத்திற்கு நல்ல தீனி கிடைக்கும்! யாரும் விரும்பினால் என்ன விரும்பாவிட்டாலும் என்ன லூசு பைத்தியம் இப்படி என்ன வேணுமானாலும் சொல்லலாம். இனிமேல் எம்பி என்ற தோரணையில் அதுவும் பொலிஸ் பாதுகாப்புடன் எந்த வைத்தியசாலைகளுக்கும் எத்தனை மணிக்கும் போகலாம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்பு என்று சொல்லும் பலர் திரும்ப திரும்ப டாக்ரரை பைத்தியம் பைத்தியம் என்பது ஏதொ ஒரு விதத்தில் கஸ்டமாக உள்ளது.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வாய்ப்பில்லை ராஜா.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
ஆம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
புன்னாலைக்கட்டுவனில் கொண்டாட்டம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சுமந்திரனை சிறந்த ஒரு சட்டத்தரணியாகவே முன்னர் இருந்து எழுதி வருகிறேன். இல்லை அக்கா நான் பார்க்க வில்லை பார்த்தால் நான் யாழில் எழுதி இருக்க மாட்டேன்............................. முன்னர் டாக்ரர் வைத்தியசாலைக்குள் போகமுடியாது. இப்போது எம்பியாக பொலிஸ் பாதுகாப்புடன் போகலாம்.
-
அநுர அரசின் புதிய பிரதமர் யார்?
அப்ப ரசோதரன் ஈழப்பிரியன் நியூயோர்க் ரசோதரன் கலிபோர்ணியா இருவரும் இருகரைகளையும் பார்க்கலாம்.
-
அநுர அரசின் புதிய பிரதமர் யார்?
அரகலய போராட்டம் எப்ப எங்கே நடாத்த வேண்டும் எனபதை அமெரிக்கா முடிவு பண்ணும். அந்தக் கவலை எவருக்கும் வேண்டாம்.
-
அநுர அரசின் புதிய பிரதமர் யார்?
வெளிநாட்டில் அதுவும் அவுசில் படித்த பெண் வெளியுறவு அமைச்சராக இருப்பார் தானே? எது ?பிரதமரா?வெளிநாட்டு அமைச்சரா?
-
அநுர அரசின் புதிய பிரதமர் யார்?
என்ன புத்தா ஏதோ பெரிய திட்டத்துடன் தான் களமிறங்கியுள்ளீர்களோ?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
மைத்திரியின் நல்லாட்சியில் தயாரித்த தீர்வையே என்பிபி முன்வைக்கப் போவதாக சொன்னார்கள். அப்படியானால் சுமந்திரனே தமிழர்கள் தரப்பில் பங்கு கொண்டு எழுதியவர். ஆனபடியால் யார் விரும்பினால் என்ன விருப்பமில்லாவிட்டால் என்ன சுமந்திரனை உள்வாங்கியே தீர வேண்டும். அத்துடன் என்பிபி விரும்பாவிட்டாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வந்துள்ளார்கள். வெளியே இருந்து ஜனாதிபதி முறைமையை கட்சி தாவுதலை ஒழிப்போம் என்றவர்கள் இப்போது சாட்டுச் சொல்லவே முடியாது மாட்டிக் கொண்டார்கள். எனவே சட்டரீதியான பிரச்சனைகள் பல இருக்கும் போது சுமந்திரன் தமிழர் தரப்பில் முக்கியமாகிறார்.
-
அநுர அரசின் புதிய பிரதமர் யார்?
பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், அடுத்த நடவடிக்கை குறித்து கட்சி பரிசீலித்து வருகிறது. அதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வின் போது உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர். இதனையடுத்து புதிய அமைச்சரவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய பிரதமர் இந்நிலையில் புதிய அரசாங்கத்தின் பிரதமராக, தற்போதைய அமைச்சரான விஜித ஹேரத்தை நியமிக்க வேண்டும் என கட்சிக்குள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது வெளியான விருப்பு வாக்குகளின் அடிப்படையில் கம்பஹா மாவட்டத்தில் அதிகூடிய 716,715 வாக்குகளை விஜித் ஹேரத் பெற்றுள்ளார். இதனையடுத்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விருப்பு வாக்கு சமகால பிரதமரும், புதிய நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஹரினி அமரசூரிய 655,289 விருப்பு வாக்குகளை கொழும்பு மாவட்டத்தில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/new-prime-minister-discussion-in-anura-government-1731684786 தேசிய மக்கள் சக்தி அமைக்கப் போகும் அடுத்த அரசில் நீதி அமைச்சராக நீதிபதி இளஞ்செளியனை நியமித்தால் நன்று. இல்லது அவருக்கு அற்ரோர்னி ஜெனரல் போன்ற உயர்மட்ட பதவிகள் ஏதாவது வழங்கப்பட வேண்டும். அத்துடன் அமைச்சு செயலாளர்களாக திறமை வாய்ந்த தமிழர்களையும் தெரிவு செய்ய வேண்டும். இந்த அம்மாவுக்கு பிரதமர் பதவி இல்லாவிட்டால் வெளிநாட்டமைச்சர் பதவி பொருத்தமாக இருக்கும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஆமாம் நானும் இதைக்கவனித்தேன். இரண்டு நாட்கள் முதலும் இதைப்பறிறி எழுதியிருந்தேன். தாங்களாகவே முடங்கினார்களா? பொலிசாரால் முடக்கப்பட்டதா? தெரியவில்லை.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya), முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்(Mahinda Rajapaksa) சாதனையை முறியடித்துள்ளார். இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய, 655,289 என்ற அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார். வரலாற்றில் இடம்பிடித்த வாக்கு எண்ணிக்கை இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு நாடாளுமன்ற வேட்பாளர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாக பிரதமர் ஹரிணி பெற்ற வாக்குகள் இடம்பிடித்துள்ளன. இதற்கு முன்னர், நாடாளுமன்ற தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற இலங்கையின் அரசியல்வாதியாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காணப்பட்டார். அவர், கடந்த 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது குருநாகல் மாவட்டத்தில் 527,364 என்ற அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த நிலையில், குறித்த சாதனையை இம்முறை இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக பிரதமர் ஹரிணி முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/2024-sri-lankan-parliamentary-election-result-1731673511
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இது மட்டுமல்ல. அடுத்தடுத்து உள்ளூராட்சிசபை, மாகாணசபை என்று தேர்தல்கள் வரப் போகின்றன. தமிழ்க் கட்சிகள் சுதாகரித்துக் கொள்வதற்குள் என்பிபி யில் போட்டியிட மக்கள் அலை மோதப் போகிறார்கள்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஓணாண்டி நீங்கள் @ரஞ்சித் தின் பதிவை தவறாக எடுத்துவிட்டீர்கள் என எண்ணுகிறேன். அவர் எழுதியது எதுவுமே அவராக எழுதவில்லை. கடந்த காலங்களில் இவர்களை செய்ததை மட்டுமே நினைவு கூர்ந்தார்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தம்பியை கனகாலத்தின் பின் கண்டது சந்தோசம். மாகாணசபையே இல்லாமல்போகப்போறது போல அப்புறம் எப்படித் தம்பி அதிகாரங்கள் வரும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
மத்தியகுழு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டால் மீண்டும் வரலாம். சுமந்திரனின் வலது கை @Kapithan இன்னும் காணவில்லை. சுமந்திரனின் தோல்வியைத் தாங்கமுடியாமல் தீக்குளிக்கப் போகிறார். எப்படியும் தேசியபட்டியல் மூலம் வந்திடுவார்.கவலை வேண்டாம்.
- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.