Jump to content

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15603
  • Joined

  • Last visited

  • Days Won

    175

Everything posted by goshan_che

  1. சொன்னால் கேட்டத்தானே. ஆனால் உப்பிடி அவைய இவைய கை காட்டி…தப்பிப்பது நேர்மையான அரசியலா? அவர்கள் செய்வதை விட எப்படி நாம் வித்தியாசமாக விடயத்தை அணுகுவோம் என சொல்லி நிலைபாட்டு அரசியல் செய்வதுதானே கீரை கடைக்கு எதிர் கடை போடுவோர் செய்ய வேண்டியது? அவை கடையை மூடினாத்தான் நாம் விற்பனையை துவக்குவம் எண்டால்? பிகு சம்+சும் = சுத்துமாத்து = கஜே+கஜே என்பது என் கருத்து.
  2. ஒரு கையில ஹிமார்ஸ் செலுத்தி, மறுகையில் ATACMS கண்டிரோலர், காதுக்க ஹெட்போனில ஆஸ்டின் கொடுக்கும் உத்தரவுகள். இந்த பிசியில இதை கவனியாமல் விட்டது ஒரு தப்பா அண்ணை🤣
  3. வணக்கம் ஐலன்ட், நீங்கள் யாழின் பெரும்பாலானோர் போக்குக்கு வித்தியாசமாக சிந்திகிறீர்கள் (முன்பு சோழர், இப்போ இந்த திரி) - இதை வரவேற்கிறேன். நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும். வேறுபட்ட சிந்தனைகள்தான் தெளிவை தரும். ————— இதை ஆமோதிக்கிறேன். இதை மேலும் வளர்த்து அரசியல்வாதிகள் குளிர்காய்வது உண்மை. ஆனால் இதை குறைந்தது ஆயிரம் ஆண்டுகளாய் உருவாக்கி, போசித்து, இன்றும் ஊட்டி வருவது பெளத்த-சிங்கள மேலாதிக்க சமய-இன தலைமை. இது எங்கோ வானத்தில் இருந்து விழவில்லை. சிங்கள மக்கள் மத்தியில் இருந்துதான் இந்த நஞ்சு வருகிறது. ஆகவே சிங்கள மக்கள் அப்பாவிகள் - அரசியல்வாதிகள் நஞ்சூட்டுகிறார்கள் என்பது மேலோட்டமான பார்வை. ஒவ்வொரு தேர்தலிலும் இனவாதத்தில் யார் ஒப்பீட்டளவில் பெரியவரோ அவரைத்தான் அந்த மக்கள் தேர்ந்துல்ளார்கள். இதற்கு தமிழர் மீதான பயம் காரணமாக இருக்கலாம், ஆனால் துட்டு கெமுனு விகாரமாதேவியிடம் கூறியது போல் “தெற்கே இந்துமாகடல், வடக்கே தமிழர் நான் எப்படி நிமிர்ந்து படுப்பேன்” என்ற பயமும் அந்த பயத்தை தீர்க்க கைக்கொள்ளும் மஹாவம்ச மனோநிலையும் - சிங்கள மனங்களில் psyche இல் ஊறியது. 👆🏼இது மிக தவறான புரிதல். தமிழரிடம் எந்த மதமும், எந்த நிறுவனமும் ஒற்றை செல்வாக்கை புலிகள் வரும் வரை செலுத்தியதில்லை. நாம் ஒரு கூட்டு இன பிரஞ்ஞை இன்றி சந்தர்பத்து வாக்கு போட்டு, சுயநலமாக வாழ்ந்த கூட்டம். என்று தமிழர்களின் அடிப்படை மொழி உரிமையும், தொழில் செய்யும் உரிமையும் பறிக்கப்படாதோ அன்றுதான் தமிழர் ஒன்றாக தொடங்கினர். அதன் பின் ஒவ்வொரு முறை அவர்கள் தம் உரிமையை கேட்ட போது வன்முறை ஏவப்பட்டது. பண்டா-செல்வா, டட்லி-செல்வா, 87, 95, 2002 என ஒவ்வொரு பேச்சுவார்தையிலும் இலங்கை அரசு தம்மை நம்பமுடியாத இதய சுத்தி இல்லலாத பங்காளி என நிரூபித்துள்ளது. ஆகவே அரசியல்வாதிகள் பேச்சை கேட்டு 50,000 இளையோரை காவு கொடுக்க தமிழர் ஒன்றும் அடிமை சமூகம் இல்லை. நாம் சிங்களவரை நம்ப முடியாது என்ற நிலைக்கு வர 75 வருட காலமாக நாம் தொடர்சியாக ஏமாற்றுபட்ட “பட்டறிவே” காரணம்.
  4. ஓணாண்டியாரே, எப்படி சுகம்கள். இத மாரி அடிக்கடி ஜோதியில் ஐக்கியமாகிறது? நியாமான கேள்வி. இதன் அர்த்தம் அவன் வளர விடுவான் என்பதல்ல. ஆனால் நாம் வளர கிடைக்கும் அத்தனை வாய்ப்புக்களையும் பயன்படுத்த வேண்டும். ஆனால் கந்தையா அண்ணையின் பட்டறிவை புறம் தள்ளவும் முடியாது. மேலே ஒரு இடத்தில் சொல்லி உள்ளார் - புலம் பெயர்ந்தவர் எல்லாம் பலாலியால் வரத் தொடங்கி, கொழும்பில் வியாபாரம் குறைந்தால் இலாபத்தில் ஓடும் பலாலியையும் இழுத்து மூடும் சிங்களம். இந்த உண்மைதான் பலரை பின்னுக்கு இழுக்கிறது ஆனால் நீங்கள் சொன்னது போல் இதையும் தாண்டித்தான் நாம் முயல வேண்டும்.
  5. வணக்கம் பிரபா. அப்பா சுகவீனமாய் இருந்தார? நான் செய்தியை காணவில்லை. இப்போ சுகமா? ஓம் நீங்கள் சொன்ன கடற்கரை மிக அழகானதுதான். இன்னும் கொஞ்சம் தூரம் போனால் மணல் கும்பான்கள் எல்லாம் இருக்கும். இலங்கை மாதிரியே இருக்காது.
  6. பொது அறிவிப்பு நான் கீழே சொல்லி உள்ளது இந்தியா பற்றி ஈழதமிழர் எடுக்க வேண்டும் என நான் பலவருடமாக எழுதி வரும் என் நிலைப்பாடு. தயவு செய்து - இதுதான் எனது நிலைப்பாடும் என்று எனக்கு யாரும் தனிமடலில் காதல் கடிதம் அனுப்ப வேண்டாம் 🤣. —————————— சி வி செய்வது பாதி சரி, பாதி பிழை என்பேன் நான் சரியான பாதி நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்தியா இதில் தலையையிட்டே ஆகும். ஜே ஆர், தலைவர் போன்றோர் கூட இந்தியாவை தவிர்க முடியவில்லை. அதை இப்போ இருக்கும் யாரும் செய்வார்கள் என நாம் எதிர்பார்க முடியாது. ஆகவே எப்படியும் வர போவவர்களை, நாம் கூப்பிடுவதில் தவறில்லை. பிழையான பாதி தனியே இந்தியாவை மட்டும் இன்றி, மேற்கையும் இதில் இணைக்க வேண்டும். நாம் ஓரளவுக்கேனும் அழுத்த கூடிய தரப்பு மேற்கே - அத்தோடு அவர்கள்தான் விசாரணைகளின் லகானை பிடித்திருப்போர்.
  7. ஓம். ஆனால் இப்படி நடந்து தமிழரசு தவிர் உதிரிகள் எல்லாம் விக்கி ஐயாவோட சேர்ந்தால் - நல்லம்தானே? இல்லையா?
  8. இப்ப என்ன சீன் எண்டா, Wizz Air எண்டு ஒரு செக் கொம்பனி அபுதாபில இருந்து மத்தளக்கு பிளேன் ஓட்டுறான். அபுதாபி போய் அத பிடிச்சி வந்தா, van ஐ சியம்பாலாண்டுவைக்கால விட்டா, 4 மணதியாலதில கண்ணகை அம்மன் கோவில்ல நிக்கலாம். பலாலியா, மத்தளவா🤣
  9. * எல்லாம் என் வீடுகள் அல்ல - தங்கும் வீடுகள் 🤣 நமக்கு ஒரே வீடுதான் - யூகேயில் - துரத்தி பிடித்து கட்டியது🤣
  10. ஓம் அதேதான். முன்னர் எங்கட தோழர்கள் சீனாவில் மழை பிடித்தால் சங்காணையில்தானாமே குடை பிடிப்பார்கள்🤣 கொழும்பு, யாழ், மட்டகளப்பு 🤣. முல்லைதீவு வீட்டுக்கு சாமான் அனுப்பியதில்லை🤣 @ஈழப்பிரியன் அண்ணா, முன்பு கொழும்பில் ராஜசிங்க ரோட்டில் போ எடுக்கோணும். பிறகு மேல் மாகாணத்தில் டோர் டிலிவரி. 2020 க்கு சற்று முன்னான காலப்பகுதியில் வட கிழகிலும் டோர் டிலிவரி வந்து விட்டிருந்தது. இப்போ தெரியாது.
  11. டேக் இட் ஈசி பையா. நான் வாங்காத அடியா🤣 அப்ப பையனுக்கு பதவி உயர்வு. ரங்கராஜன் ரிலேசன் பையா🤣
  12. 🤣 எல்லாம் லண்டன் பார்ட்டிதான், கலியாணம் ஊரில நடந்தது.
  13. அஸ்கு புஸ்கு, இப்போதைக்கு டாட்டா இந்திதான் போடுவான். தமிழ் நாட்டு பாங்கிலயே சேட்டை விட்டவனுகள், வெளிநாட்டு விமான சேவையில்? ரூட் நல்லா ஓடினால் லைக்காட்ட சொல்லி ஒரு பிளைட்டை இறக்குங்கோ, கேக் என்ன தமிழ்ல பாயாசமே ஊத்துவோம்🙏🏾
  14. நான் முந்தி அனுப்பும் போது (2020 முன்) புதிய சாமன்கள், எலெக்டிரோனிக் இருக்கா என கேட்பார்கள் இல்லை என்றால் தனியாக வரி ஏதும் இல்லை. வரி ஏதும் இல்லை, இருந்தாலும் அவர்கள் அறவிடும் தொகையில் வரிகளும் அடக்கம் என நினைக்கிறேன். வீட்டில் கொண்டு போய் கொடுப்பார்கள். பாவித்த (நல்ல நிலையில் உள்ள) சாறிகள், புத்தகங்கள், உலர் உணவுகள், புதிய விளையாட்டு சாமன்கள், ஒரு தரம் 2 மாதம் நிற்கும் போது குழந்தைக்கு தேவையான பொருட்கள் (பம்பர்ஸ்), புதிய விளையாட்டு உபகரணங்கள் (பேட், பாட்ஸ்) அனுப்பி உள்ளேன். அதே போல் ஒரு மணப்பெண் “இலக்கியா” பலகாரம்தான் வேணும் எண்டு அடம்பித்து, அதையும் கொழும்புக்கு அனுப்பி உள்ளேன். ஒரு போதும் வரி கட்டிய நியாபகம் இல்லை. நான் சொல்வது சரிதானே @பெருமாள்@Nathamuni?
  15. 🤣 இந்த முறையாவது அவர்கள் வெல்லட்டும் என விட்டு கொடுத்தேனாக்கும்🤣 போன ஈரோவில் கறுபின வீரர் இலக்கு வைக்கப்பட்டதால் கேப்டன் தானே சுமையை ஏற்றிருக்கலாம். நாட்டில் சில இனவாதிகள் (சிறுபான்மை) உண்டுதான் ஆனால் சவுத்கேட்டும், கேனும் அதற்கு நேரெதினாவர்கள்.
  16. 👌 காத்திரமான கருத்துக்கள். இதில் ஒரே கடுப்பு இந்தியன் வீசா £100 தெண்டமாக பானிபூரி வாயனுகளுக்கு கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே. ஆனால் வரவிருக்கும் பொது நன்மையோடு ஒப்பிட்டால் அதுவும் ஓகேதான்.
  17. அதெப்படி கிரிகெட்டோ, புட்போலோ @முதல்வன்@நீர்வேலியான் எப்பவும் மேலயும், நம்ம சின்னவர் @பையன்26 கடைசி அல்லது கடைசிக்கு முதலாயும் வரும்படி ஆகிறது🤣. சும்மா எட்டி பார்த்தேன்🙏🏾
  18. நான் மேற்கு என கருதுவது யூஎஸ் + கனடா + யூகே + சுவிஸ்+ ஈயூ + அவுஸ்+ நியூசி+நோர்வே. இதில் ஓபன், டிரம்ப் போன்ற விதிவிலக்குகள் இருந்தாலும் அவர்கள் உள்நாட்டில் ஆட்சி செய்யும் முறையை ஒரு நாளும் புட்டின், சதாம், கடாபி அவரவர் நாட்டில் ஆட்சி செய்யும் முறையோடு ஒப்பிடவே முடியாது. நான் முன்பே சொல்லி உள்ளேன் மேற்கின் தாராள ஜனநாயகம் 100% சிறந்தது என்பது அல்ல என் நிலை. இப்போ உள்ளதில் இதுவே சிறந்தது. இதை ரஸ்யாவில், சீனாவில், நடப்பதோடு ஒப்பிடமுடியாது. ஏன் இல்லாமல்? ஆனால் அவை ஒரு கலாச்சரமாக இல்லை. பல வருடங்களுக்கு ஒரு மர்ம கொலையை - இது அரசியல் கொலையோ என் சந்தேகிக்கும் படி இருக்கும். ரஸ்யாவில், சீனாவில், இலங்கையில் அப்படி அல்ல. அங்கே அரசியல் கொலை ஒரு கலாச்சாரம். இதுதான் வித்தியாசம்.
  19. இனி நாடு இப்படியே கடன் தவணை-கடன் தவணை ஓடும் படிதான் இருக்கும் என நினைகிறேன். அரசை பொறுத்தவரை மக்களை அடிமாட்டுக்கு வெளிநாடு அனுப்பினாலும் டொலர் வந்தால் காணும். நான் முன்பே கவனித்தது. இந்த ஆசிய உல்லாச பயணிகளால் பெருமளவில் பயன் வராது. வருவோர் அநேகர் கணக்கு பார்த்து செலவழிப்போரே. அடிமட்ட உணவகங்கள், தங்குமிடங்கள் பயன் பெறும். வன்னியன்சார் சொல்வது போல, $€£ பார்டியள்தான் காசை கண்ணில் காட்டுவார்கள். நேற்று திண்ணையில் சசி பதிந்த CT யில் டேவிட் எழுதிய கட்டுரை வாசித்தீர்களா? மக்கள் ஜேபிவ்பிக்கு தயார் என எழுதுகிறார். அது இப்போ இருப்பதை விட மோசமாக இருக்க கூடும். அண்ணை, 4 நாள் சென்னை, மிச்சம் 2/3 கிழமை யாழ்பாணம். சென்னையில் நல்ல சாப்பாடு, கோவில்கள், சொப்பிங் என செலவழிக்கலாம். போகும் போது நேரடியாக ஏர்போர்ர்டில் மாறி போய் வரும் போது சென்னையில் உள்ளே சுத்தி வரலாம். 20 கிலோ க்கு மேலே யாழுக்கு கொண்டு போக தேவையானதை கூரியர் மூலம் போடலாம். இந்த பாதையை நாம் இலாபகரமாக மாற்றினால் மேலும் மேலும் connections தானாக உயரும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.