Everything posted by goshan_che
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
இங்கேதான் முத்துகுமார் பிரதானமாகிறார்… சீமானை போல அன்றி பல.ம் வருடங்கள் வன்னியில் இருந்தவர் முத்துகுமார். அவரது படங்களை பார்தாலே தெரியும் அவர் எப்படி பட்ட பயிற்சிகளால் வெளிவந்துள்ளார் என. ராஜ்குமார் கடத்தல், பொலிஸ் மீது தாக்குதல் என பலதை செய்த நிஜப்போராளி. நாம்தமிழரை உண்மையான தமிழ் தேசிய அமைப்பாக கட்டி அமைக்க, கொள்கை தவறாது இருக்க, சீமான் மீது ஒரு கட்டுப்பாட்டை வைக்க - நியமிக்கப்பட்டவர் தான் முத்துகுமார். முத்துகுமார் யார் என்பதை தெரிந்து கொண்டு - அவர் மூலம் பெரும் ஆபத்து வரும் என்பதை கண்டு கொண்டு, றோ அவரை போட்டுத்தள்ளியது. எஞ்சிய சீமான் வெறும் வாய்வீரர் - தலைவரை 87 இல் மிரட்டியதை போல் மிரட்ட, சரண்டர் ஆகி விட்டார். முத்துகுமார் சாவின் பின் சீமானும், அவர் வழி நாம் தமிழரும் முழுக்க முழுக்க றோவின் வழிகாட்டலியேயே நடக்கிறன. றோவின் தலைமை அமித்ஷா. ஆகவே இப்போ அவர் சொல்படி. ஆனால் சீமான் தொடர்வது தமிழ் தேசியமே அல்ல. அது வெறும் போலி தமிழ் தேசிய கூச்சல். இது பிஜேபிக்கு வழி சமைத்து கொடுக்கும் வரை இதை ரோ அனுமதிக்கும். என்றைக்கு இதில் இருந்து உண்மையான ஒரு தமிழ் தேசிய தலைவர் வந்தாலும் - ஒன்றில் சீமானை போல் அவரையும் வாங்க பார்க்கும், இல்லை எண்டால் முத்துகுமார் போல போட்டுத்தள்ளும்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
ஆனால் இவையும் மட்டுப்பட்ட நிலையில்தான் உள்ளது…எப்படி தமிழ் நாட்டில் வட மாநிலத்தவர் வரவு ஒரு பிரச்சனையோ அப்படித்தான் அங்கும். ஆனால் இந்த தேசியங்கள் “பிரிந்து போக கூடியன” என டெல்லி நம்பவில்லை, ஆகவே இவற்றை tolerate பண்ணுகிறது, கூட்டு அரசியலும் செய்கிறது. ஆனால் தமிழ் தேசியம் அப்படி அல்ல - ஈழத்துக்கு முதல் தனி நாட்டு கோரிக்கை எழுந்தது தமிழ்நாட்டில்தான். அதன் பின் முழுவீச்சாக ஈழப்போர்கள். ஆகவே தமிழ் தேசியத்தை பாக்குநீரிணியின் இரு மருங்கிலும் - இந்தியாவின் எதிரி என பார்க்கிறது டெல்லி. இந்த நிலையில் உண்மையான தமிழ்தேசியதை ஒரு போதும் டெல்லி அனுமதிக்காது. இது ஏற்றுகொள்ள கூடியதே.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
வங்கத்தில் இந்தியா தலையிட ஒரே காரணம் - அது பாகிஸ்தானுக்கு ஆப்பு வைக்கும் தனது ஒரு எல்லையில் இருந்து பாகிஸ்தானை கிளப்பலாம் என்பதாலேயே. இலங்கை பாகிஸ்தான் இல்லை. ஆகவே யார் எப்படி தமிழ் நாட்டில் முக்கினாலும் இந்திய நலன் கருதியே முடிவு எடுக்கப்படும். 1987 இல் எம் ஜி ஆர், கருணாநிதி இருவரும் எதிர்த்த போதும் இலங்கைக்கு படைகளை அனுப்பினார் ரஜீவ். தான்னால் முடியவில்லை என புலிகளிடம் கைவிரித்தார் எம்ஜிஆர்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
பிழை. மொழி வழி மாநில பிரிப்புக்கு முன், அகண்ட மெட்ராஸ் பிரசிடென்சியில் 5 இனங்களும் இணைந்து இருந்த போது தென்னிந்தியர் எல்லாருக்கும் பொதுவாக உருவானதா “திராவிட நாடு” கோரிக்கை. “திராவிடர் கழகம்”, “திராவிட கொள்கை” எல்லாமுமே. திக வின் முன்னோடி ஜஸ்டிஸ் பார்ட்டி. மொழிவழி மாநில பிரிப்பின் பின், தமிழ் நாட்டிற்கு தமிழர்தான் ஆட்சி அதிகாரம் செய்ய வேண்டும் - இதை பெரியாரே வலியுறுத்தியுள்ளார்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
எனக்கும் சொல்லி தரமுடியுமா? இப்படி இணைப்பது யாழின் சேவர் சுமையை குறைக்கும் என நினைக்கிறேன்.
-
பாட்டுக் கதைகள்
சாத்திரி ஒரு நாவலாசிரியர். சுமே அன்ரியும் எழுதுவா. இன்னும் ஓரிருவர் உளர் என நினைக்கிறேன்.
-
வேங்கைவயலில் மலம் கலந்தது யார்?
திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதை இம்முறை தமிழ்நாடு பொலிசுக்கு வழங்கலாம்.
-
இமானுவேல் சேகரன் கொலை- முத்துராமலிங்க தேவர் கைது..பெரியார்- புதிய சர்ச்சையில் சீமான்- விசிக கண்டனம்!
தலையிடாமல் இருந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் சீமான் வந்து…. தன் சுய நலனுக்காக எம்மை தலையிட வைத்து விட்டார். இனி தலையிடாமல் இருந்தால் … நாம் எல்லோரும் நா த க சார்பானவர்கள் என ஏனையோர் கருதுவர். இப்போதே கருதுகிறார்கள். தமிழ் நாட்டில் இப்போ தலைவரும், புலிகளும், ஈழத்தமிழரும் வெறுக்கப்படுவதுபோல், 2009 க்கு முன் ஒருபோதும் இருந்ததில்லை, 91 இல் கூட. ஆகவே இனி தலையிடாமை என்பது எமக்கு ஒரு தெரிவல்ல. கறந்தபால் மடி ஏறாது.
-
'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு
@பாலபத்ர ஓணாண்டி, நிச்சயமாக உங்களுக்கும், வாலிக்கும் இடையான தர்கத்தில் தலையிடும் எண்ணம் இல்லை. ஆனால் சில விளக்கம் எனக்கு தரமுடியுமா? 1. இந்த ஓணாண்டி பெயரில் முதலில் உள்ளே வரும் போது, நான் இலண்டனில் சம்பளத்துக்கு வேலை பார்க்கிறேன், போராட்டம் பற்றிய அதிக தகவல்கள் தெரியாது, சைக்கிளில்தான் சுத்துகிறேன், அதிகம் தகமைகள் இல்லாதவன், பல கால யாழ் வாசகன், கோஷானை எனக்கு நல்லா பிடிக்கும், இப்போதுதான் எழுத ஆரம்பிக்கிறேன் என்பதே உங்கள் சுய அறிமுகமாக இருந்தது. காலப்போக்கில் நீங்கள் ஐடி துறையில் வல்லுனர் என்பதும், இலண்டனில் இருந்து மீண்டும் நாட்டுக்கு குழந்தை குட்டிகளோடு திரும்பும் அளவு வசதியானவர் என்பதையும் நீங்கள் சொல்லி தெரிந்து கொண்டோம். இது நீங்கள் இணையும் போது உங்களை பற்றி சொல்லியதற்கு (கட்டிய விம்பத்துக்கு?) மாறாக இருந்த போதும், மனதில் குறித்து கொண்டேன், கேட்கவில்லை. இப்போ நீங்களே முன்பு வேறு ஒரு ஐடியில் வந்து, மிகவும் வினைதிறனாகவும் செயல்பட்டவர் என்கிறீர்கள். தனிப்பட்டு உங்கள் மீது நான் வைத்திருந்த நம்பிக்கையை இது பலத்த கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. முடிந்தால் விளக்கம் தரவும். இல்லை கோஷான் எல்லாம் என்ன ஹைகோர்ட்டா - என கடந்து போனாலும், காரியமில்லை. 2. அமரதாஸ் பற்றி நீங்கள் சொல்லியது பாரிய குற்றசாட்டு. அதை நீங்கள் செய்த போது வேறு ஐடியில் இருந்தீர்கள் - இப்போ ஊரில் வசிக்கிறீர்கள். அந்த ஐடி வெளியில் வந்தால் ஆபத்து நேரலாம். இதை நான் முழுமையாக ஏற்கிறேன். ஆனால் நீங்களும் அந்த குற்றசாட்டை வீச முன்னர் இதை யோசித்து இருக்க வேண்டும். ஒருவரை குற்றம் சாட்டும் போது நம்மிடம் உள்ள ஆதாரத்தை நாம் வெளியிட தயாராக இருக்க வேண்டும். இல்லை எண்டால் குற்றசாட்ட கூடாது. இப்போதும் சொல்கிறேன்…உங்கள் பழைய ஐடி விபரம் எனக்கு தேவையில்லை. உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியேனும் அதை காணும் ஆவல் எனக்கு அறவே இல்லை. ஆனால் - நீங்கள் ஆதாரம் தரும் வரை அமரதாஸ் மீதான உங்கள் குற்றச்சாட்டை ஆதாரம் அற்ற பதிவு என்றே கருத முடியும். யாழ்களத்திலேயே எழுதாத அமரதாசை “வேணும் எண்டால் என்னுடன் கதைக்க சொல்லுங்கள்” என்பது “அண்ணை வந்ததும் காசை தாறோம்” டைப் லொஜிக்.
-
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் கைது
மின்னுவதெல்லாம் பொன்னல்ல… பூராவும் மேக்கப்பு 🤣
-
கிளிநொச்சி குளத்தை அண்டிய பகுதிகளை சுற்றுலாப் பயணிகளுக்காக மாற்றியமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்
பார் லைசன்ஸ் எடுத்து குடுத்தா மட்டும் போதாது… கஸ்டமர் வாற மாதிரி சூழலையும் அமைக்க வேண்டும்.
-
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் கைது
எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும், எம் பி ஆனபின் மாற்றம் இருக்கும் என எதிர்பார்த்தேன். உங்களை போலவே ஏமாற்றம் மட்டுமே மிச்சம். இப்போ இருக்கும் ஒரே எதிர்பார்ப்பு இவர தூக்கியடிக்கப்பட அந்த இடத்துக்கு வினைதிறனானவர் வரவேண்டும் என்பதே.
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
சார்ந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
”அப்பா அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார்” - நாமல்
அப்போ கொடுக்கப்பட்டது சரிதான். அதன் பின்னால் நடந்தவை மோசமானவை. ராபின்கள் மேலும் இஸ்ரேலில் வந்திருந்தால், ஹமாசை பலஸ்தீனர் ஒதுக்கி இருந்தால் வரலாறு மாறி இருக்கலாம். ஒபாமாவுக்கு கொடுத்ததுதான் கேலிகூத்து.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
நானும் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன்…. கண்ட கண்ட… எங்கண்ணை கேக்குறானுங்க🤣
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
வேறை ஒண்டும் இல்லை, 1. ஆள் உள்ள வந்ததே - பழையபடி யாழில் குழு மோதலை தூண்டி விடலாம் என்ற நப்பாசையில். அவரின் கெட்டகாலம் பலருக்கு இப்போ அதில் நாட்டமில்லை. அது மட்டும் அல்லாமல், பல விடயங்களில் (உக்ரேன், பலஸ்தீன், போலிக்கா) குழு எல்லாம் மாறி மாறி உடைஞ்சு இப்போ எல்லாரும் எல்லா குழுவிலும் மெம்பேர்ஸ்🤣. இது தற்செயலாக நடந்த நல்லவிடயம். ஆகவே ஆளின் பப்பு வேகவில்லை. 2. வரும் போது நிர்வாகம் நடுநிலை இல்லை என கூறி கொண்டு வந்தவர், இப்ப நிர்வாகத்கிடம் வினயமாக கோரிக்கை வைக்கிறாராம்🤣. நடுநிலை இல்லாத களத்தில் மானஸ்தர்கள் மினக்கெடமாட்டார்கள் 🤣. 3. பிறகு நான் போலி ஐடியில் வாறேன் என ஒரு லுச்சா கதை. அதுவும் பிசு பிசுத்து போச்சு. பிறகு என்னை பற்றி ஒரே ஒப்பாரி🤣. 4. இடைக்கிடை திரிக்கு சம்பந்தமே இல்லாமல் ஆட்டு ஸ்டோரி, லூட்டன் இமி கிரேசன் ஸ்டோரி என இணைத்து, திரியை அரட்டை திரியாக்கி தளத்தை மலினப்படுத்தும் முயற்சி. அதையும் எவரும் கண்டுக்கவில்லை. எல்லோரும் திரியில் விடயத்தில் பிசி. 5.நான் தமிழக அரசியலில் கருத்து சொல்வதை 2003 டிசம்பரில் விட்டு விட்டேன் என சொல்லி விட்டு, வந்த பின் கருத்து எழுதிய ஒரே திரி இந்த திரிதான். அதிலும் பல அரசியல் கருத்துகள் 🤣. 6. இப்போ ஆத்தா கொடுமையில நிர்வாகத்துகே அட்வைஸ் - செவ்வாழை காமெடிதான்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
மக்களே, உங்களுக்கு தெரியாது - மிசேல் ஒபாமா ஒரு ஆண், பராக் ஒபாமா ஒரு தன்னினசேர்க்கையாளர், என பெரியார் கூறி உள்ளார். உலக மீட்பர் டிரம்ப் என்றும் பெரியார் கூறி உள்ளார். 2025 இல் பிட் காயின் 125K தொடும் என்றும் கூட பெரியார் கூறி உள்ளார். ஆதாரம் கவுண்ட மணியிடம் உள்ளது. மறைக்கிறார் வந்ததும் காட்டுகிறேன்🤣
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
டீச்சர், டீச்சர் அந்த பையன் ஊண்டி நுள்ளிப்போட்டான் 🤣🤣🤣
-
இமானுவேல் சேகரன் கொலை- முத்துராமலிங்க தேவர் கைது..பெரியார்- புதிய சர்ச்சையில் சீமான்- விசிக கண்டனம்!
அதே…. ஆனால் இதில் நாம் சங்கடபட எதுவும் இல்லை என்பது என் பார்வை. கேவலமாக நடப்பவர்கள் சீமான் போன்றவர்கள், ஆனால் அந்த கேவலத்தை சுட்டி காட்டுபவர்கள் நாம். நாம் ஏன் சங்கடபட வேண்டும். இமானுவேல் சேகரன் தனக்கு சரி சமானமாக அமர்ந்து பேசி விட்டார் என்பதால்…. 80 களின் சினிமா வில்லன் போல், தன் கூலிப்படையிடம் “ஒரு ப***** பயல் எனக்கு சமனாக இருக்கும் படி செஞ்சுட்டீங்களேடா” என கொலைக்கு ஜாகை காட்டி விட்டு போனவர்தான் முத்துராமலிங்கம். இங்கே கொல்லபட்டவரும், கொலையை தூண்டியவரும் தமிழ் வம்சாவழி சாதியினர். நடவடிக்கை எடுத்தவர், தன் சாதி காரன் என்பதால் சீமான் தலையில் வைத்து ஆடும் காமராசர் (காமராசர் தமிழ் இந்து நாடார், சீமான் மலையாள கிறீஸ்தவ நாடார்) . இன்றைக்கும் இதே முத்துராமலிங்கத்தைதான் தேவர் திருமகனார் என போற்றுகிறார் சீமான். இப்படி தவறு முழுக்க எங்கோ இருக்க, பெரியாரை கொண்டு வந்து இதில் முடிகிறார். இதுகூட, ஈரோடு கிழக்கை அதன் வாக்காளரின் சாதியை மனதில் வைத்தே. தமிழ் நாட்டில் எல்லா கட்சிகளும் சாதியை பாவிப்பது உண்மை. ஆனால் இவ்வளவு அப்பட்டமாக, கேவலமாக, சாதி முறுகலை தூண்டும் வகையில் பாவிப்பவர் சீமான் ஒருவரே. இராமதாஸ் கூட எவ்வளவோ மாறி விட்டார். ———-/ இப்படி பட்ட ஜந்துவுக்கு எந்த சாதியினரின் பெரும்பான்மை வாக்கும் கிடைக்காது. ஆனால் இவரை நம்பி மிகுதி எல்லோரிடமும் பகையை வளர்கிறோம் நாம்.
-
இமானுவேல் சேகரன் கொலை- முத்துராமலிங்க தேவர் கைது..பெரியார்- புதிய சர்ச்சையில் சீமான்- விசிக கண்டனம்!
இமானுவேல் சேகரன் கொலை- முத்துராமலிங்க தேவர் கைது..பெரியார்- புதிய சர்ச்சையில் சீமான்- விசிக கண்டனம்! Mathivanan MaranUpdated: Wednesday, January 29, 2025, 15:59 [IST] ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: முத்துராமலிங்க தேவரை ஒரு பஞ்சாயத்துக்கு கூப்பிடுகின்றனர். அவர் பஞ்சாயத்துக்கு வரவில்லை..வேறு வேலை இருக்கிறது என்கிறார். பின்னர் பஞ்சாயத்துக்கு சென்ற முத்துராமலிங்க தேவிரிடம் ராணுவத்தில் பணி செய்துவிட்டு வந்த இமானுவேல் சேகரன் எழுந்து கேள்வி கேட்கிறார். இதனால், தான் நான் வரமாட்டேன் என்றேன்.. சின்ன சின்ன பயலுக எல்லாம் கேள்வி கேட்கிறானுக என்று சொல்லிவிட்டு முத்துராமலிங்க தேவர் கிளம்பிவிடுகிறார். இமானுவேல் சேகரன் படுகொலை- முத்துராமலிங்க தேவர்- பெரியார் இதனால் நம்முடைய அய்யா முத்துராமலிங்க தேவரை கேள்வி கேட்டுவிட்டார்களே என்ற கோபத்தில் இமானுவேல் சேகரனை பக்கத்தில் இருந்த இளைஞர்கள் வெட்டி கொலை செய்துவிடுகின்றனர். முத்துராமலிங்க தேவருக்கும் இமானுவேல் சேகரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அது தெரியாமல் நடந்துவிடுகிறது. ஆனால் பெரியார்தான் திரும்ப திரும்ப சொல்லி காமராஜரை வலியுறுத்தி முத்துராமலிங்க தேவரை கைது செய்ய வைத்தார். இவ்வாறு சீமான் பேசினார். 1957-ல் முதுகுளத்தூரில் நடந்தது என்ன? சீமானுக்கு வன்னி அரசு கண்டனம் சீமான் பேச்சுக்கு வன்னி அரசு கண்டனம் தெரிவித்து கூறியிருப்பதாவது: கடந்த 1957 ல் முதுகுளத்தூரில் பெரும் பதற்றம் ஏற்படுகிறது.இரண்டாவது பொதுத்தேர்தலை ஒட்டி எழுந்த பதற்றம் அது. முகவை தலித்மக்கள் அப்போது காங்கிரசை ஆதரித்தனர். திரு.உ.முத்துராமலிங்கம் அவர்கள் (பசும்பொன் முத்துராமலிங்க தேவர்) பார்வர்ட் பிளாக் சார்பாக தேர்தலில் நின்றார். தேர்தலில் பள்ளர்கள் ( தேவேந்திர குல வேளாளர்கள்) உ.முத்துராமலிங்கத்திற்கு வாக்களிக்காததால் அவர்களது உடமைகளை தேவர் சாதியினர் சூறையாடினர். உச்ச பட்சமாக கடம்பாங்குளத்தில் 9 பள்ளர்களை தேவர்சாதியினர் தூக்கி பத்ரகாளிக்கு பலியிடப்போவதாக அறிவித்தனர்; சட்டசபையில் இப்பிரச்சனை எழுப்பப்பட்டு தமிழகம் முழுவதும் பதற்றமானது. முதுகுளத்தூர் பகுதியில் பள்ளர்-தேவர் உரசல் மோதல் வெடித்தது.இதனை தடுக்கும்பொருட்டு ராமநாதபுரம் மாவட்டக் கலெக்டர் சி.வி.ஆர் பணிக்கர் சமாதனக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். 1957 செப்டம்பர் 10 ம் தேதி முதுகுளத்தூரில் சமாதானக்கூட்டம் கூட்டப்பட்டது. ( இந்தக்கூட்டத்தை தான் பஞ்சாயத்து என சொல்கிறார் சீமான்) இக்கூட்டத்தில் திரு.பெருமாள் பீட்டர், திரு.இம்மானுவேல் சேகரன் திரு.உ.முத்துராமலிங்கம் (பசும்பொன் முத்துராமலிங்க தேவர்) உள்ளிட்ட காங்கிரஸ் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். உ.முத்துராமலிங்கம் (பசும்பொன் முத்துராமலிங்க தேவர்) சமாதானக்கூட்டத்திற்கு காலதாமதத்துடன் வந்தார். பெருமாள் பீட்டரும்,இம்மானுவேலும் உ.முத்துராமலிங்கம் வந்தபோது எழுந்து வணக்கமிடமில்லை.மற்றவர்கள் எழுந்து வணக்கமிட்டனர். உ.முத்துராமலிங்கம் பள்ளர் சாதி பிரதிநிதியாக இம்மானுவேலை ஏற்க மறுத்தார்.பரமக்குடி தொகுதியின் பார்வர்ட் பிளாக் எம் எல் ஏ வான பெருமாள் குடும்பனை பள்ளர் பிரதிநிதியாக ஏற்பதாக சொன்னார். இதனால் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.கலெக்டர் தலையீட்டினால் தனித்தனி சமாதானத் தாள்களில் இருவரும் கையொப்பமிட்டனர் சமாதானக்கூட்டம் முடிந்து கோபத்தோடு வெளியேறிய உ.முத்துராமலிங்கம் தனது ஆதரவாளர்களைப்பார்த்து " ஒரு பள்ளப்பயலை எனக்கு சமமா வளர்த்துவிட்டீங்களே" என் கோபத்துடன் பேசினார்.இதன் விளைவாக அடுத்தநாள் செப்டர்பர் 11 ம் தேதியே இம்மானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் உ. முத்துராமலிங்கமும் கைது செய்யப்பட்டார். உண்மை இப்படி இருக்க, ஏதோ பஞ்சாயத்துக்கு அழைத்து, தெரியாமல் கொலை நடந்ததாக திசை திருப்புகிறார் சாதி வெறியர் சீமான். முழுக்க முழுக்க சாதி வெறியால் திட்டமிட்டு நடைப்பெற்ற படுகொலை என அன்றைக்கே ஊடகவியலாளர் தினகரன் அம்பலப்படுத்தியுள்ளார். சாதி வெறியர்களை விட ஆபத்தான பேர்வழி தான் சீமான் என்பதை இன்றைய தலைமுறை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வன்னி அரசு தெரிவித்துள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/seemans-new-controversy-on-immanuel-sekaran-murder-muthuramalinga-thevar-arrested-and-periyar-675441.html?ref_medium=Mobile&ref_source=OI-EN&ref_campaign=Topic-Article ——————— @ரசோதரன் நேற்று நான் சீமாம் சாதியத்தை விலகி நடப்பவர் அல்ல, அதை தூண்டி விட்டு குளிர்காயும் ஓநாய் என எழுதியதை 24 மணிக்குள் அண்ணன் நிரூபித்துள்ளார்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
@Justin ஒரு சின்ன அல்ல பெரிய உதவி🙏. நீங்கள் உங்கள் நிலைப்பாட்டைபெரியாரை எதிர்க்கும்/சீமானை ஆதரிக்கும் படி மாற்றிகொள்ள முடியுமா? பணய கைதிகள் பரிமாற்றம் போல - உங்களை கொடுத்து, யாழில் ஒரு 3/4 பேரை ஒவர் நைட் எனது நிலைப்பாட்டுக்கு மாற்றிகொள்ள விரும்புகிறேன் 🤣.
-
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் கைது
சிங்கன்… நான் எம்பி…என் காரில்தான் வருவேன் என ஒரே அடமாம்🤣. # சின்னத்தம்பி ஹைகோர்ட்டை செத்தான்
-
வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்!
இருவருமே ஒரே அணியில் ஒன்றாக ஒரே அரசியல் செய்தவர்தான். சம், சும் மின் அத்தனை செயலிலும் மாவைக்கும் பங்கு, பொறுப்புகூறல் உண்டு. 2009 இல் சம்பந்தன் போனை நூத்து விட்டு குப்புறபடுத்தவர் எண்டால், மாவை போனை நூத்து விட்டு ஒருக்களித்து படுத்தவர். அவ்வளவுதான் வித்தியாசம். ஆனால் மாவை விடயத்தில் மட்டும் அனுதாபம் வருகிறது எனில் அது யாழ்பாணம்/சாதி/மதம் சார்ந்த இரெட்டை நிலை என்பதே என் கருத்து. மற்றும்படி சாவு திரியில் கிரியை செய்வது அநாகரிகமானது என்பதில் எனக்கு முழு உடன்பாடே. வயசு, மூளையில் இரத்த கசிவு - மீண்டு வந்தால் அபூர்வம் என நினைகிறேன்.
-
”அப்பா அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார்” - நாமல்
நான் ரெடி…ஏற்பாடுகளை தொடங்குங்கோ….🤣
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
வாய்ச்சொல்லு சூனியம் என்பார்கள். நேற்று @வீரப் பையன்26 டம் கேள்வி கேட்டபோது நகைசுவையாக காளி அம்மாளை, காலிஅம்மாள் என எழுதினேன். இன்று இந்த வீடியோ கண்ணில் படுகிறது. @பாலபத்ர ஓணாண்டி @வீரப் பையன்26 அண்ணன் இப்படி காளியாத்தாவை சில்லு சில்லாக உடைத்தது அண்மைய நிகழ்வா?