Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. அக்க 1985 இல் கப்டன் அன்பரசிக்கு கிரெனைட் கிளிப் எப்படி கழட்டுவது என்று பாடம் எடுத்து கொண்டிருந்தவா🤣. அவ எடுக்கும் புலிவாந்தியை வேதவாக்காக எடுக்கட்டாம். —————- காஸாவில் பணைய கைதிகளாக இருக்கும் அமெரிக்கரை விடுவிக்கும் நோக்கில் இஸ்ரேல் வந்து சேர்ந்த அமெரிக்க சிறப்பு படையணி.
  2. பின்லாந்துக்கும் லிதுவேனியாவுக்கும் இடையான எரிவாயு குழாயை ரஸ்ய கப்பல் ஒன்று உடைத்துள்ளதாம்.
  3. வடிவாக பார்த்துகொள்ளுங்கள் மக்களே - நான் இஸ்ரேலுக்கும், மேற்குக்கும் வெள்ளை அடித்த தருணம். 🤡 என நன்னி திண்ணையில் சொன்னது சரிதான்.
  4. மீண்டும் மீண்டும் இலங்கைக்கு வெள்ளை அடிக்கிறீர்கள். போராளிகள் உருவாக முன்பே, தார்பீப்பாக்குள் தமிழர்களை போட்டவர்கள் அவர்கள். அதே போல் எந்த போராளி குழுவும் இல்லாத கொழும்பில், பொலிசுக்கு விடுமுறை கொடுத்து விட்டு, அப்பட்டமாக பொதுமக்களை குறி வைத்தவர்கள் அவர்கள். இஸ்ரேல் சொல்லி கொடுத்துத்தான் இலங்கை தமிழ் பொதுமக்களை தாக்கியது என்பது நகைபுக்கிடமானது.
  5. ஒவ்வொரு முறை போரிடும் போதும் எப்படி பலஸ்தீன நலன்கள், நிலங்கள் பறிபோய் கொண்டே இருக்கிறன என்பதை கண்டும், ஜோர்டானும், எகிப்தும் எல்லையை இறுக்க மூடிய பின்னும்….ஹாமசை விரட்டி விட்டு, மேற்கு கரையில் இருக்கும் பலஸ்தீனர்கள் போல பெட்டாவை மீள அழைக்கும் வரை - காசாவிற்கு மீட்சியில்லை. இனகலவரங்கள், அகதிமுகாம்கள் இல்லாத போது - அப்பாவிகளை அவர்கள் வீடுகளில் வைத்து தாக்கினார்கள். போர் முற்றி அப்பாவிகள் அகதி முகாம்களுக்கு போக தொடங்க அதையும் தாக்கினார்கள். அப்பாவிகளை, போரிடா தரப்புகளை, சிவிலியன்களை தாக்குவது என்ற முடிவு ஒன்றுதான், அது கலவரமாக இருப்பினும், அகதிமுகாம் மீதான தாக்குதலாக இருப்பினும். இஸ்ரேல் இலங்கைக்கு ஆயுதம் வித்தது, இராணுவ நகர்வுகளை சொல்லி கொடுத்தது உண்மை. பலஸ்தீனர்கள் எம்மிடம் காசு வாங்கி கொண்டு சொல்லி தந்தார்கள். அதையே இஸ்ரேல் இலங்கைக்கு செய்தது. ஆனால் அப்பாவிகளை தாக்கும் கொலைவெறியை இலங்கைக்கு யாரும் சொல்லி கொடுக்கத்தேவையில்லை. அது அவர்களுக்கு ரத்தத்தில் ஊறியது. இல்லை இஸ்ரேல் சொல்லி கொடுத்தது என நீங்கள் எழுதுவது - இலங்கக்கு வெள்ளை அடிக்கும் செயல்.
  6. இலங்கை அரசு வாயில் விரலை வைத்தால் கடிக்க கூட தெரியாத பபா. கெட்ட இஸ்ரேல்தான் அதை கெடுத்து விட்டது🤣. விட்டால்1952-83 கலவரங்கள் கூட இஸ்ரேல் சொல்லித்தான் நடந்தது என எழுதுவார்கள் போல உள்ளது விளக்க வீரர்கள்.
  7. உங்கள் அளவுக்கு விளக்கம் இல்லைத்தான். இத்தனை அழிவுக்கு பிறகும் “புலிகள் மக்களை குறிவைத்தது தவறு” என்பதை காலம் எமக்கு உணர்த்தியது போல், இப்போ ஹமாஸ் மக்களை இலக்கு வைப்பதும் தவறு என எழுதாமல், “புலிகளுக்கு கூட இப்படி ஒரு தாக்குதல் தேவைப்பட்டது”, “ஆகவே ஹமாசுக்கும் தேவைபட்டுள்ளது” என்று எழுதும் அளவுக்கு என்னிடம் விளக்கம் இல்லைத்தான்.
  8. ஒரு நிலப்பரப்பில் ஒரு இனத்தின் தொன்மை பற்றிய உண்மையை எடுத்து சொல்ல அந்த இனமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை பற்றிய அறிவு இருந்தாலே போதுமானது. நான் வக்காலத்து வாங்கித்தான் யூதர்கள் வாழவேண்டிய நிலையில் அவர்கள் இல்லை. ஆனால் - ஈழத்தமிழர் மத்தியில் நெடுங்காலமாகவே யூதர்கள் இன்னொருவன் நிலத்தை அபகரித்து வாழ்கிறார்கள் என்ற பொய், மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த பொய்யை - பொய் என்று சுட்டுவது மட்டுமே நான் செய்வது. தவிர என்னிடம் இஸ்லாமிய விரோதம் துளியும் இல்லை. யூதரின் நில உரிமையை நான் எடுத்து சொல்வது எனது இஸ்லாமிய வெறுப்பாலும் அல்ல. இலங்கை முஸ்லிம்கள் - 1948 இல் அவர்கள் எத்தனை வீதமாக இருந்தாலும், 2023 இல் அவர்கள் கிழக்கின் 1/3 மக்கள் - ஆகவே அவர்களுக்கு எமக்கு நிகரான நிலத்தொடர்பற்ற நிர்வாக அலகை கொடுக்க நாம் முன்வரவேண்டும் என யாழில் எழுதும் ஒரே கருத்தாளர் நான் என நினைக்கிறேன். இதே அணுகுமுறையைத்தான் நான் இஸ்ரேல்- பலஸ்தீன முரணிலும் எடுக்கிறேன். ஆபிரகாம் கால வரலாறையும் விடுங்கள், 2000-1942 ஐயும் விடுங்கள், 1942-2022 ஐ விட்டு விடுங்கள். 2023 இல் அங்கே இரு இனக்குழுக்கள் வாழ்கிறன - ஆகவே சமனான இரு நாடுகளை உருவாக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. பிகு காசாவில் நடப்பவை உங்களை பாதித்துள்ளமை புரிந்துகொள்ள கூடியதே…. ஆனால் அதற்காக நீங்கள் இலங்கையில் ஒரு அப்பாவி இஸ்லாமிய பெண்ணின் அபாயாவை வலுகட்டாயமாக காடையர்கள் நீக்கியதை ஆதரித்து வரவேற்ற ஆட்களிடம் எல்லாம் நீதி கேட்டு எழுதுவது - கோவம் உங்கள் கண்களை மறைத்து விட்டதோ என எண்ண வைக்கிறது.
  9. 1. இஸ்ரேலுக்குள் தாக்குதல்கள் கட்டுப்படுத்தப்பட்டு - காசா-இஸ்ரேல் எல்லை மீள பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவிப்பு. 2. காசாவில் கண்மூடித்தனமாக இஸ்ரேல் குண்டு வீசுகிறது. சில இடங்களில் அப்பட்டமாக குடியிருப்பு என தெரியும் கட்டிடங்கள் அப்படியே நொருக்கப்படுகிறன. இவை நிச்சயம் போர்குற்றங்கள்தான். ஆனால் மேற்கோ, ரஸ்யாவோ, சீனாவோ, இந்தியாவோ வாய் திறாவா. 3. தண்ணீரை மூடி விட்டதாக வீடியோக்கள் வருகிறது. 4. எகிப்து தன் காசா எல்லையை இறுக மூடிவைத்துள்ளது.
  10. இது ஒரு நம்பிக்கை என முன்பே கூறியுள்ளேன். சுருக்கமாக இந்த நம்பிக்கை யாதெனில் ஆபிரகாமுக்கும் அடிமை பெண்ணுக்கும் இஷ்மாயில் பிறந்த பின் எதிர்பாராத வயதில் ஆபிரகாமுக்கும் மனைவி சாராவுக்கும் மகனாக ஐசாக் பிறக்கிறார். அதன் பின் சாரா ஈஷ்மாயில்லையும் அவர் தாயையும் ஆபிரகாமின் தேசத்தில் இருந்து விலக்கி வைக்க கோரி, ஆபிரகாம் சஞ்சலபட, கடவுள் ஆபிரகாமை அவ்வாறே செய்யும் படி கூறி, இஷ்மாயிலும் ஆபிரகாமின் ஒரு மகன் என்பதால் அவர் ஒரு பெரும் இனக்குழிவின் தலைவர் ஆவார் எனவும். அந்த இனகுழு செல்வம் படைத்து இருக்கும் எனவும் ஆபிரகாமுக்கு கடவுள் வாக்களிக்கிறார். இவ்வாறு இஸ்ரேலில் இருந்து விரட்டப்பட்ட இஸ்மாயிலின் வழி வந்தவர்கள்களே அரபு மக்கள். இவர்களும் பல உட்பிரிவாக இருந்தனர். அதில் ஒரு பிரிவான குரோசி யில் பிறந்தவரே மொகமட். இது மகாபாரதம், இராமாயணம் போல ஒரு இதிகாசம். இதை வைத்து இஸ்ரேலில் அரபு மக்களுக்கு ஆட்சி உரிமை உள்ளது என வாதாட முடியாது. ஆனால் அப்படியே வாதாடினாலும் கூட - இஸ்மாயிலின் வழி வந்த அரபுகள் இஸ்ரேலில் இருந்து விரட்டப்பட்டோர். எனவே அவர்களுக்கு அங்கே ஆட்சி உரிமை இல்லை. அனால் இந்த கதைகள் எதுவும் தேவையில்லை. 2023 இல் அங்கே யூதரும், அரபிகளும் உள்ளார்கள். ஆளை ஆள் அழிக்க முனையாத இரண்டு நாடுகளை உருவாக்குவதே செய்ய வேண்டியது.
  11. இதை விளங்க, நீங்கள் முதலில் மதங்கள் உருவாகிய டைம்லைனையும், பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, குரான் ஆகியவற்றுக்கிடையான வித்தியாசத்தையும் விளங்கி கொள்ள வேண்டும். அதற்கு உங்களுக்கும் நேரம் இல்லை. எனக்கும் இல்லை. ஆகவே ஒரு சின்ன நன்கு தெரிந்த உதாரணம் மூலம் முயற்சிக்கிறேன். 1. பெரியார் திராவிடர் கழகத்தை ஸ்தாபித்தார். 2. அண்ணா திமுகவை திகவில் இருந்து சில வேறுபாடுகளுடன் ஸ்தாபித்தார். ஆனால் பெரியார்தான் எமது தலைவர். திராவிடம்தான் எமது கொள்கை என்றார். 3. எம் ஜி ஆர் அதிமுகவை ஸ்தாபித்தார். அவரும் பெரியார்தான் எமது தலைவர். திராவிடம்தான் எமது கொள்கை என்றார். 4. வைகோ மதிமுகவை ஸ்தாபித்தார். அவரும் பெரியார்தான் எமது தலைவர். திராவிடம்தான் எமது கொள்கை என்றார். இப்போ பெரியார் தி.கவா? திமுகவா? அதிமுகவா? மதிமுகவா? பெரியார் திக மட்டும்தான். அப்படித்தான் ஆபிரஹாமும். அவர் யூதர் மட்டுமே. அவரின் வழியை ஒட்டி பின்பு சில மாற்றங்களோடு வந்த மதங்களே கிறிஸ்தவமும் இஸ்லாமும். ஆபிரஹாமுக்கும் முன்பே நான் இருந்தேன் before Abraham was I am என யேசு சொல்கிறார் என்கிறது வேதாகமம். அதே போல் ஆபிரஹாம், மோசஸ், யேசு அனைவரையும் நபிகளாக ஏற்கிறது இஸ்லாம். அது மட்டும் அல்ல, ஆபிரகாமுக்கும் முன்பே இஸ்லாம் இருந்தது, அது மொகமட்டுக்கு மீள் உரைக்கப்பட்டது என்பதே அவர்களின் நம்பிக்கை. அதாவது இஸ்லாம் மொகட்டுக்கும் முந்தியதாம். ஆனால் இவை எல்லாம் தரவுகள் சார் விடயங்கள் அல்ல. பெரும்பாலானவை நம்பிக்கை அடிப்படையிலானவை. ஆனால் யூத நாடு அங்கே இருந்தது என்பது மறுக்கவியலாத உண்மை. Temple Mount இல் தேவாலயம், மசூதியை வர பல நூற்றாண்டுகள் முன்பே அங்கு யூத கோவில் இருந்ததும் உண்மை. அங்கே Semitic tribes பல வாழ்ந்துள்ளன. அதில் இன்நாளைய அரபிகளின் மூதாதையரும் அடங்குவர்.
  12. இதென்ன பிரமாதம்….இன்னும் ஸ்பெசல் உருட்டு எல்லாம் கைவசம் வைத்திருக்கிறேன் 🤣. இணைந்திருங்கள்.
  13. ஆனால் நான் ஹிஸ்புல்லாவை நம்பமாட்டேன். அவர்கள் இல்லை என சொல்லி விட்டு வரக்கூடும்.
  14. உண்மையில் லெபனான் ஒரு பாவப்பட்ட நாடு. ஒரு காலத்தில் ஆட்சியில் 55:45 என கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் ஆளுமை செலுத்தியதோடு…ஜனாதிபதி கிறிஸ்தவர், பிரதமர் முஸ்லிம் என இருந்தது. இஸ்ரேல்லில் இருந்து ஓடிய பல பலஸ்தீனியரகள் லெபனானில் வாழ தொடங்கி, அங்கே உள்நாட்டு போரை உருவாக்கி, ஹிஸ்புலா பலம் பெற்று. பலத்த அழிவை சந்தித்தார்கள். இப்போ அமைதி உடன்படிக்கை மூலம் கிறிஸ்தவர், முஸ்லிம் 50:50 எனவும் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்தும் வைத்துள்ளார்கள். ஆனால் இப்போதும் ஹிஸ்புல்லா செய்யும் சொறி சேட்டைக்கு எல்லாம் மொத்த லெபனானுமே அடிவாங்கும். ஒரு காலத்தில் மத்திய கிழக்கின் பாரிஸ் என புகழப்பட்ட நகரம் பெய்ரூட். நான் முன்பே சொன்னேன் அல்லவா @நன்னிச் சோழன் துருக்கி மட்டும் அல்ல, சூழ உள்ள அரபு நாடுகளே ஹமாசுக்கு உதவிக்கு வர யோசிக்கும் என. பலஸ்தீனியர்களை உள் எடுப்பதில் ஜோர்டன் மிக கவனமாக இருக்கும். ஏன் என்றால் அங்கேயும் போய் குழப்பத்தை உண்டு பண்ணுவார்கள் என்ற பயம். இன்று அபுதாபி மிக காட்டமாக ஹமாசை கண்டித்துள்ளது.
  15. அடுத்து கடஞ்சா சொல்லுவார்…. ஜின்னா பாகிஸ்தானி அல்ல… ஏன்? ஏன்னா ஜின்னா பிறக்கும் போதுதான் பாகிஸ்தான் எண்ட நாடே இல்லையே🤣.
  16. 🤣 அதாவது யூதரை பற்றிய குறிப்பு இல்லை என்றால் அது நல்ல ஆதாரம். ஆனால் யூதரை பற்றிய குறிப்பு இருக்கு என்றால் அது பின்னர் யூதர் திரித்து எழுதிய கெட்ட ஆதாரம்🤣. இது உங்கள் வழமையான பாணிதான். ஆனால் இப்படி எல்லாம் நீங்கள் எட்டாக வழைய தேவையில்லை. நானே ஏற்கிறேன். வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டு இன்று வரை உள்ள நிகழ்வுகளை பார்த்தால் - அது இப்போ அரபிகளுக்கும், யூதர்களுக்கும் மூதாதைய உரிமை உள்ள இடம்தாம். ஆகவேதான் Two State Solution ஏ இதற்கு தீர்வு என்ற என் நிலைப்பாடு. இந்த வகையில் நீங்கள் சொல்வதற்கும் நான் சொல்வதற்கும் அதிக வேறுபாடில்லை. உண்மதான் - முஸ்லிம்களை விமர்சித்து எழுதினால் உங்களுக்கு கெட்ட கோபம் வரும் என்பது யாழ்கள உறவுகள் பலருக்கு தெரிந்த விடயம்தான். நீங்கள் புலிகளை பயங்கரவாதிகள் என மேலே எழுதிய போதே உங்கள் நோக்கம் புரிந்து விட்டது.
  17. அடிப்படை லொஜிக்கல் சிந்தனை கூடவா இல்லை? ஆபிரகாமுக்கும் இறைவனுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டு அதில் இருந்து ஆரம்பமாவதே யூத மதம். அப்படி இருக்க, அந்த ஒப்பந்ததுக்கும் முதல் ஆபிரகாம் யூதர் இல்லை, எனவே அவர் யூதர் இல்லை என்பது சிரிக்கும் படியாகவல்லவா உள்ளது? ஆபிரகாம் பிறக்கும் போது யூத மதம் இல்லை. ஆனால் அதனை தோற்றுவித்தவர் அவர். ஆகவே ஆபிரகாம்தான் முதல் யூத மதத்தவர். இப்போ விளங்கி இருக்கும் என நினைக்கிறேன். இதுகுள்ள, என் மீது சேறடிக்கும் முயற்சி வேற🤣. சரி விடுவம்.
  18. இப்படி பார்த்தால் மொகமட்டும் முஸ்லீம் இல்லை அல்லவா? ஏன் என்றால் அவரும் pagen நம்பிக்கையில் பிறந்து வளர்ந்து பின்னர் அல்லாஹ்வின் செய்தியை கேட்டே முஸ்லீம் ஆகினார். ஆகவே நீங்கள் உங்கள் வழமையான முட்டையில் உரோமம் புடுங்கும் வேலையில் இறங்கி உள்ளீர்கள். Abraham is the founder of Judaism என்பது உலகம் முழுவதும் ஏற்று கொள்ளும் அடிப்படை உண்மை. இதை கூட சதிகோட்பாடு போல அணுகும் உங்களுடன் எதை கதைப்பது? என்றாலும் ஒரு சின்ன ஆதார துளி. Founder of Judaism The origins of Jewish faith are explained throughout the Torah. According to the text, God first revealed himself to a Hebrew man named Abraham, who became known as the founder of Judaism. Jews believe that God made a special covenant with Abraham and that he and his descendants were chosen people who would create a great nation. Abraham’s son Isaac, and his grandson Jacob, also became central figures in ancient Jewish history. Jacob took the name Israel, and his children and future generations became known as Israelites. More than 1,000 years after Abraham, the prophet Moses led the Israelites out of Egypt after being enslaved for hundreds of years. According to scriptures, God revealed his laws, known as the Ten Commandments, to Moses at Mt. Sinai. https://www.history.com/topics/religion/judaism
  19. உங்கள் அறளைக்கு தீனி போடவோ, திரியை திசை திருப்பவோ விரும்பவில்லை. இந்த தாக்குதலை முதலில் ஈரோஸ் உரிமை கோரியது. இதுவரை ஐயர் உட்பட புலிகளின் எதிர் நிலையில் இருப்பவர்கள் இதை புலிகள் செய்தார்கள் என கூறி வருகிறார்கள். At best, இதை யார் செய்தார்கள் என்பது inconclusive. இதில் தெரியும், தெரியாது எண்டு எதுவும் இல்லை.
  20. நீங்கள் 100% என சொன்னால் அது சரிதான். எப்போ இருந்து நீங்கள் புலிகளில் குரல்தரவல்ல அதிகாரி ஆகினீர்கள்? பாடசாலை காலத்திலேயே இஸ்ரேலின் நியாயம் பற்றி ஒரு கவிதை எழுதியுள்ளேன். தேடி கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் பிரசுரிக்கிறேன். நீங்களும் சும்மா அமெரிக்காவை எதிர்த்து ஒரு கவிதை எழுதுறது? வராதாக்கும்? ஆனால் எழுதுபவரை கேலி மட்டும் செய்ய முடியும்🤣
  21. @Maruthankerny அந்த பெண்ணினை இம்சித்தவர்களில் ஒருவனின் பெயர், விபரத்தை ஜேர்மன் ஆட்கள் சிலர் கூகிள் துணை கொண்டு கண்டு பிடித்துள்ளார்களாம்.
  22. இதனால்தான் இந்த திரியில் 6 பக்கமாக புலிகள் என்ற வார்த்தையை கூட பாவிக்காமல் எல்லாருமே உரையாடினோம் என நம்புகிறேன். 7 ம் பக்கத்தில் அவர்களை தேவையில்லாமல் இழுத்து வந்தவர்தான் இதற்கு பொறுப்பு. ஆமாம் இவர் புலிகளின் புலனாய்வு பிரிவோடு நிண்டு கதைச்சு, கரைச்சு குடிச்சுட்டு, கண்ணாலும் கண்டு தலை சுற்றிய படியே எழுதுகிறார். படித்ததை எழுதுவதை கேலி செய்துவிட்டு, அடுத்த பந்தியில் கேட்டதை நடந்தது போல் எழுதிறதெல்லாம் வேற லெவல். ————— @நன்னிச் சோழன் சில நாட்களுக்கு முன்பே காஸாவில் இருந்து தாக்குதல் நடக்க போகவதாக எகிப்து நெதென்யாகுவை எச்சரித்ததாம். உங்கள் சந்தேகம் மேலும் வலுக்கிறது. https://x.com/ShaykhSulaiman/status/1711403086642630868?s=20

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.