Everything posted by goshan_che
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
நிச்சயமாக நீங்கள் புத்திசாலிதனமாக நடப்பதை புரிந்து கொள்கிறேன். உங்களுடனும் “கருத்தாடல்” செய்தே தீர வேண்டும் என்ற தீரா ஆசை ஏதும் எனக்கும் இல்லை என்பதையும் பணிவன்புடன் அறியத்தருகிறேன். ஆனால்…… நான் உட்பட சிலர், செய்தி திரியில், கருத்து எழுதியதை….ஏதோ வாழ்த்து திரியில் கருத்து எழுதியது போல் திரித்து எழுதி…எமக்கு நாகரீக வகுப்பு எடுக்க வெளிகிட்டால் அதுக்கு பதில் வந்தே தீரும். உங்கள் தாத்தாவிடமோ, பாட்டியிடமோ, முப்பாட்டனுடனோ நீங்கள் - என்னை சுட்டி பொது வெளியில் எழுதினால், அதை கடந்து போவதா இல்லையா என்பதை நான் மட்டுமே தீர்மானிப்பேன். புரிய முயல்வீர்கள் என நம்புகிறேன்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
நிச்சயம் அறிவு ஜீவி விளையாட்டுக்கு உங்களுடன் நான் வரவில்லை. செய்தி திரியில் வாழ்த்து சொன்னால் எனக்கு அது மேட்டர் இல்லை. ஆனால் நான் விதிப்படி நடந்து கொண்டுள்ளேன், ஆகவே நான் நடந்து கொண்டமை பற்றி கேள்வி கேட்டால் அதுக்கு பதில் கொடுப்பேன்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
இது செய்தி. இதை விஜை வந்து யாழ் களத்தில் ஒரு வாழ்த்து திரியாக திறக்கவில்லை. செய்தி திரியில் கருத்து சொல்லாமல், வாழ்த்து சொல்லி விட்டு, கருத்து சொன்னவன் மீது பிராது வேறு🤣. # புரிதலாவது புரியாணியாவது.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
தாத்தாவுக்கு மறதி வரலாம் வயது அப்படி? பேரனுக்குமா? இது வாழிய, வாழிய பகுதி அல்ல. தமிழக செய்திகள் பகுதி. இதில் விஜை என்ற அரசியல்வாதி சீமான் என்ற அரசியல்வாதிக்கு வாழ்த்துச்சொன்ன செய்தியும் அதை பற்றிய உரையாடலும் வழமை போல் இடம்பெறுகிறது. ஒரு கருத்து களத்தில் எந்த பகுதியில் நிற்கிறோம் என்ற நிதானம் கூட இல்லை, இதில் மற்றவனுக்கு நாகரீகம் பற்றி வகுப்பெடுப்பும், தாத்தா-பேரன் பரஸ்பர முதுகு சொறிதலும் வேறு🤣.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
திமுக, அதிமுகவின் கோரமுகம். இதில் வீரமணியையும் சேர்த்துக்கொள்ளலாம். எல்லோர் வாயையும் கட்டிய தலைமை பூசாரி கருணாநிதி. அதன் பிந்தான் எவரையும் நம்பி பலனில்லை என்பது எமக்கு உறைத்தது. இதில் பிரித்தானியாவும், பிரான்சும் திமுக அதிமுகவை விட மோசமாக நடந்து கொண்டன. ஆனால் அவற்றை நாம் திராவிட இயக்கங்களை எதிர்ப்பது போல் எதிர்ப்பதில்லை. ஏன் என்றால் அது நாம் இருக்கும் மரத்தின் கொப்பு. தமிழ் நாடு? அப்படியில்லை. ஆகவே அங்கே என்ன விசத்தையும் வளர்த்து விட நாம் ரெடி. ஆனால் நீங்கள் சொல்லும் ஒரு விடயம் சரி, 2009 இன் பிந்தான் தமிழ் தேசியம் Vs திராவிடம் என்ற முரண் வலிந்து உருவாக்கப்பட்டது. ஆகவே மேலே புலவர் செய்தது 2009 க்கு முன்னான வரலாற்றை தன் இஸ்டபடி எழுதும் முயற்சி என்பது சரியாகிறது.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
கொள்கை அளவில்??? நீங்களா இப்படி எழுதுவது…. தமிழ் நாட்டை விட சாதி மறுப்பை கடுமையாக நடைமுறைபடுத்தினார்கள். யாராவது வறணி ஆட்கள் இருந்தால் கேட்டுப்பாருங்கள்🤣 இது முழுக்க முழுக்க இப்போ நீங்கள் எடுத்துள்ள அரசியல் நிலைப்பாட்டுக்காக வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி. புலிகள், ஈழத்தில் தமிழ் தேசியம். தமிழகத்தில் திராவிடம். அவரவர் நிலத்தில் அந்தந்த கொள்கை என உணர்ந்து அந்த வரையறைக்குள்தான் நிண்டார்கள். தலைவர் இருக்கும் வரை சீமான் திராவிடத்தை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏன் என்றால் அப்படி செய்ய அவர் அனுமதிக்கப்படவில்லை.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
இதை ஏற்கலாம். இதை பிழை என்றும் சொல்ல முடியாதே? அவர்கள் தாம் வரித்து கொண்ட முற்போக்கு கொள்கைகள் இன்னொரு தமிழ் மண்ணிலும் நிலை பெற வேண்டும் என எண்ணினர். அதிலும் பல குப்பைகளை தவிர்த்து விட்டு தலைவர் மீது தனி அக்கறை காட்டினர். ஏன்? பலர் தத்துவம் பேசினாலும் செயலில் முற்போக்காளர் தலைவர் என்பதை கண்டு கொண்டதால். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. திக, புலிகள் இடையான உறவு யூகே லேபர், அமெரிக்கன் டெமோகிரட்ஸ், கன்சேவேடிவ்-ரிபப்ளிகன் உறவு போல, ஒத்த கொள்கை உடைய அமைப்புகளின் பரஸ்பர நட்பு உதவி என்ற எல்லையை தாண்டவில்லை. அப்படி தாண்ட கூடாது, அவரவர் விடயத்தில் மற்றவர் தலையிட கூடாது என்பதில் திகவும், தலைவரும் உறுதியாகவே இருந்தனர்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
டிஸ்கி டிஸ்கி போடலாமா என யோசித்தேன். பொறகு கோஷான் அந்த சாதியா, இந்த சாதியா என பல பி எச் டி ஆய்வு கேள்விகளை சிலர் மனதில் அது ஏற்படுத்தி விடும் என்பதால் தவிர்கிறேன்🤣.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
எவ்வளவு பெரிய லிஸ்ட்டு.. வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றி சொன்ன சீமான்! அன்புத் தம்பி விஜயை மறக்கலையே! Rajkumar RPublished: Saturday, November 9, 2024, 19:25 [IST] சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் நேற்று பிறந்தநாள் கொண்டாடினார். இதை அடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் சீமான் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் அவருக்கும், பிற தலைவர்களுக்கும் சீமான் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர்," நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் 'சகோதரர்' சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியிருந்தார். சீமான் பிறந்தநாள் அன்று விஜய் வாழ்த்து தெரிவித்திருப்பது அரசியல் ஆரோக்கியம் என்று பார்க்கப்படுகிறது. விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்த சீமானுக்கு அவர் வாழ்த்து தெரிவித்திருப்பதை நாம் தமிழர் கட்சியினர் கூட பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார் சீமான். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில்,"என்னுடைய பிறந்த நாளில் வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்த, முன்னாள் முதல்வர் பெருமதிப்பிற்குரிய ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும்,முன்னாள் மாநில ஆளுநரும், பாஜக-தமிழ்நாடு முன்னாள் தலைவருமான அம்மையார் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய ஐயா மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தமிழ்த்தேசியப் பேராசான் பெருமதிப்பிற்குரிய பெருந்தகை எங்கள் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கும், முத்தமிழ்ப்பேரறிஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா வைரமுத்து அவர்களுக்கும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தரும், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனருமான பெருமதிப்பிற்குரிய ஐயா பாரிவேந்தர் அவர்களுக்கும், மனித நேய அறக்கட்டளை நிறுவனர் மதிப்பிற்குரிய ஐயா சைதை துரைசாமி அவர்களுக்கும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் பேரன்பிற்கினிய அண்ணன் கமல்ஹாசன் அவர்களுக்கும், புரட்சித்தமிழன் பேரன்பிற்கினிய அண்ணன் சத்தியராஜ் அவர்களுக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஐயா டி.டி.வி.தினகரன்அவர்களுக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அன்பு அண்ணன் முனைவர் பெ.ஜான்பாண்டியன் அவர்களுக்கும், பாஜகவின் மாநிலத் தலைவர் அன்புத்தம்பி கு.அண்ணாமலை அவர்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கும், பாஜகவின் மகளிர் அணி தேசியச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்புச்சகோதரி வானதி சீனிவாசன் அவர்களுக்கும், அன்பு அண்ணன் நடிகர் இராமராஜன் அவர்களுக்கும், அண்ணன் இயக்குநர் விக்ரமன் அவர்களுக்கும், அன்புத்தம்பி இயக்குநர் சேரன் அவர்களுக்கும், முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் அன்பிற்கினிய இளவல் சேது.கருணாஸ் அவர்களுக்கும், மற்றும் அரசியல், திரைத்துறையைச் சேர்ந்த ஆளுமைகளுக்கும், தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களுக்கும், உலகம் முழுவதுமுள்ள தாய்த்தமிழ் உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும், அன்பிற்கினிய தம்பி-தங்கைகளுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்வதில் உளம் மகிழ்கிறேன்." என கூறியுள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilar-katchi-leader-seeman-celebrates-birthday-thanks-vijay-and-others-for-wishes-653199.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards
-
சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் - மறவன்புலவு சச்சிதானந்தன்
நான் களத்துக்கு திரும்பிய அன்று, ஒரு பெருந்தகை, நான் குழுவாதம் இல்லாமல், தனிமனித தாக்குதல்களை தவிர்த்து கருத்தாடுவேன் என எதிர்பார்ப்பதாக இன்னொரு உறவிடம் சொல்லி இருந்தார். கண்டா வரச்சொல்லுங்க. பிறைமறி ஸ்கூல் பிள்ளையள் போல எங்காவது குருப்பா பிரிஞ்சு மாபிள் அடிச்சு கொண்டு நிற்கிறாரோ தெரியவில்லை🤣.
-
சூடும்-ருசியும்: மட்டக்களப்பில் ‘போனஸ் ‘ மும்முனைப் போட்டி….?
இதை சொன்னதுக்கு அரியம் அங்கிளும் கொடோன்லயே இருந்திருக்கலாம்.
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
இல்லை அவர்களும் இப்படியான வேலைகளை எடுத்து கொடுத்து…பின்னர் வந்து அதை காட்டி வாக்கும் கேட்டுள்ளார்கள். யுத்த முடிவில் ஆசிய வங்கி போன்றவை மத்திய அரசின் மூலம் செய்த சிலதுக்கு பிள்ளையான் உரிமை கோருவதை தவிர….நீங்கள் முந்தள்ளிய பிள்ளையான், கருணா, அமல் எந்த வகையிலும் மட்டு-அம்பாறைக்கு ஒரு ஆணியையும் புடுங்கவில்லை. திருமலையை திரும்பியும் பார்க்கவில்லை. இவர்களில் அமல் ஒரு போதும் பிரதேசவாததை கையில் எடுக்கவில்லை. ஏனைய அரசியல்வாதிகள் போல அவரும் சுயநலமி. புதிதாக முயற்சித்தேன், அவரை நம்பி ஏமாந்தேன் என நீங்கள் சொல்வது ஏற்புடையது. ஆனால் கருணா, பிள்ளையான் அப்படி அல்ல. அவர்களும் நீங்களும், கூட்டமைப்பின் கையாலாகத, சுயநல, ப்ரொக்சி அரசியலை - யாழ்ப்பாணத்தவர் அல்லது யாழ் அரசியல்வாதிகள் கிழக்கை வஞ்சிக்கிறார்கள் என்று பொய் பிரச்சாரம் செய்தீர்கள். நீங்கள் யாழ் அரசியல்வாதிகள் என்றீர்கள், ஆனால் உங்கள் ஹீரோக்கள் இருவரும் நேரடியாக யாழ் மக்கள் மீதே பழியை போட்டார்கள். இது உங்களுக்கு ஏனோ உறுத்தவில்லை. அவர்கள் கிழக்கு மக்களை போலவே வடக்கு மக்களையும் வஞ்சித்தனர். ஆனால் அந்த உண்மையை நீங்கள் கிழக்கு மக்களிடம் கூறவில்லை. உங்களுக்கும் சங்கிஆனத்தத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அவர் மத அடிப்படையில், நீங்கள் பிரதேச அடிப்படையில். இந்த பிரதேசவாத நஞ்சை விதைப்பது இலகு, ஆனால் நிலம் நஞ்சானபின் அதை அகற்றுவது கடினம். கிழக்கில் மட்டும் அல்ல. வடக்கிலும்தான். தமிழ் அரசியலை, யாழ்பாணம், மட்டகளப்பு தேர்தல் தொகுதிக்கான அரசியல் என சுருக்கும் பேரினவாத சதி கிட்டதட்ட வென்று விட்டது, இதில் சுமந்திரன் வகையறாக்கள் போலவே, இப்போ வந்து நம்பி கெட்டோம் என கையை பிசையும் நீங்களும் பங்காளிகளே. இப்போ என் பி பி என்கிறீர்கள். அப்போ உங்கள் அரசியல் ஒரு முழுவட்டத்தை அடைந்து விட்டது. தலைவரில் விசுவாசி என தொடங்கி, பிரதேசவாத பஸ்சை பிடித்து, ஜேவிபியின் இனப்பிரச்சனையா கிலோ என்ன விலை? என்ற அரசியலுக்கு வந்து விட்டீர்கள். உங்களை போல பலரும் இதே இடத்துக்கு வந்துள்ளார்கள்தான். இருக்கும் ஒற்றுமையை ஒவ்வொரு பக்கத்தால் இழுத்து சிதறடித்த பின் இதுவே ஒரே வழி என்பதை உணர்கிறேன். பிகு வேறு திரிகளில் சந்திப்போம்.
-
சூடும்-ருசியும்: மட்டக்களப்பில் ‘போனஸ் ‘ மும்முனைப் போட்டி….?
இதுக்கு அழகு குணசீலன் கொடோனிலேயே இருந்திருக்கலாம். முடிவு தேர்தல் நாள் அன்று தெரியும் - இதை எல்லாரும் சொல்லமுடியும்🤣. தொடர்சியாக தான் ஆதரித்த கிழக்கு மைய அரசியல், ஒரு பலனையும் தராத நிலையில், பிள்ளையான் ஜெயிலில் இருந்து ஜெயித்தர் என துதிபாடும், நடுநிலை இல்லாமல் தமிழ் தேசிய கட்சிகளை மட்டும் விமர்சிக்கும் இது ஒரு ஆய்வு கட்டுரை அல்ல, பிள்ளையானுக்கான பிரசாரம்.
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
இதை நீங்கள் முன் வைத்த போது கருணா, பிள்ளையானை ஆதரிப்பது போல் இல்லை இது என நானும் எழுதினேன். ஆனால் கடைசியில் மட்டகளப்பு கண்ட அபிவிருத்தி என்ன? போஸ்டல் டிபார்ட்மெண்டில் கொஞ்ச பேருக்கு பியூன் வேலை, அமலின் மகனுக்கு ரோயல் கல்லூரி அனுமதி. அமலுக்கு நல்ல வெளிநாட்டு வாகனம். சொல்லி கொள்ளும் படி வேறேதும் உண்டா? ஆங்கிலத்தில் humility என்பார்கள். தமிழில் சுய அடக்கம் எனலாம். It’s time you have some humility. தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரித்து அது தவறாக போன போது - அந்த நிலை எடுத்தவர்கள் மீது என்ன குதி குதித்தீர்கள்? ப்ரொக்சிக்கு ஆதரவு கொடுத்த தேசிக்காய்கள் என்றீர்கள். அப்போ இப்போ நீங்கள் யார்? தெரிந்த கள்ளர்களை ஆதரித்த - ஜிப்சிக்கி ஆதரவு கொடுத்த பாவக்காயா, கோவக்காயா இல்லை தொங்கி கொண்டிருக்கும் முந்திரியா🤣. திரி எங்கோ (சாதிய வசவு) தொடங்கி, எங்கோ வந்து விட்டது.
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
ஆனால் ஒரே தேர்தலில் இரெண்டு இடத்திலும் வாக்கு போட்டால் மாமியார் வீட்டுக்குத்தான் போகணும். ஆகவே கருணாவுக்கு நீங்கள் போட்ட தேர்தலில் பிள்ளையானுக்கு போட்டிருக்க முடியாது. நான் கேட்டது கல்முனை தரமுயர்த்தல், காணிகள் அபகரிக்கப்பட்டது பற்றி என்ன செய்தார் என. எதுவுமில்லை. அலிசாகிர் மெளலானாவால் வழிநடத்தப்படும், நடத்தப்பட்ட, கருணா முஸ்லிம்களுக்கு எதிராக தமிழருக்கு இதுவரை ஒரு ஒழுங்கான விடயமும் செய்ததில்லை. சும்மா வாய்சவாடல் விடுவார்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
நீண்ட பதிலுக்கு நன்றி. நீங்கள் சொல்லும் இந்த கருத்து பல வகைகளில் நடக்க கூடியதாகவே தெரிகிறது. எப்படி இந்துதுவா அரசியலை ஆர் எஸ் எஸ் திட்டமிட்டு வழி நடத்தியதோ, நடத்துகிறதோ அது போல் திக வும் செய்கிறது என்கிறீர்கள். தி க இப்படி செய்யும் ஓக்கே ஏற்கிறேன். ஆனால் திமுக? சித்தாந்தம் வாழ வேண்டும் என்பதற்காக விஜையை வளரவிடுமா?
-
கிழக்கை காப்பாற்ற வேண்டுமாயின் வடக்கு மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும் - த. சுரேஸ்
ஓம். 4 பகுதிக்கும் சம வாய்ப்பு என்றே நினைக்கிறேன். உண்மையில் 5 வது சீட்டை எடுக்க அனுர அணிக்கு வாய்ப்பு கூட, ஏன் என்டால் வியாழனின் வாக்குகள், முஸ்லிம் வாக்குகள், முன்னைய தமிழ் தேசிய வாக்குகள், பிள்ளையானின் வாக்குகள் எல்லாம் சேரலாம்ழ் ஓம்.
-
கிழக்கை காப்பாற்ற வேண்டுமாயின் வடக்கு மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும் - த. சுரேஸ்
சகல தமிழ் தேசிய கட்சிகளும் சேர்ந்து கேட்டால் அம்பாறை திருமலையில் தலா 1 எடுக்க வாய்புள்ளது. அம்பாறையில் இந்த வாய்ப்பு கூட. ஆனால் இந்த முறை தேசிய கட்சிகள் பிரிந்து கேட்பதால், கூடவே பில்லையான் கட்சியிம் கேட்பதால் - வாய்ப்பே இல்லை என நினைக்கிறேன். திருமலையில் புலிகள் இருந்த போது மட்டுமே, மக்கள் ஓரணியில் திரண்டு 2 சீட்டை கடைசியாக எடுத்தனர் என நினைக்கிறேன். பிள்ளையான், கருணா வண்டவாளம் திருமலையில் நன்கு உணரபட்டுள்ளது ஆகவே அங்கு அவர்களுக்கு பெரிய செல்வாக்கு இல்லை. வீடு, சைக்கிள், சங்கு திருமலையில் வீட்டின் கீழ் கேட்கிறார்கள் என நினைக்கிறேன். இதனால் திருமலையில் 2 சீட் கிடைத்கால் அது பெரிய சந்தோசமாக இருக்கும்.
-
கிழக்கை காப்பாற்ற வேண்டுமாயின் வடக்கு மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும் - த. சுரேஸ்
ஓம். பிள்ளையான் வெல்வது உறுதி என நினைக்கிறேன். வியாழனுக்கு சனி மாற்றம் - வேட்பு மனுவில் வேலையை காட்டியதால் - அவர் இல்லை. இந்த முறை ஹிஸ்புல்லா 16 வருடங்களின் பின் முஸ்லிம் காங்கிரசின் மரச் சின்னத்தில் கேட்கிறார். காத்தான்குடி வாக்குகள் லம்பாக விழும் என நினைக்கிறேன். அமீர் அலியிம் கேட்கிறார் ஓட்டமாவடி பக்க வாக்குகள் இவருக்கு விழும். இருவரும் ஒரே அணியில் கேட்டிருந்தால் கிட்டதட்ட 2 பேரும் வருவது உறுதியாகி இருக்கும். ஆனால் பிரிந்து கேட்பதால் 1 மட்டுமே உறுதி. இருக்கும் 5 சீட்டில், பிள்ளையான் 1, தமிழரசு 2, முஸ்லிம் வேட்பாளர் 1 - எஞ்சும் 1 சீட்டையே இப்போ கணிக்க கஸ்டமாக இருக்கிறது, ஆனால் இது முஸ்லிம் ஒருவராக அமையவே வாய்ப்புக்கூட. தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றாக கேட்டிருப்பின் இந்த கடைசி சீட்டை அந்த அணி எடுக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருந்திருக்கும். வியாழேந்திரனுக்கு போன வாக்குகள் இந்த முறை எங்கே போகும் என யோசித்தால் - இவை தமிழ் வாக்குகள் எனவே முஸ்லிம் வேட்பாளருக்கு போகாது. அதே சமயம் அவர் கட்சி தாவிய பின் அவருக்கு கிடைத்த வாக்குகள். எனவே தமிழ் தேசிய கட்சிகளில் நாட்டம் இல்லாதர்களாக இருக்க வாய்ப்பு அதிகம். எனவே இது பிள்ளையானுக்கும் போக கூடும். சுருக்கமாக 5 வது சீட், தமிழரசு, முஸ்லிம், பிள்ளையான் யாரிடமும் போக கூடும் என நினைக்கிறேன்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
அரசியல் எண்டு வந்தா இனி தினம் ஒரு நினைவு கூரல் மாதம் ஒரு அறிக்கை என இருந்தாதானே மக்கள் நினைவில் வைப்பார்கள்🤣. இதே போல பெரியாருக்கு நேரில் போய் மாலை, சாதி தலைவர் முத்து இராமலிங்கத்துக்கு வீட்டில் வைத்து படத்துக்கு அஞ்சலி செலுத்தியமையும் ஒரு செய்தியை சொல்வதாகவே படுகிறது. இந்த நகர்வுகளின் மூலம் யார் என தெரியவில்லை. விஜை நாம் எவரும் எதிர்பார்க்கா வண்ணம் இயற்கையிலே அரசியல் நுணுக்கம் தெரிந்தவரா அல்லது இப்படி ஒரு ஆள் அல்லது டீம் அவரிடம் இருக்கிறதா என்பது புரியவில்லை. நீங்கள், @வாலி, @பகிடி போல தமிழ் நாட்டு அரசியலை சோசல் மீடியா அலப்பறைகளை தாண்டி அவதானிப்பவர் என்ன நினைக்கிறீர்கள் என அறிய ஆவல். @பாலபத்ர ஓணாண்டிக்கு விஜையினை சூழ இருந்து அட்வைஸ் பண்ணும் ஆட்கள் யார் என்ற முழு விபரமும் தெரியுமாம். நேரம் இன்மையால் இன்னும் எழுதவில்லை. எதுக்கும் ஒரு ரிமைட்டர போட்டு வைப்பம்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
பாவம் 200 ரூபா ஊபிஸ் இலங்கை அரசு நியமித்த பட்டதாரி அபிவிருத்தி அதிகாரிகள் போல், வேலைக்கு போவது மட்டும்தான் வேலை இப்போ அவர்களுக்கு🤣. நம்ம தலைவர் ரேஞ்சே வேற, ஒருகாதை குரு மூர்த்தி கடிக்க, ஒரு காதை லதா கடிக்க, அடிக்கடி வைரமுத்து போனில் வந்து உருட்ட, சொல்புத்தியும் இல்லாமல், சுயபுத்தியும் இல்லாமல் - கடைசியில் “ஒரு கணம் தலை சுத்திடிச்சு” என உண்மையை ஒத்து கொண்டார் 🤣.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
அன்னாரின் பிறந்த தின வாழ்த்துக்களை கூட, விஜை வாழ்த்துச்சொன்னார் என்ற செய்தியின் கீழ்த்தான் அவரின் ரசிகர்கள் பகிர்ந்து மகிழ்கிறார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயம்.
-
தமிழ் மக்கள் பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டும்- இரா.சாணக்கியன்
அனுரவோடு தமிழரசு ஐக்கியம் ஆக முதல் சமிக்ஞை கொடுக்கிறார் என நினைக்கிறேன். பரவாயில்லை அப்படியாச்சும் எதையாவது செய்து துலையுங்கோ. ஆனால் வீடு+சைக்கிள்+ சங்கு அம்பாறையில் ஒன்றாக நின்றிருந்தால் பேரம் பேசு வலு இன்னும் கூடி இருக்கும் அல்லவா?
-
கிழக்கை காப்பாற்ற வேண்டுமாயின் வடக்கு மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும் - த. சுரேஸ்
கிழக்கில் ஒரே ஒரு தமிழ் தேசிய கட்சி மட்டுமே போட்டியிடும் என்ற நிலையை உருவாக்க முனையாத உங்கள் தலைமையை முதலில் கேளுங்கள் தம்பி. கிழக்கில் எல்லாரும் சேர்ந்து கேட்டால் திருமலை 1, மட்1, அம்பாறை 1 = 3 தமிழர் சீட் எடுக்கலாம்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
இல்லை இதே போல் யாழில் ரஜனியையும் “சனம்” கிழித்து தொங்கத்தான் விட்டது. அவர்கள் அல்ல அவற்றை வாசித்தும் வாசிக்காதது போல் நடிக்கும் ஓரிருவருக்குத்தான் நடுவில கொஞ்சம் பக்கத்தை காணோம். #மெடுலா ஓப்பலங்கேட்டா # என்னது முட்டை ஆம்லெட்டா🤣