Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்

Everything posted by goshan_che

  1. நான் என்ன எழுதினேன், நீங்கள் என்ன எழுதியுள்ளீர்கள் அண்ணை? ஓரு அரைபைத்தியம் பள்ளி சிறுமிகளை (18 வயதுக்கு கீழானவர்களை) கர்ப்பம் தரிக்க உதவி தொகை கொடுக்கிறது, அதை நீங்கள் நல்ல விடயம் என்கிறீர்கள். ஒரு மைனர் பெண் குழந்தை இன்னொரு குழந்தையை சுமப்பதை நல்ல விடயம் என்றா சொல்கிறீர்கள்?
  2. இந்தியாவும் தமிழ் நாடும் அப்படித்தான் ஐயா, பெரியவரே. ஆனால் பாலகன் நான் சொல்ல வந்தது - இப்படியான கொலைகள் நடக்கும் போது முன்னர் இருந்த அரச அலட்சியம் இங்கே இல்லை. மாறாக ஒரு மாநில அரசு செய்ய கூடிய, வேண்டியதை தா நா அரசு செய்துள்ளது. 🤣 ஈ வே ரா வோ…. வே. பி யோ…. நல்லதை நல்லதெனவும், அல்லதை அல்ல எனவும் சொல்லியே பழக்கம். அப்படி சொல்லும் போது எந்த வண்ணத்தை எவர் தீட்டினாலும் பரவாயில்லை 🤣.
  3. இல்லை. ஒரு விடயத்துக்காக நினைவு வைத்துள்ளோம். ஐயாவுக்கு கொடுத்த அந்த கொழும்பு 7 வீட்டை மகள் திருப்பி அரசுக்கு கொடுத்து விட்டாவா?
  4. வளர்ந்ததும் - வீரகேசரி, ஆதவன், தினக்குரல், லங்காசிறி போன்ற நிறுவனங்களில் proofreader ஆக சேரலாம் 🤣. அதுசரி proofreader க்கு என்ன தமிழ்? தகவலுக்கு நன்றி.
  5. இதெற்கெல்லாம் முன்பே, “திரள்நிதியில் கொழுப்பேன், டெபாசிட்டை கொடுப்பேன்” என்ற மகுடவாக்கியத்தோடு அண்ணன் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார். ஈரோடு கிழக்கு இடத்தேர்தலின் பின் தமிழ்நாட்டின் 2வது பெரிய கட்சியாகிவிட்ட நாதகவை, பிபிசி வேணும் என்றே இந்த கட்டுரையில் புறக்கணித்துள்ளது. புலம்பெயர் தமிழர் ஆதரவுடன் பிரிதானியாவில் நாதக ஆட்சியை கைபற்றி விடல்கூடாது எனும் பயமே இதற்கு காரணம்.
  6. சொல்லாதே யாரும் கேட்டால்…எல்லாரும் தாங்க மாட்டார்🤣 ⚰️+🦜 👆👇🤦‍♂️
  7. நீங்களும் கஞ்சா கப்ஸா கதைகள் சொல்ல ஆரம்பித்து விட்டீர்களா?🤣. George Floyd கொலையில் எந்த அமெரிக்க ஜனாதிபதி பதவி விலகினார்?
  8. யாழ்களத்தில் மட்டும் 2 பக்கம் ஓடியுள்ளதே புலவர் - அவரிடம் கேட்கும் மனிதாபிமானத்தோடு நாமும் விசாரணை முடியும் வரை சும்மா இருதிருக்க வேண்டும் அல்லவா? அவரவர் தம் அஜண்டாவோடு கருத்து சொல்லலாம். இப்போ அண்ணாமலையோடு அந்த படத்தில் இருப்பது நிகிதா அல்ல தான் என இன்னொரு பாஜக பெண் கூறியுள்ளார். அவர் கருத்து சொல்வது, திசை திருப்பல் என நீங்கள் கருதினால் அதை எழுதலாம். ஆனால் சின்ன திரை நடிகை, நடிக்கிறார் என்பது தேவைதானா? நீங்கள் எழுதும் கருத்தை, உங்கள் தொழிலோடு தொடர்புபடுத்தி, எழுதினால் சரியாக இராதுதானே?
  9. தமிழ் தேசியத்தை வளர்க்க இலங்கைக்கு போங்கள் புலவர். அங்கேதான் தமிழ் தேசியத்தை வளர்க்க வேண்டிய அதீத தேவை உள்ளது. நான் மேலே சொன்னது நானாககவோ, அல்லது அநேமேதய கணக்கு களில், யுடீப் வீடியோ ஆதாரங்கள் அல்ல. தட்ஸ் தமில் எனும் நீண்ட்காலமாக உள்ள ஒரு செய்திதளத்தில் இருந்துதான். சர்மிளா ஒரு மருத்துவர், அவரை சின்ன திரை நடிகை என கேலி பேசுகிறீர்கள். நீங்கள் என்ன? பெரிய திரை நடிகரா? அரசியலில் யாரும் கருத்து சொல்லலாம். அவரின் தொழில் முக்கியம் அல்ல. ஒரு அநியாய கொலை நடந்துள்ளது. அதில் பல மர்ம முடிச்சுக்கள். அதை எதையும் கதைக்காமல், எழுதாமல் தமிழ் தேசியம் வளர்கிறோம் பேர்வழி என அரசு மீது குற்றம் சுமத்துவது, உண்மையான குற்றவாளிகள் தப்பவே வழி வகுக்கும். அதைதான் நீங்கள் செய்கிறீர்கள். உங்களுக்கு திமுக மீது பழி தீரக்க வேண்டும் என்பதால் அஜித் குமார் கொலையை அவர்கள்தான் செய்தார்கள் என இழுத்து மூட முடியாது. என்ன பச்ச புள்ளை மாதிரி எழுதுறீங்க. பாஜக உள்ளே வருவது என்பது ஆட்சி அதிகாரத்தை அவர்கள் பெறுவதை குறிக்கும். இப்போ நடந்துள்ளதாக கூறப்படுவது அதுவல்ல, இங்கே முன்பு திமுக, அதிமுக வுக்கு நெருக்கமாக இருந்து பின்னர் பாஜகவுக்கு நெருக்கமாகி போன ஒரு பெண்ணும், சில உயர் பாஜக ஆதரவு அதிகாரிகளும் சேர்ந்து, இதை ஒப்பேற்றி உள்ளார்கள் என்பதே ஒரு தரப்பு வாதம். இது சரி என நான் சொல்லவில்லை. ஆனால் இதுவும் ஒரு கோணம். இதற்கும் பாஜக உள்ளே வருவதை தடுப்பற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. தமிழ் நாடு இந்தியாவில் ஒரு மாநிலம், மத்தியில் அசுர பலத்தோடு ஆட்சியில் இருக்கும் கட்சி, மாநிலத்தில் ஆட்சியில் இல்லாவிடினும் சில தில்லாலங்கடிகளை செய்ய முடியும்.
  10. கு சா அண்ணைக்கு இந்தியன் ஹொலிடே விசாவில் ஏதோ சிக்கல் என நினைக்கிறேன்🤣. திடீரென ஒரு நாள் ரஸ்யா உக்ரேனில் நடக்கும் விதமும், இந்தியா இலங்கை தமிழர் விடயத்தில் நடந்த விதமும் சரிதான் என எழுதினவர் 🤣. நல்லகாலம் தமிழ்நாடு அரசுக்கு இந்த பவர் இல்லை, இல்லாட்டில் இங்க கனபேர் “ஸ்டாலிந்தான் வாறாரு, விடியல் தரப்போறாரு” எண்டு எழுத வேண்டி வந்திருக்கும்😂.
  11. அழைத்து செல்லாமைக்கான காரணம் என்ன என பாடசாலையிடம் கேட்க வேண்டும் என வீரகேசரிக்கு தோணவில்லை போலும்🤣.
  12. நல்லவேளை பாடலாசிரியரை கைது செய்யவில்லை? எழுதுவிளைஞர்?
  13. பிண அரசியல் செய்பவர்களுக்கு கொஞ்சம் டெலிகேட் பொசிசன் 👇 இனி இந்த செய்தியை வெளிகொணர்ந்த தமிழ் நாட்டு ஊடகங்களை திட்டுவதை ஆரம்பிப்பார்கள் என நினைக்கிறேன்🤣. அன்னையே.. அம்மா.. காவலரே! அண்ணாமலை, ஜெயலலிதாவை.. பாராட்டி போஸ்ட் போட்ட நிகிதா! Shyamsundar IPublished: Friday, July 4, 2025, 18:13 [IST] சென்னை: கஸ்டடி விசாரணையில் கொலை செய்யப்பட்ட அஜித் குமார் மீது புகார் அளித்த நிகிதா தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவர் தீவிரமாக அரசியல் கட்சிகள் தொடர்பாக பேசி வந்தது குறிப்பிடத்தக்கது. இளைஞர் அஜித் குமார் போலீசார் நடத்திய விசாரணையில் கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நிகிதா என்ற பெண் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டார். தற்போது தாய் சிவகாமியுடன் வசித்து வரும் நிகிதா, தாய்க்கு ஸ்கேன் எடுப்பதற்காக மதுராபுரம் கோவிலுக்கு சென்றபோதுதான் நகை திருட்டு புகார் வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே அஜித்குமார் மரணம் நிகழ்ந்துள்ளது. மதுராபுரம் கோவிலில் தனது அம்மாவிற்கு சக்கர நாற்காலி (வீல் சேர்) வேண்டும் என்று நிகிதா கேட்டதற்கு, காவலாளி அஜித் குமார் ரூ.500 கேட்டுள்ளார். அதற்கு ரூ.100 தருவேன் என்று நிகிதா கூறிய நிலையில் அது வாக்குவாதம் ஆகி, இதனால் கோபம் அடைந்த நிகிதா நகை காணவில்லை என்று பொய் வழக்கு போட்டதாகக் கூறப்படுகிறது. ஐஏஎஸ் மூலம் போலீசாருக்கு பிரஷர் போட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா என்பவர் ஏற்கனவே மோசடி வழக்கில் சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது. வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 16 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக 2011ஆம் ஆண்டு நிகிதா மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. நிகிதா அரசியல் அஜித் குமார் மீது புகார் அளித்த நிகிதா தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவர் தீவிரமாக அரசியல் கட்சிகள் தொடர்பாக பேசி வந்தது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக திமுகவிற்கு எதிராக இருக்கும் கட்சிகளான அதிமுக, பாஜகவிற்கு இவர் ஆதரவளித்து வந்துள்ளார். முக்கியமாக பாஜக தலைவர் அண்ணாமலையை புகழந்து பல முறை போஸ்ட் போட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனக்கு அரசியல் தொடர்பு உள்ளதாக கூறி பலரை ஏமாற்றி வந்தது அம்பலம் ஆகி உள்ளது. அஜித் குமார் காவல் நிலைய மரண வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிகிதா மீது ஏற்கனவே பல மாணவிகள் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரியில் பணியாற்றிய போது ஏற்கனவே பல்வேறு புகார்கள் வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டே அவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். தாவரவியல் துறைத் தலைவராக பணியாற்றிய நிகிதா, தனது பொறுப்புகளை சரிவர நிறைவேற்றவில்லை என்றும், கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவுகளை ஏற்க மறுத்ததாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவரை பணியிடமாற்றம் செய்யக் கோரி மாணவிகள் அளித்த மனுக்களைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மே மாதம் இதுகுறித்து விசாரிக்க கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். விசாரணைக்கு பின், இணை இயக்குனர் குற்றச்சாட்டுகளை உறுதி செய்து, கல்லூரி கல்வி இயக்குனருக்கு விரிவான அறிக்கை சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. அந்த பைல் பல நாட்களாக மேஜையில் உறங்குவதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றாலும், தற்போது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://tamil.oneindia.com/news/chennai/old-post-of-nikita-on-annamalai-jayalalitha-on-limelight-again-amid-ajith-kumar-custodial-row-717873.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards
  14. மருத்துவரும், நடிகைகையுமான சர்மிளா சொன்னது சரி வரும் போல இருக்கே… அண்ணாமலையுடன் நிற்கும் நிகிதாவின் புகைப்படம்.. நயினார் நாகேந்திரன் கொடுத்த ரியாக்சன்! Yogeshwaran MoorthiPublished: Friday, July 4, 2025, 18:06 [IST] காவல்துறையின் கடுமையாக தாக்குதல் காரணமாக திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் அனைவரின் கவனமும் நகை திருடுபோனது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த நிகிதா மீது திரும்பியுள்ளது. ஏற்கனவே நிகிதா மீது பல்வேறு பணமோசடி புகார் எழுந்துள்ளன. இதுதொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். நிகிதா வீடியோ அதேபோல் நிகிதா தொடர்ச்சியாக திருமண மோசடியில் ஈடுபடுபவர் என்று முன்னாள் கணவரும், ஃபார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவருமான திருமாறன் குற்றம்சாட்டி இருக்கிறார். இதன் காரணமாக நிகிதா கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே கோவையில் உள்ள உணவகம் ஒன்றில் நிகிதா இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. பாஜக ஆதரவாளர் நிகிதா இதனிடையே நிகிதாவின் சோசியல் மீடியா பக்கம் மூலமாக அவர் பாஜக ஆதரவாளராக செயல்பட்டு வந்திருப்பது தெரிய வந்துள்ளது. அண்மையில் நடந்த முருகன் மாநாட்டில் கூட நிகிதா கலந்து கொண்டிருக்கிறார். அதேபோல் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் நிகிதா புகைப்படம் எடுத்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நயினார் நாகேந்திரன் பேட்டி இதனால் நிதிகிதாவிற்கு உதவி செய்வது பாஜகவா என்ற விவாதம் தொடங்கியது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்த போது, அண்ணாமலையுடன் நிகிதா இருக்கும் புகைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நயினார் நாகேந்திரன், அந்த புகைப்படத்தை இதுவரை நான் பார்க்கவில்லை. நிகிதாவிற்கு சம்பந்தமா? ஆனால் பொதுவாக நாங்கள் ஒரு இடத்திற்கு செல்லும் போது, நிறைய பேர் புகைப்படம் எடுத்து கொள்வார்கள். புகைப்படம் எடுப்பவர்களின் பின்னணி என்ன என்பது எங்களுக்கு தெரியாது அல்லவா.. முருகன் மாநாட்டை முழுக்க முழுக்க நடத்தியது நாங்கள் தான். நிகிதா என்ற பெண்ணை நீங்கள் சொல்லிதான் எங்களுக்கு தெரியும். அதில் யாருடைய பங்களிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார். கோவையில் நிகிதா? நிகிதாவை போலீசார் தேடி வரும் நிலையில், அவர் குறித்த புகார்கள் தொடர்ச்சியாக எழுந்த வண்ணம் உள்ளன. கோவையில் முகாமிட்டுள்ள நிகிதாவை விரைவில் போலீசார் கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நிகிதாவிடம் விசாரணை நடத்தும் பட்சத்தில், அஜித் குமார் மரண விவகாரத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கும் விடை கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. https://tamil.oneindia.com/news/madurai/bjp-s-nainar-nagendran-clarifies-on-viral-photo-of-nikita-with-ex-tn-chief-annamalai-717869.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards
  15. சாத்ஸ்சும் அனுரா கீதம் இசைத்தவர். இதுதான் காரணம் போலும். கு. சா, விசுகு அண்ணைமார் - பார்த்து பழகவும் 🤣
  16. உங்களை நீங்களே பெரியவர் என்கிறீர்களா 😂. நான் ஏற்றுகொள்கிறேன். ஒரு கொலை அநியாயமாக, சட்ட விரோதமாக நடந்துள்ளது. அதில் எவர் சம்பந்த பட்டிருந்தாலும் அவர்கள் தண்டிக்க பட வேண்டியவர்களே. வழக்கை மத்திய அரசின் கீழ் உள்ள புலனாய்வு அமைப்பான சி பி ஐக்கு 3 நாளுக்கு முன்பே மாற்றியாகி விட்டது. அவர்கள் எந்த மாநில அரசின் அளுத்தமும் இன்றி எவரையும் உலுக்கலாம். அப்படி உலுக்கி முடிவு வரட்டுமே? அதுவரை பொறுக்காமல் அமைச்சராம், அவராம், இவராம் என ஊகம் பரப்புவது கொலையை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே. இதைத்தான் டாக்டர் சர்மிளா செய்வதாக (பிஜேபிக்கு எதிராக) மேலே புலவரும் கூறி உள்ளார்.
  17. ஐ….அப்ப ஊருக்கு போய் வாறியள்? யாழில் அனுரவுக்கு ஆதரவாக எழுதும் போதே நினைத்தேன் 😂.
  18. இருக்கலாம்… சங்கிகளும் சளைத்தவர்கள் அல்ல. எந்த எல்லைக்கும் போக துணிந்தவர்கள். இந்த நிகிதாவை பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினால் உண்மை வெளிவரும். ஆனால் நான் வெறும் கம்பளைண்ட்தான் கொடுத்தேன், அடித்தது அதிகாரிகள் எனக்கு அதில் சம்பந்தமில்லை என அவர் சொல்வார். அரசியல்வாதிகளுக்கு, கட்சிகளுக்கு நெருக்கமாக இருப்பதை, அல்லது அப்படி இருப்பது போல் காட்டி கொண்டு, அரசியல்வாதிகள் கூட செய்ய தயங்கும், அல்லது செய்ய முடியாத அராஜகத்தை செய்பவர்கள் இந்திய அதிர்காரிகள் வர்க்கம். எப் ஐ ஆர் போடாமல், தனிப்படை அமைத்து, 7 சவரன் நகைக்கு விசாரணை என்பது ஏதோ ஒரு மந்திரி வீட்டு களவை விசாரிப்பது போல் நடந்துள்ளது. அந்தளவுக்கு எங்கே இருந்து பிரஷர் வந்தது - பொலிஸ் உயரதிகாரியா? தலைமை செயலக அதிகாரியா? அல்லது ஒரு அரசியல்வாதியா? சாத்தான் குளம் போல அன்றி இங்கே உடனடியாக பிழை இல்லாதா மரண விசாரணை நடந்து, வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, காவலர்கள் சிறை எடுக்கப்பட்டு, சாட்சிக்கு ஆயுத பொலிஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு, விசாரணை சி பி ஐ வசம் ஒப்படைக்க பட்டுள்ளது. ஆகவே கொலைக்கு பின்னாவது மாநில அரசின் நடவடிக்கைகள் பராவாயில்லாமல் உள்ளது. ஆனால் - இந்த அதிகார துஸ்பிரயோகத்தின் பின் இருந்தது அரசியல்வாதி ஒருவரா, அல்லது வெறும் அதிகாரிகளா என்பதை அறிய சில மாதம் செல்லும்…. அதுவரை நயினாரும், எடப்பாடியும், விஜையும், சீமானும், சில யாழ்கள உறுப்பினர்களும் இதை வைத்து நன்றாக பிண அரசியல் செய்ய அவகாசம் இருக்கிறது 😀.
  19. இந்த கொலை குஜராத் ரயில் எரிப்பு பாணியில் சில சங்கி காவல் அதிகாரிகளை வைத்து பிஜேபி ஆடிய நாடகம் என இப்போ பலர் எழுத ஆரம்பிக்கிறனர். அதாவது நகை காணாமல் போகவே இல்லை, அநியாயமாக ஒரு பொய் குற்றசாட்டை கூறி, சங்கிகளால் வாங்கப்பட்ட டிஸ்பி ஒருவர் மூலம் இந்த பையன் கொலை நடந்துள்ளதாம். நிகிதா முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு வேண்டப்பட்டவர் என கூறி பல மோசடிகளை செய்துள்ளாராம். திருப்புவனம் சம்பவமே அரசியல் டிராமாவா என சந்தேகம் வருது.. பாஜக மீது லைட்டை திருப்பிய டாக்டர் ஷர்மிளா Vignesh SelvarajPublished: Thursday, July 3, 2025, 21:54 [IST] சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித் குமார் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவலர்கள் கொடூரமாகத் தாக்கியதில் இளைஞர் அஜித் குமார் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். யார் இந்த நிக்கிதா? அஜித் குமார் போலீசாரால் கொல்லப்பட்ட வழக்கில், புகார் அளித்த நிக்கிதா குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை மாவட்டம், திருமங்கலம் ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபெருமாள். இவர் மறைந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. இவரது மகள் நிக்கிதா முனைவர் பட்டம் பெற்றவர்; திண்டுக்கல் அரசு மகளிர் கலை கல்லுாரியில் தாவரவியல் பேராசிரியையாக உள்ளார். தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. நிக்கிதா, அவரது தாயார் ஆகியோர், திருமங்கலம், கள்ளிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வசூலித்ததாகவும், அவர்களுக்கு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாகவும் பல லட்சம் ரூபாய் மோசடி வழக்கு, திருமங்கலம் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் கடந்த 2011 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு மோசடி புகார்களும் நிக்கிதா மீது அளிக்கப்பட்டுள்ளன. பயங்கர மோசடி முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் உதவியாளர்கள், அமைச்சர்கள் ஆகியோரிடம் தனக்குப் பழக்கம் இருப்பதாகவும் அவர்களிடம் பேசி அரசு வேலை வாங்கித் தருவதாகப் பலரை நிகிதா ஏமாற்றியிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தற்போது நிக்கிதா மீது அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்து வருகின்றனர். திருப்புவனத்தில் நகை திருட்டு என்ற புகார் கூட பொய்யான தகவலாக இருக்கலாம் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நகை திருட்டு வழக்கில் புகார் அளித்த நிக்கிதாவின் அடுக்கடுக்கான மோசடிகள் வெளிச்சத்திற்கு வரும் நிலையில் விசாரணை வளையத்திற்குள் நிகிதா கொண்டு வரப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. டாக்டர் ஷர்மிளா சந்தேகம் இந்நிலையில், நிக்கிதாவின் பின்னணி தொடர்பாக சந்தேகங்களை எழுப்பியுள்ளார் டாக்டர் ஷர்மிளா. மதுரையை மையமாக வைத்து பாஜக நடத்தும் அரசியல் டிராமாவாக கூட இது இருக்கலாம் என சந்தேகம் கிளப்பியுள்ளார் ஷர்மிளா. டாக்டர் ஷர்மிளா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நிக்கிதா மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவராம். முன்னாள் துணை முதலமைச்சர் தனக்கு நெருக்கம் என்று சொல்லி பல பேரிடம் பண மோசடி செய்திருக்கிறாராம். ஐஏஎஸ் அதிகாரி , காவல்துறை உயரதிகாரி என்று பலருடன் இவருக்கு நெருக்கம் இருக்கிறது. இந்த நெருக்கத்தை பயன்படுத்தி சிவகங்கை மாவட்ட டிஎஸ்பி மூலம் எஃப்.ஐ.ஆர் கூட போடாமல் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தும் அளவுக்கு செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார். காவல்துறையில் பல கருப்பு ஆடுகள் சங்கி ஸ்லீப்பர் செல்லாக செயல்படுகிறார்கள் என்று பலமுறை பலர் விமர்சனம் செய்திருக்கின்றனர். பாஜகவின் டார்கெட் மதுரை சமீபகாலமாக சங்கிகளின் டார்கெட் 'மதுரை'.. தொடர்ந்து மதுரையை மையமாக வைத்து காய் நகர்த்துகிறது பாஜக. நிகிதா தலைமறைவு... இந்த வழக்கை relevant ஆக வைக்க எதிர்கட்சிகள் காட்டும் ஆர்வம்.. 'நடுநிலையாளர்களின்' நரேட்டிவ் , கோதி மீடியா கொடுக்கும் தேசிய அளவிலான ஊடக வெளிச்சம். இதையெல்லாம் பார்க்கும்போது இந்த நகைத்திருட்டு என்பது ஏன் ஒரு well - orchestrated அரசியல் - டிராமாவாக இருக்கக்கூடாது என்ற சந்தேகம் தான் வருகிறது. சங்கிகள் எதையும் செய்ய துணிந்தவர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/dr-sharmila-questions-credibility-of-complainant-in-ajith-kumar-case-alleges-bjp-backed-political-d-717645.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards
  20. வாழ்த்துக்கள் விக்டோரியா. எனது அப்பாவின் ஆரம்பபாடசாலை விக்டோரியா, எனது தாய் வழி மூதாதைகள் பெயர் பலகையில் இடம்பிடித்திருக்கும் பரியோவானோடு மோதுகிறது. ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே.
  21. பிஜிஎம் இல்லை, ஆனால் தமிழ் பாடல்களை ராஜேஷ் வைத்யா அற்புதமாக வீணையில் வாசிப்பார். கேட்டுப்பாருங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.