Everything posted by goshan_che
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
எப்படி? மேற்கும், சீனாவும், ராஸ்யாவும், பலஸ்தீனும், இஸ்ரேலும், கியூபாவும், இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து அல்லவா இலங்கைக்கு உதவின? அப்போ இரெட்டை, பல் துருவ உலக ஒழுங்கு இருந்தாலும் எல்லா துருவங்களும் இலங்கை சார்பாகவே இருந்துதிருக்கும் இல்லையா?
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
செலென்ஸ்கி பற்றி பல மேற்கின் தலைவர்களுக்கு கடுப்பு. காரணம் ஏதோ கொடுத்து வைத்த காசை கேட்பது போல் கேட்கிறார். சொல்வழி கேட்டு நடக்கிறார் இல்லை என்பதால். அந்த வகையில் உக்ரேன் இதுவரை ஒரேயடியாக மேற்கின் நலனை அன்றி தன் நலனையும் முன்னிறுத்தியே நடக்கிறது. இது ஒரு பெரும் எடுப்பிலான நகர்வாக தெரியவில்லை. Probing operations அப்படி ஒரு “குத்தி பார்க்கும்” நடவைடிக்கை என்றே நினைக்கிரேன். சேறு, குளிர் காலம் - இனி இருதரப்பு நகர்வும் அடுத்த இளவேனிலில் வரைக்கும் இல்லை என்பதே நான் வாசிக்கும் விடயம் தெரிந்தோரின் நோக்கு. 2024 நவம்பருக்கு முன் போதியளவு நிலத்தை மீட்டபின் உக்ரேன் ரஸ்யாவிடன் பேசி ஒரு ஒப்பந்ததை போட்டால் நல்லம். அது எஞ்சும் உக்ரேனுக்கு நேட்டோ உறுப்புரிமையாய் இருக்க வேண்டும். டிரெம்ப் வெண்டால் உக்ரேனுக்கு கேம் ஓவர்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உ.ப.ப.செ கெசோன் நகரின் மறுகரையில் தரையிறங்கிய உக்ரேனிய அதிரடி துருப்புகள் இரு சிறிய கிராமங்களில் முன்னரங்கை அமைத்துள்ளனர் என்கிறனர்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
தத்துபிள்ளைக்கும் சொந்த பிள்ளைக்கும் வித்தியாசம் இருக்குத்தானே. அமெரிக்க அரசியலில் யூதர் காட்டும் ஆதிக்கத்தை உக்ரேனியர் காட்டமுடியாது அதன் வெளிப்பாடுதான் இது. ஆனால் இரெண்டு பேருக்கும் உதவ கூடிய கனம் மேற்குக்கு உண்டு.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பனிப்போருக்கும் இஸ்ரேலுக்கும் ஒரே வயது. பலஸ்தீன பிரச்சினை அப்போது இருந்து இருக்கிறது. பனிப்போர் காலத்தில் நைஜீரியா, பலஸ்தீன், காச்மீர், திபெத், இன்னும் பல இடங்களில் ஒடுக்கப்பட்ட இனங்கள் அப்படி ஒன்றும் உவப்பான நிலைமைகளை காணவில்லை. இரு அல்லது பல் துருவ உலகில் எப்படி எல்லாபக்கமும் எம்பக்கம் இருக்குமாறு காய் நகர்த்தலாம் என்பதற்கு சிங்கபூர், மலேசியா, இலங்கை என பல உதாரணங்கள் உள்ளன.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அகண்ட இஸ்ரேல் = அகண்ட அழிவு. இஸ்ரேலின் நிலத்துக்கான உரிமை ஐ நா அமைத்து கொடுத்த 1967 போருக்கு முன்னான எல்லைக்கு மட்டுமே. அதன் பின் இஸ்ரேல் பிடித்து வைத்துள்ள நிலங்கள் எல்லாமும் கொள்ளை. அத்தோடு அகல கால் வைத்தால் - உள்ளதும் போச்சுதடா என்ற நிலை வரலாம். இந்த காரணமே சினாய் பகுதி, ஜோர்தான் ஆற்றின் எதிர் கரையை இஸ்ரேல் மீள எகிப்த், ஜோர்தானிடம் கொடுக்க காரணம். இஸ்ரேலின், உலகின் பாதுகாபுக்கான ஆகச் சிறந்த, நிரந்தர உத்தரவாதம் - ஒரு மிதவாதிகளால் (PLO போல் மதச்சார்பற்ற என்றால் இன்னும் சிறப்பு) ஆளப்படும் பஸ்தீனத்தை அமைத்து கொடுப்பதே.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அருமை ஐலண்ட். ஒரு அமரிக்க ஜனாதிபதி உங்களை போல் சிந்தித்தால் போதும். இந்த பிரச்சினை தீர்ந்து விடும். இலங்கையில் விட்ட பிழையை இங்கே விடக்கூடாது. ஓம். ஆரம்பத்தில் ஹமாசை நம்பி செய்தி வெளியிட்ட பிபிசி போன்ற ஆக்களும், இப்போ இது இஸ்ரேல் செய்தது என்பதில் இருந்து பின்னடிக்கினம். 2009 போல் இல்லை இப்போ. OSINTC எனப்படும் ஓப்பன் சோர்ஸ் இண்டெலிஜின்ஸ் ஆட்கள் எல்லாத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக பிரிச்சு மேய்வார்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஓம். சிவிலியன் இழப்பை, மக்களை இலக்கு வைக்கும் தடைகளை தளர்த்த இஸ்ரேல் மீது கடும் அளுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இதை செய்த பைடன் செயல் பாராட்டுக்குரியது. எகிப்தும் கூட. ஆனால் ஹமாசை, ஜிகாத்தை ஒட்ட நறுக்குவது தொடரும் என்றே நினைக்கிறேன். தொடர வேண்டும். அதுதான் இஸ்ரேலிய, பலஸ்தீனிய அப்பாவிகளுக்கு நல்லது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஆனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போ பலஸ்தீன ஆதரவு லாபி அமெரிக்காவில் தோன்றியுள்ளது. ஐந்து நீல கட்சியின் காங்கிரஸ்-பெண்கள் மிக தீவிரமாக இதை ஆதரிக்கிறார்கள். யூத லாபிக்கு நிகர் என இப்போ சொல்லமுடியாவிட்டாலும் இது இனி வளர்முகம்தான். ஆகவே உண்மையில் இந்த பிரச்சனையை இப்போதே தீர்த்து வைப்பது, போதிய பாதுகாப்பு உத்த்தவாதத்தோடு, 1967 எல்லையோடு ஒரு பலஸ்தீனை உருவாக்க்குவது இஸ்ரேலின் நீண்ட கால நலனுக்கும் நல்லதே. ——— பைடன் உத்தரவாத அடிப்படையில் எகிப்து எல்லை ஊடாக காசாவுக்கு நகர தொடங்கிய, நிவாரணப் பொருட்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஸ்பெயினில் தாக்கப்பட்டு கொண்டிருக்கும் சினொகொக்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அமரிக்க பாராளுமன்ற கட்டிடத்துள் புகுந்த பலஸ்தீன ஆதரவாளர்கள். துனிசியாவில் எரிக்கப்பட்ட யூத கோவில் (சினகோக்).
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இதைத்தான் சர்வதேச உறவுகள் வெறும் காட்டாச்சி தத்துவத்திலேயே நகர்கிறன என்றேன்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இது இப்படி நடக்கும் என @வாலி 600 நாட்களுக்கு முன் சொன்னபோது, அதை நான் ஆமோதித்த போது -பைபிள் கதையை நம்புகிறோம் என்று சிலர் எழுதினார்கள்🤣.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
நான் அவதானித்தவரை உக்ரேன் அழிவில் கவலை கொண்டவர்கள் கஸா அழிவிலும் கவலை கொள்வதாகவே தெரிகிறது. பலர் ரஸ்யா போலவே இஸ்ரேலும் போர் குற்றம் செய்கிறது. ஹமாசை அடிக்க, மக்களை மானாவரியாக தாக்குவது போர் குற்றம், காசாவில் இருந்து வெளியேற்ற நினைப்பது இனசுத்தீகரிப்பு என்பது வரை எழுதியுள்ளார்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலிய ஹேக்கர்கள், டெஹ்ரானின் மின்சார வலையயமைப்பை செயலிழக்க செய்துள்ளனராம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ரஸ்யா, யூகே வாக்களிக்கவில்லை.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
🤣 இந்த போரை கொரிய யுத்தம் போல் ஒரு உறங்கு நிலைக்கு கொண்டு போவதுதான் இரு தரப்புக்கும் நல்லது. பின்லாந்து ஒரு பெரும் பகுதியை ரஸ்ய பூதத்துக்கு விட்டு கொடுத்தது போல் - உக்ரேனும் இப்போ ரஸ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள 18% ஐ விட்டு கொடுத்து விட்டு அதன் விலையாக நேட்டோ, ஈயு அங்கதுவத்தை பெறலாம். புட்டினும் ரஸ்யாவிலாவது மீசையில் மண் படவில்லை என சமாளிக்கலாம். ——— பெரியண்ணை ஈராக்கை டக் எண்டு பிடிச்சுப்போட்டார். பிறகு வழக்கு என்ன தான் பொய் கேஸ் எண்டாலும் இழுத்தடிச்சு முடிச்சால்தானே விசாரணை நடந்தது எண்ட பீலிங்கை உருவாக்க முடியும்🤣. ———— செலன்ஸ்கி டெய்லி கொடுக்க செய்தி இருக்க வேணுமே? அண்மையில் ரஸ்யா அட்வீகா நகரில் முன்னேற முயன்று அடிவாங்கியதை தவிர ஒரு மாதமாக பெரிய நகர்வு ஏதும் இல்லை. கொவிட் நேரம் பொரிஸ் ஒவ்வொரு நாளும் சந்திப்பு நடத்தினார். பின்னர் நிப்பாட்டினார். அப்படிதான் இதுவும். நான் இதை வரவேற்பவன் என்பதை விட - உள்ளதில் திறமானது என்பதால் இதை ஆதரிப்பவன். வெளிநாட்டு கொள்கை - இதை முன்பே எழுதி உள்ளேன். வெளிநாட்டு கொள்கை, சர்வதேச சட்டம் எல்லாம் சும்மா - லுலுலுலா. வல்லான் வகுத்ததே சட்டம். மேற்கு - உள்நாட்டில் நல்லாட்டாட்சி. வெளிநாட்டில் காட்டாட்சி. ரஸ்யா+சீனா+ இத்யாதிகள் - உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் காட்டாட்சி. இதுமட்டுமே வித்தியாசம்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஒரு வழியாக உக்ரேனில் நடந்த மனித பேரவலம் பற்றி எழுத நேரம் கிடைத்து விட்டதாக்கும். அப்படியே எழுதி கொட்டி விட்டீர்கள் போங்கள்🤣 புட்டினின் 3 நாள் யுத்தத்தின் 602 நாள் இன்று🤣. பிகு ஏதோ 599 நாட்கள் எக்ஸ்ராவாக எடுத்து விட்டேன் யுவர் ஆனர். இதை பெரிய குற்றம் எண்டு என் மேல் வழக்கு போட்டுள்ளார்கள்🤣
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல்தான் தாக்கியது என காட்டும் ஆதாரம் இதுவாம் என்கிறது இந்த கணக்கு. இவரின் கருத்து படி முதலில் ஜிகாத்தின் ராக்கெட் ஏவ படுகிறது. பின் இஸ்ரேலிய விமானத்தின் ஒளி தென்படுகிறது. பின் (விமானத்தில் இருந்து வீசப்பட்ட) குண்டு வெடிக்கிறது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஆஸ்பத்திரி தாக்குதலுக்குள்ளான பார்க்கிங் பகுதியின் பகல் நேரக் காட்சி. பார்க்கிங் இடத்தில் இவ்வளவு சேதம் மட்டுமே வந்த குண்டு வெடிப்பில் 500 பேர் இறந்திருப்பர்களா? இதை கேட்பதால், மனித நேயம் அற்றவன், இஸ்ரேலின் பிரசாரகன் என என்ன வேணும் எண்டாலும் சொல்லுங்கள். ஆனால் கேள்விகள் கேட்காமல் அப்படியே ஒன்றை நம்புவது சரியாக தெரியவில்லை. ——— இதற்கு காரணம் இஸ்லாமிக் ஜிஹாதின் ராக்கெட்டே என இரு ஹாமாஸ் போராளிகள் பேசி கொள்வதன் ஒட்டு கேட்பு என இஸ்ரேல் ஒரு வீடியோவை. வெளியிட்டுள்ளது. உருவாக்கியதாயும் இருக்கலாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பற்றி எரியும் லெபனானில் உள்ள அமெரிக்க தூதரகம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
டெல் அவிவ் வந்தார் பைடன்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இருக்கலாம். என்ன பொய்யையும் சொல்ல கூடிய ஆட்கள்தான் இஸ்ரேல். முன்பும் பலதடவைகள் அப்பாவிகளை இலக்கு வைத்து விட்டு, பின்னர் மறுத்து பின் ஆதாரத்தோடு சமர்பித்ததும் வேறு வழியின்றி ஒத்து கொண்டுள்ளனர். இந்த சந்திப்பை ஈரானும் விரும்பவில்லை, இஸ்ரேலும் விரும்பவில்லை. ஆஸ்பத்திரி தாக்குதல் இரு தரப்பும் விரும்பிய முடிவை கொடுத்துள்ளது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
துருக்கியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்துள் நுழைந்த ஆர்ப்பாட்டகாரர்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஆஸ்பத்திரி தாக்கப்பட்டபோது ஹமாஸ் ராக்கெட் ஒன்று அதனருகில் வீழ்ந்ததாக Geo Location ஐ வைத்து நிறுவ முயலும் ஒரு கணக்கு. இதை பகிர்வது இஸ்ரேலை கவர் எடுக்க அல்ல. மாறாக தகவல்களை பரிந்து கொள்ளவே.