Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்

Everything posted by goshan_che

  1. இலங்கையில் தமிழ்த் தேசிய அரசியலின் தந்தை, தமிழரசு கட்சியின் நிறுவனத் தலைவர் செல்வா. இப்போ அந்த கட்சியின் தலைவர் சிறிதரன், பேச்சாளர் சும். இவர்கள் இருவரின் தவறுகளுக்காக, செல்வா, தமிழ் தேசிய கொள்கையை விமர்சிப்பது எப்படியான அபத்தமோ…அப்படி ஒன்றே இது.
  2. ஆமா…ஆமா… கர்நாடக சங்கீதம், தமிழ் நாடு கிரிகெட் எல்லாம் அவாளின் பரம்பரை சொத்து. அதில் நான் பிராமின், அல்லது பெரியாரை புகழும் பிராமினை மரியாதை செய்தால் கோவம் வருமா இல்லையா? பிகு இத்தனை வருடத்துக்கு பிறகே இத்தனை கொழும்புன்னா, இராஜாஜி முதல்வர், பண்டிட் ஜி பிரதமர் என அவாள் கோலோச்சிய அந்த காலத்தில், பெரியார் போராடிய போது எவ்வளவு கொழுப்பு இருந்திருக்கும்.
  3. அவர்கள் (பையனை தவிர) ரொம்ப தெளிவானவர்கள். இரெண்டுக்குமான தெளிவு அவர்களுக்கு நல்லாகவே இருக்கிறது. இது விடயம் புரியாதவர்களை பேய்க்காட்ட என வேண்டும் என்றே ஏற்படுத்தப்படும் செயற்கையான குழப்பம். நேட்டோ ஒற்றுமையையும், பைடனின் மகனின் உக்ரேன் ஊழல் விடயத்தையும் சம்பந்தமில்லாமல் எப்படி டிரம்ப் கலந்து கட்டுகிறாரோ, அப்படி. தெலுங்கு வம்சாவழி ஆதிக்கம் = கருணாநிதி குடும்ப கொள்ளை = பெரியார் கொள்கை. என ஒரு மிக தப்பான ஆனால் எளிய சமன்பாட்டை பொய்கள் மூலம், மூலம் திரும்ப திரும்ப சொன்னால் - அதிகம் ஆராயாத மக்கள் நம்பி விடுவார்கள் என நினைக்கிறார்கள். Another leaf out of Trump’s playbook. இந்த திரியில் அண்ணனின் ஆங்கில மோகத்துக்கு ஒரு அளவுக்கு மேல் முட்டு கொடுக்க முடியாது எல்லா பக்கத்தாலும் கேட்டை போட்டதும், இந்த செயற்கை குழப்பத்துக்கு விளக்கம் கேட்டு திரியை சீமானின் பிக்காலித்தனத்தில் இருந்து திசை திருப்ப முயல்கிறனர்🤣. பிகு இவர்கள் அனைவருமே டிரம்ப் ஆதவாளர் அல்லது அனுதாப பார்வையாவது உள்ளோர் என்பதும் நோக்குக்குரியது.
  4. 🤣 வெகுமானத்துக்கு வாக்கை விற்றால்… வைப்பீர்கள் உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தை அடமானம்!
  5. பிற்சேர்க்கை II குப்பை கூழம். ஒப்பீட்டளவில் தெற்காசியாவில் சுத்தமான நாடு என் இலங்கையை சொல்லலாம் என்பதை நம்மில் பலர் ஏற்போம் என நினைக்கிறேன். ஆனால் இந்த நிலை விரைந்து கெட்டு வருகிறது. கிராமப்புறங்கள், சிறு நகர்கள் முன்னர் போல இருந்தாலும். நகரங்களில் இது ஒரு பாரிய பிரச்சனையாக மாறி வருகிறது. யாழில் நகரத்தில் ஒரு குப்பை தொட்டியை தேடி அரை கிலோ மீட்டர் நடந்தாலும் கிடைப்பதில்லை. அதே போல் நடைபாதைகளும் சரியாக இல்லை. என்னதான் வீட்டில் கொசு வலையில் படுத்தாலும், ஏசி பஸ்சில் போனாலும், யாழில் அதிகாலையில் இறங்கி ஆட்டோவுக்கு காத்திருக்கும் அந்த பத்து நிமிடத்தில் - நுளம்புகள் உடலை மொத்தமாகவும், சில்லறையாகவும் துவம்சம் செய்து விடுகிறன. இவை அருகில் நீர்தேங்கி நிற்கும் வடிகாலில் இருந்து வருவது கண்கூடு. அதே போல் இன்னும் சில இடங்களில் ஊறணிகள், கேணிகளும் பாசி படர்ந்து, குப்பை சேர்ந்து இளம்பச்சை நிறத்தில் நாற்றம் எடுக்கும் நிலையில் உள்ளதை கண்டேன். புகையிலைக்கு தடை என செய்தியில் இரு வருடம் முன் வாசித்த நினைவு. ஆனால் யாழில் புகையிலை பயிர்செய்கை முன்னை போலவே தொடர்கிறது. கேட்டபோது, அறகலவுக்கு பின் தடை பெயரளவில் மட்டுமே என்கிறனர். யாழின் சதுப்பு நிலம் என கூறத்தக்க புங்கங்குளம் - நாவற்குழி பகுதியில் சட்ட விரோத குப்பை கொட்டும் போக்கு அதிகரித்திருப்பதாக சொல்கிறனர். பொம்மைவெளியின் யாழ் நகரை அண்டிய பகுதி, கோம்பையன் மணல் சுடுகாட்டுக்கு எதிரே உள்ள பகுதிகள், கிட்டதட்ட 90% அளவில் நிரப்பி கட்டி, மேட்டு நிலம் போல காட்சி அளிக்கிறது. கட்டிடங்களும் எழும்பியுள்ளன. இவை சட்டவிரோத கட்டுமானம் என்றே ஆட்கள் சொல்கிறார்கள். மாரி காலத்தில் வெள்ள காடாக இருக்கும் flood plain இது. சென்னையை போல வருடம் ஒரு தரம் வெள்ள அனர்த்தம் வரும் நகராக யாழை மாற்றி வருகிறார்களோ என எண்ணத்தோன்றியது. கொழும்பில் கோட்டா காலத்தை போல அன்றி நகரின் அழகுறுத்தல், தூய்மை குன்றியே உள்ளது. வெள்ளவத்தை, தெகிவளை கால்வாய்கள் உட்பட சகல கால்வாய்களும் கடக்கும் போது நாற்றம் எடுக்கிறன. சரிந்து விழுந்து பலரை காவு கொண்ட, கொலன்னாவ குப்பை மலை, கைவிடப்பட்டுள்ளது. அதன் மேல் செடிகளும், மரங்களும் வளர்ந்து, முழுவதும் பசுமையாகி ஏதோ காட்டு மலை போல தோன்றுகிறது. கொழும்பை விட்டு வெளியேறும் மூன்று ரயில் தடங்களிலும் கணிசமான அளவு தூரம் நகரமயமாதல், குப்பை கொட்டலை அவதானிக்க முடிகிறது. உலகின் மிக ரம்மியமான ரயில் பயணங்களில் ஒன்று என நான் கருதும் கொழும்பு-காலி ரயில் தடத்தில், தெஹிவள-களுத்தற வரை அழகிய கரையோரம் எங்கும் குப்பையை கொட்டி, பற்றவும் வைத்து, நாசமாக்கி உள்ளார்கள். பிரதான வீதிகளை பொறுத்த மட்டில், வடக்கில் நன்றாக உள்ளது, ஆனால் வடக்கை போல அன்றி கிழக்கிலும், தெற்கிலும் வீதிகள் காப்பெட் ஆகி 15 வருடம் ஆக போகிறது. இந்த வீதிகள் பராமரிப்பின்றி உடைய தொடங்கி விட்டன. 2019 இல் அருமையாக இருந்த வீதிகள் சில இப்போ குன்றும் குழியுமாக உள்ளன. இவற்றை பராமரிக்க அரசிடம் பணம் இல்லை என்பது கண்கூடு. நிலமை இப்படியே தொடர்ந்தால் 90களில் இருந்த நிலைக்கு வீதி கட்டமைப்பு விரைவில் வந்து விடும். யாழ்பாண 1ம் வகுப்பு ஏசி ரயில் இருக்கைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் உடைந்தே உள்ளன. இந்திய தரம் பல்லிளிக்கிறது. உண்மையில் இரெண்டாம் வகுப்பு வசதியால இருக்கிறது. புதிதாக எத்தனையோ பெட்டிகள் போனவருடம் வந்ததாக சொன்னாலும், நான் காணவில்லை. கொழும்பு புறநகர் ரயில் இன்னும் 1990இல் பிரேமதாசா தருவித்த அதே பெட்டிகளுடந்தான் ஓடுகிறது. யாழ் வவுனியா 1ம் வகுப்பு 1000, இரெண்டாம் வகுப்பு 650, முன்றாம் வகுப்பு 400 என நினைவு. அரச பஸ், ரயில்களின் நாட்டின் காசில்லாததன்மை தெளிவாக தெரிகிறது. சுனாமிக்கு பின்னான கடற்கரையோர கட்டுமானத்தடை இருக்கிறதா இல்லையா என தெரியவில்லை அந்தளவுக்கு சட்டபூர்வ/விரோத கட்டுமானங்கள், குடியிருபுகள் எழும்பியுள்ளன.
  6. விக்ரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் கொடுத்த பச்ச மட்டை அடியால்…அண்ணன் கொள்கை மாற்ற முடிவுக்கு வந்திருக்கலாம் அல்லவா? (முப்பது நாளில் முரட்டு முட்டு கொடுபது எப்படி - ஸ்பெசல் வகுப்புகள் இன்று முதல் ஆரம்பம் - உடனே அணுகவும்🤣). இதை பற்றி பக்கம் பக்கமாக முன்னர் எழுதியாகி விட்டது அண்ணை. ஒவ்வொரு வழக்கிலும் முழு சட்டத்தையும் அலசி ஆராய்வதில்லை. Precedent (முந்தைய முடிவு?) என முன்னர் பல வழக்குகளில் சொல்லபட்டதை ஆதாரமாக காட்டுவார்கள். அதே போல் உங்களையும் முன்னைய யாழ் திரிகளின் மேற்கோள்களுக்கு கைகாட்டி (signpost) அமைகிறேன்🙏.
  7. இடித்துரைப்புக்கு நன்றி. ஆனால் சீமானின் பக்தர்களும், டிரம்பின் MAGA பக்தர்களும் ஒரே டிசைன். அண்ணனை போலவே நாக்கை புரட்டி, புரட்டி முட்டு கொடுப்பார்கள். உதாரணமாக தமிழ் தமிழ் என கூவிய கருணாநிதியின் மகள் கனி மொழி சரளமாக ஆங்கிலம் மட்டும் அல்ல, தமிழில் கவிதை எழுதும் அளவுக்கு மொழியாளுமை உள்ளவர் - ஆனால் அதை கண்டுகொள்ளாமல், அவர் ஆங்கிலம் பேசுவதை கண்டிப்பார்கள். அதையே சீமான் செய்தால் தப்பென்ன? பள்ளி கூடம் சரியில்லை என நொண்டி சாட்டு சொல்வார்கள். ஆனால் ஸ்டாலினும், அழகிரியும் ஐ கம் யூ கோ இங்கிலிபிசுதான் என்பதையும், தமிழிழே திக்கி திணறி கதைக்கும் இவ்விரு வரும் ஆங்கிலம் சுட்டு போட்டாலும் வராத் என்பதையும் மறந்து விடுவார்கள். இதாவது பறவாயில்லை, ஒரு. படி மேலே போய் ஸ்டாலினும், உதயநிதியும் தெலுங்கில் எழுதி தமிழில் படிக்கிறார்கள் என்ற பொய்யை கூட திண்ணையில் சொல்லி விட்டு, ஆதாரம் கேட்டதும் அது சும்மா ஜோக் என நழுவினார்கள். ஆனால் அதை ஒரு உறவு உண்மை என நம்பி பின் தெளிவானார். இப்படியாக சிலர் இங்கே செய்வது பச்சை பொய்யும், புரட்டுகளும் நிறைந்த நாதக பிரச்சாரம். பொய்யும், பிரட்டும், வரலாற்றை பொய்யாக மீள எழுதுவதும், சதி கோட்பாடுகளை முந்தள்ளுவதும்தான் நாதக/சீமானின் அடிப்படை அரசியல் யுக்தியே. அண்ணணை அப்படியே பிரதி செய்க்கிறார்கள் அவரின் யாழ்கள தம்பிகள். இந்த பொய் வரலாற்றை எழுதுவதில் ஒரு அங்கம்தான் - கெளத்தூர் மணி, வேல்முருகன், நெடுமாறன், வைகோ இன்னும் பலரின் பங்களிப்பை மறைப்பது, சிறுமை செய்வது. இதை காலத்துக்கு காலம் யாழில் பலர் கண்டிக்கவே செய்கிறார்கள். இருந்தாலும் அடுத்த திரியில் தெரிந்தே அதே பொய்யை எழுதுவார்கள். உண்மையை உரைக்கும் உங்கள் முயசிக்கு நன்றி. புலித்தோல் போர்த்திய நரி. #தொண்டை தண்ணி வத்த பேசும், கள்ள மெளனி.
  8. திமுக காரன் கசமுசா வீடியோ அசல் நாதக காரன்கசமுசா வீடியோ போலி என்பதும் தம்பிகள் இங்கே பலவருடமாக ஓட்டும் முட்டுப் படம்தான். ஆனால் உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை. பராவாயில்லை, முட்டுக்கான தேவை அதிகரிக்க, அதிகரிக்க, முரட்டுத்தனமாக முட்டு கொடுப்பதும் அதிகரிக்க்கத்தானே வேண்டும்🤣.
  9. போன தடவை அவர் ஒன்றுக்கு இரெண்டு தரமாக பதிவு செய்த பிரமாண பத்திரத்திலேயே போதிய தகவல் உள்ளது. இது ஜஸ்ட் கணக்கில் வந்தது மட்டுமே.
  10. இந்தியா கூட்டணியா? வட இந்தியாவில் எல்லாரும் பிய்த்து கொண்டு போய் விட்டனரே. மோடி வெல்வது 100% கரண்டி.
  11. அதே…. மாற்றம் வேண்டும் என மக்கள் நினைத்தால்….. நா த க நம்பிக்கையான கட்சி என நினைத்தால்…. இந்த முறையில் கூட நாதவ வை ஆட்சி பீடம் ஏற்றுவார்கள். இதே முறையில்தான் முதன் முதலில், சிறு கட்சிகளாக இருந்த, திமுக, அதிமுக, சிவசேனா, தெலுங்கு தேசம், திணமூல் காங்கிரஸ் இன்னும் பல ஆட்சியை பிடித்தன. அண்மையில் கூட வை எஸ் ஆர் காங்கிரஸ் என நினைக்கிறேன். அதே போல் கேஜ்ரிவாலின் கட்சியும் இதே முறையில்தான் ஆட்சிக்கு வந்தனர். நா த கவால் 20 வருடத்தில் ஒரு உள்ளாட்ச்சி சீட்டை கூட பெற முடியவில்லை என்றால்… தவறு 20 வருடமாக மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியாத நாதக அதன் மாறி மாறி கதைக்கும் பித்தலாட்ட தலைமை மீதுதான். மக்கள் மீதோ, தேர்தல் முறை மீதோ அல்ல. ஆனால் நாதகவின் business strategy யே ஆட்சியை பிடிப்பது அல்ல. வாக்கை பிரித்து, ஒருங்கிணைப்பாளரின் சொத்து மதிப்பை கூட்டுவது.
  12. அண்ணன் ஆசை பட்டதில் தப்பில்லை. கட்சி கூட்டத்தில் முன் வரிசையில் வந்திருத்து, கட்சி விசயங்களையே கட்டுபாடு செய்யும் அரை-தெலுங்கு அண்ணி - அண்ணன் விரும்பினாலும் தமிழில் படிப்பிக்க விட்டிருக்க போவதில்லை. ஆனால்….இருபது வருடமாக எங்கும் தமிழ்…எதிலும் தமிழ்…தமிழ் என எல்லாருக்கும் அண்ணன் லந்து கொடுத்ததுதான் தப்பு.
  13. ஜனநாயகத்தின் அடிப்படையே தேர்தல் சுதந்திரம். இப்படி தடை செய்தால்…ஒரு போதும் பாஜக போன்ற (முன்னர் காங்கிரஸ்) ஒரு கட்சியை ஆட்சியை விட்டே அகற்ற முடியாது போகும். சுந்தந்திரத்தின் பின் அசுர பலத்தில் இருந்த காங்கிரசை, படி படியா, ஜனதா தள் என்ற பெயரில் தேர்தலுக்கு முந்திய கூட்டணி வைத்து, ஜெயபிரகாஷ் நாராயணம் முதல் வி பி சிங் வரை முயன்று தோற்று, அதன் பின் தான் வாய்பாயின் இரெண்டாவது முயற்சியில் முற்றாக பலமிழக்க முடியுமாய் இருந்தது. தேர்தலுக்கு முந்திய கூட்டணி இல்லை என்றால்…இன்றும் மத்தியில் காங்கிரஸ் ஆளும்.
  14. நாம் என்ன நாம் தமிழர் நாமே தமிழர் என அரசியல் செய்யும் அரசியல்வாதிகளா? அல்லது தமிழில்தான் அருச்சனை, தமிழில்தான் கல்வி, நான் எனது படத்தில் கூட ஆங்கில வசனம் சேர்க்க மாட்டேன், எனக்கூறி, பொய்யாக இயற்க்கையாக பேசும் சமயத்தில் கூட நெகிழிப்பை என சொல்லும் ஆள் என பொய் விம்பம் கட்டுகிறோமோ? நாம் தமிழ் இன அடையாளத்தை, எமது பிழைப்புக்காக அரசியலாக முன் வைப்பதில்லை. நாங்கள் ஆங்கில நாட்டில் வேறு வழியின்றி பிள்ளைகளை ஆங்கில வழி மூலம் படிப்பிக்கும், வீட்டில் தமிழ் கற்பிக்கும் சாமானியர்கள். சீமான் வேறு சாமானியன் வேறு. சாமிக்கு எல்லாம் தெரியும். #புரிஞ்சவன் பிஸ்தா🤣
  15. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நன்னி. புத்தர் சிலைகள் பொறுத்த இடங்களில் எல்லாம் முளைத்த படிதான் உள்ளன. ஊரில் ஒரு இடத்திக் காம்ப் அல்லது பொலிஸ் ஸ்டேசன் இருந்தால் அருகிலோ, வெளியிலோ சின்ன புத்தராவது இருப்பார் போல படுகிறது. கொழும்பில் ஒவ்வொரு பாடசாலையிலும் ஒன்று வைக்கும் ஒரு மறைமுக வேலைத்திட்டம் உள்ளதாயும். முதலில் சிங்களவர் படிக்கும் பாடசாலைகள் எல்லாவற்றிலும் வைக்கும் நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது எனவும் சொன்னார்கள்.
  16. நான் அதை எல்லாம் பல இடங்களில் யாழில் எழுதி உள்ளேன். அதை வாசித்த பின்னும் நீங்கள்தான் சமயங்களில் செலக்டிவ் அம்னீசியாவில் மறந்து விடுகிறீர்கள். இதே போல் “சீமானை எதிர்ப்பவர்கள் யாழில் இலங்கை அரச அநியாயத்தை எழுதாதோர்” என ஒரு அரிய கண்டு பிடிப்பையும் நேற்று எழுதி இருந்தீர்கள். யாழில் சீமானை எதிர்க்கும் என் போன்றோர் ஆதாரபூர்வமாக இலங்கை இனவாதத்தை சாடியதையும் - செலக்டிவ் அம்னீயா தின்று விட்டது போலும். என் நிலைப்பாடு கருணாநிதி கள்ளன். சின்ன கருணாநிதியும் கள்ளன். இரெண்டும் எனக்கு ஒன்றே. இரண்டை சொல்லவும் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. உண்மை. இது இந்த இனத்தின் சாபக்கேடு. புலிகளுக்கு பின்னான யாழும் ஒன்றும் சுத்தம் இல்லை. சீமான் கட்சி கூட இதை வைத்தே நடக்கிறது. கடந்த தேர்தலில் சென்னையில் நாடார் அதிகம் உள்ள தொகுதியில் சீமான் போட்டியிட்டார்.
  17. 🤣 இதே போல் திராவிட கட்சிகள் நடத்தியதாக வெளியாகிய அத்தனை வீடியோ ஆதாரத்தையும், செய்தியையும் “போலி” என்கிறார்கள் திராவிட கொத்தடிமைகள்🤣. ஆகவே @ஈழப்பிரியன்அண்ணா முன்வைத்த குற்றச்சாட்டுகளையும் இதே போல் புறங்கையால் தள்ளி விடுவோமா?
  18. அப்பாடா.. இழுபறிக்கு பிறகு கிடைத்துவிட்டது பானை சின்னம்.. வென்றது விடுதலை சிறுத்தைகள் போராட்டம் Nantha Kumar RUpdated: Saturday, March 30, 2024, 17:08 [IST] தமிழகத்தில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ல் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணியில் தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கிறது. கடந்த 2019 லோக்சபா தேர்தலை போல் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மீண்டும் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளை திமுக ஒதுக்கீடு செய்தது. America கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹவுதி.. உச்சகட்ட பதட்டத்தில் செங்கடல் கடந்த முறை சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியாக உள்ள திருமாவளவன் மீண்டும் அங்கு போட்டியிடுகிறார். அதேபோல் விழுப்புரம் தொகுதியில் சிட்டிங் எம்பியாக உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமாரும் மீண்டும் அதே தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்திய தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை விடுதலை சிறுத்தைகள் கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சியாக உள்ளது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நிரந்தர சின்னம் என்பது இல்லை. மாறாக ஒவ்வொரு தேர்தலின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தில் சின்னத்தை கேட்டு பெற வேண்டும். அதன்படி கடந்த 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட்ட பானை சின்னத்தை வரும் லோக்சபா தேர்தலில் ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 27 ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்குவது பற்றி உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்ய முடியாது என தெரிவித்தது. கேட்கும் சின்னத்தை வழங்குவதற்கு போதிய அளவிலான ஓட்டு சதவீதம் இல்லை. இதனால் பானை சின்னம் ஒதுக்க முடியாது என தெரிவித்தது. இதற்கிடையே தான் இன்று வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாளாகும். இன்னும் சற்று நேரத்தில் தமிழ்நாட்டில் தொகுதி வாரியாக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் பதிவு செய்யப்பட்ட கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதன்படி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாரும் பானை சின்னத்தை கேட்கவில்லை. இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது. இதன்மூலம் வரும் லோக்சபா தேர்தலில் சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் பானை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் சிதம்பரத்திலும், ரவிக்குமார் விழுப்புரத்திலும் போட்டியிட்டபோது ஒருவர் மட்டுமே பானை சின்னத்தில் போட்டியிட்டார். அதாவது திருமாவளவன் மட்டுமே பானை சின்னத்தில் போட்டியிட்டார். மாறாக ரவிக்குமார் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கி வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை திருமாவளவன், ரவிக்குமார் என 2 பேரும் பானை சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamil.oneindia.com/news/chennai/lok-sabha-election-2024-thirumavalavans-viduthalai-chiruthaigal-katchi-gets-pot-symbol-to-594857.html டிஸ்கி. இங்கே சிலர் ஒரு உள்ளாட்ட்சி உறுப்பினர் கூட இல்லாதா லெட்டர்பேட் கட்சி நாதகவை அதன் சின்னத்தை முடக்க பாஜக, திமுக எல்லா சேர்ந்து சதி என்பதாக உருட்டி கொண்டுள்ளார்கள். ஆனால் தற்போது நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களை கொண்ட விடுதலை சிறுத்தைகளுக்கு கூட இதுவே நிலை. ஆனால் அவர்கள் சட்ட போராட்டம் செய்து சின்னத்தை வென்றுள்ளார்கள். வெல்லுவதற்காக தேர்தலில் போட்டியிடும் கட்சி என்பதால் கடுமையாக போராடி வென்றுள்ளனர். நாதக வெறும் ஓட்டை பிரிக்க இறக்கப்பட்ட பி டீம் தானே. அண்ணனின் சட்டை பாக்கெட் நிரம்பினால் போதும். சட்டசபையாவது…ஹைகோர்ட்டாவது🤣.
  19. இப்படி தரவுகளை சொன்னால் கெட்ட கோவம் வரும். பிறகு கூகிள் டிரான்சிலேட்டரும் கையுமா வந்து… வகுந்துடுவம்…வகுந்து🤣
  20. நல்லவேளை தேர்தலில் நிண்டதே வெற்றிதான் என சொல்லவில்லை🤣. தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வி என்பது சீட் அளவை வைத்துத்தான். இல்லாவிடில் காந்தி, பெரியார், கிங், தலைவர் போல தேர்தலுக்கு அப்பால் பட்ட இயக்கம் நடத்த வேண்டும். ஆனால் இருபது வருடம் முன்னால் வெறும் தோல்வி பட இயக்குனர், இன்று அவருக்கும் மனைவிக்கும் பல கோடி சொத்து. இருபது வருடத்தில் சீமானுக்கு இது மிக பெரிய வெற்றிதான். இப்படி பேச்சாற்றலை நம்பி அமிர்தலிங்கம் பின்னால் போன நீங்கள் ஊர் நாசமாக ஜேர்மனிக்கு ஓடி தப்பி விட்டீர்கள். தலைவர்களை சரியாக தேர்ந்த தமிழ்நாட்டு மக்கள், திக்கு வாய் தலைவர்களை வைத்துக்கொண்டே, இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் இரெண்டாவதாக எழும்பி நிற்கிறார்கள்.
  21. தலைவர் பிரபாகரனின் ஆளுயர படத்துக்கு முன்னால், மாவீரர் தின பதாகைக்கு முன்னால் வைத்து ஒரு 9ம் வகுப்பு பெண்ணை நாம் தமிழர் நிர்வாகி வல்லுறவு செய்து, அதை அவரே கமரா வைத்து வீடியோவும் எடுத்த கிளிப் உள்ளது. அதையும் பகிரமுடியாமல்தான் இருக்கிறது. சீமானை திமுக ஏன் எதிர்கிறார்கள்? அவர்களை சீமான் விமர்சிப்பதால். அதே போல் பாஜக ஏன் பட்டும் படாமலும் எதிர்க்கிறது? தமது பி டீம் என்பதால்.
  22. நீங்கள் ஊருக்கே போகாமல் நான் பண முதலைகளை சந்தித்து விட்டு வந்து எழுதுவதாக நீங்கள் சொல்வது சிரிப்பாக இருக்கிறது. நான் அத்தனை தரப்பட்ட மக்களுடனும் பழகிய அனுபவத்யே எழுதுகிறேன். ஏழ்மையும், வர்க்க வேறுபாடும் இலங்கைக்கு புதிதல்ல. நான் தெளிவாக எழுதியுள்ளேன்…2019 இல் 20 ரூபா இருந்த இடத்தை இப்போ 100 ரூபா நிரப்பி உள்ளது என. உண்மையில் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது மாச சம்பளம் எடுப்போர், ஓய்வூதியகாரார், வங்கியில் வட்டி எடுத்கு வாழ்வோர் போன்றோர்தான். மீன் பிடிப்பவரை பொறுத்தவரை, பெற்றோல் விலை கூடியுள்ளது ஆம், ஆனால் அதகேற்ப மீனின் விலையும் கூடி உள்ளது. தோட்டம் செய்பவருக்கும் இதேதான். கூலி வேலைக்கான கூலி கூட இதே அளவால் கூடித்தான் இருக்கிறது. யாழின் காங்கேசன் துறை முதல்- கொக்குவில் வரை ரயில் பாதை அருகே உள்ள தோட்டங்கள் எல்லாம் நல்ல பயிர்செய்யகையாகியே உள்ளது. ஆனால் இலண்டனில் இருப்பது போல் ஏழைகளுக்கான food bank எனப்படும் மக்களால் மக்களுக்கு நடத்தபடும் இலவச உணவு முகாம்கள் அங்கே இல்லை. ஜனசக்தியோ, உணவு முத்திரையோ மக்கள் எப்படியோ சமாளிக்கிறார்கள். அதே போல் சோமாலியாவில் இருந்தது போல் என்பும் தோலுமாக மக்கள் இல்லை. 2019 க்கு முன்பு இருந்தததை விட போஷாக்கின்மை கூடி இருப்பதாக நம்பதகு தகவல்கள் சொல்கிறன. ஆனால் பட்டினிச்சாவு நிலை இல்லை. இதை கண்டு வந்து சொல்ல கொஞ்சம் சமூக அக்கறையும், இரெண்டு கண்ணும் போதும். இரெண்டு மாதம் மூட்டை தூக்கி விட்டு அல்லது கரைவலை இழுத்து விட்டு அல்லது தோட்டம் கொத்தி விட்டுத்தான் இதை உணர மில்முடியும் என்பதல்ல. நீங்கள் அங்கேயே வாழும் @பாலபத்ர ஓணாண்டி சொல்வதை மறுதலிக்கிறீர்களே? நான் சொன்னதை இலங்கையில் இப்போ வாழும் யாழ்கள உறவுகள் யாரேனும் மறுதலிக்கிறார்களா?
  23. நான் இங்கே தயாரிப்பவை பற்றி எழுதவில்லையே மீரா. நான் கதைத்தது ஒரு 70 வயதான பெண் குடும்ப தலைவியிடம். 14 நாள், மிகவும் நன்றாக உலர்த்தினால் 1 மாதம் கெடாமல் செய்து தருகின்றார். தன்னிடம் வெளிநாட்டுக்கு அனுப்ப என வியாபாரிகள் பக்கெட் பண்ணி ஆனால் லேபல் ஒட்டாமல் பக்கெட் 2500 க்கு வாங்குவதாக சொன்னார். நானும் அதே விலையில் வாங்கினேன். இவைதான் இங்கே வேறு லேபல் ஒட்டி 3.50 க்கு விற்கிறது என நான் நினைக்கிறேன். வியாபாரிகள் எப்போதுதான் கொள்ளை இலாபம் அடித்ததை ஏற்று கொண்டுளார்கள்? யுத்த காலத்கில் பனடோலில் கொள்ளை இலாபம் பார்த்த ஆட்கள் அல்லவா நம் வியாபாரிகள்.
  24. இது இருக்கிறது….ஆனால் targeted ஆக இருக்கிறது. இது மிகவும் தந்திரமாகவும், சிங்களத்தை பொறுத்த வரை வினைத்திறனாகவுக் கையாளப்படுகிறது. முன்னர் போல் பொத்தாம் பொதுவாக அன்றி. பாடசாலை மாணவர் முதல் முன்னாள் போராளிகள் வரை புலி ஆதரவு ஆட்கள் என இனம் கண்டு மிரட்டப்படுகிறனர். அலைக்கழிக்கப்படுகிறனர். ஒரு அளவுக்கு மேல் உயிரச்சமும் உண்டு. இதனால் - ஏனையோர் நான் புள்ளி 4 இல் சொன்னது போல் ஏனக்கேன் வம்பு என விலகி நடக்க, இயற்கையாகவே உணர்வு காயடிக்கப்படுகிறது. இப்போ உங்களையே எடுங்கள். நாளைக்கு இருபாலையில் போய் ஒரு மாசம் நிற்கிறீர்கள். ஒருவர் வந்து காணாமல் போனோர் போராட்டத்துக்கு அழைக்கிறார். அவர் ஏலவே புலனாய்வால் நோட்டட். நீங்கள் போவீர்களா? நீங்களே போனாலும் அருகில் உள்ள அங்கே வசிப்போர் என்ன சொல்வார்கள்? உங்களால் எமக்கும் தொல்லை என உங்கள் சகவாசத்தை வெட்டி விடுவார்கள் இல்லையா? இவ்வாறாக உண்மையில் இன விடிவை பற்றி யோசிப்பவர்களை, எமது மக்களே விட்டொதுங்கும் நிலையை மிக தந்திரமாக இலங்கை அமைத்துள்ளது. இப்படி ஒரு நிலையை 1995 க்கு பின்பே யாழிலும், 1990 க்கு பின்பே மட்டகளப்பு நகரிலும் உருவாக்கி விட்டனர். ஆனால் அப்போ இன்னொரு பிந்தளத்தில் புலிகள் இருந்த படியால்- இது முழு வெற்றி அளிக்கவில்லை. அவர்களின் தோல்விக்கு பின், இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளின் கூத்து அரசியல் பிண்ணனியில், இளையோர், புதிய சுவாரசியங்கள் அதிகமாக இந்த அணுகுமுறை இலங்கைக்கு கைமேல் பலன் கொடுக்கிறது. நான் நினைக்கிறேன் மிஞ்சி மிஞ்சி போனால் 5000 பேர் யாழில் புலனாய்வால் கண்காணிக்கப்படக்கூடும். மிகுதியை நம் மக்களே பார்த்து கொள்கிறார்கள். இன்னொரு தகவல்: 2009 க்கு பின் நான் இலங்கை அணிக்கு கிரிகெட்டில் சப்போர்ட் செய்வதில்லை. ஆனால் நான் யாழில் பேசிய 30 வயதுக்கு கீழ் பட்ட அனைவரும் (10 பேர் வரையில்) - இலங்கை அணியை, சி எஸ் கே யை ஆதரிக்கிறனர். நன்றி வசி, நீங்களும், மீராவும், சசியும் நான் சொன்னதை பிழையாக விளங்கி கொண்டுள்ளீர்கள். இலங்கையில் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் நிலை உள்ளது என நான் சொல்லவில்லை. எல்லாம் இருக்கிறது…விலை பல மடங்காகி உள்ள்து என்றே சொல்கிறேன்.
  25. வாசன், தினகரன் தாமரையில். கமலுக்கு கேட்காதபடியால் ஒதுக்கவே இல்லை என நினைகிறேன். தரவுகளை சரிபார்க்கவும். அப்படி பக்கசார்பாக நடந்திருந்தால் தை ஏன் உச்ச நீதிமன்றில் நாதக சொல்லவில்லை? அங்கேயும் தான் தோற்பதை ஏற்க முடியாத அதே bad loser குணம் உடைய அமெரிக்கன் சீமான் டிரம்ப் அவர் ஆட்கள்கள் இப்படி அலட்டுகிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.