-
Posts
15623 -
Joined
-
Last visited
-
Days Won
175
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by goshan_che
-
யாழில் 10 லட்சம் ரூபாய்க்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய காதலி !
goshan_che replied to colomban's topic in செய்தி திரட்டி
#கருத்து 👏🏾👏🏾👏🏾 -
தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்?
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
நீங்கள் விடுறதாய் இல்லை🤣. ஆனால் ஒரு விசயம். உண்மையில் கரு, சாணக்கியன் போன்றவர்கள் இரு பக்கதால் அடி வாங்குகிறார்கள். 1. தமிழ் தேசியவாதிகளின் ஒரு பிரிவால் (நீங்கள், பெரும்ஸ் etc). 2. தமிழ் தேசியத்துக்கு எதிரான பிரதேசவாதிகளால், அவர்களின் ஊதுகுழல்களால். இதில் 1ம் தரப்புக்கு சாணாக்கியன் மீது இருக்கும் பல விமர்சனங்களை நானும் கொண்டுள்ளேன். குறிப்பாக அவரின் 2009 க்கு பின்னான மகிந்த நெருக்கம், பின் சும் மூலம் உள்ளே வந்தது etc. ஆனால் விரும்பியோ விரும்பாமலோ மட்டு-அம்பாறையில் இப்போ தமிழ் தேசியம் பேசும் ஒரே மக்கள் ஏற்று கொண்ட சக்தி தமிழரசு கட்சியும், சாணக்கியனும்தான். ஆனால் இப்படி இருமுனை தாக்குதலுக்கு அவர்கள் கனகாலம் தாக்கு பிடிக்க முடியாது. அநேகமாக எமது ஆயுட்காலத்தில் மட்டில் இருந்து ஒரு தமிழ் தேசிய கட்சி எம்பி கூட தேர்வாகாத நிலையை நாம் காணக்கூடும். மட்டு-அம்பாறை தமிழ் அரசியல் எப்போதும் தனித்துவமானது. அதை தன்மையாக, பொறுமையாக, கையாண்ட ஒரே தலைவர், தலைவர் மட்டுமே. அதை சாதாரண கருத்தாளர்களிடம் நான் எதிர்பார்ப்பதும் தவறே. உண்மையில் கருவும், பெருமாளும், நீங்களும் ஒரே அரசியலுக்கு உரியவர்கள். இவர்களின் எதிர் அரசியலை ஆதரிப்பவர் ரதி அக்கா. ஆனால் பெருமாளும், நீங்களும் ரதி அக்காவோடு சேர்ந்து கருவை கும்முகிறீர்கள். யாழில் மட்டும் அல்ல, வெளியாலும் இதுதான் நடக்கிறது. # தந்தை இல்லாத வீடு = என் இனம் -
தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்?
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
பகிடியாய் இல்லையப்பா… தமிழரசில் ஒரு உபதலைவர் மட்டகளப்பு என்பது நடைமுறை. இது செல்வராசாவிடம் இருந்து சாணக்கியனுக்கு மாறிவிட்டதா இல்லையா? -
ஏற்றுகொள்ளப்பட்ட எல்லா கணிப்புகளின் படியும் மார்ச் 2022 இல் 29% அளவு உக்ரேனை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ரஸ்யா. நவம்பர் 2022 இல் 15% ஐ கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. உண்மையை அறிய விரும்புவோர் கீழே உள்ள சுட்டிகளை தட்டி அறியலாம். அல்லது கூகிள் மேப்பில் அண்ணளவாக அளந்து கூட பார்க்கலாம். #தரவு முக்கியம். https://www.aljazeera.com/amp/news/2022/2/28/russia-ukraine-crisis-in-maps-and-charts-live-news-interactive https://www.lemonde.fr/en/les-decodeurs/article/2022/11/25/nine-months-of-war-in-ukraine-in-one-map-how-much-territory-did-russia-invade-and-then-cede_6005655_8.html
-
தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்?
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
சரி எல்லாம் ஓகே, தமிழரசுகட்சியின் உபதலைவர் ஆகிட்டார சாணாக்ஸ்? அந்தோணியாரே அது பகிடியா எழுதினது அந்தோணியாரே🤣 -
யாழில் 10 லட்சம் ரூபாய்க்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய காதலி !
goshan_che replied to colomban's topic in செய்தி திரட்டி
1. ஏற்று கொண்டு விட்டீர்கள் 2. இல்லை எனக்கு ஆதாரம் தேடும் அவசியம் இல்லை. இவர்கள் மதம்மாற்றிகள் என கூறும் நீங்கள் ஆதாரம் தாருங்கள். ஆனால் நீங்கள் கேட்காமலே பையனும், சபேசனும் உண்மை எது என வடிவாக எடுத்து சொல்லி விட்டார்கள். 3. இருவரும் ஒரே கருத்து சந்தோசம் 4. திணிப்பது கூடாது என்பதுதான் எல்லார் நிலையும். ஆனால் திணிப்பதை நிறுவுங்கள் முதலில். 5. இல்லை. நீங்கள் இதே பதிலில் முதலாம் பந்தியில் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலமே - இங்கே சாணக்ஸ்சுக்கு எதிராக எழுதிய ஒரே காரணம் அண்ணனுக்கு முட்டு கொடுப்பது மட்டுமே என்பதை ஐயம் திரிபுற விளக்கிவிட்டது. அப்ப நல்லாத்தான் இருந்தார்கள். 2009 க்கு பிறகுதான் இந்த கூத்தல்லாம்🤣. -
யாழில் 10 லட்சம் ரூபாய்க்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய காதலி !
goshan_che replied to colomban's topic in செய்தி திரட்டி
நீங்கள் இங்கே எழுதியது அண்ணனுக்கான அரசியல் என ஒத்து கொண்டமைக்கு நன்றி. ஆக இந்த அரசியலுக்காக மதத்தை இழுத்து வந்திருக்கிறீகள் என்பது தெளிவு. இத்தனைக்கும் மட்டுவில் இருந்து வீடியோ போட்ட அந்த பையன் சைவமாம்🤣. சாணாக்கியனின் ஆதரவாளர் என்பதால் அவரை மதமும் மாத்தியாச்சு🤣. ஆனால் இந்த அம்பாறை, மட்டகளப்பு பகிடி விட வேண்டாம். மட்டகளப்பில் போட்டி கூட என அம்பாறை போனதும், அங்கேயும் அண்ணர் ஒரு சீட்டை எடுக்க முடியாமல் போனதுக்கு கூட்டமைப்பும், சாணக்ஸ்சும் காரணம் என்பதும் வெளிப்படை. ஏன் சம் என்ன லூசா? தானே ஒரு பட்டை போடும் சைவ பழமாக இருந்த படி, கிறீஸ்தவர்களை மட்டும் தன் கட்சியில் சேர்க்க? லொஜிக் உதைக்குதே? -
யாழில் 10 லட்சம் ரூபாய்க்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய காதலி !
goshan_che replied to colomban's topic in செய்தி திரட்டி
சைவமுன் தமிழும் 1000 ஆண்டுகளா ஒட்டி கிடப்பவை அதை பிரிக்க கூடாது. இதில் 100% உடன்பாடே. ஆனால் தமிழ் இதே போல் பெளத்ததுடனும் ஒட்டியதே என்பதை ஐம் பெருங்காப்பியங்கள் சொல்லி நிற்கிறன. அதே போல் அச்சு பதிப்பில் தமிழுக்கு தோள் கொடுத்தது கிறீஸ்தவம். சைவம் உட்பட எல்லா மதங்களும் வரும் போது எமக்கு அந்நிய மதங்களே. வந்த காலங்கள்தான் வேறுபடுகிறன. ஆனால் யாவரும் கேளிர் அல்லவா நமக்கு ஆகவே எல்லாரையும் எடுத்து கொண்டது இம்மொழி. இந்த மொழியிலும் இந்த இனத்திலும் நம் எல்லோருக்கும் சம பங்கு என்பதை ஏற்கும் போது, தமிழில் இருந்து கண்ணை பிடுங்குவதா (சைவம்), அல்லது கையை வெட்டுவதா (கிறீஸ்தவம்) என்ற கேள்வியே வராது. இதுதான் தலைவர் “கோயில் போல நாடு வேண்டும்” என கூறிய மதச்சார்பற்ற நாடு. ❤️ என்ன மீரா இது, அவர்கள் ஏனைய கிறிஸ்தவர்களையும் கூட இப்படித்தான் சொல்கிறார்கள். அமெரிகா, யூகே, நைஜீரியா எங்கேதான் இவர்களின் ரோதனை இல்லை? இப்ப எங்களில் பிரேமாநந்தா, நித்தியாநந்தா, சக்குரு எண்டு ஒரு லூசு கூட்டம் அலையுது என்பதால் எங்கள் எல்லாரையும் அப்படி எண்டு சொல்ல ஏலாதுதானே? -
யாழில் 10 லட்சம் ரூபாய்க்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய காதலி !
goshan_che replied to colomban's topic in செய்தி திரட்டி
நன்றி பையா. உதவிக்கும், உண்மையை உரக்க சொல்லியமைக்கும். நன்றி சபேசன். என் போல இது பற்றி அறியாமல் இருந்த பலரிற்கும் நல்ல விளக்கமாக இது இருக்கும். -
அப்படி என்றுதான் நினைக்கிறேன். ஆனால் வழக்கு போட்டு தேர்தல்வரையாவது இழுக்க முடியும். ஓம் எனக்கு நல்ல இப்ப நியாபகம் வருகிறது. கறுப்பு வெள்ளை தாளில் வெளிச்ச வீடு படத்துடன் தேர்தலுக்கு முதல் நாள், இரவோடிரவாக “பெடியள் ஈரோசுக்கு போடட்டாம்” என்ற தகவல் பரவியது. மறுநாள் அம்மம்மா கிழவி ஈறாக அனைவரும் திரண்டு போய் வாக்குப்போட்டதும், அடுத்தநாள் ஈபி காரர் உம் என்று மூஞ்சையோடு சென்றியில் கெடுபிடி செய்ததும். இவர்களை நம்பலாமா? இல்லை. ஆனால் எம்பி ஆக வேண்டும் என்றால் இனி ஒழுங்காக நடந்தால் மட்டுமே முடியும் என்ற நிலையை உருவாக்கினால் - வேறு வழி இல்லாமல் வழிக்கு வரக்கூடும்.
-
யாழில் 10 லட்சம் ரூபாய்க்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய காதலி !
goshan_che replied to colomban's topic in செய்தி திரட்டி
https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-dec15/30193-2016-02-05-04-52-04 -
யாழில் 10 லட்சம் ரூபாய்க்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய காதலி !
goshan_che replied to colomban's topic in செய்தி திரட்டி
கல், மண் தோன்ற முதல் தோன்றிய குடியா நாம் என தெரியவில்லை, ஆனால் மதம் தோன்ற முதல் நாம் தோன்றிவிட்டோம் என்றே படுகிறது. மதம் என்று ஒன்று எமக்கு இருக்கவே இல்லை என்றால் பெயரும் இருக்காது அல்லவா? http://siragu.com/நடுகல்-வழிபாடு-பற்றிக்-க/ -
யாழில் 10 லட்சம் ரூபாய்க்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய காதலி !
goshan_che replied to colomban's topic in செய்தி திரட்டி
அது வேற வாய் 🤣. இந்த டிசைனல் வரும் 👇 1. கருணா பிரிய என்ன காரணம்? யாழ்பாணத்தாரின் பிரதேசவாதம் 2. பாலா அண்ணா ஏன் தன் பூர்வீகம் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை? அப்படி செய்தால் யாழ்பாண பிரதேசவாதம் தன்னை விழுங்கி விடும் என பயந்தார். 3. சாணாக்கியன் மீது நடக்கும் தாக்குதல் யாழ்பாண பிரதேசவாதமா? இல்லவே இல்லை. அப்படி சொல்பவர்தான் மட்டகளப்பு பிரதேசவாதி🤣. இலக்கு ஒன்றுதான். அண்ணனுக்கு முட்டு கொடுப்பது. அதற்கு மதம் உட்பட எந்த ஆயுதத்தையும் தூக்கலாம். இனத்தை நாசமாக்கும் எந்த நச்சு விதையையும் ஊண்டி விட்டு போகலாம். இதுவும் இப்போ எம்மில் இருக்கும் மதங்களுக்கு முன்பான நடுகல் வழிபாடே. -
யாழில் 10 லட்சம் ரூபாய்க்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய காதலி !
goshan_che replied to colomban's topic in செய்தி திரட்டி
1. இங்கே இந்த வீடியோ போட்டவர்கள் மதம் மாறினார்கள் என்றால் - அதை பற்றி நம் எவருக்கும் கேள்வி கேட்க அருகதை இல்லை. என்ன காரணம் என்றாலும் அது அவர்கள் சொந்த விடயம். 2. அவர்கள் ஏனையோரை மதம் மாற்றுகிறார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு. வீடியோ ஆதாரம் இல்லை - வேறு என்ன ஆதாரம் எண்டாலும் கொடுக்கலாம். ஆதாரமே இல்லாமல், ரதி அக்கா ஒரு மதமாற்றி என நான் சொன்னால் நீங்கள் ஏற்பீர்களா? இல்லை. அது போலத்தான். 3. சாணக்கியன் பிறக்கும் போதே கிறிஸ்தவர் என நினைக்கிறேன். சுமந்திரன் நிச்சயமாக பிறக்கும் போதே கிறிஸ்தவர். ஆகவே அவர்கள் மதம் மாறியோர் இல்லை. அப்படி மாறி இருந்தாலும் அவர்களுடைய அரசியலிக்கும் இதற்கும் தொடர்பில்லை. 4. இருவரும் கிறிஸ்தவர் என்றால் என்ன? பிள்ளையானும், கருணாவும் இந்துக்கள். அதனால் அவர்களுக்கும் மதத்துக்கும் முடிச்சு போட்டோமா? அவர்கள் அரசியலை விமர்சியுங்கள். மத நம்பிக்கையை அல்ல. 5. நீங்கள் கடவுள் நம்பிக்கை அற்றவராக இருக்கலாம் - ஆனால் சாணாக்கியனை வீழ்த்த, அதன் மூலம் உங்கள் அண்ணாவின் அரசியலை தூக்க மதத்தை பாவிக்கிறீர்கள். வெளி நாடு வந்த நாளில் இருந்து அனுப்பின ஒரே விசயம், கடிதம், கடுதாசி, லெட்டர். இப்ப…சும்மா கதைக்கிறியள் என்ன🤣 -
தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்?
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
இல்லை. மேலே ஒருவர் எழுதியுள்ளார். தனது பெயரும் இந்து பெயர் இல்லை, தனது மதமும் சைவம் இல்லை என்பதால் முதலில் எழுதாமல் இருந்ததாக. இத்தனைக்கும் அவர் நெஞ்சுரம் மிக்க ஒருவர். ஓரிருவரின் மதவாதத்தால் மொத்த இந்துக்களையும் வெறுக்ககூடியவரும் அல்ல. அவரே இப்படி யோசிக்கும் அளவுக்கு இருக்கும் போது, சாதாரணமாக உணர்சிவசப்படுவோர்? சிலர் அல்ல. மிகச்சிலர். ஆனால்… ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விடம் போதும். இது நிச்சயமாக எனக்கு இல்லை. அல்லது 2013 இல் நான் எழுதியதை நீங்கள் வாசிக்கவில்லை. பொதுவான தமிழரின் மனநிலையை வைத்துத்தான் கருவும் இதை அணுகியுள்ளார் (அது தவறு). -
உக்ரைனில் இரண்டு பிரித்தானிய பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக தகவல்!
goshan_che replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
உடான்ஸ் சாமிக்கு ஜெனரேட்டர் வாங்க😎. பிகு அடிபடத்தான் -
நன்றி
-
உக்ரைனில் இரண்டு பிரித்தானிய பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக தகவல்!
goshan_che replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
இந்த இரெண்டு பிரித்தானியர்களும், இறந்த நிலையில் அவர்கள் கடவுசீட்டுடன் கண்டுபிடிக்கபட்டதாக அறியக்கிடைத்துள்ளதாம். -
உக்ரைனில் இரண்டு பிரித்தானிய பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக தகவல்!
goshan_che replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
உவங்கள் காணாம போனது பரவாயில்லை, என்ர நாலு ஜெனரேற்றர் வாங்க கொடுத்த காசையும் கொண்டு போட்டாங்கள் பாவியள்🤣 -
தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்?
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
இதில் பலது ஜஸ்ரின்னுக்கானது என நினைக்கிறேன். ஆனால் என்னையும் சேர்த்து எழுதியதால் எழுதுகிறேன் (இனிமேல் ஒரு @ போட்டுவிடுங்கள் வசதியாய் இருக்கும்). என்னை பொறுத்தவரை நான் என் கண்ணில் பட்ட போதெல்லாம் தமிழரிடையே மதவாதம், சாதிவாதம், பிரதேசவாதம் எங்கு எழுந்தாலும் (யாழில் மட்டும் அல்ல) அதன் தலையில் அருகில் இருக்கும் எதையாவது தூக்கி ஒரு போடு போட்டே வந்துள்ளேன். அது பண்டத்தரிப்பு பாதிரியார், மன்னார் வளைவு, புத்தூர் மயானம் எதுவானாலும். அதே போல் வர்க, மத, சாதிய, பிரதேச அடையாளங்களை முன்னிறுத்தி தமது தவறுகளை மறைக்கப்பார்க்கும் போதும் அதை எதிர்த்துள்ளேன் (கருணா, அருண்). என்னை பொறுத்தவரை நேரடியாக இந்த வாதங்களை பேசுவோர், இந்த வாதங்களை தமது தவறை மறைக்க ஒரு ஊன்றுகோலாக பாவிப்போர் இருவருமே, கெட்ட சயனைடுகளே. உதாரணமாக சுமந்திரன் அகற்றப்பட வேண்டும் - என்பதை ஏற்கிறேன் ஆனால் அதற்கான உத்தியாக அவரின் மதத்தை பயன்படுத்துவதை முற்றிலும் எதிர்கிறேன். தனியே என் தனிப்பட்ட தார்மீக காரணங்கள் மட்டும் அல்ல. இது ஒரு விசம். சுமந்திரன் நாளை போய்விடலாம், அல்லது நாளை மறுநாள் - ஆனால் இந்த விசப்பிரிவினையை நாம் மக்கள் மத்தியில் ஊண்டி விட்டால் அது காலத்துக்கும் நம் இனத்தை நாசம் செய்யும். முஸ்லிம்கள் தனி அலகாக உணர்ந்தபோது நாம் ஒருங்கிணைந்த, இப்போ உள்ள எல்லைகள் சேர் வட-கிழக்கு என்பதை கைவிட வேண்டி வந்தது. தமிழ் கிறிஸ்தவர்களும் அப்படி உணர்ந்தால்- நாம் ஒவ்வொரு குறிச்சிக்கும்தான் அதிகாரபரவலை கேட்க வேண்டி வரும். இங்கே யாழில் மாவீரர்களை அவமதித்தார் என்பது இலகுவாக எறியப்படும் ஒரு வசவு. என்னை பொறுத்தவரை ஒவ்வொருமுறை வினையாக, அல்லது எதிர்வினையாக இந்த வாத கருத்துக்களை நாம் எழுதும்போதும்…. இதற்கு மேல் இல்லை என்ற அளவில் அவர்களை அவமரியாதை செய்கிறோம். -
முற்றிலும் உடன்படுகிறேன்.