Everything posted by goshan_che
-
யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அருச்சுனா
தகமை உண்டு…திறமை….பார்ப்போம். அவையடக்கம் சுத்தமாக இல்லை.
-
சிரியாவில் இருந்து தனது இராணுவத்தை மீளப் பெறும் ரஷ்யா
இங்கே இஸ்ரேலால் அழிக்கப்பட்டது ரஸ்யா கைவிட்டு சென்ற ஆயுதமா அல்லது அசாட்டின் ஆயுத கிட்டங்கியா என்பது பற்றி இருவேறு விதமாக கூறுகிறார்கள்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
வாசகர் கவனத்துக்கு! இங்கே டைம் மகசீனில் வெளிவந்த கட்டுரை என லங்கவெப் வெளியிட்ட கட்டுரை ஒன்று ஆதாரம் போல் காட்டப்பட்டது. இந்த கட்டுரை தலையங்கத்தை வைத்து - டைம் மகசீனின் ஒரிஜினல் கட்டுரையை என்னால் காண முடியவில்லை. லங்காவெப் இலங்கை புலநாய்வாளர்களால் வழிநடத்தப்பட்ட புலிகள் மீது உண்மைக்கு புறம்பானதை, அல்லது நடந்ததை பெருப்பித்து காட்டும் பிரச்சர போரில் முக்கியமான ஒரு அங்கம் என்பது பலருக்கும் தெரிந்த விடயம்தான். மிக முக்கியமாக இந்த கட்டுரையிலும் பாலசிங்கம் சொன்ன பேட்டியின் நகலோ அல்லது பேட்டி வெளிவந்த இதழ் பற்றியோ தகவல் ஏதும் இல்லை: ஆகவே இன்னும் பாலசிங்கம் எந்த பேட்டியில் இப்படி சொன்னார் என்பதும், இப்படி சொன்னாரா என்பதுமே நிருபிக்கபடவில்லை. நான் இங்கே பாலசிங்கம் கொடுத்த பேட்டிக்கான ஆதாரம் கேட்க காரணம் உள்ளது. அவர் சொன்னதாக சொல்லப்பட்ட ஆங்கில சொலவடையை பலவாறு அதன் சூழமைவை வைத்து வியாக்கியானம் பண்ணலாம். இதை இங்கே முதலில் தூக்கி வந்தவர், முன்பே செனேட்டர் லிண்ட்சே கிரேம் உட்பட பலர் ஆங்கிலத்தில் சொன்ன விடயங்களை தலை கீழாக புரிந்து கொண்டு அதற்கு சதிகோட்பாட்டு விளக்கம் கொடுத்தவர். ஆகவே பேட்டியை தக்க ஆதாரத்தோடு காணும் வரை - இது ஆதராமாக கருதப்படவியலாது.
-
யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அருச்சுனா
யாரை சொல்கிறார்? 3 என் பி பி + சிறி?. பா(ர்)வம் வாத்தி…🤣
-
பதவியில் இருந்து விலகினார் சபாநாயகர்
இதே போல் சஜித்தும் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வரும் கைஒப்பம் இட்டவர்…. அவர் London School of Economics இல் வெளிநாட்டு மாணவனாக காசு கட்டி சேர்ந்தும் படிக்க முடியாமல் ஓடி…பின்னர் அமெரிக்காவில் போய் ஏதோ உடான்ஸ் படிப்பு படித்தவர் என முன்பே ஒரு சர்ச்சை எழுந்தது. எப்படி இவர்கள் எல்லாரும் இனவாதிகள் என்பது உண்மையோ அப்படியே இவர்கள் எல்லோரும் கள்ளர்கள் என்பதும். இதில் ஜேவிபியும் அடக்கம். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
-
தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
இருந்தாலும் அனுர ஒண்டும் கிழிக்க மாட்டார். ஏன் என்றால் அவரும் ஒரு இனவாதிதான். நீங்கள் இன்னும் கொஞ்சகாலம் கழிய “சிங்களவன் ஏமாத்தி போட்டான்” எண்டு கையை பிசையத்தான் போறியள். உங்களுக்கும் சுமந்திரனுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. அவர் ரணில் காவடி. நீங்கள் அனுர காவடி. விமர்சிக்காவிட்டாலும் மாறாது. முன்பே சொன்னதுதான் இதெல்லாம் இலங்கை தேசியம் சார்ந்த விடயங்கள். எமது அடிப்படை பிரச்சனை இவை இல்லை. அதற்கு அனுரவிடம் இருப்பது ஒரே தீர்வுதான் - இனவாத அணுகுமுறை.
-
போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
தேவையான நேரத்தை எடுத்து வாசிக்கவும்.
-
போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
மன்னிக்கவும் நீங்கள் கொஞ்சம் ஸ்லோ என்பதை மறந்து விட்டேன். அந்த மானசீக போட்டி வேட்பாளருக்கு அல்ல, கட்சிக்கே நடந்தது. அதில் அருச்சுனாவுக்கு போட்டேன் என சொன்னது அவர் கட்சியை. அந்த திரியிலேயே பதிந்துள்ளேன்.
-
தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
அப்ப அனுர இனவாதிகளை சாந்த படுத்த மட்டும் நாம் பெளத்த கோவில் விடயத்தை சும்மா எதிர்த்து விட்டு அடங்கி விட வேண்டும்? இவை எல்லாம் அனுர இனவாதி இல்லை என்ற உங்கள் கற்பனை நிலைப்பாட்டில் எழுத படுபவை. அனுரவும் ஜேவிபியும் பச்சை இனவாதிகள். அவர்கள் இதை ஒருப்போதும் தடுக்கப்போவதில்லை. மேலும் அனுர இனவாதத்தை எதிர்க்க வந்தாரா அல்லது சாந்தபடுத்த வந்தாரா ? 2/3 பெரும்பான்மை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என சகலதையும் கொண்டுள்ள இப்போதே ஒரு துரும்பை கூட இவர்கள் தூக்கி போடவில்லை. இனி போக போக இறங்குமுகம்தான். எந்த அரசுக்கும் honeymoon period என தொடக்க காலத்தில் எதிர்ப்பு குறைந்த்ஹ் இருக்கும். கடினமான வேலைகளை அப்போதான் செய்வார்கள். இவர்களால் இப்பவே இனவாதிகளை ஒண்டும் செய்ய முடியவில்லை, இன்னும் சில வருடத்தில் இதை விட வெறுப்பை சம்பாதித்த நிலையில் என்னத்தை செய்ய முடியும். நீங்களும் அப்போ வந்து அனுர பாவம் இனவாதிகள் எதையும் செய்ய விடவில்லை என சப்பை கட்டு கட்டுவீர்கள். இனவாதி, இனவாத கட்சியிடமே இனவாதத்தை கட்டுபடுத்த கோரும் மடமை போல் வேறில்லை.
-
தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
நாட்டின் தலைவரை எல்லாம் நீங்களோ நானோ தேர முடியாது. அது சிங்கள வாக்குகள் தீர்மானிக்கும் விடயம். நாம் எந்த தேர்தலிலும் எமது நலனுக்கு ஏற்றதை மட்டுமே செய்யலாம்.
-
போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
நீங்கள் என்ன சொல்வது உங்களை போல அனுரகாவடிகளை அடையாளம்காட்டுபவர் என்ற தொப்பியை நான் விரும்பி எடுத்து அணிகிறேன். அருச்சுனாவுக்கு வழி இல்லாமல் போட்ட என்னை பார்த்து சிரிக்கும் உரிமை அனுர காவடிகளுக்கு இல்லை.
-
சிரியாவில் இருந்து தனது இராணுவத்தை மீளப் பெறும் ரஷ்யா
அதே போல் இது ரஸ்யா கைவிட்ட கடற்படைதளத்தை இஸ்ரேல் தாக்கி அழிக்கும் காட்சியாம். ரிக்டரில் 3.0 அளவு பதிவானதாம்.
-
சிரியாவில் இருந்து தனது இராணுவத்தை மீளப் பெறும் ரஷ்யா
ரஸ்யா கைவிட்ட இரு படைதளங்களை சில நாட்கள் கழித்து அமேரிக்கா எடுத்து கொண்டதாம்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
இந்த பேட்டியின் நகலை அல்லது வீடியோவை இணைத்தால் - தொடர்ந்து அது ஆதாரமா இல்லையா என அனைவரும் பேட்டியை வாசித்து விட்டு அல்லது பார்த்து விட்டு கருத்து எழுதலாம். இப்படி மொட்டையாக எழுதினால் -செல்லாது…செல்லாது.
-
இசை கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்🛐
-
“என் நாட்டுக்கு அனுப்பி வையுங்கள்”: இலங்கை தமிழர் கோரிக்கை!
நீங்கள் சொல்வதில் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை. நானும் சுமார் 2 வருடங்கள் இந்தியாவில் வாழ்ந்துள்ளேன். ஆனால் நான் சொன்னது இலங்கை, இந்திய சராசரி மனிதர்களின் வாழ்க்கையை பற்றி. வாழ்க்கை சுட்டெண், கூடியது இலங்கை, ஆனால் பொருளாதார வாய்புகள் கூடியது இந்தியா. இது கிட்டதட்ட சுவிஸ்சில் வாழ்தல், அமேரிக்காவில் வாழ்தல் இடையான வித்தியாசம் போன்றது. தனி மனித அபிலாசைகள் வேறுபடும். பல இந்தியர்களும் இலங்கையில் சட்டவிரோதமாக வந்து இருக்கிறார்கள். ஆனால் எது வாழ சிறந்த இடம் என்றால் - இலங்கைதான் என்பார்கள் பெரும்பான்மையான இலங்கையர்.
-
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
இதைதான் நானும் மேலே சொன்னேன் - நீங்கள் சரத்பொன்சேக்கா உதாரணம் காட்டிய போது. ஆனால் அப்போது அப்படி செய்ய புலிகளுக்கு சில தந்திரோபாய தேவைகள் இருந்தன. காங்கிரஸ்காரர் அதுவும் சீமானின் பிறப்பையே கேவலமாக பேசியவர், ஒரு குழந்தையின் கொலையை கொண்டாடியவர் - இவர் செத்த வீட்டுக்கு நேரில் போய் அஞ்சலி செலுத்தி அப்படி என்ன உலக மகா தந்திரோபாயத்தை சீமான் அடையப்போறார் என சொன்னால் நாமும் அறியலாம். உங்களில் பலரது நிலமை இவ்வளவு கவலைகிடம் என்பது தெரிந்ததுதான். நாளைக்கு காங்கிரஸ் அமைச்சரவையில் சீமான் இணைந்தாலும் கவலைபட மாட்டேன் என்பீர்கள். தலைக்கு மேல் வெள்ளம் போன பின் சாண் ஏறினால் என்ன முழம் ஏறினால் என்ன.
-
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
இளங்கோவன் யார்? காங்கிரஸ்காரர். புலிகளின் பரம எதிரி. சோனியா பக்தர். தெலுங்கு வம்சாவழியினர். இவரும் சீமானும் எந்த இனத்தின் அல்லது எந்த கொள்கையின் முன்னேற்றத்துக்காக ஒன்றுபட முடியும்? வேண்டு? அதுவும் உயிரோடு இருக்கும் போது போய் சந்தித்தால் கூட பரவாயில்லை. செத்த பின் இளக்கோவன் பிணத்தோடு என்ன அரசியலை செய்யப்போகிறார் சீமான்? இப்படி எழுதும் போது உங்களுக்கு சிரிப்பு வரவில்லையா? தமிழ் நாட்டில் இளங்கோவனை மிஞ்சிய ஒரு காந்தி-நேரு குடும்ப அடிமையை காட்ட முடியாது. பாலச்சந்திரன் பற்றி இளங்கோவன் கூறிய மோசமான கருத்துக்கு காரணமே புலிகள் ரஜீவை கொண்டதுதான். அந்தளவு புலிகள் எதிர்பாளர் அவர். அவரின் செத்த வீட்டுக்கு போபவரைத்தான் நீங்கள் காங்கிரசை எதிர்க்கும் போர்வாள் என்கிறீர்கள்.
-
இலங்கையை அதிர்ச்சிக்குள்ளாகிய விமான விபத்து - 191 பேருடன் டச் மார்ட்டின் எயார் விழுந்து நொருங்கி ஐம்பது வருடங்கள்
இந்த விபத்து நடந்த அன்று என் தந்தை ஹட்டனில் இருந்தாராம். மீட்புப் பணியின் இரெண்டாம் அடுக்கில் தாம் இணைந்து கொண்டதாக சொல்லியுள்ளார். பின்னர் ஒரு பயணத்தின் போது வாகனத்தை இந்த வழியாக விட்டு, இடங்களையும் காட்டினார். அந்த காலத்தில் இலங்கையின் ரெக்கோர்ர்ட்டில் அதிக அளவான மக்கள் இறந்த நிகழ்வுகளில் ஒன்று இதுவென சொன்னார்.
-
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
புலிகளை மட்டும் அல்ல, ஆதரவாளர் குடும்பங்களை தேடி, தேடி வேட்டையாடிய பிரேமச்சந்திரனை கூட்டமைப்பில் சேர்த்து, எம்பியாக்கி, அருகில் நின்று போட்டோவும் எடுத்தார் தலைவர்! ஏன்….இன ஒற்றுமைக்காக இந்த கயவர்களையும் மூக்கை பிடித்த படி அணைக்க வேண்டி இருந்தது. சாணாக்ஸ்சினை பற்றிய எமது மக்களின் நிலைப்பாடும் இதுவே. ஆனால் சீமானுக்கு இனத்தின் ஒற்றுமைக்காக இப்படி இளங்கோவனை அணைக்க வேண்டிய தேவை ஏதும் இல்லை. 🤣
-
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
ஏன்….புலிகள் கூட அமிர்தலிங்க்கத்தை சுட்டு விட்டு அதன் போது அதிஸ்டவசமாக தப்பிய சிவசிதம்பரத்தை புனர்வாழ்வுக்கு பின் புலிக்கொடி போட்டு இறுதியாத்திரை அனுப்பி வைத்தனர் இல்லையா? நீங்கள் மேலே சொன்னவை எல்லாம் - உள்ளதில் நல்ல கெட்ட தெரிவு எது என்பதை கையறு நிலையில் இருந்த மக்கள் எடுத்த முடிவு. சீமானுக்கு அப்படி அல்ல. அவர் இளங்கோவன் மரணத்தை கண்டுகொள்ளாமல் போயிருந்தால் கட்சிக்கோ, கொள்கைக்கோ, மக்களுக்கோ எந்த சேதாரமும் வந்திராது.
-
போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
என்ன கேப்பில கொண்டெயினர் லொரி ஓட்டுறியள்? நான் விமர்சித்தது - உங்களை போல அனுரவுக்கு காவடி தூக்கும் ஆட்களை. அருச்சுனாவுக்கு நானே மானசீக தேர்தலில் வாக்கு போட்டேன். அனுரவுக்கு வாக்கு போட்டவர்களையும் விமர்சிக்கவில்லை. அருச்சுனா அணியில் மயூரன் போல நம்பிக்கையானவருக்கு போட்டிருக்கலாம் என்றே எழுதினேன்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
மிக்க நன்றி ரஞ்சித். யாழில் நீண்ட விளக்கம் கொடுக்க கூடிய மிக அரிதான கருத்தாளர்களில் நீங்களும் வழவனும் அடக்கம். உங்களை ஏன் @ பண்ணினேன் என்பதை வழவனுக்கான பதிலில் காண்க🙏. நான் போட்ட ஜெய்ஹிந்தின் அர்த்தம் அநேகமாக அனைவரும்கும் விளங்கி இருக்கும் என நினைக்கிறேன். அதுதான் முழு நேர மேற்கு எதிர்ப்பு பிரச்சாரகர்களின் உண்மையான கபட நோக்கம். ஏனையவர்களின் பிரச்சனை வேற. அவர்கள் நல்லவர்கள். ஆனால் எமக்கு நடந்த பிழைக்கு மேற்கு மட்டுமே தவறு என்பது போல் அவர்களை புல் டைம் காரர் மூளை சலவை செய்கிறார்கள். அதுதான் நீங்கள் சுட்டிய அளவுக்கு கொள்கை பிறழ்வு ஏற்பட காரணம். அதே போல் எப்போதும் ஒரு hero worship இல் இருந்து இவர்களுக்கு பழகிவிட்டது. அதனால்தான் தலைவருக்கு பின், சீமான், புட்டின் என அலைகிறார்கள். உப்பு கல்லும் வைரமும் ஒன்றென கருதி. இவர்களை போலவே முழு புலம்பெயர் சமூகத்தையும் மந்தைகள் ஆக்கி விடலாம் என்பதுதான் புல்டைம் காரர்களின் திட்டம். பார்க்கலாம்…. We are fighting a good fight, keep at it👍 இது எம்போன்றோருக்கு சரி… ஆனால் சம்பளத்து வேலை செய்பவர்கள் சதா அதே விடயத்தை எழுதி கொண்டே இருக்க வேண்டும்… அல்லது டெல்லியில் இருந்து கோல் வரும்🤣
-
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
ரைட்டு….உங்களுக்கும் வெம்புது ஆனால் வலிக்காத மாதிரியே நடிக்கிறீர்கள்… பார்ப்போம் எத்தனை வருடங்களுக்கு இப்படி…. உள்ள அழுகிறேன்….வெளிய சிரிக்கிறேன்…நல்ல வேஷம்தான் வெளுத்து வாங்கிறேன் என்று இருக்கப்போகிறீர்கள் என. ———- கடந்து போயிருக்கலாம்…. செய்தே ஆக வேண்டும் என்றால்…. இரங்கலை சுருக்கமாக ஒரு டிவீட்டுடன் முடித்திருக்கலாம்…. எவன் செத்தாலும் அதை வைத்து பிண-அரசியல் செய்யும் அண்ணனுக்கு - இறந்தது இந்த இனத்தின் வஞ்சகன் என்பது கூடவா தெரியவில்லை.
- திண்ணை