Everything posted by goshan_che
-
ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா
ஆடிக்கொருக்கா அமாவாசைக்கு ஒருக்கா கோசானோடு தனக எண்டே யாழ்களம் வாற கள்ள ஐடிக்கெல்லாம் இந்த ஆதாரமே ஓவர்…. கவ்வி கொண்டு ஓடவும்🤣
-
லண்டனில் வாள்வெட்டு தாக்குதல் - ஐவர் காயம்
போட்டுத்தள்ளுவது ஓகே, ஒரு @ போட்டு போட்டுதள்ளுங்கப்பு🤣
-
ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா
அம்புலி மாமாதான் ஆதாரம்👇 https://www.india.com/viral/maharaja-of-alwar-once-as-a-revenge-used-rolls-royce-to-collect-garbage-from-the-streets-2944690/amp/ வாசித்து, கிரகிக்க முடியுமாய் இருக்கும் என நம்புகிறேன். பிகு 6 கார், 10 அல்ல.
-
இனிமேல் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான நகர வீதி சமிஞ்சைகளுக்கருகில் காத்திருக்கும் யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும்
அதையெல்லாம் வாங்குவோர், கொடுப்போர் “நேக்கா” டீல் பண்ணுவார்கள்.
-
ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா
அப்படியில்லை, லண்டனில் கடைக்கு போன போது தன்னை அவமானப்படுத்தினர் என்பதால், பத்து ரோல்ஸ்ரொய்ஸ் காரை வாங்கி இந்தியாவில் ஊர் கூட்டும் குப்பை லாரியாக பாவித்த மஹாராஜக்கள் எல்லாம் இருந்திருக்கிறார்கள். இந்த நாடுகளில் எப்போதும் வளம், செல்வம் இருந்தது ஆனால் அது சிலரிடம் குவிந்து இருந்தது. மேற்கில் இது ஒப்பீட்டளவில் பரலவாக்கப்பட்டுள்ளது. பிரமாண்டம் என பார்த்தால்…. விமானம் தாங்கி கப்பல்கள் சீனா, ரஸ்யாவிடம் எத்தனை அமெரிக்கவிடம் எத்தனை என பார்த்தால் வேறுபாடு புரியும்.
-
வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
பிக் ப்ரோ, வடையை விடுங்கோ…ஸ்கோரை சொல்லுங்கோ…. நீங்களும் ஒரு ஊர் சுற்றும் ஆர்வம் உள்ளவர் என நினைக்கிறேன். ———- @nilmini அக்கா, 1982 ரோயல் தமிழ் பெடியள் (!!!) எல்லாரும் இலங்கையில் ரியூனியன் வைத்த வீடியோ வாட்சப்பில் பார்த்தேன். வரகுணன், சுமந்திரன், சஞ்சய் இராஜரட்ணம் இன்னும் உங்களுக்கு தெரிந்த பலர் கலந்து கொண்டுள்ளனர்.
-
இனிமேல் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான நகர வீதி சமிஞ்சைகளுக்கருகில் காத்திருக்கும் யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும்
அரசுக்கா….கோர்ட்டுக்கு இழு பட்டு 1000 கட்டபோறியா, பையில அதே 1000 ரூபாயை போடுங்க என்பதே அவர்கள் டீல்🤣
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இல்லை மன் மோகன் சிங் அப்படி சொல்லவில்லை. 1. மக்களின் சொத்துக்கள் என சொல்லவில்லை. நாட்டின் வளங்கள் என்றே சொன்னார். ஆகவே மோடி சொல்வது போல் தனியாரின் சொத்தை எடுத்து பிரிக்கும் கதைக்கே இடமில்லை. 2. முஸ்லிம்கள், பட்டியல் இன மக்களை குறித்து சொல்லி விட்டு. அதை தொடர்ந்து இதுவரை வளப்பங்கீட்டில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் கூட்டம், இனி வளபங்கீட்டில் முன்னுரிமை பெறும் எனும் தொனியில் சொன்னார். இதை மோடி விஷமதனமாக வேணும் என்றே misinterpret பண்ணி பேசியுள்ளார். https://www.hindustantimes.com/india-news/factcheck-did-manmohan-singh-advocate-first-right-to-resources-for-muslims-as-claimed-by-pm-modi-101713787488653-amp.html 👆🏼fact உ, check டு
-
இனிமேல் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான நகர வீதி சமிஞ்சைகளுக்கருகில் காத்திருக்கும் யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும்
அருமையான ஜோக்🤣. தனியே செய்தால் கொலை, ஊரே திரண்டு செய்தால் கலவரம் - அதே லொஜிக்தான் போலும்.
-
தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா
தமிழ் மக்களிற்கு மைத்திரி வெற்றிக்கு பின்னான 5 ஆண்டுகால கொஞ்சம் ஆசுவாசமாக இருக்க முடிந்தது என்பது என்னமோ உண்மைதான். ஆனால் எமது அரசியல் அபிலாசைகள் ஒரு அடிதன்னும் முன் நகர்ந்தனவா? அந்த வகையில் இலங்கையில் என்ன செய்தாலும் தமிழ் வாக்குகள் செல்லாகாசுகளாயா இருந்துள்ளன.
-
தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா
நீங்கள் சொல்வது சரியே👍
-
தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா
நீங்கள் சொல்வதில் அதிகம் பிழை காண முடியாது. ஆனால் தமிழர்கள் ஒரே அணியாக திரண்டு மைத்திரியை வெல்ல வைத்த பின்னும் - அவர்கள் எதிர் பார்த்த எதுவும் நடக்கவில்லை, வாக்குகள் செல்லாகாசாகவே ஆனதும் உண்மைதானே?
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா
புலம்பெயர் வியாபாரியின் முகவர் என சொல்லி கொண்ட ஒருவர், வெளிப்படையாக ரணில் வெல்ல வேண்டும், அதற்கு பொது தமிழ் வேட்பாளரை போட வேண்டும் என சொல்லியதாக நிலாந்தன் சொல்கிறார். இது வழமையான வாக்கை பிரிக்கும் கணக்கு என நினைக்கிறேன். நாட்டை மீட்க, ரணில்தான் பொருத்தமானவர் என positive காரணங்களுக்காக ரணிலுக்கு போடும் தமிழ் வாக்காளர் எப்படியும் ரணிலுக்குத்தான் போடுவர். ஆகவே ரணிலுக்கு வர கூடிய தமிழர் வாக்கை, பொது தமிழ் வேட்பாளர் குறைக்க வாய்ப்பு குறைவு. ஆனால் ரணில் எதிர் மனோநிலையில் இருக்கும் தமிழரை அனுர, சஜித் பக்கம் போக விடாமல் பொ.த.வே பக்கம் திருப்பினால் - ரணிலின் வாய்ப்பு கூடும். குறிப்பாக முடிவுகள் கிட்ட, கிட்டவாக இருந்தால்.
-
வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
செய்தியின் ஆதி மூலம்👇 https://ceoworld.biz/2024/04/15/worlds-best-countries-to-visit-in-your-lifetime-2024/ அது சரி அவா, அவா score ஐ சொல்லுங்கோ…யார் உலகம் சுற்றும் வாலிபன்/வயோதிபன் என்று பார்க்கலாம்😎. எனக்கு 1. முதல் ஐந்தில் -5/5 2. முதல் பத்தில் - 8/10 3. முதல் பதினைந்தில் - 11/15 —————- Rank Country Score 1 Thailand 72.15 2 Greece 67.22 3 Indonesia 65.15 4 Portugal 64.32 5 Sri Lanka 60.53 6 South Africa 59.76 7 Peru 59.76 8 Italy 57.77 9 India 57.65 10 United Arab Emirates 57.38 11 France 56.31 12 United Kingdom 56.29 13 Bora Bora 56.2 14 United States 55.98 15 Spain 55.89
-
தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா
யாப்பில் எங்கும் சி-பெள ஆக இருக்க வேண்டும் என்பதாக இல்லை. ஆனால் இலங்கை தேசமானது புத்த சாசனத்துக்கு முன்னுரிமை தரவேண்டும் என்கிறது அரசியலமைப்பின் சரத்து 9. இது நடைமுறையில்.
-
தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் running mate இல்லை. நீங்கள் மூவரை ஓட சொல்லுகிறீர்கள். அத்துடன் வேட்பாளர் ஒரு கட்சியின்/முண்ணனி சார்பாக ஒருவர்தான் நிற்கமுடியும் (3 நபர்கள் அல்ல). இது தவறு என நினைக்கிறேன்.
-
தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா
மிகவும் யோசிக்க வேண்டிய கோணம் இது. பொது வேட்பாளரை முன்னிலை படுத்துவதாகின்: 1. கிழக்கில் இருந்து ஒருவர் 2. அத்தனை தமிழ் தேசிய கட்சிகளின் ஆதரவோடு இறங்கி 3. ஏன் இதை செய்கிறோம் என்பதை மக்களுக்கு தெளிவாக எடுத்து சொன்னால் ஒருவேளை மக்கள் ஆதரிக்கலாம். எப்படியும் வெல்ல போவதில்லை - ஆகவே ஒரு மதம், பிரதேச சார்பற்ற, இதுவரை அரசியல் சார்பில்லாது இருந்த ஒரு சமூக சேவையாளரை நிறுத்தலாம். எமது கதிரை அரசியல்வாதிகளும் இதனால் பாதிப்படைவது குறைவு என்பதால் ஒத்து கொள்ள கூடும். மலையகமக்கள் - தவிகூ வில் இருந்து சேவல் பறந்த போதே அவர்கள், விதியும், வட-கிழக்கு தமிழர் விதியும் வேறாக பிரிந்து விட்டது. அப்படி அவர்களை தொண்டமான் பிரித்தது மிக சரியான முடிவும் கூட. நாம் தனிநாட்டை அடைந்தால் கூட - அவர்கள் இலங்கை பிரசைகள்தான். எனவே அவர்கள் தம் நலனை கணித்தே வாக்களிப்பர், வாக்களிக்க வேண்டும். மில்லியன் டாலர் கேள்வி என்னவென்றால் - 1970 களில் மலையக தலைமை எடுத்த நிலைப்பாட்டை ஒத்த நிலைப்பாட்டை 2024 வடகிழக்கு தமிழ் மக்கள் (தலைவர்கள் அல்ல) எடுத்துள்ளார்களா? என்பதே. அதாவது, இனப்பிரச்சனை, குடியேற்றம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், நாடு நாசமானால் நாம் எல்லாரும்தான் ஆப்பு அடிபடுவோம், எனவே ரணிலை (அல்லது அனுரவை) வெல்ல வைப்போம் என்ற மனநிலைக்கு வடகிழக்கு மக்கள் வந்து விட்டார்களா? இதை கணிப்பது மிக கஸ்டமாக இருக்கிறது. ஆனால் என் கருத்து 2005 இல் தமிழ்மக்களை பகிஸ்கரிக்குமாறு கேட்காமல் விட்டிருந்தால் ரணிலுக்கு பெருவாரியாக போட்டிருப்பர் என்பதே. அதே போல் ஒரு மனநிலை (அப்போ தீர்வை தருவார் என்ற மாய நம்பிக்கை, இப்போ நாட்டை மீட்கிறார் என்ற நம்பிக்கை) இப்போதும் மக்களிடம் இருந்தால், பொது தமிழ் வேட்பாளர் நீங்கள் சொல்வது போல் பொல்லை கொடுத்து அடிவாங்கும் வேலையாகலாம். முதலில் பாராளுமன்ற தேர்தல் வந்தாலாவது ஓரளவு மக்கள் எண்ண ஓட்டத்தை பிடிக்கலாம். இலங்கை அரசியலில் ஒரு paradigm shift (அடிகட்டுமான மாற்றம்) ஐ தரவல்ல பல நிகழ்வுகள் நடந்த பின் வரப்போகும் முதல் நாடளாவிய தேர்தல் இது. மக்கள், குறிப்பாக வடகிழக்கு மக்கள் நிலைப்பாட்டை நாடி பிடிப்பது, கிட்டதட்ட இயலாத காரியம்.
-
வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி
யம் போல் வாழ்பவன்….😎
-
தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா
காலையில் சுவாஸ்டிகாவின் அறிக்கையை பார்த்ததும், நீங்கள் கருத்து எழுதுவீர்கள் என நினைத்தேன். அப்படியே ஆகிற்று🤣
-
வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி
மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு இலங்கை அரசியலிலும், யூகே அரசியலிலும் இருப்பது ஈடுபாடு. தமிழக, இந்திய, ஜேர்மன், பிரான்சு, உக்ரேன், ரஸ்ய, தென்னாபிரிக்க, அமெரிக்க, பிரேசில், அவுஸ்ரேலிய அரசியலில் இருப்பது ஆர்வம். ஆர்வத்துக்கும், ஈடுபாட்டுக்கும் உள்ள வேறுபாட்டை விளங்கி கொண்டால் இந்த குழப்பம் வராது. சிலருக்கு சமையலில் ஆர்வம், மீராவுக்கு கிரிகெட்டில் ஆர்வம், சிலருக்கு கவிதை எழுதுவது ஆர்வம், இன்னும் சிலருக்கு internet trolls ஆக இருப்பதில் ஆர்வம். அதே போல் சிலருக்கு உலக, அண்டை நாட்டு அரசியலில் ஆர்வம். எமது அரசியலில் விடயங்கள் தொக்கி நிற்பதால் மீரா கிரிகெட் பார்க்காமல் விடுவதில்லை. அதே போல் கோஷானும் தன் அரசியல் ஆர்வத்தை விட தேவையில்லை. யாழ் களம் கூட - ஊர் புதினத்துடன், தமிழக, இந்திய, உலக அரசியலுக்கு என ஏன் தனி பகுதிகளை வைத்துள்ளது? ஊரில் அரசியலில் தொக்கி நிற்கும் விடயங்கள் தீரும் மட்டும் ஏனைய பகுதிகளை மூடலாமே🤣. புலம்பெயர் நாட்டில் சிலருக்கு இருக்கும், ஏதோ நாம் மட்டும்தான் வெட்டி புடுங்கிறோம், என்ற இந்த வகையான அட்டிடியூட் - 2009 பும், இப்போதும் பல பிரச்சனைகளிற்கு காரணம். நீங்கள் செய்கிறீர்களா? சந்தோசம். மற்றயவன் என்ன செய்கிறான்/செய்யவில்லை என்பது பற்றி ஒரு துளி கூட தெரியாமல் - அதை பற்றி எழுதுவது மடத்தனம். இன்னும் கனக்க எழுதலாம். பலரின் மனதை நோகடிக்க விரும்பாமையால் விட்டு விலகுகிறேன். #மெச்சூரிட்டி
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
மீண்டும் 100% யதார்த்தமான பார்வை. நாட்டில் மட்டும் அல்ல, புலம்பெயர் தேசத்தில் எமது பிள்ளைகளின் பள்ளிகளில் கூட சிங்கள பிள்ளைகள் இனவாதமாகவே இன்றும் நடக்கிறார்கள்….ஏன் என்றால் வளர்ப்பு அப்படி. தமிழருக்கு எதிரான இனவாதம் இங்கிலாந்தில் வீட்டில் ஊட்டப்படுகிறது. நான் அடிக்கடி சொல்வதுதான் தனி மனிதர்களாக பழக இனிமையானவர்கள் எனிலும் கூட்டு மனோநிலை, இனவாதம் என்று வரும் போது ஒரு இஞ்சிதன்னும் 1948 இல் இருந்து அவர்கள் நகரவில்லை. அதேபோல் தமிழரசு கட்சி மீது “உசுப்பேத்தல்” போன்ற நியாயமான விமர்சனங்களை முன் வைத்தாலும்…. ஒட்டுமொத்த இனப்பிரச்சனையே அவர்களால் தூண்டபட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது. சிங்களவரின் இனவாதமும் அதை செயல்படுத்திய சிங்கள தலைமைகளுமே இனப்பிரச்சனைக்கு 95% காரணிகள்.
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
நானும் வாசிக்கவில்லை. ஆனால் ஜியினை போலவே ஒற்றையாட்சியை நாட்டில் வாழும் தமிழர்கள், இத்தனை பின்னடைவுக்கு பின்னும், ஏற்று கொண்டதாக நானும் நினைக்கவில்லை. 💯 உண்மை
-
வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி
நல்லது. வரவேற்புக்குரியதும். இதை போலவே படித்தவர்களும், சீமான் திரியில் காவல் இருப்பவர்களும் தமக்கு முடிந்த வழிகளில் முயலுவார்கள் என்பதை புரிந்து கொண்டால், திரிக்கு வந்த பின்னூட்டங்கள் வந்திராது🤣.
-
வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி
மிச்சம் எல்லாரும் கிழிச்சு தொங்க விட்டுடினம்🤣.