Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. நான் இருக்க பயமேன்🤣 பிகு குசா அண்ணை மைன்ட் வாயய்ஸ்: நீங்க இருப்பீங்க….🤣
  2. இப்படி சொந்த நாடுகளை நாசமறுத்துப்போட்டு, அடைக்கலம் தந்த நாடுகளுக்கும் வந்து இங்கேயும் ஊத்த வேலை செய்வது - ஒட்டுமொத்தமாக இப்போ உள்ளூர்வாசிகள் கலக குரல் எழுப்ப காரணங்களில் ஒன்றாகிறது. கேட்டால் வெள்ளைகாரன் மட்டும் சுத்தமா என ஒரு கேள்வி.
  3. கோகிலா விடயம்தான் லிபாராவின் ஆரம்பமுமா என்பது உண்மையில் எனக்கு தெரியாது. லைக்காவில் வேலை பார்த்த ஆட்கள், சம்பளத்துக்கு வேலை செய்யாமல், தாமே தொடங்கிய வியாபாரம் என ஒரு நம்பகூடிய கதையையாவது backstory யையாவது செட் பண்ணி வைத்துள்ளார்கள். ஆனால் லைக்காவின் கதை படையப்பாவில் ரஜனி மலையை பிக்கானால் உடைத்து வித்து பணக்காரன் ஆனது போல் இருக்கும்🤣. பரிசில் போய் கேட்டால் வேற மாதிரி சொல்வார்கள். யூகேயில் இப்படி ஒரு ஐந்து வருடத்தில் சிங்கிள் டீக்கு சிங்கி- அடித்து விட்டு, தீடீரென ஜாவா சுந்தரேசன் ஆகி லம்போவில் வருவோர், தமிழர்கள் மத்தியில் அதிகம். கேட்டால் அவர்கள் சொல்லும் கதை விட்டலாச்சார்யா படம் போல இருக்கும்🤣. ஏன்?
  4. “கீதைக்கும் ராமாயணத்திற்கும் இருக்கும் மரியாதை திருக்குறளுக்கு இருக்கிறதா?” என்ற கேள்வி எழுப்பி, “அறிவுக்குத் திருக்குறளைப் பார். உழைப்பிற்குத் திருக்குறளைப் பார்" என்று முழங்கினார். திருக்குறளுக்கு மாநாடு நடத்தினார். மலிவு விலையில் குறளை அச்சடித்துக் கொடுத்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்தினார், தமிழறிஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று கர்ஜித்தார். பெரியார், “நான் இந்தி மொழிக்கு எதிரியல்ல! குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் எந்த மொழிக்கும் நான் எதிரியல்ல. நான் ஆதிக்கத்திற்கே எதிரி” என்றார். மொழி என்பது கருத்தைப் பரிமாறும் ஒரு கருவி. அதில் எளிமையை வேண்டினார். மொழியிலிருக்கும் ஆபாசங்களை எதிர்த்தார். மொழி என்பது பகுத்தறிவுக்கும் அறிவியலுக்கும் உதவி செய்ய வேண்டும் என்பதே அவர் எண்ணம். “செந்தமிழ் மொழியானாலும் பாமரனுக்குப் புரியவில்லை, அவனுக்கு முன்னேற்றம் இல்லை என்றால் என்ன பயன்?” என்பதே அவரது கேள்வி. குறிப்பாக மொழியில் மதம் சேர்த்ததை எதிர்த்து அதிகம் பேசியிருக்கிறார். இதே ஆதங்கத்தை 1962-ம் ஆண்டு ‘மொழியும் அறிவும்’ எனும் தலைப்பில், "ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ் மொழியானது, மொழியில், பொருளில், எழுத்தில், எவ்வித முன்னேற்றமும் மாறுதலும் அடையவில்லை. உலகத்திலேயே தலைசிறந்த நீதி இலக்கியமான திருக்குறள் தமிழில் உள்ளது. என் அனுபவத்திற்கு எட்டியவரையில் உலகத்திலேயே சிறந்த கணக்கு முறை, அதாவது இளஞ்சுவடி எனும் எண்கணக்கு இருக்கிறது. இவை இரண்டையும் கழித்துவிட்டால் தமிழில் தமிழனுக்குப் பயன்படக் கூடியதாக எதுவும் தென்படவில்லை. தமிழும் தமிழனும் பெரும்பாலும் பழங்காலச் சின்னமாகக் காணப்படுகின்றன" என்கிறார் பெரியார். கட்டுரையின் முடிவு : இதைக் கூர்ந்து கவனித்தால் பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி காலத்து மொழி என்று கூறிய விதம், ஒரு பூனை தனது இரையான எலியைப் பிடிப்பது போன்றது கிடையாது, மாறாகப் பூனை தன் குட்டியைக் கவ்வி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற உணர்வே! அதில் எந்தப் பற்றுக்கும் இடமில்லாமல் மனித பற்றை மட்டுமே பிரதானமாக வைத்து யோசித்திருக்கிறார் அந்த தொண்டு செய்து பழுத்த பழம். இன்று அவரின் 146-வது பிறந்த தினம்!
  5. இதோ இன்னுமொரு இணைப்பு…. உங்களிடம் விகடன் சந்தா இருக்கிறது என நினைக்கிறேன். வாசித்து பயனடையுங்கள். உண்மையை மீண்டும் ஒரு தரம் பறைசாற்ற நீங்கள் கொடுத்த வாய்ப்புக்கு நன்றி. பிகு இனி என்ன? விகடன், பிபிசி திராவிட ஊடகம் - அதுதானே🤣. Fact Check: நிஜமாகவே தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்றாரா பெரியார்? | Long Read https://www.vikatan.com/literature/tamil/did-periyar-actually-say-tamil-is-a-barbaric-language மேலே உள்ள விகடன் Fact-check தரவு சரிபார்க்கும் கட்டுரை சொல்லும் தரவுகளில் சில பெரியாரைப் பொறுத்தவரையில் கன்னடியன், தெலுங்கன், மலையாளி, தமிழன் என்ற வேற்றுமையே ஆரியத்தின் சூழ்ச்சி என்ற கருத்துடையவர். இவர்கள் நால்வர் பேசும் மொழியும் தமிழே! அதில் வடசொற்கள் கலந்தே பிரிவினை உண்டானது என்கிறார். நான்கு மொழி பண்டிதர்களை அழைத்து அந்தந்த மொழிகளில் இருக்கும் வடசொற்களை எடுத்துவிட்டால் தமிழே மிஞ்சும் என்கிறார். அவரைப் பொறுத்தவரை ஒன்றிலிருந்து நான்கு மொழி உருவாகவில்லை. நான்கு மொழியுமே தமிழ்தான் என்கிறார். இதனை 1948-ம் ஆண்டு எழுதிய மொழியாராய்ச்சி நூலில் விளக்கியிருக்கிறார். இதற்கு உதாரணமாக, ‘சாதி' என்ற வடமொழிச் சொல்லைத் தமிழிலிருந்து எடுத்துவிட்டால், அதற்குச் சரியான தமிழ்ச்சொல் வேறு இல்லை என்கிறார்! இதனால் வடமொழியினைக் கடுமையாகச் சாடியவர், இன்று பேசப்படும் வந்தேறி அரசியலுக்கு எந்த இடத்திலும் இடம் கொடுக்கவில்லை. மேலும் பகுத்தறிவு, விடுதலை, குடியரசு, உண்மை என்று தமிழ் மொழியிலே தனது இதழ்களைத் தொடங்கினார். இந்தி திணிப்பு போராட்டத்துக்காகச் சிறை சென்றார். தமிழ் இசையைக் கேட்கவேண்டும் என்ற இயக்கத்தைக் கொண்டு வந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் சமஸ்கிருத ஆசிரியர்களுக்கு உயர்ந்த சம்பளம் வழங்கி, தமிழ் ஆசிரியர்களுக்குக் குறைந்த சம்பளம் வழங்கிய நேரத்தில் அதற்கு எதிராகக் குரல் கொடுத்தார். தமிழர் தன் குழந்தைக்குத் தமிழில் பெயரிட வேண்டும், நமது ஊர், நகர், தெருவுக்குத் தமிழில் பெயர்கள் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ‘தமிழ் மொழி வளர்ச்சி’, ’தமிழ் பொழில்’, ‘தமிழுக்குத் துரோகமும் இந்திய மொழியின் ரகசியமும்’, ‘தமிழ்நாட்டின் நாகரீகமும் பழக்க வழக்கங்களும்’, ‘தமிழ் மொழியில் பிற மொழிகள் செய்யும் ஆதிக்கம்’ என மொழிகுறித்து பல கட்டுரைகள் எழுதினார். குறிப்பாக 1932-ல் மதராஸ் மாகாண அரசு, ஆங்கில சொற்களுக்குக் கலைச்சொல் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அதில் வடமொழி அதிகமாகக் காணப்பட, பெரியார், "சமஸ்கிருத தொடர்பினாலும் செய்தித்தாள்களில் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கத்தினாலும், நல்ல நல்ல தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்து போகின்றன. வடமொழிச் சொற்களும், ஆங்கில சொற்களும் தமிழில் கலக்கக்கூடாது என்ற முரட்டுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என நான் கூறவில்லை. ஆனால் எளிய தமிழில் ‘தண்ணீர்' இருக்கும் போது ‘ஜலம்' வேண்டியதில்லை என்கிறோம். ‘தூக்கம்' இருக்கும் போது 'நித்திரை' வேண்டாம் என்கிறேன். எனவே கூடுமானவரையில் நல்ல எளிய சுத்தமான தமிழிலேயே கலைச் சொற்களையும் பிற சொற்களையும் கொண்ட நூல்கள் இனி இயற்றப்படுதல் வேண்டும்" என்றார்.
  6. இதைத்தான் ஒரு விடயத்தை சூழமைவை (context) கருதாமல் நுனிப்புல் மேய்வது என்பது. உண்மையில் நீங்கள் யாழில் சீமான் பிரச்சாரம் தவிர எழுதப்படும் விடயங்கள் எதையும் வாசிப்பதில்லையா? இதை பற்றி நானே திருமாவேலன் எழுதிய நீண்ட விகடன் கட்டுரையை யாழில் பதிந்துள்ளேன். இன்னொரு பிபிசி இணைப்பு கீழே இதை விட பல திரிகளில் இந்த பொய் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. BBC News தமிழ்நிர்மலா சீதாராமன் சொல்வது போல் பெரியார் தமிழை 'காட்டுமிரா...தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் படத்தை திமுகவினர் ஒவ்வோர் அறையிலும் வைத்திருப்பதாக நிர்மலா சீதாராமன் மக்களவையில் விமர்சித்தார். உண்மையில் பெரியார் கூறியது என்ன? தமிழை அவர் ஏன் காட்டுமிராண்டி
  7. ஓ…அப்போ சிறு தூள், மன்னிக்கவும் துகள் பெரு வெள்ளம் ஆகியது என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்🤣.
  8. சிலருக்கு சுட்டு விட்டது. அஞ்ஞாதவாசம் கலைக்கும் அளவுக்கு சுட்டு விட்டது. “அண்டங்காக்காயை சொன்னா, சாதா காக்காயுக்கு கோவத்தை பாரேன்” -அமரர் விவேக்- பிகு இதே ஆட்கள்தான். சிறுவர் துஸ்பிரயோகத்தை, ஜெப்ரி இஸ்டீன் செய்யவில்லையா? இளவரசர் அண்டுரூ செய்யவில்லையா ஒரு அப்பாவி தமிழ் பையன் செய்தால் தப்பா என எழுத கூடிய பிரகிருதிகள். தாம் கறுப்பாடுகளாய் இருந்து வயிறு வளர்ப்பது மட்டும் இன்றி, அதில் தப்பில்லை என சமூகத்தையே கறுப்பாடுகளாகும் படி வேதம் ஓதும் சாத்தான்கள். நல்வழி சொல்பவர்களுக்கு இவர்கள் வைக்கும் பெயர் வக்கில்லாதவர்கள். மொள்ளமாரித்தனம் பண்ணி வயிறு வளர்ப்பதற்கு, திண்ணை பேச்சு வீரராய் வாழ்ந்து விட்டு போகலாம்.
  9. சிறுவர் துஸ்பிரயோகிகளையே நியாபப்டுத்திய ஆட்கள், இதுக்கு கண்கலங்காட்டித்தான் பிழை 🤣
  10. இதில் எந்த தவெக ஆட்கள் மீதும் கொலை குற்றம் சுமத்தபட முடியாது. ஆனால் - சதி என்பது நிருபணமானால் - பல திமுக தலைகள் உருளலாம்.
  11. ஓம்…அப்போதே இந்த கட்டுரையை பகிர்ந்த்தேன். ஆனால் அப்போ சில திரிகளில்….எப்படி எண்டாலும் உழைத்தால் போதும்… உலகில் களவு செய்யாதவன் யார்… அப்படி இருந்தால் அவன் பிழைக்க தெரியாதவன்…. என்ற ரீதியில் கருத்துக்கள் பதியபட்டு கொண்டிருந்ததல்லவா…. அதில் ஒன்றில்தான் இந்த தம்பதிகள் உதாரண புருசர்களாகினர். லைக்காவையும் தலையில் தூக்கி வைத்து ஆடினார்கள். அவர்கள் ஆரம்பம் பற்றி எழுதி - அதற்கும் வாங்கி கட்டிக்கொண்டேன் 🤣.
  12. சீமான் என்ற அழுக்கை…மழை, தூவானம் இல்லாவிட்டாலும், கிணத்தில் மோட்டார் போட்டு இறைத்தாவது கழுவி, கழுவி ஊத்தல் வேண்டும். என்னை கைய பிடிச்சு இழுத்தியா🤣
  13. இந்த தாயார் எழுதியது சுத்த அலப்பறைதான்…. மகளின் திருமணம் என்பது தனிப்பட்ட விடயம். அதை போட்டோ எடுத்து போடலாம்….அதற்குள்ளும் பூர்வகுடி, பூர்ஷுவா குடி என தனது இடதுசாரி அரசியலை நுழைத்த்திருக்க தேவையில்லை. ஆனால்….விமர்சனம் அதை விட்டு விட்டு, மாப்பிள்ளையின் இனம் சார்ந்து குரோதமாக அமைவது ஏற்புடையதல்ல.
  14. https://www.ft.com/content/51134511-15a3-4be0-acc3-5c84c10514ba இதில் இருவரின் படமும் உள்ளது. தெரிகிறதா?
  15. உறவுகளுக்கு நினைவிருக்கும்… மேற்படியாரை புலம்பெயர் சமூகத்துக்கு ஒரு முன்மாதிரி என கள உறவு நாதமுனி முன்னர் பிரஸ்தாபித்து இருந்தார். யாராவது நாதத்துக்கு ஒரு @ போட்டு விடவும் 🤣
  16. பிரித்தானியாவில் ஆரம்பத்தில் கோலிங்கார்ட் வியாபாரம், பின்னர் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தொடங்கி, நூற்றுக்கணக்கான நிலையங்கள், அதன் அடுத்தபடியாக லிங்கன்ஷேர் பகுதியில் பிரிதானியாவில் இருக்கும் நாலு எண்ணை சுத்தீகரிப்பாலைகளில் ஒன்றை வாங்கி நடத்தியவர் இலங்கை தமிழர்களான வின்சண்ட் சஞ்சீவ்குமார் சூசைபிள்ளை, அவரின் மனைவி ஆரணி சூசைப்பிள்ளை. இப்போ இவர்கள் நிறுவனம் £1.5 பில்லியன் (ஆயிரத்து ஐநூறு மில்லியன் பவுண்டஸ்) கடனில் திவாலாகியுள்ளது. இவர்கள் இருவரும் நிதியை முறையாக கையாளாமை, அதீத கடனில் வியாபாரத்தை விரிவாக்கியது என பலதவறுகளை விட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஊழியர்களுக்கு பல மில்லியன் சம்பளபாக்கியை வைத்து விட்டு, இவர்கள் இருவரும் மிக அண்மையில் கூட பல மில்லியன்களை கம்பெனியில் இருந்து தமது சொந்த வருமானமாக எடுத்துள்ளனர். பிரித்தானிய திறைசேரி, இன்னும் பல நிறுவனக்களுக்கும் இவர்கள் பல மில்லியன் ஆப்பை செருகி உள்ளனர். நிறுவனதின் சொத்து 150 மில்லியனை கோர்ட் முடக்கி உள்ளது. ஆனால் இது இவர்களின் கடனில் 10% மட்டுமே. இவர்களின் நீச்சல்தடாகம், சோனா, ஸ்பா வசதிகளுடனான, வேபிரிஜ் எனும் அதீத செல்வந்தர் வாழும் இடத்தில் உள்ள 5 மில்லியன் பெறுமதியான வீட்டை விற்கபோட்டுள்ளனராம். இவர்கள் இலங்கைக்கு தப்பி ஓடி இருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது. (மூலம் - பிரித்தானிய ஊடகங்கள் + யாழ்கள நிருபர் கோஷான் களத்தில் இருந்து🤣 ) https://www.theguardian.com/business/2025/sep/04/uk-court-freezes-150m-of-assets-of-collapsed-prax-lindsey-oil-refinery-owner https://www.theguardian.com/business/2025/aug/20/loan-irregularities-collapse-prax-lindsey-oil-refinery https://finance.yahoo.com/news/couple-behind-doomed-oil-refinery-070000350.html?guccounter=1&guce_referrer=aHR0cHM6Ly93d3cuZ29vZ2xlLmNvbS8&guce_referrer_sig=AQAAAEZhFmvvT-Q_g2dpoByQb88U5CLGaHOs6eKHVGfyQG1TemU60KuopVeWlK8Pp3WXx84mkZfOJIrh-0HKWxKKfgRoGpVoDqH6WCvCC4ao7KTBMevyKJB03V1x2Cp9ffzD-DfoN8KWJl9XRKg70LBfxjSEJ1YSS131b2y_Xb6pIJLd
  17. இதில் எடப்பாடி மிஸ்ஸின். உண்மை. இது எமக்கு புரிவது போல் மக்களுக்கும் புரியும். திமுகவை இந்த விடயத்தில் விமர்சிக்காமல், விஜையை போட்டு தாக்கோ தாக்குவது எதிர்மறை விளைவையே நாதகவுக்கு கொடுக்கும். அதுவும் விகடன் சீமான் சபரீசனிடம் பெட்டி வாங்கி விட்டார் என விகடன் எழுதிய பின், இப்படி நடப்பது கிட்டதட்ட பெட்டி வாங்கியே உள்ளார் என்பதை சாதாரண மக்கள் மனதில் ஆழப்பதிக்கும். ஒரு ஈழதமிழனின் நியாயமான மனநிலை. ஆனால் இதன் பிரதியீடு பாஜக அமைசர்கள் உள்ள தமிழ் நாடு அரசு எனில் - அதை விட தமிழக மக்கள் நலனுக்கு திமுக ஆட்சி தொடர்வதே உசிதமானது.
  18. கரூர் வழக்கை விசாரிக்கும் சிபிஐ.. தலைமை தாங்கும் அஜய் ரஸ்தோகி.. யார் இவர்? பின்னணி என்ன? Shyamsundar IUpdated: Monday, October 13, 2025, 12:12 [IST] முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி 1958ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி பிறந்தார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் புகழ்பெற்ற சிவில் வழக்கறிஞராக இருந்த அவரது தந்தை ஹரிஷ் சந்திர ரஸ்தோகியின் வழியில், 1982ஆம் ஆண்டு சட்டத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார். வழக்கறிஞராக, நீதிபதி ரஸ்தோகி பல சட்டப் பிரிவுகளில் பணியாற்றினார். அதே சமயம், அவர் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சேவைச் சட்டங்களில் முக்கிய கவனம் செலுத்தினார். 1990ஆம் ஆண்டு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட அவர், 2004ஆம் ஆண்டு வரை அப்பதவியில் நீடித்தார். 1999 முதல் 2000 வரை ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். Also Read ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, 2013ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி வரை மாநில சட்ட சேவை ஆணையத்தின் நிர்வாகத் தலைவராகப் பணியாற்றினார். அவரது தலைமையின் கீழ், இந்த ஆணையம் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்திடமிருந்து மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. முக்கிய தீர்ப்புகளை வழங்கிய சஞ்சய் ரஸ்தோகி 2014ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நிர்வாக நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், 2018ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி திரிபுரா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். இந்த பதவி உயர்வு வரை அவர் அப்பதவியில் நீடித்தார். முன்னதாக, 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி வரை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார். நீதிபதி அஜய் ரஸ்தோகி 2018ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். நீதிபதியாக பல முக்கிய தீர்ப்புகளை வழங்கி உள்ளார். பெண் நேவி ஊழியர்களுக்கு கட்டாய கமிஷன், ஐஏஎஸ் தேர்விற்கான வயது வரம்பை நீக்க முடியாது, அங்கன்வாடி ஊழியர்களுக்கு கிராஜுவிட்டி வழங்கலாம், தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு உரிமையை நிலைநாட்டுவதற்கான தீர்ப்பை வழங்கிய அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றவர், உள்ளிட்ட பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. Recommended For You வழக்கு பின்னணி தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தமிழக வெற்றிக்கு கழகம் கூட்டத்தில் பலியான சிறுவனின் பெற்றோர் தரப்பு கடந்த வாரம்தான் உச்ச நீதிமன்றத்தில் வாதம் வைத்தது. அவரின் பெயரில் வழக்கு பதியப்பட்டது. சிபிஐ விசாரணை வேண்டும் என்று இவர்கள் மனுதாக்கல் செய்தனர். இதனால் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக வெற்றிக்கு கழகம் கூட்டத்தில் பலியான சிறுவனின் பெற்றோர் தரப்பு வாதம் வைத்தது. அதாவது அரசு நியமித்த SIT மீது நம்பிக்கை இல்லை. அதனால் சிபிஐ விசாரணை வேண்டும். அதற்கு அனுமதி அளிக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தின் SITஐ கலைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கில்தான் இன்று கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. https://tamil.oneindia.com/news/chennai/who-is-retired-judge-ajay-rastogi-who-will-lead-the-cbi-investigation-in-tvk-vijay-karur-incident-742699.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel
  19. 🤣 அவர் அப்படி ஒரு கூட்டணி (பாஜக வோடு சேர்ந்து) சேர்ந்தால் - எனது மானசீக வாக்கு திமுகவுக்கு. பிகு நான் எழுதுவதை வாசிக்கிறீர்கள்தானே அண்ணை? எனது நிலைப்பாடு என்ன என்பதையிட்டும் நீங்கள் கனவில் இருப்பது போல உள்ளது.
  20. இதில் பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என சொன்னார் என்பது தொட்டு பல சீமானின் பொய்களை அவிழ்த்து விட்டுள்ளீர்கள். இவை ஏலவே பல திரிகளில் அடித்து நொருக்கப்பட்ட வாதங்கள் என்பதை வாசகர் அறிவர். யாழில் கட்சி பிரச்சாரம் செய்யத்தடை என்பதால் - என்னை கேள்வி கேட்டு… ஒரு நூதன பிரச்சாரம் செய்ய முனைகிறீர்கள் என்பது தெரிகிறது🤣. ஆனால் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான விடை தேவை எனில் யாழில் “சீமான்” என தேடி, அதில் நான் எழுதிய கருத்துக்களை வாசித்தால் பதில்கள் கொட்டி, கொட்டி கிடக்கும்🤣.
  21. இஸ்ரேலுக்கு முழு பலஸ்தீனத்தையும் தாரை வார்க்காமல் ஹமாஸ் ஓயமாட்டார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.