Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்

Everything posted by goshan_che

  1. 1. கடைகள் ஒவ்வொரு நாளும் திறக்கும். ஆனால் வேலை, வியாபாரத்தில் பிசி (பணம் பண்ணுதல்), அதானால் வார இறுதியில்தான் சொப்பிங் போகிறார்கள். 2. இலங்கையில் அதி பெரும்பான்மை மாதச்சம்பளம்தான். நாட்கூலிக்கு வேலை செய்வோர் இங்கே வரமாட்டார்கள். 3. காசும், நேரமும் இருந்து கூட்டம் அலைமோதும் அளவுக்கு - நாட்டு நிலமை. 4. சாப்பிடவே இல்லாதவன் எப்படி ஐயா நல்ல உடை உடுத்துவான். பழமொழியின் அர்த்தம் வேறு.
  2. அது அப்படியில்லை… சீமானிற்கு சேதம் அதிகம் ஆகாமல் தடுக்க….பையன் தன்னைத்தானே தியாகம் செய்துள்ளார்😀. நானும் விளங்கி, விலகியுள்ளேன். Fact-check இல்லாட்டில் எந்த கண்றாவியையாவது யாழில் கொணர்ந்து கூவி விற்கலாம்…. என்ன செய்வது….அறுவார்…பொல்லும் கையுமா ஒவ்வொரு முடக்கிலேம் நிக்கிறானுவ. #மைண்ட்வாய்ஸ்
  3. அங்கே கூடி நிற்பவர்களை பாருங்கள் - வருடத்தில் ஒரு நாள் உடுப்பு எடுப்பவகள் போலவா அவர்கள் இப்போ போட்டிருக்கும் உடுப்பு உள்ளது? வறுமையில் வாடுவோர் இப்படியான பெயர்போன கடைகளிலா வாங்குவாகள்? உண்மையில் நீங்கள்தான் செல்வச்செழிப்பில் மிதக்க்கிறீர்கள் என நினைக்கிறேன். உங்களுக்கு வறுமை எப்படி இருக்கும் என்பதே மறந்து விட்டது போல் உள்ளது. அதனால்தான் வார இறுதிக்கு காத்திருந்து, பெரிய கடைகளில் துணி எடுப்போரை வறுமையில் உழழ்வதாக எழுத முடிகிறது உங்களால். அடுத்து என்ன? சிம்ரன், இலியானா போன்றோர் இடுப்பு மெலிய காரணம் சோத்துக்கு வழி இல்லை?🤣 இன்னும் ஒரே ஒரு பக்கம்தான்… உங்களால் முடியும்…. நம்பிக்கையோடு எழுதுங்கள்🤣 விளங்கினாலும், விலக விடாது…. #தொழில் ரகசியம்😝
  4. படம் பார் பாடம் படி நான் கண்டு வந்து சொன்னதை கோஷான் முதலைகளோடு கும்மாளம் அடித்து விட்டு, பாண் இல்லாவிட்டில் என்ன கேக் சாப்பிடுங்கள் என சொல்கிறார் என கூறியவர்கள் கவனத்துக்கு. மேலே நீர்கொழும்பு, மாத்தறை பகுதிகளில், சிஙக்ளவர்களால் நடத்தப்படும் துணிக்கடைகளில் இன்று பொருட்கள் வாங்கி விட்டு, காசு கட்ட காத்து நின்ற கூட்டம். இவர்கள் வெளிநாட்டு காசில் வாழும் தமிழர்கள் அல்ல, பெருநாளுக்கு உடுப்பு எடுக்கும் முஸ்லிம்களும் அல்ல. தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு உடுப்பு எடுக்கும் சராசரி, சிறு நகர்ப்புற சிங்கள மக்கள். மாத்தறையில் காசு கட்டி முடிக்க ஒரு மணத்தியாலம் ஆகியது என ஒருவர் கூறியுள்ளார்.
  5. ற…ர.. றா…ரா…. லக்கலக்கலக்கலக்கலக்கலக்கலக்க தாம்-தரிகிட தீம்-தரிகிட தோம்-தரிகிட நம்-தரிகிட…🤣 ஏ.. பந்தமோ.. இதி ஏ.. பந்தமோ.. ஏ.. ஜன்ம பந்தால சும கந்தமோ.. 🤣🤣🤣
  6. உண்மைதான்… வேற லெவல்… சட்டப்படி இருக்கு…. செட் ஆகுவம்… இப்படி சிலது ஒட்டி கொண்டு வந்துட்டுது 🤣
  7. உண்மையில் இப்போ கொஞ்சம் பிசியாக நிற்கிறேன். சீமான் திரியில் வழமை போல் இறங்கி அடிக்கவில்லை. வேறு திரிகளை பார்க்கவே நேரம் இல்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் எனது பயண கட்டுரை திரியில் செலவழிக்கிறேன். அப்படி இருந்தும்….என்னடா பெரிய தலையள் எல்லாம் இந்த திரியில் மினக்கெடுதே எண்டு ஆர்வம் மேலிட எட்டிப்பார்த்தேன். பெரும்ஸ்…. @பெருமாள்சும்மா சொல்லக்கூடாது…சார் … சும்மா கிண்டி கிழெங்கெடுக்கிறீங்க😂… அதுவும் அந்த மன்னிப்பு கேட்ட பாணி…ஈயம் பூசியும், பூசாமலும்…. வேற லெவல், வேற லெவல் பாஸ்😁
  8. படங்கள் I காங்கேசந்துறை கடற்கரை, கலங்கரை விளக்கு படம் 1 - நுழைவு வாயில். 2- நடைபயிலும் பாதை (இராணுவ பயிற்ச்சியும் நடக்கும் அடையாளங்களுடன்). 3 - முழுக் கடற்கரையின் தோற்றம். தொலைவில் மக்கள் காணியில் நேவி நடத்தும் தல செவன ரிசார்ட். 4 - இன்னும் அடைப்புக்குள் இருக்கும் காங்கேசந்துறை கலங்கரைவிளக்கு. 5 - பாவனையில் இல்லாத, உடைந்த நிலையில் உள்ள காங்கேசந்துறை இறங்குதுறை (ஜெட்டி).
  9. உங்கள் இணைப்புக்கள் திரியை சுவாரசியமாக்குவதோடு இல்லாமல் - நான் எழுதாமல் விட்ட அனுபவங்கள் சிலதை எழுதவும் ஊக்கியாக அமைகிறது. ஆகவே நான்தான் நன்றி சொல்ல வேண்டும். அதே போல்தான் ஏனையோர் வைத்த கருத்துக்கள், கேட்ட குறுக்கு கேள்விகள், சவால்கள், நக்கல்கள் கூட. யாழுக்கு மீள, மீள வருவதும், எழுதுவதும் இந்த உறவுக்காகவே.
  10. காலி போனால் உனவட்டுன கடற்கரை கட்டாயம். ஏஞ்சல் பீச் (விலை கூட), விஜய பீச் (ஒப்பீட்டளவில் குறைய) போன்ற ரிசார்ட்டுகளில் நாள் வாடிக்கையாளராக தங்கி கடற்கரையில் புரளலாம். ரூம் போட தேவையில்லை.
  11. 🤣🤣🤣 இதென்ன…நான் பத்து வருசம் முதல் தனி திரி திறந்து சொன்னதை இப்ப கேட்டு ஷாக் ஆகிறியள்🤣. #இந்திராகாந்தி செத்துட்டாவா😝 ஓமா…ஓமா… அடுத்த முறையும் போட்டு வந்துதான் சொல்லுவன்🤣. இப்பவே புளுகொடியல், கோப்பி, இறால் கருவாடு, மிக்சர், சித்தாலேப, மா, பனங்கட்டி, எள்ளுருண்டை, நைஸ், லெமன்பப், கண்டோஸ் எண்டு ஒரு சரக்கு லொறி மாரித்தான் திரும்பி வந்தது😝.
  12. வந்த களை ஆறவில்லை அதற்குள் மறுபடியும் ஆவலை தூண்டுகிறீர்களே ஐலண்ட் ஐயா. அடுத்த முறை கட்டாயம் போய் பாருங்கள். வீடியோ இன்னமும் பார்க்கவில்லை. நான் எப்போபோனாலும் போய் பார்க்கும் இடம். அருகே சர்வதேச மைதானமும் உண்டு. கோட்டை சுவரில் நின்று போட்டிகளை காணலாம். திருகோணமலை, காலி இவை இரெண்டும்தான் கோட்டைக்குள் குடியிருப்புகள், ஒரு சின்ன ஊரே இருக்கும் வகையில் அமைந்த கோட்டைகள் என நினைக்கிறேன். 2010 இல் டச்சு அரச உதவியுடன் பல கட்டிடங்கள், ஒட்டு மொத்தமான வீதிகள், புராதனம் கெடாமல் பெரும் செலவில் புனரமைக்கப்பட்டன. Rampart Hotel இல் கடலோர அறையில் நின்றால், அறையில் இருந்தபடியே சூரிய அஸ்தமனத்தை ரசிக்கலாம். கொழும்புக்கு சவால் விடும் பல high end மேற்கத்திய உணவங்கள் உள்ளன. Peddlers Inn பரிந்துரைக்க கூடியது. Indian Hut உம் நல்லது. காலியில் இருந்து கொழும்பு நோக்கி போகும் நாளின் கடைசி ரயிலை எடுத்து, கடற்கரை பக்க சீட்டில் அல்லது புட்போர்ட்டில் இடம் பிடித்துக்கொண்டால், மாலை மங்கும் வேளை - தென்மேற்கு இலங்கையின் வனப்பை பருகியபடியே பயணிக்கலாம். போகும் போது விரைவுச்சாலை வழி போனால் - சர்வீஸ் செண்டரில் நிறுத்தி ஒரு கட்டு கட்டலாம். சொதி, சம்பல், கிரிபத், அம்பரல்ல தொக்கு, KFC, pizza, burger என வகை வகையாக கிடைக்கும். போகும் போது தகவல் தேவைப்படின் கேட்கவும்.
  13. இதை குடித்தால் ரத்த சர்க்கரை குறையும் என்றார்கள். எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் டயபா டீ என ஒன்றை 2010 இல் சில தடவைகள் குடித்த போது ரத்த சர்க்கரை அளவு குறைந்தது. ஆனால் என்னதை கலக்கிறார்களோ என தெரியாதபடியால் தொடரவில்லை.
  14. யாழில் ஒரு முறை ஈழபிரியன் அண்ணா மாட்டுப்பண்ணைகள் பற்றிய ஒரு செய்தியில், இப்படியான பண்ணைகள் எங்கே உள்ளன என கேட்ட போது….அம்பேவல, நியூசிலாந்து பண்ணைகள் பற்றி எழுதினேன். அருமையான இடம். வேலையாட்கள் பலரும் மலையக மக்களே. நான் டிக்கெட் எடுத்து பார்த்ததை நீங்கள் சம்பளம்+கொத்துடன் பார்த்துள்ளீர்கள்😀. ஹோர்ட்டன் சமவெளிக்குள் இருப்பது பேக்கேர்ஸ் நீர்வீழ்ச்சி என நினைக்கிறேன். தண்ணீர் ஒரு curtain போல பரந்து விழும். பம்பரகந்த இரத்திரபுரி, நுவெரெலியாவின் பின்புறத்தில் இடையே உள்ளது. நெடிய “பாகுபலி டைப்” நீர் வீழ்ச்சி. குளிக்கலாம். தலையில் நீர் விழும். நேர் எதிரே ஒரு சிங்கள அம்மாவின் தேனீர் கடை. நீர்வீழ்ச்சியை பார்த்தபடியே தேனீர் அருந்தலாம்.
  15. 🤣 ஓம்…ஓம்….1995 க்கு முன் நாவாந்துறையில் சந்தணமும், ஜவ்வாதும் எல்லே மணத்தது🤣.
  16. வருகைக்கும், கருத்துக்கும், அழகிய வீடியோவுக்கும் நன்றி ஐலண்ட். நீங்கள் இணைத்த வீடியோவில் வரும் இடங்களில் எனக்கு 10/10😎. எல்லே, நுவர-எலிய சிறு வயதிலும், வெளிநாடு வந்த பின்பும், சில தடவைகள் போயுள்ளேன். இந்த முறை போகவில்லை. எல்லே கேப், அழகிய ரயில் பாலம் viaduct, என மனதை கொள்ளை கொள்ளும் ஊர் எல்லே. கொழும்பில் இருந்து பதுளை செல்லும் உடரட்ட மினிகே யின் கடைசி பெட்டியில் ஒப்சவேர்சன் சலூன் என பெரிய கண்ணாடி களால் ஆன பெட்டியை இணைப்பார்கள். 1st class டிக்கெட் விலைதான். ஆனால் கடைசி நான்கு இருக்கைகள் கிடைப்பது முயல்கொம்பு. பெட்டியில் எங்கோ ஒரு இருக்கை கிடைத்தாலே போதும். ரயில் பாதை எங்கும் பொல்கஹாவலவில் இருந்து பதுளை வரை கண்பூத்து போகும் அளவுக்கு இயற்கை அழகு தித்திக்கும். இந்த வீடியோவில் வரும் ஹோர்ட்டன் பிளைன்சில்தான் வேர்ல்ஸ் எண்ட், எனும் அழகிய இடம் உள்ளது.
  17. யூகேயில் தனியே அரச மானியத்தில் இருந்தபடி இப்படி கொலிடே போக முடியாது என நினைக்கிறேன். ஆனால் கையில் காசுக்கு வேலை செய்தால் - சார்ல்ஸ்சை விட கலாதியாக வாழலாம்🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.