Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. கூடப்படித்த @ரசோதரன் எவ்வளவு அனுப்பியிருப்பார்?
  2. யாழ் இந்துவில் படித்த கோடீஸ்வரனை ஞாபகம் இருக்கிறதா? உங்களுடன் படித்திருப்பார் என எண்ணுகிறேன்.
  3. எல்லை தாண்டி மீன் பிடிக்க வருவதுபற்றி ஒன்றுமே பேசவில்லையோ?
  4. நான் கொள்ளை என்று வாசித்துவிட்டு முழுசுகிறேன். திரும்ப வாசிக்கும் போதுதான் புரிந்தது.
  5. இவங்க ஒவ்வொருவரா பறிகொடுக்கிறதென்றே முடிவெடுத்துட்டாங்க போல.
  6. இவர் ஒருவர் உழைத்து தின்ன வக்கில்லை. எப்ப பார் மலட்டு சொத்துக்கு ஆசைப்பட்டவன் மாதிரியே இருக்கிறார்.
  7. தலைவராக இருக்க வேண்டியவர் இப்போ கட்சியில் இருக்கவே போராட்டமா? முடிவு சுமந்திரன் கையில். இப்போதைக்கு தமிழரசில் போட்டியிட சந்தர்ப்பம் தந்ததே போதலையோ?
  8. இன்னும் ஒரு 10 வருடங்கள் பொறுத்திருங்கள். ஒவ்வொரு மாவீரர் தினங்களுக்கும் அழைத்து செல்லுங்கள். தானாகவே புரிந்து கொள்வார். மிகவும் சுட்டியான பையன்.கவனமாக படிப்பியுங்கள்.
  9. சுமந்திரனின் கைக்குள் போய்விட்டது. யார்யாரை வெளியேற்ற வேண்டும் என்பதை சுமந்திரனே தீர்மானிக்க வேண்டும்.
  10. இல்லையில்ல, நாங்கள் #JVP இல்ல. நாம் #NPP” என்று புது புரட்சியாளர்களுக்கும், பே(ஃ)ஸ்புக் பேராசிரியர்களுக்கும் கூச்சல் எழுப்ப தேவையில்லை. தாம் அடிப்படையில் JVP அங்கத்தவர் என்பதில் பெருமை அடைவதாக JVP தலைவர்களே கூறி வருகிறார்கள். பல போராட்டங்களை கடந்து வந்த அவர்களின் நியாமான பெருமை அதுவாகும். அதில் எமக்கு பிரச்சினை இல்லை. இன்று NPP/JVPயின் பிரச்சார அணி, தங்கள் பழைய வரலாற்றை அழிக்க அல்லது மறைக்க முயல்கிறது அல்லது தாம் தமது பழைய தவறுகளை இனி செய்ய மாட்டோம் என சொல்ல முயல்கிறது. சரி, நல்லெண்ண நோக்கில் அவற்றை ஏற்று கொண்டு, அந்த கட்சியை புதிதாக பார்த்து, அவர்களின் புதிய கருத்துகளை கேட்டு, ஒரு கட்சியாக நாம் அரசியல் பரப்பில் முன்னோக்கி நகர்வோம். இப்படி “பொசிடிவாக” NPP/JVPஐ கணிப்போம் என்றால் இவர்கள் தங்கள் தங்கள் கறுப்பு வரலாற்றை மறைக்க முயல்வதுடன் எமது வரலாற்றையும் கொச்சை படுத்த முயல்கிறார்கள். மகாவம்சத்தில் இருந்து, சமகாலத்தில் JVP உட்பட்ட பெருந்தேசியவாத சக்திகளினால், சிங்கள மக்கள் மத்தியில் 1950களில் இருந்து விதைக்க பட்டுள்ள பேரினவாத சிந்தனை என்பதை திரை போட்டு மறைத்து, மலையக அல்லது ஈழத்தமிழ் மக்களின் இன்று வரையிலான அவல நிலைமைகளுக்கு பிரதானமாக, அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் அரசியல்வாதிகளுமே முற்று முழுமையான பொறுப்புகளை ஏற்க வேண்டும் என JVP பிரசாரம் செய்ய முயல்கிறது. இது ஒரு பலவீனமான பிரச்சாரம்! தமிழ் மக்கள் அரசியல் பரப்பில் முற்போக்கு அணி, பிற்போக்கு அணி என இரண்டு முகாம்கள் இருக்கின்றன என்பது ஜனாதிபதி அனுரவுக்கும், பிரதமர் ஹரிணிக்கும் மிக நன்றாகவே தெரியும். அவர்களுக்கு தெரியும் என்று #TPA தலைவர் மனோவுக்கும் தெரியும். இது, இன்றைய சில புது புரட்சியாளர்களுக்கும், பே(ஃ)ஸ்புக் பேராசிரியர்களுக்கும் தெரியாமல் இருக்கலாம். இவர்களை நாம் கணக்கில் எடுப்பதில்லை. பிற்போக்கு தமிழ் அரசியல்வாதிகளை, ஏன் பிற்போக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளையும்கூட, தமிழ் பேசம் மக்களே உரிய விதத்தில் தோற்கடிப்பார்கள். அது தொடர்பில் JVPயின் தடுமாற்றம் அவசியமில்லை. முதலில், JVP சிங்கள பெருந்தேசியவாத பரப்பில் உள்ள இனவாத, கொலைக்கார, ஊழல் பெருச்சாளிகளை அடையாளம் கண்டு அகற்ற வேண்டும். முதலில், JVPயின் கறுப்பு வரலாறு என்ன? இதிலும் கூட பல விஷயங்கள் விட்டு விடுகிறோம். எம்முடன் தொடர்பு பட்ட விடயங்களை மட்டும் பார்ப்போம். 1) இந்திய ஏகாதிபத்தியத்தின் முகவர்களாக பெருந்தோட்ட தமிழ் மக்களை சித்தரித்து காட்டினார்கள். கட்சி தொண்டர்களுக்கான JVPஇன் “பந்தி பஹா” என்ற ஐந்து வகுப்புகளில் இது இரண்டாம் வகுப்பாகும். இந்தியாவை ஏகாதிபத்தியத்தியமாக குறிப்பிடுவதில் எமக்கு பிரச்சினை இல்லை. ஆனால், பெருந்தோட்ட உழைக்கும் வர்க்கத்தையும், இந்திய ஏகாதிபத்தியத்தின் அம்சமாக JVP பிரசாரம் செய்ததால், சிங்கள மக்கள் மனங்களில் இனவாத நஞ்சு விதைக்க பட்டது. 2) மலையக மக்களை இலங்கையின் ஒரு தேசிய இனமாக ஏற்பது விஞ்ஞான பூர்வமாக சாத்தியம் அற்றது என்றார்கள். 3) ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பில் முன்னுக்கு பின் முரணான கருத்துகளை JVP தலைவர்கள் கூறி வந்தார்கள். 4) நாடு தழுவிய அரசியல் அதிகார பகிர்வை ஏற்க மறுத்தார்கள். இன்றுவரை அதிகார பகிர்வு தொடர்பில் முரண்பட்ட கருத்துகளை கூறி வருகிறார்கள். 5) அதிகார பகிர்வின் அடையாளமான மாகாணசபைகள் முறைமையையும், சட்ட மூலத்தையும் எதிர்த்து நாடு தழுவிய பெரும் கிளர்ச்சியை செய்தார்கள். பெரும்தொகை மரணங்களை, சேதங்களை விளைவித்த கிளர்ச்சி அதுவாகும். பின்னர் மாகாணசபைகள் தேர்தல்களில் பங்கு பற்றி சபைகளில் வந்து அமர்ந்தார்கள். 6) மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் அமர்த்த பாரிய பங்காற்றி, இன்று கறுப்பு சரித்திரம் ஆகிவிட்ட மகிந்தவின் கொடூர ஆட்சிக்கு அஸ்திவாரம் போட்டார்கள். 7) யுத்தம் செய்ய தயங்கிய, ஜனாதிபதி மகிந்தவை யுத்தம் செய்தே ஆக வேண்டும் என்று நெருக்குதல்களுக்கு உள்ளாக்கி, ஒரு முட்டாள் கொலையாளி கையில் அரிவாளை கொடுத்து, இன்று கறுப்பு சரித்திரம் ஆகிவிட்ட யுத்த கொடுமைகளுக்கும், யுத்தத்தின் பக்க விளைவான, கொழும்பில் நிகழ்ந்த “வெள்ளை-வேன்” கடத்தல், படுகொலை நிகழ்வுகள் உட்பட, வரலாறு காணாத மனித உரிமை மீறல்களுக்கும் முதல் காரணமாக அமைந்து விட்டார்கள். யுத்தம் முடிந்த பின்னர் யுத்த வெற்றி பெருமையில், JVPக்கும் பங்கு இருக்கிறது, என சிங்கள மக்கள் மத்தியில் தொடர் பிரச்சாரம் செய்தார்கள். இங்கே, முற்போக்கு பொருளாதார நகர்வுகளுக்காக உலகத்துடன் சேர்ந்து முன்நகர இலங்கை முயன்ற போதெல்லாம், “கற்காலத்தில்” இருந்த JVP எவ்வளவு தடையாக நின்றது என்பதை பற்றி எழுதவில்லை. இன்று அவர்கள் பொருளாதார கொள்கையிலும் மாறி விட்டார்கள் என்றும் நாம் நம்புவோம். (JVPயின் பொருளாதார தவறுகள் பற்றி அவசியமாயின் இன்னொரு நாள் எழுதுவோம்.) இன்று தம் பழைய வரலாற்றில் இருந்து NPP மீண்டு விட்டது என்றும், பழைய தவறுகளை அவர்கள் செய்ய மாட்டார்கள் எனவும் நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை! ஆனால், பழைய வரலாறு என்று ஒன்று இருக்கவே இல்லை என்று காட்ட படும் மலின முயற்சியை கண்டு கொஞ்சம் சிரித்தும் வைப்போம்! <ADMIN-4-MG> https://www.facebook.com/ManoGanesanDPF/posts/pfbid0baz1gSgrn8NSFoCdFV2hNS9Vfn2Y96M7kBKs75vkPbqNmUtyUZQQjjPiJvkkTfeWl
  11. Iran closes its airspace From CNN’s Paul P. Murphy and Avery Schmitz Iran has closed its airspace, according to an official notice issued by its civil aviation authority. The airspace will be closed until Saturday 9:00 a.m. local time (1:30 a.m. ET), according to the notice. Earlier on Saturday morning, around the time of the strikes, CNN observed four civilian planes begin flying away from the Iranian capital of Tehran on the flight tracking website FlightRadar24. https://www.cnn.com/world/live-news/israel-iran-lebanon-gaza-war-10-25-24-intl-hnk/index.html
  12. அமெரிக்கா தான் தாக்குதல்களில் பங்குகொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளது.
  13. முன்னர் அதற்கு எதிராக இருந்தவர்கள். இப்படியான ஆட்கள் இப்போது இல்லையே என்று கவலைப்படுகிறார்கள்.
  14. மார்ச் மாதம் பால்டிமோரின் பிரான்சிஸ் ஸ்காட் கீ பிரிட்ஜை அழித்த கொள்கலன் கப்பலுக்கு சொந்தமான மற்றும் இயக்கிய இரண்டு நிறுவனங்களுடன் நீதித்துறை $100 மில்லியனுக்கும் அதிகமான தொகைக்கு ஒரு தீர்வை எட்டியுள்ளது. ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கிரேஸ் ஓஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் சினெர்ஜி மரைன் பிரைவேட் லிமிடெட் - இரண்டு சிங்கப்பூர் நிறுவனங்கள் - நிறுவனங்களின் செலவுக் குறைப்பு மற்றும் கப்பலின் பராமரிப்பில் கவனக்குறைவு ஆகியவை பேரழிவுகரமான மோதலுக்கு வழிவகுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சிவில் உரிமைகோரலைத் தீர்க்க கிட்டத்தட்ட $102 மில்லியன் செலுத்தும். 213 மில்லியன் பவுண்டுகள் கொண்ட சரக்குக் கப்பல் ஆற்றலை இழந்து பாலத்தில் மோதியதில் ஆறு கட்டுமானத் தொழிலாளர்கள் இறந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த தீர்வு வந்துள்ளது. பால்டிமோர் நகரம் இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக தனது சொந்த உரிமைகோரலை தாக்கல் செய்துள்ளது, மேலும் பாதிக்கப்பட்ட மூன்று பேரின் குடும்பங்களும் வழக்குத் தொடர இருப்பதாகக் கூறியுள்ளனர். கூடுதலாக, கப்பலின் பணியாளர்கள் அவர்கள் புறப்படுவதைத் தாமதப்படுத்திய முந்தைய சிக்கலைப் புகாரளிக்கத் தவறியதா என்பது குறித்து எஃப்.பி.ஐ குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் நீதித்துறை தனது சிவில் வழக்கைத் தாக்கல் செய்தபோது, பால்டிமோர் துறைமுகத்தால் நீரிலிருந்து சுமார் 50,000 டன் இரும்பு, கான்கிரீட் மற்றும் நிலக்கீல் - சிதைவுகளை அகற்றுவதற்கான பல மாத முயற்சியின் செலவுகளை மிகப்பெரிய நிதி அபராதம் ஈடுசெய்யும் என்று கூறியது. மீண்டும் திறக்க. வியாழன் தீர்வின் மூலம் பெறப்படும் பணம் அமெரிக்க கருவூலத்திற்கும், விபத்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட அல்லது பதிலில் ஈடுபட்டுள்ள பல கூட்டாட்சி நிறுவனங்களின் வரவு செலவுத் திட்டங்களுக்கும் செல்லும் என்று நீதித்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. பாலத்தின் புனரமைப்புக்கான எந்தவொரு சேதத்தையும் இது ஈடுசெய்யாது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆறு உயிர்களைப் பலிவாங்கிய மற்றும் சொல்லொணா சேதத்தை ஏற்படுத்திய சமீபத்திய நினைவகத்தில் மிக மோசமான போக்குவரத்து பேரழிவுகளில் ஒன்றான ஏறக்குறைய ஏழு மாதங்களுக்குப் பிறகு, இன்றைய தீர்வு மூலம் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளோம்,” என்று நீதித்துறையின் முதன்மை துணை அட்டர்னி ஜெனரல் பெஞ்சமின் மிசர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். . இந்த தீர்வு "ஃபோர்ட் மெக்ஹென்ரி சேனலில் மத்திய அரசின் சுத்தப்படுத்தும் முயற்சிகளின் செலவுகள் கிரேஸ் ஓஷன் மற்றும் சினெர்ஜியால் ஏற்கப்படுகின்றன, அமெரிக்க வரி செலுத்துவோர் அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறது" என்று மைசர் மேலும் கூறினார். பால்டிமோர் துறைமுகத்தின் கப்பல் சேனல் - சர்வதேச சரக்குகளுக்கான நாட்டிலேயே மிகப்பெரியது மற்றும் வாகனங்கள், கொள்கலன்கள் மற்றும் பொருட்களுக்கான முக்கிய மையம் - ஜூன் மாதம் மீண்டும் திறக்கப்பட்டது. இடிந்து விழுவதற்கு முன் தினமும் 30,000 வாகன ஓட்டிகள் சாவி பாலத்தை பயன்படுத்தி வந்தனர். கடந்த மாதம் தாக்கல் செய்ததில், நீதித்துறை கப்பலின் உள்கட்டமைப்பில் தோல்வியடைந்ததாகக் கூறப்படும் "சோகம் முற்றிலும் தவிர்க்கக்கூடியது" என்று கூறியது. வழக்கறிஞர்கள் தங்கள் மின்சார மின்மாற்றியில் நீண்டகால பிரச்சனைகளை சரிசெய்வதற்குப் பதிலாக, நிறுவனங்கள் மீண்டும் மீண்டும் உடைந்த தற்காலிக பிரேஸ்களால் தங்கள் கப்பலை "ஜூரி-ரிக்" செய்ததாக எழுதினர். பாலம் இடிந்த இரவில் அந்த மின்மாற்றிகள் உடைந்தபோது, ஒரு காப்பு மின்மாற்றி "சில நொடிகளுக்குள்" மின்சாரத்தை மீட்டெடுக்க வேண்டும், ஆனால் அந்த பாதுகாப்பு அம்சம் "பொறுப்பற்ற முறையில் முடக்கப்பட்டுள்ளது" என்று அவர்கள் குற்றம் சாட்டினர். வக்கீல்கள் தங்கள் தாக்கல் செய்ததில் கப்பல் சரிவதற்கு ஒரு நாள் முன்பு சக்தியை இழந்ததாகவும், ஆனால் சட்டத்தின்படி கடலோரக் காவல்படைக்கு ஒருபோதும் தடை விதிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டனர். https://www.cnn.com/2024/10/24/politics/justice-department-settlement-baltimore-bridge-collapse/index.html
  15. எதிர்வரும் பொதுத்தேர்தலில் அரசியல் தீர்வு குறித்து தமிழ் மக்கள் தமது வாக்குகள் மூலம் வெளிப்படுத்தும் நிலைப்பாட்டுக்குப் புறம்பாக தாம் ஒருபோதும் செயற்படமாட்டோம் என இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் உறுதியளித்துள்ளார். வட மாகாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள திண்ணை ஹோட்டலில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது தமிழ் மக்கள் விடயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் போக்கு தொடர்பில் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் கஜந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அவர், இவ்வரசாரங்கம் தேசிய மக்கள் சக்தியாக அடையாளப்படுத்தப்படினும், அரசியல் ரீதியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான சகல அதிகாரங்களும் மக்கள் விடுதலை முன்னணி வசமே இருப்பதாகச் சுட்டிக்காட்டினார். அதேபோன்று அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் மற்றும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவினால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்தை மேற்கோள்காட்டிய கஜேந்திரகுமார், இவ்வாறானதொரு பின்னணியில் இந்த அரசாங்கத்திடமிருந்து முன்னேற்றகரமான நகர்வுகளை எதிர்பார்க்கமுடியும் எனத் தாம் கருதவில்லை எனவும் தெரிவித்தார். அதேபோன்று எதிர்வரும் பொதுத்தேர்தல் பற்றிய அமெரிக்கத்தூதுவரின் கேள்விக்குப் பதிலளிக்கையில், 'ஏற்கனவே நடைபெற்று முடிந்த ஜனாதிபதித்தேர்தலில் தெற்கில் பதிவான மாற்றம், எதிர்வரும் பொதுத்தேர்தலில் வட, கிழக்கு மாகாணங்களிலும் பதிவாகும். இருப்பினும் அம்மாற்றம் தேசிய மக்கள் சக்திக்கு சாதகமானதாக இருக்காது. மாறாக எமக்குச் சாதகமான, எம்மை நோக்கிய மாற்றமாகவே இருக்கும்' என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார். அத்தோடு 'கடந்த காலங்களைப்போலன்றி, நாம் பாராளுமன்றத்துக்குத் தெரிவானதில் இருந்து சகல தமிழ்த்தேசிய கட்சிகளும் 'தேசியம்' என்ற கொள்கையையும், முழுமையான சமஷ்டி தீர்வையும் முன்னிறுத்தி செயற்படவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. எனவே பொதுத்தேர்தலின் பின்னர் ஒற்றையாட்சி மற்றும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் என்பவற்றைப் புறக்கணித்து, முழுமையான சமஷ்டி தீர்வை சகலரும் வலியுறுத்தும் சாத்தியம் உருவாகும்' எனவும் அவர் குறிப்பிட்டார். அதுமாத்திரமன்றி இவ்வாறானதொரு சூழ்நிலை தோற்றம்பெறும் பட்சத்தில், அந்தக் கொள்கை மாற்றத்தை அமெரிக்கா அதன் கொள்கையில் உள்வாங்கவேண்டும் எனவும், அதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும் எனவும் அமெரிக்கத் தூதுவரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொண்ட அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், எதிர்வரும் தேர்தலில் அரசியல் தீர்வு குறித்து தமிழ் மக்கள் தமது வாக்குகள் மூலம் வெளிப்படுத்தும் நிலைப்பாட்டுக்குப் புறம்பாக தாம் ஒருபோதும் செயற்படமாட்டோம் எனவும் உறுதியளித்தார். https://seithy.com/breifNews.php?newsID=324572&category=TamilNews&language=tamil
  16. தற்போதைய ஆட்சியாளர்கள் அதிகாரப்பகிர்விற்கு சாதகமாக இருக்கமாட்டார்கள் என தமிழ் தரப்பு பிரதிநிதிகள் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் எடுத்துக் கூறியுள்ளனர். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் அமெரிக்க தூதுவரை சந்தித்த வேளையிலேயே மேற்படி விடயம் எடுத்துக்கூறப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், இந்த சந்திப்பின் போது அமெரிக்க தூதுவர் முக்கியமாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற அநுரகுமார திஸாநாயக்க எப்படி தமிழர்களை கையாள்வார் என்பது தொடர்பாக கேட்டறிந்து கொண்டார். அந்தவகையில், கடந்த காலத்தில் ஜே.வி.பியினர் செய்த செயற்பாடுகளை சுட்டிக்காட்டி இவர்கள் அதிகார பகிர்விற்கு சாதகமாக இருக்கமாட்டார்கள் என்பதை அவரிடம் சுட்டிக்காட்டினோம். அதேவேளை நாங்கள் அரசாங்கத்தில் சேர்வதோ அல்லது அதன் ஒரு அங்கமாக இருப்பதோ என்பது நடக்கமுடியாத விடயம். தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் அப்படியான விடயத்தை செய்ய மாட்டோம் எனவும் தெரிவித்தோம். இது தொடர்பில் பொதுத் தேர்தல் முடிந்த பிற்பாடு ஜனாதிபதியுடன் கதைப்போம் எனவும் அவர் தெரிவித்தார். https://seithy.com/breifNews.php?newsID=324573&category=TamilNews&language=tamil
  17. புரியவில்லை.. ரம்ப் யூத எதிர்ப்பாளரா? ஜெருசலத்தில் போய் பத்தவைத்ததே அவர் தான். யூத மருமகனுக்கு சேவை செய்தார்.
  18. நோ நோ நோ அவரும் கட்டாயம் சொல்லிப் போடாதேங்கோ என்று சொல்லியிருப்பார்.
  19. சகலகலா வல்லவன் தில்லை எதை எடுத்தாலும் நன்றாக எழுதுகிறார். பாராட்டுக்கள்.
  20. உங்கள் பெரும் முயற்சிக்கு பாராட்டுக்கள். கட்டுரைகள் நீண்டுள்ளதால் கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்க நாளெடுக்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.