Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. தகவலுக்கு நன்றி சிறி. பாஞ்ச்சின் துணைவியார் விரைவில் பூரண குணமாகி குடும்பத்தாருடன் சேர்ந்து இருக்க வேண்டுகிறேன்.
  2. இன்று ஒரு தகவல் (104). 🌺🌿.. மீண்டும் ஈஷாவுக்கு நேர்மையான தீர்ப்பை வழங்கி இயங்க விட்ட உச்சநீதிமன்றம்.🙏 ஆம் இந்தத் தீர்ப்புக்காகத்தான் சில தகவல்களை தரக் காத்திருந்தேன்.😊 என்னைப் பொறுத்தவரை மிகக் கேவலமான விடயம் என்னவென்றால்...... பொய் வதந்திகளுக்கு விடை கூறிக் கொண்டிருப்பதுதான். ஆனாலும் பல நல்ல விடயங்களை தெரிவிக்க ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தலாம் என்ற மகிழ்ச்சி.🥰 அடிக்கடி ஒரே பிரச்சனையை மீண்டும் மீண்டும் எழுப்பி ஈஷாவின் சந்நியாசிகள் இருவரை நீதிமன்றுக்கு இழுத்து, பொலிசார் மூலம் அடாவடித்தனமான நடவடிக்கை எடுத்த சென்னை உயர் நீதிமன்றை கண்டித்து, தடை விதித்து இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி ( நேர்மைக்குப் பெயர் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது) மாண்புமிகு சந்திர சூட் ( Chandrachud) அவர்கள் 18/10/2024 அன்று வழக்கை முடித்து வைத்து சிறப்பான தீர்ப்பை ஈஷாவுக்கு வழங்கினர்.👏 எனது நெருங்கிய நண்பர் கோயமுத்தூரில் இருந்து ஒரு தகவலைத் தந்தார்..... ஏன் ஈஷாவை தொடர்ந்து உபத்திரவம் கொடுக்கிறார்கள் என்பதற்கு. அவர் ஒரு உயரிய அரச நிர்வாகத்தில் இருப்பவர். நேரே வாருங்கள் அருந்தா உண்மைகளை நானே கூட்டிச் சென்று காட்டுகிறேன் என்றார்.....! அவர் தந்த தகவல் உங்களுக்காக👇 ஒற்றை மனிதன் (சற்குரு)ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளையும் கதற விட்டுட்டு இருக்காரு'னா அதுக்கு இதுதான் காரணம். 😁☝️ 🍁ஈஷா யோக மையம் சுற்றி மிஷனரியின் மதமாற்ற பருப்பு வேகவில்லை. (முன்னர் அந்த ஏரியாவே மதமாற்றம் செய்யப் பட்டது. சற்குரு வந்த பின் முற்றாக நின்று விட்டது.) 🍁சத்குருவின் உதவியினால் ஈஷா யோக மையம் சுற்றி உள்ள கிராமங்களுக்கு மலைவாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு,தொழில் வாய்ப்பு, விவசாய வாய்ப்பு, இலவச கல்வி,இலவச மருத்துவம் கிடைப்பதனால் மிஷனரியின் பண பலம் தூள் தூளாகி விட்டது. 🍁ஈஷா யோக மையம் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள இளைஞர்கள் காலை ஆறு மணிக்கு வேலைக்கு வருகிறார்கள்,மாலை எட்டு மணிக்கு வேலையை முடித்து செல்கிறார்கள். போதைக்கு அடிமையாகாமல் தொழிலில் ஆர்வமாக இருக்கிறார்கள். 🍁அந்த இளைஞர்கள் அனைவருக்கும் நல்வழிப்பாதை வகுப்புகள் நடத்தப்படுகிறது. அவர்களுக்கு குடும்ப உறவுகளை பேணிப்பாதுகாக்க வகுப்புகள் நடத்தப்படுகிறது. 🍁அவர்களுக்கு இலவச மருத்துவம், கல்வி,யோகா என அனைத்தும் கிடைப்பதால் பல கிராமங்களில் வியாபாரம் இல்லாமல் டாஸ்க்மார்க் கடைகள் மூடப்பட்டு விட்டது. (அரசியல் வியாதிகளுக்கு எரியுமா எரியாதா) 🍁கிராமங்களில் காளை மாடுகள் வைத்திருக்கும் விவசாயிகள் அவற்றை கசாப்பு கடைக்கு விற்காமல் அவற்றை தியானலிங்கம் டு ஆதியோகி மக்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதனால் சிறு வருமானம் பெறுகிறார்கள். 🍁 2 மணி நேரத்திற்கு ஒரு முறை 2 மணி நேர ஒய்வை அளித்து அந்த காளை மாட்டுக்கு சிரமம் இல்லாத வகையில் என்ஃபீல்ட் நிறுவனத்துடன் பேசி சுலபமாக இயங்கும் வண்டிகளை வடிவமைத்துள்ளது ஈஷா யோக மையம் 🍁அந்த காளைகளுக்கான உணவு,உறைவிடம்,மருத்துவம் எல்லாமே இலவசம். 🍁அங்குள்ள மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மின் மயானங்கள் அமைத்து உதவி புரிகின்றனர். இதவிட தமிழ் நாட்டில் 10 இற்கும் மேற்பட்ட சுடுகாடுகளை கோயில்கள் போல் பராமரித்து வருகிறனர். 🍁இயற்கை விவசாயம் ,பயிர்ச்செய்கைக்கு மக்களை ஊக்குவித்து பயிற்சி வகுப்புகள் அளிக்கிறார்கள். 🍁மரம் வளர்ப்பு திட்டங்களை,ஊக்குவித்து நடைமுறைப்படுத்துகிறார்கள். 🍁மண் வளம் காக்கும் திட்டத்தை ( Save soil ) நாடளாவிய ரீதியில் அல்ல உலகலாவிய ரீதியில் கொண்டு சென்று பல உலகத் தலைவர்களினாதரவைப் பெற்று ,அந்த நடைமுறையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இன்னும் நிறைய எழுதலாம்... இப்போதைக்கு இது போதும்.....😁 இப்போ உங்களுக்கு புரியுதா?? அந்த எகனாமிக் காரிடாரை உடைக்க முடியாததால் இப்படி பொட்டைதனமாக திருட்டு வழக்கு போட்டு பார்க்கிறது கேவலமான அரசியல்.👍 சரவணபிரசாத் பாலசுப்பிரமணியன் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 நன்றி - Saravanaprasad Balasubramanian ஜி🍁 மேலும் சில தெளிவூட்டல்கள்.....👇 சந்நியாசம் என்பது இந்து , கிறீஸ்தவம், பெளத்தத்தில் பின்பற்றப்படுவது இயல்பே, யாவரும் அறிந்ததே......!❤️ ஆனால் ஈஷாவில்.....👇 வயது வராதவர்கள் சந்நியாசத்தில் சேர்க்கப்படுவதில்லை. வயது வந்தவர்கள் சந்நியாசத்தை விரும்புகிறார் என்பதற்காகவும் சேர்க்கப் படுவதில்லை.👎 4,5 வருட training இன் பின் அவர்களால் அந்த நிலைக்கு முடியும் என்ற பின்பே வீட்டாரின் அனுமதியுடன் , சந்நியாசத்துக்கு அனுமதி வழங்குகிறார்கள். சந்நியாசத்துக்கு தகுதியில்லாத வர்களுக்கு வீட்டாரிடம் அனுப்பி திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார்கள்.👏 ஈஷாவில் உள்ள சந்நியாசிகள் அநேகர் உயர் கல்வியாளர்கள்.👍 அங்கு நூற்றுக் கணக்கான திருமணங்களை சற்குருவே நடாத்தி வைத்துள்ளார்.🙏 இந்த நடைமுறைகள் ஈஷாவுடன் தொடர்புடைய சகலருக்கும் தெரியும்.. 😊 ஆனாலும் தொடர்ந்து தொல்லை கொடுத்து, பொய்யான அவப்பெயரை ஏற்படுத்தி எப்படியாவது கிளப்பி விடுவோம் என நொந்து போன எதிராளிகள் ஒரு போதும் வெற்றி அடையப் போவது இல்லை.👎 ஏனென்றால் ஈஷாவின் எந்தவொரு செயல்பாடுகளும் எப்பொழுதும் சட்டத்திற்கு உட்பட்டதாகும் என்பதில் சற்குரு மிக அவதானமாக உள்ளார். திரித்து பேசும் மீடியாக்களை என்ன வென்று சொல்வது.....!😊☝️ நல்ல நேர்மையான தகவல்களைத் தரும் என் இந்திய உறவுகளுக்கு நன்றி 🙏 காய்கும் மரத்துக்கு கல்லெறி என்பார்கள். ஆனால் இங்கு நாகைச்சுவை என்னவென்றால் காய்க்கவே விடாமல் கல்லெறியலாம் என நினைக்கிறார்கள்😁 சற்குருவுக்கு இது புதிதல்ல..... ❤️ தொடர்ந்தும் வந்திகளுக்குப் பதில் அளிக்கப் போவதில்லை, நல்ல விடயங்கள் நல்ல சிந்தனைகளுடன் தொடர்ந்து பயணிப்போம் உறவுகளே.... !🙏 வழக்கின் உண்மை தன்மை அறிய... https://www.youtube.com/watch?v=H9I5w06Q7sk ...
  3. இவர் தீவகத்தை பிறப்பிடமாக கொண்டவர் என எண்ணுகிறேன். தொழிலுக்காக கொழும்பு யாழ் என திரிகிறார்.துணைவியாருடன் கொழும்பிலே வசித்தவராயிருக்கும்.
  4. மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இப்படி தான்தோன்றித்தனமாக செய்பவர்கள் இதிலிருந்து பாடம் படிக்க வேண்டும்.
  5. இது இந்த தேர்தலில் மட்டுமல்ல நடந்து முடிந்த தேர்தல்களிலும் இவர் ஒதுக்கப்பட்டுள்ளார். ஜேவிபியை பின்பற்றுகிறார்களா? அவர்கள் சம்பளத்தை கட்சிக்கு கொடுத்துவிட்டு கட்சியிடமிருந்து செலவுக்கு பணம் வாங்குகிறார்களா? தமிழரசுக்கட்சி என்றால் என்னவென்று தெரியாத ஆட்களை வேட்பாளராக போடும் போது கட்சிக்காக உழைத்தவனை ஏன் ஒதுக்க வேண்டும். காலாகாலமாக இது தானே நடைமுறை.
  6. சோழியானும் இளைமையில் காலமானார். துணைவியாரும் இன்னும் வாழ வேண்டிய வயது. ஆழ்ந்த அஞ்சலிகள்.
  7. இதைப்பற்றி யாருக்காவது தெளிவான பதில் இருக்கிறதா? சுற்றுலாவுக்கு வந்தவர்கள் எப்படி ஆக்கிரமிக்கிறார்கள்?
  8. உண்மை தான். ஆனால் ஒரு சீற் அவருக்கு கொடுத்திருக்கலாம்.80களில் இருந்து கட்சியுடன் இணைந்திருந்தவருக்கு ஏன் கொடுக்கவில்லை என்றும் சற்று சிந்தியுங்களேன்?
  9. உங்களுக்கு தெரியும் தானே ஓய்வெடுத்துவிட்டால் தரும் பணம் நாக்கு வழிக்கவே போதாது. இளசுகளை வைத்திருக்க கட்டு கட்டாக பணம் தேவையெ?
  10. ஓ இதுவா சங்கதி. எனக்கு இருந்த இடத்திலிருந்து எழும்பேலாமல் இருக்கு.
  11. சீ ...சீ,.. அப்படியல்ல. உங்களுக்கு தெரியுமா?? என்று சோதனை வைத்து பார்த்தேன் 😂. நீங்கள் போய்ல் ஆகிவிட்டீர்கள். ஆனால் எனக்கு தெரியும் பதிவுகள் செய்யமால் என்ன வைத்திருக்கலாமென்று உண்மையாவா?அது என்னவாக இருக்கும்? எங்களுக்கும் சொன்னால் நாங்களும் வைத்திருக்கலாமில்ல!
  12. உலகில் யுத்தம் நடந்தால்த் தான் சில நாடுகளின் பொருளாதாரம் உயரும். அதே மாதிரி களவுகள் கொள்ளைகள் நடந்தால்த் தான் சில வியாபார நிலையங்களுக்கு நல்லது. தகவலுக்கு நன்றி பெருமாள்.
  13. எய்தவரான மஹிந்தவை ஆட்சியில் இருந்து அகற்ற அன்றைய நிலையில் எந்த வழியும் இல்லாமல் தாயக மக்களுக்கு இருந்த ஒற்றை தெரிவு என்பதால் ஆதரித்தார்கள் மகிந்தவை எதிர்த்து வாக்குப் போட எத்தனையோ வழிகள் இருந்தது. யாராவது ஒருத்தரை டம்மியாக இறக்கியிருக்கலாம்.அல்லது பகிஸ்கரிப்பு செய்திருக்கலாம்.இப்படி எத்தனையோ வழிகள் இருக்க கொலைகார பொன்சேகாவுக்கு வூக்கைப் போடுங்கள் என்று சொல்ல எப்படி மனம் வந்தது? நாளைக்கு பொன்சேகாவுக்கு எதிராக எப்படி நடந்து கொள்ளப் போகிறார்கள்? இது தான் ஒற்றைத் தெரிவு என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது முடிந்த கதை என்றாலும் வலிக்கிறது. அண்மையில் சுமந்திரனும் இதை அத்தாட்சிப்படுத்தியிருந்தார். நாங்கள் என்ன சொன்னாலும் மக்கள் கேட்பார்கள் என்று. மக்களை மாந்தைகளாக எண்ணுகிறார்கள். இந்தத் தடவை படிப்பிப்பார்கள்.
  14. அண்மையில் எனது கடனட்டையைப் பயன்படுத்தி நியூயோர்க்கில் இருந்து ராஸ் அங்கிலசில் உள்ள ஓடர் கொடுத்து எடுத்துள்ளனர். கடனட்டை வங்கிக்கு அறிவித்து 3 கிழமையில் கணக்கை சரி செய்துவிட்டு புதிய கடனட்டையும் அனுப்பியிருந்தனர். கடனட்டை உபயோகப்படுத்தும் போது எனது கைபேசிக்கும் குறும்செய்தி வரும்.அதனால் உடனடியாகவே உசாராகிவிடலாம். ஆனால் மேலே உள்ள நிகழ்ச்சி அடிமையாக வைத்து சொல்வழி கேட்காவிட்டால் கறன்ற் சொக்(இதனால் சிலபேர் இறந்தும் உள்ளார்களாம்)கொடுக்கிறார்கள்.அதிலே ஒருவர் 2 மாதமாக வெறும் சோறு மாத்திரம் சாப்பிட்டதாக சொல்கிறார். எமக்கு எந்த நாளும் Scam call என்று வரும். முதல்தடவையாக Scam company யைப் பற்றி கேள்விப்படுகிறேன்.மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இப்போது Apple pay மூலம் பணத்தை செலுத்துகிறேன்.ஆனால் எல்லா இடமும் இந்த வசதி இல்லை. இப்போதைக்கு இது பாதுகாப்ப என்கிறார்கள்.
  15. உலக நாடுகளிடம் கப்பம் வாங்கி உல்லாசம் அனுபவிக்கும் அரச குடும்பத்திற்கு எதிராக சகல நாடுகளும் குரல் கொடுக்க வேண்டும்.
  16. ஆபத்துக்குப் பாவமில்லை நன்னி.
  17. என் தவராசாவுக்கு தேர்தலில் நிற்க சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை? 80 களில் இருந்து தொண்டனாக இருந்தவனுக்கு இடமில்லை. ஆனால் சைக்கிளில் கேட்கப் போன பிள்ளை கொண்டுவந்து செருகிவிட்டு ஏதோ ஆனையிறவு முகாம் அடித்தது போல துள்ளிக் குதிக்கிறார்கள்.
  18. ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் மக்களும் போராளிகளும் இறக்க காரணமாக இருந்த சரத் பொன்சேகாவை எப்படி தமிழர்கள் ஆதரித்தார்கள்?
  19. காசா பணமா அவருக்கும் ஒரு நன்றியை சொன்னால் போச்சு. @கிருபன் இணைப்புக்கு நன்றி. ஒன்று தமிழரைக் குழுப்புவதற்கு மற்றது சிங்களவருடன் கொண்டாடுவதற்கு.
  20. என்ன சிறி புதியதில் தமிழ் கடைசிக்கு வந்துவிட்டதே?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.