Everything posted by ஈழப்பிரியன்
-
எலிக்காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள்
அப்ப இனி யாழ்ப்பாணம் போகலாமா சார்?
-
தாய்வானுக்கு இராணுவ உதவி வழங்கிய அமெரிக்கா! கோபத்தில் சீனா
இந்தத் தாய்வான் சீன பிரச்சனையால் அமெரிக்கா அவசர அவசரமாக இலங்கையில் படைத்துறையை நிறுவ முழு முயற்சி செய்கிறது.
-
பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது!- பிரதி அமைச்சர் சுனில் வட்டகல
சுதந்திரம் கொடுத்த உடனேயே யாழில் தையல்கடைக்குள் புகுந்து தன்னோடு உறவுக்கு வருமாறு பொலிசார் ஒருவர் பிரச்சனை கொடுக்கிறார். அவரைப் பிடித்து கொண்டு போனவரை அடிக்கப் போகிறார். பொறுப்பதிகாரியோ அறைக்குள் அழைத்து சமரசம் செய்கிறார். https://tamilwin.com/article/police-called-inappropriate-relationship-jaffna-1735040554 யாழ்ப்பணம் - காங்கேசன்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் பெண்ணொருவரை மதுபோதையில் தகாத உறவுக்கு அழைத்தமையனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள இளைஞர்களால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைக்கப்பட்டு காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காங்கேசன்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் இன்று (24) காலை மாவிட்டபுரம் தையலகத்தில் தைப்பதற்கு கொடுத்த சீருடையை எடுப்பதற்கு மது போதையில் சென்றுள்ளார். தகாத உறவு இதன்போது தையலகத்தில் பணிபுரியும் பெண்களை தகாத உறவுக்கு வருமாறு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் வற்புறுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கடைக்கு வந்த இரு யுவதிகளிடமும் தன்னுடன் தகாத உறவுக்கு வருமாறு அந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொச்சைத் தமிழில் கேட்டுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த தையலக பெண் ஒருவர் தனது கணவருக்கு தொலைபேசியில் தெரிவித்த நிலையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைக்கபட்டு பொதுமக்களால் முச்சக்கர வண்டி மூலம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பெண்ணின் உறவு இதேவேளை பெண்ணின் உறவினர் ஒருவர் சம்பவம் தொடர்பான காணொளியும் தன்னிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து மதுபோதையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் பெண்ணின் கணவன் மீது பொலிஸ் நிலையத்தில் வைத்தே தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் உடனடியாக பொலிஸார் குறித்த உத்தியோகத்தரை தடுத்து நிறுத்திய நிலையில் பொறுப்பதிகாரி தனது அறையினுள் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து சமரசம் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
-
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு பாடல்
நானும் பதில் சொல்லலாமா சார் 😄 சாலமன் பாப்பயா ஏராளனின் பிறந்த தினமான இன்று சாலமன் பாப்பயா என்ற பட்டத் கொடுத்து கெளரவப்படுத்தியதற்காக சுவைப்பிரியனுக்கு ஈழப்பிரியனின் நன்றி.
-
யாழ்.கள உறவுகளுக்கு இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.
எல்லோருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்.
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
மற்றவர்கள் வம்பு தும்புக்குப் போறதில்லை.
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
சொன்ன வார்த்தையை காப்பாற்றியுள்ளார் Dr. இராமநாதன் அர்ச்சுனா.☝️ அர்ச்சுனாவின் வேண்டுகோளுக்கு உடனடி நடவடிக்கை எடுத்த அநுர அரசு..... 👏 மக்கள் பிரச்சனைகளை துரிதமாக துணிவாக அலுப்புச் சலிப்புப் பாராமல் முன்னெடுப்பதில் முனைப்பாக நிற்கிறார் என்பதுதான் அவரது சிறப்பே....!💕 கடந்த பா.மன்ற அமர்வில் யாழ் போதனா வைத்தியசாலையின் 170 தொண்டர் கனிஷ்ட ஊழியர் வேலை சம்பந்தமாக காரசாரமாக சபையில் தெரிவித்து, அவர்களுக்கு நியாயம் கோரி சபையில் MP அர்ச்சுனா அவர்கள் குரல் எழுப்பியது யாவரும் அறிந்ததே....!☝ அதற்குரிய முதற்கட்ட தீர்வை நேற்று 23/12/2024 அன்று அவ்வூழியர்க்கு எடுத்துக் கொடுத்துள்ளார்.🙏 யாழ்ப்பாணத்தில் இருந்து அவர்களில் 28 பிரதிநிதிகளை கொழும்புக்கு வரவழைத்து சுகாதார அமைச்சர்,பிரதி அமைச்சருடன் நேரடியாகவே அவர்கள் குறைகளைப் பேச வைத்திருக்கிறார்.😘 இத்தனை காலத்தில் இப்படியான நிகழ்வு இதுதான் முதல்தடவை என நினைக்கிறேன்.😊 மேலும் Dr. அர்ச்சுனா கூறியதாவது👇 நான் கடந்த அரசுகளில் சுகாதார அமைச்சில் பணிபுரிந்திருக்கிறேன். அப்போது ஒரு அமைச்சரை சந்திக்க வேண்டுமென்றால், consultants உட்பட எல்லோருமே பல மணிநேரம் காத்திருக்க வேண்டும். ஆனால் இந்த NPP அரசில் (ஜனாதிபதி அநுரவின் ஆட்சியில்)..... இவ்வாறான ஒரு சுமூகமான பொதுமக்கள் அமைச்சர் சந்திப்பை எனது மருத்துவ நிர்வாக காலத்திலோ அல்லது மருத்துவனாக வேலை செய்யும் காலத்திலோ நான் கண்டதில்லை. 🥰 இதன் அடிப்படையில் தேசிய அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகவும் உண்மையிலேயே என்னை மதித்து என்னுடைய குரலுக்கு மதிப்பளித்து என்னை வரவேற்று எங்களுடைய சகல சுகாதார ஊழியர்களையும் சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகளை நேரடியாக கேட்டு அறிந்து அவர்களுக்கு உரிய பதிலை வழங்கியதற்கு தேசிய அரசாங்கத்திற்கும் மதிப்பிற்குரிய சுகாதார அமைச்சருக்கும் அது தவிர பிரதி அமைச்சர் மற்றும் சுகாதார செயலாளர் அவர்களுக்கும் யாழ்ப்பாணத்தின் மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் மனமார்ந்த நன்றிகள்.🙏💕 சந்தர்ப்ப சூழ்ச்சிகளால் நலிந்து போனாலும், உண்மைகளுக்குத் துணை போகிறவர்கள் ஒரு போதும் வீழ்ந்து விடுவதில்லை .💕 முகப் புத்தகம். அடுத்த எலச்சனில் பெரிய முட்டை வாங்க இப்பவே அச்சாரம் போடுகின்றார் இப்ப ஒரு தேர்தல் நடந்தால் முன்னர் எடுத்த வாக்குகளை விட கூடுதலான வாக்குகள் எடுப்பார் போல உள்ளதே களநிலவரம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன். வாழும்வரை வளமாகவும் சுகமாகவும் வாழ வேண்டுகிறேன்.
-
கனடாவில் ட்ரூடோ அரசு தப்புமா? இந்திய வம்சாவளி தலைவரின் கட்சி ஆதரவு வாபஸ்
நல்லகாலம் நான் கிழக்கில.
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
ஆஆஆ உண்மையாவா? குமாரூ விட்ரா வண்டியை பத்திரிகை காரியாலயத்துக்கு. விளம்பரம் கொடுக்கிற எண்ணம் போல.
-
அமெரிக்க விருந்தாளி - தியா காண்டீபன்
அட்டைப்படம் எனக்குத் தெரியவில்லை.
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
நல்ல செயல்.
-
கனடாவில் ட்ரூடோ அரசு தப்புமா? இந்திய வம்சாவளி தலைவரின் கட்சி ஆதரவு வாபஸ்
ஏனையா அமெரிக்காவையும் கோர்த்து விட்டுருக்கிறீர்கள்?
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
இப்பவே 68 முடிந்துவிட்டது. எனது வாழ்வில் இந்த புகையிர பாதையை பார்ப்பேன் என்று எண்ணவில்லை.
- யாழ் மருத்துமனையில் நடப்பது என்ன?
-
அன்டன் பாலசிங்கத்துடனான அனுபவங்களின் நினைவுகள்
உங்களின் காரணம் ஒரே ஊரில் பிறந்து இரு துருவங்களாக இருந்தார்கள்.
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
கெதியா ஒரு முடிவுக்கு வாங்க. குமாரசாமிக்கு முடிவு சொல்ல வேண்டும்.
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
அத்திலான்திக் சமுத்திரத்தில் என்னை முடிக்கிறதென்றே குமாரசாமி திட்டம் போட்டுட்டார்.
-
பட்டிருப்பு-போரதீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதான வீதியை திருத்தியமைக்கும் பணிகள் ஆரம்பம் !
அங்கே பனை குறைவு.
-
அனலைதீவை அபிவிருத்தி செய்வோம்
தீவகப் பகுதிகளில் இருந்து தொகையானவர்கள் நகர்ப் பகுதிக்குள் நகர்ந்து விட்டார்கள். இருக்கும் மக்களுக்கு ஏதாவது யாராவது நன்மை செய்தால் நல்லதே.
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
அதுவரை நான் இருக்க வேணுமே? அடுத்த அரசு வருவதற்கிடையில் எலான் உலகின் முதல் பணக்காரராக வர முயற்சி பண்ணுகிறார்.
-
சமஷ்டியை கோரி கஜேந்திரகுமார் இனவாதத்தை தூண்ட முயற்சி – சீலரத்தன தேரர்
தேரரே சும்மா சும்மா சொல்லிக் கொண்டிருக்காமல் செயலில் இறங்குங்க.
-
அன்டன் பாலசிங்கத்துடனான அனுபவங்களின் நினைவுகள்
கட்டபொம்மனும் எட்டப்பனும் மாதிரி மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கமும் ஜெயராஜ் உம்.
-
ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.
ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம். ஒரு குழந்தை மரணமானதாகவும் 15 பேர்வரை படுகாயமடைந்ததாகவும் 68 பேர்வரை காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் ஈடுபட்டவர் சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு டாக்ரர் என சந்தேகிக்கப்படுகிறது. https://www.cnn.com/world/live-news/magdeburg-germany-christmas-market-deaths-12-20-24/index.html
- நாட்டை பிரிக்க இடமளிக்கமாட்டோம்! இமாலய பிரகடனத்தை எதிர்த்து போராட்டம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.