Everything posted by goshan_che
- IMG_4188.webp
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உந்த கறள் குத்தல் 14ம் நூற்றாண்டில் இருந்து இருக்கிற விசயம். 1989-99 கொஞ்சம் அமுங்கி இருந்தது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
வடிவாத் தெரியேல்லை. பாப்பம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹமாஸ் மேலும் இரு பணய கைதிகளை விடுவித்தது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
நல்லது செய்ய அது என்ன charity யா🤣. அது ஒரு இராணுவ கூட்டமைப்பு. அதில் உறுப்பினராக உள்ள சிறிய நாடுகள் பலதை கறள் பிடிச்ச தகர டப்பா குத்தாமல் காப்பாற்றி இருக்கிறது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
XRP வழக்கில் ரிப்பிள் நிர்வாகிகள் மீதான தனிப்பட்ட வழக்கை SEC கை விட்டது. இந்த செய்தி சில நாட்களுக்கு முன்பே வந்து விட்டது. இன்று உத்யோகபூர்வமாக நீதிபதி இவ்விரு வழக்குகளையும் தள்ளுபடி செய்தார்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மிகவும் உறுதிப் படுத்த படாத தகவல் சிரியாவில் அமேரிக்க படைகள் கட்டுப்பாட்டில் உள்ள அல் ஓமார் எண்ணை வயல் மீது தாக்குதல். பைடன் - பத்திரிகை சந்திப்பை இடை நிறுத்தி - Situation room விரைந்தார்?
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
சுவீடனை நேட்டோவில் இணைக்கும் தீர்மானத்தை துருக்கி பாராளுமன்றுக்கு முன் மொழிந்தார், துருக்கி ஜனாதிபது எர்டோகன்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
1990 இல் ஹாரிசுக்கு 19 வயது. ஜிகாத்தை வழி நடத்தி இருப்பது சந்தேகமே. ஆனால் சட்ட பீடத்தில் இனவாதியாக அறியப்பட்டார்.
-
பச்சைப் புள்ளிகளும் சிவப்பு புள்ளிகளும் கருத்துக்களமும்
உங்கள கருத்து பிடித்திருப்பதால் ஒரு பச்சை👍😀. முற்றாக நீக்கி விடுங்கள் என்பதுதான் என் ஒரிஜினல் கோரிக்கை. செவி மடுக்கவில்லை. ஆனால் கடந்த 12 மாதத்தில் யாழில் குழுவாதம் குறைந்து, ஒவ்வொருவரும் தனியாளாக எழுதுவதாக எனக்கு படுகிறது. பிரமையோ தெரியவில்லை🤣.
-
பச்சைப் புள்ளிகளும் சிவப்பு புள்ளிகளும் கருத்துக்களமும்
புள்ளிகள் இடுவதை மறைத்ததை நான் வரவேற்றேன். அண்மைகாலமாக யாழ்களத்தில் குழுவாதம் மிகவும் குறைந்து காணப்பட்டமைக்கு இது ஒரு முக்கிய காரணி என நான் கருதுகிறேன். இப்போ இந்த மாற்றம் ஏன் என்பது விளங்கவில்லை. பச்சை புள்ளியை பார்க்கும் படி செய்து விட்டு, பின் அதை கண்காணிப்பது, சிலருக்கு மட்டும் புள்ளி இடும் வசதியை நீக்குவது என்பது நிர்வாகம் ஒரு தலைபட்சமாக நடக்கிறது என்ற அதிருப்தியை தரும். நிர்வாக சுமையும் கூடும். இதனால் நிச்சயம் குழுவாதம் மீண்டும் தலை தூக்கும் என நான் திண்ணமாக நம்புகிறேன். உடையாத ஒன்றை திருத்தாதீர்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ரஸ்யா பலவீனப்பட்டுள்ளது மற்றும் உக்ரேனில் மாட்டி விடப்பட்டுள்ளது. சீனா தைவான், தென் சீனக்கடல் விடயத்தை தவிர இப்போதைக்கு யுத்தத்தை தொடங்க தயாரில்லை. துருக்கி என்னதான் பேசினாலும் நேட்டோவை விட்டு போகாது. இஸ்ரேல், ஈரான், என இரு நாடுகளும், அந்த பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய ஆயுத குழுக்களும், ஈரான் கை ஓங்கினால் அமெரிக்காவும் இறங்கி அடிபடும் ஒரு பிராந்திய யுத்தமாக வரவே ஆக கூடிய வாய்புள்ளதாக கருதுகிறேன். அமெரிகாவும் கூட துருப்புகளை இறக்காமல் ஈரானின், குழுக்களின் இலக்குகள் மீது விமானம் மூலம் தாக்கவே வாய்ப்பு அதிகம்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
போரை முடித்து விட்டிருந்தால் - இப்போ ரஸ்யா - ஈரானின் சப்போர்ட்டுக்கு வர வாய்ப்பு அதிகம் இல்லையா? இந்த போரில் அமரிக்கா பங்கு பெறுவதில் பல எமக்கு புரிகின்ற இலக்குகள் (பின்லாந்து நேட்டோவில் சேரல்) சில புரியாத இலக்குகளும் இருக்கும். போர் முடிந்து 10/15 வருடங்களின் பின் தான் முழு திட்டமும் தெரியவரும். ஒரு குழந்தை பிறந்து, வளர்சியின் முதல் நாளிலேயே அதன் இறப்பின் முதல் நாளும் ஆரம்பிக்கிறது. உலகில் எல்லாமுமே இப்படித்தான். சாம்ராஜ்யங்களும், வல்லரசுகளும் கூட.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
தெஹ்ரானில் உள்ள ஈரானிய பாதுகாப்பு தலைமையகத்தில் குண்டு வெடிப்பாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உறுதிப்படுத்த படாத தகவல். அமெரிக்க யுத்த கப்பலாகிய USS Gerald Ford இல் இன்று உணவாக Lobster உம் steak பரிமாறப்பட்டதாம். பொதுவாக இது துருப்புகளை சண்டைக்கு அனுப்பும் முன் பரிமாறப்படுவதாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இவர் யாசினின் (இவர்தான் ஹமாசின் நிறுவனத்தலைவர்) மகன் அல்ல. ஆனால் அவருடன் கூட சேர்ந்து ஹமாசை உருவாக்கிய ஹசான் யூசூப்பின் மகன். இவர் 1997-2007 ஹமாசில் இருந்த படி இஸ்ரேலுக்கு உளவு பார்த்துள்ளார். பின் வெளிவந்துள்ளார். 1999 முதல் இவர் ஒரு கிறிஸ்தவராம். https://en.m.wikipedia.org/wiki/Mosab_Hassan_Yousef
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
போர் அதில் சம்பந்த படாத பலருக்கு எங்கோ நடக்கு செய்தி. சம்பந்தபட்டோருக்கு அப்படி அல்ல. அண்மைய காஸா தேவாலய்தாக்குதலில் ஒரு முன்னாள் காங்கிரஸ் உறுப்பினரின் உறவுகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை அவர் உறுதி செய்கிறார்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அமெரிக்கா, இஸ்ரேல்-பலஸ்தீன் பிணக்கில் இறங்கினால் ஹோர்மஸ் நீரிணையை ஈரான் மூட வாய்பிருக்கு என்கிறார் ஒரு ஈரானிய பா ஊ. குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரேன், ஈராக், சவுதியின் ஒரு பாதியை உலக சமுத்திர போக்குவரத்து வலையமைப்பில் இணைக்கும், கச்சாய் எண்ணை விநியோகத்தில் தாக்கம் செலுத்தும் ஒரு குறுகிய கடல் நீரிணையே ஹோர்மஸ். இது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - ஈரான் இடையே உள்ள ஒரு சர்வதேச போக்குவரத்து வழியாகும்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இவர் ஷேய்க் யாசீனின் மகனா?
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
@island காஸா சுரங்கங்கள் பற்றி கேட்டிருந்தீர்கள். உங்களை நரகத்துக்கு வரவேற்கிறோம் என இஸ்லாமிக் ஜிகாத் இஸ்ரேலுக்கு வெளியிட்ட வீடியோ👇
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
https://www.bbc.co.uk/news/world-middle-east-67180844 காஸாவில் சாவு எண்ணிக்கை 4300 ஐ தாண்டியதாக காஸா சுகாதார அமைச்சு அறிவிப்பு. வடக்கு காசாவில் அல் ஸஹாரா என்ற குடியிருப்பு பகுதி முற்றாக தரைமட்டமாக்கபட்டுள்ளதாம் (படம் லிங்கில்). பல டசின் அப்பார்ட்மெண்டுகளை கொண்ட 32 தொடர்மாடிகள் அழிக்கப்பட்டுள்ளனவாம். இரவு 8.30 வெளியேற சொல்லி விட்டு 9 மணி முதல் காலை 7 வரை இஸ்ரேல் குண்டு வீசியதாக சொல்கிறார் இங்கே வசிக்கும் ஒருவர். இடிபாடுகளில் சிக்கியோரை மீட்க கூட இயலாமல் உள்ளதாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
வட காஸாவில் இண்டர்நெட் துண்டிப்பாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹிஸ்புல்லா தாக்குதலில் மூன்று இஸ்ரேலிய இராணுவத்தினர் பலியாம். இவர்கள் தாயும் மகளுமாம். கத்தார் அரசின் முயற்சியால் விடுவிப்பாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பிபிசி இனிமேல் ஹமாசை “ஆயுததாரிகள்” என வர்ணிக்காதாம். “பிரிடிஷ் அரசும் ஏனைய பல அரசுகள் பயங்கரவாதிகள் என தடை செய்த அமைப்பு”, அல்லது தனியே “ஹமாஸ்” என்றே விளிக்குமாம். யூத அமைப்புகளை பிபிசி பணிப்பாளர் நாயகம் சந்தித்த பின் எடுத்த முடிவாம். https://www.ft.com/content/20b5466e-d690-4e00-828e-5f364e22f1c5 பிகு பிபிசி என்ன முடிவெடுத்தாலும் - கோஷான் இஸ்ரேலை விளிக்க - இனப்படுகொலையாளர் எனும் பதத்தையோ, ஹமாசை விளிக்க பயங்கரவாதிகள் எனும் பதத்தையோ பாவிக்கமாட்டார் என்றும் அறிய கிடைக்கிறது🤣
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
அதுதான் சொல்கிறேன். சொந்த பிள்ளைக்கு யோசிக்காமல் அள்ளி கொடுப்பார்கள். தத்து பிள்ளைக்கு கிள்ளி கொடுப்பார்கள். உக்ரேன் போகும் பணத்தை ரிப்பளிகன்ஸ் எதிர்ப்பார்கள் ஆனால் இஸ்ரேலுக்கு அநேகம் bi partisan ஆக போகும். இப்படி பல அரசியல் காரணங்கள் உளன.