Jump to content

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15603
  • Joined

  • Last visited

  • Days Won

    174

Everything posted by goshan_che

  1. நன்றி அண்ணா. நீங்கள் தானே போன கிழமை பரிமாறப்பட்ட கீரை புட்டையும், கஞ்சா-கப்ஸா பானத்தையும் சுவைத்து, சுவைத்து சாப்பிட்டனிங்கள்? இப்ப திடீரென்று வொட்கா கேட்டால்?
  2. ம்ம்ம்… அந்தளவு பாதுகாப்பு எச்சரிக்கை உணர்வு இருக்கு பெற்றார் எண்டா பிள்ளையை இந்த கிழவன் இம்சித்ததை கவனியாமல் விட்டிருப்பாகளா?
  3. நீங்கள் எழுதியதை வாசிக்கும் போதே நினைத்தேன் இது எனக்குரிய தொப்பி போல் இல்லை என்று. ஆனால் கல்யாணி போட்டது எனக்கானதுதான். நீங்கள் அதை தொடர்ந்து எழுதியதால் ஒரு கன்பூசன். குழப்பத்துக்கு மன்னிக்கவும்🙏🏾.
  4. @Nathamuni @தமிழ் சிறி உறுதியளித்தது போலவே புக்கிங் தகவல்களை உடான்ஸ் சாமியார் தந்துதவியுள்ளார்🤣. மறக்க வேண்டாம் புக் பண்ணும் போது #கிம்முதான் பெஸ்டு என்ற வவுச்சர் கோட்டை பாவித்தால், 1. ஒரு தட்டு வன்னி-ரெசிப்பி கீரைப்புட்டும் 2. ஒரு குவளை கஞ்சா-கப்ஸா பானமும் இனாம்.
  5. எமது, எமக்கு முந்திய ஒரு பரம்பரைக்கு செம்மணி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது எப்போதும் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் அடுத்த சந்ததிக்கு சந்தேகம்தான். இதில் கிருசாந்திக்கு ஒரு நினைவுக்கல் எழுப்புவது சிவலிங்கத்தை எழுப்புவதை விட எவ்வளவோ அனுகூலமானது என்பதும் மிக சரியே. ஆனால் அப்படி எழுப்ப விடுவார்களா? இதில் புத்தர் சிலை வராமல் தடுக்க எதையாவது வைக்க வேண்டும் என ஒரு சாரார் சொல்கிறார்கள். இனம் சம்பந்தமாக எதையும் வைக்க விடமாட்டார்கள் எனும் போது மதம் சம்பந்தமாக எதையும் வைக்கலாமே?
  6. 12-12-22 முதல் வாரம் 4 தடவை அலையன்ஸ் நிறுவனம் பலாலி-சென்னை விமான சேவையை ஆரம்பிக்கிறது என செய்தி வெளியிட்டுள்ளது கொழும்பு டெயிலி மிரர். ஆனால் அலையன்ஸ் இணையதளத்தில் யாழ் விமானநிலையம் என்பதை செலக்ட் பண்ண முடிந்தாலும் - 12, 13 ம் திகதிகளில் எந்த சேவையும் இல்லை என்றே வருகிறது. https://www.dailymirror.lk/breaking_news/Chennai-Jaffna-flights-to-resume-on-Monday/108-250044
  7. இவரை மறியலில் வைக்காமல் குருநகர் வீட்டு திட்டத்துக்கு திருப்பி அனுப்பி இருந்தால் - நாளை காலை வழக்கின் தீர்ப்பு வந்திருக்கும்.
  8. 🤣 பரவாயில்லை - வழமையாக எழுதுவது போல் அவர் தமிழ் தெரிந்த உக்ரேனியர் அல்லது அவரின் மனைவி உக்ரேனியர் என எழுதாமல் விட்டது முன்னேற்றம்தான்🤣. நீங்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு முறை உக்ரேன் பற்றிய உங்கள் தர்கம் மண்ணை கவ்வியதும் இழுத்து வருவது புலிகளையும் தலைவரையும். அவர்கள் என்ன உங்கள் பிரமாஸ்திரமா? கேவலம் கோசானை, அதுவும் கேவலம்கெட்ட உக்ரேன் பற்றிய தர்கத்தில் வெல்ல ஏன் அவர்களை சம்பந்தம் இல்லாமல் இழுத்து வருகிறீர்கள்? இப்படி செய்ய வெட்கமாய் இல்லையா? You guys are so predictable(மன்னிக்கவும் நீங்கள் அடிக்கடி திண்ணையில் கிரிகெட் பற்றி பீட்டர் விடுவதால் நானும் கொஞ்சம் இங்கிலீசில் எழுதி பார்த்தேன்) .
  9. பாஸ், Sau tabloid ஆ? அது என்ன புதிய பத்திரிகையா? ஒரு வேளை நீங்கள் அதி புத்திசாலிதனமாக Time ஐயும் New York Times ஐயும் ஒன்றாக்கியது போல் இப்போ புதிய பத்திரிகை ஏதும் வெளியிடுகிறீர்களோ🤣. Sun ஐயா சொல்றீங்க🤣. நான் Sun ஐ யாழில் இதுவரை ஒரே ஒரு தரம்தான் மேற்கோள் காட்டி உள்ளேன் என நினைக்கிறேன். உங்களை போல் RT மேட்டில் மேய்பவர் அல்ல பிறர்.
  10. அலங்கோலமாக கட்டிடத்தை இடித்தால் மட்டும் போதாது, பிழையான அத்திவாரத்தையும் உடைக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்டிடமும் அலங்கோலமாய் அமையும்.
  11. பயன் ஒவ்வொருவரும் அதை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்து அமையும். இதுக்கு மட்டும் அல்ல உலகத்தில் எல்லாவற்றிற்கும். ஏனென்றால் குறித்த வருடத்தில் அவர் செலுத்திய தாக்கம் அதிகம் என டைம் கணித்தது. ஜோர் புஷ் நல்லவரா கெட்டவரா என டைம் சொல்லவில்லை. அவர் ஆப்கானிஸ்தானுக்கு படைகளை அனுப்பி அதில் அப்பாவிகள் இறந்தது தர்மம்/அதர்மம் என்றும் டைம் சொல்லவில்லை. உங்கள் புரிதல் குறைபாட்டை விடுங்கோ என நீங்கள் மீண்டும், மீண்டும் கதறினாலும் - அதை விட முடியாது- ஏனென்றால் உங்கள் தப்பான நிலைப்பாடு கட்டி எழுப்பபட்டுள்ளதே உங்கள் புரிதல் குறைபாடு என்ற அத்திவாரத்தின் மீதுதான்.
  12. தனியே முட்டையாக எறியாமல் கொஞ்ச வெங்காயம் பச்சை மிளகாயையும் அரிந்து எறிந்திருந்தால் மன்னர் பெருமான் ஆம்லெட் ஆவது போட்டிருப்பார்.
  13. நாய் சேகர் மாதிரியே பிஹேவ் பண்றார் புட்ஸ். சின்னபயல் உக்ரேன் - ஒரே குத்துல யூரின் டாங்கை உடைச்சிட்டாப்பல 🤣. இப்ப இழந்த பெருமையை மீட்க நானும் ரவுடிதான் என்கிறார்🤣.
  14. மத விடயத்தில் உங்களையோ வேறு எவரையுமோ கும்மியதில்லை. குறிப்பாக தமிழர் மத்தியில் இருக்கும் சிறுபான்மை மதத்தினரை. உங்களை கும்முவது - தவறான புரிதலை சரி என வாதாடும் போது, பிரச்சார ஊடக செய்திகளை காவி வரும் போது, எவரோ அவித்த அவியலை யாழில் வடித்து இறக்க முற்படும் போது, தமிழ் களம் வந்து விட்டு ஆங்கிலத்தில் ஆறு பக்கம் வெட்டி ஒட்டும் போது, உங்கள் மேற்கின் மீதான கோபத்தால் முழு இனமும் குளத்தோடு கோவித்து கொண்டு கால் கழுவாமல் இருக்க வேண்டும் என எழுதும் போது மட்டுமே.
  15. நான் சொல்வது அண்மைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னான நிலை. £600-1200 தெண்டமாக அழுது, ஏதோ மரண தண்டனை கைதியின் எலெக்ரிக் கதிரையில் இருப்பது போல் 11 மணி நேரம் காலை மடக்கி வைத்து இருந்து, ஒரு பெட்டி போன்ற அறையில் உச்சா, கக்கா எல்லாம் போய், அதுக்கு பக்கத்தில் வைத்திருக்கும் சாப்பாடை கவ்வி மென்று முழுங்கி, இலண்டனில் இருந்து போகும் விமான பயணத்தை விட ஊரில் இருக்கும் பலூன் பஸ்சிலோ அல்லது 1ம் வகுப்பு ரயிலிலோ போவது அவ்வளவு கடினம் இல்லை. இலங்கையில் இப்போ 3ம் வகுப்பு (பழைய மர சட்ட இருக்கைகள்) இல்லை என நினைக்கிறேன். 2,1 தான். 1ம் வகுப்பு முன் பதிவு செய்திருந்தால் யாரும் ஏறி சீட்டில் இருக்க மாட்டார்கள், இருந்தாலும் காவலாளியை விட்டு தூக்கி விடலாம். ஒரே பிரச்சனை - மலசலகூடம். நாசமறுப்பார் நாறி வச்சிருப்பார்கள்😷. ஆகவே பயணம் முழுவதும் கழிவகற்றாமல் கடத்த முடிந்தால் போதும்.
  16. ஏன் கிறிஸ்தவ தமிழர்கள் தமிழர்கள் இல்லையா? அல்லது தமிழர்கள் என்பதை நிறுவ அவர்கள் இந்து அடையாளத்தையும் சுமக்க வேண்டுமா? எத்தனை பெண் போராளிகள் பூவும் பொட்டும் வைத்திருந்தார்கள்? இப்ப காசு பாக்க இதுதான் நல்ல உத்தி. ஒரு வெள்ளை எங்கள் ஊரை போய் பாக்குது, சாப்பிடுகுது எண்டால் நாங்கள் எல்லாரும் மில்லியன் கணக்கில் பார்த்து வியூவை ஏத்தி விடுவோம். அவன் அடுத்து இன்னொரு நாட்டுக்கு (இந்தோனேசியா) போய் அங்க அந்த இனம், கலாச்சாரம் பற்றி இன்னொரு வீடியோ. அது அந்த மக்களின் வட்சப், ஜகர்த்தா.கொம் எல்லா இடத்திலும் கதறும். இன்னும் ஒரு பத்து மில்லியன் வியூஸ். வெள்ளைகாரன் ஊருக்கு வந்தால் காருக்கு பின்னால ஓடின ஆக்கள்தானே, அதே பழக்கம்தான் இப்பவும்🤣.
  17. ஐ…கள்ளன்🤣 AfD கட்சி ஆரம்பத்தில் ஒரு ஈயூ எதிர் நிலைப்பாட்டு கட்சியாகவே ஆரம்பித்தது, இப்ப அடக்கி வாசிக்கிறது, தருணம் பார்த்து டொச்சிட் ஐ அது நடத்த முனையும் என்பது எல்லாம் என் அண்ணனுக்கும் தெரியிம் ஆனால் சொல்லமாட்டார்🤣.
  18. முதல்ல வாறவை வேண்டாம். போர்டர சீல் பண்ணுவம், ஜேர்மன் போர்டரில் மீளவும் செக் பண்ணுவம் என்பார்கள்…. அது முடிய ….கந்தையா, கு.சா அண்ணைமாரில் கை வைப்பார்கள். Zuerst kamen sie für die Kommunisten Und ich habe mich nicht zu Wort gemeldet Weil ich kein Kommunist war Dann kamen sie für die Sozialisten Und ich habe mich nicht zu Wort gemeldet Weil ich kein Sozialist war Dann kamen sie für die Gewerkschafter Und ich habe mich nicht zu Wort gemeldet Weil ich kein Gewerkschafter war Dann kamen sie für die Juden Und ich habe mich nicht zu Wort gemeldet Weil ich kein Jude war Dann kamen sie zu mir Und es war niemand mehr da Um für mich zu sprechen
  19. இன்னொருவர் தர்க நியாயம் முடிஞ்சதும் டபார் எண்டு இன்னொரு ஐடியில வந்து தனி நபர் தாக்குதலை ஆரபிப்பார்🤣
  20. இது உண்மைதான். ஆனால் உடனே சலாம் அலைக்கும், வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என்று ஐக்கியம் ஆகி விட்டால் உயிர் தப்பலாம்🤣.
  21. அகதிகள் வரவேற்கப்படுகிறார்கள் என்ற வசனத்தை நான் ஜேர்மனியில் சாலையோரம் கண்டது போல் யூகே அடங்கலாக வேறு எங்கும் காணவில்லை. ஆனால் நான் அதிகம் ஹனோவர், நோர்த் றைன்லாண்ட் பகுதிகளில்தான் பிரயாணிப்பது. டிரெஸ்டென் பக்கம் எப்படியோ தெரியாது.
  22. சும்மா இருங்கோ அண்ணை, வாற வருடம் எப்படியும் கார் மாத்த வேணும், கொஞ்சம் புதியதாக ஒரு VW Camper எடுத்து கொண்டு ஜேர்மனிய ஸ்டட்-ஸ்டட் சுத்துற ஐடியா இருக்கு. அந்த “குருவி” பார்ட்டியள்ட மாட்டினால் செம்புள்ளி, கரும்புள்ளி குத்தி போடுவாங்கள்🤣
  23. அவர்கள் அகதி அந்தஸ்துக்கு உரியவர்கள் (பாதுகாப்பு தேவைபடுவோர்) என்று அரசு கருதி உள்ளே எடுத்தால் - அவர்கள் அகதிதான். அதன் பின் 1-முடிவிலி பிள்ளைகளை பெற, தொழிலுக்கு போக அல்லது போகாமல் விட ஏனைய ஜேர்மன் குடிகளுக்கு உள்ள அதே உரிமை அவர்களுக்கும் உண்டு. ஜேர்மனியில் வாழும் ஏனைய மக்கள் 10 பிள்ளைகளை பெற்று வேலைக்கு போகாமல் இருப்பார்கள்தானே (சொற்பம் பேராவது) அவர்களுக்கு அரசு என்ன செய்கிறதோ அதையே இவர்களுக்கும் செய்யலாம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.