Everything posted by goshan_che
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஒரு கள உறவின் நிலைப்பாட்டை அவரிடமே நேரடியாக கேட்பதுதான் சரி. எனவே @நன்னிச் சோழன் ஐ tag பண்ணியுள்ளேன். என்னிடம் கேட்ட கேள்விக்கு பதில்: இரு வேறுபட்ட மனித இழப்புகளில், தமது நிலைப்பாடு, விருப்பு வெறுப்பு கருதி மாறுபட்ட நிலையை எடுக்கும் அனைவருக்கும் நான் எழுதியது பொருந்தும். நன்னிக்கும். அதேபோல் நேரம் கிடைக்கும் போது மட்டும் தமிழன் கேட்ட கேள்விக்கு எழுதிய பதிலிலேயே கூறி விட்டேன். காஸா விடயத்தில் நன்னிக்குக் எனக்கும் பாரிய அணுகுமுறை வேறுபாடு உண்டு. நான் எனக்காக மட்டும்தான் எழுத முடியும். எனது நிலைப்பாடு: 1. தமிழ், யூத, பலஸ்தீன அரபி, உக்ரேன் தேசிய இனங்கள் தம் பாரம்பரிய வாழிடங்களில் சுய நிர்ணயத்தோடு வாழ வேண்டும் (உக்ரேனின் ரஸ்ய மொழி பிராந்தியத்தில், ரஸ்ய படைகள், உக்ரேன் படைகளை நீக்கி, ஒரு ஐநா பொது வாக்கெடுப்பு நடத்தி அவர்கள் தலைவிதியை தீர்மானிக்க வேண்டும் எனவும் எழுதியுள்ளேன்). 2. எந்த உயரிய அரசியல் நோக்குக்காகவும் பொதுமக்கள் வேண்டும் என்றே இலக்கு வைக்கப்படுவதை எதிர்க்கிறேன். இதற்கு மாறாக நான் எழுதி இருந்தால் - வாங்கோ மேலும் கதைக்கலாம். பிகு நீங்கள் கேள்வி கேட்டபோது நன்னியை மட்டும் அல்ல, திருவாளர்கள் முரளிதரன், சந்திரகாந்தன் கடந்த முறை எலக்சன் கேட்ட போது நீங்கள் கிழக்கிலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக இதே யாழில் எழுதி நான் முரண்பட்டதையும் நினைத்து கொண்டேன்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
கத்தியிராவிட்டால் அப்படி ஒன்று நடக்கவில்லை என்றே ஆக்கி இருப்பார்கள். ஒரு காலத்தில் கத்தியதன் பலன் கிடைக்கும். நீங்களும் நானும் இருப்போமா தெரியாது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இரெண்டாம் உலக யுத்ததின் முன்னும், அதன் போதும்…..கால்நடைகளை விட மோசமாக ஒட்டு மொத்த யூத இனமே நடத்தப்பட்டது. ஹிட்லரால் மட்டும் அல்ல. தன்னை நோக்கி படை எடுக்காமல் விட்டால் - யூதரை என்ன செய்தாலும் பரவாயில்லை என்ற நிலையை ஸ்டாலின் எடுத்தார். கிட்லருடன் உடன்படிக்கை செய்தார். யூதரை பற்றி எதுவும் சொல்லாமல், செக்கொஸ்லோவியாவின் Sudetenland ஐயும் எடுத்துக்கொள், ஆனால் அடுத்த எந்த ஐரோப்பிய நாட்டையும் பிடியாதே என கிட்லரோடு ஒப்பந்தம் போட்டார் பிரிட்டனின் சேம்பர்லின். பேர்ல்காபர் தாக்கப்படும் வரை - யூதர் கொலைகள் அமெரிக்காவை போரில் இறக்கவில்லை. இப்படியா மில்லியன் கணக்கான யூதர்களின் சாவு, இழப்பு, வன்கொடுமைகள் போரின் சகல தரப்பாலும் கிள்ளுகீரையாகவே நடத்தப்பட்டது. ஆனால் இன்று? ஒரு யூத தாயின் கோரிக்கை பிரஞ்சு தொலைகாட்சியில் ஒரு மணி நேரம் போகிறது. ஜனாதிபதி விரைந்து பதில் கொடுக்கிறார். பாடம் புரிகிறதா?
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சிரியாவின் டமாஸ்கஸ் ஏர்போட்டை தாக்கியது இஸ்ரேல்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சார், உள் நுழைந்ததுக்கே இப்டி செய்றீங்களே… அங்க ஒருவர் மசூதிய இடிச்சு கோவில் கட்டி கும்பாபிசேகமும் செய்யப்போறாரே அவரை கவனிக்க மாட்டீங்களா?🤣
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹமாஸ் 100 பேரை பணயகைதிகளாக பிடித்து வைத்துள்ளது. பதிலுக்கு இஸ்ரேல் ஒட்டுமொத்த காசாவையும் பணயகைதிகளாக்கி உள்ளது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
நேற்று வெளியிட்ட உறுதி படுத்த படாத உருட்டலை இன்னொரு ஒரு new media ஊடகத்தின் கணக்கும் உருட்டியுள்ளது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இப்ப என்ன? ரஸ்யா உக்ரேனில் போட்டது அனுமான் மத்தாப்பு…. இஸ்ரேல் காசாவில் போட்டது வெள்ளை பொஸ்பரஸ் …. சரி ஓக்கே விடுங்கோ🤣.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உங்கள் மூச்சை விணடிக்காதீர்கள். Don’t waste your breath. சிலருடன் விவாதிக்கலாம், விடயங்களை பகிரலாம், நாமும் கற்று கொள்ளலாம். சிலரை கடந்து போவதே கற்று கொள்வதுதான்🤣. அதுவும் சரிதான் நண்பா. எனக்கெண்டாலும் பரவாயில்லை மாச கடைசியில் CIA, MI6 பாங் டெபோசிட் பண்ணி விடுவார்கள். இந்த மாதத்தில் இருந்து மொசாடும் போடும். எவ்வளவு உருட்டுரோனோ அவ்வளவுக்கு கொட்டும்🤣. நீங்கள் நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள் 🙏.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
தகவலுக்கு நன்றி
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
——- ஒரு இஸ்ரேலிய பெண்ணையும் அவரின் இரு பிள்ளைகளையும் விடுதலை செய்த ஹமாஸ்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நீங்கள் சொன்ன மிகுதி அரைவாசி காரணத்துடன் முற்றிலுமாக உடன்படுகிறேன். அடிமையோ, வேலைக்காரியோ பெரிய வித்தியாசம் இல்லைத்தானே. ஓம்- நீங்கள் சொன்னது போல் சாரா/சேரா தான் பிள்ளை பேறு இல்லாத காரணத்தால் இந்த பெண்ணை, ஆபிரகாமுக்கு முடித்து கொடுத்துள்ளார். பின்னர் 90 சொச்ச வயதில்! சேராவுக்கு ஐசக் (தமிழில் இசக்கி?) பிறக்க லடாய் ஆரம்பமாகியுள்ளது. எல்லாம் “கதை” தானே. இதை இட்டு பிடுங்குப்படாமல் இரு நாடுகளை, 1967 எல்லையோடு அமைத்து, ஒரு உலக பொது நகரமாக ஜெருசலேத்தை ஆக்கி பிரச்சனையை முடிக்கலாம். Easier said than done.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதன் அடிப்படையாக நான் பார்ப்பது மிக மோசமான ஒரு பொய் பிரச்சாரத்தையே. அதாவது இஸ்ரேலுக்கும் யூதர்களுக்கும் அந்த நிலத்தில் உரிமையே இல்லை, அவர்கள் வந்தேறிகள் என காலம் காலமாக ஒட்டு மொத்த இஸ்லாமிய உலகிலும் போதிக்கப்படுகிறது. இஸ்லாமிய உலகில் மட்டும் அல்ல இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் கூட, காஸாவிற்கு எத்தனை Z என்று தெரியாத ஆட்கள் கூட “யூதன் காணி கள்ளன்” என்பதாகவே இந்த பிரச்சனையை விளங்கி வைத்துள்ளனர். அத்தோடு எனது அனுபவத்தில் உலகில் எந்த மூலையிலும் பல முஸ்லிம் குடும்பங்களில் - யூதன் எங்கள் பரம எதிரி என்பது மிக சிறிய வயதில் இருந்து ஊட்டப்படுகிறது. ஆகவே நித்தம் இஸ்ரேலும் நெருக்குவாராத்தில் வாழும் காஸா வாசிகள் இந்த மன நிலையில் இருப்பது எதிர்பார்க்க கூடியதே. ஆனால் Camp David சந்திப்புக்கு பின்னான காலத்தில், பெரும்பாலன பலஸ்தீனியர்கள் இரெட்டை நாடு கொள்கையை ஏற்றார்கள் என்றே கருதுகிறேன். அப்படி ஒரு நிலையை மீள ஏற்படுத்தினால் - அமைதி சாத்தியமாகலாம். # hoping against hope
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நன்றி
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உ.ப.ப. செ கிரைமியாவின் செவஸ்டபோலில் நிண்ட Pavel Derzhavin என்ற ரஸ்ய ரோந்துக்கப்பல் - மூழ்கடிக்கப்பட்டுள்ளதாம். (நாங்கள் வாயை திறந்தாலே ரஸ்யாவுக்கு வெளுவைதான் போலயே🤣).
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
——- காஸாவில் இயங்கி கொண்டிருந்த கடைசி மின் நிலையமும் எரிபொருள் தீர்ந்ததால் சேவையை நிறுத்தியது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நல்ல கருத்துக்கள். ஆனால் உக்ரேன் விடயத்தில் இந்த அணுகுமுறையும் கருத்துக்களும் ஏனோ மிஸ்ஸிங்? என்ன தைரியம் இருந்தால் அவர்கள் செலன்ஸிகு வாக்கு போடுவார்கள்? செலன்சியின் கொட்டத்தை அடக்க மரியுபோல் மக்களுக்கு அடி போடத்தான் வேண்டும். ஒரு பெரிய நாடு ரஸ்யாவின் பாதுகாப்பை தக்க வைக்க ரஸ்யா செய்வது சரிதான்… இவ்வாறாக உக்ரேனில் நடந்த போர்குற்றங்கள் நியாயப்படுத்த பட்ட போதும் இதே “சிறிலங்கன் ஆமியின் குரல்” உங்கள் மனதில் ஒலித்தல்லவா இருக்க வேண்டும்?
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இணைப்புக்கு முதற்கண் நன்றி. கருத்துக்கணிப்பை வாசிக்கிறேன். சில முரண் கருத்துக்கள். 1. உண்மையில் “வெறும்” 38% தான் ஹமாசுக்கும் இஸ்லாமிக் ஜிகாத்துக்கும் ஆதரவு என்பது எனக்கு வியப்பாகவே இருக்கிறது. ஹமாஸ் ஆயுத முனையில் அபாசின் பெட்டாவை காஸாவை விட்டு விரட்டிய பின் அது அங்கே ஒரு சர்வாதிகார ஆட்சியையே நிகழ்த்துகிறது. கிட்டத்தட்ட ஈபி யின் கீழ் நாம் 87-90 வரை இருந்த நிலை. இத்தோடு மேலே நீங்கள் சொன்ன மிக மோசமாக இஸ்ரேலால் வஞ்சிக்கப்பட்டு உள்ளோம் (1967 எல்லைக்கும் மேலான விஸ்தரிப்பு, அல் அக்சா மசூதி பிரச்சனை) போன்ற எண்ணக்கருவும் இருந்தும் கூட 38% தாம் அந்த மக்கள் ஹமாசுக்கு ஆதரவு என்றால் - நிச்சயம் அங்கே 62% (இது சந்திரிக்கா முதல் முறை வென்ற சதவீதம்- மிகபெரிய ஆதரவு நிலை) இஸ்ரேலுடன் சமாதானமாக வாழ விரும்பும் வழியை விரும்புவதாக கொள்ளலாம் அல்லவா? 38% க்காக 62% ஐயும் வழித்துடைப்பது அநியாயம். 2. 100% ஹமாசை ஆதரித்தாலும் - சிவிலியன்களை இலக்கு வைப்பது தவறுதான். போர்குற்றம்தான். மனித குல விரோதச்செயல்தான். இதில் எந்த மாற்று கருத்தும் உங்களுக்கு இருக்காது என நம்புகிறேன். 3. எப்படி ஹமாஸ் இஸ்ரேலை அழித்து முழு நிலமும் தமக்கு வேண்டும் என்று கேட்பது யுத்தத்தை நீடிக்கிறதோ - அதே போல இஸ்ரேலும் பலஸ்தீனத்தின் மிதவாதிகளை பலப்படுத்தாமல் -தனது தொடர் குடியேற்றத்தால் - கிழக்கு ஜெருசலேம் பற்றிய பிடிவாததால் (ஜெருசலேத்த்தை ஜெனிவான போல் இருபகுதியிம் பிரிக்கலாம்) - தீவிரவாதிகளை பலப்படுத்துகிறது என்பதும் உண்மை. 4. இஸ்ரேலை நெகிழ்வுதன்மையை காட்ட உன்னாத, மேற்கும் இதற்கு பங்காளியே. 4. அதே சமயம், இஸ்ரேலும், பலஸ்தீனியர்களும் ஒன்றுபட்டாலும் ஈரானும், ஹிஸ்புலாவும், சிரியாவின் அசாட்டும், ரஸ்யாவும் குழப்பி அடிப்பார்கள். இது முட்டு சந்து என்பதை விட, வெளியேறும் வழி இல்லாத maze (இதற்கு தமிழ் என்ன?). ஆனால் ஒரு ஜனநாயக நாடாக. Euro வில் கால்பந்து விளையாடும் நாடாக, global west இன் அங்கமாக இருக்கும் இஸ்ரேலுக்கு - இதை கையாளும் முறை பற்றி ஒரு கடப்பாடு இருக்கிறது. அருமை.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹமாசுக்கு சரி. பலஸ்தீன மக்கள் எவ்வாறு இந்த தகுதியை இழந்தார்கள். அவர்கள் ஹமாசின் மீது எவ்விதமான அதிகாரமும் இல்லாதவர்கள். இஸ்ரேல் இப்படி மூர்க்கமாக தாக்கும் என தெரிந்தே ஹமாஸ் இஸ்ரேலிய சிவிலியன்களை இலக்கு வைத்தது. காசாவை - கட்டங்கள் இல்லாத கூடார தேசம் tent city ஆக்குவோம் என்கிறார் ஒரு இஸ்ரேலிய அதிகாரி. நீங்கள் நினைக்கிறீர்களா இப்படி ஒரு நிலை வரும் என தெரிந்தும், காஸா மக்கள் ஹமாசின் தாக்குதலை ஆதரித்து இருப்பார்கள் என? இல்லை. ஆகவே இஸ்ரேல் ஹமாசை மட்டும் தாக்கும் அல்லது முடிந்தளவு மக்கள் இழப்பை தவிர்க்கும் வகையில் போர் செய்ய வேண்டும். தென் இஸ்ரேலில் ஹமாஸ் புகுந்து விட்டது என்பதால் அந்த கிராமங்களை யூத மக்களுடன் சேர்த்து இஸ்ரேல் துவம்சம் செய்யவில்லை. இதே அணுகுமுறையை காஸாவிலும் எடுக்கலாம். ஆனால் காஸாவின் carpet bombing செய்கிறார்கள். இது வேணும் என்றே சிவிலியன் இலக்குகளை குறிவைப்பது = யுத்தக்குற்றம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
திருப்பி தாக்குவது நியாயம். ஆனால் ஹமாஸ்சின் நிலைக்கு அவர்களும் இறங்கி பொதுமக்களை தாக்குவது நியாயமில்லை.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காஸாவில் இறப்பு எண்ணிக்கை 1000 தாண்டியதாக பலஸ்தீன சுகாதார துறை அறிவிப்பு.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
வேலை வாய்புக்காக இஸ்ரேல் போன தாய்லாந்து நாட்டவரை இறை கோசங்களை எழுப்பியபடி தோட்டம் வெட்டும் கத்தியால் கழுத்தை வெட்ட முயன்ற ஹமாஸ் ஆயுததாரி. 18 தாய்லாந்தினர் கொல்லப்பட்டுள்ளனராம். இன்னும் 11 தாய்லாந்து நாட்டவர் பணயகைதிகளாய் உள்ளனராம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
***** 👆🏼 அண்மையில் வீசப்பட்ட ராக்கெட்டுகள் இங்கேதன் தயாரிக்கபட்டன என கூறி காஸா பல்கலைகழகத்தை தரைமட்டம் ஆக்கும் இஸ்ரேல்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உண்மையில் இந்த வெள்ளை பொஸ்பரஸ் விடயத்தில் யாழ்கள கருத்தாளர் சிலரின் இரெட்டை வேடம் மெய்சிலிர்க்க வைக்கிறது. ஒரு சாதாரண கருத்துக்களத்தில் கூட காஸாவில் நடந்தால் ரத்தம் உக்ரேனுக்கு வந்தால் தக்காளி சோஸ் என இரெட்டை நாக்கால் எழுதும் ஆட்களுக்கு - உலக நாடுகள் இரெட்டை வேடம் போடுகிறன என எழுத எந்த அருகதையும் இல்லை.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
——————— வெள்ளை பொஸ்பரசை வீசும் இஸ்ரேலின் செயல் மனிதகுல விரோதமானது. ஆனால் இலங்கை வீசியதையே கண்டுக்காத நாடுகள் இஸ்ரேலை கண்டிக்கும் என்பது அப்பாவித்தனமா எதிர்பார்ப்பு. பிகு இதை சாட்டாக வைத்து ரஸ்யாவை வெள்ளை அடிக்க ஒரு சாரார் கிளம்பி உள்ளனர். உக்ரேனில் ரஸ்யாவும் வெள்ளை பொஸ்பரசை பாவித்தது. பாவிக்கிறது. இதை இங்கே நானும் ரஞ்சித்தும் முன்பே வீடியோ ஆதாரத்தோடு எழுதி உள்ளோம். அப்போ கள்ள மெளனம் சாதித்த யாழ்கள ஊறவுகள் இப்போ எகிறி குதிக்கிறார்கள். வல்லரசுகள் மட்டும் அல்ல, சாதாரண யாழ்கள உறவுகள் கூட மனித உரிமை கோசத்தை தமக்கு ஏற்ற தருணத்துக்கேற்பவே பாவிக்கிறார்கள். காஸாவில் மட்டும் அல்ல உக்ரேனிலும் சாவது மனிதர்கள்தான். இந்த நூற்றாண்டின் மிக குரூரமான நகைச்சுவை இந்த டுவீட்.